வாழ்விலே…

 

செண்பக ஜெகதீசன்

 

உறக்கம்-

ஓய்வின் மொழி,

உய்வின் வழி..

 

கனவின் களம்,

கனிந்திடும் உளம்..

 

வாழ்வின் பகுதி,

வாழ்வே அதுவல்ல..

 

அதுவானால்,

இல்லை வாழ்வே…!

 

 

Share

Comments

2 responses to “வாழ்விலே…”

  1. ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்’ என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. சரியாக‌ச் சொன்னீர்கள். உறக்கம் என்பது வாழ்வின் ஒரு பகுதி தான். அருமையான கவிதை பகிர்வுக்கு வாழ்த்துகள்!.

  2. -செண்பக ஜெகதீசன்…

    கருத்துரை வழங்கி வாழ்த்திய
    பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு
    நன்றிகள் பல…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *