”ராதா சமேதராய் ரங்கன், விஜயருக்கு
கீதா சமேதராய் , கண்ணன்கோ -மாதாக்கு
பாதா சமேதர், பலவடிவம் ஏற்றும்ய
சோதா சமேதரென்றும் சேய்’’….கிரேசி மோகன்….!
Category: திருமால் திருப்புகழ்
பெருமாள் திருப்புகழ்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
ராதை கழுத்தென்னும் சங்கை :- போதை
தலைக்கேற கண்ணப்பர் தோளைத் தழுவி
வளைக்கரத்தால் போரென்றாள் மாது”….!’’ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
காளிங்கக் காட்சி கவனத்தில்: – மாலிங்கு
மாதை இடுப்பேந்தி காதல்கூத் தாடுகிறான்
கீதை வரிகள் மறந்து….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மாடத் திலேதுளஸி மாடத் திலேபசு
மாடத்தன் கால்மேய, மன்னனவன் -சூடிக்
கிறங்கி மணந்தவள் ஸ்ரீவில்லி,(ஆண்டாள்) விஷ்ணு
பிரியத்தில் புல்லாங் புழல்(புழலேரியாய் பொழிகின்றார்)’’….கிரேசி மோகன்….!ஆண்டாள் ‘’திருத்துழாய்(துளஸி) வனத்தில்’’ பெரியாழ்வாரால்
கண்டெடுக்கப் பட்டவள்….. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மந்திக்கும், பால்பசு மாட்டுக்கும், வித்தியாசம்,
சிந்திக்கா கண்ணா, சமத்துவ -நந்தன்
சுகுமாரன் நெய்வெண்ணை சோரன்பி ரேமை,
வெகுமானம் கேசவ் வரைவு’’….!கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”புதியன எண்ணும் பழைய விரும்பி,
மதிவழி எல்லாமே மாயை: -பதிநூற்றி(108 திருப்பதி)
எட்டில் வளர்கண்ணா , என்னத் தவம்செய்தாள்
எட்டவளை(கண்ணன் -எட்டாவது பிள்ளை) அம்மாவாய் ஏற்பு’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’புள்ளேறி சாரங்க பாணி வருகின்றார்-
கள்ளூறும் கூந்தலாள் கோமள -வல்லிகேள்வர் –
ஆரா அமுதர் அடியேன் குலக்கடவுள்: –
வாராய் வினைதீர்க்கும் வில்’’….கிரேசி மோகன்….எனது தாத்தா ‘’கும்பகோணம் கோமளவல்லி நாயிகா சமேத ஆரா அமுதா’’ என்று சொல்லாமல் இரவு உறங்கியது கிடையாது….நன்றி கேசவ்….!தனந்த தானனத்த தனந்த தானனத்த
தனந்த தானனத்த -தனதான
கும்பகோணம்———————
பெருமாள் திருப் புகழ்….
“அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்
கிருந்த வாறிருக்க -ரமணேசர்
புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை
நெருங்க ஞானவித்தை -அருள்வாயே
அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
அமைந்த யோகநித்ரை, -வனமாலி
சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய
இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே
தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு
இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள்
முகுந்த வாவகத்துள் -குடியேற
புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில்(கருட வாகனத்தில்)
பறந்து வாயெனக்கு -துணையாக
உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும்
குடந்தை மாநிலத்து -பெருமாளே”…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”அன்றானை காத்தவன், இன்றாவைக் காத்திட
நின்றான்கோ வர்த்தனக் குன்றேந்தி -வென்றவன்,
வேடமிட்டு வந்ததே வேந்திர ஆனையை
மாடமர்த்தி ஏற்புமன்னிப் பூ(கமல மலர்)”….!“இம்மி அசையா(து) இமையோன் அகந்தை
DUMMYயா கும்வரை தூக்கினான் -MUMMYயை;
COUNT -DOWN கர்வபங்கம் காணும் வரைநின்றான்
MOUNT -BATTLE FEILDல் மணி(மணி வண்ணன்)”….
MUMMYயை -கோமாதாவை
இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….“அகர முதலவன் ஆக்களைக் காக்க,
சிகரமதை சுண்டுவிரல் சேர்த்து, -தகரமாட்.
டுக்கொட்டாய் வேய்ந்தது, தேவர்கோன் கர்வபங்கம்:
அக்குட்டன் பாகவதம் அன்று’’….கிரேசி மோகன்… -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆண்டவா! நீலவண்ணம் பூண்டவா! நீள்விசும்பில்
நீண்டவா! பாரதப் பாண்டவராய் – வேண்டவா?
தூண்டவா பக்தியால்? தீண்டவா பாரதியாய்?
கீண்டவா தீங்கைக் கிழித்து”….”உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
விண்டுரைத்த போதும் விசுவமே – கண்டுகொண்டேன்
மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
வித்தை பழகும் விதம்”…. (கிரேசி மோகன்….!) -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்!
”எனக்கே எனெக்கென்(று) எவருளார் என்று
தனக்கே தனக்குள் தவித்தால் – உனக்குள்
உவமை இலாத ஒருத்தனைக் காண்பாய்
அவனே ஹரிகிருஷ்ணன் ஆம்’’ …கிரேசி மோகன்….! -
’’அன்னையர் தின வாழ்த்துக்கள்’’
வேலை இருக்குது நிரம்ப -என்னை
வேகப் படுத்திடு தாயே –
பாலை சுரந்திடு தளும்ப -உந்தன்
பாதம் பணிந்திடும் சேய்நான்
ஆலை கரும்பெனெப் பிழிந்து-எந்தன்
ஆவி பிரிந்திடும் முன்னே
சோலை நகைச்சுவைக் காற்றை-இவன்
நாளும் நுகர்ந்திட அருள்வாய்….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’டார்வின் -தியரியை’’ துவாபர யுகத்திலேயே பகவான் சொல்லி விட்டார்….!
”வானர புத்தியை வா!நரா வென்றழைத்து
கோனரசர்(வடமதுரா மன்னவர்) கோகுலக் கண்ணனவர், -நானற,
வங்கம் கடைந்தவர் வாத்ஸல்ய மாய்சொலல்
தங்கமே நீமனி தன்(டார்வின் தியரி)’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”சீதையின் மாலையைச் சீப்பிக் கடித்தவர்,
கீதையை(கண்ணனை) ராமனாய்க் கண்டுகொண்டார்: -பாதை
சரிவரப் பார்த்து சிரஞ்சீவி ஆனார்:(எல்லாமே மால் என்ற ஏகாக்ரம் கொண்டால் ‘’மாலன் மார்பில் மாலை’’….!Mind Is A Monkey தாத்பர்யம்)
கரிவரதன் மார்பில் குரங்கு (அனுமார்)’’….கிரேசி மோகன்…! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்
தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட -போக்கிரிப்
பையனே, பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
கையனே கண்ணனுன்கால் காப்பு’’….கிரேசி மோகன்….!














