மோடி பண்றது ஞாயமா?
நீ எவ்வளவு நோட்டை எக்ஸ்ச்சஞ் பண்ண?
என்ன இந்த வருஷமும் அதே மழை உண்டா?
எட்டாம் தேதி என் ஏ சீ வாசல்ல கூட்டத்தை பாத்தயா?
எவனும் சில்லறை தர மாட்டனுங்க.
என்ன எழுதினான் சோ… இப்ப ஆஸ்பிட்டல்ல பாத்தியா?
விஷால் பண்றது மட்டும் சரியா என்ன?
ஜீ டிவி வந்து விஜய்க்கு தண்ணி காட்டுறான் .
அந்த ராயர் கேப் டேஸ்ட் போச்சுடா.
கொஹ்லி இஸ் ப்ராமிசிங், எங் ப்ளட்.
டே, வைகுண்ட ஏகாதேசி பாஸ் மறக்காதே.
அரட்டை அழகு சுழல் .வைத்து பாரும் கால்களை …..ஒரே இழு
நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .
வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .
சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .