Month: January 2016

  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கற்றொறும் தான் கல்லாதவாறு

     

    சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
    கற்றொறும் கல்லாதே னென்று வழியிரங்கி
    உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
    கற்றொறுந்தான் கல்லாத வாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    சொல்தொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
    கல்தொறும், ‘கல்லாதேன்’ என்று, வழி இரங்கி,
    உற்று ஒன்று சிந்தித்து, உழன்று ஒன்று அறியுமேல்,
    கல்தொறும் தான் கல்லாதவாறு.

    பொருள் விளக்கம்:
    (கற்றறிந்தோருடன் உரையாடுகையில்) செய்துவிடும் சொற்குற்றம் காரணமாகத் தடுமாறினால், அதனால் மனத் தளர்வு கொள்ளாமல், நன்கு கற்றறியும் வரை நான் கல்லாதவரே என்று உணர்ந்து, தனது கல்லாமை நிலைக்காக வருந்தி, மனதை ஒருமைப்படுத்தி கற்பேன் என்ற உறுதிகொண்டு, முயன்று ஒன்றைக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றறியும் வரை தான் ஒரு கல்லாதவரே என்பதையும் உணர வேண்டும்.

    பழமொழி சொல்லும் பாடம்:  கல்வி கற்கும் ஒவ்வொருவரும் தான் அதனைக் கற்றறியும் வரை கல்லாதவரே என்பதை உணர்ந்து கற்கவேண்டும். கற்றறிந்தோருடன் அச்சமின்றி உரையாடத் தனது கல்வியறிவை ஒருவர் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வள்ளுவர்,

    ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு. (குறள்: 725)

    கற்றறிந்தோர் அவையில் அச்சமின்றி விவாதிக்க உதவும் வகையில் இலக்கண, இலக்கிய வாதக்கலை ஆகியவற்றைக் கற்றறிந்து திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

    Share
  • உயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம்

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    3.8 பில்லியன் ஆண்டுகட்கு முன் உயிரின மூலவிகள் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளதை இப்போது காண்பது அதிர்ச்சியாக இருக்கிறது.  ஏறக் குறைய பூமி தோன்றிய உடனே உயிரன மூலங்கள் உருவாகி விட்டன. பிறகு ஏதுவான ஆக்கக் கூறுகள் இணைந்த பின், உயிரினங்கள் உடனே உண்டாயின. பிரபஞ்சத்தில் உயிரினப் பெருக்கம் மிகுதியாக இருக்கலாம்.  எளிய உயிர் மூலவிகள் உடனே தோன்றி, அவை தானாய் இயங்கி, சூரிய  ஒளிச்சேர்க்கைத் [Photosynthesis] தகுதி பெற பல மில்லியன் ஆண்டுகள் எடுத்தன.

    மார்க் ஹாரிஸன் [பேராசிரியர், பூதள இரசாயனம், காலிஃபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சலஸ்]

    Zircon crystals

    https://youtu.be/8SgnnV8nV9g

    https://youtu.be/MsHEAnPX59Y 

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA

    http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJQ4r81DZtY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-FLa0RKo5c

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qoERVSWKmGk

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=W4mYwsr9gGE

    +++++++++++++++++++++

    பூமி தோன்றிய உடனே உயிர் மூலவிகள் உருவானதற்குச் சான்றுகள்

    காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4.1 மில்லியன் ஆண்டுகட்கு முன்பே பூமியில் உயிரின மூலவிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்று அறிவித்துள்ளார்கள்.   அந்த ஆராய்ச்சி முடிவு 2015 அக்டோபர் 21 இல் தேசீய விஞ்ஞானப் பேரவை  [National Academy of Sciences] இதழில் வெளியானது.  ஆராய்ச்சி செய்தவர் மேற்கு ஆஸ்திரேலியாவில், உருகி உறைந்த பாறைகளில் எடுத்த 10,000 மேற்பட்ட ஸிர்கான் படிமத்தை [Zircon Crystals] எடுத்துக் கொண்டார்.  ஸிர்கான் படிமங்கள் பல பில்லியன் ஆண்டுகள் மாறாமல் பூர்வப் படிவ [Fossils] பூமி மாதிரிகளாய்க்  காலச்சுவடு  சிமிழ்கள்  [Time Capsules] என்று  கருதப்படுபவை.  அவை அண்டைச் சூழ்நிலைப்பைப் பற்றி  பாதுகாப்பவை.  அவற்றில் உள்ள கார்பன் [Carbon] தனித்துவ முத்திரை உடையது.  குறிப்பிட்ட கார்பன்-12/ கார்பன்-13 பின்னம் [Specific Ratio of Carbon-12 to Carbon-13] ஒளிச்சேர்க்கை மூலவி வசிப்பைக்  [Presence of Photosynthetic Life] காட்டும்.  அவற்றில் விஞ்ஞானிகள் 656 ஸிர்கான் படிமங்கள் கரும்  புள்ளிகள் [Dark Specks] இருக்கக் கண்டார்.  அவற்றில் குறிப்பாக 79 படிமங்களில் இராமன் ஒளிப்பட்டை [Raman Spectroscopy] முறையில் கண்டது : முப்புற வடிவில் பூர்வீக ஜீவிகளின் தடம் [Molecular & Chemical Structure of Ancient Micro-organisms in three Dimensions] காணப்பட்டன. அந்த மாதிரிகளில் இருந்த பூர்வீகக் கார்பன் உயிரின மூலவிகள் உறுப்புக்குக்  காரணமானது.  4.1 பில்லியன் காலத்து கரித்திரட்சி [Graphite]  முதன்முதல் ஆராயப்பட்டு உயிர் மூலவி இருப்பு காணப் பட்டது.

    Solid Evidence of DNA Existance 

    Origins of life 1

    இந்த சோதனைகள் மூலாதார மூலக்கூறுகளான கொய்னொலோன் & ஐசோகொய்னோலோன்  [Quinolone & Isoquinolone] இரண்டும் சூட்டுச் சூழ்வெளியில் பின்னிப் பிணைந்து சூரியப் புயலில் வீசி எறியபடலாம் என்று அழுத்தமான சான்றுகளைக் காட்டுகின்றன.  குளிர்ந்து போன மூலக்கூறு முகில்களில் இவை விழுந்த பின்பு குளிர்ந்த அண்டெவெளி நுண்துகள்களில் படிந்து இயற்கை நிகழ்வுகளில் ஈடுபடும்.  அவை மேலும் சிக்கலான உயிர்ச்சார்புள்ள மூலக்கூறுகளை உண்டாக்கி டியென்ஏ & ஆரென்ஏ உருவாக்க உதவும் [Biorelevant Molecules like Nuclebases to create DNA & RNA]. 

    ரால்ஃப் கெய்ஸர், இரசாயனப் பேராசிரியர், ஹவாயி பல்கலைக் கழகம்  

    இதுதான் முதன்முறையாக எவரும் விண்மீன்கள் வெப்ப இயக்கத்தை உள்நோக்கியது.  நைட்டிரஜன் கலந்துள்ள வளையத்தை கார்பன் அணுக்கள் உண்டாக்குவது அத்தனை எளிமை இல்லை.  இப்புதிய ஆய்வு அந்த சூட்டு வாயுத் தோற்ற வாய்ப்பு இருப்பை மெய்ப்பிக்கிறது.  அதை அகிலவெளிக் கனல் சமைப்பு [Cosmic Barbeque] என்று சொல்லலாம். ஆனால் அந்த இயக்கம் நிகழ்வதற்கு ஒரு சக்தி அரண் [Energy Barrier] உள்ளது. அந்த வரையறை ஓர் விண்மீன் அருகில் அல்லது ஆய்வகச் சோதனையில் மீறலாம்.  அதாவது இந்த உயிரின மூல மூலக்கூறுகளை இப்போது நாம் விண்மீன்களைச் சுற்றி இருப்பதைத் தேடலாம்.

    முகஸகீத் அஹமத், பெர்க்கிலி ஆய்வுக்கூட விஞ்ஞானி 

    PROTEIN

    உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை டியென்ஏ 
    பல ஆண்டுகளாக உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை [Double Helix] எனப்படும் டியென்ஏ ஆக்கும் மூலக்கூறுகள் பிரபஞ்சத்தில் எப்படி உருவாகி வருகின்றன என்னும் கேள்வி கேட்கப்படுகிறது.  அதற்கு மூலாதார மூலக்கூறுகள் : நைட்டிரஜன் அணுக்கள் பதிந்துள்ள கார்பன் வளைய அமைப்புகள் [Key Components of Nucleobases]எப்படித்
    தோன்றுகின்றன என்று முதலில் அறிய வேண்டும்.
    முதன்முறையாக அமெரிக்காவில் பெர்க்கிலி தேசீய ஆய்வகம், ஹவாயி பல்கலைக் கழகம் இரண்டும் சேர்ந்து ஆராய்வுகள் நடத்தி, பிரபஞ்சத்தில் விண்மீன்களுக்கு அருகில் உள்ள சூட்டுத் தளங்களில் தகுந்த சூழ்நிலை அமைந்து இவ்வகை மூலக்கூறு நைட்டிரஜன் படிந்த கார்பன் வளையங்கள் [Quinolone] உருவாக நிகழ்வுகள் நேர்கின்றன என்று கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்கள்.

    fig-1b-genome-of-the-species

    “உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்கலாம்.  உண்மையில் அப்படி நேரவில்லை ! பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப்  படுத்துவது பைத்தியகாரத்தனம்.  “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை !  அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”

    ரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)

    “உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

    மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

    Earth Spectrum

    உயிரினத் தோற்றம் பற்றி விளக்கம் கூறிய உலக மேதைகள்: 

    பெரும்பான்மையான  உயிர்த்துவ இம்மிகள் [Living Organisms] மனிதர் கண்ணுக்குப் புலப்படா.   உயிர்த்துவ மூல நுண்ணுருக்கள் [Microbes] சேர்ந்தவையே உயிரினங்கள்.  80% நுண்ணுருக்கள் பூமிக்கு அடியிலே வசிக்கின்றன.  அவற்றின் அளவீடுகளைக் கணிப்பது சிரமமானது.   நோயை உண்டாக்கு வதும் அவையே.  நோயைக் குணப்படுத்துவதும் நுண்ணுருக்களே.  நமது பசுமைச் சூழ்வளம் [Ecosystem] ஏற்பாட்டுக்கும் நுண்ணுருக்களே  அடிப்படைக் காரணமாய்ப் பங்கேற்கும்.   யூதக்  கிறித்துவ, இஸ்லாமிய மத நூல்கள்,  கடவுளே பிண்டத்தில் உயிரை ஊதி உட்செலுத்தியது என்று கூறுகின்றன.

    Comets Gifts for Earth

    [384-322 ] B.C.  ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸ்  “நியுமா” [Pneuma] என்னும் ஒரு தெய்வீக மூலமே [Divine Matter] விலங்கினத்தை உருவாக்கியது என்று கூறுகிறார்.   உயிரின மலர்ச்சி தொடர் இயக்கத்தில் மனித ஆத்மா பூரணத்துவம் அடைய,  நியுமா என்பது ஒர் இடைநிலை அரங்கம்.  மனித உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையே, அல்லது  விலங்கினத்தின் உடம்புக்கும் உயிருக்கும் உரிய “இருமுகப்பு”  [Duality] பற்றி அவரது குருநாதர் சாக்ரடீஸ் பள்ளியில் கருத்தாடல்கள் நடந்துள்ளன.  அதில் ஒரு மாணவரே அரிஸ்டாடில்ஸ்.   குருநாதர் கூற்றுபடி உயிர் மூச்சு மனிதன் போன்ற உயர்ந்த விலங்கினங்களுக்கு பிறப்பாக்கத் தொடர்பு மூலம் [Procreation] வாரிசுகளுக்கு வழங்கப் பட்டது.   பிறப்பு விதை யில்லாமலே சிற்சில பூச்சிகள், சிப்பிகள், கடல்நீர் ஜந்துகள் சுயமாய் உருவாகின என்பது கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸின் கருத்து. சாக்ரடீஸ் குழுவினருக்கு முன்பே “தானாய் நேரும் பிறப்பு”  [Spontaneous Generation]  கோட்பாடுக் கருத்து இருந்துள்ளது.  தானாய் நேரும் பிறப்புகளைப் பற்றி சைனா, இந்தியா, பாபிலோன், எகிப்திய ஏடுகளும் கூறியுள்ளன.

    Growth of Organisms

    லூயி பாஸ்டர் [1822-1895] செய்த ஒரு சோதனை மூலம் “தானாய் பிறக்கும் கோட்பாடுக்கு” முற்றுப் புள்ளி வைத்தார்.  அவருக்குப் பிறகுதான் “உயிரே உயிரை பிறப்பிக்கும்” கோட்பாடு நிலையானது.   ஆனால் இந்தக் கோட்பாடு முதலில் தோன்றிய உயிர் வடிவத்துக்கு ஒவ்வாது என்றும் பாஸ்டர் கூறினார்.   அதாவது “தானாய் உருவாகும்” கோட்பாடு முதல் உயிர் வடிவுக்கு மட்டும் தகுதி பெறும்.

    சார்லஸ் டார்வின் [1809-1882]  உயிர்த் தோற்ற உற்பத்தி, அம்மோனியா, ஃபாஸ்ஃபரஸ் உப்புக்களோடு, ஒளி, வெப்பம், மின்சக்தி இயங்கிய  ஒரு பூர்வக் குழம்பில்  [Primeval Soup] நேர்ந்தது என்று நம்பினார். இந்தக் கூட்டுக் குழம்பு ஒருவிதப் புரோட்டீனை உண்டாக்கி, சிக்கலான இரசாயனக் கலவைகளாகி, அவற்றிலிருந்து உயிரினம் தோன்றின என்று கருதினார்.   உயிரியல் இரசாயன இயக்க விருத்தியில் [Biochemical Reactions Evolution] உயிரின மலர்ச்சி நேர்ந்தது என்னும் புதியதோர் கருத்தை நிலை நாட்டியவர் அலெக்ஸாண்டர் இவனோவிச் ஓபரின் [Alexander Ivanovich Oparin] [1894-1980].

    the-origins-of-life

    “கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு  ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது!  சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர்!  அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும்.  அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

    ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

    1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.

    Miller Urey Experiment

    அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது.  காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது.  அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

    பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

    பூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன.  அவற்றில் பேரடித் தாக்குதல் களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவி யாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்தி ருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது.  3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன !

    fig-1a-the-earths-biosphere1

    கலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன.  பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன.  ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும்.  ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின.  ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன :  1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways).  2. விண்வெளி ஒளிமந்தை யிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற்ற மூலங்கள்

    fig-1-the-beginning-of-life

    பல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறுகளாக விருத்தி யாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின !  அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தி யாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின.  அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன.  அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது.  ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும்.  ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது.  இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.

    Fig 3 Comet Falls on Earth

    பூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்

    நாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர்.  சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன.  பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமா கவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது.  கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன.  கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார்.  வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.

    fig-1f-amphiphilic-molecules

    சூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு

    1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)

    2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)

    3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீடர் வரை: மெஸோ கோளம் (Mesosphere)

    4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)

    5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)

    Establishment of life on Earth

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங் களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமில வாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து பசுமைக் குடில் சூட்டு  வாயுக்களையும் [Greenhouse Gases] CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    fig-2-signs-of-extra-terrestrial-life1

    உயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்

    பரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா ?  அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே !  செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே !  வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது !

    பூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது ?

    1.  பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழுதில் தடுத்து எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது.

    2.  பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).

    Origins of life

    3.  இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது.  பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது.  வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C

    4.  பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.

    5.  ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.

    6.  பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு.  அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.

    7.  உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.

    8.  இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.

    9.  விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.

    Fossil Records of life

    கரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்

    2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக்ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும்.  அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது.  மூன்றாவதாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும்.  பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது.  அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது.  அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது.  அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக்கின்றன.  அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Building Blocks of life

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24.  BBC News – Milky Ways’s Sweetness Throughout [Nov 25, 2008]
    25. BBC News : Sugar in Space Sweetens Chances of Life By : Dr. David Whitehouse [June 16, 2000]
    26 NASA’s Genesis Space Mission – Life from Space Dust ? [Aug 15, 2001]
    27 BBC News : Life’s Origin Among the Stars – A Salt Inclusion in a Meteorite is Evidence for Water By : Dr. David Whitehouse [March 27, 2002]
    28 The Beginning of Life & Amphiphilic Molecules By: Janet Woo [August 2004]
    29. The Biological Universe – A Galaxy Insight [Nov 20, 2008]
    30. The Daily Galaxy – Could Cold “Super Earths” Potentially Support Life ?  [Dec 16, 2008]
    31. BBE News : NASA Set to Launch CO2 Hunter Satellite By : Jonathan Amos [Dec 18, 2008]

    32.  http://www.scientificamerican.com/article/a-simpler-origin-for-life/   [February 2007]

    33.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/rna-dnas-messenger-or-the-origin-of-life-on-earth.html [February 23, 2013]

    34.  http://www.ncbi.nlm.nih.gov/books/NBK26876/

    35. http://alma.mtk.nao.ac.jp/e/aboutalma/outline/06.html

    36.  http://www.scielo.br/scielo.php?pid=S0103-40142007000100022&script=sci_arttext&tlng=en  [April 2007]

    37. http://www.independent.co.uk/news/science/found-the-origin-of-life-1684584.html [May 14, 2009]

    37. http://en.wikipedia.org/wiki/RNA_world_hypothesis [June 6, 2014]

    38.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/secrets-of-extreme-continent-building-discovered-a-key-to-life-on-earth-and-beyond.html [March 31, 2015]

    39. http://www.dailygalaxy.com/my_weblog/2015/05/cosmic-hotspots-near-stars-yield-buiding-blocks-of-dna.html  [May 6, 2015]

    40  http://www.sciencedaily.com/releases/2015/05/150506095248.htm  [May 6, 2015]

    41.  https://en.wikipedia.org/wiki/Zircon  [Octber 31, 2015]

    42.  https://en.wikipedia.org/wiki/Zircon  [January 15, 2016]

    43. http://www.amnh.org/education/resources/rfl/web/essaybooks/earth/cs_zircon_chronolgy.html

    44.  https://en.wikipedia.org/wiki/Timeline_of_the_evolutionary_history_of_life [January 10, 2016]

    45.  https://en.wikipedia.org/wiki/Evolutionary_history_of_life  [January 10, 2016]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [January 21, 2016]

    Attachments area
    Share
  • நினைவுகளுடன் ஒருத்தி – 2

                          சீதாம்மா

    மனச்சிமிழைத் திறந்தவுடன்  நினைவலைகள் சுற்றிச் சுழன்று சுனாமியாக

    என்னை மிரட்ட ஆரம்பித்தன. பயம் வரவில்லை . நான் சிரிப்பதைப் பார்த்து அவைகள்தான் மிரண்டு அடங்கின. என் வாழ்க்கைப் பயணமே ஒரு த்ரில்லர்

    பயணம். என் மனத்திரையில்  ஒரு காட்சி நிழலாடியது.

    கண்ணகிக் கோட்டம் பார்க்கச் சென்றவர்கள் ஒன்பது பேர்கள். வாகனம் ஒரு ஜீப்.   திரும்பும்பொழுது அந்த வண்டி கட்டுப்பாடு இழந்து, மலையில் உருள ஆரம்பித்தது. ஒரு பாறையில் மோதிய வண்டி அப்படியே சாய்ந்து நின்றது. நான்தான் ஓரத்தில் உட்கார்ந்திருந்தவள்.  உடம்பில் அடிபட்டிருந்தும் மன வலிமையினால் கீழே குதித்து எல்லோரையும் வெளிக் கொண்டு வந்தேன்

    இரவு முழுவதும் அந்தக் காட்டில் தங்க வேண்டிய நிலை.

    தேக்கடி காட்டில் யானைகளின் கூப்பாடு –   புலிகளும் கரடிகளும் இன்னும் பல மிருகங்களும் நடமாட ஆரம்பித்தன . விழுந்தவர்களில் ஒருவருக்கு கால் ஒடிந்துவிட்டது. மற்றவர்களுக்கோ எலும்பில் அடி. அதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். உங்கள் முன் உயிருடன் பேசிக் கொண்டிருக்கின்றேன். இத்தகைய அனுபவங்கள் ஒன்றா, இரண்டா?

    விபத்துக்களில் என் உடம்பு பாதிக்கப்பட்டது ஒரு புறம். எத்தனை வரப்புகளில் நடந்திருக்கின்றேன். கால்களில் தேய்மானம்.  காட்டு அனுபவங்கள் கூட பரவாயில்லை. இந்த சமுதாயத்தில் போராடியதுதான் கடுமை. நான் ஒரு அரசு ஊழியர்தான். வெறும் கையெழுத்து போட்டு ஊதியம் பெற்று உற்சாகமாக வாழ்ந்தவள் இல்லை நான். என் அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். பொருளுக்கும், புகழுக்கும் என்றும் ஆசைப்பட்டவள் இல்லை.   உங்கள் சிந்தனைக்கு சில செய்திகள்.. ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பரிசீலனை செய்து கொள்ளட்டும். நாம் வாழ்ந்த முறை என்ன,  நம் எண்ணங்களின் தன்மை என்ன என்று சில நிமிடங்களாவது நினைத்துப் பார்ப்போம். மனித நேயத்தின் மகத்துவம் உணர்வோம். நல்ல எண்ணங்கள் நமக்கே நல்லது. இதுபற்றி நாம் நிறையவே இத்தொடரில் பார்க்கப் போகின்றோம்.

    நேற்று கணினியில் வலம் வரும் பொழுது ஒருவரின் படைப்பு கண்ணில் பட்டது . படித்துப் பார்க்கும் பொழுதே மனம் பறக்கத் துடித்தது. அதனைக் கொஞ்சம் அடக்கி முழுவதும் படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சிரிப்பை வரவழைத்தாலும் . எழுதியவரின் ஆதங்கம் புரியவும் என் மனத்தில் ஓர் தவிப்பு…… நினைவலைகளில் மிதக்க ஆரம்பித்தேன்

    அது கடவுளைப் பற்றிய ஓர் கற்பனைப் படைப்பு

    ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதி வெளிவந்த கதைகள் நினைவிற்கு வந்தன.

    பரமனும் தேவியும் பூலோக யாத்திரை வருகின்றார்கள்

    எந்த சூழ்நிலையிலும் தங்கள் சக்தியைப் பிரயோகிப்பதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் வருகின்றார்கள்.

    முதலில் ஓர் கிராமம். அங்கேயே  எத்தனை ஏற்றத் தாழ்வுகள்?! எத்தனை பிரிவுகள்?! தேவி கணவனிடம் பல கேள்விகள் கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் “ நான் மனிதனைப் படைத்தேன். அவனோ எதை எதையோ படைத்துவிட்டு அந்த வலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றான் என்றார்.

    எவ்வளவு உண்மை! சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன் மனிதன் தன்னைப்போல் பணியாற்ற ரோபோட்டுகள் கண்டு பிடித்தான் இப்பொழுது அவைகளால் பலருக்கு வேலை போகப் போகின்றது.

    மீண்டும் ரயில் பயணம் அதில் சில இளைஞர்கள். கற்பைப் பற்றி வாக்குவாதம்.  சிவன் உடலில் வெப்பம் கூடியது. நல்ல வேளையாக அம்மனின் குளிர்ந்த கை சூட்டைத் தணித்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

    எப்பொழுதும் அவர் திருவிளையாடலுக்கு மதுரைதானா?!. கோயிலுக்குள் சென்றவுடன் தேவி கூட்டத்தைக் கண்டு மெய் சிலிர்க்கின்றாள். ஆனால் அய்யனோ அங்கு வந்தவர்கள் ஒவ்வொருவரையும் அலசிப் பார்க்கின்றார்.

    இறைவனுக்காக வந்தவர்கள் எத்தனை பேர்கள்?! ஏமாற்றம்  வேதனை.

    இன்னும் கைலாயம் திரும்ப மனம் வரவில்லை. அவர்கள் வெளித்தோற்றமும் தயக்கமும் அங்கு உலாவிக் கொண்டிருந்த போலீஸ் மக்களுக்கு சந்தேகம் வர பல கேள்விகள் கேட்டனர். கடவுள் பொய் சொல்ல முடியுமா? மேலும் தயக்கம்.  பலன் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றனர். இவர்கள் அங்கு சென்ற சில நிமிடங்களில்  கோட்டு, சூட்டுடன் ஒரு வாலிபன் வந்தான். உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் எழுந்து நின்று வரவேற்றார். ஆடைக்குத்தான் மனிதன் எத்தகைய மதிப்பு கொடுக்கின்றான்.  காணாமல் போன பெற்றவர்களைத் தேடி திருப்பரங்குன்றத்திலிருந்து வந்தவன் சுப்பிரமணியன்.

    ஆம் வந்தவன் வடிவேலன்.

    பெற்றவர்களைக்  கூட்டிப் புறப்படும் பொழுது இன்ஸ்பெக்டர் வேலனின் காதில் சொன்னது “உங்கப்பாவுக்கு  கொஞ்சம் மைண்ட் சரியில்லே. அம்மாவை உடன் அனுப்பாதீங்க” . இது பரமனுக்குத் தேவையா?

    நல்ல வேளை, அவர் நெற்றிக் கண்ணைத் திறக்கவில்லை. அம்மை இவைகளைக் கவனிக்காமல் மகனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

    கோவணாண்டி மகன் கோட்டு சூட்டில் எவ்வளவு அழகாக இருக்கின்றான்!

    சுவாமிமலையில் உபதேசம்   இப்பொழுது மதுரையில் உபதேசம்.

    ஆறு ஆண்டுகள்வரை  என் கதைகள் பத்திரிகைகளில் வந்தன. விகடனில் முத்திரைக் கதையும் வந்தது. எல்லாம் உளவியல் அடிப்படையில் எழுதப்பட்டவை.  ஏனோ திடீரென்று எழுதுவதை நிறுத்தினேன்.

    unnamedஎன் முதல் கதை “கதிரேசன் மலை” பன்னிரண்டுவயதில் எழுதினேன். ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அதனை ஓர் பிரபலமான கதாசிரியரிடம் நேரில் கொடுத்தேன் அவரை உங்களுக்கும் தெரியும்.  “ கல்கி”

    பாரதிக்கு மணிமண்டபம் கட்ட சில ஆய்வுகள் செய்ய திரு ராஜாஜி அவர்களும், திரு கல்கி அவர்களும் எட்டயபுரம் வந்திருந்தார்கள். அவர்களை நமஸ்காரம் செய்தேன். பின்னர் கல்கியைப் பார்த்து  “ நீங்க கதை எழுதுவீங்களாமே ? “என்று கேட்டேன். “ஆமாம், நீ படிச்சிருக்கியா?” என்று கேட்டார் (நான் எட்டயபுரத்துக்காரி }

    “இன்னும் படிக்கல்லே, இனிமே படிக்கறேன். நானும் கதை எழுதிக் கொடுக்கறேன். நீங்களும் படிங்க என்றேன்” அப்பொழுது எனக்கு எட்டு வயது.

    சொன்ன வாக்கை காப்பாற்ற கதை எழுதி அவரிடம் கொடுக்கும் பொழுது எனக்கு பன்னிரண்டு வயது.

    கதைகள் படிக்க ஆரம்பிக்கவும் பத்திரிகைகள் படிக்கும் குணம் வந்தது. இதனால் என்னிடம் தமிழும் வளர்ந்தது.

    பத்திரிகைகள் என்றவுடன் விமர்சனங்கள் நினைவிற்கு வருகின்றன.

    அர்த்தமுள்ள விமர்சனங்கள் அவசியம் தேவை. ஆனால் காலம் மனிதனை அதிலும் மாற்றி விட்டது. விமர்சனம் செய்தால் பிரபலமாகி விடலாம் என்ற நினைப்பும் வளர ஆரம்பித்தது. அடுத்தவரைக் குறை கூறினால் அவனை அறிவாளி என நினைப்பார்கள் எனற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அளவுக்கு மீறினால் அது நஞ்சாகிவிடும் என்பதை மனிதன் மறந்து விட்டானே. இருந்த மதிப்பையும் இழப்பதை மனிதன் உணரவில்லையே! நம்மில் எத்தனை பேர்கள் இருக்கின்றோம். ஒவ்வொருவரும் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டிய ஒன்று.  நம்மை நாமே நமக்குள் விமர்சனம் செய்து பார்ப்போம்.

    படித்த கட்டுரை பற்றி அடுத்து பேசுவோம்.

    Share
  • முத்தமிழ் வித்தகர்!

     -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

    மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
    மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
    கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
    கழனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
    இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்   Swami-Vipulananda
    இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
    எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
    எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும்!

    ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைத்தீவில்
    ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
    துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
    அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே!

    விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
    நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
    சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
    செல்லுமிட மெல்லாமே  சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே!

    ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
    கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
    பண்டிதராய் இருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
    பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார்!

    பேராசிரியராய்ப் பெருமையுடன் பணி ஆற்றி
    ஆராத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
    தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
    யாருமே தொட்டிராத யாழ்தொட்டு நூல்செய்தார்!

    பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
    அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
    இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
    முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே!

    துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
    அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
    துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றிக்
    கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும்!

    ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
    மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
    பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவுமாகித்
    தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர்!

     

     

    Share
  • அவன், அது , ஆத்மா (44)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 44

    “பம்பாய் தமிழ்ச்சங்கத் தலைவர் ஆதிலக்ஷ்மணன்”

    d022f342-e928-4e42-bd00-68a1fcc5be77

    அவன் 1975ம் வருடம் “மே” மாதம் கோடை விடுமுறைக்காக கல்லிடைக் குறிச்சிக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் அவனுடைய குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான “சாரதாமாமி” அவனுக்கு அம்மாவிடம்,” ராமா…இன்னிக்கு சச்சுவும், அவ ஆத்துக்காரரும் வரா…நம்ம கண்ணனுக்கு அவர்ட வேலை கேட்கச் சொல்லு…நானும் சொல்லறேன்” என்றாள். அவர்கள் மாலையில் வந்தார்கள். சென்று பார்த்தான். அவனுக்கு சச்சு மாமியையும், அவர்களது சகோதரிகளான லக்ஷ்மி, பார்வதி, ரத்னா மாமிகளையும் நன்கு தெரியும். அனைவருமே ரொம்பவும் அன்புடன் பழகும் குணம் கொண்டவர்கள். அவனுக்கு சச்சு மாமியின் கணவரிடம் அத்தனை நெருக்கம் கிடையாது. பார்வதி மாமியின் கணவர் R. S. மணி அவர்களிடமும், லக்ஷ்மி மாமியின் கணவர் “குளத்து” அவர்களிடமும் ஓரளவு பழக்கம் இருந்தது. அதனால் அவன் சச்சு மாமியின் கணவரைப் பார்க்கச் சென்றும் வேலை விஷயமாக எதுவும் சொல்லாமல், அவனுக்கு இருக்கும் இலக்கிய ஆர்வத்தையும், கவிதைகள் பற்றியும் கூறிக் கொண்டிருந்தான். அவரும் மிகுந்த ஆவர்வமாக,” நீ எழுதிய கவிதைகள் இப்பொழுது உன்னிடம் இருக்கிறதா?” என்று கேட்க, தயாராக வைத்திருந்த அந்தக் கவிதை நோட்டுப் புத்தகத்தை அவரிடம் காட்டினான். அதை புரட்டிப் பார்த்து படித்த படியே,” கவிதைகள் எல்லாம் எளிமையாக, கண்ணதாசன் கவிதைகள் போல நன்றாக இருக்கிறது. விடாமல் எழுதி வா….நிறைய புத்தகங்களும் படி…” என்று உற்சாகப் படுத்தினார். உடனே அவர் அவனிடம்,” நாங்கள் நாளைக்குக் காலைல “கார்ல” மணிமுத்தாறு அருவிக்குப் போகலாம் என்று இருக்கிறோம்…நீயும் வா…உனக்கு வழி தெரியுமா?” என்று கேட்டார். “தெரியும்” என்றான்.

    அவன் பள்ளி இறுதி நாட்களில் அவனையும், நீலகண்டன், விசு போன்ற சில நண்பர்களையும் மின்வாரியத்தில் வேலை செய்து வந்த “கோதையார் சுவாமிநாதன்” மாமா மின்வாரியத்தின் ஜீப்பில் கோதையாறுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மணிமுத்தாறு நீர்த்தேக்கம் கடந்து அருவியை நெருங்கும் பொழுது எல்லோருக்கும் ஒரே உற்சாகமாக இருக்கும். அதையும் தாண்டி மாஞ்சோலை அதன் பிறகு கோதையாறு வரும். “காக்காச்சி”, “குதிரைமூக்கு” போன்ற இடங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கும். அவன் எப்பொழுதும் ஜீப்பின் பின்புறம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடியேதான் வருவான். அதனால் அவனுக்கு மணிமுத்தாறு அருவிக்கு வழி தெரியும்.

    மறுநாள் கலையில் எட்டு மணிக்கு சச்சு மாமி, அவரின் கணவர், சச்சுமாமியின் தாயார் சாரதாமாமியுடன் அவனும் மணிமுத்தாறு அருவிக்கு காரில் புறப்பட்டான். சச்சுமாமின் கணவர் தென்காசியில் இருந்தே “பிரீமியர் பத்மினி” பியட் காரில் வந்திருந்தார். அவர் ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறார் என்று தெரிந்த்தது. அதை அவன் அவரிடம் கேட்கவில்லை. கார் மணிமுத்தாறு பூங்காவைச் சுற்றி நீர்த்தேக்கம் ஒட்டிய சாலையில் சென்று கொண்டிருந்தது. “கண்ணா…வழி சரிதானா..அருவிக்கரையே கண்ணுல படலையே..என்னடாது “கோமணமா” நீளப்போயிண்டே இருக்கே..” என்று சாரதாமாமி அவனுக்கு கிலியூட்டினாள். “கவலைப் படாதேங்கோ…அவனுக்குத்தான் இடம் தெரியும்னு சொன்னானே” என்று சச்சு மாமியின் கணவர் சொல்லிவிட்டு, அவனிடம்,” கண்ணா ..ஒனக்கு ஒரு டெஸ்ட்…இந்த இடத்துலேந்து அருவிக்கரை வரத்துக்குள்ள ஒரு நல்ல கவிதை நீ எழுது பார்க்கலாம்” என்று தன் பையில் இருந்த பேனாவையும், காரில் வைத்திருந்த பழைய டைரியில் இருந்து ஒரு தாளையும் கிழித்து அவனிடம் தந்தார். அவனுக்கு உற்சாகம் கரை புரண்டது. அகண்டு விரிந்த மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தை பார்த்துக் கொண்டே ஒரு சின்னக் கவிதையை எழுதி முடிக்கவும், அருவிக்கரை நெருங்கவும் சரியாக இருந்தது. அவன் எழுதிய கவிதையை அவர் படித்தார். நீர்த்தேக்கத்தின் தவிப்பையும், அடித்தட்டு மக்களின் உணர்வையும் இணைத்து ஆசிரிய விருத்தத்தில் எழுதி இருந்த கவிதை அது. “பலே …நல்ல கருத்து…நீ நானா வருவாய் கண்ணா” என்று அவனைப் பாராட்டினார்.

    அருவியில் நன்றாகக் குளித்து விட்டு மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்குத் திரும்பினோம். அவருக்கு அவனைப் பிடித்திருந்தது. அவன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பும் நேரம், “அதுக்கு ஒரு வேலை ஒங்க கம்பெனியில போட்டுக் கொடுங்கோ…அவா குடும்பம் முன்னுக்கு வரும்” என்று சாரதாமாமி சச்சு மாமியின் கணவரிடம் சொன்னாள். “நீ இப்ப எங்க வேலை பார்க்கிறாய்?” என்று அவனைக் கேட்டார். சொன்னான். “என்ன சம்பளம் வாங்கறாய்” என்றார். “இருநூற்றி ஐம்பது” என்றான். “போதுமா? என்றார். “போதும்” என்றான். “என்ன போரும்..அதுக்கு என்ன தெரியும்…எப்போதும் கதை, கவிதைன்னு எழுதினா யாரு சோறு போடுவா…சம்பளம் ஒண்ணும் போறாது…நீங்க பார்த்து ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணுங்கோ” என்று பட்டாசலைக் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சாரதாமாமி அவனுக்காக அவரிடம் குரல் கொடுத்தாள். அவர் மெதுவாகச் சிரித்தபடி,”பாம்பேக்கு” வருவையா? என்று கேட்டார். அவன் மெட்ராஸ்லே இருக்கேன் என்றான். காரணம் கேட்டபொழுது, “எனக்கு எழுத்தாளனாக இருக்க வேண்டும். அதற்கு மெட்ராஸ்தான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்றான். “சரி…பார்க்கலாம் ..கவலைப்படாதே…” என்றார். அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். மாலையில் அவர் தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காகக் காரில் ஏறும்பொழுது, “கவலைப்படாதே…நான் பாத்துக்கறேன்” என்று அவராகவே அவனைப் பார்த்துச் சொன்னார்.

    கார் புறப்பட்டதும் சாரதாமாமியும், பார்வதிமாமியும் ஒரே குரலில்,” கண்ணா …அவர் நிச்சயம் ஒனக்கு வேலை வந்கித்தருவர்” என்றனர். “ஒன்னோடு கவிதையெல்லாம் அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…அவருக்குத் தமிழ்ல ரொம்ப ஈடுபாடு உண்டு…அவர்தானே பாம்பாய் தமிழ்ச் சங்கத்துக்குத் தலைவர்…. அவர் ஒரு வார்த்தை சொன்னா அதக் காப்பத்துவர்” என்றாள் பார்வதிமாமி. அவர்தான் பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் “ஆதிலக்ஷ்மணன்”. காட்பரி நிறுவனத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தவர். அவனிடத்தில் அவருக்கு நிறைய அன்பு இருந்தது. அவனுக்கு அவர்மூலம் நிறைய இலக்கிய வாதிகளின் அறிமுகமும் கிடைத்தது. அவனுக்கு அந்த வருட இறுதியில் “காட்பரி நிறுவனத்தில்” இருந்து வேலைக்கான அழைப்பு வந்தது.

    21.01.2016

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 51

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய் என் முன்னே துள்ளி வந்து தோன்றி அழுவார், முணுமுணுத்துப் புகார் செய்வார். பீடத்திலிருந்து இறங்கி வந்து எனது காபியைக் குடிப்பார். எனது சிகரெட்டைப் புகைப்பார்.” கலில் கிப்ரான். (Mister Gabber)

    “நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச் செவியில் முணுமுணுப்பார் ! நானதைத் தவிர்க்க முயலும் போது, அவர் கெக்கரித்து மீண்டும் அர்த்தமற்ற வார்த்தைகளை நீரோட்ட வெள்ளம் போல் ஓட விடுவார்.” கலில் கிப்ரான். (Mister Gabber)

    ___________________
    காரணம்
    (Reasoning)
    ___________________

    கல்வி அடிப்படை யற்ற காரணம்
    உழப் படாத வயல் !
    சத்துணவு இல்லாத மனித
    உடம்பு !
    கடையில் விற்கப் படாத
    கடைச் சரக்கு !
    அளவு பெருகி
    மலிந்து போனால் மனிதருக்குச்
    சலித்து போவது !
    மிகுத்துப் போயின் காரணம்
    மதிப்பு இழக்கும் !
    கடையில் விற்கப் பட்டால் அதன்
    நன்மதிப்பை அறிபவர்
    உன்னத ஞானிகள் மட்டும்.
    காரணத்தை மூடன் ஏற்று
    ஆதரிப்ப தில்லை !
    பைத்தியம் என்பான்
    பித்தன் !
    மூடன் ஒருவனை நேற்று
    “எத்தனை மூடர் உள்ளார்
    நம்மிடையே ?”
    என்று கேட்டேன்.
    “கண்டுபிடிக்க நேரம் ஆகும் !
    முடியா தென்னால் ! என்பான்
    கடின மான செயலா ?
    ஞானியை மட்டும்
    மானிடர்
    எண்ணினால் போதுமே !
    ___________________

    முதலில் தெரிந்து கொள்
    உன் சுய மதிப்பை
    அதன்பின் நீ
    அழிந்து போக மாட்டாய் !
    மூல ஆதாரம் அறிவதே
    உனக்கு வழிகாட்டும் ஒளி ! அதுவே.
    உண்மைக்
    களங்கரை விளக்கு !
    வாழ்க்கைத் தோற்றத்துக்கு
    மூல ஆதாரம் உணர்வாய் !
    அறிவை உனக்கு அளித்துளான்
    இறைவன் !
    அந்த ஒளியில் நீ
    அவனை வழிபடு வதால்
    உனக்குத் தெரிந்திடும்
    உன் வலுவும் பலவீனமும் !
    உன் விழியில் உள்ள தூசி
    தொலைவில்
    உனக்கே தெரியாது போனால்
    பக்கத்து நபர் கண் தூசியைப்
    பார்க்க மாட்டாய் !
    ஒவ்வோர் நாளும் நீ
    உன் மனச் சாட்சியை
    உற்று நோக்கு !
    குற்றங் களைத் திருத்திடு !
    கடமையில் தவறினால்
    காரண அறிவும்
    கைவிட்டுப் போகும் !
    காரண மூலமும்
    பொய்யாகிப் போகும் !
    ___________________

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    884a9fb5-0b24-4910-8252-f3a7188a8380

    ”ஸ்ரீ பகவான் உவாச’’….
    ——————————————

    ”தோன்றி மறைந்துபின் தோன்றுவான் மீண்டுமெனத்
    தோன்ற இவன்பொருட்டு தோள்வலியோய் -தோன்றும்
    உளைச்சல் தகாது விளைச்சல் விஷமம்
    களையைக் களத்தில் களை”….கிரேசி மோகன்….

    Share
  • “தூய நினைவே சிவன்”

    மீ.விசுவநாதன்

    images
    வாயொன்று கூற மனமொன்றை எண்ணிடும்
    நாயின் பிறப்பாக நானுமே ஆனேன் !
    நினைவும் செயலுமே நேர்கோட்டில் வந்தால்
    அனைத்துமே ஆகு(ம்) அழகு.

    பனியில் இருப்பான் ! பளீர்ரெனத் தீயின்
    நுனியா யிருப்பான் ! நுரைபோல் தனித்து
    மறைபோல் மறைவான் ! மலைபோல் நிமிர்வான் !
    பிறையை அணிந்த பிரான் !

    வேண்டி யழைத்தாலும் வேண்டாது போனாலும்
    ஆண்டி யவந்தா(ன்) அகத்திலே தூண்டி
    விடுகிறான் தூய வினைகளை ! இன்பப்
    படுகிறான் என்செயல் பார்த்து.

    தொட்டு தினம்பூசை தொன்மையாய்ச் செய்தோற்கும்
    கிட்ட வரவில்லை ; கீழ்சாதி தொட்டன்பால்
    பூசைகள் செய்தவுடன் பூப்போன்ற உள்ளத்தில்
    ஆசையாய் வந்தானே அன்று.

    எடைக்கெடை யாகநாம் எத்தனை தந்தும்
    கிடைக்காது ஈசன் கிருபை – விடையில்
    அமர்ந்த சிவனை அகத்தில் அமர்த்த
    நிமிர்ந்த நிலையே நிதம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    48748693-171e-4acb-b350-a65dfea0fb5e

    ”கதாமகன் கண்ணன் கரமாழி ஏந்தி,
    பிதாமகர் பீஷ்மரிடம் போன, -உதாரிந்த,
    நாடகம், ’’பீஷ்மா நலமா’’ விசாரிக்கவே,
    வீடுஅகம் தேடி விரைவு’’….கிரேசி மோகன்….

    வழக்கமாக அகம் வீடு தேடும்….
    இங்கு வீடு அகத்தைத் தேடுகிறது….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கொல்லிமேல் கொட்டு வைத்தார்

     

    அடங்கி யகப்பட வைந்தினைக் காத்துத்
    துடங்கிய மூன்றினான் மாண்டீண் – டுடம்பொழியச்
    செல்லும்வாய்க் கேமஞ் சிறுகாலைச் செய்யாரே
    கொல்லிமேற் கொட்டுவைத் தார்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    அடங்கி, அகப்பட ஐந்தினையும் காத்து,
    தொடங்கிய மூன்றினான் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
    செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே
    கொல்லிமேல் கொட்டுவைத் தார்.

    பொருள் விளக்கம்:
    அடக்கம் என்னும் பண்பினைக் கடைப்பிடித்து, தனது கட்டுக்குள் அகப்படுமாறு ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒழுக்கத்துடன் வாழத் துவங்கி மாண்புடன் வாழ்ந்து, இவ்வுலக வாழ்வில் கொண்டுள்ள உடல் அழிந்து மறுமைக்குச் செல்லும் வழிக்குப் பயன் தரும் நன்னெறியைத் தக்க காலத்தில் செய்து வாழாதவர், உயிர் எடுக்கும் நச்சு உணவை நாடுவதற்கு ஒப்பாகும் செயலைச் செய்யும் அறிவிலியாவார்.

    பழமொழி சொல்லும் பாடம்: நன்னெறியைக் கடைப்பிடித்து, தக்க அறச்செயல்களைச் செய்யாமல் வாழ்வது அறிவற்ற செயலாகும். மண்ணுலகில் வாழும் முறைப்படி வாழ்க்கையை நடத்துபவர் தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார் என இதனைச் சுருக்கமாக,

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்: 50)

    என்று கூறும் வள்ளுவர்,

    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள்: 36)

    பின்னர் செய்வோம் என்று காலம் தாழ்த்தாது அறவழியைக் கடைப்பிடித்து ஒருவர் வாழ்ந்தால், அவரது மரணத்திற்குப் பின்னரும் அவர் நிலைத்த புகழுடன் வாழ அது உதவியாக அமையும் என்று மேலும் விளக்குகிறார்.

    குறிப்பு:
    ஒப்பிட்ட நான்கு* பழமொழி நானூறு உரையாசிரியர்களும் வெவ்வேறு வழியில் பொருள் சொல்லும் பாடலாகவும், பாடபேதங்கள் உள்ள பாடலாகவும் விளங்குவது இந்தப் பழமொழி நானூறு பாடல். ‘செய்யாரே’ என்பது செய்தாரே எனவும். ‘கொல்லி’ என்பது ‘கொள்ளி’ எனவும், ‘கொட்டு வைத்தார்’ என்பது ‘கோட்டு வைத்தார்’ எனவும் பேதங்கள் காணப்படுகின்றன. அத்துடன் கொல்லி என்று (உயிரை) அழிக்கும் செயலாகவும், கொல்லி என்பது கொல்லி மலையாகவும், கொள்ளி என்று நெருப்பாகவும் உரையாசிரியர்களால் பொருள் கொள்ளப்படுகிறது. கொட்டு என்று களைக்கொட்டு போல நிலத்தை அகழப் பயன்படும் கருவியாகவும், கோட்டு என்பது நெற்கூடையாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. கொண்ட பொருளிற்கேற்ப கொல்லி மலையின் மேல் நெல்லை குமித்து பிற்காலத் தேவைக்கு சேர்த்து வைக்காதவர் எனவும், நெருப்பின் மீது விதை நெல்லைச் சமைத்து உண்ணும் செயலைச் செய்பவர் எனவும், உயிர் கொல்லும் கிழங்கை கொட்டுக் கருவியால் அகழ்ந்து உண்ண முற்படுபவர் எனவும் பலவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. அவ்வாறே துறவற நெறியைக் கடைப்பிடித்தல், சனாதன நெறிப்படி வாழ்தல், மூன்று தீய குணங்களான செருக்கு, சினம், வஞ்சம் என்றவற்றைக் கட்டுப்படுத்துதல் என்று பாடலுக்குப் பலவகையில் உரையாசிரியர்கள் தங்கள் கருத்தினை ஏற்றிப் பொருள் உரைத்துச் செல்கிறார்கள்.

    எனவே, பொதுவாக, பிற்கால நலனைக் கருத்தில் கொண்டு தக்க காலத்தில் அறநெறியைக் கடைப்பிடித்து வாழாத ஒருவரது செயலை, விதை நெல்லைச் சமைத்து உண்டுவிடுபவர் செயல் போன்றோ, அல்லது நச்சுத் தன்மை கொண்ட உணவை உண்ண முயல்பவர் செயல் போன்றோ ஒரு அறிவற்ற, தொலைநோக்கற்ற செயலாக இப்பாடல் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இக்குழப்பங்களுக்குக் காரணம் இப்பழமொழி வழக்கொழிந்து போனதால் காலமாற்றத்தில் பொருள் புரியாத நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.

    *1. செல்வக்கேசவராய முதலியார் (1917); 2. நாராயண ஐயங்கார் (1918); 3. ம. இராசமாணிக்கனார் (1948); 4. புலியூர்க் கேசிகன் (2010)

    Share
  • எங்கள் ஊர் ராஜகுமாரி!

    -கவிஜி 

    இன்னும்
    அவளாகத்தான்
    இருக்கிறாள்… (more…)

    Share
  • தேசிய இளைஞர் தினம்!

    பவள சங்கரி

    சுவாமி விவேகானந்தர்  பாதையில் இன்றைய இந்திய இளைஞர்கள்

    DSC00876

    தமிழ்நாடு தேசிய சிந்தனைக் கழகமும் ரோட்டரேக்ட் சங்கமும் இணைந்து ஈரோடு வேளாளர் கல்லூரியில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 13.01.2016 அன்று “சுவாமி விவேகானந்தர் பாதையில் இன்றைய இந்திய இளைஞர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் தேசிய சிந்தனைக் கழகத்தின் சென்னை மாநிலக் குழு உறுப்பினரான திருமிகு இசைக்கவி இரமணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆகச் சிறந்த ஆக்கப்பூர்வமான சிந்தைகளை விதைத்துவிட்டுச் சென்றுள்ளார். மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பும், கேள்வி நேரப்பகுதியுமே இதற்கு சான்றாக அமைந்திருந்தது. வேளாளர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். ஜெயராமன் அவர்களின் சுருக்கமான இனிய உரை மற்றும் சிறப்பு விருந்தினர் குறித்த அழகான அறிமுக உரையுடன் இனிதே ஆரம்பித்த நிகழ்ச்சி, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர், திரு. மா.கோ.சி. ராஜேந்திரன் அவர்களின் எழுச்சிமிகு உரையைத் தொடர்ந்த அம்மேடை முழுமையாக திரு இரமணன் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. வழமையான அவர்தம் தேனிசைக் கானத்திற்கும் குறைவில்லாமல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. அரங்கம் ஆழ்ந்த அமைதியில் நற்சிந்தைகள் நிரம்பிய நல்லலைகளுடன் பரவியிருந்தது.

    DSC00883

    DSC00899

    சுவைபடத் தம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களை வெகு எளிதாக தம் பக்கம் இழுத்துக்கொண்டார், சிறப்பு விருந்தினரான திரு. இசைக்கவி இரமணன் அவர்கள். பல்வேறு அறிஞர்களின் மேற்கோள்களை வெகு சரளமாக எடுத்துக்காட்டி அவைகளை விவேகானந்தச் சிந்தைகளுடன் ஒப்பிட்டு மிக அழகான சொற்பொழிவாக அமைத்திருந்தார்.

    DSC00889

    தலைப்பிற்கேற்றவாறு மாணவர்களின் இன்றைய நவீன வாழ்க்கை முறைமைகளையும், பின்னோக்கிய காலங்களினூடே இன்றைய மாணவர்கள் இழந்த பல்வேறு சுவையான விசயங்களையும் வெகு நேர்த்தியாகச் சுட்டிக்காட்டி மாற்றங்கள் தேவை என்பதை மாணவர்கள் ஏற்கும் வகையில் வெகு இயல்பாக விளக்கிய விதம் அருமை! அன்றைய வாழ்க்கை முறையில் அன்றாட வாழ்வியல் நடைமுறைக்கான பணிகள் வெறும் வேலையாக மட்டும் இல்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து இனிமையாக பொழுது போக்குவதோடு, உடற்பயிற்சிக்கான வழிகளாகவும் இருந்ததையும், தாம் ஒரு கவிஞனாக இருப்பதில் தம் மனைவி முதல் ஏனையோருக்கும் எத்துனை துன்பம் என்பதை நகைச்சுவையுடன் இதமாகக் கூறி மாணவர்களை சிரிப்புக் கடலில் மிதந்தவாறு சிந்திக்கவும் வைத்தார். இன்றைய குழந்தைகளுக்கு நவீனத்துவம் என்ற பெயரில் இயற்கையான உடற்பயிற்சி முதல் இன்னும் எத்தனை எத்தனை இழப்புகள் என்பதை சற்று வருத்தமாகவே பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியை அழகாக தமிழிலும், ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கியும் உற்சாகப்படுத்தினார்.

    முதுகலை பட்டதாரி மாணவர்களின் கருத்தாழம் மிக்க வினாக்களுக்கும், பொறுமையாக அவர்கள் எளிதாக உணரும் வகையில் சிறப்பாக பதலளித்தது பாராட்டுதலுக்குரியது. பேராசிரியர்கள் சிலரும் கேள்வி நேரத்தில் பங்குபெற்று மாணவர்களையும் உற்சாகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாணவர்களின் ஆழ்ந்த ஈடுபாடும், பொறுப்பான போக்கும் கல்லூரியின் உயர் தரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    DSC00895

    நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது, ‘சரியான இலக்கு நிர்ணயம் செய்வது மட்டுமே வெற்றிப் பாதைக்கு வழியமைக்கும்’ என்ற சிந்தையை வெகு இலகுவாக, தெளிவாக, அருமையான எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களின் மனதில் பதியச்செய்ததுதான்.

    இசைக்கவி இரமணன் அவர்கள் ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆற்றிய உரை மாணவர்களின் மனதில் சுவாமி விவேகானந்தரின் பாதையில் பூக்கும் மலர்களின் வித்தாக ஊன்றியதோடு, நாளை ஆல விருட்சமாக வளர்ந்து விழுது பரப்பி மேலும் அவர்தம் சந்ததியினரையும் வழிநடத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    Share
  • முப்பெரும் பசிகள்!

    -சி. ஜெயபாரதன், கனடா

    இப்புவி மானிட வளர்ச்சிக்கு
    எழுபவை
    முப்பெரும் பசிகள்!                                             3hunger

    தருணம் தப்பாது
    தொப்பை நிரம்பத் தூண்டும்
    வயிற்றுப் பசி!
    உண்டி கொடுத்தோர் மானிடர்க்கு
    உயிர் அளிப்போர்.

    உடல் நலம், ஒளிமுகம் பெற
    பாலுறவு நாடும்
    உடற்பசி!

    மேலிரு பசிகள் தணிந்தபின்
    மூளை நாடும்
    ஞானம், வேதம், கீதை
    ஆன்மப் பசி!

    இப்புவியில்
    முப்பசி யின்றேல் மானிடம்
    குப்பை!

     

    Share
  • ரோஹித் வெமுலா கனவுக் குமிழிகளைத் தானே உடைத்துக் கொள்ளத் துரத்தப்பட்டவனின் மரணம் எழுப்பும் கேள்விகள்

    எஸ் வி வேணுகோபாலன்

    unnamed

    புன்னகை சிந்தும் இந்த முகத்தைப் பாருங்கள். ஒளி வீசும் அந்தக் கண்களில் எத்தனை கம்பீரமும், கனவுகளும், கற்பனைகளும் பளிச்சிடுகின்றன. இந்தப் புகைப்படத்தின் எந்தச் சிறிய சதுரத்திற்குள்ளாவது அவநம்பிக்கையின் விதைகள் தெரிகின்றனவா…”எப்போதுமே ஓர் எழுத்தாளராக விரும்பினேன். கார்ல் சாகன் போன்ற ஓர் அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன். கடைசியில் இந்தக் கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்தது” என்று கண்ணீரைப் பெருக்கும் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டுத் தூக்குக் கயிற்றை முத்தமிடவா இத்தனை பாடு எடுத்தாய் எங்கள் ரோஹித் வெமுலா ?

    ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலாவை இத்தனை மன அழுத்தத்திற்கும், வலி மிகுந்த வேதனைக்கும் கொண்டு நிறுத்தியது எது?

    ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பெயர் நீக்கம் செய்து கல்லூரி வளாகத்துள் அனுமதி மறுக்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களுள் ஒருவர் ரோஹித். அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் செயல்பட்டதற்காக இந்தப் பரிசு அவர்களுக்கு! பின்னே, என்ன ஆணவம், ஓர் உன்னதமான பல்கலையில் அம்பேத்கர் பெயரில் ஓர் அமைப்பை இயக்குவதா? அதுவும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பா ஜ க வீற்றிருக்கும்போது, சங் பரிவாரத்தின் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சங்கத்தின் விருப்பத்திற்கு மாறான ஒரு மாணவர் சங்கத்தை எப்படி சகிக்க முடியும்! ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதி இதெல்லாம் என்ன வெட்டிப் பேச்சு, பயல்களை அவரவர் இடத்தில் இருக்குமாறு தலையில் தட்டி வைத்தால்தான் எல்லாம் சரியாக இருக்கும், கொஞ்சம் விட்டால் அவ்வளவுதான், இதுதானே வலதுசாரி சாதிய வெறித்தனத்தின் வெறுப்பு அரசியல்? அந்த இழிவுபடுத்தலின் அராஜக பலிபீடத்தில் துடிதுடிக்கத் தன்னையே அழித்துக் கொண்டுவிட்ட மற்றுமோர் உயிர்தான் ரோஹித் வெமுலா.

    ஒரு மாணவர் இயக்கத்தை “பயங்கரவாத சக்திகள்” என்றும், “தேச விரோத அமைப்பு” என்றும் மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானிக்குக் கடிதம் எழுதி, குறிப்பிட்ட ஐந்து மாணவர்களை பல்கலையிலிருந்து ஒழித்துக்கட்டக் கேட்டுவிட்டு எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிறார் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. சுதந்திர தேசத்தில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக் கழகம், இரண்டு அமைப்புகளுக்கிடையே மூண்ட மோதலின் பின்னணியைக் குறித்து எந்தக் கவலையும் இன்றி, சாதிய ஒடுக்குமுறை பார்வையோடு ஒழுங்கு நடவடிக்கைக்குத் தீர்ப்பும் எழுதி இருக்கிறது. நடவடிக்கை எடுக்கப்பட்ட மாணவர்கள் விடுதிக்குள், பல்கலைக் கழகத்தின் பிரதான கட்டிடத்திற்குள், பொதுவான பகுதிகளுக்குள் எங்கும் நுழையாமல் ஆராய்ச்சியை மட்டும் தொடரலாமாம், என்ன வெட்கக் கேடான சட்டதிட்டம் என்று கொதிக்கின்றனர் ஜனநாயக சிந்தனையாளர்கள். இந்த அநியாய, ஒருதலைப் பட்சமான நடவடிக்கைக்கு எதிராக 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் இறங்கி இருந்தது அம்பேத்கர் மாணவர் சங்கம். திரும்பியும் பாராத நிர்வாகம், காதில் போட்டுக் கொள்ளாத துணைவேந்தர், எதிரான நடவடிக்கை எடுக்கத் தூண்டிய அரசியல் இந்தச் சதுரங்க வெறுப்பு ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் தமது வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டார் ரோஹித்.

    எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சம்பந்தப் பட்டவர்கள் யாருமே தப்பிக்க முடியாது. பல மாதங்களாக ரோஹித் புகார் எழுப்பி வந்திருக்கிறார். பேசாமல் தலித் மாணவர்களுக்கு ‘அட்மிஷன்’ நேரத்திலே உயிர்க்கொல்லி மருந்தும் சேர்த்து வழங்கி விடுங்கள், தூக்கு போட்டுக்கொள்ள வாட்டமான ஒரு கயிற்றையும் அவர்களுக்கு கொடுங்கள் என்று ஒரு கடிதம் கூட எழுதி இருந்தார்.

    குடும்பத்தை உதறிவிட்டுப் போய்விட்ட தந்தை, கூலி வேலை செய்யும் அன்னை, தனக்கு கிடைக்கவேண்டிய உதவித் தொகை ஏழு மாதங்களாக நிறுத்தப் பட்டிருப்பதற்கு நீதி கேட்கவில்லை ரோஹித் – யாரையும் குற்றம் சொல்லாத அவரது இறுதிக் கடிதத்தில், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நிலுவையை எப்படியாவது வாங்கி என் தாயிடம் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பது எத்தனை இரத்தம் துளிர்க்கும் சொற்கள்.

    பல கோடிப் பேரின் அறிவியல் சிந்தனைகளைத் தூண்டிவிடும் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், எழுத்துக்கள் என்று புகழ் வாழ்க்கை படைத்த அமெரிக்க அறிவியலாளர் கார்ல் சாகனைத் தனக்கு முன் மாதிரியாகக் கொண்டிருந்த ரோஹித் எப்படி தனது கனவுக் குமிழிகளைத் தாமே தட்டிச் சிதறடித்தார் என்பது இதயங்களை நொறுக்கிப் போடும் கேள்வி. அந்த அளவுக்கு அவரைப் புரட்டிப் போடும் வன்மமும், ஆதிக்க உணர்வும் ஒரு தாழ்த்தப்பட்ட மாணவராக உளவியலால் மிதிபட்டால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதை பா ஜ க தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் டுவீட்டரில் பிரதிபலித்திருக்கிறார். ஒரு தாழ்த்தப்பட்டவன் என்கிறவகையில் இழிவுக்கு எதிரான போராட்டம் என்ன என்பதை நான் நன்கறிவேன் என்பது அவரது பதில்.

    ரோஹித் வேமுலா என்ன மாதிரி இழிவுகளை சந்தித்திருப்பார் என்பதற்கு சான்றுகளை வெளியே தேட வேண்டியதில்லை. இந்தச் செய்திக்கு ஆன் லைனில் பதில் எழுதும் உயர்சாதி ஆதிக்க மன நிலை எப்படி வெறுப்பை உமிழ்கிறது என்பதைப் படித்தாலே போதும். என்ன ஏதென்று தெரியாமலேயே மறுப்பது, படிக்க வந்தாயா போராட வந்தாயா என்று கேட்பது (வித்யார்த்தி பரிஷத்திற்கு இது பொருந்தாது போலும்! இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு இது பொருந்தாது போலும்!), அது என்ன தலித் அறிவுஜீவி தனியாக முளைத்தார்களா என்று படுகேவலமாக வினவுவது என்று குவியும் பதில்களில் தெறிக்கும் மொழியில் மறைக்கமாட்டாத வெறுப்புணர்வும், சாதிய மேட்டிமைத் தனமும் கொட்டிக் கிடப்பதைப் பார்த்தாலே போதும்.

    இறுதிக் கடிதத்தைக் கூட எத்தனை கவித்துவமாகவும், காழ்ப்புணர்வைக் கக்காமலும், இயற்கையின் நேயராகவும், அறிவியலின் வழிபாட்டாளராகவும், பரந்துபட்ட மனிதத் திரள் தொலைத்துக் கொண்டிருக்கும் இயல்பான வாழ்க்கை குறித்த விசனத்தோடும் எழுத முடிந்த அந்தக் கைகள் எப்படி தூக்குக் கயிற்றை முடிச்சு போட்டுக் கொடுக்கப் போயிற்று என்ற கேள்விகள் இரவு முழுக்க துரத்திக் கொண்டே இருந்தன. என் முடிவுக்கான காரணங்கள் கேட்டு என் நண்பர்களையோ, பகைவர்களையோ அழைத்துத் துளைத்தெடுக்க வேண்டாம் என்ற வரியை எழுதுகையில் இந்தப் புன்னகை ததும்பும் முகத்தோடேவா எழுதப் பட்டிருக்கும்? ஜெய் பீம் என்ற முழக்கத்தோடு முடியும் கடிதம், அந்தப் புரட்சிச் சொல்லின் பொருளைச் சுமக்க மாட்டது திணறும் அளவு வர்ணாசிரம தருமத்தின் அநீதி நம் தேசத்தின் உயர் கல்விச் சாலையில் கோலோச்சுவது எத்தனை சாபமிகுந்தது ?

    தமிழகத்தில் ஒரு தலித் மரணம் அடைந்து ஐந்து நாட்கள் கழித்து, அவரது உடலைப் பொதுவழியில் எதுத்துச் சென்று புதைக்குமாறு விதிக்கப்பட்ட , நீதிமன்ற உத்தரவை காவல் துறையே கீழே போட்டு மிதித்து தனிப் பாதையில் கொண்டுசென்று புதைத்ததோடு, தட்டிக் கேட்டவர்கள் மீது தடியடியும் நடத்தியதை திருநாள் கொண்ட சேரியில் பார்த்தோம். ரோஹித் வேமுலா உடலைத் தங்களது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் செய்ய விரும்பிய தமது எண்ணத்தைத் தடுத்து, உறவினர்கள் யாரும் வந்து சேருமுன் காவல் துறை அவசர் அவசரமாக அம்பர்பேட்டையில் எரித்துவிடுமாறு செய்துவிட்டதை ரோஹித் வேமுலாவின் தாய் ராதிகா கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். பல்கலைக் கழகத்தின்முன் காவல் துறை குவிக்கப்பட்டிருக்கிறது. அநீதியைத் தடுக்கவோ, நியாயத்தை நிலை நாட்டவோ, நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்யவோ பயன்படுத்தக் கிடைக்காத அதிகாரத்தின் குவிப்பு ஆவேசமிக்க ஆர்ப்பாட்டங்களை அடக்கி ஒடுக்கவும், மிரட்டி அடக்கவும் கொண்டு வந்து நிறுத்தப் படுகிறது.

    அற்புதமான அறிவியல் மேதையாக, நட்சத்திரக் கூட்டங்கள் குறித்த கதைகளைக் குழந்தைகளுக்குக் காட்சிப் படங்களாக வழங்கத் தக்க ஆசிரியராக, வல்லுனராக உருப்பெற்று இருக்க வேண்டிய பயணத்தை ரோஹித் வேமுலா துண்டித்துக் கொண்டுவிட்டது சமூகத்தின் சோகம்.

    “……….நான் அறிவியலை, தாரகைகளை, இயற்கையை நேசித்தேன். மனிதர்கள் இயற்கையினின்றும் தங்களைத் துண்டித்துக் கொண்டுவிட்டதறியாது அவர்களை நேசித்தேன். நமது உணர்வுகள் இரவல் வாங்கப்பட்டவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்ட ஒன்று. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. செயற்கையான கலைகள் மூலம் நமது இயல்பான கலையை வாழ்விக்கிறோம். காயப்படாமல் அன்பு செய்ய முடிவதில்லை. மனிதர்கள் ஓர் எண்ணிக்கை, ஒரு ஒட்டு, ஒரு பொருள் என்ற ஏதோவோர் உடனடி தேவை பற்றிய அடையாளமாக தாழ்வுற்றுக் கிடக்கின்றனர். தமது உன்னத நிலையை இழந்துவிட்டு நிற்கின்றனர்…..”

    போன்ற வரிகளை ஒரு 28 வயது மாணவர் தமது இறுதி சாசனமாக எழுதிவிட்டுப் போக முடியும் என்பது நாம் எத்தனை சபிக்கப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதையே வெளிப்படுத்துகிறது. ரோஹித் வெமுலா தேடிக் கொண்ட முடிவை ஆதரிக்க முடியாதுதான். ஆனால் இந்த அவலம் நேர்ந்ததற்கான காரணங்களுக்குப் பதில்களைத் தேட மறுப்பதற்கு அதையே ஒரு சாக்காகச் சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது..

    *******************

    Share
  • அவன், அது , ஆத்மா (43)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    “பொங்கல் திருநாள்”

    எல்லோருக்கும் மகிழ்ச்சியான பண்டிகையில் “பொங்கல் திருநாளும்” ஒன்று. முதல் நாள் இயற்கையை வணங்கியும், மறுநாள் நமக்காக என்றும் தன்னையே தந்து உதவுகின்ற கால்நடைகளை, முக்கியமாக மாடுகளைக் கொண்டாடியும், காகம்போன்ற பறவைகளுக்கு உணவு படைத்தும் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் நன்னாள்.
    அவனது கிராமத்தில் பொங்கலுக்கு ஒருவாரம் முன்பாக வீட்டிற்கு வெள்ளை அடித்து, வாசல் திண்ணைச் சுவரில் காவியிலும், வெள்ளை நிறத்திலும் வண்ணம் பூசியும் அழகு செய்வார்கள்.

    ஒருமுறை அவனது வீட்டிற்கு வெள்ளை அடிக்க ஆள் வராததால் அவனுக்கு அம்மாவும், அக்காவும், அவனும் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ததும், எப்படி சுவர்களில் சுண்ணாம்பு வெள்ளை அடிக்க வேண்டும் என்று அம்மா சொல்லித்தந்ததும் ஒரு சுகமான அனுபவம்.

    பொங்கல் அன்று அதிகாலையிலேயே எழுந்து, வீட்டு வாசலை அம்மாவும், அக்காவும் மாட்டுச் சாண நீரால் தெளித்து, நன்றாகப் பெருக்கிய பின்னர், வீட்டு வாசலில் மிகப்பெரிய கோலம் போடுவார்கள். அதில் புள்ளி வைத்த கோலம் அதிகமாகவும், மிக அழகாகவும் இருக்கும். அவனும் அவர்களுடன் அச்சுக் கோலங்கள் போடுவான் . விதவிதமான கோலங்களுடன் எல்லோருடைய வீட்டு வாசலும் அழகாக இருக்கும். அதை ரசிப்பதற்கே தெருத்தெருவாக அவன் சுற்றி வருவான்.

    “பொங்கல் பூஜை”

    வீட்டின் முற்றத்தில் துளசி மாடத்தின் அருகில் சூரியன், சந்திரன் கோலம் போட்டு அதன் அருகில் ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைப்பாள் அம்மா. பக்கத்திலேயே இரண்டு பெரிய கரும்புகளும், மஞ்சள்க் குலையும் சுவரோடு சாத்தி வைப்பாள். ஒரு தாம்பாளத்தில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம்,தட்சிணையும், இன்னொரு தாம்பாளத்தில் பூஜைக்கான பூவும் எடுத்து வைப்பாள். காலையில் நல்ல நேரத்தில் பூஜை செய்வதற்காக அவர்கள் வீட்டிற்கான சாஸ்திரிகள் ப்ரும்மஸ்ரீ ரங்கவாத்யாரோ, ப்ரும்மஸ்ரீ சுந்தர வாத்தியாரோ வந்து பூஜை செய்வார்கள். நெய்வேத்யமாக சர்க்கரைப் பொங்கல். வடை, சுத்த அன்னம் எல்லாம் இருக்கும். பூஜை முடிந்தவுடன் அப்பா, சாஸ்திரிகளுக்கு தட்ஷிணையும், ஒரு முழுக் கரும்பும் தருவார். அம்மா சக்கரைப்பொங்கலும், வடையும் ஒரு பாத்திரத்தில் வைத்து அந்தப் பெரியவரிடம் அவனையோ, அவனுக்கு அக்காவையோ தரச்சொல்லுவாள். பிறகு சர்கரைப்பொங்கலும், வடையும் தந்து பக்கத்து வீட்டு அன்பர்களுக்கும் கொடுத்துவிட்டு வரச் சொல்லுவாள். அதன் பிறகு தாத்தா, அப்பா, சித்தப்பா, அக்கா எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடுவோம். அம்மா கடேசியில்தான் சாப்பிடுவாள். மதியம் வேலைக்கு வரும் “ரோசாலி”க்கும் ஒரு பாத்திரத்தில் சர்கரைப்பொங்கல், வடை, சாப்பாடு மற்றும் கரும்புத்துண்டு என்று தனியாக அம்மா எடுத்து வைத்திருப்பாள்.

    “மாட்டுப் பொங்கல்”

    மறுநாள் காலையில் சித்திரானங்கள் செய்து நெய்வேத்யம் செய்தபின்பு மஞ்சள்செடியின் இலையில் அந்தச் சாதத்தை வைத்து, ” காக்காய் கூட்டம் கலஞ்சாலும் என் கூட்டம் கலையாமல் இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டு காக்கைக்கு உணவளிப்பார்கள். குறிப்பாக உடன்பிறந்த சகோதரர்களின் நலனுக்காக இது ஒரு பிராத்த்தனை. இந்த நல்ல நாளில் சகோதரர்கள் தங்களது சகோதரிக்குத் தங்களால் இயன்ற பொருளுதவி செய்வார்கள். அவனுக்கு மாமா ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு ஐந்து ரூபாய், பத்துரூபாய், இருபத்தி ஐந்து ரூபாய் என்று அவனுக்கு அம்மாவுக்கு பணம் அனுப்பி வந்ததை அவன் நன்கு அறிவான். அப்பொழுதெல்லாம் அவனுக்கு அம்மா அவனிடம், ” நீயும் ஒனக்கு அக்காவுக்கு இது போல முடிஞ்சத அனுப்பி, எப்போதும் ஒத்துமையா இருக்கணும்” என்று நெறிப்படுத்துவாள்.

    இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கலன்று கிராமத்தில் உள்ள செல்வந்தர் வீடுகளில் உள்ள மாடுகளுக்கு கொம்புகளில் வண்ணம் பூசி, உடலெங்கும் கைச்சின்னம் பதித்து, நெற்றியில் பொட்டு வைத்து, கழுத்தில் மாலையிட்டு நல்ல அலங்காரம் செய்வார்கள். மாட்டுக் கொம்புகளிலும், கழுத்திலும் கரும்பு, பனங்கிழங்கு போன்றவைகளைக் கட்டி இருப்பார்கள். பிறகு திருஷ்டிக்காக வீட்டு வாசலில் வைக்கோலில் தீயிட்டு அந்தத் தீயைத் தாண்டிச் செல்லும் படியாக அந்த மாடுகளை மெதுவாக விரட்டுவார்கள். அந்தத் தீயைத் தாண்டிக் கொண்டு காளை மாடுகளும், பசுமாடுகளும், கன்றுக் குட்டிகளும் பாய்ந்து தெருவில் ஓடி வரும். அந்த மாடுகளை அந்தத் தெருவில் இருக்கும் அவனும், அவனுக்கு நண்பர்களும் விரட்டிச் சென்று பிடிப்பார்கள். சிலசமயம் முரட்டுக் காளைகள் முட்டக் காயம் பட்டதும் உண்டு.

    ஒரு முறை தெற்கு மாடத்தெருவில் வசித்து வந்த “வாழவுகந்த அம்மன் கோவில்” பட்டர் வீட்டில் பசுமாடையும், கன்றுக் குட்டியையும் அழகாக அலங்காரம் செய்து வெளியில் விடுகிற சமயம், அவனும் நண்பர்கள் H. கிருஷ்ணன், கபாலி, லக்ஷ்மண வாத்தியார் வீட்டு விஸ்வம், சன்னதித்தெரு கண்ணன் எல்லோருமாக அந்த வீட்டின் வாசலில் அந்த மாட்டைப் பிடிப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அந்தப் பசுமாடு வாசல் வரை வந்ததும் அவர்களைப் பார்த்து மிரண்டு திரும்பவும் அவர்களது வீட்டிற்குள்ளே ஓடிவிட்டது. அப்பொழுது அந்த வீட்டு பாட்டி,” டேய்…வால்களா…உங்களைப் பாத்து இந்த மாடு பயப்படறது….அது அந்த தீயத் தாண்டட்டும் ….அப்பறமா அத பிடியுங்கோடா…” என்று கெஞ்சினாள்.

    மாட்டுப் பொங்கல் அன்று அவர்களது தெருவில் நாள் முழுக்க மாடுகள் பாய்ந்து ஓடுவதும், அந்த மாடுகளைத் துரத்திக் கொண்டு அந்த கிராமத்துச் சிறுவர்களும், இளைஞர்களும் ஓடுவதும் பார்க்கவே பரவசமாக இருக்கும். அந்த மாடுகளின் கொம்பில் கட்டி இருக்கும் கரும்பையும், பனங்கிழங்கையும் பறித்து உண்பதே ஒரு அலாதியான சுகம். மாட்டுக் கொம்பில் இருக்கும் வண்ணக் கலவை அந்தக் கரும்பிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படியே அந்தக் கரும்பைக் கடித்துச் சுவைக்கும் பொழுது வாயெல்லாம் அந்த வண்ணம் ஒட்டிக் கொள்ளும். அவனுக்கு அம்மா,’ அப்படி அந்தக் கரும்புல என்னதான் இருக்கு” என்று கேலி செய்வாள்.

    “ஒரு வினோதமான விளையாட்டு தேங்காய் உருட்டு”

    இந்தப் பொங்கல் சமயத்தில் அவனது கிராமத்தில் ஒரு வினோதமான, அதே சமயம் ஒரு விறுவிறுப்பான விளையாட்டும் நடக்கும். அது “தேங்காய் உருட்டு” என்ற விளையாட்டு. சில நடுத்தர இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஈடுபடுவார்கள். ரதவீதி சுற்றி இந்த விளையாட்டு நடைபெறும். தேரடித் தெருவில் இந்த விளையாட்டுத் துவங்கி மீண்டும் அதே இடத்தில் முடிவடையும். ஒரு பந்தயம் வைப்பார்கள். அதாவது ரதவீதி முழுவதும் அதிக பட்சமாக இருபது உருட்டுகளில் முடிக்கவேண்டும், அதுவும் தேங்காய்கள் அதிகமாக உடையவும் கூடாது என்ற நிபந்தனையும் இருக்கும். ஒரு பெரிய சாக்கில் நல்ல தேங்காய்களை வைத்திருப்பார்கள். பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று பணம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட உருட்டுகளில், தேங்காயும் அதிகமாக உடையாமல் யார் அந்தச் சுற்றை முடிக்கிறார்களோ அவர்களுக்கு பந்தயப் பணம் கிடைக்கும். இதில் பணம் கிடைக்கும் என்பதை விட அந்த வித்யாசமான விளையாட்டில் பங்கு கொண்டு வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பே அதிகமாக இருக்கும். இந்த விளையாட்டை மிக நேர்த்தியாகவும், அழகாகவும், தேங்காய்கள் அதிகமாக உடையாமலும் விளையாடக் கூடியவர் “லாரிச் சங்கரன்” என்பவர். அவர் லாரியில் வரும் சரக்குகளை ஏற்றி, இறக்கி வைக்கும் கூலித் தொழிலாளி. அவருடன் வேலை செய்யும் சில நண்பர்கள் சேர்ந்துதான் இந்த விளையாட்டை ஏற்பாடு செய்வார்கள். அவனுக்கு இந்த விளையாட்டு ரொம்பவும் ரசனையாக இருந்தது. இப்பொழுதெல்லாம் கிராமத்தில் இந்த விளையாட்டே நின்று போனது.

    பொங்கல் வாழ்த்து வண்ணப் படங்கள்

    அவனுக்கும் அவனுக்கு அக்காவுக்கும் பொங்கல் திருநாளுக்காக அவர்களது உறவினர்களிடம் இருந்து “பொங்கல் வாழ்த்து” வண்ணப் படங்களுடன் தபாலில் வரும். ஒவ்வொன்றும் அருமையான வாசகங்களைக் கொண்டிருக்கும். குறிப்பாக மதுரையில் இருந்து ரமணிச் சித்தப்பாவும், பாம்பேயில் இருந்து சின்னம்பிச் சித்தப்பாவும் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ரமணிச் சித்தப்பாவின் கடிதமே நல்ல நகைச்சுவையாக இருக்கும். அழகான தமிழில், முத்து முத்தாக அவரது கையெழுத்தைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். பொங்கல் சமயத்தில் எப்பொழுது “போஸ்ட்மேன்” (தபால்காரர்) வருவார் என்று காத்திருப்பார்கள் அவனும், அவனுக்கு அக்காவும். அந்த அனுபவத்தை இப்பொழுது இழந்து விட்டோம் என்றுதான் அவன் நினைக்கிறான். என்னதான் “முகநூல்” (Face book) தொடர்பு இருந்தாலும், நமக்கு ஆத்மார்தமானவர்களின் உணர்வுகளை, அவர்களது கையெழுத்திலேயே புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தொடர்பு அறுந்து போனதாகத்தான் அவன் நினைக்கிறான். இன்றும் அவனுக்கு அப்பா தனது தொண்ணூறாவது வயதிலும் அவருடைய நண்பர்களுக்கு “தபால் கார்டு” மூலமாகத்தான் தனது கருத்தைப் பதிவு செய்துகொண்டிருக்கிறார் என்பது அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல்.

    Share