Month: September 2016

  • நலம் . . நலமறிய ஆவல் … (22)

    நிர்மலா ராகவன்

    காதலாவது, கத்தரிக்காயாவது!

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-2-1

    தந்தையை இழந்திருந்த கமலியின் தாய் `அன்பு’ என்பதையே அறியாது, யார் வீட்டிலோ வளர்ந்திருந்தாள். அவள் வளர்ந்த விதத்திலேயே மகளையும் வளர்த்தாள். நான்கு மாதக் குழந்தையையே அடித்து நொறுக்குவாள்.

    பள்ளிக்கூடத்துக்குச் சென்று வந்தாலும், பத்து வயதில்கூட கமலிக்கு எழுதப் படிக்க வரவில்லை. யார் எது பேசினாலும், முதுகில் அடி வைத்தால்தான் அவளுக்குப் புரியும் என்ற நிலை வந்தவுடன்தான் விழித்துக்கொண்டார் அவளுடைய தந்தை. விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டில் கொண்டு விட்டுவிட்டுப் போய்விடுவார். தன் பொருளாதார முன்னேற்றத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தத் தோன்றவில்லை.

    நான் சாதாரணமாகப் பேசினாலே நடுங்கினாள் அச்சிறுமி. சற்றே பெரியவளாக இருந்த என் மகள் பொறுப்பில் அவளை விட்டுவிட்டு தான் ஒதுங்கிக்கொண்டேன். மணிக்கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்து சமையலுக்கு உதவியாக இருப்பாளா, ஒரு சிறு பெண்! (நாங்களெல்லாம் அந்த வயதில் எப்படியெல்லாம் தப்பித்து ஓடப்பார்த்தோம்!) அவளைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடிந்தது என்னால்.

    அந்தக் கமலி காதல் கல்யாணம் புரிந்துகொண்டாள் — பதினெட்டு வயதிலேயே. உயரமாக, மூக்கும் முழியுமாக, சிவந்த நிறம் கொண்டவள் அவள். காதலனுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால், தாயின் சுடுசொற்களும், அடியும் மட்டுமே சிறுவயதிலிருந்து அறிந்திருந்தவளுக்கு இளைஞன் ஒருவன் தன்னை விரும்புகிறான் என்பதே பேரின்பத்திற்கு ஆளாக்கியது.

    கமலியின் தந்தை அந்தஸ்தில் அவனைவிட சற்று உயர்ந்தவர். `என் குழந்தைகளுக்கு எல்லாவிதத்திலும் சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்!’ என்று பெருமைப்பட்டுக் கொண்டவருக்கு, மகள் தானே ஒரு துணையைத் தேடிக்கொண்டதில் நிம்மதிதான்.
    `இவளை மணந்தால், என் நிலையும் உயர்ந்துவிடும்!’ என்று திட்டம் போட்டிருந்தான் தினகரன். அது நடக்கவில்லை. மகளையே கவனிக்காதவர் மருமகனையா முன்னுக்குக் கொண்டுவரப்போகிறார்!

    `ஏமாந்து விட்டோமே!’ என்ற வன்முறையில் இறங்கினான்.

    `ஏனோ என்னைப் பார்த்தால், எல்லாருக்கும் அடிக்கத்தான் தோன்றுகிறது!’ என்று வாய்திறவாமல் எல்லா அடி, உதையையும் பொறுத்துப்போனாள் கமலி.

    இரண்டு குழந்தைகளைப் பெற்றபின், அதற்கு மேலும் பொறுக்க முடியாது, அப்பாவை நாடிப்போனாள் கமலி. அவர் அதிர்ந்தார். `விவாகரத்து!’ என்றார். கமலி ஒப்பவில்லை. திரும்பவும் அம்மாவிடம் வந்து இடிபட வேண்டுமா!

    மனைவியை வதைக்கும் பொதுவான கணவர்களைப்போல், தினகரன் அவளைத் தேடி வந்தான். தன் தவற்றுக்கு வருந்தி அழுதான். மனமிளகி, அவனுடன் திரும்பப் போனாள் கமலி.

    அவனுடைய மனமாற்றமும், அன்பும் சொற்ப தினங்களே நீடித்தன. மீண்டும் அடிதான் — இம்முறை சற்று மோசமாகவே. `என்னைவிட்டுப் போகும் அளவுக்கு உனக்குத் துணிச்சலா?’ என்று கத்தினான். சில தினங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் தாய் வீட்டுக்குப் போனாள் கமலி.

    அம்முறை என்னிடம் அவளை அழைத்து வந்தார் அவளுடைய தந்தை.

    “Can’t you live without a man? (உன்னால ஒரு ஆண் துணை இல்லாம வாழ முடியாது?)” என்று அவளைக் கேட்டேன், எரிச்சலுடன். அவளுடைய குழந்தைகளும் உணர்வுபூர்வமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதையும் பார்த்திருந்தேன்.

    “முடியும்?” என்றாள், சவால் விடுவதுபோல். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே கணவனை நாடிப்போனாள். தந்தையோ இடிந்துபோனார்.

    சராசரி ஐந்து முறை இம்மாதிரி நடக்கும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். திடீரென கிடைக்கும் சுதந்திரமான வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று பெண்களுக்கு உண்டாகும் கலக்கமே காரணம். உடலிச்சையை எப்படி சமாளிப்பது என்ற குழப்பமும் ஒரு மனைவி தன்னை வதைக்கும் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து, அனுதினமும் செத்துப் பிழைக்க காரணமாக அமைகிறது. (பல காலம் பொறுத்திருந்து விவாகரத்து பெற்ற ஒரு பெண்மணி என்னைத் தேடிப்பிடித்து அழைத்துத் தெரிவித்தது).

    ஒருவாறாக, விவாகரத்துக்குச் சம்மதித்தாள் கமலி. `அவன் குழந்தைகள் எனக்கு வேண்டாம்!’ என்றுவிட்டாள்.

    இப்போது, தனியாக ஓரிடத்தில் தங்கிக்கொண்டு, வாடகைக்கார் ஓட்டும் தொழில் செய்கிறாள். ஒருவழியாகக் கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கிறாள். அவள்கீழ் சில ஆண்கள் வேலை செய்கிறார்கள். பேச்சுத்திறனில் கெட்டிக்காரியாகிவிட்டாள். `காதலாவது, கத்தரிக்காயாவது! அதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரிப்படும்!’ என்ற மனப்போக்கு ஏற்பட்டுவிட்டது.

    உண்மைதான். தன்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கிற ஒரு பெண்ணை `காதல்’ என்ற பெயரில் மயக்கி மணந்துகொண்டு, அதன்பிறகு இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கும் நிலைக்குப் போய்விட்டால், அது எப்படி காதலாகும்?

    தொடருவோம்

    Share
  • பாமரகீர்த்தி [3] இன்னம்பூரான் பக்கம் [8]

    -இன்னம்பூரான்
    18 09 2016

    innamburan

    சமுதாயத்தையே பல நூற்றாண்டுகளாகப் பாமரனைப் பற்றிய மறதி நோய் பரவலாக ஆட்கொண்டிருப்பதைக் கண்டு வருந்தினோம். பகிர்வார்கள் தென்படாததால், நேற்றைய பாமரனின் கீர்த்தியைப் பாடாவிடின், இன்றே அவரை மறந்துவிடுவார்கள் என்பது திண்ணம். அதனால்தான் அவசரம், பொறுமையின்மை. சமுதாய அக்கறையின்மையைப் பொறுத்தார் பூமி ஆளலாம்; தரிசு பூமியை. ஆனால், அவர்களால் தரணி ஆள முடியாது.

    உங்களுக்கு மாரியப்பனை தெரியுமோ? தெரிந்திருக்காது. தற்பொழுது பாழடைந்த மண்டபத்தின் தூண்கூட, ‘அவன் இங்கு தான் இளைப்பாறினான்; ஒரு கல்வெட்டு பதிக்க, ஒரு கோடி ரூபாய் கொடுங்கள்.‘என்று அறை கூவும். நம்ம நோபெல் பரிசு வெங்கட்ராமனுக்குக் கூட (தற்காலம் அவர் தான் உலகப்புகழ் இங்கிலாந்து ராயல் சொஸைடி தலைவர்)  இப்படித்தான் ஆச்சு. அவன் சூடிகையான பையன். படிக்காமலே மார்க் வாங்குவான். அவனுக்கு நாலு வகுப்பிலும் நான்தான் வாத்தி. அன்றே நோஸ்ட்ரடமாஸ் மாதிரி, இவன் நோபெல் பரிசு வாங்குவான் என்று என் பெண்டாட்டியிடம் சொன்னேன். நீங்கள் எப்டி அப்டி சொன்னேள் என்று மூக்கிலே விரலை வைக்கிறாள் என்றெல்லாம் ‘புரட்டுக்கதை’ கட்டிய பேராசிரியர்கள் பலர். வெங்கட், பாவம், நான் அந்த ஊர்ப்பக்கமெல்லாம் தலை என்ன? உள்ளங்கால் கூட வைக்கவில்லை என்று அங்கலாய்த்துக்கொண்டார். அவர் தருமமிகு சென்னயின் ம்யூஸிக் சபாவுக்கு அநாமதேயமாக க்யூவில் நின்றதை கண்ட ஹிந்து ரவி அவரை முன்வரிசைக்கு அழைத்து வருவதற்குள் அவருடைய தாத்தாவின் ‘பால்ய சினேகிதர்கள்’ ‘பிலுபிலு’ என்று மொய்த்து விட்டார்களாம். அந்த மாதிரிதான் மாரியப்பன் கதையும்னேன்.

    ஆம். மாற்றுத் திறனாளியான மாரியப்பன் ரியோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் T 42 High Jump at Paralympics உயரக் குதிக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, அழியாப் புகழும், கோடிக்கணக்கான ரூபாய் பரிசுகளும் பெற்ற பெரியவடுகம்பட்டி பாமர இளைஞர். வயது 21.  அவர் வாகை சூடியதைப் போற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயம், அவருக்கு சான்ஸே இல்லை என்பதுதான். வாழ்நாள் முழுதும் எதிர்நீச்சல் தான். அவன் பள்ளிப்படிப்பின் போதே, தாங்கமுடியாத கடன்சுமை, சகோதரியின் திருமணம் பொருட்டு. தந்தை தங்கவேலு, இவர் மழலையாக இருக்கும்போதே, விலகி, கண் காணாத இடத்துக்குப் போய்விட்டார். இப்போது வந்து நிற்கிறார். நற்றாய் சரோஜா செங்கல் சூளையில் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றினார். சகோதரி சுதாவோ ஒரு தியாகி. தன் படிப்பை நிறுத்தி விட்டுத் தன் உடன்பிறப்புகளைக் கவனித்துக்கொண்டார். ஐந்து வயதில், ஒரு பஸ் ஏறிய விபத்தில் இவருக்கு காலில் நல்ல அடி. நிரந்தர ஊனம். 15 வருடம் கழிந்த பின்னும், அந்த வழக்கு ‘ஜிவ்’வுன்னு இழுத்துக்கொண்டே போகிறதாம்! எனினும் எல்லா விளையாட்டுக்களிலும் பங்கு எடுத்து வந்தார். ஆனால், சகபாடிகளின் கொடுமை தாங்காமல் தனித்துச் சிறப்புத்தரக்கூடிய ஹை ஜம்ப் மட்டுமே நாடி,அதைப்பயின்றார். அந்தத் திருப்புமுனைக்கு வித்திட்டது அவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நல ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன். பல இன்னல்களைக் கடந்து, ஏற்கனவே லண்டன் பாரா ஒலிம்பிக்ஸ் 2012இல் பங்கேற்கத் தேர்ந்தெடுத்த பின்னர், நிதி நெருக்கடியால், இவருக்கு லண்டன் போக முடியவில்லை. அடுத்த வருடம் போக ஆர்வத்துடன் இருக்கிறார். தமிழ்நாட்டு முதல்வர் ரூபாய் இரண்டு கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சரகம் ரூபாய் 75 லக்ஷமும் இவருக்குப் பரிசாக கொடுத்தனர். கார்களும், மோட்டார் சைகிள்களும், துட்டும், ஓடி வந்த வண்ணம்.

    நம்ம மாரியப்பன் தன்னடக்கத்துடன், ஏமாற்றுவித்தைக்காரர்கள் கையில் சிக்காமல், நிறைவு வாழ்க்கை வாழ்ந்து, பல வெற்றிகள் அடைந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாராக.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://ichef.bbci.co.uk/news/ws/660/amz/worldservice/live/assets/images/2016/09/10/160910014033_rio_paralympics_mariyappan_thangavelu__624x415_afp.jpg

     

     

     

    Share
  • உயர்வினையே உணர்ந்திடலாம் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

     

    உலகத்தில் பிறந்திடுதல் உயர்வான நிலயென்று

    உம்பர்களே எண்ணுவதாய் உரைத்திடுவார் வாசகரும்

    உலகத்தில் பிறந்தாரோ பிறப்பதனை உணராமல்

    பித்தேறி பலசெய்து  பேதலித்துநிற்கின்றார் !

     

    மானிடராய் பிறந்துவிடல் மாநிலத்தில் பெரும்பயனே

    ஆறறிவை பெற்றுநிற்கும் அருமையவர்க்கு அமைந்ததுவே

    தாறுமாறாய் நடக்காமல் தடம்புரண்டு போகாமல்

    நேரான வழிசெல்ல நிற்கிறதே அறிவாகும் !

     

    அறிவுபெற்ற மனிதனிடம் அசிங்கம்பல இருக்கிறது

    ஐந்தறிவு ஜீவன்கூட அசிங்கம்பல செய்வதில்லை

    பேரறிவு பெற்றுவிட்டோம் எனவெண்ணி நின்றுநிதம்

    பிரியமில்லாக் காரியங்கள் பெருமளவில் செய்கின்றார் !

     

    வாழ்கின்ற வேளையிலே மற்றவர்க்கு இடைஞ்சலின்றி

    வாழ்க்கையினை அமைத்துவிட்டால் வாழ்வினுக்கே வளமாகும்

    வாழ்க்கைதனை வீழ்த்துதற்கு வழியாக வாழ்ந்திடுவார்

    வாழ்க்கையிலே பிறப்பதனை வரட்சியாய் ஆக்கிநிற்பார் !

     

    பூமிதனில் பிறப்பார்கள் சாமியாய் மாறுவதும்

    பூனிதனில் பிறப்பார்கள் சாத்தானாய் மாறுவதும்

    யார்கொடுத்த வரமென்று நாமொருக்கால் சிந்திக்கின்

    அவரவரின் மனவெழுச்சிதான் அதற்குக் காரணமாம் !

     

    யேசுநபி காந்திமகான் நிறைவுடைய ரமணரிஷி

    பூமியிலே பிறப்பதனை புனிதமாய் ஆக்கிநின்றார்

    பாவிகளை ரட்சித்தார் பலவற்றை சொல்லிநின்றார்

    ஆர்வமுடன் கேட்டவர்கள் அறிவுபெற்று விழிப்படைந்தார் !

     

    வேதமொடு உபநிடதம் விதம்விதமாய்க் கற்றாலும்

    பாதகமாம் எண்ணமதை பதுக்கியே வைத்திருப்பார்

    பூதலத்தில் என்னாளும் பொழுதையே அழிக்கின்றார்

    பாதகத்தை ஒழித்துவிடின் பயனாகும் இப்பிறவி !

     

    பிறக்கின்றார் யாவருமே இறப்பதனைக் கண்டிடுவார்

    இருகின்ற வாழ்க்கையிலே எல்லோர்க்கும் உதவிடுவோம்

    பிறவியிலே மற்றவரை பேணிநின்று வாழ்ந்துவிடின்

    பிறப்பெடுத்த பெரும்பயனைப் பெற்றிடுவோம் யாவருமே !

     

    பார்க்கின்றோம் சிரிக்கின்றோம் பலவற்றைப் பேசுகிறோம்

    உண்கின்றோம் உடுக்கின்றோம் உல்லாசம் காணுகிறோம்

    ஊனமே இல்லாமல் வாழுகின்றோம் எனநினைத்தால்

    உண்மையிலே பிறப்பதனின் உயர்வினையே உணர்ந்திடலாம் !

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 45

    க. பாலசுப்பிரமணியன்

    பார்வையும் பொருளும்

    education-1

    கற்றலில் மூளை எப்படிப்பட்ட விந்தையான செயல்களை மிகவும் எளிதாகவும் துல்லியமாகவும் ஓவ்வொருவருக்கும் தனிப்பட்ட  முறையிலும் செய்கின்றது என்பதை அறிந்தால் இதற்குப் பின் இருக்கும் சக்தியின் வளமையை நாம் கணிக்கவே முடியாது.!

    நாம் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்ததும் அந்தப் பொருளின் பரிமாணங்களையும் அதன் தேவைகளையும் அதன் தாக்கங்களையும் அதனுடன் சம்பந்தப்பட்ட உணர்வுகளையும் மூளை நமக்கு ஒரு நொடியின் மிகச்சிறிய விழுக்காட்டில் அள்ளித்தருகிறது. ஆனால் நாம் பார்க்கும் பொருளின் உண்மையான பதிவு நமக்கு கிடைக்கிறதா என்றால் “அது கிடைப்பதில்லை” என இந்தத் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு பொருளை நாம் பார்க்கும் பொழுது அதன் பரிமாணங்கள், நிறம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கண்ணுக்குத் தெரியக்கூடிய உள்ளீட்டுக்கள் அனைத்தும் நமது கண்கள் வழியே கண் திரைகளில் விழுந்து மின் அதிர்வுகளாக மாறி மூளையின் பல இடங்களுக்குச் செல்கின்றது.

    விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் படி இது மூளையின் கிட்டத்தட்ட முப்பது விழி சார்ந்த இடங்களுக்குச் சென்று பதிவாகி மீண்டும் ஒருங்கிணைந்து முந்திய அறிவுப் பதிவுகளுடன் ஒப்பிடப்பட்டு பொருள் அறியப்பட்டு அதனுடன் இணைந்த உணர்வுக் கலவைகளுடன் நமக்குத் திரும்பி வரும்பொழுது – ‘பார்த்த பொருள் இப்படி இருக்கிறது ‘ என்ற ஒரு கருத்துடன் கிடைக்கின்றது. ஆகவே மூளை நமக்குத் திருப்பித் தருவது பார்த்த பொருளின் ஒரு உருவாக்கமே தவிர அதன் உண்மையான வடிவம் இல்லை. இதுவே பார்ப்பதற்கும் அறிவதற்கும் உள்ள வித்தியாசம் .: என அறிஞர்கள் உரைக்கின்றனர். (Seeing is not knowing) ‘EYES ARE NOT UNIQUE TO US. BUT VISION DOES NOT OCCUR IN THE EYE. IT OCCURS IN THE BRAIN’ என்று கூறுகின்றார் மூளை அறிவியல் வல்லுநர் முனைவர். வீ. எஸ். ராமச்சந்திரன்.

    “The brain creates symbolic descriptions. It does not re-create the original image, but represents the various features and aspects of the image in totally new terms – not with squiggles of ink, of course, but in its own alphabet of nerve impulses. These symbolic encodings are created partly in your retina itself, but mostly in your brain.Once there, they are parceled and transformed and combined in the extensive network of visual brain areas that eventually let you recognize the objects.” (Source: Tell- Tale Brain; Dr. V.S. Ramachandra )

    மூளை பார்க்கப்பட்ட பொருளின் அடையாள வர்ணனைகளை மட்டும் உருவாக்குகின்றது. அது நிஜமான படத்தை தருவதில்லை. அது நிஜத்தின் பலவிதப்பட்ட பரிமாணங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி தன்னுடைய நரம்புத் தூண்டுதல்கள் வழியாக ஒரு புதிய மொழியாக அறிமுகப் படுத்துகிறது. இந்த அடையாள வர்ணனைகள் ஒரு பகுதி விழித்திரையிலேயே உருவாகிவிடுகிறது. ஆனால் மிகுதியான பகுதிகள் மூளையில் தான் உருவாகின்றது. அங்கே அந்த நரம்புத் தூண்டுதல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு பரவலான கருத்தாக உருவாக்கப்பட்டு விழியின் வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு நமக்கு அறிந்துகொள்ள பொருளாக தரப்படுகின்றது.

    இத்தனை வேலைகள் நடப்பதற்கு மூளை எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு இமையசைவின் நேரத்தில் பல்லாயிரம் பகுதிகளில் ஒரு சிறிய விழுக்காடு ஆகும். என்னே இயற்கையின் விந்தை.. !

    இத்தனையும் நடக்கும் பொழுது மூளையில் உள்ள அமிக்டாலா AMYGDALE என்ற பகுதி அந்தப்பொருளுக்கான உணர்வுகளையும் நமக்கு இணைத்தே வழங்குகின்றது. ஆகவேதான் ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அதனுடன் இணைந்த வியப்பு, அருவருப்பு, கோபம், துயரம், ஆச்சரியம் போன்ற பலவித உணர்வுகளும் நமக்கு உள்ளிருந்து கிடைக்கின்றன. ஆகவே கற்றல் ஒரு உணர்வு பூர்வமான செயல்.

    பார்த்த பொருளுக்கான கருத்தை மூளை எவ்வாறு உருவாக்குகின்றது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்

    (தொடரும்)

    Share
  • நடக்காத கதை!

    -தமிழ்த்தேனீ

    ஏங்க  நீங்க எழுதற  எல்லாக் கதையையும் படிச்சுப் பாத்தேன்;  அதென்ன  நம்மைச் சுத்தி  நடக்கறதையே   கதையா எழுதறீங்க.  நமக்குத் தெரிஞ்சவங்க யாரு படிச்சாலும்  அது யாரோட  கதைன்னு  உடனே புரிஞ்சுக்குவாங்க  என்றாள் குற்றம் சாட்டும் பாவனையில் ஆனந்தவல்லி.

    திடுக்கிட்டு  நிமிர்ந்த  எழுத்தாளர் தமிழ்த்தேனீ.  சுதாரித்துக் கொண்டு  சாரதா  நம்மைச் சுத்தி நடக்கறதைத்தான் கிரகிச்சுக் கதை எழுதணும்.  எழுத முடியும். இது வரைக்கும்   நடக்கறதை வெச்சிக் கதை எழுதறவங்கதான் அதிகம். ஏன் தெரியுமா? நடக்காததை கற்பனை செஞ்சு கதை  எழுதினா படிக்கறவங்களுக்கு  அது புரியாது.

    அதுனாலே  படிக்கறவங்களுக்கு  புரிஞ்சாதான் அது ஒரு கதையோட வெற்றி.

    அது மட்டுமில்லே நம்மைச் சுத்தி நடக்கறதை கூர்ந்து கவனிச்சு  அதிலே இருக்கற நுணுக்கத்தை மட்டும் மையமா வெச்சிண்டு  அதையே கருவாக்கி கதை எழுதினாத்தான்  அது கதை. நீ நெனைக்கறா மாதிரி  உனக்கு நான் எழுதற கதை புரியறா மாதிரி  மத்தவங்களுக்கு  புரியாது.  அதாவது  அவங்களுக்கு  நம்மைச் சுத்தி நடக்கறதுதெரியாது . அதுனாலே அவங்களுக்கு நான் எழுதற கதைகள் வேற மாதிரி புரியும்; அதுனாலே பிடிக்கும் என்றேன் நான்.

    ஆனாலும் ஒரு  கதையைப் படிக்கற வாசகனுக்கு அந்த அனுபவம் எப்பிடி இருக்கணும் தெரியுமோ?

    நல்ல  தலைவாழையிலையிலே மனசுக்கும் நாக்குக்கும் பிடிச்சா மாதிரி ரசிச்சு சாப்ட்டுட்டு  பத்தும்பத்தாக் குறைக்கு   திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழத்தை வெச்சுண்டு  மெல்லமா  அதன் தோலை உரிச்சு  கொஞ்சம் கொஞ்சமா நுனிப்பல்லாலே  கடிச்சு கடிச்சு சாப்பிடும்போது அதோட இனிப்பு  நாக்கு பூராவும்  அப்பிடியே மையாக் கரைஞ்சு  தொண்டையிலே இதமா இறங்கி  பாதாதி கேசம் வரைக்கும்  படர்ந்து  ருசிக்கறதே…அது மாதிரி சுகானுபவமா இருக்கணும்.

    நல்ல பங்கனபள்ளி மாம்பழத்தை பல்லாலேயே தோலுரிச்சுக் கடிச்சு அதோட சாறு முழங்கை வரைக்கும்  போயிடப்போறதேன்னு பயந்து கீழே வழிய விடாமே புறங்கையிலேயே  நக்கி மறுபடியும்  பாளம் பாளமா அதோட  சதைப்பற்றை கடிச்சுக் கடிச்சு மொத்தப் பழத்தையும் சாப்பிட்ட பிறகும்   மாங்கொட்டையிலே ஒட்டிண்டு இருக்கற  இனிப்பான சதையை  பல்லாலே வரட் வரட்டுன்னு வழிச்சு பல்லுலே நார் மாட்டிண்டாலும் பரவாயில்லேன்னு வழிச்சு  சாப்படணும்கிறா மாதிரி  டேஸ்ட்டா இருக்கணும்.

    இன்னும் ஒரு மாம்பழம் வேணுமான்னு  யாராவது கேட்டா  இல்லே  போதும்னு சொல்ல  மனசு வரலேன்னாக் கூடத்  தப்பா எடுத்தக் போறாங்களேன்னு… பறக்காவிட்டின்னு  நெனைச்சுப்பாங்களேன்னு பயந்து  ரொம்ப நல்லா இருந்துது போதும்  எல்லாம் ஒரு  லிமிட்டுதான்  அதான் சாப்ட்டேனே ன்னு அசடு வழியறா மாதிரி இருக்கணும்.

    நல்ல  சாப்பாட்டு ராமன்… வேற உதாரணமே கிடைக்காதா  உங்களுக்கு  என்றாள்  ஆனந்தவல்லி சிரித்துக் கொண்டே.

    என்ன செய்யறதும்மா? ருசின்னாலே  சாப்படுதானே. நல்ல  கத்திரி வெய்யில்லே  வெப்பம் தாங்காமா  வேர்த்து வடிஞ்சு   குழாயைத் தொறந்து விட்டுக்  காலைநீட்டினா  அதிலேயும் கொதிச்சுப்போன டேன்க்  தண்ணி சுளீர்ன்னு  பட்டா  எரிச்சலா இருக்கும் . ஆனால் தண்ணியோட  வேகத்திலே  மேலாக இருக்கற கொதிச்சுப்போன தண்ணி சர்ருன்னு கீழே போயிட்டு  திடீர்னு  சில்லுன்னு  தண்ணி  வந்து காலிலே படும் போது  ஏற்படுமே  ஒரு  உணர்ச்சி அப்பிடி இருந்தாக் கூட ரசிக்கலாம்.

    ஏரோப்ளேன் டேக்ஆஃப்  ஆகும்போது  அடி வயித்திலேருந்து ஜிவ்வுன்னு கிளம்பி உச்சந்தல வரைக்கும் ஏறுதே  பாம்பு மாதிரி ஒரு பய உணர்ச்சி அதுமாதிரியும்  மூச்சு முட்டிக்  காதெல்லாம் அடைச்சுண்டு  செவிடாயிட்டா மாதிரி பூஜ்ஜியமா ஆயிடறோமே  அது மாதிரியும் இருக்கலாம். ஆன ஒண்ணு… வெளிநாடே பாக்காதவங்க  கிட்டப்  போயி   பர்கர், பிஸ்ஸாவைப் பத்தி வர்ணிச்சா  அதுக்கு தொட்டுக்க  ஒரு சாஸ் குடுப்பாங்க பாருங்கன்னு  சொன்னா அவங்களுக்கு புரியுமா?  அதுக்காகத்தான்  மதுர மல்லி மாதிரி  வெள்ளை வெளேர்ன்னு இட்லி,   ஜாதி மல்லியோட  வாசனை மாதிரி   நறுமணமா  குருமா   அப்பிடீன்னெல்லாம்  வர்ணிச்சா  புரியும்.

    அதுனாலேதான்  நம்மைச் சுற்றி நடக்கிறதையெல்லாம் கதையா எழுதறேன்.

    இங்கே  எல்லாரும் எதை  அனுபவிக்கறாங்களோ  அதை எழுதறேன்.

    இப்பிடியெல்லாம்  சமாதானம் சொல்லிண்டாலும்  ஒரு  வேளை  சாரதா சொல்றது கூடச்  சரியா  இருக்கும் போல இருக்கே கொஞ்சம் விதயாசமா  எழுதவும் கத்துக்கணும்.

    சரி ஒரு கதையை இதுவரை நடக்காத  சம்பவத்தை மையமாவெச்சு எழுத முடியுமா  வாசகர்களுக்கு  புரியறா மாதிரி  என்பது ஒரு  சவாலாகவே  மனசுக்குள்ளே  உறுத்திகிட்டே இருக்கு. அப்பிடி ஒரு கதையை  எழுதணும்ன்னு  ஒரு தீர்மானம் உருவாச்சு மனசுக்குள்ளே. சரி  ஆனந்தவல்லி  நீதான்  சொல்லேன்…  இது வரைக்கும்   நடக்காத ஒண்னை சொல்லேன். அதைக் கதையா  எழுதறேன்  என்றேன்.

    அய்யய்யோ  எனக்கு  அதெல்லாம் தெரியாது அப்பிடி எழுதினா  நல்லா இருக்கும்னு சொன்னேன்.  எனக்கு உள்ளே வேலையிருக்குன்னு சொல்லிட்டு எழுந்துபோனாள் அவள்.

    உண்மையிலேயே  இது கதாசிரியனுக்கு  ஒரு அருமையான  சவால்தான். நடக்காத  கதையை  எப்பிடி எழுதறது ,எதை எழுதினாலும் உலகத்தோட ஏதோ ஒரு  மூலையிலே  அது நடந்திருக்கு. கல்  நடந்தா   மரம் நடந்தா  குளம் நடந்தா  அதுதான்  சம்பவம். கிணறு  நடந்தா  அதுவும் சம்பவம்    இதெல்லாமே  நடக்காத  சம்பவம்  நடக்காத  கதைக்கு  ஒரு உதாரணம் வேணும்னா  நடந்த  தேர்தலில்  நேர்மையான அரசியல்வாதி ஒருவர்  வெற்றி பெற்றார்  இந்த ஒரு வரியே  நடக்காத  கதைக்கு  உதாரணம்  அப்பிடீன்னு  சொன்னா  அது நடக்காத  கதைன்னு ஒத்துக்குவாங்க.

    நாம் யார்கிட்ட  பேசினாலும்  பேசும்போது இல்லாத ஒன்றைப் பற்றிக் கதைவிட்டால்தான் அதை ரசனையோடு கேக்கறாங்க  இல்லேன்னா  காதிலேயே  வாங்கமாட்டாங்க . ஆக, கதையோ, கவிதையோ அல்லது கற்பனையோ எந்த ஒரு எழுத்துக்கும் விறுவிறுப்பும், ஆரவாரமும் அவசியம் தேவை. நடந்த அல்லது   நடக்காத கற்பனையான ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அதைத் திரித்து, அவரவர் சிந்தனைக்கு ஏற்றபடி அதை லாவகமாகக் கதையாக்கினாத்தான்  படிப்பாங்க.

    நாம் ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டு, அதை மற்றவரிடம் சொல்லும்போது அது நடந்தமாதிரிதான் நாம் சொல்லுகிறோம். அதை நம்மகிட்ட கேட்டவர், வேற ஒருத்தர்கிட்ட  சொல்லும்போது  அதையே வேறு மாதிரி சொல்கிறார். இப்பிடிப் பல காதுக்கு இந்த சம்பவம் போகும்போது  அந்த உண்மையான சம்பவமே  கற்பனை கலந்து  மொத்தமாவே  மாறிப் போயிடுது.

    ஆக இது வரைக்கும், நடக்காத  ஒரு சம்பவத்தை அல்லது நிகழ்ச்சியை நாம் கற்பனை செய்ய முடியும் என்பது உண்மையானாலும், அது நம்மாலே  முடியுமா  என்று சந்தேகமே  வந்தது  அவருக்கு இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கை. சூரியனும் சந்திரனும் பகல் இரவாக மாறி மாறித் தோன்றுகின்றன. யுகம் தோன்றிய காலத்திலிருந்து, இது நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று. ஏன்னா!.. இந்த நிகழ்ச்சியையே இப்படி கற்பனை செய்தால் எப்படி இருக்கும்.  இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு தொடர்ந்து சூரியன் உதிக்கும், அதன்பிறகு ஒரு வாரத்துக்கு சந்திரன் ஆட்சி செய்யும். அதாவது ஒருவாரம் இருட்டில இருப்போம், நிச்சயமா கரெண்ட் இருக்காதுன்னு நினைச்சுக்குவோம், அப்புறமா வெளிச்சம் ஒரு வாரந்தான் இருக்கும். ஏன்னா, இது நடக்காத சம்பவமாச்சே!

    அட  இது நல்லா இருக்கே! அவருக்கு  அவரோட  அம்மா  எழுத்தாளர் கமலம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.  நம்மோட  மூளையிலேருந்து  வெளிப்படற  கதிர்கள் இந்தப் ப்ரபஞ்சத்திலே  ஏற்கெனவே நிறைஞ்சு அழியாம சுத்திகிட்டே இருக்கற கதிர்களோட எப்பிடியோ ஒரு  தொடர்பு ஏற்படும் போதுதான்  நமக்கும்  கற்பனை  வரும். எதுவுமே இல்லாமே  நமக்கும் கற்பனை வராது;  ஏன்னா  பஞ்ச பூதங்களோட  தொடர்பு கொண்டதுதானே  நம்மோட  மனசும் புத்தியும்  அப்பிடீன்னு.

    மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டு  ஏதேதோ பேசிக்கொண்டே இருந்த ஆனந்தவல்லி,  உங்க கதையெல்லாம்  நல்லாத்தா இருக்கு.  நான் நல்லா இல்லேன்னு சொல்லலலே… அதுனாலே  நீங்க ஏதும் வருத்தப்படாதீங்க  என்று சமாதானப்படுத்தினாள்.

    இல்லேம்மா… நான் அதுக்கெல்லாம் வருத்தப்படலே.  ஜீரணிக்க  முடியாத  கேள்விதான்! ஆனாலும் உண்மையான  கேள்வி  நீ கேட்டது.  அதைத்தான்  யோசிச்சிண்டு இருக்கேன்;  நீ ஒண்ணும் தப்பாச் சொல்லலே.

    உண்மையாச் சொல்லணும்னா  ஒரு கதாசிரியனோட  ஈகோவைத்  தொட்டு  அவனோட திறமைகளை வெளிக்கொண்டு வர கேள்வி இது.  சுய பச்சாதாபத்தினாலேயோ   வீண் கர்வத்தினாலேயோ  நாம்  எப்பேர்ப்பட்ட எழுத்தாளன்  நமக்கு போயி ஒருத்தர்  உபதேசம் செய்யறதா  என்றெல்லாம் எதிர்மறையா  சிந்திக்காம  நேர்மையாச் சிந்திச்சு  எழுதினா  கிடைக்கப் போற நல்ல பேரு  எனக்குதானே.   அதுக்காகத்தானே   நீ சொல்றே.  அதைப் புரிஞ்சுண்டுதான்  யோசிக்கறேன்  என்றார்.

    உங்களுக்கு  ஒரு விஷயம் தெரியுமா?  நாம லாஸ்வேகஸ்லே பாத்தோமே  சரஸ்வதி… அவங்ககூட உங்க நாடகம் சினிமால்லாம் பாத்திருக்கேன்னு  சொன்னாங்களே. அவங்க  ஐம்பது வயசிலே கர்ப்பமா இருக்காங்களாம். இனிமே கருவைக் கலைச்சா அவங்க உயிருக்கே ஆபத்துன்னு  டாக்டருங்க சொல்லிட்டாங்களாம். அதனாலே என்ன?  ஏதோ  ஆனது ஆச்சுன்னு   அடுத்து என்ன செய்யணுமோ அதைச் செய்யறதை விட்டுட்டு அவங்க மருமகப் பொண்ணு  அவமானம் அவமானம்னு  பிடுங்கி எடுக்கறாளாம்  என்றாள்.

    இது  நடந்த  கதை.  ஆனால் இதை மையமாக வைத்து இதையே நடக்காத  கதையாக மாற்றி அதாவது மாற்றுக் கோணத்தில் சிந்தித்து  எழுதினார்.  அது  “நெருப்பின் நிழல்“  என்னும்  கதை.  ஆனால், இது என் கற்பனையின் ப்ரகாரம்  நடக்காதுதான்,  நடக்காத  கதைதான். ஆமாம்  ஒரு தாயின்  மனம்படும்  வேதனை என்னும்  அடுப்பிலே எரிந்து கொண்டிருக்கும் அணையாத நெருப்பு  அதன் தாக்கம் அதனால் எழுந்த ஏக்கம்  அதன் விளைவாக  எழுந்த ஆக்கம்!

    சரி  என் பொண்டாட்டி ஒப்புக்கறாளான்னு பாப்போம். இவளே ஒத்துக்கலேன்னா…  எப்பிடி  ரசிகர்கள் ஒத்துக்குவாங்க? தயக்கத்தோடு  நீட்டினார்  படிச்சுப் பாரு என்றார்.  ஆனந்தவல்லி  படிக்க  ஆரம்பித்தாள்… 

    நெருப்பின்நிழல்

    மனைவியை  ப்ரசவத்துக்கு  உள்ளே அனுமதித்துவிட்டு வாழ்க்கைத் துணையா  குழந்தையா என்னும் பதைப்புடன் வெளியே நின்று தவிப்பதை விட   எவ்வளவு கொடுமையான வலியாக இருந்தாலும் ப்ரசவமே மேல், உள்ளே  வலியின் கொடுமை தாங்காமல் கதறிக் கொண்டிருந்தாள்  கற்பகம். அந்தரத்து ஊஞ்சல்  எப்போது அறுந்து விழும் எங்கே தள்ளும் என்றே தெரியாத  அவஸ்தை  போன்ற நெருப்பு அவள் கதறல். தவித்துக்கொண்டிருந்தார் சதாசிவம்.

    சற்றே தள்ளி  நின்று கொண்டு மருமகள்  ராகினி பேரன் பேத்தியைக் கொஞ்சவேண்டிய இந்த ஐம்பது வயசிலே இதெல்லாம் தேவையா?  ஊர்லே நாலு பேரு அசிங்கமாப் பேசறாங்க.  வெளியிலே தலைகாட்ட முடியலே  என்று சலித்துக் கொண்டாள். மகன் சங்கரும், பெண்ணும் மாப்பிள்ளையும்  மௌனமாக நின்றிருந்தனர்.

    நமக்குத்தானே அவமானமா இருக்கு  என்ற  மருமகள் ராகினியின் சொற்கள் தணலின் தகிப்பாய்  மனதை சுட்டது சதாசிவத்துக்கு.

    சார்… குழந்தை சரியா திரும்பாம மாட்டிகிட்டு இருக்கு. சிசேரியன்தான் வேற வழியில்லே. அவங்க வயசு எதிர்ப்புத் திறன் இதெல்லாம் ஒத்துவருமான்னு தெரியலே. இதுலே கையெழுத்து போடுங்க. எங்க முழு முயற்சியை நாங்க செய்யறோம் என்றாள் அவசரமாக டாக்டர் தாரிணி.

    எப்பிடியாவது  என் பொண்டாட்டியையும்  குழந்தையையும் காப்பாத்திக்குடு  கர்ப்பரக்‌ஷகாம்பிகா  என்று மனமுருகி வேண்டிக்கொண்டு பதைப்புடன் காத்திருந்தார் சதாசிவம். சற்று நேரத்தில் உள்ளேயிருந்து வந்த டாக்டர்   தாரிணி தாயும் சேயும் நலம். நார்மல் டெலிவரி. அவங்க வயசுக்கும் இருந்த நிலமைக்கும்  இது ஏதோ தெய்வ சக்திதான்.  நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கு… வாழ்த்துக்கள் என்று கையைக் குலுக்கிவிட்டுப் புன்னகைத்தாள்.

    சதாசிவத்துக்கு அந்தப் புன்னகை கர்பரக்‌ஷகாம்பிகையின் புன்னகையை நினைவூட்டிற்று. நீங்கள்ளாம்  வீட்டுக்கு போயிடுங்க. அவளுக்குத் துணையா நானே இருக்கேன் என்று  இருந்த சதாசிவம் கையால் குழந்தையை லாவகமாக  எடுத்து உச்சி மோந்து உடல் சிலிர்ப்புடன் கட்டிலில் படுத்திருந்த கற்பகத்தின் பக்கத்தில்  விட்டுவிட்டுச் சொல்ல முடியாத   உணர்வோடு ஆதரவாக கற்பகத்தின் கையைப் பிடித்துக் கொண்டார்.

    என்னோட  எல்லாப் பிடிவாதத்துக்கும் இது வரைக்கும் நீங்க  ஏன்னு ஒரு வார்த்தை கூடக் கேக்கலை.  எல்லா உயிரும் பொறக்கறதும் போறதும்  சகஜம்தான் அதுக்கு நடுவிலே இருக்கற வாழ்க்கையில் மனசுதாங்க முக்கியம்.

    நாம ரெண்டு பெத்தோம் வளர்த்தோம். ஆனா அவங்களுக்கு ஏதோ தானே பொறந்து தானே வளர்ந்தா மாதிரி ஒரு உணர்வு வந்திருச்சுங்க.  ஒரு வார்த்தை  அம்மான்னு கூப்படறதில்லே.  அதுனாலேதான்  அந்தத் தாய்மை உணர்வை, மறுபடியும் அனுபவிக்கணும்; அம்மாங்கற பாசமான மந்திரத்தை மறுபடியும் கேக்கணும்னு  ஒரு எண்ணம்.

    இந்தக் குழந்தை பெரியவனா  ஆகற வரைக்குமாவது என்னை அம்மான்னு கூப்பிடுமே. மறுபடியும்  பாசமான  அம்மாங்கற குரல் காதிலே விழுமே அதான் இந்தப் பிடிவாதம் என்றாள் புன்னகைத்தபடி.

    சதாசிவம்  எனக்கு புரியுதும்மா    நெருப்புக்கு நிழல் விழாதுன்னு சொல்வாங்க அதான் என்னோட பயம் என்றார்.

    இது  நீறுபூத்த  நெருப்புங்க. நெருப்புக்கு  நிழல் விழாதுதான்  ஆனா இது நெருப்போட நிழல் இல்லே நெருப்போட நிஜம்  என்றாள் கற்பகம்.

                                                      சுபம் 

    கதையைப் படித்துவிட்டு நிமிர்ந்தாள் ஆனந்தவல்லி. ஒரு மர்மக் கதையைப் படிக்கும்போது  முடிவை நோக்கி  நகரும்போது  இதயம் லப்டப் என்று துடிக்குமே  அந்த  நிலையில்  அவளைப் பார்த்தார்  கனக்கும்  இதயத்துடன்.

    எனக்கு இப்பதாங்க புரியுது  நடக்காத  கதையை நம்மாலே எழுத முடியாது   அப்பிடீன்னு. ஆனா இந்தக் கதை அருமையா இருக்கு என்றாள். அட!  பொண்டாட்டி பாராட்றாளே… இதுவே  உலகத்திலே  நடக்காத  கதையாச்சேன்னு ஒரு திருப்தி  வந்தது அவருக்கு.

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(138)

    செண்பக ஜெகதீசன்

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
    தகநக நட்பது நட்பு.    (திருக்குறள் -786: நட்பு) 

    புதுக் கவிதையில்…

    உள்ளத்தில் கள்ளம்வைத்து,
    உதட்டில் புன்னகை மலரக்
    கொள்வதல்ல
    உண்மை நட்பு…
    அன்புகொண்ட உளத்துடன்
    அகம் மகிழக் கொள்வதுதான்
    அசல் நட்பு…! 

    குறும்பாவில்…

    மலர்ந்த முகம்மட்டும் காட்டி
    வருவதல்ல உண்மை நட்பு,
    அன்பொடு அகமகிழ வருவதுதான் அது…! 

    மரபுக் கவிதையில்…

    உள்ளத் துள்ளதை மறைத்தேதான்
         –உதட்டில் காட்டிடும் புன்னகையால்
    கொள்ளும் உறவு நட்பல்ல!
       –காட்டும் வேடம் சிறப்பல்ல,
    பிள்ளை போலவே அன்புகொண்டு
      –பெரிதும் உள்ளம் உவகையுற
    கள்ள மில்லா மனத்துடனே
    –காட்டும் உண்மை நட்பதுவே…! 

    லிமரைக்கூ…

    நட்பல்ல நகைமுகத்தால் நடிப்பது,
    உள்ளே பகையின்றிக் கொள்ளும் நட்புதான்
    உண்மை இதயத் துடிப்பது…! 

    கிராமிய பாணியில்…

    நட்புயில்ல நட்புயில்ல
    நெஞ்சத்தில வஞ்சகமா
    நல்லாச்சிரிச்சி பழகுறது
    நட்புயில்ல நல்ல நட்புயில்ல… 

    கொஞ்சங்கூடக் கள்ளங்கபடமில்லாம
    நெஞ்சிநெறஞ்ச அன்போட
    நெறஞ்சமனசாப் பழகுற
    நட்புதானே நல்லநட்பு… 

    நட்பாயிரு நட்பாயிரு
    நெறஞ்ச அன்போட நட்பாயிரு!

     

     

    Share
  • தண்ணீரும் இரத்தமும்

    ரா.பார்த்தசாரதி

     

    உலகில் மூன்று பங்கு தண்ணீரால் நிரம்பியதே

    ஏனோ மாநிலத்திற்கு, மாநிலம் கலகம் ஏற்பட்டதே ,

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய்யானதே,

    தண்ணீரால் மாநிலத்தில் ரத்தவெள்ளம் ஆனதே !

     

    சுதந்திரம் அடைந்தது முதல் நதிநீர் இணைப்பு

    இன்னும் இவை காகித திட்டமே என மக்களின் நினைப்பு,

    நதிநீர் மாநிலத்தின் வேளாண்மைக்கு முக்கியத்துவம் ஆனதே

    விவசாயிகளின் கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டமும் நியாயமானதே !

     

    வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெடுவதில்லை

    இது மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் பொருந்தாமலில்லை

    நீதி கேட்டும், சமரசம் செய்தாலும், பிரச்சனை தீர்ந்தபாடில்லை

    வன்முறையால் எதையும் தீர்க்க முடியாது என தெரியாமலில்லை !

     

    நடுவர் சொல்லுக்கும், நீதிபதி தீர்ப்புக்கும் மதிப்பு அளிக்கவேண்டும்,

    நீதியை நிராகரித்தால் எந்த மாநிலமும் துன்பப்படவேண்டும்

    இருவர் கூடி சமரசத்தால்  ஓர்   சமாதானம் ஏற்படவேண்டும்

    இதனால் இருவர்க்கும் பயன் உள்ளதாக இருக்கவேண்டும் !

     

    மக்களின் பொதுநலம் கருதியே நதிநீர் தீட்டப்படவேண்டும்

    ஜாதி, அரசியல் போன்றவை கலவாமல் இருக்கவேண்டும்

    மாநிலங்களிடையே இனவெறி நீங்கி, ஒற்றுமை நிலவ வேண்டும்

    ஜாதி, இனம் இவற்றிற்கு  ஊறு விளையாமல் இருக்கவேண்டும் !

     

    நதிநீர் பங்கீடு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்கவேண்டும்

    மாநிலங்களின் பிரச்சனைகளை ஒன்றுகூடி  தீர்மானிக்கவேண்டும்

    நீரின்றி அமையாது உலகம் என்பது ஆன்றோர் மொழியாகும்

    நீரே மக்களின் தேவைக்கும், உணவிற்கும் இன்றியமையாததாகும் !

     

    Share
  •  எங்கே நிம்மதி ?

     

    ரா.   பார்த்தசாரதி 

    தனிமையையும், நிம்மதியையும் தேடாத மனிதன் இல்லை?

    எங்கே என்று பலரிடம் கேட்டும் சரியான பதில் இல்லை,

    ஒவ்வொருவரும்  வாழ்க்கையில் நினைக்காத நாள் இல்லை

    துறவிகள் காட்டிற்கு சென்றது தவத்திற்கா,தனிமைக்கா என்றறியவில்லை!

     

    நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்குமென மனிதன் எண்ணினான் ,

    அங்கே ஓர் இடம் தனக்கு வேண்டும்  என்றான் ,

    இருந்த இடத்தினிலே நிம்மதியும்,தனிமையும் கிடைக்குமா?

    இவை இரண்டும் மனம் மௌனமாய் இருந்தால் ஈடேறுமா ?

     

    நிம்மதியும், தனிமையும் அமைதியான இடத்தில்தான் தோன்றுமா ?

    இதனை நாளும் தேடித்தேடி  அலைவது வீண் என்று தோன்றுமா ?

    யோகிகளையும்  முனிவர்களையும்,கேட்டால் பதில் கிடைக்குமா ?

    அவர்களும்  அதை தேடித்தான் செல்கின்றனர் என கூறமுடியுமா ?

     

    தனிமையிலே இனிமை இல்லை,நடு இரவில் பகலவன் தெரிவதில்லை ,

    நிம்மதி என்பது    நம்   மனதிற்கு உட்பட்டதே என்று அறிவதில்லை ,

    தனிமையும், நிம்மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ,

    இவ்வுலகில் எதுவுமே தனிமையில்லை,அமைதிகொண்ட மனமே நிம்மதி!

     

     

    Share
  • தன்வந்திரி பீடத்தில் காவிரி நீர் வேண்டி கார்த்தவீரார்ஜுனர் ஹோமம்

    adp

    தன்வந்திரி பீடத்தில் காவிரி நீர் வேண்டி கார்த்தவீரார்ஜுனர் ஹோமம் இன்று 18.09.2016 நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய, பீடத்தில், ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் இன்று 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11. மணியளவில் காவிரி நீர் பிரச்சினை சுமுகமாக முடிந்து, தமிழகத்துக்கு நியாயமான முறையில் நீர் வரத்து கிடைக்கவும், கர்னாடக வாழ் தமிழ் மக்கள் இழந்த நிம்மதியை மீண்டும் பெறவும் தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு சிறப்பு ஹோமமும், சிறப்பு ப்ரார்தனையும் நடைபெற்றது. இதில் தன்வந்திரி குடும்பத்தினர், சேவார்திகள் மற்றும், பொது மக்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.

    இதனை தொடர்ந்து 3 வது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் நடை பெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரியில் இருந்தும் ஆண்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தித்துக் கொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • ஆரம்பிக்கிறது சர்வதேச புத்தகக் கண்காட்சி. செல்ல நீங்கள் தயாரா?

    எம். ரிஷான் ஷெரீப் 

                “A reader lives a thousand lives before he dies, said Jojen. The man who never reads lives only one.”

    ― George R.R. Martin, A Dance with Dragons, Chapter 34

    5b8b4524

         இலங்கையின் இலக்கிய மாதமான செப்டம்பரின் ‘சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’ 16.09.2016 முதல் கொழும்பில், BMICH (Bandaranaike Memorial International Conference Hall – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்) இல் ஆரம்பமாகவிருக்கிறது. இக் கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடரவிருக்கிறது.

         இத் தினங்களில் தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதோடு, கண்காட்சியின் இறுதி நாளான 25 ஆம் திகதி, இரவு 12 மணி வரைக்கும் கடைகள் திறந்திருக்கும். இம் முறை 410 புத்தகக் காட்சியறைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் வாசகர்களுக்காக புத்தகங்களை வழங்க தயாராக உள்ளதோடு, அவற்றுள் 60 விற்பனை நிலையங்கள் வெளிநாட்டு பதிப்பகங்களுக்கானவை. அனுமதிக் கட்டணம் ஒருவருக்கு 20/= மாத்திரமே. அத்தோடு இங்கு விற்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 20% கழிவு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

         இலங்கையில் வருடம்தோறும் நடைபெறும் மிகப் பெரிய அளவிலான புத்தகக் கண்காட்சி இதுவாகும். ஆகவே தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இக் கண்காட்சியில் ஒன்று கூடுவர். எங்கும் சன நெரிசலும், புத்தகங்களுமே நிறைந்திருக்கும் இக் கண்காட்சியில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள சில வழிமுறைகளை அனுபவ ரீதியில் குறிப்பிட விரும்புகிறேன்.

    • நீங்கள் புத்தகக் கண்காட்சிக்கு செல்லத் தீர்மானித்ததன் பிறகு, வாங்க விரும்பும் புத்தகங்கள், நூலாசிரியர்கள், அவற்றின் பதிப்பகங்கள் குறித்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள். இதனால் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்ததன் பிறகு, வாங்க முடியாமல் போன அத்தியாவசியமான புத்தகங்கள் குறித்து வருந்த வேண்டி வராது. சன நெரிசலில் உங்கள் பட்டியலிலுள்ள புத்தகங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள உங்களால் முடியாவிட்டால் காட்சியறை உதவியாளரை தயங்காது நாடுங்கள். அவர் நிச்சயம் தேடித் தருவார் அல்லது அப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய காட்சியரங்குகளுக்குச் செல்ல உங்களுக்கு வழி காட்டுவார்.
    • புத்தகக் கண்காட்சியில் செலவழிக்கப் போகும் பணத்தின் அளவை ஏற்கெனவே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. புத்தகங்களை வாங்கும் ஆசையில், கையிலிருக்கும் கடைசித் தொகையையும் புத்தகங்களுக்காகச் செலவழித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பி வர வழிச் செலவுக்குக் கூடக் காசில்லாது  நடந்தே பயணிக்கும்  பலரையும் அங்கு பார்க்கலாம். அந்த நிலைக்கு நீங்களும் ஆளாகாதிருக்க, உங்களால் அங்கு புத்தகங்களுக்காக செலவழிக்க முடிந்த தொகை, உணவு, குடிபானங்கள் மற்றும் பிரயாணச் செலவுகளுக்காக ஒரு தொகை எனத் தனியாகப்  பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடித்ததன் பிறகு, உங்கள் வாழ்க்கை மீதமிருக்கப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வங்கிப் புத்தக மீதியை புத்தகங்களுக்காக மட்டுமே முழுவதுமாக செலவழித்து விடாதீர்கள்.
    • இந்தத் தடவை இக் கண்காட்சி தினங்களில், பௌர்ணமி தின விடுமுறையோடு சேர்த்து ஐந்து விடுமுறை தினங்களும் (16,17,18,24,25) , ஐந்து வேலை நாட்களும் (19,20,21,22,23) அடங்கியிருக்கின்றன.  கண்காட்சியின் ஆரம்ப தினத்திலும், வேலை நாட்களின் காலை நேரங்களிலும் கூட்டம் கணிசமான அளவில் குறைந்து காணப்படும். அதற்கு எதிர்மாறாக விடுமுறை நாட்களிலும், கண்காட்சியின் இறுதித் தினத்திலும் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படும். கடந்த புத்தகக் கண்காட்சிகளின் போது, கண்காட்சியின் இறுதித் தினத்தில், தமது புத்தகங்களை விற்றுத் தீர்ப்பதற்காக வேண்டி, பதிப்பகங்கள் அவற்றுக்கு பெரிய அளவில்  கழிவினைக் கொடுப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. எனவே நீங்கள் கண்காட்சிக்கு செல்லும் தினத்தை இவற்றைக் கவனத்தில் கொண்டு தீர்மானியுங்கள்.
    • புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி வரச் செல்லும் பயணம் என்பது வெறுமனே கை வீசிக் கொண்டு, காலாற நடந்து வரச் செல்லும் பயணமல்ல. இது மலையேறுவதற்கு ஒத்தது.  அதற்கிணையான ஏற்பாட்டோடு செல்லுங்கள். பாரமற்றதும், உங்களுக்கு நடமாட இலகுவானதுமான ஆடைகளையே அணிந்து செல்லுங்கள். ஆடை கசங்குவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையற்ற ஆடையாக அது இருக்கட்டும். புத்தகக் கண்காட்சியின் சன நெரிசலில், நின்று கொண்டும், அங்குமிங்கும் நுழைந்து நடந்து கொண்டும், சிறிய இடைவெளிகளில் மக்கள் கூட்டத்தில் சிக்குண்டு, வியர்வையில் குளித்து, புத்தகப் பாரங்களையும் சுமந்து கொண்டு மீண்டு வர வேண்டியிருக்கும். எனவே புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது அதற்கேற்ற ஆடைகளையும், பாதணிகளையும் அணிந்து வருவதோடு, வெளியரங்குக் கடைகளையும் பார்வையிட வேண்டியிருப்பதனால் குடை மற்றும் வெயில் கண்ணாடிகளையும் எடுத்துக் கொண்டு வர  மறக்க வேண்டாம்.
    • வாங்கும் புத்தகங்களைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு வர ஒரு பையை (Bag) எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம். காட்சியரங்குக் கடைகளில் சாதாரண பொலிதீன் பைகளிலும், காகித உறைகளிலுமே புத்தகங்களை இட்டுத் தருவார்கள்.  அவற்றை நீண்ட நேரம் கைகளில் சுமந்து செல்லும்போது விரல்களில் வலியெடுக்கும். அத்தோடு உறை கிழிந்தால் வாங்கிய புத்தகங்களெல்லாம் தரையில் விழுந்து வேலையைக் கூடுதலாக்கும். எனவே உங்கள் பட்டியலை வைத்து, வாங்கத் தீர்மானித்துள்ள  புத்தகங்களுக்கு ஏற்ற பையை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லுங்கள். அது முதுகில் சுமந்து செல்லக் கூடிய பையாக இருப்பின் இன்னும் இலகு. புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்க கைகள் எப்போதும் வெறுமனே இருக்கட்டும்.
    • காட்சியரங்கில் உணவு, குடிபானங்கள் விற்பனைக்கு இருக்கின்றன. ஆனால் அவற்றையே முழுவதுமாக நம்பிச் செல்லாதீர்கள். இருக்கும் சன நெரிசலில், அவற்றை வாங்கக் காத்திருப்பதில் நேரம் அதிகளவு விரயமாகும். எனவே தண்ணீர் மற்றும் சிற்றுண்டி வகைகளை கையோடு எடுத்துச் செல்வது நல்லது. அது ஆரோக்கியமானதும் கூட. அத்தோடு நீங்கள் மருந்துகளைப் பாவிப்பவராக இருந்தால் அன்றைய தினத்துக்கு அருந்தத் தேவையான மருந்துகளையும், தற்காலிக நிவாரணி மாத்திரைகளையும் எடுத்துச் செல்வது சிறந்தது.
    •  நீங்கள் பஸ்ஸிலோ, ரயிலிலோ கண்காட்சிக்கு வருபவராக இருப்பின், திரும்பிச் செல்லும்போது புத்தகப் பையை சுமந்து செல்ல ஏற்றதான, சன நெரிசலற்ற பஸ்ஸோ, ரயிலோ புறப்படும் நேரத்தை அறிந்து அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். சொந்த வாகனத்தில் வருபவர்களும் கூட வாகனத் தரிப்பிடத்துக்கு ஏற்ற இடங்களை நுழைவாயிலிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வதன் மூலம், வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் ஹெல்மட் தலைக்கவசங்களை சைக்கிளிலேயே விட்டுச் செல்ல வேண்டாம்.
    • புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது இன்னுமொருவருடன் சேர்ந்தோ, குழுவாகவோ செல்வதோ நல்லது. புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, புத்தகப் பாரங்களை சுமக்க ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளலாம்.  உங்களோடு கூட வரும் நபரும் / நபர்களும் புத்தக வாசிப்பை விரும்புபவர்களாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் சன நெரிசலில், காட்சியரங்குகளில் காத்திருக்க பொறுமையற்று, அங்கிருந்து அகன்று சென்று விட நச்சரித்துக் கொண்டேயிருப்பார்கள். அவ்வாறே கைக் குழந்தைகளை, சிறு பராயத்தினரை காட்சியறைகளினுள்ளே அழைத்துச் செல்ல வேண்டாம். அது உங்களுக்கும், ஏனையவர்களுக்கும் இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.
    • புத்தகக் கண்காட்சிக்காக BMICH க்கு வந்ததுமே அங்குமிங்குமாக அலைந்து திரிய முற்படாதீர்கள். நுழைவாயிலிலேயே காட்சியரங்கின் கடைகள் குறித்த தெளிவான விவரணப் படம் இலவசமாகத் தருவார்கள். அது மிகவும் பெறுமதியானது. அதனை வைத்து நீங்கள் செல்லப் போகும் கடைகளை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். காட்சியரங்கின் கடைகள் ஒரு ஒழுங்கிற்கமையவே அங்கு காணப்படும். கதை, கவிதை, இலக்கியப் பிரதிகளுக்கான காட்சியறைகள் ஒரு புறம், கல்வி சார்ந்த புத்தகங்களுக்கான காட்சியறைகள் ஒரு புறம், பிற நாட்டு பதிப்பகங்களுக்கான காட்சியறைகள் ஒரு புறம், பாடசாலை அப்பியாசப் புத்தகங்களும், பொருட்களும் விற்கும் கடைகள் ஒரு புறம் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். எனவே வழிகாட்டல் படத்தினைப் பார்த்து அதற்கேற்ப நீங்கள் செல்லப் போகும் கடைகளைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்லுங்கள். செல்லும் வழியில் கண்ட விஷேடமான அடையாளங்களை அவ் வழிகாட்டல் படத்திலேயே குறித்துக் கொள்ளுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே கடையைச் சுற்றுவதை விட்டும் உங்களைத் தவிர்க்கச் செய்யும்.
    • நீங்கள் வாங்குவதற்காகப் பட்டியலிட்டிருக்கும் புத்தகங்களை, அப் புத்தகங்களை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் காட்சியரங்குகளிலேயே வாங்குவது அதிகமான கழிவினைப் பெற்றுத் தந்து, உங்கள் செலவினைக் குறைக்கும். பிரசித்தமான, புகழ் பெற்ற பதிப்பகங்களின் காட்சியரங்குகளுக்கு மாத்திரமே செல்லாது, சிறிய காட்சியறைகளுக்கும் சென்று வாருங்கள். மிகப் பெறுமதியான புத்தகங்கள், குறைந்த விலையில் அங்கு கிடைக்கும். அவ்வாறே இங்குள்ள பழைய புத்தகங்களுக்கான காட்சியறைகளில்,  விலை மதிக்க முடியாத, அரிய புத்தகங்களை மிக மிகக் குறைந்த விலையில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
    • பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை பல பதிப்பகங்கள் இலவசமாகவும்,  மிக மிகக் குறைந்த விலையிலும் வழங்குகின்றன. அவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பாடசாலைகளின் ஆசிரியர்களோ, அதிபர்களோ தேவையான ஆவணங்கள், பட்டியல்களோடு சம்பந்தப்பட்ட பதிப்பகங்களை அணுகி அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
    •  மிக முக்கியமாக, நீங்கள் வாங்கும் புத்தகங்கள் குறித்து எப்போதும் ஞாபகத்திலேயே வைத்திருங்கள். ஒரு காட்சியறையிலிருந்து இன்னுமொரு காட்சியறைக்குச் செல்லும்போது, சில வேளைகளில் வாயிற்காவலரிடம் பொதிகளைக் கொடுத்து விட்டுச் செல்ல நேரும். திரும்பி வரும்போது அவற்றைப் பெற்றுக் கொள்ள மறக்காதீர்கள். அத்தோடு சன நெரிசலான இடமென்பதால் உங்கள் பணப் பை, சிறிய கைப்பைகள் கீழே விழுந்தாலும் இலகுவில் தேடிப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே அவற்றைக் குறித்தும் கவனமாக இருங்கள்.
    •  இந்த இறுதிக் குறிப்பை, புத்தகங்களை வாங்க வருவோரும், கண்காட்சியை வெறுமனே பார்க்க வருவோரும் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்கவும். காட்சியரங்கில் மூலைக்கு மூலை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நம்மவர்கள் பொதுவாக அவற்றைக் கவனத்தில் கொள்ளாத காரணத்தால், காட்சியரங்கின் நடைபாதைகள் தோறும் குப்பைகளை மிதித்தபடியே உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. உங்களது வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள், கரண்டிகள், தட்டுக்கள், மீதமான உணவுகள், ஏனைய குப்பைகள் போன்றவற்றை அவற்றுக்கேயுரிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட்டு விடுங்கள்.  அது அனைவருக்கும் உங்களால் ஆற்றப்படும் பேருதவியாக இருக்கும்.

         இப் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கச் செல்லவிருப்போருக்கு இக் குறிப்புக்கள் பயனுள்ளதாக அமையுமென நம்புகிறேன். உங்களுக்காக புத்தகங்களை வாங்கும்போது, வீட்டிலிருக்கும் உங்கள் குழந்தைகளையும், பரீட்சைகள் எழுதிவிட்டு பெறுபேறு வரும்வரையில் காத்திருக்கும் மாணவப் பருவத்தினரையும் நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்காகவும் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களது விஷேட தினங்களில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். சிறு வயதிலிருந்தேயான வாசிப்புப் பழக்கம் அவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுத்து சமூகத்துக்கு பயனுள்ளவர்களாக மாற்றித் தரும். நம் சமூகத்துக்கு அவ்வாறானவர்களே தேவைப்படுகிறார்கள் எப்போதும்.

    எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’’இன்று புரட்டாசி சனிக்கிழமை….ஏழு கொண்டல வாடாவுக்கு ஏற்ற நாள்….!

    கேசவ்வின் கண்ணன் புல்லாங்குழல் ‘’நாத விந்து கலாதீ நமோ நம’’….!

    ”நாதவிந்து கலாதீ நமோ நம மெட்டு”….!
    —————————————————————–
    பொது
    ———
    பெருமாள் திருப் புகழ்….

    kesav
    “ஏழு கொண்டல வாடா நமோ நம
    ஏளும் நஞ்சணை சேடா நமோ நம
    ஏறும் அன்பர்கள் தோழா நமோ நம -குருபீஷ்மர்
    ஆயி ரம்புகழ் நாமா நமோ நாம
    தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய
    ஆயி ரம்தொழு மாலே நமோ நம -கலிலேறி

    வாழும் பண்டரி நாதா நமோ நம
    ஏழை சங்கட தீர்வே நமோ நம
    ஏழ்சு ரங்களின் ராகா நமோ -மஹனீயர்
    ராயர் கும்பிடு மூலா நமோ நம
    வாயு அஞ்சனை சேயார் சிநேகித
    ராம சந்திர ராஜா நமோ நம -கலிதோறும்
    ஊழில் உண்டுமிழ் சேயே நமோ நம
    ஆதி யந்தமி லாதோய் நமோ நம
    கேர ளம்குரு வாயூர் துலாபளு -சமனாகி
    தீர அன்பர்கள் பாடா னபாடது
    ஏறும் அம்பல கோபா லகோகுல
    கேளி சம்பவ லீலா நமோ நம -இரணீயன்

    வீழ கம்பமு லாநா ரகேசரி
    மீன மந்தர மாமே ருகூர்மவ
    ராக அந்தண மூணா னராமமு -ரளியூதி
    பூமி மங்கையின் தாளா தபாரமும்
    பாத கம்புரி கீழோர் கள்மேலுற
    நேமி சங்குவில் வாளோ டுகோலணி -பெருமாளே”…. கிரேசி மோகன்….

    நேமி -சக்கிரம்….முரளியூதி -பூல்லாங்குழல் ஊதி….!

    Share
  • பூர்வப் பூமியின் இடைப் பகுதி [Mantle] மோதலில் புலம் பெயர்ந்து நிலவாக உருண்டிருக்கலாம்

    aj

    [செப்டம்பர் 14, 2016]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    பூமியின் உடற் தட்டிலிருந்து
    சிதைந்தது நிலவு !
    வாரிசுச் சந்ததி யாய்ப் பூமிக்கு
    வந்தது நிலவு !
    பூமித் தாய்முகம் பார்த்துத் தன்
    ஒருமுகம் காட்டி எப்போதும் வலம்
    வருவது நிலவு !
    அண்டையில் ஒரு சமயம் சுற்றிய
    உண்டைக் கோள் “தியா”
    பூமி வயிற்றிலே
    மோதித் திரண்டது நிலவு
    என்ப தொரு கதை !
    பூமியும் நிலவும் ஒரே
    பிண்டத்திலே உண்டான
    உண்டைக் கட்டிகள் என்பது
    உருவான வேறு கதை !
    வையகமும் வான் நிலவும்
    கைகோர்த் தாடும்
    ஈர்ப்பு விசைப் பந்துகள் !
    பூமியின் நீர் ஊற்றுகள் போல்
    நிலவுக் குள்ளும்
    நீர்க்குளம் இருக்கலாம் !
    நீர் வளத்தில் நெளிந்து வாழும்
    உயிர் இம்மிகள் உலவலாம்,
    உறைந்திருக்கலாம் !

    +++++++++++++++++

    நிலவுத்  தனிமங்கள் சிலவற்றின் ஏகமூலக ஆய்வு [Isotopic Study] உயர்ச்சக்தி கணினி மாடலுக்கு [High Energy Model] ஆதரவு அளிக்கிறது. அத்தகவல் 2016 செப்டம்பர் 12 இல் முன்னறிவிப்பாக வலைப்பதிவு [Online Edition] வெளியீட்டில் வந்துள்ளது.  எமது ஆராய்ச்சி முடிவுகள், மோதிய வெப்பத்தால் மெய்யாகப் பூமி ஆவியாகி நிலவு உருவான தென்று  உறுதியாக முதற் சான்றாய்க் காட்டுகின்றன.

    பூதமோதல் நியதியை [Giant Impact Hypothesis] விஞ்ஞானிகள் மாற்றத் தீர்மானித்தனர்.  எங்கள் குறிக்கோள் நிலவு பூமியின் சிதைவிலிருந்து உருவானது, மோதிய அண்டத்தின் பெரும்பகுதி அல்ல என்பதற்கு ஒரு வழி காண்பதே !  பல்வேறு புதிய நிகழ்ச்சி மாடல்கள் உள்ளன.  அவற்றில் இரு மாடல்கள் உறுதி அளிப்பவை.

    குன் வாங் [பூதளவியல் இரசாயனவாதி, ஸெயின்ட் லூயிஸ், வாஷிங்டன் பல்கலைக் கழகம்]

    Fig 5 Relative Size of Earth & Moon

    “நாசாவின் ஈரிணைப்பு விண்ணுளவிகள் [Stereo Space Probes] பூமிக்கு அருகில் பரிதியைச் சுற்றிய பூர்வீக அண்டக் கோள் ஒன்றின் எச்சத் துணுக்குகளைத் (Remnants of an Ancient Planet) தேடி புதிரான ஓர் அரங்கை நோக்கிச் செல்கின்றன !  அந்த உளவிகள் ஏதாவது அதன் துணுக்குகளைக் கண்டால் நிலவு தோன்றிய ஒரு பெரும் புதிர் தீர்க்கப்படும் !  அந்த அண்டக் கோளின் பெயர்தான் “தியா (Theia)” என்பது.  அது ஒரு கற்பனைக் கோள்.  அதனை யாரும் இதுவரை மெய்யாகப் பார்த்ததில்லை.  ஆனால் ஆராய்ச்சியாளர் அக்கோள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும் அது பூமியுடன் மோதி நிலவு உருவானது என்பதாகவும் நம்புகிறார்கள்.”

    மைக்கேல் கெய்ஸர் (NASA Stereo Space Probes Project Scientist) (ஏப்ரல் 14, 2009)

    “பூமியிலிருந்தும் நிலவிலிருந்தும் எடுத்த திரட்டு ஸிலிகேட் (Bulk Silicate) இரண்டும் ஒரே மாதிரி ஏகமூலக் கூட்டுக் கலவை (Isotopic Composition) கொண்டவை.  அண்டக் கோளின் அசுரத் தாக்குதலின் போது பேரளவில் “ஏகமூலச் சமப்பாடு” (Isotopic Equalibration) அவற்றில் நேர்ந்திருக்கிறது என்பது சமீபத்தில் வெளியான அறிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்கிறது.

    இயற்கை விஞ்ஞான வெளியீடு (Nature Science Journal)

    இரசாயனத் தனிம மாதிரிகள் நிலவு பூமியின் இடைப்பகுதிப் [Mantle] புலப்பெயர்ச்சியே என்று காட்டுகின்றன.

    2016 செப்டம்பரில் பூமி-நிலவுப் பாறைத் தனிமம் ஒன்றின் ஏகமூல அளவுகளை ஆராய்ந்ததில் ஓரண்டம் பூர்வப் பூமியை மோதி நிலவு உருவானது என்னும் கோட்பாட்டைத் தவறென நிரூபித்துள்ளது.   பூமி-நிலவுக்கு இடையே பொட்டாசியம் ஏகமூலங்கள் பிரிப்பில் உள்ளச் சிறு, சிறு வேறுபாடுகள் பகுப்பாய்வு நுட்ப முறைகளில் [Analytical Techniques] காண முடியாதபடி இன்றுவரை மறைந்து கிடந்தன.  ஆனால் 2015 இல் இரண்டு பூதளவியல் வல்லுநர் ஏகமூலப் [Isotopes] பகுப்பாய்வு முறைகளை 10 மடங்கு விருத்தி செய்து முன்னைவிடச் சிறப்பான விளைவுகளைப் பெற்றார்.  அவர்கள் யார் ?  ஸெயின்ட் லூயிஸ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் பூதளவியல் இரசாயனவாதி குன் வாங் [Kun Wang, Geochemist] & ஸ்டைன் ஜேகப்சன் [Stein Jacobson], பேராசிரியர், பூதளவியல் இரசாயனம், ஹார்வேர்டு பல்கலைக் கழகம்].

    வாங் & ஜேகப்சன் இருவரும் பூமி, நிலவின் பாறைத் தனிமங்களின் ஏகமூல வேறுபடுகளைத் [Isotopic Differences of Rocky Elements] துல்லியமாக ஆராய்ந்து, நிலவு தோன்றியதாக் கூறும் இரண்டு முதன்மையான கோட்பாடுகளை வேறாகக் காட்டினர்.   ஒரு மாடல் தணிவுச் சக்தி மோதலில் [Low Energy Impact] பூர்வப் பூமியும், நிலவும் சிலிகேட் சூழ்வெளியில் [Silicate Atmosphere] மூடிக் கிடப்பது.  அடுத்த மாடலில் இன்னும் மிகையான சக்தி மோதலில், மோதும் அண்டமும், பெரும்பானமை பூர்வப் பூமியும் ஆவியாகித், தீவிர திரவியல் நிலையில் [Super Fluid State] நிலவு திரண்டு உருவாவது.

    Fig 4 STEREO Twin Probes Looking at the Sun

    1970 ஆண்டுகளில் இரு வானியல் பௌதிக விஞ்ஞானக் குழுவினர் தனித்தனியாகக் கூறினர் :  அதாவது செவ்வாய்க் கோளை ஒத்த ஓர் அண்டம் பூர்வப் பூமியில் மோதி, நிலவு உருவானது.  முதன்மையான மோதல் கோட்பாடாக  இது கொள்ளப் பட்டது.  2001 இல் வேறொரு குழு விஞ்ஞானிகள் பூர்வப் பூமி, நிலவின் பல்வேறு தனிமங்களின் ஏகமூலப் பாறைகள் ஏறக்குறைய ஒத்திருப்பதை அறிவித்தனர்.   1970 அப்பொல்லோ நிலவு பயணங்களில் விண்வெளி விமானிகள் கொண்டுவந்த பாறை மாதிரிகளில் மூன்று  நிலையான ஆக்சிஜென் ஏகமூலங்கள்   [Three Stable Isotopes of Oxygen] நிலவில் செழித்திருப்பதைக் கண்டனர்.  எண்ணியல் போலிக் கணித மோதல் முறைகளில்  [Numerical Simulations of Impact] நிலவின் 60% -80% அளவுப் பொருட்கள், பூர்வப் பூமியிலிருந்து புலம் பெயர்ந்தவை என்பது அறியப்பட்டன.

    2015 இல் அடுத்தோர் மாடல் புனையப்பட்டு மிகப் பெரும் மோதல் அனுமானிக்கட்டு, பூர்வப் பூமியின் இடைப்பகுதி [Vaporized Mantle of Proto-Earth] ஆவியாகி, திண்ணிய பொருட்கள் ஆவியுடன் கலந்து நிலவு குளிர்ந்து திரண்டது.  இயற்கை இதழில் [Nature Publication] வெளிவந்த பதிவு பூர்வப் பூமி, நிலவுப் பாறைகளில் இருந்த மூன்று நிலையான பொட்டாசியம் ஏகமூலங்களைத் [Three Isotopes of Potasium] துல்லியமாகக் கூறியது.  அவற்றில் இரண்டு ஏகமூலங்கள் [பொட்டாசியம்-39 & பொட்டாசியம்-41] செழிப்பாக இருந்தன என்று அறியப்பட்டது.

    Fig 3 STEREO Probe's Tools

    அப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிகள்

    1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன.  நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன.  அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன !  அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது !  அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.

    Fig 1 The Theia Planet Theory

    வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள்.  ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது.  தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது !  அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது.  அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.

    Fig 1E NASA's STEREO Probes

    அண்டக் கோள் தியாவின் அசுர மோதல் நியதி

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே பூமிக்கருகில் பரிதியைச் சுற்றி வந்த பூர்வீகக் கோள் ஒன்று பூமியோடு மோதிச் சிதைவுத் துணுக்குகளே நிலவு துணைக் கோளாகியது என்னும் ஓர் “அசுர மோதல் கோட்பாடு” (The Giant Impact Hypothesis) புதியதாக நிலவி வருகிறது !  அந்தக் கோள் செவ்வாய்க் கோள் அளவான “தியா” (Theia) என்று கூறப்படுகிறது.  இந்தக் கோட்பாடுக்குச் சான்றளிப்பவை : நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர் நிலவிலிருந்து கொண்டு வந்த மாதிரிப் பாறைகள், மண் திரட்டுகள்.  அந்த மாதிரிகள் காட்டுவதென்ன ?  நிலவின் தரைப் பரப்பு ஒருகாலத்தில் உருகி அமைந்தது என்பது.  நிலவின் உட்கரு மிகச் சிறு இரும்பு உண்டை (Relatively Small Iron Core) என்பது.  அடுத்த சான்று.  மற்ற விண்மீன் மண்டலங்களின் கோள்களில் அத்தகைய மோதல்கள் காணப்படுவது.  இப்போது தீர்வு காணப்படாத வினாக்கள் :  ஏன் நிலவின் மாதிரிகள் இரும்பு ஆக்ஸைடு அல்லது தீண்டா மூலகங்கள் போன்றவற்றின் (Iron Oxide or Siderophilic Elements) (Siderophile Elements : Any element that has a weak affinity for oxygen and sulfur and that is readily soluble in molten iron. Siderophile elements include iron itself, nickel, cobalt, platinum, gold, tin, and tantalum.) ஆவியாகும் மூலகங்களின் வீதங்களைக் (Ratio of Volatile Elemets) காட்டவில்லை ? இந்தக் கோட்பாடு வலியுறுத்தும் பூமியின் எரிமலைக் குழம்பு ஏறி வழிந்த தரைப்பகுதி (Magma Ocean) எப்படி பூமியில் தோன்றி யிருக்கக் கூடும் என்னும் ஐயப்பாடு !

    Fig 1A Planet Theia's Collision

    மோதல் கோட்பாடு தோன்றிய வரலாறு

    1898 ஆம் ஆண்டில்தான் ஜார்ஜ் ஹோவேர்டு டார்வின் (George Howard Darwin) (பரிணாமக் கோட்பாடு எழுதிய சார்லஸ் டார்வின் அல்லர்) பூமியும் நிலவும் பூர்வீக காலத்தில் ஒரே உடம்பாக இருந்தவை என்று கூறியவர். ஜார்ஜ் டார்வினின் கோட்பாடு என்ன வென்றல் பூர்வ பிள்ளைப் பூமியின் சுழல்வீச்சு விசையால் (Centrifugal Force) பூமியிலிருந்து உருகித் திரண்ட ஒரு கோள் வெளிப்பட்டு நிலவென்னும் துணைக்கோள் ஆனது.  அவர் நியூட்டனின் யந்திரவியல் கணக்கைப் பயன்படுத்தி நிலவு முதலில் பூமிக்கு வெகு அருலில் சுற்றத் துவங்கிப் பிறகு மெதுவாக விலகிச் சென்றது என்று விளக்கினார்.  அந்த விலக்கு நகர்ச்சியைப் பிறகு நாசாவும், சோவியத் ரஷ்யாவும் லேஸர் ஒளிக்கதிர்களை நிலவுக்கு அனுப்பி உறுதிப்படுத்தின.  ஆனால் டார்வினின் கணித முறைப்படி மீட்சி முறையில் பின்னே சென்று நிலவைத் திருப்பி பூமியோடு இணைத்துக் கணக்கிட முடியவில்லை ! 1946 இல் ஹார்வேர்டு பலகலைக் கழகத்தைச் சேர்ந்த ரெகினால்டு ஆல்ட்வொர்த் டாலி (Reginald Aldworth Daly) ஜார்ஜ் டார்வினின் கோட்பாடை எதிர்த்து, நிலவு சுழல்வீச்சு விசையால் உண்டாக வில்லை என்றும் வேறோர் கோள் மோதித் தோன்றிய தென்றும் சவால் விடுத்தார்.  பிறகு டாலியின் கருத்து பல்லாண்டுகள் கழித்து 1975 இல் மீண்டும் டாக்டர் வில்லியம் ஹார்ட்மன், டாக்டர் டொனால்டு டேவிஸ் இருவரால் வெளியாக்கப் பட்டது.  புதுப்பிக்கப் பட்ட அந்தக் கொள்கையே அசுர மோதல் கோட்பாடாய் இப்போது மெருகிடப் படுகிறது.

    Fig 1B The Birth of the Moon

    மோதிய பூர்வீகக் கோள் தியாவைப் பற்றி

    இதுவரை யாரும் தியா என்னும் கோளைப் பார்த்தில்லை.  தியா என்பது ஒரு கற்பனைக் கோள்.  தியா என்பது ஒரு கிரேக்க தேவதையின் பெயர்.  4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு பரிதி மண்டல் கோள்கள் உண்டான போது தியாவும் தோன்றியதாகத் தெரிகிறது.  மோதுவதற்கு முன்பு தியா பூமியைப் போல், பூமிக்கு அருகிலே பரிதியைச் சுற்றி வந்தது.  தியாவின் கோள் அளவு செவ்வாய்க் கோளை ஒத்தது.  பூர்வீகக் கோள் தியா தோன்றைய போது அது பூமியின் (Lagrangian Points L4 or L5 Relative to Earth) சமகோணப் புள்ளிகளில் ஒன்றில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  அதாவது பூமி சுற்றி வரும் பாதையில் பூமிக்கு 60 டிகிரி முன்னோ அல்லது 60 டிகிரி பின்னோ தியாவும் சுற்றி வந்திருக்க வேண்டும்.  ஏதோ ஒரு காரணத்தால் தியாவின் நிறை மீறிப் போனதால் சுற்று வீதி நிலைப்பாடு தவறிப் பாதிப்பானது !  அப்போது பூர்வீகப் பூமியின் மிகையான ஈர்ப்புச் சக்தியால் தியா இழுக்கப்பட்டு பூமியோடு மோதும் நிலை ஏற்பட்டது !

    Fig 1C Earth & Moon Axes Tilts

    வானியல் வாசகத்தில் அந்த தியா–பூமி மோதல் மிதமான வேகமாயினும், விளைவு அசுரத் தனமானது.  தியா பூமியை ஒரு கோண மூலையில் தாக்கி, அதன் இரும்பு உட்கரு பூமியின் வயிற்றுக்குள் பாய்ந்தது !  தியாவின் மேல்தட்டும் (Mantle) பூமியின் குறிப்பிடத் தக்கப் பகுதி மேல்தட்டும் சிதைந்து வெளியேறிப் பூமியைச் சுற்றத் துவங்கியது !  அந்தச் சிதைவுப் பிண்டமே ஒரு நூற்றாண்டுக்குள் உருண்டு திரண்டு நிலவானது என்று கருதப் படுகிறது.  கணினிப் போலிமாடல் (Computer Simulations) அமைப்பில் கண்டபடி 2% சிதைவுப் பிண்டம் தெறித்துப் போய்ச் சமகோணப் புள்ளியில் ஒரு வளையத்தில் குப்பையாய்ச் சுற்றிக் கொண்டிருக்கும் என்று அறியப் படுகிறது.  சிதைக்கப்பட்ட பாதி நிறைதான் நிலவாக உருவாகும் என்றும் போலிமாடலில் அறியப் படுகிறது.

    Fig 1D Lagrangian Points

    அப்போது பூமிக்குப் பேரளவு “கோண முடுக்கமும்” (Angular Momentum) நிறையும் (Mass) அளவு கூடுகின்றன என்பது தெரிய வருகிறது.  பூமி எந்த வேகத்தில் சுழன்றாலும், எந்த சாய்வில் சரிந்திருந்தாலும் மோதலுக்குப் பிறகு அதனுடைய நாள் நீட்சி 5 மணி நேரம் மிகையாகும் !  அத்துடன் பூமியின் மத்தியரேகை நிலவின் சுற்றுவீதி மட்டத்தை நோக்கி நெருங்கும் !  அந்த மோதலின் போது குறிப்பிடத் தக்க துண்டுகள் உண்டாகவும், அவை யாவும் சமகோணப் புள்ளிகளில் தங்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் நேருகின்றன.  அத்தகைய மோதல் சிதைவுத் துணுக்குகள், மற்ற கோள்களால் சமநிலை தடுமாறிப் பாதிப்பு ஏற்பட வில்லை யென்றால் 100 மில்லியன் ஆண்டுகள் கூட அப்புள்ளிகளில் தங்கிக் கிடக்கும் என்று ஊகிக்கப் படுகிறது !

    நாசாவின் விண்வெளிக் காலநிலை விண்ணுளவி

    நாசாவின் விண்வெளிக் காலநிலை விண்ணுளவி (NASA’s Space Weather Monitoring Spacecraft STEREO) இரட்டை உளவிகளைக் கொண்டு பரிதியின் பாண்பாடுகளை ஆராய 2006 அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பூமியைச் சுற்றி வர அனுப்பப் பட்டது.  அது நாசாவின் மூன்றாவது திட்டமான பரிதி மண்டல உளவி (NASA’s Solar Terrestrial Probes) ஆராய்ச்சிகள்.  ஸ்டியரியோ திட்டம் எனக் கூறப்படும் அந்த ஆராய்ச்சியில் முப்பக்கப் பதிவு நோக்கி (3D Probing) சூரியனின் சூறாவளிப் புயல்களை (Anatomy of Solar Storms) உட்புற ஆய்வுகள் செய்யும்.  பரிதியின் தீக்கறைகளை (Sun Spots) ஆராயும் ! அத்துடன் அதன் ஆய்வுப் பணிகள் நிற்கவில்லை.  நாசா ஸ்டியரியோ இரட்டை உளவிகளைத் திசை திருப்பி சமகோணப் புள்ளிகளின் அரங்குகளை (Lagrangian Point Zones L4 & L5) உளவி மோதிச் சிதைந்து போன பூர்வீகக் கோள் தியாவின் சிந்திய 2% துணுக்குகளைத் தேடிச் செல்லும் !  தியாவின் அந்தத் துணுக்குகளை விண்ணுளவி கண்டு பிடித்தால் நிலவு எப்படித் தோன்றியது என்னும் பெரும் புதிர் விடுவிக்கப்படும் !

    Fig 2 The Giant Impact Theory

    நாசா சமகோணப் புள்ளித் தளங்களை சிதறிய முரண்கோள்களின் (Asteroids) ஈர்ப்புத் துணுக்குகள் இளைப்பாறும் களங்கள் (Gravitaional Parking Lots) என்று குறிப்பிடுகிறது.  முரண்கோள்களில் இருக்கும் பாறைத் துணுக்குகள் பூமி நிலவைப் போல் ஒரே மாதிரி மண்ணைக் கொண்டிருந்தால் தியா மோதல் கோட்பாடை நிரூபிப்பதாக நாங்கள் அறிவிப்போம் என்று கெய்ஸர் கூறுகிறார்.  மேலும் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் எடுத்து வந்த பாறைகள் பூமியில் உள்ள பாறைகளைப் போன்ற ஆக்ஸிஜன் ஏகமூலக் கூட்டுக் கலவையை (Oxygen Isotope Compositions) ஒத்திருந்தன என்றும் அறியப்பட்டுள்ளது.

    [தொடரும்]
    +++++++++++++++++++
    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 On the Moon By : Patrick Moore (January 2001)
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html(நிலவு எப்படித் தோன்றியது ?)
    13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
    14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
    15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
    16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
    17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
    18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberghttp://geography.about.com/)
    19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)
    20 Daily Galaxy -The Theia Hypothesis – New Evidence Emerges that Earth & the Moon Were Once the Same [July 5, 2008]
    21 NASA Hunts for Remnants of an Ancient Planet (Theia) Near Earth (April 11, 2009)
    22 Science Illustrated : The Lukiest Collision -New Findings The Moon’s Explosive Origins (Nov-Dec 2008]
    23 NASA Probes Seeks Remnants of Lost Theia Planet By : Lewis Page (Apr 14, 2009)
    24 NASA Report -NASA’s STEREO Spacecraft Reveals Anatomy of Solar Storms By : Laura Layton Heliophysics News Team (April 14, 2009)
    25. Giant Impacy Hypothesis From Wikipedia (April 29, 2009)

    26. http://www.astrobio.net/also-in-news/chemistry-says-moon-proto-earths-mantle-relocated/  [September 13, 2016]

    27.  http://www.technology.org/2016/09/13/chemistry-says-moon-proto-earths-mantle-relocated/ [September 13, 2016]

    28. http://www.terradaily.com/reports/Chemistry_says_Moon_is_proto_Earths_mantle_relocated_999.html  [September 14, 2016]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com [ September 16, 2016] [R-1]

    Share
  • அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம்

    ஒரு அரிசோனன்

     utsava-ganesha-2பிள்ளையார் சதுர்த்தி ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.  இந்நன்நாளைக் கணேச சதுர்த்தி, விநாயக சதுர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.  இந்தியாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை அமெரிக்காவிலும் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

    அப்படியிருக்கையில் முழுமுதற் கடவுளாக ஆனைமுகன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அது கொண்டாடப்படாமலிருக்குமா என்ன!  ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா பிரம்மோத்சவ

    மாகப் பதினோரு நாள்கள் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கொண்டாடப்படுவதுபோல இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.

     

    . இவ்வாண்டும் இத்திருநாளைக் கொண்டாட ஒருமாதம் முன்னதாகவே ஏற்பாடுகள் துவங்கின. ஆலயத்தைச் சேர்ந்த பல தன்னார்வத் தொண்டர்கள் கூடி விழாவை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டம்தீட்டத் துவங்கினர்.

    பிரம்மோத்சவத்தைச் சீரும்சிறப்புமாக நடத்தவேண்டி, சமயக்குழு, உணவுக்குழு, நிதிக்குழு, செயற்குழு, பெண்டிர்குழு, தொடர்பியல்குழு என்று பல குழுக்கள் பிரிக்கப்பட்டு, அவற்றின் தலைவர்கள் இர்ண்டுமாதங்கள் முன்பிருந்தே வாராவாரம் கூடி, தத்தம் குழுக்களின் நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொண்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகளின் நிலைமைபற்றியும், உடனடித் தேவைகளைப் பற்றியும் கலந்துரையாடினார்கள்.  இவ்வுரையாடலில் கோவில் அர்ச்சகர்களும் கலந்துகொண்டு, ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.  தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் இந்த மூன்று மொழிகளிலும் பிரம்மோத்சவத்தின் சிறப்புபற்றி ஒவ்வொரு அர்ச்சகரும் விவரிக்கும் விழியங்கள் பதிவுசெய்யப்பட்டு, கோவிலின் முகநூலிலும், இணையதளத்திலும் வலையேற்றப்பட்டன.

    பிள்ளையார் என்றால் குழந்தைகளுக்குக் குஷிதானே!  அவர்களில்லாமல் பிள்ளையார் சதுர்த்தியை எப்படிக் கொண்டாடுவது?

    எனவே, “என் கணேசனைச் செய்வேன்” [Make my Ganesha] என்ற ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது.  கோவில் தலைமைச் சிற்பி சண்முகநாதன் பிள்ளையார் செய்வதற்கென்று பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் திருவுருவத்துடன் சில திருவுருவங்களின் அச்சுகளைத் தயாரித்தார்.

    gc 12a.jpgகோவில் தன்னார்வலர்கள் ஃபீனிக்ஸ் பெருநகரில் பலவிடங்களில் கணேசனைச் செய்வோம் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு அழைத்துவந்தார்கள்.  குழந்தைகள் சிற்பிகளின் மேற்பார்வை/உதவியுடன் ஆனைமுகன் திருவுருவத்தைச் செய்தார்கள்.  பிள்ளையார் சதுர்த்தியன்று திருவுருவத்தை பாலகணபதி பூசைக்கோ, அல்லது விஸ்ர்ஜன நாளன்று நீரில் கரைக்கவோ கொணரும்படி பரிந்துரைக்கப்பட்டார்கள்.

    கிட்டத்தட்ட 1500 குழந்தைகள் ஆனைமுகனின் திருவுருவத்தை அன்புடன், ஆவலுடன், ஆசையுடன் செய்தார்கள்.

    gc15a.jpg
    காய்கறி அலங்கார மாலைகள்!

    ஒவ்வொரு ஆண்டும், ஆனைமுகனுக்கு விதம்விதமாக சிறப்பான அலங்காரம்செய்வது கோவில் வழக்கமாகும்.  அதைத்தொடர்ந்து, இம்முறை ஆனைமுகனுக்கு ஷாகாம்பரி [காய்கறி] அலங்காரம் செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.  அதற்காக நீண்ட நீலக்கத்தரிக்காய், வெண்டைக்காய், சிவப்பு/வெள்ளை உருளைக்கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பெருமுள்ளங்கி, உருண்டை த்தக்காளி, நீண்ட ரொமானோ தக்காளி, பூசணிக்காய், தர்பூசணிப் பழம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, அருகம்புல், வாழைப்பழம், ஆப்பிள், வாழைக்காய் முதலிய காய்கறிகளும், பழங்களும் வாங்கப்பட்டன.

    இவை பிள்ளையாரப்பனின் மீது ஏற்றப்பட்டு எடை அதிகமாகிவிடக்கூடாது என்பதால், அவற்றின் எடையைத் தாங்குவதற்காக தனித்து ஆதரவுக்கட்டுமானமும் செய்யப்பட்டது.

    மாலைகள் கடவுளர்களுக்காக ரோஜாப்பூ மாலைகளும், கதம்பச் சரங்களும் தமிழ்நாட்டிலிருந்து காய்ந்த பனி [dry ice] சுற்றிப் பாதுகாப்புடன் தருவிக்கப்பட்டன.  இதுமட்டுமன்றி, இக்காலத்தில் மல்லிகை, அலரி, செம்பருத்திபோன்ற மலர்கள் பூத்துக்குலுங்கும் என்பதால், பல அன்பர்கள் தங்கள்வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்களை உதிரியாகவும், மாலைகளாகவும் கொணர்ந்துசேர்த்தார்கள். இன்னும்பலர், கடைகளில் ஜவந்தி, ட்யூலிப், காரனேஷன்போன்ற மலர்க்கொத்துகளை ஆனைமுகனுக்கு அர்ப்பணிக்க ஆவலுடன் எடுத்துவந்தனர்.

    பிரம்மோத்சவத்திற்கு முதல்நாளே தேவையான பொருள்கள் எடுத்து அடுக்கிவைக்கப்பட்டன.  கலசங்களுக்காக மேடை அமைக்கப்பட்டது.  வேள்விக்கான பொருள்கள் சரிபார்த்து எடுத்துவைக்கப்பட்டன.

    தெர்மோகோலில் செய்யப்பட்டு, ஆண்டுக்கொருதடவை வலம்வரும் விஸ்வரூப கணபதி, அவருடைய இருப்பிடத்திலிருந்து யாகசாலை மேடைக்கு வந்துசேர்ந்து அலங்கரிக்கப்பட்டார்.  அலங்காரவிளக்குகள் பொருத்தப்பட்டன.  அதிகப்படி மக்கள் அமர்ந்து ஹோமத்தைக் கண்ணுருவதற்காகக் கூடாரமொன்று எழுப்பப்பட்டது.

    அன்னலட்சுமி ஹாலில் வரும் பக்தகோடிகளுக்கு அமுதளிப்பதற்காக, தொண்டர்குழாம் காய்கறிகளை நறுக்கிவைக்கத் துவங்கினர்.   தினத்தலைவர்கள் ஒன்றுகூடி, என்னென்ன படைத்து வழங்குவது என்று தீர்மானித்தனர்.

    செப்டம்பர் மூன்றாம் தேதியன்று பிரம்மோத்சவம் துவங்கியது.  அன்றையதினம், கிட்டத்தட்ட முந்நூறு பக்தர்கள் வருகை தந்தனர்.

    shakhambari ganesha.jpg
    காய்கறி அலங்காரம்

    அந்திக்கால பூசைமுடிந்தவுடன், அர்ச்சகர் ஜெயந்தீஸ்வர பட்டர் சமயத்தொண்டர்கள் உதவியுடன் ஆனைமுகனுக்கு காய்கறி, கனி, இலை அலங்காரத்தைத் துவங்கினார்.  அது இரவு பதினோறு மணிவரை நடந்து, அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு மீண்டும் ஆரம்பமாகி நிறைவுபெற்றது.  எந்தெந்தக் காயை, கனியை, இலையை எங்குவைத்தால் அழகுகூடும் என்று மனதிலேயே கணித்து, அதைக் கச்சிதமாக நிறைவேற்றியது, அர்ச்சகர் ஜெயந்தீஸ்வரனின் திறமைக்குச் சான்றாகவே இருந்தது.

    kalasa sthapanam.jpgபிள்ளையார் சதுர்த்தி நாளன்று [செப்டெம்பர் 4, ஞாயிறு] ஆலயத்து அர்ச்சகர் ஜெயந்தீஸ்வர பட்டர் தலைமையில் மற்ற இருவரும் சேர்ந்து கலசஸ்தாபன[குட நிறுவுதல்]த்தைச் செய்தபின்னர், அர்ச்சகர் அனில்குமார் சர்மா யாகசாலையில் மூலமந்திர வேள்வி[ஹோமம்]யைத் துவங்கினார்.  அவருக்கு அர்ச்சகர் வரப்பிரகாஷ் ஆசார்யுலுவும், மற்ற சமயத் தொண்டர்களும் உதவி செய்தனர்.

    https://www.facebook.com/MahaGanapati/videos/1167966499890357/

     

     

    பஞ்சலோகத்தாலான உத்சவப் பிள்ளையாருக்குப் பலதிரவிய [அரிசி மாவு, மஞ்சள்பொடி, தேன், பால், தயிர், பழச்சாறு, பன்னீர், இளநீர், திருநீறு, சந்தனம்] அபிஷேகம் நடத்தப்பட்டது.  அச்சமயம் அதர்வ கணேச சீர்ஷமும், இதர வேதங்களும் ஓதப்பட்டன.  அபிஷேகத்திற்காக வந்த பால் வீணாகக்கூடாது என்பதால், அதுமட்டும் தனியாக சுத்தமான பாத்திரத்தில் சேகரித்து, ஆலய சமையலறைக்கு அனுப்பப்பட்டது.

    அலங்காரம் நடக்கும்போது, தேவாரம், திருவாசகம், ஔவையாரின் பிள்ளையார் அகவல் ஆகிய தீந்தமிழ்த் தோத்திரங்கள் ஓதப்பட்டன.  ஆனைமுகன்மீது பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன.

    அலங்கரிக்கப்பட்ட ஆனைமுகன் நான்முகன் ஓட்டுவதுபோன்று வடிவமைக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.  கிட்டத்தட்ட மூவாயிரம் எண்ணிக்கைகொண்ட அடியார்கள்கூட்டம் அலைமோதியது.  அடியார்கள் ஒன்றுகூடி தேரை ஆலயத்தைச்சுற்றி ஊர்வலமாக இழுத்துவந்தனர்.

    procession.jpg
    பிள்ளையார் பவனி

    “ஜெய் கணேசா!  கணபதி பாப்பா மோரியா!  கணேச சரணம், சரணம் கணேசா!” போன்ற கோஷங்கள் விண்ணே அதிருமாறு எழுந்தன.  உச்சியைப் பிளக்கும் அரிசோனா வெய்யிலையும் பொருட்படுத்தாது, அடியார்கள் ஆண், பெண், குழந்தை, முதியவர், இளையவர் பேதமில்லாது ஆனந்தக்கூத்தாடியவாறே, தேருக்கு முன்னாலும் பின்னாலும், சுற்றியும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

    வெய்யிலின் கொடுமையைத் தணிக்கவேண்டி ஆலயத்தொண்டர் குழாம் அனைவருக்கும் குடிதண்ணீர் போத்தல்களையும், நீர்மோரையும் வழங்கியவண்ணம் இருந்தனர்.  கோவிலின் நூற்றுக்கணக்கான கார்நிறுத்துமிடங்கள் போதாமல், தெருவோரத்தில் இருபுறமும் கார்களை வரிசையாக நிறுத்த, ஆலயத் தொண்டர்கள் ஆங்காங்கேநின்று போக்குவரத்தைக் கட்டுக்குள் வைத்தனர்.

    பிள்ளையாரும், பக்தர்கள் இழுத்துவந்த தேர் ஊர்வலத்தை ஏற்று, அருள் பாலித்து, ஆலயத்திற்குள் வந்து சேர்ந்தார்.

    bala ganapathi puja.jpg
    பாலகணபதி பூசை

    அனைவருக்கும், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.  அன்னலட்சுமி ஹாலில் அறுசுவை உண்டி வழங்கப்பட்டது. காலைச் சிற்றுண்டி, இரவு உணவு இவற்றுக்கும் குறைவில்லை.

    மாலை ஆனைமுகன் திருவுருவத்தைக் களிமண்ணில் செய்த சிறார்கள் தங்கள் பெற்றோருடன்  பாலகணபதி பூசையில் கலந்துகொண்டனர்.  அர்ச்சகர் அனில்குமார் சர்மா சொல்லித்தரத்தர, சிறார்கள் தாங்கள் செய்த திருவுருவத்திற்கு மலர்களாலும், அட்சதையாலும், பூசைசெய்த அழகு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

    அதேசமயம், அர்ச்சகர் வரப்பிரகாஷ் ஆசார்யுலு உத்சவப் பிள்ளையாருக்குப் பூசை செய்தார்.

    IMG-20160909-WA0008.jpg
    கணேசரைக் கரைக்கும் நீர்த்தொட்டி

    மறுநாள் திங்கட்கிழமை தொழிலாளர்தின விடுமுறை என்பதால் பிள்ளையார் சதுர்த்திக்கு வரமுடியாத அன்பர்களும், மீண்டும் ஆனைமுகனின் ஆழகைப் பருகி, அருள்வெள்ளத்தில் நீந்தித் திளைக்கவிரும்பியவர்களுமாக ஆயிரத்து நானூறு அடியார்கள் ஆலயத்திற்கு வந்தனர்.

    செப்டம்பர் 11, ஞாயிறன்று, விசர்ஜன் [கணபதியைக் கரைத்தல்] நடைபெற்றது.  இதற்காக நான்கடி உயரமும் பதினாறடி விட்டமும் உள்ள பெரிய பிளாஸ்டிக் நீச்சல் குளத்தில் நீர் நிரப்பப்பட்டது.

    இது ஆடிப்பாடி மகிழும் தினமாக அனுசரிக்கப்பட்டது.  ஆனைமுகனின்மீது அனைத்து மொழிகளிலுமுள்ள பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

    VR ganapathi.jpg
    பேருருவப் பிள்ளையார் [விஸ்வரூப கணப்தி]

    பேருருவப் பிள்ளையாருக்கு [விஸ்வரூப கணபதி] மலர்மாலை சூட்டி அலங்காரம்செய்யப்பட்டது.  ஏனெனில் ஆண்டுக்கொருமுறை அவர் பவனிவரும் தினமாயிற்றே அன்று!

    எட்டடிக்கும் அதிகமான உயரமுள்ள அவரை ஊர்வலமாகக் கொண்டுசெல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன!  இருப்பினும், அதற்குச் சளைத்தவர்களா அவரது அடியார்கள்!

    அவர் பவனிவருவதற்கென்றே சிறப்பாக ஒரு டிரைய்லர் [trailer] அலங்கரிக்கப்பட்டு, அதை இழுத்துச் செல்ல ஒரு ஊர்தியும் தயாராகியது. அனைவரும் ஆடிப்பாடிக்களிக்கும் தினம் அதுவென்பதால், அப்படியொரு ஏற்பாடு!

    பேருருவப் பிள்ளையாரை அலங்கரித்த டிரெய்லரில் தலைமைச்சிற்பி சண்முகநாதனின் மேற்பார்வை, வழிநடத்தலுடன் பலபக்தர்கள் உற்சாகத்துடன் எழுந்தருளச்செய்தார்கள்.  ஊர்திக்குமுன்னே பலர் முழக்கமிட்டபடி ஆனந்தக்கூத் தாடியவாறே முன்செல்ல, “ஊர்தியைப் பார்த்தவாறு நாம் ஏன் செல்லவேண்டும்?  நமது ஆடும் அடியார்களின் ஆட்டத்தை இரசிப்போம்,” என்பதுபோல, பேருருவப் பிள்ளையார் செல்லும் திசையை நோக்காது, தன்னைத் தொடர்பவர்களைக் கண்ணுற்றவாறே அமர்ந்திருந்தது தனிச்சிறப்பாக அமைந்தது.

    Heramba Ganesha. 1jpg.jpg
    ஹேரம்ப கணபதி அலங்காரம்

    ஊர்வலம் நிறைவேறியதும், பேருருவப் பிள்ளையார் தனது வழக்கமான இடத்திற்குச் சென்றார்.  அவரை மீண்டும் காண இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும் என்பதால், அன்றுமட்டும், தன்னிடத்தில் அடியார்கள் தன்னைக் காணட்டும் என்பதுபோல அவரது இல்லம் அன்றுமட்டும் திறந்துவைக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்பட்ட புனிதக்கலசநீர் தொட்டியில் கலக்கப்பட்டவுடன், பிள்ளைகள் செய்த பிள்ளையாரின் திருவுருவங்கள் தொட்டிநீரில் விடப்பட்டன.

    ஹேரம்ப கணபதியாக சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆனைமுகனுக்கு அருச்சனை, ஆராதனை முடிந்தவுடன், வந்திருந்த ஆயிரத்தெண்ணூறு அடியவருக்கும் அமுதுவழங்கப்பட்டது.  மாலையில் கலாசிருஷ்டி பிரிவினர் சார்பில் ஆடலும் பாடலும் நடைபெற்றன.

    kalasa procession 1.jpg
    இறுதி நீராட்டு கலச ஊர்வலம்

    அடுத்த செவ்வாயன்று [செப்டம்பர் 13] வேள்விக்குப்பிறகு, முதலில் சிவபெருமானின் புனித நீராட்டலைத் தொடந்து, கோவிலுக்குள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட புனிதநீர்க்கலசநீராலும், பாலாலும் ஆனைமுகனுக்கு பிரம்மோத்சவ இறுதிமுழுக்கும் அலங்காரமும்  செய்யப்பட்டது.

    பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம் நிறைவுபெற்றது.  நூற்றுக்கும் மேலான இறைத்தொண்டர்களீன் உழைப்பு இனிது நிறைவேறி, ஆனைமுகனின் அருளைப் பெற்றது!

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்

    கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்

    துங்கக் கரிமுகத்துத் தூமணியே

    சங்கத் தமிழ்மூன்றும் நீ எனக்குத் தா.

    — ஔவையார்

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை

    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

    நந்தி மகத்தனை ஞானக் கொழுந்தினைப்

    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

         — திருமூலர்

    ***   ***   ***

    Share
  • தமிழில் மரியாதைச் சொற்கள் (1)

    கவிக்கோ ஞானச்செல்வன்

    kaviko-e1474090897605-1024x724

    kaviko1

    aka

    kaviko2

    kaviko3

    kaviko4

     

     

    Share
  • குமார சம்பவம் ..!

     

    கிரேசி மோகன்

    ———————————————
    பயந்த ரதிவசந்தன் பின்தொடர காமன்
    உயர்ந்த இமயம் அமைந்த -நயனனுதல்
    ஆண்டவன் ஆசிரமம் மாண்டாலும் வெற்றியை
    வேண்டியவன் சென்றான் விரைந்து….(146)

    சிவத்தோடு சேர்ந்தங்கு சித்தம் ஒருமித்த
    தவத்தோர் தரத்தை தகர்க்க -அவித்தைக்(கு)
    இசைந்த களத்தை இயற்றுவோன் ஆனான்
    வசந்த ருதுவாய் வனத்து….(147)

    மாற்றான் மனைவிரும்பும் மூடனால் பத்தினி
    ஆற்றாமை கொள்ளும் அவலமாய் -மாற்றத்தால்
    விண்முகம் பானு வடக்கேக தென்திசை
    தன்முகம் கொண்டாள் துயர்வு….(148)

    தளிர்பெண் சிலம்புத் திருவடி பட்டு
    துளிர்க்கும் அசோகமரம் திடுமென்(று) -அளித்த
    வசந்தத்தால் தன்னியல்பை விட்டு மலர்ந்து
    இசைந்ததாம் பூக்கள் இறைத்து….(149)

    கொய்தமாம் பூவால் கணைக்கு சிறகமைத்து
    செய்திடச்சில் வண்டுகள் சென்றதை -மொய்த்ததைப்
    பார்க்கையில் மன்மதன் பேரையப் பாணத்தில்
    சேர்க்க அமர்ந்ததாய் சாக்கு….(150)

    கனகமாய்க் கொன்றை குவிந்தும் ரசிகர்
    மணமற்ற தாலே மறுப்பர் -குணமுற்றும்
    கொண்டவனை நான்முகன் கொள்வதில்லை தன்படைப்பில்
    கண்டனம்போல் காளிதாசன் கூற்று….(151)….கிரேசி மோகன்….!

    Share