Month: November 2015

  • ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் மூலம் பள்ளிக்கு உதவி

    குக்கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு அறம் செய விரும்பு திட்டத்தில் நல்ல தண்ணீர் மெசின் வழங்குதல்.

    அறம் செய விரும்பு திட்டத்தில் உதவி கோரிய சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றியம் ( தேவகோட்டையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் ) முதல் பருவ விடுமுறையில் குக்கிரமாம் கொடிக்குளம் கிராம பள்ளிக்கு தூறும் மழையில் ( காரைக்குடியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் ) சென்றிருந்தேன். விடுமுறை நாளாக இருந்த போதும் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி கற்பகம் அவர்கள் தூறும் மழையில் வந்திருந்தார்கள். பள்ளியை நேரில் பார்வையிட்டு பிறகு அதனைப் பரிந்துரை செய்தேன்.

    அறம் செய விரும்பு மூலம் குக்கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம்:
    “ஆனந்த விகடன் – ராகவா லாரன்ஸ்” ஆகியோரின் “அறம் செய விரும்பு” திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடிக்குளம் எனும் குக்கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கினோம். இதனில் சுவாரசியமான நிகழ்வு என்னவெனில் இதனைப் பொருத்திய நண்பர் திரு.கருப்புசாமி இரவு சுமார் 8 மணி அளவில் அப்பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின் கணவர் வாகனத்தை தேவகோட்டையில் இருந்து வாங்கிக் கொண்டு தேவகோட்டையில் இருந்து கிளம்பி இரவு சுமார் 9 மணிக்குச் சென்று பள்ளியில் அதனைப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டார். திடீரென ஒரு பொருள் தேவைப் படவே அருகில் உள்ள ஏம்பல் என்கிற ஊருக்குச் சென்று (கொடிக்குளம் ஊர் மக்கள் உதவியுடன் ) அங்குப் பூட்டி இருந்த கடையை தட்டித் திறக்க சொல்லி பிறகு அந்தப் பொருளை பெற்று வேலையை முடித்து உள்ளார். அந்த ஊர் மக்கள் நல்ல முறையில் உதவி உள்ளனர். மீண்டும் இரவு 10.30 மணிக்குக் கிளம்பி 11.45க்கு வாகனத்தை தேவகோட்டையில் திரும்ப கொடுத்து உள்ளார்.

    அந்த ஊருக்கு சாதாரணமாக செல்வதே சிரமமான செயல். இது குறித்து திரு.கருப்புசாமி கூறுகையில், நான் சென்னையில் இருந்து வந்து வேறு பள்ளிக்கு பொருத்தி விட்டு இந்த ஊருக்கு வந்த போது ரோடு நன்றாக இருக்கும், எளிதில் சென்று விடலாம் என எண்ணினேன். ரோடு நன்றாக இருந்தது, ஆனால் வழியில் யாருமே இல்லை. ஒரு இடத்தில் வாகனத்தின் முகப்பு விளக்கை அணைத்து விட்டு என்னைச் சுற்றி பார்த்தேன். முழுவதும் கும் இருட்டு, கொஞ்ச நேரம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. மீண்டும் கிளம்பி ஊரைச் சென்று அடைந்தேன். ஊர் மக்கள் அருமையாக எனக்கு உதவி செய்தார்கள். தலைமை ஆசிரியர் நல்ல முறையில் பள்ளியை நடத்துவதாகத் தெரிவித்தார்கள். இந்த ஊர் மிக நீண்ட தொலைவாக இருந்தாலும் இந்த இரவு நேரத்திலும் மக்களின் அன்பான கவனிப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

    ஆனால் இரவு நேரத்தில் கும் இருட்டில் அந்த ஊரைக் கண்டு பிடித்து அவரது வேலையை முடித்து உள்ளார். இதற்கான முழு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கும், கண்ணங்குடி உதவித் தொடக்க கல்வி அலுவலர் திரு.அடைக்கலராஜ் அவர்களுக்கும், விகடன் குழுமத்திற்கும் ,படபிடிப்பாளர் திரு.சாய் அவர்களுக்கும், மோட்டார் விகடன் திரு.பாலமுருகன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

    Raghava Lawrence2

    அறம் செய்வதை விட இது போன்று தேடி விரும்பிச் செய்வது தான் முக்கியமானது. அதனை விகடன் குழுமம் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் மூலம் எங்களுக்குச் செய்ய வாய்ப்பு கிடைத்து உள்ளது. நாங்கள் மறு நாள் சனிக்கிழமை அன்று அப்பள்ளிக்குச் சென்றபோது (அரசு விடுமுறை) நிறைய மாணவர்களும்,தலைமை ஆசிரியை திருமதி கற்பகம் அவர்களும் எங்களை இன் முகத்துடன் வரவேற்றனர். தண்ணீரைக் குடித்து விட்டு அருமையாக இருப்பதாகச் சொன்னார்கள். மாணவர்களின் முகத்தில் அவ்வளவு சந்தோசம். அதனை விட தங்கள் மாணவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்து விட்டதைப் பார்த்து தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் மிகுந்த சந்தோசம்.அதனைக் கண்ட நமக்கும் சந்தோசம்.

    (இந்த வார ஆனந்த விகடனில் இது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது).

    லெ. சொக்கலிங்கம்,
    அறம் செய விரும்பு ,
    தேவகோட்டை.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • படக்கவிதைப் போட்டி 37-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்திருப்பவர் திருமிகு. அமுதா ஹரிஹரன். இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி!

    body painted persons

     ’உலகமே ஒரு நாடக மேடை; அதில் அனைவரும் நடிகர்களே!’ என்பார் பிரபல ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர்.( All the world’s a stage, And all the men and women merely players…)

    வாழ்க்கையில் நடிப்பதன்றி வாழ்க்கையே நடிப்பாய்க் (அதாவது நடிப்புத் தொழிலாய்) கொண்ட மனிதர்களும் உண்டு. படத்தில் காணும் நீலவண்ண மனிதர்கள் இருவரையும் பார்த்தால் நடிப்புத் தொழில்தான் இவர்கள் வாழ்வின் பிடிப்பு என்று தோன்றுகின்றது. 

    அன்று காளை மாட்டை ஊர்தியாய்க் கொண்டு சிவன் வருவார் காட்சிகளில்; இன்று காலம் மாறிவிட்டது; வாகன வசதிகள் பெருகிவிட்டன. அதனால்தான் சிவனும் ’சுசுகி’க்கு மாறிவிட்டார் போலும்!

    அது போகட்டும். இந்த வண்ணப்படம் எத்தகைய எண்ணங்களை நம் கவிஞர்களின் நெஞ்சில் எழுப்பியிருக்கின்றது என்று அறிந்துவர நாமும் புறப்படுவோம்!

    ***

    கடவுள் வேசத்தில், கோயிலிலிருக்கும் கடவுளிடமே கைவரிசையைக் காட்டிவிட்டுப் போகும் சாதுர்யமான மனிதர்கள் இவர்கள் என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    கோயிலைக் கொள்ளை அடித்து 
    காவலர் கண்களில் மண்தூவி 
    சாதுர்யமாய் தப்பித்துப் போக 
    கடவுள் வேஷம் பொருத்தமானதுதான்!

    *** 

    ’வேடங்கள் தேவையில்லை; இறைவனை முற்றாய் நம்பு; அவன் உனக்கு உற்றதுணையாவான்!’ என நம்பிக்கையளிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கடவுள் வேடம் போடுகின்றார்
         கடவுளின் கருணை பெற்றிடவே,
    கடவுளை மனிதனை ஏய்த்திடவே
         காசினி மாந்தர் பல்லோரும்
    நடக்கிறார் பற்பல வேடத்துடன்,
         நல்லது நமக்குத் தெரிவதில்லை,
    இடரதைக் களைவான் இறைவனென
         இனிதாய் நம்பிடு போதுமதே…!

    *** 

    பகல் வேடம் அம்பலமாகிக் காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு கம்பியெண்ண வேண்டியிருக்குமோ? என்று அஞ்சும் மனிதர்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    இருட்டானால்
    திருட்டு
    பகலானால்
    பகல் வேஷம் என்று

    நல்லாத்தானே போய்கிட்டிருக்கு
    பொல்லாத வேலையா இன்று
    போலீஸு பார்க்குது
    நண்பா பின்னாடி பார்க்காதே
    வம்பா போயிடும் கெத்தா நில்லு
    சந்தேகம் வராத அளவுக்கு

    தீபாவளி நேரம்
    தீவிர வேட்டைக்கு நிற்குது போலீஸு
    நாரதனிடம் இரவல்
    கேட்காதே என்றேன்
    கேட்டியா இப்பப்பாரு
    வண்டியிலே பெட்ரோல்
    இல்லாம நிற்க வைத்து
    அவன் புத்தியை காட்டிட்டான்
    நேரம் தெரியாமல் ரயில் வேறு
    லேட்டாயி கேட்டாலே
    மாட்டப்போறோமோ?

     ***

    வேடங்கள்  பலதிறப்பட்டன; அவற்றின் துணைகொண்டு கோமாளியாய் மாறி மக்களை மகிழ்விக்கவும் முடியும்; அவர்களையே ஏமாளியாக்கி ஏய்த்துவிட்டுச் செல்லவும் முடியும். இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவரவர் சமயோசிதம் என்கிறார் திருமிகு. பா. வானதி வேதா. இலங்காதிலகம்.

    நீலவண்ணன் நவீன கோபி தெருவில்
    கோலமோ இது நவீன ஆயர்பாடியில்!
    பசி வெயில் பாரா வேடம்
    சுசிகியில் சினிமா காட்சித் தடம்
    தாமாகத் திறன் காட்டவும் திடம்
    கோமாளியாய் மக்களை மகிழ்விக்கவும் இடம்
    மாமாவாய் மக்களை நாசமாக்கவும் நடம்
    ஏமாற்றிப் பிழைப்போரும் கபட வேடம்.
     
    பாசம் பெறவும், காதல் நடவும்
    தேசம் ஆளவும் தேசிய வேடம்.
    காசும் கைநிறைக்கப் பூசுகிறார் அரிதாரம்.
    வேசமே வாழ்வாகப் பிடிக்கிறார் வடம்.
    சிரித்து ரசித்துச் சிந்தித்துப் பொழுதினை
    எரிப்பவர் அன்னமாய் பாலைப் பிரிப்பார்
    நாசமும் நயமும் கொள்ளும் விகிதம்
    தோஷமோ விதியோ அவரவர் சமயோசிதம்.

    *** 

    கவிதைகள் நன்று! கவிஞர் பெருமக்களுக்குப் பாராட்டுக்கள்! 

    இனி இவ்வாரத்தின் சிறப்புக் கவிஞரைக் கண்டுவருவோம்!

    ’வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்’
    என்பார் தெய்வப் புலவர். ஆம்! வஞ்சம் செய்பவனின் நெஞ்சமே அவன் போலித்தனத்தைக் கண்டு கேலியாய்ச் சிரிக்கும். கடவுள் வேடமிட்டுப் பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் மனிதர்களையும், நடமாடும் கடவுளராய்க் கருதும் மக்களின் மடமை கண்டு பொங்குகின்ற கவிதையொன்று கருத்தைக் கவர்ந்தது.

    வண்டி 
    பாதியில நின்னு போச்சு…
    பெட்ரோலுக்கு காசு இல்ல..
    வயுறும் காயுது…
    வேகாத வெயிலில்ல..

    யாரை கேக்க
    பாக்கற முகமெல்லாம் கடவுளாவே 
    தெரியுது..
    மனச பய 
    ஒருத்தனையும் காணோம்…

    சோறாக்க குழம்பு வைக்க எந்த கடவுளுக்கு 
    தெரியும்….

    கொள்ளை அடிச்சா என்ன…
    கொலை செஞ்சாதான் என்ன…

    கோபமா வருது….
    அழுகையா வருது….

    புலம்பிக் கொண்டிருக்கும் 
    கடவுள் வேஷமிட்ட இருவரையும் 
    கடவுள்களே என்றெண்ணிய 
    திருட்டு முட்டாள் ஆசாமிகள் 
    இன்னும் சற்று நேரத்தில் 
    கடத்திக் கொண்டு 
    போவார்கள்…

    இதையும் கடவுள் செயல் 
    என்பவர்கள் 
    வாயை மூடிக் கொண்டு 
    படிக்கவும்… 

    மக்களின் மனநிலை மாறவேண்டும்; மூடப் பழக்கங்களிலிருந்து அவர்கள் மீளவேண்டும் எனும் உள்ளக்கிடக்கையோடு இக்கவிதையைப் படைத்திருக்கும் திரு. கவிஜியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

     ***
    உடலெங்கும் வண்ணம்பூசி மக்களைத் தங்கள் நடிப்பாற்றலால் மகிழ்விக்கும் மனிதர்களின் கலைக்குரிய கவுரவத்தை மக்கள் தராததுகண்டு வெகுண்ட அவர்கள் கள்வராய் மாறுவதை நகைச்சுவையுடன் சித்தரிக்கின்றது மற்றொரு கவிதை.

    ஏன்யா எங்களைப் பாக்குறீங்க ?

    என்ன பாக்குறே ?
    எதையய்யா கேக்குறே ?

    நாட்டில மனுசன்
    நடக்கிற லட்சணத்துக்கு
    நாம எதில
    குறஞ்சு போனம் ?

    கருநீலக் கண்ணன்
    வெண்ணெய் திருடினான் !
    இந்தப் பயலுக
    கருநீலம் பூசிட்டு
    என்னத்தை திருடிப்புட்டானுக
    என்னுதானே யோசிக்கிறே !

    கொட்டகை ஒண்ணில
    கூத்துப் போட வான்னு
    கூட்டிப் போனானுக
    பெரிய மனுஷங்க
    நல்லாத்தான் நாம
    வேஷம் கட்டினோமுங்க
    கூச்சல் போட்டுத்தான்
    கூத்தை ரசிச்சானுக

    பசியோட நாம
    கையை நீட்டினோம்
    வெளியே போங்கடா
    என்னு அந்தப் பெரிய மனுசங்க
    தம்ம கையை நீட்டினாங்க

    முள்ளை எடுக்க
    முள்ளு வேணும்னு
    ஆச்சி ஊரிலே
    அப்ப சொன்னது
    இப்ப உறைச்சுது

    காசு கொடுக்கல்லென்னா
    என்னாங்க
    காசாக்க அவங்க
    பைக்கை தூக்கிட்டு
    வந்திட்டொமுங்க

    இப்ப சொல்லுங்க !

    ஏன்யா எங்களைப்
    பாக்குறீங்க ?

    கள்வர்கள் தாமாக உருவாவதில்லை; சமுதாயம்தான் அவர்களை உருவாக்குகிறது என்பதைத் தன் கவிதையில் தெளிவுபடுத்தியிருக்கும் திரு. சக்தி சக்திதாசனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    *** 

    கவிஞர்களே! உங்களோடு ஒரு நிமிடம்…

    இப்புகைப்படத்திலுள்ள அரிதாரம் பூசிய மனிதர்களை நீங்கள் கள்வர்கள் போலவே பாவித்துப் பாப்புனைந்திருப்பது என மனத்துக்குச் சற்று வருத்தந்தான்! ஏன்? இவர்கள் நேர்மையான கலைஞர்களாக, ஏதோ காரணத்திற்காகச் சாலையோரம் தங்களுக்குச் சொந்தமான வண்டியோடு நின்றிருப்பவர்களாகவும் இருக்கலாம் அல்லவா?

    பின்னால் தெரியும் காவல்துறை வண்டிதான் ’இவர்கள் கள்வர்கள்’ எனும் எண்ணத்தை உங்களுக்குள் விதைத்துவிட்டது என ஊகிக்கின்றேன். காவல்துறை வண்டி அங்கே நின்றிருப்பதுகூட (இக்கலைஞர்களோடு சற்றும் தொடர்பில்லாத) இயல்பான ஓர் நிகழ்வாய் இருந்திருக்கக் கூடும்.

    நீங்கள் கொஞ்சம் மாற்றியும் யோசித்திருக்கலாமோ? 

    மீண்டும் சந்திப்போம்!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav

     

    “மறைந்திருந்து யாசிக்க, மர்மமாக மீரா,
    கரைந்துருகி கானக்கண் கொண்டு; -உறைந்தபனி
    நெஞ்சிலே பக்தி நெருப்பைக் கொளுத்திவிட,
    மஞ்செழில் வண்ணன் மெழுகு”….கிரேசி மோகன்….

    மஞ்சு-மேகம்…

    Share
  • தேடினேன், தட்டாத கதவில்லை, காணவில்லையே, கண்ணீர்க் கதை

     

     

    Maravanpulavu K. Sachithananthan

    Missing person: Annalingam அன்னலிங்கம்

    annali

    Name of father: Sinnavan Ramanathan சின்னவன் இராமநாதன்
    Name of mother: Alvappillai Ratnapoopathy ஆள்வாப்பிள்ளை இரத்தினபூபதி
    Date of birth: 21st January 1969
    Identity Card 690213206V
    Birth Certificate number 3589

    an1

    Occurrence in brief:

    Missing from: 19 July 1996. At about 0830 hours in the morning, Annalingam, (a fishermen and a toddy tapper) was baby-keeping his 7 month old third son. His older son and daughter were playing with the tiny tot, while his wife Jeyakala was cooking breakfast. Neighbours were talking about a round up in the area by the army. Jeyakala heard that men from eastern Maravanpulavu were taken away in the morning by the army. Army came to the house of Annalingam through the front gate as well from the backyard fencing. Intruding army men instructed all in the family to march towards A32 highway, to a place called the Banyan tree (Aaladi). Jeyakala protested saying that a nursing babe-in-arms was in the family and they cannot move out all of a sudden. Army instructed Annalingam to hand over the baby to Jeyakala and move. Prisanthini, the daughter went to hug her father and wouldn’t leave him. Both went together to Aaladi. Jeyakala could not with stand the ordeal. Leaving the kitchen with half-cooked food, Jeyakala went with her husband carrying the baby, followed by her son. Neighbours, most of them relatives of Annalingam were also instructed to march. Annalingam, Jeyakala and the two children walked for about 1.5 km through the paddy fields to reach Aaladi at about 1100 hours. It was hot sun. All were asked to sit in the open paddy fields. There was a crowd of more than 300 persons. Men from the army and navy were there with 2 to 3 long trucks. There were police personnel, both men and women, from the Kopay police station. Grama Sevaka Officer J/298 of Maravanpulavu was among the crowd having been part of the roundup. Army asked them to gender-segregate. Pirasanthini was hugging her father Annalingam until forced to join Jeyakala. Females were asked to line up for screening. Women moved in a row towards west. Few young women in the row were taken into custody. Jeyalalitha daughter of Poopalasingham was one of them. Jeyakala saw Jayalalitha being isolated for detention. Annalingan was in the men’s row proceeding towards north for screening. While being screened Annalingam was isolated and pushed into a waiting army truck along with men of his age group. Jeyakala, Vasanthakumar, and Pirasanthini saw Annalingam being pushed to be loaded into a truck. Jeyakala and the children rushed towards the truck. Army, navy and police personnel used mild force to chase away all persons rushing towards the truck, for a distance of about 500 m. south. Crowd retreated before making another abortive attempt to go near the truck. Army men became harsher and threatened the surging crowd. At about 1500 hours the army convoy with detained persons in the trucks headed towards west. The crowd ran behind the truck. The crowd could not keep pace. Jeyakala with her 3 kids walked back 1.5 km to her home. She fed the children. Jeyakala with babe in arms rode on a pillion in the bicycle pedaled by Sinnavan, father of Jeyakala following the convoy at a protectable distance to Navatkuli. Jeyakala reached the mound on A32 highway across which she was prevented from proceeding. Jeyakala cried. Many women in the crowd howled. Jeyakala shouted that her husband Annalingam was an innocent man attending to the family, working for a merger income. Jeyakala told the army that she had a babe-in-arms. Army men did not care. They baton-charged Jeyakala while her baby cried. Jeyakala would not give up. Her loved one, her care-taker, her bread winner, her protector, her life partner was within a stone throw distance. Since the army announced a curfew, Jeyakala came back home with the babe-in-arms on pillion of her cycling father Sinnavan. Pirasanthini had a restless night. Thoughts about her father haunted her. She loved him most. So Jeyakala took Pirasanthini and the babe-in-arms at the wee hours of the morning, next day the 20th to Navatkuli. Jeyakala took with her a photograph of Annalingam. Army had blocked the road. Jeyakala sat with others on the road. Army men told the crowd that the detainees would be released after inquiry. Thirst choking, hunger burning, sun scorching, road gravel pricking, Jeyakala and the children ungrudgingly sat awaiting the release. With no light at the end of the tunnel, depleted, deprived, grieved with the feeling of prolonged separation haunting, Jeyakala returned home around 1500 hours. On Sunday the 21st the ordeal for Jeyakala remained the same. She was there in the wee hours of the morning with her two kids. She feigned that she was sick, her children were sick and managed to obtain a pass to cross the blockade and go towards Navatkuli junction. Walking westwards, climbing down the mound, she looked at the partially damaged building on her right. Pirasanthini screamed. She shouted “Appa”. She had identified her father standing blindfolded and handcuffed in the verandah. Jeyakala saw her husband. She shouted. She hailed. Army men came and chased her. There were many men handcuffed and blindfolded along with Annalingam. Jeyakala and the children strayed around the area and returned along the same route. Eyes of Jeyakala and Pirasanthini were wide open, fixed to their left. They were searching for their beloved Annalingam. Alas! None were in the building. However the crowd continued to wait on the road. They waited till dusk and later returned to their homes empty handed. On Monday Jeyakala with babe-in-arms went to the office of the International Committee of Red Cross (ICRC) to formalize the record of missing Annalingam.

    Documents
    Marriage certificate of Annalingam and Jeyakala married on 5th February 1990
    Report on the enforced or involuntary disappearance of a person (undated)
    Letter to the Government Agent, Jaffna 24th July 1996
    Letter to Inspector of Police, Kopay dated 14th September 1996
    Letter to HE President of Sri Lanka dated 14th November 1996
    Letter from Major General Janaka Perera HQ 51st Division dated 30th November 1996
    Letter from the Senior Supdt. Of Police, Jaffna dated 5th January 1997
    Letter from Ministry of Defense dated 9th January 1997
    Letter from the Additional Government Agent dated 13th January 1997
    Letter from Chavakachcheri Palm Development Cooperative Society Ltd. Dated 19th January 1997
    Letter from the Additional Government Agent dated 10th April 1997
    Letter from Ministry of Defense dated 9th May 1997
    Letter by Jeyakala to the Ministry of Defense dated 31st May 1997
    Letter from Ministry of Defense dated 28th June 1997
    Letter from the International Committee of Red Cross (ICRC) dated 4th August 1997
    Letter from Ann Revcclier dated 4th August 1997
    Letter from the Government Agent dated 10th December 1997
    Letter from Divisional Secretary Thenmaradchy dated 24th December 1997
    Letter from Divisional Secretary Thenmaradchy dated 10th November 1998
    Registration with Northern Province Guardian Association for persons arrested and disappeared (undated)
    Registration with Jaffna District association for arrested and disappeared persons (undated)
    Affidavit by Jeyakala dated 7th March 1999
    Letter from Ministry of Defense dated 11th November 1999
    Letter from Human Rights Commission of Sri Lanka dated 30th December 2002
    Letter from Human Rights Commission of Sri Lanka dated 12th January 2003
    Letter from Human Rights Commission of Sri Lanka dated 12th June 2003
    Affidavit by Jeyakala dated 6th August 2003
    Summons from Magistrate Courts, Chavakachcheri dated 6th January 2004
    Letter from Human Rights Commission of Sri Lanka dated 26th September 2005
    Letter from the Presidential Commission to investigate into complints regarding missing persons dated 24th October 2013
    Letter from the Presidential Commission to investigate into complints regarding missing persons dated 30th January 2014
    Interim Releif to be provided to
    Wife Jeyakala Annalingam nee Sinnavan ID 688541930V Phone 0771334238
    Son Vasanthakumar aged 25 years
    Daughter Pirasanthini aged 22 years
    Son Thatheeskumaran aged 20 years
    All of Maravanpulavu West, Chavakachcheri, Jaffna District, Sri Lanka.

    Share
  • இந்திய அமெரிக்க ​ ​ வானியல் மேதை சுப்ரமணியன் சந்திரசேகர்

    ajay

    சுப்ரமணியன் சந்திரசேகர்
    [1910-1995]

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), Canada

    பௌதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்று உலகப் புகழடைந்த விஞ்ஞானி ஸர் சி.வி. ராமனின் மருமான் [Nephew] சந்திரசேகர் என்பது இந்தியர் பலருக்குத் தெரியாது! இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது முதல் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் ஒருவராய்ச் சிகாகோவில் அணுக்கருத் தொடரியக்கம் முதலில் புரிந்த இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மியோடு [Enrico Fermi] பணியாற்றியவர்!

    விண்வெளியில் கண்சிமிட்டும் விண்மீன்களின் தோற்றமும் சிதைவும்!

    பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் வல்லுநர்கள், மின்மினிபோல் வானிருளில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பரிதியின் பரம்பரைச் சேர்ந்த அண்டங்களோ என்று ஐயுற்றார்கள்!  விண்மீன்களின் இடம்மாறிய பிம்பங்களை [Stellar Parallaxes] முதலாகக் கண்டு, 1838 இல் அந்த ஐயம் மெய்யான தென்று உறுதியானது.  மேலும் அந்நிகழ்ச்சி விண்மீன்களின் இயற்கைத் தன்மைகளை ஆழ்ந்து அறிய அடிகோலியது.  சுயவொளி வீசும் சூரிய வம்சத்தைப் போல் தோன்றினாலும், பல விண்மீன்கள் முற்றிலும் வேறுபட்டவை!

    கோடான கோடி விண்மீன்களின் பிறந்தகமும், அழிவகமும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பால்வீதி ஒளிமயத் திடலே [Milky Way Galaxy]! தோன்றிய எந்த விண்மீனும் சிதையாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்வ தில்லை!  பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று அண்டவெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது!  இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம்!

    சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை!  சில வடிவத்தில் சிறியவை!  கொதிப்போடு கொந்தளிப்பவை சில!  குளிர்ந்து கட்டியாய்த் திரண்டவை சில!  ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில!  ஒளி யிழந்து குருடாகிப் போனவை சில!  பல பில்லியன் மைல் தூரத்தில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவெல்லாம், அவற்றின் ஒளித்திரட்சிதைப் பார்த்து, ஒளிமாற்றத்தைப் பார்த்து, இடத்தைப் பார்த்து, இடமாற்றத்தைப் பார்த்து, ஒளிநிறப் பட்டையைப் [Light Spectrum] பார்த்துத், தமது பௌதிக ரசாயன விதிகளைப் பயன்படுத்திச் செய்து கொண்ட விளக்கங்களே!

    ஒரு விண்மீன் தனது உடம்பைச் சிறிதளவு சிதைத்து வாயு முகிலை உமிழ்கிறது.  அப்போது விண்மீன் முன்பு இருந்ததை விட 5000-10,000 மடங்கு ஒளி வீசுகிறது!  அது நோவா விண்மீன் [Nova Star] என்று அழைக்கப்படுகிறது.  பெருநோவா [Supernova] விண்மீன்கள் வெடிப்பில் சிதைவுற்றுச் சிறு துணுக்குகளை வெளியேற்றிச் சூரியனை விட 100 மில்லியன் மடங்கு ஒளிமயத்தைப் பெறுகின்றன. சூரிய குடும்பத்தின் அண்டங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் ஓர் பெருநோவா வெடிப்பில் உண்டானவை என்றும், அவற்றைப் பின்னால் சூரியன் கவர்ந்து கொண்டதாகவும் கருதப்படுகிறது!

    பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு [1.4 times Solar Mass] மேற்பட்ட விண்மீன் இறுதியில் ஒரு வெண்குள்ளியை [White Dwarf] உருவாக்குவ தில்லை என்று சந்திரசேகர் கூறினார்.  [வெண்குள்ளி என்பது பரிதியின் பளுவை (Mass) அடைந்து, அணுக்கருச் சக்தி யற்றுச் சிதைந்த விண்மீன் ஒன்றின் முடிவுக் கோலம்.  அது வடிவத்தில் சிறியது!  ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகையானது!]  அதற்குப் பதிலாக அந்த விண்மீன் தொடர்ந்து சிதைவுற்று, பெருநோவா வெடிப்பில் [Supernova Explosion] பொங்கித் தனது வாயுக்களின் சூழ்வெளியை ஊதி அகற்றி, ஒரு நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] மாறுகிறது.  பரிதியைப் போல் 10 மடங்கு பருத்த விண்மீன் ஒன்று, இன்னும் தொடர்ந்து நொறுங்கி, இறுதியில் ஒரு கருங்குழி [Black Hole] உண்டாகிறது.  சந்திரசேகரின் இந்த மூன்று அறிவிப்புகளும் பெருநோவா, நியூட்ரான் விண்மீன், மற்றும் கருங்குழி ஆகியவற்றை விளக்கிப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய முறைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

    சந்திரசேகரின் ஒப்பற்ற வாழ்க்கை வரலாறு

    இந்தியனாகப் பிறந்து அமெரிக்காவில் குடிபுகுந்த சுப்ரமணியன் சந்திரசேகர் பிரிட்டிஷ் இந்தியாவில் 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் லாகூரில் அவதரித்தார்.  1930 இல் பௌதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்று உலகப் புகழடைந்த விஞ்ஞானி ஸர் சி.வி. ராமனின் மருமான் [Nephew] சந்திரசேகர், என்பது இந்தியர் பலருக்குத் தெரியாது!  தந்தையார் சுப்ரமணிய ஐயர் அரசாங்க நிதித்துறையகத்தில் வேலை பார்த்து வந்தார்.  தாயார் சீதா பாலகிருஷ்ணன் பிள்ளைகள் பிற்காலத்தில் பேரறிஞர்களாக வருவதற்கு ஊக்கம் அளித்தவர்.  பத்துக் குழந்தைகளில் சந்திரசேகர் மூன்றாவதாகப் பிறந்த முதற் பையன்!  1918 இல் தந்தையார் சென்னைக்கு மாற்றலானதும், சந்திரசேகர் சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து [1922-1925] படித்துச் சிறப்பாகச் தேர்ச்சி அடைந்தார்.

    பிறகு பெரியப்பா சி.வி. ராமன் அவர்களைப் பின்பற்றிச் சென்னை பிரிசிடென்ஸிக் கல்லூரியில் படித்து, 1930 இல் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் B.Sc. பட்டதாரி ஆனார்.  அப்போது நடந்த பௌதிகப் போட்டியில் வெற்றி பெற்று, எடிங்டன் எழுதிய, “விண்மீன்களின் உள்ளமைப்பு” என்னும் புத்தகத்தைப் பரிசாகப் பெற்றார்!  அந்நூலை அவர் ஆழ்ந்து படித்தது, விண்மீன்களின் தோற்ற அழிவு ஆய்வுகளில் அவர் பின்னால் மூழ்க அடிகோலியது!  கல்லூரியில் சிறப்புயர்ச்சி பெற்று முதலாகத் தேறியதால், அரசாங்கம் அவர் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல உதவிநிதிப் பரிசளித்தது.   அங்கே கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிடிக் கல்லூரியில் படித்துப் 1933 இல் பௌதிகத்தில் Ph.D. பட்டத்தைப் பெற்றார். 1936 செப்டம்பரில் கல்லூரியில் சந்தித்துக் காதல் கொண்ட லலிதா துரைசாமியை மணந்து கொண்டார்.  கேம்பிரிட்ஜில் அவரது பரிசுப் புத்தக ஆசிரியர், ஸர் ஆர்தர் எடிங்டன் [Sir Arthur Eddington], மில்னே [E.A. Milne] போன்ற புகழ் பெற்ற வானியல் வல்லுநர்களின் நட்பைத் தேடிக் கொண்டார்.

    அதற்குப் பிறகு சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1937 இல் ஆய்வுத் துணையாளர் [Research Assistant] பதவியை ஒப்புக் கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்றார்.  1938 இல் சந்திரசேகர் வானியல் பௌதிக [Astrophysics] உதவிப் பேராசிரியராகி, ஒப்பற்ற வானியல் பௌதிகப் பேராசிரியர் மார்டன் ஹல் [Morton Hull] அவர்களின் கீழ் பணியாற்றினார்.  அவர் பணி யாற்றிய இடம் விஸ்கான்சின், எர்க்ஸ் வானியல் நோக்ககம் [Yerks Observatory, Williams Bay, Wisconsin].  சந்திரசேகர் 1953 இல் அமெரிக்கப் பிரஜையாக மாறினார்.  1952 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆக்கப் பட்டுப் பல ஆண்டுகள் வேலை செய்து, ஓய்வுக்குப் பின்பு கௌரவப் பேராசிரிய ராகவும் 1986 வரை அங்கே இருந்தார்.  சந்திரசேகர் வானியல் ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்ட, விண்மீன் தோற்றத்தின் இறுதி நிலைக் கோட்பாடு [Theory on the Later Stages of Stellar Evolution] என்னும் பௌதிகப் படைப்பிற்கு 1983 இல் நோபெல் பரிசை, அமெரிக்க விஞ்ஞானி வில்லியம் ·பவ்லருடன் [William Fowler] பகிர்ந்து கொண்டார்.  அந்தக் கோட்பாடு அண்டவெளியில் நியூட்ரான் விண்மீன்கள் [Neutron Stars], கருங்குழிகள் [Black Holes] ஆகியவற்றைக் கண்டு பிடிக்க உதவியது.

    அண்டவெளியில் பெருநோவா, வெண்குள்ளி விண்மீன்கள்

    இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் டேனிஸ் விஞ்ஞானி ஐஞ்சர் ஹெர்ட்ஸ்புருங் [Einjar Hertzsprung] அமெரிக்க விஞ்ஞானி ஹென்ரி ரஸ்ஸெல் [Henri Russell] இருவரும் முதன் முதல் விண்மீன்களின் ஒளிவீச்சையும், உஷ்ணத்தையும் சேகரித்து, ஒரு வரைப்படத்தில் புள்ளியிட்டு அவற்றின் இணைச் சார்புகளைக் காட்டினார்கள்.  அந்த ஹெர்ட்ஸ்ப்ருங்-ரஸ்ஸெல் [Hertzsprung-Russell, H-R Diagram] வரைப்படமே வானியல் பௌதிகத்தில் விண்மீன்களின் தன்மைகளை எடுத்துக் காட்டும் ஒரு முக்கிய ஒப்புநோக்கு வரைப்பட மாகப் பயன்படுகிறது.  ஒளித்திரட்சியை நேரச்சிலும் [Luminosity in Y-Axis], உஷ்ணத்தைக் மட்ட அச்சிலும் [Temperature in X-Axis] குறித்து, ஆயிரக் கணக்கான விண்மீன்களின் இடங்களைப் புள்ளி யிட்டுக் காட்டப் பட்டுள்ளது.  ஹைடிரஜன் 10% கொள்ளளவுக்கும் குறைந்து எரிந்த பெரும்பான்மையான விண்மீன்கள் முதலக வீதியில் [Main Sequence] இடம் பெற்றன.  ஒளிமிக்க விண்மீன்கள் இக்கோட்டுக்கு மேலும், ஒளி குன்றியவை கோட்டுக்குக் கீழும் குறிக்கப் பட்டன.  பேரொளி வீசுவதற்கு விண்மீன் பெருத்த பரப்பளவு கொண்டிருக்க வேண்டும்!  அவைதான் பெரும் பூத [Super Giants] விண்மீன்கள்!  அவற்றுக்கும் சிறியவைப் பூத விண்மீன்கள் [Giant Stars]!  பிறகு வாயுக்கள் எரிந்து எரிந்து அவைச் செந்நிறப் பூதங்களாய் [Red Giants] மாறுகின்றன!  போகப் போக வாயு விரைவில் காலி செய்யப் பட்டு, ஈர்ப்பு விசையால் குறுகி விண்மீன்கள் வெண்குள்ளியாய் [White Dwarfs] சிதைவா கின்றன!

    பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுப் பரிதியும், ஒரு வெண்குள்ளியாகச் சிதைவடைந்து மடியப் போவதாய்க் கருதப் படுகிறது!  அவ்வாறு நிகழ்ந்தால் அது ஒரு செந்நிறப் பூதமாகி [Red Giant] புதன், வெள்ளி ஆகிய இரு கோள்களை வெப்பக்கடலில் மூழ்க்கி, அடுத்து பூமியின் வாயு மண்டலத்தை ஊதி வெளியேற்றிக், கடல்நீரைக் கொதித்துப் பொங்க வைத்து, உயிரினம் யாவும் மடிந்து மீண்டும் எதுவும் வாழ முடியாத வண்ணம், பூமி ஓர் நிரந்தர மயான கோளமாய் மாறிவிடும்!

    ஏறக்குறைய முழுப்பகுதி ஹைடிரஜன் வாயுள்ள விண்மீன், ஈர்ப்பு விசையால் பேரளவில் அமுக்கப் பட்டுச் சுருங்கி உண்டானது.  வாயுக்கள் கணிக்க முடியாத பேரழுத்தத்தில் பிணைந்து, பல மில்லியன் டிகிரி உஷ்ணம் உண்டாகி, வெப்ப அணுக்கரு இயக்கம் [Thermonuclear Reaction] தூண்டப்பட்டு அவை ஹீலியமாக மாறுகின்றன.  அந்த நிகழ்ச்சியின் போது அளவற்ற வெப்பமும், வெளிச்சமும் எழுந்து பிணைவு இயக்கம் [Sustained Fusion Reaction] தொடர்கிறது!

    1930 ஆரம்ப ஆண்டுகளில் விஞ்ஞானிகள், ஹைடிரஜன் சேமிப்பு யாவும் எரிந்து ஹீலியமாகி வற்றியதும் விண்மீன்கள் சக்தி வெளியீட்டை இழந்து, தமது ஈர்ப்பு ஆற்றலால் அமுக்கப் பட்டுக் குறுகி விடுகின்றன என்று கண்டார்கள்.  பூமியின் வடிவுக்குக் குன்றிப் போகும் இவையே வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுபவை.  வெண்குள்ளி கொண்டுள்ள அணுக்களின் எலக்டிரான்களும் அணுக்கருத் துகள்களும் [Nuclei] மிக மிகப் பேரளவுத் திணிவில் [Extremely High Density] அழுத்தமாய் இறுக்கப் பட்டு, எண்ணிக்கை மதிப்பில் நீரைப் போல் 100,000-1000,000 மடங்கு அதன் திணிவு ஏறுகிறது என்று பின்னால் கணிக்கப் பட்டுள்ளது!

    சந்திரசேகர் எழுதிய விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு

    சந்திரசேகரின் சிறப்பு மிக்க ஆக்கங்கள் விண்மீன்களின் தோற்ற மூலம் [Evolution of Stars], அவற்றின் அமைப்பு [Structure] மற்றும் அவற்றுள் சக்தி இயக்கங்களின் போக்கு [Process of Energy Transfer], முடிவில் விண்மீன்களின் அழிவு ஆகியவற்றைப் பற்றியது.  வெண்குள்ளிகளைப் [White Dwarfs] பற்றிய அவரது கோட்பாடு, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ரால்·ப் பவ்லர் [Ralph Fowler], ஆர்தர் எடிங்டன் [Arthur Eddington] ஆகிய இருவரும் தொடங்கிய வினையைப் பின்பற்றி மேற்கொண்டு விருத்தி செய்தது.

    சிதைவுப் பண்டங்கள் [Degenerate Matter] சேர்ந்து பேரளவுத் திணிவு [Extremely High Density] பெருத்த வெண்குள்ளியில், எலக்டிரான்களும் அணுக்கருத் துகள் மின்னிகளும் [Ionized Nuclei], விண்மீனின் ஈர்ப்பு விசையால் இறுக்கிப் பிழியப் படுகின்றன என்று 1926 இல் ரால்·ப் பவ்லர் விளக்கிக் கூறினார்.  அதே ஆண்டு ஆர்தர் எடிங்டன் ஹைடிரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியமாக மாறி,  சக்தியைச் சுரக்கும் மூலமாக விண்மீன்களில் இருக்கலாம் என்று எடுத்துக் கூறினார்.  சந்திரசேகர் தனது “விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு” [An Introduction to the Study of Stellar Structure] என்னும் நூலில், விண்மீன் தனது எரிவாயுவான ஹைடிரஜன் தீரத் தீர முன்னைப்போல் ஒளிக்கதிர் வீசத் தகுதியற்று, அதன் ஈர்ப்பு விசை சிறுகச் சிறுக அதே விகிதத்தில் குன்றிச் சுருங்குகிறது என்று எழுதியுள்ளார்.  ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசை அதன் பளுவைச் [Mass] சார்ந்து நேர் விகிதத்தில் மாறுகிறது!  பளு குன்றினால், அண்டத்தின் ஈர்ப்பு விசையும் குறைகிறது!  ஈர்ப்பு விசைச் சுருக்கத்தின் [Gravitational Collapse] போது, விண்மீனின் பளு ஒப்புமை நிலைப்பாடு [Relatively Constant] உள்ளது என்று சந்திரசேகர் அனுமானித்துக் கொண்டார்.  அந்தச் சுருக்கத்தை நிறைவு செய்ய, பேரமுக்க முள்ள எலக்டிரான்கள் [Highly Compressed Electrons] பொங்கி எழுந்து, விண்மீன் நொறுங்கிச் சிதைவடைந்து, சிறுத்துப்போய் முடிவில் வெண்குள்ளியாக [White Dwarf] மாறுகிறது என்பது அவர் கருத்து!

    சந்திரசேகர் ஆக்கிய வெண்குள்ளிக் கோட்பாடு கூறுவது என்ன?

    1936 முதல் 1939 வரை சந்திரசேகர் வெண்குள்ளிகளின் கோட்பாட்டை [Theory of White Dwarfs] உருவாக்கினார்.  அந்தக் கோட்பாடு வெண்குள்ளியின் ஆரம், பளுவுக்கு எதிர்விகிதத்தில் மாறுவதாக [Radius is inversely proportional to Mass] முன்னறிவிக்கிறது!  பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு பெருத்த எந்த விண்மீனும் வெண்குள்ளியாக மாற முடியாது!  வெண்குள்ளியாக சிதைவடைவதற்கு முன்பு பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு மிகுந்த விண்மீன்கள் தமது மிஞ்சிய பளுவை, முதலில் நோவா வெடிப்பில் [Nova Explosion] இழக்க வேண்டும்!  சந்திரசேகரின் மேற்கூறிய மூன்று முன்னறிவிப்புகளும் மெய்யான விதிகள் என்று விஞ்ஞானிகள் உறுதிப்பாடு செய்துள்ளனர்!  ஏற்கனவே தெரிந்த ஒரு சில வெண்குள்ளிகளின் சரிதையைத் தவிர, இவற்றைத் தொலை நோக்குக் கருவிகள் மூலம் கண்டு ஒருவர் நிரூபிப்பது மிகவும் கடினம்!  வானியல் வல்லுநர்கள் இதுவரை அறிந்த எந்த வெண்குள்ளியும் நிறையில் 1.4 மடங்கு பரிதியின் பளுவை மிஞ்சி யுள்ளதாகக் காணப்பட வில்லை!  விண்மீன்களின் நிறையை இனம் பிரித்திடும் அந்த வரையரைப் பளு எண்ணைச் [1.4] “சந்திரசேகர் வரம்பு” [Chandrasekar Limit] என்று வானியல் விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய சிறப்பு ஒப்பியல் நியதி [Special Theory of Relativity] மற்றும் குவாண்டம் பௌதிகக் கோட்பாடு [Principles of Quantum Physics] ஆகிய இரண்டையும் பயன்படுத்திச் சந்திரசேகர், ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.  “பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு நிறை யுடைய ஒரு வெண்குள்ளி விண்மீன், சிதைவுற்ற வாயுவில் உள்ள எலக்டிரான்களின் உதவியை மட்டும் கொண்டு நிலைப்பாடு கொள்ள முடியாது. அப்படிப் பட்ட ஒரு விண்மீன் தனது வெப்ப அணுக்கரு எரு [Thermonuclear fuel] முழுதையும் எரித்துத் தீர்க்கா விட்டால், அதன் பளு சந்திரசேகர் வரம்பை விடவும் மிகையானது என்று அறிந்து கொள்ள வேண்டும்”.

    தொலைநோக்கியில் காணப் பட்ட மெய்யான வெண்குள்ளி விண்மீன்களின் பளுவைக் கணித்ததில், அவை யாவும் சந்திரசேகர் வரம்புக்குக் [1.4] குறைந்த தாகவே அறியப் பட்டன! அந்த வரம்புக்கு மேற்பட்ட பளுவை உடைய விண்மீன், தனது அணுக்கரு எரிப்புக் காலம் [Nuclear-Burning Lifetime] ஓய்ந்தபின், ஒரு வேளை நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] ஆகலாம்!  அல்லது ஒரு கருங்குழியாக [Black Hole] மாறலாம்!

    சந்திரசேகர் ஆராய்ந்து வெளியிட்ட வானியல் சாதனைகள் விண்மீன்களின் இறுதி ஆயுள் நிலையை எடுத்துக் காட்ட உதவி செய்கின்றன.  மேலும் ஏறக் குறைய எல்லா விண்மீன்களின் பளுக்களும் சந்திரசேகர் வரம்பு நிறைக்குள் அடங்கி விட்டதால், அகில வெளியில் பூதநோவாக்கள் [Supernovas] எதுவும் இல்லாமைக் காட்டுகின்றன. [நோவா என்பது உள்ளணுக்கரு வெடிப்பு [Internal Nuclear Explosion] ஏற்பட்டுப் பேரளவில் சக்தியை மிகைப்படுத்தி வெளியாக்கும், ஒரு விண்மீன்].

    ஈர்ப்பியல் நொறுங்கலில் தோன்றும் கருங்குழிகள்!

    1968 இல் கருங்குழி என்று முதன் முதலில் பெயரிட்டவர், அமெரிக்க விஞ்ஞானி ஆர்ச்சிபால்டு வீலர் [Archibald Wheeler].  ஆயினும் அவருக்கும் முன்பே கருங்குழியைப் பற்றிப் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வேதாந்தி [John Mitchell (1783)], மற்றும் பிரென்ச் கணித வல்லுநர் பியரி ஸைமன் லாபிளாஸ் [Piere Simon de Laplace (1796)] ஆகியோர் இருவரும் கருங்குழியின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி எழுதியுள்ளார்கள்.

    கருங்குழி [Black Hole] என்பது விண்வெளியில் பேரடர்த்தி [Highly Dense] கொண்டு, நியதிப்படி இருப்பதாகக் கற்பனிக்கப் பட்ட ஓர் அண்டம்!  அகில வெளியில் ஈர்ப்பு விசைப் பேராற்றலுடன் உட்புறம் இழுத்துக் கொண்டிருக்கும் ஓர் குழிப் பகுதி.  அப்பகுதியில் எதுவும், ஏன் ஒளிக்கதிர் வீச்சு, மின் காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic Radiation] கூட அதன் அருகே நெருங்க முடியாது!  அதன் அருகே புகும் ஒளிக்கதிர்கள் நேராகச் செல்ல முடியாமல் வளைக்கப் படும்; அல்லது ஈர்ப்பு மையத்துக் குள்ளே கவர்ந்து இழுக்கப் படும்!  ஆகவே கருங்குழியின் பக்கம் ஒளி செல்ல முடியாததால், அதன் இருப்பிடத்தைத் தொலை நோக்கி மூலம் காண்பது அரிது! கருங்குழியிலிருந்து எழும் எக்ஸ்ரே கதிர்களை [X-Rays], பூமியில் உள்ள வானலை நோக்கிகள் [Radio Telescopes] நுகர்ந்து கண்டு பிடிக்க முடியும்.  பளு பெருத்த ஒரு விண்மீன் தனது எரிபொருள் யாவும் தீர்ந்த பின், அதன் நிறையால் சிதைந்து, ஈர்ப்பாற்றல் [Gravitation] மிகுந்து அதன் உருவம் குறுகிக் கருங்குழி உண்டாகிறது!  அதன் வடிவம் ஒரு வளைவான கோள விளிம்பில் [Spherical Boundary] சூழப் பட்டுள்ளது.  அந்தக் கோள விளிம்பின் ஊடே ஒளி நுழையலாம்.  ஆனால் தப்ப முடியாது!  ஆதலால் அது முழுக்க முழுக்கக் கருமை அண்டமாக இருக்கிறது.

    ஈர்ப்பியல் நொறுங்கல் [Gravitation Collapse] நிகழ்ச்சி ஆக்கவும் செய்யும்!  அன்றி அழிக்கவும் செய்யும்!  ஒரு விண்வெளி அண்டத்தில் அல்லது விண்மீன் கோளத்தில் ஈர்ப்பாற்றல் விளைவிக்கும் உள்நோக்கிய சிதைவை ஈர்ப்பியல் நொறுங்கல் என்று வானியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகிறது.  அண்டவெளிக் கோள்களும், விண்மீன்களும் ஈர்ப்பியல் நொறுங்கல் நிகழ்ச்சியால் உருவாக்கப் படலாம்;  அல்லது அவை முழுவதும் அழிக்கப் படலாம்.

    சிறு விண்மீன்களில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவுகள்

    சில சிறு விண்மீன்களில் இந்த ஈர்ப்பியல் நொறுங்கல் மெதுவாக நிகழ்கிறது!  சில காலத்திற்குப் பிறகு நின்று விடுகிறது!  வெப்பம் படிப்படியாகக் குறைந்து, விண்மீன் வெளிச்சம் மங்கிக் கொண்டே போகிறது!  வானியல் நோக்காளர்கள் அந்த மங்கிய விண்மீனையும் தொலைநோக்கி மூலம் காணலாம்!  அவைதான் வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுகின்றன.  நமது சூரியனும் உதாரணமாக பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு வெண்குள்ளியாகத்தான் தனது வாழ்வை முடித்துக் கொள்ளப் போகிறது!

    சில சமயங்களில் இறுதி நொறுங்கல் [Final Collapse] விண்மீனில் ஹைடிரஜன், ஹீலியம் ஆகியவற்றை விடக் கனமான மூலகங்களில் [Heavier Elements] திடீரென அணுக்கரு இயக்கங்களைத் தூண்டி விடலாம்! பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே பெருநோவா வாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விட பேரொளி வீசக் காரண மாகலாம்!  ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது!  அம்முகில் பயணம் செய்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும்!  எஞ்சிய நடுக்கரு பேரளவுத் திணிவில் [Extremely Dense] இறுகி வெப்பமும், வெளிச்சமும் அளிக்க எரிப்பண்டம் இல்லாது, முடமான நியூட்ரான் விண்மீனாய் [Neutron Star] மாறுகிறது!

    நியூட்ரான் விண்மீன் முதல் நூறாயிரம் ஆண்டுகள் வானலைக் கதிர்க் கற்றைகளை [Beams of Radio Waves] வெளியாக்கி, விண்மீன் சுற்றும் போது கதிர்கள் பூமியில் உள்ள வானலைத் தொலைநோக்கியில் துடிப்புகளை [Pulses] உண்டாக்குகின்றன!  ஓர் இளைய நியூட்ரான் விண்மீன் துடிப்பி [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது.  துடிப்பியின் குறுக்களவு சுமார் 9 மைல்!  ஆயினும் அதன் பளு பிரம்மாண்டமான நமது பரிதியின் நிறைக்கு ஒத்ததாகும்!

    பெரு விண்மீனில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவு! கருங்குழிகள்!

    பளு பேரளவில் மிகுந்த ஒரு விண்மீன் சிதையும் போது அழுத்தமோ, அணுக்கரு வெடிப்போ இறுதி நொறுங்கலை நிறுத்துவ தில்லை!  அந்த விண்மீனின் ஆரம் [Radius] சிறுக்கும் போது, அதன் விளிம்பின் வளைவில் ஈர்ப்பு விசைப் பெருக்கம் அடைகிறது!  முடிவில் ஆரம் மிகச் சிறியதாகி, ஈர்ப்பு விசை பிரம்மாண்ட மாகி, விளிம்பின் வளைவு உள்நோக்கி இழுக்கப் பட்டு கருங்குழி [Black Hole]  உண்டாகிறது!  அப்போது கருங்குழியின் அருகே ஒளிக்கதிர் சென்றால் அது வளைக்கப் பட்டு, உள்நோக்கி இழுக்கப் பட்டு விழுங்கப் படுகிறது!

    ஒளிக்கதிர் யாவும் விழுங்கப் படுவதால் கருங்குழியைத் தொலை நோக்கியில் காண முடியாது!  கருங்குழி பிரபஞ்சத்தில் இன்னும் ஓர் மர்ம அண்டமாய், மாய வடிவத்தில் இருக்கிறது.  நமது ஒளிமய வானிலும் [Galaxy] பால்மய வீதியிலும் [Milky Way], எண்ணற்ற கருங்குழிகள் இருக்கலாம்!  ஆனால் இதுவரை யாரும் அவற்றின் இருக்கையைக் கண்டு பிடித்து உறுதிப் படுத்தியதில்லை!  கருங்குழியின் அளவு அதன் உட்பளுவைப் பொறுத்து நேர் விகிதத்தில் மாறுகிறது.  நமது பரிதியின் பளுவைக் கொண்டுள்ள ஒரு கருங்குழியின் ஆரம் சுமார் 1 மைல் [1.5 km] இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது!  ஆனால் மற்ற ஒளிமய வானில் [Other Galaxies] கருங்குழிகளை விஞ்ஞானிகள் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது!

    பிரபஞ்சத்தில் வெண்குள்ளி இறுதியில் கருங்குள்ளி ஆகிறது!

    செந்நிறப் பூத [Red Giant] நிலையிலிருந்து விண்மீன் முடிவான வடிவுக்குத் தளர்வது ஒரு நேரடிப் பாதை!  குன்றிய பளுவுடைய விண்மீன்கள் பலவற்றில், பரந்த வெளிப்புற அரண் அண்டவெளியில் விரிந்து கொண்டே போக, அவற்றின் நடுக்கரு மட்டும் ஒளித்திறம் [Luminosity] வற்றி வெண்குள்ளியாய் தங்கி விடுகிறது.  பல மடங்கு பரிதி நிறை கொண்டுள்ள விண்மீன்கள் பெருநோவா வாக [Supernova] வெடித்து விடும்.  அவற்றிலும் சந்திரசேகர் வரம்புக்கு [1.4 மடங்கு பரிதியின் பளு] உட்பட்ட நடுக்கரு மிச்ச அண்டமும் வெண்குள்ளி யாக மாறும்.  அவ்வாறு உண்டான வெண்குள்ளியில் தாய்மூலக அணுக்களிலிருந்து [Parent Atoms] எலக்டிரான் யாவும் பிடுங்கப் பட்டு, அதன் பிண்டம் [Matter] அனைத்தும் சிதைவான வாயுவாகத் [Degenerate Gas] திரிவடைகின்றது!  அந்த விபரீத வாய்க்கள் வெப்பக் கடத்தி யாகி, பொதுவான வாயு நியதிகளைப் [Gas Laws] பின்பற்றுவதில்லை!  அவ்வாயுக்கள் பேரளவு நிலையில் அழுத்தம் அடையலாம்!  அவற்றைப் போன்ற வெண்குள்ளிகள் சக்தி அளிக்கும் சுரப்பிகள் எவையும் இல்லாமல், நிரந்தரமாய்க் குளிர்ந்து, அடுத்து மஞ்சல்குள்ளியாகி [Yellow Dwarf], பிறகு செங்குள்ளியாகி [Red Dwarf], அப்புறம் பழுப்புக்குள்ளியாகி [Brown Dwarf] இறுதியில் முடிவான கருங்குள்ளியாக [Black Dwarf] கண்ணுக்குத் தெரியாமல் இருந்தும் இல்லாத உருவெடுக்கிறது!

    சந்திரசேகர் எழுதிய வானியல் விஞ்ஞான நூல்கள்

    1952 முதல் 1971 வரை வானியல் பௌதிக வெளியீடு [Astrophysics Journal] விஞ்ஞானப் பதிவின் ஆசிரிய அதிபராகப் [Managing Editor] பணி யாற்றினார்.  பிறகு அந்த வெளியீடே அமெரிக்க வானியல் பேரவையின் [American Astronomical Society] தேசீய இதழாய் ஆனது.  1953 இல் ஆண்டு ராஜீய வானியல் பேரவை [Royal Astronomical Society] சந்திரசேகருக்குத் தங்கப் பதக்கம் அளித்தது.  1955 ஆம் ஆண்டு தேசீய விஞ்ஞானப் பேரவைக்குத் [National Academy of Science] தேர்ந்தெடுக்கப் பட்டார்.  சந்திரசேகர் பத்து நூல்களை எழுதியுள்ளார்.

    விண்மீன் சூழகத்தில் கதிர்வீச்சால் நிகழும் சக்தி கடத்தல் [Energy Transfer By Radiation in Stellar Atmospheres],  பரிதியின் மேல்தளத்தில் வெப்பச் சுற்றோட்டம் [Convection in Solar Surface],  விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு [An Introduction to the Study of Stellar Structure (1939)], விண்மீன் கொந்தளிப்பின் கோட்பாடுகள் [Priciples of Stellar Dynamics (1942)], கதிர்வீச்சுக் கடத்தல் [Radiative Transfer (1950)], திரவ இயக்க & திரவக் காந்தவியல் நிலைப்பாடு [Hydrodynamic & Hydromagnetic Stability (1961)], கருங்குழிகளின் கணித நியதி [Mathematical Theory of Black Holes (1983)].  மெய்ப்பாடும் எழிலும் [Truth & Beauty], விஞ்ஞானத்தில் கலைத்துமும் வேட்கையும் [Aesthetics & Motivation in Science (1987)]. விண்மீன் ஒளியின் இருமட்ட இயக்கம் [The Polarization of Starlight], காந்த தளங்களில் வெப்பச் சுற்றோட்ட வாயுக்கள் [Convection of Fluids in Magnetic Fields].

    1999 ஆம் ஆண்டு ஏவப்பட்ட மனிதரற்ற விஞ்ஞானத் துணைக்கோள் [Premier Unmanned Scientific Satellite] ஓர் எக்ஸ்ரே நோக்ககத்தைக் [X-Ray Observatory] கொண்டது.  அது ஒரு முற்போக்கான எக்ஸ்ரே வானியல் பௌதிக ஆய்வுச் சாதனம் [Advanced X-Ray Astrophysics Facility].  சந்திரா எக்ஸ்ரே நோக்ககம் என அழைக்கப்படும் அந்த துணைக்கோள், இந்திய அமெரிக்க வானியல் மேதை, சுப்ரமணியன் சந்திரசேகரைக் கௌரவிக்க வைத்த பெயராகும். அத்துணைக்கோள் எக்ஸ்ரேக் கதிர்கள் எழுப்பும் விண்மீன்களின் கூர்மையான ஒளிநிறப் பட்டைகளை எடுத்துக் காட்டும்.  அது பூமியின் சுழல்வீதியில் சுற்ற ஆரம்பித்ததும், ஒரு நண்டு நிபுளாவின் பொறிவீசி விண்மீனையும் [Pulsar in Crab Nebula], காஸ்ஸியோப்பியா பூதநோவாவையும் [Cassiopeia A Supernova] படமெடுத்து அனுப்பியுள்ளது.

    சந்திரசேகர் தனது 84 ஆம் வயதில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 ஆம் தேதி காலமானார்.  இறப்பதற்கு முன் 1995 இல் அவர் எழுதிய இறுதிப் புத்தகம்: “பொது நபருக்கு நியூட்டனின் கோட்பாடு” [Newton “Principia” for the Common Reader].  அவரிடம் படித்த இரண்டு சைனா பௌதிக விஞ்ஞானிகள் [Tsung-Dao Lee, Chen Ning Yang] 1957 இல் துகள் பௌதிகத்திற்கு [Particle Physics] நோபெல் பரிசு பெற்றார்கள்!  இரண்டாம் உலகப் போர் நடந்த போது, அவர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் அணுக்கருத் தொடரியக்கம் முதலில் புரிந்த என்ரிகோ ·பெர்மியோடு [Enrico Fermi] பணி யாற்றினார்!  குலவித்தைக் கல்லாமல் பாகம் படும் என்னும் முதுமொழிக் கேற்ப நோபெல் பரிசு பெற்று உலகப் புகழ் அடைந்த ஸர். சி.வி. ராமனின் வழித்தோன்றலான, டாக்டர் சந்திரசேகர் வானியல் படைப்பிற்கு பௌதிகத்தில் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டதும் போற்ற தகுந்த பெரும் ஆற்றலாகும்!

    *******************************

    2015-11-06 20:51 GMT-05:00 Srinivasan S <indussrini@gmail.com>:

    காண்க இணைப்புகளை

    View the attachments

    சு.சீனிவாசன்
    சென்னை, தமிழ்நாடு
     
    உலவி எண்: 9790163080
    Share
  • அறிந்துகொள்வோம் – 23 (மாகவி மில்டன்)

    -மேகலா இராமமூர்த்தி

    வையம் போற்றும் வரகவி!

    “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; மானிடராய்ப் பிறந்த காலையின் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது” என்றார் தமிழ்மூதாட்டி அவ்வை. ஞானமும் கல்வியும் வாய்த்த மானிடனே சிறந்த படைப்பாளனாய்ப் பரிணமிக்கின்றான். சிறுமை கண்டு பொங்குகின்றான்; கண்மூடிப் பழக்கமெல்லாம மண்மூடிப் போக வேட்கை கொள்கின்றான். தன் வேட்கையை வெளிப்படுத்த அவன் தேர்ந்தெடுக்கும் சாதனமே மொழி.

    மொழியின் வடிவங்கள் பல. அவற்றில் முதன்முதலில் மனிதன் பயன்படுத்தியது பாடல் எனப்படும் கவிதை வடிவமே. ஏனெனில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலைக் கவிதையில்தான் செம்மையாய்ச் செய்யவியலும். கபிலரும் பரணரும் நக்கீரரும் கம்பரும் சேக்கிழாரும் நம் உள்ளத்தைப் பிணித்தது தீஞ்சுவைக் கவிதைகளாலேயே.

    நம் செந்தமிழ்ப் புலவர்களைப்போல் மேற்குலகப் பாவலர்களிலும் தம் கவிஆளுமையால் உலகைக் கட்டியோர் பலராவர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் பெருங் கவிஞர் ஜான் மில்டன். ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் இன்றளவும் வைத்துப் போற்றப்படுபவர் இப்புலவர் பெருமானே. பெருங்காப்பியங்கள், குறுங்காப்பியங்கள், உரைநடை நூல்கள், கடிதங்கள், நாடகங்கள், இரங்கற்பாக்கள் என மொழியின் அனைத்து வடிவங்களையும் தம் ஏட்டில் வடிப்பதில் இணையற்ற வல்லவராய்த் திகழ்ந்தார் இக் கவிஞர்.

    John Milton1608-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள இலண்டன் மாநகரில் ஜான் மில்டன் மூத்தவருக்கும் (senior), சாரா ஜெஃப்ரி அம்மையாருக்கும் மகனாய்த் தோன்றினார் ஜான் மில்டன் (ஆம், தந்தையின் பெயரே இவர் பெயரும்). புதுமைச் சிந்தனைகள் கொண்டவராய் விளங்கிய மில்டனின் தந்தை, கத்தோலிக்கக் கிறித்தவத்தைச் சார்ந்திருந்த தம் தந்தையிடமிருந்து (மில்டனின் பாட்டனாரிடமிருந்து) இளைஞராயிருக்கும்போதே பிரிந்துவந்து புரோட்டாஸ்டாண்டு கிறித்தவத்தைப் பின்பற்றத்தொடங்கினார் (He belonged to extreme Protestantism or Puritanism). பத்திரம் எழுதுபவராய்ப் பணியாற்றிய அவர் பாப்புனைவதிலும் நூல்களைப் படிப்பதிலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். ’சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் பொன்முடியாரின் பொன்மொழிக்கேற்ப மகன் மில்டனைச் சிறந்த புலவனாய்க் காணவேண்டும் எனும் வேணவா கொண்டிருந்தார் அத்தந்தை. ஆயினும், தன்மகன் கவிச்சிங்கமாய்த் திகழ்ந்து உலக மாகவிகளின் வரிசையில் இடம்பிடிக்கப்போகின்றான் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    கல்விமீது காதல்கொண்ட மில்டன் எப்போதும் புத்தகங்கள் படிப்பதையே தன் பொழுதுபோக்காய்க் கொண்டவராம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறித்து கல்லூரியில் (Christ’s College) தன் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் மில்டன். கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் எழுதும் பழக்கம் அவரிடம் அரும்பத் தொடங்கிவிட்டது. கிறித்து பிறந்தநாள் காலைக்கொண்டாட்டம் (Ode on the morning of Christ’s Nativity) எனும் கும்மிப்பாட்டு தன் கல்லூரி நாட்களில் அவர் எழுதியதாகும்.

    ’லிசிடஸ்’ (Lycidas) எனும் இரங்கற்பா (Elegy) மறைந்த தன்னுடைய நண்பர் எட்வர்டு கிங் (Edward King, a college mate of Milton’s in Cambridge) என்பவரின் நினைவாய் மில்டன் எழுதியது. இவ்விரங்கற்பா ஆங்கில இலக்கிய இரங்கற்பாக்களிலேயே தலைசிறந்த ஒன்றாய்க் கருதப்படுகின்றது. முல்லை நிலத்தை வனப்புடன் வருணிக்கும் அர்கேடிஸ் (Arcades)  எனும் கவிதையொன்றையும் எழிலுறத் தீட்டியுள்ளார் மில்டன்.

    சமய நம்பிக்கைகளில் சீர்திருத்தம் வேண்டும் என விரும்பிய மில்டன், தன் தந்தையைப் போலவே புரோட்டாஸ்டண்ட் கிறித்தவத்தைப் பின்பற்றினார். சமய நூல்களின்பால் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றின் காரணமாய், விவிலிய நூலின் அருட்பகுதிகள் சிலவற்றை மிக அழகான கவிதைகளாய் வடித்திருக்கின்றார் அவர்.

    ஆங்கிலக் கவிஞர்களிலேயே அதிகம் கற்றவராய்க் கூறப்படும் மில்டன் (Man of letters), ஆங்கிலம் மட்டுமல்லாது, கிரேக்கம், இலத்தீன், இத்தாலியம், எபிரேயம், பிரெஞ்சு, இசுபானியம் எனப் பலமொழிகளில் நல்ல தேர்ச்சியும் திறனும் பெற்றிருந்தார். இலத்தீனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு (நூல்களின் வாயிலாய்ச்) சொற்போர் புரியும் அளவிற்கு அதில் புலமை வல்லாராய் வாழ்ந்திருக்கின்றார் மில்டன்.

    தன் அறிவை விரிவுசெய்ய விரும்பிய அப்புலவர் பெருந்தகை, 1630-களின் பிற்பகுதியில், ஐரோப்பாவில் கலை அறிவியல் ஆகியவற்றின் தாயகமாக விளங்கிய கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போதுதான் புகழ்பெற்ற வானியல் அறிஞரான கலிலியோவை அவர் சந்தித்தார். ஆயினும், தன் சுற்றுப்பயணத்தை மேலும் நீட்டிக்க முடியாதபடி, இங்கிலாந்தில் புரட்சி தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படுவதை நாளிதழ்கள் வாயிலாய் அறிந்த மில்டன், உடனடியாய் இங்கிலாந்திற்குப் புறப்பட்டார்.

    இதுகுறித்துக் குறிப்பிட்ட மில்டன், “என் சகமக்கள் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் என் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக மகிழ்ச்சியோடு ஊர்சுற்றிக்கொண்டிருப்பது இழிவான செயல் என்று எனக்குத் தோன்றியதால் உடனடியாகத் தாய்நாட்டிற்குத் திரும்பினேன்.” என்கிறார்.

    1640-இல் இங்கிலாந்தில் புரட்சி வெடித்தபோது மில்டனின் வயது 32. அவ்வேளையில், புரட்சியின் காரணமாக இங்கிலாந்தில் (முதலாம் சார்லஸ்) மன்னனின் ஆட்சி முடிவுற்று, நாடாளுமன்றத்தினரின் குடியாட்சி கால்கொள்ளத் தொடங்கிற்று. குடியாட்சியின் ஆதரவாளரான மில்டன், அதற்குச் சார்பாய்ப் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அவருடைய நண்பரும், மன்னனுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் வெற்றிவாகை சூடியவருமான ஆலிவர் கிராம்வெல் (Oliver Cromwell) அப்போது ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தார். அவருக்குத் துணையாக மில்டனும் முழுநேர அரசியல் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். 1649-இல் அயல்மொழித்துறை செயலாளர் பொறுப்பு மில்டனுக்கு வழங்கப்பட்டது. வெளியுறவுகளைப் பேணுதற்கான கடிதப் போக்குவரத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புமிக்க அப்பணியில், மில்டன் தன் பன்மொழிப் புலமையை நன்கு புலப்படுத்தினார்.

    ஆனால், இப்பணியில் இருக்கும்போதே அவருடைய கண்கள் அவருக்குத் தொல்லைதரத் தொடங்கின. சிறிது சிறிதாக கண்பார்வை மங்கத் தொடங்கியது. மில்டனின் கண்களைப் பரிசோதித்த மருத்துவர், தொடர்ந்து அவர் கண்களுக்கு அதிகவேலை கொடுத்துவருவாராயின், கண்பார்வை முற்றிலும் பறிபோகக்கூடும் என்று எச்சரித்திருந்தார். அதனைப் பொருட்படுத்தாத மில்டன், இரவு பகலாய்க் கண்களுக்குக்குக் கடுமையான வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார். அதன் விளைவு, வருந்தத்தக்க வகையில் ஒருநாள் தன் கண்ணொளியை முற்றிலும் இழந்தார்.

    கண்ணொளி இழந்தும் அகத்தின் கருத்தொளி அவருக்குக் குன்றவில்லை; வாசிப்பையே தன் சுவாசிப்பாய் எண்ணிய அவர், தம்மால் படிக்கவியலாமல் போனபோது, தம்முடைய புதல்வியரையும் உடனிருந்த உதவியாளரையும் நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்வாராம்.

    கண்ணிழந்த பின்னர் அவர் எழுதியதுதான், அவருடைய படைப்புக்களின் உச்சமாய் (Masterpiece) மெச்சப்படும் ’துறக்க வீழ்ச்சி’ (Paradise Lost) எனும் கவிதைக் காவியம். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மானுடனின் வீழ்ச்சிக் கதையே இக்காவியத்தின் கதையாகும். இறைவன் இயற்றிய துறக்கம் எனும் பொன்னுலகில் முதல்மனிதன் ஆதாமும், முதல்மாது ஏவாளும் வாழ்ந்ததும், அவர்கள் இறைவனின் பகைஞனாகிய சாத்தானின் உரைகேட்டுக் கருத்தழிந்து அறிவுமரத்தின் கனியை உண்டதும், அதன்விளைவாய் உலகில் தீவினை, நோய், முதுமை, மரணம் முதலியவை ஏற்பட்டதும் இதில் பேசப்படும் செய்திகளாகும். ”மனிதனின் முதற்பிறழ்வையும்…” (Of Mans first Disobedience…) என்று முதலடியிலேயே கதையின் கருப்பொருளைச் சொல்லித் தொடங்கும் ’துறக்க வீழ்ச்சி’, மில்டனின் செம்மாந்த கவியாற்றலுக்குக் கட்டியம் கூறுகின்றது.

    ஆழ்ந்த அறிவோடும் கருத்துச் செறிவோடும் மில்டனால் படைக்கப்பட்ட இக்கவிதைக் காவியம், எதிர்பார்த்த வரவேற்பை அன்று இங்கிலாந்து மக்களிடம் பெறவில்லை. கரணியம், அஃது இறைவனின் எதிரியான சாத்தானிடம் மானுடம் வீழ்ந்துபட்ட வரலாற்றை விரிவாய்ப் பேசியதே. அதில், இறையினும் விஞ்சிய திறலுடையோனாய்ச் சாத்தானைப் படைத்துவிட்டார் மில்டன் என்றெண்ணிய (பழமைவாதிகளான) கத்தோலிக்கக் கிறித்தவர்கள், இக்காவியத்தை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தனர்.

    அம்மட்டோ? ’துறக்க வீழ்ச்சியை’ ஏனையோரிடம் சென்றுசேரவொட்டாமல் வீழ்த்திடமுனைந்த அம்மக்கள், அதனைத் அங்கியக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்தனர் (தீயிட்டுக் கொளுத்தினர்). சாத்தான், இறைவனை வெல்வதுபோல் கதை அமைத்திருப்பதை வைத்து, ”மில்டன் ஓர் நாத்திகவாதி, இறைநம்பிக்கையற்றவர்” என்றெல்லாம் அவரைத் தூற்றினர். பின்னர், (தம் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க) மில்டன், ’துறக்க மீட்சி’ (Paradise Regained) எனும் நூல் எழுதியவுடன் ”ஆகா! மனிதர் திருந்திவிட்டார்; நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு மாறிவிட்டார்!” என்று பேசத்தொடங்கியதும் இவர்களே!

    உண்மையில், மில்டன் நாத்திகரும் அல்லர்; மூடநம்பிக்கைகளைப் பற்றியொழுகும் ஆத்திகரும் அல்லர். அவர் இறைவனை ஏற்றுக்கொண்டார். ஆனால் இறைவனுக்கும் மனிதர்க்குமிடையே இடைத்தரகராய் நின்று அநியாயங்கள் செய்துவந்த (திருச்சபை) குருமார்களைச் சாடினார். ’பராசக்தி’ (படத்தின்) வசனம்போல், அவர் பூசாரிகளைத் (தம் எழுத்துக்களால்) தாக்கினார்; பூசாரிகள் கூடாதென்பதற்காக அல்ல; பூசாரிகள் கயவர்களாகவும், காவலனுக்குக் (இங்கிலாந்து மன்னனுக்கு) கால்பிடிக்கும் ஏவலர்களாகவும் இருக்கக்கூடாது என்பதற்காக!

    மில்டனின் படைப்புக்களில் இறுதியானதாய்க் கருதப்படுவது, ’மாமல்லன் சாம்சன்’ (Samson Agonistes  – A tragic closet drama) எனும் நாடக நூலாகும். இங்கிலாந்துப் புரட்சியும் மில்டனின் தனிவாழ்வும் கைகோத்துச்செல்லும் வகையில் இந்நூலின் கதையோட்டம் அமைந்திருக்கின்றது என்பது ஆய்வாளர்கள் கருத்து.

    ஆங்கிலக் கவிதைகளில் அதிக அளவில் உவமைகளைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் மில்டனே. ”எவ்வித முயற்சியுமின்றிக் கவிஞனின் உள்ளத்தில் தானாய் ஊற்றெடுப்பது கவிதை; வலிந்து வரவழைப்பது கட்டுரை” என்று மொழியின் இருவடிவங்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டை வரையறுக்கின்றார் அவர்.

    தனிவாழ்க்கை, பொதுவாழ்க்கை இரண்டுமே போர்க்களங்களாய் அமைந்திருந்தன மில்டனுக்கு. அதற்காக அவர் வாழ்வை வெறுத்து ஓடினாரில்லை. இறவாத புகழுடைய புதுநூல்களைப் பூவுலகிற்குப் படைத்தளிக்கத் தவறினாரில்லை. ஷேக்ஸ்பியரைத் தனக்கு ஆதர்சமாகக் கொண்டிருந்தார் மில்டன் என்பர். அதுபோல், மில்டனை வழிகாட்டியாய்க் கொண்டு சிறந்தோர் பலருளர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர், இயற்கைக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth), வில்லியம் பிளேக் (William Blake), ஜான் கீட்ஸ் (john Keats) போன்றோர்.

    இத்தருணத்தில், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், தெய்வமாகவி மில்டனை, ’மீண்டும் இங்கிலாந்தில் தோன்றுக!’ என்று வரவேற்று எழுதிய கவிதையொன்று நினைவுகூரத்தக்கது.

      London, 1802 – William Wordsworth 

      Milton! thou shouldst be living at this hour:
      England hath need of thee: she is a fen
      Of stagnant waters: altar, sword, and pen,
      Fireside, the heroic wealth of hall and bower,
      Have forfeited their ancient English dower
      Of inward happiness. We are selfish men;
      Oh! Raise us up, return to us again;
      And give us manners, virtue, freedom, power.
      Thy soul was like a Star, and dwelt apart:
      Thou hadst a voice whose sound was like the sea:
      Pure as the naked heavens, majestic, free,
      So didst thou travel on life’s common way
      In cheerful godliness; and yet thy heart
      The lowliest duties on herself did lay.

    தமிழில்…

    மில்டன்! நீ இப்போது எம்மிடை இருந்திட விழைகின்றோம்
    இங்கிலாந்துஅன்னை உன்னை அழைக்கின்றாள்; தேங்கிய நீராய்
    எம்வாழ்க்கை இங்கு கெட்டழிந்தது; சமய வழக்கம்,
    இணையில் வீரம், கல்வி, இல்லறம் இவற்றொடு
    மாண்புடை ஆங்கில மக்களின் நல்அமைதி
    மறைந்திடச் சுயநலச் சுழலில் சிக்கினோம் யாமே
    மீண்டு(ம்) வருவாய் எமக்குப் புத்துயிர் தருவாய்
    வேண்டுகின்றோம் நல்லறமும் ஆண்மையும்
    துருவமீனாய்த் தோன்றும் நின்வாழ்க்கை எமக்கு!
    தூய வானெனப் பொறையும் பெருமையும் பெற்றாய்!
    நீள்கடல் முழக்கமாய் முழங்கிடும் உந்தன் மொழிகள்
    மனித வாழ்விடை மனிதனாய் வாழ்ந்த தேவன்நீ
    திருவும் மேன்மையும் சிறப்புறக் கொண்டனை ஆயினும்
    உருவில் எமக்கோ எளியனாய் வந்து தோன்றினை!

    கவிஞர்கள் போற்றும் கவிஞராய், ஆங்கில இலக்கிய வரலாற்றின் மைல் கல்லாய்க் காலத்தை வென்று நிற்கின்றார் மில்டன். அன்று தீயில் கருகிய அவருடைய ’துறக்க வீழ்ச்சி’ இன்றோ பல்லக்கில் பவனிவருகின்றது அவனிபோற்ற. பார்போற்றும் பனுவல்கள் பலபடைத்த காப்பியக் கவிஞர் மில்டன் வையத்தில் என்றும் வரகவியாய் வாழ்வார்.

     ***  

    கட்டுரைக்கு உதவியவை:

    http://www.poetryfoundation.org/poem/174797
    https://en.wikipedia.org/wiki/John_Milton
    http://www.britannica.com/biography/John-Milton
    http://www.pratilipi.com/read?id=6490562639167488

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav

    “வண்ணம் கருத்தோன் , வசன திரைக்கதையாய்
    கிண்ணம்போல் கையேந்தி கீதையைத் ,-திண்ணமாய்,
    சொல்லிக் கொடுத்திட, சோர்ந்தவனை உள்ளங்கை,
    நெல்லிக் கனியாக்கி னன்”….கிரேசி மோகன்….

    Share
  • வெண்பனி மனிதன் (கொரிய மொழிபெயர்ப்பு கவிதை)

    பவள சங்கரி

    snow
    சதாசர்வமும் பஞ்சுப்பொதியாய்
    பனித்திவலைகள் பெறுவதினிது.
    செல்லக்குட்டி நாய்போல்,
    மீண்டும் நானொரு சிசுவாய் ஆவதினிது.
    கூதாளிக்கால நெட்டை மரங்களினூடே
    நோக்கமேதுமின்றி கடப்பதுவே
    அற்புதமாம்.
    அஃதேபோல் வெண்மை பாதச்சுவடுகளாய்
    தனித்திருப்பதும் அற்புதமே.

    எம்மை வாழ்த்தும்பொருட்டு
    கூதாளியின் விளிம்பில் நிற்கும்
    விருப்பமான ஒருவருடனே – எல்லோரும் விரும்பும் அந்த ஒருவருடனே-
    இருப்பதும் இனிமையே.
    ஒருவரையொருவர் மெலிந்த முதுகுகளை தட்டிக்கொடுத்தவாறு
    உளமார்ந்து நகைப்பதும்
    உன்னதமே.
    இப்பஞ்சுப்பொதி பனித்திவலைகள்போல்
    உள்ளார்ந்து நகைத்தலும்
    உன்னதம்.

    அற்புதம் –
    வேதனையின் உச்சத்தில் நொந்ததோர்முறை
    சோகத்தின் உச்சத்தில் நொந்ததோர்முறை
    ஏழ்மையின் உச்சத்தில் நொந்ததோர்முறை
    அதுவும்கூட அற்புதமே.

    இவையனைத்தையும் வெண்மையாக்கும்
    முடிவில்லாமல் முகிழும் பஞ்சுப்பொதி பனித்திவலைகள்
    அற்புதமே.
    அதீத
    அறிவீனம்தான்,

    ஆயினுமோர் வெண்பனி மனிதனாவதில்தான் எத்துனை ஆனந்தம்!

     

    Cottony Snowflakes by Choi Don-sun

    It would be wonderful
    to have cottony snowflakes all the time.
    Puppy-like,
    I would like to be a child again.
    It would be wonderful
    to leave without any purpose,
    passing through the long winter trees.
    It would be wonderful
    to become white footsteps,
    alone, like that.

    It would be wonderful
    to have a loved one—the one everybody loves–
    standing at the far end of the winter,
    to greet me.
    It would be wonderful
    to laugh hearty laughs,
    patting one another’s lean backs.
    It would be wonderful
    to laugh hearty laughs
    like these cottony snowflakes.

    Wonderful–
    it would be wonderful.
    I once felt so painful,
    I once felt so sorrowful,
    I once felt so poor.

    It would be wonderful
    to have the cottony snowflakes, pouring down endlessly,
    erasing all of this into white.
    So
    foolish,

    but how wonderful it would be to become a white snowman.

    함박눈—최돈선

    아무 때나
    함박눈이 왔음 좋겠다.
    그래서 강아지처럼
    철부지가 되었음 좋겠다.
    아무 뜻 없이
    긴 겨울나무 사이로 떠났으면 좋겠다.
    그렇게 홀로
    하얀 발자국이었으면 좋겠다.

    사랑하는 사람
    모두 사랑하는 사람
    저 먼 겨울 끝에 서서
    나를 반겨주었으면 좋겠다.
    서로 서로 야윈 등 두드리며
    함빡 웃어봤음 좋겠다.
    펑펑 함박눈처럼 웃어봤음 좋겠다.

    그래
    그랬으면 좋겠다.
    너무 아파
    너무 슬퍼
    너무 가난해

    이 모든 것
    함박눈 펑펑 내려
    하얗게 하얗게 지워졌음 좋겠다.
    천치같이
    그런,

    하얀 눈사람이었으면 좋겠다.

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 22

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    மனிதனின் வாழ்க்கை ஏற்றம், இறக்கம், வலிமை, மென்மை, வளம், வறுமை என்ற நிலைகளை இயல்பாகப் பெற்று விளங்கும். இவற்றைத் திருவள்ளுவர் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, முதலிய நிலைகளை விளக்கும் ” நிலையாமை” என்ற அதிகாரத்தால் விளக்குகிறார். இவ்வுலகில் பிறப்புகளும் இறப்புகளும் ஒரு சமன்பாட்டில்தான் நிகழ்கிறது. சான்றோர் அழிவைக் கண்டும் வருந்தார்; ஆக்கத்தைக் கண்டும் மகிழார்!

    இந்த இயற்கைச் சமநிலையை அறிவியலும் உணரும். ஆன்மிகமும் அறியும். இப்போது இவ்வாரத்தின் திருக்குறளைப் பார்ப்போம். நிலையாமை அதிகாரத்தில் உள்ள,

    “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்திவ் வுலகு.”(336)

    என்ற குறள் மூலம் நேற்றிருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இவ்வுலகு பெற்றுள்ளது என்று வள்ளுவர் கூறுகிறார். இக் குறட்பாவின் பொருள் நமக்குப் புதிய ஐயத்தை உண்டாக்குகிறது. நேற்றிருந்தவன் இன்றில்லை என்பது இவ்வுலகின் பெருமைக்கு உரிய நிகழ்ச்சியா? இன்று ஒருவன் இல்லை என்பதை எவ்வாறு உலகின் பெருமையாகக் கொள்ள முடியும்? தீயவன் ஒருவன் மரணமடைந்தால், உலகையே அழிக்கும் கொடுமைகளைச் செய்தவன் அழிந்தான் என்று வேண்டுமானால் நாம் மகிழலாம். ஆனால் பொதுவாக அனைவருக்கும் நிகழும் மரணத்தையே வள்ளுவர் கூறுகிறார். இத்திருக்குறளுக்குப் பரிமேலழகர், “உலகில் இறப்பு என்பது மிகுதியாக நிகழ்வதாகத் தோன்றுகிறது. ஆதலால், அளவு கடந்த மரணம் என்பதே உலகில் நிகழ்கிறது” என்று உரை கூறுகிறார். அளவால் பெரியது பெருமை எனப்பட்டது என்று விளக்கம் தருகிறார்.

    ஓருயிரின் அழிவில் மற்றோருயிர் உருவாகும் என்ற இயற்கைச் சமநிலையைப் புறநானூறு, “யாதும் ஊரே” என்ற பாடலில்,

    “வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
    இன்னா தென்றலும் இலமே”

    என்ற பகுதியில் கூறுகிறது. அதுவே இயற்கை விதி என்பதை அப்பாடலின்,

    “ஆருயிர்
    முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியின் தெரிந்தனம்”

    என்ற பகுதி தெளிவிக்கின்றது. இந்த இயற்கை விதியைப் பெருமை என்று கூறாமல் எல்லாரும் இயற்கை என்றே கூறுகின்றனர். ஆகவே, பெருமை என்பதன் புதிய பொருளை நாம் இங்கே காணுதல் நல்லது.

    உலகிற்குப் பெருமை தரும் பல நிகழ்ச்சிகள் உண்டு. ஒருவன் இறப்பதனாலும், அவன் பிறப்பதனாலும் உலகிற்குப் பெருமை உண்டாகுமா? சற்றே சிந்திப்போம். ஒருவன் வாழுங்காலத்திலேயே மரணமடைந்து பிறத்தல் நிகழுமா? ஆம்; ஒருவன் தனது வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வினால் இறந்து, பிறக்கிறான்! அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவம் நிகழ்ந்தால் மறுநாளே, அவன் மாறி விடுகிறான். இதற்கு உதாரணங்கள் உள்ளன. ஆல்ஃபிரட் நோபல் அணு ஆயுதங்களின் உற்பத்தியால் பொருள் ஈட்டியவர்; அதன் தீமையை உணர்ந்த மறுநாளே அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் அறக்கட்டளை ஆக்கி, உலக சமாதானம், நல்லிணக்கம், ஆக்கபூர்வமான அறிவியல், கல்வி, கலை, இலக்கியங்களுக்கு ஆதரவு காட்டி, நோபல் பரிசுகளை உருவாக்கினார். அதற்கு முதல்நாள் வரை வேறுவிதமான மரண வியாபாரியாய் இருந்த அவர் மறுநாளே அன்பைப் பரப்பும் அருளாளர் ஆனார்.

    “வெட்டு, குத்து, கொல்லு!” என்றே விலங்குகளை வேட்டையாடிய அறிவற்ற திண்ணன் என்பவர், சிவபெருமான் பால் தாயன்பு கொண்டு, உடனே மாற்றம் அடைந்து சிவஞானத்தில் சிறந்து, உயர்ந்து கண்ணப்பர் என்ற சிவனடியாராக விளங்கினார். பேரறிஞர் இராஜாஜியின் பேச்சைக் கேட்டு, மதுவிலக்குக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, தம் வீட்டில் இருந்த தென்னந்தோப்பில் வளர்ந்தோங்கி விளங்கிய ஐநூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார். ஈ,வே.ரா! “கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?” என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்த நரேந்திரன், குருதேவர் இராமகிருஷ்ணரால் முழுமையாக மாறி சுவாமி விவேகானந்தர் ஆனார். தென்னாப்பிரிக்க அடிமை களுக்காகப் போராடிய காந்தி அதன் விளைவாக ‘சத்தியாக்கிரகி’ ஆனார்.

    பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்துடன் திருப்பெருந்துறை வந்த திருவாதவூரர், அங்கே குருந்த மரத்தடியில் குருவாக வந்த இறைவனைக் கண்ட மறுநாள் முழுமையான மாற்றம் அடைந்தார்; அவர்

    “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேயுன் பொன்னடிகள்கண்டு”இன்று” வீடுற்றேன்.”

    என்று பாடுகிறார். அரண்மனை வாழ்வு, அரசபோகம், அமைச்சுப்பதவி, கோடிக்கணக்கில் இருந்த பொன், அனைத்தையும் துறந்து , சிவனடியாராக மாதரம் பெற்று, “மாணிக்க வாசகர் ” ஆனார். அவரே, “நேற்று அப்படி இருந்தேன்; இன்று விடுதலை பெற்றேன்”, என்றார். ஒரு முதியவர், ஒரு நோயாளி, ஒரு பிணம் இவற்றைப் பார்த்த சித்தார்த்தர், மறுநாளில், “புத்தர்” ஆனார்!

    இத்தகைய நிகழ்ச்சிகள் உலகின் பெருமைக்குக் காரணங்கள் ஆயின! ஆகவே, நெருநல் அதாவது நேற்று, உளன் ஒருவன், அதாவது வேறோருவனாக இருந்தவன், இன்று இல்லை, அதாவது இன்று அவனாக இல்லை மாறிவிட்டான் என்று இந்தத் திருக்குறள் அடிக்குப் புதிய பொருள் கண்டால், இவ்வுலகம் பெருமை உடையதாக விளங்கிய காரணத்தையும் கூறி மகிழலாம்! இனி அந்தத் திருக்குறளை மீண்டும் கூறி அதன் புதிய பொருளையும் சிந்தித்து மகிழ்வோம்.

    “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்திவ் வுலகு.” (336)

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு

     

    தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார்
    நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் – இன்னொலிநீர்
    கன்மேல் இலங்கு மலைநாட! மாக்காய்த்துத்
    தன்மேல் குணில்கொள்ளு மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
    நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
    கல் மேல் இலங்கும் மலை நாட!-மாக் காய்த்துத்
    தன்மேல் குணில் கொள்ளுமாறு.

    பொருள் விளக்கம்:
    பழமையான நூல்பல கற்பதால் மேன்மைதரும் துணிவு ஒன்றும் பெறாதவர், நன்மை தரும் வகையில் மாண்பு கொண்ட செல்வம் பெறுவாரெனில்; இனிமையான ஓசையுடன் நீரானது கற்பாறைகள் மேல் பாயும் அருவிகள் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, (அவரது நிலையானது) மாமரம் செழித்து காய்கள் பல கொண்டதால் தன்மேல் கல்லெறி படுவது போன்ற நிலையாக அமைந்துவிடும்.

    பழமொழி சொல்லும் பாடம்: கல்வியறிவு பெறாத ஒருவர் முயன்று செல்வம் பல சேர்த்தாலும், அதனைக் காப்பாற்றும் வழி அறியாததால், பிறர் அவரது செல்வதை ஏமாற்றி பறித்துக் கொள்ளும் நிலையில் தள்ளப்படுவார் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வியறிவற்ற காரணத்தால், தான் பெற்ற செல்வதைத் தேவையுள்ளவர் நன்மை பெரும் வகையில் பயன்படுத்தத் தெரியாத, ஈகையின் மேன்மையை உணராத ஒருவரின் செல்வம், அவருக்கும் பலனின்றி பிறகு தீயார் கொள்ளை கொள்ளும் நிலையை அடையும் என்றும் பொருள் கொள்ளலாம்.

    எனவே பொதுவாகக் கொள்வோமானால், அறிவின்மை காரணமாக செல்வதை எவ்வாறு பாதுகாப்பது என்றோ; அல்லது எவ்வாறு தனக்கும் பிறருக்கும் பயனளிக்கும் வகையில் நன்முறையில் செலவழிப்பது என்றோ அறியாத ஒருவரின் செல்வம், அவருக்குப் பலன் தராமல் தீயவர் கைப்பற்றும் நிலையை அடையும். அறிவில்லாதவர் பெற்ற செல்வமானது, காய்த்த மரம் கல்லடி பட்டு துன்பம் பெறுவது போல அவருக்கும் அவரது பொருளுக்கும் துன்பத்தையே விளைவிக்கும், இக்கருத்தைக் குறள்,

    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட்ட திரு. (குறள்: 408)

    அறிவற்றோர் பெற்ற செல்வம், கற்றறிந்த நல்லவர் ஒருவரை வருத்தும் வறுமையை விடவும் பெரிதும் துன்பம் தருவதாகும் என்று கூறுகிறது.

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி

    05. கேடுநீக்கும் கேசவன்

    (குறும்பா)

    கேசியெனும் தானவனைக் கொன்றேநீர்
    கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ?
    . குழலழகர் கூந்தலதே
    . அழகெல்லாம் ஏந்துவதே
    நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்!… 1

    [தானவன் = அசுரன்]

    சடைமுடியே ராகவனின் தலையினிலே
    பிடரிமயிர் நரசிம்மம் கலையெனவே
    . சிக்கமெலாம் மும்மூர்த்தி
    . சக்தியென இம்மூர்த்தி
    இடையூறு நீக்கும்தாள் தலையிதுவே!… 2

    [சிக்கம் = உச்சி மயிர்]

    கண்ணனுக்கோ வண்ணமயில் கேசந்தான்
    எண்ணமெலாம் மாயவனின் நேசந்தான்
    . காதலிப்பர் கோபியரே
    . ஆதுரத்தில் பாபியரே
    கண்ணன்மேல் நம்நெஞ்சில் பாசந்தான்!… 3

    [ஆதுரம் = பரபரப்பு, வியாதி]

    ககரமெனில் பிரமனவன் பேராமே
    அகரமதோ விட்டுணுவின் பேராமே
    . ஈசனுரு கொண்டவரும்
    . நேசமுடன் ஒன்றுவரே
    பகவனிவர் பரம்பொருளாம் சீராமே!… 4

    தண்ணுலவும் கேசமெனும் கிரணமிதே
    மண்டலத்தில் உள்ளுறையும் அருணமிதே
    . கொண்டிடிவார் அவதாரம்
    . விண்டிடுவார் பவரோகம்
    கொண்டல்வண் ணன்போற்றத் தருணமிதே!… 5

    கேசவனே கேடுகளை நீக்குபவர்
    கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
    . பண்ணுறுமே பூவுறுமே
    . கண்நிறுத்த நாவறுமே
    கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!… 6

    *****

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 28

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்னை மயக்கியவள்
    ___________________

    “நேற்று நாம் ஊழ்வலியின் விளையாட்டுக் கைப் பொம்மையாக இருந்தோம். ஆனால் இன்று ஊழ்வலி தனது விளையாட்டுப் போதைலிருந்து விழிப்புற்று நம்முடன் நடக்கிறது. இப்போது நாமதைப் பின்பற்றுவதில்லை. அதுதான் நம் பின்னால் வருகிறது.”
    கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
    ___________________

    ஓடிப் போன என் காதலி
    ___________________

    நேற்று இந்தத் தனி அறையில்
    வீற்றிருந் தாள்
    என்னிதயம்
    நேசித்த அந்த மாது !
    இந்த வெல்வெட் மெத்தையில் தான்
    ஓய்வெடுத்தது, அவளது
    எழில் மேனி ! இந்தப்
    பளிங்குக் கிண்ணத்தில் தான்
    பருகினாள்
    பழைய ஒயின் மதுவை !
    ___________________

    நேறைய கனவு இது !
    ஏனெனில்
    வெகு தூர இடத்துக்குச்
    சென்று விட்டாள்
    என்னிதயக் காதலி !
    சூனியப் பகுதி அது
    நினைவில்
    மறையும் ஓரிடம் !
    ___________________

    முகம் பார்க்கும் கண்ணாடியில்
    இன்னும் உள்ளது
    அவளது கைரேகை !
    அவள் மூச்சின் நறுமணம்
    என்னாடை மடிப்புக்குள்
    இன்னும் மணக்கும் !
    அவள் இனிய பேச்சின்
    எதிரொலி
    இந்த அறையில் இன்னும்
    கேட்கும் !
    ___________________

    ஆனால் என்னிதயக் காதலி
    போனாள் எனை விட்டு
    வெகு தூர இடத்துக்கு !
    நாடு கடத்தப்பட்ட
    ஒரு பள்ளத் தாக்கு அது !
    நினைவில்
    நிற்காத ஓரிடம் !
    ___________________

    என் படுக்கை அறைச்சுவரில்
    தொங்கிடும் அவள்
    முழு உருவப் படம் !
    முத்து பவளம் பதித்த
    வெள்ளிப் பேழையில் நான்
    வைத்துள்ளேன்
    எனக்கு அவள்
    எழுதிய காதல் கடிதங்கள்
    எல்லாம் !
    அவை யாவும்
    நாளை வரைதான்
    என்னிடம் இருக்கும் !
    அன்று அவற்றைக் காற்று
    அடித்துச் சென்று
    மௌனம் ஆளும் தளத்தில்
    மறக்க வைக்கும் !
    ___________________

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (172)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்!

    ஒருவார இடைவேளையின் பின்னால் உங்களுடன் மடல் மூலம் பேச விழைகிறேன்.

    “என்னப்பா, உன்னைக் கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் பார்க்கவே முடியலையே!“ என்கிறார் ஒருவர்.

    “சும்மா போப்பா, நேரமேயில்லையே! வேலை, வீட்டில அது இது என்னு சும்மா ஒரே பிஸியப்பா” என்கிறார் மற்றவர்.

    இது சமீபத்தில் எமது இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு கோவிலில் நான் செவிமடுத்த சிறிய சம்பாஷணை.

    புலம்பெயர் மக்கள் மத்தியில் கோவில்கள், அதுவும் இந்துக் கோவில்கள் வகிக்கும் பங்கு அதீதமானது. இது எதனால்?

    அவர்கள் ஆன்மீக ஞானம் அதிகமாகக் கொண்டவர்களா? இல்லை, அன்னை நாட்டை விட்டு அதிக தூரம் விலகி இருக்கிறோம் எனும் ஆதங்கமா? இல்லை, ஆலயம் செல்வது என்பது ஒரு இந்துவின் கடமை எனும் சராசரிக் கடமையாக எண்ணுகிறார்களா?

    ஓ! நானும் இந்தப் புலம்பெயர்ந்தவர்கள் பட்டியலில் ஒருவன் தானோ?

    ஆன்மீகம் எனும் சொல்லைத் தொடர்ந்து “ஆத்திகம்” “நாத்திகம்” என்பன அதன் பின்னே வருவது வழக்கம். இறை நம்பிக்கை உள்ளவர்கள், இறை நம்பிக்கை அற்றவர்கள் எனும் பட்டியல் எங்கும் உள்ளது போல, புலம் பெயர்ந்த மக்களிடையேயும் அதே விகிதாசாரத்தில் காணப்படுகிறது என்பதுவே யதார்த்தம்.

    ஏனோ பல சமயங்களில் இறை நம்பிக்கையையும், மூட நம்பிக்கையையும் இணைத்துப் பார்ப்பது பலரிடையே சகஜமாக நிகழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் தான் என்ன? இறை நம்பிக்கை வலுவாக உள்ளவர்கள் தாம் கொண்ட நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக எடுத்துக் கொள்ளும் உதாரணங்கள் மூட நம்பிக்கையின் ஆதாரம் கொண்டவையாக இருப்பதா? அன்றி எம்மிடையே நிலவி வரும் இதிகாச, புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளவற்றை விஞ்ஞானரீதியில் ஆராயத் தலைப்பட்டதால் ஏற்பட்டதொரு நிலைமையா?

    பல கேள்விகள் என் நெஞ்சைத் துருவ ஆரம்பித்தன. இவற்றிற்கு விடை காண விழையும் முன்னால் ஆத்திகம், நாத்திகம் எனும் இந்தத் தராசுத் தட்டுகளில் என் எடை எங்கேயுள்ளது எனும் கேள்வி எழுகிறது. இறை நம்பிக்கை என்பது மதங்களுக்கும் அப்பாற்பட்டது என்பது எனது நிலைப்பாடு. ஆன்மீகம் என்பது விஞ்ஞானம் போன்று அனைத்துக்கும், அனைவர்க்கும் பொதுவான ஞானமேயன்றி அதற்கு மதச்சாயம் பூச விழைவது தவறு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

    எனது வாலிப வயதில் அந்நாளைய நாகரீகம் என்று எண்ணி வாலிப முறுக்கோடு என்னை ஒரு நாத்திகனாகக் காட்டிக் கொள்வதில் பெருமிதம் கொண்டவன் நான். 18 வயதிலேயே தாய்நாட்டின் சூழலை விட்டு வெளியேறியவன். எனக்கு ராஜாவும் நானே மந்திரியும் நானே என்பதுவே சுதந்திரம் என்று சுதந்திரத்தின் வரைவிலக்கணத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட ஒரு வேளையது.

    வாழ்வின் ஒவ்வொரு வளைவுகளும் நான் எதிர்பாராத திருப்பங்களால் என்னை எடுத்துச் சென்றபோது, என்மீது விழுந்த அடிகள் ஒவ்வொன்றும் என்னை வாழ்வில் செப்பனிடத் தொடங்கியதால் எனது உள்ளத்தில் ஏதோ எனக்கு அப்பாற்பட்டது ஒன்றின் முக்கியத்துவம் புரிந்தது. நாம் எங்கே பிறக்கிறோம் என்பதும், யாருக்கு பிள்ளையாகப் பிறக்கிறோம் என்பதும் நாம் வகுத்ததல்ல.

    மதம் என்பது மக்களைப் பிரிக்கும் ஒரு சக்தியாக தன்னலமிக்கவர்களால் உருவகிக்கப்பட்டு விட்டது என்பதே என் கருத்து. நான் ஒரு இந்துவாகப் பிறக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. அதே சமயம் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக வளர்ந்தேன், இன்று இந்துவாக வாழ்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எதுவித தயக்கமுமில்லை. ஏனெனில் “இந்து” என்பதை மதமாகப் பார்த்து அதனை மதவெறிக்கு அத்திவாரமாக்குவோர்களைச் சார்ந்தவனில்லை நான்.

    ஒரு நல்ல “இந்து” ஒரு நல்ல “மனிதன்” என்பதே எனது மதத்தின் வரைவிலக்கணம். நான் எனது மதத்தின் மீது கொண்டுள்ள மதிப்பைப் போலவே அடுத்தவர்களும் அவர்கள் மதத்தை மதிப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வளர்வதே மத நல்லிணக்கத்திற்கு அடையாளம். இந்து மதத்தின் சாரங்களை அறிவதில் எனக்குள்ள ஆர்வம் போன்றே மற்றைய மதங்களின் நல்ல கோட்பாடுகளை அறிந்து கொள்வதிலும் அதனை உள்வாங்கிக் கொள்வதிலும் நான் மிக்க ஈடுபாடு கொண்டவன்.

    “இதிகாசம்”, “புராணம்” என்பன நிஜமானவையோ அன்றி புனையப்பட்டவையோ என்பதை ஆராய்வதை விட, அது எவ்வகையாயினும் அதில் கூறப்பட்டுள்ள நல்ல மனிதராக வாழ்வதற்குரிய கோட்பாடுகளை வகுத்தவர்களை எண்ணி வியப்பதிலேயே எனக்கு ஆர்வம். இன்றைய புலம்பெயர் சூழலில் பல்லினங்கள் சேர்ந்து வாழும் ஒரி பல்லினக் கலாச்சார சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஒன்றே குலம்பொதுவாகப் பலர் கூடியிருக்கும் ஒரு நிகழ்விலே மத சம்பந்தமான கருத்துக்களை முன்வைப்பதே மிகவும் சங்கடமான ஒரு நிலை. எங்கே அது ஓர் தேவையற்ற மத சம்பந்தமான கடுமையான விவாதமாக மாறி விடுமோ எனும் அச்சமே இதற்குக் காரணம். இந்நிலையில் தான் அன்று அந்த இந்துக் கோவிலிலே அவ்விருவர்களுக்கிடையில் நடந்த அந்த சம்பாஷணையை நோக்க விழைகிறேன். கோவிலுக்குச் செல்வது என்பது ஒரு கலாச்சாரக் கட்டாயமாக்கப் பட்டு விட்டதோ? கோவிலுக்குச் செல்லாத அன்றி, செல்ல முடியாத ஒருவன் தன் மனதையே கோவிலாக்கி மனசாட்சியைத் தெய்வமாக்கி வணங்குவதில் தவறேதும் இருக்கிறதா?

    நாம் படிக்கும் நூல்களில் ஆண்டவன் தனக்கு விலையுயர்ந்த காணிக்கைகள் தேவையில்லை, ஒரு மலரைக் கையிலெடுத்து தூய உள்ளத்துடன் தன்னை வணங்கினாலே போதுமானது என்று கூறுவதாக அறிகிறோம். “ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை” என்று கவியரசரின் பாடல் வரிகள் கூறுகின்றன.

    ஒரு ஊரைச் சென்றடைவதற்குப் பல பாதைகள் இருப்பதைப் போல எம்முள் அனைத்தையும் கடந்து உள்ளே இருக்கும் கடவுளைக் காண்பதற்கு வெவ்வேறு பாதைகளே வெவ்வேறு மதங்களாகும். இவற்றிலே ஒன்று மற்றதை விடச் சிறந்தது என்று விரோத மனப்பான்மையை வளர்ப்பவர்கள் சுயநலவாதிகள். காலச்சார அடையாளங்கள், கலாச்சார விழுமியங்களைக் காத்துக் கொள்வதற்கான வழி சுயநலமிக்க குழுநிலைவாதிகளாக மாறுவதில்லை, அனைத்தையும் ஏற்று சகிப்புத்தன்மை கொண்ட பொதுநலவாதிகளாக வாழ்வதே!

    “நான் ஒரு இந்து” என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கான சரியான கோஷம், “ஒன்றே குலம் என்று சொல்லுவோம் , ஒருவனே தேவன் என்று கூறுவோம்” என்பதுவே.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • அவன்,அது,ஆத்மா (37)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 37

    காதலிலே கவிதையுண்டாம்

    அவனுக்கு ஒன்றுவிட்ட அத்தையின் மகளை அவன் விரும்பினான். ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு அவர்கள் கல்லிடைக்குறிச்சிக்கு வருவார்கள். அவனுடைய வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி அவனுக்கு அத்தையின் வீடு இருந்தது. அந்த வருடமும் அவர்கள் வந்திருந்தார்கள். அந்த “மே” மாதத்தில்தான் அவன் P. U .C. பெயிலாகி “டைப்ரைட்டிங்” வகுப்புக்குச் சேர்ந்திருந்தான். அவள் பெயர் சீதாலட்சுமி. சீதா என்று அழைப்பார்கள். அவனது வீட்டிற்கு சீதா வருவாள். அவனுக்கு அக்கா, அம்மா இருவருடனும் அவள் பேசிக்கொண்டிருப்பாள். அவனுடனும் பேசுவாள். அவனுக்கு சீதாவைப் பிடித்திருந்தது. அதை அவளிடமே நேரிடையாகச் சொன்னான். அவள் மெல்லிய புன்னகையைக் காட்டி அவளது வீட்டிற்குள் ஓடிவிட்டாள். அதன் பிறகு அவள் ஊருக்குச் சென்றாலும், அவனுக்குக் கடிதம் எழுதுவாள். அதற்கு அவன் எப்போதாவதுதான் பதில் எழுதுவான். அவளது கடிதம் இலக்கிய மேற்கோள் களோடு அழகான கையெழுத்தில் இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

    காதலித்தவளையே அவன் 14.06.1985ல் கல்யாணம் செய்து கொண்டான். அதுவும் பெரியோர்கள் ஆசியோடு அவனுடைய கிராமத்திலேயே நடந்தது. அவனுடைய அந்தக் காதல் அனுபவத்தை பின்னாளில் எந்தக் கலப்பும் இன்றி “அந்த அவள்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதையாக, நடைச் சித்திரம்போல எழுதினான். அது 8.6.2014 தினமணிக் கதிரில் வெளியானது. அதை அப்படியே இங்கே தருகிறேன்.

    “அந்த அவள்”

    பிடித்திருந்தது அவனுக்கு. அவளுக்கும்தான். அவள் அவன் தெருவில் விளையாடும்பொழுது பார்த்துக்கொண்டே இருப்பாள். அவனுக்கு கபடி, கிட்டிப் புள், கோலி, பம்பரம் என்று அனைத்திலும் தன் திறமையைக் காட்டி மற்றவர்களைத் தன்பக்கம் திருப்பும் சாமர்த்தியம் இருந்தது. அவன் எப்போதும் வேடிக்கையாகவே பேசுவான். ஆற்றிலும், குளத்திலும் மிக அழகாக நீந்துவான். அதனால் அவனை அவனது நண்பர்களுக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு என்னவோ சுமார் ரகம்தான். ஆனால் விளையாட்டு, நீச்சல், உபகாரம் என்று அவன் தனது இருப்பை மிகத் தெளிவாகவே பதித்திருந்தான். அவனுக்கென்று ஒரு சைக்கிள் கிடையாது. நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது இவனும் குரங்குப் பெடல் போட்டே மிக எளிதாகச் சைக்கிளும் கற்றுக் கொண்டு அதிலும் தன்னைச் சூரனாக்கிக் கொண்டான். சைக்கிளை மிக வேகமாக ஓட்டிக் கொண்டே தன் இரு கால்களையும் ஹேண்டில் பாரில் நீட்டி வைத்து சீட்டின் மீது படுத்துக் கொண்டு சாகசம் செய்வான். அதைப் பார்த்து அவனது நண்பர்கள் கைதட்டி “”ஹே” என்று சத்தம் போட்டு உற்சாகப்படுத்துவார்கள். அவளும் அதைப் பார்த்துப் பிரமிப்பாள். அவனுக்கும் அதுதானே வேண்டும்.

    ஆனால் அவனது அம்மா, “”வேண்டாம்… இப்படி எல்லாம் ஓட்டாதே” என்று பயத்துடன் கத்துவாள். அவன் வீட்டிற்குத் திரும்பியவுடன் கம்பால் அடிப்பாள் அவனது அம்மா. இவனும் அழுவதுபோல அழுதுவிட்டு ஓடி விடுவான். சிலசமயம் இப்படி இவன் அம்மாவிடம் அடிவாங்கும்பொழுது அவளும் பார்ப்பாள். அது இவனுக்கு வெட்கமாக இருக்கும். ஒருவித “ஸ்டெயிலாக’ச் சிரித்துக்கொண்டே தெருவில் ஓடிவிடுவான். அதை அவனது அம்மா “”என்ன அசட்டுச் சிரிப்பு” என்று கத்துவாள். ஆனால் விடுமுறைக்காக அவன் கிராமத்திற்கு வந்திருக்கும் அவளுக்கு மட்டும் இவனுடைய சாகசம், பேச்சு, ஓட்டம், சாட்டம் எல்லாம் பிடித்திருந்தது.

    தினமும் மாலை வேளைகளில் வாசலில் அமர்ந்து கொண்டோ, நின்றபடியோ அவன் விளையாடுவதை அவள் பார்த்துக் கொண்டிருப்பாள். சில நேரங்களில் அவளும் தன் வயதுச் சிறுமியர்களுடன் தெருவில் பாண்டியும் விளையாடுவதை இவனும் பார்த்து ரசித்திருக்கிறான். அவளது நீலப் பாவாடையும், அதற்குத் தோதாகப் போட்டிருக்கும் சட்டையும், தாவணியும் அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவளது அழகான அகன்ற கண்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை அவளுக்கருகில் அவன் சென்றபொழுது அந்த அழகான கண்களுக்குள் தன் பிம்பத்தைப் பார்த்து அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளையே பார்த்தபடி இருந்தான். அப்போது தெருவில் ஓடி வந்த கன்றுக்குட்டி அவன் பின்னால் செல்லமாக முட்ட, அவன் அவள்மீது விழுவதுபோலச் சாய்ந்து பக்கத்தில் ஓடிவிட்டான். அவள் சிரித்தாள். கன்றுக்குட்டியைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தாள். அவன் பக்கத்து வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டு தன் தலைமுடியைச் சரிசெய்து கொண்டே அவளைப் பார்த்துச் சிரித்தான். அது காமமில்லை. வயதின் ஈர்ப்பு. காதலின் துவக்கம் என்றுகூட அவன் நினைத்துக் கொண்டான். அவளது பண்பும், கண்களும் அவனைக் கட்டிப் போட்டன.

    அவன் கவிதை எழுதுவான். ஒருமுறை அதை அவளிடம் காட்டினான். அப்போது அவளருகில் யாருமே இல்லை. அவள் தனக்குக் கவிதையும் பிடிக்கும், தமிழும் பிடிக்கும் என்றாள். ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதியுள்ளதாகவும் அவனிடம் சொல்லி, மெலிதாகத் தன் கண்களைச் சிமிட்டினாள்.

    உடனே “”என்னைப் பிடிக்குமா?” என்றான் இவன். “”உங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும்” என்றாள். இவன் மேல் ஆலங்கட்டி மழை பெய்வதுபோலக் குளிர்ந்தான். “உங்களை’ வேண்டாம் “உன்னை’ என்றே என்னைச் சொல் என்றான். அவள் தென்னங்குருத்தாய் மெலிதாகச் சிரித்தாள். அக்கணம் மல்லிகைப்பூ தோட்டத்து வாசம் மொத்தமும் அவன் முகத்தில் வீசியதுபோல ஒரு குஷி அவனுக்குள் வந்தது. அப்போது அவள் தனது அம்மாவின் குரலைக் கேட்டு வீட்டிற்குள் ஓடினாள். அவன் அவள் ஓடிய திசையைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான்.

    “டேய்… “டைப் கிளாசு’க்குப் போக வேண்டாமா… இப்படியே எப்போதும் பித்து பிடிச்ச மாதிரி நிக்கணும்… இல்லைன்னா தெருவுலயே சுத்தணும்… முன்னுக்கு வரணும்னு எண்ணமே இல்லையா?” என்று அவனது அம்மா திட்டியபோதுதான் திரும்பிப் பார்த்துவிட்டு அவன் தன் வீட்டிற்குள்ளே வேகமாக நடந்து சென்றான். அவளது முகமும், கண்களும், தலைபின்னிய அழகும், பாவாடை தாவணி அழகும் அவனை எங்கே படிக்கவிட்டது? வீட்டிற்குள் வருவான். கொல்லைப் பக்கம் சென்று மரத்தடியில் அமர்ந்துகொண்டு தன் கையில் உள்ள ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஆகாசத்தையும், பூமியையும், மரங்களையும், பறவைகளையும் பார்த்துப் பார்த்து ஏதேதோ எழுதுவான். அவளை நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொள்வான். அது காதல் உணர்வு என்று அவன் நினைத்துக் கொண்டான். அவளிடம் அவன் ஏதும் சொல்லவில்லை.

    அடுத்த நாள் அவள் இவனிடம் பேச வேண்டும் என்ற உணர்விலேயே இருப்பதை இவன் தெரிந்து கொண்டான். அப்போது அவள் தனது வீட்டின் வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அவன் தனது வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    வாசல் தெளித்தாள். புள்ளி வைத்த கோலம் போட்டுவிட்டு அவன் நிற்கும் திசையைப் பார்த்துத் தன் கண்களால் பேசினாள். அவன் கவிஞனானான். யோசித்தான். ஏதோ எழுதினான். ஒரு சிறிய தாளில் நான்கு வரிகளில் அவளது கண்களைக் கவிதையாக்கினான். அதை அவள் பார்க்கும்படி அவள் போட்ட கோலத்தில் வீசினான். கோலத்தை அந்தத் தாள் ஏதும் செய்யவில்லை. அந்தத் தாளை அவள் எடுக்கும் முன்பாகக் காற்று வீசியதால் அது பறந்து பறந்து போனது. அவளும் விடாமல் அதைப் பிடிக்க ஓடினாள். ஆனால், அது பறந்துபோய் தெருவோரச் சாக்கடை நீரில் மிதந்தது. இவள் வெட்கமில்லாமல் தன் வலது கையாலேயே அதை மெதுவாக எடுத்து விரித்துப் பார்த்தாள். நீர்பட்டுக் கவிதை சிறிது அழிந்திருந்தது. அதை அவள் அப்படியே எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே ஓடிச்சென்றாள்.

    “என்னடி… இந்த ஓட்டம்.. பொம்பளைக்கு இந்த ஓட்டம் ஆகாது” என்று அவளது பாட்டி கத்தியது வெளியில் கேட்டது. அவள் அந்தக் கவிதைத் தாளை மெல்ல நல்ல தண்ணீரினால் கழுவினாள். அதில் அவனைக் கண்டாள். மெல்ல முத்தமிட்டாள். அந்த ஈரமான கவிதைத் தாளைத் தன் பெட்டிக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

    விடுமுறை நாள்கள் முடிந்து அவள் கிராமத்தைவிட்டு தன் பெற்றோருடன் நகரத்திற்குப் புறப்பட்டாள். அன்றுதான் இவனுக்கு பி.யூ.சி. தேர்வின் முடிவு செய்தித்தாளில் வெளியாகி இருந்தது. இவன் பெயில். அவன் கவலைப்படவில்லை. தன் தலைமுடியை மிக அழகாக “நிறைகுடம்’ சிவாஜியைப்போல அழகு செய்து கொண்டிருந்தான். மஞ்சள் பனியனால் தன் கழுத்து மூடியபடியும், ஒரு நாலு முழ வேட்டியால் தன்னை மன்மதனாக்கிக் கொண்டும் தன் வீட்டு வாசலில் வந்து நின்றான். அப்பொழுதுதான் அவள் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளது பாட்டிக்குக் கை அசைப்பதுபோல அவனுக்குக் கை அசைத்தாள். “”ஹய் ஹய்” என்ற வண்டிக்காரனின் சத்தத்துடனும், மாடுகளின் கழுத்து மணி அசைவுடனும் வண்டி புகை வண்டி நிலையம் நோக்கிப் புறப்பட்டது. அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளது “கண்களையே’ கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே வண்டி தெருவின் கடைசிக்குப் போய்விட்டது.

    “போதும் தூங்கினது… எழுந்திருங்க… தூக்கத்துல தனக்குத் தானே சிரிச்சுண்டு… இந்த வயசுல “ரிட்டையர்டு’ ஆனப்புறமும் என்ன கனவு அப்படி… எழுந்திருங்க… பால் வாங்கிண்டு வாங்க…” என்று அவனது மனைவி போட்ட கூச்சலில் அவன் படபடக்க எழுந்துகொண்டு மனைவியின் கண்களைப் பார்த்தான். கோபமும், கடுகடுப்பும் அதில் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அப்போதும் அவன் “அந்த அவளது கண்களையே’ நினைத்துக்கொண்டு மெல்ல எழுந்து குளியலறையை நோக்கி நடந்தான்.

    ௦௦௦௦ ௦௦௦௦ ௦௦௦௦

    மதராஸ் பட்டணத்திற்குப் பயணம்

    “மே” மாதம் 1973ம் வருடம் அவனுக்குப் பெற்றோர் அவனை வேலைக்காக “திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்” ரயில் வண்டியில் “மெட்ராஸ்”சுக்கு (இப்பொழுது சென்னை) அவனுக்குத் தாய்மாமா சிவராமகிருஷ்ணன் வீட்டிற்கு நல்வாழ்த்துக்களுடன் அனுப்பி வைத்தனர். அப்பொழுது திருநெல்வேலியில் இருந்து “மெட்ராஸ்”சுக்கு ரயில் கட்டணம் பதினெட்டு ரூபாய்கள். அதற்கே பெரும்பாடு. அவனுக்கு, ரயில் கட்டணம் போகக் கையில் ஐம்பது ரூபாய்கள் தந்திருந்தனர் பெற்றோர்.

    அவன் ஊருக்குப் புறப்படும் பொழுது பெற்றோரை வணங்கினான். அப்பொழுது அவனைக் கட்டிக்கொண்டு அவனுக்கு அம்மா சொன்னதுதான் அவனை இன்றுவரை சரியான பாதையில் செல்லும்படியாக வைத்திருக்கிறது.

    ” நீ…மெட்ராசுக்குப் போய் நல்ல பேரோடிரு..யார்கூடவும் சண்டை போடாதே..நிறையப் படி…எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம இரு. அப்படி ஏதேனும் கெட்ட பழக்கம் வந்தா என்ன அம்மான்னு கூப்பிடாதே”

    அவனை வழியனுப்ப திருநெல்வேலிக்கு அவனுக்கு அப்பாவும், அக்கா பாலாவும் வந்திருந்தனர். அவன் ஒரு மஞ்சள் நிறத்தில் பனியனும், நாலுமுழ வேட்டியும் அணிந்திருந்தான். சன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்ட பொழுது ரயில் அவனையும், அவனது எதிர்காலத்தையும் சேர்த்துச் சுமந்து கொண்டு மதராஸ் பட்டினத்தை நோக்கிப் புறப்பட்டது. அவனுக்கு அக்கா, “திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்” ரயில் தன் கண்களை விட்டு மறையும் வரை கையசைத்துக் கொண்டிருந்தாள். அவனும் அக்காவையே பார்த்துக் கொண்டிருந்தான். ரயில் மதுரைக்கு இரவில் வந்தது. மதுரை ரயில் நிலையத்தில் அவனுக்கு ஒன்றுவிட்ட “ரமணிச் சித்தப்பா” வந்திருந்தார். ரமணிச் சித்தப்பாவுக்கு அவன்மீது எப்பொழுதுமே தனி அன்புண்டு. அவனுக்கு பிஸ்கட், பழங்கள் வாங்கித் தந்து,” நீ ..நன்னா முன்னுக்கு வருவாய் கண்ணா” என்று ஆசிதந்தார். மதுரையை விட்டு ரயில் புறப்பட்டது.

    அம்மா தந்த சாப்பாடுப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு உருண்டை தயிர் சாதத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அதன் ஒவ்வொரு பருக்கையிலும் அவனுக்கு அம்மா அதில் சுவையாக இருப்பது தெரிந்தது. அவன் கண்களில் நீர்கோர்த்துக் கொண்டது. அம்மா சொன்னது அவன் நெஞ்சுள் மிக ஆழமாகப் பதிந்திருந்தது. இரவில் ரயிலில் அவன் தூங்கவே இல்லை. காலையில் எட்டரை மணிக்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் அவன் இறங்கினான். அவனை அழைத்துச் செல்ல அவனுக்கு மாமா சிவராமகிருஷ்ணன் வந்திருந்தார். அவன் இதற்கு முன்பு விடுமுறைக்கு மதராஸ் வந்திருந்தாலும், இப்பொழுது பார்க்கும் மதராஸ் பட்டணம் அவனை அன்போடு அன்று வரவேற்றது.

    05.11.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share