பயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு

3

பவள சங்கரி

அன்பினிய நண்பர்களுக்கு,

Google_Appliance

வணக்கம். சென்ற மார்ச் மாதம் (1, 2015)  ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் மற்றும் சுரேஜமீ எழுதிய இரு கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரைகள் குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.

திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு

 

அன்பிக்கினிய அனைவருக்கும் வணக்கம்.

வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் முடிவு அறிவிக்க நாளானது, மன்னிக்கவும்.

இணையத்தின் பயன்பாடுகள் சேவைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான இரு சேவைகள் குறித்த கட்டுரைகள் வல்லமைக்கு வந்திருக்கின்றன.

முதலாவதாக இணையத்தில் கிடைக்கும் இலவச புத்தகங்கள், நூலகங்கள், குறித்து திருமதி. தமிழ்முகில் நீலமேகம் தந்திருக்கும் விவரங்கள். அருமையான பல விவரங்களை தொகுத்து அளித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரை இணையத்தில் சமூக வலைதளங்கள், அதில் இருக்கும் சாதக பாதங்கள், பாதுகாப்பு முறை என விரிந்து செல்லும் கட்டுரை. அருமையான தொகுப்பு சுரேஜமி. தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்.

இரண்டுமே முக்கியமான கட்டுரைகள். இருந்தும் பலருக்குத் தெரியாமல் இருக்கும், இளைய தலைமுறைக்கு உந்துகோலாக, வாசிப்பைத் தூண்டவும், அறிவை விசாலமாக்கவும், பள்ளி, கல்லூரி, ஆய்வுகள் என அனைத்து வகையினருக்கும் உதவும் இணைய புத்தகங்களும் நூலகங்களும் குறித்த கட்டுரை என்னளவில் வெற்றி பெற்ற கட்டுரையாகிறது. வாழ்த்துகள் திருமதி தமிழ்முகில்

Iyappan Krishnan

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு

  1. இரண்டாவது மாதமாகத் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கும் திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  2. அன்பிற்கினிய அய்யா அய்யப்பன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும், வெற்றியாளர் அன்புச் சகோதரி தமிழ்முகில் நீலமேகம் அவர்களுக்கு, அன்பார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகுக!

    நிச்சயம் பல நல்ல செய்திகளைத் தாங்கி அடுத்த கட்டுரைகள் வரும் என்ற நம்பிக்கையோடு,

    அன்புடன்
    சுரேஜமீ

  3. எனது கட்டுரையை பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள் ஐயா. வாழ்த்திய திரு.அண்ணா கண்ணன் அவர்களுக்கும், திரு. சுரேஜமீ அவர்களுக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *