Tag: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    கண்ணன்கை கோர்த்து காண்டீபர் செல்வதை
    கண்ணில்லா மன்னரதைக் கேட்டதும் -கண்ணன்காண்
    மந்திரி சஞ்சயா மன்னனெனை வாட்டாதே!
    எந்திரி போநீ எழவு’’….!

    திருதராட்டிரன் கோபம் கண்டு சஞ்சயன் சுதாரித்து….!

    அந்தக மன்னன் அறிவுசால் மந்திரி
    சஞ்சயன் கண்டதைக் கேட்டனன் -வெஞ்சமர்
    கூடிநின்று பாண்டவர் கூடா கெளரவரை
    வாடிநின்று பார்த்த விதம்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிருஷ்ணகாளி
    ———————-


    “யாதுமாகி நின்றவள் எங்கும் நிறைந்தவள்
    யாதவனாய் இங்கே எழுந்தருளி -ஊதுகுழல்
    கண்ணனாய் காட்சி கொடுக்கின்றாள்(ன்), கல்கத்தா
    மண்ணின் மயானத்தின் மீது”….கிரேசி மோகன்….

    Kannamma!

    Kali and Krishna are one and the same. Both names mean “Black”…

    Picture below is from Krishnakali Mandir in Kolkata… Where Krishna and Kali are seen as a single form! The temple
    stands on a cremation ground associated with the great Kalighat Temple in Kolkata…

    Share
  • ஆண்டவன் விருது…..

     

    படமும் பாடலும்….!
    ——————————————-


    ’’பாண்டவன் தேருச்சி பாய்ந்து பறந்தவர்,
    ஆண்டவன் பஞ்சமுக ஆஞ்சனேயர், -தூண்டவும்,
    ஆண்டவனால் புத்தாண்டு ஆரம்பம் நாளின்று
    வேண்டுதல்வேண் டாமை விருது’’….கிரேசி மோகன்….

    ஆண்டவன் ஸ்வாமிகள் சித்தி….!

    Share
  • யுகாதி வாழ்த்துகள்…..!

     

    யுகாதி அன்று எழுதியது….!
    ————————————————

    தகாது தவிர்த்துநல் தக்கவை ஏற்று
    யுகாதியில் எந்தரோக்க ளோடு -மகானுவாய்
    சித்திறையை சேர்வதற்கு சாதகம் செய்திட
    சித்திரையில் காண்பாய் ஜெயம்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161027 – Rajagopala -wcol-lores

    கண்ணபிரான் காயாம்பூ வண்ணபிரான் வெண்ணைமண்
    தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான் -பின்னமுறான்
    முன்னவனாம் தென்மதுரை அன்னையவள் அண்ணனையே
    எண்ணவரும் ஏகாந்தம் இங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • ’’படமும் பாடலும்….!

     

    ராஜாஜி பாடல்….!
    ——————————————

    கருத்து மூதறிஞர் ராஜாஜி….
    —————————————————-

    ”உள்ளே உறங்குபவர் வெள்ளே வரமாட்டார்,
    வெள்ளே விழித்திருப்போர் வேலிதாண்டிச் -செல்லார்
    சுடுதடியால் வெட்டியான் செத்தோரை சாத்தும்,
    சுடுகாட்டிற்(கு) ஏனோ சுவர்’’….கிரேசி மோகன்….!

    படமும் பாடலும்….!
    —————————————–
    ”அடியேன் இரண்டு ஓவியங்கள் கிண்டியில் பொறியியல் படிக்கும் காலத்தில் வரைந்தேன்….இருவருமே மூதறிஞர்கள்….ஒருவர் ‘’ராஜாஜி’’….மற்றவர் ‘’சோ ராமாசாமி’’ அவர்கள்….திரு. சோ சார் ஓவியத்தில் கையெழுத்து வாங்கி தருவதாக ஓவியத்தை வாங்கிச் சென்ற எங்கள் குடும்ப வைத்தியர்(டாக்டர் ஜெகதீஸன் ‘’சோ சாருக்கு’’ நெருங்கியவர்) இப்போது சொர்கத்தில் உள்ளார்(’’டாக்டர் சோ வந்துருக்கார் சொர்கத்திற்கு கையெழுத்து வாங்கி வையுங்கள் அடியேன் வருகையில் கலெக்ட் செய்து கொள்கிறேன்’’)…..’’ராஜாஜி’’ ஓவியத்தில் வாங்கித் தருவதாகச் சொன்ன என் தாத்தாவும் சொர்கம் சென்று விட்டார்….!

    எனது ‘’சாக்லேட்-கிருஷ்ணா’’ ‘’சோ சாரின்’’ ‘’சம்பவாமி யுகே யுகே’’, வாலி சாரின் ‘’கலியுகக் கண்ணன்’’ தழுவல் என்றால் மிகையாகாது…

    ‘’சோ சார்’’ சொர்கம் சென்றுள்ளார் ‘’ஜெ-அம்மாவுக்கு’’ ஆலோசனை வழங்க….வாழ்க ‘’சோ சார்’’ வளர்க அவரது புகழ்….

    என்னால் முடிந்த இரங்கற்பா சோ சாருக்கு….!

    பாடல்
    ————–

    ‘’சே’’என்(று) எவருமே சொல்லமாட் டார்துக்ளக்
    ‘’சோ’’என்ற ராமசாமி சொல்வதை; -’’நா’’வென்ற
    நாடகத் தந்தை நயத்தகு வாக்கது
    ஆடகச் செம்பொன் அழகு’’….கிரேசி மோகன்….!

    விவேகா ஃபைன் -ஆர்ட்ஸ் பூஜைப் பாடலில் ‘’ஆடகச் செம்பொன் மேனி முருகனே ‘’ என்ற வரி வரும்….முருகரும் அழகு ,சோ சாரின் எழுத்தும் அழகு’’…..!

    Share
  • ’படமும், பாடல்களும்’’…..!

     

    ஐயப்பன் வெண்பாக்கள்
    ——————————

    ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
    வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணென்ற
    பெண்மைக்கும் பெண்பாதி ஆண்மைக்கும் சேயானோய்
    உண்மைக்குள் உய்ய உதவு….

    அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
    கரியாடை பூண்டோன் கரத்தில் -அறிவே
    அரனில் அரியை அறிய புரிவாய்
    சரணம் சபரி மலைக்கு….

    அத்தனும் பித்தனும் சித்தம் ஒருமித்த
    தத்துவமே தான்தோன்றி தற்பரமே -சத்குரு
    ஈசா சபரிகிரி வாசா சரணமுற்றோர்
    நேசா வணக்கம் நினக்கு….

    வங்கக் கடல்கடைந்த சிங்கனும் சங்கரனும்
    அங்கம் கலக்க அவதரித்த -எங்களின்
    அண்ணா மலைபுர அய்யன்தேர் கண்டதில்
    பண்ணாத பாவமும் போச்சு….

    பிறப்பெனக்கு வேண்டும்நின் பம்பையில் நீராய்
    இறப்பணைந்த கற்பூரத் தீயாய் -மறப்பெனக்கு
    காமக் குரோத உலோபமத மாச்சரியம்
    நாமத் திருநீறோ னே…

    பங்குனி உத்திரத்தன்று எழுதியது….!
    ———————————————-

    ’’பங்குனி உத்திரா பந்தளப் புத்திரா
    செங்கட் திருமால் சுமந்தவா -இங்குநீ
    தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
    ஊன்றிடும் கோலுன் உறவு’’….

    ’’பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
    மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
    இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
    தொல்லையாம் தேங்காய் தெறித்து’’….

    ’’மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
    மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
    அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
    சபரிகிரி வாசன் ஜனிப்பு’’….

    ”சங்குதிரி சூலத்தை சேரப் பிறந்தவன்,
    பங்குனி உத்திரன்முன், பம்பையில் -முங்கி
    சரணம் விளிப்போர்க்கு சாதகங்கள் இன்றி
    மரண ஜனனம் முடிவு’’….

    ஐயப்பன் திருப் புகழ்….
    —————————

    “புலிவா கணத்தில் மணிமா லையுற்ற,
    மலையே றுபக்தர் -குருநாதா
    திருவா திரைக்கும் திருவோ ணருக்கும்
    சிசுவாய் ஜனித்த -சபரீசா

    புலிவால் பிடித்த கதையாய் ஜகத்தில்
    புழுவாய் துடிக்கும் -எமதான்மா
    அருணா சலத்தில் ரமணே சருற்ற
    அனுபூ திபெற்று -இகவாழ்வில்

    ஜொலியாய் ஜொலிக்க வருவாய் சுருக்க
    குருவாய் இருக்க -எரிமேலி
    விசுவா சமிக்க திருவா வர்நட்பு
    உடையோய் எனக்கு -அருள்வாயே

    பலிமேல் பதித்த அடியால் வரத்தை
    உறமால் குடைக்குள் -சிறிதாகி
    உலகேழ் அளக்க விரிவான் விதிர்க்க
    வளர்மோ கினித்தாய் -பெருமாளே”….(or ) பெறும்ஆளே…

    “ஈரைந்து மாதங்கள் ஈன்றோள் மடியிருந்து,
    பாரைம் புலன்களால் பாழுற்றாய் , -ஈரொன்,
    பதுபடி ஏறி பதிசபரி ஈசன்
    கதியென்(று) இருமுடி கட்டு”….

    ”இன்று வருவாரோ!, நாளை வருவாரோ!,
    என்று வருவார் எமனென்று, -மென்று
    முழுங்கிடாது நெஞ்சே, மணிகண்டன் தாளில்
    புழங்கிட நீலிமலை போ”….

     

    “வீறுபுலி வாகன(ம்)உ லாவுமுகம் ஒன்று
    வாவருடன் தோழமைகு லாவு(ம்)முகம் ஒன்று
    மாறுபடு மோகினிசு மந்தமுகம் ஒன்று
    மேலரவம் பூணுமரன் தந்தமுகம் ஒன்று
    மாறன்வழி போகாமல் மேய்க்கும்முகம் ஒன்று
    ஏறுமடி யார்கள்பயம் போக்குமுகம் ஒன்று
    கூறும்சர ணாகதியை கேளு(ம்)முகம் ஒன்று
    கானிலுறை காந்தசப ரீசமணி கண்டா”….!

    ‘இளங்காலை சூரியன்போல் இன்று மணிகண்டர்
    அலங்காரம் அற்புதம், அந்தோ, -விளங்காது,
    சாஸ்தா சரணமென்று சொல்லிடச் செல்லாது,
    WASTEடாய் அமர்ந்தேனே வீடு’’….கிரேசி மோகன்

    ——————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘’சாகக் கிடக்கும் சிலருக்கு நீசொல்லும்
    யோகநலம்(யோகஷேமம்) எப்படி யாதவா! -பாகனுரை(தேர்பாகன் கண்ணன் உரை)

    வீணாகிப் போகா விடாமுயற்சி யோகமிது
    தானாக மீறாது தன்வரம்பை -வாநாளில்
    எள்ளளவு செய்வோரை எப்பயம் சூழ்ந்தாலும்
    உள்ளிருந்து காக்கும் உரை”….!கிரேசி மோகன்….!

    Share
  • ’’படமும் பாடலும்’’….!

     

    பட்டம்மாள் பேத்தி நித்யஸ்ரீ வீட்டுக்கு விஜயம்….!
    ————————————————————————————————–

    ”பாட்டியின்(பாட்டம்மாள்) ஓவியம் பார்க்கும் பரவசத்தில்
    ஓட்டமாய் வந்தாரென் வீட்டுக்கு -நாட்டமாய்
    ஃஃபோட்டோபோஸ்(Photo Pose) தந்தார், படிதாண்டா பத்தினிக்கு
    பாட்டுப்பெண் பார்த்த பலன்’’….கிரேசி மோகன்….!

    Dr.டி.கே.பட்டம்மாள்….!
    —————————————————

    ’’பட்டம்மாள் நிதயஸ்ரீ பேத்திக்கு சொத்தாக
    விட்டுப்போ னாள்பாட்டைப் பாசுரமாய் : கிட்டப்போய்
    டாக்டரம்மா மாத்திரை தாருமென்றால், தந்திடுவார்
    டாக்டரம்மா சங்கீத டானிக்’’….!கிரேசி மோகன்….!

    Share
  • ’’படமும் பாடலும்’’….!

     

    சு.ரவியின் யசோதா கண்ணன்(ரவி வர்மர் என்று நினைக்கின்றேன், அந்த ஓவியம் பார்த்து வரைந்தது, வெண்பா எழுதியது)….!
    ————————————————————–

    அம்மணக் கண்ணன், அலங்காரம் செய்கையில்
    கம்மென நிற்பதன் தாத்பர்யம் -நம்மனம்
    புத்தியை மாற்றிடும் யுக்தியாம் கீதையை
    ஒத்திகை பார்ப்பதற்க் கோ….!

    அன்னை புரியும் அலங்காரம் பாராது
    என்னதான் அப்படி யோசனை -கண்ணனே
    ராதை பிறந்தாளா? காதல் புரிவாளா?
    ஆதலினால் தானே அலுப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”இந்திரன் குன்றுக்காய், இந்திரன்சேய் கீதைக்காய்,
    தொந்திரவு மாமேகம்(சரணாகதி) தாமுவுக்கே(தாமோதரர்க்கே) -வந்துறவு
    கொண்டாடும் கன்றுக்கு கீதையா சொல்வது!
    திண்டாடும் சேய்க்கேகீ தை”….கிரேசி மோகன் ….!

    Share
  • ’’கண்ணாடி ‘’

     

    ’’கண்ணாடி ‘’ பற்றிய பகிர்வு டாப் -கிளாஸ் ராம்னாத்….!

    ‘’வாளால் வகிர்ந்தாலும், வாளா(து) இருந்தாலும்,
    நாளாம்நா ளாம்திருநாள் நம்பிக்கை, -ஜூலாவோய்(ஜூலா ஓய்)!;
    கண்ணாடி போல்பிறர் முன்னாடி பேசிடு
    பின்னாடி பாதரஸப் பூச்சு!’’….கிரேசி மோகன்….!

    ஓவியர் & இயக்குனர் ‘’பாப்புவின்’’ ஸ்கெட்ச் பார்த்து வரைந்தது….!கண்ணாடி காரிகை….!

    Share
  • ’’காரடையான் நோன்பு’’….!

     

    ”ஆயிரம் பேருடையான் ,ஆண்டாளின் தாருடையான(மாலை)
    பாயிரம் நாலா யிரமுடையான் -ஆயினன்
    சீரடைவு கொண்டு சுமங்கலியாய் வாழ்ந்திட
    காரடையான் நோன்பில்கால் கட்டு”….

    ”பாம்பில் படுத்தவனைப், பத்த வதாரனை,
    சாம்பலான் பத்தினி சோதரனை, -நோம்பன்று,
    கண்ணனை நெஞ்சில் கருதி மணிக்கட்டில்
    கண்ணிநுண் தாம்பாகக் கட்டு’’….கிரேசி மோகன்…..!

    Share
  • ”SWEET LITTLE MOTHER”….!

     

    I HAVE A SWEET LITTLE MOTHER
    WHO LIVES IN MY HEART
    WE ARE SO HAPPY TOGETHER
    WE SHALL NEVER PART….மொழிபெயர்ப்பு
    ————————————————————

     

    என்னுள் இருக்கின்றாள் சின்னக் குழந்தையாய்
    அன்னை அவரென்(று) அறிந்துணர்ந்தேன் -பின்னிப்
    பிணைந்தோம் எமக்குள் பிரிவில்லை என்றும்
    இணைந்தோம் இதயத்தில் இன்(இனிய)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”நெஞ்சுரம் பெற்றான் நவனீதர் கீதையால்
    அஞ்சிலே மத்யமர் அர்ஜுனன் -வெஞ்சமர்
    வீதியில் தேரினை விட்டிடு அச்சுதா!
    நீதிநிலை நாட்டுவேன் நான்’’….கிரேசி மோகன்….!

    Share