Year: 2017

  • இயங்கிநிற்கும் பிரம்மா !

             ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    படைக்கின்ற பிரம்மாவை நாம்பார்த்த  தில்லை

    படைப்பதனை பார்த்துவிட்டு வியப்படைந்து நிற்போம்

    படைக்கின்ற பிரம்மாவும் அவர்படைப்பும் கண்முன்

    பார்க்கின்ற பாக்கியத்தைப் பார்மீது காண்போம் !

     

    எழுத்தாளர் இவ்வுலகின் இயங்கிநிற்கும் பிரம்மா

    எழுத்தாலே இவ்வுலகை அவர் ஆளுகின்றார்

    எழுத்தாலே எத்தனையோ எமக்களித்து நிற்கும்

    எழுத்தாளர் எல்லாமே இறைவனது வரமே !

     

    கல்லுக்குள் கலைநயத்தைக் காட்டுகிறான் சிற்பி

    சொல்லுக்குள் ஆயிரத்தைத் தீட்டுகிறான் எழுத்தன்

    நல்லவற்றைத் தீயவற்றை நாட்டுக்கு உரைக்கும்

    வல்லமையை எழுத்தாளன் வாங்கிவந்து உள்ளான் !

     

    வாழ்க்கையினை மாற்றுகின்ற எழுத்தாளர் தம்மை

    வானவரும் போற்றிடுவார் மனமார நாளும்

    வாழ்வினுக்கு ஏற்காமல் எழுதிநிற்பார் ஆகின்

    வாழ்க்கையிலே நரகமதை அடைந்திடுவார் விரைவில் !

     

    கம்பனெனும் எழுத்தாளன் கைபட்ட தமிழும்

    கவிகாள மேகமது கைபட்ட தமிழும்

    நம்ஐயன் வள்ளுவனார் நமக்களித்த தமிழும்

    நாளுமே எம்வாழ்வில் நல்லதுணை அன்றோ !

     

    சங்கத்தமிழ் எழுத்தாளர் சபையேறி நின்று

    இங்கிதமாய் எமக்களித்த இலக்கியதைப் பார்க்கின்

    எங்களது எழுத்தாளர் இவ்வுலகில் என்றும்

    இறவாத வரம்பெற்று வாழ்கிறார்  என்போம் !

     

    வாழுகின்ற வாழ்நாளை வசந்தமுள தாக்கி

    வருங்காலம் எம்வாழ்வில் விடிவு வருமென்று

    கூறுகின்ற துணிவுதரும் எழுத்தாலே எம்மை

    குதூகலத்தில் குளிக்கவைப்பர் எழுத்தாளர் அன்றோ !

     

    வறுமைதனில் இருந்தாலும் பொறுமையுடன் எழுதி

    வையகத்தார் மனங்களிலே மலர்ச்சிவர உதவி

    தலைநிமிர்ந்து நிற்கின்ற தன்மையினை உடைய

    தகவுடைய  எழுத்தாளர் தமைப்போற்றி நிற்போம் !

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (63)

    நிர்மலா ராகவன்

    அழுமூஞ்சியும் சிரித்த முகமும்

    நலம்

    புதிது புதிதாக எதையாவது செய்ய முற்படும்போது ஆர்வமும் பயமும் ஒருங்கே எழலாம். எதையும் புரிந்துகொண்டால் பயம் போய்விடும். எளிதான காரியம் ஒன்றை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

    பிறர் செய்யத் தயங்கும் காரியத்தில் துணிச்சலுடன், ஆனால் தகுந்த பாதுகாப்புடன், இறங்குவதுதான் மகிழ்ச்சியைத் தரும். தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

    யாரோ துணிச்சலாக எதையோ செய்வதைப் பார்த்து, `எனக்கு எதற்கும் பயம் கிடையாது!’ என்று அபாயகரமான ஒரு காரியத்தில் ஈடுபடுவது மடத்தனம்.

    நான்தான் தெனாலி — எல்லாவற்றிற்கும் பயம்

    “நான் பெரிய பயந்தாங்கொள்ளி! கல்லூரியில் கடலுக்கு அடியில் நீச்சலடிக்கும் பாடத்தை (Ocean Archaeology) எடுத்துக்கொண்டேன். அதற்கு முன்னர் சுமாராக நீச்சல் தெரியும். அவ்வளவுதான். இரண்டு பயிற்சியாளர்களுடன் நள்ளிரவில் பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் நடுக்கமாக இருந்தாலும், போகப் போக பயம் போய்விட்டது. உற்சாகமாக அப்பயிற்சியை எதிர்நோக்க ஆரம்பித்தேன்!”

    இப்போது, குடும்பத்துடன் படகில் போகும்போது, கடலில் குதிக்கிறாள் இப்பெண். பிறருக்கு மூச்சு நின்றுவிடுவது போலிருந்தாலும், இவள் முகத்தில் என்னவோ பூரிப்புதான்.

    மேலே இருக்கும் கதையில், `இரண்டு பயிற்சியாளர்கள்’ என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். தனியாகப் போயிருந்தால், இன்று தன் வெற்றிக்கதையைச் சொல்லிச் சிரிக்க அவள் இருக்கமாட்டாள்.

    எப்போதும் சிரித்த முகம்

    `நீ நிறையப்பேரை பகைத்துக்கொள்கிறாய்!’

    ஒரு முறை இப்படிக் கண்டனம் செய்யப்பட்டவர்கள் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு, பிறரை மகிழ்விக்க முயலுவார்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ, இல்லையோ, எப்போதும் சிரித்த முகத்துடனே வளைய வருவார்கள்.

    பிறருக்காக ஒருவர் நடிக்கும்போது, தன் இயல்பான குணங்களை விட்டுக்கொடுக்கிறார். அதனால்தான் அவருக்கே புரியாத ஏதோ வெறுமை.

    மற்றவர்கள் எப்படியோ போகட்டும். வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற குழப்பம் அநாவசியம். அவர்களை மாற்ற முயல்வதும் வீண் முயற்சி. நம்மை நல்ல விதத்தில் மாற்றிக் கொண்டாலாவது நன்மை பிறக்கும்.

    போடு பழியை, பிறர்மேல்

    பலருக்கும் மாற்றம் என்றால் பயம். `நம்மை அறியாமலேயே ஏதேதோ நிகழ்கிறதே, நாம் வேறு வாழ்க்கையை இன்னும் குழப்பிக்கொள்ள வேண்டுமா?’ என்று ஒரே நிலையில் இருப்பார்கள்.

    `விதி!’ `ஜோசியர் சொல்லி இருக்கிறார், எனக்கு இப்போது போதாத காலமாம்!’ என்று எவர் மேலாவது பழி போட்டு, தம் வாழ்வில் நடப்பது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், உற்சாகம் என்னவோ கிடையாது.

    நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் சம்பவங்களால் நாம் மாறலாம். ஆனால் அவை நம்மைத் தாழ்த்த விடக்கூடாது.

    நண்பர்கள்போல் நடித்துக் குழி பறிப்பவர்களிடமிருந்து பயந்து ஓடினால், ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அவர்களைச் சொல்லாலோ, செயலாலோ அடிப்பதால் நம் பலம் பெருகிவிடப் போவதுமில்லை.

    தனிமை எப்போதும் இனிமையா?

    எப்போதும் பிறருடன் சேர்ந்தே இருந்தால், ஒருவர் மற்றொருவரைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அவ்வப்போது பிரிந்திருப்பதே நல்லது. (மனைவி அவ்வப்போது தன் பிறந்தகத்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, கணவனின் அன்பு கூடியிருக்கும்போலத் தோன்றுவது இதனால்தான்!)

    தனியாக, ஆனால் ஆக்ககரமான சிந்தனைகளுடன் இருப்பவர்களே சாதிக்க முடியும்.

    `நான் எப்போதும் தனிமையை விரும்புகிறவன்!’ என்று தன் நேரத்தை குருட்டுத்தனமான யோசனைகளிலும், எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளிலும் நிறைத்துக்கொள்பவர்கள் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார்கள். இவர்களது அன்றாட வாழ்க்கையில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் மனமுடைந்து போய்விடுவார்கள். ஒன்றுமில்லாத விஷயத்துக்காக ஒரேயடியாகப் பூரித்து, அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பின், வாழ்க்கையில் சாதிப்பது எப்படி?

    “வேகமாகச் செல்ல தனியாகப் போ. நெடுந்தொலைவு செல்ல பிறருடன் சேர்ந்துகொள்!” (ஆப்பிரிக்கப் பழமொழி)

    அக்கண்டத்தில் கொடிய மிருகங்கள் உண்டு. பாலைவனங்களில் தண்ணீர் கிடைப்பது அரிது. அதனால், பிறருடன் சேர்ந்து போவது அபாயங்களைத் தவிர்க்க உதவலாம்.

    அதற்காக, மாராதான் (Marathon) ஓட்டப்பந்தயத்தில் பிறருடன் இணைந்து செல்லவா முடியும்?

    நீதி: சிலருக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்றதாகாது.

    அழுமூஞ்சிகள்

    கதை

    “நான் பட்டப் படிப்பு படித்துத்தான் தீர்வேன் என்று வீட்டில் சண்டைபோட்டு, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏன்தான் இவ்வளவு படிக்க வேண்டுமோ என்று எரிச்சலாக இருக்கிறது. எப்படி பாஸ் பண்ணப்போகிறோம் என்று பயமாக இருக்கிறது!” என்று ஓயாமல் அரற்றுவாள் என்னுடன் படித்த ஒருத்தி.

    எட்டாம் வகுப்புவரை பாடங்கள் தமிழில் இருந்தபோது, எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கியவளுக்கு அதற்கடுத்த ஆண்டிலிருந்து ஆங்கிலத்தில் படிக்க நேரிட்டபோது சிறப்பான தேர்ச்சி அடைய முடியவில்லை.

    கடுமையாக உழைப்பதைவிட புலம்புவது எளிது. இத்தகையவர்களின் `அழுகை’யைக் காதில் வாங்காமல் இருந்தால் பிழைத்தோம். இல்லாவிட்டால், நமக்கும் `இவள் சொல்வது சரிதான்!’ என்று தோன்ற, தளர்ச்சி அடைந்துவிடுவோம்.

    இத்தகையவர்கள் சுமாரான வெற்றி அடைந்துவிட்டு, அதன்பின் தோல்வி அடைபவர்களாக இருக்கக்கூடும். தம்மைப்போல் இல்லாது, வெற்றிமேல் வெற்றி பெறுபவர்களை வீழ்த்த நினைப்பார்கள், தம்மையும் அறியாது.

    சவாலா? ஹையா!

    நமக்காகவே யார் நம்மை ஏற்கிறார்களோ, அவர்கள்தாம் உண்மையான நண்பர்கள். இவர்களே நம் திறமைகளை வெளிக்கொணர உதவுபவர்கள்.

    `எல்லாவற்றையும் யார் யாரோ செய்துவிட்டார்களே! இனி என்ன இருக்கிறது!’ என்ற நம்பிக்கையின்மையை ஒழித்துக் கட்டிவிட்டு, இப்போது இருக்கும் சவால்களை, சந்தர்ப்பங்களை, நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டால் புதிய விஷயங்களில் நம் கவனம் செல்லும். விடாமுயற்சியால் எதையாவது செய்யலாம்.

    நான் இணையத்தில் இணைந்த கதை

    சில வருடங்களுக்குமுன் பெட்டி பெட்டியாக இருந்த எனது கதைகளையும், புதினங்களையும் பார்த்தபோது, வருத்தமாக இருந்தது. எல்லாமே ஒருமுறை பிரசுரம் கண்டவை. தோள் வலிக்க, இரவு பகலாக பேனாவால் காகிதத்தில் எழுதியவை. அடித்துத் திருத்தியதால், பல தடவை எழுத வேண்டியிருந்தது. ஆதாயம் இல்லாவிட்டாலும், எழுதும்போதே புத்துணர்வு எழ, விடாது எழுதினேன். ஆனால் எனக்குப்பின் அனைத்துமே உபயோகமற்றுப்போய்விடுமே!

    அப்போது N. கண்ணன் என்ற அன்பர் நல்லதொரு வழியைக் காட்டினார்: `இணையதளத்தில் எழுதுங்களேன்!’

    ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் மிரண்டு போனேன்.

    ஓருங்குறியா? அப்படியென்றால்?

    தட்டச்சு என்றால் டைப் செய்வதா!

    பலர் உதவிக்கரம் நீட்டினார்கள். குறிப்பாக, தேமொழி. வெவ்வேறு தளங்களையும் அறிமுகப்படுத்தியவர்.

    கணினி அரிச்சுவடிகூட அறியாதிருந்த நான் இப்போது, “இண்டர்நெட்டில் எழுதுகிறேன்!” என்று சொல்லிக்கொள்ள முடிகிறது. பெருமையாக, எல்லாரிடமும் அல்ல — `உங்கள் எழுத்துக்களை பத்திரிகைகளில் பார்க்கவே முடிவதில்லையே!” என்பவர்களிடம் மட்டும்.

    இப்போது உலகெங்கும் வாழும் தமிழர்களில் 13,500 வாசகர்கள் “பள்ளியினூடே ஒரு பயணம்” என்ற என் ஒரு நாவலைப் பதிவிறக்கம் செய்துள்ளார்கள், நகைச்சுவை புதினமாகிய “பெண்களோ பெண்கள்” பத்தாயிரம் வாசகர்களுக்குமேல் எட்டியுள்ளது என்றெல்லாம் அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    வாழ்க்கையில் நாம் சந்திக்கும், நமக்கு அறிமுகம் ஆகும் எல்லாருமே பொறாமை பிடித்து, நம்மை வீழ்த்தும் எண்ணம் கொண்டவர்களாக இல்லை என்ற உண்மை பெருமகிழ்ச்சியுடன் நிறைவையும் அளிக்கிறது.

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் (85)

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலைக் காட்டும் வரைபடங்கள் (Learning  Curves)

    education

    கற்றலைப் பற்றிய  ஆராய்ச்சிகள் மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் “கற்றல் தொடர்ச்சியாக நிகழும் செயல்.”  பல நேரங்களில் அது நமக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் நடக்கின்றது. பல நேரங்களில் நமக்கு அறியாமலேயே அது நடந்து கொண்டிருக்கின்றது. இதன்  தாக்கங்கள் நமக்கு சில நேரங்களில்  புலப்படுகின்றன.சில நேரங்களில் அதன் தாக்கங்கள் மறைந்து உள்நிற்பதால் அது நமக்குப் புலப்படுவதில்லை ஆகவே இவ்வாறு வெளிப்படையாக நமக்குப் புலப்படாத தாக்கங்களை அறிந்துகொள்ள முயற்சி அதிகம் தேவைப் படுகின்றது .

    கற்றலை  ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புக்கள், வாழ்க்கை குறிக்கோள்கள். குடும்பச் சூழ்நிலைகள். பொருளாதார நிலைகள் போன்ற  பல தாக்கங்கள் பாதிப்பதால் அது செழுமைப்பட்டோ அல்லது வளமையின்றியோ இருப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் வாழ்க்கையின் எந்த ஒரு நிலையிலும் சூழ்நிலைகளையும் அல்லது தாக்கங்களையும் மாற்றி கற்றலை வளப்படுத்த, மேம்படுத்த, செம்மைப்படுத்த முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேற்கூறப்பட்ட காரணங்களால் ஒரு மாணவனின் கற்றலின் வேகம், (speed of learning) ஆழம்.(depth of learning) ஈடுபாடு,((commitment) வளமை (richness) மற்றும் மேன்மை  இன்னொரு மாணவனிடமிருந்து மாறுபட்டிருக்கும். இந்த நிலை ஒரு குடும்பத்தைச் சார்ந்த இரு குழந்தைகளுக்கும் மாறுபட்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே இரு மாணவ மாணவிகளின் கற்கும் திறனையும், கற்றலின் ஈடுபாடுகளையும், கற்றல் வளத்தையும் ஒப்பிடுதல்  விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, ஒவ்வொரு தனி மாணவனின் கற்றலின் போக்கைக் காட்டும் வரைபடங்கள் (Learning Curve) தனித்தனியாக கவனிக்கப்பட்டு அதற்கான சரியான உத்திகளை முன்வைத்தல் அவசியமாகின்றது

    ஒரு தனி மாணவனின் கற்றலை வெளிப்படுத்தும் வரைபடம் அந்த மாணவனின் உடல், உள்ள வளர்ச்சி, மன நலம், சுற்றுச்சூழல் ஆகிய பல காரணங்களால் சில நேரங்களில் குறுகிய காலத்தில் பாதிப்புக்களுக்கு உட்பட்டு கற்றலில் ஒரு வறுமையான போக்கைக் (Inadequacy of Learning) காட்டலாம். ஆனால் சூழ்நிலைகள் மாறும்பொழுது இந்தக் குறைபாடுகள் நீங்கி வளர்ச்சியையும் செழுமையும் காட்டும். அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட கற்றல் வரைபடங்கள் ஒவ்வொரு தனி பாடத்திட்டத்திருக்கும் மாறுபட்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு. எனவே ஒரு சில பாடங்களில்  ஒரு மாணவனின் கற்றல் திறனின் மேம்பாட்டையும் ஒரு சில பாடங்களில் பிற்போக்கான  நிலையையும் வெளிப்படுத்த வாய்ப்புக்கள் உண்டு. எனவே, ஒரு மாணவனின் கற்றல் திறனையும் கற்றலில் வல்லமையையும்  ஏதாவது  ஒரு வரைப்படத்தை (learning curve) முன்னிறுத்தி கணித்தல் தவறான கணிப்புக்களைக் கொடுக்கும். எனவே ஒரு மாணவனின் கற்றல் திறன்களை ஆராயும் பொழுது பொது கணிப்புக்களைத் தவிர்த்து குறிப்பிட்ட துறையிலும் குறிப்பிட்ட திறனிலும் அவனது ஈடுபாடுகள், முயற்சிகள், முன்னேற்றங்கள் ஆகியவற்றை  பரிசீலித்தல் அவசியமாகத் தென்படுகின்றது.

    சில நேரங்களில் சிறப்பான கற்றல் திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள் வீடுகளில் ஏற்படும் துயரச் சம்பவங்கள் மற்றும் மன நலத்தை பாதிக்கும் சண்டை சச்சரவுகள், விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக கவனச் சிதறல் (noncentral loss) மற்றும் மன அழுத்தங்கள் (Stress) ஏற்பட்டு தங்கள் கற்றலில் உள்ள ஈடுபாடுகள் மற்றும் ஆர்வங்களை இழந்து அதன் பலன்களை எதிர்நோக்கவும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். இந்த நிலைகளில் அவர்கள் மன நலத்தை சரிப்படுத்த தேவையான முயற்ச்சிகள் வீடுகளிலும் மற்றும் மனநல வல்லுநர்கள் துணையுடனும்  எடுத்தல் அவசியம். இந்த பாதுப்புக்களை கவனிக்காமல் ஒதுக்கிவிட்டால் அவை நிலைப்பட்டு காலப்போக்கில் கற்றலின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஒரு தாழ்வு மனப்பான்மைக்கும் வழிவகுக்கலாம் .

    \பொதுவாக  ஒரு தனி மனிதனின் கற்றலைக் குறிக்கும் வறைபாடுகள் (individual learning curves) காலப்போக்கில் மாற்றங்களைக் காண்பது நிதர்சனம். இந்த மாற்றங்களின் அடிப்படிக் காரங்களை அறைந்து அதற்குத் தகுந்த முயற்சிகள் எடுத்தால்  அவர்களின் கற்றலின் தலையெழுத்தை மாற்றி எழுத முடியம். எனக்குத் தெரிந்த வரியில் பள்ளிக்கு காலங்களில் மிகச் சாதாரணமான வெற்றிப்படிகளிக்கூடாத தொடமுடியாத பல மாணவர்கள் பிற காலத்தில் கல்வியில் சான்றோர்களாக வளர்ந்ததையும். பள்ளிக்காலத்தில் மிகச் சிறப்பான  மதிப்பெண்களுடன் தேர்வடைந்தவர்கள் வாழ்க்கைப் பாதையில் தடுமாறியதையும்  காண முடிந்திருக்கின்றது.

    பல  நேரங்களில் பள்ளிக்காலத்தில் கல்வி கற்கும் பொழுது ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள்,(Roadblocks) போராட்டங்கள் (challenges) ஆகியவற்றை தங்கள் வாழ்க்கைக்கு ஒரு முதலீடாக மாற்றி வெற்றியையும் சாதனைகளையும் படைத்தவர்களைக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய கற்றல் வெறும் புத்தகத்தில்  எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களை மட்டும் மூலதனமாகக் கொள்ளாமல் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களையும் மூலதனமாகக் கொண்டு முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. ஆகவே  கல்வியாளர்கள்  பாடத்திட்டத்தின் வரைமுறைகளை வகுக்கும்பொழுது  வெளிப்படையான பாடத்திட்டம் (visible curriculum)  என்றும்  மறைமுகமான  பாடத்திட்டம் (Hidden curriculum) என்றும் வகுத்து   அதற்கான வரைமுறைகளையும் உள்ளீட்டுக்களையும் பதிவு செய்கின்றனர்.

    இதை தொடர்ந்து  அறியலாம்

    (தொடரும் ).

    Share
  • குறளின் கதிர்களாய்…(174)

     

    செண்பக ஜெகதீசன்

     

    அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து

    நல்விருந் தோம்புவா னில்.

           –திருக்குறள் –84(விருந்தோம்பல்)

     

    புதுக் கவிதையில்…

     

    இன்முகம் காட்டி

    நன்முறையில் உபசரித்தால்

    விருந்தினரை,

    அவன் வீட்டில்

    பொன்முகம் காட்டி

    திருமகள் வந்துறைவாள்-

    பொருள் தரவே…!

     

    குறும்பாவில்…

     

    வருவிருந்தை உபசரித்தால் உவகையுடன்,    

    விரும்பி வந்துறைவாள் திருமகள்-

    விருந்தாக அவன் வீட்டில்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    இனிய முகத்துடன் விருந்தினரை

         இன்சொல் பேசியே உபசரிக்கும்

    கனிந்த உள்ளம் கொண்டவன்தான்

       குடிசை வீட்டில் வாழ்ந்தாலும்,

    மனதில் ஆர்வம் பொங்கிடவே

      மண்ணைப் பொன்னாய் மாற்றிவிடும்

    தனத்துக் கரசி திருமகளும்

      தானய் வருவாள் அங்குறையவே…!

     

    லிமரைக்கூ..

     

    விருந்தினரை உபசரித்தால் இன்முகத்துடன்,

    விருப்பமொடு வந்துறைவாள் அவன்வீட்டில்

    வளந்தரும் திருமகளும் நன்முகத்துடன்…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

    விருந்தினர ஒபசரிக்கணும்,

    வீடுவந்த விருந்தினர

    விருப்பத்தோட ஒபசரிக்கணும்..

     

    நாலுவார்த்த நல்லதாப்பேசி

    நல்ல மொகத்தோட ஒபசரிக்கணும்..

     

    நல்லபடியா ஒபசரிக்கிற

    நல்லமனுசன் வீட்டுலதான்

    எல்லா செல்வமும் தருகிறவ,

    எங்களம்மா திருமகதான்

    நல்ல மனசோட குடிவருவா..

     

    அதால

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

    விருந்தினர ஒபசரிக்கணும்,

    வீடுவந்த விருந்தினர

    விருப்பத்தோட ஒபசரிக்கணும்…!

     

     

    Share
  • குரு பஞ்சகம்

     

    ஒருநோயும் அணுகாத உடல் ஆரோக்கியம்
    ஓகோ எனப்புகழ் , ஒரு மேரு திரவியம்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(1)

    திருவொத்த மனையாள் திடமான பிள்ளைகள்
    தங்கவோ மாளிகை தாயாதி உறவினர்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(2)

    மறை சாத்திரங்கள் முறையோடு பயின்றாய்
    உரைநடை பாட்டதில் கரைகண்டு வென்றாய்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(3)

    அருகாமை அண்டை அசலூர் அனைத்திலும்
    மருவிலா மதிப்புடன் மாசற்றிருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(4)

    ஈற்றடியில் ஈரேழு உலகாளும் மன்னர்கள்
    போற்றிடப் புலமையில் ஆற்றல் இருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(5)….கிரேசி மோகன்….!
    ————————————————————————————

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170709 - Blessed Yashoda -lores

    ”தாய்மண்ணை தராளமாய்த் தின்றந் தயசோதை
    தாய்கண்ணுக் கேகாட்ட, தாமரை -வாய்திறக்க,
    என்னத் தவம்செய்தாள்: ஏரார்ந்தக் கண்ணியின்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

    Share
  • குரு பூர்ணிமா வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    19959046_1458007970957467_2510156615724754168_n

    குருவுடனான உங்கள் பயணம்
    அறியாமையெனும் அந்தகாரத்தை ஒழித்து
    ஒளியினூடேயானதொரு உன்னத பயணம்.
    உங்கள் வாழ்வின் பிரச்சனைகளப்
    புறந்தள்ளி வாழ்வின் உன்னத அனுபவங்களை
    நோக்கி முன்னேறுங்கள்!
    குரு பூர்ணிமா வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    Share
  • கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.

    Posted on July 7, 2017

    An Argo float is deployed into the ocean

    3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++

    சூட்டு யுகம் புவிக்கு
    வேட்டு வைக்க ஏகுது !
    நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    பெரும் புயல் எழுப்ப மூளுது !
    பேய் மழைக்கு மேகம் சூழுது !
    நீரை, நிலத்தை, வளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    இயற்கை சிதைக்க விரையுது !
    கடல் மட்டம், கனல் ஏறி
    கரைப் பகுதிகள் மூழ்க்குது !
    மெல்ல  வெப்பம் ஏறி, நம்மை
    வெல்லப் போகுது
    மூன்றாம் உலகப் போர் !

    ++++++++++++++++

    http://www.chicagotribune.com/92378906-132.html

    கடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

    கடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக்  கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது.  இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள்.  ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது ?  எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது ?  இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது ? பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது ?

    Image result for oceans are warming rapidly

    பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது.  மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே.  அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவேண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும்.  சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார்.  அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது.  அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங்  [Dr. Gonjgie Wang].

    Ocean heat content increase globally (top frame) and in four ocean basins (bottom frames).

    “எமது ஆய்வுப் பதிப்பு  1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவுகளில்  பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு  [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங்.  இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices].  அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது.

    Icebergs in the Sea

    கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் 

    21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு.  கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்:  ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது.  நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப்  பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு  என்ன ? மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது.  துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது.

    கிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது.  கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும்.  அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும்.  அப்படிக் கிரீன்லாந்து உருக  பல நூற்றாண்டுகள் ஆகலாம்.  தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன்  என்று  ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது.

    Greenland Ice melting

    http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I

    [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ]

    ++++++++++++++++++++

    கடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப்பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகையாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான்.  அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.  ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை.
    ஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்]
     
    பூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான்.
    டாம் வாக்னர் [Cryosphere Program, NASA Headquarters, Washington.D.C]
    Image result for oceans are warming rapidly
     
     
     
    நாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது.
     
    1992 ஆண்டு முதல் 2015 [?] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது.  சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது.  இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட  உயரம்  ஏறப் போகிறது ?
     Image result for oceans are warming rapidly
    கொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார்.   2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர்  [United Nations Intergovernmental Panel on Climate Change]  அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு  இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது.   இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.
    Image result for oceans are warming rapidly
    இந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால்  உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது.  கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில்  உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறது.  இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள்.  அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது.
    Greenland Rivers -2

    2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year]  என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது.  அதாவது  2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது.  2000 முதல் 2008 வரை அறியப் பட்ட  கடல்  மட்ட  உயரம் : 4 மில்லி மீடர்.  கடைசி  மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.

    Van Den  Broeke [Dutch Researcher Spoke to SPEIGEL ONLINE]

    கிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது !  அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன.

    Image result for oceans are warming rapidly

    2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன.

    லாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

    கிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது.  நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.

    திடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]

    Arctic Ice Region

    “துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும்,  விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும்  கிடைத்தது.   இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது.   பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய்  நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”

    பேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]

    Image result for oceans are warming rapidly

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது.  இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில்  [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது.  கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன.   இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில்  ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000  முதல்  46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல்  61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.

    Arctic Ice Retreat

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!

    Image result for oceans are warming rapidly

    அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    Greenland Iceberg

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    “பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.

    டாக்டர் எரிக் ஐவின்ஸ் [Co-Leader, NASA Jet Propulsion Laboratory]

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

    unnamed (4)

     

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    Greenland Location

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    Melting Days

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது.  கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.

    2.  20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    Fig 1 Carbon Emissions

    Fig 1 Global CO2 Concentrations

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!  கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது.  அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    Image result for oceans are warming rapidly

    5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

    6.  WHO [World Health Organization]  பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வரட்சி, பஞ்சம்,  கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்]  ஆண்டுக்கு 150,000 பேர் மரிப்பார் என்று எச்சரிக்கிறது.

    டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and  [11 Facts About Global Warming]

    Global Warming Effects

    ஆர்க்டிக் வட்டார பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்  [டிசம்பர் 2012]

    துருவப் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகளும்,  பனிக்குன்று களும் உருகி கடல் மட்டம் உயர்வதும், கடல் நீர் வெப்பம் கூடுவதும் கடந்த 50 ஆண்டுகளாய் இரண்டாம் தொழிற் புரட்சி வலுவாகிக் கடும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் கொள்ளளவு மிகையாகி வருவதை யாரும் புறக்கணிக்க முடியாது.  அதனால் பூமியின் பருவ நிலைக்கோளாறுகள், முரண்பாடுகள்  பேரளவில் தோன்றி உலக மக்கள் நடை வாழ்வு, நாகரீகம் சிதைவாகி இன்னல் அடைந்து  வருகிறார்.   21 ஆம்  நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” ஹர்ரிகேன் கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்து நாசமான ஓர் நரகக் காட்சியை தீட்டியது.   2012 அக்டோபரில் அடித்த பூத ஹர்ரிகேன் “ஸாண்டி”  நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூல மாக்கியது.   ஹர்ரிகேன் கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப் பட வேண்டும்.

    CO2 Emissions by countries

    சூட்டு யுகத்தில் 2012 ஆண்டில் அறியப்பட்ட சில எதிர்பாரா விளைவுகள்:

    26 ஆய்வகத்தின் 47 சூழ்மண்டல வாதிகள் கூடி 10 துணைக்கோள்  அறிவிப்புகளைத் திரட்டி, துருவப் பனிப்பாறைச் சரிவுகளின் உறுதியான விளைவுகளை வெளி யிட்டுள்னர். 1992 முதல் 2011 ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகளில் ஐரோப்பாவின் தூர இயக்கு உணர்வு துணைக்கோள் [ERS Mission : European Remote Sensing Satellite] அனுப்பிய தகவல்படி, கிழக்குக் கடற்கரை கிரீன்லாந்தின் பனித் தளம் ஐந்து கி. மீடர் [சுமார் 3 மைல்] சுருங்கி விட்டதாக அறியப் படுகிறது. துருவப் பகுதி பனித்தளப் பரிமாணத்தைக் கண்காணிக்கும் அந்த ஐரோப்பியத் துணைக் கோள் “பரிதி முகநோக்குத் துருவச் சுற்று வீதியில் [Sun-synchronouspolar orbit] சுற்றி வருகிறது. 1992 ஆண்டு முதல் கிரீன்லாந்து அண்டார்க்டிக் பகுதிகளின் பனித் தட்டுகள் உருகிக் கடல் மட்டம் 11 மில்லி மீடர் உயர்ந்துள்ளதாக அறியப் படுகிறது. 2012 ஆண்டு வெளியீட்டின்படி துருவத்தில் கிரீன்லாந்து, அண்டார்க்டிகா இரண்டின் பனிச்சிதைவு 1990 ஆண்டைப் போல் மூன்று மடங்காகப் பெருகி யுள்ளது.

    சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

    Antarctica

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    Global ocean mean temperature

    பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்ட மான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகை யாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

    Atmospheric CO2

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித் தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திர மானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

    Sea Level ChangeImage result for oceans are warming rapidly

    கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion].  அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது!  பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது.  அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.  கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது!  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்ப தாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது!  மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

    Fig 1 Arctic Ice Melting

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    Image result for oceans are warming rapidly

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    Image result for oceans are warming rapidly

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Surviva

    …

    [Message clipped]  View entire message

    Attachments area

    Preview YouTube video Rivers of meltwater on Greenland’s ice sheet contribute to rising sea levels

    Rivers of meltwater on Greenland’s ice sheet contribute to rising sea levels
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    170708 - Krishna Premi - lores

    சர்வம் கிருஷ்ணார்ப்பணமே கிருஷ்ணா! கிருஷ்ணா!
    மர்மம் இதை அறிவார் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    கர்மம் தனைத் துறப்பார் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    தர்மமாய் தலைகாக்கும் கிருஷ்ணா! கிருஷ்ணா!….கிரேசி மோகன்….!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 93

    தேசிய அருங்காட்சியகம், கிப்ரால்ட்டார்

    முனைவர் சுபாஷிணி

    ஸ்பெயின் நாட்டின் தெற்கில், ஆப்பிரிக்க கண்டத்தின் மொரோக்கோ நாட்டின் வடக்கில், அல்போரான் கடல் பிரிக்கும் இடத்தில் இருப்பதுதான் கிப்ரால்ட்டார். ஸ்பேனிஷ் தாக்கத்துடன் கூடிய அரேபிய சொல் – ஜபால் தாரிக் – அதாவது தாரிக் மலைகள் எனப்படுவது கிப்ரால்ட்டார் என வழக்கில் வந்தது. ஸ்பெயின் நாட்டின் தெற்கு எல்லையில் தொங்கிக்கொண்டிருக்கும் இப்பகுதி ஸ்பெயினுக்குச் சொந்தமானதாக இருக்குமோ என சிலர் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. இது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு பகுதி என்பது ஆச்சரியப்படுத்தலாம்.

    ​1

    நான் 2011ம் ஆண்டு தெற்கு ஸ்பெயின் பகுதிகளில் சுற்றுலா சென்றிருந்த சமயம் அங்குள்ள சில பகுதிகளுக்குச் சென்றுவர சுற்றுலாத்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது ஒரு பட்டியலை அளித்திருந்தார்கள். கிப்ரால்ட்டாரின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது. ஸ்பெயினின் கடற்கரை நகரமான மலாகாவிலிருந்து கிப்ரால்டா வாகன பயணத்தில் சென்றடையலாம். மலாகாவிலிருந்து ஏறக்குறைய 100 கிமீ தூரம். வாகனத்தில் செல்லும்போது ஸ்பெயின் எல்லையிலிருந்து கிப்ரால்ட்டாவிற்குச் செல்ல ஒரு பாலம் அமைத்திருப்பதைக் காணலாம். கிப்ரால்ட்டாரின் உள்ளே நுழையும் போது ஒவ்வொருவரும் கட்டாயமாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது அவசியம். பாஸ்போர்ட் சோதனைக்குப் பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாகச் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது.

    கிப்ரால்ட்டாவை முழுமையாக இரண்டே நாட்களில் சுற்றிப்பார்த்து விடலாம். அங்கே வட இந்தியர்கள் கட்டியிருக்கும் ஒரு சிறிய ராமர் கோயிலும் இருக்கின்றது. சிறிய எண்ணிக்கை அளவில் தமிழ் மக்களும் இத்தீவில் வசிக்கின்றார்கள்.

    ​2

    கிப்ரால்ட்டாரின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம். மக்கள் தொகை மொத்தம் 39,000 தான். இங்கு பயன்படுத்தப்படுவது இங்கிலாந்து அரசியாரின் படம் பதித்த பவுண்டு காசுகள் தாம்.

    கிப்ரால்ட்டாரின் புகழ் பெற்ற ஒரு அருங்காட்சியகமாக இங்கே இருப்பது தேசிய அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தைப்பற்றிய சில தகவல்களை அறியுமுன்னர் இங்கு கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தால் மனிதரின் மண்டை ஓட்டினைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

    ​3

    கிப்ரால்ட்டர் பாறைக்குன்றுகள் இருக்கும் பகுதியில் அமைந்திருப்பது ஃபோர்பெஸ் குவாரி. இங்குள்ள கோர்ஹாம் குகைகளில் தான் நியாண்டர்தால் மனிதர்களின் எலும்புக்கூடு மண்டை ஓடு ஒன்று கிட்டியது, இது ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தால் மனித மண்டை ஓட்டிற்குப் பின் கிடைத்த இரண்டாவது நியாண்டர்தால் மண்டை ஓடு என்ற சிறப்பைக் கொண்டது. 1848ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தேசிய கடற்படையைச் சேர்ந்த கேப்டன் எட்முண்ட் ஃப்லிண்ட் இந்த மண்டை ஓட்டைக் கண்டுபிடித்தார். தான் கண்டுபிடித்த இந்த மண்டை ஓட்டின் பழமை, அதன் சிறப்பு என்ன என்பதை அறியாத நிலையிலேயே அவர் இதனை கிப்ரால்ட்டார் சைண்டிஃபிக் சொசைட்டிக்கு அளித்தார். 1864 வரை இதன் சிறப்பு யாராலும் அறியப்படவில்லை. 1856ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் நியாண்டர்தால் எலும்புக்கூடுகள் ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், அது ஹோமோ நியாண்டர்தால் வகை மனிதனின் எலும்புக்கூடு என அடையாளப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கிப்ரால்ட்டாரில் கிடைத்த மனித மண்டை ஓட்டினை ஆராயும் ஆர்வம் இங்கிலாந்தில் தொடங்கியது.

    ​4

    பரிணாம விதி தத்துவக் கொள்கையை விவரித்து எழுதிய சார்ல்ஸ் டார்வின் இந்த மண்டை ஓட்டினை ஆராய்ச்சி செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டார். உடல் நலமில்லாத நிலையில் அவரால் ஆராய்ச்சி மாநாட்டில் சென்று கலந்து கொண்டு இந்த மண்டைஓட்டினை விரிவாக ஆராய இயலாமல் போனது. ஆயினும் அவரது நண்பர்கள் சார்ல்ஸ் லயல், ஹூ ஃபல்கோனர் ஆகிய இருவரும் இந்த மண்டை ஓட்டை அவர் இருக்கும் இடத்திற்கு எடுத்து வர ஏற்பாடு செய்தனர். அதனைப் பார்த்த சார்ல்ஸ் டார்வின் அதிசயப் பொருள் என அதனை வர்ணித்தார். ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

    இந்த மனித மண்டை ஓடு நியாண்டர்தால் மனித இனத்தில் ஒரு பெண்ணின் உடல் என அறியப்பட்டது. 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணின் உடல் இது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்தனர். இதன் வயது 30,000 லிருந்து 50,000 வரை இருக்கலாம் என ஆராய்ச்சி முடிவுகள் தெளிவு படுத்தின.

    இந்த மண்டை ஓட்டினை “கிப்ரால்ட்டர் 1” எனப் பெயரிட்டு இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் நாச்சரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் இதனைப் பாதுகாத்து வருகின்றனர். லண்டனில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் இதனை நான் நேரில் ஒரு முறை பார்த்திருக்கின்றேன்.

    இந்த மண்டை ஓட்டின் மாதிரி, அதாவது ரெப்ளிக்காவை கிப்ரால்ட்டார் தேசிய அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள். இந்த அருங்காட்சியகம் 1930ஆம் ஆண்டு அப்போதைய கிப்ரால்டார் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மண்டை ஓட்டின் மாதிரியோடு கிப்ரால்ட்டார் குன்றுகளில் அகழ்வாய்வின் போதும் குவாரி பணிகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட பல அரும்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள். இங்கே கி.பி.14ஆம் நூற்றாண்டு அரேபிய குளியல் அறை ஒன்றும் பாதுகாக்கப்படுகின்றது. இது இன்று பார்க்கும் போதும் அதன் பழமை சிறப்பை எடுத்துக்கூறும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது அதுமட்டுமன்றி பண்டைய கிரேக்க ஆட்சி இங்கு விரிவடைந்திருந்த போது அமைக்கப்பட்ட கட்டுமானங்களின் சில பகுதிகள் இன்னமும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.

    ​5

    இது மிகப்பெரிய ஒரு அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. உள்ளே நுழைந்தால் அனைத்து அரும்பொருட்களையும் பார்க்கக் குறைந்தது 4 மணி நேரங்களாவது தேவைப்படும். வெவ்வேறு அறைகளில் தனித்தனியாக கிப்ரால்ட்டார் தொடர்பில் அமைந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சம்பவங்களை நினைவுகூரும் வகையிலான செய்திகளும் அரும்பொருட்களும், இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்று என கிப்ரால்ட்டார் அருங்காட்சியகத்தையும் குறிப்பிடலாம். கிப்ரால்ட்டார் தீவு முழுமையுமே வரலாற்று ஆர்வலர்களுக்குப் பல சுவாரசியமான தகவல்களை வழங்கக்கூடிய ஒரு தீவு தான். அதில் இந்த அருங்காட்சியகம் தனிச் சிறப்புடன் அமைந்துள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170707 -Gosakha -lores

    ‘பசுவுயர்ந்து காட்டல் பகவானுக் காக
    விசுவரூபம் கொண்ட வளர்ச்சி: -அசுவரதம்
    பூட்டியவன் காட்டிய பார்த்தன் விசுவரூபப்
    போட்டிக்கு ஏட்டி பசு’’….கிரேசி மோகன்….!

    Share
  • INDIA IV – Bus stops a while

     
    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் யாங் – ஷிக்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    பேருந்து நின்ற சில மணித்துளிகள்

    bus

    தெரு முனையில் சில மணித்துளிகள் நிற்கிறது பேருந்து.
    சாளரத்தினூடே ஓர் சிறுவனைக் காண்கிறேன்
    ஒருகை வேர்க்கடலை நிரப்பிய கூம்புவடிவ காகிதப் பொட்டலத்தைப் பிடித்திருக்கிறான்.

    மின்னும் விழிகளுடன் என்னை நோக்கி வந்தவன்
    தனது பண்டங்களை நான் வாங்க விரும்பினான்.

    பேருந்தில் அமைதியாக அமர்ந்திருந்தேன், என் மனம்
    வெறுமையானதோடு ஆன்மாவும் தொலைந்தது
    வளி பலரை ஒரு யுகத்திற்கே அடித்துச் சென்றுவிடுகிறது.

    Share
  • பாரதி பாடிய பெண்மை

    முனைவர். கோ. வசந்திமாலா

    தமிழ்த்துறைத் தலைவர்

    கலைப்புல முதன்மையர்

    நேரு கலை அறிவியல் கல்லூரி

    கோவை 105

     

    பட்டங்கள் ஆளப்

    பிறந்தவர்கள்!

    பட்டுத்திய பாவையர்கள்

    என்று!

     

    என் பாட்டுக்

    கவிஞன் கவிதைப் பட்டறையில்

    பதுமைகளாய் செதுக்கி

    வைத்தான்!

     

    உயிர் பெற்று

    சிங்கார நடை பயின்று

    சித்திரம் வரைவதை

    என் கவிஞன் எங்கோ

    இருந்து கண்டு

    பரவசம் கொள்கிறான்

    இன்று!

     

    ஆணுக்குப் பெண்

    அடிமையில்லை என்று

    என் கவிஞனின் குரல்கேட்டு!

     

    உறங்கிக் கிடந்த

    உண்மைகள் எல்லாம்

    உயிர் பெற்று நடமாடுவது

    போல்!

    மெய்ப்பிக்கிறது இன்றைய பெண்மை!

     

    சமையலறை சங்கடங்கள்

    எல்லாம் மண்டியிட்டு

    மறைந்து கொட்ட

    சாணிதட்டி கருகு பொருக்கி

    சாய்ங்காலம் வீடு

    வந்து சங்கடமின்றி

    சேவை செய்தோம் அன்று!

     

    கணினி தட்டி

    முகநூலில் முகமும் காட்டி!

    இன்று

    தாயகி தாதியாகி

    தோழியுமாகி சில நேரம்

    தகப்பனும் மாகி

    தரணி போற்ற

    பரணி பாடப்பெறும்

    பெண்மையை என்

    கவிஞன் எங்கோ

    ஓர் மூலையில் நின்று பார்க்கிறான்! காரணம்

     

    அவன் கவிதைகள் எல்லாம்

    கால் முளைத்து நடமாடுகிறது

    இன்று!.

     

    நிமிர்ந்த நன்னடை

    கொண்டு நவீனம்

    படைக்கும் பெண்மை

    என்று!

     

    என் கவிஞன்

    பாடிய கனவுகள் எல்லாம்

    கண்ணியமாய் செயலாக்கம்

    பெறுதல் கண்டு!

     

    வாயடைத்த என் கவிஞன்

    வளரும் புது பெண்மை

    காணுகின்றான்!

    எங்கோ ஓரிடம் நின்று!

     

    நாணமும் அச்சமும்

    நாய்களுக்கும் நரிகளுக்கும்

    வேண்டுமாம் ஞானமும்

    நல்லறிவும் வீரம், இசை

    இவை எல்லாம்!

     

    புறநானூற்றுத் தாயின்

    பரம்பறையில்

    முறத்தாலே புலியை விரட்டிய

    மூத்தவளின் வழி வந்த

    பெண்மை இன்று!

     

    முழு அறிவு நட்குடி

    பெண்ணின் நற்குணங்கள்

    என்று என் கவிஞன்

    பாடிய பாடல்கள் எல்லாம்

    பவனி வரும் எல்லாம்!

     

    இவ் பவனி வரும்

    விழாவில்! ஏதோ

    ஒரு மூலையில்

    நின்று காண்கின்றான்

    என் கவிஞன்!

     

    பார் போற்றும்

    சக்திக்கு கவி

    பாடிய என் கவிஞன்

    பாவையர் எல்லாம்

    பாராண்டு ஊர்போற்றும்

    சக்தியானது இன்று!

     

    என் பாரதி எங்கோ

    ஒரு மூலையில்

    ஆனந்தக் கண்ணீரில்

    அதிசயப் பராசக்திக்கு

    அபிசேகம்

    செய்கின்றானோ?

    வாழ்க என் கவிஞன் பாரதி!!!…

    Share
  • சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி ? (9)

    பவள சங்கரி

    ஆரம்பப்பகுதி

    சிறுவர் இலக்கியம்

    ஆரம்பப்புள்ளியை சரியாகக் கணித்துவிட்டால்
    முற்றுப்புள்ளியை கணக்கிடல் எளிது!

    கதையின் ஆரம்பப்புள்ளியே அடுத்தடுத்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் கோல். ஒரு சுவையான விருந்தில் பசியைத் தூண்டும் ஒரு உணவு போன்றது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல, கதையின் ஆரம்பம் சரியாக அமையவில்லையென்றால் அது வாசகர்களைச் சென்று சேர்வது சிரமம். ஒரு கதையை எழுத ஆரம்பிக்கும்போது அது செல்லும் பாதையை முழுமையாகக் கணிக்கவியலாது. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் கதையின் ஓட்டத்தை சரியான பாதையில் செலுத்த முடியும். ஒரு சில உத்திகளை உதாரணங்களாகக் காணலாம்.

    உத்தி 1 : நறுக்கென்ற வசனமோ அல்லது பட்டென்ற செயல்பாடோ இதில் எதுவாயினும் நல்லதொரு ஆரம்பமாக இருக்கும்.
    “எல்லாம் தயாராக இருக்கிறது. மகிழன் விண்வெளிப் பயணத்தைத் துவங்க வேண்டியதுதான்”
    உலக நன்மைக்காக துணிந்து மகிழ்வுடன் கிளம்பியுள்ள மகிழனின் முதன்முதல் விண்வெளிப்பயணத்தைக் காண உலகமே திரண்டு எழுந்திருந்தது!

    உத்தி 2: சுவையான ஒரு வினாவின் மூலம் சிந்திக்க வைக்கலாம்.
    கனவுகளுக்கு பலன் உண்டா?

    உத்தி 3: நடக்கப்போவதை குறியீடாகக் காட்டலாம்.
    பறவைகளின் ஒலி மிக வித்தியாசமாக இருந்தது. ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடக்கப்போவதின் அறிகுறியை உணர்ந்து அச்சத்தில் அலறும் ஓசை போல இருந்தது.

    உத்தி 4: பாத்திரங்களின் நேரடியான அறிமுகங்களுடன் ஆரம்பிக்கலாம்.
    மலர்மதி ஆறாம் வகுப்பு மாணவி. வகுப்பில் ஒழுக்கம், அறிவு, பண்பு, பொறுப்பு என அனைத்திலும் முன்னணி வகிப்பவள். ஆசிரியர்களுக்கு எப்பொழுதுமே அவளிடம் தனி பாசம் உண்டு. பல மாணவர்களின் கண்களை உறுத்தும் இந்த செயல், மாலதியை சற்று அதிகமாகவே காழ்ப்புணர்ச்சியில் வேகச்செய்தது.

    உத்தி 5: முக்கியமான கதாபாத்திரம் தன்னைத்தானே அறிமுகம் செய்துகொள்வது.
    என் பெயர் தீபா. எனக்கு 12 வயதாகிறது. 7ஆம் வகுப்பு படிக்கிறேன். பள்ளியில் இன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

    உத்தி 6: அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலைத் தூண்டும் ஆரம்பம்.
    பார்சலில் வந்த அந்த பெரிய பொருள் ஏதோ சிறு சத்தம் ஏற்படுத்தியதோடு ‘இதைப்பிரிக்க வேண்டாம்’ என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது. ஆனாலும் சந்தனாவால் தன் ஆசையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. உள்ளே இருப்பதை உடனே பார்க்கவேண்டும் என்ற பேராவல்.

    தவிர்க்க வேண்டியவை:

    ⦁ நீண்ட சரித்திரங்கள்
    ⦁ தீவிர நடவடிக்கை
    ⦁ வளவளவென்ற வசனம்
    ⦁ முகவுரை
    ⦁ அல்பாயுசு பாத்திரங்களை அறிமுகம் செய்வது.
    ⦁ அலாரம் அடித்தது. விழிப்பு வந்தது போன்ற மிக இயல்பான வசனங்கள்.
    ⦁ முக்கிய கதாபாத்திரத்தின் அழுகை, ஆழ்ந்த சோகம் போன்றவை.
    ⦁ குழந்தைகளுக்கு பேரதிர்ச்சி ஏற்படும் வகையில் தேவையற்ற சொல்லாடல்கள்.
    ⦁ குழந்தைகளுக்கு தவறான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தும் தீய சொற்கள்.

    அனைத்திற்கும் மேலாக முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டியது ஒரு பதிப்பகத்தாரையோ அல்லது பத்திரிக்கை ஆசிரியரையோ, வாசகரையோ முதலில் கவர்ந்திழுப்பது அந்த நூலின் முதல் மூன்று பக்கங்களே! குறிப்பாக ஆரம்பகால எழுத்தாளர்கள் என்றால் இது மிக முக்கியமானதொரு விசயம். பெரும்பாலும் ஆரம்பகால எழுத்தாளர்களின் படைப்புகளின் தலையெழுத்தை நிர்ணயிப்பது அந்த ஆரம்ப கட்ட முதல் மூன்று பக்கங்கள் என்றுகூட சொல்லலாம். முதல் மூன்று பக்கங்களில் சரியாகக் கவனம் செலுத்த முடியாவிட்டால் பல மாத உழைப்புக்குரிய அந்த படைப்பு பதிப்பகத்தாரால் புறக்கணிக்கப்படலாம். ஆகச்சிறந்த களம் கொண்ட 100 பக்க நூல் என்றாலும் பலமற்ற ஆரம்பப்பகுதி என்றால் அதை முழுமையாக வாசித்து தரம் பார்க்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைவே.

    தொலைக்காட்சி, இணையம் என்று சரளமாகப் புகுந்து விளையாடும் இன்றைய குழந்தைகளைப் பொறுத்தவரை பதிப்பகத்தார் அளிக்கும் அந்த மூன்று பக்க கருணை வாசிப்பையேனும் அளிப்பார்களா என்பது உறுதியில்லை. நூற்றாண்டுகளான பழங்கதைகளுக்கு இன்றளவிலும் மதிப்பு அளிப்பார்களா என்ற ஐயம் தோன்றுவது இயல்பு. விக்கிரமாதித்தன், பஞ்சதந்திரம், ஹாரி பாட்டர் போன்ற மிகச்சில கதைகளுக்கு மட்டுமே அதற்கு விதிவிலக்கு உண்டு எனக்கொள்ளலாம். அந்த வகையில் இன்றைய குழந்தைகளைக் கவரும் வகையில் நவீனத்துவம் மிகுந்த கதைகளைப் படைப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு அவர்களை உங்கள் நூலை வாசிக்கச் செய்வதும் அவசியம். அதற்கு அந்த படைப்பின் முதல் பகுதி அவர்களைக் கவர்ந்திழுப்பதாக அமைவது முக்கியம். அதற்கு அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைய வேண்டும். முதல் பகுதியே அவர்களை சலிப்படையச் செய்யக்கூடியதாக இருந்தால் அவர்கள் அடுத்த நூலை நாடிச்செல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

    உங்கள் புத்தகம் எதைப்பற்றி சொல்லப்போகிறது என்பதை முதல் பகுதியிலேயே அறியத்தருவது நலம் பயக்கும்.

    காட்டில் வாழும் விலங்குகள் என்றாலும் நாட்டில் வாழும் இந்த மாமனிதர்களைவிட எந்த அளவிலும் குறைந்தவைகள் அல்ல. பசிக்காக மட்டுமே வேட்டையாடும் வழமை கொண்டவைகள்.

    மேற்கண்ட இந்த ஆரம்பம் ஒரு 7/8 வயது சிறுவருக்கு என்ன விளங்கச்செய்யும்? இந்த நூல் காட்டு விலங்குகளின் குணநலன்களை ஆதியோடந்தமாக விளக்கப்போகிறதோ அல்லது தவறு செய்கின்ற மனிதர்களை இனம் காட்டப்போகிறதோ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

    குழந்தைகளை இதுபோன்ற உத்திகள் மூலமாகவே அந்தக் கதையின் சூழலுக்குள் இட்டுச்செல்ல முடியும். அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அமைகிற ஆரம்பம் அந்த கதையை முழுமையாகப் படிக்கத்தூண்டுவதாக அமைந்துவிடும். சில நூல்கள் ஆரம்பத்திலேயே அதிலுள்ள முக்கியமானப் பிரச்சனை குறித்த குறிப்பைக்கொடுத்து உடனடியாக வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். சிறு குழந்தைகளுக்கான படக்கதைகளில் இதை அழகாகச் சொல்வார்கள். வாசித்துக் காட்டுபவர்கள் கண்கள் விரிய வாயைக் குவித்து கையை பரப்பி இப்படி உடல் மொழி மூலமும் புரிய வைக்கும் வகையில் அமையும் கதைகள் சுவை கூட்டுபவை.
    அந்த நட்டநடு இரவில் செவ்வண்ணத்தில் தோய்ந்து கிடந்த அந்த நரி மறைந்து மறைந்து எங்கேதான் போகிறது? ஓ அங்கே அந்த கிழட்டுச் சிங்கம் காத்துக்கிடக்கிறதே?

    இதில் அந்தக் குழந்தை குறுக்கே தன் கற்பனையையும் அவிழ்த்துவிடும். கேள்வியும் கேட்கும். ‘ஏன் அந்த நரி சிகப்பு கலர் பூசிக்கிச்சு’ என்று ஆரம்பித்து சிங்கம் கிழடானா நடக்க முடியாதா…’ என்று இப்படி பல கேள்விகளும் கேட்டு கதையை உரிரோட்டமாக்கிவிடும். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறிவதில் அதீத ஆர்வம் காட்டுவர். அதுவே அந்த கதைக்கும், அதை எழுதியவருக்கும் கிடைக்கும் வெற்றி.

    முக்கியமான கதாபாத்திரம் பற்றி புதிரான செய்திகளைக்கூறி ஆர்வத்தை ஏற்படுத்தலாம். ஏதாவது கேள்வியை எழுப்பி சிந்திக்க வைக்கலாம்.

    “நான் சின்ன பொண்ணா இருந்தப்ப, அப்பா என்றாலே இப்படித்தானா, முரட்டு மீசையும், கையில குச்சியுமா திரிவாங்களா.. அப்பா ஏன் அப்படி அடிச்சார் என்னை. அவரோட இனிமே என்னைக்குமே பேசவே மாட்டேன் அப்படீன்னு ஊருக்கே கேக்கற மாதிரி சத்தம் போட்டேன்”

    இதைப்படிக்கும் குழந்தைக்கு பல வினாக்கள் எழும். அதன் விடை காண அடுத்த பகுதிக்குச் செல்லத் துடிக்கும்.

    “பள்ளிக்குச் செல்லும் வழியில் கொஞ்ச நாட்களாக தினமும் என்னை பின் தொடர்ந்துவரும் அந்த குண்டு மனிதனைப் பற்றி இன்றாவது அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதற்குள் இப்படி ஆகும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை”

    இப்படி ஆரம்பிக்கும் கதை அந்தக் குழந்தையை கட்டாயம் அப்படி என்னதான் நடந்தது என்று அறியும் ஆர்வத்தை தூண்டாமல் இருக்காது. இதில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பல செய்திகளை சுவைபட கொடுக்க முடியும். அறிவுரை என்ற வகையில் இல்லாமல் சுவையான சம்பவங்களினூடே தேவையான பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது சிறந்த யுக்தி.

    பழைய சரித்திரக் கதைகளைச் சொல்லும்போது, அவை நடந்த காலகட்டங்கள், அந்தக்கால மரபு, பழக்க வழக்கங்கள் போன்ற பல சுவையான ஐயங்கள் எழலாம்.
    இப்படி பல வகையில் அவரவர் களத்திற்கேற்ப ஆரம்பப் பகுதியை வடிவமைக்கலாம்.

    தொடருவோம்

    Share
  • துணையெனவே கொண்டிடுவோம் !

      ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று

    நூலகம் போவது யாவர்க்கும் நன்று

    ஆலயம் எங்கள் ஆணவம் போக்கும்

    நூலகம் எங்கள் அறிவினைக் கூட்டும் !

     

    சாதியும் பாராது சமயமும் பாராது

    பதவியும் நோக்காது பணத்தையும் பார்க்காது

    படிக்கின்ற மனமுடையார் பலருக்கும் வரவேற்பு

    பக்குவமாய் கிடைக்குமிடம் நூலகமொன்றேயாம் !

     

    நூல்வாங்க முடியாதார் நூலகத்தை நாடிடுவார்

    நூல்தெரிந்து படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்

    வாழ்வெல்லாம் படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்

    வளமெனவே அமைந்திருக்கும் நூலகத்தை வாழ்த்திடுவோம் !

     

    ஊருக்குள் நூலகம் ஒருகோவில் போலாகும்

    பாருக்குள் நூலகம் பலகோவில் போலாகும்

    வேருக்கு நீராக நூலகங்கள் இருப்பதனால்

    விருப்பமுடன் சென்றிடுவார் வேற்றுமைகள் இல்லாமல் !

     

    கோவில்களும் நூலகமும் நாட்டினுக்கு இலட்சணமே

    கோரமுடன் போர்வரினும் காக்கச்சட்டம் சொல்கிறது

    அதைமீறி சிலநாடு ஆணவத்தால் அழித்துநிற்பின்

    அறமென்னும் பெருநெருப்பு அவர்களையே அழித்துவிடும் !

     

    நூலகத்தைக் கோவிலுடன் ஒப்பிடவே அஞ்சுகிறார்

    குழப்பமெலாம் கோவிலிலே வருமென்றே எண்ணுகிறார்

    நூலகத்தைப் பயனாக்கி நுண்ணறிவு பெற்றுநின்றால்

    நூலகமே கோவிலெனும் நிலையெமக்கு வந்திடுமே !

     

    தாழ்வுமனப் பான்மையினை தான்போக்கி  நிற்பதற்கு

    நூலகத்தின் நூல்களெல்லாம் வாழ்நாளில் உதவிநிற்கும்

    வேலையெல்லாம் முடித்துவிட்டு விருப்பமுள்ள வேளைகளில்

    நாலுமணி நூலகத்தில் நாமிருந்தால் நன்மையன்றோ !

     

    கோவிலுக்கும் சென்றிடுவோம் குறையகற்ற வேண்டிடுவோம்

    நூலகத்தை வாழ்நாளின் துணையெனவே கொண்டிடுவோம்

    கற்பவற்றைக் கற்பதற்கு நூலகத்தைத் தேர்ந்தெடுப்போம்

    கற்றபடி கோவிலிலே கடவுளைநாம் தொழுதுநிற்போம் !

    Share