நான் அறிந்த சிலம்பு – 202

-மலர் சபா

மதுரைக் காண்டம் – 08: துன்ப மாலை

ஆய்ச்சியர் முன்னிலையில் கதிரவனை விளித்துஎன் கணவன் கள்வனோஎன வினவுதல்

காண்பீர்களாக!
தானே வாய்த்த
தீயின் காரணமாய் நிகழ்ந்த
குரவைக் கூத்தினைக் கண்ட
இடையர்குல இளமகளிரே!
நீங்கள் அனைவரும் கேட்பீர்களாக!
இடையர்குல இளமகளிரே!                      sun
நீங்கள் கேளுங்கள்!

காயும் கதிர்களையுடைய
சிவந்த சூரியனே!
பாய்ந்து வரும் அலைகள் உடைய
கடலை வேலியாகக் கொண்ட
இவ்வுலகில்
நிகழ்கின்ற அனைத்தும்
நீ கண்டு அறிவாயே!
‘கள்வனோ என் கணவன்?” என
வானத்தை நோக்கிக் கேட்டாள்.

அசரீரி வாக்கு

அப்போது விண்ணில் இருந்து
ஓர் அசரீரிக் குரல் எழுந்தது.
‘கரிய கயல் போன்ற
கண்கள் கொண்ட மாதே!
உன் கணவன் கள்வன் அல்லன்;
அவனைக் கள்வன் எனப்
பழிசாற்றிய இந்த
மதுரை எனும் ஊரை
ஒளிபொருந்திய தீ உண்ணும்.’

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

படத்துக்கு நன்றி: கூகுள்

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *