Month: June 2016

  • “குரு ரமணா”

    மீ.விசுவநாதன்

    மனத்தை அழிக்கப் பழகென்றாய் – ரமணா
    மனத்தில் நீயும் இருக்கின்றாய் !
    சினத்தை அழிக்கப் பழகென்றாய் – என்
    சிரமம் அறிந்து சிரிக்கின்றாய் !

    ஆசை அடக்கப் பழகென்றாய் – என்
    ஆசை உனதாய் அறிகின்றாய் !
    காசைத் துறக்கப் பழகென்றாய் -பொற்
    காசாய்ப் பொலிந்தே அழைகின்றாய் !

    அண்ணா மலையை நினையென்றாய் – நீ
    அண்ணா மலையாய்த் தெரிகின்றாய் !
    எண்ணா திருந்து களியென்றாய் – அந்த
    எண்ணா மருந்தின் சுவையானாய் !

    “யார்நீ?” எனநீ துளையென்றாய் – விடை
    யார்நீ அறிந்த அருளானாய் !
    ஊர்பேர் மறக்கப் பழகென்றாய் – நீ
    ஊர்பேர் வணங்கும் பொருளானாய் !

    (18.06.2016)

    Share
  • குடும்பம்

    பிரகாஷ்

        காடூர் என்ற கிராமத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். இக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகமாக இருந்தனர். அதிலும் கடினமாக உழைத்து படிக்கவைக்கும் போது நடந்த சம்பவங்களை இக்கதையில் சுட்டுகிறேன்.

    கலைச்செல்வி பள்ளிக்கு சேர்ந்த முதல் நாளே நண்பர்கள் துணைக்கு இல்லை என்று  வருத்தப்பட்டாள். அடுத்தநாள் பள்ளிக்குச் செல்லும்போது  தேவி, அபி, என்ற இரண்டு நண்பர்கள் கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தாள். கலைச்செல்வி பள்ளிக்குச் செல்லும்போது ஆற்றை கடந்து செல்லவேண்டும். ஆற்றை கடந்து செல்வதற்கு தொங்குபாலம் ஒன்று அமைத்திருக்கின்றனர். ஒரு நாள் மழை வந்ததும் ஆற்றில் நீரின் அளவு அதிகமாக வந்ததால் ஆற்றை கடந்து செல்லமுடியாமல் அவள் தவித்தாள்.

    எப்படி செல்வது என்று நின்று யோசித்தாள் கலைச்செல்வி

        எதிர்புரத்தில்  யாரோ வராங்க அவரிடம் உதவி கேட்போம். யாரோ? கேட்போம்.

        என்னங்க என்ன அந்தப்பக்கத்தில கூடிட்டு போயி விடுவீங்களா – சரிங்க

    ரொம்ப நன்றிங்க.

    உங்க பேர் என்னங்க? ஆனந்தன் என் பேர் கலைச்செல்வி சரிங்க – மீன்டும் சந்திப்போம் – வரங்க, வாங்க

    அடுத்தநாள் இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

    இப்படி தினமும் சந்தித்து வந்தார்கள்.

    இருவரும் சேர்ந்து ஒருநாள் ஊருக்குள் சென்ற போது அவர்கள் மீது மக்கள் பார்வையில் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது.

    ஊரு மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதால் நாம் இனி பிரிந்து வாழ வேண்டாம் என்ற கலைச்செல்வி ஆனந்தனிடம் சொன்னாள்.

    சரி எனக்குள்ள இதுவரைக்கும் உன்மேல எந்த ஆசையுமே இல்ல, உன்னோட விருப்பம் டா.

    பிறகு ஆனந்தன் கலைச்செல்வியை தனது காட்டிற்குள் தனிமையில் சந்திக்க விரும்பினான்  கலைச்செல்வியும் சந்தித்தாள். அவர்களை அறியாமலே தவறு நடந்து விடுகின்றது. அத்தவறை கலைச்செல்வியின் தாய் மாமன் பார்த்துவிடுகிறான்.

    இதை எப்படியாவது ஊருக்குள்ள சொல்லியே ஆகனும்.

    கட்டபஞ்சாயித்துக்கு ஏற்பாடு செய்து பஞ்சாயத்தில் நிக்க வைத்து இருவரையும் கேள்விகள் எழுப்பினார்கள்.

    நீங்க ரெண்டு பேரும் காட்ல என்ன பன்ணீங்க? பேசிட்டுதான் இருந்த – என்னடா அவ ஒன்னும் பன்னலன சொல்ரா, என்ன ஆதாரம் இருக்க தப்ப பன்னத்துக்க ஒன்னு இல்லங்க ஐயா.

    ஏமா பேசரத்துக்கு எடமா இல்ல போமா வேரவேளை இருந்தா பாருங்க.

    அப்பா – ஊருக்குள்ள பஞ்சாயத்து வெச்சி என் பேர கெடுத்துடயேடி உன்ன எவன்டி கட்டிக்கப்போரான்  எங்கயாவது போய் செத்து தொலஞ்சிடு என் கண்ணுக்கு முன்னாடி இருக்காத.

    கலைச்செல்வி  ஊரவிட்டு போயிட்டா

    உறவினர்கள் – ஏன்டா நல்லா இருந்தவள இப்படி பன்னிடயடா போயி தேடுங்கடா எங்க இருக்கானு

    அத்தை – வெள்ளையம்மாள் கலைச்செல்வியை சந்தித்ததும் மகிழ்ச்சியடைந்து எங்கயாவது ஒடிபோயி பொளச்சிக்கோமா.

    இந்த என்னால முடிஞ்சது 100/- ரூபாயும், 1 பவுன் நகை ஜாகரிதியாக போயிட்டுவா – சரி அத்த

    தாய் மாமன் – எங்க மாமா அவள வெளிய அனுப்பு. இல்லடா – இப்ப அனுப்ப போரிங்களா இல்லையா, எங்கிட்ட வம்பு பன்றதுக்கே குடிச்சிட்டு வந்து இருக்கியாடா.

    சரி சரி கோச்சிக்காதிங்க கோவத்தில பேசிட்ட மாமா.

    ஆனந்தன்

        “என் இதயத்தில் தீ மட்டும் எரித்து

        உடலில் உயிர் மட்டும் வாழ்ந்து இருக்கு

        கலைச்செல்வி நீ எங்க இருக்க”

    கலைசெல்வி வெளியுர் சென்றபின் ஒரு பஞ்சு கம்பெனியில்   வேளை செய்து இருந்தாள். தங்குவதற்கு ஒரு அறையும் 5000/- சம்பளமும் கொடுத்தனர்.

    ஆனந்தன் கலைச்செல்வியை தேடி அலைந்து கிடைக்காமல் அவர் அப்பாவை சந்தித்து பேசினான்.

    ஏன்டா உன்னையே நம்பி இருந்த எம் பொண்ண ஏமாத்திடயடா

    அவள் அத்தையை சந்தித்தான் – உனக்கு என்ன அந்த பொண்ணு உன்னையே நினச்சிகிட்டுயிருக்கு, பாவம் உண்காரியத்தை முடிச்சிட்டு  கைவிட்டுட்ட

    ஆனந்தன் – “பாவம் செய்த எனக்கு பரிகாரமே இல்லையா”

    தாய் மாமனை சந்தித்தான். அவன் அவங்க மாமாவை பார்த்து பேசினான்.

    டே மாப்பிள ஆசைய காட்டி மோசம் பன்னிட்டாங்கடா தெருவில விடவேண்டியவன நடு வீட்டுல வெச்சா இப்படிதான்டா.

    ஆனந்தன் – மாமா நான் உங்க பொண்ண கட்டிக்கிறன்.

    தாய் மாமன் – மாமா உங்க பொண்ண அவனே கட்டிகிரனு சொல்லிட்டா இல்ல கட்டிகுடுத்துருங்க.

    போடா பரதேசி இப்படிதான்டா அன்னைக்கும் சொன்னிங்க

    சரி, சரி அவன நாளைக்கு 7 மணிக்கு ஐயனார் கோயிலுக்கு வர சொல்லுடா சரி மாமா.

    தண்னி அடிப்பான கேளுடா இல்ல மாமா.

    நான் போயிட்டு வரன்.

    எங்கடா போன பொண்ணு வீட்டுக்கு.

    ஆனந்தனின் அப்பா நெல் குடோனில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிடுகிறார்.

    அப்பாவை மருத்துவ மனையில் சேர்த்து விட்டு ஆனந்தன் அங்கே இருந்தான்.

    ஆனந்தன் கலைச்செல்வியை பார்க்க முடியாமல் போய்விடுகிறான்.

    தாய்மாமனே திருமணம் செய்து கொள்கிறான்.

    ஆனந்தன் –  கலைச்செல்வியின் தாய் மாமனை சந்திக்க வந்ததும் இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிடுகிறான்.

    திரும்பி வீட்டுக்குச் சென்றுவிடுவான். ஆனந்தனின் அண்ணன் சிங்காரம் – சட்டையில் கைவைச்சி எங்கடா போன,  எங்கையோ போரன்டா எல்லா உன்னாலதான்டா கோவத்தில் ஆனந்தன் – அண்ணனை அடித்துவிடுகிறான். அண்ணி (வள்ளி) இதா என் புருசமேல கைவச்ச நல்லா இருக்கமாட்ட.

    ஆனந்தன் – எல்லோரும் சேர்ந்து என் வாழ்க்கையே பாழாக்கிடிங்களேடா. என்று சொல்விட்டு அவருடைய கரும்புத் தோட்டத்தில் குடித்துவிட்டு படுத்து இருந்தான்.

    அவன் அண்ணி “வள்ளி” வேறு ஒருவருடன் தொடா்புடையதை பார்த்துவிடுகிறான். வள்ளியும் ஆனந்தனை பார்த்துவிடுகிறாள்.

    ஆனந்தன் வீட்டிற்குச் செல்வதற்குள்ளே அவள் சென்று விடுகிறாள். சென்றதும் அழுது கொண்டு இருப்பாள் மாமன் ஏன்டி அளுகிற ஏங்க உங்க தம்பி என்ன கைய புடிச்சி இழுத்துடான்.

    ஆனந்தனின் அப்பா அவனிடம் எதுவும் கேட்காமலே அடித்து வீட்டைவிட்டு வெளியே போடா நாய.

    இன்னும் எத்தனபேரு வீட்டுல கைவைக்கப்போரானோ.

    மீன்டும் ஆனந்தன் இரவு வீட்டுக்கு வந்து கதவை தட்டினான் அப்பா திறந்து விடுவார், அம்மா பசிக்குதம்மா அம்மா, அவன்தான் கேக்குரான் இல்ல சாப்பாடு போடு சாப்பிட்டும். சாப்பிட்ட பின் அழுதுகொண்டே அம்மாவை பார்க்கிரான். அவன் பார்க்கிர பார்வையே வேறமாதிரி இருக்கு போட வெளியே என்று திட்டிவிடுகிறாள் தாயும்.

         “என்ன பத்துமாசம் சுமந்து பெத்தவளே

             இப்படி நினைத்துவிட்டாள் என்று”

    மருந்து குடித்துவிட்டு இறந்து விடுகிறான். அவனுடைய நண்பன், அப்பா, அம்மா, உறவினர்கள் ஆகியோர் அழுது கொண்டு இருந்தார்கள்.

    பெத்த மகன சொல்லி வழத்தாம விட்டுட்டு அழுது என்னப் பன்றது,

    ஊா் மக்கள் இன்னும் என்ன ஆக வேண்டிய காரியங்களை பாருங்க.

    நண்பன், டே போங்கடா எனக்குத் தெரியும் என்ன பன்னனும் என்று ஆனந்தனை எரித்துவிட்டு வீடு திரும்பும்போது அம்மாவை பார்த்து அவன் சொன்னான். மீண்டும் மரறுஜென்மத்துல எனக்க மகனா பிறந்து வருவான்.

    Share
  • படக்கவிதைப் போட்டி .. 69

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13493059_1033652313355634_1587480765_n
    95475568@N05_rவெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 9

    நிர்மலா ராகவன்

    அப்பாவுக்கு நன்றி

    நலம்-1-1

    இளவரசி எங்கள் பள்ளியில் இறுதியாண்டை முடித்துவிட்டு, பரிசோதனைக்கூடத்தில் உதவியாளாக வேலை பார்த்தாள். இரண்டு ஆண்டுகளாக அவள் ஒருவனைக் காதலித்து வந்தது எனக்குத் தெரியும். ஒரு நாள் ரொம்பக் கோபமாக இருந்தாள்.

    `என்ன ஆச்சு, ஈலா?’ என்று விசாரித்தேன். (இளவரசி என்ற பெயர் வாயில் நுழையாததால், அவள் சீன ஆசிரியைகளுக்கு `ராசி’. பிறருக்கு ஈலா).

    `எப்போ பார்த்தாலும், நாம்ப கல்யாணத்துக்குப்புறம், ஒன் சம்பளத்திலே வீடு வாங்கலாம், காடி வாங்கலாம்னு அதே பேச்சுத்தான்!’

    `அவனுக்கு ஒன்னைவிட ஒன் சம்பாத்தியத்திலேதான் கண். வேலையை விடப்போறேன்னு சும்மா மிரட்டிப்பாரு. ஒன்னை விட்டுடுவான்!’ என்று சிரித்தேன்.

    அவள் யோசித்தபடி போனாள். சில தினங்களுக்குப்பின், `நேத்து நாங்க மீட் செஞ்சப்போ, `ஸாரி. நான் ஒன்னைக் கல்யாணம் செய்துக்க முடியாது’ன்னு அவனை விரட்டிட்டேன்,’ என்று கூறினாள். அப்படியும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை. `இவன் ஆடம்பரமா வாழ நான் சம்பாதிச்சுப்போடணுமா?’ என்று உறுமினாள்.

    இளவரசி குள்ளமாக, குண்டாக, களையான முகத்துடன் இருப்பாள். அவளுடைய உருவத்தைவிட, அவளால் ஈர்க்கப்பட்ட ஆண்கள் அவளுடைய அரசாங்க உத்தியோகத்தில் கண்ணாக இருந்தவர்கள்தாம். அவள் காலம் முடியும்வரை அளிக்கப்படும் ஓய்வூதியம் அதற்குப் பின்னர் கணவன் உயிரோடு இருந்தால், அவனுக்குக் கிடைக்கும். இது போதாதா, குறுகிய காலத்தில் வெற்றிப்படியில் ஏறத் துடிப்பவர்களைக் கவர!

    `சண்டை போட்டானா?’ கவலையுடன் விசாரித்தேன்.

    `அதெல்லாம் இல்லே. வருத்தமா, தலையைக் குனிஞ்சுக்கிட்டு போயிட்டான்’.

    இளவரசியின் தந்தை துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்தவர். மகளை நல்லவிதமாக வளர்த்திருக்கிறார். அதனால், சுயநலத்துடன் அவளைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த காதலனை உதறும் துணிச்சல் இருந்தது. பொதுவாக, நல்லவரோ,கெட்டவரோ, பெற்ற தந்தையைப்போல் இருப்பவர்களையே பெண்கள் தம்மையுமறியாமல் வரிக்கிறார்கள்.

    அவளுக்குத் தன் தந்தையின் அருமை நன்றாகப் புரிய இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.

    இன்னொரு நாள், `என் அப்பா எவ்வளவோ கஷ்டத்தோட என்னைப் படிக்க வெச்சு, ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருக்காரு. அவருக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு தெரியல. ஏதாவது செய்யணும்போல இருக்கு. ஆனா என்னான்னு புரியல,’ என்று என்னிடம் வந்தாள்.

    மாஜி காதலனுடன் ஒப்பிடும்போது, தந்தை அவளுக்குத் தெய்வமாகவே தெரிந்திருக்க வேண்டும். எப்படி தன் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, சக்திக்கு மீறி செலவு செய்து அவளைப் படிக்க வைத்திருக்கிறார்!

    `அவருக்குச் சாப்பாட்டில பிரியமா?’ என்று விசாரித்துவிட்டு, ஒரு சமையல் குறிப்பை எழுதிக்கொடுத்து, விளக்கினேன்.

    இரண்டு நாட்கள் பொறுத்து, வாயெல்லாம் பல்லாக வந்தாள். `இந்தமாதிரி அம்பாங் தெரு ஐயர் கடை ரவா தோசை சுட எங்கே கத்துக்கிட்டே’ன்னு அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாரு! நிறையச் சாப்பிட்டாரு!’

    (அவர் குறிப்பிட்ட கடை கோலாலம்பூரின் பிரதான தெருவில் இன்றும் இருக்கிறது. பல கைகள் மாறிவிட்டன. எங்கள் குடும்ப நண்பர் — ஒரு இஸ்லாமியர் — அதை நடத்தியபோதும், அதன் பெயர் என்னவோ ஐயர் கடைதான்! சைவ உணவு மட்டும்தான் அங்கு கிடைக்கும் என்பதாலோ, இல்லை, பழக்க தோஷத்தாலோ!)

    அவளுடைய பூரிப்பு என்னையும் தொத்திக்கொண்டது.

    பெற்றோருக்கு நன்றி வாயால் சொல்ல வேண்டுவதில்லை. அவர்களுக்குப் பிடித்தமானவற்றை — வெளியில் அழைத்துப்போவதோ, எதிரில் உட்கார்ந்து நம் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதோ — செய்தாலே போதுமே! அப்போது அவர்கள் அடையும் ஆனந்தம், `நாம் பிள்ளைகளை நல்லவிதமாகத்தான் வளர்த்திருக்கிறோம்!’ என்ற நிறைவுதானே இறுதிக்காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் வேண்டுவது!

    தொடருவோம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 68 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13444181_1029839340403598_905366858_n

     

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் புதுவை சரவணன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    மலைப் பாதையில் மழை வரும் முன்பே குடை பிடித்துச் செல்லும் இச்சிறுவன் தான் யாரோ?

     

    
    

    விளையாடும் பருவம் இது

    விளையாட நேரம் ஏது

    சின்னத் திரையில் சிறு பிள்ளைப் பருவமும்

    வெள்ளித் திரையில் விடலைப் பருவமும்

    களி கொள்ளும் காலம் இது.

    திரைக்குள் காணும் உலகை விடுத்து

    திரைக்குள் அப்பால் உள்ள

    வசந்த உலகைக் காண

    எண்ணச் சிறகை விரித்து

    வண்ணக் கனவுகளை

    வகையுற அமைத்து

    வாகை சூடும்

    நாள் இது !

    என்று வானவில் குடை விரித்து ஒய்யாரமாய் அடி எடுத்து வைக்கும் இச்சிறுவனுக்கு கவிஞர்கள் எழுதிய பாக்களைப் பார்ப்போம். இனி,

    இளைய தலைமுறைக்கு பெற்றோர்களே வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றது இக்கவிதை,

    வெயிலும் மழையும் இலையெனிலும்
    வேடிக்கைக் காகக் குடைபிடிப்பான்,
    பயிலும் பள்ளி விடுமுறையில்
    பறக்கச் சிறகுகள் வந்துவிடும்,
    துயிலும் பொழுதைத் தவிரதினம்
    துடிப்பா யிருக்கும் பருவமிது,
    இயல்பிதை வளர்த்தே நல்வழியில்
    இவனைச் செதுக்குவீர் பெற்றோரே…! – செண்பக ஜெகதீசன்…

    சின்னஞ் சிறு வயதில் துடிப்பாய் இருக்கும் சிறுவர்களின் இயல்பினை உணர்ந்து அவர்களை அரவணைப்பதும், நிலைப் பிறழாமல் நடக்க நல்வழி காட்டுவதும், பெற்றோரின் கடமை என்கிறார் கவிஞர்.

    Share
  • அபிராமியே.. எழில்ராணியே !!!

    க. பாலசுப்பிரமணியன்

     

    ஒரு நாளும்  இரு விழியும்  போதுமோ உனைக்காண,

    ஒரு குரலும் ஒரு மொழியும் போதுமோ உனைப்பாட,

    ஓருயிரும் ஒருலகும்  போதுமோ உன்னருள்நாட,

    உலகாளும் அபிராமியே ! உளமாளும் எழில்ராணியே !

     

    நிறைஞானி நிலைமறந்து நிறைநிலவாய் நினைந்திடவே

    காரிருளில் ஒளிர்நிலவாய் வலம்வந்த ஓங்காரியே !

    பிறைதன்னை தலைசூடி பித்தான பரமேசன்

    பிணிதீர்க்க சரிபாதி உடல்கொண்ட சாம்பவியே !

     

    குலம்காத்து நலம்காத்து மனம்காத்து உயிர்காத்து

    விடையீசன் துணைகாத்து வினைதீர்க்கும் விசாலாட்சியே !

    மலையரசன் மகளாகி கலையரசன் துணையாகி

    அருளரசின் தாயான மாமேரு மலைவாசியே !

     

    விடியாத பிறவிக்கும் விதிமுடிக்கும் கூற்றுக்கும்

    இடையான வாழ்விற்கு வழிகாட்டும் இசைஞானியே!

    சிலையாக நீயிருந்தும் கலைக்கரும்பாக இனிக்கின்றாய் !

    விளையாட என்னைவைத்து விதியென்று சொல்கின்றாய்!

     

    வித்தாக வினையாக சொத்தாக சுகமாக

    விளையாத கனியாக வாசலில் நிற்கின்றாய்!

    அறியாத அறிவுக்கும் புரியாத புதிருக்கும்

    நினையாத நினைவுக்கும் அப்பாலே அழைக்கின்றாய்!

     

    பூவாகக் கனியாகப்  பொழிலாக எழிலாக

    பூங்காற்றின் இதமாக அறிகின்றேன் பூங்குயிலே !

    பொலிவாக நடைபயின்று பூபாரம் இறக்கிடவே

    புதுநிலவாக ஒளிதந்து புலன்காப்பாய் அபிராமியே!

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 32

    க. பாலசுப்பிரமணியன்

    தூக்கமும் கற்றலும்

    education-1-2-1

    “தூங்கி வழியாதே. புத்தகத்தைப் படி ” என்று புத்தகத்தோடு போராடும் மகனுக்கு அறிவுரை கூறும் தந்தை.

    “புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருது” என்று பரீட்சைக்கு முன்னால் தன் நண்பனுக்கு வழிமொழியும் நண்பன்.

    “தூங்குவதற்கு முன்னாலே நான் கொஞ்சம் புத்தகம் படிப்பேன் . தூக்கம் தானாக வந்துவிடும்” என்று புன்னகையுடன் தன் தூக்கக் கலையை விளக்கும் என் ஆபீஸ் நண்பர்..

    தூக்கத்தின் பேராண்மையைப் பற்றி போற்றாத மனிதரே கிடையாது எனச் சொல்லலாம். தூக்கத்திற்க்கும் புத்தகங்களுக்கும் கற்றலுக்கும் உள்ள  உறவுதான் என்ன?

    “தூக்கத்தின் போது மூளை பழுது பார்க்கப்படுகிறது. அது மீண்டும் வேலை பார்ப்பதற்கான சக்தியையும் புத்துணர்ச்சியையும் பெறுகிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜான் மெடீனா என்பவர். ஆகவே தூக்கம் என்பது இயற்கை தந்த வரப்பிரசாதம். ஆனால் உண்மையிலே நாம் தூங்கும் பொழுது நமது மூளை தூங்குவதில்லை. அது தன்னுடைய வேலையை அமைதியாக ஒரு தங்கு தடையின்றி செய்து கொண்டிருக்கிறது.

    அந்த நேரத்தில் தன் பதிவிலுள்ள எண்ணங்கள், கருத்துக்கள், நினைவுகள் அனைத்தையும் அது மறுபரிசீலனை செய்து அடுத்த செயலுக்காகத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, நாம் கண்மூடிய சில நேரம் வரை உள்ளே கண்களில் அசைவுகள் எற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை REM Sleep ( விரைவான கண் இயக்கத் தூக்கம் ) என்று சொல்லுவார்கள்.

    மூளை மிகச் சிறப்பாக வேலை பார்க்க ஒரு மனிதனுக்கு குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் தேவை என்று மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நல்ல தூக்கம் அடுத்த நாள் ஒரு மனிதனுடைய அறிதல் புரிதலுக்கும் கற்றலுக்கும் மிகத் தேவையாகவும்  இருக்கின்றது .  ஆகவே அதிக நேரம் கண்விழித்துப் படிப்பதால் மட்டும் கற்றல் சிறப்பாக நடக்கிறது என்பது ஒரு தவறான கருத்தாகத் தெரிகின்றது. கற்றலின் போது கவனச் சிதறல் இல்லாமை, ஈடுபாடு, மற்றும் ஆர்வம் ஆகியவையே கற்றலைச் சிறப்புறச்  செய்கின்றது  .

    நான் சிறுவனாக இருந்தபொழுது என்னை தினம் காலை நான்கு மணிக்கு படிப்பதற்காக எழுப்பி விடுவர். “காலை எழுந்தவுடன் படிப்பு ” என்ற பாரதியின் கூற்றுக்கேற்ப அந்த நேரம் முழுவதும் படிப்பதற்க்காகச் செலவிடப்படும் “அந்த நேரத்தில் படித்தால் மனதில் நன்றாகப் படியும் ” என்ற பெரியோர்கள் அறிவுரை தூக்கத்திற்குப் பின் தயாராக இருக்கும் மூளையின் திறனுக்கு ஊட்டமாக அமைந்தது. ஆனால் தற்காலத்தில் பலரும் கண்விழுத்து இரவில் படித்து தாமதமாகத் தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் காலையில் எழுந்து படிப்பவர்களை “குயிலென்றும் ” இரவில் கண்விழித்துப் படிப்பவர்களை “ஆந்தையென்றும்” அடைமொழி வைத்து அழைக்கின்றனர். இதில் எது சரியானது என்பது பற்றிய தொடர் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் “குயில்”களுக்குத்தான் இதுவரை  அதிக மதிப்பெண்கள்  கொடுக்கின்றனர்.

    பல நேரங்களில் சிறிது நேரம் படித்தாலே தூக்கம் வருகின்றது என்று அங்கலாய்ப்பவர்கள் தாங்கள் படிக்கும் பொழுது புத்தகத்தை சரியான தூரத்திலோ அல்லது முறையினில் வைக்காமலிருந்தாலோ, அல்லது அதிக நேரம் படித்திருந்தாலோ, அல்லது வேறு மன உளைச்சல்களுடன் படித்ததாலோ கண்கள் சோர்வடைந்து தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு, ஆகவே புத்தகங்களை படிக்கும் பொழுது அவைகளை எங்கே எப்படி வைக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், எந்த விதமானஎழுத்து மற்றும் எழுத்துருக்கள் கண்களுக்கும்  கற்றலுக்கும்  சாதகமாக அமைகின்றன என்பது பற்றியெல்லாம் அறிந்து கொள்ளுதல் அவசியம். இந்த முறைகளையும் பழக்கங்களையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் அவசியம்.

    சில சமயங்களில் பகல் நேரங்களில் நாம் உணவு உண்ட பின்னோ அல்லது பகலில் நீண்ட நேரம் ஆழமான சிந்தனையினாலோ அல்லது உடலுழைப்பினாலோ மூளை சோர்ந்து அறிதல், புரிதல், மற்றும் கற்றலுக்கு மறுப்புத் தெரிவிக்கின்றது. கொட்டாவி விடுதல், கண்களில் ஒரு கிறக்கம், மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தூங்குதல், பயணங்களின் பொழுது கண்ணுறங்குதல் போன்றவை மூளை ஓய்வைத் தேடுவதின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. அந்த நேரங்களில் ஒரு சிறிய தூக்கம் மூளையின் சோர்வை நீக்கி அதை மீண்டும் வேலைக்குத் தயார் செய்கின்றது.

    சப்பானில்  பள்ளிகளில் மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கட்டாய ஓய்வு தந்து உறங்க வைக்கின்றனர். அவர்களின் கற்றலை மேம்படுத்த இது மிக உதவியாக இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகின்றது.

    தொடரும்…

    Share
  • பயன்மிகுந்து நிற்குதன்றோ !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

    Valluvar

    வள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம்

    தெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது

    அள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவதனால் 

    நல்லதெனப் போற்றுகின்றார் நாட்டிலுள்ள மக்களெல்லாம் 

    கள்ளமெலாம் அகல்வதற்கும் கயமைவிட்டு ஓடுதற்கும்

    நல்லதொரு மருந்தாக நம்குறளும் இருக்கிறது 

    உள்ளமதில் குறள்கருத்தை உருவேற்றி விட்டுவிடின்

    இவ்வுலகில் நல்வாழ்வு எல்லோர்க்கும் அமையுமன்றோ !

     

    பலநூல்கள் வந்தாலும் பாரில்நிலை நிற்கின்ற 

    பக்குவத்தைப் பெறுவதற்கு பக்குவமும் வேண்டுமன்றோ

    குறள்வந்த காலம்முதல் தலைநிமிர்ந்து நிற்குதென்றால்

    அதுகூறும் அத்தனையும் அனைவருக்கும் பொருந்துவதே 

    நிலையான அத்தனையும் குலையாமல் கூறுவதால் 

    தலையாய நூலாகக் குறளொன்றே திகழ்கிறது

    தொலைநோக்குப் பார்வையுடன் சொல்லிநிற்கும் கருத்தாலே

    நிலையாக நிற்கும்குறள் நெஞ்சமெலாம் நிறைந்திருக்கு !

     

    ஈரடியால் பலகருத்தை இலகுவாய் சொன்னகுறள் 

    எல்லோரின் வாழ்க்கைக்கும் ஏற்றதாய் இருக்குதன்றோ 

    பாரிலுள்ள பலபுலவர் பலகருத்தைப் பகர்ந்திடினும்

    சீரான நூலாகத் திருக்குறளே திகழுதன்றோ 

    கார்கொண்ட மேகமெனக் கருத்துமழை பொழியும்குறள்

    யார்மனதும் நோகாமல் நற்கருத்தைப் பாய்ச்சுதன்றோ 

    வேருக்கு   நீராக  வீரியமாய் நிற்கும்குறள் 

    பாருக்கு வந்ததனால் பயன்மிகுந்து  நிற்குதன்றோ !

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 213

    மலர்சபா

    மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை

    மன்னவன் கட்டளைப்படி கண்ணகி அவையை அணுகுதல்

    3d5e47f9-e7be-4bee-9bb9-47bb732ac3d3

    அரசன் வாயிலோனிடம் கூறினான்:
    “அத்தகையவள் இங்கே வருவாளாக…
    அவளை அழைத்து வருவாயாக..”

    பாண்டியன் வினா

    கண்ணகியைப் பார்த்து அரசன் கேட்டான்:
    “நீர் வார்க்கும் கண்களையுடைய பெண்ணே!
    என் முன் நிற்கும் கொடி போன்றவளே..
    நீ யார்?”

    கண்ணகியின் மறுமொழி

    “ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாத மன்னவனே!
    உன்னிடம் குறை ஒன்று சொல்லக்கூடியவளாய்
    நான் இருக்கிறேன்.
    இகழமுடியாத சிறப்பு வாய்ந்த
    தேவர்களும் போற்றும்படி
    புறா ஒன்றுக்கு நேர்ந்த துன்பம் போக்கிய
    சிபி மன்னனும்,

    தன் அரண்மனை வாயிலில் கட்டியுள்ள
    மணியின் நடுவில் உள்ள நா அசைய
    அவ்வொலி எழுப்பிய பசுவின்
    கண்களில் இருந்து வழிந்த நீர்
    தன் நெஞ்சைச் சுட்டதால்,
    பெறுவதற்கு அரிய தன் ஒரே மகனைத்
    தேர்க்காலில் இட்டுக் கொன்ற
    மனு நீதிச் சோழனும் ஆட்சி செய்த
    பெரும்புகழ் வாய்ந்த பூம்புகார் எனது ஊராகும்.

    வீரக்கழலைக் கட்டிய மன்னனே!
    அங்கே குற்றமற்ற சிறப்புடைய புகழ் வாய்ந்த
    பெருங்குடியைச் சேர்ந்த மாசாத்துவான் எனும்
    வணிகனின் ஒரே மகனாய்ப் பிறந்து
    ஊழ்வினை துரத்தியதால்
    பொருள் ஈட்டி வாழ விரும்பி….

    உன் மதுரை நகரில் புகுந்து
    இங்கே என் காற்சிலம்பை விற்க வந்தபோது
    உன்னால் கொலைக்களத்தில் வெட்டப்பட்டுக்
    கொலையுண்ட கோவலனின் மனைவி நான்..
    என் பெயர் கண்ணகி ” என்றாள்.

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • குறளின் கதிர்களாய்…(125)

     

     

    பயன்தூக்கார் செய்த வுதவி நயன்தூக்கின்    

    நன்மை கடலிற் பெரிது. 

         -திருக்குறள் -103(செய்ந்நன்றி அறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    உதவியில் உயர்வு

    பயன் கருதாமல் உதவுதலே..

     

    அதன்

    சிறப்பைச் சீர்தூக்கிப் பார்த்தால்,

    அதனால் வரும் நன்மை

    அளவில் பெரிது,

    அலைகடலை விட…!

     

    குறும்பாவில்…

     

    பயன்கருதாதவர் செய்த உதவியால்

    பெற்ற நன்மையின் சிறப்பு

    பரந்த கடலினும் பெரிது…!

     

    மரபுக் கவிதையில்…

     

    பலனாய் என்ன கிடைக்குமென

         பார்த்தே உதவி செய்யாமல்,

    நிலைக்கும் அன்பினைப் பெரிதாக

       நினைத்தே உதவுவோர் சிறப்பினையே

    அலசிப் பார்க்கையில் தெரியும்பார்,

      அதனால் வந்திடும் நன்மையதும்

    அலைகள் நிறைந்த கடலினிலும்

      அளவில் மிகவும் பெரிதென்றே…!

     

    லிமரைக்கூ…

     

    பயன்பாராமல் உதவுதல் அரிதே,

    உதவிடின் அதுபோல், வரும்நன்மை

    அளவினில் கடலைவிடப் பெரிதே…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஒதவிசெய்யணும் ஒதவிசெய்யணும்

    அடுத்தவங்களுக்கு ஒதவிசெய்யணும்,

    ஆதாயத்தப் பாக்காம ஒதவிசெய்யணும்

    அளவில்லாம ஒதவிசெய்யணும்..

     

    அப்புடி

    ஒதவுறவுங்க ஒசந்தவுங்க,

    உண்மயிலே ஒசந்தவுங்க,

    அந்த

    ஒதவியால வரும்நன்ம கொஞ்சமில்ல

    அதனோட பெருமைக்கும் பஞ்சமில்ல,

    அது பெருசு மிகப்பெருசு

    அந்தக் கடலவிடப் மிகப்பெருசு..

     

    அதால

    ஒதவிசெய்யணும் ஒதவிசெய்யணும்

    அடுத்தவங்களுக்கு ஒதவிசெய்யணும்,

    ஆதாயத்தப் பாக்காம ஒதவிசெய்யணும்…!

     

    செண்பக ஜெகதீசன்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • என்றுமே வணங்கிநிற்போம் !

     
    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    images-63-3
    அப்பாவின் தோழேறி
    அவர்மார்பில் உதைத்துநிதம்
    துப்பிநாம் நின்றாலும்
    சுகமுடனே அதையேற்பார்
    நித்திரையில் எமையணைத்து
    நீங்காமல் அவர்படுப்பார்
    நினைத்துநாம் பார்த்துவிடின்
    நெக்குருகி நிற்போமே !

    தோழேறி நின்றநாம்
    தோழளவு வளர்ந்தபின்பும்
    தன்தோழில் எமைத்தாங்கும்
    தருமசீலர் அப்பாவே
    எம்குறையைத் தம்குறையாய்
    ஏற்றுநின்று காக்குமவர்
    என்றுமெங்கள் நெஞ்சினிலே
    இறைவனென இருக்கின்றார் !

    புழுதிதனில் புரண்டாலும்
    புன்முறுவல் காட்டிடுவார்
    அழுதுநாம் பார்த்துவிடின்
    அவருருகிப் போய்விடுவார்
    தெருவதனில் சண்டைசெய்தால்
    திருந்துதற்கு வழிகாண்பார்
    ஒருபொழுதும் சினங்காட்டா
    உத்தமராம் எங்களப்பா !

    அப்பாவின் கைபட்டால்
    அனைத்துமே துலங்கிவிடும்
    அவர்கையைப் பற்றியதால்
    அகமகிழ வாழுகின்றோம்
    அளவறிந்து வாழுவென்று
    அவருரைத்து நின்றதனால்
    அமைதியுடன் வாழுகிறோம்
    அப்பாவை அகத்திருத்தி !

    அன்புதந்த அப்பாவை
    அறமுரைத்த அப்பாவை
    அறிவுடையார் அருகணைய
    அழைத்துச்சென்ற அப்பாவை
    ஆருமற்ற அனாதையென
    அகமதிலே விட்டுவிடின்
    ஆண்டவனே எமைப்பாரார்
    அடைந்திடுவோம் நரகமதை !

    உலகமெலாம் அப்பாவை
    உயர்த்திநிற்கும் தினமாக
    உவகையுடன் கொண்டாடி
    ஊர்வலமும் செய்திடுவோம்
    நித்தமே எமைநினைத்து
    அத்தனையும் ஈந்தளித்த
    சொத்தான அப்பாவை
    சுமையென்றல் முறையாமோ
    எத்தனையே இடர்தாங்கி
    எமைஉயர்த்தி விட்டவரை
    இல்லத்தில் நாம்வைத்துப்
    என்றுமே வணங்கிநிற்போம் !

    Share
  • சூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள்

    asj

    சூரிய குடும்பக் கோள்கள் ஒன்பதா, பத்தா, அதற்கும் மேலா ? 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    https://youtu.be/6poHQ2h00ZA

    https://youtu.be/fAIV_6lcbIQ

    https://youtu.be/TBnItMgSjsE

    http://video.pbs.org/video/1790621534/

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A

    *********************

    Planet -9 Path Unstable

    [Click to Enlarge]

    சூரிய குடும்பப் பூதப் புறக்கோளாய்ச்
    சுற்றும் ஒன்பதாம் கோள்
    ஒளிந்துள்ளதா ? இல்லையா ?
    ஐயம் எழுந்துள்ளது !
    ஒன்பது கோளா, அல்லது பத்தா ?
    நெப்டியூனுக்கு அப்பால் சுற்றும் ஆறு
    நீள்வட்ட அண்டப் பாதைகள் நிலையல்ல !
    ஆதலால் ஒன்பதாம் கோளிருப்புக்கு
    ஆதாரம் போதாது.
    அதன் சுற்றுவீதி நிலை யற்றது !
    புதுக்கோளைக்  கண்டுபிடிக்கப் போட்டி !
    உலக விஞ்ஞானிகள் துடிப்பு  !
    பூத வடிவை ஹப்பிள்
    கண்டிலது  ! பரிதிக் கோள்கள்
    ஒன்பதா, பத்தா, அதற்கும் மேலா ?
    எத்தனைக் கோள்கள்
    இன்னும் பரிதிக்கு ஒளிந்துள்ளன ?
    என்பதே புதிய வினா !

    ++++++++++++++

    நெப்டியுனுக்கு அப்பால் நகரும்  அண்டங்களின் [Six Extreme Trans-Neptunian Objects (ETNOs)] சுற்று வீதிகள் நிலையானவை அல்ல. ஆகவே அவற்றைக் கட்டுப்படுத்தும் ஒன்பதாம் கோளின் சுற்று வீதியும் நிலையான தில்லை.   ஆறு எட்னா அண்டங்களின் சுற்று வீதிகள் [ETNO Objects Orbits] நீண்ட காலம் நிலையாய் இருக்கும் என்று கருத்தில் கொண்டு, கால்டெக் விஞ்ஞானிகள் பாட்டிஜின் & பிரௌன் முன்மொழிந்த ஒன்பதாம் கோளின் சுற்றுவீதியில்  சிறிது மாற்றம்  செய்ய வேண்டும்.  அதனால் நாங்கள் நம்புவது :  சூரியனுக்கு ஒன்பதாம் கோளுடன், பத்தாம் கோளும் இருக்கலாம்;  அவற்றுக்கு மேலும் இருக்கலாம்.

    கார்லாஸ் தி ல ஃபியுன்டெ [ஸ்பானிஷ் வானியல் நிபுணர்.

    Planet 9 challenged

    ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் உலக விஞ்ஞானிகள்.

    உலக விஞ்ஞானிகளுக்குச் சூரியனின் ஒன்பதாம் கோள் இருப்பை ஐயுறும்  எதிர்மறைக் கருத்து எழுந்துள்ளது.  அதன் சுற்றுக் காலத்தை அறிய நெப்டியூன் கோளுக்கு அப்பால் நீட்சி நீள்வட்டத்தில் ஒரே திசையில் சுற்றி வரும் மிகச்சிறிய அண்டங்களின்  நகர்ச்சிப் போக்கை கால்டெக் விஞ்ஞானிகள் பாட்டிஜின் & பிரௌன் எடுத்துக் கொண்டார் [Caltech Scientists : Batygin & Brown, USA].  அந்த கணினிப் போலி மாடலில் அதன் நீட்சியான நீள்வட்ட வீதி  10,000 – 20,000 ஆண்டுகட்கு உட்பட்டதாக இருக்கும் என்று வெளியிட்டார்கள்.  ஆனால் இப்போது ஸ்பெயின் சகோதர வானியல் நிபுணர் இருவர் கார்லோஸ் & ராவுல் மார்கோஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி ஸ்வெர் ஆர்ஸெத் மாறான சிந்தனையைக் கிளப்பியுள்ளார்.  ஒன்பதாம் கோளின் சுற்றுவீதி நிலையற்றது [Unstable Orbit] என்னும் புதிய நோக்கு எழுந்துள்ளது.  காரணம் நெப்டியூன் கோளுக்கு அப்பல் சுற்றும் சிறிய ஆறு அண்டங்களின் நகர்ச்சி சுற்றுவீதிகள் நிலையானவை [Unstable Orbits] அல்ல.  மேலும் நமது பரிதிக்கு ஒன்பதுக்கு மேற்பட்ட கோள்கள் இருக்கலாம் என்னும் புதிய கருத்து  2016 ஜூன் 13 ராயல் வானியல் குழுவினர் மாத இதழில் [Royal Astronomical Society Journal ] வெளியாகியுள்ளது.

    Planet 9 Exoplanet -1

    Planet 9 Exoplanet -2

    இந்த அண்டக்கோள் -9 நகர்ச்சியை மட்டும் நாங்கள் மெய்யாக ஓர் விண்ணுளவி அனுப்பித்தான் தேடி உளவ முடியும்.  புறப் பரிதிக் கோள் களைக் [Exoplanets] காணப், பொதுவாக நூற்றுக் கணக்கான ஒளியாண்டுகள் தூரம் கடக்க வேண்டி இருக்கும். முரணாக இந்தக் கோள் -9 நமது அந்தப் புறத்திலே ஒளிந்து கொண்ண்டுள்ளது !

    அலெக்சாண்டர் முஸ்டில் [ வானியல் துறைஞர், லுன்ட் பல்கலைக் கழகம், சுவீடன்]

    சூரியனின் ஒன்பதாம் கோள் பற்றிச் சுவீடன் வானியல் நிபுணரின் அறிக்கை :

    போலிக் கணினி மாடல் [Computer-Simulated Model] மூலம் நிரூபிக்கப்பட்ட சூரியனின் ஒன்பதாம் கோள் புறப் பரிதிக் கோளாய் [Exoplant] இருக்கப் பெரும்பான்மைத் தகுதி உள்ளது என்று சுவீடன் தேசத்து வானியல் விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்.   இதுவே முதன்முதல் சூரிய குடும்பக் கோளாய்க் கண்டு பிடிக்கப்பட்ட புறப் பரிதிக் கோள் [Extrasolar Planet or Exoplanet].  இங்கே  கூறப்படும் கோள் நியதி என்ன ?  நமது சூரியன் தன் ஒன்பதாம் கோளை, 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே அதன் பூர்வீக மூலப் பரிதியிலிருந்து களவாடிக் கொண்டது !  பிறந்த நமது இளஞ் சூரியன், கோள் -9 ஐப் பற்றிக் கொண்டதற்குப் பற்பல ஆதாரம் இருப்பதாக சுவீடன் லுண்டு பல்கலைக் கழக வானியல் விஞ்ஞானிகள்  கூறுகிறார்.

    Planet -9 Path

    Click to Enlarge Image

    தோன்றும் போது பரிதிகள் யாவும் கொத்துக் கொத்தாய் [Star Clusters] உற்பத்தியாவதால், ஒன்றை ஒன்று நெருங்கி வரும்போது, ஒரு பரிதி, அண்டைப் பரிதிக் கோள் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதைப் பற்றிக் கொள்ளலாம்.  அவ்விதமாக நம் பரிதி கோள் -9 யைப் பிடித்துக் கொண்டிருக்கலாம்.  அல்லது புறப் பரிதியின் மற்ற கோள்கள், நம் பரிதி அரங்கில் கோள் -9 யைத் தள்ளி விட்டிருக்கலாம்.

    இதுவரை கோள் -9 இன் சுயவடிவம் தெரியப்பட வில்லை.  ஒருவித ஒளி எழுச்சியும் காணப்பட வில்லை.  அதன் உட்பொருள் வாயுவா, பாறையா, எதுவெனத் தெரியாது.   அது பனி மூடியதா, விண்கற்கள் மேலே விழுந்து குழியானதா என்று தெரியாது.   அதன் நிறை மட்டும் பூமியைப் போல் 10 மடங்கு என்பது உறுதியாகத் தெரிகிறது.  கோள் -9 புறப்பரிதிக் கோளென்று உறுதிப்பட, இன்னும் மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படும். அந்தக் கோட்பாடு மெய்யாக நிலைநாட்டப் பட்டால்,  லுண்டு பல்கலைக் கழக வானியல் நிபுணர், அலெக்சாண்டர் முஸ்டில், நமது சூரிய குடும்பக் கோள்கள் தோற்ற  கோட்பாட்டில், அது பூத எட்டு முன்னடி [Giant Leap Forward] வைப்பாகும் என்று கூறுகிறார்.

    New Planet 9 orbit

    புறக்கோளாய்ச் சூரியனைச் சுற்றுவதாகச் சான்று கண்டு, கோள் -9 என்று பெயரிடப்படும் புதிய பூதக்கோள் பூமியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது.  அது ஒரு வினோத நீள்வட்ட நீட்சிப் பாதையில், பரிதி மண்டலத்தை வெகு, வெகு தூரத்தில் சுற்றி வருகிறது. இப்புதிய கோள் சூரியனை ஒருமுறை சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுக்கலாம்.   அந்த அனுமானப் புதுக் கோள் புளுடோவைப் போல் 5000 மடங்கு நிறையுள்ளது.

    கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் [Caltech Researchers] 

    New Planet System 2016

    New Planet System

    சூரிய மண்டலத்துப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒன்றிருக்கலாம்

    சூரிய மண்டலத்தின் புறக்கோளாய் இருந்த புளுடோ குள்ளக் கோள் என்று புறக்கணிப்பாகிய பிறகு, எட்டுக் கோள்கள் கொண்ட மண்டலம் மீண்டும் ஒன்பது கோள்கள் சுற்றும் பரிதி மண்டலம் ஆனது.  ஆனால் கோள் -9 இதுவரை புலப்படாது நீட்சியான நீள்வட்டப் பாதையில் எங்கோ சுற்றிக் கொண்டு வருகிறது.  அது ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுத்துக் கொள்ளலாம்.  அதை நேரடியாகக் காணாமல், அதன் இருப்பைப் போலிக் கணினி மாடல்[Computer Simulation Model] மூலம், போட்டுக் காட்டியவர் இருவர்:  காலிஃபோர்னியா பொறிநுணுக்க ஆய்வகத்தில் [California Institute of Technology – (Caltech)] பணிபுரியும் அவரது பெயர்கள் : கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன். [Konstantin Batygin & Michael Brown]

    Batygin & Brown

    சூரிய மண்டலத்தின் தற்போதைய இறுதிப் புறக்கோள் நெப்டியூன் இதுபோல் போலிக் கணினி மாடல் மூலம் முதலில் அனுமானிக்கப் பட்டுப் பிறகு தொலைநோக்கிப் பார்வைகளில் கண்டுபிடிக்கப் பட்டது. நெப்டியூன் போல் வடிவமும், வாயுவும் கொண்டது புதிய பூதக்கோள் என்று கருதப் படுகிறது.  நெப்டியூன் சூரியனை 2.8 பில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.  புதுக்கோள் கோள் -9 அதைவிடச் சராசரி 20 மடங்கு தூரத்தில்  [5.6 பில்லியன் மைல்] சுற்றி வரலாம் என்று கணிக்கப் படுகிறது.

    New planet Nine

    இந்தப் புதிய அனுமானக் கோள் -9 இருப்பு அறிவிப்பு நேரடியாக நிகழ்ந்த ஒரு சம்பவம் இல்லை.  2014 ஆம் ஆண்டில் மைக்கேல் பிரௌனுக்கு முந்தைய ஆய்வாளர் ஸாட் டுருஜில்லோ [Chad Trujillo] & ஸ்காட் செப்பேர்டு [Scott Sheppard] வெளியிட்ட ஆய்விதழில் தாம் குறிப்பிட்ட 13 புறக்கோள்களைப் பற்றி விளக்கம் இருந்தது.  அவை வெகு வெகு தூரத்தில் சுற்றிய புளுடோவைத் தாண்டியுள்ள கியூப்பர் வளைய [Kuiper Belt] விண்வெளியில் உலவுவதாய் அறிவித்திருந்தார். அவற்றில் இம்மாதிரி நூதன நீள்வட்டப் பாதையில் சுற்றும் அபூர்வக் கோள் ஒன்றைப் பற்றி விபரம் இருந்தது.

    Hypergiant Star with disks of dust.

    மைக்கேல் பிரௌன் புளுடோவிற்கு அருகில் சுற்றும் குள்ள புறக்கோள்களின் நீள் வட்ட வீதிகளை ஆராய்ந்ததில் ஓர் அரிய ஒற்றுமையைக் கண்டார்.  அனைத்து நீள்வட்ட வீதிகளும் சூரியனுக்கு ஒரே திக்கில் 30 டிகிரி கீழ் கோணத்தில் சாய்ந்திருப் பதைக் கண்டார்.  அதாவது ஏதோ ஓர் அண்டம் அருகில் இருந்து அவற்றை ஒருபுறம் வீசி எறிவதை அறிய முடிந்தது.  இந்த அனுமானக் கோளை வைத்து பிரௌன் ஒரு போலிக் கணினி மாடல் தயாரித்து, அதன் சுற்றுப் பாதையைக் கணித்தார்.  அப்போதுதான் கோள் -9 நிறையின் இருப்பு பூமிபோல் 10 மடங்கு இருக்க வேண்டும் என்றும், சுற்றுப் பாதையில் ஒருமுறைப் பரிதியை வலம்வர 10,000 – 20,000 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கணித்தார்.  2003 ஆண்டில் பிரௌந்தான் குள்ளக் கோள் செடேனாவைக் [Dwarf Planet Sedena] புளுடோ அருகில் கண்டு பிடித்தவர்.  இதுவரை கோள் -9 யார் கண்ணிலும் படவில்லை. இப்போது உலகத்தின் பெரிய தொலை நோக்கிகள் புதுக்கோள் கோள் -9 தேடிப் பிடிக்க தீர்மானித்து விட்டன.

    Oigins of Solar System

    எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

    பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

    Meteorite impacts on Planets

    பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

    பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு  மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

    Violant beginning

    முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

    முடிவுகள் இவைதான் :

    1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள்.   அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    2.  உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே.  சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா.  அவையும்  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளி யேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றி யுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவி யின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியி லிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

    ++++++++++++++++++++++

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html[சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19.  http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

    20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html  [January 15, 2015]

    21.  http://mashable.com/2016/01/20/new-solar-system-planet-nine/#PKq33NOdLPqT [January 20, 2016]

    22. http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22/pdf

    23.  http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22;jsessionid=9DAB98EED9CB30448604A2F4CA0F8752.c5.iopscience.cld.iop.org#aj522495s6

    24.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/01/caltech-evidence-found-for-a-ninth-planet-in-the-outer-solar-system.html?  [January 20, 2016]

    25. http://www.dailygalaxy.com/my_weblog/2016/01/todays-galaxy-insight-beyond-pluto-discovery-of-an-unseen-9th-planet-in-our-solar-system-video.html?  [January 23, 2016]

    26.  https://www.newscientist.com/article/2082970-planet-nine-might-be-an-exoplanet-stolen-by-the-sun/  [April 4, 2016]

    27. http://www.dailygalaxy.com/my_weblog/2016/05/planet-9-was-stolen-by-our-sun-the-only-exoplanet-we-could-reach-via-a-space-probe.html?  [May 31, 2016]

    28. http://www.hngn.com/articles/199978/20160531/planet-9-exoplanet-stolen-solar-system-sun-study.htm  [May 31, 2016]

    29.   https://www.sciencedaily.com/releases/2016/05/160531082201.htm  [May 31, 2016]

    30.  http://www.cnn.com/2016/06/02/health/planet-nine-solar-system-irpt/index.html  [June 2, 2016]

    31. http://www.spacedaily.com/reports/Extreme_trans_Neptunian_objects_lead_the_way_to_Planet_Nine_999.html [June 15, 2016]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 17, 2016 [R-2]

    Attachments area
    Preview YouTube video Evidence of a Ninth Planet

    Evidence of a Ninth Planet

    Preview YouTube video Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016

    Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016

    Preview YouTube video We can’t see this possible 9th planet, but we feel its presence

    We can’t see this possible 9th planet, but we feel its presence

    Preview YouTube video Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been

    The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been
    Share
  • எழுவகைப்பெண்கள்: 3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே

    அவ்வை மகள்

    3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே

    ஆண் -பெண் வேறுபாட்டில் இடுப்பெலும்பைபற்றிக் குறிப்பிட்டாக வேண்டும் என்றேன். உயரத்தில் குறைந்தும், அகலத்தில் மிகுத்து சற்றேறக்குறைய வட்ட வடிவத்தில் இருப்பது பெண்ணின் இடுப்பெலும்பு (காண்க படம் – 1). மேலும், பெண்ணின் இடுப்பெலும்பானது சற்று முன்னோக்கித். தள்ளப்பட்டிருக்கும். சற்றே பின்புறம் சாய்ந்தார்ப் போன்ற நடுமுதுகும் , சிறிதேனுமாவது வயிறு கொஞ்சம் முந்தித் தள்ளப்பட்டிருக்கும் தன்மையும் பெண்ணுக்கு இயல்பாய் அமையும் காரணம் பெண்ணின் இடுப்பெலும்பின் தன்மைதான்.

    இடுப்பெலும்பின் மைய எலும்பு, திருவெலும்பு (sacrum) எனப்படும். திருவெலும்பு இடுப்பெலும்பின் மிகமுக்கியமான பகுதியாகும். இடுப்பெலும்பின் பின் மேற்பகுதியில், முதுகெலும்பின் தொடர்ச்சியாக அமைவதே திருவெலும்பு. ஆணின் திருவெலும்புடன் ஒப்பிடும்போது, பெண்ணின் திருவெலும்பு அகலமாகவும் அரைகுறையாய் முடிந்தாற்போன்றும் இருக்கும்.

    இடுப்பெலும்பின் இருபுறமும் கீழ்ப்பக்கவாட்டில் இருக்கும் கிண்ணக் குழிகள் (acetabula) தொடை இடுப்புடன் சேரும் இணைப்புக்கானவை. இக்குழிகளுக்கு இடையே உள்ள தூரம், ஆணுக்குக் குறைவாகவும், பெண்ணுக்கு அதிகமாகவும் உள்ளது. பொதுவாக, பெண்களின் மறையுறுப்புச் சந்தி ஆணின் மறையுறுப்புச் சந்தியைக் காட்டிலும் அகலமாக இருப்பதன் காரணம் இதுதான் (விவரங்களை, படம்-2 ல் காண்க).

    pasted image 0

    படம் 1 – பெண் மற்றும் ஆணின் இடுப்பெலும்பு; விற்பனையல்லா பொது அறிவுப்பயன்பாட்டுக்காக அனுமதியுடன் வெளியிடப்படுகிறது; படத்தின் மூலம்: https://cnx.org/contents/U6HolX6c@3/The-Pelvic-Girdle-and-Pelvis

    இடுப்பின் அமைப்பு

    920e2cbe-fb3b-49a6-acb3-0dd3505708b9

    படம் 2- பெண்ணுக்கும் ஆணுக்கும் இடுப்பின் அமைப்பில் உள்ள வேறுபாடுகள்

    ஆண் -பெண் வித்தியாசம் இடையோடு நின்று விடுவதில்லை. தொடை- இடையுடன் சேரும் வாகில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உள்ளது என்பதை நாம் உற்று நோக்கலாகிறோம். பெண்ணின் உடலில், இடுப்பெலும்புடன் வந்து சேரும் தொடை எலும்பு (femur) நெட்டுக்குத்திலிருந்து கிடை மடையாய் அகன்று விரிநதவாறு இடையை வந்தடைகின்றது. இதனால், பெண்ணின் இடை -தொடை- சந்திக்கோணம் ஆணுக்கு இருப்பதைக்காட்டிலும் மிகவும் அகன்ற கோணமாக இருக்கிறது (படம் – 2). தொடையின் பிட்ட வெளிவிளிம்புகள் பெண்ணுக்கு விரிந்தவாகில் இருப்பதும் இந்தகாரணத்தால் தான். சொல்லப்போனால் பெண்ணின் தொடை-இடைச்சந்தி, கீல் வைத்த பெட்டகக் கதவுகள் போல் இலகுவாக அகலவாட்டில் விரியும் தன்மையதாய் இருக்கின்றது. முதுகால் மல்லாந்து படுக்கும்போதும், நின்ற நிலையிலிருந்து குனியும்போதும் இந்தக் கீல் அமைப்பின் சௌகரியத்தை அனுபவிக்க முடியும். இவ்வமைப்பு உடலுறவிலும், வளரும் கருவைத் தாங்குவதிலும், குழந்தையைப் பிரசவிப்பதிலும் பெண்ணுக்கு ஒத்தாசை செய்வதற்காக இயற்கை செய்துள்ள ஏற்பாடாகும் .

    ஆனால் இத்தனை சௌகரியமாய் அமைந்ததான அகன்ற இடையும் விரிந்த தொடையும், பெண்ணுக்கு, காலெடுத்து நடக்கும், ஓடும் திறனைக் குறைக்கின்றன. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே.

    சொல்லப்போனால், இயற்கை அமைப்பிலேயே பெண்ணுக்கு நடை என்பது விருப்பமான, எளிதான செயலாக அமைக்கப்படவில்லை. ஏனெனில், நடையை இலகுவாக்கும் தொடையும் இடையும் அவளுக்கு இல்லை. ஆனால் ஆணுக்கு அந்த பாக்கியம் உண்டு. கருத்தரித்து, கருவைத்தாங்கி வளர்த்து, சிசுவைப் பிரசவிக்கும் சிறப்புப் பணிக்காக, உரியமுறையில் வடிவமைக்கப் பட்டிருக்கிற பெண்ணின் சௌகரிய இடுப்பு, அவளது நடைக்கும் ஓட்டத்திற்கும் ஒத்தாசை செய்ய மறுத்து கொஞ்சம் மக்கர் பண்ணுகின்றது. இது இயற்கைப் பிறழ்வு அல்ல, ஒரு அனுசரிப்பு விதி (Law of Compensation). ஒன்று மிகும்போது ஒன்று குறைவுபடுவது இயல்பல்லவா? அது போன்றதே இதுவும். பல பெண் விலங்குகளில் இவ்வாறான அனுசரிப்பு விதியைக் காணமுடியும். மனிதப்பெண் இவ்விதிக்கு விலக்கல்லவே . ஆனால், மனித இனத்திலே தான், ஆணின் நடை அல்லது ஓட்ட வேகத்திற்கும் பெண்ணின் நடை அல்லது ஓட்ட வேகத்திற்கும் மிக அதிக வித்தியாசம் இருக்கிறது. இருகால் உயிரியாக, தரையில் நடக்கவேண்டிய விலங்காக இருப்பதாலும் பன்னெடுங்காலமாக பால்-சார் (gender-specific) பணிகளுக்க்கெனவே மனித உடல் உருவாக்கப் பட்டிருப்பதாலும் நடை மற்றும் ஓட்டத்தில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிக ஆண் -பெண் வித்தியாசத்தைப் பார்க்கலாகிறது. ஆக, பெண் நடக்கச் சிரமப்படுவதன் உண்மைக் காரணம் பெண்ணால் இயற்கையாகவே வேகமாக நடக்க முடியாது என்பது தான் என்பது புரிகின்றது அல்லவா?.

    ஆனானப்பட்ட விளையாட்டுப் போட்டிகளிலே கூட ஆண் -பெண் பாகுபாடு வைத்தே போட்டிகள் நடைபெறும்போது நம் வீட்டுப் பெண்கள் ஓட மறுப்பதும் – நடக்க மறுப்பதும் ஒன்றும் புதிதல்ல. உங்கள் வீட்டுப் பெண்மணி நடக்கப் பால்மாறினால் அதற்காய் நீங்கள் இனியும் கொதிக்க மாட்டீர்கள் அல்லவா?

    இது நிற்க.

    எந்த ஒரு உறுப்பும் இரு இயந்திரம் போன்றது. எனவே பெண்ணின் நடை சிரமத்தைப் பொறியியல் ரீதியாக விளக்குவது சிறப்பு. பெண்ணின் வட்ட இடை வடிவுமும் அகன்ற கோணத்துடன் உள்ள தொடையும், அவளது கால்கள் இலகுவாக இயங்குவதில் இடையூறு செய்கின்றன என்றோம். இவ்வாறு நிகழ்வது ஏனெனில், இடை-தொடையால் அவளது கால் முட்டிக்கு மேலே ஒவ்வா விசை யையும் பாரமும் உண்டாகின்றன. இதனால் முட்டியின் இயக்கத்தை எதிர்க்கும்படியான ஒரு சுழ்ற்சிவிசை பெண்ணின் முட்டிக்கு மேலே உருவாகி நிலைக்கின்றது. ஒவ்வொருமுறை காலை எடுத்துவைக்கும்போதும் – பெண்ணின் விரிந்த தொடையானது அவளது முட்டியை உள்புற மாகத்த்திருப்புகிறது. இயந்திர இயங்கு சக்தியில் இது ஒரு விரயமே, தடையே!

    இருகால் நடைப் பிராணியான மனிதரது உடலில், தசைநார் மற்றும் எலும்பிழைகள் முட்டியில் சங்கமித்திருப்பதைப்போல வேறு எந்த உறுப்பிலும் சங்கமிக்கவில்லை. பெண்ணுக்கு பலவீனமான தசைநார் மற்றும் பலவீனமான எலும்பிழைகள் உள்ளன என ஏற்கனவே கண்டோம். இந்த பலவீனம், இடை-தொடை சுழல் விசையோடு கைகோர்த்துக் கொள்கின்றது – பெண்ணின் கால் முட்டியின் இயக்கத்தை அது வலுவாய் எதிர்க்கிறது. ஒட்டுமொத்தத்தில், ஆற்றலின் பீடமான பெண்ணுக்குப் பீடமே பலவீனம் எனவானது. என்னதான் முட்டினாலும் பெண் முட்டி ஆணின் முட்டியைவிட மட்டம்தான் என்பது இயற்கை விதித்த விதி! பெண்களுக்கு இயற்கையிலேயே உள்ள இந்த முட்டியின் மட்டத்தை நம் முன்னோர்கள் அறியாதவர்கள் இல்லை. எனவே பெண்களுக்கென அன்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுக்கள் எல்லாம் பெண்களுக்கு ஏற்ற விளயாட்டுக்களாக மட்டுமே இருந்தன.

    பெண்ணின் இடை -தொடை-முட்டி அமைப்பின் இடைஞ்சலைக் கருத்தில் கொண்டு இந்த உறுப்புக்களில் அல்லது இந்த உறுப்புக்களின் பலவீனத்தால் உடலில் வேறெந்த இடத்திலும் எவ்விதக் காயமும் பெண்களுக்கு ஏற்படாதவாறு அன்றைய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆண்கள் விளையாடும் எல்லா விளையாட்டுக்களையும் பெண்களால் விளையாடமுடியாது என்கிற தெளிவான விவேகம் அன்றைய மக்கட்பிரதிநிதிகளுக்கு இருந்தது. ஆனால், 1970-71ல் விளையாட்டில் ஆணுக்கு நிகராய்ப் பெண்களை இறக்குவது – உத்வேகிப்பது என்ற புரட்சி உலகெங்கும் பிறந்தது. இதனால் எண்ணிறந்த பெண் விளையாட்டு வீராங்கணைகள் களத்தில் இறங்கினார்கள் – இறக்கப் பட்டார்கள். ஆனால், இவர்களில் விளையாட்டில் தொடர்ந்து தங்கியவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு அல்லது இல்லை என்றே ஆனது. விட்டில் பூச்சியைப்போல பெண்கள் விளையாட்டில் வந்து போயினர். காரணம்? அவர்களுக்கு ஏற்பட்ட (ஏற்பட்டு வரும்) வரும் மிகவும் மோசமான முட்டி மற்றும் கால் தொடர்பான காயங்கள்! இதிலே மிக-மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டைப்பந்து, கூடைப்பந்து, காற்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட மாதர் திலகங்கள். விளையாட்டுப்போட்டிகளில் பெண்ணின் இடை-தொடை-முட்டி கட்டமைப்பு மட்டுமல்ல – மாதவிடாய்த் தொடர்பாய் எழும் உடலின் இரசாயன மாற்றங்களும் அவளுக்கு எதிராய் செயல்பட்டு அவளை விளையாட்டுகளில் மிக மோசமாக வீழ்த்துவதையும் விளையாட்டு மருத்துவ உலகம் தொடர்ந்து பதிவு செய்துவருகிறது

    (ஒரு எளிய கட்டுரையை இங்கே காணலாம்:

    http://www.pharmacytimes.com/publications/issue/2014/june2014/sports-injuries-are-women-more-at-risk).

    இவ்வகையில் அன்றைய தமிழ்ச்சமுதாயம் பெண்களின் இடை-தொடை-முட்டி அவதியைப் புரிந்துகொண்து அவர்களை அரவணைத்து அவர்கள் நலனுக்கான ஏற்பாடுகளைச் செய்த பாங்கு நம்மை வியக்கவைக்கிறது.

    தொடருவோம்

    Share
  • சிவவாக்கியர்

    பவள சங்கரி

    im20110164sivavakkiyar

    ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே
    கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
    உயிராவது எதுவடா? உடம்பாவது எதுவடா ?
    உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது எதுவடா?
    உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லடா ?

    – சிவவாக்கியர்

    பொருள் :

    ஒரு முழுமையான உயிரினமாய் இந்த பூமியில் வலம்வரும் உன்னால் உன் மூலம் அறிய இயலுமா? ஒரு துளி நீரில் உருவாகி, கை, கால், கண், மூக்கு, செவி என பல உறுப்புகளும் தோன்றியது எங்கனம்? ஒவ்வொன்றையும் தோற்றுவித்து அனைத்தையும் இணைத்து ஓர் உருவமாய் அதைச் செயல்படச் செய்தது யார்? இதற்கும் மேலாக உயிர் என்ற ஒன்றை அதனுள் புகுத்தி, ஆன்மா என்றொரு சக்தியையும் ஒளித்து வைத்திருப்பதை அறிந்தவர் எவர்? இவ்வுயிர் அந்த உடலோடு கலப்பது எப்போது? எங்கனம்? உயிரினால் உடலெடுத்து அலையும் ஆணவத்தின் அரசனே பதில் கூறும்!

    ஆம் நம் உயிரைச் சுமந்துத் திரியும் உடலின் ஆக்கத்தையே புரிந்துகொள்ள முடியாத அகங்காரமும், ஆணவமும் ஆட்டிப்படைக்கும் நிலையிலிருந்து மீண்டுவந்தால்தான் நம் பெருமூளை விரிவடைந்து இறைசக்தியை முழுமையாய் உணரும் பிரபஞ்சப் பார்வை விரிவடையும். ஆக, அகந்தையை அழிப்பது மட்டுமே இறை நிலையின் முதற்படி. இறைமையை உணரச்செய்வதும் இதுதான்!

    Share
  • ஆணவ மலம்

    பவள சங்கரி

    zw95

    இவ்வுலகில் அழிவின்றி நிலைத்திருப்பவையாக நம் சைவச் சித்தாந்தங்கள் கூறுபவை – பதி, பசு, பாசம் என்பன. பதி எனும் இறையை அடைவதற்கு பசு எனும் உயிர்களுக்குத் தடையாக இருப்பவை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களே.

    உயிர்கள் சத்தியம், அசத்தியம் எனும் இரண்டையும் பகுத்துணர இயலாத இருளாக அறிவொளியை மறைக்கக்கூடியதே இந்த ஆணவ மலம். இறை சக்தியை அண்டவிடாமல் நீச மயக்கத்தில் உழலச் செய்து, அறிவை கீழ் நிலைக்கு எடுத்துச்சென்று பொய் பக்தியை உருவாக்குவதும் இந்த ஆணவ மலமே.

    கன்மம் என்பது கர்ம வினையின்பாற்பட்டது. அவரவர் செய்யும் வினைக்கேற்ப அதனதன் பலாபலன்கள் மாறுபடுகிறது. நற்பண்புகளுடன் நல்வினையாற்றுவோர் நற்பலனையும், தீய பண்புகளுடன் தீவினையாற்றுவோர் தீய பலன்களையும் அனுபவிப்பர் என்பது நியதி.

    உடல், உலகு மற்றும் உலகில் காணும் அனைத்துப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்பது சைவசித்தாந்தத்தின் வாக்கு. அந்த வகையில் இந்த மலம் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், அறிவின் மயக்கத்தை நீக்கவல்ல ஒளியைப் பாய்ச்சுவதானால் நல்வழியில் தீண்டப்படும் மாயையினால் இறைவனை அடைய முடியும் என்பது சித்தர் வாக்கு. தீய வழியில் பயன்படுத்தப்படும் மாயை ஒருவரை அதல பாதாளத்தில் கொண்டு தள்ளிவிடும் என்பதும் இயற்கை நியதி. இதற்கு இப்பூவுலகின்கண் காணும் ஆயிரம் நிகழ்வுகளே சாட்சி!

    Share