Month: September 2016

  • ”குமார சம்பவம்’’

     

    கிரேசி மோகன்
    ——————————-

    ‘’வானோர் வருத்தம்’’….!
    ————————————————-

    ஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே
    எவ்வா(று) அறியா(து) அளப்பீர்நீர் ! -அவ்வாறே
    தாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம்
    தீங்குளத் தோரால் தவித்து….(90)

    விண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது
    தன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி
    உம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால்
    பொம்மையாய் ஆனோம் பயந்து….(91)

    பாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன்
    வாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான
    வெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க
    கையினால் பொத்துகிறான் கண்….(92)

    பாராது பக்ஷங்கள் பாரபக் ஷத்தோடு
    தாரா சுரனூரில் தொண்டாற்றும் -தாரகேசன்
    தாரு வனமழித்த தாணு தலையெழுத்தால்
    சேரும் கலைக்கில்லை ஊறு….(93)

    மாற்றானாம் தாரகன்தன் மாளிகைத் தோட்டத்தில்
    நேற்றலர்ந்த பூவுக்கும் நோவின்றி -காற்றானான்
    வேர்வைக்கு மட்டும் வளியாகி வீசுதலால்
    பார்வைக்குக் கைவிசிறி பார்….(94)

    ஆறு ருதுக்களும் வேறு வழியின்றி
    தாருகன் தோட்டத்தில் தொங்கிடும் -நூறுவகைப்
    பூக்களைக் காத்துப் பராமரிப்பு செய்திடும்
    ஆட்களாய் ஆயினர் அங்கு….(95)….கிரேசி மோகன்….!

    Share
  • ’குங்குமம்’ இதழில் கிரேசி மோகனின் – மனசு

    கிரேசி மோகன்

    crazy

    இதோ இப்ப கட்டியிருக்கிற வாட்ச் இத்தனை ஆண்டு கால என் வாழ்க்கைக்கு மூணாவது வாட்ச்… ஒரு தடவை அமெரிக்காவில் கை வீசிப் பேசினபோது கழன்று புல் தரையில் விழுந்திருச்சு. யாராவது மீட்டு கொண்டு வந்தால்தான் ஆச்சுன்னு மனநிலை ஆகிப்போச்சு. அப்புறம் கொண்டு வந்து கொடுத்தாங்க. ஒரு டவல் வச்சிருக்கேன். குளித்து அதில் துவட்டிட்டுப் போனால்தான் நாடகம் ஹிட் ஆகும்னு எனக்கு ஒரு சென்டிமென்ட். அந்த டவலை உங்ககிட்டே காட்டினால் என்மேல் மரியாதை இருக்காது. அவ்வளவு பழசு. ஆனால் அதுதான் எனக்கு ேவணும். ஒரு தடவை நாடகம் போட்டுட்டு மறந்து விட்டுட்டு வந்ததை, ஒருத்தர் 400 மைல் தாண்டி வந்து கொடுத்தார். நான் அப்படித்தான்!

    மீட்க விரும்பும் இழப்பு

    எங்க தாத்தா வெங்கடகிருஷ்ணா. 90 வயதிற்கு மேலேதான் இறந்தார். நான் புரண்டு புரண்டு அழுதேன். ‘‘ஏண்டா… உனக்கே தாத்தா வயசாகிட்டது, இப்படி அழுகிறியே’’ன்னு நண்பர்கள் கிண்டல் பண்ணாங்க. ஏன்னா, அவர் எனக்கு நண்பர் மாதிரி. நான் டிராயிங் பண்ணா ‘அப்படியே ரவிவர்மா மாதிரி இருக்குடா’ன்னு ஏத்தி விடுவார். அவர் சொன்னதை நம்பி ஒரு தடவை ஒரு அம்பாள் படம் வரைஞ்சு காண்பிச்சேன். ‘நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கு’ன்னு சொல்லிட்டார். சரின்னு வேலைக்காரி படத்தையே வரைஞ்சேன். அவர் ‘அம்பாள் மாதிரி இருக்கு’ன்னு சொல்லிட்டார்.

    ‘அம்பாளே வேலைக்காரிதான்டா. அவதானே ஈரேழு லோகத்தையும் பரிபாலிக்கிறா’ன்னு சொல்லி சமாளிப்பார். அவரின் கேலியும், கிண்டலும், நைச்சியமான பேச்சும் என்னை எல்லாத்தையும் நகைச்சுவையாக நினைக்க வச்சது. ‘மோகன்’னு பேர் வைச்சது தாத்தா. ‘கிரேஸி’ன்னு பேர் வைச்சது விகடன் தாத்தா. என்னோட அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அவங்க பிள்ளைகள், என் பசங்க, தம்பியோட குடும்பம், அத்தை, சித்தின்னு எல்லாரும் பெரும் குடும்பமாக இருந்தோம். அந்த அழகே அழகு. இப்ப எல்லாம் புருஷன்-பொண்டாட்டி சேர்ந்து இருக்கிறதையே ‘ஜாயின்ட் ஃபேமிலி’ன்னு சொல்லிக்கிறாங்க. தாத்தாவை மறந்தா என்னை மறந்ததா பொருள்.

    மிகச் சிறந்த நண்பன்

    சு.ரவி எனக்கு ‘அ’ எழுத கத்துக் கொடுத்துட்டு இப்ப புனேவில் இருக்கான். ராமகிருஷ்ணா மடத்தில் யோகாவில் உட்கார்ந்து குண்டலினியை மேல ஏத்திடணும் என்கிற என் முயற்சிக்கு அவன்தான் உதவியாக இருந்தான். ஒரு நாள் நெற்றி சூடாகி ‘‘குண்டலினி வந்திடுச்சு’’ன்னு கத்தினபோது ‘‘அது சுவாமிஜி கொண்டு வந்த சூட நெருப்பு’’ன்னு சொன்னது ரவிதான். பாக்கியம் ராமசாமி… அதுதான் ஜ.ரா.சுந்தரேசன். இப்பவும் இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை அவர் வீட்டுக்குப் போயிடுவேன். எனக்கு கல்கி, தேவன்னா உயிர். எழுதுறதுக்கு முன்னாடி அவங்களை வாசிச்ச பிறகுதான் எழுதுவேன். அவங்க எல்லாருமே நகைச்சுவையில் மூழ்கி முத்தெடுத்தவர்கள்.

    ஆசைப்பட்டு நடக்காத விஷயம்

    ரஜினிக்கு எழுதணும்னு நினைச்சது ‘அருணாசலத்’தில் நடந்தது. ‘ஆண்டவன் சொல்றான், அருணாசலம் முடிக்கிறான்’னு நான் எழுதின டயலாக்கை ‘சூப்பர்… சூப்பர்…’னு அவர் பாணியில் சொன்னார். எனக்கு இன்னிக்கு வரைக்கும் ஆசை என்னன்னா, ரமணர் ஆகணும். அப்படித்தான் சின்ன வயசிலே நினைச்சிக்கிட்டு இருந்தேன். ரமணர் 14 வயதிலேயே போய் மலையில் உட்கார்ந்துக்கிட்டார். அவரோட ஆசிரியர், ரமணர் மலைக்குப் போனப்பறம் அவரைப் பார்க்கப் போனார்.

    கும்பிட்டுட்டு, ‘‘உங்ககிட்டே சில கேள்விகள் கேட்கணும்’’னு சொன்னார். அதற்கு பகவான் ரமணர், ‘‘உங்க கேள்விக்கு பயந்துதானே அங்கிருந்து புறப்பட்டு வந்தேன்’’னு சொன்னார். அவர்கிட்டே என்ன காமெடி பாருங்கோ! நான் ஆசைப்பட்டது ரமணர் ஆகணும் என்பதுதான். நடக்காட்டியும், ஆசைப்பட்டது ஆசைப்பட்டதுதானே!

    மறக்க முடியாத மனிதர்கள்

    crazy1
    கே. பாலசந்தர். ரஜினி, கமல் மாதிரி பெரிய அமெரிக்காக்களை கண்டுபிடிச்ச கொலம்பஸ்தான் என்னையும் கண்டுபிடிச்சார். ‘பொய்க்கால் குதிரை’ என் நாடகமே. அப்புறம், கமல். தொடர்ச்சியா 25 படங்களுக்கு மேலே கொடுத்து என்னை எழுத வச்சு அழகு பார்த்தது அந்த மகாத்மா. ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘பஞ்சதந்திரம்’, ‘தெனாலி’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’… சொல்லச் சொல்ல நீண்டுக்கிட்டே போகுமே! எனக்கு உலகத்திலேயே ரொம்ப பிடிச்ச டயலாக்கை கமல்தான் சொன்னார். ஒரு நாள் திடீரென்று ‘வேலையை விட்டுடுங்க’ன்னு சொன்னார். விட்டுட்டேன்.

    என்னோட விசிட்டிங் கார்டு கமல். அவர் உலகநாயகன். நான் உலகம் சுற்றும் நாயகன். உலகத்தில் ஒரு இடம் விடாமல் பார்த்திருக்கேன். போன பல இடம் மேப்ல கூட இல்லை. எங்கே ட்ராவல் பண்ணாலும் என் பின்னாடி கமல்னு ஒரு ஒளிவட்டம் இருந்தது. என்னையும், கமலையும் நகைச்சுவைங்கிற தொப்புள் கொடி இணைச்சது. அவரால் இளையராஜா கூட கை குலுக்கினேன். ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் பார்த்தேன். உலக நாயகனாக இருந்திட்டு காமெடி பண்றது கஷ்டம். அவரால் ‘தேவர் மக’னாகவும் இருக்க முடிஞ்சது. ‘அவ்வை சண்முகி’ மாதிரியும் மாற முடிஞ்சது. அவர் அறியாமல் நான் ஒரு விஷயம் பண்ண மாட்டேன். ஒரு கதை அவர்கிட்டே உருவானா, அடுத்த போன் எனக்குத்தான். என் மனைவிக்கு நான் கடிதம் எழுதினால் கூட அவருக்கு வாசிச்சு காண்பிச்ச பிறகுதான் அவளுக்கு போஸ்ட் பண்ணுவேன்.

    கற்ற பாடம்

    யாரையும் புண்படுத்தாம காமெடி பண்ணினா, அதுதான் பெரிய விஷயம். மக்களுக்கு அத்தனை கவலைகள். அந்தக் கவலையில் வளர்ந்தவங்கதான் காமெடியன்கள். காமெடி டீஸன்ட்டா இருக்கணும். எல்லா உணர்ச்சிகளுக்கும் மேம்பட்டது காமெடி. சிரிக்கிறதும், சிரிக்க வைக்கிறதும் கடினம். அதை சுத்தமா தெரிஞ்சவங்க எதையும் செய்யலாம். வாழ்க்கையில் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால் சந்தோஷமா இருக்கலாம். இப்ப பாருங்க, நான் எழுதி 40 வருஷம் கழிச்சு கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகத்தை எஸ்.வி.சேகர் மறுஅரங்கேற்றம் செய்யப் போறார். கொடுப்பினை இல்லையா! நான் இதை எதிர்பார்த்தேனா… வந்ததே பிரதர்!

    பயணம்

    அமெரிக்கா. பத்துத் தடவைக்கு மேலே போயும் அலுக்கலை. இப்ப கூட மறுபடியும் ‘கூகுள் கடோத்கஜன்’னு நாடகம் போடப் போறோம். நான் வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்ததை நாடகம், சினிமா மேலே இருந்த வெறின்னு தப்பா எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. சுந்தரம் கிளேட்டனில் நைட்ஷிப்ட் முடிஞ்சு திரும்பி வரும்போது, ஜெமினி வரைக்கும் 10 நாய்கள் என்னைப் பிடிச்சிக்கும். அப்படியே ஸ்டெல்லா மேரிஸ் வரைக்கும் கொண்டு வந்து, அங்கே இருக்கிற நாய்களிடம் கை மாத்தி விட்டுடும்.

    அப்புறம் அங்கேயிருந்து மறுபடியும்… ஸ்கூட்டரில் ஹேண்டில்பாருக்கு ரொம்ப பக்கத்தில்தான் கால் இருக்கும். அப்புறம் என் நண்பன் ஒருத்தன் ஒரு நாள் வந்து அதுகளை கதிகலங்க வைத்தான். அதுங்க யார்கிட்டே சொல்லி, எங்கே செய்தியெல்லாம் போனதோ தெரியலை. அமெரிக்கா போனா, ஏர்போர்ட்டில் ஸ்னிஃபர் டாக் என்னை விடாமல் பிடிச்சுக்கும். பகை மாதிரி மூச்சு விட்டு மூச்சு விட்டு மோந்து பார்க்கும். நான் குத்தாலத்தில் குளிக்கலை. ஆனா நயாகரா பார்த்திட்டேன்.

    எனக்கு அமெரிக்காவில் எல்லாமே ஆச்சரியம். 2000 பேர் வரிசையில் நின்னாலும் 5 அடி இடைவெளி இருக்கும். லாரியில் ‘என்னைத் தொடாதே’னு எழுதி இருக்கிற மாதிரி மோதவே மாட்டாங்க. அவங்க மேலே எச்சில் துப்பிட்டு ‘‘சாரி’’ சொன்னாக்கூட ‘‘தட்ஸ் ஓகே’’னு போயிடுவாங்க. நேருக்கு நேர் கண்ணால பார்த்திட்டா, தெரியாமல் இருந்தாலும் ‘ஹாய்’ சொல்கிற அழகை சொல்லி மாளாது!

    http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=10986&id1=9&issue=20160902

    Share
  • The master of lol and rofl: ‘Crazy’ Mohan reminisces his 30-year-old career – INDIAN EXPRESS

    CRAZY MOHAN

    By Chandni U

    Crazy Mohan with his theatre troupe | Ashwin Prasath
    Crazy Mohan with his theatre troupe | Ashwin Prasath

    If someone from within a cemetery calls you to step in, would you go? If ‘Crazy’ Mohan hadn’t, he wouldn’t be the great theatre artist, actor and writer that he is today. If not for his grandfather, he wouldn’t have found his passion for colours. If he hadn’t read great literary veterans like Kalki and

    PG Wodehouse, he wouldn’t have found his love for Venba poems. He calls it luck. Sitting in his house, surrounded by his trophies, old photographs and curious paintings, we got the veteran to relive a few cherished moments that changed the course of his life.

    “There was a cemetery near my home and when I was 32, I stopped by as there was a shooting going on. Suddenly, something within beckoned me and without hesitation, I entered. That was the first time I met Kamal Haasan, who was shooting for Sathya (1988). Then, one day, a car came to my home to take me to Kamal’s house. He then told me that I was writing dialogues for his next film Apoorva Sagodharargal (1989),” narrates Mohan Rangachari aka Crazy Mohan.
    This was when he quit his job at Sundaram Clayton. This is a known story but each time he talks about it, he cherishes it!

    the maBut what you may not know is that there is another reason behind his resignation — cynophobia. Mohan is terrified of dogs and if you happen to have a canine in your house, chances are that he wouldn’t step inside. “After my night shift, I used to take off in my two-wheeler and a few dogs would chase me from the Gemini Circle to Stella Maris College where another bunch would join the chase till Music Academy. Once, I asked my friend to accompany me, but he only aggravated them more. I’m pretty sure all the dogs in the world hate me now,” he quips.

    Mohan has always lived in a joint family with his grandparents, parents, uncles and aunts. Though there were moments of bickering, they were very comfortable with each other. Did you know that even today Mohan does not handle his bank accounts? His 91-year-old father takes care of his finances. He wouldn’t know what to do in a bank or a post office.

    While discussing this, his brother Maadhu enters and Mohan talks about how his family had influenced his career. “I’m lucky I had Maadhu with me.” Though his two sons did not venture into film and theatre industry, Mohan says he is, “fortunate to have a talented brother”. The first script he ever wrote was for his brother’s drama troupe back in college.

    Another person who inspired the actor in him was his teacher Janaki. “She used to live next door. She got me the role of Veerapandiya Kattaboman (1959) when I was a child. She would take me to competitions and make me recite dialogues.” Now you know why Maadhu and Janaki are common character names in all his plays!

    Two actors who always make an appearance in his story to fame are Kamal Haasan and Rajinikanth. “I owe all my success to Kamal. He is my visiting card when I do plays and my visa abroad. Do you think I get a red-carpet-welcome because I’m ‘Crazy’ Mohan? You are wrong. It’s only because I’ve written so many films for him — Apoorva Sagodharargal, Michael Madana Kama Rajan (1991), Vasool Raja MBBS (2004), Avvai Shanmughi (1996) and Magalir Mattum (1994). I ask his opinion on everything I do, including this interview. Even if I want to write a letter to my wife, I ask him. Such is the nature of our relationship.”

    He shares an incident with ‘the noble soul’ Rajinikanth, of whom he is an admirer. “Rajini is very fond of my father. He would talk to him over the phone at night. I never believed it. So, I called his secretary to find out and was asked to come over. Rajini then told me that he wanted me to write the story and dialogues for Arunachalam (1997). I was elated. Rajini is the bonus in my life!”

    Talking about Crazy Creations that was formed in 1979, he tells us that the troupe still exists — his other joint family. “The success of Crazy Mohan is being together,” he says pointing to a photograph of the team, on the shelf. “Neelu, though 80-years-old, is the youngest in our group. He inspires and encourages us. And Kitcha, was the one who sparked the idea of the troupe. During his sister’s wedding, we were eating. That’s when he said, ‘Why don’t we start a troupe, and you write a new play…’ And the ‘Crazy’ madness began.” Over 30 plays, 40 films and 100 short stories…and more to come.

    Latest update is that play Crazy Thieves in Palavakkam, is being revived. “While Agatha Christie’s Mousetrap is presented by different troupes for over 50 years on Broadway, our Crazy Thieves in Palavakkam, after 40 years, will be inaugurated by S Ve Shekar this month. Everyone loves it and wants it back on stage.”

    We looked through his art work again — hand-painted and digital. He tells us that his grandfather was his biggest critic. “He inspired me. Now I’m 65-years-old and if one day, no one wants me to write anymore, I can always find my bliss in paintings, thanks to him.”

    http://www.newindianexpress.com/entertainment/tamil/The-master-of-lol-and-rofl-Crazy-Mohan-reminisces-his-30-year-old-career/2016/09/03/article3609515.ece

    Share
  • கிளிகள் பேசுமா?

    images (5)

    உண்மையில் கிளிகள் பேசுமா? ஆம் கிளிகளின் மூளையில் உள்ள வித்தியாசமான கட்டமைப்பு தான் அவைகளை மனிதன் பேசுவதை உள்வாங்கிப்பின் அதே போல் பேச வைக்கிறது என்று அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மற்ற பறவைகளுக்கு இல்லாத இந்த விசேசமான தன்மை கிளிகளுக்கு மட்டுமே உள்ளது. மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப முடிகிறது கிளிகளால். பயிற்சி அளித்தால் ஒரு சில வார்த்தைகளைக்கூட பேசமுடியும். கிளிகளின் மூளை உடற்கூறு நைட்டிங்கேல், காகம் போன்ற பிற பாடும் பறவைகளின், Structural differences என்ற மூளை உடற்கூற்றில் இருந்து வேறுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிளியின் மூளையில் உள்ள defined centers என்ற வரையறுக்கப்பட்ட மையம் கிளிகள் குரல்களை உள்வாங்கிக் கொள்ளும் செயலில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”கவலையால் பீடித்த குவலயா பீடம்’’
    ——————————————————————

    ‘’கேசவ் தந்த கற்பனை’’
    —————————————-

    kesav

    ‘’கொம்பொசிக்காய் கண்ணா !குவலயா பீடம்தன்(கம்ஸனின் பட்டத்து யானை)
    தும்பிக்கை யால்கெஞ்சல் தாள்வருடி!, -அம்பிகைசேய்(பிள்ளையாரப்பர்)
    பாரதம் வார்க்கும்(எழுதும்) பொறுப்பு பொருப்பன்றோ!(தந்தத்தால் வினாயகர் வியாசர் உரைக்க எழுதினார்)
    நீரொடிக்க லாமோPEN NIB”!….!கிரேசி மோகன்….!

    Share
  • சந்தோஷச் செய்தி

    மீ.விசுவநாதன்

    எத்தனையோ நல்லவைகள் இங்கே – அந்த
    இடமெல்லாம் நானிருக்க வேண்டும்
    சத்தமின்றி செய்கின்ற நன்மை – என்
    சந்தோஷச் செய்தியாக வேண்டும் !

    கல்வியிலே வல்லவர்கள் வாழும் – இடம்
    கண்டுகண்டு நான்கூட வேண்டும்
    வல்வினைகள் ஆக்கமுடன் ஓங்கும் – என்
    வளர்தேசம் நானறிதல் வேண்டும் !

    நீர்நிலைகள் பூந்தோட்டம் யாவும் – எந்த
    நிலையினிலும் தூய்மையாக வேண்டும்
    ஊர்களுக்கே உபதேச மின்றி – என்
    உள்ளமிதை உள்வாங்க வேண்டும் !

    என்வீடு என்தெருக்கள் யாவும் – என்
    இதயமுடன் சுத்தமாக வேண்டும்
    பொன்பூமி என்தேசம் வாழ – என்
    பொல்லாமை குணம்மாற வேண்டும் !

    நீசெய்க என்றுசொல் லாமல் – நான்
    செய்கின்ற முதலாளாய் வேண்டும்
    வாய்ப்பேச்சு வேதாந்த மின்றி – என்
    வாக்கெல்லாம் உண்மையாக வேண்டும் !
    (02.09.2016 11.58 AM)

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-25

    மீனாட்சி பாலகணேஷ்

    கண்ணன் மருகா தாலேலோ!

    புலவர் பகழிக்கூத்தர் வைணவ சமயத்தவர். தமக்குண்டான தீராத வயிற்றுவலியை திருமால் மருகனான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது அழகான பிள்ளைத்தமிழ் ஒன்றினைப்பாடியதால் தீர்த்துக்கொண்டவர் என்பது வரலாறு. இவருடைய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் திருமால் பெருமை, மேலும் திருமால் செய்த விளையாடல்கள் தொடர்பான தொன்மங்கள் அழகுறப் புனையப்பட்டுள்ளதனைக் காணலாம். “இத்தகு திருமாலின் மருமகனே,” எனக்கூறிப் பாடி முருகவேளை வழுத்துவது இவருடைய முத்திரை எனலாம்!

    முருகப்பெருமானைச் சேடியரும் செவிலியரும் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி உறங்கவைக்கின்றனர். மாலெனும் மாமன் புகழைப்பாடி முருகனாம் மருமகனைக் கொண்டாடிப் பேரானந்தமடைகின்றனர்.

    “வாசுகி எனும் பாம்பினை நாணாகக் கொண்டு கடலினைக் கடைந்தவன்; கொடியதும் கருமையான நிறம் கொண்டதுமான அடர்த்தியான மேகக்கூட்டங்கள் பொழிந்த அடைமழைக்கு, பெரிய மலையாகிய கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தவன். எதற்காக? ஆயர்குல மக்களின் பசுக்கூட்டங்கள் அனைத்தும் அந்த அடைமழையாலும், இடிமின்னலிலும் பயந்துபதறிச் சிதறியோடாமல் இருப்பதற்காக அவற்றிடம் கொண்ட அன்பினாலும் கருணையினாலும் அவ்வாறு குடைகவித்தான். அது மட்டுமின்றி, மூங்கிலாலான தனது புல்லாங்குழலால் இனிய இசையைப் பொழிந்தும் அவற்றை அமைதிகொள்ளச் செய்கிறான். அந்தப் பசுக்கள் அவனுடனும் மற்ற இடையர்களுடனும் மேய்ச்சலுக்குச் செல்லும்போதெல்லாம், கண்ணனின் இனிய குழலோசையைக் கேட்டு அதில் திளைத்திருப்பதுண்டு. ஆகவே, பெருமழை பொழிந்த சமயத்தும், அவ்விசையைக் கேட்டால் பசுக்கள் அமைதிபெறும் என எண்ணங்கொண்டு, குழலை ஊதி அவற்றை அமைதியடையச் செய்கிறான். அவன் பெருங்கருணையாளன்!

    “காளிந்தி எனும் பெயர்கொண்ட யமுனை ஆற்றின் கரையில் மாடுகளை மேய்த்தபடி அவற்றின் பின்னே நடந்து சென்றவன் அவன். இத்தகைய பெருமை வாய்ந்த கண்ணனின் மருமகனே இவன், நமது சிறுமுருகன்,” எனக்கூறிப் பெண்டிர் பெருமையாகத் தாலாட்டுவதாகப் பாடியுள்ளார்.
    இவ்வாறெல்லாம் முருகப்பெருமானின் குலப்பெருமையை விளம்பியவர், அடுத்து அவனுறையும் திருச்செந்தூரின் பெருமையையும் அழகுற, அதன் இயற்கைநலன்களை விவரித்துப் பரவுகிறார். அடியார்களைப் பரவசப்படுத்துகிறார்.

    2
    “மொட்டுக்கள் கட்டவிழும் மலர்ச்செடிகளும் பசுங்கொடிகளும் நெருங்கியுள்ள தாமரை மலர்த்தடாகங்கள் நிறைந்துள்ளது அவ்வூர். இளம் எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்தமாத்திரத்தில் தாயன்பால் தமது மடியினின்று பாலைப்பொழிகின்றன. அதனால் அத்தாமரைத்தடாகம் முழுதும் பால் நிறைந்துள்ளது. அதனைக்கண்ணுற்ற பெட்டை அன்னப்பறவை (பேட்டெகினம்) நீரையும் பாலையும் பிரித்து பாலைப்பருகி மகிழ்கின்றதாம். அத்தகைய இயற்கைவளம் கொழித்து விளங்குவது திருச்செந்தூர். அவ்வூரின்கண் குடிகொண்ட செல்வனே தாலோ தாலேலோ! தெய்வயானையை மணம்புரிந்து கொண்ட சிறுவா தாலோ தாலேலோ!” எனப்பாடி மகிழ்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    நுட்பமாக நோக்கின் ஒரு கருத்து நமக்குச் சிறிது வியப்பையும் குழப்பத்தையும் தரும். தாலாட்டுப் பாடுவதென்றால் முருகன் தொட்டிலில் கண்வளரும் சின்னஞ்சிறு குழந்தையாகத்தானே இருக்க வேண்டும். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை வளர்ந்து பெரியவனான பின்பல்லவோ மணம்புரிந்து கொள்ள வேண்டும்? அவனை இப்போதே தெய்வயானையை மணந்த முருகனே தாலோ எனக்கூறுவது ஏன்? இதுவே பிள்ளைத்தமிழின் சிறப்பாகும். அழகிய கவிதைநயம் வாய்ந்த, இலக்கணம் ஒப்புக்கொண்ட முரண்பாடு!

    ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்பார் தொல்காப்பியர். சிறப்பான பெரியோர்கள் மீதே பிள்ளைத்தமிழ் பாடப்படும். அப்போது அவர்களை மானிடக்குழந்தையாகக் கருதியே பாடவேண்டும் என்பது நியதி! உண்மையாலுமே சிறுபிள்ளைகள் மீது பிள்ளைத்தமிழ் இயற்றப்படுவதில்லை! சாமானிய மக்கள்மீதும் பிள்ளைத்தமிழ் பாடப்படுவதில்லை!

    3
    தெய்வங்களையும், மன்னர்களையும், சான்றோரையும், அவர்களைப் பிள்ளையாகக்கொண்டு மட்டுமே பாடுவதனால், அப்பாட்டுடைத்தலைவனின்/ தலைவியின் இளமைப்பருவத்து, வளர்ந்த பருவத்து நிகழ்ச்சிகளையும், வீரதீரப் பிரதாபங்களையும், அவர்தம் சார்பான தொன்மங்களையும் கவிதை நயத்துக்காகவும், நூலின் சிறப்புக்காகவும் அழகுற எடுத்தோம்புவது ஒரு வழக்கம்; புலவர் தனது நூலைச் சிறப்புற அமைக்க எடுத்துக்கொள்ளும் உரிமை/உத்தி எனலாமா? அதுவே தனித்தன்மை வாய்ந்த பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம்! தமிழ்மொழிக்கு ஒரு அழகான சிறப்பானஅணிகலன்!
    பாடல் இதோ!

    பாம்பால் உததி தனைக்கடைந்து
    படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
    பரிய வரையைக் குடைகவித்துப்
    பசுக்கள் வெருவிப் பதறாமற்

    காம்பால் இசையின் தொனியழைத்துக்
    கதறுந் தமரக் காளிந்திக்
    கரையில் நிரைப்பின் னேநடந்த
    கண்ணன் மருகா முகையுடைக்கும்

    பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
    புனிற்றுக் கவரி முலைநெரித்துப்
    பொழியும் அமுதந் தனைக்கண்டு
    புனலைப் பிரித்துப் பேட்டெகினந்

    தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
    செல்வா தாலோ தாலேலோ
    தெய்வக் களிற்றை மணம்புணர்ந்த
    சிறுவா தாலோ தாலேலோ.

    (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்- தாலப்பருவம்)

    **********

    சேடியரும், செவிலியரும், தாயரும் குழந்தை முருகனைத் தாலாட்டிச் சீராட்டி மகிழ்கின்றனர்.

    1
    “உனது மரகத வடிவம் (பச்சை நிறம்) சூரியனின் சிவந்த கதிர்கள் பட்டு அழகாக வாடித்துவண்டு போய்விடாதோ ஐயா?” என்கிறாள் ஒருத்தி.

    அதாவது வெயில்பட்டுக் குழந்தை வாடிக்களைத்து விட்டதாம்; அதுவும் அம்முருகனுக்கு ஒரு தனி அழகாகத் தெரிகின்றது:

    இதனை இன்னொருவிதமாக, பச்சை மயிலின்மீது ஊர்ந்து வரும் முருகப்பெருமான் வெயிலினால் வாடிக்காண்கிறான் எனக்கூறுவதாகவும் கொள்ளலாம்.

    “மதிபோன்ற உனது அழகான முகம் சிறு (வியர்வைத்)துளிகள் அரும்பிடுமாறு மிகுதியாக வியர்த்துவிடாதோ?” எனக்கொஞ்சுகிறாள் இன்னொருத்தி.

    “மலர்கள் போன்ற கைகளால் (குழந்தையாகிய) உன்னை அணைத்து இன்பம் எய்தும் அழகான பெண்டிர் உன்னைக்காணாமல் சென்றுவிடுவார்களோ? சென்றுவிடத்தான் அவர்கள் மனம் கேட்குமோ?” என வியக்கிறாள் செவிலித்தாய்.

    “பொன்மணிகள் கொஞ்சும் குண்டலம், அரைநாண் ஆகியவற்றினை அணிந்து நீ விளையாடச் சென்றால், உன் அழகான மழலைவடிவைக்கண்டு தாயன்பு பொங்கிட, கச்சணிந்த விம்மிய முலைகளிலிருந்து பொங்கிச்சுரக்கும் பாலை உனக்குத்தர தாய்மார்கள் உன்னைத்தேடி ஓடி வரமாட்டார்களோ?”

    “புரவலர் ( கொடையாளிகள்) அனைவரும் உனது விரிந்த மலர்போன்ற திருவடிகளைத் தொழுவார்கள் (ஏனெனில் புரவலர்க்கெல்லாம் புரவலன் நீதான்). போது- மலர்; இங்கு முருகனின் திருவடிகளைக்குறிப்பிடும். மெய்ஞ்ஞானமுடையவனே! (போதா) சரவணப்பொய்கையில் வளர்கின்ற தமிழ்க்கடவுளாகிய முருகனே! தாலோ தாலேலோ! நான்குவேதங்களும் போற்றுபவனே! திருச்செந்தூரை உறைவிடமாய்க் கொண்டவனே! தாலோ தாலேலோ!” எனத்தாய்மார் (ஆறு கார்த்திகைப்பெண்டிர் எனக் கொள்ளலாமா?) கொஞ்சி மகிழ்வதாக ஒரு தாலப்பருவப்பாடல்.

    மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
    வாகாய் வாடாதோ
    மதிமுக முழுதுந் தண்துளி தரவே
    வார்வேர் சோராதோ

    கரமலர் அணைதந் தின்புறு மடவார்
    காணா தேபோமோ
    கனமணி குலவுங் குண்டலம் அரைஞா
    ணோடே போனால்வார்

    பொருமிய முலையுந் தந்திட வுடனே
    தாய்மார் தேடாரோ
    புரவலர் எவருங் கண்டடி தொழுவார்
    போதாய் போதாநீள்

    சரவண மருவுந் தண்டமிழ் முருகா
    தாலோ தாலேலோ
    சதுமறை பரவுஞ் செந்திலை யுடையாய்
    தாலோ தாலேலோ.

    (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்- தாலப்பருவம்)

    இப்பாடலைப்பற்றிய இன்னொரு இனிமையான செய்தி என்னவென்றால் நமது தமிழ்நாட்டின் இசையரசி திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பத்து வயதுச் சிறுமியாக இருந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது முதற்பாடல் இதுவாகும். இதன் ஒலி-ஒளிப்பதிவு You Tube-ல் காணக்கிடைக்கும். கண்டு ரசித்து கேட்டு மகிழுங்கள். அழகான தெளிவான உச்சரிப்பு. குழந்தையே ஆயினும் சுருதிசுத்தமாகப் பாடிய பாடல்.

    இன்னும் தொடர்ந்து பிள்ளைத்தமிழ் இலக்கியத்தைப் படித்து மகிழ்வோம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 69

    தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (2)
    (ஜோஹான்னஸ் குட்டன்பெர்க்)

    முனைவர்.சுபாஷிணி

    அச்சுப்பதிப்பாக்கம் உலக மக்கள் வாழ்வியலில் மாபெரும் சிந்தனைப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. மிகக்கடினமான எழுதும் முறையும், ஒரு நூலை உருவாக்க எடுத்துக் கொள்ளப்பட்ட நீண்ட நேரம் என்பதும் கல்வியை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் ஏதுவானதான ஒரு சூழலை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே ஏற்படுத்தியிருந்தன. அச்சு இயந்திரங்கள் படிப்படியாக பயன்பாட்டில் பரவத் தொடங்கியபின்னர் ஒரு தனி நூல் தயாரிப்பு என்பதற்கு பதிலாக ஒரே அச்சுக்கூடத்தில் ஒரு தயாரிப்பினை மட்டும் கொண்டு பல நூல்களை உருவாக்கலாம் என்ற நிலை உருவானது. இது அதிக அளவில் நூல்கள்பதிப்பாக்கம் பெறுவதற்கு அடித்தளம் அமைத்தது. இதுவே ஐரோப்பாவில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி அது உலகம் முழுவதும் பரவும் நிலையையும் உருவாக்கியது. இப்புரட்சிக்கு ஆதாரமாக அமைந்த அச்சு இயந்திரம் உருவாகி நூற்கள் எண்ணிக்கையில் பலவாக அச்சிடப்பட உருவான காலம் 15ம் நூற்றாண்டாகும்.

    1

    அச்சு இயந்திரத்தின் தந்தை என அறியப்படும் ஜொஹான்னஸ் குட்டன்பெர்க் 1436ம் ஆண்டில் அச்சு இயந்திரத்தைப்பற்றி தனது சூழலில் இருந்த ஏனைய சில ஆர்வலர்களுடன் சேர்ந்து தொடங்க முயன்றார். கடும் ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, 1439ம் ஆண்டில் இம்முயற்சி வெற்றி பெற ஆரம்பித்தது. பதிப்புத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய இந்த முயற்சி தோன்றியபோது முதலில் ஜெர்மனியில் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் நகரமான மைன்ஸ் நகரில் தான் ஒரு அச்சு ஆலை உருவாக்கப்பட்டது. இதனை ஜொகான்னஸ் குட்டன்பெர்க் தொடங்கி நடத்தி வந்தார். அச்சுப்பதிப்பாக்கத்திற்கு வரவேற்பு கூடியபோது, அதாவது 1480ஆம் ஆண்டில் ஜெர்மனி தவிர்த்து ஏறக்குறைய் 270 இடங்களில் ஐரோப்பாவின் பல இடங்களில் அச்சு ஆலைகள் உருவாகின.

    2
    அச்சு ஆலைகள், கல்வியும், உலக அறிவும் சமூகத்தில் உள்ள ஒரு சாராருக்கு மட்டுமானதல்ல. அவை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற புரட்சியை உருவாக்கி வெற்றியும் கண்டது. அச்சு இயந்திரங்கள் இல்லாத ஒரு நிலையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அல்லவா?

    சுவிச்சர்லாந்தைப் பொறுத்தவரை அங்கு குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை வாங்கி சூரிச் நகரில் அச்சு ஆலையை உருவாக்கியவர் கிறிஸ்தோவ் ஃப்ரோஷாவர் (1490 – 1564). ஆரம்ப காலத்தில் அச்சு ஆலைகளில் பைபிள்களே மிக அதிக அளவில் அச்சிடப்பட்டன. இவரது பெயரிலேயே தற்சமயம் சூரிச் நகரின் மையப்பகுதியில் ஒரு சாலையும் இருக்கின்றது. இவர் பைபிள் மட்டுமன்றி, மார்ட்டின் லூதரின் எழுத்துக்கள், சுவிங்லியின் எழுத்துக்கள் ஆகியனவற்றோடு யுராஸ்மூஸ் ஃபோன் ரோட்டர்டாம் அவர்களின் எழுத்துக்களையும் அச்சிட்டவர் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவரது அச்சுப்பணிக்குப் பயன்படுத்தப்பட்ட தாட்கள் அங்கே சூரிச் நகரிலேயே உள்ள லிம்மாட் தாள் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டன.

    3

    சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புக்களில் ஜொகான்னஸ் குட்டன்பெர்கின் அச்சு இயந்திரம் ஒன்றும் உள்ளது. ஒரு முழு அச்சு இயந்திரம். மரத்தால் உருவாக்கப்பட்ட, இன்னமும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் அச்சு இயந்திரத்தை இங்கே பாதுகாப்பான ஒரு பகுதியில் இங்கே காட்சிக்கு வைத்துள்ளார்கள்.. இங்கே காட்சிக்கு இருக்கும் இந்த அச்சு இயந்திரம் போன்ற வடிவில் உள்ள ஒரு அச்சு இயந்திரம்தான் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து அங்கே கொல்லத்தில் தமிழின் முதல் தமிழ் அச்சு நூல் உருவாகக் காரணமாகவும் இருந்தது என்பதை நாம் இவ்வேளையில் நினைவுகூரத்தான் வேண்டும்.

    4

    இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அச்சு இயந்திரத்தோடு 16, 17ஆம் நூற்றாண்டு அச்சு நூல்கள் சிலவற்றையும் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக வரலாற்றில் அறிவுத்தளத்தில், பெரும் புரட்சியை ஏற்படுத்திய இவ்வகைப் பணிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

    5

    சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் ஏனைய சில அரும்பொருட்களைப் பற்றி மேலும் சொல்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

    தொடரும்..
    சுபா

    Share
  • ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக் கிளர்ச்சியைப் பதிவு செய்தது

     

     

    pic1
    comet Halley
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    https://youtu.be/16z1ZUMnGn0

    https://youtu.be/Tp2P4ht2WNM

    https://youtu.be/J7I9z6Lcemo

    https://youtu.be/2-M5_xBVSLQ

    ++++++++++++++

    pic2

    கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,
    பரிதி ஈர்ப்பு மண்டத்தில்
    திரிந்து வருபவை
    வால்மீன்கள் !
    வியாழக்கோள் வலையில்
    சிக்கிய
    வால்மீன் மீது கவண் வீசிக்
    காயப் படுத்தி
    ஆய்வுகள் புரிந்தார் !
    வால் நெடுவே வெளியேறும்,
    வாயுத் தூள்களை
    வடிகட்டியில் பிடித்து
    வையகத்தில் சோதித்தார் !
    அண்ட கோள்களின்
    ஆதித் தோற்றம் அறியவும்,
    உயிரின மூலத்தை உளவிடவும்
    ஏவிய விண்ணுளவி
    பூமிக்கு மீண்டது !
    வால்மீன்  ஒளிக் கிளர்ச்சியை
    ஐரோப்பிய  விண்ணுளவி
    முதன்முதல் திடீர்ப் பதிவு செய்து
    தகவல் அனுப்பியது !

    +++++++++++++++

    pic3

    கடந்த ஆண்டில் [2015] ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் பயணக் காலத்தை நீடிக்க முடிந்தாலும், உறங்கும் உறைந்த வால்மீன் எப்போது வெடித்தெழுந்து ஒளிக்கிளர்ச்சி வால் நீளும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.  ரோஸெட்டாவின் இந்த திடீர் வால்மீன் ஒளிக்கிளர்ச்சிப் பதிவு எதிர்பாராத அதிர்ஷ்டக் காட்சி.

    ஒருங்கொத்த மகிழ்ச்சி நிகழ்வாக ரோஸெட்டாவின் பெரும்பான்மைக் கருவிகள் வால்மீன் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.  ஒரே சமயத்தில் ஒளித்தூசி எழுச்சியை அளவெடுத்த கருவிகள் ஒருங்கே முழுமையான தகவலை அனுப்பியுள்ளன.

    மாத்தியூ டெய்லர் [ESA Rosetta Project Scientist]

    pic4

     ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் நாங்கள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டம் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பது.   விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குத லோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறோம்.

     எபெர்கார்டு குருயன் [Eberhard Grun, Nuclear Physics, Max-Plank Institute, Heidelberg, Germany]

     

    pic5

     

    2015 ஆம் ஆண்டில் நேர்ந்த ரோஸெட்டா விண்ணுளவியின் பதிவு ஆய்வுகள்

    ரோஸெட்டா எதிர்பாராத விதமாக 2015 பிப்ரவரி 19 இல் வால்மீன் சூரியுமோவ்-ஜெராசி மெங்கோவில் [Comet Name :  67P/Churyumov-Gerasimenko] உறைந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுந்த ஒளிக்கிளர்ச்சியை [Comet Outburst] பதிவு செய்து படமெடுத்தது.  பதிவு செய்த வரைப் படங்களை ஒன்பது கருவிகள் [காமிராக்கள், தூசி சேர்ப்பிகள், வாயு, ஒளிப் பிழம்பு ஆய்வு மானிகள்] [Cameras, Dust Collectors, Gas & Plasma Analysers] ஒரே சமயத்தில் உடனே அனுப்பியுள்ளன.  இந்த நிகழ்ச்சி வால்மீன் விண்வெளித் தேடல் ஆராய்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.  வால்மீன் ஒளிக் கிளர்ச்சிப் பதிவுகள் முதன்முறையாக ராயல் வானியல் குழுவினரால் [Royal Astronomical Society] ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரது மாத அறிவிப்பு இதழில் வெளிவரப் போகிறது.  அதன் தலைமை விஞ்ஞானி ஜெர்மனியைச் சேர்ந்த ஹைடல்பர்க் நகரின் மாக்ஸ் பிளங்க் ஆய்வுக் கூடத்தின் எபர்ஹார்டு குருயின் [Eberhard Grun, Max-Plank Institute, Heidelberg, Germany].

    pic6

    ரோஸெட்டின் விரிகோணக் காமிரா 2016 பிப்ரவரி காலை 9:40 மணிக்கு [GMT] நிழலில் உறங்கும் உறைப்பனித் தூசித் தலையிலிருந்து [Comet Dusty Coma] மிக்க வெளிச்சத்தில் பளிச்சென எழும் ஒளிக்கிளர்ச்சி உண்டாவது ஓர் அரங்கில் தெரிந்தது.  அடுத்த இரண்டு மணிப் பொழுதில் ரோஸெட்டா 100 மடங்கு வெளிச்சமுள்ள ஒளிக்கிளர்ச்சிப் பதிவுகளை அலிஸ் [ALICE] கருவி மூலம் காட்டியது. அவற்றில் சூரியனின் புறவூதா வெளிச்சம் வால்மீன் தலைக்கரு பிரதிபலித்தது [Ultraviolet Brightness of the Sunlight Reflected by the Comet Nucleus].  வால்மீன் தூசிக் கிளர்ச்சி ஒளியுடன் 6 மடங்கு வெளிச்சத்தில் தெரிந்தது.  ரோஸினா, ஆர்பிசி கருவிகள் [ROSINA & RPC] பெருத்த அளவில் [1.5 TO 2.5 மடங்கு] வாயு வீச்சு, ஒளிப்பிழம்பு வீச்சுகளைக் காட்டின.  மேலும் மைரோ [MIRO] கருவி சூழ்ந்த வாயுவின் உஷ்ணம் 30.C ஏறிடக் காட்டியது.  சாதாரணமாக 3 முதல் 10 வரை காட்டும் கியாடா கருவி [GIADA] 200 துகள்களைக் கண்டுபிடித்தது.  ரோஸெட்டா விண்ணுளவியில் குறுங்கோணக் காமிரா ஒளிக்கிளர்ச்சியில் தூசித் துகள்கள் [Dust Grains] வெளியாகப் படம்பிடித்தது.  புவி மீதுள்ள வானியல் விஞ்ஞானிகள் வால்மீன் ஒளித்திரள் திணிவு [Comet Coma Density] மிகையாகக் கண்டனர்.

    ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் விஞ்ஞானிகள்  நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டும் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்துதான் நேர்ந்திருக்க வேண்டும் என்பது.   விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குதலோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறார்.  வால்மீன் நிழலிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் மேற்தளத்தில் வெப்ப அழுத்தப்பாடு [Thermal Stress] உந்தியே தளச்சரிவு தூண்டப்பட்டு நீர்ப்பகுதி நேரடி சூரிய ஒளியின் பாதிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும்.  உடனே நீர் ஆவியாகி அருகில் எழும் தூசியோடு கலந்து வால்மீன் ஒளிவாலாய் உருவாகி இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.

    ++++++++++++++++

    pic7

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0

    http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo

    http://www.bbc.com/news/science-environment-30058176

    +++++++++++++++++++++++

    pic8

    ஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிகை யான தகவல் சேமிப்பில் உள்ளது.  பரிதி ஒளிபட்டு அடுத்துக் கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் பெற முடியும்.  இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள்  யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.

    பார்பரா கொஸ்ஸோனி  [ஜெர்மன் விண்வெளி மைய எஞ்சினியர்

    240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.

    எல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்

    pic9

    “எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது.  ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது.  ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”

    ஜான் ஜேக்கஸ் டோர்டயின்   [ESA Director General]  [November 12, 2014]

    “விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”

    அல்வாரோ கிமென்னிஷ்  [ESA  Director of Scince & Robotic Exploration]  [November 12, 2014]

    “வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?  வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்?  காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்!  அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது!  நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும்.  இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”

    ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

    pic10

    Mothership Rosetta  Drops Lander on the Comet

    முதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி

    2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!  அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது.  1969  ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது.  2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து,  6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும்.   ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh]  வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது.  சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.

    pic11

    வரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.   வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது.   மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர். “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும். அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார்.  தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph].  பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும்.  ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித்  திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]

    வால்மீனில் இறங்கிய தளவுளவி  ஃபிலே

    தளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது. மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும். வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே! துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை.  மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது.  சூரியனை    வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது.  சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை.  அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன.  அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும்.  மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.

    ஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    pic12

    2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள்.  அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”

    டாக்டர் பால் பெல், வானியல் நிபுணர் [Dr. Paul Abell, NASA Jonson Space Center, Houston]

    “டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று!  நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று!  வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல!  அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”

    டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

    pic13

    ரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?

    ஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது!  அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும்!  வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!

    வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!  ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும்.  விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும்.  பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா?  மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.

    pic14

    ரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்]  ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை.  அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    ரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம்.  மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன.  பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.

    pic15

     விண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:

    1. “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]
    2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]
    3. “காஸிமா” வால்மீன் அடுத்த நிலை அயான் நிறை அளவி [COSIMA: Cometary Secondary Ion Mass Analyser]
    4. “ஜியாடியா” தூள் மோதல் ஆய்வு, தூள் நிரப்பி [GIADIA: Grain Impact Analyser & Dust Accumulator]
    5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]
    6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]
    7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]

    pic16

    8.“ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]

    9.“ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]

    10. “ஆரெஸை” வானலை விஞ்ஞான உளவுக் கருவி [RSI: Radio Science Investigation]

    11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]

    வால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:

    தள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:

    1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]
    2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]
    3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    Philae Lander 

    pic17

    1. “கோஸாக்” வால்மீன் மாதிரி உட்பொருள் ஆயும் சோதனை [COSAC: Cometary Sampling & Composition Experiment]
    2. “மாடுலஸ் டாலமி” வெளியேறும் வாயு உளவி [MODULUS PTOLEMY: Evolved Gas Analyser]
    3. “முபஸ்” மேற்தளக் கீழ்த்தள பல்வினை உணர்ச்சிக் கருவி [MUPUS: Multi-Purpose Sensor for Surface & Subsurface Science]
    4. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]
    5. “லெஸ்டி2” மாதிரி பரிமாறும் கருவி [SD2: Sample & Distribution Device]
    6. “ஸெஸமி” தள மின்னொலிச் சோதனை மானி, தூசி மோதல் நிரப்பி [SESAME: Surface Electrical & Acoustic Monitoring Experiment, Dust Impact Collector]

    விண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany]  கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]

    pic18

    அணுசக்தி உந்தும் விண்ணுளவியில் விண்கல் தள ஆய்வுகள்

    2007 மார்ச் 14 ம் தேதி நாசா வானியல் நிபுணர் டாக்டர் பால் பெல் 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் கால் வைக்க மனிதரை அனுப்புவதற்கு முன்பாக, நிலவுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு விண்கற்களில் [Asteroid] விண்வெளி விமானிகளை அனுப்பி அவற்றைப் பற்றி அறிந்து வரும் விண்கப்பல் ஓரியான் [Orion Spacecraft] திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஓரியான் விண்கப்பல் முதன்முதலில் அணுசக்தி ஆற்றலில் ஏவப்பட்டு அண்ட வெளியில் பயணம் செய்யப் போகிறது. அத்திட்டத்தில் விண்கப்பல் தேர்ந்தெடுத்த சிறு விண்கல் ஒன்றைச் சுற்றும். பயணம் செய்து பங்கெடுக்கும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் விண்கப்பலில் அமர்ந்து கண்காணிக்க இருவர் விண்கல்லில் இறங்கித் தடம் வைத்து அதன் மண்தளப் பண்பாடுகளை ஆய்வு செய்வார்.  அத்துடன் அங்கே நீர் உற்பத்தி செய்யத் தேவையான ஆக்ஸிஜென், ஹைடிரஜன் வாயுக்களைப் பிரித்தெடுக்க ஏதுவான மூலத்தாதுக்கள் கிடைக்குமா வென்றும் கண்டறிவார்.  செவ்வாய்க் கோள் யாத்திரைக்கு நிலவைப் போல் விண்கற்களை இடைத்தங்கு அண்டங்களாக விமானிகள் பயன்படுத்த முடியுமா வென்றும் கண்டறிவார்கள்.  அந்த பயணத்துக்கு நிலவுக்குச் செல்வதை விட சற்று கூடுமானதாய் 7 முதல் 14 தினங்கள் நாட்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.  டாக்டர் பால் பெல் தயாரித்த அந்த புதிய திட்டத்திற்கு நாசா மேலதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளர்கள்.

    Rosetta Spaceship Launching 

    [March 2, 2004]

    pic19

    2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் [Ariane-5G+] மூலமாக ஏவப்பட்டது, ரோஸெட்டா விண்ணுளவி.  ரோஸெட்டாவின் முதல் பூகோளச் சுழல்வீச்சு [Earth Gravity Assist (Earth’s Fly-by)] 2005 மார்ச் 4 ஆம் தேதி நிகழ்ந்தது. “ஈர்ப்பாற்றல் உந்தியக்கம்” என்பது கவண் கல்லைக் கையால் வீசிச் சுழற்றி அடிப்பது [Sling-shot like Effect] போன்றது.  விண்ணுளவியின் இரண்டாவது கவண் வீச்சைச் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பாற்றல் புரிந்தது.  அப்போது விண்ணுளவின் வேகம் செவ்வாய்க் கோளின் வேகத்துக்கு ஒப்பாக மணிக்கு 22,500 மைல் வீதத்தில் பயணம் செய்தது.  மூன்று டன் எடையுடைய ரோஸெட்டா விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றப் பின்புறம் சென்ற போது 20 நிமிடங்கள் ரேடியோ அலைச் சமிக்கைப் பூமிக்கு வராமல் தடைப் பட்டது!  விண்ணுளவியின் சூரிய ஒளித்தட்டுகளுக்கு பரிதி ஒளி மறைக்கப் பட்டு மின்சார உற்பத்தி நின்றது.  நுணுக்க விண்வெளி இயக்கத்தில் நடந்த அந்த பயங்கர 20 நிமிடங்களில் ஈசா எஞ்சினியரின் மூச்சும், பேச்சும் சற்று நின்று நெஞ்சத் துடிப்பு வேகமாய் அடித்துக் கொண்டது.  விண்ணுளவி செவ்வாயின் முதுகுப் புறத்தைத் தாண்டி வெளிவந்து, பூமியில் ரேடியோ தொடர்பு மீண்டதும் அனைவரது முகத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்தது.

    pic20

    ஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் வால்மீன் உளவுப்பணி

    ஈசாவின் ராக்கெட் ஏவுதளம் தென் அமெரிக்காவின் வடக்கே பிரென்ச் கயானாவில் கௌரொவ் [Kourov, French Guiana] என்னுமிடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 1993 நவம்பரில் அகில நாடுகளின் ரோஸெட்டா விண்வெளித் திட்டம் ஈசா விஞ்ஞானக் குழுவின் அங்கீகாரம் பெற்றது.  அந்த திட்டத்தின் குறிக்கோள், விண்ணுளவி ஒன்றை அனுப்பி, வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சுற்றிவரும் “சூரியுமாவ்-ஜெராஸிமென்கோ” (Churyumov-Gerasimenko) என்னும் வால்மீனைச் (67P) சந்திப்பது.  விண்கப்பல் ஒன்று வால்மீனை வட்டமிட, தள உளவி ஒன்று கீழிறங்கி வால்மீனில் தங்கிச் சோதனைகள் செய்யும். அது பத்தாண்டு நீள் பயணத் திட்டம்.  அந்த விண்ணுளவிக்கு “ரோஸெட்டா” [Name from Rosetta Stone of Black Basalt with Egyptian Scripts about Ptolemy V] என்னும் பெயர் அளிக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் ஏரியன்-5 [Ariane 5 Generic Rocket Engine, Payload 6-9.5 Tons] 2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து, ஈசாவின் ரோஸெட்டா விண்ணுளவியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியது.

    pic21

    ரோஸெட்டாவின் வேகத்தை அதிகமாக்கவும், பயணப் பாதையை நீளமாக்கவும் பூமி, செவ்வாய், லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் [Astroids: Lutetia & Steins] ஆகிய அண்டக்கோள்களின் ஈர்ப்பாற்றல் சுழல் உந்துத் திருப்புகள் [Gravity Assist Maneuvers] பயன்படுத்தப் பட்டன.  2005 மார்ச் 4 ஆம் நாள் விண்ணுளவி பூமியைச் சுற்றி வந்து வேகத்தையும், பாதை நீள்வட்டத்தையும் முதலில் மிகையாக்கியது.  நுணுக்கமான அந்த இயக்க முறைகள் அனைத்தும் ஜெர்மெனியில் உள்ள ஈசாவின் விண்ணுளவி ஆட்சி அரங்க எஞ்சியர்களால் தூண்டப்பட்டுச் செம்மை யாக்கப்பட்டுக் கண்காணிக்கப் பட்டன.  சமீபத்தில் [2007 பிப்ரவரி 25] வெற்றிகரமாகச் செவ்வாய்க் கோள் சுழல் உந்துத் திருப்பல் [Mars Fly-by] செய்யப் பட்டுள்ளது.  அடுத்த இரண்டு பூகோளச் சுழல் உந்து திருப்பல்கள் 2007 நவம்பரிலும், 2009 நவம்பரிலும் நிகழப் போகின்றன.  பிறகு லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் சுழல் உந்துத் திருப்பல்கள் முறையே 2008 செப்டம்பரிலும், 2010 ஜூலையிலும் திட்டமிடப் பட்டுள்ளன.

    pic22

    பரிதியை நோக்கிப் பயணம் செய்யும் ரோஸெட்டா விண்ணுளவி நீள் வட்டப் பாதையை விட்டுப் புலம்பெயர்ந்து, வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்துக்குப் புகுந்திடும் நிகழ்ச்சி, இன்னும் ஏழாண்டுகள் கடந்து 2014 மே மாதம் ஆரம்பிக்கும்.  2014 ஆகஸ்டில் தாய்க் கப்பல் விண்ணுளவி வால்மீனைச் சுற்ற ஆரம்பித்து, நவம்பரில் தள உளவியைக் கீழே இறக்கி விடும்.  தள உளவி வால்மீனில் அமர்ந்து சில மாதங்கள் வால்மீனின் தளப் பண்பாடுகளை ஆய்வு செய்துத் தகவலைத் தாய்க் கப்பலுக்கு அனுப்பிக்கும்.  தாய்க் கப்பல் அனுப்பும் தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ அலைத்தட்டு உறிஞ்சி எடுத்து ஜெர்மெனியில் உள்ள ஆட்சி அறைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்.  ரோஸெட்டா வால்மீன் திட்டப் பணிகள் 2015 டிசம்பர் மாதம் நிறைவு பெறும்.

    pic23

    pic24

     

    (தொடரும்)

    **********************

    தகவல்:

    1. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
      2. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
      3. Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
      4. Watch Deep Impact’s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.comJuly 1, 2005]
      5. NASA to Study Comet Collision www.PhysOrg.com[2005]
      6. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
      7. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]
      8. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
      9. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
      10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html [Deep Impact: 1]
      11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html [Deep Impact: 1]
      12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html[Stardust Probe: 1]
      13 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html[Stardust Probe: 2]
      14 BBC News: Space Probe Performs Mars Fly-By [Feb 25, 2007]
      15 European Space Agency (ESA) Science & Technology -Rosetta Fact Sheet [Feb 19, 2007]
      16 Europe’s Space Probe Swings By Mars [Feb 25, 2007]
      17 Europe Comet Probe Makes Key Mars Flyby By: David McHugh (Associated Press) [Feb 24, 2007]
      18 Spaceflight Now: Comet-bound Probe Enjoys Close Encounter with Mars By: Stephan Clark [Feb 25, 2007].
      19 SkyNews: Was Hyakutake the Comet of the Century [July 1996] &
      SkyNews: Comet Hale-Bopp [April 1997]
      20 Sky & Telescope: Brightest Comet in 41 Years [April 2007]
      21 BBC News Houston: Asteroid Mission Concept Unveiled By: Paul Rincon [March 14, 2007]
    2. http://www.spacedaily.com/reports/Touchdown!_Rosettas_Philae_probe_lands_on_comet_999.html[November 12, 2014]
    3.  http://www.spacedaily.com/reports/A_close_up_with_a_comet_999.html[November 12, 2014]
    4. http://www.spacedaily.com/reports/European_probe_lands_on_comet_fails_to_anchor_999.html[November 12, 2014]
    5.  http://www.bbc.com/news/science-environment-30034060[November 13, 2014]
    6.  http://www.spacedaily.com/reports/Philae_to_attempt_comet_drill_mission_scientist_999.html[November 14, 2014]
    7.  http://www.bbc.com/news/science-environment-30058176[November 15, 2014]
    8.  http://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft)[November 15, 2014]
    9.  http://fr.wikipedia.org/wiki/Rosetta_(sonde_spatiale)[?November 15, 2014]
    10.  http://sci.esa.int/rosetta/14615-comet-67p/[November 16, 2014]
    11. http://storiesbywilliams.com/2014/09/17/news-from-space-rosetta-maps-comet-surface/
    12.  http://sci.esa.int/rosetta/ESA Rosetta Website [June 19, 2015]
    13. https://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft)[June 20, 2015]
    14.  http://rosetta.jpl.nasa.gov/[NASA Rosetta Site]
    15.  http://www.space.com/27697-rosetta-comet-landing-full-coverage.html
    16.  http://blogs.esa.int/rosetta/2015/03/27/cometwatch-around-anubis-and-atum/[March 21, 2015]
    17.  http://www.telegraph.co.uk/news/science/space/11195744/The-Rosetta-mission-everything-you-need-to-know-about-the-quest-to-catch-a-comet.html[June 20, 2015]
    18. http://www.spacedaily.com/reports/Rosetta_comet-chasing_mission_extended_to_September_2016_999.html[June 23, 2015]
    19.  https://en.wikipedia.org/wiki/Halley%27s_Comet[August 19, 2016]
    20. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Rosetta_captures_comet_outburst[August 25, 2016]
    21. http://phys.org/news/2016-08-rosetta-captures-comet-outburst.html[August 25, 2016]
    22.  http://blogs.esa.int/rosetta/2016/08/25/rosetta-captures-comet-outburst/[ August 25, 2016]

    ********************

    Jayabarathan [jayabarathans@gmail.com]  (September 1, 2016) [R-2]

     

     

    Share
  • தெருச் சருகுகள்

    – எம்.ரிஷான் ஷெரீப்

    பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள். காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும் முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது. மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது; பசித்தது. ஏஜண்ட்காரன் எதையாவது சாப்பிடக் கொண்டுவருவான் என்ற மெல்லிய நம்பிக்கை மனதுக்குள் ஓடியது. ஆனால் நிச்சயமில்லை. விகாரையைத் தரிசிக்க வரும் யாராவது புண்ணியவான்கள் அவள் மேலோ அந்தக் குழந்தையின் மீதோ ஏதேனும் பரிதாபப்பட்டு உணவாக எதுவும் போட்டுவிட்டுப் போனால்தான் உண்டு.

    விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணியில் சில்லறைகள், பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருக்கின்றனதான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஏதாவது வாங்கி வந்து உண்ணும் நப்பாசையும் உள்ளுக்குள் எழுந்தது; சாத்தியமில்லை. ஏஜண்ட்காரன் எங்கிருந்தாவது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனது பார்வையைத் தாண்டிப் போய் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு தைரியமில்லை. போன வாரம் இப்படித்தான். பணம் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறாளா எனக் குமாரியின் ஆடையை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீரு வீரென்று பிரம்பால் அடிவாங்குவதை விடவும் ‘பாருய்யா பாரு..எங்கேயும் எதுவும் மறைச்சு வைக்கல’ என்று கத்தி அவளே உடுப்பை அவிழ்த்துக் காண்பித்தாள். அன்று முழுக்க அவள் எதுவும் சாப்பிடவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.

    பிணத்தின் மீது இலையான்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. அது பிணம் என்பது இலையான்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. இலையான்களால் எப்படியும் ஒரு பிணத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இலையான்களால் மட்டுமல்ல. பிண வாடையை மோப்பம் பிடித்துத் தேடி வரும் நாய், பூனைகள் கூடப் பிணத்தை அடையாளம் கண்டு இழுத்துப் போக முயற்சிக்கும். அதனால்தான் புஷ்பமாலா பிணத்தைத் தனது மடியை விட்டு இறக்கவும் இல்லை. அங்கு இங்கென நகரவும் இல்லை. காசு போட்டுச் செல்லும் எவராலும் கூட அது பிணம்தான் என இன்னும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் சந்தேகப்படக் கூட இல்லை. வெறுமனே அசுத்தமான ஆடைகளைப் பார்த்துக் கொண்டு அசூசைப் பட்டுக்கொண்டு தூரத்திலிருந்து காசை விட்டெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். எவனாவது கண்டுபிடித்து விட்டால் அவளும் அவளது கூட்டமும் சிறையில் கம்பியெண்ண வேண்டியதுதான். அவள் இதற்கு முன்பும் சிறைக்குப் போயிருக்கிறாள். அப்பொழுது அவள் சிறுமி. கஞ்சா வைத்திருந்ததற்காக அவளது அப்பாவைக் கைது செய்து கொண்டு போயிருந்தார்கள். அம்மாவுடன் அவள் அப்பாவைப் பார்க்கப் போயிருக்கிறாள். பொலிஸார் அடித்து அப்பா செத்துப் போனதால் அப்பாவைப் பிணமாகத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். புஷ்பமாலாவுக்கு எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு அதுதான் பிரச்சினை. எதுவும் மறந்து தொலைய மாட்டேனென்கிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவிருக்கிறது. அவளும் பல விஷயங்களை மறந்துவிட தீராது முயற்சிக்கிறாள். ஒருபோதும் முடியவேயில்லை. முக்கியமாக மாதந்தோறும் அவளது வீட்டில் கிடக்கும் பிணங்கள். பல நாட்கள் இரவுகளில் அவள் தூங்காமல் விழித்திருந்திருக்கிறாள். என்னதான் அவர்களின் வாயில் அலறிவிடாமல் இருக்க பழந்துணியைத் திணித்து அடைத்திருந்த போதிலும் அவர்கள் வாய்க்குள்ளேயே கதறும் சப்தம் அவளது கனவில் கூடக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

    புஷ்பமாலா சலிக்காது இலையான்களை விரட்டிக் கொண்டிருந்தாள். யாராவது அவர்களைப் பார்த்துக் கொண்டு வருவதைக் கண்டால் குழந்தையைப் படுக்க வைத்திருந்த தொடையினை ஆட்டித் தாலாட்டுவது போல மெலிதாக வாய்க்குள் முணுமுணுத்தாள். பச்சை நிறப் பழைய சீலையொன்றால் சுற்றிப் பிணத்தை அவளிடம் கொடுத்திருந்தார்கள். பிணம் என்பதாலோ என்னவோ அது பெரிதாய்க் கனத்தது போல உணர்ந்தாள். முகத்தை மட்டும் திறந்து மற்ற எல்லாவற்றையும் முழுவதுமாகச் சுற்றி மறைத்திருந்தாள். ஏனைய நாட்களிலென்றால் அவளுக்குத் தரப்படும் குழந்தை அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறதா என அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். சாயத் தேனீர் வாங்கி போத்தலில் நிரப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று அந்தத் தொந்தரவு ஏதும் இல்லை. ஆனாலும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உணர்ந்தாள். இன்றைக்கு தன் மடியிலிருக்கும் குழந்தைப் பிணம் நாளைக்கு எங்கிருக்குமோ? பிண வாடையை அவள் லேசாக உணர்ந்தாள். அதை அவளால் மட்டுமே உணர முடிந்தது. விகாரை வளவுக்குள் பரவலாகப் புகைந்து கொண்டிருந்த சந்தனத்திரி வாடையும், புத்தருக்குப் படைக்கப்பட்ட பூக்களின் நறுமணமும், பக்தர்களிடமிருந்து எழுந்த வாசனையும் பிண வாடையை எப்படியும் மறைத்துவிடக் கூடும் என்பதால் அவள் சற்றுத் தைரியமாக இருந்தாள்.

    புஷ்பமாலா குழந்தையைப் பார்த்தாள். அதன் சிவப்பு நிறம் கறுப்பாக மாறிக் கொண்டு வருவதைக் கவனித்தாள். தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. எப்படியும் அழுகி விடும். விடிகாலையில் செத்துப் போயிருக்கிறது. இரண்டு நாட்களாக வயிற்றோட்டமும், வாந்தியும், காய்ச்சலுமென அவஸ்தைப்பட்டு இன்று அதிகாலையில் உயிரை விட்ட எட்டு மாதக் குழந்தை. வழமையாக ஏஜண்ட்காரன் வாடகைக்கு எடுத்துவரும் குழந்தைதான். இவளுடன் இதற்கு முன்பும் பிச்சைக்கென இதே குழந்தையைக் கொண்டு வந்து தந்திருக்கிறார்கள். குழந்தைக்கு ஒரு நாள் வாடகை ஆயிரம் ரூபாய். எப்படியும் அதற்கு மேலேயே அது உழைத்துக் கொடுக்கும். அதற்காக மழையும், வெயிலும் பாராமல், ஒழுங்காகப் பால் கொடுக்காமல் தெருவில் காலைத் தொடக்கம் இரவு வரை வைத்திருந்தால் குழந்தை உடம்பு என்னவாகும்? அதிலும் அதனை அடிக்கடி அழ வைக்க வேண்டுமென்பதற்காகத் தூங்க விடாமல், வயிறு நிறைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் தாங்கும் குழந்தை? ஆனாலும் அவளுக்குக் கிடைக்கும் ஊதியத்தை விடவும் அதிகமாக அந்தக் குழந்தையை வாங்கும்போதே அதன் தாய்க்காரிக்கு குழந்தையின் ஒரு நாள் வாடகையாக முழுமையாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் அதன் தாய்க்காரி சண்டைக்கு வந்துவிடுவாள் என்று தெரியும். காசைக் கண்ணில் காட்டாமல் குழந்தையைக் கொடுக்கவும் மறுத்துவிடுவாள்.

    இந்தக் காலத்தில் பிச்சையெடுக்கவெனக் குழந்தைக்கு எங்கு போவது? பிச்சைக்காரியின் கையில் குழந்தையொன்றைப் பார்த்தால்தான் பரிதாபப்பட்டு கொஞ்சம் அதிகமாகப் பிச்சை போடுவார்கள். பிச்சை போடுபவர்களின் மனிதாபிமானத்தின் அளவும், அப்போதைய கையிருப்பின் அளவும்தான் போடப்படும் பிச்சைத் தொகையைத் தீர்மானிக்கிறது என்பதைப் புஷ்பமாலா அறிவாள். ஒருவரைப் பார்த்தவுடனேயே அவள் அவர் குறித்து மதிப்பிட்டுவிடுவாள். இவரிடம் பிச்சை தேறுமா, எவ்வளவு தேறும் என்பதையெல்லாம் அவளது அனுபவ உள்ளுணர்வு சொல்லிவிடும். அது ஒருபோதும் பிழையாகிப் போனதில்லை. அவளது கையில் குழந்தையொன்றிருந்தால் அன்று எப்படியும் நிறையக் காசு தேறும். பிச்சை போடுபவர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அக் குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பரிதாபப்பட்டு எப்படியும் பிச்சை போட்டு விடுவார்கள்.

    வெள்ளை உடுத்திக் கொண்டு விகாரைக்கு வந்த பக்தர் கூட்டமொன்று அவளை நோக்கி வருவதைக் கண்டாள். குழந்தையின் தலை வைத்திருந்த தொடையை ஆட்டிக் கொண்டே தாலாட்டொன்றை முணுமுணுத்தபடி, வந்த கூட்டத்திடம் கையை நீட்டி இறைஞ்சினாள். வந்தவர்கள் ஒவ்வொருவராக பத்து ரூபாய் நோட்டுக்களை அவள் விரித்திருந்த துணியில் போட்டுவிட்டுச் சென்றார்கள். அவள், அவர்கள் போகும்வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படியும் இன்றைய வருமானம் ஐயாயிரத்தைத் தாண்டி விடும். காலையிலிருந்து எவ்வளவு பக்தர் கூட்டம்… எந்நாளும் இப்படியில்லை. வருடத்துக்குச் சில நாட்கள்தான். புத்தரின் பிறந்தநாள் வழிபாடுகளுக்காக அந்த விகாரை வருடந்தோறும் இந்த நாட்களில் எப்படியும் பக்தர்களால் நிறைந்துவிடும். வந்தவர்கள் தமது பாவங்களைக் கரைக்கவென்று உண்டியலிலும், பிச்சைக்காரர்களது தட்டுக்களிலும் காசுகளை இறைத்துக் கொண்டிருந்தார்கள். புஷ்பமாலா குழந்தையை அடுத்த தொடைக்கு மாற்றிக் கொண்டாள். எவ்வளவுதான் வெயிலடித்தபோதிலும், உஷ்ணமாக இருந்தபோதிலும் குழந்தை குளிர்ந்து விறைத்திருந்தது. வெள்ளைத் துணியில் சேர்ந்திருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து மடித்து, தான் உட்கார்ந்திருந்த துணியின் உள்மடிப்பில் செருகி வைத்தாள். விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணி நிறைய ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தால் எவரும் பிச்சை போட மாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

    அவளிருந்த சேரியில் அனேகருக்குப் பிச்சை எடுப்பது என்பது முக்கியமான ஒரு தொழில். ஊர் உலகத்தில் ஏதாவது பண்டிகை நெருங்கும்போது ஏஜண்ட்காரர்கள் அந்தச் சேரியைத்தான் தேடி வருவார்கள். அந்தச் சேரி ஏஜண்ட், ஆளுக்கு இவ்வளவுதான் என எவ்வளவு சொல்வானோ அதை எடுத்து வைத்துவிட்டு அந்த சேரி வயோதிபர்களையும், சிறுவர், சிறுமிகளையும் கூட்டிச் சென்றுவிடுவார்கள். வருபவர்கள் மத்தியில் பத்தொன்பது வயது புஷ்பமாலாவுக்கு எப்பொழுதும் கிராக்கி இருக்கும். கறுப்பு நிறமும், மூக்கு வரை பிளந்த மேலுதடும், வளைந்த ஒரு கையும் அவளுக்கான வாடகையை அதிகப்படுத்தியிருந்தது. சேரி ஏஜண்டிடம் அவளுக்கான வாடகையை மொத்தமாகக் கொடுத்துவிட்டு பண்டிகைக் காலங்களில் கண்டிக்கோ, அனுராதபுரத்துக்கோ, பொலன்னறுவைக்கோ அவளைக் கூட்டிக்கொண்டு செல்லும் ஏஜண்ட் அவளைத் திருப்பியனுப்பி வைக்கும்போது ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்து அனுப்புவான். ஒரு மாத காலத்துக்கும் மேலாக வெயிலிலும் மழையிலும் அவள் உழைத்ததற்கு அது மட்டும்தான் அவளிடம் எஞ்சும். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும்போது அவளது அம்மாவிடம் சேரி ஏஜண்ட் அவளுக்காகக் கொடுத்த காசு முழுவதுமாகத் தீர்ந்து போயிருக்கும். அம்மா, இவளிடமிருப்பதை நச்சரித்துக் கேட்டு வாங்கிக் கொள்வாள். ஆனாலும் அம்மாவை புஷ்பமாலாவுக்கு மிகவும் பிடிக்கும்.

    பெரிய பெரிய ஆட்களெல்லாம் அவளது அம்மாவைத் தேடி வருவார்கள். ஒருமுறை ஒரு பிரபல நடிகையொருத்தி கூட அம்மாவைத் தேடி வந்திருந்தாள். கவனக்குறைவால் மூன்று மாத காலத்துக்கும் மேலாக வளர்ந்திருந்த கர்ப்பத்தை அம்மாதான் கலைத்து விட்டாள். சேரிக்குள் எல்லோருக்கும் இது தெரியும். யாரும் காட்டிக் கொடுக்கவில்லை. பொதுவாக அப்படி யாரும் காட்டிக் கொடுப்பதில்லை. சேரிக்குள் எல்லோருமே ஏதோவொரு தப்பான செயலைத்தான் தமது ஜீவனோபாயமாகச் செய்துவருகிறார்கள். நெருக்கமான வீடுகள், குறைந்த வசதிகள், தீய பழக்கவழக்கங்கள் காரணமாக ஒருவருக்கொருவர் சண்டை பிடித்துக் கொள்வார்கள்தான். கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்வார்கள்தான். ஆனால் அதற்காகக் காட்டிக் கொடுக்க முடியுமா? அம்மாவுக்கு, புஷ்பமாலாவின் அக்காக்கள் இருவரும் இந்த வேலைகளில் உதவி செய்வார்கள். எப்படியும் மாதத்துக்கு நான்கைந்து பெண்கள் அம்மாவைத் தேடி வந்துவிடுவார்கள். ஆளைப் பார்த்து எடை போட்டு அதற்கேற்ப காசு வாங்கிவிடுவாள் அம்மா. கல்லூரி மாணவிகள் நிறையப் பேர் வருவார்கள். ஒரு தடவை பள்ளிக்கூட மாணவியொருத்தியும் வந்திருந்தாள். புஷ்பமாலா வயதுதான் இருக்கும். ஆளை, வயதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? வரும்வரைக்கும் இலாபம். எப்படியும் இந்த வருடத்துக்குள் மூத்த அக்காவின் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென அவளது அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

    அதிர்ஷ்ட லாபச் சீட்டுகள் விற்கும் சைமன் ஒரு நாள் அம்மாவிடமே நேரடியாக அக்காவைப் பெண் கேட்டிருக்கிறான். அம்மா, அக்காவிடம் அவளது விருப்பம் பற்றி எதுவும் கேட்கவில்லை. ‘இந்த வருடத்துக்குள் அவனுடன் உனக்குக் கல்யாணம்’ என உத்தரவாகச் சொல்லி விட்டிருந்தாள். சைமனின் அம்மா எப்பொழுதும் குடித்துக் கொண்டேயிருப்பாள். அவளுடன் எப்படியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருக்க முடியாது. அதனால் அக்காவுக்கென்று தனிக்குடிசையொன்று வாடகைக்கு எடுக்கவேண்டுமென அம்மா தேடிக் கொண்டிருந்தாள். அது இந்தச் சேரியைத் தாண்டி வேறெங்காவது இருந்தால் நல்லது என ஒருநாள் அவளது தலையில் பேன் பார்த்துக் கொண்டிருக்கையில் புஷ்பமாலா கூறினாள். அக்காவுக்குக் கோபம் வந்துவிட்டது. அதுதான் அக்கா. அவளுக்குத் திடீர் திடீரென கோபம் வரும். எதற்கென்றில்லை. அதனாலேயே ஒரு இடத்தில் வேலை பார்க்க முடியாது. முன்பு பங்களாக்களுக்கு வேலைக்குச் சென்றவளால் அங்கெல்லாம் ஒரு கிழமைக்குக் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்துவிட்டாள். அம்மா, அடி அடியென அப்படி அடிப்பாள். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாளேயொழிய கோபத்தைக் கட்டுப்படுத்த சிறிதும் முயற்சிக்க மாட்டாள். ‘எல்லோரும் சேர்ந்து என்னை இங்கிருந்து துரத்திடலாம்னு பார்க்குறீங்களா?’ என அக்கா கத்தினாள். சின்னக்கா ஓடி வந்து சமாதானப்படுத்தினாள்.

    புஷ்பமாலாவுக்கு மூத்தவளை விடவும் சின்னக்காவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அவள்தான் இவளுக்கு தலைக்கு ரிப்பன், முகத்துக்கு பவுடர் எல்லாம் வாங்கி வந்து கொடுப்பாள். புஷ்பமாலா எப்பொழுதும் தன்னுடன் வைத்திருக்கும் பச்சை நிறச் சீப்பு அவள் வாங்கிவந்து கொடுத்ததுதான். அவளுக்குத்தான் அந்த வீட்டில் முதன்முதல் கல்யாணம் ஆனது. கல்யாணம் என்பது விழா எடுத்துச் செய்வது என்றால் இது அப்படியில்லை. தனது பதினாறு வயதிலேயே பஸ் கண்டக்டராக வேலை பார்க்கும் ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாள். அவனும் இந்தச் சேரிக்குள்தான் இருந்தான். இரண்டு நாள் கழித்து இருவரும் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு சேரிக்கு வந்தார்கள். அம்மா விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு அவர்களை அடிக்க ஓடினாள். ‘எங்களை ஏதாவது செஞ்சே..நாங்க ஒன் தொழிலப் பத்தி பொலிஸ்ல சொல்லிடுவோம்’ என்று அவன் மிரட்டினதும் அடங்கினாள். அம்மா எதற்கும் பயப்படுபவளில்லை. ஆனாலும் இந்த வார்த்தைகளுக்கு அவள் பயந்துதான் போனாள். ‘எக்கேடு கெட்டும் போ’ எனக் கத்திவிட்டு வீட்டுக்கு வந்தவள் அன்றைய நாள் முழுக்க வாசலில் துப்பிக் கொண்டே இருந்தாள். அசிங்கமாகிக் கூழான குழந்தைகளின் இரத்தக் கட்டிகளைப் பார்த்துக் கூட அவளுக்கு இதுவரை அப்படியொரு அருவருப்பு தோன்றியதில்லை. புஷ்பமாலாவின் அப்பாவைப் புதைத்த அன்றுகூட அப்படித்தான். வந்திருந்த எல்லோரையும் தாண்டிப் போய் துப்பி விட்டு வந்து கொண்டிருந்தாள். ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை அவளுக்கு.

    புஷ்பமாலாவுக்கும் அப்பாவைப் பிடிக்காது. எப்பவுமே போதையிலிருப்பவனை எவருக்குத்தான் பிடிக்கும்? அவளது அப்பாவுக்கு நிரந்தரத் தொழிலில்லை. கஞ்சா கடத்துவான், தெருவோரத்திலிருக்கும் வாகனங்களின் பாகங்களைத் திருடி விற்பான், தப்பான தொழில் செய்யும் பெண்களுக்கு ஆள் பிடித்துக் கொடுத்து கமிஷன் வாங்குவான். புஷ்பமாலாவை பிச்சைக்கார ஏஜண்டுக்கு முதன்முதலில் விற்றதும் அவன்தான். அப்பொழுது அவளுக்கு நான்கு வயது கூட பூர்த்தியாகியிருக்கவில்லை. கூட்டிப் போனவன் காலை முதல் மாலை வரை பேருந்துகளில் ஏற்றிப் பிச்சை எடுக்க வைத்தான். ‘அம்மா, அப்பா யாருமில்லை. பசிக்குது’ என அழுது பிச்சையெடுக்கச் சொன்னான். அவளுக்குச் சும்மாவே அழுகை வந்தது. ‘அம்மா, அம்மா’ என அரற்றினாள். முதல் நாளே நூறு ரூபாய்க்கும் மேலான வருமானத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டாள். ஒரு ராசியான பிச்சைக்காரியாக அவள் ஆனது அன்றிலிருந்துதான்.

    செத்துப் போயிருந்த குழந்தையின் தாய் இவளை நம்பித்தான் குழந்தையைக் கொடுத்திருந்தாள். குழந்தையைக் கூட்டி வரவென விடிகாலையில் சக யாசகர்கள் எல்லோருடனும் வேனில் இவளும் போயிருந்தாள். யாரும் வேனை விட்டு இறங்கவில்லை. ஏஜண்ட் போய்ப் பார்த்துவிட்டு வந்து ‘அது செத்துப் போயிருக்கு’ என்றான். இவள் பதறிப்போய், வேனை விட்டு இறங்கிப் போய்ப் பார்த்தாள். நிலத்தில் கிடத்தப்பட்டிருந்த குழந்தைக்கருகில் சாய்ந்து படுத்திருந்த அதன் அம்மா இவளைக் கண்டதும் எழுந்து அழத் தொடங்கினாள். இவள் அருகில்போய் அந்த அம்மாவினது முதுகை தனது வளைந்த கையால் தடவிக் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்குத் தந்தை இல்லை. ‘வளர்ந்து பெரியவளாகி விட்டிருந்தாலும் அதன் அம்மாவைப் போல தப்பான தொழிலுக்குப் போயிருக்கும். அப்படிப் போகவில்லையாயினும் ஊரும் உலகமும் என்னவெல்லாம் பேசி அதன் மனதை நோகடிக்கும். நல்ல விதியைக் கொண்டு பிறந்திருக்கிறது அது. அதனால்தான் கொஞ்சநாளிலேயே மண்ணுக்குப் போகும் அதிர்ஷ்டம் அதற்கு வாய்த்திருக்கிறது’ என புஷ்பமாலா நினைத்துக் கொண்டாள். ஏஜண்ட்காரன்தான் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தான். வெசாக் நாளும் அதுவுமாக குழந்தை இல்லாமல் பிச்சையெடுக்கப் போனால் காசு அதிகமாகத் தேறாது எனப் பொருமினான். ‘ரெண்டாயிரம் தந்துட்டு வேணும்னா புள்ளயக் கொண்டுபோ..அந்திக்கு கொண்டு வந்து கொடுத்துடு. நாறிப் போறதுக்கு முன்ன புதைச்சிறணும்…புதைக்கிற செலவுக்குக் கூடப் பணமில்ல’ என்று குழந்தையின் அம்மா சொன்னதும்தான் அவன் முகத்தில் ஒரு சாந்தம் தோன்றியது. அவன் அதனை எதிர்பார்க்கவில்லை. அந்த யோசனை அவனுக்குக் கூட வரவில்லை. இரண்டாயிரம்தானே? தங்க முட்டையிடும் வாத்து. கொடுத்துவிட்டால் போச்சு. அடிக்கடி துணி மாற்ற வேண்டாம். தேனீர் வாங்கிக் கொடுக்க வேண்டாம். எந்தத் தொந்தரவும் இருக்காது. பொம்மையைத் தூக்கிக் கொண்டு போய் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பதுபோல கொடுத்து விடலாம். அதனை வைத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமாகவே உழைத்துவிடலாம். அழுது கொண்டிருப்பவளிடம் பேரம் கூடப் பேசவில்லை. பிணத்துக்கு மேலால் நிறைய வாசனைப் பவுடர் தூவிப் பழந்துணியால் நன்றாகச் சுற்றியெடுத்து புஷ்பமாலாவிடம் கொடுத்தான். அவள் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள். அந்தியானதும் குழந்தையைக் கொண்டு வந்து அதன் அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அதைப் புதைக்கும்வரை கூடவே இருக்கவேண்டும் என தீர்மானித்துக் கொண்டாள்.

    தூரத்தில் ஏஜண்ட்காரன் வருவது தெரிந்ததும் இன்னும் கடுமையாகப் பசித்தது. ஏஜண்ட்காரனைப் பார்த்ததுமே அவன் முகத்தில் இருக்கும் ஒரு அப்பாவித்தனம்தான் முதலில் தெரியும். ஆனால் பொல்லாதவன். முரடன். அப்படியிருக்காவிட்டால் அந்தப் பிச்சைக்காரர்களை கட்டிமேய்க்க முடியாதென்பதை அவன் அறிவான். ஆனாலும் புஷ்பமாலா மேல் அவனுக்கு தனிப்பட்ட பாசம் உண்டு. அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, கதிர்காமம், கெச்சிமலை என எல்லாப் புனித இடங்களுக்கும் அவனுடன் போயிருக்கிறாள். எல்லா இடங்களிலும் அவளைப் பரிவுடன்தான் கவனித்துக் கொண்டிருக்கிறான். ‘பன்சலை வாசல்ல தன்ஸல் கொடுக்குறாங்க… ஆளுக்கு ஒரு பார்சல் சோறுதான் கொடுப்பாங்களாம். வரிசையில நிக்கணும்..பிள்ளையத் தூக்கிட்டு வா’ என்றான். புஷ்பமாலா மடியில் கனத்த பிணத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டு மெதுவாக எழுந்தாள். தான் உட்கார்ந்திருந்த துணியை, காசு எதுவும் கீழே விழுந்து விடாமல் பத்திரமாகச் சுற்றியெடுத்துக் கொள்ளும்படிச் சொன்னாள். அவன் அதனைச் சுற்றியெடுத்து, தான் கொண்டு வந்திருந்த பைக்குள் போட்டுக் கொண்டு முன்னே நடந்தான். அவனைத் தொடர்ந்த புஷ்பமாலாவுக்கு அவன் அவளது கணவன் போலவும், அந்தப் பிணம் அவர்களது குழந்தை போலவும் தோன்றியது. அவள் அப் பிணத்தை நெஞ்சோடு அணைத்தபடித் தாலாட்டுப் பாடலை முணுமுணுத்தபடி நடந்தாள்.

     

     

     

    Share
  • ’’குமார சம்பவம்’’

    கிரேசி மோகன்
    ——————————-

    ‘’பிரும்மப் பிரயத்தனம்’’
    ———————————————
    துள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில்
    செல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும்
    வருத்தம்தான் என்ன? மருத்துக் களேழும்
    சிறுத்ததேன் சீறாது சோர்ந்து….(84)

    ஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை
    தாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும்
    விண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது
    கண்ணிரெண்டும், ஏனிக் குனிவு….(85)

    பொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே
    இதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள்
    உட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம்
    முட்புகுந்த(து) ஏனோ மொழி….(86)

    தோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால்
    தேற்றுவிக்கும் தாங்களேன் தேர்ந்தெடுத்தீர் -சாற்றிடுவீர்
    உள்ளதை உள்ளபடி பிள்ளைகாள் போட்டுடைப்பீர்
    தெள்ளத் தெளிவாகத் தான்….(87)

    அண்டிய தென்றலால் ஆடிடும் முண்டகம்போல்
    கொண்டகண்கள் ஆயிரத்தால் அண்டர்கோன் -விண்டினன்
    தேவ குருவிடம் தக்கபதில் தோலுரித்து
    பூவன் பழமாய்ப் பெற….(88)

    இந்திரன்தன் ஆயிரம் கண்களைக் காட்டிலும்
    தன்திறனாய் தர்மார்த்த தேசுற்ற -மந்திரன்
    தேவ ப்ரஹஸ்பதி சேவித்துச் செப்பினார்
    நாவன் அயன்முன் நடப்பு (OR) நிகழ்வு….(89)….!கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”மல்லாண்ட தோளில் முயலுமோர் ஜந்துவும்,
    கல்லாமை கன்றவன் கால்வருட, -புள்வவ்வால்
    வானிலே வந்து விடிகாலை வந்தனம்
    கானிலே KonniChiwa Good”(கேசவ் !)….கிரேசி மோகன்….!

    கல்லாமை -வங்கக் கடல் கடைந்த போது கல்லைத்(மந்திர மலையைத்) தாங்கிய ஆமை….!புள்வவ்வால் -பறவை வவ்வால்….!கானிலே-காட்டிலே….VANAVIHARI….!

    Share
  • பெருமாள் திருப் புகழ்….!

    கிரேசி மோகன்

    ———————————————

    தனதான தத்தன தனதான தத்தன
    தனதான தத்தன -தனதான

    பொது
    ——–

    “கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும்,
    தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும்
    குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும்,
    படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை

    சபைநாற வைத்திடும் சனிவாயில் சொத்தையும்,
    உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும்,
    செரிமானம் அற்றிட பிரிவாய்வ சுத்தமும்,
    சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக

    அபவாத புத்தியும், மமகார சித்தமும்,
    அவதூறு ரைத்திடும் -விடநாவும்,
    அணுகாது சத்துவ மனமேனி உற்றிட
    அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா

    மதுகேசி, சக்கிரன், முலைபூதம், சர்ப்பமும்,
    சிசுபால வர்க்கமும், -முறைமாமன்
    தரைசாய இத்தரை அவதார முற்றனை,
    அருளாய்யெ னக்கரி -பெருமாளே”….கிரேசி மோகன்….!
    காப்பு
    —————

    “சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில்
    மந்த்ர வடிவ உபதேசம ருளிய
    கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம
    அந்த ரிவயி ரவிவாமமி றைவனின்
    பங்கு திரும யிலைவாழுமை இளைய
    தங்கை வருகை சினமாமனி டம்உரை -சிறைபால
    முந்தை வினைகள் முளையோடுவி டுபட
    சிந்தை வடிவில் பலநாள்பழ கியவ
    கந்தை விலக ரமணேசர்வ ழிதனில்-நடமாட
    எந்தை வருக ரகுநாயக வருக
    என்று அருண கிரியார்புகழ் தமிழின்
    சந்த நடையில் வரவேணும்நெ டிதுயர் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share