மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இன்று ஒரு முகம் கண்டேன்
கண்டபொழுதை மறக்க முடியமா?
இருவரும் சந்தித்த இடத்தை
மறக்க இயலுமா?
எனக்குத் தகுதி யானவள் அவளே;
எமது சந்திப்பை
இந்த உலகம் அறிய வேண்டுமென
விழைபவன் நான்.
வேறோர் நாளெனின் நினைவில் கொள்ளேன்.
தெரியாமல் போகும்.
இன்றென் கனவில் தோன்றுவாள்!
வீழ்வேன் காதலில்! ஆம் நான்
வீழ்வேன் காதலில்!
மீண்டும் என்னை அழைக்கிறாள்
மறுபடி!
இதுபோல் வேதனை இதுவரை
எனக்கில்லை!
தனித்துக் கிடந்தேன்!
சிலவற்றை நான் இழந்தேன்!
மற்ற பெண்டிரை நானினி நோக்கேன்!
உன்னைப் போல் இல்லை
அப்பெண்டிர்;
மீண்டும் என்னை விளிக்கிறாள்
மறுபடி!
வீழ்ந்தேன் காதலில்! ஆம் நான்
வீழ்ந்தேன் காதலில்!


Leave a Reply