’’கோபியர் ,ஞானியர், கும்பிடும் கோபாலர்
பாபியர் நூறழிய பாரதப்போர் -JOBபிவர்:
வந்ததும் வ்ருஷ்ணிசேய், நந்தகோபர் இல்லம்பு
குந்ததுய சோதைக் காய்’’….!கிரேசி மோகன்….
Author: கிரேசி மோகன்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பூனைக்கண் மூடுது பூலோகக் கங்குலாம்(இருளாம்)
ஆனை பசிக்(கு)அவலா ஆகாரம் : -காணும்
புவிநா டகங்களை பாராது பார்க்கும்
கவிதே சிகர்வாக்கைக் காண்’’….கிரேசி மோகன்….! -
கண்ணனை நெஞ்சே கருது…. (பாடல் – மகாநதி ஷோபனா)
கிரேசி மோகன்
கண்ணனை நெஞ்சே கருது….
—————————————எழுதியது அடியேன் பாடி &இசையமைத்தது ‘’மஹாநதி ஷோபனா’’ அவர்கள்….!
பீதாம் பரமாட பீலி மயிலாட
தோதான தோழர்கள் தோள்கொடுக்க -மீதேறி
வெண்ணையை வாரி வழங்கிடும் வள்ளலை
கண்ணனை நெஞ்சே கருது….(1)நாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள்
சாணமள்லிக் கொட்டும் ஜனார்த்தனனை -ஞானமள்ளி
உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை
கண்ணனை நெஞ்சே கருது….(2)பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
கண்ணனை நெஞ்சே கருது….(3)பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது….(4)காரோத வண்ணனின் பேரோத ஆயிரம்
நீரோடை போல்தெளிவு நம்வாழ்வில் -ஆராத
இன்னமுதை தீந்திருக் கண்ணமுதைக் கற்கண்டைக்
கண்ணனை நெஞ்சே கருது….(5)வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….(6) -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”வெண்ணைக்காய் கண்ணனவர் அன்னையிடம் கெஞ்சலாட்டம்
விண்ணின் திருப்பாற்கடல் விஷ்ணுஅவர், -தன்னைத்தான்
சித்திரைப் புத்தாண்டில் ,சித்திறை என்றரியா,
நித்திரைக் காரர் நனவு’’….கிரேசி மோகன்….!
“ஞானியும் சேயும் நிகரா னவர்களே
சோணை ரமணமுனி சொன்னதிது; -ஊனென,
ஆய்ச்சியோ, பேய்ச்சியோ, ஆரளித்தா லும்பாலின்,
வீழ்ச்சிவரை கொள்ளும் விருந்து”….கிரேசி மோகன்….ஆய்ச்சியைக் கொள்ளும்…..பேய்ச்சியை நின்று கொல்லும்….
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
கொல்லவந்த கண்ணனைக் கண்டதும் -இல்லம்
புகுந்து முலைதிணித்துப் பார்த்திட வாய்க்குள்
முகுந்தனுக்கு முப்பத்தி மூணு’’(நமக்கு 32)….!
முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தோன்
அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….!
சூழ்ச்சி யுடன்வந்த பேய்ச்சி முலைபற்றி
மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….! -
ஹேவிளம்பி ஆண்டு….!

விரும்பியவை சேர விரும்பாதன போக
கரும்பதனைக் கூலியோடு கொள்ள -வரும்புதி
ஹேவிளம்பி ஆண்டே ஹடக்கிரீவர் கண்ணனால்
வாவிளம்பு தீதைத்த விர்த்து’’….!
OXYMORON TYPE வெண்பா
———————————————குருட்டு மலடி குழந்தையைப் பெற்றாள்
திருட்டுத் தனமாய்க் கனவில் -இருட்டில்
பிறந்தஅப் பிள்ளைக்குப் பாலூட்டும் போது
விருந்தானாள் வாய்க்குள் விழைந்து….பாயில்ட் வெஜிடபில்ஸ், பச்சரிசி சாதத்தில்
ஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்
சாத்தமுது சாதம் சுவையா ணநீர்மோர்
ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்….ஆச்சார்ய ஸ்வாமிகள் மேல் எழுதியது….
————————————————–
வானிடம் விட்டிந்த வையத்தில் சங்கரன்
மானுடமாய் வந்தயெம் மாமுனியே -ஊணுடல்
ஏகினும் வாஞ்சையாய் ஏளினாய்க் காஞ்சியில்
பாஹிமாம் பாதாம் புஜம்.அரியவா காப்பில், அரனவா சேர்ப்பில்
குறியவா அன்பே கடவுள் -பெரியவா
பட்டுத் தறியவா விட்டு வறியவா
கட்டும் கதரவா கட்டு….
பரணீதரனின் ”அன்பே அருளே” படித்த போது….
—————————————————————–
அன்பே, அருளே, அரனே, அறம்பொருள்
இன்பம் வசிக்கும் இருப்பிடமே -பண்பே
பெரியவா நின்னைப் பணிந்தேன், மனதில்
சிரிஅவா பொங்கிடச் செய்….
குருவாரம் ஆச்சார்யாள் ஜெயந்தி….
————————————————————-”காலடி மைந்தனாய் கோவிந்த FATHERரின்
காலடியில் கற்க, கயிலையின் -ஆலடி
சங்கரனே அத்வைதம் ஸ்தாபிக்கத் தோன்றினன்:
இங்கரனே வந்தநாள் இன்று’’….கிரேசி மோகன்… -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”வேதப் பரிபுரை வீற்றிருக்க , கோபாலர்
காதைவெண் சங்கால் குடைகிறார்: -வேதாந்த
தேசிகரின் விம்சதி தேவி மகாத்மியத்தை,
கேசவ் வரைந்த கவி’’….கிரேசி மோகன்….!”காதாகி கோபாலர் வேதாந்த விம்சதியை
ஊதுவது ஞானத்தின் உற்சாகம், -போதமர்(போது -மலர்)
வாணியும் கூடவே வாசிக்கிறாள், சாரங்க
பாணிமடி பாரதிப்(சரஸ்வதியின் இன்னொரு பெயர் பாரதி) பூ’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”காட்சியிதில், ஆனை கஜேந்திரரை காத்தருளும்
மோட்சமது உண்டாம் முதலைக்கும், -ஆட்சி
அரியா சனத்திலே அம்முதலை சாட்சி:
பரிவா சனமவர் பார்’’….!”அடிசறுக்கி ஆனை துடிதுடித்த போது
நொடிக்கணக்கில் வந்தகால நேமி: -வடிவெடுத்து
ஆவென வாய்பிளந்த பாவத்தின் பற்களுற்றேன்
ஆவன செய்யவா தேவு”….!
”துரியோ தனனும் விருகோ தரனும்(பீமன்)
சரியில் தவறில் சமமே, -அரியின்
அரசாட்சி தன்னிலே ஆராய்ச்சி வேண்டாம்,
ஒருசாட்சி யாய்அறி(ரி) வோ(ஓ)ம்”….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
குப்பம் நுழைந்தவனே காப்பு….
காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
கண்ணனே வேண்டினேன் காப்பு….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கேசவ் , மஹாகவி பாரதியாரின் ‘’குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ’’ வரிகள்தான் ‘’அக்கினிக் குஞ்சை’’ அன்னை தாலாட்டும் படம் பார்த்ததும் ஞாபகம் வந்தது….சூப்பர் கேசவ்….!
‘’காக்கைச் சிறகினை (ஏரார்ந்த) கண்ணி ,மடியிருத்தி
பூக்கச்செய் கின்றனள் பொன்குஞ்சாய்: -யாக்கை
நிறமெது வானாலும் நீலநிறக் கண்ணன்
பரமது பாகவதப் பிஞ்சு’’….!’’அட்டைக் கரியாய் அவதார பாகவதர்,
பெட்டை யசோதையின் பாதுகாப்புத்-தொட்டிலில்
தன்நினைவு இல்லாது தாலாட்டில் தூங்கிடும்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’அடிதனில் அன்னை, அவள்மடியில் கன்று,
விடியலில் வாசிப்பார் வேணு(குழல்): -படியளக்கும்
மன்னனை மாமதுரை மைந்தனை யாதவக்
கண்ணனை நெஞ்சே கருது’’….!
”தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய் -நீநெகிழ்ந்து
அண்ணனாய் தம்பியாய் ஆன பலராமக்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
சுகமளிக்கும் செல்வச் செழிப்பு”….”இதுநிஜமாய் ஆகும் அது பொய்யாய்ப் போகும்”
விதவிதமாய் எண்ணல் விடுத்து -எதுவரினும்
கண்ணணைந்த போதுதிக்கும் காரிருள் வண்ணத்து
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….! -
வெண்பா
பூமாலை சேர்த்தென்ன பாமாலை வார்த்தென்ன
ராமா யணத்தை ருசித்தென்ன -கோமான்
அபரிமித அன்பை அருள்வது பக்தை
சபரிதரும் எச்சிற் சுவைக்கு…கிரேசி மோகன்….!கல்கி கேள்வி-பதில் தொடரில் வாசகர்
”நாகராஜன் கையில் கல்கி” என்ற ஈற்றடிக்கு
வெண்பா கேட்டபோது எழுதியது….
———————————————————–
பூட்டிக் கிடந்ததன் வீட்டுச் சாவியை
வேட்டியில் வைத்து முடிந்ததை -PARTYயில்
தாகசாந்தி யால்மறந்து தாளுடைத்தான் செங்’கல்’லால்
நாகராஜன் கையில்கல் கி(KEY)….கிரேசி மோகன்….!குடம் உருளும் காளிதாசன் பாடல் டைப்பில்
——————————————————–
காமம் ஒழிந்த அதிகாலை வேளையில்
ராமன் அபிஷேக நீர்குடத்தை -தாமசமாய்
ஏந்திழையோர் போட்டுவிட ஏழு சுரங்களில்
தாம்திமித்தோம் தாளம் பிறப்பு….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
காயாம்பூ வண்ணன்கால் கன்று”….கிரேசி மோகன்….தேவன்(கிருஷ்ணர்) அவதார அவசரத்தில் கீதையை வைகுண்டத்தில் விட்டுவிட்டு வந்து விட்டார்…. ‘’துப்பறியும் சாம்பு’’ வின் மனைவி ‘’வேம்பு’’….!”வேம்பு பசுவெளுத்து வேய்ங்குழ லோன்பதத்தில்,
தாம்புக் கயிறவர், துப்பறியும் -சாம்புவாய்
கீதையைத் தேடுகிறார் வைகுண்டம் பார்த்தவர்
பாதையை கேட்பானே பார்த்து(பார்த்தன்)’’….கிரேசி மோகன்….! -
ஸ்ரீ ராம நவமி….!
பெருமாள் திருப் புகழ்….
தந்ததான தான தான தந்ததான தான தான
தந்ததான தான தான -தனதானகும்பகோண ராமசாமி பெருமாள்
—————————————“எம்பிரானும் வேதம் ஓதும் அன்னவாக னாரும் காண
மண்ணைவானை மீறு மேனி -கிரிசோணை
தன்னில்தேக வாசம் போக அன்றுஆல வாயில் சாவை
வென்றுதீர னாக மேவு -ரமணேசர்கொம்புஞானம் காண காலில் தெம்பிலாத மூடன் வாயில்
கொஞ்சமேனும் தேனை சேர -அருள்வாயே
கங்கையோடன் தோள்கு லாவி அஞ்சுமானை நீயும் கூட
என்றுகூறு தோழ பாவ -ரகுராமாஅண்ணல்சோகம் தீர வானில் பொங்குமாழி மீது தாவி
அன்னைவாழும் சேதி கூறும் -அனுமானின்,
அஞ்சனாவின் சேயின், வாயு மைந்தனாரின், வாசி ஈசன்
அம்சனாரின் நேச மான -சகவாசன்நம்பினோர்கள் நாளில் கோளில் துன்புறாது கோயில் வாசல்
அன்பினோடு தாழி டாது -சிலையோடு
அம்புறாவும் தோளில் ஆட தம்பியோடு தாரமொடு
கும்பகோண ராம சாமி -பெருமாளே”….கிரேசி மோகன்….!












