விசாலம்
கிமு ஆறாம் நூற்றாண்டில் புத்தர் அவதரித்ததும் புத்தமதம் ஸ்தாபனம் ஆனதும் நம் எல்லோருக்கும் தெரியும்., பின் ஹிந்து மதத்தில் இருந்த பல கட்டுப்பாடுகளும் .நியமங்கள் ஹோமங்கள் யாகங்கள் .போன்றவைகளாலும் மக்களின் மனம் புத்த ,சமண மதத்தில் நுழைய விரும்பியது .தவிர சம்ஸ்கிருத மொழியில் பூஜை .புனஸ்காரங்கள் எல்லாமே இருந்ததால் புரியாத மொழியிலிருந்து கொஞ்சம் மாற்றம் தேவைப்பட்டது இப்படி ஹிந்து மதமும் புத்த மதமும் பல வித்தியாசங்கள் கொண்டிருந்தாலும் முடிவில் அணுக வேண்டிய இடம் ஒன்றாகத்தான் இருந்தது . பகவான் புத்தரின் காலத்திற்குப்பிறகு தோன்றிய ஆதி சங்கரர் .பெரிய வேதந்தவாதியாகி ,அத்வைத சித்தாந்தத்தில் கரை கண்டு சம்ஸ்கிருத மொழியில் மிகச்சரளமாகப்பேசி பாரத தேசத்தையே தன் திருப் பாதங்களினால் வலம் வந்து ஹிந்துமதத்தைத் திரும்பவும் தூக்கி நிறுத்தினார் நான் புத்தரின் சரித்திரமும் , .ஸ்ரீஆதிசங்கரரின் பஜகோவிந்தமும் பல விஷயங்களில் ஒத்துப்போவதைக்கண்டேன்
கௌதம புத்தருக்கும் ஶ்ரீ ஆதிசங்கரருக்கும் பல ஒற்றுமைகளை நான் பார்க்கிறேன் . சித்தார்த்தர் பிறப்பதற்கு முன் அவரது தாயார் மஹாமாயாவுக்கு ஒரு கனவு வந்ததாம் அதில் ஒரு குட்டியானை அவளையும் குழந்தையையும் வாழ்த்திவிட்டுச் சென்றதாம் யானை என்றால் கணபதியின் ஸ்வரூபம் என எடுத்துக்கொள்ளலாம்
அதேபோல் பலவருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமல் சிவகுரு .ஆர்யாம்பாள் தம்பதிகள் சிவபூஜை செய்ய சிவனும் அவர்களுக்கு தரிசனம் தந்தப்பின்னர் தானே அவர்களுக்கு வந்து பிறப்பதாக அனுக்கிரஹம் செய்தார் ,அதேபோல் சிவனே ஆதிசங்கரராக அவதாரம் செய்தார் .சிறுபிராயத்திலேயே வேதம் உபநிஷத், மஹாபாரதம் ,இராமாயணம் போன்றவைகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுவிட்டு .தனது ஐந்தாவது வயதிலேயே பூணலும் போட்டுக்கொண்டார் .இவர் தனது தந்தையை மிகச்சிறிய வயதிலேயே இழக்க நேர்ந்தது
.இதேபோல் சித்தார்த்தருக்கும் தன் தாயாரை பிறந்த ஒரு வாரத்திலேயே இழக்க நேர்ந்தது சித்தார்த்தர் பிறந்தவுடன் ஒரு பெரிய ஜோசியர் இவர் பெரிய சன்யாசியாகவோ அல்லது பெரிய சைன்ய தலைவனாகவோ வருவான் என தெரிவிக்க அவரது தந்தை தனது மகனுக்கு அரசகுமாரனுக்குத் தேவையான அத்தனை விதப் பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார் .ஆனால் சித்தார்த்தரின் மனம் இதில் நாடவில்லை எப்போதும் தனிமையே நாடினார் .சுகபோகங்களை வெறுத்தார் மனைவி குடும்பம் என்பதையும் வெறுத்தார் .இதனால் பயந்துப்போன அரசர் சுத்தோதனர் அவருக்கு திருமனம் செய்வித்தால் மனம மாறலாம் என நினைத்து யசோதராவை மணம் செய்வித்தார் .ஆனாலும் சித்தார்த்தரின் மனம் மகிழ்ச்சியடையாமல் ஒரு தேடலநோக்கிப் போய்க்கொண்டிருந்தது அவர் பதினாறு வயதில் திருமணம் செய்துகொண்ட போது யசோதராவுக்கும் வயது பதினாறு ..
சாதரணமாக அந்த வயதில் ஆண்பிள்ளைகள் சிருங்கார ரசத்தில் பல புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் சித்தார்த்தரோ முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார் . திருமணமாகி பதிமூன்று வருடங்கள் கழித்து ராஹுல் பிறந்தான் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது வயது 29. . எப்போதும் சித்தார்த்தர் எதையோ நினைத்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததால் அவரை அந்த யசோதரா கவரவில்லை .காமத்தை அவர் நாடவில்லை. இதை ஹிந்தியில் வடநாட்டுக்கவி ஸ்ரீமைத்லி சரண்குப்தாஜி தன்னுடைய யசோதராவின் காவ்யத்தில் அந்தப்பெண்மணியின் நிலைமையை மிகவும் ஆழமாகச் சித்தரித்திரிக்கிறார் பதிமூன்று ஆண்டின் பின் குழந்தைப்பிறந்த அன்றே அவர் இரவில் வீட்டைவிட்டுச்சென்று விட்டார், எங்கே பந்த பாசக்கயிறில் சிக்கிக்கொண்டுவிடுவோமா? என்ற பயம் தோன்றிருக்கலாம் .அல்லது ஜகத்தில் மதகுருவாக ஆக எல்லா கலைகளும் தெரியவேண்டும் என்று மதன் மிஸ்ராவின மனைவி பாரதி சொன்னாளே அதுபோலவா இது என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது
இதை ஆதிசங்கரர் வாழ்க்கையிலும் காணமுடிகிறது, மீமாம்சு தத்வஞானி குமாரிலபட்டரின் சிஷ்யரான மண்டன மிஸ்ராவுடன் ஒரு சமயம் சங்கரருக்கு மோதும் வாய்ப்பு வந்தது அந்தப்பட்டி மன்ற நீதிபதியாக மிஸ்ராவின் மனைவி பாரதி இருந்தாள். இரண்டு வாரங்கள் தர்க்கம் நடந்தது எங்கே தன் கணவர் தோற்றுவிடுவாரோ என நினைத்து அவள் சங்கரருக்கு ஒரு கேள்வி கேட்டாள்
“காதலுக்கும் காமத்திற்கும் என்ன வேறுபாடு ” ?
அதன் பதிலை மறு நாள் சொல்வதாகக் கூறிவிட்டுச்சென்றார் . ஞான திருஷ்டியிலும் விடை விளங்காமல் பாம்பு கடித்து இறந்த மன்னன் உடலில் கூடு விட்டுக்கூடு பாய்ந்து அரசனாகிறார் .பின் அந்த ஒரு நாள் அரண்மணையில் அரசியுடன் இருந்துவிட்டு வருகிறார். மறுநாள் அதனின் விடையை சரியாக அளித்தார் சங்கரர் . போட்டியில் தோற்றவர் துறவரம் மேற்கொண்டு சங்கரர் வழியை பின்பற்றினார். இந்த பாரதி சாட்சாத் சரஸ்வதியே என்றும் சிருங்கேரியில் இருக்கும் சாரதாம்பாளும் இவளே என்று ஒரு சிருங்கேரி பக்தர் என்னிடம் கூறினார்
சங்கரரும் உலகத்தை உய்விக்க வந்த ஒருஜகத் குருவாக ஆவார் என்று ஜோசியம் கூறியது அதேபோல ஒரு நாள் அவர் நதியில் குளிக்கபோக ஒரு முதலை அவர் காலை கவ்வி உடும்பு பிடியாகப் பிடித்துக்கொண்டது இல்லற பந்தங்களை விட்டு சன்யாசியாக மாற அவர் ஒப்பத்துக்கொண்டால் அந்த முதலை தன் பிடியிலிருந்து விட்டுவிடும் எனச்சொல்லவும் செய்தது. .தன் தாயாரை ரொம்பவும் தேற்றிவிட்டு இவரும் சன்யாசி ஆகிவிட்டார்.
சித்தார்த்தரும் முதலில் ஒரு தொண்டு கிழவர் ஒருவர் தள்ளாடித்தள்ளாடிபோனதைக்கண்டு “வாழ்க்கை இதுதானா ? இதிலிருந்து விடுதலை கிடைக்க வழியில்லையா ?”என்று யோசிக்க ஆரம்பித்தார் .அதன் பின் ஒரு சவ ஊர்வலம், .ஒரு நோயாளி என்றும் பார்த்ததை நாம் அறிவோம் .
இதேபோல் ஆதிசங்கரருக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. இந்த அனுபவத்தால்தான் நமக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது
அதுவே மோஹமுத்கரம் .அதாவது மோஹத்தை உடைத்தெறியும் சம்மட்டி .மோஹமுத்கரத்தின் முதல் பாடல் தான் நம்மில் பலருக்கும் தெரிந்த “பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே “{இந்தப்பாடலை நினைத்தவுடனேயே என் கண்முன் வருவது திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்கள் தான் .
பஜகோவிந்தம் உருவான இடம் காசி மாநகரம். நதிகளிலேயே மிகச்சிறப்பு பெற்ற புனித கங்கை நதி தீரத்தில் தனது புனித பாதங்களை பதித்தபடி ஞானப்பழமாக கங்கைப்பிரவாகம் போல் .ஞானப்பிரவாகமாக நடந்து வருகிறார் ஸ்ரீஆதிசங்கரர் .தனது முப்பதிரண்டாவது வயதிலேயே ஒரு தத்துவ ஞானியாக அத்வைத்த தத்துவத்தை ஸ்தாபித்து பாரதம் முழுவதும் தனது திருப்பாதங்களால் புனிதப்படுத்திய அவதார புருஷர் கங்கைத்தீரத்தில் சிவப்பழமாக நடந்து வருகிறார் ,கூடவே நான்கு சீடர்களும் தொடருகின்றனர் .
ஜயஜய சங்கரா ஹரஹர சங்கரா என்ற கோஷமும் கிளம்பி பின் மெள்ள தென்றலில் மிதந்து கங்கை நதியில் கலக்கிறது.
அந்த கங்கை பளிங்குப்போல் சலசலவென ஒட சூரியோதயம் போல் அங்கு சங்கரர் வருகிறார் . அந்த நேரம் ஒரு பண்டித கிழவர் கையில் கோலுடன் தள்ளாடித்தள்ளாடி வருகிறார் .அவர் கையில் ஒரு சுவடி. அதைப்பார்த்துப்பார்த்து எதையோ மனப்பாடம் செய்ய அது மனதில் ஏறாமல் கிழவர் தவிக்கிறார்.அவர் சுவடியில் படித்ததோ சிலஇலக்கண நியமங்கள் .இதைப் பார்த்து ஜகத்குரு அவர் அருகில் செல்கிறார் இன்றோ நாளையோ என்பது போன்ற உடல் ….காலன் எந்தநேரமும் வரலாம் .இந்த நேரத்தில் இலக்கண சூத்திரம், படித்து மண்டையை உடைத்துக் கொள்கிறானே.! ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்கிறார்.
.” என்ன உலகம் இது? ஒரு இடம் பொன் மேல் மோகம் .ஒரு இடம் வெறும் சதையும் எலும்பும் ஆன உடலின் மோகம் ,பெண் மேல் காமம் , மனைவி ,மக்கள் என்ற. பந்தவலையில் விழுந்து நான் , எனது என்ற அஹங்காரத்துடன் அந்த இறைவனை நினைக்காமல் காலத்தை வீண் செய்கிறதே!”
அவரது எண்ணங்களின் ஓட்டம் “பஜகோவிந்தமாகப் பிறக்கிறது
கோவிந்தனை பஜிப்பாய் ,,கோவிந்தனை பஜிப்பாய்
ஏ மூடமனமே
நீ மாயுங்காலம் அந்தகோவிந்தனன்றி வேறு யார் ரட்சிப்பார் ‘ என்ற
பொருளில் ஆரம்பித்து மேலே பல மலர்கள் உதிர்ந்து பூமாலையாகிறது .
வாழ்க்கை நிலையற்றது ,ஆடி ஒடி பணம் ஈட்டும் நேரம் தான் நம்முடன் உற்றார் உறவினர்கள், ஜனனம் மரணம் தொடர்தல் ,
பிரும்மத்தை அறிய நேரமினமை .இளமங்கை சதை பிண்டம் மேல் மோகம் என்று பல பூக்கள் அந்த மாலையில் தொடுக்கப்பட்டிருக்கிறது
புத்தரது எட்டு வழிகளான நல்ல பார்வை, நல்லெண்ணம் இனிய பேச்சு நற்செய்கை நல்ல வாழ்க்கை நன்முயற்சி ,நல்ல மனசாட்சி நல்ல தியானம் { right view ,right intention ,rt speech ,rt பல action rt lively hood rt effort rt mindfulness rt concentration }
இவைகள் இந்து மதத்தில் தொன்றுதொட்டு இருந்து வர சங்கரரும் இதை பல இடங்களில் கூறியிருக்கிறார் .
பிரும்மம் உணர ஆசையான மண்ணாசை ,பொன்னாசை ,பெண்ணாசை மூன்றையும் அறவே துறக்கவேண்டும் என்று இருவருமே சொல்லியிருக்கின்றனர் .இன்பம் துன்பம் இரண்டையுமே சமமாக எடுத்துக்கொண்டால் தான் நிம்மதி பெறமுடியும் என்றும் இருவருமே சொல்கின்றனர்
இருவருமே துறவறத்தை ஆதரித்து பிரும்மனைக் காண்கின்றனர்
இதேபோல் பல ஒற்றுமைகளை புத்தர் ,சங்கரர் இருவரிடத்திலும் என்னால் காணமுடிந்தது .
ஒம் ஜயஜய சங்கர ஹரஹரசங்கர ,,,,,,,புத்தம் சரணம் கச்சாமி ….
படத்திற்கு நன்றி :
http://pinterest.com/pin/112519690661213331/

Leave a Reply