நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற பெண்கள் பள்ளித் திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற பெண்கள் பள்ளித் திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், சிறந்த சொற்பொழிவாளர், தமிழறிஞர் ஒளவை நடராசன், 2022 நவம்பர் 21 அன்று சென்னையில் மறைந்தார். இது குறித்து அவர் மகன்கள் கண்ணன், அருள், பரதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள செய்தி:
எந்தையும் இலமே !
ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார் வையம் போற்றும் பத்மஸ்ரீ முனைவர்
ஒளவை நடராசன். ( 24 – 4 – 1936 ) எங்களை தத்தளிக்க விட்டு (21.11.2022)
வானில் கலந்தார் ! இனி என்ன செய்வோம்!
எந்தையே !
நந்தா விளக்கனைய நாயகனே !!
உங்கள் பிரிவு தாங்கொணாப் பிரிவாகும் …
எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும்
நாங்கள் சென்று உங்கள்
திருப்பெயரை நவின்றே வளர்ந்தோம் – வளர்வோம் !
அப்பா – நாங்கள் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆற்றொணாத் துயருடன்
கண்ணன்
அருள்
பரதன்.
21.11.2022 திங்கட்கிழமை.
மாலை 7.50 மணிக்கு
ஒளவை நடராசன் மறைவுக்கு அண்ணாகண்ணன் இரங்கல்:
மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று எங்கே சென்றது? அறிஞர் ஒளவை நடராசன், அழகுத் தமிழால், மதுர மொழியால், நயம் கூட்டிய நாவரசர். அலட்டாமல், அதிர்ந்து பேசாமல், அரங்கை நிமிர வைத்த அன்பாளர். மக்கள் மனங்களை ஆண்ட மாண்பாளர். ராஜா ராஜா என என்னையும் இளையோர் பலரையும் வாயார அழைத்தவர். என் மேல் அன்பைப் பொழிந்தவர். ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.
ஒளவை நடராசன் அவர்களின் மறைவுக்கு வல்லமை மின்னிதழ், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

Baskar Seshadri
Famed Dialogue Writer and Story Man Aroor Das Passed away this evening (20th Nov) at T Nagar.
He was ailing for some time and the end came this evening at 6. 40 pm Hailing from Thiruvarur he settled in Chennai and became friend with Gemini Ganesan who Referred him to SivajI Ganesan who introduced him in Pasamalar in 1961.
And from there on there was no Turn back. Such is the Power of His Pen and many heroes approached him to pen dialogues for their Project and Dass was glad to accept the challenge and did his best.
Later when Tamil cinema changed hands to many newcomers,
Aroor was still able to match his standard. One such Film was Vidhi. A sujatha starrer film Produced by Sujatha’s Balaji casting Mohan and Poornima Jayaram in 1981 proved this.
Dass took the challenge and penned dialogue after a break in 1967 when he Wrote for Thangai. The film was a super duper success.
Aroor Das was 91 and Lives in Nathamuni Street, T Nagar Near Murugan Idli. Who can forget the sharp, Punch, emotional and lovable dialogue of Paasa Malar?
Good Bye Daas Iyya. Pranams.

அரசிதழில் பதிவு பெறாத அரசுப் பணியாளர் சங்க விழாவில், 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(426)
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.
-திருக்குறள் – 516 (தெரிந்து வினையாடல் )
புதுக் கவிதையில்…
செய்யும் செயலொன்றைச்
செய்கிறவனின் தகுதியைச்;
செவ்வனே அறிந்து,
செயலின் தன்மையை நன்கறிந்து,
செயல்பட தக்க காலத்தோடு
பொருந்துமாறு எண்ணிச்
செயல்பட விடவேண்டும்…!
குறும்பாவில்…
செயலொன்றைச் செய்பவனை அவனது
தகுதியறிந்து செயலின் தன்மையறிந்து பொருந்தும்
காலமறிந்து செயல்பட விடவேண்டும்…!
மரபுக் கவிதையில்…
செயல தொன்றைச் செய்யுமுன்னே
செய்யு மொருவன் தகுதியுடன்
செயலின் தன்மை யதனையுமே
செம்மை யாக அறிந்தபின்னே
பயனைப் பெறவே தக்கதாகப்
பணியின் காலம் தனையறிந்தே
செயலைத் தொடங்கி நன்முறையில்
செய்ய அவனை விடுவாயே…!
லிமரைக்கூ…
செய்பவன் தகுதி யுடனே
செயலின் தன்மை ஆய்ந்தறிந்தே காலமறிந்தவனைச்
செயவிடல் நமது கடனே…!
கிராமிய பாணியில்…
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
எல்லாத்தயும் நல்லமொறயில
தெரிஞ்சி செயல்படணும்..
ஓருசெயலச் செய்யப்போறவன்
தகுதிய நல்லாத் தெரிஞ்சிக்கிட்டு,
செயலோட தன்மய
ஆராஞ்சறிஞ்ச பெறகு,
செய்யப்போறது
பொருத்மான காலந்தானாங்கிறத
கண்டறிஞ்சி அப்புறமா
அவனச் செயல்பட உடணும்..
அதால
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
எல்லாத்தயும் நல்லமொறயில
தெரிஞ்சி செயல்படணும்…!

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
https://appel.nasa.gov/2020/11/23/nasa-publishes-plan-for-lunar-exploration/
2022 நவம்பர் 16 ஆம் தேதி பிளாரிடா கென்னடி ஏவு தளத்தில் நாசா & ஈசா விஞ்ஞானிகள் 100 மீடர் [ 322 அடி ] உயரமுள்ள ஆர்டிமிஸ் -1 ராக்கெட், ஓரியன் விண்சிமிழை ஏந்திக் கொண்டு, மீண்டும் நிலவை நோக்கிச் சென்று ஆராய ஏவப்பட்டுள்ளது. அந்த விண்வெளி விண்சிமிழ் ஒரியன், நிலவை நெருங்கி 4000 மைல் தூரத்தில் ஆராய்ச்சிகள் அடுத்து நடத்த தகுதியான ஓரிடத்தைத் தேடுவது, விண்வெளி நிலா நிலையம் ஒன்றை நிறுவி நிரந்தரமாய்ச் சுற்றி வருவது, அந்த நிலையம் விண்வெளிப் பயணிகளுக்கு, விமானிகளுக்கு விடுதியாய் அமைப்பது போன்ற எதிர்காலத் திட்டங்களுக்கு வசதியாய் இருக்கும்.
முதல் ஆர்டிமிஸ் ஓரியன் விண்சிமிழ் விமானிகள் இல்லாமல், நிலவை நெருங்கி இரண்டு வாரங்கள் ஆய்வுகள் செய்து, தானாய் பூமிக்கு மீளும்.
ஆர்ட்மிஸ் 85 mph வேகத்தில் புயல் அடிப்பினும் எதிர்த்துச் செல்லும் ஆற்றல் உள்ளது. ஓரியன் விண்சிமிழ் 450,000 கி.மீடர் [280,000 மைல்] தூரமுள்ள நிலவை நெருங்க 14 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நவம்பர் 16 இல் ஏவப்பட்ட ஓரியன் மின்சிமிழ், ஆய்வுகள் நடத்தி டிசம்பர் 11 தேதி பசிபிக் கடலில் பாராசூட் குடையில் வந்திறங்கும். 50 ஆண்டுகட்கு முன், மனிதர் இயக்கும் அப்பொல்லோ -11 விண்சிமிழ் நிலவைச் சுற்றி அதில் இறங்கியது.
ஓரியன் பூமிக்கு மீளும் போது 25,000 mph வேகத்தில் 5000 டிகிரி F உஷ்ணச் சூழ்வெளி கடந்து கடலில் வீழும். 2023 இல் ஆர்டிமிஸ் – II விமானிகள் இயக்கும் பயணம் 10 நாட்கள் நீடிக்கும். மனிதர் நால்வர் செல்லும் ஆர்டிமிஸ் -III நிலவில் கால்வைக்கும் திட்டம் 2024 இல் நிறைவேறும்.
நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையம் அமைக்க, ஏவப் போகும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1
NASA’s Space Launch System rocket with the Orion spacecraft aboard is seen atop a mobile launcher at Launch Pad 39B as preparations for launch continue, Friday, August 26, 2022, at NASA’s Kennedy Space Center in Florida.
Artemis-1 is a mission like no other—a long-duration trip to the Moon, way past it and back again. The first in an increasingly complex series of missions, Artemis I will test NASA’s new heavy-lift rocket, the Space Launch System (SLS) and Orion spacecraft as an integrated system prior to crewed flights to the Moon.
2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி நாசா நிலவுக்கு ஏவும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1
50 ஆண்டுகட்குப் பிறகு நாசா புது வலுமிக்க ராக்கெட் ஆர்டிமிஸ்-1 தயார் செய்து, மீண்டும் நிலவுக்குப் பயணம் செய்யப் போகிறது. 1969-1972 ஆண்டு பொறிநுணுக்கமான அப்பொல்லோ -11 ராக்கெட் [Saturn V in 1973. பயன் Orion Capsule] படுத்தப்பட்டு முதன் முதலில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் கருநிலவில் 1969 ஜூலையில் தனது பூதத் தடம் வைத்து வரலாற்று முதன்மை பெற்றார். இரண்டாம் தடவை நிலவுக்குச் செல்லும் நாசா இம்முறை நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கப் போகிறது. அந்த வரலாற்று முக்கிய பயணம் பிலாரிடா கென்னடி ஏவுகணை மையத்தில், 2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி, காலை 10:30 மணிக்கு, காலநிலைச் சூழ்வெளித் தடைகள் ஏதுமின்றி அனுமதி தந்தால், பச்சைக் கொடி பயணத்துக்கு காட்டப்படும்.
மனிதர் இயக்காத இந்தப் புதிய திட்டம் ஆர்டிமிஸ் -1 விண்வெளியில் 42 நாட்கள் நீடிக்கும். 322 அடி உயரத்தில் நிற்கும் அசுர ராக்கெட் [ 8.8 million pounds (3.9 million kg) of thrust, SLS is the most powerful rocket ever produced.] முனையில் உள்ள ஓரியன் விண்சிமிழ் [Orion Capsule] நிலவைச் சுற்றி வரும். அந்த ராக்கெட்டை டிசைன் செய்து அமைக்க 20 பில்லியன் டாலர், அதை நிலவுக்கு விண்சிமிழைத் தூக்கிச் செல்ல மேலும் 4.1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கு தேவைப்பட்டது. இனி அடுத்து மூவர்/நால்வர் இயக்கும் ஆர்டிமிஸ் -3 விண்சிமிழ் 2024 ஆண்டு தாமதத் தயாரிப்புக்கு 2 பில்லியன் மேலும் செலவு.
இருமுறை ஏவிடப் பயணம் தயாராக இருந்தும், சில இடையூறுகளால் ஆர்டிமிஸ் -1 திட்டம் நிறைவேறாமல் தடைப்பட்டது.
*******************************************
https://appel.nasa.gov/2020/11/23/nasa-publishes-plan-for-lunar-exploration/

சேலம் உருக்காலை, தூத்துக்குடி ஆழ்கடல் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி, 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, சிவகங்கையில் ஆற்றிய எழுச்சி நாள் உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சி. ஜெயபாரதன், கனடா
தொப்புள் கொடி
ஒன்றா ? இரண்டா ?
அம்மா
தொப்புள் கொடி ஒன்று.
நீர்க் குமிழி யான
வயிற்றில்
தானாய்
ஈரைந்து மாதமாய்
என்னுடல் வடிவானது.
கண், காது, வாய், மூக்கு, தலை
கை, கால், உடம்பு
தோல், முதுகு எலும்பு
உருவாயின.
ஒரு ஊமைப் பொம்மை !
விழிக்காத விழிகள்,
பேசாத வாய்,
கேளாத செவிகள், ஆனால்
காலால் உதைக்கும்.
முழு வளர்ச்சி பெற்று
பூ உலகுக்கு வந்ததும்
சிசுவை
ஆவென அலற
வைத்தது,
வானிலிருந்து
மின்னலாய் பாயும்
ஆன்ம தொப்புள் கொடி

திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்:
அப்பொன் பதியின் இடைவேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல்பற்றி
எப்பற் றினையும் அறஎறிவார்; எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப்பத் தர்கள்பால் பரிவுடையார் எம்பி ரானார்; விறன்மிண்டர்
பொருள்:
அந்த அழகிய பதியிலே வேளாண் குலத்தை விளக்கம் செய்ய அவதரித்தார்; சொல்லுதற்கரிய பெருஞ் சீர்த்தியுடைய சிவபெருமானாரின் சேவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு ஏனைய எல்லாப் பற்றுக்களையும் அறஎறிவார்; எல்லையிட வொண்ணாதார் உண்மையடியார்களிடத்து அன்புமிக உடையவர்; எமது பெருமானாராகிய விறன்மிண்டர்.
பொன்பதி – பொன் -அழகு. திருவுடைமையுமாம். இவற்றின் காரணம் முன்பாட்டில் உரைக்கப்பெற்றது.
வேளாண் குலத்தை விளக்க – என்ற தொடர் வேளாளர் என்ற குலம் இவர் அதனுள் வந்தவதரிக்கப் பெற்றமையால் விளக்கமடைந்தது. வேளாளர் குலத்திற்கு முன்னரிருந்த அளவிளாத பெருமைகளினும், திருத்தொண்டத்தொகையை உலகம் பெற்றுய்தற்குக் காரணராயிருந்த இவரைத் தன்னுட் பெற்றது அக்குலத்திற்கு மிகப் பெருமையும் விளக்கமும் தந்தது என்க.
“ஆசின் மறைக்,
கைப்படுத்து சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்,
செப்பு நெறி வழிவந்தார் சிவபாத விருதயர்“ என்றும்,
“கானவர் குலம் விளங்கத் தத்தைபாற் கருப்பம் நீட“ என்றும் சேக்கிழார் கூறிய திருவாக்குக்கள் குலமாண்பை சிறப்பித்தமை காண்க.
செப்பற்கரிய பெருஞ் சீர்த்திச் சிவனார் – என்ற தொடர் ‘செப்பற்கரிய’ அதாவது , “உலகெலா முணர்ந் தோதற் கரியவன்“ என முதற்கண்ணே ஒதியதை நினைவூட்டுகிறது.
“யதோ வாசோ நிவர்த்தந்தே“ – (எதினின்றும் வாக்குக்கள் திரும்பிவிடுகின்றனவோ) – என்னும் பொருள் காட்டும் உபநிடதத்தால் செப்பற்கருமை உணரப்படும். பெரும் – மிகச்சிறியதும் செப்பரிதாம் ஆதலின் அதனை விலக்க, ‘பெரும்’ என்றார்.
சீர்த்தி – இச் சீர்த்திகளை மறைகள் பற்பலவாறு பேசித் திளைத்துணர்த்தும் சிவம் என்ற சொல் இருத்தல் – கிடத்தல் எனப் பொருள் தருதலால், எங்கும் இருப்பது – எங்கும் பதிந்து கிடப்பது எனப் பொருள் கொண்டு சிவபெருமானது எல்லா மறியுந் தன்மை, ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருக்குந் தன்மை முதலிய பல சீர்த்திகளையும் மறைகள் பேசும். வேதங்களுள்ளே திருவுருத்திரமும்,
“மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகி“,
“மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை“,
என்பன முதலிய எண்ணிறந்த தமிழ் மறைகளும் இறைவன் எல்லாமாய் அல்லனுமாய் நின்றருளும் இச்சீர்த்தியை மிக விதந்து பேசுகின்றன. இறைவன் உயிர்களுக்கருள்புரியும் சீர்த்தியே அவனது கீர்த்திகளுள் மிகச் சிறந்ததாம். மாணிக்கவாசக அடிகள் கீர்த்தித் திருவகவலுள்ளே இதனை விரித்துப் பாராட்டியிருத்தலைக் கண்டு தெளிக..
இனி வேதம், முன்னுரையாகப் பிரமன் விட்டுணு முதலிய தெய்வங்களின் புகழ்களையும் பேசும். ஆனால் அவை, இறைமைக் குணங்கள் முற்றும் உடையவரல்லாதாரை அவையுடையரெனப் பேசுதலால், பொருள் சேராவாம். அவை அவற்றினும் வலிமையுடைய கூற்றுக்களாற் பாதிக்கப்பட்டு இறுதியில் சிவனது சீர்த்தியே பெரியதாய்ப் பேசப்பெறும்.
பிரமனை, அயன் – அசன் – பிறப்பில்லாதான் என உபசரிக்கும் கூற்று, பிரமன் விட்டுணு உந்தியிற் பிறந்தான் என்றபோது பொருள் சேராப் புகழாயொழியும். அவ்வாறே விட்டுணுவைப் பேசும் நாராயண உபநிடதம், நாராயணன் ஆத்மா – ‘’அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன்’’ – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில் நாராயணன் ஆத்மா – அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன் – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில், நாராயண:பரோத்யாதா – சுவேதாசுவதரம், அவர்தியானிக்கிறவர்;சிவனொருவனே தியானிக்கத்தக்கவர்; தியானிக்கப் படுபவர். சிவ ஏகோத்யேம்: (அதர்வசிகை) என முடிக்கின்றபோது முன்னர்க் கூறிய புகழ்கள் பொருள் சேராவாம்.
“பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள் வானுள்ளத் தான்“, “திருமாலகத்தான்“, “தொழப்படுந் தேவர் தொழப்படுவானை“, “சேர்ந்தறியாக் கையான்“, “தன்னாற் றொழப்படுவா-ரில்லை தானே“ என்பனவாதி எண்ணிறந்த தமிழ் மறைகளும் இக்கருத்தே பற்றியன.
(இவை திரு.க. சதாசிவ செட்டியா ரவர்கள் உரைக் குறிப்புக்கள்.)
சிவனார்- ஆர் விகுதி உயர்வு குறித்தது. செய்ய கழல்- சேவடி “அரவணையான் சிந்தித் தரற்றும்படி“ என்பது முதலாகத் திருவடித் திருத்தாண்டகத்திற் கூறியன காண்க.
கழல்- ஆகுபெயர். திருவருள் நிறைவே திருவடியாகக் கூறப்பெறும். இறைவனுக்குத் திருமேனி கற்பிக்கப் பெறும்போது திருவடியும் கற்பிக்கப் பெறுமென்க. திருவடியே சிவசத்தியாம் – அதுவே தாரகமாவது.
செய்ய – செம்மையுடைய – வீடுபேறுதரும் – என்ற பொருளில் வந்தது. செய்ய -சிவந்த எனக் கூறலுமாம். எல்லாரும் மலரிட்டு அருச்சித்து வணங்குதலால் சிவந்தது.
“தேவரெல்லாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட் செங்கரும்பே“- தாயுமானார்;
“நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நினைந்துகுத்த,
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன“ (அப்பர் – திருவிருத்தம்).
அருச்சித்த மலர்களினின்றும் தேன்பாய்ந்து சிவந்தது என்பதுமொரு கருத்து.
“சிறந்து வானோர் ,
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
வின்மலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி,
நனைந்தனைய திருவடி“ என்பது திருமுறை .
கழல்பற்றி எப்பற்றினையும் அற எறிவார் – பற்றத்தக்கது கழலேயாம் என்பது. அதனைப் பற்றுவதும் பிற எல்லாப் பற்றுக்களும் அறுதற்கேயாம். பிற பற்றுக்களற்ற போதே திருவடிப் பற்று உளதாம். திருவடிப் பற்று உளதாகப் பிற பற்றுக்கள் அறும். இவ்விரண்டும் திருவருளால் உண்டாகவேண்டும் என்க. “முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே“ என்ற தேவாரமும் காண்க.
எப்பற்றினையும்- யான் எனது என்ற அகப்பற்று, புறப்பற்றுக்கள் அனைத்தையும்; தேவலோக நாகலோக பூலோகப் பற்றுக்களையும்.
“போகம்வேண்டிவேண்டிலேன்புரந்த ராதி இன்பமும்,
ஏக நின் கழலிணை யலாது இலேன்“ என்பது திருவாசகம்.
கழற்பற்று ஒன்றொழித்து வேறு எல்லாப் பற்றுக்களையும் எப்பற்றினையும் என்றதனால் “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“, “ஈசனோ டாயினு மாசை யறுமின்“ என்றபடி நிராசையாகிய தொண்டர் நிலையுங் கொள்ளப்பெறும்.
இந்நாயனார் இறைவனிடத்து வீடும் வேண்டா விறலை உடையராய், அவனையும் புற கென்ற திறத்தைக் காண்க. அற எறிவார் – அற – அறவே – முழுதும். அறும்படியாக என்றலுமாம். எறிவார் – எறிவாராயினர்.
எல்லைதெரிய ஒண்ணாதார் என்ற தொடர், பொருளின் அளவால் அளக்க லாகாதவருடைய. முன் செப்பற்கரிய என்றது உரையின் அளவால் அளக்கலாகாமை குறித்தது. இதனை நாயனார்க்குக் கூட்டி, அளவிடமுடியாத பெருமையுடையவர் என்றுரைப்பதும் உண்டு. எல்லை தெரிய ஒண்ணா இறைவன் கழல்பற்றியவராதலின் இவரும் அத்தன்மையினரே.
மெய்ப்பத்தர்கள் – உண்மை யன்பர்கள். மெய்ப்பொருணாயனார் போலல்லாது இந்நாயனார் உண்மை யன்பர்கள் பாலே பத்தி செய்வார். ஆயின் இவர் வேடத்தைச் சிந்தை செய்யாரோ எனின், வேடத்துடன் உண்மை யன்பும் உடன்சேர்த்தி எண்ணி அன்பு செய்வார் என்க.
இது இவரது சரிதக் குறிப்பாகும். நம்பியாரூரரையும் அவரை ஆட்கொண்ட பெருமானையும் புறகு என்று கூறவல்ல விறல் படைத்தவராதலின் இவரது திருவுள்ளம் மெய்ப் பத்தர்கள் பாற் பரிவுடையது என்றார். பரிவுடைமை – அன்பு பூண்டொழுகுதல்.
எம்பிரானார் – எமது பெருமானார். தலைவர் என்று ஆசிரியர் இங்குக் குறித்ததன் காரணம்இப்புராணப் பாட்டிற் காண்க. இப்புராணத்திற்கு முதனூலாகிய திருத்தொண்டத் தொகை இவராலே உலகம் பெறுதற்குக் காரணமாயிற்று என்ற நன்றி கருதி வணங்கினார் என்க. அதனாலே தொண்டர் கூட்டமும் அவர் புகழும் உலகெலாம் எங்கும் நிலவி நின்றதென்பதுமாம்.
அவதரித்தாராகவும், எறிவாராகவும், உடையாராகவும், பிரானாராகவும் விளங்கிய விறன்மிண்டர் என முடிக்க.
நாயனாரது பெயரை முதலிற் கூற நேர்ந்தபோது, இவ்விடத்து “மெய்ப்பத்தர்கள்“ அடியின் அடியில் ஆசிரியர் அமைத்துக்காட்டி, நாயனாரது உண்மை நிலையைக் குறித்த அழகு காண்க. மெய்ப்பத்தர்கள்பாற் பரிவுடைமையே “கூட்டம் பேணா தேகும் ஊரனுக்கும் புறகு“ என்று நாயனார் கூறக் காரணமாயிற் றென்பதும், இதுவும் இச்சரிதக் குறிப்பாம் என்பதும் இங்கும் காண்க. வரும் பாட்டுக்களிலும் காண்போம்.

நமக்குப் பொருத்தமான பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்டு) திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் குறிப்புகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Baskar Seshadri
Young Murugadoss who found few hours of time during his lunch break in his office never thought of a short nap in his house or did not plan a matinee show in the nearby Kamadhenu Theatre or Kapali. But he wanted to do an active business and what he thought was supply of half pant shots mainly a sportswear of those days especially for badminton game to readymade garment stores of Mylapore and adjoining areas. And he was successful too when he was in his mid-twenties. The challenge was not over. Then he thought of a small place in Luz and asked his father who owns it to give it to him on Rental. He readily agreed and he started his first venture in 1986 with just twenty square feet area.
So what the business was? It was a re-stitching or alteration Point in the colloquial language.
Murugadas says “When I started this venture I used to ask the customer to stand out and i will personally take the measurement because the space inside the shop can accommodate only one person and a tailoring machine”.
Now he had grown much better where he owns two portions one for the workshop and for the tailoring unit. Sheer hard work pays is a proof in the case Of Murugadoss.
Now you could have guessed that Murugadoss is the son of Namdev Rao popularly known as GN Rao.
Restitch point was born in 1989 and it was the first venture in the city to have an exclusive shop of restitching.
His father passed away in 1997 and his brothers all four are in the same textile area in various places like Madipakkam Nanganallur and one in Luz near Rangaswamy Studio is the most famous point among others and this is a total tailoring unit for only new garments.
His wife Sasikala is also a tailor of fashions and she supports her husband a lot.
Initially Dass was handling men garments but later in 2001 he started venturing into women garments too. Alterations of any kind are accepted here for a nominal rate. If you want to alter a BIG Shirt to your lean size of body he is ready to do it or if you have a torn collar and need a replacement you can head on to him.
He had his units in various places but finally settled in Luz (oldies may remember the shanti VIhar Hotel). He has his regular customers who reach him even today for their requirements. Many Tamil magazines and The Hindu (Liffy thomas did a story) had carried reports about his ventures those days and Mylapore times (Janaki did this) had done a story too in mid of nineties. He is to complete his thirty first year this coming December of his unit and if you have a triple XL shirt take it to him to get it fixed to your size.
Murugadas can be reached at 98402 95552. Restitch point has five full time tailors though he had eight last year pre covid. Now amid the corona impact he is able to manage after the relaxation.
Novel ideas always pay and Murugadas of Restitch point is a classic example. Keep up.

இசைக்கவி ரமணன் இயற்றிய ஓர் அமர கவிதை. இதில் ஒவ்வொரு சொல்லும் அமுதம். கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

வணக்கம்.
சிங்கப்பூர் அழைக்கிறது! இரண்டு நிகழ்ச்சிகள்:
1. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழா – 19.11.2022 சிங்கப்பூர் நேரம் மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரம் மதியம் 3.00 மணிக்கு) ‘கவியரசரின் பாடல்களில் இலக்கியச் சுவை’ என்னும் தலைப்பில் பேசுகிறேன். (ஆங்கில அழைப்பிதழில் நேரலைச் சுட்டி இருப்பதைக் காண்க).
2. 20.11.2022 ஞாயிறு சிங்கப்பூர் நேரம் மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரம் மாலை 4 மணிக்கு) லிஷா மற்றும் லிஷா இலக்கிய மன்றம் வழங்கும் என் “கம்ப தரிசனம்” நூல் வெளியீடு. இதில், சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர், மதிப்புக்குரிய திரு. கா.சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்து என் நூலை அறிமுகம் செய்கிறார். (நேரலை ஏற்பாடு உறுதியானதும் தெரிவிக்கிறேன்).
சிங்கப்பூரில் உள்ள அன்பர்கள் அவசியம் வருக! மற்றோர் நேரலையில் இரண்டு நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழ்க!
அன்புடன்,
ரமணன்

1962இல் இந்தியா மீதான சீனப் படையெடுப்பு குறித்து ஆங்கிலத்தில் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ.
The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech in English on Indo-China war during 1962.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பள்ளித் தோழர், பால்ய நண்பர் ஆரூர் புதியவனின் அன்பு மணம் கமழும் வாழ்த்துப் பாடல், ‘அண்ணா கண்ணன் வாழ்க’.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)