Category: திரை

  • நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் – ஓவியர் ஸ்யாம்

    நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் – ஓவியர் ஸ்யாம்

    மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஓவியர் ஸ்யாம், தன் ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்துகிறார். விவேக் உடனான தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். விவேக்கிற்குச் சிலை வைக்கணும் என்று அவர் சொல்வது ஏன்? பதிவைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நான் நடிக்க வந்தது எப்படி? – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 10

    நான் நடிக்க வந்தது எப்படி? – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 10

    ‘கட்டில்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார் ஸ்யாம். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் நடிக்க அழைத்தபோது ஸ்யாம் நடிக்காதது ஏன்? இப்போது தாடி வளர்ப்பது ஏன்? கத்திச் சண்டை கற்றுக்கொள்ளுங்கள் என்று இயக்குநர் சொன்னது ஏன்? சட்டென அழுவதற்குச் சக நடிகை பயன்படுத்தும் உத்தி எது? அதிகமாக ரீ டேக் வாங்கிய காட்சி எது? பிடித்த நடிகர்கள் யார் யார்? இதோ மனம் திறக்கிறார், ஸ்யாம். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில்

    யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில்

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில் ஓர் உலா. ஜூராசிக் பார்க் உள்ளிட்ட பல படங்கள் இந்த வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ளதை வழிகாட்டி விளக்குகிறார். திரைப்பட ரசிகர்களும் திரைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களும் பார்த்துப் பயன்பெறுங்கள்.

    படப்பிடிப்பு – ஹேமமாலினி லோகநாதன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Story of How Ganapathy Subramaniam became Gemini Ganesan

    Story of How Ganapathy Subramaniam became Gemini Ganesan

    Seshadri Baskar

    On this day, hundred years ago, when Ganesan was born in Pudukkottai never in their family had even thought that he would make it big one day .

    Ganesan wanted to become a Doctor but after the graduation in Maharaja College (He did B.Sc., Physics), he had to face many turbulences in life and he came to Chennai to take an assignment at Gemini Studios as a casting assistant . His job is to ensure the testing process of the aspiring actors and see whether they fit the bill.

    One of the find of Ganesan was Chandrababu. He was by then married and had four children. Well before that he had taken the asylum in Muthulakshmi House in Adayar. Later she was celebrated as Dr. Muthulakshmi Reddy a leading doctor and a reformist a daring approach of a woman of those days.

    It will be quite interesting to note that even Vizhupuram Chinnaya Ganesan later to become Nadigar Thilakam was tested and certified by Ganesan. It was Missmalini in 1947 ( a Work of RK Narayanan ).

    His films Moondru Pillaigal and Thai Ullam did not go well in the box office but it was Manam Pola Mangalyam (மாப்பிள்ளை டோய்) marked the entry of Savitri in his life in this 1957 Release which did magic and the star was born.

    Remember MGR and Sivaji Ganesan had already settled. He played Pennin Perumai, Bandha Paasam and many more with Nadigar thilakam and it was only one movie with MGR (Mukarasi). From Nagaraja , it was Sridhar, Balachander, Bhimsingh, Pantulu and many more directors had done with him. Who can forget the climax of Sumaithangi, or a rightist man in Punnagai as sathyamurthy and as David aseervatham in Naan Avan Illai, it was his home production of Narayanee Films .

    He was a celebrated throughout his career and did the best of roles till he did his Avvai Shanmugi or Mettukudi. He had won Padmashree award and had achieved more accolades throughout south India and other states .

    At the age of 85 he breathed his last around 1,30 in the noon when his family members were around him. Today its his Hundredth Birth Anniversary. When cremation was in the process, I was in Woodlands Hotel seated next to PB Srinivas. When I said that his songs had made him hero quickly he refuted and said he had become hero overnight with காலங்களில் அவள் வசந்தம் in a way Gemini Ganesan was senior to both SivajI Ganesan and MGR. But Nambiar and Manohar are seniors to Gemini Too.

    The story of Ramaswamy Ganesan to Become Kadhal Mannan it had taken nearly fifty years. He paired with Jaya in only one movie that too as a guest role . When I think of Gemini Ganesan I recollect one song of Velli vizha immeditley. உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா.

    He was in the throne of peoples hearts all through.. Gemini In my view is a urban romantic street smart and he won the hearts at ease .

    ————————————————————————

    Tail piece

    Gemini was an ace cricketer and he had served in Madras Christian College as a Lecturer. He had a passion to Translate Kannadasan’s Arthamulla Indhu Madham in English but that could not happen unfortunately.

    Additional story

    Gemini was a craze in our family and in 1959 when the film Kalyana Parisu was released my mother who was in her Mid pregnancy state went to Casino with my aunts and they all decided to name the boy child as Baskar and if the baby happens to be a girl it was decided to name as Vasanthi . Reason is this – The hero Gemini’s Name was Baskar and the Heroine Saroja Devi’s Name was Vasanthi . It was a film that was released in Casino on April 9 , 1959. I was christened as Baskar this way

    Share
  • “கந்தர்  சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

    “கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

    நடிகர் ராஜ்கிரண்

    ஒவ்வொரு மனிதனுக்கும்,
    எந்த வகையிலேனும்,
    தனக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ள
    உரிமை இருக்கிறது.

    அது, அவனது சுதந்திரம்.

    முருகப் பெருமானை நம்புவோர்க்கு,
    “கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
    “ஒரு பாதுகாப்பு அரண்”.

    இதை ஆழ்ந்து படித்தால்,
    அறிவியல்பூர்வமான,
    மனோதத்துவரீதியான
    ஆத்ம பலன்கள் இருக்கின்றன…

    இறைவனை நம்பாதோர்க்கு,
    “நம்பாமை” என்பது,
    அவர்களின் சுதந்திரம்.

    நம்பிக்கை கொண்டோர்க்கு,
    “நம்புதல்” என்பது,
    அவர்களின் சுதந்திரம்.

    இதில், அவரவர் எல்லையோடு
    அவரவர் நின்றுகொள்வது தான்,
    மேன்மையானது.

    தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
    புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
    மிகவும் கீழ்மையானது…

    இந்த கொடிய கொரோனா காலக்கட்டத்தில்,
    நோயோடும், நோய் பயத்தோடும்,
    பொருளாதாரச் சீர்கேட்டோடும்,
    உண்ண உணவின்றி
    கோடிக்கணக்கான நம் மக்கள்
    தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,

    இப்படி ஒரு பிரச்சினைக்குத் தீ மூட்டுவதில்,
    யாருக்கோ, ஏதோ, உள்நோக்கம்
    இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது…

    Share
  • ஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து

    ஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து

    ஒரு புதுப்படம்; எல்லோரும் இளைஞர்கள். பெரியவர் சிறியவர் பார்த்துத் தமிழ் வினைப்படுவதில்லை. எந்தச் சிப்பியில் எந்த முத்தோ? பெரும்படம் போலவே இந்தச் சிறுபடத்திற்கும் ஒரு காதல் பாடல்.  இசை – மாரிசக்தி, இயக்கம் – மகிமைதாஸ், பாடகர்கள் – யது – ஜாஹ்நவி , படம் – ஒராங்குட்டான்.

    பாடல்

    நண்பா!
    எப்போது காதல் வாய்த்தது?
    அப்போது என்ன நேர்ந்தது?

    ஒரு சூறாவளி
    இதயச் சிறுகூட்டில் சுழன்றதா?
    ஒரு கோதாவிரி
    முதுகின் நடுக்கோட்டில் நகர்ந்ததா?

    இலவம்பஞ்சு போலே
    உடல் மிதந்து போகாதோ
    உன்னை நினைத்தால்

    வார்த்தை மொழியிழந்து போகும்
    சொல் தீர்ந்து போனாலும்
    உரையாடல் தீராது

    கண்ணா! வினோத வேதனை
    கண்தூங்கும் போதும்
    காதல் சிந்தனை

    Share
  • டாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்

    டாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்

    சுப்ரபாரதிமணியன்

    திருப்பூரில்  கனவு அமைப்பு நடத்திய ஒருநாள் திரைப்பட விழாவில் டாலர் சிட்டி, இன்ஷா அல்லாஹ் ஆகிய படங்கள், 24.1.2020 அன்று திரையிடப்பெற்றன. இதில் டாலர் சிட்டி பற்றிய அறிமுகம் இங்கே.

    டாலர் சிட்டி ஆவணப் படம் – இயக்குநர் ஆர்.பி. அமுதன் – 77 நிமிடங்கள்

    பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத் தொழிலாளி, விசைத்தறித் தொழிலாளிகள், பனியன் உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் பார்வையில் – அவர்களின் நேர்காணல்கள் மூலம் இப்படம் சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் நொய்யல் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தொழில்ரீதியான ஆவணப்பட இயக்குநர் ஒருவரிடமிருந்து திருப்பூரைப் பற்றிய படமாக இதைக் கொள்ளலாம்.

    தலித் முதிய பெண் ஒருவரின் பார்வையில் இப்படம் தொடங்குகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்  திருப்பூரில் இருந்த சாதிய அடுக்குகள், அது இன்றும் நகர வளர்ச்சியில் மறைந்துள்ளதை வெளிப்படுத்துகிறார். 1000 கோடி மதுச் சரக்கு விற்பனையாகும் ஊர். கஞ்சாப் பூங்கா,  பொழுதுபோக்கிற்குத் திரைப்பட அரங்குகள், உற்பத்தியாளர்கள் பார்வை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’25 ஆண்டுகளாக பின்னலாடைத் தொழிலில் வேலை நிறுத்தமே இல்லை’ என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர்.

    போடப்படும் சம்பள ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று தொழிற்சங்கத் தலைவர்கள் சொன்னாலும்  போராட்டங்கள் ஆதி காலத்து மே தின விழா  முதல் சாதாரண கூலி உயர்வு வரைக்கும் என்று நீண்டு வருவது காட்டப்பட்டிருக்கிறது. ஒரு பனியன்  தொழிலாளியின் தினப்படி வாழ்க்கை மெதுவாகக் காட்டப்படுகிறது. வீட்டில் இருந்துகொண்டு பனியன் சம்பந்தமான வேலை செய்யும் ஒரு பெண்ணின் தினப்படி வாழ்க்கை (வீடு, பனியன் பிரிக்கும் வேலை, அலர்ஜி, ஆத்துமா, சுகாதாரமின்மை) மெதுவாகக் காட்டப்படுகிறது. ஆனால் திருப்பூர் தொழில் வளர்ச்சி, கூலி இவையெல்லாம் அடிப்படை உரிமைகளை விட பெரிதாகப்பட்டுவிடுகிறது தொழிலாளர்களுக்கு.

    மேதினக் கொண்டாட்டம் போதும் தங்களின் உரிமைகளை பறைசாற்றிக் கொள்ள. எதிர்காலம் பற்றிய கணிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய் அந்நிய சொலவாணி, மற்றும் எதிர்காலத்தில் தொழிற்கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் போனால் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளுமே இங்கிருப்பர் என்று ஒரு முதலாளி சொல்கிறார். பழைய திருப்பூராகும் என்று பயமுறுத்துகிறார். ஆனால் வேலை, சமூகப் பாதுகாப்பின்மையை  மையப்படுத்தி தொழிலாளர் குரல்கள்  தொனிப்பதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டக் கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனத்தை உறுத்துகின்றது. (போராட்டக் காலக் கஞ்சித் தொட்டிச் சம்பவங்கள் பேச்சில்லாமல் பலவற்றை உணர்த்திப் போகின்றன).

    நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பனியன், பின்னலாடை, விசைத்தறி போன்றவற்றில் இளைஞர்கள் காட்டப்படுகையில் நெசவு தொழில் மட்டும் வயதானவர்கள் மூலம்  சொல்லப்படுகிறது.  நெசவை இளைய தலைமுறை கை விட்டிருப்பதை அது காட்டுகிறது. பனியன் தொழிலாளி வீட்டுக் கண்ணாடிப் புட்டி மீன், முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன், கேட்பாரற்றுக் கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்… அபாரமான குறியீடுகள்.

    சமூக நீதி, மெய்யான நாகரீகம் என்று தொழிலாளர்களுக்குக் கோரும் பார்வையில் தென்படும்  இடதுசாரித்தனம் மே தினக் கூட்டம், ஊர்வலம்  முதற்கொண்டு மோடி பற்றிய விமர்சனம் வரை நீள்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் ‘Rise and raise of Tiruppur’ என்ற படத்தின்  பல பகுதிகள் இப்படத்தை ஆக்கிரமித்துள்ளது. அதிகாரம் செலுத்துகிறவர்கள் தமது அதிகாரத்தின் மூலமாகவோ அல்லது ஆதிக்கம் செலுத்துகிறவர்களை மூளை சலவைச் செய்வதன் மூலமோ மட்டும் ஒடுக்குவதில்லை. ஒடுக்கப்படுபவர்களுக்கும் தேவையான ஏதோ ஒன்று கிடைப்பதாலேயே ஒடுக்குமுறைகள் சம்மதமாகின்றன. சுரண்டலுக்கு ஒத்திசைவு  கூடி விடுகிறது  என்ற அந்தோனி கிராம்சியின் கருத்து நாசூக்காகச் சொல்லப்படுகிறது. சுரண்டலுக்கு ஒத்திசைவாக தொழிலாளிகளின் போக்கு அதிர்ச்சி தருகிறது. ஒடுக்குமுறைகள் இதனால் சாதாரணமாகின்றன. வன்முறை மூலம் மட்டும் அல்ல, ஒத்த கருத்தின் மூலம் ஆதிக்கம் உருவாக்கப்படுகிற ஆபத்தை பின்னலாடைத் தொழிலை முன் வைத்து இப்படம் சொல்கிறது.

    இதில் பின்னாலாடைத் தொழிலைக் காப்பாற்ற வேண்டிய, முன்னேற்ற வேண்டிய ஒத்த கருத்தாகும். குஜராஜ் மாதிரியில் இருக்கும் பேரமைதி பற்றிப் பலர் பேசுகிறார்கள். அந்நிய செலவாணியை முன்வைத்து  இவ்வகை ஒத்த கருத்துடன் திருப்பூர் அதற்கு முன்பே உருவாகி வளர்ந்து நிற்பது தெரிகிறது. தொழில் பாதுகாப்பின்மை தெரிகிறது. தொழிலாளர் நலன் புறக்கணிக்கப்பட்டே செல்கிறது. உழைப்பு அந்நியமாகும் நிலை விரிந்திருக்கிறது. எவ்வளவு பெரிய மோசடியும் கடுகாகிறது. அடிமாட்டுத் தொழிலாளர்கள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

    விவசாயம் புறக்கணிக்கப்பட்டு, திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக்கொண்டே  இருக்கின்றன. வெற்றுச் சம்மதங்கள் அபாயகரமானவை. தொழிலுக்குக் குந்தகம் வந்துவிடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று  குற்றம் பேசும் விமர்சனப் பார்வை இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லோருமே அன்னியச் செலவாணியை குறிக்கோளாக வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலான தன்மை இதில் தெரிகிறது.

    காலாவதியான மார்க்சியம், காணாமல் போன காந்தியம்.. இவற்றையெல்லாம் தூக்கிப் பிடிப்பதாய்க் கிண்டல்கள் எழுகின்றன. கூட்டுக் களவாணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாத தொழிலாளி, சுரண்டலுக்குப் பேர் போன முதலாளி, சந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதான் குறிக்கோள். எல்லாரும் சேர்ந்து செய்கிற  திருப்பூர் கூட்டுக் களவாணித்தனம் என்று கடுமையாகவும் இதைப் பார்க்கலாம்.

    உலகச் சந்தையை முன்வைத்துப்  பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. இது குறித்த தொழிலாளி, மக்களின் மவுனம் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமான இடைவெளியைக் காட்டுகிறது. சிவப்புக்கொடிகளின் பட்டொளி வீசும் காட்சிகள் படத்தின்  ஆரம்பத்திலும் இறுதியிலும் அஞ்சலி போல் அமைந்துவிடுகிறன. சேரிகள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பின்னலாடையிலே  சுமங்கலித் திட்டக் கொடுமை வந்துவிட்டது. இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்… பாரீசின் சொகுசுத்தனம், ஆப்பிரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல், வார இறுதிகளில் அவர்கள்  விபச்சாரத்துக்கு பயன்படுகிற நிலை போன்றவை சொல்லப்படாதது குறையாக பலர் முன்வைக்கிறார்கள். இவற்றை முன்வைத்தே திருப்பூரைப் பற்றி இருபத்தைந்து ஆவணப் படங்களாவது எடுக்க பல பிரச்சினைகள் தலை விரித்து ஆடுகின்றன. ஆர்பி அமுதனின் முந்தைய 20 ஆவணப் படங்களின் நேரடித்தன்மை போல் இதில் இல்லை. ஆனால் ஒரு தொழில் நகரைக் காப்பாற்றும் ஆதிக்கச் சக்திகளின் மாயக் குரல்களின் கலவையை மறைமுகமாக அடங்கிய குரலில்  கேட்க வைக்கிறார்.

    Share
  • ஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’

    ஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’

    மக்கள் தொடர்பாளர் ஜான் 

     
     

    இயக்குநர் தரணி ராசேந்திரன்   இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச் செருக்கு’.

    ஓவியர் வீர சந்தானம், வ.ஐ.ச. ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

    தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர். பொறியியல் படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. இதோ அவரே இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்..

    “பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்.

    சினிமாவில் உதவி இயக்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

    ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீர சந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்.

     

    இந்தக் கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்றுகூடப் பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்துப் பார்ப்போம் என்று நினைத்தேன். அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைக் கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்.

    எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்தப் படத்தைத் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தப் படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்தச் சமயத்தில் விலகிவிட்டனர். அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் போட்டு இந்தப் படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்குத் தெரியாது. ஆனால் படப்பிடிப்பு நடத்தத் தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்துத் திட்டினார். பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம், எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

    ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்தப் படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

    இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்தப் படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட். இந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது.

    அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்தப் படத்தின் வேலைகளை முடித்தேன். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இந்தப் படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும், அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

    நான் எடுத்துள்ளது கமர்சியல் படம்தான். ஆனாலும் இந்தப் படத்தைத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட நாற்பது நாடுகள்  சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன. இந்தப் படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து கைகொடுத்துப் பாராட்டினார். பாரதிராஜாவைப் பொறுத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம்.

    அதன் பிறகு என்னிடம் கைகொடுத்து வாழ்த்தியுள்ளதாக மற்றவர்கள் சொன்னபோது எனக்கு இதுவே மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது. அவர் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டி உள்ளார்கள்.

    இது வெகுஜனப் படம்தான். இந்தப் படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்தப் படம்.

    இந்தச்  சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படிப் பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமா இருந்திருக்கும். அந்த அளவிற்கு  முழுக்க முழுக்க கமர்சியல் படம்தான் இது. குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது. காரணம் நான் குப்பைப் படத்தை எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    நல்ல படத்தைத் திரையிடக்கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை. நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம் தான் சரியாகக் கொண்டு செல்லவேண்டும். அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை. இதற்கடுத்த எனது படங்கள் கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்கும் என்பதையும்  சொல்லிக்கொள்கிறேன். விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று கூறினார் தரணி ராசேந்திரன்.

    ஃஃபார்ட்சூன் ஃப்ரேம்ஸ் சார்பில்  செல்வராம், வெங்கடேஷ் ஆகியோர், இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

    Share
  • ஒருநாள் ஈரானியத் திரைப்பட விழா

    ஒருநாள் ஈரானியத் திரைப்பட விழா

    ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா

    ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா திருப்பூரில் சேவ் அலுவலகம், (கலைஞர் அறிவாலயம் அருகில்) 5, அய்ஸ்வர்யா நகர், அரசு பொது மருத்துவமனை அருகில். தாராபுரம் சாலையில் 12/1/2020 அன்று நடைபெற்றது. திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, (Federation of Film Societies of India) ,  கனவு –  “ சேவ்  “ இணைந்து நடத்தின.

    விழாவில் திரைக்கதையாசிரியர் கதிர் பேசுகையில்: ஒரு திரைப்படத்திற்கு நூறு சதவீதம் அடிப்படை பலமாக விளங்குவது திரைக்கதையாகும். திரைக்கதையை பயிலும் இளைஞர்கள் நல்ல புத்தகங்களை, நாவல்களை, இலக்கியப்படிப்புகளை தொடர்ந்து வசிக்க வேண்டியது அவசியம்.

    துவக்க உரை யாற்றிய ஆவணப்பட இயக்குனர் சந்தோஷ் கிருஷ்ணன்: ஈரானில் இப்போது போர் சூழல் நிலவுகிறது. பலமுறை போர் சூழலால் பாதிக்கப்பட்ட ஈரானின்  பல திரைப்படங்கள் போருக்கு எதிரான ஆவணங்களாக அமைந்துள்ளன. ஈரான் சமூகவியலை சரியாக பிரதிப்லிக்கிற கண்ணாடிகளாக அவை விளங்குகின்றன.

    எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் உரையில்: ஈரானிய அரசியல் சிரமங்கள் , மதக் கட்டுப்பாடுகள், கடுமையான தணிக்கைமுறை, போன்ற சாவல்களைத் தாண்டி தனித்துவம் கொண்டவை ஈரானிய திரைப்படங்கள். உலக அளவில் பெரும் கவனிப்பையும், பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருபவவை .

    சாமானிய மக்கள் சார்ந்த எளிமையான கதைக் கருக்களை வலிமையாய் பயன்படுத்தி தீவிரமாய் எடுக்கப்படுகின்றன.

    இடம் பெற்ற சில படங்கள் பற்றி…

    1. டுடே ( Today/ Reza Mirkarimi)

    இந்தப்படம் ஒரு டாக்சி டிரைவரின் ஏறத்தாழ ஒரு நாள் பயணத்தை முன்வைத்து கதை சொல்கிறது. அவரின் முகம் இறுக்கமாக இருக்கிறது. ஒருபெரும் வழக்கறிஞர் அந்த வண்டியில் பயணம் செய்யும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. சாப்பாட்டு நேரம் என்பதால் வண்டியை ஒரு இடத்திற்கு மேல் கொண்டு செல்ல இயலாது என்று அந்த வழக்கறிஞரை இறக்கிவிட்டு விடுகிறார். அவரின் கடுமையான போக்கு வழக்கறிஞருக்கு அதிர்ச்சி தருகிறது. பின்னால் அந்த வண்டியில் ஏறும் ஒரு கர்ப்பிணி பெண் ஒரு மருத்துவமனைக்கு தன்னை கொண்டு செல்ல கேட்கிறாள். பல இடங்களில் அலைந்து அந்த மருத்துவமனையை கண்டுபிடிக்கும் போது உள்ளே தனியாளாக தான் செல்வதை விரும்பவில்லை என்று கூட கைத்தாங்கலாக அவளை விட்டுச் செல்லும்படி அந்த கர்ப்பிணிப்பெண் கேட்கிறாள். அவரும் அப்படியே செய்கிறார். உள்ளே சென்ற பின்பு அவள் குறித்த விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தருமாறு மருத்துவமனையில் கேட்கிறார்கள் அவரும் முயல்கிறார். ஆனால் அவள் அங்கு அனுமதிக்கப்படுகிறார். அவளுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வந்து தருகிறார். இடையில் ஒரு சிறு பயணம் அமைகிறது. அதை முடித்து விட்டு மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து அந்தப் பெண் ரத்தப்போக்காலும் பிரசவம் வலியாலும் அலறுவதை பார்க்கிறார். மருத்துவ சிகிச்சை சார்ந்த விண்ணப்பங்களில் அவர் கையெழுத்து இடுகிறார். அவரின் அதிகம் பேசாத தன்மையும் ஒருவகை அலட்சியத் தன்மையைக் காட்டும் முகமும் மருத்துமனையில் இருப்பவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. ஆனால் ஒரு மருத்துவர் டாக்ஸி டிரைவர் எந்த வகையிலும் அந்தப் பெண்ணுக்கு உறவு அல்லாதவர் என்பதை தெரிந்து கொள்கிறாள். அவள் அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். குழந்தை பிறந்த பின் அவள் இறந்துபோகிறாள் அந்த குழந்தையை அவர் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு அந்த குழந்தை சம்பந்தமான கோப்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார். அவ்வப்போது அவரின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டபடி இருக்கிறார். அந்த டாக்சி டிரைவர் காலில் ஏதோ வரை வலி இருப்பதை காட்டுவதற்காக முழங்காலை தொட்டுத் தடவிக் கொண்டிருக்கிறார் அவ்வப்போது. முன்பு அந்த பகுதியில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனை பற்றிய குறிப்புகளும் வசனத்தில் வருகின்றன. போரில் அந்த மருத்துவமனை சிதைக்கப்பட்டிருக்கிறது. பலர் தங்கள் உடலுறுப்புகளை சிதைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அதுவும் தெரியவருகிறது. அவரை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு மருத்துவர் அவரின் அறையில் அவரின் பெண் குழந்தையை ஓவியம் தீட்டச் சொல்லியும் கொஞ்சம் விளையாட சொல்லியும் நேரத்தை கழிக்க வைக்கிறார். அந்த மருத்துவர் ஒரு பெண் ஆவார். அந்த குழந்தையுடன் இவர் இடையில் பேசுவதும் அந்தக் குழந்தை ஓவியம் வரைவதற்கான ஊக்கம் செய்வதும் பிறகு தூங்கிப் போகிறபோது அதை சரியாக தூங்கப் பண்ணுவது என்று செய்வதை பெண் மருத்துவரும் கவனிக்கிறார், அவருக்கு குழந்தை இல்லை என்பது ஓரிடத்தில் ஒரு வரி வசனம் ஆக வந்து போகிறது. இறந்து போன பெண்ணின் பிணத்தை பார்க்க மறுத்து குழந்தையை நன்கு கவனிக்கிறார். அது சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திட மறுக்கிறார். ஆனால் மறைமுக வழியாக அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு போகிறார். அந்தப் பெண் மருத்துவரும் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். போர் முடிந்த சூழலில்  பலரின் வாழ்க்கை சித்திரங்கள் இதில் காணக் கிடைக்கின்றன. அந்த கர்ப்பிணி பெண்ணின் வாழ்க்கை குறித்த பல்வேறு சித்திரங்களும் உருவாகின்றன. அவள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் டாக்சி டிரைவர் உடன் அருகில் உட்கார்ந்து உரையாடும்  காட்சி மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அமைதியாக இருக்கும் மருத்துவமனை. எதிரில் இருக்கும் குழந்தைகளின் படங்கள். அதில் ஏதாவது ஒரு குழந்தையின் அழகு  தனக்குப்  பிறக்கப்போகும் குழந்தைக்கு இருக்கும் என்று உரையாடுவது. பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் பற்றி அவர்கள் பகிர்ந்து கொள்வது என்பது அந்த காட்சி அமைப்பாகும். ஆனாலும் அதிலும் டேக்சி டிரைவர் மிக குறைவாகவே பேசுகிறார். ஓரிரு வார்த்தைகள் மட்டும். இந்த படம் ஒருவகையில் டாக்சி டிரைவரை மையமாகக் கொண்டிருந்தாலும் போரும் பாதிக்கப்பட்ட அவரும் வேறு வகையில் பாதிப்புக்குண்டான கர்ப்பிணிப் பெண்ணும் பற்றிய சித்திரங்கள் முழுமையடைகிறது. ஈரானிய சமூகம், போர் சூழல் முடிந்த காலம் பற்றிய பல்வேறு நுணுக்கமானக் கூறுகளை இந்த படம் கொண்டிருக்கிறது.

    2. பெயிண்டிங் பூல்.. ( The Painting Pool/ Maziar Miri)

    ஒரு குழந்தையை மையமாக கொண்ட சிறந்த படம் இது. அவனின் பெற்றோர்கள் ஓரளவு மனநலம் குன்றியவர்கள் போல பேச்சிலும் உடல் மொழியிலும் நடத்தையிலும் தென்படுகிறார்கள். அவர்கள் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தினந்தோறும் அந்தப் பையனை பள்ளிக்கு அனுப்புகிற ஆயத்தங்களில் தாமதமாகி நிறுவன வண்டியை பிடிக்க ஓடுபவர்கள். அந்தப் பையனின் வருத்தமும் மகிழ்ச்சியும் அவர்களின் உணர்வுகளாக இருக்கிறது. அவனை பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். அவனின் ஆறுதலுக்கு மாடியில் இருக்கும் புறாக்களும் வீட்டில் இருக்கும் செடிகொடிகளும் ஒத்திசைவாக இருக்கின்றன. ஒரு நாள் வெளியில் செல்கிறபோது பல்வேறு ராட்டினங்களில் அவன் ஆட ஆசைப்படுகிறான். சுற்ற ஆசைப்படுகிறான் ஆனால் பெற்றோர் சற்று பயந்து அவனை வீட்டிற்கு அழைத்து வர அவன் முரண்டு பிடிக்கிறார். எல்லாவற்றையும் ஒதுக்கி உதைக்கிறான். அவன் அவ்வப்போது போடும் சித்திரங்களின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு அவன் அம்மா போட்ட ஓவிய புத்தகத்தை அவன் கிழித்து நாசமாக்குகிறான் .இது அப்பாவை பாதித்து அறைந்து விடுகிறார் அடுத்த நாள் பள்ளிக்கு போகும் அவன் அவனின் வகுப்பாசிரியை வீட்டிற்கு பாடம் படிக்க செல்கிறான். அங்கேயே தங்கி விடுகிறான். அவனின் பெற்றோர்கள் பயந்துபோய் தங்கள் இயலாமையை எண்ணியும் மிகவும் வருத்தப் படுகிறார்கள். அவனின் இருப்பு அங்கு என்பது அவர்களை பொருத்தவரை உறுத்தச் செய்கிறது. இந்த சமயத்தில் அந்த மருந்து கம்பெனியில் வேலை இழப்பும் நடக்கிறது. அவன் அப்பா உணவுப் பொருள் போன்று பீட்சா விநியோகிக்கும் ஒரு இடத்தில் வேலைக்கு சேர்கிறார். அவருக்கு இரட்டை சக்கர வாகனம் ஓட்ட சரியாகத் தெரியாது என்பதை சொல்லாமல் அது அப்படி இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்பதால் பொய் சொல்லி ஒரு இரட்டைச் சக்கர வாகனத்தை பல இடங்களுக்கு தள்ளியபடி ஓடி அந்த பீட்சாவை விநியோகம் செய்கிறான். அவன் கால்களில் புண்கள் வெடித்துச் சிரமப்படுத்துகிறது. உடம்பும் சிரமப்படுத்துகிறது. ஆசிரியை வீட்டில் இருக்கும் தன் மகனை பார்க்க போகிறார்கள். அவர்கள் வீட்டினுள் செல்லாமல் வெளியில் ஆசிரியை வரும்போது அவன் பற்றிக் கேட்டும் கண்ணீர் மல்கவும் பதில்களை சொல்லியும் திரும்புகிறார்கள். இது சில நாட்கள் தொடர்கிறது. ஆசிரியை இவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து ஆறுதல் சொல்கிறாள் தயாரிப்பில் வீட்டில் பீட்சா செய்ய அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அது கருகி போகிறபோது அது கருகி விட்டதால் தன் மகன் வீட்டிற்கு திரும்ப மாட்டான் என்று அம்மா அழுகையோடு சொல்கிறாள். எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை. பையன் அவர்களுடன் தொலைபேசியில் பேசுவது இல்லை. ஒரு நாள் தட்டுத்தடுமாறி அம்மா தன்னையே  அவனைப் பார்க்க சென்று விட்டு திரும்பி வந்து விடுகிறாள். பள்ளிக்குச் செல்கிற இருவரில் அப்பா மட்டும் அவனை ஜன்னல் வழியாக பார்த்து அவரின் மன்னிப்பையும் சங்கடங்களையும் சொல்லிவிட்டு திரும்புகிறார். சில நாட்கள் செல்ல அந்தப் பையன் அம்மா தன்னை பார்க்க தனியே  வந்தது, அப்பா பள்ளி வந்தது போன்றவற்றை நினைத்து தூக்கம் வராமல் சிரமப்படுகிறான். ஆசிரியையின்  கணவரும் அது போல ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் இருவரும் உரையாட ஆரம்பிக்கிறார்கள். பிறகு அவன் தன் வீட்டிற்கு ஆசிரியை உதவியுடன் இரவு திரும்பி வருவதும் பின் அது அந்தவீட்டில் மீன்டும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. குழந்தை சார்ந்த அனுபவங்கள் என்பதால் அதன் வெளிகுளித்தனமும் இயல்பும் சரியாக சொல்லப்பட்ட ஒரு படம்.

    ஒவ்வொரு படத்திலும் வெவ்வெறு வகையான மையங்களும் அணுகுமுறையும் ஈரான் படங்கள் மீதான ஈர்ப்பைத் தக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன.

    (கனவு திரைப்பட இயக்கம் / இலக்கிய இதழ் & ”சேவ்“ SAVE சமூக சேவை நிறுவனம் )

    Share
  • ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’

    ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’

    ஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’  

    ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ – நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி.

    கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும்  பாதுகாத்துப் பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது.

    இந்த பிரமிப்பூட்டும் மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், மற்றும் காலத்தால் அழியாத தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ‘பெரிய எண்ணங்களின் பாதுகாவலர்’, ஆகச்சிறந்த இயக்குநர் பரத் பாலா, ஜே ஜெயராமன் ஆகியோர் இணைந்து எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உங்களிடம் கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் பேசும் போது, ‘கிராமீய இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை எனப் பல வடிவங்களைத் இசை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவையனைத்திற்கும் அப்பாற்பட்டு, இசை மக்களாகிய உங்களிடம் இருந்தே உருவாகிறது. நமது சமூக ஒலிகளே, கலைகளே ஒரு விதமான இசையாகிறது. சென்னைவாசிகள், தமிழர்கள் ஏன் இந்தியர்கள், இசையையும் கலையையும் அனுபவிக்கும் முறையை மாற்றுவதற்காகவும், புதிய கனவுகள், புதிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைத் தூண்டுவதற்கும், சாத்தியப்படுத்துவதற்கும் இசையை ஒரு புதிய பரிமாணத்தில் அனுபவிக்கவும் உங்களது கற்பனையைத் தூண்ட விரும்புகிறோம். ‘தா’ என்பது தாய், தமிழ், தந்தை, தர்மம் என பல விஷயங்களுக்கு ஒரு அடையாளச் சின்னமாகத் திகழ்வதாகவும், அது இந்த பெரிய முயற்சிக்கு ஒரு சிறிய விதையாக அமைவதாகவும் குறிப்பிட்டார். இந்த முயற்சி, டோட் மக்கோவரின் ‘சிட்டி சிம்போனி’ பாணியில் உருவாக இருப்பதால், மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பங்களிப்பை வழங்கலாம் என்றும் அது குறித்த விபரங்கள் வெகு விரைவில் இணையத்தளத்தில் வெளியிடப்படும்” என்றார்.

     

    அடுத்ததாக, இயக்குநர் பரத் பாலா, ““கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது காலமற்றது; நான் அத்தகைய ஒரு கலாச்சாரம் கொண்ட பாரம்பரியமான தமிழகத்தின் மகன்; உலகில் நான் எங்கிருந்தாலும், அதை என் உணர்வுகளில், நரம்புகளில் உணர்கிறேன். நாங்கள் அதை எங்கள் பிறப்பிலிருந்து கற்றுக்கொள்கிறோம். எங்கள் தாயின் தாலாட்டிலிருந்து கற்றுக்கொள்கிறோம். அது நாங்கள் வளரும் போது காணும் காட்சிகள் மற்றும் ஒலிகளின் மூலமாக எங்கள் ஆன்மாவுக்குள் நுழைகிறது. எங்களை இறுதியாக வழியனுப்பும் பாடல்கள் வரை, எங்களது கடைசி மூச்சு வரை அது எம்மிடமே நிலைத்து இருக்கிறது. அன்றாட மக்களின் குரல்களிலிருந்து, வீதிகளின் நாதங்களிலிருந்து, பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் வரை அனைத்துமே எங்கள் அடையாளம். ஒலி, ஒளி, நாடகம் என எந்த ஊடகமாக இருப்பினும், உயிர்ப்பித்தல் என்பது எங்கள் தமிழ் ஒலியின்  கலாச்சாரம். இது தவிர்க்க முடியாதது” என்றார்.

    இந்த கூட்டு முயற்சியில் பங்கேற்றுள்ள மற்றோர் இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், “இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம், அழுத்தமான கருத்துகள், ஒலிகள் மற்றும் இசை தனக்குள் மாணவப் பருவத்திலேயே ஒரு பெரிய உத்வேகத்தை உருவாக்கியதாகவும், இந்தப் பண்டைய பாரம்பரியத்தின் ஊற்றுக்கண்ணாக வெடித்துக் கிளம்பும் படைப்பாற்றலை, வேறு எங்கும் இல்லாத அளவிற்கு எதிர்கால ஆற்றலுடன் இணைக்கின்ற இந்தப் புதுமை முயற்சியில் தானும் இடம்பெறுவது தனக்கு பெருமகிழ்ச்சியாகவும், பெருமிதம் சேர்ப்பதாகவும் அமைந்திருக்கிறது” என்றார்.

    இது குறித்து ஜே ஜெயராமன் பேசும் போது, “நம்முடைய அழகான, அர்த்தமுள்ள இசையின் மூலம் எதிர்காலத்தைக் கற்பனை செய்துகொள்வது; காவிரி புகும் பட்டினம் முதல் சென்னை முதல் கேம்பிரிட்ஜ் வரை, இந்தப் பூமியின் மைந்தர்களாகிய நம்மை, நமது நம்பிக்கைகள், அபிலாஷைகள், ஆற்றல் மற்றும் குரல் ஆகியவற்றின் சாரத்தை வெளிப்படுத்தும் இசைபை, பெருமையுடன் பங்கேற்பதன் மூலம் உருவாக்க, ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    மேலும் புத்திசாலித்தனமான மூன்று பேருடன் ஒன்றிணைந்து, தனித்துவமான மற்றும் தனியாகச் செய்ய முடியாத இந்த நுட்பமான பணியில், படைப்பின் வெளிப்பாட்டை, உங்களைப் போலவே நானும் அறிய ஆர்வமாக இருக்கிறேன். அதுவே நமக்குள் இருக்கும் சக்தியைக் கட்டவிழ்த்துவிட வேண்டுகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து இந்த முயற்சிக்குக் கை கொடுப்போம்” என்றார்.

    Share
  • 83 – கபில் தேவின் வாழ்க்கைத் திரைப்படம்

    83 – கபில் தேவின் வாழ்க்கைத் திரைப்படம்

    சுரேஷ் ரங்கநாதன்

    இந்திய கிரிக்கெட் அணியின்  புகழ்மிக்க முன்னாள் தலைவர் கபில் தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ’83’ என்ற தலைப்பில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. கான், விஷ்ணு வர்தன் இந்தூரி, மது மந்தனா, தீபிகா படுகோனே, சஜித் நதியாத்வாலா ஆகியோரது கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தைக் கபீர் கான் இயக்கியுள்ளார். கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார்.

    படத்தில் தீபிகா படுகோனே, தஹிர் ராஜ் பாசின், சாகிப் சலீம், ஹார்டி சந்தூ, அம்மி விர்க், அமிர்தா பூரி, பங்கஜ் திரிபாதி, போமன் இரானி, சாஹில் கட்டர் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

    கபில் தேவ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது முதல், 1983ஆம் ஆண்டு  உலகக் கோப்பையை வென்றது வரை உள்ளடங்கிய அவரது வாழ்க்கைப் பயணத்தை, இப்படம் விவரிக்கிறது.

    படத்தின் முதல் படப்பிடிப்பு, இங்கிலாந்தில் தொடங்கியது. அக்டோபர் 2019இல் படம் முழுவதுமாக எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில், 2020 ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம், திரைக்கு வருகிறது.

    இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    Share
  • சிவாஜி – ஒரு சுயம்பு

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ஒரு படத்தின் இறுதிக் காட்சி. படப்பிடிப்புக் குழு தயார். இதற்காக அந்த நாயகர் மூன்று நாட்கள் தூக்கத்தைத் தொலைத்து ஒரு வாடிய முகத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்தச் சில நாட்கள் அவர் பேசுவதைக் குறைத்து, அந்தப் பாத்திரத்தின் உணர்வைப் புரிந்துகொண்டு, அதில் லயித்து எப்படிச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். தூக்கம் இழந்த முகம் கொஞ்சம் உப்பியது. கண்கள் கொஞ்சம் பெரிதாகின. பெரும் களைப்பு முகத்தில் தெரிந்தது

    இரவு வீட்டுக்குச் சென்ற போதும், அவர் சகஜமாகவில்லை. பின்னர் போட்டுக் கொண்ட ஒப்பனை அந்த பாத்திரத்துக்கு வலு சேர்க்க, பாசமலர் ராஜசேகரன் தயார். கிழிந்து போன கைச் சட்டை , கால் சட்டை, கையில் குழந்தை, பார்வை இழந்த கண்கள், பாசம் பொங்கும் முகம்,  தெறிக்கும் குரல், கூர்மையான ஆரூர்தாஸ் வசனம், பலம் சேர்க்க சாவித்திரி, தொந்தரவு செய்யாத பின்னணி இசை? நகர்ந்து கொண்ட பீம்சிங், நேரிடையான கழுத்தைச் சுளுக்காத கோணம். What More is Needed? எனக்குத் தெரிந்து இவரைப் போல ஒரு நடிகர் வேறெங்கும் இல்லை. நாடக நடிப்பு, ஸ்த்ரீபார்ட் வேஷம் தாண்டி இப்படி யோசித்துப் புனைந்து ஒரு நடிகன் இப்படித் தன்னை வளர்த்து ஒரு பெரிய பரிமாணத்தைத் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியது பெரும் சாதனை.

    சரஸ்வதி சபதம் படத்தில் ராஜசபையில் நடந்து வரும் காட்சிக்குப் பத்து வகையான நடை நடந்து ஏ.பி. நாகராஜனுக்குத் திகைப்பூட்டினார்.

    ஆண்டவன் கட்டளையில் விவேகானந்தர் வேஷம். ஒப்பனை போட்டு, படத்தளம் வந்தபோது அரங்கமே எழுந்து நின்றது. அது போன்ற முகவாகு. கண்களை உருட்டிக் கொண்டு ஜப்பான்காரன் குண்டு போட போகிறான் என்று ஒரு எதிரி நாட்டினர்கூட சொல்ல முடியாத முக பாவம். இது அந்த நாள்.

    இவர் ஒரு சுயம்பு. எல்லாவற்றையும் உள்வாங்கி அதை எந்த நேரத்தில் எப்படிக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்த கலைஞன், அன்னையின் ஆணை பற்றியும் ராஜாராணி பற்றியும் அவரிடம் பேசியவர்கள் மிகக் குறைவு. அவர் படத்தில் எல்லோருக்கும் ஒரு கனம் இருக்கும். பாடல்கள் இருக்கும். வசனம் இருக்கும். சினிமாவை சினிமாவாகப் பார்த்தவர். பந்துலு இயக்கத்தில் சபாஷ் மீனா படம் ஆரம்ப நிலையில் கணேசனை அணுகிய போது அவர் மெட்ராஸ் பாஷை பேசும் வேடத்திற்குச் சந்திரபாபுவைச் சொன்னாராம். பாபுவுக்கு மகிழ்ச்சி. பதிலுக்குப் பாபு தனக்கு சிவாஜியை விடக் கூடுதலாக ஒரு ருபாய் ஊதியம் வேண்டும் என்றாராம். சிவாஜியிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் சொன்னார். கிறுக்கன். விஷயம் உள்ளவன். அவனையே ஒப்பந்தம் செய்யுங்கள் என்றாராம். இது, பிம்பம் பார்க்கும் கலைஞனுக்கு வராது.

    அவரைப் பார்த்து ஒருவர் உங்கள் நடிப்பு முதல் மரியாதையில் சூப்பர் என்றாராம். குரல் வந்த திசையில் அவர் முறைத்துக்கொண்டு திரும்ப, கேட்டவன் ஓடியே போய் விட்டான். எனக்குத் தெரிந்து உலகில் இவரைப் போல ஒரு பெரும் நடிகர் இல்லை. அவர் நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்த்தவர்.

    Share
  • தனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்

    தனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்

    The Extraordinary Journey of the Fakir என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கென் ஸ்காட் (கனடா நாட்டு இயக்குநர்) இயக்கிய படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பெற்று வெளிவந்துள்ளது. புதிய கதைக் களத்துடன் சுவையான படமாக அமைந்துள்ளதாகத் திரை விமர்சனங்கள் பலவும் தெரிவிக்கின்றன. வல்லமை வாசகர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால், உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

    Share
  • ‘ஜோக்கர்’ இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    சர்கார் படத்தைப் பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்திருந்த எனக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ஜோக்கர்’படம் மிகுந்த மன நிறைவைத் தந்தது. அதன் விமர்சனத்தைப் படித்திருந்த எனக்கு அதைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் – அதாவது சர்கார் படத்தைப் பார்த்த பிறகுதான்– கிடைத்தது. இந்தப் படம் அமெரிக்காவில் திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன். எல்லா வகையிலும் சர்கார் படத்திற்கு நேர் மாறு ஜோக்கர் படம்.

    முதலில் விஜய்யின் சண்டை போடும் திறனையும் exercise dance ஆடும் திறமையையும் நம்பி சர்கார் படத்தை எடுத்திருக்கிறார்கள். எப்படியும் படம் சோடை போகாது, செலவழித்த பணம் கண்டிப்பாகத் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை எடுத்திருக்கிறார்கள். ஆனால் ஜோக்கர் படத்தில் எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லை. எல்லோரும் இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆகிறார்கள். இதுவரை ரசிகர்களுக்குத் தெரியாத நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதற்கு எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும்! ஜோக்கரின் பட்ஜெட் மூன்று கோடியாம்! பிரபல நடிகர்களை வைத்து எடுத்தஇன்னொரு படத்தின் (சர்கார் என்றுதான் நினைக்கிறேன்) பட்ஜெட் முன்னூறு கோடி!

    சர்கார் யதார்த்தத்திற்கு நேர்விரோதம் என்றால் ஜோக்கார் முழுக்க முழுக்க யதார்த்தமான படம். கழிப்பறை இல்லாத ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டிக் கொடுப்பதாக அரசியல்வாதிகள் வாக்களித்துவிட்டு எவ்வளவு ஊழல் புரிகிறார்கள் என்று காட்டுவதில் எத்தனை யதார்த்தம்! ‘இதுவரை வாழ்றதுக்குத்தான் வழியில்லாமல் இருந்தது. இப்போது பேள்றதுக்கும் வழியில்லாமல் போய்விட்டது’ என்ற வசனத்தில் எத்தனை உண்மை இருக்கிறது!

    சர்கார் படத்தில் கதாநாயகன் அமெரிக்காவிலிருந்து தன் ‘படைகளோடு’ வந்து அரசியல்வாதிகளோடு சண்டை போட்டு அரசியலைச் சுத்தப்படுத்தப் பார்க்கிறாராம். ஜோக்கர் படத்தில் ஒவ்வொரு குடிமகனின் கையாலாகாத்தனமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. வீட்டில் கழிப்பறை இல்லாதால் தன்னை மணக்க மறுத்த பெண் பின் மனம் மாறித் தன்னை மணந்துகொண்டதும் அகமகிழ்ந்து போகிறான் கதாநாயகன். ஆனால் அரைகுறையாகக் கட்டப்பட்ட கழிப்பறையே அவன் மனைவிக்கு எமனாக வாய்த்துவிட்டதும் பின் அவளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போனபோது மனம் பேதலித்துப் போனதும் மிகவும் இயற்கை. தன்னைத்தானே நாட்டின் ஜனாதிபதியாகக் கற்பனை செய்துகொண்டு மக்களுக்கு உதவுவதும் அல்லது உதவ முயற்சிப்பதும் அருமை. மனைவியைக் கருணைக்கொலை செய்வதற்கு அவர் அரசிடம் அனுமதி பெறுவதற்குத் திண்டாடுவதும் அவருடைய வழக்கு உச்சநீதிமன்றம் வரை போவதும் இந்தியாவில் ஏழைகள் படும் பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஒவ்வொரு இந்தியனும் படும்பாட்டையும் அவனுடைய கஷ்டங்களுக்குப் பரிகாரமே இல்லாமல் இருப்பதும் யதார்த்தமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு நன்மைகள் கிடைக்க கதாநாயகன் செய்யும் காரியங்கள் எல்லாம் வீணாகப் போகின்றன. எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கடைசியில் தன் உயிரையும் பலி கொடுக்கிறான் கதாநாயகன். கதாநாயகன் தோற்பது தமிழ் சினிமாவுக்குப் புதிது. அவனுக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளர் கடைசியில் கூறுவதுபோல் அரசியல்வாதிகளைத் திருத்தப் பாடுபடும் அவர்கள் பைத்தியக்காரர்களாகக் கருதப்படுகிறார்கள். நாட்டில் ஊழல் தொடர்கிறது; நாட்டு மக்கள் தொடர்ந்து துன்பத்துக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையை மாற்ற முயற்சிக்கும் செயற்பாட்டாளர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. இதை மிகவும் அழகாக எடுத்துச் சொல்கிறது படம்.

    முப்பது மைல் பிரயாணம் செய்து பத்து டாலர் செலவழித்து சர்கார் படத்தைப் பார்த்துவிட்டு வந்தபோது மனமெல்லாம் ஏமாற்றம் நிறைந்திருந்தது. என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆயாசம். இப்படித்தான் அரசியலைச் சுத்தப்படுத்த முடியுமா என்ற வேதனை. ஆனால் பணம் எதுவும் செலவழிக்காமல் தொலைக்காட்சியில் வீட்டிலிருந்துகொண்டே பார்த்த ஜோக்கர் படம் இந்தியாவில் மக்களின் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்பதை நினைத்து மனதில் ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்தினாலும், ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற மனநிறைவைத் தந்தது. முன்னூறு கோடி ரூபாய் செலவழித்து எடுத்த படம் கொடுக்காத மனநிறவை மூன்று கோடி செலவழித்து எடுத்த படம் கொடுத்தது. தமிழக மக்கள் இம்மாதிரிப் படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திருந்தால் இம்மாதிரிப் படங்கள் இன்னும் நிறைய வந்திருக்கலாம். தமிழ்நாட்டிற்கு இன்னும் விடிவு காலம் வரவில்லையென்றே சொல்ல வேண்டும்.

    Share
  • இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்

    -விவேக்பாரதி


    “இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடல் வரி ஒன்று படமாகியிருக்கிறது. தனது முதல் படத்தின் முயற்சியில் நல்ல முத்திரையும் முதிர்ச்சியையும் காட்டி இருக்கிறார் இயக்குநர் மு.மாறன் அவர்கள். பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மற்றும் நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த மு.மாறன் ஒரு நல்ல திரைக்கதையைக் கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். இதன் திரைக்கதை அமைப்பு தான் இந்தப் படத்திற்கு பலம் என்று தோன்றுகிறது. இதன் திரைக்கதையைக் குறித்து முதலில் காண்போம். 1950களில் மிகவும் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் அக்கிரா குரோசோவாவின் “ரோஷோமான்” என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்த திரைக்கதை உத்தி (ரோஷோமான் தாக்கம்/ Rashomon effect) தான் இத்திரைப்படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது எனலாம்.

    ரோஷோமான் தாக்கம்/Rashomon effect என்பது ஒரே நிகழ்வை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து பல்வேறு கோணங்களில் பிரித்துக் காட்டக்கூடிய ஓர் உத்தி எனலாம். சாத்தியக் கூறுகள், நோக்கம், சாட்சிகள் போன்றவற்றின் அடிப்படையில் அந்த நிகழ்வானது எந்தக் கதாபாத்திரத்தால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்னும் சிந்தனைத் தளத்தை இந்த உத்தியின் மூலம் பார்வையாளர்கள் உணரலாம். ரோஷோமான் என்னும் ஜப்பானிய திரைப்படமே இந்த உத்தியை முதலில் திரையில் கையாண்டதால் இதற்கு அதன் பெயரே அமையப் பெற்றது. தமிழ்த் திரையில் பிரபல இயக்குநர் திரு எஸ். பாலசந்தர் அவர்கள் இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த “அந்த நாள்” என்னும் திரைப்படமே இந்த உத்தியில் தமிழில் வெளியான திரைப்படம். இப்படிப் பட்ட திரைக்கதையைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்கிறது “இரவுக்கு ஆயிரம் கண்கள்.”

    ஒரு வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் பரத் (அருள்நிதி), அவரது காதலி சுசீலாவுக்குத் (மஹிமா நம்பியார்) தொல்லை கொடுக்கும் கணேஷை (அஜ்மல் அமீர்) தட்டிக் கேட்கத் துடிக்கிறார்.  தொழிலதிபர் வசந்த் (ஜான் விஜய்), அவரது மனைவி ரூபலாவை (சாயா சிங்) வெறுக்க, ரூபலாவுக்கு அறிமுகமில்லாத தொலைபேசி எண் மூலம் தொடர்பில் வரும் கணேஷ் ரூபலாவை ஏமாற்றித் தவறாகப் படம்பிடித்ததாகத் தற்கொலைக்கு முயற்சி செய்ய, இதற்கும் சேர்த்துப் பழிவாங்க முற்படுகிறார் பரத்.

    முருகேசன் (ஆனந்த்ராஜ்) என்னும் முதியவர் ஆறுதலாகத் துணை தேவை என்று விளம்பரம் கொடுக்க, கணேஷும் அவரை ஏமாற்றத் தன் காதலி அனிதாவுடன் (வித்யா ப்ரதீப்) முருகேசன் வீட்டுக்குச் சென்று பணம் பறித்துத் தப்பித்து விடுகிறான். பணம் போன துக்கத்திலும் கோபத்திலும் கணேஷைப் பழிவாங்க நினைக்கிறார் முருகேசன்.

    பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் மாயாவுடன் (சுஜா வரூணி) தனிமையில் இருக்க நினைக்கும் நரேன் வைத்தியநாதனும் (ஆடுகளம் நரேன்), கணேஷால் மிரட்டப்பட்டு பணத்தைப் பறிகொடுக்கிறார். மயக்கம் தெளிந்த நரேன் மாயமான மாயாவைத் தேடுகிறார். மாயாவுடன் அவரது மகிழுந்தும் காணாமல் போகிறது. சில நாட்களில் மகிழுந்து கிடைக்கவே, மாயாவையும் கணேஷையும் ஒன்றாகப் பார்க்கும் நரேன், இருவரையும் பழிவாங்க எண்ணுகிறார்.

    இதற்கிடையில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவுடன் தனிமையில் இருக்கும் காணொலிக் காட்சியைக் காட்டி, வசந்திடம் பணம் பறிக்க முயல்கிறான் கணேஷ். வசந்திடம் ரூபலாவின் படத்தையும் காட்டி கோடிக்கணக்கில் பணம் கேட்கிறான், அவனைக் கொன்றேனும் அந்த ஆவணத்தைக் கைப்பற்றக் கிளம்புகிறார் வசந்த்.

    படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. அது கணேஷ் வீட்டில் நடக்கிறது? யார் கொலை செய்யப் படுகிறார்? யார் கொலை செய்கிறார்? என்னும் சூழ்ச்சி நிறைந்த முடிச்சுகளைத் திரைக்கதை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுத்தாளர் வைஜெயந்தி (லட்சுமி ராமகிருஷ்ணன்)  செய்திகள் மூலம் கவனமாகப் பார்த்துக்கொண்டு தனது அடுத்த கதையாக எழுத நினைக்கிறார். கதையின் திருப்புமுனையை அவர் யூகித்து ஒரு கதை சொல்லி முடிக்க, அடுத்த கணத்தில் அவரும் இறந்து போகிறார். இதுவே இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் கதைக்களம்.

    ஒரு இயக்குநரின் முதல்படம் என்ற அளவில் இதனைப் பார்த்தால் ஆழ்ந்த வேலைப்பாடுகளும், மிகுந்த உழைப்பும் இயல்பாகவே இதில் அவர் செலவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. சாம் சீஎஸ் அவர்களின் பின்னணி இசை திரைப்படத்தில் விறுவிறுப்புக்கு மேலும் பலத்தைக் கூட்டி இருக்கிறது. சான் லோகேஷ் அவர்களின் படத்தொகுப்பு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களுக்கும் தனிப் பாராட்டு.

    கதையின் போக்கில், முன்னாள் காதலியின் நினைவில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவின் வலையில் எப்படி விழுகிறார்? எழுத்தாளர் வைஜெயந்தி எதற்காகக் கொல்லப் படுகிறார்? என்ற கேள்விகள் அப்படியே இருக்கின்றன. முருகேசனாக வரும் ஆனந்த் ராஜ் பேசும் வசனங்கள் அனைத்திலும் ஏமாற்றத்தை விட நகைச்சுவை உணர்வே ஓங்கி இருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அல்லது அவ்வளவு ஏமாந்ததாக உணர்வதைக் காட்டாமல் இருந்திருக்கலாம். இவை சில கேள்விகள். ஆக மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள் நம் அன்றாட வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

    Share