—————————————————————-
வேலை இருக்குது நிரம்ப -என்னை
வேகப் படுத்திடு தாயே –
பாலை சுரந்திடு தளும்ப -உந்தன்
பாதம் பணிந்திடும் சேய்நான்
ஆலை கரும்பெனெப் பிழிந்து-எந்தன்
ஆவி பிரிந்திடும் முன்னே
சோலை நகைச்சுவைக் காற்றை-இவன்
நாளும் நுகர்ந்திட அருள்வாய்….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.