Month: August 2016

  • மாக்கருணைக் கொடையன்றோ !

              எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    புலம்பெயர்ந்து சென்றாலும் புறப்பட்டு வந்திடுவார்

    நலம்கிடைக்கும் நல்லூரான் நற்றிருவிழா காண்பதற்காய்

    புலனைந்தும் தனைமறந்து புத்துணர்வு பெற்றுநிற்கும்

    புதுமையினைப் பெற்றுவிட புறப்படுவார் அன்பரெலாம் !

     

    வெள்ளைமணல் வீதியிலே விரதமுடன் அடியார்கள்

    உள்ளமெலாம் உருகிநிற்க உருக்கமுடன் பாடிநின்றி

    கள்ளமெலாம் களைந்துவிடு கந்தாவென அழைத்து

    நல்லதமிழ் பாடிநிற்பார் நல்லூரான் சன்னிதியில் !

     

    நாகரிகம் வந்தாலும் நல்லூரான் கோவிலிலே

    நல்லதமிழ்ப் பண்பாடே நாளுமே மிளிர்ந்துநிற்கும்

    நோயகல வீனைதீர நூறுமுறை அடியழித்துக்

    காதலுடன் நல்லூரான் காலடியைப் போற்றிநிற்பார் !

     

    முத்தமிழைத் தந்தகந்தன் அத்தமிழைக் கேட்பதற்காய்

    எத்திக்கும் எதிரொலிக்கும் எழில்கொஞ்சும் எங்கள்தமிழ்

    தமிழ்கேட்ட அனைவருமே தமைமறந்தே இருப்பார்கள்

    இவையாவும் நல்லூரான் இருப்பிடத்தின் பெருமையன்றோ !

     

    துறைதோய்ந்த நல்லறிஞர் துணிவுநிறை இளையோர்கள்

    அவையேறித் தமிழ்சாற்றி அனைவருக்கும் விருந்தளிப்பார்

    மறையுடனே திருமுறையும் மனம்சிறக்கச் செய்துநிற்கும்

    மங்கலங்கள் நல்லூரான் மாக்கருணைக் கொடையன்றோ !

     

    நல்லூரை நினைத்துவிடின் நம்மனத்தில் மாற்றம்வரும்

    எல்லாமே எங்களுக்கு இறையெனவே எண்ணவரும்

    நல்லசித்தர் பரம்பரையே நல்லூரில் உருவாச்சே

    நாமுமங்கு சென்றுவிடின் நாளுமே நன்மைவரும் !

     

     

    Share
  • தாத்தா அப்பா நானென மூன்று நண்பர்கள்

    ராஜகவி ராகில்

    அடிக்கடி பற்றாக்குறைத் தீ
    வீடு எரியும்
    சில வேளை
    அடுப்பில் பூனை படுத்திருக்கும்
    அப்பா அறையெங்கும் இரவு நேரத்திலும் பாசம் பரவி நிற்கும் வெளிச்சமாய்

    சட்டை பழையது
    அப்பா முகம் அணிகின்ற புன்னகை ஆடை
    காற்றைக் கலகலப்பாக்கும்
    இதய சுகந்தம் கலந்தபடியும் இனிப்பு நறுமணம் பூசியதுமாய்

    புறப்பட்டுச் சென்றுவிட்ட பழைய மாதத்தில்
    தாத்தா மீண்டும் பிறந்திருந்தார்
    எழுபது வயதுடன்

    நான் இறைவனிடம் இருந்திருக்க மாட்டேன்
    அப்பாவும் தாத்தாவும்
    தோழமைப் பாலங்கட்டியபோது

    தாத்தா கன்னத்தில் சோகக்கை அறைந்ததாகவும்
    கண்ணீர் முள் தைத்துக் காயப்படுத்தியதாகவும்
    தாத்தா குரல்மீது அப்பா தொனி ஏறி மிதித்ததாகவும்
    நான் அறிந்திருக்கவில்லை

    தாத்தாவுக்கென
    வேட்டியோ சட்டையோ வேறு தேவைகளோ
    நான் அறிய காணாமல் போகும் அப்பாவுக்குள்

    தாத்தா மூக்குக் கண்ணாடி
    ஒரு கை கண் இழந்து
    ஒரு வார வெயிலில் தினத் தண்ணீர் வற்றிப்போன நேரம்
    என் கை அணிந்த புதிய கண்ணாடியில்
    தெரிந்தது அப்பா முகம்

    பாசம் கட்டளைக்குள் புதையுண்டு
    தாத்தாவுக்குக் கொடுக்கச் சொன்னபோது
    எனது இறந்தகாலக் கேள்வி
    அடம் பிடித்தது விடைகேட்டு

    நானும்
    ஒரு நாள்
    உன் தாத்தா போலாவேன்

    அப்பா அணிந்த பதில் கண்ணாடியில்
    தெளிவாகத் தெரிந்தது
    எனது முகம் .

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்—(205)

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். சிறியதோர் இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன். காலவோட்டத்தின் சுழற்சியில் சிக்குண்டு அலையும் சருகினைப் போல் எமது வாழ்வும் எமது கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் உழலும் நிலை ஏற்படுவதுண்டு. அத்தகைய ஒரு சூழலில் சிக்குண்டதினால் தான் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டது.

    எனது முந்தைய மடலில் இங்கிலாந்தின் தொழிற்கட்சி அதாவது பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான ஜெர்மி கோபன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் பற்றி அடுத்த மடலில் கூறுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். வரலாறு காணாத வகையில் பல லட்சம் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் தொழிற்கட்சி அங்கத்தினர்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் மிகுந்த செல்வாக்குடன் கோலோச்சுவதை விடுத்து அப்படி என்ன சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம் என்று எண்ணுவது இயற்கையே!

    ஆனால் ஜெர்மி கோபன் தலைவரானதே ஒரு விசித்திரமான விடயம் தான். பல்லாண்டுகள் பாராளுமன்ற அங்கத்துவராகப் பதவி வகித்தாலும் எப்போதும் தொழிற்கட்சியின் விதிகளுக்குச் சவால் விட்டு நடந்தவர் ஜெர்மி கோபன். உலக அரங்குகளில் பயங்கரவாத இயக்கங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இயக்கங்களின் அங்கத்தினர்களுடன் அரசியல் அளவிலான தொடர்புகளை எப்போதும் பேணி வந்தவர். இவரை ஓர் இடதுசாரத் தீவிரவாத அரசியல்வாதியாகவே மக்கள் கணித்தனர்.

    பின் எப்படி இவருக்குத் தலைவராகும் சந்தர்ப்பம் கிட்டியது? தொழிற்கட்சியின் பொதுத்தேர்தல் தோல்வியினால் அப்போதைய தலைவர் எட் மில்லிபாண்ட் பதவி விலக, தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயரை முன்மொழியும்போது இப்போதைய லண்டன் மேயரும், அப்போதைய டூட்டிங் நகரப் பாராளுமன்ற உறுப்பினருமான சடிக் கான் , தமது கட்சிக்குள் விவாதத்தை விரிவாக்கும் பொருட்டுத் தலைவராகவே மாட்டார் எனும் நம்பிக்கையில் திரு ஜெர்மி கோபன் அவர்களை முன்மொழிந்தார்.

    விளைவு! யாருமே எதிர்பார்த்திராத வகையில் யார் ஒருபோதும் தலைவராகும் சந்தர்ப்பம் அற்றவர் என்று கருதப்பட்டாரோ அவர் வரலாறு காணாத பெரும்பான்மையுடன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் காரணம் என்ன என்பதற்குப் பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.. இயற்கையில் சோஷலிசக் கொள்கைகளைக் கொண்ட தொழிற்கட்சி டோனி பிளேயரின் காலத்தில் மிகவும் மிதவாதக் கொள்கைகளைக் கொண்ட ஒரு நடுநிலைக் கட்சியாக மாறியது. இதன் காரணமாகக் கன்சர்வேடிவ் கட்சிக்கும், லேபர் கட்சிக்குமிடையிலான வேறுபாடு குறுகி, அவையிரண்டும் ஒரே கொள்கையுடைவை போலத் தோற்றமளித்தன. தொடர்ந்துவந்த பொருளாதார நெருக்கடிகளினால் வாழ்க்கைத் தரம் குன்றிய நிலையில் லேபர் கட்சி ஆதரவாளர்கள் தமது கட்சியின் போக்கில் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.

    அதுமட்டுமன்றி உலகளாவிய ரீதியில் நடைமுறை வழக்கம் எனக்கருதப்பட்ட வகையில் மாற்றம் கொண்டு வாக்காளர்கள் பதவியிலிருப்போருக்குப் பாடம் புகட்ட வேண்டும் எனும் ஒரு மனநிலையை அடைந்தனர் . இது ஜெர்மி கோபனின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கணிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி எட் மில்லிபாண்ட் தொழிற்கட்சிக்கு வழமையான 20 பவுண்ட்ஸ் செலுத்தி உறுப்பினர்கள் ஆவதோடு  வெறும் 33 பவுண்ட்ஸ் மட்டும் செலுத்தித் தம்மைப் பதிவு செய்பவர்கள் கூடத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கலாம் எனும் ஒரு தீர்மானத்தைக் கட்சியின் நடைமுறையாக்கினார். இதன் மூலம் பல இடதுசார மார்க்ஸிசக் கொள்கைவாதிகள் தம்மைப் பதிவு செய்துகொண்டு தீவிர மார்க்ஸிசவாதியான ஜெர்மி கோபனுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பு.

    சரி… ஜெர்மி கோபனுக்கு வந்த இக்கட்டுதான் என்ன? ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே லேபர் கட்சியின் உத்தியோக நிலைப்பாடாக இருந்தது. ஆனால் ஜெர்மி கோபன் அந்நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பிரசாரத்தில் வெகுவாக ஈடுபடாததினால் பல தொழிற்கட்சி ஆதரவாளர்கள் விலக வேண்டும் என்று வாக்களித்து விட்டார்கள். இதுவே இங்கிலாந்து, ஜரோப்பிய யூனியனிலிருந்து விலகவேண்டும் எனும் வாதம் வெற்றியடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. இதனால் சுமார் 170 லேபர் கட்சி பாரளுமன்ற அங்கத்தினர்கள் ஜெர்மி கோபனின் தலைமைக்குக்கீழ் தாம் இயங்க முடியாது என்று அவருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களித்து விட்டார்கள்.

    விளைவாக நாடு ஒரு முக்கியமான சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் முறையான எதிர்க்கட்சியாக இயங்க முடியாமல் மீண்டும் ஒரு தலைமைப் பதவித் தேர்தலில் தன்னை அமிழ்த்தியிருக்கிறது லேபர் கட்சி. இத்தேர்தலில் ஜெர்மி கோபன் மீண்டும் வெற்றியடையும் சாத்தியக் கூறுகள் உண்டு. அப்படி அவர் வெற்றியடைந்தால் லேபர் கட்சி இரண்டாகப் பிளவுபடும் சந்தர்ப்பங்கள் பல தலைதூக்கியுள்ளன. கட்சியின் நன்மை கருதி ஜெர்மி கோபன் தனது பதிவியை ராஜினாமாச் செய்திருக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து.

    ஓர் அரசியல் சுழற்சியின் மத்தியில் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இத்தேர்தல் முடிவுகளின் வழி பிறக்கும் முடிவினை எதிர்பார்ப்பது ஒன்றே தற்போதைய நிலைமையாக இருக்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    ***

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”Sakha Tvameva”….
    —————————————–

    cra

    ’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள்
    சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
    அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
    வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ’’குமார சம்பவம்’’….!

    கிரேசி மோகன்

    ’’காளிதாசர் உலா’’ நடப்பதில் மகிழ்ச்சி….!’’மேக சந்தேசமும்’’, ‘’குமார சம்பவமும் ‘’ லிஃப்கோ சமஸ்கிருத பதிப்பை வைத்து வெண்பாவாக்கம் எல்லா ச்லோகங்களையும் 2010துகளில் செய்தேன்….குறிப்பாக ‘’குமார சம்பவம்’’….உட்கார்ந்த இடத்தில் உலகையே பார்த்த ‘’காளிதாசர்’’ விஞ்ஞானிக்கு மேற்பட்ட மெய்ஞானி….400 ஸ்லோகங்கள் மொழி பெயர்த்தேன்….ஏனோ நிரு விட்டது….இந்த பகிர்வை சாக்காக வைத்து முழுதும் முடித்து விட நப்பாசை….முதலில் ‘’காப்பு செய்யுள்கள்’’ ஆறைப் பதிவு செய்கிறேன்….இருக்கவே இருக்கு ‘’ஈஸ்வரோ ரக்‌ஷது’’….

    குமார சம்பவம்
    ——————————

    காப்பு
    ———————-
    சிவபார்வதி
    —————-
    சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய்
    கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும்
    உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன்
    குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010

    முருகன்
    ———-
    உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை
    தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே
    முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே
    வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010

    பிள்ளையார்
    —————
    உன்னை மறந்தால் உலகம் பழித்திடும்
    என்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை
    கந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில்
    தந்தை மணமுடிக்கத் தாவு….(3)….2-10-2010

    சரஸ்வதி
    ———–
    செல்வம் செலவாகும், வீரம் வயதாகும்
    கல்வி குறையாது குன்றாது -பல்கிப்
    பெருகிட வைத்திடும் பாரதியின் நூலுக்கு
    அருகிருந்து சேர்ப்பாய் அறிவு….(4)….2-10-2010

    காளிதாசன்
    —————
    வாடாத பாக்களை வாணியின் பாதத்தில்
    காடாய்க் குவித்தமகா காளிதாசா -சீடனாய்
    ஏற்றென்னை நம்மன்னை சாற்றிய தாம்பூலச்
    சாற்றையென் பாழ்வாயில் சிந்து….(5)….2-10-2010

    சு.ரவி
    ——–
    நண்பாநீ மந்திரியாய் நல்லா சிரியனாய்
    வெண்பாநான் செய்ய வகைசெய்தாய் -பண்பால்
    சிறந்தவனே இந்நூல் சுரந்திட என்னுள்
    கரம்தந்(து) அளித்திடுவாய் காப்பு….(6)….14-10-2010

    சர்கம்-1
    ———-
    கரையற்று நீண்டு குடதிசையில் மேற்கில்
    வரையற்ற வாரிதி வெள்ளம் -வரையுற்றுப்
    பாரின் அகலத்தைப் பார்க்கும் அளவுகோல்
    பாரீர் இமயமதன் பேர்….(1)

    கன்றாய்யிக் குன்றினைக் காட்டியம் மேருமலை
    நின்று கறக்க, நிலப்பசு -என்றும்
    சுரந்திடும் ரத்தினம் சஞ்சீவிப் பாலை
    வரம்தரும் வெற்பை வணங்கு….(2)

    சீதளம் சேர்த்திடும் சந்திரன் மேலுற்ற
    பாதகம் பாராட்டா பண்புடைத்தோம் -மேதினிக்கு
    எல்லா சுபிட்சமும் நல்கும் இமகிரிக்கு
    பொல்லாப் பனியா பொருட்டு….(3)

    விண்சார்ந்த அப்ஸர வல்லிகள் பூசிடும்
    செஞ்சாந்து வாசத்தூள் சூழ்ந்தவுச்சி -மஞ்சோடு
    பட்டுச் சிதற பரிதி ஒளிசிவக்கப்
    பட்டப் பகலிலந்திப் போது….(4)

    கோடையில் சித்தர்கள் வாடிடாது வெண்மேக
    ஆடை நிழலடியில் ஆசிரமம் -ஜாடை
    கருத்தவை பெய்கையில் குளிருக்(கு) இதமாய்
    சிரத்தினில் வெய்யில் சுகம்….(5)

    மதக்களிறின் மீதேறி மத்தகத்தில் சிங்கம்
    சதையுறிய முத்துக்கள் சிந்தும் -இதையறிந்த
    வேடன் அரிமா வழியை அறிவானாம்
    மூடும் பனியில் முனைந்து….(6)….

    Share
  • Puthiyathaliamurai Tamilan Awards

    se

    (11th of August 2016 at 6.00 pm in Chennai Trade Centre)

    Puthiya Thalaimurai, TV channel with its unbiased and independent news, delivering live News, as-it-happens, has dramatically re-defined television journalism in Tamil Nadu. Puthiya Thalaimurai has done what it promised to its viewers; that it would provide a platform to the voiceless and bring out the aspirations and beliefs of Generation Next.

     Every year the channel recognizes legends and eminent rising stars for their achievements, contribution to the country and to the society. The Channel will be honouring them with the prestigious Puthiyathaliamurai Tamilan awards.

    Puthiyathalaimurai TV is set to announce the Tamilan Awards for the year 2016 in grand mega event organized on 11th of August 2016 at 6.00 pm in Chennai Trade Centre.

    The award categories are given below.

    1. Puthiya Thalaimurai Tamilian Award for Social Service
    2. Puthiya Thalaimurai Tamilian Award for Business
    3. Puthiya Thalaimurai Tamilian Award for Science & Technology
    4. Puthiya Thalaimurai Tamilian Award for Literature
    5. Puthiya Thalaimurai Tamilian Award for Sports
    6. Puthiya Thalaimurai Tamilian Entertainer (Cinema/ Music)

    Each category has a two sub divisions under which an Eminent legend and a Promising Star will be recognized.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed

    ”பச்சைப் பயலாக பார்த்திபன் வேர்த்திட
    பச்சைப் புயல்மால் பாரதத்தின் -உச்ச
    குருஷேத் திரத்திடை ,கீதோ பதேசம்
    பரிட்சித்தைக் காத்தோன் பணி’’….கிரேசி மோகன்….

    Share
  • ’’பாலா திரிபுரை நெமிலி’’…

    201408191705350903_Peace-GraceNemili-Bala-Tripura_SECVPF

     

    ‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே,
    பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய்,
    சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும்
    மாதவத்தில் மூழ்கயென், மனு’’….(13)

    ”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
    பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
    தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
    ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….(14)

    ‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
    சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
    குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
    அமுதத்தன் தங்கை அவள்’’….(15)

    ‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
    தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
    மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
    காலேல கண்மலர்ந்து கா’’….(16)
    கா -காப்பாய்….
    ‘’பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
    அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
    கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
    பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்’’….(17)

    ‘’ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
    தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
    கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
    பெண்ணிமய பாலா படு’’….(18)….கிரேசி மோகன்….

    ’’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட,
    ஐயம் அகன்றதும் ஆதரவாய், -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள், பரமசுகம் கூட்ட,
    படித்ததெலாம் பாலாமுன் பாழ்’’….(19)

    ”அமளியில் லாமல் , அமைதியைக் காத்தால்,
    நெமிலிவாழ் பாலா நினக்குள், -கமலியாய்,
    நெஞ்சகத் தாமரையில் நின்று நிலைத்திருந்து,
    அஞ்சேல் அபயம் அளிப்பு”….(20)

    ‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
    நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
    வீற்றவளே பாலா , வருக வருகநான்
    சாற்றும்வெண் பாவை சகித்து’’….(21)….

    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….(22)….கிரேசி மோகன்….!

    Share
  • பூனையாகிய நான்…

    கவிதை பற்றிய மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

         ஆதிமுதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

         பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக்குட்டியைப் போல
    அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் குறுக்குப் புத்தி’, ‘மாறிக் கொண்டேயிருக்கும் பூனைக் குணம்’ ‘பூனையைப் போல சோம்பேறி’, ‘பூனையைப் போல பாவனை’ போன்ற வசவு வார்த்தைகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

     பெண்கள் பூனைகளாகின்றனர்; பூனைகள் பெண்களாகின்றனர். ஆண்களின் சந்தர்ப்பங்களும், உணர்வுகளுமே அதையும் தீர்மானிக்கின்றன. கீழுள்ள கவிதையின் தலைப்பை ‘அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அக உணர்வு’ எனக் கருதினாலும், கவிதையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அவர்களுக்கும் எப்பொழுதும் பொருந்தக் கூடியன. இக் கவிதையை பெண்ணின் மனஉணர்விலிருந்து வாசித்துப் பார்க்கலாம். பெண்களை வெறுப்பவர்கள், தாம் இஷ்டப்பட்ட பிராணியைத் தலைப்பிலாக்கி, கவிதையோடு பொருத்தி வாசித்துக் கொள்ளலாம்.

    – எம்.ரிஷான் ஷெரீப்

    *****

     

    (சிங்கள மொழிக் கவிதை)

    பூனையாகிய நான்…

    – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி Thakshila Swarnamali 1தோன்றுமெனினும்
    உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது
    உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
    உங்களைப் போல என்னால் அழ இயலாது
    உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
    உங்களிடம் என்னால் அவற்றைக் கூறிவிட இயலவில்லை
    உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும்
    உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும்
    உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
    உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராகப் போராட இயலவில்லை

    உங்களைப் போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
    உங்களைப் போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
    உங்களைப் போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
    உங்களை விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்!

    ******

    கவிஞர் பற்றிய குறிப்பு

    தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

    சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதிவரும் பெண் கவிஞர். ஓர் ஆசிரியையாகக் கடமையாற்றிவரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், இரண்டு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என இதுவரையில் பத்துத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

     

    Share
  • இன்னம்பூரான் பக்கம் [10] – என்றோ ஒரு நாள் -1

    இன்னம்பூரான் பக்கம் [10]
    என்றோ ஒரு நாள் -1
    திக்குத் தெரியாத காட்டில்…

    innamburan_article

     

     

    இன்னம்பூரான்
    ஆகஸ்ட் 8, 2016

    அவரவரது வாழ்க்கையின் உள்ளுறை அற்புதமானது. கண்ணுக்குள் நிற்கும் மறைமூர்த்தியான அதன் அடர்த்தி பெரிது. பரிமாணமோ பரந்த வானம் போல் எல்லையற்றது. ஆழமோ, ஆழ்கடலை விட, ஏன்?, அதலபாதாளத்தையும் மிஞ்சியது. அதன் வளர்த்தியோ ஒளியின் வேகத்தைத் துச்சமாக மதிக்கும் விரைவுடன் ஓங்கி உலகளக்கும். பிரபஞ்சத்தை அளவெடுக்கும். இத்தனையும் பொருந்திய கோடானுகோடி மானிடர்களில் பெரும்பாலோர் எல்லாம் அறிவர்;அறிந்துகொண்டதாகப் பறை சாற்றுவர். ஆனால் தனது உள்ளுறை அறியார்; அந்தோ பரிதாபம்! தன் அறியாமையையும் அறியார்.

    எத்தனை வாழ்க்கைகள் அவ்வாறு தோன்றி, மறைந்து தொலைந்தனவோ? அது ஒருபுறம் நிற்க, இந்தத் தொடர் ஏதோ நான்தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டேனோ என்ற இறுமாப்புடன் எழுதப்படுவதல்ல. தரணிதனில் பிறந்த உயிரினங்கள் ஒன்றுகூடத் தன்னிச்சையில் உரு எடுத்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் அரிதான நிகழ்வுகள். முத்துக்குளிப்பது போல் பல்லாயிரம் சிப்பிகள் கருவுற்ற போதிலும், ஒருபிடி அளவுகூட நன்முத்துக்கள் கிடைப்பது அரிது. அவற்றில் ஆறறிவு படைத்த மனித இனத்தை நான் மற்ற உயிரனங்களை விட உன்னதமானது என்று கருதாவிட்டாலும், தன் உள்ளுறையைச் சற்றே அறிந்தது போல் நடந்து கொண்ட விவேகமான அணில், பூனை, நாய், யானை, புலி, காகம், நாரை, முதலை ஆகிய சில பிராணிகளுடன் சிறிதளவு பழக அனுபவம் பெற்ற நான், மனிதனின் சிந்தனை வளம் பற்றிச் சிறிதளவு  அறிவேன்.

    கல்வி மேன்மை தரும்; ஓதாமல் ஒருநாளும் இருந்ததில்லை என்பதால், பல சான்றோர்களின் உள்ளுறைச் செய்திகள் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பே ஒரு நன் நிமித்தம்; கொடுப்பினை. ஆகவே, இந்தத் தொடரில் பெரும்பாலும் சான்றோர்களின் உள்ளுறை பற்றிச் சற்றே அறிந்து கொண்டவை பகிரப்படலாம், வாசகர்களில் சிலராவது, இது வரவேற்கத்தக்கது என்று நினைத்தால். இல்லாவிடிலும், நட்டம் ஒன்றுமில்லை. நான் அனுபவிப்பது பெற்றுக்கொள்வது, பெரும் அதிர்ஷ்டம் அன்றோ! பீடிகை முற்றிற்று.

    [தொடரக்கூடும்]

     

    ***

    சித்திரத்துக்கு நன்றிhttps://c1.staticflickr.com/3/2296/2576128617_1f9982a0b3_z.jpg?zz=1

    ***

    படித்தது: இதுவும் அதுவும்

     

     

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 8

    அவ்வை மகள்

    மனித நேயமும் – மனிதச் சேவையும் தொழிநுட்பத்தின் இரு கண்கள்

    இறையியல் சிந்தனைகள்

    உலகிற்கு என்ன தேவை என்பதனை மிகச்சரியாக உணர்ந்து, அதனை மிகச்சரியான தருணத்தில், மிகச்சரியான அளவிலே தருகிறவர்கள் உலகில் வாழும் கடவுள்களாகிறாகள். துறை எதுவாகினும் எந்தத்துறைக்கும் இது பொருந்தும். மதமா? அரசியலா? மருத்துவமா? உளவியலா? தொழில்நுட்பமா? எந்தத்துறையும் இதற்கு விதிவிலக்கில்லை.

    அரண்மனை வாயிலில் மணி கட்டி – மக்கள் குறை அச்சமின்றி அரண்மனை வந்து குறை அறிவிக்கச் செய்து – அவர்கள் குறைதீர்த்த மனுநீதிச் சோழனும் உயிர்த் துன்பம் இனி செய்யேன் எனப் போர் துறந்த அசோகச் சக்கரவர்த்தியும், ஆராயாது தவறிழைத்ததால் அவையில் உயிர்துறந்த நெடுஞ்செழியப் பாண்டியனும், எங்கள் தமிழகத்தில் சிறப்பான அறிவியல் ஆய்வகம் வேண்டும் என்று சொந்த நிலத்தின் பத்திரத்தையும் சொந்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு டில்லி வரை சுருக்கென சென்று – மையஅரசுக்கு வழங்கி மையமின்வேதியியல் ஆய்வகம் தமிழ் மண்ணில் – காரைக்குடியில் நிலைபெற காரணமாயிருந்த வள்ளல் அழகப்பரும் அரசியல்துறையில் வாழும் கடவுள்கள்.

    அம்மை நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் மருத்துவத்துறையில் வாழும் கடவுள்.

    ரேடியோவைக்கண்டுபிடித்த மார்க்கோனி – விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் – வெடிமருந்து கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல், – இவர்கள் எல்லாம் அறிவியல் – தொழில்நுட்ப உலகில் வாழும் கடவுள்கள்.

    வாகன உற்பத்தியில் டாடாவும், அசோக் லேலண்டும்; வேதி உற்பத்தியில், தூத்துக்குடியிலன் தரங்கதாரா கெமிக்கல்ஸ், மேட்டூரில், மேட்டூர் கெமிக்கல்ஸ் மற்றும் கெம்பாப் தொழிற்கூடம், பொள்ளாச்சியின் சக்தி நிறுவனங்கள், ஆகியனவற்றின் நிறுவனர்கள் தொழில்நுட்பத்துறையில் கடவுள்கள். இன்று உலகம் வியக்கும்படியாக Fuel Cells எனப்படும் சக்திக் கலங்களை உலகெங்கும் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழர் கே. ஆர். ஸ்ரீதர் ஆற்றல் தொழில்நுட்பத் துறையில் வாழும் கடவுள்.

    இவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்த (அல்லது வாழ்ந்து வருகிற) காலகட்டத்தில் உலகிற்கு என்ன தேவை என்பதனை மிகச்சரியாக உணர்ந்து, அதனை மிகச்சரியான தருணத்தில், மிகச்சரியான அளவிலே தந்தவர்கள்.

    சமயங்கள் எனும் வகையில், ஆதி சங்கரர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரமணர், வள்ளலார். இயேசுபிரான், நபிகள் நாயகம் ஆகியோர் அன்றும் இன்றும் வாழும் கடவுளானவர்கள். ஆன்மீக விஷயங்களில், உலகோர்க்கு எப்போது என்ன தேவை என்பதைச் சரியாக உணர்ந்து அந்தத் தேவையை நிறைவு செய்த பெருமை இவர்களுடையது.

    பிரபஞ்சவியல் மற்றும் உடலியல் துறையில் சித்தர்கள் கடவுள்களே. உலகில் வேறெவரும் கிட்டே நெருங்கமுடியாத அள்வுக்கு உயரே சென்று உய்யஆய்ந்து நம் சித்தர்கள் நிலைநாட்டியிருக்கிற கண்டுபிடிப்புக்களை அறிந்து கொள்ள மட்டுமே பல யுகம் வேண்டும். இன்றும் என்றும் ஓப்பது மிக்கதும் உள்ளது ஏதும் இல்லை என்ற அளவுக்கு உண்மைக் கருவூலங்களை நமக்காய் விட்டுச் சென்றிருக்கிற வித்தகர்களான சித்தர்கள் என்றும் கடவுளாகவே நிலை பெறுவர்.

    கணினித் தொழில்நுட்பம் என்பது இன்றைய காலகட்டத்தின் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. உண்ணவும், உறங்கவும், கனவு காணவும் கூட கணினி என்றாகிவிட்ட இக்கால நிலையில் – கண்ணெல்லாம் கணினி – கணக்கில்லாக் கணினி என்பதே பரிபாஷையாகி- அடையாளமாகி – விட்டது. கணினியின்றி எவரும் வாழமுடியாது என்கிற காலக் கட்டாயத்தில் நாம் வாழ்கிறோம்.

    ஆனால், இன்று நம் கையில் இருக்கும் கணினித் தொழில்நுட்பம் சும்மா வந்தவிடவில்லை. இந்த செம்மாந்த வளர்ச்சிக்கு நீண்ட பின்புலம் இருக்கிறது. கணினி வளர்ச்சி கடந்து வந்திருக்கிற பாதை நெடியது – கடியது. இந்தப் பாதை கரடு முரடானது – கொடிய முகடுகள் கொண்டது – பயங்கரப் பள்ளத்தாக்குகளில் இறங்கி ஏறி வந்தது, சறுக்கிவீழ்த்தும் பிடிமானமில்லாத வழுக்குப்பிரதேசங்களைக் கடந்தது வந்திருப்பது. நினைத்தாலே நடுக்கம் கொள்ளவைக்கும் பிரம்மாண்டாமான மனிதஉழைப்பை இந்தக் கணினி வளர்ச்சி முதலீடாய் விழுங்கியிருக்கிறது. உலகின் வேறெந்த தொழிநுட்ப வளர்ச்சியும் இந்த அளவு மனித முதலீட்டை கபளீகரம் செய்யவில்லை என்றே சொல்லமுடியும். இன்று உலகளார்ந்த அளவில் பலுகிப்பெருகியிருக்கிற கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எண்ணிறந்த இந்தியர்கள் உழைப்பு நல்கி இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும் – குறிப்பாக – நம் தமிழர்கள் தந்திருக்கிற ராப்பகல் உழைப்பு அளப்பரியது. இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும், தனிமனித சவுகரியங்களை இழந்தும், சொல்லொணாப் பல குடியேற்றப் பிரச்சினைகளைச் சந்தித்தும் – உலகில் அனைவருக்கும் கணினித் தொழிநுட்பம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரே சிந்தனையோடு மனிதவள முதலீட்டை வழங்கியிருக்கிற பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை வாழ்த்தி வணங்குதல் நன்று.

    கணினி வளர்ச்சி இவ்வாறானது என்றே இருப்பினும், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உண்மையிலேயே முதன்மையான முதலீடு ஒன்று உண்டு. அது என்னவென்றால்: “தீர்க்கதரிசனம்.”

    அம்மைத் தடுப்பூசியின்றி மக்கள் வாழமுடியாது என்றது ஜென்னரின் தீர்க்கதரிசனம் – ரேடியோவின்றி மக்கள் வாழமுடியாது என்றது மார்க்கோனியின் தீர்க்க தரிசனம். மனிதர்கள் நோயுடன் வாழமுடியாது என்றது சித்தர்களின் தீர்க்க தரிசனம். சமரச சன்மார்க்கம் இன்றி மக்கள் ஒருமையுடன் வாழமுடியாது என்றது வள்ளலாரின் தீர்க்கதரிசனம்.

    கணினியின்றி மக்கள் வாழமுடியாது என்றது ஸ்டீவ் ஜாப்ஸின் தீர்க்கதரிசனம். மக்களுக்கான கணினித் தேவையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அனைவர்க்கும் கணினித் தொழில்நுட்பவசதி கிடைக்கவேண்டும் என்று மனப்புலனில் வடிவமைத்து – திட்டமிட்டு – கனவு கண்டு – ஓய்வு ஒழிச்சல் இல்லாது உழைத்த ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் இன்று வாழும் கடவுளாகவே காண்கிறது.

    கணினி வாழ்வின் அடிப்படை ஆதாரவசதி என்றாகிற காலம் வந்துகொண்டேயிருக்கிறது, அதற்காக, கணினித்தொழில்நுட்பத்தைப் பல்லோரும் பயனடையுமாறு பதப்படுத்தி, பலப்படுத்தி, பன்மைப்படுத்திட வேண்டும். அனைவருக்கும் அனைத்துக்கும் கணினித் தொழில்நுட்பம் என்று இத்தொழில்நுட்பத்தை எளிமைப்படுத்தி அதனை அனைத்து மனித சாதனமாய்த் தயார்செய்து வைத்தாலொழிய, கணினி அனைவருக்கும் கிடைக்காது என்று எண்ணினார் ஸ்டீவ் ஜாப்ஸ். இவ்வாறு எதிர் வரும் ஒரு தேவையை முன்கூட்டியே – ஏறக்குறைய ஒரு கால்நூற்றாண்டுக்கு முன்னேயே ஞான திருஷ்டியால் பார்த்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னேயே சுதந்திரத்தை ஞான திருஷ்டியால் பார்த்து “ஆடுவோமே பள்ளு பாடுவோமே!” என்று ஆனந்தக் கூத்தாடச் சொன்ன பாரதியின் உறுதியை ஸ்டீவ் ஜாப்ஸின் தேவை உணர்தலில் காணமுடிகிறது.

    தேவையை உணர்தல் சிறப்பான விஷயம் தான் ஆனால் வெறுமனே உணர்தலால் என்ன பிரயோஜனம்? உணர்வை ருசுவாகவேண்டும் – எண்ணத்தைச் செயலாக்க வேண்டும் – சாதனைப்படைக்க வேண்டும் அல்லவா?

    சாதனை ஒன்றைப்படைக்க வேண்டுமென்றால் விடாப்பிடியான கொள்கைப் பற்று வேண்டும் – இலக்கினின்று விலகா சிந்தை வேண்டும். கடுமையான பழக்கவழக்கங்கள் வேண்டும் – காலநேரம் விரயமாகக் கூடாது.

    அதுவும் கண்ணினித் தொழில்நுட்பம் என்பது பலபேரை இணைத்தும்- இணைத்த அந்தக்குழுவைச் சிதையாமல் தன்னுடன் இணைத்தும் – உடன் அழைத்தும், உடன் இழுத்தும் செல்லவேண்டிய பணி. வேண்டும்போது குழுவை முன் தள்ளியும் – தேவைப்படும்போதெல்லாம் குழுவை மறைவில் கிடைக்கச் சொல்லியும் மாற்றுக் கட்டளைகள் பிறப்பிக்கவேண்டிய பணி. பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளைக் குழுபின்பற்றுமாறு கட்டுப்பாட்டுடன் ஒருங்கமைத்தல் ஆகியன மிகவும் முக்கியம். இப்பணியில் பலபேருடன் உரசல்கள் ஏற்படும் – மோதல்கள் நிகழும் – கஷ்டநஷ்டங்கள் உருவாகும் – பசி– பட்டினி – தாகம் பொறுக்கவேண்டும் – உறக்கம் விடுக்க வேண்டும் – அடிக்கடி தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் – கூட்டங்கள் நடத்தவேண்டும் – கூட்டங்களில் கலந்தது கொள்ளவேண்டும் – உரை நிகழ்த்தவேண்டும் – உரையாடவேண்டும் – பிறரை தன் கருத்துக்கு இணக்கம் சொல்லவைக்க வேண்டும் – பணவிஷயத்தில் கராறாய் இருக்கவேண்டும் – உடன் பணிபுரியும் அனைவருக்கும் சம்பளம் வழங்கவேண்டும் – என ஓராயிரம் நிர்ப்பந்தங்கள். இதற்கிடையில் வளர்ச்சியைப் பொறுக்கமாட்டா பிறரின் வசைவையும் – தொந்திரவையும் – அவர் செய்யும் தீங்கையும் பொறுத்துக்க கொள்ளவேண்டும் என்ற சோதனைகளை வேறு.

    இந்நிலையில் ஒருவன் ஒரு தொழில்நுட்ப முன்னோடியாக – கணினித் தொழில்நுட்பத் தந்தையாக உயர்த்துவது என்பது அற்ப சொற்பமான செயலன்று. சொல்லப்போன்னால் ஒருதனிமனிதனாக நின்று ஸ்டீவ் ஜாப்ஸ் மேற்சொன்ன அனைத்தையும் சந்திக்கவேண்டியிருந்தது. ஏனெனில் கணினித் தொழில்நுட்பத்தில் சுயம்புவாக உருவானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

    ஸ்டீவ் ஜாப்ஸ்கொண்டிருந்த கணினித் தொழில்நுட்பப பற்றை, தொழிநுட்ப வெறி எனலாம். உண்பதும் உறக்கமும் கணினி என்றான வாழக்கை. யாருக்காய்க் கணினி என்றால் இந்த உலகின் உள்ள மக்கள் யாவருக்கும் கணினி என்கிற கனவு – எவர் கையிலும் கையிலும் கணினி என்கிற பார்வை – தொலைபேசியையும் கணினியையும் சங்கமித்து கையகக் கணினிகளை உருவாக்கவேண்டும் என்றத் தணியா ஆவல். இதை அவர் ஏன் செய்தார் என்றால் – அவரே கூறாக காண்க: “நான் மனித நேயன் – ஆனால் சிறுவயதுமுதலே எனக்கு மின்னணுக் கருவிகளின் பால் மிகுந்த நாட்டம் இருந்தது – என்னுடைய ஹீரோவாக நான் கொண்டிருந்தவர் போலராய்ட் கேமராவைக் கண்டுபிடித்த துவின் லேண்ட் – அவர் – அறிவியல் தொழிநுட்பக் கண்டுபிடுப்புகளில் மக்களே முதன்மையான இலக்கு என்கிறார் – அவர் வழியே எனக்குள்ள மனித சிந்தனையினையும் – தொழிநுட்பத் திறனையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று விரும்பினேன்!’ என்று.

    ஆம்! எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் மக்களுக்கான பயன்பாடே. மனித நேயமும் – மனிதச் சேவையும் தொழிநுட்பத்தின் இரு கண்கள் போன்றவை.
    மனித நேயமும் – மனிதச் சேவையும் இல்லாத எந்தத் தொழில்நுட்பமும் – தொழில்நுட்பமாய் இருக்க லாயக்கில்லை என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

    மேலும் பேசுவோம்

    Share
  • ’’பாலா திரிபுரை நெமிலி’’….

    கிரேசி மோகன்

    images (12)
    ’’பாலா திரிபுரை நெமிலி’’….
    ——————————————————
    ”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
    கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
    நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
    பாலாம் பிகையவள் பேர்”….(7)
    “மாலை மயக்கம், மதிய உதயம்அதி
    காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
    திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
    எரிபவை கூட எழில்”….(8)

    ”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
    மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
    யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
    சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….(9)

    ’’இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க,
    நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
    வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
    பாலை திரிபுரையின் போக்கு’’….(10)
    ஞமலி -நாய்

    ”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….(11)

    ”பயமகல பாலா, பலம்பெருக பாலா,
    லயமடைய பாலா, லலிதை -மயமான,
    ரூப தியான ரமிப்பில் இருப்போர்க்கு,
    ஆபத்(து) உதவி அவள்”….(12)….கிரேசி மோகன்….

    Share
  • ரோஸெட்டா தளவுளவி புகட்டிய புதிய வால்மீன் உருவாக்கக் கோட்பாடு

    How comets are born
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 
    ++++++++++++++
    கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,

    பரிதி ஈர்ப்பு மண்டத்தில்
    திரிந்து வருபவை
    வால்மீன்கள்!
    நான்கு மில்லியன் ஆண்டுக்கு முன்
    தோன்றின மிச்சத்தில்.
    தணிந்த திணிவு, துளைகள் மிகுதி.
    இருதலை  அண்டம் !
    வால்மீன்களை விண்கற்கள்,
    தாக்க வில்லை.
    நீளும் வால் பல மில்லியன்.
    வையகத்தில் தூள்களைச் சோதித்தார் !
    சூரிய குடும்பக் கோள்களின்
    ஆதித் தோற்ற வளர்ச்சி அறியவும்,
    உயிரின மூலத்தை உளவவும்
    ஏவிய விண்சிமிழ்
    பூமிக்கு மீண்டது !
    வால்மீனில் இறங்கிக்
    கால் வைத்து
    ஒருநாள்  மாந்தர்  தகவல்  அனுப்புவார்
    பெருமைப்படும் நிகழ்ச்சி.

    +++++++++++++++

    Comet -1
    சூரிய குடும்பத்தின் புறக் கோள்களாய், நெப்டியூன் கோளுக்கு அப்பால் உள்ள பனி மூடிய பெரிய அண்டங்கள் [Icy Trans-Neptunian Objects (TNO)] குன்றி வாழும் கதிரியக்க உலோகங்களால் [Short-lived Radioactive Substances] சூடாக்கப்படுகின்றன.  வால்மீன்கள் அவற்றைப் போல் சூடாக்கப்படும் அறிகுறிகள் தென்பட வில்லை.  சூரிய நிபுளா வாயு தோன்றிய முதல் ஒரு மில்லியன் ஆண்டுகளில், நெப்டியூனுக்கு அப்பால் பனி மூடிய பெரிய அண்டங்கள் பெருக்கம் மிகையாகின.  அவை மேலும் வாயுப் புயல் வீச்சுகளால் தாக்கப்பட்டு 400 கி.மீ. [240 மைல்]  அளவுக்கு வளர்ச்சியுற்றன. நெப்டியூனுக்கு அப்பால் பெரிய அண்டங்களை விண்கற்கள் தாக்கிய அறிகுறிகள் வால்மீன்கள்பால் காணப்படவில்லை.  4.6 பில்லியன் ஆண்டுகளாய்த் தோன்றியது முதல், சிதைவாகாமல் தப்பிப் பிழைத்து, நெப்டியூனுக்கு அப்பால் உள்ள அண்டங்களின் நிழலில் மெதுவாக வால்மீன்கள்  வளர்ச்சியுற்றன என்று கரு

    ​துகி​

    றோம்.

    பிஜோர்ன் டேவிட்ஸன் [Jet Propulsion Laboratory, California, USA]
    How comets are born-2
    [Click to Enlarge]
    சூரிய குடும்பக் கோள்கள் தோற்ற வளர்ச்சிக்குச் சான்றாக வால்மீன்கள் உள்ளன.  ஆகவேதான் நாங்கள் ரோஸெட்டா விண்ணுளவி மூலம் ஆழ்ந்த நோக்குகளை மற்ற வால்மீன்கள் தகவலுடன் ஒப்பிட்டு எந்த விதத் தோற்றக் காட்சி ஏற்புடையது என்று விளக்கமாக ஆராய்ந்தோம். வால்மீன்கள் மெய்யாகச் சூரிய குடும்பத்தின் புதையல் களஞ்சியம். அவைப் பூர்வ காலத்தில்  சூரிய குடும்பக் கோள்கள் கட்டுமான இயக்கத்திற்கு ஈடு இணை

    ​ ​

    யற்ற உட்கருத்தை அளிக்கின்றன.

    மாத்யூ டெய்லர் [ESA Rosetta Project Scientist]
     Inline image 1
       Rosetta Spacecraft
    பூர்வ காலத்தில் வால்மீன்கள் எப்படித் தோன்றி உருவாகின ?
    ஐரோப்பிய ஈசா கூட்டாய்வில் ஏவப்பட்ட ரோஸெட்டா விண்ணுளவியும், அது வால்மீனில் இறக்கிய தளவுளவியும் அனுப்பிய சமீபத்தைய [2016 ஜூலை 29] வால்மீன்கள் தோற்ற வளர்ச்சியப் பற்றி புதியதோர் கருத்தெழ வழி காட்டியது.  பூர்வீகச் சூரிய குடும்ப தோற்றக் காலங்களில் எஞ்சிய மிச்சங்களே வால்மீன்கள் என்று உறுதியாக்கி உள்ளது.  அவை பெரிய அண்டங்களுடன், சிறிய அண்டங்கள் மீது மோதித் தோன்ற

    ​ ​

    வில்லை என்பதும் தெளிவானது.  வால்மீன் 67பி சுரியுமோவ்-கெராஸிமிங்கோவை  [67P Churyumov-Gerasimenko]  விளக்கமாக ரோஸெட்டோ உளவிகள் பல மாதங்கள் ஆராய்ந்து, சூரிய மண்டலக் கோள்கள் தோன்றி வளர்ச்சி யுற்றதை எடுத்துக் காட்டுகின்றன.  ரோஸெட்டா உளவிக் கருவிகள் தந்த புதிய தகவல் :  வால்மீன்கள் தணிந்த திணிவு, தேன்கூடுபோல் மிகுந்த துளைகள், பல்லடுக்குப் படிவுகள் மேவிய இரட்டைப் பகுதி உடையவை [Low Density], [High Porosity], [Double-Lobed Body].  அதாவது அவை இரட்டைப் பகுதிகளாய் ஒட்டிக் கொள்வதற்கு முன்பே, இரு பகுதிகளில் காலம் காலமாய்ச் சேமித்தப் பல்லடுக்குப் படிவுகள் இருந்தன.

    comets -2
    வால்மீன்கள் தலைகளின் உட்கருவில் அளவுக்கு மேற்பட்ட பெருந் துளைகள் இருப்பது, மென்மையானவை நசுக்கப்படும் தீவிரத் தாக்குதல்களால் உருவாக வில்லை என்பது தெளிவாகிறது. ரோஸெட்டா கண்ட, பல்வேறு கட்டுமான உபரிகளும், தனித்துவ முறைகளும் [Structures & Features] இவ்வித வளர்ச்சி எப்படி நேர்ந்திருக்கும் என்று காட்டியுள்ளது.
    முந்தைய ஆய்வுகள் வால்மீன் தலையும், உடலும் தனித்தனிப் பகுதி என்றும், அவற்றைச் சேர்த்த மோதல், முறிக்காதவாறு மென்மை யானதாய் மெதுவான வேகத்தில் நேர்ந்திருக்க வேண்டும்.  இரண்டிலும் பல்லடுக்குப் படிவுகள் ஒரே நிலையில் தென்பட்டன.  வால்மீன் இரட்டைப் பகுதிகளில் தென்படும் திரட்சிக் கட்டிகள், அல்லது வாத்துப் புடைப்புகள் [Lumpiness] or [Goosebumps] சிறுகச் சிறுக சேர்ந்த மாதிரி தெரிகின்றன.
    மேலும் வால்மீன் உட்பொருட்களைச் சோதித்தால், நீரால் நேர்ந்த சரிவுகள், அரிப்புகள் எதுவுமில்லை. வால்மீனில் செழிப்பாக கார்பன் மொனாக்ஸைடு,ஆக்ஸிஜென், நைடிரஜன், ஆர்கான் வாயுக்கள்  [Carbon monoxide, Oxygen, Nitrogen & Argon] இருந்தன.  ஆரம்ப காலத்தில் சூரிய நிபுளா வாயுக்கள் நெப்டியூனுக்கு அப்பால், கோள்கள் திரண்டு எஞ்சிய மிச்சத்தில் மேலடுக்குப் படிவுகளைச் சேர்த்து, சுமார் 3 மைல் [5 கி.மீ] அளவு வால்மீன் உருவாகியிருக்க வேண்டும் என்பது விளங்குகிறது.

    First comet image from Philae

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0

    http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo

    http://www.bbc.com/news/science-environment-30058176

    +++++++++++++++++++++++

    Comet Size

    “எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது.  ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது.  ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”

    ஜான் ஜேக்கஸ் டோர்டயின்   [ESA Director General]  [November 12, 2014]

    “விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”

    அல்வாரோ கிமென்னிஷ்  [ESA  Director of Scince & Robotic Exploration]  [November 12, 2014]

    How comets are born-1

    [Click to Enlarge]

    “வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?  வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்?  காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்!  அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது!  நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும்.  இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”

    ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

    Rosetta drops the Lander

    Mothership Rosetta  Drops Lander on the Comet

    முதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி

    2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் !  அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது.  1969  ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது.  2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து,  6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும்.   ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh]  வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது.  சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.

    Mission details

    வரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.   வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது.   மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர்.  “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும்.   அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார்.  தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph].  பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும்.  ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித்  திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]

    Philae touchdown -2

    வால்மீனில் இறங்கிய தளவுளவி  ஃபிலே

    தளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது.  மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும்.  வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே ! துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை.  மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது.  சூரியனை    வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது.  சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை.  அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன.  அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும்.  மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.

    ஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    Mothership & Lander

    2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள்.  அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”

    டாக்டர் பால் பெல், வானியல் நிபுணர் [Dr. Paul Abell, NASA Jonson Space Center, Houston]

    “டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று!  நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று!  வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல!  அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”

    டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

    Rosetta Mission

    ரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?

    ஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது!  அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும்!  வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!

    வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!  ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும்.  விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும்.  பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா?  மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.

    Philae Lander parts

    ரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்]  ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை.  அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    ரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம்.  மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன.  பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.

    ESA Control Room -2 

    விண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:

    1.  “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]

    2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    3. “காஸிமா” வால்மீன் அடுத்த நிலை அயான் நிறை அளவி [COSIMA: Cometary Secondary Ion Mass Analyser]

    4. “ஜியாடியா” தூள் மோதல் ஆய்வு, தூள் நிரப்பி [GIADIA: Grain Impact Analyser & Dust Accumulator]

    5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]

    6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]

    7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]

    ESA Control Room

    8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]

    9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]

    10 “ஆரெஸை” வானலை விஞ்ஞான உளவுக் கருவி [RSI: Radio Science Investigation]

    11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]

    வால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:

    தள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:

    1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]

    2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]

    3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    Philae Lander 

    Philae Lander

    4. “கோஸாக்” வால்மீன் மாதிரி உட்பொருள் ஆயும் சோதனை [COSAC: Cometary Sampling & Composition Experiment]

    5. “மாடுலஸ் டாலமி” வெளியேறும் வாயு உளவி [MODULUS PTOLEMY: Evolved Gas Analyser]

    6. “முபஸ்” மேற்தளக் கீழ்த்தள பல்வினை உணர்ச்சிக் கருவி [MUPUS: Multi-Purpose Sensor for Surface & Subsurface Science]

    7. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]

    8. “லெஸ்டி2” மாதிரி பரிமாறும் கருவி [SD2: Sample & Distribution Device]

    9. “ஸெஸமி” தள மின்னொலிச் சோதனை மானி, தூசி மோதல் நிரப்பி [SESAME: Surface Electrical & Acoustic Monitoring Experiment, Dust Impact Collector]

    விண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany]  கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]

    Philae Lander components

    அணுசக்தி உந்தும் விண்ணுளவியில் விண்கல் தள ஆய்வுகள்

    2007 மார்ச் 14 ம் தேதி நாசா வானியல் நிபுணர் டாக்டர் பால் பெல் 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் கால் வைக்க மனிதரை அனுப்புவதற்கு முன்பாக, நிலவுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு விண்கற்களில் [Asteroid] விண்வெளி விமானிகளை அனுப்பி அவற்றைப் பற்றி அறிந்து வரும் விண்கப்பல் ஓரியான் [Orion Spacecraft] திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஓரியான் விண்கப்பல் முதன்முதலில் அணுசக்தி ஆற்றலில் ஏவப்பட்டு அண்ட வெளியில் பயணம் செய்யப் போகிறது. அத்திட்டத்தில் விண்கப்பல் தேர்ந்தெடுத்த சிறு விண்கல் ஒன்றைச் சுற்றும். பயணம் செய்து பங்கெடுக்கும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் விண்கப்பலில் அமர்ந்து கண்காணிக்க இருவர் விண்கல்லில் இறங்கித் தடம் வைத்து அதன் மண்தளப் பண்பாடுகளை ஆய்வு செய்வார்.  அத்துடன் அங்கே நீர் உற்பத்தி செய்யத் தேவையான ஆக்ஸிஜென், ஹைடிரஜன் வாயுக்களைப் பிரித்தெடுக்க ஏதுவான மூலத்தாதுக்கள் கிடைக்குமா வென்றும் கண்டறிவார்.  செவ்வாய்க் கோள் யாத்திரைக்கு நிலவைப் போல் விண்கற்களை இடைத்தங்கு அண்டங்களாக விமானிகள் பயன்படுத்த முடியுமா வென்றும் கண்டறிவார்கள்.  அந்த பயணத்துக்கு நிலவுக்குச் செல்வதை விட சற்று கூடுமானதாய் 7 முதல் 14 தினங்கள் நாட்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.  டாக்டர் பால் பெல் தயாரித்த அந்த புதிய திட்டத்திற்கு நாசா மேலதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளர்கள்.

    Rosetta Spaceship Launching 

    [March 2, 2004]

    Rosetta launching

    2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் [Ariane-5G+] மூலமாக ஏவப்பட்டது, ரோஸெட்டா விண்ணுளவி.  ரோஸெட்டாவின் முதல் பூகோளச் சுழல்வீச்சு [Earth Gravity Assist (Earth’s Fly-by)] 2005 மார்ச் 4 ஆம் தேதி நிகழ்ந்தது. “ஈர்ப்பாற்றல் உந்தியக்கம்” என்பது கவண் கல்லைக் கையால் வீசிச் சுழற்றி அடிப்பது [Sling-shot like Effect] போன்றது.  விண்ணுளவியின் இரண்டாவது கவண் வீச்சைச் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பாற்றல் புரிந்தது.  அப்போது விண்ணுளவின் வேகம் செவ்வாய்க் கோளின் வேகத்துக்கு ஒப்பாக மணிக்கு 22,500 மைல் வீதத்தில் பயணம் செய்தது.  மூன்று டன் எடையுடைய ரோஸெட்டா விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றப் பின்புறம் சென்ற போது 20 நிமிடங்கள் ரேடியோ அலைச் சமிக்கைப் பூமிக்கு வராமல் தடைப் பட்டது!  விண்ணுளவியின் சூரிய ஒளித்தட்டுகளுக்கு பரிதி ஒளி மறைக்கப் பட்டு மின்சார உற்பத்தி நின்றது.  நுணுக்க விண்வெளி இயக்கத்தில் நடந்த அந்த பயங்கர 20 நிமிடங்களில் ஈசா எஞ்சினியரின் மூச்சும், பேச்சும் சற்று நின்று நெஞ்சத் துடிப்பு வேகமாய் அடித்துக் கொண்டது.  விண்ணுளவி செவ்வாயின் முதுகுப் புறத்தைத் தாண்டி வெளிவந்து, பூமியில் ரேடியோ தொடர்பு மீண்டதும் அனைவரது முகத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்தது.

    Philae touchdown-3

    ஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் வால்மீன் உளவுப்பணி

    ஈசாவின் ராக்கெட் ஏவுதளம் தென் அமெரிக்காவின் வடக்கே பிரென்ச் கயானாவில் கௌரொவ் [Kourov, French Guiana] என்னுமிடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 1993 நவம்பரில் அகில நாடுகளின் ரோஸெட்டா விண்வெளித் திட்டம் ஈசா விஞ்ஞானக் குழுவின் அங்கீகாரம் பெற்றது.  அந்த திட்டத்தின் குறிக்கோள், விண்ணுளவி ஒன்றை அனுப்பி, வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சுற்றிவரும் “சூரியுமாவ்-ஜெராஸிமென்கோ” (Churyumov-Gerasimenko) என்னும் வால்மீனைச் (67P) சந்திப்பது.  விண்கப்பல் ஒன்று வால்மீனை வட்டமிட, தள உளவி ஒன்று கீழிறங்கி வால்மீனில் தங்கிச் சோதனைகள் செய்யும். அது பத்தாண்டு நீள் பயணத் திட்டம்.  அந்த விண்ணுளவிக்கு “ரோஸெட்டா” [Name from Rosetta Stone of Black Basalt with Egyptian Scripts about Ptolemy V] என்னும் பெயர் அளிக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் ஏரியன்-5 [Ariane 5 Generic Rocket Engine, Payload 6-9.5 Tons] 2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து, ஈசாவின் ரோஸெட்டா விண்ணுளவியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியது.

    Rosetta Orbit

    ரோஸெட்டாவின் வேகத்தை அதிகமாக்கவும், பயணப் பாதையை நீளமாக்கவும் பூமி, செவ்வாய், லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் [Astroids: Lutetia & Steins] ஆகிய அண்டக்கோள்களின் ஈர்ப்பாற்றல் சுழல் உந்துத் திருப்புகள் [Gravity Assist Maneuvers] பயன்படுத்தப் பட்டன.  2005 மார்ச் 4 ஆம் நாள் விண்ணுளவி பூமியைச் சுற்றி வந்து வேகத்தையும், பாதை நீள்வட்டத்தையும் முதலில் மிகையாக்கியது.  நுணுக்கமான அந்த இயக்க முறைகள் அனைத்தும் ஜெர்மெனியில் உள்ள ஈசாவின் விண்ணுளவி ஆட்சி அரங்க எஞ்சியர்களால் தூண்டப்பட்டுச் செம்மை யாக்கப்பட்டுக் கண்காணிக்கப் பட்டன.  சமீபத்தில் [2007 பிப்ரவரி 25] வெற்றிகரமாகச் செவ்வாய்க் கோள் சுழல் உந்துத் திருப்பல் [Mars Fly-by] செய்யப் பட்டுள்ளது.  அடுத்த இரண்டு பூகோளச் சுழல் உந்து திருப்பல்கள் 2007 நவம்பரிலும், 2009 நவம்பரிலும் நிகழப் போகின்றன.  பிறகு லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் சுழல் உந்துத் திருப்பல்கள் முறையே 2008 செப்டம்பரிலும், 2010 ஜூலையிலும் திட்டமிடப் பட்டுள்ளன.

    Rosetta-comet orbit

    பரிதியை நோக்கிப் பயணம் செய்யும் ரோஸெட்டா விண்ணுளவி நீள் வட்டப் பாதையை விட்டுப் புலம்பெயர்ந்து, வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்துக்குப் புகுந்திடும் நிகழ்ச்சி, இன்னும் ஏழாண்டுகள் கடந்து 2014 மே மாதம் ஆரம்பிக்கும்.  2014 ஆகஸ்டில் தாய்க் கப்பல் விண்ணுளவி வால்மீனைச் சுற்ற ஆரம்பித்து, நவம்பரில் தள உளவியைக் கீழே இறக்கி விடும்.  தள உளவி வால்மீனில் அமர்ந்து சில மாதங்கள் வால்மீனின் தளப் பண்பாடுகளை ஆய்வு செய்துத் தகவலைத் தாய்க் கப்பலுக்கு அனுப்பிக்கும்.  தாய்க் கப்பல் அனுப்பும் தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ அலைத்தட்டு உறிஞ்சி எடுத்து ஜெர்மெனியில் உள்ள ஆட்சி அறைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்.  ரோஸெட்டா வால்மீன் திட்டப் பணிகள் 2015 டிசம்பர் மாதம் நிறைவு பெறும்.

    Rosetta near comet

    Comet Details

    (தொடரும்)

    **********************
    தகவல்:

    1. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
    2. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
    3. Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
    4. Watch Deep Impact’s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]
    5. NASA to Study Comet Collision www.PhysOrg.com [2005]
    6. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
    7. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]
    8. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
    9. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html [Deep Impact: 1]
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html [Deep Impact: 1]
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html[Stardust Probe: 1]
    13 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html[Stardust Probe: 2]
    14 BBC News: Space Probe Performs Mars Fly-By [Feb 25, 2007]
    15 European Space Agency (ESA) Science & Technology -Rosetta Fact Sheet [Feb 19, 2007]
    16 Europe’s Space Probe Swings By Mars [Feb 25, 2007]
    17 Europe Comet Probe Makes Key Mars Flyby By: David McHugh (Associated Press) [Feb 24, 2007]
    18 Spaceflight Now: Comet-bound Probe Enjoys Close Encounter with Mars By: Stephan Clark [Feb 25, 2007].
    19 SkyNews: Was Hyakutake the Comet of the Century [July 1996] &
    SkyNews: Comet Hale-Bopp [April 1997]
    20 Sky & Telescope: Brightest Comet in 41 Years [April 2007]
    21 BBC News Houston: Asteroid Mission Concept Unveiled By: Paul Rincon [March 14, 2007]

    22. http://www.spacedaily.com/reports/Touchdown!_Rosettas_Philae_probe_lands_on_comet_999.html [November 12, 2014]

    23.  http://www.spacedaily.com/reports/A_close_up_with_a_comet_999.html  [November 12, 2014]

    24. http://www.spacedaily.com/reports/European_probe_lands_on_comet_fails_to_anchor_999.html  [November 12, 2014]

    25.  http://www.bbc.com/news/science-environment-30034060  [November 13, 2014]

    26.http://www.spacedaily.com/reports/Philae_to_attempt_comet_drill_mission_scientist_999.html  [November 14, 2014]

    27.  http://www.bbc.com/news/science-environment-30058176  [November 15, 2014]

    28.  http://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft)  [November 15, 2014]

    29.  http://fr.wikipedia.org/wiki/Rosetta_(sonde_spatiale)  [?November 15, 2014]

    30.  http://sci.esa.int/rosetta/14615-comet-67p/  [November 16, 2014]

    31.  http://www.space.com/19878-halleys-comet.html  [February 20, 2013]

    32. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/How_comets_are_born [July 28, 2016]

    33. http://www.spacedaily.com/reports/How_comets_are_born_999.html  [July 29, 2016]

    ********************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (August 4, 2016)]

    Attachments area
    Preview YouTube video Comets: Windows into Time 1981 NASA 7min

    Comets: Windows into Time 1981 NASA 7min

    Preview YouTube video meteors, asteroids, and comets (Vagabounds 2)

    meteors, asteroids, and comets (Vagabounds 2)

    Preview YouTube video How did the solar system as planets and moons were born, the birth of the Sun stars in the cosmos

    How did the solar system as planets and moons were born, the birth of the Sun stars in the cosmos

    Preview YouTube video Landing On a Comet – Worlds First

    Landing On a Comet – Worlds First

    Preview YouTube video Rosetta – Space Mission to a Comet

    Rosetta – Space Mission to a Comet

    Preview YouTube video Rosetta media briefing at ESOC 10 November

    Rosetta media briefing at ESOC 10 November

    Preview YouTube video Rosetta mission: Results from comet landing: 14 Nov, 13:00 GMT

    Rosetta mission: Results from comet landing: 14 Nov, 13:00 GMT
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav

    ’’கன்று துதித்திடும் கண்ணனிவன் கோகுலத்தில்
    இன்று பிறந்த இறை(ஆ)யானால், -அன்றுமிவன்
    ஊழி மிதந்(து)உலகேழ் உண்டுமிழ்ந்த பாலகன்
    பாழியந்தோள் பத்பனா பன்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav
    ‘’விசுவரூபம் காட்டி விரட்டியும் பார்த்தன்
    விசன விரக்தியில் வாட, -கொசுவரூபம்
    ஏற்றம்புத் தூளியில் வீற்ற பரந்தாமர்
    மாற்றினார் கீதை மொழிந்து’’….கிரேசி மோகன்….

     

    ”பகவான் உவாச’’….
    ———————————————-
    ”வாட்டிடும் இன்பத்தைக், கூட்டிடும் துன்பத்தைப்
    போட்டிட நெஞ்சத் தராசினில் -காட்டிட
    வேண்டும் சமத்துவம், வீரன் அவனழியான்
    காண்டீபம் தானுன் களிப்பு”….

    Share