Author: மறவன்புலவு க.சச்சிதானந்தன்

  • Attention Mannar please

    Attention Mannar please

    Maravanpulavu K. Sachithananthan

    Mannar, one of the five districts in the Northern Province, one of the nine provinces of Sri lanka.

    It is a Hindu minority district in a province with 85% Hindus.

    Around 9,000 Hindu families are at the mercy of the Bishop of Mannar. This is the situation since Portugese conquest. Francis Xavier came to Mannar. His infamous Mannar inquisition left many pits of human skeleton now under excavation by the Archeological department.

    Empowering Hindu families is our goal. Mens agitat molem is the Latin phrase. Mind moves matter. Stronger the mind, stronger is your will power. Stronger will power of individuals makes a strong social fabric. Hindu social fabric is weak because Hindu minds are weak.

    When you are surrounded by a strongly knit Abrahmic social order, determined to break the minority Hindu social fabric, weaker minds further weakens.

    Empowering them has been my agenda for the last 50 years.

    As Secretary General of the Federation of Young Men’s Hindu Associations, I had the direction from my colleagues to plan a Hindu Youth empowerment programme in Mannar district, fifty years ago.

    We formed Young Men’s Hindu Associations in almost all Hindu villages in Mannar district. We took volunteers from other districts to inject moral courage among Hindu youth.

    We planned self employment projects. We arranged for training of Hindu youth from Mannar in Canada and India. Mr. Ganeshamurthy from Mannar who was tarined at Madurai, is now the secretary of the Federation of Saiva Tamil templs in UK. He always addresses me as his guru.

    War intervened and all our projects were abandoned. Internal displacements and international migration made the Abrahamic religionists to strengthen their base. In fact people here talk about how Abrahamic religionists were fanning and flaming the war to weaken the Hindu base and exploit the weakness to penetrate, permeate and proselytize.

    Post war, the Abrahamic priesthood induced their missionaries and love jihadis to fully exploit the situation. Demographically Hindus became a minority in a district where they were the only religionists a few centuries ago.

    During the past four years I took upon myself the task of recruiting volunteers to stem this tsunami tidal wave of Abrahmic onslaught. I should say that the Abramists are taking me seriously and working out ways to elbow me out without much success.

    My success in the neighbouring Cheddikulam division of the district of Vavuniya in wiping out missionary activity was due to visits to every Hindu house, installing Hindu flag posts in each house. We followed it with a poster campaign. Periodically I took Hindu sevakas from South India (Tamil Nadu and Karnataka) to conduct in-situ training for the youth.

    Dedicated volunteering made it possible to nearly wipe out any activity. Vigilance continues as these carcinogenic proselytizers do not give up easily.

    A volunteer from Mannar having been invited went to Goa to attend the Hindu Jana Jaguritu conference during July 2018.

    In Mannar I am following the Cheddikulam pattern with one addition. I compiled an 864 page hard bound book on Mannar and its hallowed Hindu history. I wrote in detail about the Mannar inquisition of Francis Xavier.

    I included a chapter to make any one perform pooja at a temple.

    I included a chapter on the ceremonies related to the death of a Hindu.

    I included a chapter on days of pooja and fasting for each of the 12 months.

    Then I followed with the relevant hymns to be recited at these poojas.

    I have given a list of 424 temples in the district against a government list of 92 registrations.

    I have given the denominational demographic composition of each of the 153 basic administrative units.

    A la Cheddikulam, I am visiting along with volunteers carrying Hindu flags, a copy of the 864 page book and a poster to each Hindu house in Mannar district, initially covering the vulnerable areas.

    The pictures you see are images of our work on 28th and 29th Nov. covering six villages, viz: Musali – Puthukudyiruppu 62 Hindu families, Musali -Kouukupadayan 45 Hindu famuilies, Musali – Maruthamadu 17 Hindu families, Musali – Potkerny 7 Hindu families, Mannar town – Nagathalvu 67 Hindu fmilies and Mannar town Sinnakadai 83 Hindu families.

    These are the projections. It is for Sivaperuman to decide and direct us to the pattern and design HE has.

    Share
  • சிங்கள மொழியில் ஒன்பதாம் திருமுறை நூல்

    சிங்கள மொழியில் ஒன்பதாம் திருமுறை நூல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    www. thevaaram. org மின்னம்பலம் தளத்தில் சிங்கள மொழிபெயர்ப்பு திருவாசகத்திற்கும் ஒன்பதாம் திருமுறைக்கும் பார்க்கலாம்

    திருக்கேதீச்சரத் திருப்பதிகம்
    திருக்கோணேச்சரத் திருப்பதிகம்
    இரண்டுக்கும்  அங்கு சிங்கள மொழிபெயர்ப்புகளைப் பார்க்கலாம்.

    1973ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் பன்மொழிப் புலவர் திரு கனகரத்தினம் அவர்கள் தன்னுடைய நண்பர் பாணந்துறையைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பில் தமிழ் கற்பித்தவருமான திரு தி தி நாணயக்காரரை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஐயனார்கோயிலடியில் அருள்மிகு விசுவேசப் பிள்ளையார் கோயிலுக்கு வழிபட அழைத்து வந்திருந்தார்.

    பாணந்துறையைச் சேர்ந்தவர். சிங்களவர். மட்டக்களப்பில் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர். மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் கற்பிக்கிறார் என்றதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    திரு கனகரத்தினம் அவர்களின் கட்டுரைகளை சிறுகதைகளை சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவர் திரு நாணயக்காரர்.

    தவத்திரு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை முதலாம் பாகத்தைச் சிங்களத்திற்கு மொழிபெயர்த்துத் தருவீர்களா எனக் கேட்டேன்.

    உடனே ஒப்புக் கொண்டார். மட்டக்களப்பு திரும்பிய சில வாரங்களில் மொழிபெயர்ப்பை எனக்கு அனுப்பினார். நாவலப்பிட்டி ஆத்மசோதி அருளாளர் நா முத்தையா அவர்கள் அந்த மொழிபெயர்ப்பை நான் கேட்டதால் அச்சிட்டு வெளியிட்டார்.

    பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கிலிருக்கும் தமிழ் மொழி. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எழுத்து வழக்கில் இருக்கும் சிங்கள மொழி. ஒரு மொழியின் ஆக்கங்களை படைப்புகளை நூல்களை மற்றைய மொழிக்குக் கொண்டுசெல்லும் முயற்சி மிக அரிதாக இருந்ததால் இரு மொழியாளரும் அயல் அயல் ஆக இருந்தும் இரு சாராருக்குமிடையே நல்லிணக்கமும் அன்புப் பரிமாற்றமும் குறைவாக இருந்தது.

    பேசுவதும் திருவாயால் என அருளாளர் மாணிக்கவாசகர் திபி 910இல் அநுராதபுரத்தின் பாதித் தமிழ் பாதிச் சிங்கள மன்னன் முதலாம் சேனனுக்காகப் பாடினார். சேனனுடைய மகளின் ஊமை நிலை போக்கினார். (ஆதாரம் கோணகசுத்தென்ன ஆனந்த இமி சிங்களத்தில் எழுதிய நிக்காய சங்கிரகம்).

    திபி 1271இல் ஆட்சிக்கு வந்த இரண்டாம் பராக்கிரமபாகு தஞ்சாவூரிலிருந்தும் மதுரையிலிருந்தும் தமிழ்ப் புலவர்களை அழைத்து வந்து தன் அவையில் தமிழ் கேட்டு மகிழ்ந்தான்.

    புத்தமித்திரர் எழுதிய வீரசோழியம் இலக்கண நூலைச் சார்ந்து சிங்களத்தில் இலக்கண நூல் எழுத முயன்றான். சிங்கள மொழியின் தொடக்க இலக்கண நூலில் சந்தேகங்களைத் தீர்க்க வீரசோழியம் பார்க்க என எழுதி இருக்கும்.

    நான்காம் பராக்கிரமபாகுவின் (கிபி 1297) அரசவைப் புலவர் தென்னாவரம் போசராசர் தமிழில் சரசுவதி மாலையை எழுதி அவையில் அரங்கேற்றினார்.

    சிங்கள மொழியின் முதலாவது உரைநடை நூல் பூசாவழி, நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் அரங்கேறியது.

    ஆறாம் பராக்கிரமபாகு தனது அவையில் தமிழ்ப் புலமைக்கு முன்னுரிமை கொடுத்தார். தமிழ்ப் புலவர் நல்லுருத்திரனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார். முள்கிரிகல் தேரர் எழுதிய கோகில சந்தேச எனும் சிங்கள நூல் இந்தச் செய்திகளைக் கூறும்.

    தமிழைக் கற்காத தமிழ் நூல்களைக் கற்காத பிறவிகள் பாவிகள் எனச் சுபாசிதய சிங்கள நூலில் எழுதிய சிங்களவர், தனது பெயரையும் தமிழுக்கு அழகியவண்ணன் என மாற்றினார்.

    திருக்குறளின் மூன்று சிங்கள மொழிபெயர்ப்புகள் வந்தாலும் அவை கடந்த நூறு ஆண்டுகளுக்குள் வெளிவந்தவையே.

    யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாசாவிருத்திச் சங்கத்தில் தமிழ் பயின்று பண்டிதர் ஆகி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தமிழ் கற்பித்தவர் வியாங்கொடை தவத்திரு தருமரத்தின தேரர்,

    தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி ஆகிய மூன்றையும் சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவர்.

    கடந்த 40 – 50 ஆண்டுகளாகத் தமிழ் நூல்களைச் சிங்களத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் சிங்களரும் முகமதியரும் ஈடுபட்டு வருகிறார்கள். கொடகே பதிப்பகம் தமிழ்நாட்டு மற்றும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நூற்றுக்கணக்கானவற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகின்றனர்.

    பன்னிரு திருமுறைகளை 12 மொழிகளுக்கு எடுத்துச்செல்லும் பேறு அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசப் பெருமான், தருமபுர ஆதீனம் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானம் வழியாக எனக்குத் தந்தது.

    திருவாசகம் மொழிபெயர்ப்பு முடிவடைந்து 500 படிகளை இலங்கை அரசின் இந்து சமய திணைக்களம் வெளியிட்டுள்ளது.

    மொழிபெயர்த்துத் தந்தவர் கல்முனை சிங்கள மகா வித்தியாலய மேனாள் துணை முதல்வர் திரு வடிவேலு. அவருக்கு வழிகாட்டியவர் கல்முனை எழுத்தாளர் திரு முகில்வண்ணன்.

    ஒன்பதாம் திருமுறையையும் அவரே மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இப்பொழுது அச்சிட்டு மாதிரி நூலாக்கித் தருமபுரம் ஆதீனம் தவத்திரு 27ஆவது குருமகாசந்நிதானம் அவர்களின் ஆசியை நோக்கி அவ் அச்சுப்படி சென்று கொண்டிருக்கிறது.

    Share
  • இலங்கை வெடுக்குநாறிக் குன்றில் ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்

    இலங்கை வெடுக்குநாறிக் குன்றில் ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    சிவ சேனை

    அருள்மிகு உமையம்மை உடனாய ஆதிலிங்கேச்சரர் வெடுக்குநாறிக் குன்றில் (அது மலையன்று; அது குன்று) திருக்கோயில் சார்ந்த அருளாட்சி.

    வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே அங்கு அருளாட்சி.

    ஆதி என்றாலே பழமையானது தொன்மையானது.

    சைவத் திருக்கோயில் இருந்த இடங்களில் புத்தரும் சமணரும் வாழ்ந்த கதைகள் ஏராளம் ஏராளம்.

    திருநாவுக்கரசு நாயனார் வடதளி பழையாறைத் திருக்கோயிலில் வழிபடச் செல்கிறார். நீண்ட வரலாறு கொண்ட பழைய சிவன் கோயில். சமணர்கள் அக்கோயிலை தமதாக்கிப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

    அப்பர் பெருமானை வழிபட விட மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். சிவனை வழிபாடு செய்த பின்பே உண்பேன் என உண்ணாநோன்பு இருக்கிறார் அப்பர் பெருமான்.

    தமிழர் வரலாற்றில் உணவைத் தவிர்க்கும் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய வரலாற்று நாயகன் அப்பர் பெருமான்.

    வண்ணங் கண்டு நான்உம்மை
       வணங்கி யன்றிப் போகேனென்
    றெண்ண முடிக்கும் வாகீசர்
       இருந்தார் அமுது செய்யாதே
    அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
       கரசு தம்மைப் பணிவதற்குத்
    திண்ண மாக மன்னனுக்குக்
       கனவில் அருளிச் செய்கின்றார் தி12210296.

    அங்கு வந்த சோழ மன்னன் சமணர் பள்ளிகளையும் ஓராயிரம் சமணர்களையும் அழித்தான். திருக்கோயிலைத் திறந்தான். அப்பர் சிவனை வழிபட்டார்.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, வடதளி பழையாறை நிகழ்ச்சி. 1,400 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி

    காலத்தால் தொன்மையான சைவத்துக்குப் பின்வந்த புத்தரும் சமணரும் சைவத் திருக்கோயில்களைப் பூட்டினர். அருகே சமணப் பள்ளிகளை, புத்த பல சாலைகளை அமைத்தனர்.

    அவ்வாறு சமணரும் புத்தரும் பள்ளிகள் அமைத்த இடங்களுள் ஒன்று வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்.

    சைவ மீள்எழுச்சிக் காலத்தில் ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் மீண்டும் சைவர்களின் வழிபாட்டுக்கு வந்தது.

    புத்தர் சமணர் இடையிட்டுப் பள்ளிகள் அமைந்திருந்தாலும் சைவ சமயப் பூசைகள்வழிபாடுகள் தொடர்ந்தன. இடையீடின்றி இன்றுவரை சைவர்களின் பூசைக்குரிய திருக்கோயிலாக அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் தொடர்கிறது.

    வெடுக்குநாறிக் குன்றுச் சிவன் கோயில் பூசைகள் கடந்த 2 வாரத்துக்கு முன் காவல்துறையால் நிறுத்தப்படும் வரை பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கின்றன.

    வெடுக்குநாறிக் குன்றுக்கு வழிபடச் செல்லும் சைவ அடியவர்கள் அடையும் துன்பத்தைக் கண்ட நெடுங்கேணி காவல்துறைப் பொறுப்பதிகாரி ஈராண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றவர், வழிபாட்டில் ஈடுபட்டார். அடியார்கள் குன்றில் ஏறிச் செல்வதற்கு ஏணி ஒன்றைப் பொருத்திக் கொடுத்தார்.

    இந்த ஆண்டு நெடுங்கேணிக்கு மாற்றலாகி வந்து பணிபுரியும் காவல்துறைப் பொறுப்பதிகாரி வெடுக்குநாறிக் குன்றில் சைவசமயப் பூசைகள் நடைபெறுவதைத் தடுக்க முயன்றார்.

    பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கின்ற நிகழ்ச்சி எனச் சைவ சமயப் பூசைகளைச் சுட்டிக்காட்டிய நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

    சைவ சமயப் பூசைகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதிகளின் கீழ் அமையாது என நீதிமன்றம் அவரது விண்ணப்பத்தை ஏற்கவில்லை.

    எனவே பூசைகள் தொடர்ந்தன. பத்து நாள் திருவிழாக்கள் நடந்தன. இறுதி நாளன்று பொங்கல் அன்னதானம் என ஆயிரக்கணக்கான சைவ மக்கள் கூடி வழிபட்டனர்.

    முதல் நாள் திருவிழா நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். பூசகருடன் இணைந்து வழிப்பட்டேன். பூசை முறைகளில் பங்கு பற்றினேன்.

    உடல் சிலிர்த்தேன். மெய் விதிர்விதிர்த்தேன். கை தலை மேல் வைத்தேன். கண்ணீர் ததும்பியது. உள்ளம் வெதும்பியது. தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருப்புராணம் என மனம் உருகிப் போற்றிகள் பாடினேன்.

    26. 9. 2020 விழா இறுதி நாள்.

    அதற்குப் பின் நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டார்

    1 தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்தான இடம் வெடுக்குநாறிக் குன்று.
    2 பொங்கல் நிகழ்ச்சிக்காகத் தீ மூட்டினர், தொல்லியல் நிலைகளுக்குக் கேடு விளைவித்தனர்.
    3 உணவு சமைப்பதற்காக பகிர்வதற்காக ஐந்து கொட்டகைகளை இடைக்காலமாக அமைத்தனர். அதனால் அங்குள்ள தொல்லியல் தடயங்கள் குலைந்தன.
    4 திருவிழாவுக்காக ஆட்சி குழுவினர் துண்டு அறிக்கை வெளியிட்டனர், அடியார்களைத் திரட்டினர். தொல்லியல் தடயங்களுக்கு அடியார்களின் கூட்டம் சேதங்களை விளைத்தது.
    5 புத்து சமயத்தவரும் இந்த இடத்தில் வழிபாடு செய்தவர்கள் என்பதற்கான சான்று இருப்பதால் சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைந்தது.
    6 தொல்லியல் சட்டத்தின் 24வது அத்தியாயத்தின் 15ஆவது பிரிவிலும் 31 32 34 பிரிவவுகளிலும் மேற்காணும் 5 செயல்களும் குற்றமாக உள்ளதால் அறங்காவலர் இருவர் பூசகர் ஒருவர் ஆகிய மூவரையும் பிணையில் விட முடியாத சிறையில் அடைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரி கேட்டார்.

    தொடக்க நாளன்று வழக்கின் விண்ணப்பம் முழுமையற்றதால் குற்றச் சாட்டை ஏற்க மறுத்த நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார்.

    தொல்லியல் ஆணையர் சான்றிதழான ஆவணத்தை நீதிமன்றத்தில் கொடுக்காததால் இரண்டாவது தவணையிலும் (23.10.2020) நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார். இரண்டாவது தவணைக்கு நானும் வவுனியா சென்று நீதிமன்றத்தில் பார்வையாளராக இருந்தேன்.

    மூன்றாவது தவணை நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது.

    வெடுக்குநாறிக் குன்று பூசைக்குரிய இடம் என்பதை அடுத்த தவணையில் நிலைநாட்டுவதே வழக்குரைஞர்களின் குறிக்கோள் இலக்கு. ஆட்சிக் குழுவினருக்கும் பூசகருக்கும் சைவ சமயத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் கூறி அவர்களைத் தளையிட வேண்டாம் என வழக்குரைஞர் கூறுவர்.

    Share
  • Jaswant Singh Cherished Memories

    Jaswant Singh Cherished Memories

    Maranvanpulavu K Sachithananthan
    Siva Senai, Jaffna, Sri Lanka

    Sri Lankan Tamils express their heartfelt condolences to the bereaved family and the Bharatiya Janata Party on the death of the former Minister of Foreign Affairs Jaswant Singh.

    He was a friend of the Sri Lankan Tamils. He cared for their welfare. He along with Prime Minister Atal Bihari Vajpayee were keen to restore the dignity and respect of Tamils.

    In spite of the ban on the LTTE, Prime Minister Vajpayee wanted his personal envoy to meet Prabhakaran at Vanni. During May 2000, I was asked to get the consent from Prabhakaran to meet his personal envoy. Brajesh Mishra, National Security Advisor, Jana Krishnamoorthy Minister of Justice asked me to reach Prabhakaran to get concurrence for a meeting with the envoy of the Indian PM.

    I sought the help and support of Kavignar Kasi Anandan and Pazha Nedumaran. Prabhakaran gave his consent. I told this to Brajesh Mishra.

    On June 6th, Foreign Minister Jaswant Singh went to Colombo to meet President Chandrika. It was an unscheduled visit. President Chandrika declined support.

    I was asked to convey this to Prabhakaran.

    These are cherishable memories for Sri Lankan Tamils of Mr. Jaswant Singh. Your memory shall always be with us.


    புரட்டாதி 12, 2051 (திங்கள்) 28.09.2020

    யசுவந்தர் சிங்கர் (ஜஸ்வந்த் சிங்) காலமானார்.

    சம காலத்தவர், ஈழத் தமிழர் பால் அளப்பரிய ஈடுபாடு கொண்டவர். ஈழத் தமிழருக்காகப் பல நற்பணிகள் ஆற்றியவர். 2000 ஆனியில் (யூன்) அவரின் கொழும்புப் பயணம், ஈழத் தமிழருக்கான பயணம்.

    அவர் கொழும்புக்குப் பயணமாகுமுன் என்னைப் பிரபாகரனிடம் பேசுமாறு பணித்தவர் பிரதமர் வாச்பாய். நீதி அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரசேசு மிர்சா.

    2000 மே மாதம் 28ஆம் நாள் நீதி அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி அழைத்துத் தில்லி சென்றேன். பிரதமரின் தூதர் இலங்கை வன்னி சென்று பிரபாகரைனச் சந்திக்கப் பிரபாகரனின் ஒப்புதல் பெறுமாறு என்னிடம் கேட்டார்.

    கவிஞர் காசி ஆனந்தன், மாவீரர் பழ. நெடுமாறன் உதவினர். யூன் 4ஆம் நாள் அளவில் பிரபாகரனின் ஒப்புதலைப் பெற்றுக் கொடுத்தேன்.

    அப்போதைய குடியரசுத் தலைவர் சந்திரிகாவின் ஒப்புதலைப் பெற யூன் 6 அளவில் இந்திய வெளிநாட்டமைச்சராக இருந்த யசுவந்தர் கொழும்பு சென்றார். திடீர்ப் பயணம் என ஊடகங்கள் தெரிவித்தன.

    சந்திரிகா ஒப்பவில்லை. யசுவந்தர் வெறுங்கையுடன் திரும்பினார்.

    செய்தியை என்னிடம் சொன்ன அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி, பிரபாகரனிடமும் தெரிவிக்கச் சொன்னார்.

    ஒரே பணி. பிரபாகரனிடம் என் பணி. சந்திரிகாவிடம் யசுவந்தர் பணி.

    ஈழத் தமிழர் மீது அளவற்ற ஈடுபாடு கொண்ட யசுவந்தர் மறைந்தார். அவரை இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.

    Share
  • இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    பிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன்

    சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று  இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர், பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.

    இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

    கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து, போராட்டங்கள் நடத்தி, மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் பல்வேறு பிரதேச சபைகளைத் தடுத்து. முயன்று வந்தது சிவசேனை அமைப்பு.

    இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.

    இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

    ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்குச் சென்றார்.

    மலையகச் சைவத் தமிழ் மக்கள்
    மேற்கு மாகாண வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த இராசபட்சவின் பசு வதைத் தடை முயற்சியைப் பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள்.

    பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும்
    மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த இராசபட்சர் முயல்வார். இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

    Share
  • காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்

    காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை, இலங்கை

    இந்திய நடுவண் அரசின் கப்பல் துறை அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய, காரைக்காலில் இருந்து காங்கேயன்துறைக்குச் சைவ வழிபாட்டு பயணிகளுக்காகக் கப்பல் விடுவதாகப் புதுச்சேரி முதலமைச்சர், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வழி புதுச்சேரிச் சட்டசபையில் அறிவித்தார்.

    புதுச்சேரி முதலமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் 145ஆவது பந்தி

    இன்று நண்பகல் இலங்கைச் சைவர்களின் சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களுக்குத் தொலைப்பேசியில் வாழ்த்துச் செய்தியைக் கூறினேன், நன்றியைக் கூறினேன்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையிலும் இந்தியாவிலும் இக் கப்பல் சேவையைத் தொடங்குமாறு ஈர் அரசுகளையும் வலியுறுத்திக் கடிதங்கள் கொடுத்து வருகிறேன்

    இலங்கை அரசு, வடமாகாண மேதகு ஆளுநர் றெசினால்டு கூரே காலத்திலேயே இக் கப்பல் சேவைக்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.

    இலங்கைக் கடற்படைத் தளபதி பல முறை என்னை அழைத்தார். கப்பல் சேவை எப்பொழுது தொடங்குகிறது நாங்கள் உதவுகிறோம் என ஒவ்வொரு முறையும் கூறியுள்ளார்.

    அவ்வாறு அக்காலத்தில் குடியரசுத் தலைவரின் முதன்மைச் செயலாளராக இருந்த திரு. ஒஸ்டின் பெர்ணாந்து, இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்துடனும் இந்தியத் தூதருடனும் நேராகப் பேசி, இக் கப்பல் சேவையை விரைவாகத் தொடங்குங்கள் என ஆணையிட்டிருந்தார்.

    இதையடுத்து நான் சென்னைக்கும் தில்லிக்கும் பல முறைகள் சென்றேன்.

    சென்னையில் என் வேண்டுகோளை ஏற்ற தமிழக அரசின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக அரசின் ஒப்புதலைத் தில்லிக்கு வழங்கியிருந்தார்.

    அக்காலத்தில் மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. இல கணேசன் அவர்கள், என்னை வெளிநாட்டு அமைச்சுக்கும் கப்பல் சேவை அமைச்சுக்கும் அழைத்துச் சென்று அவர்கள் ஒப்புதல் வழங்கக் காரணமாயிருந்தார்.

    அவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசகராக இருந்த திரு. எஸ் குருமூர்த்தி அவர்கள், பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல்களைப் பெற உதவினார்.

    சென்னையிலும் தில்லியிலும் உள்ள இந்து சமய அமைப்புகள், சார்பாளர்கள் யாவரும் இக்கருத்தை இந்திய அரசுக்கு எடுத்துக்கூறி வலியுறுத்தினார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர், புதுச்சேரிக்கு வந்தார். காரைக்கால் துறைமுகத்தைப் பார்வையிட்டார். கப்பல் சேவை தொடங்குவதற்கான வழிகாட்டல்களைக் கொடுத்திருந்தார்.

    இந்த வாரம் புதுச்சேரி சட்டசபையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு அமைய காரைக்காலிலிருந்து காங்கேயன்துறைக்குக் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான உயர்மட்டக் குழுவை அமைத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

    Share
  • சைவத் தமிழ்ச் சங்கிலியனும் சட்டத் தொடர்ச்சியும்

    சைவத் தமிழ்ச் சங்கிலியனும் சட்டத் தொடர்ச்சியும்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கையில் மூவர் அமரும் நீதிமன்றங்கள் அமைவது மிகக் குறைவு. ஆங்கிலத்தில் Trial-at-Bar எனச் சொல்வார்கள்.

    சங்கிலி மன்னனின் கடைசிக் காலங்களை 1976ஆம் ஆண்டு கொழும்பில் மூவர் நீதிமன்றத்தின் முன் பேசினர். சூடானில் நடந்தவை, சிம்பாப்வேயில் நடந்தவை, அவற்றுக்கும் சங்கிலி மன்னனுக்கும் என்ன தொடர்பு?ஆனாலும் நீதிமன்றத்தில் பேசினர்.

    குலேந்திரன், மகேந்திரன் அல்லது குலோதரன், மகோதரன் என்ற யாழ்ப்பாண (நாகநாடு) மன்னர்களை மகாவமிசம் கூறும்.

    முதலாம் கயவாகுவை மணம் முடித்தவள் யாழ்ப்பாண மன்னர் மகள் என மகாவமிசம் கூறும்.

    பூம்புகார்ச் சோழ மன்னன் கிள்ளிவளவன் மணம் முடித்ததும் யாழ்ப்பாண மன்னனின் மகள் என்று மணிமேகலை கூறும்.

    ஓர் அரசனிடமிருந்து மற்றோர் அரசனுக்கு ஆட்சி கைமாறும். அரசன் இறந்தால் இளவரசன்/ இளவரசி அரசராகுவர். அரசன் போரில் தோற்றால் வென்ற அரசன் அரசனாவான்.

    வாரிசு அரசன் ஆகலாம். போரில் வென்றவன் அரசன் ஆகலாம். அங்கே இறைமைத் தொடர்ச்சி, ஆட்சித் தொடர்ச்சி, சட்டத் தொடர்ச்சி.

    மகாவம்சம் கூறும் மகோதரனுக்கு முன்பும் பல அரசர். பின்பும் பல அரசர். இடை இடையே குறுகிய காலங்கள், சேரர் சோழர் பாண்டியர் எனத் தமிழரே யாழ்ப்பாணத்தைத் தொடர்ச்சியாக ஆண்டனர். போரில் வென்றதால் ஆண்டனர்.

    நீண்ட ஆட்சியாக யாழ்ப்பாணத் தமிழ் அரசர்கள் ஆண்டனர். இடையே கலிங்க மாகன் ஒருவன், சாவகச் சந்திரபானு மற்றவன், யாழ்ப்பாணத்தை வீழ்த்தித் தமது ஆட்சிக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் இருவருமே தமிழர் அல்லாத அரசர்.

    வரலாறுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து தொடர்ச்சியாக யாழ்ப்பாண அரசைத் தமிழரான வாரிசு அரசர்கள், போரில் வென்ற அரசர்கள் ஆண்டனர்.

    இடையில் திடீரென்று முளைத்த எவரும் அரசர் ஆகவில்லை. கலிங்க மாகனையும் சாவகச் சந்திரபானுவையும் தவிர அன்னியர் ஆட்சியில் யாழ்ப்பாணம் ஒருபோதும் இருந்ததில்லை.

    முடியாட்சிக் காலத்தில் இறைமைத் தொடர்ச்சி, ஆட்சித் தொடர்ச்சி, சட்டத் தொடர்ச்சி என யாழ்ப்பாணத்தில் பல நூற்றாண்டுகளுக்கு ஊடாக நிலையான ஆட்சி. தமிழரான செண்பகப் பெருமாளின் 16 ஆண்டு கால ஆட்சியைச் சிங்கள ஆட்சி எனலாமா?

    சங்கிலியனைப் போர்த்துக்கேயர் வீழ்த்தும் நாளில் தமிழரின் நீண்ட தொடரச்சியான முடியாட்சி அற்றது. சைவத் தமிழச் சங்கிலி மன்னனிடம் இருந்த தமிழர் இறைமை, கத்தோலிக்கப் போர்த்துக்கேய மன்னனைச் சென்றடைந்தது. போத்துக்கேயர் தாம் பெற்ற இறைமையை, ஆட்சி உரிமையை கிறித்தவ ஒல்லாந்த மன்னரிடம் கையளித்தனர். ஒல்லாந்தரும் அவற்றைக் கிறித்தவ ஆங்கிலேய மன்னரிடம் கையளித்தனர்.

    ஆங்கிலேயர் விட்டுச் சென்ற பொழுது சோல்பரி அரசியலமைப்புக் கொண்ட இலங்கை, விடுதலை பெற்று ஆங்கிலேய மன்னரின் கீழ் குடியாட்சி (Dominion) நாடாகியது.

    இலங்கையின் உச்ச நீதிமன்றத்தை நாடுவோர், அதன் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து அரசவை நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்கலாம், தீர்ப்பைக் கோரலாம். 1948-1972 ஆக 24ஆண்டுகளாக இந்த நிலை.

    1795 தொடக்கம் 22 மே1972 வரை சங்கிலிய மன்னன் கையளித்த சைவத் தமிழர் இறைமை ஆங்கிலேய அரசியிடம்.

    இலங்கை நாடாளுமன்றமே அரசியலமைப்பைத் திருத்தாமல், சட்டத் தொடர்ச்சி இன்றி, புதிய அரசியலமைப்பு யாக்க அவையை, கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில், நவரங்கல மண்டபத்தில் 1971 ஸ்ரீமாவோ ஆட்சியின் கீழ் கூட்டிய பொழுது சங்கிலியன் கையளித்த தமிழரின் இறைமையை யார் பயன்படுத்துவது? என்ற வினா.

    புதிய அரசியல் அமைப்பு யாக்க அவையில் தமிழர் பங்கு பற்றாததால் சைவத் தமிழச் சங்கிலியன் கையளித்த சைவத் தமிழரின் இறைமை கத்தோலிக்கப் போர்த்துக்கேயர், கிறித்தவ ஒல்லாந்தர், கிறித்தவ ஆங்கிலேயர், சோல்பரி அரசியலமைப்பு எனச் சட்டத்தொடர்ச்சியாக 1972 மே 22ஆம் நாள் மீண்டும் தமிழரிடம் வந்தது.

    படைப் புரட்சி வழியாகச் சூடான் நாட்டில் சட்டத் தொடர்ச்சியற்ற ஆட்சியை அமைத்தார்கள்.

    தமக்குத் தாமே விடுதலையை (Unilateral Declaration of Independence) அறிவித்துச் சட்டத் தொடர்ச்சியற்ற  ஆட்சியை சிம்பாப்வேயில் வெள்ளையர் அமைத்தனர்.

    இலங்கையில் நாடாளுமன்றத்துக்கு அப்பால், சோல்பரி அரசியலமைப்புக்கு அப்பால், நவரங்கல மண்டபத்தில் கூடி, நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடி, சட்டத் தொடர்ச்சியற்ற ஆட்சியைச் சிங்களவர், புத்த சமயத்துக்கு முன்னுரிமையுடன் அமைத்தனர்.

    சைவத் தமிழ் மன்னன் சங்கிலியன் கையளித்த தமிழரின் இறைமையை, ஆட்சி உரிமையாக்கப் புதிய அரசியலமைப்பு இடம் தராது. சட்டத் தொடர்ச்சியற்ற அரசியலமைப்பு இடம் தராது எனக் கொழும்பில், மூவர் நீதிமன்றத்தின் முன் 1976இல் இராணியின் வழக்குரைஞர், சட்டத்தரணி திரு மு. திருச்செல்வம் அவர்கள் வாதிட்டார்.

    தமிழரின் ஆட்சியின் எதிர்காலம் சைவத் தமிழ்ச் சங்கிலியன் விட்டுச் சென்ற சட்டத் தொடர்ச்சிப் பங்களிப்பு இன்றி இல்லை, எனத் திரு மு. திருச்செல்வம் அவர்கள் வாதிட்டார்.

    அவருடைய வாதத்துக்கு அமையச் சங்கிலியன் கையளித்த இறைமையைத் தமிழரின் ஒப்புதலின்றி ஆட்சியுரிமை ஆக்க எவராலும் முடியாது.

    ஈழத் தமிழரின் இறைமை, போரில் தமிழரிடம் இருந்து பறிபோன நாள், அதன் நினைவு நாள், அதன் 401ஆண்டு ஆண்டு நினைவு நாள் இன்று.

    கலியுகம் 4720, சகாப்தம் 1541, திருவள்ளுவராண்டு 1650, விபவ ஆண்டு, 27 வைகாசி புதன்கிழமை (05.06.1619) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்தது. வீழ்த்தியவர்கள் மேலைநாட்டுக் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.

    கலியுகம் 5121, சகாப்தம் 1942, திருவள்ளுவராண்டு 2051, சார்வரி ஆண்டு, 30, வைகாசி சனிக்கிழமை (13.06.2020) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்து 401ஆவது ஆண்டு. அதுவே சங்கிலியன் நினைவு நாள்.

    Share
  • சங்கிலியன் 401ஆவது ஆண்டு நினைவு நாள்

    சங்கிலியன் 401ஆவது ஆண்டு நினைவு நாள்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

    சங்கிலி மன்னனின் நீத்தார் கடன் நிகழ்வுகள் நீர்நிலைகளில் நடைபெற உள்ளன.

    வடக்கே கீரிமலை தொடக்கம் தெற்கே கதிர்காமம் வரை, மேற்கே உடைப்புத் தொடக்கம் கிழக்கே கல்முனை வரை பல்வேறு ஊர்களில் ஆறுகள் குளங்களில் கடல் ஓரத்தில் மன்னன் சங்கிலியனுக்கு நீத்தார் கடன் செய்யப் பலர் முன்வந்துள்ளனர்.

    தீநுண்மி பரவாமல் தடுப்பதற்காகச் சமூக இடைவெளியைக் கருத்தில்கொண்டு நீத்தார் கடன் நிகழ்வுகளில் ஒருவர் அல்லது இருவர் பங்கேற்பர்.

    வெள்ளிக்கிழமை 12.06.2020 காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு சங்கிலியன் சிலைக்கு மாலை அணிவிக்க ஏணி வசதிகளை யாழ் மாநகரசபை செய்துள்ளது.

    மாலை அணிவித்த பின் யமுனா ஏரி சென்று பூத்தூவி வழிபட மூத்த குடிமக்கள் வருவர்.

    சனிக்கிழமை காலை 9 மணிக்குக் கீரிமலைக் கடற்கரை தொடக்கம் கதிர்காமம் மாணிக்க கங்கை வரை இலங்கை முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் நீத்தார் கடன் நிகழ்வுகள் நடைபெறும். சைவ சமய முறைப்படி நடைபெறும் இந்நிகழ்வுகளில் சைவக் குருமார் பங்கேற்பர்.

    இல்லத்தில் இருந்தவாரே இந்த ஆண்டு சங்கிலியன் நினைவை நீத்தார் கடன்களை மேற்கொள்ளுமாறு சைவத் தமிழ் அன்பர்களைகக் கேட்டுக்கொள்கிறோம்.

    கூட்டமாகக் கூடி நீத்தார் கடன்களைச் செய்வது பொருத்தமானதல்ல. தீநுண்மி பரவலைத் தடுப்போம்.

    Share
  • அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவ சேனை

    இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அலுவலகம் கொள்ளுப்பிட்டியில். 1973-1975 காலப் பகுதியில் திரு பேரின்பநாயகமும் நானும் அங்கு வாரம் ஒரு முறையாவது செல்வோம்.

    தலைவர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான், செயலாளர் திரு செல்லச்சாமி இருவரையுமோ அல்லது ஒருவரையோ சந்தித்து வருவோம். அக்காலங்களில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர்.

    திரு சௌமியமூர்த்தி தொண்டமான் வாழ்ந்த காலங்களில் அவர் வழிவந்த திரு ஆறுமுகம் தொண்டமான் எனக்கு அறிமுகமானார்.

    1994 இல் சந்திரிகாவின் அமைச்சரவையில் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்தார்.

    சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு மருத்துவராக இருந்த என் அருமை நண்பர் என்னை அழைத்தார். அமைச்சர் தொண்டமான் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் எனச் சொன்னார்.

    மருத்துவர் கீழ்ப்பாக்கத்தில் இருந்தார். எனவே அவரிடம் நேரே போனேன். அங்கே திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார்.

    சென்னை புரசைவாக்கத்தில் மேனாள் காங்கிரசு அமைச்சர் திருமதி அனந்தநாயகி அவர்கள் இல்லத்தில் அமைச்சர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் தங்கியிருப்பதாகவும் அங்கு வர முடியுமா? எனவும் திரு ஆறுமுகம் என்னிடம் கேட்டார்.

    இருவருமாகச் சென்றோம். சீனா – பிரித்தானியா அரசுகள் பேசிக் கொண்டிருந்த காலம். ஒங்கொங்கு தீவின் எதிர்காலம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. சீனாவின் பகுதியாக ஒங்கொங்கு மாறும். ஆனால் ஒங்கொங்கு தனது தனித்துவத்தைப் பேணும் என்ற வகையில் தீர்வுகளை நோக்கி வரைவுகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் தொண்டமான் என்னிடம் கூறினார்.

    அதை ஒத்த தீர்வு ஒன்றினை இலங்கையிலும் ஏற்படுத்தலாம் எனத் திருமதி சந்திரிகாவுடன் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடம் அமைச்சர் தொண்டமான் கூறினார்.

    பிரபாகரனின் ஒப்புதலைப் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அமைச்சர் தொண்டமான் கருதினார்.

    பிரபாகரன் இதற்கு ஒப்புவாரா? அல்லது இத்தகைய பேச்சுவார்த்தையை நோக்கித் தாம் முன்னெடுத்தால் பிரபாகரன் சார்பில் கலந்து கொள்வார்களா? என்றெல்லாம் அமைச்சர் தொண்டமான் என்னிடம் கேட்டார்.

    வெளியே வந்த நான் திரு பழ. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் இருவரையும் சந்தித்துத் திரு தொண்டமான் சொன்ன முன்மொழிவுகளை எடுத்துக் கூறினேன்.

    அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று திரு தொண்டமான் உடன் பேசலாமா? என கேட்டேன்.

    திரு பழ நெடுமாறன் வருவதற்கு ஒப்புக்கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் பிரீசு விடுதியில் அமைச்சர் தொண்டமானைச் சந்தித்தோம். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

    என்னிடம் கூறிய அதே செய்தியை அமைச்சர் தொண்டமான் திரு பழ நெடுமாறனிடம் கூறினார். தனது முன்மொழிவுகள் தொடர்பாக ஆதரவான கடிதமொன்றைத் திரு பிரபாகரனிடம் பெற்றுத் தர முடியுமா என அமைச்சர் தொண்டமான் கேட்டார்.

    முயற்சி செய்யலாம் எனக் கூறித் திரு பழ நெடுமாறனும் நானும் வெளியே வந்தோம். திரு பிரபாகரனிடம் இது தொடர்பாகப் பேசும் பொறுப்பைத் திரு பழ நெடுமாறன் ஏற்றுக்கொண்டார்.

    சில வாரங்களின் பின் திரு பிரபாகரனிடம் இருந்து கடிதம் ஒன்றைக் கொண்டுவந்து திரு பழ நெடுமாறன் என்னிடம் கொடுத்தார். அமைச்சர் தொண்டமானிடம் சேர்க்குமாறுகூறினார்.

    நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை அமைச்சரவையில் தொடருங்கள். அமைச்சரவையில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுங்கள் என்ற கருத்து அந்த ஆறு வரிக் கடிதத்தில் இருந்தது.

    கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவரிடம் நேரில் சென்று செய்தி சொன்னேன்.

    1991 க்குப் பின் தமிழகம், ஈழத்தமிழர் தொடர்பாக வெளிப்படையாக ஆதரவு அளிக்க முடியாத நிலையில் இருந்தது. இந்திய அளவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் சட்டம் இருந்தது.

    1991 இராசீவரைச் சந்திக்கச் சென்றமை தொடர்பாக மல்லிகையில் என்னையும் சேர்த்து விசாரித்துக் கொண்டிருந்த காலம்.

    விடுதலைப்புலிகள் தலைவர் திரு பிரபாகரன் தந்த கடிதம் என் இல்லத்தில் இருந்தது. மருத்துவருக்கு மட்டுமே விவரம் தெரியும். திரு பழ நெடுமாறனுக்கும் விவரம் தெரியும்.

    ஒரு வாரம் கழித்து மருத்துவர் என்னை அழைத்தார். மருத்துவமனைக்கு வாருங்கள் என்றார். கடிதத்துடன் சென்றேன். அங்கு திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார். அவரிடம் கடிதத்தைக் கையளித்தேன்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை அறியேன்.

    1996ஆம் ஆண்டு மொரிசியசு நாட்டுத் துணைப் பிரதமர், எனக்கு அருமை நண்பர் திரு பெரஞ்சே என்னை அழைத்தார். தனது கட்சியின் வெள்ளிவிழா அந்த ஆண்டு நடைபெறுவதாகவும் இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர் ஒருவரை அழைக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறினார்.

    அடுத்த வாரம் கொழும்பு செல்ல உள்ளேன். வேறு ஒரு பணிக்காகச் செல்கிறேன் அங்கு உள்ளோரிடம் உசாவிப் பதில் சொல்கிறேன் என அவரிடம் கூறினேன்.

    கொழும்பு சென்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமை அலுவலகக் கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அமைச்சர் தொண்டமான் சிறிய அலுவலகத்தில் இருந்தார். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

    மொரிசியசுத் துணைப் பிரதமரின் செய்தியைக் கூறினேன். போய் வருவீர்களா? எனக் கேட்டேன். நாடு, அங்குள்ள அரசியல் நிலைமை, கட்சியின் கொள்கை, விழாவின் இயல்பு, என என்னிடம் விவரங்கள் கேட்டார்.

    அங்கிருந்தே மொரிசியசுத் துணை பிரதமருக்கு அழைப்பு எடுத்து இருவரையும் இணைத்தேன்.

    கட்சியின் பெயர் Mauritius Militant Movement. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர் அங்கு இருந்தார். Militant என்ற பெயர் இருப்பதால் அதுவும் விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்பாக இருக்குமோ என என்னிடம் வினவினார்.

    ஆட்சியில் உள்ள கட்சியினர் அழைக்கிறார்கள் என திரு ஆறுமுகம் தொண்டமான் எடுத்துச் சொன்னார்.

    திரு பிரஞ்சே அழைப்பை ஏற்ற திரு தொண்டமான் மொரிசியசு சென்றார். வெள்ளி விழாவில் கலந்துகொண்டார். சிங்கப்பூர் வழியாகச் சென்று மீண்டார்.

    நேற்று இரவு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் என்ற செய்தி அறிந்ததும் என் கண்கள் பனித்தன. மூத்த தொண்டைமானைப் போலவே இவரும் ஈழத் தமிழர் நலனில் மிக்க ஈடுபாடு உடையவர்.

    அவரோடு பழகிய நாள்கள் நெஞ்சில் நினைவு அலைகளாக மோதுகின்றன. இனிமையான பொறுப்பு வாய்ந்த மனிதநேயமிக்க ஒருவரை இழந்து வாடும் இல்லத்தார், செந்திலார், சீவகனார், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசார், மலையக மக்கள் யாவருக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Share
  • பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

    பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி, இந்திரபாலா,
    எழுத்தாளர்கள் டானியல், பிரேம்சி,
    அரசியல்வாதிகள் குமாரசூரியர், அருளம்பலம், தியாகராசா, அல்பிரட் துரையப்பா,
    தொழிலதிபர்கள் சிவானந்தன், கே. சி. தங்கராசா,
    மருத்துவர் ஆனந்தராசா, நீதியரசர் தம்பையா,

    இவர்கள் அனைவரும் ஒரே அணியில், ஒரே கருத்தில், ஒரே கொள்கையில், ஒரே கோட்பாட்டில்.

    நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நடத்த வேண்டும் என்ற சிறீமாவோ அரசின் கொள்கையை முன்னெடுத்த அணியினரே இவர்கள்.

    1973 ஆம் ஆண்டு வைகாசி, ஆனி, ஆடி, ஆவணியில் கொழும்பில் பம்பலப்பிட்டி, மிலாகிரியா நிழற்சாலையில் உள்ள அலுவலகத்தில் கூட்டங்கள் நடந்தன.

    சிறிமாவோ அரசின் சார்பானோர் ஒருபுறம்.

    யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற அணியினர் மறுபுறம்.

    பேராசிரியர் வித்தியானந்தன், அறிஞர் யேம்சு இரத்தினம், பேராசிரியர் பத்மநாதன், திருமதி புனிதம் திருச்செல்வம், கலைஞர் வி. எசு. துரைராஜா, மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகிய நான், அறிஞர் அம்பிகைபாகன் எனப் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தில் நடத்த விரும்பினோம்.

    அக்காலத்தில் உடல் நலக் குறைவால் வளலாயில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாரும் யாழ்ப்பாணத்தில் நடத்தவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

    சிறீமாவோ அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆண்ட காலம். மாவை சேனாதிராசாவை ஒத்த 60க்கும் கூடுதலான எண்ணிக்கையில் இளைஞர்கள் பூசாவிலும் வெலிக்கடையிலும் யாழ்ப்பாணத்திலும் சிறைகளில் தவமிருந்த காலம்.

    ஒரு நாள் மாலை. பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் கூட்டம்.

    நாற்காலிகளை வட்டமாக அடுக்கி இருந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ 30 தொடக்கம் 40 பேர் வரை இருந்தார்கள்.

    நான் எழுந்து பேசினேன். நீதியரசர் தம்பையா அவர்களே யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதாக இருந்தால், நீங்கள் தலைவராகத் தொடருங்கள் அல்லது தலைமைப் பதவியில் இருந்து விலகுங்கள், எனக் கேட்டேன்.

    கொஞ்சம் சலசலப்பு. ஆனாலும் நான் விட வில்லை. மீண்டும் என் கருத்தை வலியுறுத்தினேன். பல செய்திகளைப் பேசினோம். பலர் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

    மறுநாள் நல்ல செய்தி. நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியிலிருந்து விலகினார். தொழிலதிபர் சிவானந்தர், கே. சி. தங்கராசா, மருத்துவர் ஆனந்தராசா, ஆகியோரும் விலகினார்கள். தாம் கொடுத்த நன்கொடைகளை திரும்பத் தருமாறும் கேட்டனர்.

    எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. பகை இல்லை. துரோணரின் மாணவன் அருச்சுனனுக்கு இலக்காகப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது போன்று, யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கொள்கையே எனக்குத் தெரிந்தது.  அதற்காகத் தலைமையிலிருந்து நீதியரசர் தம்பையாவைப் பதவி விலகக் கோரும் துணிச்சல் எனக்கு இருந்தது.

    பெட்டிப் பாம்பாக மகுடிக்குப் படம் எடுத்துச் சீறுவது போல் நடித்துப் பின் அடங்கி விடும் மனோநிலை எனக்கு இருக்கவில்லை.

    தந்தை செல்வாவிடம் சைவ சமயிகள் சார்பில் நான் எடுத்துக்கூறிய பல ஆலோசனைகள் அவர் கேட்டார். நடைமுறைக்குக் கொண்டு வந்தார். தந்தை செல்வா தலைவர் என்பதனால் அவர் சொன்ன அனைத்தையும் ஏற்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.

    மாற்றுக் கருத்து உண்டெனில் அதை அவரிடம் சொல்லி அந்த நியாயங்களை எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்திருக்கிறேன்.

    எனது இருபது ஆண்டுகாலத் தொடர்பில் அவர் மீதுள்ள மதிப்பு உயர்ந்தமைக்கு அவருடைய பொறுமையும் நல்ல கருத்துக்களை ஏற்று நடைமுறைக்குக் கொண்டுவரும் பண்புமே காரணம்.

    திருச்செல்வம் மூத்த வழக்குரைஞர். 13 ஆண்டுகாலம் அவரோடு பணிபுரிந்தேன். அமைச்சராக இருந்த காலத்தில் தனி உதவியாளராகவும் இருந்தேன். அவரோடு உடன்படாத கருத்துக்களை நான் சொல்வேன். அவர் தூக்கி எறிய மாட்டார். தம்பி நீர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பார். நடைமுறைக்குக் கொண்டு வருவார்.

    தந்தை செல்வாவுக்கு நினைவுத்தூண் அமையுங்கள் என்ற கருத்தை அமிர்தலிங்கம் அவர்களிடம் முன்வைத்தேன். முதலில் தயங்கினார். வலியுறுத்தினேன், ஏற்றுக் கொண்டார். என்னையே அப்பணியைச் செய்யுமாறு பணித்தார். வெற்றிகரமாகச் செய்து கொடுத்தேன்.

    அறைக் கூட்டங்களில் அமிர்தலிங்கம் அவர்களோடு முரண்பட்டு இருக்கிறேன். உங்களுக்கு அரசியல் தெரியாது என்றும் ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். மாலையில் மனைவியொடு என் வீட்டுக்கு வருவார். நீங்கள் சொன்னதில் நியாயம் இருக்கிறது அதன்படி செய்வோம் என்பார்.

    அனைத்துப் போராளி இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறேன். வன்முறையில் எனக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கை கிடையாது என நேரடியாகவே அவர்களிடம் சொல்வேன். ஆனாலும் உங்களுடைய ஈடுபாடும் தியாகமும் நல்ல நோக்கமும் என் மதிப்புக்குரியன. எனவே உங்களுக்கு என்னால் முடிந்தததைச் செய்வது என் கடமை என்பேன்.

    2000ஆம் ஆண்டில் ஒரு சூழ்நிலையில் பிரபாகரன் கொண்ட கருத்தைத் தலைகீழாக மாற்றுமாறு கேட்டேன். அவர் செய்திருக்கிறார். என் அணுகுமுறையில் உள்ள தமிழ்த்தேசிய நன்மையை அவர் பின்பும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது தமிழ்த்தேசியத்தில் ஈடுபாடுகொண்ட எவரையும் அந்நியர் எவரிடமும் சுட்டிக்காட்டித் தவறிழைக்கிறார் எனச் சொல்வதில்லை.

    சரி பிழைகளைத் தளர்வுகளைத் தொய்வுகளை நடைமுறை மாற்றுகளை நமக்குள்ளே பேசலாம். அந்நியரிடம் பேசலாமா? அதுவும் அடிமை கொள்ள விழையும் அந்நியரிடம் பேசலாமா?

    அவ்வாறு பேசியவரைச் சம்பந்தன் அவர்கள் காப்பாற்றுகிறார் எனில் பெட்டிப்பாம்பாக இருக்காமல் பொங்கியெழுந்து தமிழ்த் தேசியத்திற்காகச் சம்பந்தன் அவர்களிடமே உரத்துப் பேசி, சுமந்திரனை நீக்க வேண்டிய கடமை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

    மைத்திரிபால சிரிசேனா, இரணில் விக்கிரமசிங்க கூட்டணிக்கு வாக்களிக்காதீர் என சிவகரன், அனந்தி நான் மூவரும் ஊடகத்தாரிடம் கூறினோம். அக்கருத்து அவர்களின் தனிக் கருத்து எனக் கருதியிருக்கலாமே?

    சுமந்திரனின் கை மேலோங்கியதால் சிவகரனையும் அனந்தியையும் நீக்கினார்கள். கட்சி உடைந்தது.

    சுமந்திரன் கை மேலோங்கியதால் தமிழ்க் காங்கிரசும் ஈபிஆர்லெஎஃபும் கூட்டமைப்பில் இருந்து விலகின.

    சுமந்திரனின் கை ஓங்கியதால் அவைத் தலைவரான சிவிகே சிவஞானமே வெட்கங்கெட்டு ஆளுநரிடம் சென்றார், முதலமைச்சருக்கு எதிராக. கூட்டமைப்பை உடைப்பதற்காக.

    இன்றைய ஒருங்கிணையாத தமிழர் அரசியல் கள நிலைக்கு, இரணிலின் கைப்பாவையாகிய சுமந்திரனின் கை ஓங்கியமையே காரணம்.

    அருளம்பலம் தியாகராசா கனகரத்தினம் அல்பிரட் துரையப்பா குமாரசூரியர் என நீளும் அரசியலார் வரிசையில் சுமந்திரன் இருக்கிறார்.

    அன்று அல்பிரட் துரையப்பாவுக்குத் துணைபோன சிவிகே சிவஞானம் இன்று சுமந்திரனுக்கு துணை போகிறார். அடையாளங்கண்டு தமிழ்த் தேசியப் பயிர்களை வளர்க்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியத்தாருக்கு உண்டு.

    சுமந்திரன் இல்லாத சூழ்நிலையில் விரல்களாக வேறுபட்டாலும் கையாக இணைவோம் என வெவ்வேறு கொள்கையரும் ஒரே அணிக்கு மீள்வர். தமிழ்த் தேசியத்தார் வலிமை பெறுவர்.

    நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியில் இருந்து விலகியதால் தமிழ்த் தேசியம் ஓங்கியது. நீதியரசர் சிவசுப்பிரமணியம் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியதால் சைவத் திருக்கோயில்களை அரசு கையேற்காமல் காத்தோம். இருவரது விலகலுக்கும் எனது பங்களிப்புக் காத்திரமானது.

    சுமந்திரனை விலக்குக. அல்லது நீங்களும் விலகுக எனச் சம்பந்தன் அவர்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சல் உள்ளவர்களை அழைக்கிறேன். படகு பெரிய பாறாங் கல்லுடன் மிதக்க முடியாது. பாறாங்கல்லை நீருள் தள்ளிப் படகைக் காக்க அழைக்கிறேன்.

    Share
  • ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்

    ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    சித்திரை 29 2051 செவ்வாய் (12.05.2017)
    ஊடகத்தாருக்கு அறிக்கை

    சுமந்திரனைக் கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்.

    1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன்.

    சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன்.

    சுமந்திரனின் நாக்கு, கரி நாக்கு. தமிழை தமிழரை தமிழ் தேசியத்தை உணராத அறியாத புரியாத தெரியாத விரும்பாத ஒருவரின் நாக்கே சுமந்திரனின் நாக்கு என நான் அன்று கூறினேன்.

    எனவே தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்குங்கள் எனத் தலைவருக்குக் கடிதம் எழுதினேன்.

    அதற்கு முன்பு 30.12.2015இல் வட மாகாணசபையை முடக்குவதற்கு அக்காலப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கர் எடுத்த முயற்சிக்கு சுமந்திரன் கைகொடுத்தார் எனக் குற்றம்சாட்டி எழுதினேன்.

    சென்னையில் 100 அடி சாலையில் அமர்ந்திருந்த உயர்தர விடுதியொன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினர் 2015இல் நடத்திய கருத்தரங்கில் முதல் முதலாகச் திரு சுமந்திரனைச் சந்தித்தேன். ஈழத்தமிழரின் சார்பில் அவர் அங்கு பேசினார்.

    அங்கே அவரின் பேச்சைக் கேட்டேன். இவருக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? இத்தகைய கரிநாக்கராக இருக்கிறாரே என மனத்துள் சினந்தேன்.

    1961 முதலாக தமிழ் தமிழர் தமிழ் தேசியம் ஈழத்தமிழரின் நன்மை என்பவற்றுக்காக தமிழகத்தில் நானும் இணைந்து சிறிது சிறிதாகக் கட்டியெழுப்பிய ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கையைப் போட்டு உடைத்தார் 2015இல் சென்னையில் சுமந்திரன்.

    சிங்களத் தொலைக்காட்சி பேட்டியில் சுமந்திரன் கொடுத்த விடைகள் கரிநாக்கராக அவரை உறுதி செய்துள்ளன.

    தமிழர் இயல்பிலேயே அறநெறியாளர். ஆயுதங்களை 400 ஆண்டுகளாக அறியாதவர். அவர்களை ஆயுதம் தூக்குமாறு தூண்டியோர் 1948இல் விடுதலைக்குப் பின் வந்த சிங்கள அரசுகள். சிங்கள அரசுகளும் சிங்களக் குண்டர்களும் தொடர்ச்சியாக 1952இல் 56இல் 58இல் 61இல் 72இல் 74இல் 77இல் 82இல் 83 நடத்திய தமிழர் மீதான கொடும் பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதத்தை நினைவுகூரச் சுமந்திரன் தவறிவிட்டார்.

    அப்பாவிகளாக இருந்த தமிழ் இளைஞர்களை ஆயுத தாரிகள் ஆக்கிய அரச பயங்கரவாதத்தை, சிங்களத் தலைவர்கள் பலரையும் ஒப்புக்கொண்ட எதார்த்த நிலையை சுமந்திரன் அடிக்கோடிட்டுக் கூறாமல் விட்டார்.

    ஏனெனில் அவர் தமிழ் தமிழர் தமிழ்த்தேசியம் என்பவற்றைக் கிஞ்சித்தும் அறியாதவர் கொஞ்சமும் உணராதவர்.

    இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை.

    தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்களே முதற்கட்டமாக அவரைக் கட்சியிலிருந்து இடை நிறுத்துங்கள். விசாரணையைத் தொடங்குங்கள். அவர் வேட்பாளர் இல்லை என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள்.

    அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனத் தமிழ் மக்களிடம் கூறுங்கள்.

    வரலாற்றை அறியாத தமிழ் தேசியத்தில் ஊறாத தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடற்ற ஒருவரை, அகத்தே முரட்டுக் குணத்துடன் கொடிய நோக்கத்துடன் ஓநாயாகிப் புறத்தே ஆட்டுத்தோல் போர்த்திய பொய்யர்களான போலிகளை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள் என இயேசுபிரான் கூறியதாக மத்தேயு 7:15இல் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தம்.

    Share
  • இறைச்சிக் கடைகளை மூடுக (Close Abattoirs and Meat shops)

    இறைச்சிக் கடைகளை மூடுக (Close Abattoirs and Meat shops)

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    சிவசேனை, இலங்கை

    தீநுண்மிக் (வைரசு) கொள்ளை நோயில் இருந்து மக்களைக் காக்க இறைச்சிக் கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடுக.

    கோவிட்டு 19 என்ற தீநுண்மி (வைரசு) கொள்ளை நோயைப் பரப்புகிறது.

    இத் தீநுண்மியின் தொடக்க இடம் சீனாவின் ஊகான் மாகாணத்தில் ஓர் இறைச்சிக்கடை எனச் சீன அரசு அறிவித்தது.

    இறைச்சி உணவைத் தவிருங்கள் எனச் சீன அரசுத் தலைவர் சீன மக்களைக் கேட்டிருந்தார்.

    கோவிட்டு தீநுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இந்தியாவின் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் கோழி ஆடு மாடு இறைச்சிக் கடைகளை மூடுமாறு ஆணை இட்டுள.

    இலங்கையிலும் வேகமாகப் பரவிவரும் கோவிட்டு தீ நுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இலங்கை முழுவதும் இறைச்சிக் கடைகளை உடனடியாக மூடுமாறு ஆணையிட இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஒன்பது மாகாணங்களிலும் உள்ள உள்ளூராட்சித் திணைக்கள ஆணையர் ஒன்பதின்மரும் உடனடியாக ஆணை இட்டு உள்ளூராட்சி அமைப்புகள் உரிமம் வழங்கிய இறைச்சிக் கடைகளை மூடுக.


    Close Abattoirs and Meat shops in Sri Lanka forthwith

    Tracing the origins to meat shops in Wuhan, China, Chinese Government appealed to the 1.3 billion Chinese people to avoid meat eating to prevent the covid 19 virus menaces. Most meat shops in China stands closed as of now. President Xi Jinping is reported to have advocated vegetarianism.

    In India, many state governments have banned the sale of chicken, mutton, beef and pork, to clamp down on abattoirs and meat shops. Kerala is the latest state to ban meat shops.

    I appeal to the Government of Sri Lanka to order the local bodies, pradeshya sabhas, urban councils and municipal councils to revoke the licences granted to abattoirs and meat shops to gear up for a long term programme to meet the challenges of covid 19.

    Even though the number of infected with covid 19 in Sri Lanka may be proportionately low, global phenomenon has been that the number of infected persons shoots up sooner or later to un-manageable levels. In addition to personal hygiene, eating habits have also contributed to the vulnerability to infection by covid 19 immensely.

    Hence this appeal to close abattoirs and meat shops in Sri Lanka forthwith.

    Share
  • மன்னாரில் நாடாளுமன்றத் தேர்தல்

    மன்னாரில் நாடாளுமன்றத் தேர்தல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மன்னார் மாவட்டச் சைவ மக்களுக்குச் சைவ வேட்பாளர் ஒருவர் தருக

    1. நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் உருவாக்கியுள்ளார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    2.   திருக்கேதீச்சரக் கற் கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறைக் கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் வெற்றிபெற்றே வருகின்றனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    3. திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் 1964 வைத்தியநாதன் – எமிலினியாசுப்பிள்ளை உடன்பாட்டை மீறி 2010 தொடக்கம் உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்டினர். சைவர்களின் மனத்தில் ஆறாப் புண் தந்ததே இந்த நிகழ்வு. சிங்களவர் ஒப்பந்தங்களை மீறுகிறார்கள் என ஆயர் இராயப்பு மதகுரு இம்மானுவேல் போன்றோர் செனீவா உள்ளிட்ட உலக அரங்குகளில் கூறுவர். மன்னாரில் ஆயரே உடன்பாடுகளை அப்பட்டமாக மீறுவர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    4.   கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டார். பின் கல்வி வலயத்தார் தலையிட்டனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    5. மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்தார். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. சைவ அன்பர் தலையிட்டு நான்கே நாள்களில் பாதையைத் திறந்தார்.

    6. முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. களத்துக்கு வந்தவர், சைவருக்கு ஆறுதல் கூறியவர் சைவ அன்பரும் தமிழகச் சைவ அன்பர்களுமே.

    7.   வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினர் கிறித்தவர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    8. சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்கக் கோயில் ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச்சென்றாரே காணொளி ஆதாரம் உண்டே. சைவர்களைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தார்கள்? சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    9.   அரசின் நிதி பெற்று, எந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அந்தத் தேவாலயத்தையும் சைவர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து மதில் கட்டக் கத்தோலிக்கர் முயன்றபோது தடுக்கச் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    10. ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பதுமாக மதவெறியர் நல்லிணக்கத்தைக் குலைக்க முற்படுகையில் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    11. சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள். மகாசிவராத்திரிக்கான வளைவை உடைத்தார்கள். வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கண்டிக்கவிலலை, நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லை. உடைத்த குண்டர்களுக்கு மறைமுகமாக அளித்த ஆதரவும் தமிழர் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் அவர்களைப் பிணையில் எடுத்த சோக நிகழ்வும் மன்னார் மாவட்டச் சைவர்களை, உங்களுக்கு வாக்களித்த சைவர்களைத் துயரத்தில் சோகத்தில் துன்பத்தில் மீறாத அழுகையில் ஆழ்த்தியுள்ளது. சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    12. தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்ட முயன்றார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. வழக்கு நீதிமன்றத்தில்.

    13. திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு ஏ32 வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை வைத்துள்ளார்கள். சைவர்களை அவமதிக்கிறார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    14. கற்கடந்த குளம் கற்குளம் எனப் பல ஊர்களில் சைவர்கள் கணிசமாக வாழ்ந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி பெற்று ஏ32 சந்திப்புச் சாலைகளில் கிறித்தவச் சின்ன வளைவுகள் கட்டி உள்ளார்களே. சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    15. செட்டியார்மகன், அருகிலுள்ள கிராமம். 100 சைவக் குடிகள். நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் துணைத்தலைவராக உள்ள மெதடிஸ்த திருச்சபையினர் 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர். சைவக் கோயில்களை இடித்தனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    16. கத்தோலிக்கரும் முகமதியரும் மன்னார் மாவட்டச் சைவர்களைக் குறிவைத்து மதம் மாற்றுகிறார்கள். சைவர்கள் தமக்காகப் பேச, குரல் கொடுக்கத் தலைமை இன்றித் தவிக்கிறார்கள்.

    17. வெற்றி பெற்றபின் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மன்னார் மாவட்டச் சைவர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இழைத்து வரும் கொடுமைகளை அநீதிகளை குற்றங்களை தீமைகளை சைவ வாக்காளர் இப்பொழுது அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள். என் செய்தோம் என் செய்தோம் என உங்களுக்கு வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுகிறார்கள்.

    18. மன்னார் மாவட்டச் சைவ மக்களுக்குத் தலைவராகச் சைவர் நலம் காக்கும் சைவ சமயத்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் சைவர்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் குறையும். சைவர்களின் எதிர்ப்புக் குரல் வலுவடையும்.

    19. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மன்னாரைச் சேர்ந்த சைவர் நலம் பேணும் சைவ சமயத்தவரான கட்சி உறுப்பினர் ஒருவரை 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துக. அவ்வாறு அமையாத பட்சத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு வாக்களித்து என் செய்தோம் என் செய்தோம் என வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுவோர் தமக்குத் தலைமை தாங்கித் தம் துயர் தீர்க்கும் மன்னார் மாவட்டச் சைவர் ஒருவருக்கே வாக்களிப்பர்

    Share
  • மறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    தலைவர், சிவசேனை, இலங்கை

    உண்ணா நோன்பிருக்கிறேன்

    போர்த்துக்கேயரின் அடிவருடிகள், ஊர்காவற்றுறையில் ஒளிந்திருந்த காக்கை வன்னியன் வாரிசுகள், யாழ்ப்பாண ஊடகங்களின் அச்சு இதழான வலம்புரி இதழ் அலுவலகத்துக்கு இன்று 20.02.2020 வியாழன் மாலை வந்தார்கள். 
    அடித்து நொறுக்க முயன்றார்கள்
    இடித்து அழிக்க முயன்றார்கள்
    விட்டிருந்தால் தீயிட்டுக் கொளுத்தி இருப்பார்கள்.

    ஊர்காவற்றுறையில் சைவத் தெருப்பெயர்களைக் கிறித்தவப் பெயர்களாக மாற்ற முனைகிறார்கள் எனச் செய்தி வெளியிட்டதற்காகத் தாக்கினார்கள்

    ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசு பெருமானின் வரிகளை மறந்து, வன்முறையில் ஈடுபடுகின்ற போர்த்துக்கேயரின் அடிவருடிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    வலம்புரி இதழ் மீது கைவைத்தால் சைவத் தமிழ் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

    வன்முறையைத் கண்டித்து
    ஊடக சுதந்திரத்தை ஆதரித்து
    சைவத் தமிழ் பண்புகளைக் காக்க
    21.2.2020 வெள்ளி காலை தொடக்கம், யாழ்ப்பாணம் கண்டி வீதி சுண்டிக்குளி  ஆயர் இல்லத்துக்கு முன்பாக அடையாள உண்ணா நோன்பிருக்கிறேன்.

    Share
  • “Include us” – Sri Lankan Hindus appeal to India

    Maravanpulavu K Sachithananthan
    Leader, Sri Lankan Shiva Senai
     
    Citizenship Amendment Bill presented today 09.12.2019 in Lok Sabha by the Honorable Home Minister attempts to redress longstanding grievances of Hindu refugees in India who do not want to return to their home lands.
     
    The bill seeks to facilitate Hindu refugees from Afghanistan Pakistan and Bangladesh.
     
    The situation for Hindus in all three countries is not different from that of the Hindus in Sri Lanka. But the bill has conveniently ignored the the ten thousand year old history of the Hindus in Sri Lanka.
     
    Sri Lanka is the land the Hindus. Periodic introductions of religion and sects alien to the land had brought irrepairable damage to the Hindus in Sri Lanka.
     
    Recent happenings require the attention of the Indian government and the Lok Sabha.
     
    In 1958 at Pananthurai, 30 kilometres south of Colombo, during the height of arsom looting and damage to Hindu persons and properties, Hindu priest was burnt alive inside the Murugan Temple.
     
    In 1983 during the anti Hindu riots, statue of Lord Ganesha situated at the entrance to the fort of Trincomalee was uprooted and thrown into the sea. A line was written in Sinhala language at the place where the statue was. It’s said Lord Ganesha had gone for a bath.
     
    During the long drawn out struggle Hindus had since 1948, they lost nearly 3000 Hindu temples. That was the estimate in May 2009 when the war almost ended.
     
    Post war semblance of peace and harmony has been intentionally disturbed by placing Hindus in a precarious situation.
     
    Navatkuli is Hindu dominated village. Few Buddhist settlers colonized with government support. They started building a Buddhist vihara. The colony dispersed. The Vihars continues to be there in the midst of Hindus. This is in Jaffna district.
     
    Kanakambhihai kulam Hindu temple is venerated by Hindus of Kilinochchi district. On the full moon day of Vaikasi it has been tradition of 1000 years or more that Hindus congregate in large numbers (say more than a lakh) to offer pongal to the deity. During 2017 statue of Buddha has been erected in the area close to the sanctum sanctorum preventing Hindus from taking their chariot procession. This is in Kilinochi district.
     
    Archaeologicaly significant Hindu temple for Lord Ganesha is at Nayaru. During 2016 Buddha statue was erected subsequently an enclave of Buddhist presence dominated by Buddha priests sprang up. During 2019 after the Hindus celebratre their pongal, Buddhists damaged the flags to the irritation of Hindus. This is in Mullaitivu district.
     
    At Murunkan on the banks of the Giants tank, a temple for Shakti was built during the time Giants tank was constructed nearly 2000 years ago. Untouched by other religionists until 2016, suddenly a Buddhist priest came to the temple and erected statue of Buddha. This is Mannar district.
     
    Swami Vigyanand ji, International Secretary of the Vishwa Hindu Parishad had first hand personal experience of facing difficulties in taking over the historical Hindu Amman kovil at Kathirkamam  at Hambantota district Sri Lanka.
     
    Kannya is tourist attraction for its antiquity. There are seven hot spring wells each having a different temperature. Ravana is said to have performed the last rites for his mother, when he constructed these hot spring wells. There is a Shiva temple and temple for Lord Ganesha. Post war the Buddhists came and started erecting structures for propagation of Buddhism. Recently in 2019 the trustee of the Lord Ganesha Temple begin reconstruction work to conduct the Maha kumbh abhishekam. Buddhist priests came and obstructed with assistance of their fellow believers. Now now the matter is subjudice. This is in Trincomalee district.
     
    These are examples or instances. Post independent Buddhist majority exercises are aimed at damage and destruction to Hindu temples and in driving away the Hindus from their traditional homelands.
     
    So much so today Hindus have fled to nearly 40 countries all over the world seeking refuge. 12 lacs of Hindu refugees from Sri lanka are spread across the world.
     
    Except in India in almost all the countries these Hindu refugees enjoy citizenship or permanent resident status.
     
    Since 1983 almost three hundred thousand Hindus are living in India as refugees. Of these around one hundred thousand are inside refugee camps and around 200000 living outside refugee camps.
     
    Various incentives by the government of Sri Lanka and the UNHCR to move this refuges in India to Sri Lanka proved futile.
     
    Even the families who returned, many have decided to go back to India because of the poor facilitation and continued discrimination.
     
    For 35 long years around 300000 Hindus living in India are without citizenship. They do not have travel documents. They do not enjoy the same benefits Indians enjoy.
     
    Out of these three hundred thousand nearly a third do not know their mother country. For them India is their motherland.
     
    Situation for Hindus in Sri Lanka is not different from that of those in Afghanistan Pakistan of Bangladesh.
     
    For the Hindu, the Sri Lankan situation is a fire place without flames. Post independent Sri Lanka is an example of this fire place fanning from time to time into flames by extremist Buddhist elements. The sober, the moderate and reason minded Buddhist practitioners have little or no say on these extreme elements. There is no social political judicial or other mechanism in place to control them.
     
    We the Hindus in Sri Lanka appeal to the members of the Lok Sabha in India and to the government of India to include Sri Lanka as a country along with Afghanistan Pakistan and Bangladesh in the Citizenship Amendment Bill.
     
    That will facilitate those Sri Lankan refugee Hindus who may want to remain India. The human angle should not be forgotten. Because they were born as Hindus and the Sri Lankan Buddhists extremists do not tolerate them, are they to perish without citizenship during their lifespan?
     
    (09 12 2019)
    Share