கிரேசி மொழிகள்திருமால் திருப்புகழ்

’’பாலா திரிபுரை நெமிலி’’…

201408191705350903_Peace-GraceNemili-Bala-Tripura_SECVPF

 

‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே,
பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய்,
சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும்
மாதவத்தில் மூழ்கயென், மனு’’….(13)

”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….(14)

‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
அமுதத்தன் தங்கை அவள்’’….(15)

‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
காலேல கண்மலர்ந்து கா’’….(16)
கா -காப்பாய்….
‘’பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்’’….(17)

‘’ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
பெண்ணிமய பாலா படு’’….(18)….கிரேசி மோகன்….

’’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட,
ஐயம் அகன்றதும் ஆதரவாய், -கையைப்
பிடித்திழுத்துச் செல்வாள், பரமசுகம் கூட்ட,
படித்ததெலாம் பாலாமுன் பாழ்’’….(19)

”அமளியில் லாமல் , அமைதியைக் காத்தால்,
நெமிலிவாழ் பாலா நினக்குள், -கமலியாய்,
நெஞ்சகத் தாமரையில் நின்று நிலைத்திருந்து,
அஞ்சேல் அபயம் அளிப்பு”….(20)

‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
வீற்றவளே பாலா , வருக வருகநான்
சாற்றும்வெண் பாவை சகித்து’’….(21)….

“கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….(22)….கிரேசி மோகன்….!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க