அன்புச் சகோதரர், அருமை வெண்பா வித்தகர், ஆழ்ந்த மனப்பக்குவம் கொண்ட நம் கிரேசி மோகன் அவர்களின் அன்புத் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்கள்
இப்பூவுலகை விட்டு இறையடி நிழலை நாடிச் சென்றுள்ளார். அன்னார் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளர் பொறுப்பில் எண்பதுகளில் பணி நிறைவு செய்தவர். அவர்தம் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும் உளமார பிரார்த்திக்கிறோம்.
ஆன்மனுக்குச் சாவில்லை சேதாரம் மேனிக்கேயென
ஆதாரத்துடன் அங்கம் துலக்கி மீளாத
சோகத்திலும் மாளாத பக்குவம் நிறைத்
தவமாய் உதித்த தனயன்!
சித்தின் விளையாட்டை ஆனந்தத்தின் சத்தாய்
வேடிக்கைப் பார்க்கும் ஆன்மீகப் புத்தி
உலகே மாயம் இவ்வாழ்வும் மாயம்
எதுவும் நிரந்தரமில்லை சோகமிலைகாண்!
மனத்தெளிவே உளத்துறவு வரவும் செலவுமே
உறவும் பகையும் எனும் மாசற்ற மனம்
அழிவற்ற ஆன்மா பயனற்ற கூடுவிட்டு
பண்ணோடு மீண்டு வாழும்!
முடிவற்ற உயிர் வானமேறி வைகுந்தமேகி
அரியையும் அரனையும் பாதாரவிந்தம் துதித்து
பரமனின் பக்கத்தில் பதவிசாய் ஆனந்தமாய்
பக்குவமாய் இறைநிலை இன்பமடையுமே!!
படத்திற்கு நன்றி : திரு இசைக்கவி ரமணன்


Leave a Reply