Blog

  • ஈழப் போராளிகளுக்காக நீத்தார் கடன்

    ஈழப் போராளிகளுக்காக நீத்தார் கடன்

    மறவன்புலவு சச்சிதானந்தன்
    சிவ சேனை

    வைகாசி தேய்பிறை நாள்கள் இலங்கையில் சைவத் தமிழருக்குத் துன்பியல் நாள்கள்.

    403 ஆண்டுகளுக்கு முன்பு, வைகாசி தேய்பிறை எட்டாம் நாளில், கத்தோலிக்கப் போத்துக்கேயர் சைவத்தமிழ் மன்னனான சங்கிலியனைப் போரில் தோற்கடித்தனர்.

    13 ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி தேய்பிறை ஆறாம் ஏழாம் எட்டாம் நாள்களில் சிவபூமியான வன்னியில் நடைபெற்ற சிங்கள – தமிழ்ப் போரில் இலட்சக்கணக்கான சைவத் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர் புத்த சிங்கள அரசினர்.

    சைவத் தமிழர் மரபுக்கு அமைய வைகாசி தேய்பிறை ஆறாம் ஏழாம் எட்டாம் நாள்களில் அன்றைய சங்கிலியனையும் இன்றைய போராளிகளையும் தோற்கடித்த போரில் உயிரிழந்த சைவத்தமிழர்களுக்காக

    ஆண்டுதோறும் இலங்கையிலும் இந்தியாவிலும் நீத்தார் கடன் பிதிர்க் கடன் ஆற்றி வருகிறோம்.

    வடக்கே காசியின் கங்கைக் கரை தொடக்கம் தெற்கே தாமிரபரணி வரை பரந்த நிலப் பகுதி எங்கும் நீர்நிலைகள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு அர்ஜுன் சம்பத் தலைமையில் நீத்தார் பிதிர்க் கடன் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

    சென்னையில் மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சரர் கோயில் திருக்குளத்தில் நடைபெற்ற பிதிர்க்கடன் நிகழ்ச்சியின் படங்களை இணைத்துள்ளேன். பிதிர்க் கடனாற்றும் பேறும் நீத்தாருக்காக வழிபடும் பேறும் மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு உரியதாயிற்று.

    Share
  • உறவுகள் அந்நியமாவது ஏன்? | நிர்மலா ராகவன்

    உறவுகள் அந்நியமாவது ஏன்? | நிர்மலா ராகவன்

    நாம் கண்ணெதிரே காணும் இன்னோர் உண்மை, உறவுகள் அந்நியமாகி வருகின்றன. முன்போல் ஒட்டுதல் இல்லை, நெருக்கம் இல்லை, அடிக்கடி பேசுவதும் பழகுவதும் இல்லை. குடும்ப நிகழ்ச்சிகளில் கூடிக் கலைவதுடன் சரி. இதற்கு என்ன செய்யலாம்? சுதா மாதவன் கேள்விக்கு நிர்மலா ராகவன் வழங்கும் பதில் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உயர்ஞானப் பாலை உண்ட பிள்ளை!

    உயர்ஞானப் பாலை உண்ட பிள்ளை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அழுதகுரல் கேட்டு அம்மையே வந்தாள்
    ஆலவாய் அரசு அமைதியாய் இருந்தார்
    உண்ணா முலையாள் உயர்ஞானப் பாலை
    உண்ட பிள்ளையை உலகமே வியந்தது

    உணர்வெலாம் ஞானம் ஊறிய பிள்ளை
    தோடுடை செவியனாய் கண்டனர் இறையை
    பாடினார் பரமனை பரவசம் ஆகியே
    நாடினார் திருவருள் கடலினுள் மூழ்கினார்

    திருவருள் செல்வராய் மலந்தனர் அவருமே
    திருஞான சம்பந்தர் பெயரதாய்  வாய்த்தது
    பக்தியைப் பரப்பிட பரமனைப் பற்றினார்
    சொத்தெனச் சைவத்தைக் கருத்தினில் இருத்தினார்

    குழந்தையாய் இருந்தவர் குமரனாய் வளர்ந்தனர்
    குவலயம் சிறந்திட ஞானத்தைக் கொடுத்தனர்
    கோவிலை மையமாய் கொண்டுமே சேவையை
    வாழ்வினில் இருத்தியே மகிழ்ந்திட்டார் சம்பந்தர்

    இளமையில் ஞானியாய் எழுந்தனர் சம்பந்தர்
    இன்தமிழ் மொழியினை ஏந்தினார் நாளுமே
    பக்தியைப் பரப்பிட பைந்தமிழ் மொழியினை
    சித்தத்தில் இருத்தியே செப்பினார் தத்துவம்

    முத்தாய் வைரமாய் பவளமாய் குவிந்தன
    முத்திக்கு வித்தாக கருத்துகள் பொலிந்தன
    அனுதினம் அடியவர் சூழ்ந்திடச் சம்பந்தர்
    ஆலய மெங்கணும் அரன்புகழ் பரப்பினார்

    மந்திரமும் நீறென்றார் தந்திரமும் நீறென்றார்
    வானவர் மேலேயும் நீறென்றார் சம்பந்தர்
    சுந்தரமும் நீறென்றார் சுகமுமே நீறென்றார்
    நந்துயரைப் போக்குவது நாளுமே நீறென்றார்

    முத்தியைச் சத்தியத்தை முழுமையாய் தருமென்றார்
    பக்தியினை பக்குவத்தை பாங்குடனே தருமென்றார்
    சித்தியைத் தருமென்றார் சீலத்தைத் தருமென்றார்
    நித்தமுமே நீறதனை நெஞ்சிருத்த வேண்டுமென்றார்

    பூசவினியது என்றார் பேசவினியது என்றார்
    ஆசையறுப்பது என்றார் அகந்தை ஒழிப்பது என்றார்
    தேசம்புகழ்வது என்றார் திருவாய் பொலிவதும் என்றார்
    வாழநினைப் பார்க்கெல்லாம் மருந்தாகும் நீறென்றார்

    புனைந்தார் பலபாடல் அணைந்தார் அரனடியை
    இணைந்தார் திருக்கூட்டம் எடுத்தார் தமிழ்மொழியை
    கொடுத்தார் பலகருத்தை குழந்தைஞானி சம்பந்தர்
    தடுத்தார் சமண்புயலை சைவத்தின் தலைமகனாய்

    அப்பரொடு சேர்ந்தார் ஆன்மீக வழிநடந்தார்
    அரனாரின் திருவருளால் அமைத்திட்டார் சத்சங்கம்
    அனைவருமே அகிலத்தில் நல்லவண்ணம் வாழலாம்
    எனுங்கருத்தை விதைத்திட்டு ஏற்றமுற்றார்  சம்பந்தர்

    Share
  • மாரடைப்பைக் கண்டுபிடிக்க உதவும் சிரிப்பு யோகா

    மாரடைப்பைக் கண்டுபிடிக்க உதவும் சிரிப்பு யோகா

    இதய நோய் உள்ளவர்களுக்குத் தங்களுக்கு இந்த நோய் இருக்கிறது என்பதே தெரியாது. திடீரென்று ஒருநாள் மாரடைப்பு தாக்கும். மாரடைப்பினால் வலி ஏற்படும் போது கூட, இது ஏதோ ஒரு வலி என அலட்சியம் செய்துவிடுவார்கள். ஹாஹோ சிரிப்பானந்தா செய்து காட்டும் இந்தப் பயிற்சியை மட்டும் உங்களால் செய்ய முடிந்துவிட்டால், உங்களுக்கு மாரடைப்பு இல்லை எனக் கொள்ளலாம். செய்ய முடியவில்லை என்றால், உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கட்டற்ற மென்பொருள் மீது ஏன் காதல்? | கணியம் சீனிவாசன் நேர்காணல்

    கட்டற்ற மென்பொருள் மீது ஏன் காதல்? | கணியம் சீனிவாசன் நேர்காணல்

    கட்டற்ற மென்பொருள் மீது எப்படி ஆர்வம் வந்தது? இது எப்படி தன் வாழ்வையே மாற்றியது? இதில் இருக்கும் வாய்ப்புகள், அற்புதங்கள், ஆச்சரியங்கள் என்னென்ன? இதோ மனம் திறக்கிறார் கணியம் த.சீனிவாசன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குயிலின் அமுத கானம் – 15

    குயிலின் அமுத கானம் – 15

    சென்னையில் இன்று பெருமழை. சட்டென்று பிடித்து, சடசடவென அரை மணி நேரம் பெய்து, டக்கென்று நின்றது. அதன் பிறகு, சூழலே ரம்மியமாக மாறிவிட்டது. மப்பும் மந்தாரமுமான வானம், இதமான குளிர்ச்சி, அளவான வெளிச்சம், சுகமான காட்சிகள் என இருந்த போது இந்தக் குயிலின் குரல் கேட்டது. எத்தனை பாவங்களில் தன் துணையை அழைக்கிறது பாருங்கள். கடைசியில் அதன் துணைக் குயிலும் எதிர்க் குரல் கொடுக்க, அதனை நோக்கி விரைகிறது. உலகம் இனியது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ரிசப்ஷனிஸ்ட் முதல் டேட்டா சயின்டிஸ்ட் – து.நித்யாவின் வெற்றிப் பயணம்

    ரிசப்ஷனிஸ்ட் முதல் டேட்டா சயின்டிஸ்ட் – து.நித்யாவின் வெற்றிப் பயணம்

    ரிசப்ஷனிஸ்ட் ஆக வாழ்வைத் தொடங்கிய நித்யா, இன்று பன்னாட்டு நிறுவனங்களில் டேட்டா சயின்டிஸ்ட் ஆகப் பணியாற்றி வருகிறார். பிக் டேட்டா (Big Data), மெஷின் லேர்னிங் (Machine Learning) உள்ளிட்ட திட்டப் பணிகளில் அனுபவம் பெற்றதுடன் இவை குறித்துப் புத்தகங்களும் எழுதியுள்ளார். டெஸ்டர் என்று தன்னை மட்டம் தட்டியவர்கள் முன்னால், புதிய தொழில்நுட்பங்களில் நிரலாளராக நிமிர்ந்து நிற்கிறார். தமிழ்வழியில் படித்தாலும் முன்னேற முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். ஊக்கம் தரும் இவரது வெற்றிப் பயணம், இதோ இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 13ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    13ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    2022 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 12 ஆண்டுகளை நிறைவுசெய்து 13ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் வல்லமை, 18,606 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,878 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேலான ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம்.

    கடந்த ஆண்டு வல்லமையின் செலவினங்களுக்காக நன்கொடை கோரினேன். நண்பர்கள் ஜெயபாரதன், முனைவர் நா.கணேசன், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பேராசிரியர் ம.இராமச்சந்திரன் ஆகியோர் கனிவுடன் அனுப்பிய நன்கொடைகளால் தளம் சீராக இயங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கு உரிய கட்டணங்களை அடுத்த மூன்று மாதங்களில் செலுத்த வேண்டியிருக்கும். அன்பர்களின் நன்கொடையை வரவேற்கிறோம்.

    மேலும் நம் (Siteground) வழங்கியுடனான மூன்றாண்டு ஒப்பந்தம், இன்னும் மூன்று மாதங்களில் முடிகிறது. புதிதாக யாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கலாம் எனத் தேடி வருகிறோம். தொடர்ந்து நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் (Managed WordPress) சேவையைத் தரமாகவும் மலிவாகவும் வழங்கும் நிறுவனங்களை / நண்பர்களைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

    வல்லமைக்கு வரும் படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன் பேருதவி புரிந்து வருகிறார். தள நிர்வாகப் பணியை எல்.கார்த்திக் தொடர்ந்து ஆற்றி வருகிறார். இருவருக்கும் நனி நன்றி.

    வல்லமை மின்னிதழை மேம்படுத்த, முயன்று வருகிறோம். உங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிருங்கள்.

    Share
  • எஸ்.சுதர்சன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    எஸ்.சுதர்சன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் எட்டாம் வகுப்புப் படிக்கும் எஸ்.சுதர்சனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அசுரவடிவக் கருந்துளை படம் பிடிக்கப்பட்டது எப்படி?

    அசுரவடிவக் கருந்துளை படம் பிடிக்கப்பட்டது எப்படி?

    சி. ஜெயபாரதன், கனடா

    Now that the Event Horizon Telescope collaboration has released its image of the Milky Way’s black hole, the team is focusing on making movies of the two photographed black holes and finding other distant black holes large enough to study

    Read more: https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/#ixzz7TIS4Rog2

    An image of the Messier 87 black hole, showing, for the first time, how it looks in polarized light. The lines mark the orientation of polarization, which is related to the magnetic field around the shadow of the black hole.

    உலக விஞ்ஞானிகளின் ஒருபெரும் முதன்மைச் சாதனை

    இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல், பூதப் பெரும் ஈர்ப்பு விசையால் மட்டும் இருப்பதாகக் கருதப்படும்  கருந்துளையின் மெய்யான படத்தைப், பூமியில் தூரத்தில் உள்ள எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் கூர்ந்து படமெடுத்து, ஈன்ற பேரளவு தகவல் இலக்கத்தைச் [Data] 10 ஆண்டுகளாய்த் திரட்டிச், சுமார் 200 விஞ்ஞானிகள்  உறுதியாக வெளியிட்ட முதல் கருந்துளைப் படம்  இது.  மற்றும் பன்னாட்டு உலக விஞ்ஞானிகளின் உன்னத கூட்டு வெளியீடாக  மதிப்பிடப் படுகிறது.

    அந்த அசுரக் கருந்துளை பேரளவு நிறை கொண்டது.  6.5 பில்லியன் மடங்கு சூரியன் எடைக்குச் சமமானது.  அந்தக் கருந்துளை, பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில், உள்ள M87 எனப்படும் ஒளிமந்தையின் [Galaxy M87]  மையத்தில் உள்ளது.  கருந்துளைகளுக்குச் “சுழற்சி” [Spin] உள்ளது.  மையக் கருந்துளை அருகில் வரும் பிண்டத்தையோ, அண்டத்தையோ, விழுங்கி, அதன் நிறை மிகையானால், சுழற்சியின் வேகம் அதிக  மாகிறது.

    Credit…Event Horizon Telescope Collaboration

    On 12 May, 2022 the Event Horizon Telescope (EHT) revealed the first close-up picture of the black hole at the centre of the Milky Way. Now that it has taken images of both that black hole, called Sagittarius A* (Sgr A*), and the one at the centre of the M87 galaxy, known as M87*, it is time for the collaboration behind the images to move on to new scientific pursuits. So, what is next?

    First, the researchers will have to examine the data they have already collected. The images of Sgr A* and M87* were both assembled from data gathered in 2017, but there have since been two more observation periods, with extra telescopes added to the collaboration’s original network of eight.

    “Data does exist. We have taken data in 2018 with one additional telescope, 2022 with three additional telescopes, and we are working very, very hard to get that to you… as soon as we possibly can, but I can’t make any promises about when,” said EHT researcher Lia Medeiros at the Institute for Advanced Study in New Jersey during a 12 May press event. It will probably take years before the results of that analysis are released, she said.

    One thing this work is expected to clarify is the structure of the material around Sgr A*, particularly the three bright “knots” of light seen in the new image. Because of the way the image was made, the bright spots could just be artefacts. “Those knots tend to line up with the directions in which we have more telescopes,” said EHT researcher Feryal Özel at the University of Arizona during the press event. “Even though it’s natural in theory to expect these brighter spots, we don’t trust them in our data that much yet.”

    Read more: https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/#ixzz7TIbGR0RE

    தகவல்

    1. https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/
    2. https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/#ixzz7TIbGR0RE
    3. Milky Way’s black hole has got 75 times brighter and we don’t know why
    4. https://www.newscientist.com/article/2320264-whats-next-for-event-horizon-telescope-after-its-black-hole-pictures/#ixzz7TIchVfR3
    Share
  • குறளின் கதிர்களாய்…(401)

    குறளின் கதிர்களாய்…(401)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(401)

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.

    -திருக்குறள் – 102 (செய்ந்நன்றியறிதல்)

    புதுக் கவிதையில்…

    உற்ற காலத்தில்
    ஒருவன் செய்த உதவி
    உருவில் சிறிதெனிலும்,
    உண்மையில் அது
    உலகைக் காட்டிலும்
    உருவில்
    பெரிதாக மதிக்கத்தக்க
    பெருமையுடையதே…!

    குறும்பாவில்…

    உரிய காலத்தில் செய்த
    உதவி சிறிதெனிலும், உலகைவிடப் பெரிதாயது
    மதிக்கத்தக்கத் தகுதியுடையதே…!

    மரபுக் கவிதையில்…

    உதவி செய்யும் ஒருவனதை
    உரிய கால மதில்செய்தால்,
    அதனி னளவு சிறிதெனிலும்
    அதனைச் செய்த தருணமதால்
    அதனின் மதிப்பே உயர்ந்திடுமே,
    அகில அளவில் பெரிதாக
    உதவி யதுவும் பெற்றிடுமே
    உயர்ந்த நிலையைத் தன்னாலே…!

    லிமரைக்கூ…

    செய்தது சின்ன உதவியே,
    செய்யப்பட்ட காலத்தால் பெறுமது உலகைவிட
    மதிப்பில் பெரிய பதவியே…!

    கிராமிய பாணியில்…

    நன்றியிருக்கணும் நன்றியிருக்கணும்
    செய்த ஒதவிய மறந்திடாத
    நல்லகொணமான நன்றியிருக்கணும்..

    ஒருத்தன் செய்த
    ஒதவி சின்னதாயிருந்தாலும்,
    அதச்செய்த காலத்தக் கருதி
    அதோட மதிப்பு
    ஒலகத்தவிடப் பெருசா
    ஒயர்ந்து போகுமே..

    அதால
    நன்றியிருக்கணும் நன்றியிருக்கணும்
    செய்த ஒதவிய மறந்திடாத
    நல்லகொணமான நன்றியிருக்கணும்…!

    Share
  • பழநியில் அதிரி புதிரி குத்தாட்டம்

    பழநியில் அதிரி புதிரி குத்தாட்டம்

    இதை நடனம் ஆடாமல், கை கால் அசையாமல் பார்த்துவிடுங்கள், பார்க்கலாம்.

    பழநி தீர்த்தக்காவடி பக்தர்களின் அதிரடி அதிரி புதிரி குத்தாட்டம்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எள்ளு சாதம் என்கிற எள்ளோரை

    எள்ளு சாதம் என்கிற எள்ளோரை

    புளியோதரை சாப்பிட்டிருப்பீர்கள். எள்ளோரை தெரியுமா? சுவையும் சத்தும் கமகம மணமும் கொண்ட எள்ளோரை (எள்ளு சாதம்) செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மேடவாக்கம் மேம்பாலத்தில் ஒரு பயணம்

    மேடவாக்கம் மேம்பாலத்தில் ஒரு பயணம்

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த மேடவாக்கம் மேம்பாலம், சென்னையின் மிக நீளமான மேம்பாலம் (2.3 கி.மீ.). ரூ.95.21 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்வோருக்குப் பயண நேரம் வெகுவாகக் குறையும். இந்த மேம்பாலத்தின் மீது இன்று ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழநி முருகன் கோவில் – படியேறிச் சென்று தரிசித்த அனுபவம்

    பழநி முருகன் கோவில் – படியேறிச் சென்று தரிசித்த அனுபவம்

    பழநிக்குச் செல்ல வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால விருப்பம். இறையுதிர்காடு தொடர்கதையை விகடனில் படித்த பிறகு அந்த விருப்பம், இன்னும் அதிகரித்தது. போகர், நவபாஷாணத்தால் முருகன் சிலையை வடித்ததை, முருகனின் அற்புத சக்திகளை இந்திரா சௌந்தர்ராஜன் அழகுற அதில் எழுதியிருப்பார். இறையருளால் சில நாள்கள் முன், பழநிக்குச் சென்றோம். மலை உச்சிக்குப் படியேறிச் சென்றோம். எங்கள் மகன் ஹரி நாராயணனும் (மூன்று வயது) பிஞ்சுப் பாதங்களால் படியேறி வந்தான். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share