Category: கிரேசி மொழிகள்

கிரேசி மொழிகள்

  • ‘’படமும் பாடலும்’’….!

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன்

    ”மால்செய்த கண்ணன் மயக்கம் தலைக்கேற
    வேல்விழியாள் தண்மேனி வெப்பமுற -மேல்சுமந்த
    பால்நழுவிப் பொங்கி பழமவள் மூங்கிலன்ன
    தோள்தழுவும் பூவான தே”….கிரேசி மோகன்….!

    Share
  • கிரேசி QUOTE from கிரேசிஸ் கிழிஞ்ச COAT….!

    1)தை பொறந்தா வழி பொறக்கும்….ஆனா ஆடி பொறந்தாத்தான் தை பொறக்கும்….!
    2)”சினிமா வாழ்க்கை மாதிரிதான்….ஃபர்ஸ்ட் -ஹாஃப் நன்னா இருந்தா செகெண்ட் -ஹாஃப் சுமாராத்தான் இருக்கும்’’….அதான் சொல்றேன் ‘’இண்டெர்வெல் விடாதீங்க….
    கிரேசி கோட் ஃப்ரம் க்ரேசிஸ் கிழிஞ்ச கோட்….!

    Share
  • ’’பொது வெண்பாக்கள்’’….!

     

    அச்சம் விலகிடும் ஆண்மை பெருகிடும்
    நிச்சயித்தக் கர்மம் நொறுங்கிடும் -இச்சகச்
    சேறான மாயையில் செந்தா மரைபூக்கும்
    கூறாமல் சந்யாசம் கொள்….

    பயமில்லா வாழ்வே பெருவாழ்வு மற்று
    ஜயமென்ப(து) எல்லாம்வீண் ஜம்பம் -முயலாமை
    காதை உரைத்தது கீதை உரைத்தது
    ஏதும் உறைக்கலை யே….

     
    பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
    மயமான மூட மனமே -அயலாம்
    இவைதவிர்த்து ஆழ இதயத்தில் இருக்கும்
    சுவைசுகித்து வாழ சுகம்….

     
    வருவதை ஏற்று வராததை விட்டு
    தருவதில் கொள்வாய் பெருமை -இறைவனவன்
    தானேதன் கைப்பட தானியம் எண்ணிடுவான்
    தானேமே நாம்லிக்கா ஹை….கிரேசி மோகன்….!

    Share
  • ’’வரலஷ்மி விரத வாழ்த்துக்கள்’’(பொன்மகள் வந்தாள்)….!

    VaraMahaLakshmi
    “பிருகு குலத்தில் பிறந்த திருவே
    உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும்
    அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு
    வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….!
    —————————————————————————————————————————

    பொன்மகள் வந்தாள்…. மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்
    ——————————————————————————————————–

    “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
    இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
    ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
    பாகப் பிரிவினையில் பார்ப்பு”….!
    ——————————————————————————————————————

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
    நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
    சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
    தாரங் களின்தயவால் தான்”….!

    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
    பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
    மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
    பாலின் நிறத்தில் பொலிவு”….!

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….!கிரேசி மோகன்….!
    ————————————————————————————————————————–

    Share
  • ’’ஆடிப் பெருக்கு’’….!

    images (2)

    ”ஆடிப் பெருக்கினாலும் ஆடா(து) இளைத்தாலும்
    வாடி வதங்கிடும் வாழ்விது – கூடி
    இருக்கையில் இன்பம் பிரிகையில் துன்பம்
    பருக்கைக்கோ தீராப் பசி”….கிரேசி மோகன்….

    Share
  • ’’ஜீவான்மன்’’….!

     

    ’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
    பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    லாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
    கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    கவிதை கணக்கு கற்பூரத்தை
    கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    அட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
    அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….!

    ’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
    பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    லாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
    கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    கவிதை கணக்கு கற்பூரத்தை
    கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    அட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
    அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….!

    Share
  • ’’பாமரன் vs பண்டிதன்”….!

     

    ”பாத்தா பண்டிதன்
    படுத்துவிட்டா நொண்டிதான்
    தோத்தா தெரியும் சேதிடா -ஞானதங்கமே
    தீயிலிட்டா எரியும் ஜோதிடா

    பாமரர்கள் நாலுபேரு சில்லறைக்காக, -இவுரு
    மாமரமாய் சாச்சாங்க கல்லறைக்குள்ளே
    இளமையிலே கல்லென்று எழுதி வச்சாரு-இவரை
    இழுத்துபோட காட்டினிலே கல்லானாரு….

    பாமரனும், பண்டிதனும் பக்கம்பக்கம்தான் -அந்த
    பரமன் அருள்சிக்னலிலே நிக்கவப்பாரு-நடைபாதை
    பாமரனோ முந்தி கொண்டாரு -கடைவிரித்த
    பண்டிதனோ காரில் பிந்திபுட்டாரு….கிரேசி மோகன்….!

    Share
  • சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு….

     

    ”செத்தாத்தான் என்னவோய் ! சேதாரம் மேனிக்கே!
    பத்தாம்நாள் பாலூத்தும் பங்காளி ! -சத்தான
    ஆன்மா இருக்கிங்(கு) அனைத்துக்கும் சாட்சியாய்,
    வீண்நான் உடம்பை விலக்கு’’….கிரேசி மோகன்…

    Share
  • TRY this ANGLE”(CHANGE THE ANGLE OF VISION)

    “பார்வையின் கோணத்தில் பேதம் விலகிட –
    பார்க்கும் பொருள்கள் பரமசிவம் -தீர்வை –
    அவனிடமே விட்டு அகார்யமாய் வாழு,
    சிவனிட பாகத்தைச் சார்ந்து “….கிரேசி மோகன் ….!

    சரியா !….இல்லை பகவான் சொல்வது போல ‘’சப்தஜால மஹாரண்யத்தில்(சொற்கள் என்னும் பெருங்காடு)’’ சஞ்சரிக்கின்றேனா….!

    Share
  • ”படைப்பவரே காப்பவரே துடைப்பவரே”….!

     

    “படைப்பவரே காப்பவரே துடைப்பவரே -நீங்களெலாம் –
    அடைக்கலப் பொருள்தானா! இல்லை
    அடியார்கள் மருள்தானா !….
    கைலாசம் வைகுண்டம் கமலபுரம்
    இவைகளெலாம் -மெய்வி லாசங்களா! இல்லை மேதினி க்லேசங்களா! …,
    ஆத்திகம் நாத்திகம் அத்வைதம் -இவைகளெலாம் -பேத்தல் பயம்தானா! இல்லை ப்ரம்ம மயம்தானா! “
    வாழ்வதுவும்,வளர்வதுவும்,சாவதுவும் -இவைகளெலாம்-வாடிக்கைக் காட்ஷிகளா! இல்லை வேடிக்கை சாக்‌ஷிகளா’’….!கிரேசி மோகன்….!

    Share
  • மூதறிஞர்கள்(ராஜாஜி & சோ. சார்)….!

    RAJAJI.....!

    ”அடியேன் இரண்டு ஓவியங்கள் கிண்டியில் பொறியியல் படிக்கும் காலத்தில் வரைந்தேன்….இருவருமே மூதறிஞர்கள்….ஒருவர் ‘’ராஜாஜி’’….மற்றவர் ‘’சோ ராமாசாமி’’ அவர்கள்….என்னிடம் இருப்பது மூதறிஞர் திரு.ராஜாஜி அவர்களின் ஓவியம்(இணைத்துள்ளேன்)….திரு. சோ சார் அவர்களின் ஓவியம் டாக்டர் ஜெகதீஸன் சாரிடம் உள்ளது….. ஓவியத்தில் கையெழுத்து வாங்கி தருவதாக ஓவியத்தை வாங்கிச் சென்ற எங்கள் குடும்ப வைத்தியர்(டாக்டர் ஜெகதீஸன் ‘’சோ சாருக்கு’’ நெருங்கியவர்) இப்போது சொர்கத்தில் உள்ளார்(’’டாக்டர் சோ வந்துருக்கார் சொர்கத்திற்கு கையெழுத்து வாங்கி வையுங்கள் அடியேன் வருகையில் கலெக்ட் செய்து கொள்கிறேன்’’)திரு சோ. சார் அவர்களின் ஓவியத்தை மீண்டும் வரைந்தேன்(இணைத்துள்ளேன்)…..’’ராஜாஜி’’ ஓவியத்தில் வாங்கித் தருவதாகச் சொன்ன என் தாத்தாவும் சொர்கம் சென்று விட்டார்….!’’ராஜாஜி’’ ‘’சோ’’ ’’ஜெகதீஸன்’’ மூவரும் சொர்கம் சென்றுவிட்டார்கள்…இருவரின் கையெழுத்துதான் இல்லை அந்தோ….!

    Cho....8888....!

    எனது ‘’சாக்லேட்-கிருஷ்ணா’’ ‘’சோ சாரின்’’ ‘’சம்பவாமி யுகே யுகே’’, வாலி சாரின் ‘’கலியுகக் கண்ணன்’’ inspiration என்றால் மிகையாகாது….திரு.ராஜாஜியும், திரு வெங்கடகிருஷ்ணைய்யங்காரும்(எனது தாத்தா) சொர்கத்தில் ‘’ஸ்வந்திரா பார்ட்டி’’ அமைக்கச் சென்றுள்ளார்கள்….அடியேன் பூமியில்….!

    வாழ்க மூதறிஞர்கள் இருவரும்….. வளர்க அவரது புகழ்….

    என்னால் முடிந்த இரங்கற்பா சோ சாருக்கு….

    ‘’சே’’என்(று) எவருமே சொல்லமாட் டார்துக்ளக்
    ‘’சோ’’என்ற ராமசாமி சொல்வதை; -’’நா’’வென்ற
    நாடகத் தந்தை நயத்தகு வாக்கது
    ஆடகச் செம்பொன் அழகு’’….கிரேசி மோகன்….!

    விவேகா ஃபைன் -ஆர்ட்ஸ் பூஜைப் பாடலில் ‘’ஆடகச் செம்பொன் மேனி முருகனே ‘’(நீலு அண்ணா குரல் தனியாகக் கேட்கும்) என்ற வரி வரும்….முருகரும் அழகு ,சோ சாரின் எழுத்தும் அழகு’’…..!

    Share
  • சர்வம் கிருஷ்ணார்ப்பணம்….!

    கிரேசி மோகன்
    ————————————————————–

    சர்வம் கிருஷ்ணார்ப்பணமே கிருஷ்ணா! கிருஷ்ணா!
    மர்மம் இதை அறிவார் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    கர்மம் தனைத் துறப்பார் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    தர்மமே தலைகாக்கும் கிருஷ்ணா! கிருஷ்ணா!

    சேடன் படுத்திருந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    மாடுகள் மேய்க்கவந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    ஆடலக் காளிங்கன்மேல் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    நாடகம் பாகவதம் கிருஷ்ணா! கிருஷ்ணா!….

    ஏற்றிய தீபம் அகலை எரித்தது கிருஷ்ணா கிருஷ்ணா
    சாற்றியமாலை சுறுக்காய் ஆனது கிருஷ்ணா கிருஷ்ணா
    ஊற்றிய வெண்ணை உறைந்து போனதே கிருஷ்ணா கிருஷ்ணா
    தேற்றிடு எம்மை தெய்வ நாயகா கிருஷ்ணா கிருஷ்ணா….!கிரேசி மோகன்….!

    Share
  • ”ஹாஸிய கீதம்’’….!

     

    கிரேசி மோகன்
    —————————————–

    ‘’மரணத்தின், ஜனனத்தின் மாயையில் தேவா -ஆன்
    மனை மறந்தாய் ஜீவா
    அய்யய்யோ, அய்யய்யோ, அய்யய்யோ
    அய்யய்யய்ய அய்ய அய்யய்யோ….!

    அஞ்சுபுலன்களின் ஆசையினாலே
    பஞ்செனப் பறந்தது பிராணன்
    வந்த சுகங்களில் வாழ்ந்ததனாலே
    வீரன் ஆன்மனை இழந்தாய்….

    அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
    அய்யா அம்மா அம்மம்மா(அடியேன் எழுதி காத்தாடியால் பிரபலமான நாடகம்)….!

    Share
  • ’’அம்மா’’….!

    சென்ற வருட ஆடி அம்மாவாசை….!

    ஓவியம் - கிரேசி மோகன்

    ஓவியம் – கிரேசி மோகன்

    ஆடிப் பெருக்கு, அம்மாவாசை, குருப்பெயர்ச்சி ,மூன்றும் சேர்ந்து வருவது காலெண்டர் பார்க்கும் அனைவரும் அறிந்ததே….

    எங்கள் குடும்பம் மட்டுமே அறிந்தது….நான்காவது ஒற்றுமை எனது
    ‘’அம்மாவின்’’ திவசம்….பஞ்சாங்கப் படி….வருடத்திற்க்கு ஒருமுறை வரும் ‘’அதிதி தேவோ பவ’’ அவள்….
    ‘’ஆடிப் பெருக்கம்மா ஆசை குருபெயர்ச்சி
    கூடி வருகதென்று காலெண்டர் -கோடிட,
    ஆகஸ்ட் இரண்டின்று ,அம்மா சிரார்த்தம்
    ஆGUESTபஞ் சாங்கி அவள்’’….கிரேசி மோகன்….

    நாளை -ஆடி அம்மாவாசை

    Share
  • பிரதோஷம்

     

    ஆட வருகவே….
    ———————–

    முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
    தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
    பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
    மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)
    முகார விந்தம் முறுவல் பூத்திட
    அகார,உகார,மகார அம்பிகை
    அகோர மூர்த்தியை அணைத்து என்மன
    விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)
    துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
    கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
    சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)

    மாலவன் சங்க நாதம் ஊதிட
    நாலு முகன் நல்வேதம் ஓதிட
    ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
    மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)
    யாழில் பாரதி ஏழிசை சுரக்க
    வாழிய கோஷம் வைதேஹி போட
    ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
    தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)
    பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
    தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
    பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
    வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)
    பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
    தூசி தோஷங்கள் தொல்லை இராது
    வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
    நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)
    தென்னாடுடையான் தன்தேவியுடன்
    பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
    மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
    முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)

    வேத புராண இதிகாசங்கள்
    பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
    வாதிரையான் தன் வாமியுடன் என்
    காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)

    வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
    ஆடிய பாதராய் அழகுமையாளை
    சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
    ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10)….கிரேசி மோகன்….!

    Share