Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    நைஜல் ஃபராஜ் மற்றும் Reform UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.

    பிரிட்டிஷ் அரசியலைப் பற்றி எழுதும்போது, கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகளில் ஒருவராக நைஜல் ஃபராஜை குறிப்பிடாமல் முன்னேற முடியாது.

    ஒரு அரசியல் தலைவர் எப்போதும் ஆட்சியில் இருந்தால்தான் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டியதில்லை. சிலர் எதிர்க்கட்சியில் இருந்தபடியே நாட்டின் அரசியல் திசையையே மாற்றிவிடுவார்கள். நைஜல் ஃபராஜ் அப்படிப்பட்டவர்.

    அவர் பிரிட்டிஷ் அரசியலின் மையக் கேள்விகளாக மாற்றியவை குடியேற்றம், தேசிய இறையாண்மை மற்றும் பிரிட்டிஷ் அடையாளம்.

    பல ஆண்டுகளாக இந்தக் கருத்துக்கள் அரசியல் மேடைகளில் பேசப்பட்டாலும், அவற்றை பொதுமக்களின் அன்றாட உரையாடலாக மாற்றியவர்களில் ஃபராஜுக்கு முக்கியமான இடமுண்டு.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை பலர் அரசியல் கனவாகவே கருதினர்.

    ஆனால் அந்தக் கனவு மக்களின் வாக்காக மாறியது.

    பிரெக்சிட் வாக்கெடுப்பின் பின்னணியில் ஃபராஜ் வகித்த பங்கு, பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் தனி அத்தியாயமாகவே இருக்கும்.

    பிரெக்சிட்டிற்குப் பிறகு அவரது அரசியல் முடிந்துவிடும் என்று பலரும் நினைத்தனர்.

    ஆனால் அரசியலில் வெற்றிடங்கள் நீண்ட காலம் காலியாக இருப்பதில்லை.

    மக்களின் புதிய அதிருப்திகளை உணர்ந்த ஃபராஜ், ரீபோர்ம் யூகே என்ற கட்சியை தேசிய அரசியலின் முக்கிய சக்தியாக மாற்றத் தொடங்கினார்.

    ரீபோர்ம் யூகேவின் பலம் என்ன ?

    எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் கவனித்த ஒரு விஷயம் உண்டு.

    மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புவதில்லை.

    ஆனால் அவர்கள் தாங்கள் கேட்கப்படவில்லை என்று உணரும்போது, மாற்றத்தை உருவாக்கும் சக்தியைத் தேடுகிறார்கள்.

    இன்று ரீபோர்ம்ன் வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது இதுவே.

    வாழ்க்கைச் செலவு உயர்வு…

    வரி சுமைகள்…

    குடியேற்றம் தொடர்பான கவலைகள்…

    தேசிய சுகாதார சேவையின் நீண்ட காத்திருப்பு…

    அரசியல்வாதிகளின் மீது குறைந்து வரும் நம்பிக்கை…

    பிரிட்டனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பகுதி மக்களிடையே உருவாகிவரும் அச்சம்…

    இந்த அனைத்தையும் ஒரே அரசியல் மொழியாக மாற்ற முயற்சிக்கிறது Reform UK.

    அவர்கள் பேசும் மொழி மிகவும் நேரடியானது.

    அரசியல் அலங்காரச் சொற்கள் குறைவு.

    அதனால்தான் பாரம்பரிய அரசியலில் விரக்தியடைந்த சில வாக்காளர்களை அவர்கள் ஈர்க்க முடிகிறது.

    2024 பொதுத்தேர்தலில் Clacton தொகுதியில் ஃபராஜ் 21,225 வாக்குகளைப் பெற்று, 46.2% வாக்கு பங்குடன் வெற்றி பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜைல்ஸ் வாட்லிங்ஸ் 12,820 வாக்குகளைப் பெற்றார்.

    அது ஒரு தொகுதி வெற்றி மட்டுமல்ல.

    “ரீபோர்ம் யூகேஐ இனி புறக்கணிக்க முடியாது” என்ற அரசியல் செய்தியாகவும் அது அமைந்தது.

    ரீபோர்ம் யூகேவின் பலவீனம் என்ன ?

    ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் மற்றொரு உண்மையையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

    மக்களின் கோபத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு விஷயம்.

    ஒரு நாட்டை நிர்வகிப்பது வேறு விஷயம்.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது கொள்கைகளை விமர்சிப்பது எளிது.

    ஆனால் ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு முடிவும் பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், சமூக ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பாதிக்கும்.

    அங்கேயே எந்த புதிய அரசியல் இயக்கமும் தனது உண்மையான திறமையை நிரூபிக்க வேண்டும்.

    ரீபோர்ம் யூகே இன்னும் அந்தச் சோதனையை முழுமையாக எதிர்கொண்டதாக நான் கருதவில்லை.

    ஒரு அரசியல் கட்சியின் உண்மையான வலிமை, அது எவ்வளவு சத்தமாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது என்பதில் மட்டும் இல்லை.

    அதிகாரம் கிடைத்தால் அந்த எதிர்ப்பை நடைமுறை அரசாக மாற்றும் திறன் அதற்கு இருக்கிறதா? என்பதில்தான் உள்ளது.

    £5 மில்லியன் விவகாரம்  ஃபராஜின் அரசியலைச் சூழ்ந்த புதிய கேள்வி

    இங்கேதான் நைஜல் ஃபராஜின் சமீபத்திய அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு திருப்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

    2024ஆம் ஆண்டு, ரீபோர்ம் யூகேக்கு நிதியுதவி செய்த கிரிப்டோ முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹாபோர்ன் என்பவரிடமிருந்து ஃபராஜ் £5 மில்லியன் பெறுமதியான தனிப்பட்ட பரிசைப் பெற்றார்.

    இது சாதாரண அரசியல் நன்கொடை விவகாரம் அல்ல.

    ஏனெனில், அந்தத் தொகை தொடர்பாக நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு பொறுப்பான ஆணையாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஃபராஜ் ஆரம்பத்தில், இந்தப் பணம் தனது வாழ்நாள் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகளுக்காக வழங்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

    பின்னர் அவர் அதனை Brexit-க்காக மேற்கொண்ட தனது அரசியல் முயற்சிகளுக்கான ஒரு வகையான “பரிசு” எனவும் விளக்கியுள்ளார்.

    இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    விசாரணை நடைபெறுவது என்பது ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டார் என்பதல்ல.

    ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு வழங்கப்பட்டது, அது ஏன் உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை, நாடாளுமன்ற விதிகளுக்கு அது உட்பட்டதா என்பவை நிச்சயமாக பொதுமக்கள் கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளாகும்.

    மேலும், இந்த விவகாரம் வெறும் அரசியல் வதந்தியாக இல்லை. நாடாளுமன்ற விதிமுறைகளை கண்காணிக்கும் அமைப்பின் விசாரணைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது.

    இதன் காரணமாக ஃபராஜின் அரசியல் வாழ்க்கையில் ஒரு புதிய கேள்வி எழுந்தது:

    “அதிகார வர்க்கத்தைஎதிர்த்து பேசும் ஒருவர், தன்னுடைய அரசியல் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மையை எவ்வாறு நிரூபிக்கிறார்?”

    அதுதான் இன்றைய பிரச்சினையின் அரசியல் மையம்.

    பதவி விலகலும் கிளாக்டன் இடைத்தேர்தலும்

    இந்த நிதி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தீவிரமடைந்த நிலையில், 2026 ஜூலை 7 அன்று ஃபராஜ் கிளாக்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனால் அவர் அரசியலை விட்டு விலகவில்லை.

    மாறாக, தனது பதவி விலகலின் மூலம் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலை உருவாக்கி, அதில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

    அவர் இதனை “மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையிலான தேர்தல்” என்ற அரசியல் சவாலாக முன்வைத்தார்.

    அதாவது,

    “என்னைப் பற்றிய தீர்ப்பை நாடாளுமன்ற விசாரணைகள் வழங்க வேண்டாம்; கிளாக்டன் (Clacton) மக்கள் வழங்கட்டும்” என்பதே அவரது அரசியல் நிலைப்பாட்டின் சாரமாக இருந்தது.

    இது ஃபராஜின் அரசியல் பாணியை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

    ஒரு பிரச்சினையை அவர் சட்டரீதியான அல்லது நாடாளுமன்ற நடைமுறை விவகாரமாக மட்டும் பார்க்கவில்லை.

    அதை உடனடியாக “மக்கள் எதிர் அதிகார வர்க்கம்” என்ற அரசியல் போராட்டமாக மாற்றுகிறார்.

    இதுதான் அவரது பலமும்.

    அதே நேரத்தில் இதுவே அவரது அரசியல் பலவீனமாகவும் மாறக்கூடும்.

    ஏனெனில், ஒவ்வொரு நிர்வாக அல்லது ஒழுங்குமுறை விசாரணையையும் “அதிகார வர்க்கத்தின் சதி” என்று மாற்றிவிட்டால், உண்மையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது பின்னுக்குத் தள்ளப்படுவதற்கான அபாயம் உள்ளது.

    ஆனால் நடந்தது என்ன?

    ஃபராஜ் எதிர்பார்த்திருந்தது ஒரு மிகப்பெரிய அரசியல் மோதல்.

    ரீபோர்ம் யூகே  ஒருபுறம்.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் போன்ற பாரம்பரிய அரசியல் சக்திகள் மறுபுறம்.

    ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்டது.

    முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்தன.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ரீஸ்டோர் பிரிட்டன் கட்சியும் போட்டியிடவில்லை.

    இதன் அரசியல் காரணம் தெளிவானது.

    அந்தக் கட்சிகளின் பார்வையில், ஃபராஜ் தனது சொந்த நிதி மற்றும் நாடாளுமன்ற விசாரணைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்த இடைத்தேர்தலை உருவாக்கியிருந்தார்.

    கன்சர்வேடிவ் தலைவர் கெமி பேடனொக் இதனை “போலி இடைத்தேர்தல்” என்றும் “தன்முனைப்பு போட்டி” என்றும் விமர்சித்தார்.

    லேபர் இதனை ஒரு “சர்க்கஸ்” எனக் கருதி போட்டியிடவில்லை.

    லிபரல் டெமகிரட்ஸ் தலைவர் எட் டேவி, இதனை ஃபராஜின் “அகங்கார அரசியல்” என்று விமர்சித்ததுடன், அதற்கு அரசியல் ஆக்சிஜன் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

    கிறீன்ஸ் கட்சியும் இறுதியில் போட்டியிடாமல் விலகியது.

    இதில் ஒரு சுவாரசியமான அரசியல் முரண்பாடு உள்ளது.

    ஃபராஜ் விரும்பியது:

    “அரசியல் வர்க்கத்திற்கெதிரான மக்கள் போராட்டம்”

    முக்கியக் கட்சிகள் உருவாக்கியது:

    “ஃப்ராஜுக்கெதிரான ஃப்ராஜின் போராட்டம்”

    அதாவது, அவர் எதிர்பார்த்த பெரிய அரசியல் போராட்ட மேடை உருவாகவில்லை.

    34 வேட்பாளர்கள்  ஆனால் உண்மையான போட்டியாளர் யார்?

    முக்கியக் கட்சிகள் விலகியதால் கிளாக்டன் தேர்தல் வெறுமையாகிவிடவில்லை.

    மாறாக, வரலாற்றில் மிகவும் விசித்திரமான தேர்தல்களில் ஒன்றாக மாறியது.

    மொத்தம் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இது ஒரு பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான மிகப்பெரிய வேட்பாளர் எண்ணிக்கையாக அமைந்தது.

    அவர்களில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் நகைச்சுவை அரசியல்வாதியான கவுண்ட் பின்வேஸ்(Count Binface).

    இது ஒரு சாதாரண தேர்தல் களமாக இல்லாமல், பிரிட்டிஷ் அரசியலின் மீதான மக்களின் விரக்தி, நகைச்சுவை, எதிர்ப்பு மற்றும் அரசியல் நாடகத்தின் கலவையாக மாறியது.

    ஆனால் இதன் அடிப்படை உண்மை ஒன்றுதான்:

    பெரிய கட்சிகள் இல்லாத தேர்தல், உண்மையான தேசிய அரசியல் ஆதரவை அளக்கும் வழக்கமான அளவுகோலாக இருக்க முடியாது.

    ஃபராஜ் மீண்டும் வென்றார் – ஆனால் அதன் அர்த்தம் என்ன?

    2026 ஆகஸ்ட் 13 அன்று நடந்த கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 22,239 வாக்குகளையும், சுமார் 62.8% வாக்குகளையும் பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக இருந்த கவுண்ட் பின்வேஸ் (Count Binface) சுமார் 9,455 வாக்குகளைப் பெற்று 26.7% பெற்றார். வெற்றி மிகப் பெரியது.

    ஆனால் இங்கே ஒரு அரசியல் நுணுக்கத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

    2024 பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் வாக்குகள் சேர்ந்து அந்தத் தொகுதியில் மிகப் பெரிய வாக்குத் தளத்தை வலதுசாரிக் கட்சிகளுக்கு உருவாக்கியிருந்தன.

    2026 இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவே இல்லை.

    எனவே, இந்த வெற்றியை “பிரிட்டன் முழுவதும் ஃபராஜுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு” என்று எடுத்துக்கொள்வது அரசியல் ரீதியாக மிகைப்படுத்தலாகிவிடும்.

    இது முதன்மையாக கிளாக்டன் தொகுதியில் ஃபராஜின் தனிப்பட்ட அரசியல் ஆதரவையும் ரீபோர்ம் யூகேயின் உள்ளூர் வலிமையையும் காட்டுகிறது.

    ஆனால் அது அவருக்கு ஒரு முக்கியமான அரசியல் மூலதனத்தை மீண்டும் வழங்கியுள்ளது:

    நாடாளுமன்ற இருக்கை.

    ஆனால் £5 மில்லியன் கேள்வி முடிந்துவிட்டதா?

    இல்லை.

    இதுதான் இந்த இடைத்தேர்தலின் மிக முக்கியமான அரசியல் உண்மை.

    ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றாலும், பாராளுமன்ற விதிமுறைகளை மீறிய விசாரணை முடிவடைந்துவிடவில்லை.

    மாறாக, அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளதால் அந்த விவகாரம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில் விதிமீறல் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் போன்ற சாத்தியக்கூறுகள் உருவாகலாம்.

    இதனால் Clacton மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு விஷயத்தைச் சொல்கிறது:

    “நாங்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.”

    ஆனால் அது மற்றொரு விஷயத்தைச் சொல்லவில்லை:

    “நாடாளுமன்ற விதிமுறைகள் தொடர்பான விசாரணை தேவையில்லை.”

    இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாது.

    ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு ஒரு அரசியல் ஆணையை வழங்குகிறது.

    ஆனால் சட்டமும் நாடாளுமன்ற விதிகளும் தங்களுடைய நடைமுறையில் தொடர்கின்றன.

    புலம்பெயர் தமிழனாக என் பார்வை

    இந்த இடத்தில் நான் ஒரு தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, குடியேற்றம் குறித்து பேசப்பட்டது.

    இன்று குடியேற்றமே தேர்தல்களின் மையக் கேள்விகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    அப்போது விவாதம் வேலை வாய்ப்பைப் பற்றியது.

    இன்று விவாதம் தேசிய அடையாளத்தையும் எல்லைக் கட்டுப்பாட்டையும் பற்றியது.

    அப்போது,

    “எத்தனை பேர் வருகிறார்கள்?”

    என்ற கேள்வி இருந்தது.

    இன்று,

    “பிரிட்டன் எப்படிப்பட்ட நாடாக இருக்க வேண்டும்?” என்ற கேள்வி எழுகிறது.

    இந்த மாற்றத்தை நான் ஐம்பத்தொரு ஆண்டுகளாக நேரில் பார்த்திருக்கிறேன்.

    ஒரு குடியேறிய தமிழனாக, இந்த நாட்டின் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், வாய்ப்புகளையும் மதிக்கிறேன்.

    அதே நேரத்தில், இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களின் உணர்வுகளையும் நான் புரிந்துகொள்கிறேன்.

    ஒரு நாட்டிற்கு மனிதநேயமும் தேவை.

    அதே நாட்டிற்கு ஒழுங்கும் தேவை.

    ஒரு நாட்டிற்கு அகதிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் இதயமும் தேவை.

    அதே நேரத்தில், அதன் குடியேற்றக் கொள்கைக்கு தெளிவான விதிகளும் தேவை.

    இந்த இரண்டிற்கும் இடையே சமநிலையை உருவாக்குவது எந்த அரசுக்கும் மிகவும் கடினமான அரசியல் பணியாகும்.

    ஆனால் அதைவிட முக்கியமானது இன்னொன்று.

    குடியேற்றத்தைப் பற்றிப் பேசும்போது குடியேறியவர்களைப் பற்றிய வெறுப்பையும், குடியேற்றம் குறித்து கவலைப்படுபவர்களைப் பற்றிய அவமதிப்பையும் ஒரே நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

    அரசியல் விவாதம் மனிதர்களை எதிரிகளாக மாற்றாமல், பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடும் வழியாக இருக்க வேண்டும்.

    கன்சர்வேடிவ் கட்சிக்கு இது ஒரு எச்சரிக்கை

    எனது பார்வையில் ரீபோர்ம் யூகேயின் மிகப்பெரிய வெற்றி அவர்கள் பெற்றிருக்கும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல.

    கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் மொழியையே மாற்றியிருப்பதுதான்.

    ஒரு காலத்தில் வலதுசாரி வாக்காளர்களின் இயல்பான தேர்வாக இருந்த கன்சர்வேடிவ் கட்சி, இன்று தனது பாரம்பரிய ஆதரவாளர்களில் ஒரு பகுதியை ரீபோர்ம் யாகூ நோக்கி இழந்துள்ளது.

    இது சாதாரண வாக்கு மாற்றமல்ல.

    இது அரசியல் நம்பிக்கையின் இடமாற்றம்.

    கிளாக்டன் இதற்கு ஒரு குறியீடு.

    ஆனால் கன்சர்வேடிவ் கட்சிக்கு இங்கே இன்னொரு கேள்வியும் உள்ளது:

    ரீபோர்ம் யூகேவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமா?

    அல்லது ரீபோர்ம் யூகே எடுத்துக்காட்டும் மக்களின் உண்மையான கவலைகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா?**

    இரண்டாவது வழியே நீண்ட காலத்தில் பயனுள்ளதாக இருக்கலாம்.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சோதனை

    ரீபோர்ம் யூகேவின் வளர்ச்சியை கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சவால்.

    ஏனெனில் குடியேற்றம், வாழ்க்கைச் செலவு, என்.எச்.எஸ், வீடமைப்பு, வேலைவாய்ப்பு, பொது சேவைகள் போன்ற கேள்விகள் வலதுசாரிகளின் சொந்த பிரச்சினைகள் அல்ல.

    அவை சாதாரண மக்களின் வாழ்க்கைக் கேள்விகள்.

    Labour அவற்றுக்கு நம்பகமான தீர்வுகளை வழங்கத் தவறினால், அந்த இடத்தை ரீபோர்ம் போன்ற இயக்கங்கள் நிரப்பும்.

    அதேவேளை,ரீபோர்மை எதிர்ப்பதற்காக அதன் கடுமையான மொழியை அப்படியே ஏற்றுக்கொள்வதும் லேபருக்கு தீர்வாக இருக்காது.

    மக்களின் அச்சத்தை மறுப்பதற்குப் பதிலாக, அந்த அச்சம் ஏன் உருவானது என்பதைப் புரிந்துகொள்வதே அரசியலின் முதிர்ச்சி.

    லிபரல் டெமகிரட்ஸ் மற்றும் புதிய அரசியல் இடைவெளி

    Liberal Democrats-க்கு இங்கு வேறொரு வாய்ப்பு உள்ளது.

    கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் இடையிலான வலதுசாரி போட்டி தீவிரமடையும் போது, மிதவாத மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தும் வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் இடம் உருவாகிறது.

    ஆனால் அந்த இடத்தை லிபரல் டெமகிரட்ஸ் எவ்வளவு திறமையாக நிரப்புகின்றனர் என்பதுதான் கேள்வி.

    கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணித்தது அவர்களுக்கு தேசிய அளவில் ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டைத் தந்திருக்கலாம்.

    ஆனால் எதிர்காலத்தில் ரீபோர்ம் யூகே வளர்ந்துகொண்டே சென்றால், அதன் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அரசியல் தளத்தை யார் உருவாக்கப் போகிறார்கள்?

    இதுவும் ஒரு முக்கியமான கேள்வி.

    ஃபராஜ் – ஒரு தலைவர் மட்டுமா? அல்லது ஒரு அரசியல் அறிகுறியா?

    நைஜல் ஃபராஜை ஒருவர் விரும்பலாம்.

    வெறுக்கலாம்.

    அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளலாம்.

    மறுக்கலாம்.

    ஆனால் அவரை அரசியல் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பிரிட்டனின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

    அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல.

    அவர் பிரிட்டிஷ் சமூகத்தின் ஒரு பகுதியின் மனநிலையை வெளிப்படுத்தும் அரசியல் நிகழ்வு.

    அந்த மனநிலை ஏன் உருவானது என்பதைக் கவனிப்பது முக்கியம்.

    அதை வெறுமனே “வலதுசாரி கோபம்” என்று நிராகரித்துவிட்டால், அதன் பின்னால் இருக்கும் சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

    அதே நேரத்தில், அந்தக் கோபத்தை அரசியல் அதிகாரமாக மாற்றும் ஒவ்வொரு முயற்சியையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

    அதுதான் ஜனநாயகத்தின் சமநிலை.

    கிளாக்டன் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்

    இந்த இடைத்தேர்தல் எனக்கு ஒரு முக்கியமான அரசியல் உண்மையை நினைவூட்டுகிறது.

    மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது, அவருடைய ஒவ்வொரு செயலும் சரி என்று தீர்ப்பு வழங்குவதாக அர்த்தமல்ல.

    அதேபோல்,

    ஒரு அரசியல்வாதி மீது விசாரணை நடைபெறுவது, அவர் அரசியல் ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டார் என்பதையும் அர்த்தப்படுத்தாது.

    கிளாக்டன் மக்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    இப்போது அவரது பொறுப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

    அவர் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதாகச் சொன்னால், அதனை விமர்சிப்பது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நேர்மை ஆகியவற்றிலும் தன்னை நிரூபிக்க வேண்டும்.

    ஏனெனில் அதிகாரத்தை விமர்சிப்பது எளிது.

    அதிகாரத்தின் முன் நின்று தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் கடினம்.

    முடிவாக…

    நைஜல் ஃபராஜின் அரசியல் பயணம் இன்னும் முடிவடையவில்லை.

    மாறாக, அது இன்னொரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

    பிரெக்ஸிட் அவரை வரலாற்றில் பதித்தது.

    ரீபோர்ம் யூகே அவரை மீண்டும் தேசிய அரசியலின் மையத்திற்குக் கொண்டுவந்தது.

    கிளாக்டன் அவருக்கு நாடாளுமன்ற இருக்கையைத் தந்தது.

    ஆனால் £5 மில்லியன் விவகாரம் அவருக்கு ஒரு புதிய சோதனையை உருவாக்கியுள்ளது.

    அந்தச் சோதனை வெறும் ஃபராஜுக்கானது அல்ல.

    அது பிரிட்டிஷ் ஜனநாயகத்திற்கான சோதனையும் கூட.

    ஒரு அரசியல்வாதியின் மக்கள் ஆதரவும், அவரது அரசியல் பொறுப்பும் இரண்டும் ஒன்றாக இருக்க முடியுமா?

    மக்களின் கோபத்தை அரசியல் மாற்றமாக மாற்ற முடியும்; ஆனால் அந்த மாற்றத்தை நல்லாட்சியாக மாற்ற முடியுமா?

    ரீபோர்ம் யூகே எதிர்ப்பின் சக்தியாக மட்டுமே தொடருமா, அல்லது ஒருநாள் ஆட்சிக்குத் தயாரான மாற்று அரசாக உருவெடுக்குமா?

    கன்சர்வேடிவ் கட்சி தனது பாரம்பரிய வாக்குத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்புமா?

    லேபர் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அச்சங்களுக்கு நம்பகமான பதிலை வழங்குமா?

    லிபரல் டெமகிரட்ஸ் இந்த புதிய அரசியல் இடைவெளியை நிரப்புவார்களா?

    இவைதான் இனி பிரிட்டிஷ் அரசியலின் முக்கியக் கேள்விகள்.

    நான் இந்த நாட்டில் ஐம்பத்தொரு ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு புலம்பெயர் தமிழனாக இந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, எனக்கு தோன்றுவது ஒன்றுதான்:

    பிரிட்டன் மாறிக்கொண்டிருக்கிறது.

    ஆனால் மாற்றத்தின் திசையை இன்னும் யாரும் முழுமையாகத் தீர்மானித்துவிடவில்லை.

    அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாம்.

    தலைவர்கள் வரலாம்.

    போகலாம்.

    வாக்காளர்கள் கட்சிகளை மாற்றலாம்.

    ஆனால் இறுதியில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிப்பது, அதன் மக்களின் மனநிலையும் அவர்கள் செலுத்தும் வாக்கும்தான்.

    அந்த மனநிலை எந்தத் திசையில் நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே, பிரிட்டிஷ் அரசியலின் நாளைய முகத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்.

    நைஜல் ஃபராஜ் அந்த மாற்றத்தின் காரணமா?

    அல்லது ஏற்கனவே மாறிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் சமூகத்தின் வெளிப்பாடா?

    இதற்கான பதில் இன்னும் வரலாற்றின் கைகளில்தான் உள்ளது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பன்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    (தொடரும் – பகுதி 4: கன்சர்வேடிவ் கட்சியின் வீழ்ச்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் எதிர்காலம், மற்றும் பிரிட்டிஷ் அரசியலின் புதிய சமநிலை.)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 2I)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 2I)

    ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை

    ஒரு ஜனநாயக நாட்டில் தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை.

    அவர்கள் மக்களின் நம்பிக்கையால் உருவாகிறார்கள்.

    அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும் ஆற்றல் இருந்தால் மட்டுமே அவர்கள் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள்.

    இன்றைய பிரிட்டிஷ் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அவர்களின் அரசியல் பயணத்தை ஆராயாமல் முடியாது.

    அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டம்.

    அதில் சிலர் வேகமாக ஓடி ஆரம்பத்திலேயே மறைந்து விடுகிறார்கள்.

    சிலர் மெதுவாக நடந்தாலும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து உச்சத்தை அடைகிறார்கள்.

    ஆண்டி பர்ன்ஹாம் அவர்களின் பயணம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

    இங்கிலாந்து அரசியலில் அவர் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, திறமையான இளம் தொழிலாளர் கட்சி அரசியல்வாதி என்ற அடையாளமே அவருக்கு இருந்தது.

    பின்னர் பல அமைச்சுப் பொறுப்புகளை வகித்தார். குறிப்பாக தேசிய சுகாதார சேவை (NHS) தொடர்பான அவரது ஈடுபாடு, சாதாரண மக்களின் வாழ்க்கையை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் அரசியல்வாதி என்ற பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது.

    ஆனால் அரசியலில் ஒவ்வொரு வெற்றிக்கும் முன் தோல்விகள் இருக்கும்.

    கட்சித் தலைமைப் போட்டிகளில் அவர் பின்னடைவைச் சந்தித்தார்.

    பல அரசியல்வாதிகள் அத்தகைய தோல்விக்குப் பிறகு அரசியலிலிருந்து விலகியிருப்பார்கள். ஆனால் பர்ன்ஹாம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

    அவர் லண்டன் அரசியலின் மையத்தை விட்டு, கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராகப் பொறுப்பேற்றார்.

    அங்குதான் அவரது அரசியல் முதிர்ச்சி முழுமையாக வெளிப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதும், தனது பகுதி மக்களின் நலனுக்காக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.

    அந்தச் செயல்பாடு அவரை ஒரு பிராந்திய அரசியல்வாதியாக அல்ல, தேசிய அளவிலான தலைவராக மக்களிடம் அறிமுகப்படுத்தியது.

    எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் உணர்ந்த ஒரு உண்மை என்னவென்றால், பிரிட்டிஷ் மக்கள் வெறும் பேச்சாளர்களை நீண்ட காலம் ஏற்றுக்கொள்வதில்லை.

    அவர்கள் செயலில் நம்பிக்கை வைப்பவர்களையே இறுதியில் மதிக்கிறார்கள்.

    ஆண்டி பர்ன்ஹாம் மீது உருவான நம்பிக்கையின் அடிப்படையும் அதுவே.

    இன்றைய பிரிட்டனில் மக்களின் முக்கியமான கவலைகள் வாழ்க்கைச் செலவு, சுகாதாரம், வீட்டு வசதி, குடியேற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை.

    இந்த அனைத்திலும் சமநிலையான அணுகுமுறையை முன்வைக்க முயன்றதாலேயே அவர் தேசிய அரசியலின் மையத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டார்.

    பிரிட்டனின் அரசியலமைப்பில் பிரதமரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.

    மக்கள் தங்கள் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் கட்சியின் தலைவரை, நாட்டின் மன்னர் அல்லது மன்னி அரசு அமைக்க அழைக்கிறார்.

    அந்த அழைப்பை ஏற்று அமைச்சரவையை அமைக்கும் நபரே பிரதமராகப் பதவியேற்கிறார்.

    இந்த நடைமுறை உலகின் பல நாடுகளிலிருந்து மாறுபட்டது.

    இங்கு பிரதமரின் அதிகாரம் சட்டத்தில் மட்டுமல்ல.

    நாடாளுமன்றத்தின் நம்பிக்கையிலும் இருக்கிறது. அந்த நம்பிக்கை குறைந்தால், பதவியும் நீடிக்காது. இதுவே பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் தனித்துவமான வலிமை.

    ஆண்டி பர்ன்ஹாம் பிரதமரானது ஒரே நாளில் நிகழ்ந்த சம்பவமல்ல.

    பல ஆண்டுகளாக உருவான அரசியல் அனுபவம், மக்களிடம் பெற்ற நம்பிக்கை, கட்சிக்குள் பெற்ற ஆதரவு, நாட்டின் அரசியல் சூழல் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்தபோதுதான் அவர் அந்த உயரத்தை அடைந்தார்.

    ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

    பிரதமராக உயர்வது ஒரு தலைவரின் வெற்றி.

    ஆனால் அந்த வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றுவது அவரது ஆட்சிதான்.

    இன்று பிரிட்டன் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்கள், அதிகரித்து வரும் குடியேற்ற விவாதங்கள், தேசிய சுகாதார சேவையின் சவால்கள், உலகளாவிய பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றை சமாளிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஆண்டி பர்ன்ஹாம் அரசின் தோள்களில் உள்ளது.

    அவரது ஆட்சியின் வெற்றியை தீர்மானிப்பது தேர்தல் வெற்றி அல்ல.

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாதாரண பிரிட்டிஷ் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றம்தான்.

    அதனால்தான் அரசியலில் வெற்றி என்பது பதவியை அடைவது அல்ல.

    அந்தப் பதவியின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதே உண்மையான வெற்றியாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    10.08.2026

    (தொடரும் – பகுதி 3 : நைஜல் ஃபராஜ் மற்றும் ரீபோர்ம் UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.)

    Share
  • கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    சக்தி சக்திதாசன்

    “கலைமகள் கைப்பொருளே”

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் என்ற தொடரில் இன்று நாம் ஆராயப் போகும் பாடல், “கலைமகள் கைப்பொருளே”.

    வசந்த மாளிகை எனும் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் , வாணிஸ்ரீ சம்பந்தப்பட்ட காட்சி.

    திரைப்படத்தில் இது ஒரு எளிய காட்சியாகத் தோன்றுகிறது.

    அன்பிற்காக ஏங்கும் ஒரு இளைஞன். செல்வம் இருந்தும் மனநிம்மதி இல்லாத வாழ்க்கை.

    தவறான பழக்கங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவன்.

    அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் வரும் ஒரு இளம் பெண்.

    கவனிப்பாரற்று மூலையில் கிடந்த வீணையை எடுத்துத் தூசி தட்டி இசைக்கிறாள்.

    கதைக்கு இது போதும்.

    ஆனால் கவியரசருக்கு அது போதாது.

    அவரது சொற்கள் கதையைத் தாண்டி மனித வாழ்க்கைக்குள் நுழைகின்றன.

    அதையும் தாண்டி ஆன்மாவின் வாசலைத் தட்டுகின்றன.

    வீணை என்பது வெறும் இசைக்கருவி அல்ல.

    அது மனித மனம்.

    அதன் நரம்புகள் மனிதனின் எண்ணங்கள்.

    அதை மீட்டும் விரல்கள் இறையருள் அல்லது ஞானகுருவின் வழிகாட்டுதல்.

    இவ்வாறு பார்க்கத் தொடங்கும்போது இந்தப் பாடல் முழுவதும் ஒரு ஆன்மீக உபநிடதமாக நமக்குள் விரிகிறது.

    **”கலைமகள் கைப்பொருளே
    உன்னை
    கவனிக்க ஆளில்லையோ”**

    இங்கு வீணையைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி, உண்மையில் மனிதனைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி.

    ஒவ்வொரு மனிதனும் கலைமகளின் படைப்பே.

    ஒவ்வொரு உயிரும் இறைவனின் அற்புதமான வடிவமைப்பு.

    அளவற்ற திறமைகள், கருணை, அன்பு, அறிவு, ஞானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொக்கிஷம்.

    ஆனால் அந்தப் பொக்கிஷத்தை கவனிக்க யார் இருக்கிறார்கள்?

    பெரும்பாலான மனிதர்கள் வெளி உலகத்தை வெல்வதற்காக வாழ்கிறார்கள்.

    ஆனால் தங்களுடைய உள்ளத்தை அறிந்து கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை.

    வீணை தூசி படிவது போல மனித மனமும் ஆசை, அகந்தை, பொறாமை, பயம், கோபம் ஆகிய தூசிகளால் மூடப்படுகிறது.

    அந்தத் தூசியை துடைக்காமல் இசை வராது.

    மனதைத் தூய்மைப்படுத்தாமல் ஆன்மீகம் மலராது.

    **”விலையில்லா மாளிகையில்
    உன்னை
    மீட்டவும் விரலில்லையோ”**
    இந்த “விலையில்லா மாளிகை” என்பது மனித உடல்.

    உலகிலுள்ள எந்த அரண்மனையையும் விட விலைமதிப்பற்றது.

    ஏனெனில் இதில் உயிர் இருக்கிறது.

    உணர்வு இருக்கிறது.

    சிந்தனை இருக்கிறது.

    ஆன்மா இருக்கிறது.

    இவ்வளவு அற்புதமான உடலுக்குள் இருக்கும் மனம் இசைக்கப்படாமல் கிடக்கிறது.

    வீணை தனியாக இசைக்க முடியாது.

    அதை மீட்டும் விரல்கள் வேண்டும்.
    அதேபோல மனித வாழ்க்கைக்கும் விழிப்புணர்வு வேண்டும்.

    அது தியானமாக இருக்கலாம்.
    ஞானமாக இருக்கலாம்.

    குருவின் உபதேசமாக இருக்கலாம்.

    இறையருளாக இருக்கலாம்.

    **”உன்னிடம் ஆயிரம் ராகங்களே
    என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே”**

    இந்த வரிகளில் கவியரசர் மனிதனின் எல்லையற்ற ஆற்றலைச் சொல்கிறார்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணற்ற திறமைகள் உறங்கிக் கிடக்கின்றன.

    அதேபோல ஆன்மீகப் பயணத்திற்குத் தேவையான எல்லா விதைகளும் அவனுக்குள்ளேயே உள்ளன.

    அன்பு…
    கருணை…
    மன்னிப்பு…
    அமைதி…
    தியாகம்…
    பேரானந்தம்…

    இவை வெளியிலிருந்து வருவதில்லை.

    அவை அனைத்தும் உள்ளேயே இருக்கின்றன.

    ஆனால் அவை விழித்தெழ வேண்டும்.

    ஒரு விதைக்குள் முழு மரம் இருப்பது போல, ஒரு மனிதனுக்குள் முழுமையான ஞானியின் சாத்தியமும் மறைந்தே இருக்கிறது.

    அதனால்தான் கவியரசர் “ஆயிரம் ராகங்கள்” என்று கூறுகிறார்.
    அதாவது எண்ணற்ற பரிமாணங்கள்.

    எண்ணற்ற உயர்வுகள்.

    எண்ணற்ற சாத்தியங்கள்.

    **”இசையறிந்தோர்கள் மீட்டுங்களே
    இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களே”**

    இது பாடலின் மிக ஆழமான ஆன்மீக வரிகளில் ஒன்று.

    இசையறிந்தோர் என்றால் வீணை வாசிப்பவர்கள் மட்டுமல்ல.

    வாழ்க்கையின் இசையை அறிந்தவர்கள்.

    உள்ளத்தின் மொழியை அறிந்தவர்கள்.

    ஞானிகள்.
    சித்தர்கள்.
    மகான்கள்.
    உண்மையான குருக்கள்.

    நமக்குள் இருக்கும் இறையொளியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

    அவர்களால் நம்மை விழித்தெழச் செய்ய முடியும்.

    அப்படி யாரும் இல்லையெனில்,
    “எனக்காவது வழி காட்டுங்கள்” என்று பணிவுடன் வேண்டுகிறது இந்த வரி.

    ஆன்மீகத்தின் முதல் படி பணிவே.

    “எனக்கெல்லாம் தெரியும்” என்று நினைப்பவன் கற்றுக்கொள்ள மாட்டான்.

    “எனக்குத் தெரியாது” என்று ஒப்புக்கொள்பவனே ஞானத்தை அடைகிறான்.

    “நான் யார் உன்னை மீட்ட வரும்”
    இது சாதாரண வசனம் அல்ல.

    இது மனிதனின் நித்தியக் கேள்வி.
    “நான் யார்?”

    இந்தக் கேள்வியே அனைத்து ஆன்மீகப் பயணங்களின் தொடக்கம்.

    உடலா நான்?
    மனமா நான்?
    எண்ணமா நான்?
    பெயரா நான்?
    புகழா நான்?
    இல்லை.

    இவை அனைத்தையும் கடந்து நிற்கும் சாட்சியே நான்.

    இந்த உணர்வை நோக்கிச் செல்லும் அழைப்பாகவே இந்த வரி ஒலிக்கிறது.

    **”ஏனோ துடிக்கின்றேன்
    அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்”**

    மனிதனின் அமைதியின்மைக்கு இதைவிட அழகான விளக்கம் இருக்க முடியுமா?

    ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    பணம்.
    புகழ்.
    பதவி.
    உறவுகள்.
    வெற்றிகள்.

    இவற்றையெல்லாம் அடைந்த பிறகும் ஏன் ஒரு வெறுமை?

    ஏனெனில் ஆன்மா இறைவனைத் தேடுகிறது.

    ஆனால் மனம் பொருள்களைத் தேடுகிறது.

    இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டம்தான் மனிதனின் தவிப்பு.

    அந்தத் தவிப்பின் காரணம்.

    தெரியாததால் அவன் வாழ்க்கை முழுவதும் அலைந்து திரிகிறான்.

    “சொர்க்கமும் நரகமும் நம் வசமே”
    இது ஆன்மீகத்தின் மிகப் பெரிய உண்மை.

    சொர்க்கம் ஒரு இடமல்ல.

    நரகம் ஒரு இடமல்ல.

    அவை மனநிலைகள்.

    அன்பு நிறைந்த மனம் சொர்க்கம்.

    வெறுப்பு நிறைந்த மனம் நரகம்.

    மன்னிக்கும் மனம் சொர்க்கம்.

    பகை கொள்ளும் மனம் நரகம்.

    தியானம் செய்யும் மனம் சொர்க்கம்.

    அமைதியற்ற மனம் நரகம்.

    வெளியில் சொர்க்கத்தைத் தேடுபவன் ஏமாறுகிறான்.

    உள்ளே சொர்க்கத்தை உருவாக்குபவன் ஞானியாகிறான்.

    “நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே”

    மனம் எப்போதும் வெளியில் ஓடுகிறது.

    ஆனால் ஆன்மாவின் குரல் எப்போதும் உள்ளிருந்து அழைக்கிறது.

    அந்தக் குரலைக் கேட்பதே தியானம்.

    அந்தக் குரலைப் பின்பற்றுவதே ஆன்மீகம்.

    அந்தக் குரலோடு ஒன்றுபடுவதே முக்தி.

    “சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே”

    மனித சமுதாயம் சட்டங்களால் நிலைப்பதில்லை.

    சத்தியத்தாலும் தர்மத்தாலுமே நிலைக்கிறது.

    சத்தியம் இல்லாத அறிவு அழிவைத் தரும்.

    தர்மம் இல்லாத அதிகாரம் கொடுமையை உருவாக்கும்.

    ஆகவே மனிதன் முதலில் தன்னுள் சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும்.

    பிறகு தர்மத்தை வாழ வேண்டும்.

    அப்போதுதான் உலகமும் அமைதியடையும்.

    “இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே”

    ஆன்மீகத்தில் இறைவன் பல வடிவங்களில் பேசுகிறார்.

    சில நேரங்களில் குருவாக.

    சில நேரங்களில் நண்பனாக.

    சில நேரங்களில் வாழ்க்கை அனுபவமாக.

    ஆனால் மிக உயர்ந்த வடிவம் தாய்மை.

    தாய் கண்டிப்பாள்.

    ஆனால் அன்பால்.
    தாய் திருத்துவாள்.

    ஆனால் கருணையால்.
    அதேபோல் இறையருளும் மனிதனை வழிநடத்துகிறது.

    இந்தப் பாடல் முழுவதும் அந்தத் தாய்மையின் அழைப்பாகவே ஒலிக்கிறது.

    கவியரசர் கண்ணதாசனின் பெருமை என்னவென்றால், அவர் எழுதிய பாடல்களை ஒரு காதல் பாடலாகவும் ரசிக்கலாம்.

    ஒரு வாழ்க்கைத் தத்துவமாகவும் சிந்திக்கலாம்.

    ஒரு ஆன்மீக உபதேசமாகவும் அனுபவிக்கலாம்.

    இந்தப் பாடலில் வரும் வீணை, ஒவ்வொரு மனிதனின் இதயம்.
    அதன் நரம்புகள் நமது எண்ணங்கள்.

    அதன் இசை நமது வாழ்க்கை.
    அதை மீட்டும் விரல்கள் ஞானமும் இறையருளும்.

    அந்த இசை ஒலிக்க வேண்டுமெனில் முதலில் நம்மீது படிந்துள்ள அறியாமை என்னும் தூசியை அகற்ற வேண்டும்.

    அப்போதுதான் நமக்குள்ளே உறங்கிக் கிடக்கும் ஆயிரம் ராகங்கள் விழித்தெழும்.

    ஆயிரம் கீதங்கள் ஒலிக்கும்.

    அப்போது மனித வாழ்க்கை வெறும் வாழ்வாக இருக்காது.

    அது இறைவன் இசைக்கும் ஒரு தெய்வீக வீணையாக மாறிவிடும்.

    “உன்னிடம் ஆயிரம் ராகங்களே; என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே” என்ற கவியரசரின் வரிகள்,

    ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் உறங்கிக் கிடக்கும் அளவற்ற ஆன்மீகச் செல்வத்தை நினைவூட்டும் நித்திய மந்திரமாக என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    அன்பினியோரே!

    அன்பு வணக்கம்.

    நீங்கள் நலமா ?

    நான் நலமேயுள்ளேன்.

    எனது இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் எனும் இந்த தொடரின் இனிவரும் ஐந்து மடல்களும் இன்றைய இங்கிலாந்து அரசியல் நிலைகளை ஐந்து பகுதிகளாக பிரித்து அலசும் மடல்களாக வரும்.

    வாரமொரு பகுதியாக வரைய இருக்கிறேன்.

    அன்பானவர்களே ! நான் கவிஞனுமில்லை, கலைஞனுமில்லை, ரசிகனுமில்லை, பெரிய எழுத்தாளனுமில்லை.

    இங்கிலாந்தில் கடந்த 51 ஆண்டுகளாக வசிக்கும் ஒரு 69 வயதான சாதாரண புலம்பெயர் தமிழன் என்பதே எனது தகுதி.

    ஈழம் எனது அடையாளம், தமிழ் எனது முகவரி.

    இன்றைய. அவசர உலகிலே அரசியல் மாற்றங்கள் இமைக்கும் பொழுதினில் நடந்தேறுகின்றன.

    நான் இப்பகுதிகளை எழுதிக்கொண்டிருக்கும் போதே அதை மறுதலிக்கும் நிகழ்வுகள்.

    அப்படி நான் பதிவிடுவதற்கு மாக எதுவும் நடப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல .

    அதற்காக முன் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறேன்

    மாற்றத்தின் வாசலில் நிற்கும் பிரிட்டன்

    51 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழும் ஒரு புலம்பெயர் தமிழனின் அரசியல் சாட்சியம்

    பகுதி – 1

    ஐம்பத்தொரு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெறும் கால அளவல்ல.

    அது ஒரு நாட்டின் அரசியல் பரிணாமத்தை கண்முன்னே பார்த்து பதிவு செய்யும் நீண்ட பயணம்.

    நான் இங்கிலாந்தில் காலடி எடுத்து வைத்த காலத்தில், இந்நாடு இன்னும் தனது பேரரசின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தது.

    தொழிற்சாலைகளின் புகை வானத்தை மூடியிருந்தது.

    தொழிலாளர் சங்கங்கள் அரசியலில் வலுவான தாக்கம் செலுத்தின. குடியேற்றம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இன்று காணும் அளவுக்கு சமூக ஊடகங்கள் அரசியலை வடிவமைக்கவில்லை.

    இந்த ஐம்பத்தொரு ஆண்டுகளில் நான் பல பிரதமர்களைக் கண்டிருக்கிறேன்.

    பல தேர்தல்களை நேரில் அனுபவித்திருக்கிறேன்.

    மக்களின் மனநிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் கவனித்திருக்கிறேன்.

    அரசியல் என்பது வெறும் கட்சிகள் மோதும் களம் அல்ல.

    அது மக்களின் நம்பிக்கைகளும், ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் சந்திக்கும் இடம் என்பதை இந்த நாடு எனக்குக் கற்றுக் கொடுத்தது.

    ஒரு ஜனநாயகத்தின் வலிமை அதன் அரசாங்கத்தில் மட்டும் இல்லை.

    ஆட்சியை மாற்றும் உரிமையை மக்கள் அமைதியாகப் பயன்படுத்தும் பண்பாட்டில்தான் இருக்கிறது.

    அந்த வகையில் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்கும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

    கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துப் பார்த்தாலே பிரிட்டிஷ் அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் ஆழமானவை.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரெக்சிட், அதன் பொருளாதார விளைவுகள், வாழ்க்கைச் செலவின் உயர்வு, தேசிய சுகாதார சேவையின் சவால்கள், குடியேற்றக் கொள்கைகள், உலக அரசியல் மாற்றங்கள் இவை அனைத்தும் மக்களின் அரசியல் சிந்தனையையே மாற்றியுள்ளன.

    ஒரு காலத்தில் இரண்டு பெரிய கட்சிகளான லேபரும் கன்சர்வேடிவும் மாறி மாறி ஆட்சி செய்த அரசியல் அமைப்பு, இன்று பல திசைகளில் இழுக்கப்படுகிறது.

    வலதுசாரி தேசிய உணர்வை முன்வைக்கும் சக்திகள் வலுவடைகின்றன.

    மைய அரசியலை வலியுறுத்துபவர்கள் புதிய கூட்டணிகளைத் தேடுகின்றனர்.

    இளைஞர்களின் வாக்கு முறையும், வயதான வாக்காளர்களின் முன்னுரிமைகளும் மாறுபடுகின்றன.

    இந்த மாற்றங்களின் மையத்தில் இன்று ஒரு புதிய அரசியல் சமநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

    இன்றைய பிரதமராக உள்ள ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் இயக்கத்தின் மரபை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி.

    அவருடைய தலைமையால் லேபர் கட்சி புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில், நைஜல் ஃபராஜ் தலைமையிலான ரீபோர்ம் கட்சி, பாரம்பரிய வலதுசாரி அரசியலை முற்றிலும் மாற்றும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

    இதனால் கன்சர்வேடிவ் கட்சி தனது அரசியல் அடையாளத்தை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இன்னும் மத்திய அரசியலின் குரலாக இருக்க முயற்சித்தாலும், இரு துருவங்களுக்கிடையில் தனது இடத்தை உறுதிப்படுத்த போராடுகிறது.

    இவை வெறும் கட்சிகளின் கதைகள் அல்ல.

    இவை பிரிட்டிஷ் சமூகத்தின் உள்ளார்ந்த மாற்றங்களின் பிரதிபலிப்புகள்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, தேர்தல் பிரச்சாரங்கள் தெரு மேடைகளிலும், செய்தித்தாள்களிலும் நடந்தன.

    இன்று அவை கைப்பேசியின் திரையில் நடக்கின்றன.

    ஒருகாலத்தில் குடும்ப மரபே வாக்கை நிர்ணயித்தது.

    இன்று ஒரு வைரல் காணொளி கூட வாக்காளரின் மனதை மாற்றுகிறது.

    இந்த மாற்றத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில், அரசியல் என்பது நிலையாக இருக்கும் கட்டிடம் அல்ல காலத்தோடு வடிவம் மாறும் உயிருள்ள அமைப்பு என்பதையே நான் உணர்ந்திருக்கிறேன்.

    இந்தக் கட்டுரையில் நான் எந்தக் கட்சியையும் புகழவோ, குறைக்கவோ முயலவில்லை.

    ஒரு பாமர மனிதனின்அரசியல் ஆய்வாகவும், ஐம்பத்தொரு ஆண்டுகளாக இந்த நாட்டின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், வெற்றியையும் சவால்களையும் பார்த்து வாழ்ந்த புலம்பெயர் தமிழனாகவும், நான் கண்ட உண்மைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு நாட்டின் அரசியல் அதன் நாடாளுமன்றத்தில் மட்டும் எழுதப்படுவதில்லை.

    அது பேருந்து நிறுத்தங்களில் பேசப்படுகிறது.

    தொழிற்சாலைகளில் விவாதிக்கப்படுகிறது.

    பல்கலைக்கழகங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

    குடியேற்றக் குடும்பங்களின் உணவுமேசைகளில் அனுபவமாகப் பகிரப்படுகிறது.

    அந்த உயிருள்ள அரசியலின் சாட்சியாக இந்த ஆய்வை நான் பதிவு செய்கிறேன்.

    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    03.08.2026

    அடுத்த வாரம் ………

    (தொடரும் – பகுதி 2: “ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை: அரசியலமைப்பும் அரசியல் பயணமும்”)

    Share
  • லண்டனிலே கம்பன் விழா (ஜூன் 27 & 28, 2026)

    லண்டனிலே கம்பன் விழா (ஜூன் 27 & 28, 2026)

    அன்பினிய வல்லமை வாசகர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இங்கிலாந்திலிருந்து சக்தி சக்திதாசன்.

    நானிங்கு நலமே நீங்களும் அதேபோல நலமுடன், மகிழ்வாக இருப்பீர்கள் என்பதே என் நம்பிக்கை.

    புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழின் பால் இருக்கும் அதீத மொழியன்பு பற்றிய பகிர்வே இது.

    ஆம் கடந்த ஜூன் 27, 28ம் தேதிகளில் இங்கிலாந்தில் அல்பேர்ட்டன் (Alperton)  எனும் இடத்தில் நிகழ்ந்த மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற “கம்பன் விழா ” பற்றிய பகிர்வே இது.

    தமிழ் இலக்கியத்தின் உயரிய மலைச்சிகரமாக விளங்கும் கம்பன், தனது “கம்பராமாயணம்” மூலம் தமிழுக்கு அளித்த செழுமை அளவிட முடியாதது.

    வால்மீகியின் ஆதாரத்தைத் தமிழ்மொழியின் இனிமையாலும் கற்பனையின் வளமாலும் புதுப்பித்து, தமிழ் மக்களின் உள்ளங்களில் நிரந்தர இடம்பிடித்தவர் கம்பன்.

    அவரது கவித்திறன் வெறும் இலக்கியச் சிறப்பாக மட்டுமல்லாது, ஆன்மீக ஆழமும் மனிதநேய சிந்தனைகளும் நிறைந்ததாகும்.

    ஒவ்வொரு அடியிலும் ஒலிக்கும் இசைநயம், சொல் வளம், உவமைச் செல்வம் ஆகியவை கம்பனை உலகப் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராக உயர்த்துகின்றன.

    இவ்வாறான கம்பனின் பெருமையையும், அவரது இலக்கியப் பாரம்பரியத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உயிர்ப்பித்து நிலைநிறுத்தும் முயற்சியாகவே இத்தகைய கம்பன் விழாக்கள் விளங்குகின்றன என்பது பெருமிதம் அளிக்கிறது.

    இலண்டனில் இயங்கும் “அறிவு அறக்கட்டளை” அமைப்பின் கீழ் ஈழத்தின் கம்பன் கழக புகழ், ஆன்மீக அறிவுசார் அறிஞர் “கம்பவாரிதி ஜெயராஜ்” அவர்களின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டது இலண்டன் கம்பன் கழக கட்டமைப்பு.

    அவரின் வழி காட்டுதலில் இவ்விழா மூன்றாவது ஆண்டாக நிகழப்பெற்றது.

    இம்முறை விழாவிற்கு தவிர்க்க முடியாத காரணங்களினால் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.

    இருப்பினும் விழா அவரது வழிகாட்டுதலிலும் ஆசிகளுடனுமே நடைபெற்றது என்பதை விழா அமைப்பாளர்களின் உரைகளின் மூலம் அறிய முடிந்தது.

    இம்முறையும் விழா சிறப்பு நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட நான்கு பேரை கெளரவ விருதளித்து பெருமைப்படுத்தியது விழாவுக்கு மேலும் சிறப்பு ஏற்ப்டுத்தியது.

    ஈழத்தின் முன்னோடி ஊடகவியாளாலராக எமக்கெல்லா உதாரணமாகத் திகழும் ஊடகவியலாளர் “ஈழநாடு மாலி” என்று அன்போடு அழைக்கப்படும் அண்ணன் மகாலிங்கசிவம் முதலாவதாக கெளரவிக்கப்பட்டு “சமூகசிரோன்மணி” என்ற பட்டம் அளிக்கப்பட்டது உள்ளத்துக்கு இதமளித்தது.

    நான் கல்வி பயின்ற எனது பழைய பாடசாலை யாழ் பரியோவான் கல்லூரியின் (Jaffna St. Johns College) எனது முன்னாள் ஆசிரியர் அமரர் கனகராஜா அவர்களின் மைந்தனும் இன்றைய இங்கிலாந்து லெஸ்டர் பல்கலைக்கழக துணைவேந்தர் நிஷான் கனகராஜா.

    எத்தனையோ தசாப்தங்களுக்கு பின்பு இங்கிலாந்து அரசின் கெளரவமான “சார்” பட்டம் பெற்ற இலங்கைத் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது இவருக்கு இங்கிலாந்து அரசர் “சார்ள்ஸ்” அவர்களால் 2025 ம் ஆண்டு வழங்கப்பட்டது.

    இவர் இலண்டன் கம்பன் விழாவினரால் “ஞானசாகரர்” பட்டம் வழங்கி கெரவிக்கப்பட்டார்.

    தொடர்ந்து ஈழத்திலே பிறந்து  தந்தை மூலம் இசை பயின்று இந்தியாவில் இசை வித்துவான் அமரர் கல்யாணராமன் அவர்களின் மாணவியும் துணைவியுமாகிய திருமதி பூஷணி கல்யாணராமன் அம்மா அவர்கள் “இசைப்பேரரசி” பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

    நான்காவதாக இலக்கிய ஆர்வலர், சமூக சேவையாளர், இலண்டன் ஐயப்பன் கோயில் அறங்காவலர் திரு. மீ. இராஜகோபாலன் அவர்களின் சமூகசேவை அர்ப்பணிப்புக்காக “சமூகசிரோன்மணி” பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

    பல அருமையான நிகழ்ச்சிகள் இரண்டு தினங்களும் அமைப்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு விமரிசையாக நிகழ்ந்தது.

    முதலாம் நாளான 27ம் தேதி, முதல் அமர்வில் அரங்கில் நாளைய தலைமுறை தமிழ் பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்ள உதவும் முகமாக “இளையோர் அரங்கம்” நிகழ்ந்தது.

    இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கியவிடயம் இந்நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தேன் தமிழை நாவில் கொண்டு சுவைபட பேசும் தம்பி சிவராஜா விசாகன் பணியாற்றியதே!

    இது இனிவரும் எம் இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத செயலாகக் காண்கிறேன்.

    இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் கடல்கடந்து வந்திருந்தார்கள்.

    தமிழகத்திலிருந்து இலக்கியச்சுடர் இராமலிங்கம், தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணன் மற்றும் ஈழத்திலிருந்து செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஐயா, பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் இவர்களோடு இவர்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து பேசும் வல்லவரான நன் லண்டன் கோமதி சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    27ம்தேதி முதல் அமர்வில், இளையோர் அரங்கம், தாமல் கோ. சரவணன் தலைமையிலும் பட்டிமன்றம் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையிலும் நடைபெற்றது.

    இரண்டாம் அமர்வில் வழக்காடு மன்றம் இலக்கியச்சுடர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    இரண்டாம் நாள் 28.06.2026 முதல் அமர்வில் சிந்தனை அரங்கம் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் தலைமையிலும், இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களின் தனியுரையும் நிகழ்ந்தது.

    இரண்டாம் அமர்வில் சைவப்புலவர் சிவானந்தன் அவர்களின் தனியுரையும், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஐயா அவர்களின் தனியுரையும் இடம்பெற்றது.

    அத்தோடு இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களின் தலைமையில் வழக்காடு மன்றம் நிகழ்ந்தது.

    மிகவும் இனிமையாக நிகழ்ந்த இம்மனநிறைவான நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத காரணத்தினால் இரண்டாம் நாளே என்னால் கலந்து கொள்ள முடிந்தது.

    பலகாலமாக சந்திக்காத பல பழைய இலக்கிய ஆர்வல உறவுகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

    இரண்டு நாட்களும் சிற்றுண்டியோடு பானங்களும் இரவு போசனமும் வழங்கப்பட்டது.

    இந்நேரத்தில் இவ்விழா சிறப்புற நிகழ பொருளுதவி, சரீர உதவி வழங்கியவர்களை நன்றியோடு நினைவுகூர்வது எமது கடமை.

    இது போன்ற நிகழ்வுகள் புலம்பெயர் நிலங்களில் அந்நாட்டவரின் வசதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வது தமிழின் பெருமைக்கு மேலுமவிழா  பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

    இந்த நிகழ்வினைக் குறித்து என்பாடல் வரிகளில் செயற்கை நுண்ணறிவின் உதவியோடு உருவாக்கப்பட்ட பாடலை என் காணிக்கையாகவும் நன்றிகளுடனும் சமர்பித்திருக்கிறேன்.

    கம்பனைப் போற்றும் தமிழன்பன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே!

    இங்கிலாந்திலே இன்று அரசியல் நிலைமைகள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

    பிரதமர் கியர் ஸ்டாமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த முடிவு ஒரு தனிப்பட்ட தீர்மானமாக மட்டும் அல்லாமல், கடந்த சில வாரங்களாக உருவாகிக் கொண்டிருந்த அரசியல் அழுத்தங்களின் கூட்டுத் தாக்கமாகப் பார்க்கப்படுகிறது.

    இந்தச் சூழலைப் புரிந்துகொள்ள, மூன்று முக்கிய காரணிகளை நாம் ஆராய வேண்டியுள்ளது.

    அண்டி பேர்ன்காம் ( Andy Burnham ) பெற்ற அண்மைய வெற்றி, ரீபோர்ம் கட்சியின் எதிர்பாராத எழுச்சி, மற்றும் லேபர் கட்சியின் உள்ளக அழுத்தங்கள்.

    முதலில், அண்டி பேர்ன்காம்.

    சில காலங்களுக்கு.முன்னால் இரண்டுமுறை லேபர் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றதால் பாரளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார்.

    பாராளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கினாலும் அரசியலை விட்டு ஒதுங்கவில்லை.

    லேபத் கட்சியின் சார்பாக தான் வாழும் மான்செஷ்டர் பகுதி மேயர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டுமுறையும் வெற்றி பெற்றார்.

    வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் அப்பகுதியின் பிரச்சனைகளை எதிர்கொண்டு பல தீர்வுகளை பெற்றுகொடுத்து அப்பகுதியில் மிகவும் பிரபல்யமடைந்திருந்தார்.

    இராண்டாவது தடவையாக கடந்த மேமாதம் தான் மீண்டும் மேயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பராளுமன்ற உறுப்பினராகும் முடிவெடுத்தார்.

    அவரது மான்செஷ்டர் பகுதி செயற்பாடுகளின் அடிப்படையில் செல்வாக்கு குன்றிய நிலையில் இருந்த கியர் ஸ்டாமருக்கு ஒரு மாற்று தலைவராக இவரால் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று பாராளுமன்ற லேபர் கட்சி உறுப்பினர்கள் எண்ணினார்கள்.

    அதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத அண்டி பேர்ன்காம் எவ்வாறு பிரதமராகலாம் ?

    இங்கேதான் மான்செஷ்டர் பகுதியில் அண்டி பேர்ன்காம் பிறந்து வளர்ந்த மக்கெல்ஸ்வீல்ட் எனும் பகுதி பாரளுமன்ற உறுப்பினர் அண்டி பேர்ன்காம் அவர்களை பாரளுமன்றம் அனுப்புவதற்கு ஏதுவாக தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்தார்.

    விளைவு அதற்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.

    அண்டி பேர்ன்காம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் கியர் ஸ்டாமர் அவர்களின் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் எனும் எதிர்பார்ப்பில் போட்டியிட்டார்.

    கடந்த வாரம் அவர் பெற்ற அரசியல் வெற்றி சாதாரண தேர்தல் வெற்றியாக மட்டும் பார்க்க முடியாது.

    அது லேபர் கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாக மாறியுள்ளது.

    பாரம்பரிய தொழிலாளர் வாக்காளர்கள், நகர்ப்புற நடுத்தர வர்க்கம், மற்றும் இளைஞர் வாக்காளர்கள் இவர்கள் பலரும் ஸ்டாமரின் மிதமான, சில நேரங்களில் தயக்கமான அரசியல் அணுகுமுறைக்கு மாற்றாக, தெளிவான மற்றும் நேரடியான குரலை நாடி வருகிறார்கள்.

    பேர்ன்காம் இந்த இடைவெளியை நிரப்பியுள்ளார்.

    அவரது அரசியல் மொழி நேரடி, அவரது கொள்கைகள் மக்களோடு இணையும் வகையில் அமைந்துள்ளன.

    இதனால், லேபர் கட்சிக்குள் மறைமுகமான தலைமைப் போட்டி உருவாகி, ஸ்டாமரின் நிலையை பலவீனப்படுத்தியுள்ளது.

    இரண்டாவது, ரீபோர்ம் கட்சியின் எழுச்சி.

    இது இங்கிலாந்தின் அரசியல் அமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.

    பாரம்பரிய கன்சர்வேட்டிவ் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், அரசியல் அமைப்பில் விரக்தி அடைந்த பலர் ரீபோர்ம் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

    குடியேற்றம், பொருளாதாரம், மற்றும் தேசிய அடையாளம் போன்ற கேள்விகளில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் கடுமையான நிலைப்பாடுகள், பொதுமக்களிடையே எதிரொலி பெற்றுள்ளன.

    இந்த எழுச்சி, லேபர் கட்சிக்கு இரு முனைகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு பக்கம் கன்சர்வேட்டிவ் வாக்காளர்கள் ரீபோர்முக்கு நகர, மற்றொரு பக்கம் லேபர் ஆதரவாளர்கள் மாற்று தலைமை தேடுகின்றனர்.

    இதன் விளைவாக, ஸ்டாமர் அரசியல் மையத்தில் நிலைத்து நிற்க முயன்ற போதும், அவரின் ஆதரவு தளரத் தொடங்கியது.

    மூன்றாவது மற்றும் மிக முக்கியமானது, லேபர் கட்சியின் உள்ளக நிலைமை.

    ஸ்டாமர் தலைமையில் கட்சி ஒரு நிலைத்தன்மையை அடைந்தது என்பது உண்மை.

    ஆனால், அந்த நிலைத்தன்மை உற்சாகத்தை உருவாக்கவில்லை.

    கட்சியின் பல உறுப்பினர்கள், குறிப்பாக இளம் தலைமுறை, திடமான மாற்றங்களை எதிர்பார்த்தனர்.

    அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, அதிருப்தி மெதுவாக வெளிப்படத் தொடங்கியது.

    இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கின.

    அந்த சூழலில், ஸ்டாமர் தனது பதவியைத் தொடர்வது கட்சிக்கே பாதகமாக இருக்கலாம் என்ற உணர்வு உருவாகியுள்ளது.

    அரசியலில், சில நேரங்களில் விலகுவது தோல்வி அல்ல.

    அது ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்கும் தீர்மானமாகும்.

    இன்றைய இங்கிலாந்து அரசியல், புதிய சமநிலையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

    பழைய அரசியல் வரையறைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

    தலைமை, கொள்கை, மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகள் இவை அனைத்தும் புதிய வடிவம் எடுக்கின்றன.

    இந்த மாற்றத்தின் மையத்தில் நின்று, கியர் ஸ்டாமரின் விலகல் ஒரு முடிவாக அல்ல, ஒரு புதிய அரசியல் கட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்பட வேண்டும்.

    கன்சர்வேடிவ் கட்சிக்கு இது தற்காலிகமாக அனுகூலம், ஆனால் நீண்டகாலத்தில் சிக்கலும் உள்ளது.

    கியர் ஸ்டாமரின் ராஜினாமா லேபர் அரசின் மீதான சோர்வை அதிகரித்து, ஆளும் தரப்பில் குழப்பத்தை உருவாக்குவதால் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களுக்கு தாக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

    குறிப்பாக “நிலைத்தன்மை” மற்றும் “ஆட்சி மாற்றம்” என்ற கதையை அவர்கள் முன்வைக்க முடியும் .

    ஆனால் 2024 பொதுத்தேர்தல் படுதோல்விக்குப் பிந்தைய பலவீன நிலை, கட்சிக்குள் தலைமைத் தெளிவின்மை, மற்றும் Reform UK-க்கு வாக்குகள் சிதறிச் செல்லும் அபாயம் காரணமாக, இந்த நெருக்கடி அவர்களுக்கு தானாகவே மீட்சியை தராது.

    மொத்தத்தில், இது கன்சர்வேடிவ்களுக்கு ஒரு வாய்ப்பும் ஒரு எச்சரிக்கையும் சேர்ந்த நிலை.

    ஸ்டாமர் விலகலால் அரசியல் விவாதத்தின் மையம் மீண்டும் ஆட்சியின் செயல்திறன், பொருளாதாரம், மற்றும் தலைமை நம்பகத்தன்மை என்பவற்றுக்கு திரும்புகிறது.

    இது கன்சர்வேடிவ்களுக்கு தாக்குப்பிடிக்க உதவும்.

    ஆனால் அவர்கள் தங்களை நம்பத்தகுந்த மாற்றாக காட்ட முடியாவிட்டால், அந்த அதிருப்தியின் பலனை Reform UK அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

    எனவே இந்த சூழல் கன்சர்வேடிவ்களுக்கு உடனடி அனுகூலம், ஆனால் அடிப்படை ரீதியில் இன்னும் பெரும் சிக்கலே .

    லிபரல் டெமகிரட்ஸ் க்கு இது பொதுவாக அனுகூலமான சூழல்.

    பெரிய இரண்டு கட்சிகளின் மீதான அதிருப்தி அதிகரிக்கும் போது, லிபரல் டெமகிரட்ஸ் பல இடங்களில் “நேர்மையான, மிதமான, உள்ளூர் பிரச்சினைகளை கவனிக்கும்” மாற்று சக்தியாக தங்களை முன்வைக்க முடியும்.

    குறிப்பாக நடுத்தர வர்க்கம், கல்வி பெற்ற வாக்காளர்கள், மற்றும் லேபர்-கன்சர்வேடிவ் இரண்டிலும் ஏமாற்றமடைந்தோர் இவர்களை நோக்கி நகர வாய்ப்பு உண்டு .

    தலைமை மாற்றமும், ஆட்சிக் குழப்பமும் அதிகமாகும் காலங்களில், அவர்கள் நிலைத்தன்மை மற்றும் சமநிலை எனும் அரசியல் மொழியை வலுப்படுத்தி, உள்ளூர் தேர்தல்களிலும் இடைத்தேர்தல்களிலும் முன்னேற முடியும் .

    ஆனால் அவர்களுக்கு சிக்கலும் இல்லாமல் இல்லை.

    நாட்டளவில் ஆட்சி மாற்றத்தின் வெற்றிடம் உருவானாலும், லிபரல் டெமகிரட்ஸின் ஆதரவு பெரும்பாலும் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே வலிமை பெறும்.

    அதை தேசிய அரசியல் அலைக்காற்றாக மாற்றுவது கடினம்.

    மேலும், அதிருப்தி வாக்குகள் எல்லாம் ஒரே நேரத்தில் அவர்களிடம் வருவதில்லை.

    அவை சில நேரங்களில் Reform UK-க்கும், சில நேரங்களில் கன்சர்வேடிவ் மீள்சீரமைப்புக்கும் சிதறிவிடும் .

    எனவே இவர்களுக்கு இது “வாய்ப்புள்ள காலம்” என்றாலும், அதை பெரும் இடைநிலை வெற்றியாக மாற்றத் தெளிவான பிரச்சாரமும் உள்ளூர் அமைப்பும் அவசியம்.

    இது ஒரு தனிப்பட்ட அரசியல் கதையாக மட்டும் அல்ல.

    இது இங்கிலாந்து ஜனநாயகத்தின் இயக்கத்தின் ஒரு பிரதிபலிப்பு.

    Share
  • கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – (18)

    கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – (18)

    சக்தி சக்திதாசன்

    பாத்தா பசுமரம்
    படுத்து விட்டா
    நெடுமரம்

    சேத்தா விறகுக்காகுமா
    ஞானத்தங்கமே
    தீயிலிட்டா
    கரியும் மிஞ்சுமா

    கட்டழுகு
    மேனியை பார்
    பொட்டும் பூவுமா
    நீட்டி கட்டையில
    படுத்துவிட்டா
    காசுக்காகுமா

    வட்டமிடும்
    காளையை பார்
    வாட்ட சாட்டமா

    கூனி
    வளைஞ்சு விட்டா
    உடம்பு இந்த
    ஆட்டம் போடுமா

    பொன்னும் பொருளும்
    மூட்டகட்டி
    போட்டு வச்சாரு

    இவரு
    போன வருஷம்
    மழைய நம்பி
    வெதவெதச்சாரு

    ஏட்டு கணக்க
    மாத்தி மாத்தி
    எழுதி வச்சாரு

    ஈசன்
    போட்ட கணக்கு
    மாறவில்லே
    போய் விழுந்தாரு

    அறுவடையே
    முடிக்கும் முன்னே
    விதைக்கலாகுமா

    அட ஆண்டவனே
    உன் படைப்பில்
    இத்தனை வேகமா

    பத்து புள்ள
    பெத்த பின்னும்
    எட்டு மாசமா
    இந்தப்பாவி மகளுக்கெந்த நாளும்
    கர்ப்பவேஷமா ?

    திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், வெளிப்படையாகப் பார்க்கையில் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைச் சுட்டிக்காட்டும் ஒரு புலம்பல் போலத் தோன்றினாலும், அதன் உள்ளார்ந்த தளத்தில் அது ஆழ்ந்த ஆன்மீகப் பார்வையைக் கொண்ட ஒரு தத்துவச் சித்திரமாக விளங்குகிறது.

    கவியரசர் கண்ணதாசன், மிக எளிய கிராமிய உருவகங்களைக் கொண்டு, ஆத்மா–உடல், மாயை–உண்மை, கர்மம்–இறைச்செயல் ஆகிய பரந்த ஆன்மீக கருத்துகளை மக்கள் வாழ்வோடு இணைத்து சொல்லும் திறமை பெற்றவர்.

    அந்த அடையாளங்கள் இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணத்திலும் தெளிவாக வெளிப்படுகின்றன.

    “பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா” என்ற தொடக்கம், உயிருடன் இருக்கும் மனிதனும் உயிர் நீங்கிய உடலும் என்ன வித்தியாசம் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.

    பசுமரமாக இருந்தது நெடுமரமாக மாறுவது என்பது, உயிருள்ள உடல் சடலமாக மாறுவதைக் குறிக்கிறது.

    இங்கு கண்ணதாசன் உடலின் நிலையற்ற தன்மையையும், உயிரின் மதிப்பையும் ஒரே வரியில் சொல்கிறார்.

    “தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா” என்பது, உடலின் இறுதி நிலையை நினைவூட்டும் ஒரு உவமை.

    இந்த உடல் எவ்வளவு அழகாக இருந்தாலும், இறுதியில் அது சாம்பலாகி விடும் என்பதை அவர் நினைவூட்டுகிறார்.

    இது பகவத் கீதையின் “அநித்யம் அசுகம் உலகம்” என்ற கருத்தோடு ஒத்துப்போகிறது.

    “கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா” என்ற வரிகளில், மனிதன் தனது உடலை அலங்கரிக்கும் பற்று வெளிப்படுகிறது.

    ஆனால் “நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா” எனும் கேள்வி, அந்த அழகின் பயனற்ற தன்மையைச் சுட்டுகிறது.

    இறந்த உடலை வைத்துப் பணம் சம்பாதிக்க முடியாது.

    அதுபோல, வாழ்நாளில் நாம் சேகரிக்கும் வெளிப்புற அலங்காரங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவாது என்பதே கருத்து.

    இது சைவ சித்தாந்தத்தின் “உடம்பு ஒரு கூடு” என்ற பார்வையோடு இணைகிறது.

    “வட்டமிடும் காளையை பார் வாட்ட சாட்டமா” என்ற வரிகள், உலக வாழ்க்கையின் சுழற்சியைப் பிரதிபலிக்கின்றன.

    காளை ஒரு வட்டத்தில் சுற்றிக் கொண்டே இருப்பது போல, மனிதனும் ஆசை, பேராசை, துன்பம், இன்பம் ஆகியவற்றின் சுழற்சியில் சிக்கிக் கிடக்கிறான்.

    “கூனி வளைஞ்சு விட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா” என்பது, வயதான உடல் இந்த உலக ஆட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதை நினைவூட்டுகிறது.

    இங்கு கண்ணதாசன், காலத்தின் தாக்கத்தையும், உடலின் சிதைவையும், அதனுடன் வரும் விழிப்புணர்வையும் எடுத்துரைக்கிறார்.

    “பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு” என்ற வரி, மனிதன் சேமிக்கும் செல்வங்களின் மீது வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்துகிறது.

    ஆனால் “இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு” என்பது, மனிதன் தனது திட்டங்களைக் கொண்டு வாழ்ந்தாலும், இயற்கையும் இறையும் தான் இறுதி முடிவை நிர்ணயிக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

    இங்கு “ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாரு” என்பது மனிதன் தனது கணக்குகளை மாற்றிக் கொண்டே இருப்பதை குறிக்க, “ஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாரு” என்பது இறைவனின் திட்டம் மாற்றமில்லாதது என்பதை வலியுறுத்துகிறது.

    இது கர்ம சித்தாந்தத்தின் மையக் கருத்து.

    “அறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா” என்ற வரி, வாழ்க்கையின் இயற்கை ஒழுங்கை எடுத்துரைக்கிறது.

    விதைப்பு–வளர்ச்சி–அறுவடை என்ற சுழற்சி, மனித வாழ்க்கையிலும் பொருந்தும்.

    ஆனால் “அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா” என்ற வரி, அந்த இயற்கை ஒழுங்கு சில நேரங்களில் உடைந்து போகும் போது மனிதனின் குழப்பத்தையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.

    இது மனிதன் எதிர்பாராத இழப்புகளை சந்திக்கும் போது எழும் ஆன்மீகக் கேள்வி.

    “பத்து புள்ள பெத்த பின்னும் எட்டு மாசமா இந்தப்பாவி மகளுக்கெந்த நாளும் கர்ப்பவேஷமா” என்ற இறுதி வரிகள், மிகவும் ஆழ்ந்த துயரத்தையும் அதே சமயம் வாழ்க்கையின் அநியாய உணர்வையும் வெளிப்படுத்துகின்றன.

    ஆனால் இந்த துயரத்தின் உள்ளே கூட, இறைவனின் லீலைக்கான ஒரு ஒப்புதல் இருக்கிறது.

    இது திருவிளையாடல் என்ற கருத்தோடு நேரடியாக இணைகிறது .

    இறைவன் செய்கின்ற எல்லாமும் ஒரு விளையாட்டு.

    மனிதன் அதை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான்.

    இந்தப் பாடல் முழுவதும், கண்ணதாசன் மிக எளிய மொழியில், கிராமிய உருவகங்களைக் கொண்டு, அத்வைதம், கர்மம், மாயை போன்ற சிக்கலான ஆன்மீகக் கருத்துகளை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைக்கிறார்.

    இதுவே அவரது கவிதைத் திறமையின் உச்சம்.

    அவர் தத்துவத்தை பாடலாக்குகிறார்.

    பாடலை வாழ்க்கையாக மாற்றுகிறார்.

    சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இந்தப் பாடல் ஒரு கண்ணாடியாக நிற்கிறது.

    நாம் சேகரிக்கும் செல்வம், நாம் பெருமைபடும் அழகு, நாம் திட்டமிடும் எதிர்காலம் இவை அனைத்தும் ஒரு கணத்தில் மாறக்கூடியவை.

    ஆனால் அந்த மாற்றங்களின் பின்னால் ஒரு பெரிய சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தால், வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வை மாறும்.

    அதுவே ஆன்மீகத்தின் தொடக்கம்.

    கவியரசர் கண்ணதாசன், இந்தப் பாடலின் மூலம், “வாழ்க்கை நிலையற்றது” என்ற ஒரு சாதாரண உண்மையை மட்டும் சொல்லவில்லை.

    “நிலையற்றதின் பின்னால் இருக்கும் நிலையானதைத் தேடு” என்ற ஆழ்ந்த ஆன்மீக அழைப்பை வழங்குகிறார்.

    அதனால் தான் அவரது பாடல்கள் காலத்தைக் கடந்தும் வாழ்கின்றன.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 314

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 314

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே !

    மீண்டும் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் மூலம் உங்களிடையே வருவது மகிழ்ச்சில் ஆழ்த்துகிறது.

    இங்கிலாந்தின் அரசியல் களத்தில் பற்பல காட்சிகள் அங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    வெளிப்படையாக அமைதியான ஜனநாயக அமைப்பாகத் தோன்றினாலும், அதன் அடித்தளங்களில் மெல்ல மெல்ல அதிர்வுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

    அரசியல் போட்டிகள், சமூக மனநிலைகள், மற்றும் பொருளாதார அழுத்தங்கள்  இவை அனைத்தும் ஒன்றோடொன்று கலந்த ஒரு சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளன.

    தற்போதைய பிரதமரின் நிலைமை, இந்தப் பரபரப்பின் மையத்தில் நிற்கிறது.

    அதிகாரத்தில் இருப்பது மட்டுமே ஆட்சியை உறுதிப்படுத்துவதில்லை என்பதைக் காட்டும் வகையில், அவரின் அரசியல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது.

    வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு, தேசிய சுகாதார சேவையின் அழுத்தம், மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் ஏற்பட்ட குழப்பம் ஆகியவை பொதுமக்கள் மனதில் நம்பிக்கையின்மையை விதைத்துள்ளன.

    இதனால் இடைத்தேர்தல்கள் வெறும் தொகுதி முடிவுகளாக இல்லாமல், ஆட்சியின் மீதான மக்களின் தீர்ப்பாக மாறுகின்றன.

    இந்த சூழலில் தொழிற்கட்சி தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் வடிவமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    அண்டி பேர்ன்காம் முன்னாள் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்.

    சில வருடங்களுக்கு முன்னால் தொழிற்கட்சியின் தலைமைத்துவ போட்டியில் வெற்றியடையாததினால் பாரளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கியவர், பின்னர் தனது வாழ்விடமான மான்செஸ்டர் பகுதி உள்ளாட்சி தேர்த்லில் மேயராக தெரிவு செய்யபட்டு இன்றுவரை மான்செஸ்டர் மேயராக பணியாற்றுகிறார்.

    அங்கு பல மக்கள் ஆதரவு பெற்ற மாற்றங்களை உள்ளாட்சி மூலம் நிறைவேற்றியுள்ளார்.

    அவர் இங்கே முக்கியமான பாத்திரமாக உருவெடுக்கின்றார்.

    மான்செஸ்டர் நகரில் அவர் உருவாக்கிய நிர்வாக முறை  மக்களுடன் நேரடி தொடர்பு, சமூகநல முன்னுரிமைகள், மற்றும் மத்திய அரசுக்கு எதிரான தன்னம்பிக்கை இவை அவரை ஒரு மாற்று தேசியத் தலைவராக முன்னிறுத்துகின்றன.

    அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைய முயல்வது, தனிப்பட்ட அரசியல் முன்னேற்றம் மட்டுமல்ல.

    தொழிற்கட்சியின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியக் கட்டமாகும்.

    இந்தப் பின்னணியில் ஸவுதாம்டன் நகரில் நிகழ்ந்த சம்பவம், ஒரு தனிப்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது.

    அது ஒரு சமூக உளவியல் வெடிப்பாகக் கருதப்பட வேண்டும்.

    இந்த நகரம் வரலாற்று ரீதியாக ஒரு துறைமுக நகரமாக இருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மக்களின் குடியேற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார சுருக்கம், வேலை வாய்ப்பின் குறைவு, மற்றும் சமூக சேவைகளின் மீது ஏற்பட்ட அழுத்தம் ஆகியவை உள்ளூர் மக்களிடையே மறைமுக அதிருப்தியை உருவாக்கின.

    இந்த அதிருப்தி நேரடியாக வெளிப்படாமல், மெதுவாக “மற்றவர்களை” குறிவைக்கும் மனநிலையாக மாறியது.

    குறிப்பாக வெளிநாட்டவர்களை குற்றம்சாட்டும் உரைகள், சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்கள், மற்றும் அரசியல் மேடைகளில் ஒலித்த குடியேற்ற எதிர்ப்பு குரல்கள் இவை அனைத்தும் இந்த மனநிலையை ஊட்டி வளர்த்தன.

    இந்நிலையில், சமீபத்தில் ஸவுதாம்டன் நகரில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு துயரச் சம்பவம், இந்த பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞர் மாணவன், சீக்கிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்காகி பின்னர் உயிரிழந்ததாக செய்திகள் பரவின.

    மேலும், சம்பவத்திற்கு முன்பே ஏற்பட்டிருந்த பதட்ட அறிகுறிகளைப் பொலிசார் போதிய கவனத்துடன் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    இந்தச் சம்பவம் தனிப்பட்ட குற்றச் செயலா, அல்லது விரிவான சமூகத் தோல்வியின் அறிகுறியா என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

    இந்தச் சம்பவம் ஒரு குற்றவியல் விசாரணைக்குரிய விஷயம் மட்டுமல்ல.

    அது சமூக நம்பிக்கையின் முறிவை வெளிப்படுத்துகிறது.

    “பாதுகாப்பு” என்ற அடிப்படை உணர்வு சிதைந்துவிட்டால், மக்கள் தங்கள் அச்சத்தை அரசியல் கோஷங்களாக மாற்றத் தொடங்குகிறார்கள்.

    இதுவே இன அடையாள அரசியலுக்கு ஊக்கமாகிறது.

    இங்கே நைஜல் வெராஜ் அவர்களின் அரசியல் பேச்சு முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.

    அவர் பயன்படுத்தும் மொழி நேரடியாக வன்முறையை அழைப்பதில்லை என்றாலும், அது ஒரு “அச்ச மனநிலையை” உருவாக்குகிறது.

    “நாடு இழக்கப்படுகிறது”, “எல்லைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்”, “உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” போன்ற கருத்துக்கள், அரசியல் வாதங்களாகத் தோன்றினாலும், சமூகத்தில் ஒரு மறைமுகப் பிரிவினையை உருவாக்குகின்றன.

    அரசியல் மொழியின் தாக்கம் உடனடியாக கணக்கிடப்பட முடியாது.

    ஆனால் அது மனிதர்களின் சிந்தனையை வடிவமைக்கிறது.

    அந்த சிந்தனை ஒரு கட்டத்தில் செயலாக மாறும் போது, ஸவுதாம்டன் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

    எனவே, இந்தச் சம்பவம் ஒரு நகரத்தின் பிரச்சனை அல்ல.

    அது ஒரு நாட்டின் சமூக ஆரோக்கியத்தைக் காட்டும் எச்சரிக்கை.

    மேலும் கவனிக்க வேண்டியது, இங்கிலாந்தின் அரசியல் உரையாடல் மெதுவாக மையத்திலிருந்து விலகி இரு முனைகளாகப் பிரிகிறது என்பதே.

    ஒரு பக்கம் சமத்துவம், உடன்பிறப்பு, மற்றும் பல்வகைமையை வலியுறுத்தும் குரல்கள்.

    மறுபக்கம் பாதுகாப்பு, அடையாளம், மற்றும் எல்லை கட்டுப்பாட்டை முன்னிறுத்தும் குரல்கள்.

    இந்த இரு திசைகளின் மோதல் தான் இன்றைய அரசியல் களத்தின் உண்மையான வடிவம்.

    இந்தச் சூழலில் அண்டி பேர்ன்காம் போன்றவர்கள் ஒரு “இணைப்புக் குரல்” ஆக மாற முடியுமா என்பது எதிர்கால அரசியலின் முக்கியக் கேள்வியாகும்.

    அதே சமயம், நைஜல் வெராஜ் போன்றவர்கள் உருவாக்கும் அரசியல் அலை, எவ்வளவு தூரம் சமூக அமைப்பை பாதிக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    மொத்தத்தில், இங்கிலாந்து இன்று ஒரு அரசியல் மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது.

    அது வெறும் ஆட்சிமாற்றம் அல்ல.

    அரசியல் மொழியின் மாற்றம், சமூக உறவுகளின் மாற்றம், மற்றும் தேசிய அடையாளத்தின் மறுபரிசீலனை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த மாற்றமாகும்.

    பொறுத்திருந்து பார்ப்போம்

    (மீண்டும் அடுத்த மடலில்)

    Share
  • கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – 17

    கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – 17

    சக்தி சக்திதாசன்

    அன்பினுமினிய வல்லமை வாசகர்களே !

    மீண்டும் உங்கள் முன்னே கவியரசரின் பாடல் வரிகளுக்குள் புதைத்திருக்கும் வரிகளின் ஆன்மீகத்தை எனது கோணத்தில் பார்த்ததை பகிர்கிறேன்.

    1962ம் ஆண்டு வெளிவந்த ” வளர்பிறை ” எனும் திரைப்படத்தில் வெளிவந்த ” பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் ” எனும் பாடல் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் குரலில் ஒலித்தது.

    கவியரசரின் வரிகளை சரணங்களில் பார்ப்போம்,

    பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
    புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை
    புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

    தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
    தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
    தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் – அவனை
    தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

    முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
    சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
    முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
    சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் – அவனை
    தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்

    கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
    வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
    கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
    வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் – அந்த
    ஏழையின் பேர் உலகில் இறைவன்

    கவியரசர் கண்ணதாசன் தமிழ் திரையிசை உலகில் மட்டுமல்ல, தத்துவ இலக்கிய உலகிலும் தனி இடம் பெற்றவர்.

    அவரது பாடல்கள் வெறும் சொல் அழகுக்காக மட்டும் எழுதப்படவில்லை.

    அவை மனித உள்ளத்தின் ஆழத்தைத் தொட்டு, இறைவனின் இயல்பை எளிய உருவகங்கள் வழி விளக்கும் தத்துவ நூல்கள்.

    “பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம்” என்ற இப்பாடல் அதற்கு சிறந்த சான்று.

    நான்கு சரணங்களில் அவர் இறைவனின் நான்கு வேறுபட்ட தத்துவ இயல்புகளை அகண்ட இயல்பு, மறைந்திருக்கும் தன்மை, அன்பின் வடிவம், படைப்பின் மர்மம்
    நேர்த்தியாக விரிக்கிறார்.

    முதல் சரணம்

    பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம்: அகண்ட தத்துவம்

    “பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்” என்ற வரிகளில் கண்ணதாசன் வேதாந்தத்தின் உயரிய சிந்தனையை ஒரே வரியில் சுருக்கி வைக்கிறார்.

    பூஜ்ஜியம் என்பது வெறுமை அல்ல
    அது எல்லாமற்ற நிலை அல்ல, எல்லாமுடைய நிலை.

    கணித உலகில் பூஜ்ஜியம் இல்லாமல் எந்த எண்ணும் அர்த்தமற்றது.

    அதைப் போலவே இறைவன் இல்லாமல் எந்த படைப்பும் அர்த்தமற்றது என்பதை இந்த உருவகம் ஆழமாகப் பேசுகிறது.

    “ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பான்” என்பது மிக முக்கியமான தத்துவம்.

    இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், ஆட்சி செய்கிறான் என்பது நம் அன்றாட வாழ்வில் நாம் காணவே முடியாத சக்திகளை சுட்டுகிறது.

    காற்று புரியாமலே மூச்சாகிறது.

    இதயம் புரியாமலே துடிக்கிறது.

    பூமி புரியாமலே சுழல்கிறது .

    இவை யாவும் அந்த “புரியாத ராஜ்ஜியத்தின்” வெளிப்பாடுகளே.

    “புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்” என்று கவிஞர் முடிக்கும்போது, இறைவனை அறிவது புத்தகங்களால் அல்ல, உள்ளுணர்வால் மட்டுமே என்ற உபநிஷத சாரத்தை உணர்த்துகிறார்.

    பூஜ்ஜியம் என்ற கணித சொல்லை இறையியல் தத்துவத்தோடு இணைத்தது கண்ணதாசனுக்கே உரிய அறிவுத் திறன்.

    இரண்டாம் சரணம்

    தேங்காய் உருவகம்: மறைவில் வாழும் இறைவன்

    “தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போல் இருப்பான் ஒருவன்” இந்த உருவகம் தமிழ் கவிதை மரபில் அரிதானது.

    ஒரு தென்னை மரத்திலிருந்து இளநீரை எடுத்துக் கொள்கிறோம், குடிக்கிறோம்.

    ஆனால் அந்த இளநீரின் உள்ளே ஒரு மெல்லிய சதை படர்ந்திருக்கிறது.

    அது காலப் போக்கில் தேங்காயாக திடமாகிறது.

    ஆக, ஒரே பொருளுக்குள் மூன்று நிலைகள் இளநீர், ஓடு, தேங்காய்  ஒரே நேரத்தில் இருக்கின்றன.

    இறைவனும் அப்படியே உலகின் மேற்பரப்பில் புரிந்துகொள்ளும்போது வெறும் திரவமாகவே தெரிகிறான்.

    ஆழமாகத் தேடும்போது ஓட்டின் உறுதியாகத் தெரிகிறான்.

    மேலும் ஆழமாக உணரும்போது தேங்காயின் நிறைவாக அனுபவிக்கப்படுகிறான்.

    “தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்” என்ற வரி, இறைவனை அறிவது தேடல் மட்டுமே என்று சொல்கிறது.

    அறிவு சாஸ்திரங்களில் இல்லை, அனுபவத்தில் இருக்கிறது என்ற ஞானமார்க்கத்தை இந்தச் சாதாரண தென்னை மரம் கற்றுத் தருகிறது.

    கண்ணதாசனின் சிறப்பு என்னவென்றால், ஒரு தமிழகத் தோட்டத்தில் கிடைக்கும் பொருளை எடுத்து, அதனுள் பிரபஞ்ச ரகசியத்தை புதைத்து வைத்திருக்கிறார்.

    உயர்ந்த தத்துவம் உயரிய வார்த்தைகளில் மட்டுமல்ல, எளிய வாழ்வின் உருவகங்களிலும் இருக்கிறது என்ற அவரது நம்பிக்கை இங்கே வெளிப்படுகிறது.

    மூன்றாம் சரணம்

    துறவியின் சுற்றம்: அன்பின் இறைவன்

    “முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்” இந்த சரணம் உணர்வு நிலையில் மிகவும் ஆழமானது.

    உலகின் எல்லாப் பற்றுகளையும் விட்டு, சுற்றமும் நண்பரும் சொத்தும் சுகமும் கசந்துபோய், தனிமையாக நிற்கும் ஒருவனுக்கு இறைவன் என்ன செய்கிறான்?

    அவனுக்கு சுற்றமாக, குடும்பமாக நிற்கிறான் என்கிறார் கண்ணதாசன்.

    இது ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் திருவள்ளுவர் வரை பேசிய ஒரு உண்மை இறைவன் தேவையானவர்களுக்கே தன்னை வெளிப்படுத்துகிறான்.

    “பற்றறுத்து வந்தவர்க்கு” என்ற தேர்வு மிக முக்கியமானது.

    அனைவருக்கும் அல்ல பற்றை விட்டவர்களுக்கு மட்டுமே அவன் நெருங்குகிறான்.

    வெற்றிடத்தில் மட்டுமே ஒளி நுழையும்; நிறைந்த கலசத்தில் மழைத் தண்ணீர் சேராது என்ற ஆன்மீக விதியை இங்கே காண்கிறோம்.

    “தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்” என்ற வரி பக்தி மார்க்கத்தின் சாரம்.

    நாம் அவனைத் தேடினால் அவன் ஓடமாட்டான்.

    நாம் விலகினால் அவன் காத்திருப்பான்.

    ஆக, சாதனையும் தொடர்ச்சியும் மட்டுமே இறைவனை அடைவதற்கான வழி என்று கவிஞர் வழிகாட்டுகிறார்.

    நான்காம் சரணம்

    கோழி-முட்டை மர்மம்: படைப்பின் அதிசயம்

    “கோழிக்குள் முட்டை வைத்து, முட்டைக்குள் கோழி வைத்து, வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்” இந்த சரணம் படைப்பின் மர்மத்தை மிக அழகிய தர்க்கத்தில் சொல்கிறது.

    கோழி முதலா, முட்டை முதலா என்ற மனித மனத்தின் நெடுங்காலமான கேள்விக்கு கண்ணதாசன் பதில் சொல்ல மறுக்கிறார் ஏனெனில் அந்தக் கேள்வியே தவறானது.

    அந்த வட்டத்தை உருவாக்கியவன் இறைவன்.

    அதனுள் சிக்கிக் கேள்வி கேட்பவர்கள் மனிதர்கள்.

    “வாழைக்கும் கன்று வைத்தான்” என்பது மிக நுட்பமானது.

    வாழை மரம் விதையால் உருவாவதில்லை அது கன்றால் வளர்கிறது.

    ஆக, இயற்கையின் படைப்பு முறை ஒரே வழியில் இல்லை என்றும், படைப்பாளனின் கைவண்ணம் அளவற்றது என்றும் சொல்கிறார்.

    கோழி-முட்டை வட்டம் சுழல் படைப்பைக் காட்டுகிறது; வாழை கன்று நேர் படைப்பைக் காட்டுகிறது.

    இரண்டும் ஒரே இறைவனின் வெவ்வேறு வடிவங்கள்.

    “அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்” என்ற முடிவு முழு பாடலின் உயிர் நாடி.

    ஏழை என்று இறைவனை அழைப்பது ஆழமான அன்பின் வெளிப்பாடு.

    ஏனென்றால் எல்லா ஆடம்பரங்களையும் விட்டு, படைப்பின் மர்மத்தை தன்னுள் சுமந்து, யாரும் புரிந்துகொள்ளாமல் இருக்கும் அவன் ஒரு “ஏழை”யே.

    இது அன்பின் நகை  கடவுளை ஏழை என்று அழைக்கும் தைரியம் பக்திக்கு மட்டுமே உண்டு.

    இப்பாடலில் கண்ணதாசன் வெளிப்படுத்தும் சிறப்புகள் பன்முகமானவை.

    முதலில், அவர் கணிதம், இயற்கை, சமூகவியல், தர்க்கம் என்ற நான்கு வெவ்வேறு துறைகளிலிருந்து உருவகங்களை எடுத்து ஒரே இறைவனை நான்கு கோணங்களில் விவரிக்கிறார்.

    இது ஒரு கவிஞனுக்கு அரிதான அறிவுத் திறன்.

    இரண்டாவது சிறப்பு அவர் சமஸ்கிருத தத்துவ சொற்களை பயன்படுத்தாமல், தமிழ் மண்ணின் பொருட்களையே தென்னை, வாழை, கோழி, முட்டை  கருவிகளாகக் கொள்கிறார்.

    இது தமிழ் ஆன்மீகத்தின் நேரடி வாரிசு.

    சித்தர்கள் பாடல்களிலும், திருக்குறளிலும் காணும் “அகம் சொல்லி புறம் காட்டும்” மரபை அவர் தொடர்கிறார்.

    மூன்றாவது சிறப்பு ஒவ்வொரு சரணமும் ஒரு வேறுபட்ட மார்க்கத்தை சுட்டுகிறது.

    முதல் சரணம் ஞானமார்க்கம்.

    இரண்டாம் சரணம் தேட முயலும் சாதகனின் பாதை.

    மூன்றாம் சரணம் பக்தி மார்க்கம்.

    நான்காம் சரணம் படைப்பின் மர்மத்தை வியக்கும் சரணாகதி.

    நான்கு வழிகளிலும் ஒரே இறைவனை அடையலாம் என்று கவிஞர் சொல்கிறார்  இது பகவத் கீதையின் எதிரொலி.

    நான்காவது சிறப்பு “அவனை புரிந்தால், தெரிந்தால், தொடர்ந்தால்” என்று ஒவ்வொரு சரணமும் வேறு வேறு வினையால் முடிவடைகிறது.

    புரிதல் — புத்தி நிலை.

    தெரிதல் — அனுபவ நிலை.

    தொடர்தல் — சாதனை நிலை.

    இவை மூன்றும் வேவ்வேறு நிலையில் உள்ள மனிதர்களுக்கான அழைப்புகள்.

    எந்த நிலையில் இருந்தாலும் இறைவனை அடையலாம் என்ற அடக்கமான நம்பிக்கையை கவிஞர் வெளிப்படுத்துகிறார்.

    கண்ணதாசன் வெறும் வரிகள் எழுதவில்லை .

    அவர் ஒரு தத்துவ இலக்கியம் படைத்தார்.

    திரைப் பாடலின் இசை ஒரு நாள் மறைந்தாலும், இந்த வரிகளில் புதைந்திருக்கும் தத்துவம் மறையாது.
    பூஜ்ஜியம் முதல் ஏழை வரை  கணிதம் முதல் கருணை வரை  இறைவனை ஒரு பயணமாக வரையறுக்கும் இப்பாடல், தமிழ் ஆன்மீக கவிதையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக என்றும் நிலைத்திருக்கும்.

    அன்பினியவர்களே !

    கவியரசரின் ஆற்றல் ஒரு ஆழி போல எம்முன்னே விரிந்து கிடக்கிறது.

    இங்கே நான் ஒரு சிறுவன் கடற்கரையில் ஒரு வாளியினுள் அவ்வாழியின் நீரை அள்ளி விளையாடுவது போன்றே எனது முயற்சி.

    மீண்டும் அடுத்தொரு பகுதியில் சந்திக்கிறேன்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 313

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 313

    சக்தி சக்திதாசன்

    அன்பான வல்லமை வாசகர்களே!

    சில மாதங்கள் இடைவேளையின் பின்னால் உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்.

    இந்த சில மாதங்களுக்குள் உலகில் எண்ண முடியாத பல நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

    இங்கிலாந்தில் வாழும் எமக்கு எமது பிரதமர் மீது நடத்தப்படும் விமர்சனங்களும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுமே  இன்று எமது நாட்டின் பேசுபொருளாக இருக்கிறது.

    இந்த மடல் அவர்மீது ஒரு பார்வையை என் கோணத்தில் வீசுகின்றது.

    கியர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் பிரதமர்.

    கியர் ஸ்டார்மர் 1962ஆம் ஆண்டு பிறந்தார்.

    அவர் ஒரு வழக்கறிஞராக (barrister) தொழில் வாழ்க்கையை தொடங்கினார், பின்னர் அரசியலில் நுழைந்தார்.

    அவர் ரீகேட் கிராமர் பள்ளியில் படித்தார், பின்னர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

    தொழிலாளர் வர்க்கப் பின்னணியில் வளர்ந்த ஸ்டார்மர், தனது தந்தை ஒரு கருவி தயாரிக்கும் தொழிலாளியாகவும் தாயார் ஒரு செவிலியராகவும் இருந்ததாகக் கூறி வந்தார்.

    இந்த சாதாரண குடும்பப் பின்னணியை அவர் தனது அரசியல் அடையாளத்தின் மையமாக வைத்து வந்தார்.

    2008ஆம் ஆண்டு ஸ்டார்மர் இங்கிலாந்தின் பொது வழக்காடல் இயக்குனராகவும் (Director of Public Prosecutions) கிரீடன் வழக்காடல் சேவையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

    2013 வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

    இந்தப் பதவியில் அவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை கையாளும் முறையில் முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

    இப்பணி அவருக்கு தேசிய அளவில் பெரும் அங்கீகாரம் தேடித் தந்தது.

    2015ஆம் ஆண்டு லண்டனின் ஹோல்பர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார்.

    2016இல் பிரெக்சிட் நெருக்கடியின்போது அவர் நிழல் பிரெக்சிட் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    2020ஆம் ஆண்டு லேபர் கட்சியின் தலைவரானார்.

    அவர் தலைமையில் லேபர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சியின் நீண்ட கால ஆட்சிக்கு எதிராக கட்சியை கட்டமைத்தது.

    2024ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிரதமரானார்.

    பிரதமராக பொறுப்பேற்றல்

    14 ஆண்டுகள் கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஸ்டார்மர் பதவியில் அமர்ந்தார்.

    பொருளாதாரம், குற்றம், தேசிய சுகாதார சேவை (NHS), கல்வி, காலநிலை நெருக்கடி ஆகியவற்றில் நோக்கங்களை அறிவித்தார்.

    ஒரு நீதித்துறை நிபுணர் தலைமையிலான அரசு, நாட்டை மீண்டும் கால்மேல் நிறுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

    பொருளாதார நெருக்கடி

    ஸ்டார்மர் அரசின் மிகப் பெரிய சவால் பொருளாதாரம்.

    பிரதமர் வாழ்க்கைச் செலவைத் தனது முன்னுரிமையாக குறிப்பிட்டு, மக்களின் பைகளில் அதிக பணம் வர வழி செய்வதாக உறுதியளித்தார்.

    வேலை உரிமைகளில் மாற்றங்கள், மருந்துக் கட்டண உச்சவரம்பு, மூன்று தசாப்தங்களில் முதன்முறையாக ரயில் கட்டண உறைவு ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.

    ஆனால் இந்த வாக்குறுதிகள் வேகமாக நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி மக்களிடம் வளர்ந்தது.

    NHS சுகாதாரத் திட்டங்கள் மற்றும் நலன்புரி சீர்திருத்தம்

    NHS காத்திருப்பு பட்டியல்களை குறைப்பது தேர்தல் நம்பகத்தன்மைக்கான முக்கியமான போர்க்களமாக இருக்கிறது.

    மேலும் நலன்புரி சீர்திருத்த மசோதா மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    யுனிவர்சல் கிரெடிட் மற்றும் பர்சனல் இண்டிபென்டன்ஸ் பேமென்ட் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சித்த மசோதா, குறைபாடுடையோர் மற்றும் மனநல பாதிப்புள்ளவர்களுக்கான நலன்களை மட்டுப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டது.

    கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இதற்கு எதிராக கிளர்ச்சி செய்ததால் அரசு பெரும் திருப்பங்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

    கட்சிக்குள்ளும் அரசியல் நெருக்கடி

    2025 செப்டம்பரில் துணைப் பிரதமர் ஆஞ்சலா ரேனர் வரி சர்ச்சை காரணமாக பதவி விலகினார், இது ஸ்டார்மரின் தலைமைக்கு பெரும் அடியாக விவரிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பீட்டர் மேன்டெல்சன் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டு, அவரது நடத்தை விவகாரங்கள் காரணமாக நீக்கப்பட்டார்.

    இந்த மேன்டெல்சன் சர்ச்சை, தலைமை நிர்வாகி மோர்கன் மெக்ஸ்வீனி மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் டிம் அலன் ஆகியோரின் ராஜினாமாவிற்கு வழிவகுத்தது.

    வீழ்ச்சியடைந்த மக்கள் ஆதரவு

    ஐப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, ஸ்டார்மர் 1977 முதல் இதுவரையிலான பதிவுகளில் மிக மோசமான மக்கள் ஆதரவை கொண்ட பிரதமர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

    13 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி அடைந்தனர், 79 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்தனர்.

    தேர்தலுக்குப் பின் அவரது ஆதரவு +5% இலிருந்து −30% ஆக சரிந்தது; பின்னர் −46% வரை தொடர்ந்து வீழ்ந்தது.

    ரிஃபார்ம் யூகேவின் எழுச்சி

    நைஜல் ஃபாரேஜின் ரிஃபார்ம் யூகே கட்சி ஒரு ஆண்டுக்கும் மேலாக கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தில் நிற்கிறது.

    2026ஆம் ஆண்டின் முதல் பெரிய கணிப்பு, ரிஃபார்ம் யூகே 381 இடங்களுடன் பெரும்பான்மை பெறும் எனவும், லேபர் வெறும் 85 இடங்களுக்கு சரியும் எனவும் கணிக்கிறது.

    இது ஸ்டார்மரின் நிர்வாகத்திற்கு மிகப் பெரிய அரசியல் எச்சரிக்கை மணி.

    ஸ்டார்மர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.

    2018க்குப் பின் சீனாவிற்கு விஜயம் செய்த முதல் பிரிட்டிஷ் பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.

    வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

    பிரெக்சிட் வாக்கெடுப்பின் 10வது ஆண்டு நினைவாண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்குவது என்ற ஸ்டார்மரின் குறிக்கோளை மையமாக வைக்கும்.

    ஒற்றைச் சந்தை அல்லது சுங்கத் தொழில்முறையில் மீண்டும் இணைவதை நிராகரிக்கும் அதே வேளையில், ஈராஸ்மஸ் திட்டத்தில் மீண்டும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

    வரும் தேர்தல்களில் சோதனை

    மே மாத உள்ளூராட்சி தேர்தல்கள் லேபர் கட்சிக்கு கடினமான இரவாக மாறலாம் என அஞ்சப்படுகிறது.

    இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மூன்று இடங்களிலும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

    ஸ்டார்மர் மற்றும் அவரது குழு, சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்கூட பயனுள்ள ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதில் சிரமப்பட்டுள்ளனர்.

    கியர் ஸ்டார்மர் ஒரு சட்டவல்லுனராக, நீதியின் குரலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

    ஆனால் ஆட்சி என்பது சட்டமன்றக் கூடம் அல்ல என்பதை அவரது பிரதமர் பதவி உணர்த்துகிறது.

    இந்த நெருக்கடிகளை வெறுமனே ஸ்டார்மரின் தவறுகளில் மட்டும் திணிக்க முடியாது .

    இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்த பொருளாதார மந்தநிலை மற்றும் முக்கியப் பாரம்பரிய கட்சிகள் மீதான மக்கள் அவநம்பிக்கையின் விளைவும்கூட.

    2026ஆம் ஆண்டில் ஸ்டார்மர் தனது கட்சிக்கும் நாட்டிற்கும் தன்னைப் பின்பற்ற காரணங்களை வழங்க வேண்டியிருக்கிறது.

    அதற்கு வெறும் நேரம் மட்டும் போதாது ஒரு தெளிவான தொலைநோக்கு திட்டம் அவசியம்.

    இன்றைய அவரின் நிலை

    பீட்டர் மேன்டெல்சன் விவகாரம்  ஸ்டார்மரின் பிரதமர் பதவியை உலுக்கும் சர்ச்சை

    பீட்டர் மேன்டெல்சன் யார்?

    பீட்டர் மேன்டெல்சன் பிரிட்டனின் “நியூ லேபர்” இயக்கத்தின் சிற்பியாகக் கருதப்படுகிறார்.

    டோனி பிளேர் மற்றும் கோர்டன் பிரவுன் ஆட்சிகளில் மிக முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்.

    இரண்டு முறை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ததன் பின்னரும், இங்கிலாந்தின் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக விளங்கி வந்தார்.

    ஆனால் 2025-2026 காலகட்டத்தில் அவரது பெயர் ஒரு மாபெரும் ஊழலின் மையத்தில் சிக்கிக்கொண்டது .

    அந்த ஊழல் ஸ்டார்மரின் ஆட்சியையே கேள்விக்குறியாக்கியது.

    இது எப்படி தொடங்கியது?

    தூதர் நியமனம்

    2024 டிசம்பரில் ஸ்டார்மர், மேன்டெல்சனை அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமித்தார்.

    2025 பிப்ரவரியில் மேன்டெல்சன் வாஷிங்டனில் பதவியேற்றார்.

    இந்த நியமனம் தொடக்கத்திலேயே சர்ச்சையை உருவாக்கியது .

    ஏனெனில் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மேன்டெல்சனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது அரசியல் வட்டாரங்களுக்கு முன்பே தெரிந்திருந்தது.

    யார் இந்த எப்ஸ்டீன்?

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு அமெரிக்க பணக்கார நிதியாளர். 2008ஆம் ஆண்டு 18 வயதிற்கு கீழான சிறுமியிடம் பாலியல் வக்கிரத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்டு, 2019ஆம் ஆண்டு சிறார் கடத்தல் குற்றங்களுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது மரணமடைந்தார்.

    அவரது மரணத்திற்குப் பிறகு அமெரிக்கா வெளியிட்ட ஆவணங்கள் உலகெங்கும் பல முக்கியஸ்தர்களின் பெயர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன அவற்றில் மேன்டெல்சனின் பெயரும் முன்னணியில் இருந்தது.

    “மிகவும் நெருங்கிய நண்பர்”  நெடுங்கால உறவு வெளிப்படுகிறது.

    2025 செப்டம்பரில் அமெரிக்க நாடாளுமன்ற கண்காணிப்பு குழு வெளியிட்ட ஆவணங்களில், எப்ஸ்டீனின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அடங்கிய புத்தகத்தில் மேன்டெல்சன் எப்ஸ்டீனை “என் சிறந்த தோழன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இது மேன்டெல்சன் முன்பு கூறிய “அவரை சரிவரத் தெரியாது” என்ற வாதத்தை நொறுக்கியது.

    இதைத் தொடர்ந்து ஸ்டார்மர் மேன்டெல்சனை தூதர் பதவியில் இருந்து நீக்கினார்.

    அரசு ரகசியங்கள் கசிந்ததா?

    மிகப் பெரிய குற்றச்சாட்டு

    2026 பிப்ரவரியில் வெளிவந்த அறிக்கைகள், 2009-2010 காலகட்டத்தில் மேன்டெல்சன் வணிக அமைச்சராக இருந்தபோது எப்ஸ்டீனுக்கு முக்கியமான அரசு தகவல்களை கசிவு செய்தார் என்று சுட்டிக்காட்டின.

    குறிப்பாக, 2010 மே 9ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் யூரோவைக் காப்பாற்றுவதற்காக ₹500 பில்லியன் நிதி உதவி திட்டத்தை அறிவிக்க இருந்தது.

    இந்த சந்தை முக்கியத் தகவலை மேன்டெல்சன் முன்கூட்டியே எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக மின்னஞ்சல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

    மேலும் 10, டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையிலான ரகசிய நிலத்தடி தொடர்பு பாதை பற்றிய தகவலையும் எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக ஒரு மின்னஞ்சல் கூறுகிறது.

    பாதுகாப்பு ஆய்வு நிராகரிக்கப்பட்டதா?

    மிக முக்கியமான வெளிப்பாடு

    ஏப்ரல் 16, 2026ஆம் தேதி வெளியான செய்தி, யுகேஎஸ்வி (UK Security Vetting) என்ற பாதுகாப்பு ஆய்வு அமைப்பு 2025 ஜனவரி 28ஆம் தேதி மேன்டெல்சனுக்கு பாதுகாப்பு அனுமதியை மறுத்தது என வெளிப்படுத்தியது.

    ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகே அவர் தூதராக உறுதி செய்யப்பட்டார்.

    வெளியுறவு அமைச்சகத்தின் (FCDO) அதிகாரிகள் பாதுகாப்பு ஆய்வு அமைப்பின் பரிந்துரையை மீறி, மேன்டெல்சனுக்கு அனுமதி வழங்கியதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டார்.

    இந்த வெளிப்பாடு அரசியல் நெருப்பை மேலும் பரவடித்தது “முறையான நடைமுறை பின்பற்றப்பட்டது” என்று ஸ்டார்மர் பலமுறை கூறியிருந்தனர், அது பொய் என நிரூபணமாயிற்று.

    “எனக்கு சொல்லப்படவில்லை” என்பதே ஸ்டார்மரின் வாதம்.

    ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் மேன்டெல்சன் நியமனம் ஒரு தவறு என்று ஒப்புக்கொண்டார்.

    ஆனால் ராஜினாமா கோரிக்கைகளை நிராகரித்தார்.

    தாம் 2026 ஏப்ரல் 14ஆம் தேதிதான் பாதுகாப்பு அனுமதி மறுப்பு பற்றி அறிந்ததாக பிரதமர் கூறினார்.

    “இது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பது திகைப்பளிக்கிறது” என்று ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

    எதிர்க்கட்சி கன்சர்வேடிவ் தலைவர் கேமி பேடனோக், “அவர் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை; ஏனெனில் தெரிந்துகொள்ள விரும்பவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.

    2025 செப்டம்பரில் மேன்டெல்சன் பதவியில் இருந்திருந்தால் அவரை ஆதரித்து நிற்பதாக ஸ்டார்மரின் தலைமை நிர்வாகி மோர்கன் மெக்ஸ்வீனி தொடர்ந்து வற்புறுத்தினார் .

    இந்த நியமனத்தை முன்னின்று ஆதரித்தவரும் மெக்ஸ்வீனியே.

    2026 பிப்ரவரி 8ஆம் தேதி மெக்ஸ்வீனி ராஜினாமா செய்தார்.

    “பிரதமரை மேன்டெல்சனை நியமிக்கும்படி ஆலோசனை வழங்கியதற்கு முழு பொறுப்பு ஏற்கிறேன்” என்று கூறினார்.

    ஆஞ்சலா ரேனரின் நெருங்கிய ஆதரவாளர்கள், 2024இலேயே அவர் மேன்டெல்சன் நியமனத்திற்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஸ்டார்மரை எச்சரித்திருந்ததாக வெளிப்படுத்தினார்கள்.

    இது மேலும் சேதத்தை அதிகரித்தது.

    2026 பிப்ரவரி 23ஆம் தேதி பொது பதவியில் ஊழல் (Misconduct in Public Office) சந்தேகத்தின் பேரில் மேன்டெல்சன் கைது செய்யப்பட்டார்.

    கைதை தொடர்ந்து, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளுக்கு சென்று நிரந்தரமாக குடியேற திட்டமிட்டதாக நாடாளுமன்றத் தலைவர் சர் லிண்ட்சே ஹோயல் போலீசாரிடம் தகவல் அளித்தார்.

    மேன்டெல்சன் இதை மறுத்தார்.

    மார்ச் 6ஆம் தேதி ஜாமின் நிபந்தனைகள் நீக்கப்பட்டு கடவுச்சீட்டு திரும்ப வழங்கப்பட்டது.

    மார்ச் 10ஆம் தேதி மேன்டெல்சன் புரிவி கவுன்சில் உறுப்பினர் பட்டத்தில் இருந்து இராஜாவின் ஒப்புதலோடு நீக்கப்பட்டார்.

    ஸ்டார்மரின் நிலை இன்று

    இந்த சர்ச்சை, ஸ்டார்மரின் ஆட்சிக்கு மிக பாதகமானதாக விவரிக்கப்படுகிறது.

    பல லேபர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் மோசமான முடிவுகள் வந்தால் தலைமை சவால் எழலாம் என்று கருதுவதாக தெரிகிறது.

    ஸ்டார்மர், மேன்டெல்சன் வேட்டு செய்தல் செயல்முறையில் குறைபாடு இருந்தது என்று ஒப்புக்கொண்டு, துண்டரவு அமைச்சகத்தின் மதிப்பீட்டை மீறும் அதிகாரத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்தார்.

    மேலும் வெளியுறவு செயலாளர் ஈவெட் கூப்பரும் மூத்த அதிகாரி ஆலிவர் ராபின்ஸும் “நம்பிக்கை இழந்தோம்” என கூறப்பட்டு, ராபின்ஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    மேன்டெல்சன் விவகாரம் வெறுமனே ஒரு தனி நபர் சர்ச்சை அல்ல.

    இது ஸ்டார்மரின் தீர்ப்பாண்மை, அரசின் வெளிப்படையான தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

    ஒரு நியமனத்தில் தொடங்கிய இந்த விவகாரம், கைது, ஆவணங்கள் வெளியீடு, கட்சி உள் கலகம் என படிப்படியாக விரிந்து, இன்று பிரதமரின் பதவியையே அசைக்கும் அளவுக்கு பெரிதாகியுள்ளது.

    காத்திருந்துதான் பார்ப்போமே !

    Share
  • கவியரசர்…. சங்க இலக்கியம்….. காதல்…

    கவியரசர்…. சங்க இலக்கியம்….. காதல்…

    சக்தி சக்திதாசன்

    ​கவியரசர் கண்ணதாசன் எனும் இலக்கிய ஊற்று சிறுகூடல் எனும் மலையிலே உருவாகி தமிழர் வாழும் நன்னிலமெங்கும் வற்றாது பாய்ந்து தமிழ் மனங்களெல்லாம் செழிப்புற வைத்திருக்கிறது.

    ​கவியரசர் ஒரு இலக்கியப் பித்தர்.

    சங்க இலக்கியங்களையெல்லாம் ரசித்துப் படித்தார்.

    படித்து தன்னால் புரிந்து கொள்ளப்பட்டவை எல்லாம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என அவாக் கொண்டார்.

    ​வகுப்பறையிலே ஒரு வாத்தியார் எமக்குப் பாடமாகப் புகட்டும் போது கசந்த சங்க இலக்கியங்களைத் தனது எளிமையான தமிழ் எனும் தேன் தடவி திரைப்படப் பாடல்களின் வரிகளாக்கினார்.

    ​சங்க கால இலக்கியங்களில் கூறப்பட்ட விடயங்கள் என்று தெரியாமலே நாங்கள் தான் ஆக்கிய வரிகளை முணுமுணுப்பதைக் கண்டு அளவிலா ஆனந்தம் கொண்டார்.

    சங்ககாலப் புலவர்களுக்கு தான் செய்யும் மிகப் பெரிய தொண்டு, தமிழன்னைக்கு தானாற்றும் சேவை என்றே அவர் இதை எடுத்துக் கொண்டார்.

    ​இப்போது நாம் இதைக் கேட்கும் போது படிக்கும் போது இது ஏதோ இலகுவாகச் செய்து முடிக்கக்கூடிய விடயம் என்று கூட எண்ணுவோம்.

    ஆனால் ஒரு விடயத்தைப் படித்துக் கிரகித்துக் கொள்வது சரி, ஆனால் அதை ஞாபகத்தில் வைத்து தேவையான இடத்தில் தேவையான காட்சிகளுக்கு அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வரிகளை அமைப்பது என்பது கவியரசர் ஒருவராலேயே சாத்தியப்பட்டது.

    ​அவரது இந்த அசாத்திய திறமையைப் படித்து ரசித்த போது அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.

    அதன் விளைவாக,

    காதல் இருக்கிறதே அது ஒரு விசித்திரமான உணர்வு.

    அது யாருக்கு எப்போது எப்படி ஏற்படுகிறது என்பதை வரையறுத்து வைத்தவர் யாருமிலர்.

    ​ஆனால் இவ்வுணர்வு எம் சங்க காலத்திலேயே மிகவும் பறந்து பட்ட உணர்வாக இருந்ததால் தான் இவ்வுணர்வுக்கு முதன்மை கொடுத்து பல சங்ககால இலக்கியங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன.

    இவ்வுணர்வுகளிலே காதலி காதலை நினைந்து அன்றி அதைப் பிரியும் போது ஏற்படும் சோகக்கணங்களை விவரிக்கும் வகையே தனிதான்.

    ​சில உவமைகள், சில உதாரணங்கள் நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவைகளாக இருக்காது.

    இருப்பினும் காதலை விவரிக்கும் புலவர்கள் இதனை கையாளும் போது அது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவைகளே என்று பழமையான தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    ​”உண்டா குரிய வல்லாப் பொருளை
    உண்டன போலக் கூறலும் மரபே”

    (தொல்: 1156)

    ​கனியை உண்கிறோம் ஆனால் கல்லை உண்ண முடியுமா?

    ஆனால் காதல் உணர்வை விளக்கும் புலவர்கள் கல்லை உண்ணலாம் எனும் வகையில் அவ்வுணர்வை விளக்க எழுதும் கவிதைகளைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் என்கிறது தொல்காப்பியம்.

    இதன் அடிப்படையிலே தான் கவியரசர் இவ்வரிகளை எழுதினாரோ?

    ​”தென்றலிலே எனதுடல் தேய்ந்தது பாதி – அது
    தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி”

    தென்றலின் தன்மையே என்ன இனிமையாக உடலைப் ஸ்பரிப்பது தானே !

    ​அப்படி அத்தென்றல் ஸ்பரிக்கும் உணர்வு அவளுக்கு அவள் காதலன் தனைப் ஸ்பரிசிக்கும் உணர்வைக் கொடுப்பதால் அவ்வுணர்வின் தாக்கம் அவளின் உடலை பாதியாக இளைக்கப் பண்ணி விட்டதாம் ….

    ​அப்படியானால் அவள் உடலின் பாதியைத் தென்றல் தின்றதாகத் தானே அர்த்தம் .

    ​அப்படி அத்தென்றல் தின்ற பாதி போக மீதியாக இருப்பதுதான் அவள் இப்போது கொண்ட இளைத்த தோற்றம் என்கிறாள்.

    அக்காதலினால் வாழும் பெண் .

    ​இரு வரிகளுக்குள் எத்தனை பெரிய விளக்கத்தை விதைத்து விட்டார் நம் கவியரசர் பாருங்கள் .

    ​காதல் கண்களைக் குருடாக்கி விடும் என்பார்கள் .

    ​நாம் கண்முன்னாலேயே பார்க்கும் நிகழ்வுகள் எத்தனையோ .

    ​மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு பெண்ணின் மனதைக் கவரும் ஆடவர் பலர் மிகவும் இலகுவாக அப்பெண்ணை ஏமாற்றிவிடும் சந்தர்ப்பங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறோம் .

    ​அதே சமயம் ஆண்களை ஏமாற்றும் பெண்கள் இல்லை என்பது என் வாதமல்ல .

    ​காதல் கண்களைக் குருடாக்கிவிடும் என்பார்கள்.

    ​தீர விசாரிக்காமல் , அவ்வாடவனைப் பற்றிச் சரிவர அறியாமல் காதலிலே விழுந்து விடும் பெண்களில் சிலர் ஏமாற்றப்பட்டு விடுகிறார்கள் .

    ​இதோ அகநானூறில் இதைப் பிரதிபலிப்பதாக வரும் பாடல் ஒன்று ,

    ​நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த அன்பி லாளன் அறிவுநயந் தேனே (அகம் :260)

    ​தன்னைக் காதலித்து கைவிட்டு , ஏமாற்றித் துன்பத்தைத் தனக்குப் புரிந்த அந்த அன்பற்றவனுடைய அறியாமையை அறியாது அவனை நம்பி ஏமாந்து போனேனே என்று புலம்பும் ஒரு பேதையின் நிலையைக் குறிக்கும் பாடலிது,

    ​இதைத் தனது பாணியில் கவியரசர் எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போமா?

    ​இறைவன் என்பவன் பரம்பொருள். அவனை நம்பியவர்களை அவன் எப்போதும் கைவிடுவதில்லை என்பது ஒரு பொதுவான நம்பிக்கை.

    ​ஆனால் தன் காதலனை நம்பிய அப்பேதையின் நிலை?

    அழகாய்ச் சொல்கிறார் கவியரசர்,

    ​உன்னை நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
    உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே

    ​என்கிறாள் அப்பேதை.

    ​அது மட்டுமா?

    ​ஒரு மரத்தில் விளையும் கனியின் தரத்தையும், அக்கனியின் சுவையையும் அம்மரம் அறியும் என்பதும், உண்மையான காதலை அக்காதலைத் தனதாக்கிக் கொண்ட மனம் அறியும் என்பதும் உண்மையே.

    ஆனால் காதல் வயப்பட்ட ஆண்களின் மனதில் கனிவான தன்மை இருந்தால் தானே தம்மை விரும்பித் தவிக்கும் ஒரு மடந்தையின் மனதைப் புரிந்து கொள்ளும் வகை அவர்களுக்குத் தெரியும் .

    ​இதோ மீண்டும் கவியரசர்,

    ​கனியை மரமறியும் காதலை மனமறியும்
    கனிவிருந்தால் அல்லவோ கன்னியர் நிலை தெரியும்

    ​என்று தனக்கேயுரிய பாணியில் ஒரு பேதையின் புலம்பலை அழகாய்க் கூறுகிறார்.

    ​அன்பினிய வாசகர்களே!

    ​என் மனதில் வாசம் செய்யும் கவியரசரின் தேன் துளிகளில் இரண்டை உங்களுடன் சேர்ந்து சுவைத்தேன் .

    இந்தத் தேன்கூட்டில் இன்னமும் பலதுளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன.

    அவற்றில் சிலவற்றோடு மீண்டும் வருவேன்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … 313

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … 313

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே !

    நானிங்கு நலமே !

    நீங்கள் நலமா ?

    இம்மடலை சென்னையில் இருந்து எழுதுகிறேன்.

    உலகம் முழுவதும் நிகழும் அரசியல், இயற்கை, மற்றும் அரச குடும்ப நிகழ்வுகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இங்கிலாந்து அரசியல் ஜனவரி 2026 ஐ நோக்கினால்,

    தொழிலாளர் கட்சி (Labour Party):
    பிரதமர் கியர் ஸ்டார்மர் தனது புத்தாண்டு உரையில் “சரிவு மற்றும் பிளவுகளை வெல்லும்” அரசாங்கத்தை வாக்குறுதி அளித்தார்.
    மக்களுக்கு “நல்ல மாற்றங்களை உணரச் செய்வோம்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

    கன்சர்வேட்டிவ் கட்சி (Conservative Party):
    எதிர்க்கட்சி தலைவர் கேமி பாடெனொக், 2025-இல் “வளர்ச்சி இல்லாமல், அதிக வரிகள், வேலைவாய்ப்பு குறைவு” என விமர்சனம் செய்தார்.
    “நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்து, பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு நிதி வழங்குவோம்” என்ற திட்டத்தை முன்வைத்தார்.

    ரீபார்ம் யுகே (Reform UK):
    நைஜல் பாராஜ் ஜனவரி 19-ஆம் தேதி Newark-on-Trent-இல் உரையாற்றினார்.
    பிரெக்ஸிட் பின்னணியில், மக்கள் எதிர்பார்ப்புகள், பொருளாதார குழப்பம், பொறுப்புக்கூறல் ஆகியவை அரசியல் அமைப்பை மாற்றுகின்றன.

    இங்கிலாந்து காலநிலை ஜனவரி 2026இல் ,

    மாதத்தின் தொடக்கத்தில் ஆர்க்டிக் காற்று காரணமாக கடும் குளிர் நிலவியது.

    ஸ்காட்லாந்து மற்றும் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு, பனிமூட்டம், பனிக்கட்டி போன்றவை காணப்பட்டன.

    லண்டனில் வெப்பநிலை -3°C வரை குறைந்தது

    மழை, பனிக்கட்டி, மற்றும் காற்று ஆகியவை பயணத்திற்கும் விவசாயத்திற்கும் சவாலாக இருந்தன.

    -இங்கிலாந்து அரச குடும்ப நிகழ்வுகள் ஜனவரி 2026

    ஜனவரி 9: இளவரசி கேத்தரின் 44வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    ஜனவரி 15: இளவரசர் வில்லியம் ஹெரிபோர்ட்ஷயரில் உள்ள பண்ணை ஒன்றை பார்வையிட்டார்.

    ஜனவரி 25: வில்லியம் மற்றும் கேத்தரின் ஸ்காட்லாந்தில் அரச நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

    பிப்ரவரி 3: கிங் சார்ல்ஸ் மற்றும் குவீன் கமில்லா, உள்ளாட்சி ஊழியர்களுக்காக அரண்மனையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    இங்கிலாந்து பொருளாதார நிலை
    ஜனவரி 2026

    பொருளாதார முன்னறிவிப்புகள்: HM Treasury – நிதி ஆணையம் வெளியிட்ட கணிப்புகளின்படி, 2026 இங்கிலாந்து பொருளாதாரம் “மிதமான வளர்ச்சி” பாதையில் உள்ளது.

    விலை உயர்வு (CPI): பணவீக்க விகிதம் குறைவாக இருந்ததால், வட்டி விகிதங்கள் மெதுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சம்பள வளர்ச்சி: மெதுவாக இருந்தது, ஆனால் வேலைவாய்ப்பு நிலைமை சீராக உள்ளது.

    நுகர்வோர் நம்பிக்கை: Which? பத்திரிகை ஆய்வின்படி, மக்கள் நம்பிக்கை 8 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

    பொருளாதார சீரமைப்பு: PwC- பிரைஸ் வாட்டர் கூப்பர் கணிப்புகளின்படி, 2026 “அடாப்டேஷன்” (Adaptation) ஆண்டாக இருக்கும்.

    அரசுகள், நிறுவனங்கள், மக்கள் புதிய சூழ்நிலைக்கு தங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

    உலகளாவிய நிகழ்வுகள் – ஜனவரி 2026

    பொதுவான விழாக்கள்:
    ஜனவரி 1 புதுவருடம், உலக அமைதி நாள்
    ஜனவரி 15: தைப்பொங்கல் (தமிழர்களின் பெருவிழா)

    அன்புள்ள வாசகர்களே !
    இங்கிலாந்து அரசியல், இயற்கை, மற்றும் அரச குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் ஒரு புதிய மாற்றத்தின் பாதையை நோக்கி நகர்கின்றன.

    நாம் எங்கே இருந்தாலும், உலகம் எவ்வாறு நகர்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வும், பகிரும் மனப்பான்மையும் நம் வாழ்வை வளமாக்கும்.

    Share
  • கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் – 16

    கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் – 16

    சக்தி சக்திதாசன்

    கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் எனும் பார்வையில் இன்று பார்க்கப்போகும் பாடல்

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே…

    பருவம் என்னும் காற்றிலே..
    பறக்கும் காதல் தேரிலே
    ஆணும் பெண்ணும் மகிழ்வா..ர்
    சுகம் பெறுவா..ர்
    அதிசயம் காண்பார்
    நாளை உலகின் பாதையை இன்றே
    யார் காணுவார்..

    ஆசையே அலை போலே..
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே..

    வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
    வடிவம் மட்டும் வாழ்வதே..ன
    இளமை மீண்டும் வருமா..
    மணம் பெறுமா..
    முதுமை..யே சுகமா…
    காலம் போகும் பாதையை
    இங்கே யார் காணுவார்

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலேஆடிடுவோமே
    வாழ்நாளிலே..

    சூறை காற்று மோதினா..ல்
    தோணி ஓட்டம் மேவு..மோ
    வாழ்வில் துன்பம் வரவு
    சுகம் செலவு இருப்பது கனவு..
    காலம் வகுத்த கணக்கை இங்கே
    யார் காணுவார்..

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே..

    கண்ணதாசன் பாடல்களில் ஆசை, வாழ்க்கை, காலம், இளமை, முதுமை போன்ற மனித வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக எளிய உவமைகளில் வெளிப்படுகின்றன.

    “ஆசையே அலை போலே” என்ற பாடலில் அவர் ஆசையை அலைக்கு ஒப்பிட்டு, மனிதனை ஓடமாகக் காட்டுகிறார்.

    இது அலைபோல் அசையும் ஆசையின் நிலையற்ற தன்மை மற்றும் அதன் மீது மனிதன் வாழ்நாள் முழுவதும் ஆடிக்கொண்டிருக்கும் நிலையைக் காட்டுகிறது.

    இங்கு அவர் ஆன்மீக அறிவின் அடிப்படை உண்மையை ஆசை நிலையற்றது, வாழ்க்கை ஒரு பயணம் மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

    இந்தப் பாடல் கண்ணதாசனின் தத்துவப்பாடல்களில் ஒன்று.

    வாழ்க்கையின் சுழற்சியை இளமை, காதல், முதுமை, துன்பம், சுகம், காலம் அனைத்தையும் ஆசையின் அலை என்ற மைய உவமையில் இணைத்து, மனிதன் வாழ்வின் பாதையை ஆராய்கிறார்.

    பாடல் சமூகப்பாடல் போலத் தோன்றினாலும், அதன் உள்ளே ஆன்மீக சிந்தனை ஆழமாகப் பதிந்துள்ளது.

    “ஆசையே அலை போலே… நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே”

    ஆசை என்பது அலை போல நிலையற்றது, எப்போதும் அசையும்.

    அதிலே மனிதனி ஓடம் போல ஆசையின் மீது ஆடிக்கொண்டிருப்பவன்.

    ஆன்மீகப் பொருளாக இதிலே வாழ்க்கை ஆசையின் அலைகளால் இயக்கப்படுகிறது.

    அதிலிருந்து விடுபடுதல் தான் உண்மையான சாந்தி என அழகாக எடுத்துரைக்கிறார்

    “பருவம் என்னும் காற்றிலே… பறக்கும் காதல் தேரிலே”

    இளமை என்றால் காற்றாகவும் காதல் என்பதை அது அசைக்கும் தேர் என்கிறார்.

    ஆணும், பெண்ண மகிழ்ச்சி, சுகம், அதிசயம் எனும் உணர்வுகளினூடாக காலத்தின் ஓட்டத்தோடு பயணிக்கிறார்கள்.

    ஆன்மீகப் பொருளாக இளமை, காதல், சுகம் அனைத்தும் தற்காலிகமமானவை அவை நிலையற்றவை என்று சிந்திக்க வைக்கிறார்.

    “வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதே”

    வாழ்க்கை அது காலத்தோடு தீர்ந்தத ஆனால் அங்கே உடல் வடிவம் மட்டும் வாழ்கிறது.

    இளமை அது மீண்டும் வராது அபடியாயின் முதுமை சுகமா? என்கிறார் கவியரசர்.

    ஆன்மீகப் பொருள் இங்கே உடல் நிலையற்றது எனவும் ஆன்மா மட்டுமே நிலைத்தது எனவும் வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.

    “சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ”

    வாழ்க்கை என்பதை தோணியாகவு
    ம் விதியை சூறை காற்று என்றும் கொண்டால் விளைவு துன்பமே !

    இந்நிலையில் சுகம் செலவுவாகவும் துன்பம் வரவாகவும் கொண்ட ஒரு வாழ்க்கை கணக்கின் தத்துவமாகத் தருகிறார்.

    ஆன்மீகப் பொருள் இங்கே துன்பம்–சுகம் இரண்டும் வாழ்க்கையின் இயல்பான இரு முகங்கள் அவற்றை சமமாக ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

    கண்ணதாசன் சமூகப்பாடல்கள் மனித வாழ்வின் உண்மைகளை வெளிப்படுத்தும் போது, அவற்றில் ஆன்மீக அடுக்குகள் இயல்பாகவே கலந்து விடுகின்றன.

    ஆசை, காதல், சுகம், துன்பம் போன்ற சமூக அனுபவங்களை அவர் ஆன்மீக உவமைகளால் விளக்குகிறார்.

    “ஆசையே அலை போலே” பாடலில், ஆசை–அலை, மனிதன்–ஓடம், வாழ்க்கை–தோணி என்ற உவமைகள் சமூக அனுபவத்தையும் ஆன்மீக உண்மையையும் இணைக்கின்றன.

    இதன் மூலம் அவர் சமூகப் பாடல்களை ஆன்மீகப் பாடல்களாக மாற்றுகிறார், அதாவது வாழ்க்கை அனுபவம் என்பது ஆன்மீகப் பயணம் என்பதை உணர்த்துகிறார்.

    “ஆசையே அலை போலே” என்பது வெறும் சமூகப் பாடல் அல்ல.

    அது ஆசையின் நிலையற்ற தன்மை, வாழ்க்கையின் சுழற்சி, சுக–துன்ப சமநிலை, உடலின் நிலையற்ற தன்மை ஆகியவற்றை ஆன்மீகமாக வெளிப்படுத்தும் பாடல்.

    கண்ணதாசன் சமூகப்பாடல்களில் கூட ஆன்மீக அறிவை நுட்பமாக இணைத்து, மனிதனை சிந்திக்க வைக்கும் கவிஞராக திகழ்கிறார்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 312

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 312

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    நானிங்கு நலமே ! தங்களிடம் நாடுவதும் அதுவே !

    கடந்த மாத முக்கிய நிகழ்வுகளை ஒரு புலம்பெயர் தமிக்ஷனின் பார்வையில் சிறிதாய் அலசுகிறேன்.

    லண்டன் மற்றும் இங்கிலாந்து அரசியல் நகர்வுகள்

    ஆட்டம் பட்ஜெட் 2025 தொடங்கியாச்சு …..

    புதிய வரி உயர்வுகள், சமூகச் செலவு மாற்றங்கள்

    நவம்பர் 26 அன்று களத்தில் வந்த ஆட்டம் பட்ஜெட், 2029–30/2030–31க்குள் சுமார் £26–£26.6 பில்லியன் வரி உயர்வுகளைத் திட்டமிடுகிறது இங்கிலாந்து அரசு .

    சொல்வாரா ? மாட்டாரா ? என்று பல ஊகங்களை உலுப்பிக் கொண்டிருந்தோர் முன்னால் பட்ஜெட்டை தூக்கி பட்டென போட்டுடைத்தார் நம்ப நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்.

    இது உள்நாட்டு வருவாய் பங்கு (tax take) ஐ 2030/31ல் GDP இன் 38% வரை கொண்டுசெல்லும் என்று ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் லைப்ரரி சுருக்கம் குறிப்பிடுகிறது.

    குடும்ப நல கொள்கை:
    இதுவரை நடைமுறையில் இருந்த இரண்டாவது குழந்தை வரம்பை (two-child limit) நீக்குவதால் 4.5 லட்சம் குழந்தைகள் வறுமையிலிருந்து மீளலாம்.

    லண்டனில் மட்டும் சுமார் 70,000 வீடுகள் இந்நிபந்தனையின் பாதிப்பில் இருந்ததால் நகரத்திற்கு இது தனிப்பட்ட தாக்கத்தை உண்டு பண்ணும்.

    பணவீக்க/கடன் பாதை:
    வரிக்கணகின் பொறுப்பினை கண்காணிக்கும் ஆபிஸ் – OBR கணிப்பு பட்ஜெட் நடவடிக்கைகள் அடுத்த வருட பணவீக்கத்தை 0.4 சதவீதப் புள்ளி அளவு குறைக்கும் என்று கூறியது.

    உள்நாட்டு கடன் பாதையை 4.5% இலிருந்து 1.9% வரை இறக்க இலக்கிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அரசின் திறைசேரி வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்ஜெட் அறிக்கை ஆழமான அத்திவாரமும், பாதுகாப்பான அடித்தளமும் கொள ஆவணமாக மன்றத்தில் வைக்கப்பட்டது.

    இதனால் ஏற்பட்ட அரசியல் அதிர்வுகள்.
    வரிக்கணகின் பொறுப்பினை கண்காணிக்கும் ஆபிஸ் – OBR அமைப்பு தவறுதலாக இந்த்ஜ வரிக்கணக்கை நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னால் இணையத்தளத்தில் வெளியிட்டுவிட்டது.

    போச்சுடா ?

    கிடைச்சிது அவல் எதிர்க்கட்சிக்கு , மென்று துப்பி விட்டார்கள் போங்கள்…..

    இக்கசிவு, எதிர்க்கட்சி விமர்சனங்களை அள்ளி வீசியது.

    பட்ஜெட் அறிக்கை நேரத்திற்கு முன்னதாக OBR வலைத்தளத்தில் ‘அப்ஸ்ட்ரீம்’ கசிவு—இது வினாடிகளில் அகற்றப்பட்டாலும், கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி விசாரணை கோரி அரசாங்கத்தைச் சிக்கலில் இட்டது.

    £26 பில்லியன் வரி உயர்வுகள் வளர்ச்சியைத் தடுக்கும் என்ற சந்தை/ஆராய்ச்சி விமர்சனங்கள் குவிந்தன.

    இது ஏற்கனவே உயர்ந்த வரிசுமைக்கு மேலே “வாளி வரி” நீர்தாங்காமல் இருக்கலாம் என்ற நிதி-சந்தை மதிப்பீடுகள் கூறப்பட்டன.

    இத்துடன் ‘பட்ஜெட் துளை’ உரையாடலில் அரசுக்கு எதிராக தவறான படிப்பினை உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    வரி உயர்வுகள், இரு பிள்ளை வரி நீக்கம், மின்சார வாகன வரிகள் உள்ளிட்ட தலைப்புகள் பத்திரிகைகளை அலங்கரித்தன.

    அரசியல் பதற்றத்திலும் சந்தைகள் அமைதியாக இருந்தபோதும் நீண்டகால விளைவுகள் குறித்து பெருமளவு கேள்விகள் எழுந்தன.

    எதிர்க்கட்சியான
    கன்சர்வேடிவ் கட்சியின் நிலைப்பாடு

    பட்ஜெட் கசிவு மீதான கோபம் சுழன்றாடியது.

    பட்ஜெட் அறிவிப்புக்கு முன் OBR சுருக்கம் ஆன்லைனில் கசிந்ததால்,  சந்தை-செயல்முறைக் கடுமை, நிர்வாக பொறுப்பின்மை ஆகிய கோணங்களில் கன்சர்வேடிவ் கட்சி விசாரணை கோரியும், ‘வரி வெள்ளம்’ அரசின் வழிகாட்டுதலை சாடியும் எச்சரிக்கை மொழியில் பதிலளித்தது.

    ‘வரி உயர்வினால் வளர்ச்சி பாதிப்பு’ என்ற எதிர்கட்சி வாதம், பணவீக்க-வட்டி-வேலைவாய்ப்பு சூழலில் குடும்பங்களும் தொழில்களும் சிரமப்படுவார்கள் என்பதைக் கொண்டே, பட்ஜெட்டின் ‘சமநிலை’ மற்றும் ‘திட்டவட்டம்’ குறித்த கேள்விகளை நீடிக்கிறது.

    கியர் ஸ்டாமர் தற்போது தனது தலைமையின் மீது எழுந்துள்ள சவால்கள், கட்சிக்குள் உள்ள எதிர்ப்புகள், மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை குறைவு ஆகியவற்றை எதிர்கொள்கிறார்.

    அவர் அடுத்த தேர்தலுக்கு லேபர் கட்சியை வழிநடத்துவேன் என்று உறுதியளித்தாலும், கட்சியின் உள்ளும் வெளியும் சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

    கியர் ஸ்டாமர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்

    1. தலைமை சவால்கள் மற்றும் கட்சிக்குள் எதிர்ப்பு
    இரண்டு லேபர் எம்.பிக்கள் வெளிப்படையாகவே ஸ்டாமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    ஹெல்த் செக்ரட்டரி வெஸ் ஸ்ட்ரீட்டிங் தலைமையைப் பிடிக்க முயற்சிக்கிறார் என்ற வதந்திகள், கட்சிக்குள் ஒரு கருத்து உருவாகியுள்ளது.

    பட்ஜெட் தோல்வி அல்லது உள்ளூர் தேர்தல் தோல்வி ஏற்பட்டால், தலைமைக் போட்டி விரைவில் எழலாம்.

    2. பொது நம்பிக்கை குறைவு
    சமீபத்திய கருத்துக் கணிப்பில், லேபர் வாக்காளர்களில் மூன்றில் ஒருவரே ஸ்டாமர் அடுத்த தேர்தலை வழிநடத்த வேண்டும் என்று நம்புகின்றனர்.

    இது அவரது தலைமையின் மீது பொதுமக்கள் நம்பிக்கை குறைவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

    3. கொள்கை சிக்கல்கள்
    ஒரண்டு குழந்தைகளுக்கு மேல் வாழ்வாதார உதவிகள் இல்லை எனும் சட்டம்  நீக்கப்பட்டதை, சிலர் “தலைமை சவாலைத் தவிர்க்கும் அரசியல் யுக்தி” என்று விமர்சித்தனர்.

    ஸ்டாமர் இதை “குழந்தை வறுமையை குறைக்கும் நீண்டகால இலக்கு” என விளக்கினாலும், கட்சிக்குள் சந்தேகங்கள் நீடிக்கின்றன.

    4. புதிய சமூக விவாதங்கள்
    ஆண்கள் மற்றும் சிறுவர்களின் பிரச்சனைகளைப் பற்றி தேசிய உச்சி மாநாடு நடத்துவதாக ஸ்டாமர் அறிவித்துள்ளார்.

    இது சமூகக் கொள்கை பரிமாணத்தில் அவரது தலைமையை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

    சுருக்கமாக
    கியர் ஸ்டாமர் மூன்று தளங்களில் சவால்களை எதிர்கொள்கிறார்.

    1. கட்சிக்குள் தலைமைக் போட்டி – வெஸ் ஸ்ட்ரீட்டிங் போன்றோர் மீது எழுந்த வதந்திகள்.

    2. பொது நம்பிக்கை குறைவு  வாக்காளர்களின் ஆதரவு குறைந்திருப்பது.

    3. கொள்கை விமர்சனங்கள்

    அவர் “அடுத்த தேர்தலை நான் வழிநடத்துவேன்” என்று உறுதியளித்தாலும், கட்சிக்குள் உள்ள குழப்பம் மற்றும் வெளிப்புற நம்பிக்கை குறைவு அவரது தலைமையை சோதிக்கிறது.

    இங்கிலாந்து நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தற்போது பட்ஜெட் தொடர்பான “கருப்பு துளை” (black hole) எண்கள், வரி உயர்வுகள், மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக கடுமையான அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

    ரேச்சல் ரீவ்ஸ் எதிர்கொள்ளும் முக்கிய அரசியல் சிக்கல்கள்

    1. ரீவ்ஸ் பட்ஜெட்டுக்கு முன், நாட்டின் நிதியில் £30 பில்லியன் “கருப்பு துளை” இருப்பதாக எச்சரித்தார்.

    ஆனால் OBR (Office for Budget Responsibility) வெளியிட்ட தரவுகள், உண்மையில் அந்த குறைவு £2.5 பில்லியன் மட்டுமே எனக் காட்டின.

    இதனால் அவர் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    2. வரி உயர்வுகள்
    பட்ஜெட்டில் £26 பில்லியன் வரி உயர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    இது பொதுமக்கள் மற்றும் தொழில்கள் மீது கூடுதல் சுமை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

    கன்சர்வேடிவ் தலைவர்கள், “ரீவ்ஸ் பொய் கூறி வரி உயர்வுகளை நியாயப்படுத்தினார்” என்று நேரடியாகக் குற்றம் சாட்டினர்.

    3.  OBR (Office for Budget Responsibility)     கசிவு மற்றும் நம்பிக்கை பிரச்சனை
    பட்ஜெட் முன் OBR ஆவணங்கள் கசிய, அரசாங்கத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது.

    ரீவ்ஸ் மீது “தகவலை மறைத்தார்” என்ற குற்றச்சாட்டுகள், அவரது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களை அதிகரித்தன.

    4. கட்சிக்குள் அழுத்தம்
    லேபர் கட்சியின் சிலர், “பொது நம்பிக்கை குறைந்தால், அடுத்த தேர்தலுக்கு முன் ரீவ்ஸ் பதவி விலக வேண்டும்” என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    ஆனால் ரீவ்ஸ், “நான் அடுத்த தேர்தலிலும் நிதியமைச்சராக இருப்பேன்” என்று உறுதியளித்துள்ளார்.

    5. அல்ஜசீரா குறிப்பிட்டது போல, ரீவ்ஸ் மூன்று சிக்கல்களை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய நிலை
    1. நிதி நிலையை சீர்செய்தல்
    2. வரி/செலவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல்
    3. பொதுமக்களின் அதிருப்தியை சமாளித்தல்

    ரேச்சல் ரீவ்ஸ் தற்போது நம்பகத்தன்மை, வரி உயர்வு, மற்றும் கட்சிக்குள் அழுத்தம் ஆகிய மூன்று தளங்களில் கடுமையான அரசியல் சிக்கல்களை எதிர்கொள்கிறார்.

    அவர் தன்னம்பிக்கையுடன் பதவி தொடருவேன் என்று கூறினாலும், OBR தரவுகள் மற்றும் “பொய்” குற்றச்சாட்டுகள் அவரது அரசியல் எதிர்காலத்தை சோதிக்கின்றன.

    ரீபோர்ம் கட்சி, நைஜல் ஃபராஜ்,50 ஆண்டுகளுக்கு முன்நிற்ப ‘இனவாத’ குற்றச்சாட்டுகள் முன்னிலை பெற்றன.

    குற்றச்சாட்டுகளின் விளக்கம்: டல்விச் கல்லூரி (1970களில்) காலத்து சக மாணவர்களிடமிருந்து—‘ஹிட்லர் சரி’, ‘Gas them’ போன்ற வன்மக் கருத்துகள், ‘பாகிஸ்தான்’, ‘வோக்கள்’ போன்ற இழிவுரை—என கார்டியன்-ஆலோசனையை மேற்கோளிட்டு பல ஊடகங்கள் தகவலிட்டன.

    பராஜ் ‘intent’ இல்லாத பள்ளிக் குழந்தை ‘விளையாட்டுத் திடல் பரிகாசம் ’ என மறுத்தும், நேர்காணல்களில் விறுவிறுப்பான பதில்களை வழங்கினார்.

    அரசியல் தாக்கம் என்ன ?

    ரீபோர்ம் கட்சியின் ஆதரவு சரிவு , யூ கவ் எனும்  கருத்து கணிப்பு நிறுவனம்(23–24 நவம்பர்) கணக்கில்  ரீபோர்ம் கட்சி 25% என்றாலும், ஏப்ரல் 25க்கு பின்னர் தாழ்ந்த அளவாகப் பதிவானது என்று கூறுகிறது.

    தொடர்ந்த சர்ச்சைகள் கட்சிக்கு பெரும் அழுத்தம் கொடுத்துள்ளன.

    சர்வதேச அளவில் ட்ரம்ப் முன்மொழிந்த உக்ரேன்–ரஸ்யா போர் நிறுத்தத் திட்டம் முன்னிலைப் படுத்தப்படுகிறது.

    -உக்ரேனின் இராணுவத்தை 600,000 பேருக்கு வரையறுத்தல், NATOவில் சேர தடை, கிரிமியா/டொன்பாஸ் ‘de facto’ ரஸ்யா ஆட்சியை அங்கீகரிப்பது போன்ற தீவிர நிபந்தனைகள் முன் வைக்கப் பட்டுள்ளன.

    அமெரிக்க நிர்வாகம் உருவாக்கிய 28-புள்ளி வரைவு பல ஊடகங்கள் வெளியிட்ட டிராஃப்ட் நகல்கள் வழியாக வெளிப்பட்டன.

    ஐரோப்பிய எதிர்வினை எப்படி ?

    யூரோப், உக்ரேன் அதிகாரிகள்—‘புடின் விருப்பப்பட்டியல்’ போன்றதென கடுமையாக மறுத்து, கீவ்/ஐரோப்பா இணக்கம் இல்லாமல் திட்டம் தோல்வியடையும் என எச்சரித்தனர்.

    தூதரணி நகர்வு நடைபெறுகிறது.

    அமெரிக்க ‘என்வாய்’ ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோ, ஆமி செயலாளர் டான் ட்ரிஸ்கல் கீவ்—‘சில மின்சிறு புள்ளிகள்’ மட்டும் மீதி என ட்ரம்ப் கூறியபோது, கையொப்பத்திற்கு முன் ‘இறுதி நிலை’ பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்தன.

    உக்ரேன் பக்கம் ‘சில விவரங்கள்’ மட்டும் என்று கூறியதாக தனிநபர் வட்டாரங்கள் சுட்டின.

    வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டினால் பரபரப்பு.

    விளைவாகஅமெரிக்க குடியேற்றக் கொள்கை மாற்றங்கள்

    சம்பவம் மற்றும் சந்தேக நபர் என்ன?

    வெள்ளை மாளிகை அருகே நேஷனல் காட் உறுப்பினர்கள் மீது நடந்த சூட்டில் ஒரு உறுப்பினர் உயிரிழப்பு, மற்றொருவர் தீவிர நிலையில்; 29 வயது ஆப்கானிய நாட்டு நபர் ரஹ்மானுல்லா லகான்வால் குற்றச்சாட்டில் கைதானார்.

    CIA உடன் கடந்தகாலத் தொடர்புகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையிலும், ஊக்கக் காரணம் குறித்து விசாரணை நீடிப்பு.

    இதனைத் தொடர்ந்து—அமெரிக்க நிர்வாகம் ‘அனைத்து’ அகதி நிலை கோரும் தீர்மானங்களை இடைநிறுத்தியது.

    ஆப்கானியப் பாஸ்போர்ட் கொண்டவர்களுக்கு விசா வழங்கல்

    USCIS பாதுகாப்பு/வெட்டிங் மறாய்வு வரை காலவரையின்றி நிறுத்தம் அறிவிப்பு.

    ஆப்கான் குடியிருப்பாளர் பதில் என்ன ?

    ‘ஒரு நபரின் குற்றச் செயலைக் களமாகக் கொண்டு முழு சமுதாயத்தைத் தண்டிக்க வேண்டாம்’—ஆப்கான் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டன.

    – அரசியல் விதைச்சொற்கள்: ட்ரம்பின் ‘மூன்றாம் உலக நாடுகள்’ குடியேற்றம்/அசைலம் மீது கடுமையான மொழிகள், நிரந்தரத் தடைகள் குறித்த உரைகள்—மீடியா சந்திப்புகளில் மோதல்கள், நிருபர்களிடம் விரக்தி—அனைத்தும் விவாதம், சட்டஅங்கீகாரம் ஆகிய தளங்களில் சிக்கல்களை எழுப்பின.

    சிறீலங்காவில் சுழல்காற்று ‘Ditwah’—வரலாறு காணாத பெருநாசம்

    அழிவின் அளவு,டிட்வா சுழல்காற்றின் பின்னர், இருபதாண்டுகளில் இல்லாத வெள்ள, மண்சரிவு—UN/OCHA கணிப்பில் 10 லட்சம் பேரளவில்  பாதிப்பு.

    212 உயிரிழப்பு, 218 காணாமல் போனோர்; 51,000 குடும்பங்களிலிருந்து 1,80,000 பேர் 1,094 பாதுகாப்பு முகாம்களில்.

    அரசு தீவிர அவசரநிலையை அறிவித்தது.

    சில நாட்களில் பல்வேறு நிறுவனங்களின் கணக்கெடுப்புகள் அதிகரித்த மரண எண்ணிக்கையைத் தந்தன.

    123, 334 என உயர்ந்த ஓட்டத்தில்; மையப் பகுதிகளில் மண்சரிவு, கொழும்பு சுற்றுவட்டாரங்களில் பள்ளப்பகுதி வெள்ளம் பெரும் சேதம்.

    ‘நாட்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடர்’ என உரையாற்றிய அதிபர் அனுரா குமார திசாநாயக்கே மறுசீரமைப்பு திடல், குடிமக்களின் துணிச்சல் என்பதை வலியுறுத்தினார்.

    பொது கட்டமைப்பு சேதத்தால் 25 நவம்பர்–25 டிசம்பர் காலத்தில் காலாவதி ஓட்டுநர் உரிமங்களுக்கு ‘ஒரு மாத’ சிறப்பு காலம் அறிவிப்பு.

    நவம்பர் மாதம் வரி-வளர்ச்சி சமநிலை, சுதந்திரம் பாதுகாப்பு என்ற மோதிர விசைகள், நினைவுகளின் மண்ணில் மீளெழும் பழைய குற்றச்சாட்டுகள், உலகப் போரில் ‘சமாதானம்’ என்ற பெயரில் பேரரசுக் நகர்வுகள், இயற்கை நெருக்கடியில் மனித உறுதியின் ஒளி இவை அனைத்தும் ஒன்றே மாதத்தில் நம் ஜனநாயக நரம்புகளையும், மனித அக்கறையையும் சோதித்தன.

    இந்தக் கட்டுரையின் எண்ணங்கள் உங்கள் சிந்தனையைத் தூண்டட்டும்.

    உங்கள் நகரத்தின் நுனியில், உலகத்தின் இதயத்தில், மனிதப் பொறுப்பும் கருணையும் ஒன்றாகவே நடக்க வேண்டும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 311

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 311

    சக்தி சக்திதாசன்

    அன்புநிறை வல்லமை வாசக பெருமக்களே !

    நலம். நலமறிய ஆவல் எனும் ஆரம்பத்தோடு இம்மாத இங்கிலாந்திலிருந்து எனது மடலை ஆரம்பிக்கிறேன்.

    இந்த மாதம் மட்டுமல்ல கடந்த சில காலங்களாகவே இங்கிலாந்துப் பிரதமர் கியர் ஸ்டாமரின் நிலையைப் பார்க்கும் போது எங்கே இவரையும்ம் ஏழரைச் சனி பிடித்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஒன்று மாறி ஒன்றாக பல திக்குகளிலிருந்தும் இவர் மீதும் இவர் அசாங்கத்தின் மீதும் சராமாறியாக எதிர்மறை விமர்சனக் கற்கள் கொட்டிக் குவிகின்றன.

    அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

    அரசியல் குழப்பங்கள் மற்றும் லேபர் அரசின் சவால்கள்

    ஏற்கனவே சட்டவிரோத குடியேற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசாங்கம் தவிக்கிறது என்று பரவலான விமர்சனங்கள் உலாவுகின்றன.

    வேறு யாராவது பதவியில் இருந்தால் மட்டும் என்னத்தைக் கிழிக்கப் போகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க

    வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போங்கள்.

    எசெக்ஸ் பகுதியில், 14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக Hadush Gerberslasie Kebatu என்ற எத்தியோப்பிய சட்டவிரோத குடியேற்றவாசி குற்றம் சாட்டப்பட்டு கைதாகினார்.

    இவர் ஒரு சிறிய படகில் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் புகுந்தவர்.

    காவல் துறையின் கவனக்குறைவால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இரண்டுநாள் காணாமல் போய்விட்டார்.

    தீவிர தேடுதலுக்குப் பின் கிழக்கு லண்டனில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர், அவரை நாடு கடத்த முயற்சிக்கும்போது, குழப்பம் ஏற்படாமல் இருக்க £500 பவுண்ஸ் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இது லேபர் அரசின் சட்ட ஒழுங்கு மீதான நம்பிக்கையை பெரிதும் சிதைத்தது.

    விடுவார்களா எதிர்கட்சியினர். நாய் வாயில் அருகே கிடைத்த எலும்புத்துண்டு ஆகிவிட்டார் நம்ப பிரதமர்.

    அது மட்டுமா ?

    ரேச்சல் ரீவ்ஸ் வேறு யாருமில்லை நம்ப நிதியனைச்சர்.

    நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது வீட்டை வாடகைக்கு விட்டபோது, அதற்கான உரிய அனுமதி பெறவில்லை என்பதற்காக விமர்சனங்கள் எழுந்தன.

    பிரதமர் ஸ்டார்மர் அவரை கடிதம் மூலம் “தவறான கணக்கீடு” எனக் கண்டித்தார்.

    ஏற்கனவே முந்தைய அரசாங்கத்தின் பொருளாதாரச் சீர்கேடுகளைச் சரியாக்குகிறேன் என்று இந்த அம்மா எடுத்த நடவடிக்கைகள் இவரை ஒரு வேண்டாதவர் ஆக்கியிருந்தது.

    இப்போ அவங்க மீதே சர்ச்சை விட்டிடுவோமா சும்மா ?

    ஆனால், தூய்மையான நோக்கத்தில் தவறான செயல் எனக் கருதி, மேலதிக நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது லேபர் அரசின் நம்பகத்தன்மையை மேலும் சோதனைக்கு உட்படுத்தியது.

    இது இப்படியிருக்க ,

    நம்ப ரீவோர்ம் கட்சியின் கதைக்கு வருவோம்.

    இந்தக் கட்சியின் ஒரு எம்.பி சாரா போசின் இவர்,

    Reform UK கட்சியின் எம்.பி. சாரா போசின், TalkTV எனும் ஊடகத்தில் பேசியபோது:

    “விளம்பரங்களில் கறுப்பு, ஆசிய இனத்தவர்கள் நிறைந்திருப்பது எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. வெள்ளை குடும்பங்களை காண முடியவில்லை.”

    என்றார். இது வன்கொடுமையான இனவாத பேச்சு என பலரும் கண்டித்தனர்.

    அவர் பின்னர் “தவறாக சொன்னேன், வருத்தப்படுகிறேன்” என மன்னிப்பு கேட்டாலும், அது உண்மையான மன்னிப்பு அல்ல என விமர்சனங்கள் எழுந்தன.

    இதற்கான லேபர் அரசின் பதிலடி

    பிரதமர், துணை பிரதமர், மற்றும் சுகாதார அமைச்சர் வெளிப்படையாக இந்த பேச்சை இனவாதமாக கண்டித்தனர். Wes Streeting கூறினார்:

    “இது 1970களின் இனவாதத்தை மீண்டும் கொண்டு வந்தது. இது வெறுப்பை தூண்டும் வகையில் உள்ளது.”

    பாராளுமன்றத்தில் எதிர்ப்பு  கிளம்பியது

    எம்.பி. Dawn Butler பாராளுமன்றத்தில் பேசும்போது, “இது இனவாதம், அதை வெளிப்படையாக இனவாதம் என அழைக்க வேண்டும்” என்றார்.

    இதற்கான Reform UK கட்சியின் பதில்

    கட்சியின் கொள்கைத் தலைவர் Zia Yusuf – இவர் இலங்கையிலிருந்து பல வருடங்களின் முன் புலம்பெயர்ந்த ஒருவரின் மகன்.

    இவர் கூறியது,

    சாரா போசின் ஒரு “நல்ல எம்.பி.” என்றும், “தவறாக சொன்னார், ஆனால் இதைப்பற்றி உரையாடல் தேவை” என்றும் கூறினார்.

    இப்படியான பிரச்சனைகளை இனவாதம் என ஒதுக்கி வைக்க முடியாது என்றார்.

    இது கட்சியின் உள்நிலைப் பிளவுகளை வெளிப்படுத்தியது.

    சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்வினை பலவகையாக வெளிவந்தது.

    சாரா போசின் பதவி விலக வேண்டும் என்ற ஹாஷ்டேக் Twitter-இல் பரவியது.

    Change.org மூலம் பதவி விலகும் கோரிக்கைக்கு ஆயிரக்கணக்கான கையெழுத்துகள் குவிந்தன.

    மூத்த ஊடகங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் Reform கட்சியின் பார்வை மற்றும் மதிப்பீடுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

    சாரா போசின்-இன் பேச்சு, இங்கிலாந்து அரசியலில் இனவாதம், பிரதிநிதித்துவம், மற்றும் சமூக ஒற்றுமை குறித்து தீவிர விவாதங்களை தூண்டியது.

    இது Reform UK-இன் வளர்ச்சியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    இந்தப் பேச்சு இனவாதமா ? எனும் கேள்விக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட பதில் ஆரம்பத்தில் தெளிவாக இல்லை.

    ஆனால் பின்பு இதனை இனவாதம் தான் என ஏற்றுக்கொள்ளும் பாணியில் அவர்களின் பதில்கள் இருந்தன.

    பொதுமக்கள், அரசியல்வாதிகள், மற்றும் ஊடகங்கள் இணைந்து இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த இந்த நிகழ்வு, புதிய அரசியல் நெறிமுறைகளின் தேவை குறித்து சிந்திக்க வைக்கிறது.

    சொன்னவைகள் போதுமா ? இன்னும் கொஞ்சம் தேவையா ?

    சமூக மற்றும் இயற்கை பேரழிவுகள்

    ஜமேய்க்கா மீது இயற்கை பேரழிவு

    மேற்கிந்திய தீவுகளில் ஜமேய்க்கா தீவுக்கு கடும் புயல் தாக்கியது.

    வீடுகள் சேதமடைந்தன, மின் மற்றும் நீர் வசதிகள் பாதிக்கப்பட்டன.

    இங்கிலாந்து அரசு மனிதாபிமான உதவிகளை அறிவித்தாலும், குடியேற்றக் கொள்கை மற்றும் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு மீதான விவாதங்களை இது தூண்டியது.

    மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள்

    எசெக்ஸ், போர்ட்ஸ்முத், லீட்ஸ், மற்றும் லண்டனில் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன.
    சட்டவிரோதனாக சிறிய படகுகளில் வந்தவர்களை தற்காலிகமாக தங்க வைக்கும் ஹோட்டல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மக்கள் கோபம் வெளிப்பட்டது.

    பிரித்தானிய அரச குடும்பம் மீதான சர்ச்சைகள்

    அன்றூவின் எப்ஸ்டீன் தொடர்பு

    இராஜா சார்ள்ஸின் தம்பி அன்றூ மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் இடையிலான பழைய தொடர்புகள் மீண்டும் வெளிவந்தன.

    அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில், அன்றூவின் பயணங்கள், சந்திப்புகள், மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றன.

    இது அரச குடும்பத்தின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் மீடியா மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அக்டோபர் 2025 இங்கிலாந்து அரசியல், சமூக, மற்றும் சர்வதேச சூழ்நிலைகள் அனைத்தும் அமைதியற்ற, நம்பிக்கையிழந்த, மற்றும் புதுப்பிக்க வேண்டிய நிலையை வெளிப்படுத்துகின்றன.

    லேபர் அரசு, அரச குடும்பம், மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் புதிய நம்பிக்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

    சர்வதேச சூழ்நிலைகள் , சரி இனி சர்வதேச அரங்கிற்கு வருவோம்.

    அமெரிக்க ஜனாதிபதி ஜப்பான் மற்றும் சீன விஜயம்

    ஜனாதிபதி டிரம்ப் ஜப்பானில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர், சீன அதிபருடன் சந்தித்து வர்த்தக மற்றும் தெற்காசிய பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.

    இது பசிபிக் பகுதியில் புதிய சக்தி சமநிலையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்தம்

    அக்டோபரில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், தற்காலிக மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக மீண்டும் மோதல்கள் ஏற்பட்டன.

    இங்கிலாந்து, ஐ.நா. வழியாக மனிதாபிமான உதவிகளை வழங்கியது.

    என் இனிய வல்லமை வாசகர்களே இத்துடன் என் இம்மாத மடலை முடிக்கிறேன்.

    Share