கிரேசி மோகன்

images (12)
’’பாலா திரிபுரை நெமிலி’’….
——————————————————
”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
பாலாம் பிகையவள் பேர்”….(7)
“மாலை மயக்கம், மதிய உதயம்அதி
காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
எரிபவை கூட எழில்”….(8)

”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….(9)

’’இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க,
நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
பாலை திரிபுரையின் போக்கு’’….(10)
ஞமலி -நாய்

”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
வருபவர் வாழ்வில் வளம்….(11)

”பயமகல பாலா, பலம்பெருக பாலா,
லயமடைய பாலா, லலிதை -மயமான,
ரூப தியான ரமிப்பில் இருப்போர்க்கு,
ஆபத்(து) உதவி அவள்”….(12)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *