கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”வெண்ணைக்காய் கண்ணனவர் அன்னையிடம் கெஞ்சலாட்டம்
விண்ணின் திருப்பாற்கடல் விஷ்ணுஅவர், -தன்னைத்தான்
சித்திரைப் புத்தாண்டில் ,சித்திறை என்றரியா,
நித்திரைக் காரர் நனவு’’….கிரேசி மோகன்….!
“ஞானியும் சேயும் நிகரா னவர்களே
சோணை ரமணமுனி சொன்னதிது; -ஊனென,
ஆய்ச்சியோ, பேய்ச்சியோ, ஆரளித்தா லும்பாலின்,
வீழ்ச்சிவரை கொள்ளும் விருந்து”….கிரேசி மோகன்….
ஆய்ச்சியைக் கொள்ளும்…..பேய்ச்சியை நின்று கொல்லும்….