Tag: வையவன்
-
ஐந்து கை ராந்தல் (16)
வையவன்“எங்கே கூட்டிக்கிட்டுப் போறே?”“பேசாம வாயேன்”அவர்கள் ராயப்பேட்டையில் பஸ் ஏறி எலியட்ஸ் ரோட் ஸ்டாப்பிங்கில் இறங்கி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தனர்.குவார்ட்டர்ஸுக்குப் போய்ப் பார்த்தான் சிவா. பிரீதா இல்லை. கதவு பூட்டியிருந்தது. பக்கத்தில் கேட்டான்.“டே ஷிப்ட்!”“எப்ப முடியும்?”“மாலை ஆறு மணி.”“அஞ்சு மணிக்குள்ளாரே கொழந்தைங்க எல்லாம் ஸ்கூல்லேருந்து திரும்பி வந்துடும்” என்று கவலையோடு சொன்னாள் திஷ்யா.இவள் தான் செத்துப் போவதாகச் சொன்னவள் என்று நினைத்தான் சிவா. அசந்தர்ப்பமாக அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதை திஷ்யா பார்த்து விட்டாள்.நர்ஸிங் ஹோமுக்குப் போகும் பாதையில் அவனை அவள் தொடர்ந்தவாறே கேட்டாள்.“என்ன சிரிப்பு?”“வீட்டைப் பூட்டினியா?” என்று பேச்சை மாற்றினான்.“இந்த ‘டெக்னிக்’ வேண்டாம். நீ எதுக்கு சிரிச்சே?”அவன் பதிலளிக்கவில்லை.“இவதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாகப்போறேன்னு சொன்னவண்ணு நெனச்சியாக்கும்?”“அபாண்டம்”“செத்துட்டா கவலையில்லே. உயிரோட உள்ள வரைக்கும் உண்டு. போகட்டும். அந்த நர்ஸ்கிட்டே நீ என்ன கேக்கப்போறே? ஐடியாவா?”“எக்ஸாக்ட்லி”“ஒனக்குன்னு ஒரு ஐடியாவும் தோணலியா?”“நீ மேஜராயிட்டியா?”“ஏன், திருநீர்மலையிலே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கறியா?”“அதுக்கில்லே; ஒன்னை கடத்திக்கிட்டுப் போனதா ஒங்கப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்திடப் போறாரு.”“கவலைப்படாதே முந்தா நாளு எனக்கு பதினெட்டு முடிஞ்சு போச்சு. அந்த அளவுக்கு அவர் போகமாட்டார். ஒன் ஐடியா என்ன.. அதைச் சொல்லு.”“அதான் யோசிக்கிறேன்.”“சிவா, நான் எனக்கு ஒரு பிரச்னையா இருந்தது போயி ஒனக்கு ஒரு பிரச்னையாயிட்டனா?”சிவாவுக்கு அந்த நிராதரவில் மனசு விண்டு போயிற்று.“இந்த மாதிரி பேசாதே!” என்று வருத்தமாய்ச் சொன்னான். திஷ்யா மௌனமாய் விட்டாள்.ரிசப்ஷனில் அவர்களை நிற்க வைத்தாள் ரிசப்ஷனிஸ்ட். ஃபோனை எடுத்து நர்ஸிங்ஹோமின் உள்ளே எங்கோ பேசினாள்.“யார் வேணும்?”“நர்ஸ் பிரீதா.”“ப்ளீஸ் வெய்ட் தேர்” எதிரிலிருந்த பெஞ்சை சுட்டிக்காட்டினாள்.லாமினெட் வழவழப்பு மின்னிய அகலமான பெஞ்சில், மின் விசிறியும் சுற்றியிருந்த மர நிழலும் தந்த குளிர்ச்சியில் அவர்கள் உட்கார்ந்தபோது மனசு சற்று ஓய்ந்தது.பத்து நிமிஷத்தில் பிரீதா வந்தாள். நர்ஸ் உடையில் தலைக்கு ஹுட் வைத்து மலர்ந்து சிரித்துவரும் அவளைக் கண்டதும் ஒரு தேவதையைக் கண்ட ஆஸ்வாசமாக இருந்தது.“ப்ராப்ளமாணோ?”காலையில் தானே சொல்லியனுப்பினேன் என்ற தொனியில் சிரித்துக் கொண்டே கேட்டாள்.“தனியாப் பேசணும்” என்றான் சிவா.பிரீதா ரிஸ்ட்வாட்சைப் பார்த்தாள்.பெஞ்சில் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் திஷ்யா நெளிந்தாள்.பிரீதா ரிஸப்ஷனிஸ்டை நெருங்கி “மேரி வந்நோ?” என்று கேட்டாள்.“ஓ… ஷி கேம் ஜஸ்ட் ஹாஃப் அன் அவர் அகோ.”“கனெக்ஷன் தரூ.”போனில் அந்த மேரி உடனே கிடைத்தாள்.“ஞானாணு ப்ரீத. எனிக்கொரு அர்ஜண்ட்ஜோலி. கேட்டோ. ரிலீவ் மீ ஃபர் ஹாஃப் அன் அவர், ஐயே நாட்டி! கஸ்ட் வன்னதா! ஷ்யூர்… இன்ஃபார்ம் தி சீஃப் ஐ’ல் மேனேஜ்.”பிரீதா போனை வைத்தாள்.“போகாம்.”அசோகமர நிழல் படர்ந்த சிமெண்ட் பெஞ்சு ஒன்று வெளியே காலியாக இருந்தது. மூவரும் அதில் போய் உட்கார்ந்தனர்.“ஒய் திஷ்யா ஈஸ் டல்?” என்று பிரீதா ஆரம்பித்தாள். திஷ்யா சிரிக்க முயன்றாள். சிவா மளமளவென்று விஷயத்தைச் சொன்னான்.“இவளுடைய அப்பா இவ சினிமாவிலே நடிக்கணும்னு கம்பெல் பண்றார். இவளுக்கு இஷ்டமில்லே. இன்னிக்கு ஸ்கிரீன் டெஸ்ட். வீட்டுக்கு வண்டி வர்றதா இருந்தது. இவ ஒர்க்ஷாப்புக்கு என்னை வரச்சொல்லி ஆள் அனுப்பினா. போனேன். அங்கிருந்து நேரா இங்கே வர்றோம்.”பிரீதா ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கேட்டாள்.“சினிமாவிலே ஆக்ட் பண்ண இஷ்டமில்லே! வாட் எ குட் கர்ல்!” பிரீதா சிலாகித்தாள்.“இதைச் சொல்ல ஈ காலத்திலே ஒரு மனோ திடம் வேணும்” என்று மலையாளத் தமிழில் சொன்னாள்.“அப்பா ரொம்ப கம்பெல் பண்றார். ஹி ஈஸ் மேட் ஆஃப்டர் மனி.”பிரீதா பெருமூச்சு விட்டாள்.“அவர்கிட்டே…” என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன் சிவா குறுக்கிட்டான்.“பேசிப் பார்த்துட்டேன். ஷி வில் டைன்னு கூடச் சொன்னேன்.அவர் அசையறதா தெரியலே!”திஷ்யா உதட்டைக் கடித்துத் தலை குனிந்தாள்.“நீ வீட்டை விட்டு வரான் தயாரோ?” என்று தடுமாறும் தமிழில் கேட்டாள். திஷ்யா இந்தக் கேள்வி தனக்கு என்று உணர்ந்து நிமிர்ந்தாள்.“எப்படி?”“என்னோட வந்து இரு.”“தெரியாமயா… திருட்டுத் தனமாவா…”“நோ. நீ வந்துடு. நான் அவர்கிட்டே போய்ப் பேசிக்கறேன்.”திஷ்யா தயங்கினாள்.“நாட் ஃபர் எவர். அவருடைய தவறு அவருக்குப் புரியற வரை.”“கொழந்தைகளுக்கெல்லாம் யார் சமைப்பாங்க? வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க? சிவா அவளுக்குப் பிரதிநிதியாகக் கேட்டான்.“இவ சினிமாவிலே ஆக்ட் பண்ண சம்மதிச்சிருந்தா வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க?”திஷ்யா அந்தக் கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்தாள்.“இவ இல்லேன்னா அந்த வீடு என்னவாகும்னு அவருக்குத் தெரியணும். லெட்ஸ் டு ஒன் திங். இவங்க ரிலேடிவ்ஸ் யாரும் கிட்டே இல்லியா?”“வியாசர்பாடியிலே சித்தி இருக்காங்க. அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க. பெங்களூர்லே அத்தை இருக்காங்க. அங்கே வீடு சின்னது. எல்லாரும் அங்கே போக முடியாது” என்றாள் திஷ்யா.“நான் சொல்ல வந்தது அது இல்லே. அவங்க எல்லோரும் என் க்வார்ட்டர்ஸுக்கு வரட்டுமே!”சிவா திஷ்யாவைப் பார்த்தான்.“இட்ஸ் டூ மச் ஃபர் யூ” என்று திஷ்யா சொன்னாள். அப்படி வரட்டுமே என்று சொன்ன வார்த்தைக்கே அவள் மனசிலவ் நன்றி நிரம்பிவிட்டது. பிரீதா மீது வைத்திருந்த ஓரிரு தப்பபிப்ராயங்களும் அதில் மூழ்கிப் போயின.‘பட் திஸ் ஈஸ் மோர் தான் டூ மச் ஃபர் எ கர்ல்M!”சிவாவைப் பார்த்து சிரித்து கொண்டே பிரீதா தொடர்ந்தாள்.“இந்த ஆண்களுக்கு விக்கிறதுக்கு பெண்ணைத் தவிர இப்ப வேற எதுவும் கெடைக்கலே.”“எல்லா ஆண்களுக்குமல்ல” என்று உஷ்ணமாக மறுத்தான் சிவா.“ஆல் அஃப் யூ அட்மிட் இட்! ஒய் காண்ட் சம் ஒன் ஃபைட் இட்? ஏன் ஒர்த்தர் கூட இதுக்குப் போராடலே.”“அதான் வந்திருக்கேன்.”“இன்னிக்கு சாயங்காலமா நான் வீட்டுக்கு வர்றேன். நீயும் நானும் அவர்கிட்டே பேசுவோம். இப்ப இவ நம்ம க்வார்ட்டஸ்ல இருக்கட்டும். அவர் பிடிவாதம் பிடிச்சா கொழந்தைகளை இவ போயி அழைச்சிட்டு வரட்டும்.”திஷ்யா குறுக்கிட்டாள்.“இல்லே. நான் வீட்டுக்குப் போறேன். நீங்க ரெண்டு பேரும் சாயங்காலம் வாங்க. பேசிப்பாருங்க. ஒத்துக்கலேன்னா கௌம்பி வர்றேன்” என்று நிறுத்தினாள் சிவாவைப் பார்த்து.“நல்லது” என்றான் சிவா.“ஐ அக்சப்ட். நானும் சிவாவும் சாயங்காலம் வர்றோம்.”சிவா எழுந்தான்.“நானும் வர்றேன். லெட்ஸ் ஹாவ் எ கூல்டிரிங்க்” என்று அவர்களை வழியனுப்ப வந்தாள் பிரீதா.பஸ்ஸில் வரும்போது திஷ்யா கேட்டாள்.“ஏன் நீ இங்கே போகப் போறோம்னு மொதல்லே சொல்லலே?”“சொல்லியிருந்தா ஒனக்குப் பிடிச்சிருக்காது. நீ அந்த பிரீதாவை அநாவசியமா வெறுத்தே!”“சீச்சீ… அவ நல்லவள்.”தொடரும் -
பயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு
பவள சங்கரி
அன்பினிய நண்பர்களுக்கு,
வணக்கம். சென்ற மார்ச் மாதம் (1, 2015) ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் மற்றும் சுரேஜமீ எழுதிய இரு கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரைகள் குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.
திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு
அன்பிக்கினிய அனைவருக்கும் வணக்கம்.
வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் முடிவு அறிவிக்க நாளானது, மன்னிக்கவும்.
இணையத்தின் பயன்பாடுகள் சேவைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான இரு சேவைகள் குறித்த கட்டுரைகள் வல்லமைக்கு வந்திருக்கின்றன.
முதலாவதாக இணையத்தில் கிடைக்கும் இலவச புத்தகங்கள், நூலகங்கள், குறித்து திருமதி. தமிழ்முகில் நீலமேகம் தந்திருக்கும் விவரங்கள். அருமையான பல விவரங்களை தொகுத்து அளித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரை இணையத்தில் சமூக வலைதளங்கள், அதில் இருக்கும் சாதக பாதங்கள், பாதுகாப்பு முறை என விரிந்து செல்லும் கட்டுரை. அருமையான தொகுப்பு சுரேஜமி. தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்.
இரண்டுமே முக்கியமான கட்டுரைகள். இருந்தும் பலருக்குத் தெரியாமல் இருக்கும், இளைய தலைமுறைக்கு உந்துகோலாக, வாசிப்பைத் தூண்டவும், அறிவை விசாலமாக்கவும், பள்ளி, கல்லூரி, ஆய்வுகள் என அனைத்து வகையினருக்கும் உதவும் இணைய புத்தகங்களும் நூலகங்களும் குறித்த கட்டுரை என்னளவில் வெற்றி பெற்ற கட்டுரையாகிறது. வாழ்த்துகள் திருமதி தமிழ்முகில்
Iyappan Krishnan
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. -
ஐந்து கை ராந்தல் (15)
வையவன்
செம்மஞ்சளாகப் பிளந்திருந்த பப்பாளிப் பழத்துண்டங்களில் கருமுத்துகளாய் மின்னிய விதைகளை ஸ்பூனில் வழிக்கப் போனாள் பிரீதா.
நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவா “வெய்ட்” என்று தடுத்தான்.
பீங்கான் கோப்பையில் அவள் அந்த எவர்சில்வர் ஸ்பூனை அப்படியே விட்டாள். ‘ணங்’கென்று ஓர் இனிய ஒலி வந்தது.
“வாவ். ஹவ் லவ்லி” என்றான்.பிரீதாவும் அந்த அழகில் லயித்தாள்.
“செம்மஞ்சள் மேகத்தில் மிதக்கும் கறுப்பு தேவதைகள்” என்றான்.
“பிரிந்த இதயத்தின் நிராசைக் கருமணிகள்” என்றாள் பிரீதா.சிவா “வொண்டர் ஃபுல்” என்று அவள் உவமையைச் சிலாகித்தான். அவளைப் பார்த்தான். அந்தக் கண்களில் அந்த இனிய பிரீதா இல்லை. இவள் பிரச்னையை எதிர் கொள்பவள். குளிர்ச்சியான ஒளியூட்டுகின்ற பிரீதா இல்லை.
இவள் வேறு-விளக்கின் கீழே நிற்கும் கருநிழல் மாதிரி.சிவா அவளிடம் அந்த அந்நியத்தைக் கண்டு அதைச் சந்திக்கப் பிரியமின்றி பார்வையை ஒதுக்கினான்.
“உனக்கு திஷ்யாகிட்டே என்ன அப்படி ஒரு அக்கறை?”
மெல்ல கடற்காற்று அசோக மரங்களை உயிர்ப்பித்தது.சிவாவுக்கு அவள் இன்னும் சில அடிகள் முன்னேறி வருவது போல் ஓர் உணர்வு.
“இன்னிக்குக் காலையிலே அவள் ஒர்க்ஷாப்புக்கு தம்பியை அனுப்பி என்னைக் கூட்டி வரச் சொன்னா”
“அதுக்கு மேலே?” அவள் தூண்டினாள்.“அதுக்கு மேலேயும் உண்டுண்ணு இன்னிக்குத்தான் வாய் விட்டுச் சொன்னாள்.”
“ஓ”
பிரீதா இதை இயல்பாகச் சொன்னாளா என்று அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் புன்னகை செய்ய முயன்றாள். அதில் வலி தென்பட்டது.சிவாவின் கண்களில் அவள் எதையோ ஆழ்ந்து தேடினாள்.
“உனக்கும் உண்டா?”
“நேத்து வரைக்கும் இருந்தது.”
“இப்ப…”
“யோசிக்கிறேன்”
“ஏன்?”
“தாமுவுக்கு அவள் பேரிலே என்ன இன்ட்ரஸ்ட் இருக்கும்னு தெரிஞ்சபிறகு யோசிக்காம என்ன பண்றது?”
“பப்பாளி விதையை எடுத்துடட்டுமா?”
“ஓ… எஸ்!”
பிரீதா விதைகளை அகற்றினாள். இன்னொரு சாஸரில் இரண்டு துண்டங்களை எடுத்து வைத்தாள்.“சாப்பிடு”
அவன் கீழ்ப்படிவது போல் பழத் துண்டங்களில் செருகியிருந்த ஸ்பூனில் வெட்டினான்.
அவன் பழத்தை அருந்தும் போது அவளும் கூட சாப்பிடத் தொடங்கினாள்.
“எதற்காக யோசிக்கிறே?”“ம் ம்…” என்று அவள் கேள்வி புரியாது எங்கோ நினைவில் கரைந்திருந்த சிவா விழிப்பு வந்து கேட்டான்.
“தாமு என்னை மனிதனாக்கியிருக்கிறார்”
“நன்றி விசுவாசமா?”“அது மட்டுமல்லே.”
“பின்னே?”
“திஷ்யா தாமுகிட்டே இன்னும் மகிழ்ச்சியா இருக்கலாம்.”
“உன்னை விரும்பின பிறகா?”“விருப்பங்கள் நிலையானவையல்ல”
“வாட் டு யூ மீன்?”
“வசதிகளைத் தான் மனசு எப்பவும் தேடுது. இன்னும் ஒண்ணுமே ஆகாத என்னாலே என்ன வசதி செஞ்சுட முடியும்? இந்தச் சினிமா சான்சை விட்டுட்டதுக்கு அவளே பின்னால வருத்தப்படலாம்.என்னை விரும்பியதுக்கும் சேர்த்து வருத்தப்படலாம். அவளே இல்லேண்ணாலும் அவங்க அப்பா, குடும்பம் எல்லாரும் அப்படி அவளை நெனைக்க வச்சுடலாம்.”
“வாட் அபவ்ட் திஷ்யா? அவள் மனசு என்ன? தாமு யார் என்னண்ணு அவளுக்கு நல்லாத் தெரியும். அவ தாமுவை லைக் பண்ணுவாளா?”
“இல்லே”
“தென்?”
“தென் இட்ஸ் ஹெர் ஒன் ப்ராப்ளம்”
“இந்த ஒலகத்துக்கு நீ ஒரு மிஸ்ஃபிட் சிவா”
அவன் சிரித்தான்.“இது நீ வாழ வேண்டிய காலமில்லே. நீ ஒரு நூற்றாண்டு பின்னாடி இருக்கே”
“ஆ, இருக்கட்டுமே. ஒலகம் ரொம்பப் பெரிசு. அதற்குப் பொருத்தமானவங்களே மெஜாரிட்டி ஆயிட்டாலும் மைனாரிடிக்கு ஒரு மூலை இருக்கு.”
“இதான் டிஃபீடிஸம். தோல்வி மனப்பான்மை.”“இது ஒரு மனப்பானந்மை. வெற்றியோ தோல்வியோ நாலு பேர் குத்தற முத்திரை. முத்திரைகளுக்கு வாழாம மனசுக்காக வாழ்கிறவனுக்கு இது விஷயமில்லே. தேர் அர்ஸோ மெனி மிஸ்ஃபிட்ஸ். நல்ல யோசிச்சா மிஸ் ஃபிட்ஸ் தான் மெஜாரிடி.”
சிவா ஸ்பூனில் மற்றொரு பப்பாளிப் பழத்துண்டை எடுத்தவாறே பேசினான்.
“நீயும் என்னைப் போலவே ஒரு கோழைதான் சிவா.”
“ஆமா… நாம வாழ்க்கைக்கு வசதிகளுக்கு. அது நமக்கோ பிறருக்கோ இல்லாமப் போறதுக்கு ரொம்பப் பயப்படறோம்.”“தென்… நீ ஏன் பேனா எடுத்து எழுதறே. தன்னை விரும்புகின்ற நம்புகின்ற ஒருத்தியை ஏத்துக்க முடியாதவன்-அந்த பிரச்னைகளுக்குப் பயப்படறவன் என்ன எழுத்தாளன்?”
அவன் அதிர்ச்சியுற்றான்.“பின்னாலே இந்தத் தோல்வி மனப்பான்மைக்கு கோழைத்தனத்திற்கு அழகான ஜோடனைகள் செய்து கதை எழுதுவே, பெரிய காதல் தோல்வி மாதிரி நீ இதைப் போஸ் பண்ணுவே”
பிரீதாவிடம் இப்படி ஒரு பக்கத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.‘நான் அப்படியா பிரீதா”
“நீ மட்டுமில்லே. யூ மென், மோஸ்ட் ஆஃப்யூ ஆர் லைக் திஸ். ஒங்களுக்குப் பெண் வேணும்; பிரச்னைகள் இல்லாமே. லகுவா பொறுப்பு ஏத்துக்கனும்ணா ஒங்களுக்கு கசக்கும். எந்த சாக்கிலே கை கழுவலாம்னு யோசிப்பீங்க.”
சிவாவுக்கு அவள் இன்னும் பேசட்டும் என்று ஒரு வெறி வந்தது.அவளுடைய வார்த்தைகள் உளித்தாக்கு போல் இறங்கி அவனைச் செதுக்கின.
அவன் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்தான். வடிவமைப்பின் பரிணாமங்களில் உரிந்து உரிந்து வீழ்ந்தான்.“ஒங்களுக்கெல்லாம் காதல் வேணும். காதல் பிடிக்கும். அதன் பிரச்னைகளுக்கு நீங்க துடிதுடிப்பீங்க. ஆனா அது இன்னொருத்தருடையதா இருக்கணும். வென் இட் கம்ஸ்டு யூ. சமுதாயம்… தியாகம்… அது இதுண்ணு உங்க சுயநலத்துக்காக நீங்க போலிக் காரணங்களைத் தேடுவீங்க…”
சிவா ஸ்பூனைக் கீழே வைத்து விட்டான்.இவள் வேறு பிரீதா. கொதிப்புற்றவள். வெடிக்கின்றவள்.
மெய்மறந்து போய் அவன் கேட்டுக் கொண்டிருப்பது உறைத்த மாதிரி பிரீதா நிறுத்தினாள்.
“ஸாரி சிவா.”
“ப்ரொஸீட்… மேலே சொல்லுங்க. எக்ஸ்ப்ளய்ன் யுவர் செல்ஃப்.”
அவள் முகம் குப்பென்று சிவந்தது.“ஐ டிட்ன்ட் மீன் யூ”
“நோ… இட்ஸ் ஆல் ரைட்.. நானும் ஆண். அதே வர்க்கம், கேரி ஆன்.”
அவள் உதட்டை மென்றுகொண்டே அவனை ஊடுருவுவது போன்று பார்த்தான். பிரீதாவின் கண்களிலிருந்து முத்து முத்தாக ஒரு மௌனத்தினிடையே நீர்த்துளிகள் உருண்டன.“பிரீதா” என்று ஒன்றும் புரியாமல் முனகினான்.
அவள் சட்டென்று திரும்பி சமையலறைக்குப் போய் விட்டாள். பத்து நிமிஷம்… பதினைந்து நிமிஷம்… சிவா அங்கே ஒரு சம்பந்தமற்றவன் போன்று உட்கார்ந்திருந்தான்.
அங்கே உட்கார்ந்திருப்பதா… எழுந்து செல்வதா என்று புரியாமல் கொஞ்சம் குழம்பினான்.
சமையல் அறைக்கு உள்ளே போய் அவளை எந்த விதத்திலாவது தேற்ற வேண்டுமா என்று யோசித்தான்.பேசாமல் அங்கே உட்கார்ந்திருப்பதைத் தவிர தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டவன் போன்று அமைதியாக சாஸரில் வைக்கப்பட்டிருந்த பப்பாளிக் கீற்றை ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக நறுக்கிக் கொண்டே அதை அருந்தாமல் வெறுமனே நறுக்கிக் கொண்டே அதன் சிதைவைக் கவனித்தான்.
பதினைந்து நிமிஷம் கழித்து டிரஸ் மாற்றிக் கொண்டு வந்தாள். பிரீதா.
பவுடர் டச்-அப் செய்திருந்தாள். அழுத முகமல்ல பழைய பிரீதா. இனிய, சுமுகமான, ஒளி பாய்ச்சுகின்ற பிரீதா.
“சரி… நாம கௌம்புவோமா?” என்று அப்படி எதுவும் நடக்கவில்லை போன்று புன்னகையுடன் கேட்டாள்.“எங்கே?”
“திஷ்யா வீட்டுக்குத்தான்”
அவளை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம் என்பது சிவாவுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.
அவனும் எழுந்தான்.தொடரும்
-
ஐந்து கை ராந்தல் (14)
வையவன்
“எங்கே கூட்டிக்கிட்டுப் போறே?”
“பேசாம வாயேன்”
அவர்கள் ராயப்பேட்டையில் பஸ் ஏறி எலியட்ஸ் ரோட் ஸ்டாப்பிங்கில் இறங்கி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தனர்.
குவார்ட்டர்ஸுக்குப் போய்ப் பார்த்தான் சிவா. பிரீதா இல்லை. கதவு பூட்டியிருந்தது. பக்கத்தில் கேட்டான்.“டே ஷிப்ட்!”
“எப்ப முடியும்?”
“மாலை ஆறு மணி.”“அஞ்சு மணிக்குள்ளாரே கொழந்தைங்க எல்லாம் ஸ்கூல்லேருந்து திரும்பி வந்துடும்” என்று கவலையோடு சொன்னாள் திஷ்யா.
இவள் தான் செத்துப் போவதாகச் சொன்னவள் என்று நினைத்தான் சிவா. அசந்தர்ப்பமாக அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதை திஷ்யா பார்த்து விட்டாள்.
நர்ஸிங் ஹோமுக்குப் போகும் பாதையில் அவனை அவள் தொடர்ந்தவாறே கேட்டாள்.
“என்ன சிரிப்பு?”
“வீட்டைப் பூட்டினியா?” என்று பேச்சை மாற்றினான்.
“இந்த ‘டெக்னிக்’ வேண்டாம். நீ எதுக்கு சிரிச்சே?”
அவன் பதிலளிக்கவில்லை.“இவதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாகப்போறேன்னு சொன்னவண்ணு நெனச்சியாக்கும்?”
“அபாண்டம்”
“செத்துட்டா கவலையில்லே. உயிரோட உள்ள வரைக்கும் உண்டு. போகட்டும். அந்த நர்ஸ்கிட்டே நீ என்ன கேக்கப்போறே? ஐடியாவா?”“எக்ஸாக்ட்லி”
“ஒனக்குன்னு ஒரு ஐடியாவும் தோணலியா?”
“நீ மேஜராயிட்டியா?”“ஏன், திருநீர்மலையிலே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கறியா?”
“அதுக்கில்லே; ஒன்னை கடத்திக்கிட்டுப் போனதா ஒங்கப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்திடப் போறாரு.”
“கவலைப்படாதே முந்தா நாளு எனக்கு பதினெட்டு முடிஞ்சு போச்சு. அந்த அளவுக்கு அவர் போகமாட்டார். ஒன் ஐடியா என்ன.. அதைச் சொல்லு.”
“அதான் யோசிக்கிறேன்.”“சிவா, நான் எனக்கு ஒரு பிரச்னையா இருந்தது போயி ஒனக்கு ஒரு பிரச்னையாயிட்டனா?”
சிவாவுக்கு அந்த நிராதரவில் மனசு விண்டு போயிற்று.“இந்த மாதிரி பேசாதே!” என்று வருத்தமாய்ச் சொன்னான். திஷ்யா மௌனமாய் விட்டாள்.
ரிசப்ஷனில் அவர்களை நிற்க வைத்தாள் ரிசப்ஷனிஸ்ட். ஃபோனை எடுத்து நர்ஸிங்ஹோமின் உள்ளே எங்கோ பேசினாள்.
“யார் வேணும்?”
“நர்ஸ் பிரீதா.”“ப்ளீஸ் வெய்ட் தேர்” எதிரிலிருந்த பெஞ்சை சுட்டிக்காட்டினாள்.
லாமினெட் வழவழப்பு மின்னிய அகலமான பெஞ்சில், மின் விசிறியும் சுற்றியிருந்த மர நிழலும் தந்த குளிர்ச்சியில் அவர்கள் உட்கார்ந்தபோது மனசு சற்று ஓய்ந்தது.
பத்து நிமிஷத்தில் பிரீதா வந்தாள். நர்ஸ் உடையில் தலைக்கு ஹுட் வைத்து மலர்ந்து சிரித்துவரும் அவளைக் கண்டதும் ஒரு தேவதையைக் கண்ட ஆஸ்வாசமாக இருந்தது.
“ப்ராப்ளமாணோ?”
காலையில் தானே சொல்லியனுப்பினேன் என்ற தொனியில் சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“தனியாப் பேசணும்” என்றான் சிவா.பிரீதா ரிஸ்ட்வாட்சைப் பார்த்தாள்.
பெஞ்சில் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் திஷ்யா நெளிந்தாள்.
பிரீதா ரிஸப்ஷனிஸ்டை நெருங்கி “மேரி வந்நோ?” என்று கேட்டாள்.“ஓ… ஷி கேம் ஜஸ்ட் ஹாஃப் அன் அவர் அகோ.”
“கனெக்ஷன் தரூ.”
போனில் அந்த மேரி உடனே கிடைத்தாள்.“ஞானாணு ப்ரீத. எனிக்கொரு அர்ஜண்ட்ஜோலி. கேட்டோ. ரிலீவ் மீ ஃபர் ஹாஃப் அன் அவர், ஐயே நாட்டி! கஸ்ட் வன்னதா! ஷ்யூர்… இன்ஃபார்ம் தி சீஃப் ஐ’ல் மேனேஜ்.”
பிரீதா போனை வைத்தாள்.“போகாம்.”
அசோகமர நிழல் படர்ந்த சிமெண்ட் பெஞ்சு ஒன்று வெளியே காலியாக இருந்தது. மூவரும் அதில் போய் உட்கார்ந்தனர்.
“ஒய் திஷ்யா ஈஸ் டல்?” என்று பிரீதா ஆரம்பித்தாள். திஷ்யா சிரிக்க முயன்றாள். சிவா மளமளவென்று விஷயத்தைச் சொன்னான்.“இவளுடைய அப்பா இவ சினிமாவிலே நடிக்கணும்னு கம்பெல் பண்றார். இவளுக்கு இஷ்டமில்லே. இன்னிக்கு ஸ்கிரீன் டெஸ்ட். வீட்டுக்கு வண்டி வர்றதா இருந்தது. இவ ஒர்க்ஷாப்புக்கு என்னை வரச்சொல்லி ஆள் அனுப்பினா. போனேன். அங்கிருந்து நேரா இங்கே வர்றோம்.”
பிரீதா ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கேட்டாள்.
“சினிமாவிலே ஆக்ட் பண்ண இஷ்டமில்லே! வாட் எ குட் கர்ல்!” பிரீதா சிலாகித்தாள்.“இதைச் சொல்ல ஈ காலத்திலே ஒரு மனோ திடம் வேணும்” என்று மலையாளத் தமிழில் சொன்னாள்.
“அப்பா ரொம்ப கம்பெல் பண்றார். ஹி ஈஸ் மேட் ஆஃப்டர் மனி.”
பிரீதா பெருமூச்சு விட்டாள்.“அவர்கிட்டே…” என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன் சிவா குறுக்கிட்டான்.
“பேசிப் பார்த்துட்டேன். ஷி வில் டைன்னு கூடச் சொன்னேன்.அவர் அசையறதா தெரியலே!”
திஷ்யா உதட்டைக் கடித்துத் தலை குனிந்தாள்.“நீ வீட்டை விட்டு வரான் தயாரோ?” என்று தடுமாறும் தமிழில் கேட்டாள். திஷ்யா இந்தக் கேள்வி தனக்கு என்று உணர்ந்து நிமிர்ந்தாள்.
“எப்படி?”
“என்னோட வந்து இரு.”
“தெரியாமயா… திருட்டுத் தனமாவா…”
“நோ. நீ வந்துடு. நான் அவர்கிட்டே போய்ப் பேசிக்கறேன்.”திஷ்யா தயங்கினாள்.
“நாட் ஃபர் எவர். அவருடைய தவறு அவருக்குப் புரியற வரை.”“கொழந்தைகளுக்கெல்லாம் யார் சமைப்பாங்க? வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க? சிவா அவளுக்குப் பிரதிநிதியாகக் கேட்டான்.
“இவ சினிமாவிலே ஆக்ட் பண்ண சம்மதிச்சிருந்தா வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க?”
திஷ்யா அந்தக் கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்தாள்.“இவ இல்லேன்னா அந்த வீடு என்னவாகும்னு அவருக்குத் தெரியணும். லெட்ஸ் டு ஒன் திங். இவங்க ரிலேடிவ்ஸ் யாரும் கிட்டே இல்லியா?”
“வியாசர்பாடியிலே சித்தி இருக்காங்க. அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க. பெங்களூர்லே அத்தை இருக்காங்க. அங்கே வீடு சின்னது. எல்லாரும் அங்கே போக முடியாது” என்றாள் திஷ்யா.“நான் சொல்ல வந்தது அது இல்லே. அவங்க எல்லோரும் என் க்வார்ட்டர்ஸுக்கு வரட்டுமே!”
சிவா திஷ்யாவைப் பார்த்தான்.“இட்ஸ் டூ மச் ஃபர் யூ” என்று திஷ்யா சொன்னாள். அப்படி வரட்டுமே என்று சொன்ன வார்த்தைக்கே அவள் மனசிலவ் நன்றி நிரம்பிவிட்டது. பிரீதா மீது வைத்திருந்த ஓரிரு தப்பபிப்ராயங்களும் அதில் மூழ்கிப் போயின.
‘பட் திஸ் ஈஸ் மோர் தான் டூ மச் ஃபர் எ கர்ல்M!”
சிவாவைப் பார்த்து சிரித்து கொண்டே பிரீதா தொடர்ந்தாள்.“இந்த ஆண்களுக்கு விக்கிறதுக்கு பெண்ணைத் தவிர இப்ப வேற எதுவும் கெடைக்கலே.”
“எல்லா ஆண்களுக்குமல்ல” என்று உஷ்ணமாக மறுத்தான் சிவா.“ஆல் அஃப் யூ அட்மிட் இட்! ஒய் காண்ட் சம் ஒன் ஃபைட் இட்? ஏன் ஒர்த்தர் கூட இதுக்குப் போராடலே.”
“அதான் வந்திருக்கேன்.”“இன்னிக்கு சாயங்காலமா நான் வீட்டுக்கு வர்றேன். நீயும் நானும் அவர்கிட்டே பேசுவோம். இப்ப இவ நம்ம க்வார்ட்டஸ்ல இருக்கட்டும். அவர் பிடிவாதம் பிடிச்சா கொழந்தைகளை இவ போயி அழைச்சிட்டு வரட்டும்.”
திஷ்யா குறுக்கிட்டாள்.“இல்லே. நான் வீட்டுக்குப் போறேன். நீங்க ரெண்டு பேரும் சாயங்காலம் வாங்க. பேசிப்பாருங்க. ஒத்துக்கலேன்னா கௌம்பி வர்றேன்” என்று நிறுத்தினாள் சிவாவைப் பார்த்து.
“நல்லது” என்றான் சிவா.“ஐ அக்சப்ட். நானும் சிவாவும் சாயங்காலம் வர்றோம்.”
சிவா எழுந்தான்.“நானும் வர்றேன். லெட்ஸ் ஹாவ் எ கூல்டிரிங்க்” என்று அவர்களை வழியனுப்ப வந்தாள் பிரீதா.
பஸ்ஸில் வரும்போது திஷ்யா கேட்டாள்.“ஏன் நீ இங்கே போகப் போறோம்னு மொதல்லே சொல்லலே?”
“சொல்லியிருந்தா ஒனக்குப் பிடிச்சிருக்காது. நீ அந்த பிரீதாவை அநாவசியமா வெறுத்தே!”
“சீச்சீ… அவ நல்லவள்.”தொடரும்
-
ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்
அண்ணாகண்ணன்
வல்லமை மின்னிதழ், 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், நாம் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். இன்று வரை சுமார் 8 ஆயிரம் இடுகைகள், 9.7 ஆயிரம் பின்னூட்டங்கள், 2.2 லட்சம் வாசகர்கள், 8.1 லட்சம் பக்க நோக்குகள் ஆகியவற்றுடன் வல்லமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
161 நாடுகளிலிருந்து வாசகர்கள்,வல்லமைக்கு வந்திருந்தாலும், 70 நாடுகளுக்கும் மேலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகள், இதே வரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.
கடந்த ஓராண்டில் வல்லமை, 4 போட்டிகளை நடத்தியுள்ளது. என் பார்வையில் கண்ணதாசன், மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் ஆகிய கட்டுரைப் போட்டிகளைக் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் அவர் நண்பர்களுடன் இணைந்து நடத்தி முடித்துள்ளது. எழுத்தாளர் வையவனின் ஆலோசனைப்படி, பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற மாதாந்திரக் கட்டுரைப் போட்டியை அறிவித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறது. வாராந்தரப் படக்கவிதைப் போட்டியை வாசகர்களின் அமோக ஆதரவுடன் நடத்தி வருகிறது. தேமொழியின் யோசனையை ஏற்றுத் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிக்காக, சாந்தி மாரியப்பன் படங்களைத் தேர்ந்தெடுத்து அளிக்க, மேகலா, இதற்கான நடுவராக இருந்து, உரியவர்களை நன்முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்.
வாரந்தோறும் ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதும் சிறந்த ஆற்றலாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்துள்ளோம். இந்தப் பணியை அன்பர்களின் பரிந்துரைகள் அடிப்படையில், ஆசிரியர் குழுவுடன் கலந்தாலோசித்துத் தேமொழி சிறப்பாகத் தொடர்கிறார்.
இந்த ஓராண்டில் பல்வேறு தொடர்களை வல்லமை வெளியிட்டுள்ளது. சொற்சதங்கை – கவியுள்ளம் – காற்று வாங்கப் போனேன் (கே.ரவி), திருமால் திருப்புகழ் – கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம் (கிரேசி மோகன்), இசைக்கவியின் இதயம் (இசைக்கவி ரமணன்), என்னதான் இருக்கிறது வேதத்தில் (சு.கோதண்டராமன்), அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (சுபா), ஐந்து கை ராந்தல் (வையவன்), சுட்டும் விழிச்சுடர் (பவளசங்கரி), இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (சக்தி சக்திதாசன்), கவியரசு கண்ணதாசன் (காவிரி மைந்தன்), அவன், அது , ஆத்மா – காலம் (மீ.விசுவநாதன்), உன்னையறிந்தால் (நிர்மலா ராகவன்), நான் அறிந்த சிலம்பு (மலர்சபா), குறளின் கதிர்களாய் (செண்பக ஜெகதீசன்), தேகமும் யோகமும் (கவியோகி வேதம்), காதல் நாற்பது (ஜெயபாரதன்), ஓலைத் துடிப்புகள் (கவிஞர் ருத்ரா), சிகரம் நோக்கி (சுரேஜமீ)… எனத் தொடரும் தொடர்கள், வல்லமைக்கு வளமையும் பெருமையும் சேர்ப்பவை.
இவையல்லாமல், நாகேஸ்வரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு நடப்புகளைக் குறித்துப் பத்திகளை எழுதி வருகிறார்கள். ஆய்வறிஞர்களும் பேராசிரியர்களும் தங்கள், ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்கள். இவை வாசகர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்து வருகின்றன.
கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுத்து வடிவில் மட்டுமின்றி,ஒலி வடிவிலும் வல்லமையில் கேட்க முடியும். கே.ரவி, இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.மணி உள்ளிட்ட பலரின் பாடல்கள், வல்லமை நேயர்களின் நெஞ்சம் கவர்ந்தவை. எழுத்தும் ஒலியும் இணை சேர்ந்து வருவதைப் போல், எழுத்தும் ஓவியமும் சு.ரவியின் ஆக்கங்களில் இணை சேர்ந்து, வாசகர்களை வசீகரிக்கின்றன.
வல்லமையின் இடுகைகளின் தொகுப்பினை ஒவ்வொரு நாளும் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே கொண்டு சேர்க்கும் வசதியும் வல்லமையில் உண்டு. சிறிது காலம் செயல்படாமல் இருந்த இந்த வசதி, நம் தள நிர்வாகி ஸ்ரீநிவாசன் அவர்களின் உதவியால், இப்போது மீண்டும் செயல்படுகிறது. வாசகர்களும் படைப்பாளர்களும் வல்லமை முகப்பில் பின்னூட்டங்களுக்கு மேலே உள்ள பெட்டியில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இட்டு, வல்லமையின் எல்லா இடுகைகளையும் அறியலாம்.
வல்லமையின் சீரிய வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. கனிவும் அர்ப்பணிப்பும் மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்.
இந்த இனிய தருணத்தில் இசைக்கவி ரமணன் அவர்களின் கனிந்த வாழ்த்து, நமக்கு உற்சாகம் ஊட்டுகிறது.
இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!எனத் துல்லியக் கவிபாடி, நம் உள்ளங்களை அள்ளிய தெள்ளியர், அவர்.
பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!என்ற அவரின் வாழ்த்து, வல்லமைக்கு மேன்மேலும் வலிமை ஊட்டுகிறது. அவரது கூற்றின்படி, பைந்தமிழின் களஞ்சியமாய் விரிவோம். பாரெங்கும் தொண்டுகள் புரிவோம்.
-
ஐந்து கை ராந்தல் (13)
வையவன்
தனது சொந்தப் பொறுப்பில் ஒர்க்ஷாப் வந்த முதலாவது நாளை அவன் வெகு இயல்பாக ஏற்றுக் கொண்டான். பிரீதாவிடம் பேசி விட்டு வந்ததில் ஒரு தெளிவு கிடைத்தது.
தாமு…அம்மா… வெற்றிவேல்… பிரீதா எல்லோரும் அக்கரையில் நின்ற நிழல் உருவங்கள் ஆயினர்.
ஒர்க்ஷாப் அவனைக் கம்பீரமாக ஸ்வீகரித்தது. அது என்னவோ பந்தயக் குதிரை போன்று, ‘என்னை ஏற்று அடக்கு’ என்று குரல் கொடுப்பது போன்று தென்பட்டது.‘நான் எழுத்தாளன் என்ற கர்வத்தை வெளியே இறக்கி விடுகிறேன்.’
‘எனக்கு ஒர்க்ஷாப்பைப் பற்றி ஒன்றும் தெரியாத அச்சத்தை அகற்றி வைக்கிறேன்.’
‘எனது வேலையும் எனது தொழிலும் இதுதான். இதை நான் வணங்குகிறேன்.’
மந்திரம் ஜபிப்பது போல் மனசிற்குள் சொல்லி விட்டு அவன் ஒர்க்ஷாப்பைத் திறந்தான்.பத்து நிமிஷத்தில் ஆபீஸ் அறையைச் சுத்தம் செய்கிறவன் வந்து பெருக்கி குப்பை வாரிவிட்டுச் சென்றான்.
தாமு செய்வது மாதிரி ஒரு கட்டு ஊதுவத்தியைக் கொளுத்தி அங்கிருந்த ஸ்டாண்டில் செருகினான்.
மேஜை டிராயரைத் திறந்தான்.எடுத்த எடுப்பில் ஒரு பச்சை ஃபைல் தென்பட்டது. அதை எடுத்துத் திறந்தான். அதன் முதலாவது காகிதம். பவர் ஆஃப் அட்டர்னி சர்ட்டிபிகேட்டின் நகல். பாங்கில் ஒர்க்ஷாப் அக்கவுண்டில் பணம் எடுக்கவும் போடவும் முழு அதிகாரத்தை தாமுவுக்கு சிவா வழங்கியிருந்தான்.
அந்த சுதந்திரம் எப்படிப்பட்ட விலங்கு!
யோசித்தவாறே சிவா அடுத்த காகிதத்தைப் புரட்டினான்.ஒர்க்ஷாப்பின் மாதாந்திர வரவு செலவு பட்ஜெட். முதல் வரியிலேயே அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.
கே.சிவா – மானேஜிங் பார்ட்னர் – மாதாந்திர சன்மானம் ரூபாய் நாலாயிரத்து ஐநூறு.பிரீதாவின் சொற்கள் ஒரு மந்திரம் போன்று அவனுள் ஒரு கிளர்ச்சியை இப்போது உண்டாக்கின.
“யு ஆர் எ மேன். மனுஷ்யன்”
அவள் சொன்னாள். தாமு அவனை மனிதனாக்கி யிருந்தான்.காலை எட்டு மணிக்கெல்லாம் அவனுக்கு வியர்த்தது, எழுந்து சென்று ஃபானைச் சுழல விட்டான். ஆனால் இதெல்லாம் எதற்கு? மாதா மாதம் நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு தான் தாமுவினால் விலை கொடுத்து வாங்கப் பட்டிருக்கிறோமோ?
அவன் பைலின் ஒவ்வொரு காகிதத்தையும் புரட்டிப் பார்த்தான். ஒர்க்ஷாப்பின் பேரில் கரண்ட் அக்கவுண்ட்டில் லட்சத்து சொச்சம் ரூபாய் இருந்தது.அவன் விரும்பினால் அந்த தொகை முழுவதையும் எடுத்தாள முழு அதிகாரமும் அவனுக்கு வழங்கப் பட்டிருந்தது. ஒர்க்ஷாப்பின் இண்டு இடுக்கு விவரங்களை யெல்லாம் பார்த்தவுடனே அவன் புரிந்து கொள்கின்ற மாதிரி குறித்து வைத்திருந்தான்.
இந்த விவரங்களை எழுதித் தயாரிக்க அவனுக்கு இரண்டு நாட்கள் பிடித்திருக்கும். ஏன் இப்படி மெனக்கெட்டான்?
எந்த நோக்கம்? ஒரு வேளை அப்படி எதுவும் இல்லையா?எட்டே காலுக்கு சீனியர் மெக்கானிக் செங்குட்டுவன் வந்தான். ஒன்பது மணிக்குள் ஒவ்வொருவராகத் தொழிலாளர்கள் வந்தனர்.
தாமு இல்லை. அவனது ஆக்ஞை அரூபமாக அந்த ஒர்க்ஷாப்பில் பிரசன்னமாயிருந்தது. சிவா ஒர்க்ஷாப்பில் ஐக்கியமானான்.
திஷ்யா, ப்ரீதா, தாமு, அம்மா வேள்வித் தீயின் ஜ்வாலை முன் ஒளியும் சுடரும் தவிர்த்து வேறு யாவும் அர்த்தமிழப்பது போன்று எல்லோரும் மறைந்து விட்டனர்.
நீ மனிதன் என்ற வாக்கு மட்டும் இயங்கு சக்தியாக மிஞ்சிற்று. சொன்னவளை கூட மறந்து விட்டான். அம்பாஸிடர்.. பென்ஸ்.. டயோட்டா… போன் கால்கள்.. கடிதங்கள்.. ஹார்ன் ஒலிகளை இயந்திரங்களில் புத்துயிர் பாய்ச்சும் பந்தயம் அப்படி ஒன்றும் சலிப்பாக இல்லை.
பத்து மணிக்கு திஷ்யாவின் தம்பி பிரேம் வந்தான்.
“அக்கா ஒங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க. அர்ஜெண்டாம்.”
“என்ன விஷயம்? ‘அந்த வண்டி அரை மணியிலே ரெடியாயிடும். வர்றேன் போ”பதினோரு மணி ஆயிற்று. அவன் திஷ்யாவையும் பிரேம் வந்து போனதையும் மறந்து விட்டான். வண்டியின் டோர் ட்ரபிள் அவனை ஈர்த்துப் பிடித்திருந்தது.
வேலை முடிந்து வண்டி ‘ரிலீஸ்” ஆன போது கூட நின்று கவனிப்பதில் கால் மெக்கானிக்காக ஆகி இருந்தான்.
மீண்டும் பிரேம் வந்தான்.“அடடா… மறந்தே போய்ட்டேன். செங்கு… பத்து நிமிஷம் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்!”
“சட்ணு வாங்க சார்… இன்னிக்கு பாங்குக்கு போவணும். இன்னிக்கு ஸ்பேர்பார்ட்ஸ்காரன் பில்லை கிளியர் பண்ணிடணும்.”
சிவா வழக்கப்படி கால் நடையாகப் புறப்பட்டான்.“சார்…”
செங்கு கூப்பிட்டான்.
“என்ன?”
“ஐயாவுது வண்டி சும்மாதானே கெடக்குது. எடுத்துட்டுப் போங்க… ஜல்தி வரவேணாம்?”
“எனக்கு டிரைவ் பண்ணத் தெரியாதே!”
செங்கு முகம் சப்பென்று போய் விட்டது.கற்றுக் கொள்ள வேண்டும். மோட்டார் பைக் மட்டுமல்ல. கார்.. வேன்… ட்ரக்… லாரி.. எல்லாவற்றையும் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.
“சைக்கிள் விடுவீங்களா?”
“ஓ”…
“நம்ப வண்டியை எடுத்துக்கிணு போங்க”சிவா செங்குவின் சைக்கிளை மிதித்து சாலையில் கலந்த பின்புதான் ஒர்க்ஷாப்பின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டான்.
திஷ்யா எதற்கு வரச் சொல்லி இருக்கிறாள்? ஆள் அனுப்பியது அசாதாரணமாகப் பட்டது.இந்த அசாதாரணம் அவன் முதல் தடவை வந்தபோது தனக்கு உறைக்காததை எண்ணினான். ஒர்க்ஷாப்பில் ஒரு வேலையின் போதையுள்ளதும் அது இரண்டு மணி நேரத்தில் தன்னைக் கவர்ந்ததும் புரிந்தது.
வீட்டில் யாரும் இல்லை. திஷ்யா மட்டும் தனியாக இருந்தாள். புண்ணியகோடி ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார். குழந்தைகள் எல்லாம் ஸ்கூலுக்குப் போயிருந்தன.
நேராக அவள் வீட்டுப் போர்ஷனுக்குப் போய் சாயம் போய் கோடுகளும் பெயரும் கீறியிருந்த பச்சை ஸ்டீல் சேரில் உட்கார்ந்தான். அந்த அனுபவம் அவனுக்கு நூதனமாக இருந்தது. அவன் இதுவரை அவள் வீட்டுப் போர்ஷனுக்குள் நுழைந்ததே இல்லை.
திஷ்யா அவன் வந்ததை லட்சியம் செய்யாத மாதிரி முகக் கண்ணாடியைத் துடைத்தவாறிருந்தாள்.
“வரச் சொன்னியாமே!”
அவள் அவனுக்குப் பதிலளிக்கவில்லை.“பிரேம்… டெய்லர் கிட்டே உன் பேண்ட் குடுத்தியே, அது ரெடியாண்ணு பார்த்துவிட்டு வா!”
“அது முந்தா நேத்திக்கு சாயங்காலமே ரெடியாயிடுச்சு… என்னாப்பா வரவில்லையேண்ணு கேட்பானேன்னு நான் ஸ்கூல் விட்டு வர்றப்ப கடையைச் சுத்திக்கிட்டு வந்தேன்!”“எவ்வளவு கூலி?”
“அறுபது.”
அவள் பழைய மர பீரோவைத் திறந்து சின்ன பிளாஸ்டிக் பர்ஸை எடுத்தாள். ஆறு பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள்.
பிரேம் இருக்கட்டுமே, தைத்த பாண்ட்டை அப்புறம் வாங்கட்டும் என்று சிவாவுக்குத்தோன்றிற்று.“அவ்வளவு தூரம் போகணும்!” என்று பொருமினான் பிரேம்.
“என் சைக்கிளை எடுத்துட்டுப் போறியா… எப்ப வருவே?” என்று சிவா கேட்டான்.“வேண்டாம்… அவன் பஸ்ஸில் போய் வரட்டும்” என்று உன் உதவி தேவையில்லை என்ற உதாசீனத்தோடு சொல்லிவிட்டு அவள் ஓர் ஐந்து ரூபாய் நோட்டைத் தந்தாள்.
அவன் போய்விட்டான்.
“அவனை ஏன் அனுப்பினே?”
திஷ்யாவின் பார்வை சிவாவினுள் குத்தூசி மாதிரி இறங்கிற்று.“ஐயா… ரொம்ப பிஸி ஆய்ட்டிங்க.”
“மெய்தான். தாமு ஒர்க்ஷாப்பை ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு காலையே மதனபள்ளி போய்ட்டாரு.”
“விஷயத்துக்கு வா. அப்புறம் இன்ஸல்ட் பண்ணலாம். இன்னிக்கு ஸ்க்ரீன் டெஸ்டாம். ஒடனே அக்ரிமெண்ட்லே சைன் பண்ணுவாங்களாம்.”
ஒரு சினிமா ஸ்கிரீனில் அந்தக் கண்களையும் உதடுகளையும் மானசீகமாக ஒரு விஸ்வரூபத்தில் பார்த்தான்.“நீ என்ன முடிவு பண்ணியிருக்கே.”
“வெண்டைக்கா.”
“பொறுமையாச் சொல்லு”
“செத்துப் போவேன்”
“அது ஒரு பெரிய நஷ்டமில்லேங்கறார், ஒங்க அப்பா.”“அவர் நஷ்டப்படட்டும்னு நான் சாகப் போறதில்லே. அவருக்கு லாபம் வரணும்னு வாழப் போறதுமில்லே.”
“நீ ஏன் சினிமாவிலே நடிக்க மாட்டேங்கறே?”
“நெஜம்மா கேக்கறியா?”
“ரியலா”
“எனக்கு வேஷம் போடப் பிடிக்கலே. நான் என்னவோ அது எனக்குப் போறும். என் ஒடம்பையும் மனசையும் நான் பஜார்லே விக்கத் தயாராயில்லே.”“ஒங்கப்பா ‘கம்பல்’ பண்றாரே?”
“அவர், எதுக்கு பண்ணணும்?”
“பைசா ரூபாய். சாதனை. அலைச்சல். பறப்பு. அதிருஷ்டம் எல்லா அங்கலாய்ப்புக்கும் அதானே முற்றுப்புள்ளி. சினிமாவிலே அது ஏராளமாக கெடைக்கும்.”
“முற்றுப்புள்ளி அவருதா ஒண்ணுதா?”மீண்டும் ஒருமுறை அவள் நீ என்று தனக்கும் அவனுக்கும் ஒரு கொக்கி வைத்ததைக் கவனித்தான்.
“நான் உனக்கு யாரு திஷ்யா?”
அவள் உதடுகள் கோபத்தில் அழகாய்ச் சிவந்தன. அற்புதமாய்த் துடித்தன. ஒரு நிமிஷம் அவள் உதட்டைக் கடித்துத் தின்றாள்.“ஸோ யூ வித்ட்ரா?”
“எதையும் நான் வித்ட்ரா பண்ணலே. எங்ஙகயாவது கமிட் பண்ணியிருந்தாத்தானே வித்ட்ரா பண்ணிக்க”
திஷ்யாவின் முகம் சாம்பிற்று.“ஸாரி திஷ்யா, ஒன்னை டீஸ் பண்ஙணணும்னு சொல்லலே. ஆனா ஒங்க வீட்டு விவகாரத்திலே குறுக்கிட எனக்கு என்ன ரைட் இருக்கு?”
அவளது கரிய இமைகள் அவன் மனசை அள்ளி தன் கூட்டில் தன் சிறகில் வைத்துப் பொத்திக் கொள்வது போன்று படபடத்தன.“இது ஒரு ப்ளாக்மெய்ல் சிவா!”
“ப்ளாக் மெய்லா?”
“ஆமா, என் வாயாலே ஒரு வாக்கு மூலம் வர வைக்கணும்ங்கற ப்ளாக் மெய்ல்.”“இப்பதான் நீ மொதல் முறையா சொல்றே-அதுவும் ரொம்ப லேட்டா”
அவன் நாற்காலியிலிருந்து எழுந்தான். அவன் தன்னை நெருங்கப் போகிறான் போகிறான் என்ற கூச்சத்தில் அவள் பின் வாங்கினாள். அந்த விளக்கத்தின் அர்த்தத்தில் அவனுக்கு முகம் சிவந்தது.“யூ ஆர் ஏ மேன்! மனுஷ்யன்” எங்கிருந்தோ பிரீதாவின் குரல் ஒலி.
“நீ பொய் சொல்றே சிவா!”
“நோ.”
“ஒனக்கும் எனக்கும் என்னன்னு ஒனக்கு எப்பவோ, தெரியும். எப்ப ஒனக்குத் தெரிஞ்சதோ அப்பவே எனக்கும் தெரிஞ்சு போச்சு.”“இல்லே; அப்ப தெரிஞ்சது வேற. இப்ப தெரியறது வேற” அவன் பெருமூச்சு விட்டான்.
“ஐ டோண்ட் வாண்ட்டு ஆர்க்யூ” என்ன சொல்வது என்று புரியாமல் அவன் குழம்பினான்.
“எத்தனை மணிக்கு உனக்கு கேமரா டெஸ்ட்”“பனிரெண்டு மணிக்கு கார் வருமாம்” அவன் கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது.
“நான் கீழேயிறங்கி சைக்கிளைத் தள்ளிகிட்டு ரோடுக்குப் போறேன். அங்கே பஸ்ஸ்டாப் கிட்டே வா.”
“என்னமாவது கொண்டு வரட்டுமா?”அந்த குழந்தைத்தனமான கேள்வியைக் கண்டு அவன் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறே?”
“நீ என்னோட ஓடிவந்துடறியா?”
“நான்சென்ஸ்” என்றாள் திஷ்யா.“பின்னே ஏன் கேட்கறே?”
“அப்படி ஏதாவது ப்ளான் பண்றியோன்னு கேட்டேன்” என்று விளக்கினாள் திஷ்யா.
“நான்சென்ஸ்” என்று திருப்பிச் சொன்னான் சிவா. அவள் பதிலளிக்கவில்லை.தொடரும்
-
ஐந்து கை ராந்தல் (12)
வையவன்
சிவா ஒர்க்ஷாப்பின் சாவியைக் கையில் எடுத்தான். இது எனக்குரிய பளுதானா? இப்படி ஒரு ஒர்க்ஷாப்பை நான் ஏற்று நடத்த முடியுமா?
திருப்பத்தூரில் அம்மா சொன்னது நினைவு வந்தது.
நீ தானா ஏத்துக்கறது கட்டுப்பாடு ஆகாது.எதற்கும் அம்மாவைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கலாமோ?
எங்காவது சேவகம் செய்து மாதச் சம்பளம் வாங்குவதில் எல்லா படித்த இளைஞர்களுக்கும் வருகின்ற பாதுகாப்பு தான் தனக்கும் வேண்டுமா?எதையும் யோசிக்க நேரமில்லை.
சமுத்திரத்தில் குதித்தாகி விட்டது. நீந்த வேண்டும். அல்லது மூழ்க வேண்டும்.
அவன் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான்.
வெளியே திஷ்யா தென்பட மாட்டாளா என்று ஓர் ஏக்கம்.வழக்கப்படி அவனைக் கிண்டல் செய்து குத்தி விட்டால் கூடப்போதுமானது. அவன் படி மீது ஐந்து நிமிஷம் நின்றான். அவள் எதிர்ப்படவில்லை. உள்ளே சமையலறையிலோ பாத்ரூமிலோ மும்முரமாக இருந்தாள் போலும்.
சிவா படியிறங்கி தெருவில் காலை வைத்தான். எங்காவது ஒரு நபர், கொஞ்சம் ஊக்கம் தர, உந்திவிட, ஒரு மனம் இந்தப் பரந்த பூமியில் அவனுக்கும் ஒரு புவியீர்ப்பு மையம் வாய்த்திருக்கிறது என்று அங்கீகரித்து உந்திவிட ஓர் உள்ளம்.
அவனுக்கு உடனே பிரீதாவின் நினைவு வந்தது. எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தக் கையாட்ட உயர்த்தினான்.நோ. நான் ஒர்க்ஷாப் சொந்தக்காரன் அல்ல. மானேஜர். நான் முதலாளியுமில்லை. கூட்டாளியுமில்லை. வெறும் தொழிலாளி. கூட்டு அந்தஸ்து இல்லாத சாமான்யமான தொழிலாளி.
“இன்னா சார்…” டிரைவர் அருகில் வந்தான்.
“அதோ அந்த ப்ரெண்டை கூப்பிட்டேம்பா.”
அவனது முறைப்பை அலட்சியம் செய்து பஸ் பிடிக்க ஓடினான்.வீட்டினுள் நுழையும்போது பிரீதா கண்ணாடி எதிரில் நின்று கூந்தலில் தென்பட்ட ஒரு நரையை அகற்றுவதில் ஈடுபட்டிருந்தாள்…
கண்ணாடியில் அவன் பிம்பம் தெரிந்ததும் “வரூ” என்று கூறிக்கொண்டே நரைமுடியை வெடுக்கென்று அகற்றினாள்.
காலை அவள் முகத்தில் குதூகலமாகக் குளித்துப் பவுடர் பூ விரித்திருந்தது.“எந்திணு பி.பி.கால்?”
“ஃபாதர் சீரியஸ். தாமு மதனபள்ளி போய்ட்டாரு”அவன் கையிலிருந்த சாவிக்கொத்தைப் பார்த்து அவள் முகம் பரிசுத்தமான மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“தாக்கோல் நிண்டே கையிலாயி” என்று பால் நுரை பொங்குவது மாதிரி சிரித்தாள் பிரீதா.“பிரச்னை” என்று அதைத் தூக்கி உலுக்கிச் சப்தமெழுப்பினான்.
பிரீதாவின் கண்கள் அவன் மீது படிந்தன.“இரிக்கு”
அவன் சோபாவில் உட்கார்ந்தான்.
“வாட்ஸ் தி ப்ராப்ளம்?”
“நான் ரைட்டரா… மெக்கானிக்கா?”
“யூ ஆர் எ மேன்”பல் தெரியாமல் அவள் உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது.
அந்த உதடுகளின் சதைப் பற்றில் அவற்றின் ரோஜாச் செம்மையில் அங்கு ஊறித் தளும்பிய ஜீவ சக்தியில் ஏதோ அற்புதம் இருந்தது.
அந்த உதடுகளைச் சொற்கள் கடந்து வெளிவரும் போது அவற்றிற்கு ஒலி மட்டுமில்லை, ஒளியும் சேர்ந்தன.
சிரித்துக் கொண்டே ஏதோ கதை சொன்னவாறு ஸ்பிரிட் தடவி வலிக்காமல் ஊசி குத்துவது மாதிரி பிரீதா மெதுவாகச் சொன்னாள்.முறுக்கு ஏற்றுவது போலவோ செதுக்குவது போலவோ இடித்து உரைப்பது போலவோ அன்றி லகுவாகச் சொன்னாள்.
“மனுஷ்யன்”
பிரியமாகச் சிரித்து மீண்டும் ஒருமுறை நினைவூட்டினாள்.“மனுஷ்யன் ரைட்டராகும். மெக்கானிக்காகும். ரைட்டிங் மெக்கானிக் ஆகும். பக்ஷே?”
அவள் மீண்டும் வரம் தரும் தேவதை மாதிரி சிரித்தாள்.“பக்ஷே?” என்று சிவாவும் தன்னையறியாது மலையாளத்திற்கு வந்தான்.
“அங்ஙன மலையாளம் பரயூ. பக்ஷே நீ ஒரு மெக்கானிகல் ரைட்டர் ஆகான், உத்தேசிக்கருத… மனசிலாயோ”
மெக்கானிகல் ரைட்டர். என்ன அழகான ‘காய்னேஜ்’. அவனுக்கு காளிசரண் கவனம் வந்தது.“சிவாவினு பேடியோ?”
“பயமில்லை. இது எனக்கு ஒரு டைவர்ஷன் பாய்ண்ட். அதனால் ஒரு தயக்கம்.”
“ஐ அண்டர் ஸ்டாண்ட். சிவாவினு ஏதாணு இஷ்டம். காப்பியோ, சாயயோ?” சமையலறையை நோக்கித் திரும்பினாள்.
“இப்போ வேண்டியது கான்ஃபிடன்ஸ்.”“யூ ஹாவ் இட்” அவள் முகம் வளைத்து அவனைப் பார்த்து புன்னகை வழங்கினாள். “பட் யூ டோண்ட் நோ இட்”
ஐந்து நிமிஷத்தில் டீ கோப்பையுடன் திரும்பி வந்தாள். மலையாளத்தில் மளமளவென்று சொல்லிக் கொண்டே நீட்டினாள்.
“நான் போன வருஷம்தான் தாமுவை சந்தித்தேன். அவரை எனக்கு ஏன் பிடிச்சது தெரியுமா?”தாமுவைப் பற்றி இப்படி ஒரு வெளிப்படையான பேச்சை சிவா அவளிடம் எதிர்பார்க்கவில்லை.
“ஹி ஈஸ் எ மேன். ரத்தம் சதை என்ற புற அளவீடுகளுக்கு சிக்காம மனிதன் என்று ஒரு காம்பீர்ய அந்தஸ்து உண்டே. அது தாமுவிடம் உண்டு. ஆனா அவ6ருக்கும் தளர்ச்சி உண்டு. சுகவீனம் உண்டு.”
அவன் டீயை மெதுவாக உறிஞ்சியவாறே அவள் வார்த்தைகளைப் பருகினான்…“ஒவ்வொருத்தருக்கும் ஒரு பலவீனமான நேரமுண்டு. அது இயற்கை. மனிதன் ஜெயிப்பான். ஜெயிக்கிறான்.”
அவன் கோப்பையை டீப்பாய் மீது வைத்தான்.“தாமு என்னிடம் அனேகமா எதையும் ஒளிக்கறதில்லே. ஹி ஈஸ் வீக் இன் ஸெக்ஸ், பெண்கள்தான் அவருடைய ஒரே பலவீனம். அவருடைய எல்லாப் பிரச்னைகளும் பெண்களாலேதான்.”
சிவா நிசப்தமாய் விட்டான். அவன் அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை.“சிவாவினு எண்டே ஃபிராங்க்னெஸ் இஷ்டப்படுன்னில்லா அல்லே?”
“ஐ காண்ட் கமெண்ட் ஸிம்ப்ளி ஐ அம் அனேபில் டு கமெண்ட்”
அவனது வெள்ளை உள்ளம் அவளுக்கு வெகுவாகப் பிடித்தது போல் பிரீதா சிரித்தாள்.“ஆனா உனக்கு இது தெரியணும் சிவா?”
“இன்னிக்கு நீ ஒரு புதிய தொழிலுக்கு மானேஜரா மாஸ்டராகப் போறே. யு ஷûட் நோ திங்ஸ்.”
“ஒய் ஷûட் ஐ?”
“ஸின்ஸ் யு ஆர் சிவா.”
“நான் எப்பவும் சிவாவாத்தான் இருப்பேன்.”அவள் தலையசைத்து அது முடியாது என்பது போல் புன்னகை செய்தாள்.
“முடியாது சிவா… இந்தத் தொழில் அப்படிப்பட்டது. நெறய பணம் வரும். யூ ஆர் எஜூகேடட்.. கர்ள் ப்ரண்ட்ஸ் வருவாங்க. அப்படித்தான் தாமு லாஸ்ட் ஹிம் செல்ஃப். கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா தாமுவுக்குக் கூட ஒரு செக் வந்திருக்கும். ஆனா…” என்று பிரீதா நிறுத்தினாள்.பேச்சின் போக்கு மாறி அந்தரங்கத்தில் நுழைந்த மாதிரி சிவாவுக்கு மூச்சு முட்டிற்று. தாமுவைப் பற்றிப் பேச வேண்டாமே.
ப்ரீதா மேலே பேசினாள்.“தாமுவுக்கு வந்திருக்க வேண்டிய மனைவி திஷ்யா மாதிரி டாமினேடிங்கா..ஆக்டிவ்வா இருந்திருக்கணும்.”
தாமுவும் திஷ்யாவும்.அவன் வியப்போடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் வியப்பை அவள் புரிந்து கொண்டாள்.
“எஸ், தாமுவுக்கு அவளைப் பிடிக்கும்.”அவன் கண்ணிலிருந்த கேள்விக் குறி மேலும் அவளைப் பேசத் தூண்டியது.
“கல்யாணம் பண்ணிக்கிற அளவு பிடிக்கும். அது நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லே”சிவாவின் மனசிற்குள் இடி முழக்கம் கேட்டது. வெளிச்சமில்லாத மூலைகளில் ஒரு மின்னல் விளையாடிற்று. சென்னையில் அந்த வீடு தனக்கு ஆசிரமம் என்று சொன்னானே தாமு! இதுதான் அதற்கு அர்த்தமா?
“ஒய் கான்ட் யூ?” என்று தன்னை மீறிக் கேட்டான்.அவள் சிரித்தாள். கசப்பு அதில் சிதறிற்று.
“வி ஆர் ப்ரெண்ட்ஸ். கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அளவு டிவோஷன் ரெண்டு பேருகிட்டேயும் மியூச்சுவலா கிடையாது.”நேரமானதை உணர்ந்தான். அவளிடம் விடை பெறும் பொழுது பிரீதா மீண்டும் மாலையில் வரச் சொன்னாள். அங்கிருந்து வரும்போது அவன் மனசு ஏனோ பாரமாயிருந்தது.
தொடரும்
-
ஐந்து கை ராந்தல் (11)
வையவன்
வெற்றிவேலின் சொந்த ஊர் சிங்காரப்பேட்டை. திருப்பத்தூரிலிருந்து செங்கம் செல்லும் சாலையில் குறுக்கிடும் சிற்றூர். முப்பது கிலோ மீட்டருக்கு பஸ்ஸில் போக வேண்டும்.
மிகவும் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன் வெற்றிவேல். சுற்றுப் பக்கத்தில் நல்ல பள்ளிக்கூடம் இல்லை என்பதற்காகத் திருப்பத்தூரில் அவனுக்கென்று ஒரு வீட்டையே வாங்கினவர் வெற்றிவேலின் தந்தை பழனிச்சாமி. ஒரு சமையல்காரன் சமைத்துப் போட வெற்றிவேல் திருப்பத்தூரில் தங்கிப் படித்தான்.
வெற்றிவேலும் சிவாவும் பள்ளித் தோழர்கள். பின்பு கல்லூரித் தோழர்கள். பலமுறை அவர்கள் வீட்டிற்குச் சிவா சென்றிருக்கிறான். வெற்றிவேலின் தந்தை பழனிச்சாமி முதலியாருக்கு சிவாவை மிகவும் பிடிக்கும். ஏழ்மை இருந்தாலும் எவரிடமிருந்தும் உதவியை ஏற்றுக் கொள்ளாத அவன் சுயமரியாதை அவரை மிகவும் கவர்ந்தது.
ஒரு மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து சிங்காரப் பேட்டையில் இறங்கினான். அங்கிருந்து ஊத்தங்கரைக்கு ஒரு தனிச் சாலை பிரிகிறது.
இரண்டு சாலையும் இணையும் சந்திப்பில் ஒரு சிறு ஹோட்டல் உண்டு. ஒரு ஹோட்டல்காரர் அங்கே நெடு நாட்களாக கடை நடத்தி வந்தார். அவருக்கு இவர்கள் இருவர் பற்றியும், இவர்கள் நட்பைக் குறித்தும் தெரியும்.
இறங்கியதும் சிவா நேராக அவரிடம் போனான்.“வாங்க…வாங்க சிவா! பெரிய எழுத்தாளர் ஆயிட்டீங்கண்ணு கேள்விப்பட்டேன்…” என்று கல்லாவிலிருந்து எழுந்து கை கூப்பியபடியே அவர் வரவேற்றார்.
தெரிந்த மனிதர்களிடம் கிடைக்கும் புதிய மரியாதை சிவாவுக்குச் சங்கடமாக இருந்தது.
“வணக்கம்!” என்று கை கூப்பினான்.“டேய் கந்தசாமி, சிவா வந்திருக்காரு… கவனி” என்று குரல் கொடுத்தார் அவர்.
“இருக்கட்டுங்க, அப்புறமா வர்றேன். வெற்றிவேல் ஊரில் இருக்கானா?”
“இருக்காரு… வீட்டிலே இருக்க மாட்டாரு! புளியம்பட்டி காட்டு ரோட்லே மலையோரமா புதுசா நெலம வாங்கியிருக்காரு. ஒரு மாசமா ஆளே கண்ணுலே தெம்படறதே அபூர்வம். நெலத்தை சீர்திருத்திகிட்டிருக்காரு.”
இது புதிய செய்தி.வெற்றிவேலைப் பற்றி இப்படி புதிது புதிதாய்ச் செய்திகள் கேட்டுக் கேட்டுப் பழகியிருந்தாலும் சிவாவுக்கு இது வியப்பாக இருந்தது.
“ஏன் சார், அவரைப் பார்க்கணுமா?”
“பாக்காமே பின்னே?”“சைக்கிள் எடுத்துணு தான் போவணும். நாலு கிலோ மீட்டருக்கு மேலே ஆவுமே.”
“அப்படியா…”“அயர் சைக்கிள் எடுத்தாரச் சொல்லட்டுமா?”
“சொல்லுங்களேன்.”வெளியே நின்ற ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியை எதிர்ச்சாரியில் ஒரு வாடகை சைக்கிள் எடுத்து வரச் செய்தார் ஹோட்டல்காரர்.
சைக்கிளில் நடுநடுவே வழி விசாரித்துக்கொண்டு கிட்டத்தட்ட மலையடிவாரத்திற்கு சிவா போனபோது நிலத்தருகில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது.
சுற்றிலும் மேலே ஆடையில்லாத முப்பது நாற்பது கிராமவாசிகள் நின்றனர். வெய்யிலில் அவர்களின் கறுத்த உடம்பு வியர்வையில் மின்னியது.
சற்றுத் தொலைவில் ஒரு மரத்தடியில் பெண்கள் நாலைந்து பேர் நின்றிருந்தனர். அவர்களுள் ஒருத்தி முழங்காலில் தலை புதைந்து பெருங்குரலில் அழுது கொண்டிருந்தாள். அவள் அருகே காக்கி டிராயரும் டீ ஷர்ட்டும் அணிந்து வெற்றிவேல் நின்றான்.
அவளைச் சமாதானப்படுத்துகிறான் என்று சிவாவுக்கு காடும் மலையும் கானாறும் சூழ்ந்த அந்தப் பிரதேசத்தில் முகமறியாத ஒருவரின் தகனக்கிரியையின் போது வெற்றிவேலைச் சந்திக்கப் போய் சேர்ந்தது வினோதமாயிருந்தது.
கையை உயர்த்தி தன் வருகையை வெற்றிவேலுக்கு அறிவிக்க விரும்பிய சிவா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அதற்குள் வெற்றிவேல் அவனைப் பார்த்துத் தலையசைத்தான்.அவனை நோக்கி நடந்து செல்வதற்குள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவளை விட்டு விட்டு வெற்றிவேல் அவனை எதிர் கொண்டான்.
எரியும் சிதை சுற்றி நின்றிருந்த பெண்கள் கூட்டத்துக்கு நடுவில் அவர்கள் சந்தித்தனர்.
“எப்போ வந்தே?” என்று கேட்டான் வெற்றிவேல். அவன் கண்கள் கலங்கி யிருந்தன.“இப்போ தான்” என்று அவன் கலங்கிய முகத்தை உற்றுப் பார்க்காமல் தவிர்த்தபடியே சிவா பதிலளித்தான்.
“யார் செத்துட்டது?”“எங்க நிலத்திலே ரொம்ப நாளா வேலை செஞ்சுக்கிட்டிருந்த கூலியாள். பீம ராஜுண்ணு பேரு. கெணத்துக்கு வெடிவச்சுட்டு வர்றதுக்குள்ளே ஒரு பெரிய கல் வெடிச்சு வந்து தலையிலே தாக்க உயிர் போயிட்டது.”
“வயசானவனோ”“இல்லே… நாப்பது வயது இருக்கும். கல்யாணமே இல்லாமே முதலியார் நெலத்திலேயே மண்டையைப் போட்டுடறேண்ணு சொல்லிக்கிட்டிருந்தான். நாங்கள்ளாம் வற்புறுத்தி போன வருஷம் தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சோம். அதோ அழுதுகிட்டிருக்கே அதான் அவன் மனைவி.”
சிவா அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.
“ஒரு விதத்திலே அந்த பீமராஜு எனக்கு ஒரு குரு.”
வெற்றிவேலின் தொண்டை கம்மி விட்டது.சிவா அவனைப் பார்த்தான். வெற்றிவேலின் கண்களிலிருந்து இரு கண்ணீர்க்கோடுகள் வழிந்திருந்தன.
“ஹி டாட் மீ தி இம்பார்டன்ஸ் ஆஃப் லேபர். உழைப்பு முக்கியம்னு அவன் போதிச்சான். வாய்ப் பேச்சிலே இல்லே. உண்மையா வாழ்ந்து”வெற்றிவேல் டிராயர் பாக்கெட்டில் கை விட்டுத் துழாவினான். தேடியது அவனிடம் இல்லை. சிவா தன் கர்ச்சீப்பை அவனிடம் நீட்டினான். முகத்தைத் துடைத்துக் கொண்டு வெற்றிவேல் மேலே பேசினான்.
மரணம் அங்கே ஒரு விநோதமான அமைதியின் கூடாரத்தை நிறுவியிருந்தது. சடசடத்து எரியும் அந்தச் சிதை விறகின் ஒலிகள் மனிதர்கள் ஆரவாரத்திற்கும் பெருமூச்சிற்கும் வைக்கும் இறுதி முத்தாய்ப்பு போல் சப்தித்தன. வெற்றிவேல் தொடர்ந்தான்.
“ஒரு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு விதியின்படி அவன் சுரண்டப்பட்டவன். அவன் பத்து வயதுப் பையனா இங்கே வந்தான். உழைப்பை அர்ப்பணம் பண்ணியே எங்க வீட்டிலே ஒரு நபர் ஆயிட்டான்.
“போன வருஷம் கல்யாணம் ஆனப்போ அவன் பெண்டாட்டியும் இந்த வீட்டு நபர் ஆனா. அவன் உழைப்புக்கு எந்த கூலியும் இல்லே. அவன் கேட்டதுமில்லே.அவனை நாங்க கேக்க வச்சதுமில்லே. நீ அவனைப் பாத்திருப்பே. அடையாளம் மறந்திருக்கும். அவன் எப்பவும் நெலத்திலேயே இருப்பான்.”
இடது பக்க பாக்கெட்டில் கையை விட்டு வெற்றிவேல் ஒரு சிகரெட் பெட்டியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தான். ஆழ்ந்த பெருமூச்சுடன் தொடர்ந்தான்.
“ஹி டாட் மீ தி இம்பார்டன்ஸ் ஆஃப் லேபர்” அவன் மீண்டும் ஒருமுறை சொன்னான்.
“இந்த காட்டு நிலத்தை நாங்க தான் வாங்கணும்ணு அவன் பிடிவாதம் பண்ணி வாங்க வச்சான். இதோ அங்கே புல்டேஸர் போயிருக்கு பாரு.. இந்தப் பட்டையெல்லாம் டிராக்டர் உழவு தெரியுதா? இருபத்தி மூணு ஏக்கர்.”
கிழக்கும் மேற்குமாக வெற்றிவேல் ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டினான்.“இதையெல்லாம் நான் தான் ‘க்ளியர்’ பண்ணினேன். அவன் தான் குரு.”
வெற்றிவேல் சிதையில் எரிந்தவனைச் சுட்டிக்காட்டினான்.மீண்டும் அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. சிவாவின் கைக் குட்டையில் அதைத் துடைத்துக் கொண்டே வெற்றிவேல் தொடர்ந்தான்.
“முட்டாள் தனமான அட்வெஞ்சரிஸத்திலிருந்து ஒங்க அப்பா… ஐ’ம் ஸாரி… பாபா ஓம்கார்நாத் என்னைக் காப்பாற்றினார். இதோ இவன் உழைண்ணு மௌனமா எடுத்துச் சொன்னான்.”சிதையைச் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாகக் கலைந்ததையும், மரத்தடியில் நின்ற பெண்கள் அழுது புலம்பியவளைத் தேற்றி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றதையும் மௌனமாய்க் கவனித்தான்.
சிதைக்குக் காவலாய் இருவர் மட்டும் நின்றனர்.“சிவா… இவன் அதிகமாப் பேசினதில்லே. எப்பவாவது பேசுவான். எங்கிட்டே ரொம்பப் பிரியம். மரியாதை. ரொம்பப் படிச்சிருக்கேன் பாரு, அதனாலே” என்று தன்னைத் தானே வருத்தத்தோடு கிண்டல் செய்வது போல் ஒரு கசந்த சிரிப்புடன் வெற்றிவேல் சொன்னான்.
சிவா அவனுக்கு ஆறுதல் தருவது போன்று அவனது வலது கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.
“ஒரு நாள் என்ன சொன்னான் தெரியுமா? வாங்கற மூச்சு, குடிக்கிற தண்ணி துண்ற சோத்துக்கு வஞ்சனையில்லாமே ஒழைச்சுடணும் தம்பி. மீதியெல்லாம் மண்ணுலே கலந்து மண்ணாப் போவும்னான்.”
சிவாவுக்கு சிலிர்த்தது.“அவன் என்ன சொன்னாண்ணு புரியறதா? ஆடம்பரமா படிச்சவர்கள் பாஷையிலே சொன்னா பூமியிலே நீ ஆக்கிரமித்திருக்கிற ஸ்பேஸுக்கு தகுதியுள்ளவனா யிருண்ணு சொன்னான்.”
வெற்றிவேல் சிகரெட்டை உறிஞ்சினான்.“அது என் கண்ணைத் தெறந்தது. அதைச் சொன்னவன் முப்பது வருஷத்துக்கு முன்னாடி, நான் பொறக்கறதுக்கு முன்னாடி எங்க குடும்பத்துக்கு வந்தவன்.
“எந்த பிரதிபலனும் எதிர்பாராமே எந்த சபலத்துக்கும் ஆளாகாமே எந்த உரிமையும் கோராமே அவன் உழைச்சு உழைச்சு அதோ எரிஞ்சு கிட்டிருக்கான்.”
சிவாவின் மனசுக்குள் ஒரு விம்மல் மடிந்தது.“என் குடும்பம் அவனுக்கு கடன்பட்டிருக்கு. நானும் கடன்பட்டிருக்கேன். சிவா… ஒண்ணு இப்ப எனக்கு வௌங்கலேடா!”
“என்னது?”
“இந்த வாழ்க்கைக்கு என்னடா அர்த்தம்?”
சிவா நேற்று அம்மாவின் வாயிலிருந்து வந்த சொற்களை நினைவு கூர்ந்தான்.
வாய் பேசவில்லை.“சொல் சிவா!”
வெற்றிவேலைப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னான்.
“நாம கற்பிச்சுக்கறது தான்”“பாபா ஓம்கார்நாத் விடுதலை பெறுகண்ணு சொன்னாரே நினைவிருக்கா?”
“இருக்கு”
“எதிலிருந்து விடுதலை? கற்பித்துக் கொண்ட அர்த்தத்திலிருந்தா? கற்பித்துக் கொள்வதிலிருந்தா…?”
அவன் சிகரெட்டை வீசி எறிந்தான்.ஒரு பொருத்தமான சொல் தேறித் திரண்டு முத்துப் போல் நெஞ்சில் உருண்டது.
சிவா அதை வெளியிடாது வெற்றிவேல் பேசட்டும் என்று காத்து நின்றான்.
“எல்லாக் கற்பனைகளும் சிதையில் சாம்பலாகின்றன. எல்லா அர்த்தங்களும் இங்கே முக்கியமில்லாமே போகின்றன” என்று வெற்றிவேல் முனகினான்.“அர்த்தங்கள் சாகிறதில்லே. மனுஷன் தான் செத்துப் போறான்.”
சிவா சொன்ன அந்த வார்த்தைகளை அது அவன் வாயிலிருந்து வந்ததா என்று வியப்பது போல் நிமிர்ந்து பார்த்தான். பின்பு அவன் கையைப் பற்றித் தன்னுடன் பிணைத்துக் கொண்டான்.“அப்போ விடுதலை எதிலிருந்து?”
“மன உளைச்சலிலிருந்து”
சிறிது நேரம் அங்கே நின்றிருந்துவிட்டுப் பின்னர் சிவாவை அழைத்துக் கொண்டு வெற்றிவேல் அருகாமையில் ஓடிய கானாற்றுக்கு அழைத்துச் சென்றான்.ஆற்றில் தண்ணீர் தெளித்து ஓடிக் கொண்டிருந்தது. வெற்றிவேல்
ஆடைகளை அவிழ்த்து வைத்ததைக் கண்டு சிவாவும் தன் உடைகளைக் கழற்றினான்.வெற்றிவேலுடன் முகமறியாத அந்த பீமராஜுவுக்காக மூன்று முழுக்குப் போட்டான் சிவா.
“சூரையங் காட்டிடை கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே” என்று நெஞ்சை அடைக்கும் துக்கம் தொண்டையில் தழுதழுக்கச் சொன்னான் வெற்றிவேல்.அந்த சிங்காரப்பேட்டைப் பயணம் சிவாவை என்னமோ செய்தது. அன்று மாலை பஸ் ஏறி மீண்டும் திருப்பத்தூர் வந்த பின்பு எரியும் சிதை ஒன்றின் எதிரில் வெற்றி வேலோடு நின்றதும் பேசியதும் மனசில் அடிக்கடி வந்து போயின.
அந்தப் பயணத்தில் அவர்கள் முற்றிலும் தொடர்பற்ற வேறு எதையோ பேசினார்கள். வேறு எவனோ ஒருவனின் உழைத்து மாண்ட நினைவில் கரைந்தார்கள்.
அம்மாவிடம் விடைபெற்று மறுநாள் சிவா சென்னைக்குப் புறப்பட்டான்.
தொடரும்
-
ஐந்து கை ராந்தல் (10)
வையவன்
நந்தவனத்தில் வெளிவந்த அட்டைப்படச் சிறப்புச் சிறுகதைக்கு வாசகர் கடிதம் ஏராளமாக வந்திருந்தது.
அந்தப் பத்திரிகை அலுவலகம் வந்திருந்த கடிதங்களை ஒரு கட்டாகக் கட்டி அவனது முகவரிக்கு அனுப்பியிருந்தது.
ஓஹோ வென்று புகழ்ந்து வந்திருந்த கடிதங்கள் அவனைப் பயமுறுத்தின.நாலைந்து கடிதங்கள் நாசூக்காகக் குறை கூறியிருந்தன. ஆசிரியர் முயற்சித்தால் மேல் நாட்டு எழுத்தாளர் தரத்துக்கு உயரலாம் என்று ஒரு கடிதம் ஆரூடம் கூறியது.
மீண்டும் மீண்டும் அந்தக் கடிதங்களைப் படித்தான் சிவா.
புகழ் ஒரு போதை என்பது பளிச்சென்று உறைத்தது. தன்னையறியாது கர்வம் தனக்குள் முளைவிடுவதை சிவா கவனித்தான்.எது எழுத்தாளனுக்கு மட்டுமின்றி, மனிதனுக்குக் கூட அத்தியாவசியமோ அந்த மென்மையான உணர்வுகளின் மீது பிறரது பாராட்டுக்கள் ஒரு பட்டுப் போர்வை போர்த்தின. ஒரு தங்கச் சிம்மாசனத்தில் தனிப்பீடமிட்டு ஒதுக்கின.
முதல் கதை வெளிவந்த நாலைந்து வாரத்திற்குள் அவன் எழுதி எழுதித் திரும்பி வந்திருந்த பழைய கதைகளை வெவ்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தான்.
நான்கே மாதத்திற்குள் அவன் கதைகள் எட்டு பிரசுரமாகி விட்டன.
ஒவ்வொன்றும் வெற்றி முரசு கொட்டிக் கொண்டு வெளிவந்தன. வரவேற்கப்பட்டன. போதாததற்கு மூன்று பத்திரிகைகளில் அவன் புகைப்படம் வேறு பிரசுரிக்கப்பட்டு விட்டது.
தெருவில் போகும்போது அவனை சுட்டிக்காட்டி இன்னார் என்று யாராரோ பேசிக் கொண்டார்கள்.
புகழ் முதலில் கூச்சப்படுத்தியது; பிறகு கர்வமூட்டியது.அப்புறம் அதில் ஒரு சுகம் தென்பட, அடிக்கடி அந்த சுகத்திற்கு மனம் ஏங்கலாயிற்று.
சட்டென்று ஒருநாள் சிவா உறக்கத்திலிருந்து விழிப்பது போல் உதறிக் கொண்டு சுய உணர்வு பெற்றான்.‘விடுதலை பெறுக’
அண்செட்டியில் வெற்றிவேல் முன்னிலையில் கேட்ட அந்த வாசகம் பளீரென்று மனசில் சுடர் வெளிச்சமாகப் பரவிற்று.
பாபா ஓம்கார்நாத்தின் மகன் நான். என் அம்மா திருப்பத்தூரில் முதலியார் ரைஸ் மில்லில் தவிடு விட்டுக் கொண்டிருக்கிறாள்.புகழே நீ ஒரு புழுதி மாதிரி என் மீது படிந்து என்னை நாசமாக்கி விடாதே; விலகி நில்’
என்று மனசிற்குள் அவன் ஒரு கட்டளை இட்டான்.இந்த ‘ஸ்பாட் லைட்’ ஜாஜ்வல்யத்திலிருந்து ஓடிப் போய் உண்மையின் எளிமையை தரிசிக்க வேண்டும் போலிருந்தது.
அவன்நேராக அம்மாவைப் பார்க்கத் திருப்பத்தூர் போனான்… பாங்கிலிருந்து எல்லாப் பணத்தையும் அவளுக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு.ஒற்றை அறையுள்ள அந்த சின்ன வாடகை வீட்டில் கிழிந்த பாயில் அழுக்கான தலையணையில் படுத்துக் கொண்டு, நெல் மிஷினிலிருந்து அம்மா வரும்வரை காத்திருந்த போது புகழின் மயக்கம் சுத்தமாய்க் கலைந்து விட்டது.
இன்னும் நான் பழைய சிவாதான்.அப்பாடா… இது எத்தனை ஆறுதலாக இருக்கிறது!
வரும்போதே “எப்படா வந்தே?” என்று கேட்டுக் கொண்டே நுழைந்தாள் தாட்சாயணி.உடல் மெலிந்து, முகமெல்லாம் தவிடு படிந்திருக்க சாயம் போன சேலையில் அவளைக் காண நெஞ்சு நைந்தது. கண்ணிலும் உதட்டிலும் பாசம் பூரித்தது.
“அரை மணி நேரம் ஆச்சும்மா”
“ஏண்டா எளைச்சுப் போயிருக்கே”
அவன் சிரித்தான்.“என்னடா சிரிக்கறே?”
“என்னடா சிரிக்கறே?”
“எந்த அம்மாவுக்கும் தன் பிள்ளை எளைச்சிருக்கற மாதிரியே தான் தோணுமா?”“அம்மாங்கள்ளாம் அசடுண்ணு சொல்றியா…”
“நீ எப்பிடிம்மா இருக்கே?”அவன் அவள் கேள்விக்கு பதிலளிக்காது மடக்கினான்.
“எனக்கு என்ன..நான் நல்லாத்தான் இருக்கேன்”“தான் எளைச்சிருக்கப்ப மகன் எளைச்சிருக்கறதை கண்டுபிடிக்க வேற யாராலே முடியும்?”
“அசடுண்ணு சொல்றே அப்ப…”
“நீ அசடானா நான் கசடாயிருப்பேம்மா.”“போதும் நிறுத்துடா” என்று அவன் மேலே புகழ்ந்து விட இடம் தராது, முகம கை கால் கழுவி வர வெளியே புழக்கடைக்குப் போனாள். திரும்பியபோது சிவா…
“ஒரு மாசத்துக்கு முன்னாடி நான் பாபா ஓம்கார்நாத்தை சந்திச்சேன்” என்று கூறினான்.
அம்மா முகத்தைத் துடைத்துக் கொண்டு நெற்றியில் குங்குமம் வைக்கப் போனாள்.“யாரது… பெரிய மகானா?”
“பெரிய மகான் தான். எல்லோரும் பேசிக்கிட்டாங்க. எனக்கு அப்படித் தோணலே.”
அவள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு திரும்பினாள்.
“ஏன்?”“நான் சாமியாராய் போகிறேன்னு தன் மனைவிகிட்டே விடுதலை வாங்கிட்டுப் போனவர் ஒரு மகானா… அவருக்கு விடுதலை கொடுத்தாளே அந்த அம்மா ஒரு மகானா?”
அம்மாவின் முகம் அதிர்ச்சியடையும் என்று சிவா எதிர்பார்த்தான். மாறாக ஓர் அமைதி வந்தது.
“அவரைப் பாத்தியா?”
“பாத்தேன்.”
“பேசினியா…”“சூடு குடுக்கறாப்பிலே! ஓடி வந்தவர் மகானாகிட முடியாதுண்ணு சொன்னேன்.”
“அதை அப்புறமா பேசலாம்… நீ கொஞ்சம் சாப்பிடறியா… காலைலே வடிச்ச சோறு தான் இருக்கு. புளிக்கொழம்பு.”
“எனக்குப் பசிக்கலேம்மா… நீ சாப்பிடு.”தந்தையைப் பற்றி அம்மா ஆர்வமாக விசாரிப்பாள் என்று எண்ணியதற்கு ஏமாற்றமாயிருந்தது.
“நல்லா சொன்னியே… ஒனக்கு புளிக்கொழம்பு புடிக்காது இல்லே. இரு வேற சோறு வடிச்சு ஒரு பருப்புக் கொழம்பு வக்கிறேன்.”தான் சாப்பிடாமல் அவள் சாப்பிட மாட்டாள் என்று உணர்ந்தான்.
“அடுப்பை மட்டும் பத்த வச்சுக் கொடுத்துட்டு இப்படிவாம்மா… அந்தப் பழைய சாதத்தையே நான் தக்காளியும் வெங்காயமும் அரிஞ்சு போட்டு மசாலா சாதம் பண்ணிடறேன்” என்று எழுந்தான்.
“எனக்கு என்ன வேலையாம்…? நீ உக்காருடா” அம்மா அடுப்பு பற்ற வைக்கும் வேலையில் இறங்கினாள்.
“நான் யாருக்கோ தான் சமைச்சுப் போட்டிருக்கேன். ஒனக்கு ஏம்மா போடக் கூடாது? இன்னிக்கு நாந்தான் சமைப்பேன்” என்று சிவா பிடிவாதமாகச் சொன்னான்.“சரி, உன் இஷ்டம்! தக்காளியும் வெங்காயமும் இருக்கு; அரிஞ்சு தர்றேன்” என்று தாட்சாயணி அரிவாள் மணையை எடுத்தாள்.
அடுப்பு பற்றிக் கொண்டது. வாணலி காயட்டும் என்று அதைத் தூக்கி அடுப்பின் மீது வைத்தான்.
அம்மா தக்காளி அரியலானாள்.“நீ லெட்டரிலே எழுதவே இல்லையே”
அப்பாவைப் பார்த்ததைப் பற்றிச் சொல்கிறாள் என்று சட்டென்ஙறு இயைவுபடுத்திக் கொண்டான் சிவா.
“இது எழுதற விஷயம் இல்லேம்மா… சொல்ல வேண்டியது… கேட்க வேண்டியது?”
“எப்படியிருக்கிறார்?…”“வெள்ளை வெளேர்ணு மார் வரைக்கும் தாடி… தலை சுத்தமா நரைச்சிருக்கு. சாந்தியா… சௌக்கியமா இருக்கிறார். அவருக்கென்ன… கோடீஸ்வர சிஷ்யர்கள்! அமெரிக்காக்காரன்… கர்நாடகத்துக்காரன்… இப்படி”
அவள் சிறிதும் பாதிக்கப்படாமல் தன் வேலையில் மூழ்கியிருந்தாள். ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் மனசை ஊடுருவி அவன் குத்தலுக்கும் கிண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பார்வை அது.
“நீ என்ன கேட்டே… அவர் என்ன சொன்னார்?”‘நீங்க ஏன் ஓடினீங்கன்னேன்… நதி ஓடுகிறதுன்னு சொன்னாரு. தப்பி ஓடறது ஞானமில்லேன்னேன்… இலை பழுத்தால் உதிரும்னார். நான் விடலே. சொல்லாமே ஓடி வந்தீங்களேன்னு குத்திக் காட்டினேன். விடுதலை பெற்றதுன்னாரு. யாரிடம்னு கேட்டேன். பெற வேண்டியவரிடம்ணு சொன்னாரு.”
அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டாள். அந்த வார்த்தைகளை எண்ணிப் பார்க்கிறவள் மாதிரி சற்று நேரம் கண்ணிமைகளை மூடினாள்.
வாணலி காய்ந்துவிட சிவா எண்ணெய் ஊற்றினான். தாளித்து விட்டு அரிந்த தக்காளி வெங்காயத்தைக் கொட்டினான்.
“அப்புறம் என்ன சொன்னாரு?”“விடுதலை பெறுகன்னாரு.”
மசாலா சாதத்தைக் கிளறி விட்டுக் கொண்டே அம்மா மௌனமாக உட்கார்ந்திருப்பதைத் திரும்பித் திரும்பிப் பார்த்தான் சிவா.அவள் தியானிக்கிறாளா?
யோசிக்கிறாளா…
வருந்துகிறாளா…
பழங்கணக்கைப் புரட்டுகிறாளா… ஒன்றும் புரியவில்லை.அவன் தன்னையே பார்ப்பதை ஒரு குறுகுறுப்பினால் உணர்ந்து தாட்சாயணி சிவாவைத் திரும்பிப் பார்த்தாள்.
“என்னடா பாக்கறே?”
“நீ அப்பாவுக்கு அனுமதி கொடுத்தியாம்மா?”
தாட்சாயணி அவன் கண்களைப் பார்த்தவாறே பதில் சொன்னாள்.“ஆமாம்.”
“ஏம்மா… ஒன்னாலே எப்பிடிம்மா அப்படி ஒரு அனுமதி கொடுக்க முடிஞ்சது?”தாட்சாயணி அவனுக்கு நேர் மேலே மாட்டியிருந்த கிருஷ்ணன் படத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு பெருமூச்சு விட்டாள்.
“சிவா அவர் மகான் தான்! தாலி கட்டி மறுமூச்சு விருந்துக்கு வந்தப்பவே அவர் என்னன்னு கண்டுபிடிச்சுட்டேன். பதிமூணு வருஷம் என்னோட அவர் பொழச்ச பொழப்பு இருக்கே.. உங்ககிட்டே காட்டின பாசம் இருக்கே… எல்லாம் நெல்லுக்கு மேலே உமி மாதிரி.”சிவா, முதன் முறையாக தன் தந்தையைப் பற்றி தாய் பேசுவதைக் கேட்டான்.
“இப்படிப் பொறப்பட்டுப் போறவர் ஏம்மா கல்யாணம் பண்ணிகிட்டார்!”“அவரா பண்ணிகிட்டாரு? பையன் அடிக்கடி தியானம் பண்ணிகிட்டு உட்கார்ந்திருக்கானேன்னு என் மாமியாரும் மாமனாரும் பண்ணி வச்சாங்க.”
அவர் ஏன் குழந்தை பெற்றுக் கொண்டார் என்ற கேள்வி அவன் தொண்டை வரை வந்தது. ஆனால் கேட்கவில்லை.
“எனக்குத் தெரிஞ்சு அவரா விரும்பி எந்தக் காரியமும் செய்யல்லே”கேட்க முடியாத கேள்விக்குச் சொல்ல முடியாத பதிலை அம்மா சொல்லி விட்டாள்.
சிவா திரும்பி மசாலா சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கினான்.“என்னிக்கோ ஒருநாள் அவரு பொறப்பட்டுப் போயிடுவாருன்னு மட்டும் எனக்குத் தெரியும். அதை ஒவ்வொரு நாளும் நான் எதிர்பார்த்துட்டே இருந்தேன்.”
சிவா அதைக் கற்பனை செய்து பார்த்தான்.ஒவ்வொரு நாளும்…
இன்றுதானா… இல்லை நாளையா… இன்றில்லை. அம்மாடா… அது இன்றில்லை.
ஒருவேளை நாளையாக இருக்குமோ?இப்படியே பதின்மூன்று வருடங்கள். அவனுக்கு முதுகு சிலிர்த்தது.
“அவர் எப்படிப் போவாருன்னு நான் நெனச்சு நெனச்சு பாத்திருக்கேன். அதுக்கெல்லாம் வித்தியாசமா என்னையே அவர் அனுமதி கேட்பார்னு மட்டும் எதிர்பார்க்கலே. கேட்டார்.”
“நீ பேசாம போய் வாங்கன்னு சொல்லிட்டியா?”“இல்லே… எனக்கு பதில் சொல்லுங்க. நான் எப்படி ஜீவிக்கறதுன்னு கேட்டேன். அவர் இதோ இந்த கிருஷ்ணன் படத்தைக் காட்டினார். பட்டுன்னு எனக்கு ஒரு தைரியம் வந்தது. போற வழிக்கு பாறாங்கல்லா நான் இருக்க வேண்டாமேன்னு தோணிச்சு. தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?”
தாட்சாயணி சிவாவுக்காக ஒரு தட்டை எடுத்து வைத்தாள். ‘அம்மாவோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று?’
சிவா இன்னொரு தட்டை எடுத்து அவள் முன்னால் வைத்தான்.
“நீ மொதல்லே சாப்பிடுடா”“ரெண்டு பேருமே சாப்பிடலாம்மா”
அவள் வாணலியிலிருந்த சாதத்தை ஒரு போகணியில் கொட்டி முதலில் அவனுக்குப் பரிமாறிக் கொண்டே சொன்னாள்.
“அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அணைகட்டி நிறுத்தியிருக்கலாம். எத்தனை நாளைக்கு அது முடிஞ்சிருக்கப் போவுது?”அவள் தனக்குப் பரிமாறிக் கொள்ளாததை சிவா கவனித்தான். அன்னக்குத்தியை எடுத்து சாதத்தை அள்ளி அவள் தட்டில் போட்டான்.
காலையில் அவள் மிஷினுக்குப் போவதற்காக வெகு சீக்கிரம் விழித்து அவனுக்காகச் சமைக்கத் தொடங்கியிருந்தாள். சிவாவின் தூக்கம் கலைந்து விடக்கூடாதே என்பதற்காக ஓசைப்படாமல் காரியங்களைச் செய்வது அரைத் தூக்கத்தில் அவனுக்குத் தெரிந்தது.
அவன் எழுந்து உட்கார்ந்தான்.
“ஏம்மா, இவ்ளோ காலையிலே?”
“மிஷினுக்குப் போகணுண்டா”“இனிமே நீ மிஷினுக்குப் போக வேணாம்”
“எதை நம்பி என் கைத்தொழிலை விட்டுடச் சொல்றே?”
“நான் எழுதறேம்மா… அதுலே காசு கெடைக்குது”“எழுத்து நிரந்தரமில்லேப்பா. ஒனக்கு பர்மனெண்டா ஒரு வேலை கெடைக்கட்டும். நான் விட்டுடறேன்.”
சிவாவிற்கு தாமு சொன்னது நினைவு வந்தது. எழுத்தை நம்பிவிடாதே!
“அம்மா, உன்னை ஒண்ணு கேக்கணும்னே இங்கே வந்தேன்?”“என்னடா அது?”
“ஒரு மோட்டார் ஒர்க்ஷாப்.. நான் இருக்கிறேனே… அந்த வீட்டுக்காரருடையது. அந்த ஒர்க்ஷாப் மானேஜரா இருக்கச் சொல்லி கூப்பிடறாரு.”“ஏன்… அவருக்கு என்ன?”
“அவர் மதனபள்ளிக்குப் பேபாயிடறாராம்.”
“அப்ப ஒர்க்ஷாப் அங்கே எதுக்கு?”அதற்கு சிவாவால் தெளிவான பதிலைச் சொல்ல முடியவில்லை.
அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதுதான் சிவாவுக்கு தாமுவின் விருப்பத்திற்கு இசைவாக இயங்க வேண்டிய கருவியாகத் தன்னை அவன் பயன்படுத்துகிறானோ என்று தோன்றியது.
“நல்லா வளந்துட்ட தொழிலை ஏன் விடணும்ணு நெனக்கிறார்!”
“…….”
“அப்ப அவருக்குக் கட்டுப்பட்டுதான் நீ இருக்கணும். உன்னாலே அப்படி இருக்க முடியாதே”
‘உனக்காக எதற்கும் கட்டுப்பட்டு நான் இருப்பேன்’ என்று நினைத்தான் சிவா.
அவன் மௌனமாக இருப்பதைக் கண்டு தாட்சாயணி தொடர்ந்தாள்.
“எதையும் யோசிச்சுச் செய்.”காலையிலிருந்து மாலை வரை யந்திரம் அரைத்துக் கொட்டும் அரிசியில் தவிடு புடைக்கும் அம்மா… யந்திரத்துக்கும் ஒரு முதலாளிக்கும் கட்டுப்பட்டிருக்கும் அம்மா… தான் ஒருவரிடம் கட்டுப்படுவதை விரும்பாத அதிசயத்தை சிந்தித்துக் கொண்டே சிவா எழுந்து பாயைச் சுருட்டினான்.
“எந்தத் தொழில் செஞ்சாலும், எங்கே உத்தியோகம் பண்ணினாலும் யாருக்காவது கட்டுப்பட்டு தானேம்மா ஆகணும்!”
அரிசி கழுவிக் கொண்டே அம்மா பதிலளித்தாள்.“அது மெய்தான்! நீயா விரும்பி மனசார ஏத்துகிட்டா நீ எதுக்கும் கட்டுப்பட்டதா ஆகாது. வேற நிர்ப்பந்தத்துக்காக எதையாவது ஏத்துகிட்டா அது என்னிக்குமே ஒரு சுமைதான்.”
அண்செட்டியில் சின்னாற்றங்கரையின் ஓரத்தில் ஆலமரத்தடியில் கேட்ட அந்த வாசகம் இரண்டாவது முறையாக மீண்டும் நினைவு வந்தது.
‘விடுதலை பெறுக.’
அவன் குளித்து விட்டு வெற்றிவேலைப் பார்த்து வரக் கிளம்பினான். -
ஐந்து கை ராந்தல் (9)
வையவன்
தாமு அது வரை சிவாவை ஒர்க்ஷாப்பிற்கு வரும்படி சொன்னதில்லை.
அன்று காலை “சிவா, ஒர்க்ஷாப்புக்குப் போவோமா?” என்று கேட்டான்.
அவன் ‘சரி’ என்று குளித்துத் தயாரானான்.“எந்த வகையிலும் இது கம்பெல்ஷன் இல்லே. ஜஸ்ட் வந்து பாரு. அண்டர்ஸ்டாண்ட் தி நேச்சர் ஆம்ப் பை ஜாப். எழுத்தாளனுக்கு இதெல்லாம் ஒபயோகப்படும்ணு நெனச்சுட்டு வா!”
மீண்டும் இரவு வீடு திரும்பும் வரை சிவா அவனோடு இருந்தான். தாமு சிவாவை சமைக்க விடவில்லை. இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டனர். அல்லது பிரீதா வீட்டிற்குச் சென்றனர்.
ஒருநாள் சிவா தான் சமைப்பதாக வற்புறுத்தினான்.“எ ரைட்டர் ஷûட் நாட் குக் ஃபார் மீ” என்று அடித்துச் சொல்லி விட்டான் தாமு.
சுத்தியல் ஓசை. வெல்டிங்கின் மக்னீஷிய வெளிச்சம், பெய்ண்டின் மணம்… கிரீஸும் பெட்ரோலும் இரும்பும் குலவும் வாசனை.கார்கள், வாகனங்கள், டிராக்டர்கள், ஸ்கூட்டர்கள், தொழிலாளிகள், வேலை தெரிந்தவனின் செருக்கு, அப்பிரண்டிஸ்ஸின் அடக்கம், வாடிக்கையாளர்களின் பிக்கல் பிடுங்கல்கள்.
சிவாவின் உலகம் ஒரு வெறுமையிலிருந்து எந்திரங்களும் மனிதர்களும் ஒருவருக்கொருவர் சவால் விடும் புதிய சந்தடிக்கு விஸ்தரித்தது.
ஒவ்வொரு உலகமும் சுவையானவை தான். அவற்றின் பிரச்னைகளும் ரசமானவை தான்.
எனினும் தனது உலையில் தான் தகித்துக் கனன்று குழம்பாகி, அக்னி தனது வார்ப்பில் பரவிக் குளிர்ந்து தன்மயமாய் நிற்கும் அந்த எழுத்தின் அனுபவத்திற்கு நேரம் எங்கே?‘எப்ப சார் ரெடியாகும்… என் காருக்கு எப்ப டெலிவரி கொடுப்பீங்க? ஸ்பேர் பார்ட்ஸ் சிந்தாதிரிப்பேட்டை பூரா சுத்தினேன், கெடைக்கலே.ஆக்ஸிலேடர், க்ராங்க் ஷாஃப்ட், கியர் பாக்ஸ்’ அலைமோதலும் அவசரமும் யந்திர உறுப்புக்களும் அவனது நேரத்தை, பசித்த மலைப்பாம்புகள் போன்று கவ்வி விழுங்கக் காத்திருந்ததை சிவா கவனித்தான்.
அன்றைய மாலை அவ்வளவு பரபரப்பில்லாத வேளை. கடைசியாக எக்ஸிபிஷன் காண்ட்ராக்டர் ஒருவர் வான் ஒன்றை ரெடி செய்து முடித்து விட்டுத் தொழிலாளிகள் சோப்புப் போட்டு கை கழுவி விட்டுக் கிளம்பினர்.
ஒர்க்ஷாப்பில் உள்ள பாத்ரூமில் தாமு குளிக்கப் போனான்.
அதற்குள் காண்ட்ராக்டர் அனுப்பியதாக வான் டிரைவர் வந்து டெலிவரி கேட்டான்.“குளிக்கப் போயிருக்காரு… ஒக்காருங்க” என்று மேஜை மீதிருந்த போர்ட்டபிள் டைப்ரைட்டரில் ஒரு கடிதத்தை டைப் செய்யத் தொடங்கினான் சிவா.
உள்ளேயிருந்து தாமு கேட்டான்.
“யார் சிவா!”
“எக்ஸிபிஷன் காண்ட்ராக்டரோட வான் டிரைவர்”
“மடாடரா”
அவ்வளவு நீளமான அடையாளம் வேண்டியதில்லை என்று மறைமுகமாகச் சொல்லிக் கொடுக்கிறான்.
“ஆமா”
“மேலே பில் இருக்கு! கேஷ் கொண்டு வந்திருக்காராமா?”
“கேஷ் கொண்டாந்தீங்களாய்யா?” சிவா அஞ்சல் செய்தான்.
“வண்டி ரெடியாண்ணு பாக்க வந்தேன்”
“வண்டி ரெடி பில் இதோ.”“சார், எனக்கு ரொம்ப அர்ஜண்டா வேணும். நீங்க வண்டியோட வாங்க ட்ரைலர் பாத்த மாதிரியும் இருக்கும். காண்ட்ராக்டர் கிட்டேயிருந்து பில் கிளியர் பண்ணி அனுப்பிடறேன்” என்ற டிரைவர் சிவாவைப் பார்த்து கெஞ்சினான்.
உள்ளே குளிக்கும் ஓசை நின்றது.“யாரூஉஉ.. சதா?”
டிரைவர் சதா சுவாதீனமாக பாத்ரூமுக்குள் நுழைந்து ப்ளஷ்டோருக்கு மேலே தெரிந்த தாமுவின் தலையைப் பார்த்து, “குட்மார்னிங் ஸார்!” என்றான்.“குளிக்கக் கூட விடமாட்டியா சதா?”
“இன்னா பண்ட்டம்? எனக்கு அர்ஜெண்ட். கம்பெனி கம்பெனியா ஃபோன் போட்டுட்டு எங்கியும் வண்டி ஆப்டலே. நம்ப வண்டிய வுட்டுட்டு கை ஒடஞ்சி நிக்கறமாதிரி சிச்சுவேஷன்”
“இன்னாப்பா அவ்ளோ அவுசரம்?”தாமுவினால் டிரைவர் பாஷையில் கூட பேச முடியும்.
“நாளைக்கி மினிஸ்டர் வர்றாரு. கட்டவுட் ஆர்டர் கொடுத்ததெல்லாம் அட்விடேஸ்மெண்ட் கம்பெனியிலே தயாராயி ரெண்டு நா ஆவப்போவுது. எடுத்தாரத்துக்கு தோதா வண்டி கெடைக்கில.”
“சரி, பில்லை வாங்கிட்டுப் போய் கேஷ் எடுத்தா! அப்பால வண்டிய டெலிவரி எடுத்துட்டுப் போ.”
“தொரை…தொரை, நாளக்கி பத்து மணிக்கி மினிஸ்டர் வர்றாரு… பேனரு கட்டவுட் எல்லாம் கட்டி ஸீரியல் பல்ப் எல்லாம் ஜோடிக்கணும். இப்பவே மணி ஏழாவப் போவுது. நான் இனிமே போயி எலக்டிரீஷனைத் தடவணும்!”“சிவா… ஒரு போன் போட்டு காண்ட்ராக்டர்கிட்டே வண்டி வந்ததுமே பணம் கெடைக்குமாண்ணு கன்ஃபர்மேஷன் கேளு!”
“ஓ… அத்தைச் செய்யுங்க!”
“நம்பர் என்னாப்பா?”“டி என் எய்ட் ஒன்டூ டூ ட்ரிபிள் த்ரீ…” என்று அவன் சொல்லத் தொடங்கினான்.
அடுத்த நிமிஷத்தில் காண்ட்ராக்டர் உத்திரவாதம் கொடுத்தார்.“என்ன சிவா?” என்று சோப் போட்டுக் கொண்டே தகவல் கேட்டான் தாமு.
“வரச் சொல்றாரு. கேஷ் ரெடியாம்.”“பில் அமவுண்ட் சொன்னியா?”
“சொல்லிட்டேன்.”“சரி, நீ கூட போயி கேஷ் வாங்கிட்டு வா, ஐ’ல் வெய்ட் ஹியர். வர்றப்போ ஆட்டோவிலே வந்துடு. வி ஹாவ் அன் எங்கேஜ்மெண்ட்.”
மெடாடரில் ஏறிக் கதவை அடித்துச் சாத்தினான் சிவா.என் தேவை.. என் தேவை என்று குளிக்க விடாமல், தூங்க விடாமல், சாப்பிட விடாமல், உதிரத்தை உறிஞ்சத் துடிக்கும் உலகம் அது. கவிதையை ஸ்கூட்டரின் கியர் பாக்ஸிலும் சிறுகதையை அம்பாஸிடரின் ஸ்பார்க் ப்ளக்கிலும் எதிர்பார்க்கும் உலகம்.
அவனுக்கு வேறோர் உலகம் ஞாபகம் வந்தது.
அங்கே ரைஸ்மில் ஓடியது. நெல்லின் உமியையும் தவிட்டையும் அசுர நாவால் அரைத்து அரைத்து தள்ளியவாறே கரண்ட் கோட்டா தீரும் வரை இரவும் பகலும் பாராது அது ஓடியது.அங்கே அம்மா அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். அதன் இயக்கத்திற்குள் இணைந்து இரவையும் பகலையும் அழித்து..
கிறீச்சென்று பிரைக்கைப் பிடித்து ஓரமாக நிறுத்தினான் டிரைவர்.“இங்கே சுக்குத் தண்ணி நல்லாருக்கும். ஒரு க்ளாஸ் போட்டுக்கலாம். வர்றீங்களா சார்!”
அத்தனை அவசரத்திலும் டிரைவருக்கு சுக்கு நீர் மீது ஒரு கண்.“வாண்டாம், நீ போய்ட்டு சீக்கிரமா வா”
“தோ”
அவன் திரும்பி வந்து, காண்ட்ராக்டரிடம் போய் பில் பணத்தை வாங்கிக் கொண்டு ரசீதில் கையெழுத்திட்டான் சிவா.
வெளியே வரும்போது “போக ஒரு ஆட்டோ” என்ற சிந்தனைதான் இருந்தது.வருகிற அவசரத்தில் யாரையோ இடித்து விட்டான், பாம்பே ஷோ சூதாட்ட ஸ்டால் அருகில்.
“ஏம்பா… கண்ணு கிண்ணு?” என்று சீற்றம் கிளம்பவும் திரும்பினான். கம்பவுண்டர் புண்ணியகோடி. திஷ்யாவின் அப்பா.அவர் பார்வை மீண்டும் ஸ்டால் மீது தாவியது. குறிபார்த்து எறிந்தால் பணத்தை ஐந்து மடங்காகத் தரும் இடம்.
சென்ட்ரல் ஸ்டேஷனில் திஷ்யா சொன்னவை அவிழ்ந்து கொட்டிய ஆடியோ டேப் மாதிரி சுருள் சுருளாய் அவனைச் சுற்றிக் கொண்டது.தாமு கொஞ்சநேரம் காத்திருக்கட்டும்.
“எங்க சார்… இப்படி?”
“அட… சிவா எங்கே இப்படி?”கூட ஏதோ ஒரு சில்க் ஜிப்பா. தங்க பிரேம் மூக்குக் கண்ணாடி. பன்னீர்ப் புகையிலை. நாற்பது வயசில் ஏதோ எழுபது வயது மேடு பள்ளங்களை முகத்தில் சுமந்த கிழட்டுத் தோற்றம்!
“இவரைத் தெரியுமா?”
அவன் விழித்தான்.“இவர் பத்மனாபா பிலிம்ஸ் ஸ்டோரி டிபார்ட்மெண்ட்லே சீனியர் ரைட்டர். அந்தக் காலத்திலே பத்திரிகைகள்ளே ஓஹோன்னு வெளுத்து வாங்கியிருக்கார். பெர்ய ரைட்டர். காளிசரணன்னு கேள்விப்பட்டிருப்பே.. சார். இவரு எங்க வீட்டிலே பக்கத்துப் போஷன்லே குடியிருக்கார். போன வாரம் நந்தவனம் பார்த்தீங்களா… அட்டைப் படச் சிறப்புக் கதை. எதிரொலியே நீ எங்கே இவர் எழுதியது தான்!”
“அப்படியா.. ஒண்டர்ஃபுல்.. ஒண்டர்ஃபுல்..”
“அதென்ன கதையா சார் அது? மார்வெல். கொண்ணுட்டீங்க!” மாமூல் சினிமாக்காரர்கள் மாதிரி அவர் பாலிஷாகப் புகழ்ந்தார். ஹாவென்று உச்சிக்கு தூக்கிப் போய் உருட்டித் தள்ளுகிற மாதிரி.சிவா இறுகிய உருக்கு மாதிரி நின்றான்.
காளிசரண். பத்து வருஷத்துக்கு முன் தமிழில் அது என்ன பேர்! தமிழ்ச் சிந்தனையிலும் உணர்விலும் சிம்ம கர்ஜனை போன்று எத்தனை கம்பீரத்தை அது தோற்றுவித்தது!பன்னீர்ப் புகையிலையும் வெள்ளி வெற்றிலைச் சம்புடமுமாய் நிற்கும் இந்த மனிதனா அந்த காளிசரண்!
அன்று விடிந்த பொழுதையும், அந்த பயணத்தையும் சிவா கசப்பாகச் சபித்தான்.“பத்மநாபா ஃபிலிம்ஸ்லே இவர்தான் ஆல் இன் ஆல். டிஸைடிங் ஃபேக்டர்னு வச்சுக்கயேன் சிவா!”
சிவா பத்து வருஷத்துக்கு முந்திய காளிசரணுக்கு வணக்கம் செய்தான்.“நம்ம டாட்டரை எப்படியாவது சினிஃபீல்டிலே நொழைச்சுடணும். தினேஷ்குமார் அபிப்பிராயப்படறார். சார் தான் ‘கைட்’ பண்றார்” – புண்ணியகோடி.
“காளிசரண, நீர் பத்து வருஷத்துக்கு முந்தி செத்திருக்கலாம்.”அவன் முகமாற்றத்தில் காளிசரணனுக்கு சரேலென்று எல்லாம் உறைத்து விட்டது.
“தம்பி.. ஒங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்குமானா ஒங்க ஷார்ட் ஸ்டோரியை ஃபில்முக்கு ட்ரை பண்றேன். அது அற்புதமான சப்ஜெக்ட்.”“ஸாரி.”
காளிசரணை பத்து வருஷத்துக்கு முன் கொண்டு போய் வைக்க ஒரு நிமிஷம் முயன்றான்.
“ஏன்…ஒய்?”
“எனக்கு சினி ஃபீல்ட் வேணாம். தாங்க்யூ ஃபார் யுவர் இண்ட்ரஸ்ட்”காளிசரணன் வெற்றிலைச் சம்புடத்தைத் திறந்து வழக்கத்தை விட கொஞ்சம் அதிகப் புகையிலையாக அள்ளினார்.
“எங்க திஷ்யா பேசற மாதிரியே பேசறியேப்பா! வாட் ஹாப்பண்ட் டு தீஸ் யங் பீப்பிள்…?”
சார் ஒங்ககிட்ட ஒரு நிமிஷம்!புண்ணியகோடி திடுக்கிட்டார்.
“எங்கிட்டேயா?”
“நீங்க வேணும்னா பேசிட்டு வாங்களேன். நான் வெய்ட் பண்றேன்” காளிசரண் அனுமதி வழங்கினார்.
“இப்பவே பேசணுமா சிவா?”“சரி. வீட்டிலேதான் பேசுவோம். வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க?”
“அ…அங்.. ஒரு நைன் தர்ட்டி ஆவுமில்லே சார்…”
என்று காளிசரணனைக் கலந்தாலோசித்தார் புண்ணியகோடி.“ஓ…ஆய்டும்…டெஃபனிட்டா ஒன்பதரைக்கு வீட்டுக்கு வந்துடுவார். கொழந்தை கிட்டே சொல்லுங்கோ”
பல்லைக் கடித்துக் கொண்டு சிவா வெளியே வந்தான். எதிரே தெரிந்த ஆட்டோவை நிறுத்தினான்.காளிசரண்… எது உங்களை சர்க்கஸ் சிங்கமாக்கியது? வாழ்க்கையா… வயிற்றுப் பிழைப்பா… வயிறு… வயிறு… அது மனிதனை… அவன் இதயத்தை… மூளையை… ஆத்மாவை இப்படி ஜீரணித்து விட முடியுமா?
ஆட்டோ ஒர்க்ஷாப்பை அடையும்போது சிவா ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தான்.
புண்ணியகோடி ஒன்பதரைக்கு வரவில்லை. அவுட்டோர் ஷýட்டிங் பார்க்க நாலு நாள் பெங்களூர், ஊட்டி என்று போய்விட்டார்.
தொடரும்
-
ஐந்து கை ராந்தல் (8)
வையவன்
மதனபள்ளியிலிருந்து தாமு திரும்பி வருவதற்குள் சிவாவுக்கு இரண்டு கடிதங்கள் வந்திருந்தன.
ஒன்று நந்தவனம் ஆசிரியரிடமிருந்து இரு நூற்றி ஐம்பது ரூபாய்க்கு ஒரு செக். அவனது கதையைப் பாராட்டி உற்சாகமூட்டும் சில வரிகள்.இரண்டாவது அம்மாவிடமிருந்து சில எழுத்துப் பிழைகளுக்கு மத்தியில் அவன் வாழ்வில் எதிர்ப்பட்ட முதல் வெளிச்சத்திற்கு அவள் பூரிப்பு பாற்கடலாகப் பொங்கியிருந்தது. அவன் எழுதியிருந்த கடிதத்துக்குப் பதில்.
தபால்காரர் வந்துபோன பின்புதான் தாமு வந்தான் நேரே ஒர்க்ஷாப்புக்குப் போய்விட்டு வருகிறான் என்று மோட்டார் சைக்கிள் ஒலி அறிவித்தது.மாடிப் படியில் அவனது மிடுக்கான ஷý ஓசை கேட்டது. சிவா எதிர் கொள்ளச் சென்றான்.
பிரயாணக் களைப்பு தெரியாமல்அவன் குளித்து புத்துணர்ச்சியோடு காணப்பட்டான்.
பிரீதா வீட்டிலிருந்து வருகிறான் என்று புரிந்து கொண்டான் சிவா.அவனைப் பார்த்ததும் கச்சிதமாக ஒரு புன்னகை செய்தான் தாமு. பிரீதா சொல்லி விட்டாள். அவன் பார்வையில் சிவா உணர்ந்தான்.
“கங்க்ராட்ஸ்”
“தாங்க்யூ”சிவா செக்கையும் கடிதத்தையும் நீட்டினான்.
செக்கின் தொகையைப் பார்த்துவிட்டு “நாட் பேட்” என்று சிலாகித்து விட்டு கடிதத்தைப் படித்தான்.
எட்டு வருஷங்களில் தெலுங்கை மறந்து விடுமளவு அவன் தமிழில் ஊறியிருந்தான்.
“நவ் யூ ஆர் ஸம்படி!”“பிகாஸ்…பிகாஸ் ஆப் யூ”
“நீ மிகைப்படுத்தறே!”“இந்த நிழல்… இந்த பாதுகாப்பு இல்லாமே என்னால் இதை எழுதியிருக்க முடியாது.”
“ஓ…இட்ஸ் ஜஸ்ட் எக்ஸ்டர்னல்.”அவன் ‘ஷý’வை அவிழ்ப்பதற்காக மாடியின் கை பிடிச்சுவரின் மீது காலை உயர்த்தி வைத்தவாறே செக்கையும் கடிதத்தையும் திரும்ப நீட்டினான்.
“வேண்டாம்” என்றான் சிவா.
“ஏன்?”
“இது உங்களுடையது”
தாமு ஒரு வினாடி அவனை ஆராய்வது போல் பார்த்தான்.“ஒனக்கு பாங்கிங் புரொஸீஜர் தெரியுமா?”
சிவாவுக்கு விளங்கவில்லை.தாமு குறுப்பாகப் புன்னகை செய்தான்.
“பின்னாலே ‘ஸைன்’ பண்ணிக்கொடு.”சிவா பேனாவை எடுத்துவர உள்ளே போனான். தாமு ஃபேன் ஸ்விட்சைத் தட்டிவிட்டு சோஃபாவில் உட்கார்ந்தான். டீப்பாயின் மேல் அவனுக்கு வந்திருந்த கடிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாய் அவன் பார்வையிடும்போது இவன் வெறும் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவன் என்று நம்ப முடியவில்லை.
செக்கின் பின்னால் கையெழுத்துப் போட்டு எடுத்து வந்த சிவா ஓரமாக நின்றான்.
“அப்பா எப்படி இருக்கார்?”“பாரலைஸிஸ் ஸ்ட்ரோக். கட்டில்லே படுத்துட்டார். இடது பக்கம் பூரா ஆக்ஷன் இல்லே.”
யாரோ மூன்றாம் நபருக்கு நேர்ந்ததைப் பற்றி சொல்வது போல் தாமு சொன்னான்.
“ஆஸ்பிடல்லே சேத்துரலாமே.”“அவருக்கு ஹாஸ்பிடலைசேஷன் பிடிக்காது. லைஃப் ஆர் டெத். எதுவாயிருந்தாலும் தன் கூரையின் கீழ்ணு அவருக்கு ஒரு பிரின்சிபிள்.”
“ட்ரீட்மெண்ட்?”‘டாக்டர்கள் வீட்டுக்கு வந்துகிட்டிருக்காங்க.”
சிவாவுக்கு அந்தத் தகவலில் ஜமீன் மிடுக்கு தெரியவில்லை. ஒரு பீஷ்ம வைராக்கியம் தென்பட்டது.
சிவா கையெழுத்திட்ட செக்கை நீட்டினான்.அதை வாங்கித் தன் பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொண்டான் தாமு. யோசனையோடு சிவாவைப் பார்த்தான்.
“இனிமே நாயனாவாலே நெலத்தைக் கவனிக்க முடியாது சிவா! அங்கே நிறைய ரயத்துக்கள் டிரபிள். இப்ப அவருக்கு ஒடம்பும் சரியில்லே!”
இது எதற்காக பீடிகை?
சிவா காத்திருந்தான்.“அம்மா என்னை திரும்பி வந்துடச் சொல்லி அழுதாங்க. நாயனா ஒண்ணும் பேசலே. முளிச்சுப் பார்த்தாரு.”
அந்த தகப்பன் மகன் உறவு சிக்கல் சிவாவுக்கு சுவாரஸ்யமாயிருந்தது.“போடா வெளிலேண்ணு சொன்னவரு வாடாண்ணு கூப்பிடட்டும்ணு நான் பதில் சொல்லலே. அவருக்கு வாய்விட்டுக் கூப்பிட முகமில்லே. பக்கத்திலே அம்மா ஸ்ரீராமஜெயம் எழுதி வச்ச நோட்டு கிடந்தது. அதை எடுக்கச் சொன்னார். அதிலே ‘ரா’ என்ற எழுத்தை மட்டும் தொட்டுத் தொட்டுக் காட்டினார். ரான்னா தெலுங்கிலே வான்னு அர்த்தம்.”
சிவாவின் முதுகுத் தண்டில் தவளை துள்ளியமாதிரி இருந்தது.
“இனிமே மதராஸ் இல்லே… மதனபள்ளி தான்.”அது எத்தனை நியாயம் என்று உணரும் போதே ‘டர்-டர்’ என்று ஒரு ஷட்டர் கதவு தனக்கும் தாமுவுக்கும் மத்தியில் வந்து விழுந்ததாக நினைத்தான் சிவா.
இந்த ராயப்பேட்டை வாசம், திஷ்யா, பிரீதா, சமையல், சாப்பாடு எல்லாம் நறுக்கென்று அங்கங்கே முற்றுப் புள்ளிகள் குத்திக் கொண்டு நின்றன.
தாமு டீப்பாய் மேலிருந்த சிகரெட் கேஸை எடுத்துப் பிரித்தான். பற்ற வைத்த பின்பும் எரியும் தீக்குச்சியின் நீல ஜ்வாலை நோக்கி ஏதோ யோசித்தான்.
“உக்காரு சிவா”
“இட்ஸ் ஆல் ரைட்”
“நோ. ப்ளீஸ் பீ ஸீடட்”
சிவா உட்கார்ந்தான்.‘யு டோன்ட் நோ மெட்ராஸ். ரைட்டராயிட்டா மட்டும் போதாது. கிதாப் வேணும். பந்தா வேணும்.”
சிவா கேட்டுக் கொண்டான்.“இங்கே சரக்கே வேணாம்; முறுக்கு போதும். ஏன் அதான் ஓணும்!”
“வில் இட் ஹெல்ப் மை ரைட்டிங்?”“வாட் இன் இன்னொஸன்ட் க்வெஸ்டின்? ஒண்ணு சொல்றேன் சிவா.. வேலை தேடறதை விட்டுடு.”
“ஏன்?”
“தட் வில் மேக் யூ ஸிக்.”
“என்ன பண்ணட்டும்?”“எழுது… எழுது… இந்த சமூகத்தினுடைய வயித்திலே ஒதைக்கறா மாதிரி எழுது.”
தாமு அதைச் சொன்னபோது அவன் குரலில் தொனித்த வீர்யம் சிவாவின் தந்துகிகளில் பாய்ந்தது.தாமு சட்டைப் பையிலிருந்த செக்கைத் தொட்டுக் காட்டி விட்டு, “பட்டோண்ட் பிலீவ். இது மாதிரி ஒனக்கு நெறய வரும்னு நம்பிடாதே! எட்டு வருஷத்திலே எத்தனையோ ஆர்ட்டிஸ்ட்.. எத்தனையோ ரைட்டர்ஸ்… எவ்வளவோ பார்த்துட்டேன்.
இதை நம்பிட்டே, இதுக்குப் பின்னாடியே நாய் மாதிரி நீ அலையணும். ஒண் டே அர் த அதர்- இந்த ரீடர்ஸும் மாகஸின்ஸும் கூலா ஒன்னைக் கை கழுவிடுவாங்க.”
“வேலை தேட வேண்டாம்னு சொல்றீங்களா?”
“ஆமா- நான் மதனபள்ளிக்கு போறேன். நீ மெட்ராசுலே இரு. ஒர்க்ஷாப்பை மேனேஜ் பண்ணு.”“எனக்கு ஒர்க் ஷாப்பைப் பத்தி ஒண்ணுமே தெரியாதே!”
“மதனபள்ளியிலிருந்து வர்றப்ப எனக்குக் கூட ஒண்ணும் தெரியாது!”
பதில் பளிச்சென்று மண்டையில் அறைந்தது.ஆனால் நீங்கள் தாமு. நான் சிவா என்று அவன் நினைத்தான். சொல்லவில்லை.
“கத்துக்கோ. இது ஒன் தொழில்ணு நெனச்சா ஒனக்கு ஒரு மாசம் போதும். ‘நாம்ப குமாஸ்தா’தான்னு நெனச்சா எட்டு வருஷம் கூடப் போதாது.”இவன் மனிதனா இல்லை மின்சார ட்ரான்ஸ்மிட்டரா?
“மதனபள்ளியிலே வாரத்திலே மாசத்துலே எப்பவாச்சும் மூச்சு திணறும்போது அப்படி காத்துவாங்க நான் மெட்ராஸ் வருவேன். அப்ப எனக்கு இந்த ‘ஆஸ்ரமம்’ வேணும்.”தாமு ஆள் காட்டி விரலை வளைத்து அந்த வீட்டுத் தரையைக் கொத்துகிற மாதிரி சைகை செய்து காட்டினான்.
“நான் யோசிக்கணும்.”புகையை இழுத்து ஊதிவிட்டு தாமு சிரித்தான்.“ஐ லைக் தட் ஆன்ஸர். யோசி, நல்லா தெளிவா யோசி. என்ன கேக்கணும்னாலும் ப்ளெய்னா கேளு. ஒனக்கு ஒரு வாரம் ‘டைம்’ தர்றேன்.”
தாமு எழுந்தான். சிகரெட்டை ட்ரேயில் வைத்து நசுக்கினான்.
“அந்த ஸ்விட்சை ‘ஆஃப்’ பண்ணு” என்று ஃபேனைச் சுட்டிக் காட்டிவிட்டு, ட்ரஸ்ஸிங் டேபிள் முன்னால் போய் பௌடர் கொட்டிக் கொண்டான்.“நீ போய் டிரஸ் பண்ணு… நீ என்னோட வர்றே?” என்று உத்தரவு போல் சொல்லிவிட்டுப் பவுடர் போடத் தொடங்கினான்.
எதற்கு என்று புரியாவிட்டாலும் சிவா போய் டிரஸ் பண்ணத் தொடங்கினான்.இருவரும் கிளம்பி வெளியே வரும்போது வாசலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த திஷ்யா, அவர்களை நிமிர்ந்து பார்த்தாள்.
தாமுவின் கூலிங் கிளாஸ் அணிந்த கண்களில் ஓடிய ஏதோ ஒரு விஷமச் சிரிப்பு, உதட்டோரம் சிதறி வழிந்ததை சிவா கவனித்தான்.
அவனுள் எங்கோ கரித்தது. உதடுகளை நெளித்துக் கொண்டு திஷ்யா விசுக்கென்று மோவாயை நொடித்துத் திரும்பினாள். அந்த வேகத்தில் அவளது கூந்தல் தாவி அவளற் மார்பின் மீது விழுந்தது.
தாமு மோட்டார் சைக்கிளை ஸ்ட்டார்ட் செய்தான். அது ஜப்பான்மேக். அதன் ஓட்டத்திலேயே பில்லியனில் போகிறவனும் டிரைவரும் கத்தாமல் பேசிக் கொள்ளலாம்.
மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டே தாமு ஒரு கேள்வி கேட்டான்.
“டூ யூ லைக் தட் கேர்ள்?”
“யாரு… திஷ்யாவா?”
“எஸ்”அதற்கு சிவாவிடம் சலனமில்லை.
“ஓ ஸாரி சிவா! நீதான் ரிஷியாச்சே…”அவனது மோட்டார் சைக்கிள் போஸ்டர் தின்னும் சகிந்திப் பசுவின் ஆயுசை நீடிக்க முயன்றது. ப்ரேக் அடிக்காமல் வளைத்து அந்த பசு, அதன் பரம்பரை, அதை வளர்ப்பவன், பிறப்பின் மர்மம் ஆகிய எதைப் பற்றியும் விமர்சிக்காமல் தாமு தன் விஷயத்தில் மூழ்கியிருந்தான்.
“ஷி ஈஸ் லவ்வி…”
சிவா தொண்டையை விழுங்கினான்.“லைஃபோ… லவ்வோ… சிவா அட்டாக் இட். ஃபர்ஸ்ட் யூ அட்டாக் இட். யோசிச்சே.. தயங்கினே.. தென் நீ ஒரு ‘யூஸ் லெஸ்…போயட்’டாத்தான் இருக்கணும்.”
மோட்டார் சைக்கிள் அரசுடைமையாக்கப்பட்ட அந்த பாங்கின் ஓரமாக வந்து நின்றது.
“எறங்கு?”கைது செய்யப்பட்டுப் பின் தொடர்கிறவன் போன்று சிவா பின்னால் போனான்.
மானேஜரின் அறையில் தாமு நுழைந்ததும் அவர் எழுந்து வரவேற்றார்.
சிவாவை அவன் அறிமுகப்படுத்தினான்.“திஸ் ஈஸ் மிஸ்டர் சிவா. எ பட்டிங் ரைட்டர்”
“க்ளாட் டு மீட் யூ” மானேஜர் கை குலுக்கினார்.“இவர் பேரிலே ஒரு அக்கவுண்ட் ‘ஓபன்’ பண்ணனும்’ என்று செக்கை நீட்டிக் காட்டினான் தாமு.
“ஓ எஸ்”சிவா மீண்டும் ஒருமுறை தாமுவின் பெருந்தன்மை முன்னர் தான் குறுகி நிற்பதை உணர்ந்தான்.
தொடரும்
-
பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு
அன்பினிய நண்பர்களுக்கு,
வணக்கம். சென்ற மாதம் (மார்ச் 1, 2015) ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் எழுதிய ஒரு கட்டுரை மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரை குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.
திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு
வணக்கம்
கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.
இணையத்தில் இன்று பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும் பல பயன்பாடுகளில் ஒன்றாக கட்டுரையாளர் வரைபடச் சேவையை தேர்ந்தெடுத்து முத்தான தகவல்களை தந்திருக்கிறார். கூகிள் தொடர்ந்து இந்திய இரயில் தடப் பயணம் குறித்து வரும் செய்திகள் முதற்கொண்டு பல விவரங்களை மிக நேர்த்தியாக, புரியும் வண்ணம் தந்திருப்பது அருமை.
இணைய பயண்பாடுகளின் ஒரு பகுதியை மட்டும் குறித்து இவர் எழுதி இருப்பது நன்றாக இருந்தாலும் இன்னும் எத்தனையோ விவரங்கள் தமிழில் பதியப் படாமல் இருக்கின்றன. இன்றைய பெரும்பாலான மக்கள் உபயோகிக்கும் தொலைபேசிகள் ஆரம்பித்து வீட்டில் பார்க்கும் தொலை காட்சி வரை இணையத்தின் ஆக்டபஸ் கரங்கள் நீண்டிருக்கின்றன. அவற்றில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அவற்றை நெறிபடுத்தி தேவையான பல விவரங்களை கட்டுரையாளர் தொகுத்து சிறு மின்னூலாக வழங்கினால் பலருக்கும் நல்லதொரு பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
இந்தக் கட்டுரையாளரை நான் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கிறேன். மீண்டும் வாழ்த்துகள்.
அன்புடன்
ஐயப்பன்இந்தப் போட்டி, மார்ச்சு 2015 முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ.100 (நூறு ரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12 கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் பிரதி, கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறோம். பயனுள்ள நல்ல கட்டுரைகளை வரவேற்கிறோம் நண்பர்களே. அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com
-
ஐந்து கை ராந்தல் (7)
வையவன்
அவ்வளவு சீக்கிரம் சிவா திரும்பி விடுவான் என்று தெரு வாசலில் நின்று கொண்டிருந்த திஷ்யா எதிர்பார்க்கவில்லை.
“என்ன இவ்வளவு சீக்கிரம்?”
தன் மனசில் திடீரென்று வந்து கவிந்திருந்த தனிமைக்கு அவளைப் பார்ப்பது உற்சாக மளித்தது.
“விடுதலை கெடைச்சுடுச்சு” என்றான் கிண்டலாக.“அப்ப ஜெயில்லேருந்து தான் வர்றீங்களா ஐயா?” என்றாள் திஷ்யா.
ஆம். பாசம் என்ற சிறையிலிருந்து. அதை இவள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? சிவா மாற்றிச் சொன்னான்.
“நண்பன் கிட்டேயிருந்து விடுதலை. ஒனக்கு அத்தை கிட்டேயிருந்து கெடைச்சுடுச்சா?”
உனக்கு என்ன வாய்க் கொழுப்பு என்பது போல் திஷ்யா அவனைப் பார்த்து நாக்கைக் கடித்தாள். இது ஒரு படி முன்னேற்றம் என்று சிவாவுக்குத் தோன்றியது.“அத்தை சாயங்கால வண்டியிலே ஊருக்குப் போறாங்க. நீங்க வந்து டிக்கெட் வாங்கிக் கொடுங்க. பிரேம் வியாசர்பாடிக்குப் போயிருக்கான். வேற ஆள் தொணையில்லே….”
“நானா…” சிவா சற்று தயங்கினான். பிறகு ஒப்புக் கொண்டான்.
அறைக்குப் போன போது தாமுவிடமிருந்து வந்த கார்டு கிடந்தது.‘அப்பா தேறி வருகிறார். விரைவில் வருகிறேன்’ என்று இரண்டு வரிகள் மட்டும் எழுதியிருந்தான்.
சிவா குளித்து விட்டு சிறிது நேரம் படுத்தான்.பிறகு எழுந்து உட்கார்ந்து மற்றொரு சிறுகதை எழுதத் தொடங்கினான். வெளியே எங்கும் போகவில்லை.
மாலை ஐந்து மணி ஆனபோது சீதா வந்து “ஸ்டேஷனுக்குப் போக ஒங்களை அக்கா ரெடியாகச் சொன்னா” என்று தகவல் கொடுத்தாள்.அத்தையை ரயிலேற்றி அனுப்பிவிட்டுத் திரும்பும் போது சென்ட்ரலின் நடுவே போட்டிருந்த ஆசன வரிசைகளைப் பார்த்தபோது சிவாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்துட்டுப் போவோமா?”
“ஆஹா… எப்படிப்பட்ட இடம் கெடைச்சிருக்கு ஒனக்கு”
“ஃபேன் ஓடறது. நாலஞ்சு ஸீட் காலியா இருக்கு…”“அங்கே பசங்கள்ளாம் தனியா இருக்குமே…” என்று அரை மனசோடு சொல்லியவாறே திஷ்யா சம்மதித்தாள்.
சிவா அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.உட்கார்ந்தவுடனே அவள் கேட்ட முதல் கேள்வி.
“நீ எதுக்குக் கதை எழுதறே?”சிவாவுக்கு அவளுக்கு ஒரு ‘கூல் டிரிங்’ வாங்கிக் கொடுக்கும் நினைப்பு எழுந்தது.
“நாம்ப ஒரு கூல் டிரிங் சாப்பிடலாமா?”
“மொதல்லே என் கேள்வி!”
“கொஞ்சம் கூலாச் சொல்லலாமே”
“காசு வச்சிருக்கியா?” என்று விஷமத்தனமாகக் கேட்டாள்.“நீ வாங்கிக் கொடுப்பேண்ணு ஒங்கிட்டே கேக்கறதா நெனப்போ?”
“சீ… சும்மா வேடிக்கைக்குக் கேட்டேன்.”
“அப்ப வா போவோம்” என்று எழ முயன்றான் சிவா.“எழுந்து போனா எடம் போயிடும்”
“ஒண்ணு செய்யறேன்… நான் போயி ரெண்டு கூல்டிரிங் வாங்கிட்டு வர்றேன். நீ எடத்தைப் பார்த்துக்க” என்று சிவா சம்மதம் கேட்டான்.“ஐயைய… நான் தனியா ஒக்காந்திருக்க முடியாது.. நான் போய் வரட்டா?” என்று கேட்டாள் திஷ்யா.
“நீ போய் எனக்காக வாங்கிட்டு வந்தா எனக்கு ஷாஹென்ஷா மாதிரி ஒரு ஃபீலிங் வரும்”
“எனக்கு மட்டும் ஒரு ஷா ஹென்ஸி மாதிரி வராதா”“ஷா ஹென்ஷாவுக்கு பெண் பால் ஜஹானரா”
“தாங்க்யூ பண்டிட்… ரெண்டு பேருமே போக வேண்டாம். வீட்டுக்குக் கௌம்பறப்ப குடிச்சுப்போம். நான் கேட்ட கேள்வி?”
“சென்ட்ரல் ஸ்டேஷன் நடுவிலே ஹோன்னு இரைச்சலுக்கு மத்தியிலே கேக்கற கேள்வியா இது? சரி நீ ஏன் அதைப் படிச்சே?”“எல்லாரும் ஒன் கதையைப் படிச்சிட்டு அழுதாங்க.. ஏன் அழணும்ணு வாங்கிப் படிச்சேன். எனக்கு சிரிப்பு வந்தது?”
“எதுக்கு சிரிச்சே?…” என்று அவளைக் கூர்ந்து பார்த்தான் சிவா.“வாழ்க்கையிலே எத்தனையோ கஷ்டம் இருக்கு. அதிலே என்னமோ ஒன்னைப் பிடிச்சு ஓஹோன்னு பிரமாதப்படுத்திட்டே ஸோ வாட்?”
அவள் சொல்வது முழுக்க நிஜமில்லை என்று சிவாவுக்குப் பட்டது. நான் ஒன்றும் உன் ரசிகை இல்லை என்று காட்டிக் கொள்கிற மாதிரி அவள் முயற்சிக்கிறாள். அவன் அதை ரசித்தான்.
எழுத்தாளனின் ரசிகையாக இருப்பதை விட சிவாவுக்கு வேறு என்னவோவாக இருப்பதில் ஒரு சமத்துவம் தேடுகிறாள் என்று புரிந்தது.
“திஷ்யா, ஒரு விஷயம் தெரியுமா?”“சொல்லு” தன் விரல்களுக்கு வைத்திருந்த மருதாணி நன்கு பற்றியிருக்கிறதா என்று கைகளை திருப்பிப் பார்த்துக் கொண்டே விவாதிக்கத் தயாரானாள்.
“அந்தக் கதை வெளிவந்தப்புறம் சில பேர் எங்கிட்டே தங்களோட சொந்தக் கதையைச் சொல்லி அங்கலாய்க்கிறாங்க.. இதோ இப்ப ரயிலேத்தி அனுப்பினோமே ஒங்க அத்தை.. அவங்க என்கிட்டே ரெண்டு கதை.. சொந்தக் கஷ்டங்கள்தான்… சொல்லிட்டாங்க”
“நீ அதைக் கதையா எழுதித் தீர்த்து வச்சுடுவியாக்கும்?”
சவுக்கைச் சொடுக்குவது மாதிரி இவளிடம் ஒரு குத்தல். சிவா அவள் கண்களைப் பார்த்தான். மிக மெல்லிசாக மை தீட்டியிருந்தாள். குத்தல் விடும் போதெல்லாம் அந்த முகத்தில் தோன்றிய ஒரு தனி சோபை நெஞ்சை அள்ளுவதாயிருந்தது.
‘கஷ்டங்களைத் தீர்த்துக்கறதை விடவும் அதை நாலு பேரு தெரிஞ்சுக்கிட்டா மேல்ணு பெரும்பாலோர் நெனைக்கிறாங்க!”
“ஏன் அப்படி?”“கேக்கவும் சொல்லவும் பிரச்னை இருக்கறதாலே! மனுஷாள் அப்ப தான் உயிர் வாழறதா நெனைக்கிறாங்க. வாழ்க்கையின் வெகுமானமே அந்தப் பரிவுதான்.”
“அதுக்குதான் நீ எழுதறியா கதை?”“எஸ் அண்ட் நோ”
“இது ஒரு பதிலா?”
“திஷ்யா..ஒன் கேள்விக்கு ஒரு பதில்..ஒற்றைப் பதில் தர முடியாது”
“சமுதாய சீர்திருத்தம்…புரட்சி..லட்சியம்?”“அதையெல்லாம் நான் சொல்லிக்கிட்டே எழுத ஆரம்பிச்சா… கதை வராது. பெருக்கல் வாய்பாடுதான் வரும்… எனக்கு ஒரு கதை எழுதினா ஒரு பிரார்த்தனையை முடிச்ச திருப்தி… ஒரு நிறைவு… ஒரு விடுதலை… அதான் பொருத்தம்…”
“என்ன சொன்னே…பிரார்த்தனையா?”
“ஆமா” என்றான் சிவா.
“நீ என்ன ரிஷியா?”ஸீட்டுக்கும் முதுகுக்கும் இடையே கூந்தல் உறுத்தியதால் திஷ்யா அதை எடுத்து முன்னே விட்டாள். மார்பின் மீது கன்னங்கரேலென்று விழுந்த அந்த கூந்தல் அவளை ‘ஸெக்ஸி’ யாக்கிற்று.
அந்த உதடுகளின் சிவப்பிற்கு அந்தகூந்தல் கருமை காட்டிய மாறுபாட்டில் தான் வசமிழப்பதை சிவா உணர்ந்தான்.
தான் ரிஷியல்ல. அது அப்போது நன்கு உறைத்தது.“ரிஷி மட்டும்தான் பிரார்த்திக்கணுமா?”
“ஏன்… கிழவர்கள்… கிழவிகள்… கையாலாகாதவங்க… கனவு காணும் குழந்தைகள்…” திஷ்யா அடுக்கிக் கொண்டே போனாள்.“ஸ்டாப்… உன் லிஸ்ட்லே எழுத்தாளனையும் சேத்துக்க.. அவனும் பிரார்த்திக்கிறான். பரிவிற்காக.. மனித உணர்வுகள் செத்துப் போயிடாம இருக்க. அன்புக்காக”
அவனுக்குக் கோபம் வருவிக்கும் முயற்சியில் தான் தோற்றதை ஒப்புக் கொள்ள அவனைப் பார்த்தாள்.
அவன் விழிகளில் ஒரு இரக்கம் அவளுக்குப் புலப்பட்டது. சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்கள் தங்களைக் கவனிக்கிறதைப் பார்த்தாள்.உதட்டைச் சுளித்து இமைகளைத் தாழ்த்தினாள்.. அவனுக்கு அவளுடைய கவர்ச்சி அதிகரித்தது.
கீழே பார்த்துக் கொண்டே கூப்பிட்டாள்.
“சிவா”“ம் ம்”
“அசடு வழிய ஆரம்பிச்சாச்சா?”
அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.“இது சென்ட்ரல் ஸ்டேஷன்.. இதெல்லாம் கதையிலேயே வச்சுக்க… என்ன?”
“என் கதையிலே இதெல்லாம் வச்சுக்கறதில்லே”
“குட்… அப்பதான் கதை ஆரோக்கியமா இருக்கும்.”
“சொல்லுங்க விமர்சகரே”“ரெண்டு விஷயம் ஒங்கூடப் பேசணும்னு தான் அத்தையை வழியனுப்ப ஒன்னைத் தொணைக்குக் கூப்பிட்டேன்.”
“அப்ப டிக்கட் வாங்கித் தர்றதுக்காக அழைச்சுட்டு வரலியா?”“அட… அட… க்யூவிலே நிண்ணு அடிதடி பண்ணி சூர பராக்கிரமத்தோடே எப்படி டிக்கெட் வாங்கினே பாரு.. இதுக்கு நீ இல்லாமே எங்கே முடியப் போறதுண்ணு ஒன்னைக் கூட்டிகிட்டு வந்தேன் இல்லே?…”
“எந்நன்றி கொன்றார்க்கும்…” என்று ஒரு குறளை ஆரம்பித்தான் சிவா.“சொல்லட்டுமா.. இல்லே கௌம்பலாமா?”
“சொல்ல விரும்பினா சொல்லு”
“இதுதான் வரணும்ணு எதிர்பார்த்தேன்”
“எது?”
“கோபம்”“வரலே…வராது…உன்கிட்டே வரவே வராது”
“சிவசிவா… ஒன்னைச் சொல்லலே; அசல் சிவனைச் சொல்றேன். நேத்து சாயந்திரம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்குப் போயிட்டு வர்றப்ப ஒருத்தன் கார்லேருந்து என்னை மொறைச்சுப் பார்த்தான்.”
திஷ்யா சொன்னதும் குறுக்கிட்டான் சிவா.“வழக்கப்படிண்ணு சொல்லு-”
“இல்லே… இது அப்படி இல்லே… நாலஞ்சு நாளா ஒரு மோட்டார் பைக் வாலா தெனம் நான் அன்ஸ்டிடியூட்டுக்குப் போற போதெல்லாம் அந்த நேரத்துக்கு நான் வருவேண்ணு காத்திருக்கிற மாதிரி பழியா கெடப்பான். இன்னிக்கு அவனும் அந்த காரிலே ஒக்காந்திருந்தான்.”
“நீ பயந்துட்டியா?”“நோ… நான் என்ன தப்புப் பண்ணினேன். பயப்பட? முழுக்கக் கேளு”
அவள் ‘சீரியஸாக’ச் சொல்ல ஆரம்பித்தாள்.“காரை நான் இன்னிக்கு ‘பாஸ்’ பண்றப்ப ‘மிஸ்’னு அவன் என்னைக் கூப்பிட்டான். மோட்டார் சைக்கிள்காரன் கார் டிரைவரைப் பார்த்து இவர் யார் தெரியும்லேண்ணு கேட்டான். ‘ஐ டோண்ட் பாதர்’னு சொன்னேன். அந்த ‘கட்’டை வாங்கிக்கிட்ட மாதிரியே காட்டிக்காமே வளவளத்தான். இவர்தான் பிரபல டைரக்டர் தினேஷ்குமார்.
“இவருடைய புதுப்படத்திலே நடிக்க ஒரு ஹீரோயின் தேவை. ஒங்களுக்குச் சௌகரியப் படுமாண்ணான். எனக்கு மகா கோபம் வந்தது.”
“என்ன பண்ணே?” என்று சிவா ஆவலோடு கேட்டான்.
“நோ… டெஃபனிட்லி நோண்ணு சொல்லிட்டு வந்துவிட்டேன்.”
“தட்ஸ் குட்.. அவ்வளவுதானே!”“இல்லே… அதுக்கு மேலே போய்ட்டாங்க அவங்க. இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் என் அட்ரஸைக் கேட்டிருக்காங்க. அங்கே இருக்கற சினிமா சபலம் ஒண்ணு ரெண்டு சொல்லியிருக்கு. நேரா ஹாஸ்பிடலுக்குப் போயி அப்பாவைப் பார்த்திருக்காங்க.”
“ஓ”
“எடுத்த எடுப்பிலே எழுபத்தஞ்சாயிரம் தர்றோம்ணு ஆரம்பிச்சாங்களாம்.”
“அப்பா என்ன சொன்னார்?”“வாரா வாரம் லாட்டரி டிக்கெட் வாங்கிட்டு கிண்டி ரேஸுக்குப் போறவர் என்ன சொல்லியிருக்கப் போறார்? அதுக்கென்ன ஆகட்டும்னு தலையை ஆட்டிட்டு வந்திருக்கிறாரு!”
“ஒன்னை வந்து கேட்டாரா?”“கேட்டாராவது… ராத்திரி சாப்பிடவேயில்லே.. முடியவே முடியாதுண்ணு அடிச்சு சொல்லிட்டதிலே அவருக்கு ஏகக் கோபம்.”
சிவா ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்தான்.“என்ன பாக்கறே?”
“நீ எதை மறுத்துக்கிட்டிருக்கேண்ணு ஒனக்குத் தெரியுமா?” சிவா அவளைப் பரீட்சை செய்வது போலக் கேட்டான்.
“நான்சென்ஸ்.. அந்த அதிர்ஷ்டம் எப்படிப்பட்டதுண்ணுதான் தெருத் தெருவா துணி இல்லாமே தொங்கற வால்போஸ்டர்கள்ளே தெரியுதே…”
“அப்புறம் இது என்ன?”
சிவா கண்ணிமைகளை மூடிக்கொண்டு பதில் தந்தான்.“இதான் டெம்ப்டெஷன்… பைபிள் பாஷையிலே சொன்னா சைத்தானின் தூண்டுதல்.”
“எப்படி?”
“இன்னிக்கு லட்சோப லட்சம் பேருக்கு சினிமா நடிகையாயிடணும்.. லட்சம் லட்சமா சம்பாதிக்கணும்னு வெறி இருக்கறப்ப அதை நீ வேணாங்கறியே”
“நான் டெம்ப்ட் ஆகலே.”
“ஒங்க அப்பா”“அவருக்கு சைபர் சைபரா எண்களைச் சொன்னாலே டெம்ப்ட் ஆயிடுவார்.”
“அவர் நிர்ப்பந்திச்சா நீ என்ன பண்ணுவே?”
“அவர் ரொம்ப ஓவரா வற்புறுத்தினா ஓடிடுவேன்.”
“எங்கே?”அவள் நிசப்தமானாள்.
அவன் காத்திருந்தான்.
“ஐ’ம் ஸாரி சிவா..நான் ஓடமாட்டேன்…எங்க குடும்பத்திலே ஒருத்தர் ஓடினது போதும்.”
யாரு… என்று வாய் வரை வந்த கேள்விக்கு அவன் ‘ஸீல்’ வைத்தான்.திஷ்யாவின் அம்மா ஓடிப்போன சங்கதி அந்த வீட்டில் அவன் கால் வைத்த முதல் வாரத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.
ஒரு சூதாடியோடு வாழ முடியாமல் போராடிப் பார்த்து நாலு குழந்தைகளையும் விட்டு விட்டு ஒரு வைர வியாபாரியோடு அவள் ஓடிப் போனாளாம்.
“நான் ஓடமாட்டேன்.”சென்ட்ரலில் என்ஜின்கள் முழங்கின. ட்ராலிகள் காது பிளக்க உருண்டு வந்தன.
ஓடுவோர் நடப்போர் யந்திரம் மனிதர் என்று அந்த மாபெரும் கூரையின் கீழ் ஒலிகளின் சங்கமம் கடல் மாதிரி கேட்டது.சப்தக் கடல்.
“ஐ வில் ரெஸிஸ்ட்… ரெஸிஸ்ட் இட்”
“நான் அப்பாகிட்டே பேசிப் பார்க்கறேன்.”
அவள் மறுப்பு தெரிவிக்கவில்லை.
“ரெண்டு விஷயம்ணு சொன்னியே.. இன்னொரு விஷயம்?”“எங்கே ஒங்க பாஸ்”
“பாஸா… யாரது”
“தாமு”
“மதனபள்ளி போயிருக்கார்..ஏன் என்ன விஷயம்?”
“எப்ப வருவார்?”
“தெரியாது”
“வந்தா ஒண்ணு சொல்லி வை” அவள் முகம் சட்டென்று சிவந்தது.“என்னது?”
“அவரை ஜாக்ரதையா இருக்கச் சொல்லு.. எல்லாப் பொண்ணுங்களும் மலையாளத்து நர்ஸ் மாதிரின்னு நெனைக்க வேண்டாம்னு சொல்லு.”
“என்ன… என்னது திஷ்யா?”‘இதை மட்டும் நீ சொல்லு. மத்ததை நேரம் வர்றப்போ சொல்றேன்”
சிவாவுக்குத் திறக்கக் கூடாத ஜன்னல் ஒன்றைத் திறந்துவிட்ட மாதிரி ஒரு திகைப்பு.
“திஷ்யா.”பெண்ணாகவும் அழகாகவும் பிறந்துவிட்ட விபத்துக்கு வருந்துவது மாதிரி அவள் ஒரு ‘சிலுவைச்’ சிரிப்பு சிரித்தாள்.
அதில் பலவீனம் இல்லை. போராட முடியும் என்ற வைராக்கியம் தெரிந்தது.
“இப்ப சொல்லு… நீ கதை எழுதி எழுதி என்ன சாதிக்கப் போறே?”
“கண்ணீரின் உப்பு விளையும் கருவூலத்தைத் தரிசனம் பண்ணுவேன். பிரார்த்திப்பேன்”
“நீ கவிதை கூட எழுதலாம்!”“கூல் டிரிங்ஸ் சாப்பிடலாம் எழுந்திரு”
அவர்கள் எழுந்தனர்.தொடரும்
-
ஐந்து கை ராந்தல் (7)
வையவன்
அவர்கள் ஹோசூர் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி இரண்டு அங்கிருந்து டெங்கனிக்கோட்டா ஒரு மணி நேரம். அதிலிருந்து அண்செட்டி ஒரு மணி.
ஹோசூரில் சாலை ஓரமாக வண்டியை நிறுத்தச் சொன்னான் வெற்றிவேல்.
“எதுக்கு?”
“இனிமே நீ ஓட்ட வேண்டாம். ஒனக்கு வழி தெரியாது. நான் ஓட்டறேன்.”
“நேத்தெல்லாம் நீ ஓட்டி வந்திருக்கே. களைப்பா இருக்கும். ரெண்டு மணி நேரம் காரிலேயே ரெஸ்ட் எடுப்போம்”
வெற்றிவெல்ஒப்புக் கொண்டான். முன் ஸீட்டில் சிவா படுத்தான். வெற்றிவேல் பின் ஸீட்டு.
வெற்றிவேல் சிவாவை எழுப்பியபோது மணி நாலே கால்.
அண்செட்டியை அடைந்தபோது பொழுது நன்கு விடிந்து விட்டது.
“இங்கிருந்து ஒன்றரை மைல். தேவனஹள்ளி என்று ஒரு கிராமம்” என்று வண்டியை அங்கே நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே சொன்னான் வெற்றிவேல்.
வெற்றிவேல் வண்டியை நிறுத்திய இடம் ஆடுகளும் எருமைகளும் மேய்ந்து கொண்டிருந்த ஒரு குக்கிராமம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வந்துவிட்டது போன்ற உணர்வை அனுபவித்தான் சிவா.
தாழ்ந்து குறுகிய குடிசைகள். புராதனமான ஓட்டு வீடுகள். ஆண்கள் கம்பளி போர்த்தியிருந்தார்கள். அல்லது பெட்ஷீட் போர்த்தியிருந்தார்கள். பெண்கள்தான் நடமாடினார்கள். முகங்களில் களங்கமற்ற கிராமீயக் களை.
வெற்றிவேலின் பின்னால் நடந்தான் சிவா.
ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இடுப்பளவு தண்ணீர் என்பது ஆற்றைக் கடந்து வருபவர்களைப் பார்த்தால் புரிந்தது.
“இது என்ன ஆறு?”
“சின்னாறு”
தண்ணீர் பளிங்கு போல் தெளிந்திருந்தது.
‘குளிக்கலாம் போல இருக்கா”
சிவாவை வெற்றிவேல் கேட்டான்.
“அப்பாவைப் பார்த்துட்டு குளிப்போம்.”
ஆற்றின் இக்கரையில் ஓர் ஆலமரம். அக்கரையில் ஒரு சின்ன சிவன் கோயில்.
ஆலமரம் பிரம்மாண்டமாயிருந்தது, மழைக்கும் நிழலுக்கும் அந்த கிராமமே ஒதுங்கலாம் போல்.
தூரத்திலேயே மூன்று பேர் அதன் கீழே உனட்கார்ந்திருப்பது தெரிந்தது. செம்பட்டை முடியும் வெளுத்த தோலுமாக ஒரு அமெரிக்கன் – முப்பத்தைந்து வயது மதிக்கலாம். இடப்புறம் கீழ்ப்பாய்ச்சிய வேஷ்டியும் கை வைத்த மல் பனியனும் அதன் மீது ஒரு சால்வையுமாக அறுபது வயது தோன்றும் ஒரு கிராம பெருந்தனக்காரர்.
நடுவில் கைலாச கவுண்டர் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தார். நøடிரத்த தாடி மார்பில் பாதியை மறைத்தது. தோளில் இருபுறமும் நரைத்த சிகை வந்து புரண்டது. மேலே ஆடையில்லை.
இடுப்பில் சாயம் போன ஒரு காவி வேட்டி. அது தான் ஆடை…
“வொட்ரீ வெல்… யூவ் கம் அகின்” என்ற யாங்கி உச்சரிப்பு இருவரையும் வரவேற்றது.
சிவா முதலில் அவனைப் பார்த்தான்.
பழுப்புக் கண்களில் அமெரிக்கப் பரபரப்பு. ஆறடி நீளத்துக்கு தோளிலும் கையிலும் கட்டுக் கட்டாக கட்டாக தசை தெரிய, வேட்டி உடுத்து நின்றான் அவன்.
சிவா தன் தந்தையைப் பார்த்தான்.
பெரிய நெற்றியில் நரைத்த அடர்ந்த புருவங்களில் அபூர்வமான அமைதி நிலவியதை அவன் கவனித்தான்.
பாபா ஓம்கார்நாத் அவனை நிமிர்ந்து பார்த்தார்.
“மீட் மை பிரண்ட் சிவா…”
வெற்றிவேல் ஏதோ மேற்கொண்டு சொல்லப் போனான். சிவா அவனைத் தடுத்தான்.
அவரது கண்கள் சிவாவைச் சந்தித்தன. அவை தெளிந்திருந்தன. குளிர்ந்த பார்வை. எதையும் கோராத, எதையும் விசாரியாத, எங்கும் பந்தப்படாத ஏதோ ஒரு விடுதலையை அந்தப் பார்வையில் சந்தித்தான்.
தொடர்ந்து அவர் புன்முறுவல் செய்தார். ஒரு குழந்தையின் புன்முறுவல் மனசில் காரணமற்ற களிப்பையும் நிறைவையும் ஏற்படுத்திய புன்முறுவல்.
உங்கள் மனைவி திருப்பத்தூரில் முதலியார் ரைஸ் மில்லில் தவிடு விட்டுக் கொண்டிருக்கிறார் கைலாச கவுண்டரே! உங்கள் மகனாகிய நான் பி.எஸ்ஸி., படித்து விட்டு வேலை தேடிக் கொண்டு ஒரு மெக்கானிக்குக்கு சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
எப்படிப் படித்தேன் தெரியுமா?
பேப்பர் போட்டேன். டிம்பர் பாக்டரியில் கணக்கு எழுதினேன். ஒவ்வொரு டெர்ம் பீஸ் கட்டவும் ஏதோ கண்டம் வந்தது போல் திண்டாடினேன்.
வெற்றிவேல் அவர் பக்கத்தில் கை கட்டி நின்றான்.
சிவாவின் மனசிற்குள் கோபங்களும் குறைகளும் அவரோடு மானசீகமாக ஒரு சம்வாதம் தொடங்கின.
அவர் புன்முறுவல் செய்து கொண்டே இருந்தார்.
அது அவன் தந்தை மாதிரியே இல்லை.
நெற்றி மூக்கு வாய் மார்பு எல்லா உறுப்புகளும் கைலாச கவுண்டர்தான்.
அந்தப் புன்னகை… அந்தப் பார்வை.. அவை கைலாச கவுண்டர் இல்லை.
“என்னை அடையாளம் தெரியுதா?” என்று சிவா கேட்டான்.
“வோட்ஸ் ஹி ஆஸ்கின்?” அந்த அமெரிக்கன் கேட்டான். வெற்றிவேல் மொழி பெயர்த்தான்.
பாபா ஓம்கார்நாத் இமைகளை ஒருமுறை மூடித் திறந்தார். வெற்றிவேலைத் திரும்பிப் பார்த்தார். பின்பு அந்த அமெரிக்கனை.. அடுத்து அந்த பெருந்தனக் காரரை.. மீண்டும் சிவாவை. அவருக்குள் எந்த பேதமும் இருப்பதாகத் தெரியவில்லை.
அலைகடலும் ஓய்ந்த ஒரு நிமிஷத்தில் சாந்தி நிறைந்திருக்கும் ஒரு வேளையில்சந்திரோதயம் ஆனது மாதிரி சிவா ஓர் அகமகிழ்வை அனுபவித்தான்.
எந்தக் கேள்விக்கும் இங்கே அர்த்தமில்லை என்று அவனுக்கே உறைத்தது.
ஆதங்கங்களும் பந்தமும் இவர் முன்னால் அசட்டுத்தனம் என்று தோன்றியது.
“நீங்கள் கைலாச கவுண்டர் தானே?”
அவர் புன்னகை செய்தார். இப்போது அதில் ஒரு சிறிது வேடிக்கை கலந்திருந்தது.
“இவர்கள் ஓம்கார்நாத் என்று கூப்பிடுகிறார்கள்.”
குரலில் அதைக் கூர்ந்து கேட்க வேண்டும் என்ற குறுகுறுப்பை ஏற்படுத்தும் வசீகரமான இனிமை இருந்தது.
அந்த அமெரிக்கன் புரியாமல் விழித்தான்.
“தெ கால் இட் ஓம்கார்நாத்” என்று அவனுக்காக ஸ்பஷ்டமான ஆங்கிலத்தில் சொன்னார் அவர், சொல்லிவிட்டு அவர் மெதுவாய் இதழ் மலர்ந்து சிரித்தார்.
பற்கள் ஆரோக்கியமாயிருந்தன.
என்னை என்பதற்குப் பதில் ஆங்கிலத்தில் அவர் இதனை என்று சொல்வதை சிவா கவனித்தான். இவர் எப்போது இவ்வளவு தெளிவான ஆங்கிலம் கற்றார்?
இது கைலாச கவுண்டர் அல்ல. அடையாளம் மறைந்து, பேதங்கள் மரித்து, போராட்டங்கள் மாண்டு போன ஆத்மா.
அவர் இரண்டு கைகளையும் விரித்துவிட்டு சாந்தமாக அவனைப் பார்த்தார்.
எனக்கு ஆட்சேபமில்லை.
எனக்குத் தெரியாது.
நான் அதுவல்ல.
அவரவர் விருப்பம்.
அந்த கைவிரித்த சைகையில் இப்படி சிவாவுக்கு நாலு அர்த்தங்கள் தெரிந்தன.
சிவாவுக்கு அந்த மரத்தடியில் உட்கார வேண்டும் போலிருந்தது.
அவன் சட்டென்று எவர் நிற்பதையும் பொருட்படுத்தாது உட்கார்ந்து விட்டான்.
மற்ற மூவரும் அனிச்சை செயல் மாதிரி உட்கார்ந்தனர்.
அப்போது ஆலமரத்திலிருந்து நாலைந்து பழுத்த இலைகள் அவருக்கு முன்பாக உதிர்ந்தன. அவர் அதை உற்றுப் பார்த்தார். பின்பு மரத்தை நிமிர்ந்து நோக்கினார்.
உதிர்ந்த இலைகளில் ஒன்றை எடுத்து மெதுவாக நீவினார். பின்பு சிவாவைப் பார்த்தார். அதன் காம்பை வருடிவிட்டு பொருள் பொதிந்த பார்வையோடு அவனை நோக்கினார்.
“நான் மெட்ராஸிலே இருக்கேன்..வேலை கெடைக்கலே” சிவாவுக்குத் தன்னை மீறிக் கொண்டு அதைச் சொல்ல தோன்றிற்று.
“இவன் எழுத்தாளனாகியிருக்கிறான்” என்று குறுக்கிட்டான் வெற்றிவேல்.
அவர் பார்வை நிர்ச்சிந்தையாக இருவரையும் கவனித்தது. அதை அவர் கேட்டமாதிரியும் தெரிந்தது. கேட்காத மாதிரியும் தோன்றிற்று. உதடும் கண்களும் ஒரே விதமாய் மலர்ந்து தோன்றின.
சிவாவுக்கு திடீரென்று மார்பு விம்பியது. ஒரு தந்தையை இழந்துவிட்ட சோகம் தோன்றியது.
“நீங்க ஏன் இப்படி ஆனீங்க?” அவன் வாய்விட்டுக் கேட்டான்.
பாபா அவனை நிமிர்ந்து பார்த்தார். அவர்கள் அனைவர் முகத்தையும் நோக்கினார். திரும்பி ஆற்றைக் காட்டினார்.
“நதி ஓடுகிறது” என்று ஒரு வாக்கியம் சொன்னார் பாபா. எல்லோரும் முகம் மலர்ந்தனர்.
அது ஓடும்; பிறகு கடலை அடையும்.
எங்கோ பிறந்தது இங்கே ஓடுகிறது.
எல்லோரும் ஓடுவோம். ஒன்றைவிட்டு மற்றொன்றிற்கு ஓடுவோம்.
நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். நீயும் ஓடிவிடுவாய். சிவாக்கு அந்த ஒரு சின்ன வாக்கியத்தில், என்னென்னவோ புரிந்தது.
மீண்டும் அவனுள் இவர் என் தந்தை என்ற உத்வேகம் உதைத்து எழுந்தது. மனசில் வந்து கூடிய சாந்தியை நிறைவை ஒரு கல்விட்டுக் கலைத்துக் கொண்டு அவன் கேட்டான்.
“நதிதான் ஓடும். நதி ஓட வேண்டும். மனிதன் அல்ல” என்றான்.
அமெரிக்கனுக்கு சிவா ஏதோ வாக்குவாதம் செய்கிறான் என்று புரிந்தது. அவன் ஆவலுடன் பாபாவைப் பார்த்தான்.
அவர் பாதிக்கப்படவில்லை. விழிகளில் கருணை நிலவியது.
“நீங்கள் சொல்லாமல் ஓடி வந்து விட்டீர்கள்.”
சட்டென்று அவன் சினமுற்றிருக்கிறான் என்று தவறாக நினைத்த பெருந்தனக்காரர் அவன் கையைப் பிடித்தார். அவ்விதம் அவனைப் பிடிக்க வேண்டாம் என்று பாபா சைகை செய்தார்.
அங்கே ஓர் அசந்தர்ப்பமான மௌனம் நிலவியது பாபாவின் முகத்தில் பரம சாந்தம் சிவா தொடர்ந்தான்.
“தப்பியோடுவது ஞானம் அல்ல.”
அவனைப் புன்னகையோடு பார்த்துவிட்டு பாபா, உதிர்த்த இலைகளில் ஒன்றை மீண்டும் எடுத்தார்.
“இலை பழுத்தால் உதிர்ந்து விடும்” என்றார்.
“உங்கள் மனைவியை… உங்கள் பிள்ளையை விட்டு விட்டு ஓடி வந்து விட்டீர்கள்.”
“கேட்டு வந்த விடுதலை” பாபா சொன்னார்.
“யாரிடம்?” சிவா விடவில்லை.
“பெற வேண்டியவரிடம்.”
அப்படி ஒன்று நடந்ததா? தன் தாய் இவர் துறவி யாவதற்கு விடுதலை வழங்கினாளா? சிவா நிசப்தமானான்.
அதுவரை அவன் அதைக் குறித்து அம்மாவிடம் விசாரிக்க முனைந்த போதெல்லாம் அவள் அதைத் தவிர்த்துத் தவிர்த்து வந்ததை நினைத்தான்.
இப்படி ஒன்று நடக்க முடியுமா?
தன் கணவன் துறவியாவதற்கு மனமார ஒரு மனைவி அனுமதி வழங்க முடியுமா?
அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.
அப்படி ஒரு விடுதலை வாங்கி வருமளவு இந்த மனிதர் என்ன கல்நெஞ்சர் என்று அவர் மீது அவனுக்கு ஒரு வெறுப்பு தோன்றியது.
ஆனால் வெறுப்பது விரும்புவது இந்த எல்லைக் கோட்டை அவர் கடந்து விட்டவர். கனிந்து நின்ற அந்த தோற்றமே அவனுக்கு உணர்த்தியது.
இவரிடம் தனக்குள்ள எல்லா வழக்குகளும் ரத்தாகி விட்டன. ஓடும் நீர் போல, உதிர்ந்த இலை போல இவர் தனக்குப் புறம்பானவர்.
ஒரு மகன் பார்ப்பதைப் போல அவன் பாபாவைப் பார்த்தான்.
இந்த உருவம் தன் தந்தை!
எனினும் இதற்கும் தனக்கும் இங்குள்ள மூவருக்கும் என்ன சொந்தமோ அந்த சொந்தம் தான் மிஞ்சியிருப்பது.
அவனால் முதலில் அதை ஏற்க முடியவில்லை. ‘இதைத் தேடி, இதைக் கண்டுபிடிக்கவா நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்து நான் இங்கு வந்தேன்?’
பாபா அவனையே குறுகுறுவென்று சற்று நேரம் பார்த்தார்.
அந்த அமெரிக்கனுக்கு சட்டென்று எல்லாம் விளங்கி விட்டது.
“மிஸ்டர் கங்கப்பா… வொட்ரீ வேல்… லெட்ஸ் ஹாவ் எ மூவ்…”
அவரைத் தான் தனியாகச் சந்திக்க அவன் வசதி செய்து தருகிறான் என்பதை சிவா உணர்ந்தான்.
“தேர் ஈஸ் நதிங் பெர்ஸனல் பிட்வீன் மீ அண்ட் ஹிம்.”
தனக்கும் தன் தந்தைக்கும் மத்தியில் நெருக்கமாக ஒன்றுமில்லை என்று அவன் கூறியதை கங்கப்பாவும் அந்த அமெரிக்கனும் கூர்ந்து கவனித்தனர்.
“வோட்ஸ் ஹி?” என்று சிவாவின் தொழிலைப் பற்றி அந்த அமெரிக்கன் கேட்டான்.
வெற்றிவேல் பதிலளித்தான்.
“எ ரைட்டர்.”
பாபா மீண்டும் சிவாவைப் பார்த்தார்.
“கேன் யூ கம் டு த ஸ்டேட்ஸ்.. வித் மீ?”
சிவா தன்னை அமெரிக்காவிற்கு அழைத்த அவனை ஏறிட்டு நோக்கினான்.
“நோ.. ஐ காண்ட்.. தாங்யூ” என்று பளிச்சென்று தன் மறுப்பைத் தெரிவித்தான்.
தன் தந்தையின் மீது அந்த அமெரிக்கன் வைத்துள்ள மதிப்பு தனக்கு ஒரு வாழ்வு அளிக்க முயற்சிப்பதை அவன் சுயமரியாதை எதிர்த்தது.
தன்னை மீறி அது வெளிப்பட்டு விட்டது. அவன் அதற்கு ஒரு சாட்சியாகத் தன் தந்தையே இருக்க நேர்ந்து விட்டதைக் குறித்து அவன் மகிழ்ந்தான்.
அவனைப் பரிவுடன் பார்த்தார் பாபா.
“விடுதலை பெறுக” என்றார்.
அவனுக்குச் சொல்ல வேண்டியது யாவும் அதில் அடங்கிவிட்டது என்பதுபோல் அவர்.
முகத்தில் ஒரு நிறைவு.
இனி அங்கிருப்பதில் அர்த்தமில்லை என்று சிவா உணர்ந்தான். சென்னையும் தாமுவும் உடனே புறப்படு என்று கூப்பிட்டனர்.
திரும்பி வரும்போது வெற்றிவேல் கூட வந்தான்.
அவர்கள் ஆற்றில் இறங்கிக் குளித்தனர். வெற்றிவேல் வைத்திருந்த துண்டில் தலை துவட்டிக் கொண்டே கரையேறினான் சிவா.
“என்னடா நீ பேசலே?” என்றான் வெற்றிவேல்.
“நோ கமெண்ட்ஸ். எங்க அப்பா ஒரு நாள் ஓடிப் போனார். இன்னைக்கு நான் அவரை இழந்து விட்டேன் தட்ஸ் ஆல்”
“அதைத் தவிர?”
“வாழ்க்கை நிற்கிறது. தன்னந் தனியாக எதிர்தாதுப் போராடு என்று கேட்டுக் கொண்டு”
“நல்லது.”
அண்செட்டியில் ஒரு டீக்கடை ஹோட்டலில் இட்லி வடை சாப்பிட்டு விட்டு வெற்றிவேலிடம் விடை பெற்றான் சிவா.
அவன் சட்டைப் பையில் ரூபாய் நோட்டுக்களை வைத்து மடித்த கவரைச் செருகினான் வெற்றிவேல்.
“இந்த ‘ட்ரிப்’ ஒனக்கு நல்லா இருந்திருக்காது.. ஐ’ம் ஸாரி சிவா.”
“நோ… இல்லே வெற்றிவேல். இது எனக்குப் பலம் தந்திருக்கு.
“எப்படி?”
“நான் தனி…தன்னந் தனி. ஐ ஹாவ் டூ மீட் லைஃப்.”
பஸ் ஹாரன் கேட்டது. சிவாவின் கையைப் பிடித்துக் குலுக்கினான் வெற்றிவேல்.
“ஆல் த பெஸ்ட்”தொடரும்
-
ஐந்து கை ராந்தல் (6)
வையவன்
ஹோட்டலை விட்டு வெளியேறி காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தனர்.
வெற்றிவேல் கார்ச் சாவியை சிவாவிடம் நீட்டிய வாறே கேட்டான்.
“காரை ஓட்டிப் பாக்கறியா?”
“ஏன்?”“ஒரு டோயோடா எப்படி இருக்குண்ணு ஓட்டி அனுபவி. நீயும் நானும் ஒரு ஓட்டை பியட்லே டிரைவிங் கத்துகிட்டோம். இப்ப இது எப்படிண்ணு அனுபவி”
சிவா சிரித்தான்.“எல்லாக் காரும் ஒரு கார் தானே, இது அது மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ். லெட் இட் பி. எனக்கு வேண்டாம் ஒரு மூன்றாம் நபரின் வாகனம்”
சாவியை வெற்றிவேல் அவன் கையில் திணித்தான்.
“மஹாபுருஷரே… அட் எ ஸ்ட்ரெச் ஓட்டிட்டு வந்ததிலே என் காலும் கையும் வலிக்கிறது. தாங்கள் ஓட்டி வருவீர்களாக”
“அதை மொதல்லே சொலவ்லி இருக்கலாமேடா”
வண்டி சீறிக் கொண்டு சிக்னல் வழங்கிய சுதந்திரத்தில் பறந்தது.“மெட்ராஸிலே என்ன செய்யறே சிவா?”
“சமையல் செய்யறேன். வேலை தேடறேன். கதை எழுதறேன்.”
“சமையல்?”“ஆமா… நீ வந்தியே அந்த ராயப்பேட்டா வீட்டிலே சமையல் வேலை செய்யறேன்!”
“யார்” என்று கூவினான் வெற்றிவேல். அவனுக்கு அதிர்ச்சி தாளவில்லை. “யாருக்கு?”
“ஒரு மாஜி ஜமீந்தார் பிள்ளையான மோட்டார் மெக்கானிக்குக்கு”“ஓ… நம்ம மாதிரி அவனும் ஒரு ஃப்ரீக்கோ?”
“ஃப்ரீக் இல்லே, ஒரு கனவான், ஃப்யூடல் மிச்ச சொச்சம்.”
“அப்ப உனக்கு ஒரு ஹீரோ கெடைச்சாச்சு?”ஒரு ‘பல்லவன்’ பஸ்ஸுக்கு முந்திச் செல்ல வழிவிட்டான் சிவா.
“நமது ஹீரோ 1948 ஜனவரி 30-ல் சுட்டுக் கொல்லப்பட்டார் வெற்றிவேல். நாம பொறக்கறதுக்கு முன்னாடியே இட்வாஸ் ஓவர். நாம ஹீரோவைத் தேடிக்கிட்டிருக்கோம் இன்னும்.. இன்னும்”
வெற்றிவேல் அதற்கு இசைவு தெரிவிப்பது போல் வாய்க்குள் சிரித்தான்.“எப்படி இந்த வேலை கெடைச்சுது?”
“ஜஸ்ட் ஒரு வேலை கேட்க அங்கே அந்த ஆட்டோ ஒர்க்ஷாப்புக்குப் போனேன். இங்கே எந்த வேலையும் காலியில்லே. எங்க வீட்டிலே என் சமையல்காரன் ஓடிட்டான். அந்த வேலை காலியாயிருக்குண்ணு அவர் கிண்டலா சொன்னார்.”“வயசானவரோ”
“இல்லே…நம்மை விட மூணு நாலு வயது அதிகம். ஆனா அந்த மரியாதைக்கு உரியவர்.”
“மேலே சொல்லு”“என் சமையலைப் பார்த்துட்டு அப்பாயிண்ட்மெண்ட் குடுங்கண்ணேன். ஐம் ஸாரி; நீ ஒரு கிராஜுவேட்னார். சமையல்லே வித்தியாசம் இருக்காதுண்ணு சொன்னேன். ஹி லைக்ட் தட் ரிப்ளை டெங்கனிக் கோட்டா எங்கே இருக்கு?”
“ஹோசூர் போய் கட் பண்ணணும்?”“பெங்களூர் ரூட்…”
“ஆமாம்… நீ உங்க முதலாளி கிட்டே லீவ் சொல்லிட்டு வர்லியே…”
“வெற்றி… அவர் முதலாளி இல்லே. நண்பராயிட்டார். தாமு ஊரிலே இல்லே. வந்தாலும்.. அடடே அவங்க அப்பா ஸீரியஸ்ணு போயிருக்கார். நான் ஏதாவது நடந்துட்டா மதனபள்ளி போகணும்… அண்செட்டியிலே எஸ்.டி.டி. பண்ண முடியுமா?”
“ஓ… எஸ்”
நகர எல்லையைக் கடக்கும் வரை வெற்றிவேல் பேசவில்லை.சிவாவுக்கும் காரைத் தொட்டு நெடு நாட்களானதால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து அவனது கவனத்தை அதிகம் கோரியது.
இடையிடையே அவனுடைய தந்தை கைலாசம் கவனத்தில் வந்து வந்து போனார்.
என்ன விசித்திரமான பயணம் இது!
பத்து வருஷத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய தந்தையை, எங்கோ முகம் தெரியாத சிற்றூரில் ஒரு மகன் சந்திக்க அவன் நண்பன் ஏற்பாடு செய்திருக்கும் பயணம்.இரண்டு நாட்களுக்கு முன் அவரைச் சந்திக்கும் வேட்கை வந்ததை நினைத்தான்.
இவ்வளவு சீக்கிரம் அது இப்படி நிறைவேறி விடுமா? இன்னும் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.
தன் தந்தையைத் தான் சந்திக்க வேண்டும் என்று வெற்றிவேலுக்கு ஏன் தோன்றியது?
எதிரில் வந்த லாரி ஒன்றிற்கு டிம்…டிப் என்று ஹெட் லைட்டில் சிக்னல் காட்டிக் கொண்டே யோசித்தான் சிவா.
அப்பாவுக்கு விசாலமான முதுகு. திண்ணையில் உட்கார்ந்து அடிக்கடி முதுகு தேய்க்கச் சொல்வார்.அவர் வலது தோள் பட்டையில் புளியங்கொட்டை அளவு உருண்டு திரண்ட ஒரு கறுப்பு மச்சம் உண்டு. முதுகு தேய்க்கும் போதெல்லாம் செவேலென்று விரிந்த அந்த முதுகில் ண் முளைத்த மாதிரி நிற்கும் அந்த மச்சத்தை சிவா தடவிப் பார்ப்பான்.
“டேய், டேய்…கூச்சமாய் இருக்குடா” என்று அவர் நெளிவார். சிவா கிளுகிளுவென்று சிரிப்பான்.
அவனுக்கு எட்டு வயதான போதிருந்து அவனைச் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வெங்களாபுரம் சுடுகாடு தாண்டி ஒரு பம்ப் ஷெட்டுக்குக் குளிக்கக் கூப்பிட்டுச் செல்வார்.“பச்சத் தண்ணி ஊத்தி ஊத்தி புள்ளைக்கு ஜன்னி வர வக்கப் போறீங்க” என்று அடிக்கடி ஆட்சேபிப்பாள் அம்மா.
‘தாட்சாயணி… சுடுதண்ணி ஊத்தி வளத்தா பையன் சீக்காளியாய் போயிடுவான்!”
சனிக்கிழமையில் ஒரு புட்டியில் நல்லெண்ணெய் ஒரு டப்பாவில் சீயக்காப்பொடி.தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டு கண்ணுக்கு விட்டுக் கொண்டால் ஒரு கதை. அழாமல் சீயக்காய் தேய்த்துக் கொண்டால் ஒரு கதை. சைக்கிளில் வரும்போது ஒரு கதை… எத்தனை கதைகள்!
சிவாவுக்கு பளிச்சென்று கூரைச் சந்திலிருந்து ஒரு வெளிச்சக் கற்றை வீட்டில் விழுந்த போது அதை ஒரு கண்ணாடிச் சில்லில் பிரதிபலிக்கச் செய்து வீடு முழுதும் அவற்றில் அதை அவன் ஓடிப் பிடிக்க வைத்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது.
அப்பா எதற்காக வீட்டை விட்டுப் போனீர்கள்?எல்லாரும் சொல்வது போல் ஒரு ஜடாமுடிச் சாமியாரா உங்களை அழைத்துச் சென்று விட்டார்?
சிவா தனக்குள் கேட்டுக் கொண்டான் அவரைக் கேட்கப் போகிற கேள்வி அதுதான்.
அதைக் கேட்க முடியுமா?திடீரென்று மௌனம் கலைந்து சிவா வெற்றிவேலைப் பார்த்து “என்ன சைலன்ஸ் ஆயிட்டே?” என்றான்.
“யாரு?”
“ஓ….நாந்தாண்ணு சொல்றியா”“ரெண்டுபேரும் தான். ரொம்ப நாள் கழிச்சு பிரிஞ்சு சேர்ந்தா மௌனம் ரொம்ப நெருக்கமா இருக்கு”
“அப்பா கிட்டே நீ பேசினயா?”
“உம்ம்…”“என்ன சொன்னார்… அம்மாவைப் பத்தி, என்னைப் பத்தி ஏதாவது விசாரிச்சாரா?”
“அமிஞ்சிகரை தாண்டியிருப்பமா?”“ஓ…”
“வண்டியை ஓரமா நிறுத்து. எனக்கு ஒண்ணுக்குப் போகணும்.”
வண்டியை ஓரமாய் நிறுத்தினான் சிவா.டாஷ் போர்டிலிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு சாலையோரம் ஒரு மூலைக்குப் போனான் வெற்றிவேல்.
தீக்குச்சி வெளிச்சம் சிகரெட்டை வாயில் பொருத்திய அவன் முகத்தில் செஞ்சுடராக விழுந்தது. அவன் சிறுநீர் கழித்து விட்டுத் திரும்பி வந்தான்.
சிகரெட் புகை மணந்தது.“இப்ப நான் ஏன் வேலை வெட்டியை எல்லாம் விட்டு விட்டு உன்னைத் தேடி வந்தேன் தெரியுமா?” என்று கூறி விட்டு சிகரெட் சாம்பலைச் சொடுக்கினான்.
“வேலை வெட்டியா… அப்படி ஒண்ணு உனக்கு இருக்கா?”
சிகரெட்டை ஆழ்ந்து உறிஞ்சி நிமிர்ந்த வெற்றிவேல் முகத்தில் எதிரில் வந்த காரின் ஹெட்லைட் வெளிச்சம் விழுந்தது. சிவாவின் குத்தலை அவன் ரசித்துச் சிரிப்பது தெரிந்தது.“சிவா… நாம தேடுவதை… ஐ மீன் நான் தேடுவதை உனது தகப்பனார் அடைஞ்சுட்டார்னு நெனைக்கிறேன்…”
வெற்றிவேலின் குரலில் ஓர் உண்மை ஒலித்தது. சிவா தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்பினான்.
“ஒவ்வொரு வயசிலேயும் நாம ஒவ்வொண்ணைத் தேடினோம்… நீ எதைச் சொல்றே?”
சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தான் வெற்றிவேல்.“நம் மீது… நம் மனசின் மீது ஒரு வெற்றி”
“மனசு உள்ள வரை… அதன்மீது வெற்றி இல்லையடா வெற்றி”
“அவர் அதைச் சாதிச்சிருக்கார்னு நெனக்கிறேன்.”“வெற்றிவேல்… நீ ஞானிகளைப் பற்றி பேசறே… எனக்கு ஞானம் வேண்டாம். ஒரு வேலை வேண்டும்… எங்கம்மாவின் ஓயாத உழைப்பிலிருந்து ஒரு விடுதலை வேண்டும்… அவளை அந்த நிலைக்கு ஆளாக்கிய மனிதனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.”
“எந்தக் கேள்வியை வேணும்னாலும் கேளு. ஆனா அவரை வேலை கேட்காதே…”
சிவா மௌனமாயிருந்தான்.“வேலை… வேலை…நீ எதுக்குடா படிச்சே? ஏண்டா கிராஜுவேட் ஆனே…உன் தன்னம்பிக்கையை இழந்துட்டு எவனோ கொடுக்கப் போற ஒரு ஃபில்தி வேலைக்கு சலாம் போடவா?”
“உன் கோபத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு”“இதுவும் கோபமில்லே…”
பொறப்படலாமா… நாம ரொம்ப தூரம் போகணும்”
“சரி”காரில் அமர்ந்தனர். வண்டி சிறிது தூரம் ஓடியபின் சிவா கேட்டான்.
“அப்பா என்ன சொன்னார்?”“நீ மொதல்லே கேட்டதை மறந்துட்டேண்ணு நெனச்சுட்டியால… இவ்வளவு நேரம் நான் சொன்னதெல்லாம் அதற்குப் பதில்தான்”
சிவா மௌனமானான்.“நான் ரிஷிகேஷிலிருந்து வர்றேன். அவர் ஒங்க அப்பா கைலாச கவுண்டர் இல்லே. பாபா ஓம்கார்நாத் அவரோடே தான் ஆறு நாளா தங்கியிருந்தேன்… அந்த அமெரிக்கன், அவர், நான், மூணு பேரும் அண்செட்டி வந்தோம்.”
சிவாவுக்கு முதன் முறையாக வெற்றிவேலுக்கு எங்கோ மறை கழன்று விட்டது என்ற சந்தேகம் வந்தது. அட்வென்சர்.. அட்வென்சர் என்று தேடித் திரிகிறவனிடத்தில் எங்கேயாவது ஒரு வழுக்கலில் அது நேர்ந்து விடுவது சாத்தியம் என்று நினைத்தான்.
“ஸோ…எங்க அப்பா நாட்டிலுள்ள பாபாக்களில் இன்னொரு பாபாவாய்ட்டார்னு சொல்லு”
வெற்றிவேல் பெருமூச்சு விட்டான்.“அண்ட்.. நீ அவருடைய சிஷ்யன் ஆய்ட்டே”
“தப்பு.. அவர் குருவென்று தன்னைச் சொல்லிக் கொள்ளவில்லை. சிஷ்யன் என்று எவனையும் ஏற்கவில்லை.”
“ஆனா அவர்தான் ஒனக்கு ஒன் மீது வெற்றியைக் கண்டுபிடிக்கச் சொல்லிக் கொடுத்தார்..இல்லியா?
“அவர் சுட்டிக்காட்டினார். நான் கண்டுபிடிச்சேன்”‘உன் மீது நீ எப்போதும் வெற்றி பெற்றுத்தான் வருகிறாய். திடீரென்று எதுவும் நேர்ந்துவிட வில்லை. நேராது’ என்று வெற்றிவேலுக்குச் சொல்ல நினைத்தான்.
சொல்லவில்லை.வெற்றிவேல் நேரடி அனுபவத்தை நம்புகிறவன். ஒருவேளை அவன் அனுபவித்திருக்கலாம்.
“வேற பெர்ஸனலா எதுவும் கேக்கலியா நீ?”
தனக்குள் லயித்துச் சிரிப்பவன் போன்று வெற்றிவேல் வாய்க்குள் நகைத்தான்.“அவர்கிட்டே பெர்ஸனல்..இம்பெர்ஸனல் எதுவும் தோணாது. அவர் மொழியே நெடிய மௌனம். ஒரு நாளைக்கு அவர் ரொம்ப அதிகமாப் பேசினா பத்து வார்த்தைகள் தான் பேசுவார்.”
“பேசாதவரிடம் நீ ஏண்டா என்னைக் கூட்டிட்டுப் போறே?”
“மகனே, உன் தந்தையை சந்தி”
“நீ சொல்கிறவர் என் தந்தை மாதிரி இல்லை. ஏதோ மகான் மாதிரி இருக்கு..மகனுக்கு தந்தை தான் வேண்டும். மகான் வேண்டாம்”“அதை நீ சந்தித்தபிறகு சொல்.”
சிவா ஆக்ஸிலரேட்டரை மிதித்தான், வெகுதூரம் போக வேண்டும்.தொடரும்



