நான் அறிந்த சிலம்பு – 211
மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை
கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல்
இங்ஙனம் பாண்டிமாதேவி
தன் தீயகனா பற்றி உரைத்தாள்.
திருமகள் உறையும்
மார்பை உடைய மன்னன்
அரசி கூறியதைக் கேட்டபடி இருந்தான்.
அச்சமயம் அரசன் வாசலை
அடைந்தாள் கண்ணகி;
அங்கே நின்றிருந்த காவலனை நோக்கி,
“வாயிற் காவலனே! வாயிற் காவலனே!
அறிவு முற்றும் இல்லாதவனாக,
கொஞ்சம் கூட
அறநினைவு இல்லாதவனாகவும்
அரச நீதி தவறியவனுமாகிய
பாண்டிய மன்னனின் வாயிற் காவலனே!
பரல்களை உடைய
ஜோடிச் சிலம்புகளுள்
ஒன்றை மட்டும் கையில் ஏந்தியவள்,
தன் கணவனை இழந்தவள்,
வாயிலில் வந்து நிற்கிறாள்…
என்று உம் மன்னனுக்கு
நீ அறிவிப்பாயாக!
இங்ஙனம் கூறினாள்.
படத்துக்கு நன்றி:
கூகுள்