சமயம்செய்திகள்திரை

“கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

நடிகர் ராஜ்கிரண்

ஒவ்வொரு மனிதனுக்கும்,
எந்த வகையிலேனும்,
தனக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ள
உரிமை இருக்கிறது.

அது, அவனது சுதந்திரம்.

முருகப் பெருமானை நம்புவோர்க்கு,
“கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
“ஒரு பாதுகாப்பு அரண்”.

இதை ஆழ்ந்து படித்தால்,
அறிவியல்பூர்வமான,
மனோதத்துவரீதியான
ஆத்ம பலன்கள் இருக்கின்றன…

இறைவனை நம்பாதோர்க்கு,
“நம்பாமை” என்பது,
அவர்களின் சுதந்திரம்.

நம்பிக்கை கொண்டோர்க்கு,
“நம்புதல்” என்பது,
அவர்களின் சுதந்திரம்.

இதில், அவரவர் எல்லையோடு
அவரவர் நின்றுகொள்வது தான்,
மேன்மையானது.

தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
மிகவும் கீழ்மையானது…

இந்த கொடிய கொரோனா காலக்கட்டத்தில்,
நோயோடும், நோய் பயத்தோடும்,
பொருளாதாரச் சீர்கேட்டோடும்,
உண்ண உணவின்றி
கோடிக்கணக்கான நம் மக்கள்
தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,

இப்படி ஒரு பிரச்சினைக்குத் தீ மூட்டுவதில்,
யாருக்கோ, ஏதோ, உள்நோக்கம்
இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது…

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    உழைத்து முன்னேறிய கலைஞன் ஒருவனின் சமுதாயப் பொறுப்புணர்வோடு கூடிய முதிர்ச்சியான பதிவு!. கிரணுக்கு வாழ்த்துக்கள்!

  2. Avatar

    மிக அருமையான பதிவு திரு ராஜ் கிரண் அவர்களே. சூரியனைப் பார்த்து குரைத்தால் யாருக்கு கெடுதல்?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க