Tag: செல்வன்

  • ஒரு யுக்தி

    ஒரு யுக்தி

    செல்வன்

    2001ஆம் ஆண்டு.
     
    ஓக்லாந்து பேஸ்பால் அணி தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. நட்சத்திர வீரர்களை ஏலம் எடுக்கக் காசு இல்லை. அணியின் முன்னணி விரர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.
     
    இந்தச் சூழலில் அணியின் மேலாளர் பில்லி பீன், பீட்டர் பிராண்டு எனும் யேல் பல்கலைக்கழக எகனாமிக்ஸ் வல்லுனரை சந்திக்கிறார். பீட்டர் பிராண்டு, அவரிடம் “பேஸ்பால் ஆட்டமே மிகத் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறது. நான் சொல்லும் கணிதவியல் மாடல்களை வைத்து வீரர்களை ஏலம் எடுத்தால் அணி வெற்றிபெறும்” என்கிறார்.
     
    அப்போது பேஸ்பால் நட்சத்திர மவுசை வைத்தே இயங்கி வந்தது…. ஹோம் ரன் எனப்படும் சிக்சருக்கு ஒப்பான அடிகளை அடிப்பவர்கள் பெரும் விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார்கள். பேட்டிங் சராசரி கூடுதலாக இருப்பவர்களும் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்கள். நட்சத்திரங்களைப் பார்க்கவும், ஹோம் ரன்களைப் பார்க்கவும் கூட்டம் கூடியது..
     
    “இந்த மாடலே தவறு. பேட்டிங் சராசரியை அவுட் ஆகாமல் இருப்பதன் மூலம் செயற்கையாகக் கூட்டமுடியும். ஹோம் ரன்களை அடிக்கணும் என எந்த அவசியமும் இல்லை. பந்தைத் தட்டிவிட்டுவிட்டு முதல் பேசுக்கு ஓடுவதில் வல்லவர்களை விலைக்கு வாங்கினால் போதும். அப்படி தட்டிவிட்டுவிட்டு ஓடினால் ரன்கள் வந்துகொண்டே இருக்கும்” என்ற பீட்டர் பிராண்ட், அந்த மாடலை வைத்துக் கணக்குகளைப் போட்டு, வீரர்கள் சிலரை ஏலம் எடுக்கச் சொன்னார்.
     
    அதில் வயதானவர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள், காயம்பட்டுச் சரியாக ஆடமுடியாமல் இருப்பவர்கள் எனப் பலர் இருந்தார்கள். நட்சத்திர வீரர்களை எல்லாம் ஏலம் எடுக்காமல் இவர்களை மிக மலிவான விலைக்கு ஓக்லாந்து அணி ஏலம் எடுக்கவும் அவர்கள் நகைப்புக்கும், பகடிக்கும் ஆளானார்கள். அணி நிர்வாகத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ரசிகர்கள் கருதினார்கள்.
     
    ஆனால் சீசன் துவங்கியதும் இந்த உத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. நட்சத்திர வீரர்கள் இல்லை, ஹோம் ரன்கள் இல்லை, ஆனால் ரன்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தன. தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வென்று உலக சாதனை படைக்கவும் விளையாட்டு உலகமே அதிர்ச்சி அடைந்து, பில்லிபீனைத் திருப்பிப் பார்த்தது. அந்த ஆண்டு, பட்டத்தையும் ஓக்லாந்து அணி வென்றது.
     
    உடனடியாக பில்லிபீனை வலுவான, பெரிய அணியின் முதலாளிகள் சூழ்ந்தார்கள். “எத்தனை தொகை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறோம். எங்கள் அணிக்கு வாருங்கள்” என்றார்கள். ஒரு அணி ஒன்றேகால் கோடி டாலரைக் கொடுக்க முன்வந்தது. அனைத்தையும் மறுத்து அடுத்த சீசனுக்கு தன் அணியின் சார்பிலேயே களம் இறங்கினார் பில்லிபீன்.
     
    2001ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியைப் பெற்றுத்தந்த விவிஎஸ் லட்சுமண் இந்த உத்தியைத் தான் கையாண்டார். அந்த 281 ரன்களில் ஒரே ஒரு சிக்சர் கூட இல்லை. “சிக்சருக்கும், பவுண்டரிக்கும் இருக்கும் வேறுபாடு 2 ரன்கள் தான். ஆனால் தூக்கி அடிக்காவிட்டால் அவுட் ஆகமாட்டோம்” என்றார் லட்சுமண்.
     
    அடித்து ஆடும் ஆவேச ஆட்டம் இல்லை, ரசிகர்களை வியக்க வைக்கும் ஷாட்டுகள் இல்லை… ஒன்று, இரண்டு, நாலு என மெதுவாக ரன்கள் ஏறின. மெதுவாக, நிலையான, திட்டமிட்ட ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது,.
     
    பீட்டர் பிராண்டும், பில்லிபீனும் கையாண்ட உத்தி, இன்று அனைத்து பேஸ்பால் அணிகளாலும் கையாளப்படுகிறது. அவர்கள் கிட்டத்தட்ட லெஜண்டுகளின் இடத்தை அடைந்துவிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து, Moneyball எனும் ஆங்கிலப் படம் வெளிவந்தது. பிராட் பிட், பில்லி பீன் வேடத்தில் நடித்தார்.
     
    வெற்றி சிக்சர்களாலும், ஹோம் ரன்களாலும், பெரிய சாதனைகளாலும் தீர்மானிக்கப்படுவதில்லை. நிதானமான, தொடர்ச்சியான, சிறுசிறு வெற்றிகள் மூலமே வெற்றி பெறுவோம். நாம் எப்படி ஜெயித்தோம் என்பதே அதன்பின் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.
    Share
  • குவியம்

    குவியம்

    செல்வன்
     
    நல்ல தொழிலதிபர்கள் வாடிக்கையாளரின் தேவைகள் என்ன என அறிந்து அதை நிறைவேற்றுவார்கள்.
     
    ஆனால் மாபெரும் தலைவர்கள், வாடிக்கையாளருக்கு எது நல்லது எனத் தானே கண்டுபிடித்து அதை அவர்களுக்குக் கொடுப்பார்கள்.
     
    உலகின் முதல் காரை வடிவமைத்த ஹென்றி போர்டு இதைத்தான் சொன்னார்.
     
    “வாடிக்கையாளரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டிருந்தால் நல்ல குதிரைவண்டி வேண்டும் எனப் பதில் சொல்லியிருப்பார்கள்”
     
    அக்கால வாடிக்கையாளர்கள், காரைப் பார்த்ததே இல்லை. பின்னே கார் வேண்டும் என அவர்களுக்கு எப்படி தெரியும்?
     
    ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிர்வாகிகளிடம் அதைத்தான் சொன்னார், “நல்ல ஐடியாக்களை நிராகரித்தால் தான் ஆப்பிள் மேம்படும்” என.
     
    வாரன் பப்பட்டும் அதைத்தான் சொன்னார்,  “உங்களுக்குத் தோன்றும், சொல்லப்படும் அனைத்து நல்ல ஆலோசனைகளையும் நிராகரிக்கவும். உங்களிடம் ‘எஸ்’ எனும் வார்த்தையை வாங்குவதே மற்றவர்களுக்குப் பெரும்பாடாக இருக்கவேண்டும்” என.
     
    பல கம்பனிகளின் சிக்கலே இதுதான். நல்ல ஐடியாக்கள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொள்வார்கள்.
     
    “கொரொனா வந்தாச்சு. மாஸ்க் தயாரித்தால் நல்ல லாபம் வரும்”… உடனே தொடங்கு மாஸ்க் பேக்டரி.
     
    “ஆன்லைன் தான் இனி எதிர்காலம்… ஆரம்பி ஆன்லைன் பல்கலைக்கழகம் ஒன்னை..”
     
    இப்படி “நல்ல ஐடியாக்கள்” பலவற்றைக் கேட்டு, அனைத்தையும் செயல்படுத்தி, கடைசியில் ஏகப்பட்ட கடன், ஏகப்பட்ட தொழில்கள், எதிலும் ஒருங்கிணைப்பு இல்லை எனும் நிலையில் அனைத்தும் பறிபோகும்.
     
    சாம்சங் கம்பனி ஒரு கன்சல்டன்டை அழைத்தது.. “ஆப்பிளை விடச் சிறந்த போன்களை நாம் தயாரிக்கணும். எப்படி எனச் சொல்லுங்கள்..”
     
    அவர் ஆராய்ந்து பார்த்துவிட்டு சொன்னார்.. “உங்ககிட்ட ஐம்பதுக்கு மேல் மாடல் இருக்கு. அவர்களிடம் ஐபோன் ஒண்ணு மட்டுமே இருக்கு. இதில் எதை வைத்து அவர்களை முறியடிக்கப் போகிறீர்கள்?”
     
    ஐபோன் ஒன்றில் மட்டுமே ஆப்பிள் கவனம் செலுத்தியது. பல நல்ல ஐடியாக்களை நிராகரித்தார்கள். இன்று ஆப்பிளின் ஐபோன் டிவிசன் மட்டுமே மைக்ரோசாப்டை மிஞ்சிய லாபம் ஈட்டுகிறது.
     
    போஃகஸ்.. குவியம்.. கவனம் முழுவதும் ஒரே ஒரு சிறப்பான ஐடியாவில் இருப்பதும், மற்ற அனைத்து “நல்ல ஐடியாக்களையும்” நிராகரிப்பதும், செய்யும் அந்த ஒரே ஒரு விசயத்தைத் தன்னிகரற்ற சிறப்புடன் செய்வதுமே வெற்றிக்கான வழி.

    Share
  • இந்த வார வல்லமையாளர் (268)

    இந்த வார வல்லமையாளர்! 

     

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் சற்குணா பாக்கியராஜ் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    மொழியியல் மற்றும் பறவைகள் ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவரது கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை வல்லமை வாசகர்களிடம் பெற்றுள்ளன.

    இவரை வாழ்த்திய முனைவர் ராஜம் “இவருடைய கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் …

    ‘சங்கப்பாடல்களில் பறவைகள்’ என்று வெறும் விவரிப்புக் கட்டுரையாக (descriptive essay) எழுதாமல் … அந்தப் பாடல்களில் காணும் செய்திகளுக்கும் பறவையியலில் கூறப்படும் செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசி எழுதுவது.

    இவருடைய கட்டுரைகளை ஊன்றிப்படித்தால் சங்கப்பாடல்களில் வலம்வரும் பறவைகளைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.” என குறிப்பிடுகிறார்

    சங்க இலக்கியத்தில் சிட்டுக்குருவி பற்றி இவர் கூறும் கட்டுரை மிக சிறப்பானது

    “————————————பாரி பறம்பின்
    நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
    முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
    இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப்
    படர் கொள் மாலை படர்தந்தாங்கு” (ஒளவையார், அகநானூறு: 303: 10௧5)

    இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார்.

    மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் பெயர், தோற்றம், நிறம், அலகு, அல்லது கால்களைப் பற்றிய வர்ணனைகள் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பவர்களின் மனத்தில் இந்தக் குருவிகள் எதுவாக இருக்கலாமென்ற கேள்விகள் எழலாம்.

    இந்தப் பாடலின் விளக்கவுரையில் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு: நித்திலக்கோவை, ப்,12) “குரீஇ இனம்- கிளிகளின் கூட்டம்” என்று குறித்துள்ளார். ஆனால், சங்க இலக்கியத்தை ஆராயும் போது புலவர்கள் கிளிகளைக் குரீஇக்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படவில்லை.

    திரு. பி. எல். சாமி, “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976, ப், 273) என்ற நூலில், “கிளியினத்தைப் பற்றித் தெளிவாகச் சங்க நூல்கள் கூறுவதால் குருவி என்பது கிளியன்று” என்றும், சங்க நூல்களில் வர்ணிக்கப் பட்டுள்ள தினை கவரும் குருவியும், நெல் கவரும் குருவியும் முனியாக் குருவிகளே” என்கிறார். மேலும் அகநானூறு, 303- ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ள நெல் கவரும் குருவிகளை, “The Spotted or the Black Headed Munia” (புள்ளி முனியா அல்லது கருப்புத் தலை முனியா) என்று கொள்ள வேண்டுமென்கிறார்.

    சங்க இலக்கியத்தில் புலவர்கள் சிட்டுக் குருவியை “மனையுறை குரீஇ” (குறுந்தொகை: 46) “உள்இறைக் குரீஇ “(நற்றிணை:181) உள்ளூர்க் குரீஇ” (குறுந்தொகை: 85) என்றும், தூக்கணாங் குருவியை “முதுக்குறை குரீஇ” (நற்றிணை: 366), “தூங்கணம் குருவி” (குறுந்தொகை:374, புறம்:225), என்றும், “Alpine Swift” என்னும் குருவியைக் “குன்றத் திருத்த குரீஇ” ( புறம்: 19) என்றும் குருவிகளை வேறுபடுத்தி வர்ணித்துள்ளனர். வேறு குருவிகளைப் பற்றிய வர்ணனைகள் காணப்படவில்லை.” என்கிறார்

    அறிவியலையும், இலக்கியத்தையும் ஒருங்கிணைத்து எழுதும் வல்லமையாளார் சற்குணா பாக்கியராஜ் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.இவரை விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் ராஜம் அவர்களுக்கு நம் நன்றிகள்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்தவார வல்லமையாளர் விருது! (221)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளர்: இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி (மன்னர் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை உருவாக்கியதற்கு)

    SS-Raja-mouli

    இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 1000 கோடி ரூபாய் வசூலை இவ்வாரம் கடந்து சாதனை படைத்துள்ளது பாகுபலி: 2 திரைப்படம்.

    இந்திய திரையுலக வரலாற்றின் மைல்கல் ஆன படங்கள் என ஷோலே, மதர் இந்தியா போன்ற பாலிவுட் படங்களே இருந்து வந்த நிலையில் அப்படங்கள் படைத்த வரலாற்றுசாதனையை ஒரே வாரத்தில் தாண்டி அசகாய சாதனை படைத்துள்ளது பாகுபலி.

    ஒரு படைப்பாளி தன் படைப்பின் வணிகரீதியான வெற்றியால் மட்டும் சிறப்படைவதில்லை. தன் பாத்திரப்படைப்பாலும், கலைநேர்த்தியாலுமே சிறப்பை அடைகிறான். அவ்விதத்தில் இத்திரைப்படக் கதாப்பாத்திரமான அமரேந்திர பாகுபலியை உருவாக்கிய இயக்குனர் ராஜமவுலியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    bahu

    ஏன் அமரேந்திர பாகுபலி பாத்திரத்தின் தந்தையான இயக்குனர் ராஜமவுலியை விருதுக்கு தேர்வு செய்தோம்?

    அமரேந்திர பாகுபலி மக்கள் நலனில் அக்கறை கொண்ட மன்னர். அவர் சகோதரன் பல்வாள்தேவன் ஆண்மை நிரம்பிய மாவீரன். ஆனால் ஆண்மையுடன் தயாளகுணமும் அன்பும் சேர்கையில் மனிதன் பேராண்மை கொண்டவன் ஆகிறான். அத்தகைய பேராண்மை கொண்ட மாவீரர் அமரேந்திர பாகுபலி. போர்க்களத்தில் வெற்றியை விட மக்கள் உயிர் மேல் என சாதுர்யமாக மக்களை காத்தவர். அதனால் மகிழ்மதி மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மிகப்பெரும் சாம்ராஜ்யத்தின் மன்னராக ஆனபின், தேவசேனா எனும் இளவரசியை காதலிக்கிறார். காதலியா, மணிமகுடமா என வருகையில் காதலிக்காக மணிமகுடத்தை விட்டுத்தந்து தன் சகோதரனை ஆள அனுமதிக்கிறார்.

    ஆட்சி அதிகாரத்திற்காக கொலைகளை செய்யத் தயங்காத, பலதார மணம் புரியும் மன்னர்களைக் கண்டுள்ளோம். ஆனால் பாகுபலி காதலுக்காக நாட்டை விட்டுத்தருகிறார். தாய் மேல் உயிரையே வைத்திருந்தாலும், தாய் தவறு செய்கையில் ஜால்ரா போடாமல் தட்டிக் கேட்கிறார். மக்களுக்கு பிரச்சனை என வருகையில் அவர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதனால் இறுதியில் கொலை செய்யவும்படுகிறார். “பெண்களை அவமதித்தால் வெட்டப்படவேண்டியது கை அல்ல, தலை” எனவும் உறுதிபடக்கூறுகிறார்,

    அக்காலத்தில் காணப்பட்ட பரம்பரை அடிமைக் கோட்பாட்டின் சின்னம் கட்டப்பா. அவரை பல்வாள்தேவன் “நாய்” போல கருதி அவமதிக்கையில், தன் தாய்மாமனாக கருதி தன் பிள்ளையை அவர் ஆசிர்வதிக்கவேண்டும் எனக் கேட்கிறார் பாகுபலி. தனக்கென பிரத்தியேக அரசவம்ச உணவிருக்க, அதைத் தவிர்த்து படைவீரர்களுக்கு அளிக்கப்படும் உணவையே உண்கிறார்.

    அவரிடம் ஆன்மிக நம்பிக்கை உள்ளது. ஆனால் மூடநம்பிக்கை இல்லை. போர்க்களத்தில் எருமையை பலியிட மறுத்து, தன் இரத்தத்தை தந்து ஒரு எருமையின் உயிரைக் காக்கிறார்.

    பாகுபலி தன் வளர்ப்புத் தாயான ராஜமாதா சிவகாமி தேவியால் வளர்க்கப்படுபவர். ஆனால் வளர்ப்புத்தாயை பெற்ற அன்னையாக கருதுகிறார். இது இராமன் கைகேயி மேல் இறுதிவரை வைத்திருந்த நன்மதிப்பை நினைவூட்டுகிறது. ஒருமனிதன் நன்றாக வாழ்கையில் அவன் பேசும் நியாய, தருமங்களை விட அவன் வீழ்கையில் அவன் கடைபிடிக்கும் கோட்பாடுகளே அவனது நன்மதிப்பை நிர்ணயிப்பவை. அவ்வகையில் தன் மரணத்தருவாயிலும் தன் தாயைக் காப்பாற்றும்படி கட்டப்பாவிடம் கூறி கம்பீரமாக உயிர்விடுகிறார் பாகுபலி. தான் அரசபதவியை இழந்தபின்னரும், கோட்டையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னரும் மக்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்கிறார்.

    மேலும் திரைப்பட நாயகர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞர்கள் கொண்ட நாட்டில் பாகுபலி உடல்வலிமை மிக்கவராகக் காட்டப்பட்டிருப்பது இளைஞர்களிடையே ஆரோக்கியமான உடல்வலு கலாச்சாரத்தை உருவாக்கும் எனவும் நம்புகிறோம்.

    தொழிலாளர் தினம் மற்றும் அன்னையர் தினம் ஆகியவை வரும் மே மாதத்தில் அனைத்து தொழிலாளர்களும் விரும்பும் ஒரு முதலாளியாக, மக்கள் நலனை மனதில் கொண்ட தலைவனாக, அனைத்து தாய்மார்களும் போற்றும் பண்பு நிரம்பிய இலக்கிய கதாபாத்திரமாக மன்னர் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை படைத்த முற்போக்குச் சிந்தனையாளரான இயக்குனர் ராஜமவுலியை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • பெண்ணியத்தை ஆண்கள் ஹைஜாக் செய்தது எப்படி?

    செல்வன்

    மேலைநாடுகளில் பெண்ணிய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கம், அதன் விளைவால் பெண்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்தை அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

    20ம் நூற்றாண்டில் பின்நவீனத்துவம், மார்க்சிசம் முதலானவை பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் திருப்பத்தைக் கொண்டுவந்தன. விவாகரத்து பெரும் பாவம், கல்யாணத்துக்கு முன் செக்ஸ் தவறு என்ற கன்சர்வேடிவ் சிந்தனைகள் 60களில் குறையத் துவங்கின. திருமணம் செய்யாமல் கூடிவாழ்ந்து குழந்தை பெறத் துவங்கினார்கள். பணியிடங்களில் ஆணுக்குச் சமமாக பெண்கள் பணிக்கு வந்தார்கள். ஆண் செய்யும் எந்த பணியையும் பெண்ணும் செய்யலாம் எனும் நிலை உருவானது. பிடிக்காத உறவுகள் விலக்கப்பட்டன. விவாகரத்துகள் பெருகின.

    ஆனால் அதே சமயம் விசித்திரமான ஒரு நிகழ்வும் நிகழ்ந்தது… வருடா வருடம் ஆண்/பெண் மகிழ்ச்சி விகிதத்தை அளந்து கொண்டுவரும் ஆய்வாளர்கள் 60களுக்குப் பின் பெண்களின் மகிழ்ச்சி வருடா, வருடம் குறைந்து வருவதைக் கண்டுபிடித்தார்கள். சுதந்திரமும், உரிமைகளும், கடமைகளும் பெருக மகிழ்ச்சி குறைந்தது. ஆண்களின் மகிழ்ச்சி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2009ம் ஆண்டுவரை இதே நிலைதான்

    இதுகுறித்து ஆய்வு நிகழ்த்திய பேராசிரியர் பெட்சி ஸ்டீபன்சன் பாலியல் சுதந்திரம், விவாகரத்து, முதலானவை 70களில் துவங்கி பெண்களுக்கு கிடைத்த உரிமைகளாக கூறப்பட்டாலும் இந்த உரிமைகளின் நன்மைகள் அனைத்தும் ஆண்களுக்கேச் சென்று சேர்ந்ததாகக் கூறுகிறார். இதற்கு ஒரு உதாரணமாக அவர் கூறுவது பாலியல் சுதந்திரம். 60களுக்கு முன்பு கல்யாணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் உறவுகொன்டால் அவளை திருமணம் செய்தாக வேண்டும் எனும் சமூக நிர்ப்பந்தம் ஆணுக்கு இருந்தது. ஷாட்கன் வெட்டிங்க்ஸ் எனப்படும் துப்பாக்கிமுனை கல்யாணங்கள் அப்போது இதனால் நிகழ்ந்தன. ஆனால் பாலியல் சுதந்திரம் என்றானபின் அத்தகைய சமூக நிர்ப்பந்தங்கள் குறைந்துவிட்டன. ஆக இதன் முழுபலனும் ஆண்களுக்கே சேர்ந்தது என்கிறார் பெட்ஸி

    பாலியல் சுதந்திரம், அதிகரிக்கும் மணவிலக்குகள், பணிக்குச் செல்லும் சமூக நிர்ப்பந்தம், இவையே பெண்களின் மகிழ்ச்சி குறையக் காரணம் என பெட்சி ஸ்டிவன்சனின் ஆய்வு தெளிவாகக் கூறுகிறது. முன்பு பணிக்குப் போகாத ஆணுக்கு கல்யாணம் ஆகாது. பெண்கள் வேலைக்கு போகாததைப் பற்றி யாரும் அலட்டிகொண்டது இல்லை. ஆனால் இன்று வேலைக்குப் போகாமல் இருக்கும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகாது எனும் நிலைதான். பெண்களும் வேலைக்குப் போகவேன்டும் எனும் எதிர்பார்ப்பு சமூகத்தில் அதிகரித்து உள்ளது.

    பாலியல் சுதந்திரத்தின் ஒரு விளைவு அதிகரிக்கும் சிங்கிள் மதர்ஸ் எனப்படும் திருமணம் ஆகாதத் தாய்மார்கள். நம் நாட்டில் முன்பு விதவா விவாகம் மறுக்கப்பட்டதால் விதவைகள் அனுபவித்த துன்பங்களை விட அதிக துன்பங்களை இத்தாய்மார்கள் அனுபவிக்கின்றனர். மேலைநாடுகளில் மறுமணம் பிரச்சனை இல்லையெனினும் 20 வயதில் கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்ணுக்கு மணம் ஆவது அத்தனை எளிது இல்லை. இவர்களில் பலரும் ஏனோ கடைசிவரை திருமணம் செய்யாமலேயே பாய்பிரண்டுகளை மட்டும் மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுகிறார்கள். ஆய்வுகள் கூறுவது என்னவெனில் சிங்கிள் மதர்களிடம் வளரும் ஆண்குழந்தைகள் அதிக அளவில் சிறைக்குச் செல்வதும், பெண்குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயதில் கர்ப்பமாவதும் அதிக அளவில் என்பதுதான்.

    இது கட்டாயம் பெண்ணின் குற்றம் மட்டும் அல்ல. ஆணின் குற்றமும் தான். ஆனால் இத்தகைய நிகழ்வுகள் நிகழாமல் இருக்கத் தானே திருமணம் என்ற அமைப்பு உருவானது? அது உடைந்ததன் பாதிப்பு முழுக்க பெண்கள் மேல் அல்லவா விழுகிறது?

    கலாசாரம், கற்பு, திருமணம், குடும்பம் அனைத்தும் பெண்கள் நன்மைக்காக ஆண்களை கட்டுக்குள் வைக்க உருவாக்கபட்டவை. இவை ஒழிந்தால் அதன் முழுபலனும் ஆண்களுக்கே சென்று சேரும். ஆணை இமிடேட் செய்வது தான் பெண்ணியம் எனச் சொல்லும் இயக்கங்கள் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் மேலை நாடுகளில் நிறைவேற்றப்பட்டன. துரதிருஷ்டவசமாக அதன் பலன்கள் முழுவதையும் ஆண்களே அடைகிறார்கள். பெண்கள் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டார்கள். கற்பு, திருமணம், கலாச்சாரம் அனைத்தும் ஆண்களை நெறிப்படுத்த இடப்பட்ட தளைகள். அவை அகற்றப்பட்டால் முழு நன்மையும் ஆண்களுக்கே.

    ஆணாதிக்க சமூகங்களில் நிலவிய இன்னொரு அவலம் சிசுக்கொலை. கள்ளிப்பால் ஊற்றி பெண்குழந்தைகள் கொல்லப்படுவதைப் படித்து வேதனைப்படுகிறோம். ஆனால் மேலை நாடுகளில் பல கோடி சிசுக்கள் பெண் உரிமை எனும் பெயரில் அபார்ட் செய்யப்படுகின்றன. சமீபத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்துமாத சிசுவை அபார்ஷன் செய்ய தடை விதித்து சட்டம் நிறைவேற்றப்பட இருந்ததை எதிர்த்து பெண்ணுரிமை இயக்கங்கள் கடுமையாகப் போராடின.

    பண்டைய சமூகங்களில் பலதாரமணம் எனும் அவலம் இருந்தது. இன்று கற்பு நெறி எனும் முறையே அழிந்ததால் ஆண்கள் பலரும் கள்ள உறவுகளில் மூழ்கித் திளைக்கிறார்கள். சமீபத்தில் பிரெஞ்சு நாட்டின் அதிபர் கள்ள உறவு வைத்திருக்கும் செய்தி வெளியே வந்ததும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது.. பத்திரிக்கைகள் அதைப் பெரிதாகக் கன்டுகொள்ளவில்லை.

    ஆக பண்டைய சமூக அவலங்கள் வேறு பெயர்களில், வேறு விதங்களில் பெண்களை இன்னும் பாதிக்கின்றன. இதற்கான தீர்வுகள் எளிமையானவை அல்ல என்பதுதான் இதன் சோகமே.

    Share
  • நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! (4)

    செல்வன்

    இந்தத் தொடரில் கான்சர், டயபடிஸ், மாரடைப்பு, அல்சர், ஆஸ்த்மா முதலிய வியாதிகள் அனைத்தும் ஆதிமனிதனுக்கு இல்லை என்பதும் அதற்கு காரணம் அவன் வாழ்க்கை முறையும், உணவுமே எனும் கருத்து ஆராயப்பட்டது.

    குண்டு, ஒல்லி என்பதன் உளவியலை ஆராயாமல் இந்த தொடர் நிறைவுறாது. குண்டாக இருப்பது நம்மைப் பொறுத்தவரை விரும்பதக்கது அல்ல. ஆனால் இத்தகைய உளவியலே நாகரிக மனிதனின் போக்குதான். 20ம் நூற்றாண்டு பத்திரிக்கைகள், ஹாலிவுட், பார்பி பொம்மைகள் ஆகியவை உருவாக்கிய ஒரு செயற்கை பிம்பம் சின்ன இடை, மெலிந்த உடல் தான் அழகு என்பது. பரிணாமரீதியில் குண்டாக இருக்கும் மனிதன்தான் பஞ்சகாலத்தில் உயிர் பிழைக்கக் கூடியவன். நம்மைப் பொறுத்தவரை நம் ஜீன்களுக்கு பசுமைப் புரட்சி நடந்ததும், அம்மா உணவகத்தில் 1 ரூபாய் இட்லி கிடைப்பதும் இன்னும் பதிவாகவில்லை. நம் ஜீன்களுக்கு நாம் இன்னும் ஆதிவாசியாக குகையில் இருக்கிறோம் என்பதுதான் தெரியும். அதனால் அதிக உணவு கிடைத்தால் அதைக் கொழுப்பாக மாற்றி அதனைச் சேமித்து, வரும் குளிர்காலத்துக்கு நம்மை உயிர்பிழைக்க வைக்கும் முயற்சியை எடுக்கிறது.

    அதனால் என்னதான் உடல்பயிற்சி செய்தாலும், பட்டினி கிடந்தாலும் நவீன காஸ்மாபாலிடன் பத்திரிக்கையில் இருப்பது மாதிரி மாடல்களின் உடல் அழகை நாம் அடைவது சாத்தியம் இல்லை. அதாவது இயற்கை முறையில். மார்பக அறுவை சிகிச்சை, ஸ்டிராய்டு மாதிரி உட்கொண்டு சிக்ஸ்பேக் வைக்கலாம். ஆனால் இயற்கை உணவில், இயற்கை வாழ்க்கை முறையில் அடையப்படும் அழகு என்பது வேறு.

    ஆதிமனிதன் செதுக்கிய பெண் சிற்பம் ஒன்று வில்லன்டாஃர்ப் நகரில் கிடைத்தது. அதில் இருக்கும் பெண் உருவம் “வில்லன்டாஃர்ப் வீனஸ்” என அழைக்கபடுகிறது. அன்றைய அழகியல் மதிப்பீட்டின்படி குண்டாக இருக்கும் பெண்தான் அழகானவளாக கருதப்பட்டாள். இன்று இந்தப் பெண் அழகற்றவளாக கருதப்படுவாள். இன்றைய காலகட்டத்தில் ஒல்லியாக கருதப்படும் மேற்கத்திய அழகியல் மனப்பான்மை ஆதிமனிதனுக்கு இல்லை.

    அதனால் நீங்கள் பின்பற்றும் உணவுமுறையை மாற்றுமுன் “எதை அடைவதற்கான நோக்கமாக இந்த உணவுமுறையை நாம் பின்பற்றுகிறோம்” என்பதை தெளிந்துகொள்வது முக்கியம்.

    ஆதிமனித உணவு முழுக்க மாமிசமாக இருப்பதால் சைவர்கள் என்ன செய்வது என கேள்வி எழுவது இயல்பு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சைவர்கள் இல்லை. சைவம் என்பது கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் விவசாய நாகரிகம் பல்கிப் பெருகிய பின், கால்நடைகளை பாதுகாக்க வேண்டி விவசாய சமூகம் கடைபிடித்த வாழ்க்கை முறை. பழங்குடிகளால் காட்டில் முழு சைவர்களாக வாழ்ந்திருக்க இயலாது. சைவ உணவில் முழு ஆரோக்கியத்தை அடையலாம். கலோரிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் எடைகுறைப்பு, சர்க்கரை நோய் குறைப்பு ஆகியவற்றை அடையலாம். என் தனிப்பட்ட கருத்து என்னவெனில் முற்றிய சர்க்கரை வியாதி இருப்பவர்கள் காட்டுமிரான்டி உணவின் மூலமே முழு குணம் அடைய இயலும் என்பது. அவர்களுக்கு மட்டும் சைவ உணவு பலனளிக்காது. மற்ற யாரும் இந்த உணவு முறைக்காக தம் புலால் உண்ணாமை கொள்கையை கைவிட வேண்டியது இல்லை.

    கட்டுரைத் தொடரை எழுத வாய்ப்பளித்த வல்லமை ஆசிரியர் குழுவினருக்கும், படித்து கருத்தளித்த அனைவருக்கும் என் நன்றி.

    (முற்றும்)

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டி உணவுமுறையும்: டயபடிஸ் 3

    செல்வன்

    டயபடிஸ் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் எளிமையானது.

    நாம் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைந்தவுடன் டயபடிஸ் நம்மை வந்தடைகிறது.

    நம் உணவில் நாள் தவறாமல் சர்க்கரை சத்து சேர, சேர இன்சுலினின் தேவையும் அதிகமாகிறது. இன்சுலின் நம் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றி நம் உடலில் சேகரிக்கும்படி செல்களுக்கு கட்டளை பிறப்பிக்கிறது. உடலால் 2 நாள் தேவைக்கு மேலான குளுகோசை சேமிக்க முடியாது. ஆனால் ஏராளமான அளவு கொழுப்பை உடலால் சேர்க்க இயலும். ஆனால் தினமும் இன்சுலின் பிறப்பிக்கும் இந்த உத்தரவுக்கு கட்டுபடும் நம் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைகிறது. இந்த சூழலில் இன்சுலினின் கட்டளையை ஏற்று சர்க்கரையை கொழுப்பாக்க உடல் மறுக்கிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

    உடலை சொல்பேச்சு கேட்க வைக்க நம் பேன்க்ரியாஸ் மேலும் அதிகமான அளவில் இன்சுலினை சுரக்கிறது. ஒரு கட்டத்தில் தன்னால் இயன்ற அளவு அதிகபட்ச இன்சுலினை பென்க்ரியாஸ் சுரக்கிறது. ஆனால் அந்த அளவு அதிக இன்சுலினயும் எதிர்க்கும் ஆற்ரலை உடல் பெறுகிறது. அதனால் நாம் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்கு ஆளாகிறோம்.

    உணவில் உள்ள சர்க்கரை அளவை குறைத்தால் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் மிக குறைந்துவிடும். டயபடிஸ் வரும் வாய்ப்பும் குறையும்.

    இது குறித்து நிகழ்த்தபட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது

    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15047685

    ஆய்வு நிகழ்த்தபட்டது கனெக்டிகட் பல்கலைகழத்தில்

    குண்டாக ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் 13 பெண்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டனர். இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவு நம் மருத்துவர்கள் பைந்துரைக்கும் குறைந்த கொழுப்பு உணவை உட்கொண்டது. இன்னொரு பிரிவு குறைந்த சர்க்கரைசத்து நிரம்பிய உணவை உட்கொண்டது. இரு குழுவினரும் ஒரு நாளைக்கு 500 காலரி மாத்திரமே உண்ண பணிக்கபட்டனர். 1 மாதம் முழுக்க இப்படி முக்கால் பட்டினி டயட்டை அவர்கள் மேற்கொண்டனர்.

    1 மாதம் கழித்து முடிவுகள் ஒப்பிடப்பட்டன.

    உயர்கொழுப்பு உணவை உண்ட பெண்களின் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவு குறைந்த கொழுப்பு சத்து நிரம்பிய உனவை உண்ட பெண்களைன் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவை விட குறைந்தது கண்டுபிடிக்கபட்டது. அதாவது உயர்கொழுப்பு, குறைந்த சர்க்கரை சத்து நிரம்பிய உணவு 1 மாதத்தில் அதை உண்ட பெண்களின் உடலின் இருந்த இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைத்தது. ஆக வெறும் ஒரே மாதத்தில் இந்த பெண்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஜீரணம் செய்ய அவர்களுக்கு குறைந்த இன்சுலினே போதும் என்ற நிலை உருவானது.
    இன்னும் பல ஆய்வுகளை எழுதலாம்.

    ஆனால் அவற்றின் முடிவுகள் பெரிதும் மாறுபடுவது இல்லை.

    சர்க்கரை சத்து உள்ள உணவுகள் கெடுதல். இயற்கையான கொழுப்பு நிரம்பிய உணவுகள் உடலுக்கு நன்மையளிப்பவை.

    இதை தான் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஏன் இன்னும் டயபடிஸ் பேஷன்டுகளுக்கு சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன?

    அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் உண்மையில் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை குணமாக்க ஆலோசனை கூறுகிறதா அல்லது அவர்களை நிரந்தரமாக சர்க்கரை நோயிலேயே இருக்க வைக்க ஆலோசனை கூறுகிறதா என்பது பலசமயம் பிடிபடுவது இல்லை.

    உதாரணமாக அந்த சங்கம் கூறுவது

    “உங்கள் உடல் சர்க்கரையை குளுகோசாக எளிதில் மாற்றிவிடும்

    உடலில் உள்ல குளுகோஸ் லெவெலை விரைவில் ஏற்றும் சக்தி படைத்தது கார்போஹைட்ரேட் நிரம்பிய உணவுதான்

    எத்தனைகெத்தனை அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுகிறீர்களோ அத்த்னைக்கு அத்தனை உங்கள் உடலில் சர்க்கரை லெவெல் ஏறும்

    நீங்கள் அதிகம் உண்னவேன்டிய உணவுகள் கார்போஹைட்ரேட் நிரம்பிய ரொட்டி, அரிசி, பாஸ்டா போன்ற உணவுகளே..”

    எதாவது புரிகிறதா?

    எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

    சர்க்கரை உண்பதால் சர்க்கரை நோய் வரும் என சொல்லிவிட்டு சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நிரம்பிய உணவுகளை பரிந்துரைப்பது ஏன்?

    எனக்கு புரியவில்லை

    உங்களுக்கு புரிகிறதா?

    (அடுத்த பகுதியில் நிறைவுறும்..)


    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகள் (டயபடிஸ்- பாகம் 2)

    செல்வன்

    டயபடிசுக்கு என்ன காரணம் என்பது பலவருடமாக 20ம் நூற்ராண்டு மருத்துவர்களை வாட்டி வந்த குழப்பம். உலகில் பல இடங்களில் இருந்து வந்த ஆய்வுகள் பல குழப்பமான முடிவுகளை அளித்தன. உதாரணமாக “வெள்ளை சர்க்கரை உண்பதுதான் டயபடிசுக்கு காரணம். இயற்கையான தானியம், பழங்களில் இருக்கும் சர்க்கரை சத்து டயபடிசுக்கு காரணம் அல்ல” என்பது 20ம் நூற்றாண்டின் மத்தியில் மருத்துவர்களிடம் நிலவிய மூட நம்பிக்கை. இன்றும் கூட பலர் சமைக்காமல் உண்ணும் பழம், காய்கறிகள் மூலம் சர்க்கரை வராது என நம்புகிறார்கள். ஆனால் 60களில் நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினரிடையே நிகழ்த்தபட்ட ஆய்வு இந்த எண்னத்தை தகர்த்தது. மாவோரிகள் பெருமளவில் டயபடிஸ், கொலஸ்டிரால், மாரடைப்பு, தொப்பை ஆகியவற்றால் பாதிப்படைந்திருந்தனர். பெண்களில் சுமார் 60% பேர் குண்டாக இருந்தனர். அவர்கள் உணவு பெரும்பாலும் நியூசி அரசு ரேஷன் மூலம் கிடைத்த விலைகுறைவான கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பிய உணவுதான் (ரொட்டி, மாவு, பிஸ்கட்டுகள், சீரியல்கள்). கணக்கு போட்டதில் ஒரு மாவோரி வருடம் ஒன்றுக்கு 70 கிலோ சர்க்கரையை இந்த உணவுகள் மூலம் மட்டுமே பெற்றது தெரிய வந்தது. (தினம் 200 கிராம் தானியம்,பழம், உண்டால் வருடம் 70 கிலோ சர்க்கரை நம் உணவிலும் சேரும்.) 

    டயபடிஸ் அல்லாத வேறு வியாதிகளை ஆராய்ந்து வந்தவர்களும் அது சர்க்கரையுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். உதாரணமாக உலகயுத்த காலத்தில் ஹாங்காங் சிறைகளில் கைதியாக அடைபட்டிருந்த க்ளீவ் எனும் மருத்துவர் அங்கிருந்த சிறைகைதிகள் ஒருவர் விடாமல் அல்சர் வியாதியால் பாதிக்கபட்டிருந்ததை அறிந்தார்.  யுத்த காலத்தில் மாமிசம் கிடைக்காததால் கைதிகளுக்கு வெறும் அரிசி உணவு மட்டுமே தினம் மூன்று வேளை வழங்கப்பட்டது. யுத்தம் தீவிரமாகி வெள்ளை அரிசி கிடைப்பது நின்று கைதிகளுக்கு விலை குறைந்த மட்டமான பழுப்பு அரிசியும், கம்பு, பார்லி முதலிய தானியங்களும் வழங்கபட்டன. பல சமயங்களில் அவர்களுக்கு உணவு கூட வழங்கபடவில்லை. ஆனால் அதிசயிக்கதக்க முறையில் வெள்ளை அரிசி சப்ளை நின்றவுடன் கைதிகளில் பெரும்பாலானோருக்கு இருந்த அல்சர் மாயமாக மறைந்தது.

    யுத்தம் முடிந்து விடுதலை ஆன மருத்துவர் க்ளீவ் அல்சரை பற்றி ஆராய்வதை வாழ்நாள் லட்சியமாக கொன்டார். உலகெங்கும் இருந்த மருத்துவர்களுக்கு கடிதம் எழுதி அல்சர் நோயாளிகளின் உனவை பற்றிய தகவலை திரட்டினார். 1962ம் வருடம் அந்த கடிதங்கலை தொகுத்து நூலாக வெளியிட்டார். அதில் பக்கம், பக்கமாக மருத்துவர்கள் கூறியதன் சாராம்சம் இதுதான்: எங்கெங்கு எல்லாம் ரொட்டியும், மாவும், வெள்ளை அரிசியும் மக்களின் பிரதான உணவாக உள்ளதோ அங்கே எல்லாம் பெப்டிக் அல்சர் மக்களை படாதபாடு படுத்துகிறது என்பதும் இந்த உனவுகளை உண்ணாதவர்களுக்கு அல்சர் இல்லை என்பதும்.

    ஆக க்ளீவ் தன் நூலில் கூறுவது இதைத்தான். உலகில் பலநாடுகளில் மக்களின் பாரம்பரிய உணவுகள் மேற்கத்தியமயமாதலின் தாக்கத்தால் மாவு, மில் அரிசி, சர்க்கரை முதலியவை சேர்க்கபட்டு உருமாற்றம் அடைந்துவிட்டன. (மில் வெள்ளை அரிசி நம் தொன்மை உணவான இட்லியை வெள்ளை நிறமாக்கியதை நினைவில் கொள்ளலாம்). மக்களின் பாரன்ம்பரிய உணவுகள் நாகரிகமடைந்ததும் நாகரிக மனிதனின் வியாதிகளான டயாப்டிஸ், அல்சர் முதலியவை அவர்களையும் வந்து அடைந்துவிட்டன. என்னதான் சத்துமிகுந்த உணவாக இருந்தாலும் அதில் சர்க்கரை, மாவு, ரொட்டி, அரிசி முதலியவற்றை சேர்த்தால்  அதன்பின் அந்த உள்ள வைட்டமின், மினரல், புரதம் எதுவுமே பொருட்டு அல்ல. அத்தகைய உணவு அதன்பின் அம்மக்களை நாகரிக மனிதனின் வியாதிகளுக்கு இட்டுசெல்லும்.

    Inline image 1

    டயபடிஸ், இதய் அடைப்பு, உடல் பருமன், ரத்த அழுத்தம், பல் வியாதி இவை அனைத்தும் நெருங்கிய தொடர்பு உடையவை. இவைகளை தனி தனியாக ஆராய்ந்த மருத்துவர்கள் பலரும் இந்த வியாதிகளுக்கு காரணம் நாகரிக உனவுகள் என்பதையும், அதில் உள்ள சர்க்கரையும் தான் என்பதை கண்டுபிடித்தார்கள். டயபடிஸ் வந்தவர்கள் டயபடிஸ் இல்லாதவர்களை விட இருமடங்கு அதிக விகிதத்தில் மாரடைப்பால் இறந்தார்கள். கிட்னி பழுதானவர்கள் பெருமளவிலானவர்க்கு டயபடிஸ் இருந்தது. பல் சொத்தை விழுந்தவர்கள் பலருக்கு டயாடிஸும், உடல் பருமனும் இருந்தன.

    மருத்துவர் ஜாஸ்லின் இதைப்பற்றி பின்வருமாறு எழுதுகிறார்

    “பல் சொத்தை, ஈறு கெடுதல் ஆகியவை நிகழ்வது ஒருவருக்கு டயபடிஸ் வருவதற்கான முக்கிய அறிகுறி” –

    சர்க்கரைசத்து நிரம்பிய அரிசி, கோதுமை உனவுகளை உண்ணும் பெண்கள் பலருக்கும் ரத்தசோகை, மாதவிலக்கு தேதி தவறுதல், பிரசவகால சிக்கல்கள், பிரசவகால மரணங்கள் ஆகியவை அதிகம் இருந்தன. இதே மருத்துவர்களே இல்லாத எஸ்கிமோ பெண்களிடையே இந்த வியாதிகள் எதுவும் இல்லை. எஸ்கிமோக்களிடையே ஐந்து வருடம் வாழ்ந்து ஐந்து வருடமும் வெறும் மாமிசம், மீன் உணவுகலையே உன்ட ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்டெபன்சனின் குறிப்புப்படி எஸ்கிமோ பெண்களுக்கு பிரசவ வலி என மருத் துவருக்கு சேதி வந்து அவர் அவர்கள் வீடுகளுக்கு போவதற்குள் 99% பெண்களுக்கு பிரசவம் ஆகிவிடும். ஒன்று இரண்டு குழந்தைகளை பெற்றே உடல் உருக்குலைந்து போகும் நகர்ப்புற பெண்களை கண்ட ஸ்டெபன்சன் ஏழெட்டு குழந்தைகளை பெற்றும் சர்வசாதாரணமாக கடுமையான வேலைகளை செய்யும் எஸ்கிமோ பெண்களை கண்டு மலைத்து போனதாக எழுதுகிறார்.

    எஸ்கிமோ உணவு? வருடம் 11 மாதம் வெறும் மாமிசமும், மீனும் தான். வருடம் ஓரிரு மாதம் மட்டும் அபூர்வமாக கிடைக்ககூடிய காய்கறிகள், பழங்களை கூட அவர்கள் கொழுப்பு நிரம்பிய சீல் எண்னெயில் வதக்கி எடுத்துதான் உண்பார்கள். காரணம் காய்கறிகள் கூட பழுதான உணவுகள் என்பது எஸ்கிமோ நம்பிக்கை!!!!

    (தொடரும்..)

    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும் – 6.

    செல்வன்

    கொலஸ்டிராலை வேண்டியமட்டும் அலசியாகி விட்டது. நாகரிக மனிதனின் இன்னொரு வியாதியான டயபடிஸ் எனும் சர்க்கரை வியாதியை அடுத்து அலசுவோம்.

    டயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.

    டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.

    டயபடிஸ் வரக் காரணம் என்ன?

    நம் உணவில் உள்ள சர்க்கரை (கார்போஹைட்ரேட்) தான் சர்க்கரை நோய்க்கு காரணம். சர்க்கரை அரிசி, கோதுமை, பழங்கள், காய்கள் முதலிய பலவற்றிலும் ஏராளமாக இருக்கிறது. சர்க்கரையில் மூன்றூவகை உண்டு

    க்ளுகோஸ்

    லாக்டோஸ் – பாலில் இருக்கும் சர்க்கரை

    ப்ருக்டோஸ் – பழத்தில் இருக்கும் சர்க்கரை

    நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதலிய உணவுகளில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை உண்டு. இது நேரடியாக குளுகோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுகோஸ் உடலில் இறங்கியவுடன் அதை ஜீரணம் செய்ய நம் பேன்க்ரியாஸ் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டி உள்ளது. இன்சுலின் உற்பத்தி ஆனதும் பல தீய விளைவுகள் உடலில் நிகழ்கின்றன.

    ஆதி மனிதன் தினமும் மூன்று வேளை உண்ணும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே சிரமம் எனும் நிலையில் இருந்தவன். அதனால் தேவைக்கு அதிகமாக உண்டால் அந்த அதிகபட்ச உணவை சேமித்து பஞ்சகாலத்தில் பயன்படுத்தும் அவசியம் அவனுக்கு இருந்தது. அதற்கு இன்சுலின் பேரளவில் பயன்பட்டது. ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுகோஸ் கலந்தால் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. இன்சுலினின் உற்பத்தி நம் உடலில் உள்ள செல்களுக்கு அந்த கூடுதல் சர்க்கரையை சேமிக்கும் சிக்னல். கூடுதல் சர்க்கரையை எப்படி சேமிக்க முடியும்? இரு வழிகளில். ஒன்று கிளைகோஜென். கிளைகோஜென் நம் உடலின் ஆற்றல் தேவைகளுக்கு பயன்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் உடலுக்கு இரு நாள் அளவுக்கு மேல் தேவையான ஆற்றலை கிளைகோஜென்னாக சேமிக்கும் சக்தி இல்லை. ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஏராளமாக கொழுப்பைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் நம் உணவில் உள்ள சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு தொப்பையில் சேர்க்கபடுகிறது. நாமும் குண்டோதரர் ஆகிறோம்.

    சர்க்கரை வியாதி இதில் எப்படி வருகிறது?

    இன்சுலின் என்பது ஃபயர் எஞ்சின் மாதிரி. கூடுதல் சர்க்கரை உடலில் சேர்ந்தால் ஒரு எமெர்ஜென்சி எனும் அளவில் இன்சுலின் சுரந்து அதை கட்டுக்குள் வைக்கும். ஆனால் தினம் மூன்று வேளையும் நெருப்பு பிடித்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? இதுவே தொடர்ந்து நாற்பது வருடம் நீடித்தால் என்ன ஆகும்?

    ஓடிக்கொன்டிருக்கும் ஃபயர் எஞ்சின் களைத்துப் போய் நின்றுவிடும். அதாவது பேன்க்ரியாஸ் தன் இன்சுலின் சுரக்கும் திறனை இழந்துவிடும் அல்லது குறைத்துக் கொள்ளும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகம் ஆகி நமக்கு சர்க்கரை வியாதி வரும். அதன்பின் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்குச் செல்வோம்.

    துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரை சத்து கொன்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம். காலையில் ஐந்து இட்லியும், சாம்பாரும் சாப்பிட்டால் நீங்கள் காலையில் மட்டும் 20 ஸ்பூன் சர்க்கரை (75 கிராம் சர்க்கரை)உண்கிறீர்கள் என பொருள்.

    “இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?” எனக் கேட்டு நீங்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

    ஐந்து இட்டிலி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது.

    சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சக்கட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்ணவேண்டும் போல் தோன்றும்.

    ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்குத் தேவையான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்

    நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் லிக்விட் க்ளுகோஸ் 100

    உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)

    வெள்ளை சர்க்கரை 64

    முழு கோதுமை ரொட்டி 64 முதல் 87 வரை

    வெள்ளை அரிசி 64 முதல் 87 வரை (வகையை பொறுத்தது)

    வெள்ளை ரொட்டி 87

    ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்துப் போகச் செய்யும். அதைக் குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயபடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.

    ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.

    ஆக “நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை” என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.

    காலை ஐந்து இட்டிலி

    மதியம் சாதம், சாம்பார், ரசம்,

    மாலை வடை, டீ காப்பி

    இரவு சப்பாத்தி, உருளைகிழங்கு குருமா

    இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது தினம் சுமார் அரை கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளை சர்க்கரையை நேரடியாக உண்பதற்கு சமம்.

    தினம் அரை கிலோ வெள்ளை சர்க்கரையை 40, 50 வருடங்களாக தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும், கொலஸ்டிரால் வருவதிலும் வியப்பு என்ன?

    இது எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

    காட்டுமிராண்டி உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்ன?

    கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு சமம்.

    காரணம் ஆதிமனிதன் உண்டது பெருமளவில் மாமிசம், சில வேர்கள், காய்கள். கோடையில் மட்டும் சில பழங்களை உண்டான். அதிலும் வேட்டை கிடைக்காத நாட்களில் முழு பட்டினி. தவிரவும் சர்க்கரை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற விவசாயகாலகட்ட பழங்கள் அவன் காலத்தில் இல்லை. ஆக ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 30 கிராம் அளவு சர்க்கரை அவன் உடலில் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம். மேலும் 10,000 ஆன்டுகளுக்கு முன்புவரை உலகின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டு இருந்தது. அதனால் மாமிசம் தான் அவன் முதன்மை உணவாக இருந்தது. இன்றும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ உணவில் 97% மாமிசம். மாமிசத்தில் துளி சர்க்கரை இல்லை. அதனால் ஆதிமனிதன் நாம் உண்பதைப் போன்ற பெரும் அளவுகளில் சர்க்கரையை உண்ணவில்லை. அதனால் அவனுக்கு சர்க்கரை வியாதியும் வரவில்லை.

    ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு என்ன?

    இட்டிலி மற்றும் சப்பாத்தி.

    சப்பாத்தியின் கிளைசெமிக் எண் வெள்ளை சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்சை விட அதிகம்.

    சர்க்கரை நோயாளிகள் நாலு சப்பாத்தியை சாப்பிட்டு அதில் உள்ள சர்க்கரையை கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வது என்பது அரை கிலோ சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அதைக் கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வதற்கு சமம்!!!

    இப்படி இட்டிலி, சப்பாத்தி போன்ற “ஆரோக்கிய உணவுகளை” தொடர்ந்து உண்டுவந்தால் அப்புறம் எப்படி சர்க்கரை வியாதி குணம் ஆகும்?

    (தொடரும்….)

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும்- 5

    செல்வன்

    இன்றைய மருத்துவர்களால் பரிந்துரைக்கபடும் உடல்நல குறிப்புக்களை ஆதிமனிதன் பின்பற்றி இருந்தால் மனித இனமே பரிணாம வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும். அந்த அளவு மோசமான அறிவுரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன. உதாரணம் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உண்ணச் சொல்லி இவர்கள் கொடுக்கும் அறிவுரை. முட்டையில் உள்ள மினரல்கள், வைட்டமின்கள் எல்லாமே மஞ்சள் கருவில் தான் உள்ளன. முட்டையின் மஞ்சள் கரு என்பது ஒரு உயிருக்குத் தேவையான அனைத்து மூலப்பொருளையும் கொண்டது. அத்தகைய சத்தான மஞ்சள் கருவை தூக்கி எறிந்து வெள்ளைக் கரு ஆம்லட்களை உண்டு பலரும் உடல்நலனை கெடுத்து கொண்டார்கள். முட்டைக்கு பதில் கடைகளில் விற்பனைக்கு வந்த எக் ஒயிட்டில் பல கெமிக்கல்கள், பிரசர்வேடிவ்கள் கலக்கப்பட்டு இருந்தன.

    இதே மாதிரி பாலைக் குடிக்க வேண்டாம் எனச் சொல்லி கொழுப்பு நீக்கிய ஸ்கிம் மில்க்கை குடி என இவர்கள் கூறிய அறிவுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு எடுத்த பாலை கொட்டிய பால் என தமிழகத்தில் அழைப்பார்கள். அதில் புரதம், கால்ஷியம் தவிர்த்து எதுவும் கிடையாது. பாலில் இருக்கும் கொழுப்பை நீக்கியவுடன் அதில் உள்ள வைட்ட்மின் ஏ, வைடமின் டி எல்லாம் அகன்றுவிடும். அதனால் செயற்கையாக வைட்டமின் ஏவையும், வைட்டமின் டியையும் கொட்டிய பாலில் கலந்து வந்தார்கள். ஆனால் வைட்டமின் ஏவும், வைட்டமின் டியும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். பாலில் உள்ள கொழுப்பு இன்றி அவை உடலில் சேருவது இல்லை. கழிவில் அப்படியே அந்த வைட்டமின்கள் வந்துவிடும். கொட்டிய பாலில் செயற்கையாக சேர்க்கப்பட்ட அந்த வைட்டமின்கள் நம் உடலில் சேரவேண்டும் எனில் கொட்டிய பாலை உண்கையில் பாலுடன் வெண்ணையை உண்ண வேண்டும்!!!!

    கொட்டிய பால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைத்ததும் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அதற்கு முன் கொட்டியபாலை அவர்கள் விற்காமல் கொட்டித்தான் வந்தார்கள். அதற்கு இப்படி ஒரு சந்தை கிடைத்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சி.

    2 வயது முதல் குழந்தைகளுக்கு கொட்டியபாலை கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் உங்கள் வயது ஐம்பதை தாண்டி உங்களுக்கு ரத்த அழுத்தம் இருந்தால் உங்களுக்கு ஸ்டாடினை பரிந்துரைக்கலாம் என எப்.டி.ஏ ஒரு விதியை அறிமுகபடுத்தியது. இதனால் கொலஸ்டிரால், இதய அடைப்பு பிரச்சனை எதுவும் இல்லாத  65 லட்சம் அமெரிக்கர்கள் ஸ்டாடினை உட்கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளானார்கள்.

    ஆனால் ஆய்வுகள் இதுகுறித்து என்ன கூறுகின்றன? மந்காட்டன், நியூயார்க் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் 2277  பேரைப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்ததில் கிடைத்த புள்ளிவிவரங்கள் கொல்ஸ்டிராலும், எல்டிஎல்லும் மோசமானவை எனக் காட்டவில்லை. மாறாக எத்தனைக்கெத்தனை கொலஸ்டிராலும், எல்டிஎல் விகிதமும் அதிகமாக இருந்ததோ அத்தனைக்கு அத்தனை அவர்கள் அதிகமாக உயிர்வாழ்ந்தார்கள்.

    Inline image 2

    இந்த ஆய்வின்படி மொத்த கொலஸ்டிரால் அளவு 175க்கு கீழ் இருந்தவர்களில் 97% 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

    கொலஸ்டிரால் 176ல் இருந்து 200 வரை இருந்தவர்களில் 78% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

    கொலஸ்டிரால் 200 தாண்டியதும் மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாக (57%) குறைந்தன.

    அதேபோல் கெட்ட கொலஸ்டிரால் எனப்படும் எல்டிஎல் கொலஸ்டிரால் 97க்கு கீழ் இருந்தவர்களில் 90% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள். ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் ஸ்டாடின் கொடுக்கும் அளவு “மோசமாக” கருதப்படும் 144 என்ற அளவைத் தாண்டி எல்.டி.எல் இருப்பவர்களில் 53% பேர் 10 ஆன்டுகளில் மரணம் அடைந்தார்கள்.

    இன்றைய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதிகபட்ச எல்.டி.எல், மொத்த கொலஸ்டிரால் அளவு என்ன?எல்.டி.எல் 130.மொத்த கொலஸ்டிரால் 200. நீங்கள் வயதானவராக இருந்து, மருத்துவர் சொல்லும் அளவுகளுக்கு உங்கள் கொலஸ்டிராலை குறைத்தால் என்ன ஆகும்?

    முட்டையை குறித்து நடத்தபட்ட்ட ஆய்வுகள் மருத்துவ அறிவுரைகள் எவ்வளவு தவறானவை எனக் காட்டின.

    கிட்டத்தட்ட 10 லட்சம் பேரை வைத்து சீனாவில் நடத்தபட்ட இந்த மெகா அனாலிசிஸ் ஆய்வு முட்டை உண்பதற்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவுக்கும், இதயநோய்களுக்கும் ஸ்னானபிராப்தி இல்லை என்றது. உங்களுக்கு சக்கரை இருந்தால் முட்டை உங்களுக்கு இதய்நோயை வரவழைக்கும் (ஆனால் அது இந்த நிலையில் கூட ஒரு சந்தேகத்துக்கு உரிய கருதுகோள் தான்). டயபடிஸ் இல்லாதவர்கள் முட்டையை உண்டால் அது அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை, இதயநோயும் வருவது இல்லை என்கிறது பேராசிரியர் லியூவின் ஆய்வு.

    முட்டையின் வெள்ளைக் கருவை உண்டு, கொழுப்பு எடுத்த பாலை குடித்துத் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தார்களா என்ன?

    (தொடரும்)

    Share
  • கொலஸ்டிரால் ரிப்போர்டை அறிந்து கொள்வோம்!… (4)

    செல்வன்      

       உங்கள் கொல்ஸ்டிரால் டெஸ்டில் பொதுவாக கீழ்காணும் வகை கொலஸ்டிரால்கள் காணப்படும்.

    1) மொத்த கொலஸ்டிரால்: இது 200க்கு கீழ் இருந்தால் பாதுகாப்பு என ரிப்போர்ட் கூறும்

    2) எச்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது நல்ல கொலஸ்டிரால்): இது 40க்கு அதிகம் இருக்கணும்

    3) எல்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது கெட்ட கொலஸ்டிரால்): இது 130க்கு கீழே இருக்கணும்

    4) ட்ரைகிளிசரைட்: இது 150க்கு கீழே இருக்கணும்.

    இதில் பலரும் மொத்த கொலஸ்டிரால் 200 தாண்டினால் உடனே தான் கொல்ஸ்டிரால் பேஷண்ட் என நினைத்து பீதி அடைவார்கள். கூடவே கெட்ட கொல்ஸ்டிரால் எனும் எல்டிஎல் 130 (சில நாடுகளில் 100) தாண்டினால் அவ்வளவுதான். “எனக்கு ஸ்டாடினை பரிந்துரையுங்கள்” என தானாக மருத்துவரிடம் போய் நோயாளியாக ஆகிறவர்கள் உண்டு.

    உண்மையில் கெட்ட கொல்ஸ்டிரால், நல்ல கொல்ஸ்டிரால் என்பது எல்லாம் பொதுமைபடுத்துதல். எல்டிஎல்லில் பல உள்வகை உண்டு. அதில் சில நமக்கு நல்லது, சில கெட்டது. நல்ல கொல்ஸ்டிரால் எனப்படும் எச்டிஎல்லில் கூட சிலவகை எச்டிஎல் நல்லது, சிலவகை எச்டிஎல் கெட்டது.

    எல்.டி.எல்லில் இரு வகை. சின்ன சைஸ் எல்.டி.எல் (LDL-B), பெரிய சைஸ் எல்.டி.எல் (LDL-A).பெரிய சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் ஆபத்தற்றது. காரணம் அது உங்கள் ரத்த நாளங்களில் ஒட்டி மாரடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் சின்ன சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் மிக ஆபத்தானது.

    ஆனால் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் இது எதையும் காட்டுவது இல்லை. உங்கள் எல்டிஎல் கொல்ஸ்டிராலின் உள்வகைகள், எச்டிஎல் கொலஸ்டிராலின் உள்வகைகள் இவற்றை உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் பிரித்து காட்டுவது இல்லை. அப்படி பிரித்து ஆராயாமல் உங்களுக்கு இதயநோய் வரும் ஆபத்து உள்ளதா, இல்லையா என்பதை கொலஸ்டிரால் ரிப்போர்டை மட்டும் வைத்து கண்டுபிடிக்கவே முடியாது. அதற்கு NMR lipoprifile test என்பது போன்ற மேலும் அட்வான்ஸ்டான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அதை எல்லாம் செய்யாமல் “உங்களுக்கு கொல்ஸ்டிரால் பிரச்சனை” என உங்கள் மருத்துவர் கூறினால் அதை ஏற்று நீங்கள் ஸ்டாடின்களை உண்டு நோயாளியாக வேண்டாம். NMR lipoprofile பரிசோதனை செய்ய சொல்லி கேளுங்கள். அந்த சோதனை முடிவை விளக்க சொல்லி உங்கள் மருத்துவரை கேளுங்கள்.

    மேலும் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் பல சிக்கல்கள் உள்ளன. அதில் முக்கியமானது என்னவெனில்

    உங்கள் எல்.டி.எல் கொல்ஸ்டிரால் அளவை நேரடியாக அளக்கும் சக்தி அடிப்படையான கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் இல்லை. பல கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் LDL-calculated என எழுதி இருப்பார்கள். சிலவற்றில் எழுதி இருக்க மாட்டார்கள். ஆனால் எழுதி இருந்தாலும், இருக்காவிட்டாலும் நூற்றுக்கு 99.99% ரிப்போர்டுகளில் உங்கள் எல்.டி.எல் நேரடியாக அளக்கபடுவது இல்லை. கணக்கிடதான் படுகிறது.

    எல்.டி.எல்லை கணக்கிட உதவும் பார்முலாவின் பெயர் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா. அது எப்படி கணக்கிடபடுகிறது என எழுதினால் கட்டுரை கணக்கு வகுப்பாக மாறிவிடும் அபாயம் இருப்பதால் அதை செய்யவில்லை. ஆனால் தேவைபட்டால் பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

    எல்.டி.எல்லை நேரடியாக அளக்காமல் பார்முலாவை வைத்து கணக்கிடுவதில் உள்ள தவறு என்ன?

    இதில் தவறு என்னவெனில் உங்கள் ட்ரைகிளசரடு எண் 100க்கு கீழ் அல்லது 400க்கு மேல் இருந்தால் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா வேலை செய்யாது. அது உங்கள் எல்.டி.எல் எண்ணை மிகைபடுத்தி காட்டும். ஆக உங்கள் ட்ரைகிலசரைட் நூறுக்கு கீழ் இருந்தால் உங்கள் எல்.டி.எல் எண் என உங்கள் கொலஸ்டிரால் ரிப்போர்ட்டில் காட்டபடும் எண் முழுக்க தவறானது.

    ஆக கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டை வைத்து ஸ்டாடினை உட்கொள்ள துவங்குவது என்பது தெர்மாமிட்டரை மட்டும் பார்த்து டைபாய்டு மருந்து உட்கொள்வதற்கு சமம். தெர்மாமீட்டர் மிக அடிப்படையான சோதனை. டைபாய்டு இருக்கா இல்லையா என்பதை அறிய மேலும் பல சோதனைகளை செய்யவேண்டும்.அப்படி செய்யாமல் ஸ்டாடினை உட்கொள்வது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஸ்டாடின் என்பது விளையாட்டு இல்லை. அதில் நினைவு இழப்பு மாதிரி பல பக்கவிளைவுகள் உண்டு. மேலும் அது கொலஸ்டிராலை குறைக்குமே ஒழிய இதய அடைப்பை தடுப்பதற்கான சாத்தியகூற்றை மிகவும் குறைவாக தான் குறைக்கும். இப்படி பக்கவிளைவுகளை உன்டாக்கும் மருந்தை தவறாக இருக்க கூடிய கொல்ஸ்ட்ரால் ரிப்போர்ட்டை மட்டும் நம்பி உண்பது சரியல்ல.

    என்.எம்.ஆர் டெஸ்ட் செலவு பிடிக்கும் விஷயம் தான். ஆனால் கொல்ஸ்டிராலை குறைக்க உண்ணும் ஸ்டாடின் விலையை விட அது குறைவானது தான்.

    மற்றபடி உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் முக்கியமான எண்கள் எவை?

    எச்.டி.எல் மற்றும் ட்ரைகிளசரைடு

    எச்.டி.எல் என்பது குப்பை லாரி மாதிரி. அது உங்கள் ரத்தநாளங்களுக்குல் சென்று கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை வாரி கொண்டு வந்து உங்கள் லிவரில் சேர்க்கும். லிவர் அந்த கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை உடைத்து கழிவாக மாற்றி அனுப்பிவிடும். ஆக எச்.டி.எல் அதிகமாக இருந்தால் அது மிக ஆரோக்கியமான விஷயம். எச்.டி.எல் 40க்கு கீழே இருந்தால் உங்கள் உடனாடி வேலைகள் அனைத்தையும் ஒத்தி போட்டுவிட்டு எச்.டி.எல்லை 40க்கு மேல் உயர்த்த நீங்கள் முயலவேண்டியது அவசியம். உங்கள் எச்.டி.எல் 60 தான்டினால் அது மிக பெரிய பலம். உங்கள் ட்ரைகிளிசரடு 100க்கு கீழ் இருந்து உங்கள் எச்.டி.எல் 60க்கு மேல் இருந்தால் அது நீங்கள் புல்லட் ப்ரூப் ஆடையை அணிந்து இருப்பது போன்ற பாதுகாப்பை உங்கள் இதயத்துக்கு அளிக்கும். உங்கள் எச்.டி.எல் 60 தான்டி, ட்ரைகிளிசரைடு 140க்கு கீழ் இருந்தால் அப்புறம் உங்கள் எல்.டி.எல்  ஆபத்தை விளைவிக்காத நல்ல வகை எல்.டி.எல்லாக இருக்கும் வாய்ப்பு தான் மிக அதிகம்.

    ட்ரைகிளசரைடு என்பது என்ன?அது எப்படி உருவாகிறது?அதை எப்படி குறைப்பது? எச்.டி.எல்லை எப்படி அதிகரிப்பது?

    இதற்கு இரன்டு வழிமுரைகள் தனியாக இல்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதாவது……

    ட்ரைகிளசரிடு அதிகமாக இருந்தால் எச்.டி.எல் தானாக குறையும்.

    ஆக எச்.டி.எல்லை அதிகரிக்க ட்ரைகிளீசரைடை குறைத்தே ஆகவேன்டியது அவசியம். ட்ரைகிளிசரைடை குறைத்தால் எச்.டி.எல் தானாக அதிகரிக்கும்.

    ட்ரைகிளசரைடை எப்படி குறைப்பது?

    இதை அறிய ட்ரைகிள்சரைடு எப்படி உருவாகிறது என்பதை அறிவது முக்கியம்.

    ட்ரைகிளிசரைடு என்பது வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை தான் ட்ரைகிளிசரைடு. நீங்கள் அரிசி, கோதுமையை உன்டால் அதில் உள்ள சர்க்கரை உங்கள் உடலால் குளுகோஸ் ஆக மாற்ரபடும். குளுகோஸ் தான் எரிபொருள். ஆனால் அந்த எரிபொருலை செலவு செய்யாவிடில் அதை சேமிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இரன்டுநாளுக்கு மேல் தேவையான அளவு குளுகோசை சேமிக்கும் சக்தி உடலில் இல்லை. ஆனால் உடலில் ஒவ்வொரு செல்லிலும் ஏராளமாக கொழுப்பை சேர்க்கும் சேமிப்புதிறன் உங்கள் உடலுக்கு உள்ளது. ஆக மீதம் குளுகோஸ் உங்கள் லிவருக்கு அனுப்பபடும். லிவர் அதை ட்ரைகிளிசரைடு ஆக மாற்றி ரத்தத்தில் அனுப்பும். அது உங்கள் உடலில் ஊளைசதையாக சேமிக்கபடும்.

    ட்ரைகிளசரைடை குறைக்க வழி இதில் இருந்தே தெரியும்.

    சர்க்கரைசத்து (carbohydrates) உள்ள உணவுகளை உண்பதை குறைப்பது, அல்லது நிறுத்துவது.

    சர்க்கரை சத்து நிரம்பிய உணவுகளை உண்பதை குறைத்தால் குரைவான அளவில் ட்ரைகிளிசரடை உடல் உருவாக்கும்.

    சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகளை உண்பதை சுத்தமாக நிறுத்தினால் ட்ரைகிளிசரைடு உருவாகும் வழியே உடலில் கிடையாது. உடலில் குளுகொஸ் குறைவு எண்கையில் அதிக குளுகோசை சேமிக்கும் அவசியமே இல்லையே?

    ட்ரைகிளிசரடு குறைந்தால் எச்.டி.எல் தானாக் அதிகரிக்கும். இவை இரண்டும் நடந்தால் உங்கள் எல்.டி.எல் ஆபத்தை விளைவிக்கும் சின்ன வகை எல்.டி.எல்லில் இருந்து உடலுக்கு நலனளிக்கும் பெரிய வகை எல்.டி.எல் ஆக மாறும். அதன்பின் உங்களுக்கு கொல்ஸ்டிராலை பற்றி யாதொரு கவலையும் வேண்டியது இல்லை.

    (தொடரும்)

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும் (3)

    செல்வன்

    கொலஸ்டிரால் என்பது என்ன?

    1) மிக ஆபத்தான நச்சுபொருள்

    2) உடலுக்கு மிக அத்தியாவசியமான மூலப்பொருள்.

    இரண்டில் எது சரி? இரண்டாவதுதான்.

    கொலஸ்டிரால் தான் உங்கள் உடல் வைடடமின் டியை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருள். அது மட்டும் அல்ல ஒருவருக்கு ஆண்மையை அளிக்கும் டெஸ்டிஸ்ட்ரோன், பெண்மையை அளிக்கும் ஈஸ்ட்ரோஜென் ஆகிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தேவைப்படுவது கொலஸ்டிரால். அது மட்டும் அல்ல உங்கள் மூளையே ஒரு மிகப்பெரும் கொழுப்பால் ஆன கொலஸ்டிரால் உருண்டைதான். கொலஸ்ட்ரால் இல்லையெனில் மனித இனமே இல்லை.

    கொலஸ்ட்ரால் இத்தனை முக்கிய மூலப்பொருள் என்பதால் உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் சக்தி படைத்து உள்ளது. நீங்கள் துளி கொலஸ்ட்ரால் இல்லாத அரிசி, பருப்பை மட்டுமே ஆயுள் முழுக்க உண்டுவந்தாலும் உங்கள் உடல் அந்த உணவை கொலஸ்டிராலாக மாற்றும் சக்தி படைத்தது. தனக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உங்கள் உடல் உற்பத்தி செய்தேதான் தீரும். அது நீங்கள் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக கிடைத்தால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலின் அளவை உங்கள் உடல் அதற்கு ஏற்ப குறைத்துக் கொள்ளும். உங்கள் உணவில் கொலஸ்டிரால் இல்லையெனில் உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்தை கொலஸ்டிராலாக மாற்றும்.
    ஆக “கொலஸ்டிரால் ப்ரீ, ஃபேட் ப்ரி” என விளம்பரம் செய்யப்பட்டு விற்கபடும் உணவுகளால் எந்த நன்மையும் இல்லை.

    பன்றி புல்லைத்தான் உண்கிறது. அப்புறம் எப்படி அதன் உடலில் இத்தனை கொழுப்பு சேர்கிறது?

    கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஆபத்து எனப் படிக்கிறோம். கொலஸ்ட்ரால் குறைவால் என்ன ஆகும் என படிக்கிறோமா?

    உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே போனால் நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். உங்கள் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படலாம். மாரடைப்பு வரலாம். ஆம் உண்மைதான். கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என பொருள் இல்லை. சொல்லப்போனால் மாரடைப்பு வந்தவர்களில் 75% பேர் பாதுகாப்பான எல்டிஎல் அளவு என சொல்லபடும் 130க்கு கீழே கொலஸ்ட்ரால் அளவு கொன்டவர்கள் தான்.

    இன்னொரு தடவை சொல்கிறேன்.

    உங்களுக்கு கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வராது என பொருள் இல்லை.

    அல்லது

    உங்கள் கொலஸ்ட்ரால் எண் அதிகமாக இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வரும் எனவும் பொருள் இல்லை.

    In other words

    நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புக்கும் உங்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் உங்களுக்கு மாரடைப்பு வருமா, வராதா என்பதற்கும ஸ்னானப்ராப்தி கிடையாது.

    ரிபீட்

    ஸ்னானபிராப்தி கிடையாது.

    மாரடைப்பு நோயாளிகளில் பாதிப் பேர் நல்ல ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் எண்களை கொன்டவர்கள் (மொத்த கொலஸ்ட்ரால் < 200. எல்டிஎல் < 130)

    உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் 330 தாண்டினால் தான் அது உங்களுக்கு மாரடைப்பு வருமா, வராதா என்பதைக் கணிக்கும் சக்தியை பெறுகிறது. ஆனால் உங்கள் கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே விழுந்தால் அது உங்கள் டிப்ரஷன், மன அழுத்தம் முதலிய பலவற்றுக்கு உடனடி காரணம் ஆகிறது.

    அப்புறம் ஏன் கொலஸ்ட்ரால் இப்படி வில்லன் அந்தஸ்தை பெறுகிறது?

    தவறான சில ஆய்வுகள், அரசியல் கமிட்டிகள், வணிக நிர்ப்பந்தங்கள்!!!!

    ஒரு உதாரணம் சொல்லவேண்டுமெனில் பி.எம்.ஐ எனும் எண்ணை அறிந்திருப்பீர்கள். உங்கள் பி.எம்.ஐ 25 தாண்டி இருந்தால் நீங்கள் ஓவர்வெயிட் எனும் வகையை அடைகிறீர்கள். பி.எம்.ஐ 25க்கு கீழ் இருந்தால் நீங்கள் நார்மல்.

    பி.எம்.ஐ சார்ட்படி அதிபர் ஜார்ஜ் புஷ் ஓவர் வெயிட். ஆனால் அவருக்கு உடலில் எந்தக் கோளாறும் இல்லை. அவரைப் பார்த்தால் குண்டர் மாதிரியா தெரிகிறது?

    90களில் ஓவர் வெயிட்டுக்கான பி.எம்.ஐ 28 ஆக இருந்தது.

    திடீரென ஒரே நாளில் அமெரிக்க அரசு அதை 25 ஆக குறைத்தது.

    ஆக ஓவர் நைட்டில் சுமார் 4 கோடி அமெரிக்கர்கள் குண்டர்கள் ஆனார்கள்.

    25 தான் நார்மல் பி.எம்.ஐ என முடிவு செய்தது யார்? ஒரு ஐ.நா சபை கமிட்டி. அதன் தலைவர் அந்த கமிட்டியின் தலைவர் ஒரு எடை குறைப்பு மருந்தை தயாரிக்கும் கம்பனியில் பணி ஆற்றியவர். கான்ஸ்பைரசி தியரி எழுதுவதானால் எப்படியும் எழுதலாம். ஆனால் என் நோக்கம் அது அல்ல. ஆனால் ஒன்றை தெளிவாகச் சொல்லமுடியும்.

    நீங்கள் ஒரு எடையை குறைக்கும் மருந்தை தயாரிக்கும் கம்பனி போர்டு மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என வைத்துகொள்வோம். பி.எம்.ஐ நார்மல் என்பதன் அளவீடு 28ல் இருந்து 25 ஆக குறைகிறது. உடனே ஒரே வினாடியில் உங்கள் மருந்துகளுக்கு மேலும் பல கோடி வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். போர்டு மீட்டிங்கில் எப்படி கைதட்டல் எழும் என்பதை யூகிக்க முடிகிறதா?

    அரசாங்கம் வேண்டும் என்றே சதியில் ஈடுபடுகிறது என கூறுவதில் பொருள் இல்லை. அரசின் நோக்கம் 25 பி.எம்.ஐ என்பது 28 பி.எம்.ஐ என்பதை விட மக்களுக்கு பாதுகாப்பு எனும் நோக்கிலேயே இருக்கும். ஆனால் நன்றாக இருப்பவர்களை நோயாளி ஆக்கிதான் இதை செய்யவேன்டுமா? வேறு வழி இல்லையா?

    சிந்திப்போம்.

    (தொடரும்..)

    Reference:

    http://newsroom.ucla.edu/portal/ucla/majority-of-hospitalized-heart-75668.aspx


    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்

    -செல்வன்

    பிளட் பிரஷர், கொலஸ்டிரால், சர்க்கரை வியாதி இவை மூன்றும் நாகரிக மனிதனின் வியாதிகள் என அழைக்கபடுபவை. ஏன் எனில் காட்டுமிராண்டி சமூகங்களில் இந்த வியாதிகள் இல்லை. தினம் பல் துலக்காத காட்டுமிராண்டி சமூகங்களில் ரூட்கனால் சர்ஜரி தேவைப்படுவது இல்லை. தினமும் மூன்று வேளை பல் துலக்கி, ஃப்ளாஸ் செய்து சுத்தமாக பல்லை வைத்து இருக்கும் நகர்ப்புற சமூகங்களில் தான் டென்டிஸ்டுகள் தேவைப்படுகின்றனர்.

    1913ல் ஆப்பிரிக்காவில் மருத்துவ சேவைப்பணி ஆற்ற சென்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர் அங்கே மேற்கு ஆபிரிக்காவில் வசித்த பழங்குடி மக்களை சந்தித்தார். 41 வருடங்கள் அங்கே மருத்துவராக பணி ஆற்றினார். 41 ஆண்டுகளில் பல லட்சம் ஆப்பிரிக்க பழங்குடி மக்களுக்கு மலேரியா, வயிற்றுகடுப்பு மாதிரி வியாதிகளுக்கு சிகிச்சை அளித்தார். அதற்காக நோபல் பரிசும் பெற்றார். ஆனால் 41ஆண்டுகளில் அவர் சந்தித்த அப்பென்டிக்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஒன்று. கான்சர் வந்த பழங்குடி மக்களையும் அவர் சந்திக்கவில்லை. தொப்பை, தொந்தி, சர்க்கரை, கொலஸ்டிரால் இவை எதுவும் அந்த மக்களுக்கு இருக்கவில்லை.

    ஆனால் 41 ஆண்டுகளில் மேலைய நாகரிகமும், மேற்கத்திய உணவுமுறையும் ஆப்பிரிக்கர்களிடையே பரவின. ரொட்டிகள், மாவுகள், பிஸ்கட்டுகள், இனிப்புகள் ஆகியவை நாகரிகமாயின. ஸ்வைட்சரின் இறுதி ஆண்டுகளிலில் ஆப்பிரிக்கர்களிடையே கான்சரும், சர்க்கரை, கொலஸ்டிரால் வியாதிகளும் பரவலாயின.

    இதுபோல தென்னாப்பிரிக்காவில் 19ம் நூற்ராண்டில் இன ஒதுக்கல் கடுமையாக நிலவியது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. அங்கே டயபடிக் க்ளினிக் நடத்தி வந்த ஜார்ஜ் கேம்பெல் எனும் மருத்துவர் இரு விதமான நோயாளிகளை மட்டும் கண்டார். வெள்ளையர்களுக்கு டயபடீஸ், அப்பென்டிக்ஸ், ரத்த அழுத்தம் முதலிய நாகரிக வியாதிகள் அனைத்தும் இருந்தன. ஸூலுக்களுக்கு அம்மாதிரி வியாதிகள் இல்லை. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவரிடம் வந்த சர்க்கரை நோயாளிகளில் 80% பேர் இந்தியர்கள் (தமிழர்கள்). இதே மருத்துவர் பின்னாளில் பிலடெல்பியா சென்றபோது அங்கே இருந்த கருப்பினத்தவருக்கு வெள்ளையருக்கு சமமாக நாகரிக மனிதனின் வியாதிகள் இருந்ததை கண்டார். ஸூலுக்களுக்கும் அவர்களுக்கும் பெருமளவில் வித்தியாசம் இருந்ததை அறிந்தார்.

    ஆனால் இன்று உடல் இளைக்கவும், டயபடீஸ், கொலஸ்டிரால் கட்டுபாட்டுக்கும் மக்களுக்கு கொடுக்கபடும் அறிவுரைகள் எது? நாகரிக மனிதனின் உணவுகளை உண்பதுதான். உதா; ரொட்டி, சப்பாத்தி, இட்டிலி முதலியவை. இவற்றில் கொலஸ்டிரால் அல்லது கொழுப்பு சுத்தமாக இல்லை. கொலஸ்டிராலோ, கொழுப்போ இல்லாத உணவை உண்ண சொல்லி மக்களுக்கு பரிந்துரைக்கபடுகிறது. மக்களும் 2% கொழுப்புள்ள பால், ஸ்கிம் மில்க், சோயா பால் முதலியவற்றை உண்கின்றனர். சிகப்பு மாமிசத்தை தவிர்த்து பழங்கள், வெள்ளை மாமிசம் எனப்படும் சிக்கன், சாலட் என உண்கின்றனர். இதனால் வியாதிகள் குறைகிறதா? உணவில் உள்ள கொழுப்புக்கும் உடலில் உள்ள கொலஸ்டிராலுக்கும் எதாவது தொடர்பு உண்டா?

    கொலஸ்டிராலுக்கு காரணம் கொழுப்பு நிரம்பிய உனவுகளை உண்பது என நாம் எப்படி அறிந்தோம் என்பதே சுவார்சியமான விஷயம். இதை கண்டுபிடித்தவர் ஆன்சல் கீஸ் எனும் ஆய்வாளர். அவர் சுமார் 22 நாடுகளில் மக்களின் உணவையும் அவர்கள் கொல்ஸ்டிரால் அளவையும் ஆராய்ந்தார். அதன்பின் அதில் ஏழு நாடுகளின் டேட்டாவை மட்டும் எடுத்து பதிப்பிட்டார். அதில் மக்களின் உணவில் கொழுப்பு அதிகம் இருக்க அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவும் அதிகமாக இருப்பது கன்டுபிடிக்க பட்டது.

    60களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆய்வுக்காக ஆன்சல் கீஸ் டைம் பத்திரிக்கையின் அட்டைபடத்தில் வெளியிடப்பட்டு சிறப்பிக்கபட்டார். அதன்பின்னர் கோடிகணகான டாலர்கள் கொலஸ்டிராலுக்கும் நம் உணவில் உள்ல கொழுப்புக்கும் இருக்கும் ஒற்றுமையை ஆராய செலவிடபட்டன. பின்னளில் வெளியான ஆய்வுகள் தெளிவான எந்த முடிவையும் தரவில்லை. ஆனால் அதற்குள் ஆன்சல் கீஸின் ஆய்வு முடிவை ஒட்டி பலரும் கொழுப்பு குறைந்த உணவுகலை உண்ண துவங்கினர்.

    இந்த பிரச்சனையை தீர்க்க அமெரிக்க அரசு செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. ஜார்ஜ் மெக்கவர்ன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். கமிட்டி கொலச்டிராலுக்கு காரணம் கொழுபப என ஆராய்ந்தது. கமிட்டி முன் அறிக்கை சமர்ப்பித்த விஞ்ஞானிகளிடம் கடும் கருத்துவேறுபாடுகள் நிலவின. ஆனால் ஜார்ஜ் மெக்கவர்ன் இதற்கு முன் நேதன் ப்ரிக்ட்கிர்ன் எனும் மருத்துவர் நடத்திய கொழுப்பு குறைவான உணவுகளை உண்ணும் புரக்ராமில் கலந்து கொண்டவர். இந்த புரக்ராமில் கலந்துகொன்டவர்கள் எடை குறைந்தது உண்மை. ஆனால் கொழுப்பு குறைந்த உணவுகலை உன்ட பலரும் பின்னாளில் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துகொண்டதால் நேதன் அந்த புரக்ராமையே பின்னாளில் கைவிட்டு விட்டார்.

    இப்படி இந்த புரக்ராமில் கலந்துகொண்டதால் மெக்கவர்ன் கொழுப்பு குறைவான உணவுகள் தான் நல்லவை என நம்பிவந்தார். கமிட்டி அறிக்கை வெளியாகி “உடலில் கொலச்டிராலை குறைக்க கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பதே வழி” என பரிந்துரைக்கபட்டது. உடனே அதை ஒட்டி அமெரிக்க அரசின் புட் பிரமிட் வெளியிடபட்டது. அதில் ரொட்டி, சீரியல் முதலிய தானிய உணவுகளை அதிகம் உண்ன மக்களுக்கு பரிந்துரைக்கபட்டது. மாமிசம், முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக உண்ன அல்லது தவிர்க்க பரிந்துரைக்கபட்டது.

    இந்த பரிந்துரைகளை ஒட்டி மில்லியன்கனகான டாலர்கள் சீரியல், ரொட்டி கம்பனிகளால் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. “இதயத்துக்கு நன்மை அளிக்கும் சீரியல்கள்” என்ற முத்திரையுடன் அவை வலம் வந்தன.

    ஆனால் இது அனைத்துக்கும் அடிப்படையான மருத்துவர் ஆன்சல் கிஈஸின் ஆய்வு பல நாட்கள் மறுபரிசீலனைக்கு உடபடவே இல்லை. அவற்றை பின்னாளில் ஆராய்ந்தவர்கள் ஆன்சல் கீஸ் ஏழு நாடுகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துகொன்டதை விடுத்து அந்த 22 நாடுகளின் புள்ளிவிவரங்களையும் பதிப்பிட்டிருந்தால் நாம் உண்ணும் உணவில் உள்ல கொழுப்புக்கும், நம் உடலில் உள்ல கொலஸ்டிரால் அளவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை கண்டறிந்தார்கள்.

    கீழே இருக்கும் கிராபில் இடப்பக்கம் இருப்பது 7 நாடுகளின் டேட்டா. வலப்பக்கம் இருப்பது 22 நாடுகளின் டேட்டா.

    ஆன்சல் கீஸின் ஆய்வில் கொழுப்பு என ஒட்டுமொத்தமாக கணக்கிட்டதை விடுத்து புராசஸ் செய்யப்பட்ட செயற்கை கொழுப்புக்கும் (உதாரணமாக ஹைட்ரஜனேட்டெட் ஆயில்கள்- மாரடைப்பு அதிகமாக இருந்த நாடுகளில் இவை அதிகம் பயன்பட்டன), மாரடைப்புக்கும் உள்ள உறவை கணக்கிட்டிருந்தால் அவர் டேட்டாவில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்திருக்கும் என பின்னாளில் ஆய்வாளர்கள் கூறினார்கள். (உதா: கரோலின் பாரிங்கர்)

    துரதிர்ச்டவசமாக கொழுப்பு மோசம் என ஒட்டுமொத்தமாக கொழுப்புக்களை குறைக்க சொன்னதால் மக்கள் இயற்கை கொழுப்புக்களான நெய், வெண்ணெய், பன்றிக்கொழுப்பு ஆகியவற்ரில் சமைப்பதை நிறுத்தி செயற்கை கொழுப்புக்களான மார்கரின், ஹைட்ரஜனேட்டட் வெஜிட்டபிள் ஆயில் (சோயா, சன்பிளவர், கார்ன் ஆயில்) ஆகியவற்ருக்கு மாறினார்கள். இவற்றில் இருந்த டிரான்ஸ்ஃபேட் மிக ஆபத்தானது, மாரடைப்பை ஏற்படுத்துவது என்பது பின்னாளில் தெரியவருவதற்குள் இவை “இதயத்துக்கு நலமளிப்பவை” என்ற முத்திரையுடன் பெரும் சந்தையை பிடித்து விட்டிருந்தன.

    Inline image 1

    ஆலன் கீஸ் ஆய்வை தொடர்ந்து உணவில் உள்ள கொழுப்புக்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலுக்கும் இடையே உள்ள உறவு ஆராயபட்டது. ஆய்வு முடிவுகள் தெளிவான எந்த ரிசல்ட்டையும் தரவில்லை.

    உதாரணமாக அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் சார்பில் நடந்த இந்த ஆய்வை எடுத்துகொள்வோம். ஆய்வின் முழு பிடிஎப் சுட்டியும் இங்கே காணலாம்

    229 பேரிடையே நடத்தபட்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். கண்ட்ரோல் க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினருக்கு உணவு கட்டுபாடு எதுவும் விதிக்கப்டவில்லை. கரோனரி க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினர் குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை உண்டார்கள். இறுதியாக கணக்கிட்டதில் கன்ட்ரோல் க்ரூப் கரோனரி க்ரூப்பை விட 12% அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் நிரம்பிய உணவுகளை உண்டதாக கணக்கிடபட்டது.

    அதன்பின் இந்த இரு பிரிவினரின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளக்கபட்டது. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் குறைந்த கொழுப்புக்களை உண்ட கரோனரி க்ரூப்பின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளவு கண்ட்ரோல் க்ரூப்பின் கொல்ஸ்டிரால் அளவை விட 16% அதிகம் இருப்பதாக் தெரிய வந்தது.

    ஆக 12% அளவு குறைந்த கொழுப்பை உண்ட பிரிவினர் 16% அளவுக்கு ரத்தத்தில் கொல்ஸ்டிராலை அதிகரித்து கொன்டனர்.

    இதய அடைப்பு உள்ளவர்களுக்கு குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை பரிந்துரைப்பதன் நன்மைகளை நிருபிக்க நடந்த இந்த ஆய்வு தலைகீழான ரிசல்டுகளை அளித்ததால் வெறுத்துபோன விஞ்ஞானிகள் “இதய அடைப்பு உள்ளவர்கள் கொலஸ்டிரால் குறைவாக உள்ள உணவுகளை உண்ணவேண்டும் என பரிந்துரைப்பதில் எந்த நன்மையும் இல்லை” என கூறி எழுப்பி ஆய்வை முடித்தார்கள்

    அடுத்த வாரம் இதே தலைப்பில் நடந்த வேறு சில ஆராய்ச்சி முடிவுகளை காண்போம்

    References:

    1) Good calories, bad calories- Gary Taubes

    2) http://en.wikipedia.org/wiki/Ancel_Keys#Seven_Countries_Study

    3) D M. GERTLER, STANLEY MARION GARN and PAUL DUDLEY WHITE
    Diet, Serum Cholesterol and Coronary Artery Disease
    Print ISSN: 0009-7322. Online ISSN: 1524-4539

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்

    செல்வன்

     இந்தக் கட்டுரை தொடர் கொல்ஸ்டிரால், ரத்த அழுத்தம், டயாபடீஸ் முதலிய நாகரிக மனிதனின் வியாதிகளுக்கும் நம் உணவு வாழ்க்கை முறைக்கும் இருக்கும் தொடர்பை அலசி ஆராயும் தொடர். கட்டுரையின் நோக்கம் யாரையும் சைவம் அல்லது அசைவத்துக்கு மாற்றுவது அல்ல. சைவம் அல்லது அசைவம் இரண்டிலும் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் உண்டு. அதை உங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் நீங்களே முடிவு செய்துகொள்வது நல்லது. இந்தக் கட்டுரையை எழுதும் நான் மருத்துவர் அல்ல. மருத்துவத் துறையில் எந்தத் தேர்வும் பயிற்சியும் எனக்கு இல்லை. என் உடல் நலனை மேம்படுத்த உணவு முறையில் கவனம் செலுத்தத் துவங்கினேன். அதன் விளைவாக அறிந்தவற்றை பகிரவே இந்தத் தொடர்.

    பிளட் பிரஷர், கொலஸ்டிரால், சர்க்கரை வியாதி இவை மூன்றும் நாகரிக மனிதனின் வியாதிகள் என அழைக்கப்படுபவை. 19, 20ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாகரிகம் பரவிய சமூகங்களில் கூட இந்த வியாதிகளும் பரவின. உதாரணமாக எஸ்கிமோக்களை கூறலாம். எஸ்கிமோ உணவு 100% மாமிசம். முழுக்க முழுக்க சீல், வால்ரஸ், பனிக்கரடி என அதிகக் கொழுப்பு நிரம்பிய உணவுகளை உண்பவர்கள் எஸ்கிமோக்கள். பால், காய்கறிகளை அவர்கள் பார்ப்பதே அபூர்வம்.

    இத்தனை கொழுப்பு நிரம்பிய உணவுகளை உண்டும் பருமனாக இருக்கும், சர்க்கரை வியாதியால் அவதிப்படும் எஸ்கிமோக்களை யாரும் பார்க்க முடியாது. ஆனால் இப்போது அவர்களும் ரொட்டி, பர்கர், பன்களை உண்ணத் துவங்கியதும் நாகரிக மனிதனின் வியாதிகள் அவர்களையும் வந்து அடைந்துள்ளன.

    அமெரிக்காவில் இருக்கும் பிமா பழங்குடி இந்தியர்களின் கதை குறிப்பிடதக்கது. பிமா இந்தியர்கள் பெரும்பாலும் வேட்டை, மீன் பிடித்தல், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உண்டு வந்தவர்கள். சிறு அளவில் விவசாயம் செய்து வந்தார்கள். ஐரோப்பிய குடியேற்றம் நிகழும் வரையில் மிக ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஐரோப்பியர் அவர்களின் நிலங்களில் குடியேறி இருந்த மிருகங்களை வேட்டையாடி அழித்ததும் பிமாக்கள் உணவின்றி தவிக்கும் நிலைக்குச் சென்றார்கள். அமெரிக்க அரசு அவர்களுக்கு உணவளிக்க ரேஷன் முறையை அறிமுகப்படுத்தியது. வெள்ளை ரொட்டியும், மாவும், சர்க்கரையும் ரேஷன் முறையில் வழங்கப்பட்டன.

    இதனால் பசி ஒழிந்தாலும் வேறு பின்விளைவுகள் தோன்றின. பிமா இந்தியர்களிடயே அதுநாள்வரை காணப்படாத நாகரிக மனிதனின் வியாதிகளான டயபடீஸ், உடல்பருமன், கொலஸ்டிரால் அனைத்தும் தோன்றின.

    ஐரோப்பிய குடியேற்றத்துக்கு முந்தைய பிமா இந்தியர்கள் உணவு

    19ம் நூற்றாண்டு பிமா இந்திய பெண்கள்

    21ம் நூற்றாண்டு பிமா இந்தியர்கள்

    பெரும்ம்பாலான அமெரிக்கர்களுக்கு கொலஸ்டிரால், ஹார்ட் அட்டாக் பற்றி தெரிந்தது ஜனாதிபதி ஐசந்கோவருக்கு இதய அடைப்பு வந்தபின்னர் தான். ஐசந்கோவர் முன்னாள் படைத்தளபதி. ஜனாதிபதி ஆன பின்னரும் தினசரி கடும் உடற்பயிற்சிகள் செய்து உடலை மிகக் கட்டுப்பாட்டுடன் வைத்து இருப்பார். அவரது உடல் எடை 172 பவுண்டுகள் (78 கிலோ). ஐந்தடி பத்து அங்குல உயரத்தில் இந்த எடைக்கான பி.எம்.ஐ (BMI) 24.7. அதாவது நார்மல் வெயிட். ஒபிசிட்டியோ அல்லது ஓவர் வெயிட்டோ கூட அல்ல. அவர் குடும்பத்தில் ஹார்ட் அட்டாக் வரலாறு இல்லை. புகைப்பிடிப்பதை பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திவிட்டார். அவருக்கு அட்டாக் வருமுன் இருந்த கொலஸ்டிரால் லெவெல் 165. நார்மல் கொலஸ்டிரால் லெவெல் என்பது 200க்கு கீழ்.

    64வது வயதில் ஜனாதிபதியாக இருக்கையில் முதல் அட்டாக் ஐசந்கோவருக்கு வந்தது. அப்போது எழுதப்பட்ட பத்திரிக்கை செய்திகள் மூலம் அமெரிக்கர்கள் இதய அடைப்பு பற்றி அதிகமாக கவனம் செலுத்த துவங்கினர்.

    கட்டுப்பாட்டுக்கு பெயர் போன ஐசந்கோவர் இதய அடைப்புக்கு பின் உணவில் இருந்த கொழுப்புக்களை சுத்தமாகக் குறைத்தார். கலோரிகளைக் குறைத்தார். வெண்னெய்க்கு பதில் சோயாபீன் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளை உண்டார். முழுக் கொழுப்பு இருக்கும் பாலை நிறுத்திவிட்டு கொழுப்பு இல்லாத பாலை குடிக்கத் துவங்கினார். காலை உணவாக ஆம்லட் உண்பதை நிறுத்தி கொழுப்பு எடுத்த பால் மற்றும் சீரியல்களுக்கு மாறினார்.

    கொழுப்பு குறைந்த உணவுகளுக்கு மாறியதும் ஐசந்கோவரின் எடையும், கொலஸ்டிரால் அளவும் மட, மட என ஏறியது. அவர் எடை 172ல் இருந்து 176 ஆனதும் வெறுத்துப் போன ஐசந்கோவர் காலை உணவாக சில பழங்களை மட்டும் உட்கொண்டார். மேலும் அதிகமாக உடற்பயிற்சி செய்தார். கொலஸ்டிரால் மேலும் ஏறியது. வெறுத்துப்போய் மதியமும் பழங்கள்,காய்கறிகளை உண்டும் உபவாசம் இருக்கவும் துவங்கினார். அரைப் பட்டினி இருந்ததன் விளைவு எல்லாரிடமும் அடிக்கடி எரிந்து விழுவார். 165 ஆக இருந்த கொலஸ்டிரால் இப்படி கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணத் துவங்கியதும் 259 ஆக ஏறியது.,

    கொழுப்பு மிகவும் குறைந்த உணவு,  கலோரிகளைக் குறைத்தல், உடற்பயிற்சி மூலம் கொலஸ்டிராலை கட்டுப்படுத்த கடுமையாகப் போராடியும் முடியாமல் இறுதியில் ஐசந்கோவர் இதய அடைப்பால் உயிர் இழந்தார்.

    அந்தக் காலகட்டத்தில் தான் அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் கொலஸ்டிராலைக் குறைக்க மக்களுக்கு கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணவும், ஸ்கிம் மில்க்கை உட்கொள்ளவும், நெய்க்கு பதில் சோயாபீன் எண்னெயை உட்கொள்ளவும், கலோரிகளைக் குறைக்கவும் பரிந்துரைத்தது. அதாவது ஐசந்கோவர் என்னென்ன வழிகளைக் கடைப்பிடித்தாரோ அதே வழிகள் மக்களுக்கு வேதமாக பரிந்துரைக்கபட்டன. சீரியல் கம்பெனிகளான கெல்லாக் முதலியவை அதன்பின் “இதயத்துக்கு நன்மை அளிப்பது” என்ற முத்திரையுடன் உலா வந்தன. கொழுப்பைக் குறைக்க பெருமளவில் மக்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டது.

    விளைவுகள்? அடுத்த வாரம்

    References:




    Share