வலி

ராசை கண்மணி ராசா 

 

சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்.

காலில் செருப்பணிந்தால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்

‘உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
உங்க சாதிக்குத்தானே’-என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!

ஒன்று செய்
உன்னை அறியாத ஊரில் போய்
உன்னைப் பறையனென்று சொல்!
அப்போது புரியும் என் வலி !

 

Share

Comments

3 responses to “வலி”

  1. சிவப்பு நிற எழுத்துக்களும் வலியைத் தெளிவாக விளக்கியது.  
    ‘நச்’ என்று உணர்வுகளை விளக்கும் நல்லதொரு கவிதை, வாழ்க. 

    அன்புடன்
    ….. தேமொழி 

  2. உணர்வுகளின் ஊர்வலம்!
    வலியது உளியாய்த் தெறிக்கிறது!
    குருதியினில் கலந்த வார்த்தைகள் சிகப்பாக…

  3. சச்சிதானந்தம்

    மறை படிக்கும் மனித ருக்கும்,

    பறை அடிக்கும் புனித ருக்கும்,

    கறை படிந்த கண்டன் ஒருவனே,

    இறை வனென்று பொதுவில் ஆனான்!

    ஏளனம் செய்வோரை எதிர்த்துத் துணிவோடு,

    ஈனமதி எண்ணத்தை எரித்துப் போராடி,

    சீதனமாய்த் தூயன்பைக் கொடுத்துக் கைகுலுக்குங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *