கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மணமாலை யாக, தினம்அலசிக் கோர்த்து,
தன(து)எழில் தோய்த்துக்கோ தையார்(சூடிக் கொடுத்த சுடர்கொடி), -வனதுளஸி
மார்பனுக்குப் போட்டு மகிழ்ந்தனள் மார்கழியில்,
கார்பனுடன் டேட்டிங் கவி’’(ஆண்டாள்)….கிரேசி மோகன்….
கார்பன் டேட்டிங் -ஆதி காதல் ஆண்டாளுக்கும், அரங்கனுக்கும்….
கார்பன்-கருத்த நிறக் கண்ணன்….