Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181028 Anjalimala -(Copic) brushpen A4 lr

    ஹரிச் சுவடி
    —————-

    அஞ்சலி மாலா கோவிந்தா
    ஆவுடை அப்பா கோவிந்தா
    இந்திர லோகம் கோவிந்தா
    ஈ கொசு எனக்கு கோவிந்தா
    உந்தன் மலையில் கோவிந்தா
    ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
    எந்த நாளுமே கோவிந்தா
    ஏகாந்த சேவை கோவிந்தா
    ஐந்து பொறிகட்கு கோவிந்தா
    ஐயமிட்டிடு கோவிந்தா
    ஒன்றி உரைப்போம் கோவிந்தா
    ஓம் நம நாரண கோவிந்தா….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    KRISHNA FOR TODAY….!
    —————————————————

    திவ்யப் பிரபந்தம் மாதிரி இது கேசவாழ்வாரின் திவ்ய BRUSH பந்தம்….அட்டகாசம்….கிரேசி மோகன் ….கேசவ் தொடரட்டும் உம் தூரிகைத் தவம்…ஒருநாள் கண்ணன் உம்வீட்டு காலிங் -பெல் அடிக்கப் போவது நிச்சயம் ….

    “விண்ணார்வம் வேண்டேன் வியனுலகும் வேண்டேனே
    கண்ணாவுன் ஆர்வமதைக் கொண்டேனே, -மன்னார்
    குடிராஜ கோபாலா கேசவ் அகத்தில்
    குடிபோன கோகுலனே காப்பு”….!

    SRI Aurobindho or THE Adventure of consciousness….!
    ————————————————————————————————
    I had simply to go to the meeting and make NAMASKAR to the audience as NARAYAN and wait and speech would come to me from some other source than the mind, as though it were dictated….And ever since all speech, writing ,thought, and outward activity have to come to me from the same source above the brain -SRI AUROBIDO….!

    ’’வாக்கும், எழுத்தும்.வரும்பார்,உனக்கது
    காகும்நா ராயணர்தம் கைங்கர்யம், -பாக்கொடு,
    சுண்ணாம்பும்,பச்சையும்(வெற்றிலை) சேர சிவப்பாகும்,
    கண்ணாம்பாள்(கண்ணன் & அம்பாள்-காளி) மேனி கலர்’’….

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
    தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
    அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனே வேண்டினேன் காப்பு….!

    வாஸ்த்தாவார்(வாஸ்து ஆவார்) வந்த விரஜநிலம் வாழ்ந்திட ,-
    தோஸ்த் தாவார் பார்த்தனுக்கு தோள்கொடுத்து , -ஆஸ்த்தான –
    ஆவுக்கு ஞானம் அடிநீட் டியளிப்பார்-
    பூவைத்து வைப்பார்செம் பொன் “….!

    “கன்றினை மேய்க்க குழலூதும் கண்ணன் –
    நின்றனன் கேசவ்கை நித்தமும்; -இன்றவன் –
    தேசுடன் நிற்பதை தேசிகனைப் போல்பாட-
    ஆசுகவி ஆக்குகண் ணா(ஆ)”….!

    வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
    ’ஆ’வென்றால் கற்பக அம்மாவாம் -சோவென்று
    மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
    வேறிருள் போக்கும் விளக்கு….கிரேசி மோகன்….!

    அபாரம் கேசவ்….இது புதிய பாணி “கே(லிச்)ளிச் சித்திரம் “….!

    “கேரள கேளி கிருஷ்ணன் அருச்சுனனை
    ஓரளவு ஒப்பேற்றும் உத்தியுடன் , -தேரலகில்
    தைதை கதகளி தாண்டவம் செய்தனன்
    கீதைக்(கு) இதுஒத்தி கை”….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    181026 The Lullaby-Vanvihari -mixed media-10×14″ icam lr

    ஆனையைத் தாங்கியவர் ஆராரோ பாடுகின்றார்,
    பூனைக் குமதே பரிவுண்டு : -சேனைக்
    களத்திலன்று கீதை கொடுத்தவராம், கண்ணன்
    ஜலத்தில் படுத்தமாலம் சர்….!

    பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
    கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
    கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
    வள்ளலென மாறும்காண் வாழ்வு….கிரேசி மோகன்….!

    ஆனை அடிமுட்ட ஆவாச்சு, பாற்கடல்
    பூனைக் குமிதே புனுகுதான் -ஞானக்
    கடலுறங்கும் மாலவர் காண்டீ பருக்காய்
    உடலெடுத்து வந்த உறவு….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181025 MAyAbharaNa – wcol – A4 Canson 200gsm 72 dpi -lr

    இன்று போய் நாளை வா
    ராமன்….
    நேற்றே வந்திருந்தால்
    இன்று போயிருக்கவே (OR) போயிறக்கவே வேண்டாம்
    கண்ணன்….!

    குறும் பா….!
    —————————————-
    கர்மவினை போட்டிடும்பார் முடிச்சு….!
    கண்டறிவாய் கீதையைப் படிச்சு
    முடிச்சவிழ உறியேறி
    முடிச்சவிழ்த்த முராரியை
    முடிஞ்சிடுவாய் நெஞ்சத்தில் பிடிச்சு…!

    மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
    நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
    மானானான் மாரீசன்
    மண்ணானான் லங்கேசன்
    காகுத்தன் கதை இதிகாசம்…கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181024 – Radha -mixed media -9×12″ strathmore 160gsm -72 dpi lr

    ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
        காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
        ராதை உடல்சுமந்து காதல்கூத் தாடுகிறார்
        கீதை வரிகள் மறந்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181023 Krishnapremi -mixed media – 9×12”Strathmore tinted paper 160gsm 72dpi lr

    ‘’மற்கடக்(குரங்குக்) குட்டியே, மாதா ரமணரை
    நிற்க அனுமதிப்பாய் நின்னுள்ளே -வர்கத்தின்
    பேதங்கள் போகும் பிறவிப் பிணிதீரும்
    மோதுங்கள் அண்ணா மலை’’….!

    வந்த மனக்குரங்கு வாயுள்ளே வாத்ஸல்யம்
    நந்த குமாரன் நவனீதம் -தந்தது:
    முற்றும் துறக்க முனிவனாய் மாறலாம்
    கற்ற களவை மற….கிரேசி மோகன்…!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181022 -Gov pattaabhishekam -mixedmedia-9×12” Strathmore 160g 72dpi wm

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….!

    “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
    நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
    பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
    மால்பிறப்பு பாகவத மாச்சு”….கிரேசி மோகன்….!

    பசு பறந்து கொசுவானது….இந்த கொசு கடிக்காது, மடிப்பாலை மாலவர் மீது சுரக்கிறது….சபாஷ் கேசவ்….!

    அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    மந்தா கினியாக மாடு்பால் -தந்திட:
    மாட்டினார் மன்னராய், மாடுகள் மேய்ப்பவர்,
    காட்டிய கேசவ் கவி”….!

    மந்தாகினி -ஆகாஸகங்கை….!

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலர்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொண்டார் குளிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181021 DWA -mixedmedia-9×12 Strathmore 160g 300dpi (Conté, charcoal, wcol) -lr

    நீபுவனம் பாரத்தை நீக்கசுற்றும் சூரியன்நான்
    தீகவனம் தீண்டும் தலைப்பா(தலைப்பாகை பாரதியார்)நான் -நீவீரன்
    சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுந்திரு
    தர்கம் புரிதல் தவிர்….கிரேசி மோகன்….!

    Share
  • ”மை LOVE வாப்பூர் டைம்ஸ்’’….!

    கிரேஸி மோகன்
    —————————

    மயிலாப்பூர்வாசிகளுக்கு நாகேஸ்வரராவ் பார்க்தான் காதல்கோட்டை. கல்லூரி நாட்களில் நான், விச்சு, நடராஜன் மூவரும் வேலை மெனக்கெட்டு பார்க்குக்கு வரும் காதலர்களை வேவு பார்க்கப் போவோம். லவ் டுடே பற்றி எனக்கு தெரியாது. அந்நாளில் மயிலாப்பூர் லவ் மடியாக ஆச்சாரத்தோடு இருந்தது. இரண்டு குழந்தைகளுக்கு இடையே உள்ள போதிய இடைவெளிவிட்டு காதலர்கள் அமர்ந்து (நாங்கள் பார்த்த காதலர்களில் பாதி பேர்கள் நாலு முழ வேட்டி, காலர் அழுக்காகாமல் இருக்க கழுத்தில் கர்சீப், சொக்காயின் கைக்கு வெளியே எட்டிப் பார்க்கும் கைவைத்த உள் பனியன், நெற்றியில் காதல் நிறைவேற கபாலீஸ்வரர் விபூதி, கற்பகாம்பாள் குங்குமம், சீனுவாசப் பெருமாள் தாயார் சன்னிதி மஞ்சள் காப்பு. பேசினால் அனுமார் கோயிலில் சாப்பிட்ட துளசி வாசனை தூக்கும்)
    ‘இவன் காதலிக்க வந்தானா?’ இல்லை கோயில் கச்சேரிக்கு தவில் வாசிக்க வந்தானா?’ என்று
    எண்ணத் தோன்றும்….

    சுவாரஸ்யமாக பேசியபடி பார்க் புல்லை காதலர் இருவரும் பிடுங்கி பிடுங்கி
    வாயில் வைத்து கடிப்பார்கள். காதலர்கள் வருவதற்கு முன்பு ஹவுஸ்புல்லாக இருந்த பார்க் எழுந்து போகும் போது புல்லே இல்லாமல் கார்-பார்க் செய்யும் அளவுக்கு வெட்ட வெளியாகிவிடும்.
    காதல் தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம், காதலில் வெற்றி அடைந்து கல்யாணமாகி தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் விட வேடிக்கை என்னவென்றால் அன்று நாங்கள் பார்த்த காதல் ஜோடிகளில் ஓரிரு ஜோடிகள் இன்றும்கூட அதே நாகேஸ்வரராவ் பார்க்கில் இளம் நரை, கொட்டாவி, ஏப்பம், இருமலோடு புல்லைப் பிடுங்கிக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    காதலர்களை வேவு பார்ப்பதிலேயே ஜன்ம சாபல்யம் அடைந்து கொண்டிருந்த எங்கள் மூவரில் “டயமாச்சுடா… அப்பா கோவிச்சுப்பா…” என்று அசமஞ்ஜமாக பேசும் நடராஜன், பார்க்கில் பெஞ்சில் அமர்ந்து கெமிஸ்ட்ரி படிக்கும் கெளசல்யாவைக் கண்டதும் காதலாகி கசிந்து கண்ணீர் மல்க ஆரம்பித்தான். அந்நாளில் சைக்கிள் வித்தைகள் தெரிந்த நடராஜனை ‘ஹெர்குலிஸ்’ஸாகவே மதித்து பெண்கள் பெரிதும் விரும்பி ரசிப்பார்கள். நடராஜன் சைக்கிளை சரளி வரிசை, ஜண்ட வரிசை, கீர்த்தனம் என்று முறையாகப் பயின்ற மகாவித்வான். நானும் விச்சுவும் போட்டு தந்த திட்டப்படி கெளசல்யாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடராஜன் நாகேஸ்வரராவ் பார்க் அருகில் சைக்கிளில் அசுர சாகசங்களை செய்தான். கெளசல்யா எதிரே வரும் போது குரங்கு பெடலில் சுருதி சேர்த்துக் கொண்டு வரும் நடராஜன் தடாலென ஆரோகணத்துக்கு தாவி சீட்டில் அமர்ந்து இரண்டு கைகளையும் விட்டு பாலன்ஸ் ஆலாபனை செய்தபடி உச்சஸ்தாயியில் செல்லும்போது சட்டென்று அவரோகணமாக பின் சீட்டுக்கு இறங்கி, பின்பு அதிலிருந்து ரோட்டில் குதித்து சைக்கிளை மட்டும் தனி ஆவர்த்தனமாக சிறிது நேரம் ஓடவிட்டு, பின்பு அதை துரத்திச் சென்று ஜல்லிக்கட்டு காளையைப் பிடிப்பது போல ஹாண்டில் பாரைப் பிடித்து ஒரே ஜம்பில் சீட்டுக்கு தாவ… கெளசல்யா “நீயல்லவோ வீரன்” என்று கண்களால் தெரிவித்துவிட்டு கமிட் செய்யாமல் போய் விட்டாள்.

    நடராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில் ஓரளவு ஆகுபெயர், வினைத்தொகை தெரிந்த விச்சு
    “கெளசல்யா, நீ வானம்னா நான் பூமி, நீ பூமின்னா நான் வயல்… நான் வயல்னா நீ நாத்து…
    நீ நாத்துன்னா நான் வாத்து” என்ற ரீதியில் ஒரு காதல் கடிதம் எழுதித் தர… நடராஜன் அதை நேரிடையாக தந்தான். அதைப் படித்து விட்டு சிறிது நேரம் விசும்பி விசும்பி அழுத கெளசல்யா, நடராஜனின் வலது கையை பிடித்து, “கவிதை எழுதிய கைக்கு என் பரிசு” என்று செல்லமாக கையில் முத்தமிட்டு “நடராஜன்… கி.வா.ஜ.வுக்கு நீங்க உறவா?” என்று பேந்த பேந்த முழிக்கும் நடராஜனை பேசவிடாமல் “ஐ லவ் யூ” சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

    வழக்கம் போல காதலுக்கு மரியாதை இல்லை. “நடராஜனும் கெளசல்யாவும் பாம்பேக்கு ஓடிப்போவது” என்று நான் முன்மொழிய பின்வழிந்தான் விச்சு. ஓடிப்போகும் திட்டத்தை கெளசல்யாவிடம் தெரிவிக்கும் ரிஸ்க்கான பொறுப்பை விச்சு ஏற்றுக் கொண்டான். மறுநாள் இரவு எட்டு மணிக்கு நாங்கள் நாகேஸ்வரராவ் பார்க்கில் நுழைந்தபோது திட்டமிட்டபடி ஆலமரத்தடியில் நீலநிறப்புடவையுடன் கெளசல்யா அமர்ந்திருந்தாள். நடராஜன் அருகில் சென்று “கெளசல்யா ரெடியா…” என்று தோளைத் தொட்டு திருப்ப கெளசல்யாவின் அப்பா நீல புடவையை களைந்து, “ம்… ரெடி,
    ஸ்டெடி ஜூட்” என்று சொல்லி நடராஜனை துரத்தி துரத்தி அடித்தார். டினோசர் போல
    நடராஜனை புரட்டி புரட்டி எடுத்து ஒரேடியாக நாகேஸ்வரராவ் பார்க்கை ஜுராஸிக் பார்க் ஆக்கினார் கெளசல்யாவின் தந்தை.

    சமீபத்தில் கெளசல்யாவை அம்பிகா அப்பளம் வாசலில் பார்த்தேன். “என்ன மோகன் செளக்கியமா…
    ஒரு நிமிஷம்” என்று கூறிவிட்டு கடைக்குள் பார்த்து, ஏங்க… வாங்க யார் பாருங்க இங்க…” என்று கூற விச்சு நாலு குழந்தைகளுடன் வந்தான். கெளசல்யாவின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து நடராஜனை ஒதுக்கி இடைச் செருகலாக நுழைந்து கெளசல்யாவைக் கைப்பற்றிய விச்சுவை வில்லன் என்றும் சொல்ல முடியாது. தற்போது ஒரு பெரிய விளம்பரக் கம்பெனியின் ஓனராக இருக்கும் விச்சு கெளசல்யாவை சவுகரியமாக காப்பாற்றி வருகிறான். நடராஜன் மயிலையில்
    சைக்கிள் கடை வைத்து பஞ்சர் போட்டுக் கொண்டிருக்கிறான். நாகேஸ்வரராவ் பார்க் அருகில் அமிர்தாஞ்சனம் தயாரிக்கும் இடம் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை… நடராஜனின் காதல் “போயே போச்… போயிந்தே… இட்ஸ்-கான்” என்று ஆகிவிட்டது.


    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181020 Vatsalya -wcol -Strathmore 160gsm tnt 9×12″ icam -lr

     

    ”மாலோலன் பாடுகிறார் மாடதனை மார்தாங்கி,
    தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -ஏலேலோ
    வாழ்க்கையில் சிக்கி வழிதவறும் எங்களை
    ஊழ்கையில் சிக்கா(து) உதவு”….!

    ’வெள்ளைப் பசுங்கன்று, பிள்ளைக் கரியமுது
    கொள்ளை அழகாக கேசவ்நீர் -தெள்ளத்
    தெளிவாகத் தீட்டி அளித்திடுவோய், இன்று,
    பொலிவுடன் கண்ண பிரான்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181018 Mahishasuramardhini wcol Strathmore 160 gsm -72 dpi 9×12” lr

    மகிடா சுரனின் மகுடம் தெறித்து
    பகடைபோல் பாய்ந்து பறித்தோய்! -சகடனை
    செற்ற முகுந்தனின் உற்ற சகோதரி
    வெற்றி(விஜய தசமி) வழிக்கு வரம்….!

    இலவுகாத்த பச்சை இலைக்கிளி போலாம்
    உலவுகாத்தில் ஓடும் உடம்பு -நிலவுகோர்த்த
    தாழ்சடையான் சம்சாரம் தாள்பணிந்து நிற்போர்க்கு
    ஆழ்கடல் சம்சாரம் ஆறு…!கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181017 -Saraswati wcol A4 -300 dpi scan wm

    ”மீட்ட ஒருகை, மெருகூட்ட மற்றோர்கை,
    பாட்டின் சுருதியைப் போட்டொருகை, -காட்டும்,
    பலேபேஷ் அபிநயம், போட்டபடி ஒர்கை,
    தலேபா ரதிடர்பன் தா’’….!

    ”மீட்டும் ஒருகை, மெருகூட்டும் மற்றோர்கை,
    பாட்டின் சுருதியைப் போட்டொருகை, -காட்டும்
    மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு,
    தகாதோர் செவிக்கவள் திட்டு’’….!

    ”வித்யா வினய சம்பன்னே”…..!
    —————————————————————-

    ”சகல கலாவல்லி, சங்கீத சாம்ராட்,
    அகல விடாதுனை ஆட்கொண்டு, -இகபர,
    சுகங்க ளுடனே சுவிகாரம் கொள்வாள்,
    அகங்கார நெஞ்சை அழித்து”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181017 Mahagowri A4 wcol icam lr

    புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
    பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி
    விடையேறி ஈசர் இடபாகம் ஈஷீ
    மடையோனென் நாவில் மலர்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181016 -Matangi -floating in the composition of Kalidasa-24×32 lr

    ஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள்
    மாலையுற்ற கழுத்து மாலோலன் சங்கம்
    சேலையுற்ற தனங்கள் ஞானச்சீ தனங்கள்
    தாளையொற்றிப் பணிவீர் தாயளிப்பாள் குணங்கள்….!

    போகுமிடமெல்லாம் புகழ் உமக்குச் சேரும்
    ராகுகாலம் கூட மிகரம்யமாக மாறும்
    ஆதரவிக்கிங்கென்றும் அவளருளே போதும்
    ஆதலினால் அம்மா அபயமென்று ஓதும்….கிரேசி மோகன்….!

    ராஜ சியாமளா தெண்டகம்….!
    ———————————————

    நிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி
    விலாநோகச் சேலை வலம்வரும் சின்ன
    இலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள்
    கலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….!
    (மாதங்கியில்)
    சிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும்
    கரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும்
    கரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும்
    தரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….!

    மேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு
    தேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு
    நாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு
    பாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….!

    சாமளையின் பாதச் சிலம்புனக்கு காப்பு
    கோமளையிரு காதின் குண்டலங்கள் யாப்பு
    நாமலைய வேண்டாம் நாலாயிரம் பாட
    தாமரையாள் தருவாள் நாமுகந்து நாட….!

    கல்வியவள் அருளால் கலவியாகப் படியும்
    வல்வினைகள் மாறி விளையாட்டாய் முடியும்
    செல்வமுனைத் தேர்ந்து சுவிகாரம் கொள்ளும்
    அல்மதியம் மாலை ஆதவனாய் ஒளிரும்….!

    ஸ்திரபுத்தியோடு ஸ்திதப் ப்ரஞ்ஞனாக
    பெருபக்தி கொண்டு பாரதிக்கு ஏக
    அறுபத்தி நான்கு ஆயகலை தம்மை
    குருவொத்து அளிப்பாள் வரசித்தி அம்மை….!

    ராணி லலிதாங்கி ராஜ சியாமளா
    வாணி மாதங்கி வாக்கிற் கதிபதியே
    பூநீ மகரந்தம் பொய்கை வண்டும்நீ
    நான்நீ ஆகிடயென் நாவில் அமர்வாயே….!

    மகரயாழை மடியினில் நீட்டி
    அகர உகர மகரம் மீட்டி
    சிகரமேரு சிரத்தினில் வீற்ற
    சகலகலா வல்லியைப் போற்று….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஒரு கதையை நடத்திச் செல்ல இருவர் வேண்டும்….PROTAGONIST & ANTAGONIST…..மேலும் PROTAGANISTஐ ANTOGANIST டுக்குஅடையாளம் காட்ட ஒருவரோ இல்லை ஒருத்தியோ வேண்டும்….பாகவதத்தில் PROTAGANIST கண்ணன்தான், ANTOGANIST கம்ஸன்தான்….. அன்றுANTOGANIST கம்ஸன் கைநழுவி ஆவேசமாய் ஆகாஸம் சென்று’’முட்டாளே !….உனது எருமை மாட்டு எமன் கோகுலத்தில் பசு மாட்டோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்’’ என்று பாகவதத்தில் கண்ணனை அடையாளம் காட்டியது ‘’ஆட்டகனிஸ்ட் காளி’’…..அதன்பின் வெகுநாள் கழித்து கண்ணனை தினமும்’’ முட்டாளே(அடியேன்தான்)….உனது காலைக் கடன் (திரு)மாலைக் கடன் கம்ப்யூட்டரில் வந்தாச்சு….எழுந்தேலோ ரெம்பாவாய் வெண்பாவாய்’’ என்று அடையாளம் காட்டிக் கொண்டிருப்பது ‘’கண்ணனை வரைந்து போட்டகனிஸ்ட் கேசவ்’’….இது என் அபிப்ராயம் & அனுபவம்….இனி வெண்பா(ஸாரி காலைக் கடன்)….!

    KRISHNA FOR TODAY….
    —————————————-

    181014 -Kali appears before Kamsa -wcol-charcoal Strathmore 160gsm tinted paper 9×12″ lr

    ‘தூளியாட்டம் ஆடும், துவண்டவன் காலில்கோ
    தூளியாய் ஒட்டித் துகள்பருக, -காளியாட்டம்
    ஆடிட்டு கம்ஸனுக்கு அண்ணன் வரவைமுன்:
    கோடிட்டு(வண்ணக் கோடிட்டு) கேசவ் (பின்)கழித்து’’….கிரேசி மோகன்…

    “யாரிதுசின் னப்பொண்ணு! யாதுமாகி நின்றிடும்
    பாரதி கண்ணம்மா போலிருக்கு ! -நேரெதிர்
    கண்டாயோ கேசவா கண்ணனில் காளியை !
    விண்டாயே வண்ணத்தில் வார்த்து”….கிரேசி மோகன் ..

    Share