மக்கள் கேள்வி மேடை அழைப்பிதழ்

பவள சங்கரி 

91e3a5a0-ec6d-4132-bc8a-0988c99c4f5f

வீடுதோறும் வாக்குகள் சேகரித்தீர்
வீதிதோறும் வேட்பாளர் அணிவகுத்தீர்
நகரெங்கும் வாக்குறுதிகள் வீசிச்சென்றீர்
நாடு முற்றிலும் சுற்றியுரைத்தீர்
தேடுதல் வேண்டியிங்கும் வாக்காளர்
வாடுதல் காண்பீர் நன்னெஞ்சே
கேடுதீர்க்கும் சொல்லின் சுடரேற்றி
வாடுமனத்தின் வயிற்றுத்தீத் தணியத்
தாமுணர்ந்து இரங்கி யிருப்போரை
நாமுணர்ந்து வரவேற்கும் தருணமிது!

ஈரோடு மாநகரில் வாக்காளர் – வேட்பாளர் சந்திப்பு! மூன்று கேள்விகள் உங்களுக்காக உயர்ந்து நிற்கிறது. வாருங்கள் தோழர்களே வாக்களிக்குமுன் வாக்குறுதி பெறுவோம்!

வாக்காளர்களும், வேட்பாளர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களும், வேட்பாளர்களும், சந்திக்கக்கூடிய மக்கள் கேள்வி மேடை எனும் இனிய நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை 7.5 2016 அன்று யாளி ரெசிடெண்சியில் நடைபெற உள்ளது. அது சமயம் தாங்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் எண்ண பிரதிபலிப்புகளை தங்களுடைய பத்திரிக்கைகளின் வாயிலாக பொது மக்களைச் சென்றடையும் வண்ணம் பத்திரிக்கைத்துறை நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

Share

Comments

2 responses to “மக்கள் கேள்வி மேடை அழைப்பிதழ்”

  1. மே 7, 2016 அன்று யாளியில் நடந்ததை பற்றி அறிய ஆவலுடன்,
    இன்னம்பூரான்

  2. அன்பின் ஐயா,

    வணக்கம். நிகழ்ச்சி குறித்த விரிவான பதிவு இதோ இங்கே http://www.vallamai.com/?p=68727 உள்ளது. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *