Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180404 – Achyuta -Dialogue with Arjuna -lr-graphite and watercolour A4

    ”சங்குளார் கைகளில் சவ்யசாசி அர்ஜுனர்
    தொங்கிட கீதாவ தாரம்காண்: -செங்கண்மால்
    சொல்லிட சவ்யசாசி வில்லாளி கூறினன்,
    கொல்லுவேன் நூறினைக் காண்’’…..கிரேசி மோகன்….!

    சவ்யசாசி -இரண்டு கைகளாலும் வில்விடும் தேர்ச்சி பெற்றவன் பார்த்தன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180409 -Brahma mohanam -Krishna Leela -watercolour- lr A4

     

    ’’அயனவர் அன்னமாய் ’ஆ’போல் (திருவடியில்)அடி,ச்சின்
    மயக்கைமேல் தாங்கிட மாட்டை : -வியனுலகில்
    தத்தகுரு போல்கண்ண தாமோ தரர்காட்சி,
    சித்தமொரு மித்தவரைச் சேர்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180408 Yashoda’s Universe- lr A4

    ”கண்ணிக்கு காட்டினார் கண்டங்கள் ஈரேழை
    அன்னிக்கு மாற்றாந்தாய் அன்னையின் -சென்னைக்கு(தாய் வீடு)
    சேயாய் மடிவாழ்ந்தார் , சந்திர வம்ஸசிசு
    தாயார் குடல்விளக்கம் தாமு’’(தாயார் குடல்விளக்கம் செய்த தாமோதரர்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180406 Trivikrama -graphite -A4 -lr

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு’’….கிரேசி மோகன்….!

    கள்ளா குருவாயூர் பிள்ளாய் வருவாயே
    உள்ளம் நிறைவாக என்முன்னே – தெள்ளிய
    மாமுனிக்கு விக்கிரமா, காமினிக்கு சுக்கிரனே(அதிர்ஷ்ட காதலர்)
    யாமினிக்க வாமனா வா….!

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    140420 -China Krishna -Gita charama shloka-watercolour 18x24cms

    ”காசிக்குப் போயும் குறட்டை விடுமிந்த
    கிரேசியின் வாய்வழியாய் கச்சேரி: -ஆசையாய்
    பீஜிங்கே போனாலும் பத்பநாபர் பாதத்தில்
    ஆஜர் அவதார ‘ஆ’(கண்ணனுடன் அவதரிக்கும் காமதேனு)….!கிரேசி மோகன்….!

    ‘சிரிச்சு சிரிச்சுவந்தார் சீனா விலேடோய்,
    கரிச்சான்குஞ்(சு) ஆவுக்காய் ,காலை -விரிச்சான்
    விரிச்சாண்காண் கண்ணனவர் வாத்ஸல்யம் காட்டும்
    அரிஜாண்சேய் ஆனாலும் ஆண்(புருஷோத்தமர்)’’….கிரேசி மோகன்….!

    ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி(பார் அடி)
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட,
    பாதார விந்தம் பசு….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஊட்டிக்கே ஆப்பிள்!…ஊட்டிடும் கையால் 1000நாமம் உற்றவர்க்கே நாமம்….!

    ”ஆயர்தம் பாடியில் அன்னை யசோதாதாய்
    மாயன் வடமதுரை மன்னவன் -தூய
    சகஸ்ரனுக்கே(சகஸ்ரநாமனுக்கே நாமம்) இட்டனள் ஸ்ரீசூர்ண நாமம்,
    நிகமாந்த தேசிகர் ‘நா’(வாக்கு)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    முதலில் புரியவில்லை…..வாசித்து வரையும் ஓவியர் கேசவ்ஜி மஹராஜ் டெலிஃபோன் உபன்யாசத்திற்கு பின் விதவிதமாய் வந்தது வெண்பா…அதில் அவர்(கேசவ்ஜி) அங்கீகரித்த ஒன்றை மட்டும் பகிர்கின்றேன் உங்கள் மேலான பார்வைக்கு…கேசவ்ஜி சொன்னதில் அடியேன் புரிந்து உணர்ந்தது….’’முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’’….!சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து….!

    பின் -குறிப்பு – கேசவ்ஜி சும்மா வரைவதில்லை…கீதை,தேசிகர் ஸ்லோகங்களை படித்து ஆராய்ந்து சித்திரம் தீட்டுகிறார்….விசித்திர ஓவியர்….!VIA கோவர்த்தன் வைகுண்டம்(ஆன்மா)….!

    180404 – Goverdhana-UddharedAtmanAtmanam (Gita 6:5)-wm -A4- watercolour

    ‘’ஆவை உயர்த்தினார் ஆன்மா அடைந்திட
    போவை குண்டம், புலனடக்கம் -தேவை
    (அல்லது)
    GOவை குண்டமது, கோவர்த்தன்: -தேவை
    முயற்சி மனிதனுக்கோ ,மாட்டுக்கோ , கண்ணன்
    பயிற்சி அளிக்கும் பரம்’’….கிரேசி மோகன்….!Okee yaa Keshav….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….

    180403 -Makhan chor-gouache -A4 -lr

    “மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
    தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
    இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
    மன்னார்AND COCHOR மனது”….
    மன்னாரண்ட் கோசோர் மனது”….

    ”மந்திமனம் எம்பியெம்பி முட்டுது எட்டெழுத்தை(ஓம்நமோநாராயணாய)
    பந்தி திருட்டினில் பங்குபெற -சந்திர
    வம்ஸ சிசுபாலர், வானரத்தைக் கேட்கின்றார்,
    ’கம்ஸன் அனுப்பினானா கூறு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180402 Vatsalya A4 -lr

    ’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், யாதவக்
    குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
    பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா:
    வயலிவர் ராதைநீர் வீச்சு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180401 RadheKrishna A4 lr

    ”கண்ணாடி பார்க்கின்றாள், கன்னி இராதைப்பெண்
    முன்னாடி கண்ணன் முதுகிலே -தன்னாடி(தன் ஆடி(கண்ணாடி))
    பிம்பத்தில் கண்ணன் பிரதிபலிக்க ,ஓய்ந்தனள்,
    சம்பத்தாய்(செல்வமாய்) மார்பிலே ஸ்ரீ(மகாலஷ்மி தாயார்)….!

    கனிச்சுவை ராதை கமலஇதழ் கவ்வி
    துணிச்சலுடன் முத்தம் திணித்து -அனிச்ச
    மலராள் அலறும்முன் மன்னிப்பு கேட்பான்
    தளரான் எதற்கும் துணிந்து….கிரேசி மோகன்….!

    Share
  • படமும், பாடலும்….!

     

    கிரேசி மோகன்…..!

    1984 என்று நினைக்கிறேன்….கிரேசி குழுவினருக்கு ‘பாம்பே ஷண்முகானந்தா’ சபையில் நாடகம் போடும் வாய்ப்பு கிட்டியது….அன்நாளில் பாம்பேயில் நாடகம் போடுவதென்றால் மதராஸ் குழுக்களுக்கு அமரிக்காவில் போட அழைப்பு கிடைத்த அளவுக்கு பிரசித்தம்….அவர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள்….மைனர் குழு எங்களுக்கு கிடைத்தது தெய்வாதீனமே….அந்த சமயம் பார்த்து எங்கள் லேடி-ஆர்டிஸ்ட் திருமணம் செய்து கொண்டு விலக, புதிதாக வேறு ஒரு நாயகி….சுந்தரத் தெலுங்கி….பார்க்க சுந்தரம்(அழகு)….பேச்சு அவந்தரம்….அவளுக்கு வீடியோ பிரமாதம்….ஆடியோ அபத்தம்….

    நாடகத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளுக்கு தமிழ் வசனம் ரிகர்சல்….கடைசி வரை மாதுவை தாய் பாஷையில் லேது என்றுதான் கூவிக் கொண்டிருந்தாள்….3000 பேர் அமரும் ஷண்முகானந்தாவில் ஒரு சிறுவன் மட்டும் அமர்ந்து எங்கள் ரிகர்ஸலை ரசித்துக் கொண்டிருந்தான்….குறிப்பாக அவன் குஷியாகி சிரித்தது , அந்த நாயகியின் ‘மாது-லேது’ மாற்றத்திற்குத்தான்….அந்தச் சிறுவனின் தாய் பாஷை தெலுங்காம்…அதனால்தானோ ‘லேது மாது’ பன்னை(PUN) வெகுவாக ரசித்தான்….சாயங்காலம் தினமும் சூறாவளி கச்சேரி செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரத்யேகமாக(கிருஷ்ணருக்கு கீதை சொல்ல ஒரே ஒரு அர்ச்சுனன் கிடைத்தது போல) மேடை அலங்காரம் செய்து எங்கள் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’’ நாடகத்தைப் போட்டு அந்தக் குழந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்….”குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’….ஒருவேளை அந்தக் குழந்தையைக் கொண்டாடி, அதன் ஆசீர்வாதத்தைப் பெற்றதாலோ என்னவோ இன்று எங்கள் குழு தெய்வத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது (சாக்லேட் கிருஷ்ணா)….அந்த தெய்வக் குழந்தை யார் என்பதை ‘கேசவ்’ சித்திரத்தில் காட்டியுள்ளார்….பார்க்க….கிரேசி மோகன்….

    படமும், பாடலும்….!

    —————————————————-

    ‘MANDOLIN கேட்க மகாவிஷ்ணு வுக்காசை
    ஆண்டவன் கட்டளை ஆதலால் -மாண்டலின்(அமரராகி)
    ஆனாரே, வாசிக்கப் போனாரே வைகுண்டம்,
    ‘ஈநாடுக்(கு) இங்கே இழப்பு’….கிரேசி மோகன்….

    ‘மலரும் மாண்டலின் நினைவுகள்’…..

    ‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாசன்’….வைகுந்தத்தில் வாசித்து அவர் ஆத்மாவும் சாந்தி அடையும், அந்தப் பரமாத்மாவும் சாந்தி அடைவார்….

    பின்குறிப்பு -எங்கள் ‘ஜுராஸிக் பேபி நாடகத்தில், பிறந்த குழந்தை ‘நர்ஸரி ரைம்’ பாடும்….அப்போது குழந்தையின் தந்தை மாது- என்ன ! அச்சப்பன் குழந்தை பாடறது….!

    அச்சப்பன் -அவனுக்கு ‘மாண்டலின்’ கத்துக் கொடுங்கோ….யார் கண்டா பிற்காலத்துல ‘ஸ்ரீனிவாசன்’ மாதிரி ‘பிராடிஜியா’ பிரபலம் ஆகலாம்….(பலத்த கைத்தட்டலோடு நாடகம் நிறைவு பெறும்)…..

     

    ———————————————————————————————————————–

    Share
  • SRI AUROBINDO or THE ADVENTURE OF CONSCIOUSNESS -SATPREM….!

     

    ”ABOVE was an ardent WHITE TRANQUILLITY….!
    ————————————————————————————-

    “வெண்மை நிறத்தில் விதான விவேகமாய்
    உண்மை உணர்த்தும் உபயோகச் -சின்மயத்தில்,
    உள்ளது வேத உணர்வதன், விக்ஞானம்
    சுள்ளெனத் தைக்கும்ரோ ஜா(சா) “….கிரேசி மோகன் ….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    “வாஸ்த்தாவார்(வாஸ்து ஆவார்) வந்த விரஜநிலம் வாழ்ந்திட ,-
    தோஸ்த் தாவார் பார்த்தனுக்கு தோள்கொடுத்து , -ஆஸ்த்தான –
    ஆவுக்கு ஞானம் அடிநீட் டியளிப்பார்-
    பூவைத்து வைப்பார்செம் பொன் “….கிரேசி மோகன் …

    Share
  • பங்குனி உத்திரம்….!

    ’’சங்கர சாம்பசிவம்,சங்கெழில் மோகினியை
    பம்பையில் முங்கிப் பிணைந்திட -பங்குனி
    உத்திரத்தில் தோன்றிய உற்சவ அய்யனை
    நித்திரைக்கு முன்பு நினை ‘’….கிரேசி மோகன்….!

    பங்குனி உத்திரத்தன்று எழுதியது….!
    ———————————————-

    ’’பங்குனி உத்திரா! பந்தளப் புத்திரா!
    செங்கட் திருமால் சுமந்தவா! -இங்குநீ
    தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
    ஊன்றிடும் கோலுன் உறவு’’….!

    ’’பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
    மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
    இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
    தொல்லையாம் தேங்காய் தெறித்து’’….!

    ’’மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
    மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
    அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
    சபரிகிரி வாசன் ஜனிப்பு’’….!

    ”சங்குதிரி சூலத்தை சேரப் பிறந்தவன்,
    பங்குனி உத்திரன்முன், பம்பையில் -முங்கி
    சரணம் விளிப்போர்க்கு சாதகங்கள் இன்றி
    மரண ஜனனம் முடிவு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180330 -Adharasudha- Ananya series- wm -A4

    ‘யாரிது சின்னப்பொண் ! பாரதி கண்ணம்மா!
    பாரதம் செய்த பகவானே ! -தேரிதை
    ஊரதில் ஓடவிட்ட ஓவியா(கேசவ்) கண்டுகொண்டேன்,
    தேரதன்கா லில்காம தேனு’’…..!கிரேசி மோகன்….!

     

    Share