Blog

  • நடுத்தெரு நாராயணன்

    — க. பாலசுப்ரமணியன்.

    “என்னங்க, ஆபீசுக்குக் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அபிராமி வாசலை நோக்கி வந்தாள்.

    “இதோ கிளம்பிண்டே இருக்கேன் அபிராமி” என்று பதிலளித்தவாறே “வண்டியைத் துடைச்சுக்கொண்டிருக்கிறேன். ரொம்ப அழுக்கா இருக்கு” தனது துடைக்கிற வேலையில் மும்முரமானார்.

    “கொஞ்சம் இருங்கோ. நான் வந்துண்டே இருக்கேன். அந்த நாராயணன் எங்கே இருக்கான்னு ஒரு தடவை பார்த்துக்கிறேன். சரியாய் நம்ம வெளியிலே கிளம்பும் போது எதிரிலே வருவான். அவனுக்கு விவஸ்தையே கிடையாது. மற்றவங்களை நோகடிச்சுப் பார்க்கிறதிலே தான் அவனுக்குச் சந்தோஷம்.” முணுமுணுத்துக்கொண்டே அபிராமி வாசலை நோக்கி வந்தாள்.

    அபிராமி எந்த நாராயணனைப் பற்றி சொல்லுகிறார்னு நினைக்கின்றீர்கள்? நடுத்தெரு நாராயணனைப் பற்றித் தான் ! அந்தப் பெயர் அவருக்கு எப்படி வந்தது? அவரைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுகின்றார்கள்?

    “நாராயணன் ரொம்ப நல்ல மனிதன். ஊர்ல எல்லாரும் அவரை ஒரு அப்பாவி என்று தான் சொல்வார்கள். வேலை ஒண்ணும் பார்த்ததாகத் தெரியவில்லை. அப்படியே திண்ணையில் உட்கார்ந்திருப்பார். ஏதாவது நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருப்பார் அவர் உண்டு. அவர் வேலையுண்டு . ஒரு வம்பு தும்புக்குப் போக மாட்டார்.” இது அநேகருடைய கருத்து..

    நாராயணன் கிட்டத்தட்ட ஐந்து அடி எட்டு அங்குலம் உயரம். அநேகமாக ஒரு ஐம்பது வயது இருக்கும் புண்ணாக்கு போன்ற ஒரு நிறம். எப்போதும் பளபளவென இருக்கும் உடலைப் பார்த்தால் அதிலிருந்து ஒரு கால் கிலோ நல்லெண்ணெய்யை வழித்து எடுக்கலாம் போல இருக்கும்.

    நாராயணன் ஒரு பக்திமான். கட்டை பிரம்மச்சாரி. காலையிலே குளித்ததும் திருநாமம் அணிந்து வேங்கடேச சுப்ரபாதமும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் சொல்லிவிட்டு பிரபந்தத்திலிருந்து சில பாடல்களைப் படித்துவிட்டு அதற்குப் பின் நியூஸ் பேப்பரை அலசுவார்.

    பொழுது போக வில்லையென்றால் தெருவிலே இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருப்பார்.. அதனால் தான் தெருவிலே உள்ள எல்லோருமாகச் சேர்ந்து நடுத்தெரு நாராயணன் என்ற காரணப் பெயரை அவருக்கு வைத்தனர்

    “என்ன நாராயணா, இன்றைய நடைப் பயணம் இன்னும் ஆரம்பமாக வில்லையா?” என்று கேட்டுக்கொண்டே பக்கத்து வீட்டு சாமிநாதப் பிள்ளை திண்ணையில் அவர் அருகில் வந்து உட்கார்ந்தார். இருவரும் திண்ணை நண்பர்கள்.

    “இல்லை இனிமேல்தான்… முதல்லே சொர்ண பவனில் ஒரு காப்பி சாப்பிட்டு அதுக்கப்பறம்தான் எல்லாம். வாங்க பிள்ளை காப்பி சாப்பிடப் போகலாம்.”

    நாராயணன் அவர் தம்பி வீட்டில்தான் தங்கியிருந்தார். அவர் தம்பிக்கு அரசாங்கத்தில் வேலை. தம்பி மனைவியும் அரசாங்கத்தில் தான் வேலை பார்க்கிறார். அதனால் இவர் வீட்டிலேயே தங்கி வீட்டையும் தன்னுடைய தாயாரையும் கவனித்துக் கொள்கிறார். மாசத்துக்கு ஒரு முறை தன்னுடைய கிராமத்திற்குச் சென்று நிலபுலன்களையும் கவனித்து வருகின்றார்.

    பிள்ளையும் நாராயணனும் சொர்ண விலாசை நோக்கிச் செல்கின்றனர். எதிரே தன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய காவேரி அம்மாள் நாராயணனைப் பார்த்ததும் மீண்டும் வீட்டுக்குள் செல்கிறார்.

    “கோவிலுக்குப் போகும் நேரத்தில் இவன் எதிரே வந்தால் சாமி கூடச் சரியா தரிசனம் தர மாட்டார்.” சொல்லிக்கொண்டே அவர் உள்ளே செல்கிறார்.

    இதைக் கண்ட சாமிநாத பிள்ளை மனத்துக்குள் வருத்தப் படுகின்றார். “என்ன உலகமடா நாராயணா ! ரொம்ப மோசம்டா இந்த உலகம். என்னவோ எதிரே ஒரு ஆள் வந்தால் சகுனம் சரியில்லே என்று நினைத்து உலகமே இருண்டு போன மாதிரி மனசை வைத்துக்கொண்டு .. குடும்பமே முழுகிப்போறமதிரி மனதைக் கருப்பாக்கிக்கொண்டு.. ..ச்சீ, ஒரே அருவருப்பா இருக்கு நினைக்கிறதுக்கே ..ரொம்ப வருத்தமாக இருக்கு நாராயணா.” ‘.

    ஒரு வருத்தம் தோய்ந்த முகத்தோடு நாராயணன் பதிலளித்தார். “சாமிநாதப் பிள்ளை..மனசு இருக்கே அது ஒரு குரங்கு மாதிரி.. தன்னோட இயலாமையையும், தன்னோட கையாலாகதனத்தையும் மற்றவா மேல போட்டு தன்னைச் சுற்றி ஒரு தற்காப்பு கவசம் போட்டுகொள்றது அது. .தன்னோட மனசையே நம்ப வைக்கறது தன்னோட தோல்விக்கு மற்றவாதான் காரணம்னு. ஒரு வகையில பார்க்கப்போனா உளவியலிலே இது ஒரு விதமான மனநோய் ….எஸ்கேபிஸ்ட் முறைன்னு கூட சில பேர் சொல்லுவா.”

    “நாராயணா, இதெல்லாம் உனக்கு இப்படித் தெரியும்?”

    சிரித்துக்கொண்டே நாராயணன் “பிள்ளை, ஒண்ணு தெரிஞ்சுக்குங்கோ அறிவுக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஏதோ படிச்சு ஒரு டிகிரி வாங்கிட்ட அவாளுக்கெல்லாம் நிறைய அறிவு இருக்கும் என்பது கிடையாது. எனக்கு நிறைய படிக்கற ஆசை. அதனால்தான் படிக்கிறேன். ஒரு வகையிலே பார்க்கப்போன நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு மனசில ஒரு விதமான நோய் இருக்கிறதாகச் சொல்லுவா. அதனால இதல்லாம் பெரிசு பண்ணாம நம்ம வேலைய மட்டும் பார்த்துண்டு போயிண்டு இருக்கணும். “

    “ ரொம்ப தைரியசாலி நீ நாராயணா. விவேகமானவன்.”

    ” சாமிநாதா, சுவத்திலே போய் முட்டிக்கொண்டு வலிக்கிறதே வலிக்கிறதேன்னு அழுதா யார் மேல தப்பு? சிலர் சுவர் மாதிரி. அவா மேல போய் நம்ம முட்டிக்கொண்டு நாம ஏன் அழணும் ? நான் சொல்லறது புரியறதா உங்களுக்கு? “

    ஒரு நிமிடம் சாமிநாத பிள்ளை அப்படியே நின்றுவிட்டார். நாராயணின் மனப்பக்குவத்தைக் கண்டு வியந்து.

    இருவரும் சொர்ணவிலாசை நோக்கிச் செல்கின்றனர். பின்னாலிருந்து ஸ்கூட்டரின் ஹார்ன் சப்தம் விட்டுவிட்டுக் கேட்கிறது.

    சற்றே திரும்பிப் பார்த்த நாராயணன் ” குழந்தை, நில்லும்மா, நில்லும்மா, கிராஸ் பண்ணாதே.. ஸ்கூட்டர் வருது பாரு…” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூட்டரில் மோதவிருந்த குழந்தையை தள்ளிவிடுகிறார். ஸ்கூட்டர் திசை மாறி நாராயணனின் கால் மேல் ஏறுகின்றது.

    ஒரு கையால் குழந்தையைப் பிடித்துக்கொண்டே கீழே விழுந்த நாராயணனைச் சுற்றி ஒரே கூட்டம். பதைபதைத்து செய்வதறியாமல் சாமிநாத பிள்ளை நிற்கிறார்.

    கூட்டத்தைக்கண்டு ஓடி வந்த அபிராமி ” என்ன ஆச்சுன்னா உங்களுக்கு?.. அப்பவே சொன்னேன் சகுனம் பாத்துப் போங்கோ.. அவன் எதிரிலே வரப்போ போகாதேங்கோன்னு ….கேட்டேளா ” என்று அலறுகின்றார்.

    ஸ்கூ ட்டெரிலிருந்து கீழே விழுந்த பார்த்திபன் தப்பித்து விட்டார். தலையில ஹெல்மெட் போட்டிருந்ததால் ! உடம்பில். ஒரு அடிகூடப் படவில்லை .

    ஒரு ரிக்க்ஷாகாரர் ஓடிவந்து நாராயணனின் கையைப் பிடித்து ” நம்ம சாமிடா . இவரை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கடா.. ஒரு வண்டியை இந்தப் பக்கம் இழுங்கடா.” எனக் கத்துகிறான்.

    வண்டியில் உட்கார்ந்து கொண்டே நாராயணன் அபிராமியப் பார்த்து சத்தமாகச் சொல்கின்றார் “அபிராமி.. நான் ஒண்ணும் அவர் எதிரே வரவில்லை. அவர் தான் என் பின்னாலேதான் வந்தார். விஷயம் தெரியாம தப்பாப் பேசாதேங்கோ “

    குழந்தையின் தாயாரோ கைகூப்பி “ரொம்ப நன்றி நாராயணன் சார் . ஏதோ அந்த வைகுண்டத்திலிருந்து ஸ்ரீமன் நாராயணனே கீழே வந்து என் குழந்தையைக் காப்பாற்றின மாதிரி இருக்கு. நிஜம்மா நீங்கப் பகவான் வடிவத்திலே வந்திருக்கேள்.” .

    அந்த ஒரு நிமிடம் நாராயணனுக்கு நடுத்தெருவிலிருந்து வைகுண்டத்திற்கே சென்று வந்த ஓர் உணர்வு.

    சாமிநாத பிள்ளையின் கண்கள் பனித்தன. அவர் கண்களில் வழிந்த நீர் இந்த வார்த்தைகளைக் கேட்டதற்கா, இல்லை, நாராயணனின் கால் ஓடிந்ததற்கா, இல்லை இந்த மனிதர்களின் ஒடிந்த இதயங்களைக் கண்டா – யாருக்குத் தெரியும்?

    Share
  • தொட்டால் பூ மலரும் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    கவிதைபோல் தமிழ் மணம் கனிந்துருக வைத்துவிடும்
    இளமைபோல் இனிமைநலம் என்றென்றும் பாடிவிடும்
    அருமையெனச் சொல்லாதார் எவர் இருக்க முடியும்? – கவிஞர்
    திறமைதனை மெச்சித்தான் ஊர் புகழும் உன்னை!!

    படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு
    மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு
    வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை
    வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் மங்கையர் வரை
    மனதுக்குள் கொண்டாடும் மயக்கம் தரும் பாட்டு.

    இதுவரைக்கும் வந்த பாடல்களையெல்லாம் வென்றெடுக்கும் பாட்டு!!!!

    தொட்டால் பூ மலரும்தொட்டால் பூ மலருமாம்! தொட்டவர்கள் அறிவார்கள். இசை மெட்டால் நமை மீட்டும் இருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையில் தோன்றிய வெற்றிச் சரித்திரம் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி. கற்பனைகளின் உச்சம் தொட்டு கவிஞரின் எழுதுகோல் நகர, அற்புத இயக்கம் தந்த பிரகாஷ்ராவ் இயற்கையின் வனப்பைக்காட்டும் காமிரா இத்தனையையும் கூட்டணி அமைத்து நம்மைக் கொள்ளையடிக்க, பாடலின் தொடக்கத்தில் ஓடிவந்த நாயகன் நாயகியைத் தொட்டுவிடும் அழகு.

    பாடல் முழுவதும் ஓடிவருகிற வண்ணத்தை என்ன சொல்ல? கைகளால் காதலனும் காதலியும் தட்டிக்கொள்ள. ஒவ்வொரு வரியும் உள்ளத்தில் ஓராயிரம் சுகம் பிறக்க வைக்கிற உண்மையை மீண்டும் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம். வண்ணத்தில் வரைந்து வைத்த காவியமாம் இத்திரைப் படம் நம் எண்ணத்தில் என்றும் முன்னணியில்… இது போன்ற இனிய பாடல்களால்.

    படம்: படகோட்டி (1964)
    வரிகள்: வாலி
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
    ராகம் : சுத்ததன்னியாசி

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்
    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்

    கண்கள் படாமல் கைகள் தொடாமல்
    காதல் வருவதில்லை
    நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
    ஆசை விடுவதில்லை ஹோ!
    ஆசை விடுவதில்லை
    [தொட்டால்…]

    இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
    இளமை முடிவதில்லை ஹோ!
    இளமை முடிவதில்லை
    எடுத்துக் கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
    பொழுதும் விடிவதில்லை ஹோ!
    பொழுதும் விடிவதில்லை
    [தொட்டால்…]

    பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல்
    பித்தம் தெளிவதில்லை ஹோ!
    பித்தம் தெளிவதில்லை
    வெட்கம் இல்லாமல் வழங்கிச் செல்லாமல்
    சொர்க்கம் தெரிவதில்லை ஹோ!
    சொர்க்கம் தெரிவதில்லை
    [தொட்டால்…]

    பழரச தோட்டம் பனிமலர் கூட்டம்
    பாவை முகமல்லவா ஹோ!
    பாவை முகமல்லவா
    அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
    ஆயிரம் முகமல்லவா ஹோ!
    ஆயிரம் முகமல்லவா
    [தொட்டால்…]

    காணொளி: https://www.youtube.com/watch?v=RJXrqY-Df1M

    Share
  • படக்கவிதைப் போட்டி 31-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. சாந்தி விஜய் எடுத்திருக்கும்  எழிலான இந்த நிழற்படத்தைப் போட்டிக்குத் தெரிவு செய்து அளித்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது வல்லமை இதழ்.

    baby krishna

    குழந்தையாய்க் காட்சியளிக்கும் தெய்வ வடிவங்களில் மக்களின் உள்ளங்கவர் கள்வர்கள் இருவர். ஒருவர் குறிஞ்சிநிலக் கடவுளும் பவள மேனியனுமாகிய சேயோன். மற்றொருவர் முல்லைநிலக் கடவுளும் காயாம்பு வண்ணனுமாகிய மாயோன்.

    இந்தப் புகைப்படத்தில் காட்சியளிக்கும் குழந்தையோ நீலவண்ணனின் கோலம்புனைந்து தன் அழகாலும் நளின முகக்குறிப்புக்களாலும் நம் உள்ளத்தைக் கொள்ளையடித்துப் போகின்றது.

    குழந்தையின் உருவும் அதன் நின்ற திருக்கோலமும் நம் கவிஞர்கள் மத்தியில் எத்தகைய எண்ண அலைகளை எறிந்திருக்கின்றன என்று அறிந்துவருவோம்!

    ***

    ’குழந்தைகளால் அடையாளப்படுத்தப்படும் பெரியோர்களும் பார்வையாளர் இல்லா (வாழ்க்கை)நாடகத்தில் குழந்தைகள்தாம்!’ என்கிறார்’ திரு. கவிஜி.

    குழந்தைகள்
    செய்து காட்டும்
    பெரியவர்கள்
    குழந்தைகளாகவே
    இருக்கிறார்கள்….
    யாருமில்லாத
    மேடை நாடகத்தில்….

     ***

    ’குழந்தைகள்மீது பாசம்கொண்ட பாரதியின் ’பாப்பாப் பாட்டு’ கேட்டு மகிழ்ந்த என் செவிகளில் இன்று விழுகின்ற ஆபாசப் பாடலோ அருவருப்பைத் தருகின்றதே!’ எனக் குமுறும் மழலையின் மொழிகளைக் கவிதையாக்கியிருக்கிறார் திருமிகு. லட்சுமி.

     பாப்பா பாட்டு பாடிய
    வாயால் ஆபாச கானம்
    கேட்க முடியலையே!
    எந்தன் மழலைப் பேச்சு
    தொல்லை உலகில்
    அருகித்தான் போய்விட்டதே!
    தொல்லைக்காட்சி வருகையினால்
    வயதுக்கு மீறிய பேச்சுக்கள்
    கேட்ட காதுகள் இரண்டும்தான்
    தொல்லைக்காட்சி வேண்டாம்
     என்று சொன்னதுவே!
    […]
    மனிதநேயம் காத்திட்ட
    மனிதராக வாழ்ந்திட்டால்
    என்றும் நிம்மதி நமக்குத்தான்
    இதயம் தொட்ட மகிழ்ச்சிதான்!

    *** 

    குழந்தைகளைக் குழந்தைகளாய் வளரவிடாமல் வயதுக்கு மீறிய முகபாவனைகளை அவர்களிடம் திணிக்கும் பெரியோர் செயல் ’வேருக்கு விஷம் பாய்ச்சி மரத்தை நஞ்சாக்கும் செயலை ஒக்கும்’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ். 

    கபடமற்ற குழந்தை முகத்தில்
    கபடமுள்ள மனிதர்களின் பாவனை
    வரவழைப்பதிலிருந்து
    நாளைய சமுதாயத்தின் வேர்களுக்கு
    விஷம் பாய்ச்சி வியக்கிறோம்
    நாடகமாய் .

    *** 

    ’தம் குழந்தைகளுக்கு ஆடை அணிகலன் பூட்டி அரங்கில் ஆடவிடும் பெற்றோரின் செயல் தம் பணத்தையும் பகட்டையும் காட்டுவதேயன்றி வேறில்லை’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தேடி ஓடிப் பொருள்சேர்க்கும்
    தந்தை தாயும் பெருமைக்காக
    ஆட விட்டார் அரங்கமதில்
    ஆடை அணிகலன் பூட்டியேதான்
    வாடும் பயிர்போல் வாடவிட்டார்
    விருப்ப மில்லா மழலைகளை,
    நாடும் கல்வி அவர்களித்து
    நாளை உலகுக் களிப்பீரே…!

    *** 

    ’குழந்தையான தான் ’பெரியமனுஷி’ மாதிரி பாவனை காட்டினால்கூடத் தன் பெண்மைக்கு ஆபத்து வந்திடுமோ!’ என அஞ்சிடும் பிஞ்சு நெஞ்சினைப் பாவில் காட்டியிருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

    முக பாவனையில்
    பெரிய மனுஷித்தனம்
    காட்டச் சொன்னால்……

    அய்யோ…அய்யய்யோ….
    வன்புணர மிருகங்கள்
    வரிசையில் வந்து விடுமே….

    பிஞ்சென்றும் பாராது
    பிய்த்துத் தின்னும் மனிதர்கள்…
    […]

    கல்வியில் பாடம் கற்குமுன
    கலவியைக் கற்றுத்தரும்
    கசடர்கள்….
    […]

    விழுந்த விதை
    முட்டி மோதி
    விருட்சமாய் வருவதற்குள்….
    பூ பாரம் தாங்குமோ இப்
    புனிதப் பெண் பிள்ளை!

    கருவறை தாண்டி வந்தேன்
    கல்லறை அடைவதற்குள்
    சிறுமலர் வாடுமோ…..
    சிறு புள்ளும்
    சிறகடித்துப் பறக்குமோ…..

    சரிபாதி இட ஒதுக்கீடா….
    இருக்குமிடமாவது
    தக்க வைத்துக் கொள்வோம்….

    ***

    கண்ணா! உன் முகத்தின் வாட்டத்திற்குக் காரணமென்ன? ராதையுடன் காதல் கைகூடவேண்டுமே எனும் கவலையா? கீதையின் சாரம் சொன்ன களைப்பா? ஏழையின் ஒட்டியவயிறுகண்டு வந்த வேதனையா? எனக் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றார் திருமிகு. ராதா மரியரத்தினம். 

    ராதையின் காதல் எண்ணி
    கவலை கொண்டாயா இல்லை
    கீதையின் சாரம் சொல்லி
    களைப்படைந்தாயா
    கொவ்வைக்  கனி  இதழை ஒத்த
    கோபியர் தம்மை ஏய்த்து
    அன்னையிடம் வாங்கிய
    அடியை எண்ணித்  துயர் கொண்டாயா 

    தான் படைத்த பூமியின்
    அழகை அழித்த
    மானுடம் நோக்கி உந்தன் கோபமா
    தர்மம்’ நீதி இல்லா உலகைக்
    கண்டு மனம் கொதித்தாயா
    […]

    காக்கும் கடவுளாய் இருந்து
    உலக சமநிலை காத்தாய்
    கீர்த்தியுள்ள பெருமாள்
    உனக்கு கோடிகள் குவியும் நேரம்
    பார்த்திருக்கும் ஏழையின்
    ஒட்டிய வயிறு கண்டு
    காத்திரமாய் வந்த கோபமா….

    ***

    வேடமிட்ட குழந்தையின் வாயிலாய் மக்கள் கற்கவேண்டிய வாழ்க்கைப் பாடங்களை நன்கு விளக்கியுள்ளீர்கள் கவிஞர்களே! பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் காண்போம்!

    இன்றைய பெற்றோரிடம் காணப்படுகின்ற பெரிய குறை, தம் ஆசைகளையெல்லாம் தம் பிள்ளைகள் நிறைவேற்றியே தீரவேண்டும் என்கின்ற நியாயமற்ற எதிர்பார்ப்பு. அதன் விளைவு…எந்தப் போட்டியானாலும் தம் பிள்ளைகள் அதில் பங்கேற்று வெற்றிவாகை சூடிவிடவேண்டும் எனும் பேராசை கலந்த பரிதவிப்பு! அவ்வாறு அன்னையின் வற்புறுத்தலால் அளவற்ற அணிகலன்கள் சுமந்து கண்ணனாக மாறியிருக்கும் குழந்தையொன்று படும்பாட்டை விளக்கும் எளிய பாட்டொன்று கண்டேன்!

    எத்தனை சொல்லியும் அம்மாவின் பிடிவாதம்!
    இத்தனை பாரம்! செய்த தலையலங்காரம்.!
    மொத்த முகப்பூச்சும் சேர்ந்து அம்மாடியென்
    சத்தெல்லாம் இழந்ததாய் களைப்பு! அலுப்பு!

    இந்த நள்ளிரவில் படத்திற்கு நிற்பது
    எந்தப் பிள்ளைக்குத் தரும் மகிழ்விது!
    சொல்லுங்கள்! எனக்கு ஆனந்தம் தரவில்லை
    வெல்லுங்கள் பிடிவாதத்தாலல்ல அன்பால் எங்களை!
     

    மழலையரின் இன்றைய நிலையைத் தன் கவிதையில் எதார்த்தமாய்ப் பேசியுள்ள திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

    ***

    அடுத்து என்னைக் கவர்ந்தது, ’நான் கண்ணன் வேடம் போட்டதுதான் தாமதம்…வந்து குவிந்துவிட்டனவே கோரிக்கை மனுக்கள்!’ என்று நொந்துகொள்ளும் குழந்தையை அழகாய்க் காட்சிப்படுத்தியுள்ள திரு. கொ. வை. அரங்கநாதனின் கவிதை.

    அதர்மம் அழித்து
    தர்மம் காக்க வந்த
    புதிய தலைமுறை
    கண்ணனே 

    காஷ்மிர் த்ரௌபதியின்
    துகிலுரிய காத்திருக்கும்
    பாகிஸ்தான் துச்சாதனனுக்கு
    பாடம் கற்பிக்கப்போவது
    எப்போது

    ஜனநாயக களத்தில்
    களைகளாய் உணரப்படும்
    சமுதாயச் சகுனிகளை
    சட்டத்தின் முன்
    எப்பொழுது நீ
    கொண்டு வருவாய்

    ஊழல்களிலிருந்து
    நாட்டை மீட்டெடுக்க
    புதிய கீதையை
    எப்போது நீ
    புனையப் போகிறாய் 

    மாறு வேடப் போட்டிக்காக
    கண்ணன் வேடமிட்டால்
    இத்தனை மனுக்களா
    அடப் போங்கப்பா
    தலை சுத்துது

    இக் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

     கவிஞர்களே! எதிர்வரும் போட்டிகளிலும் ஊக்கத்தோடு பங்குகொள்ளுங்கள்; வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”ஆழி மழைவண்ணன் ஆவின் முகம்வெண்ணைத்
    தாழியாக்கி தாயார் தடுக்கும்முன் , -சோழியன்
    கண்ணன் கடைகின்றான், காராம் பசுமுகத்தில்,
    வெண்ணையாய் பாலை வடித்து”….கிரேசி மோகன்….

    Share
  • சிரிப்பதிகாரம் (5)

    கிரேசி மோகன்
    crazy mohan
     ”வாய்வரும்முன் கண்ணால் வெடித்து சிரிப்பவர்,
    நோய்வரும்முன் காக்கும் நிறைமதியார்: –தாய்வரும்முன்,
    சேய்வருதல் போல, சிரிக்கப் பழகியவர்
    பாய்வரும்முன் தூங்கு பவர்”….கிரேசி மோகன்….
    “உள்ளது ஒன்றே உணர்வது, மாயையால்,
     கள்ளதைப் பாலாய்க் குடித்திடும்; -பிள்ளாய்,
     சுரக்கும் பசும்பால், கறக்கும் வரைதான்,
     சிரிப்”பால்” கறந்திடுஸீ ஸே”….
    Share
  • வீர பகத்சிங்

    மீ.விசுவநாதன்

    Bhagat-Singh

    பகத்சிங் பகத்சிங் என்று ஒருத்தரு -நம்ம
    பாரத தேசம் காக்க உழைச்சாரு !
    சுகத்த சுகத்த வேண்டா இளைஞரு – தன்னைத்
    தூக்கிடும் போதும் துணிந்து நின்னாரு !

    இறந்தும் என்றும் பிறக்க நினைக்கிற – ஒரு
    இந்திய வீர னாக உள்ளாரு !
    மறந்தும் அடிமை வாச லருகிலே – மனம்
    வாசனை தேடித் போகா பொன்னாளு !

    (இன்று (27.09.2015) தியாகி வீரன் பகத்சிங் பிறந்த தினம்)

    Share
  • “அன்புள்ள அம்மா”

    ஸ்ரீ மாதா அமிர்தானந்தமாயி சரிதம்

     
    மீ.விசுவநாதன்

    ஸ்ரீ கணநாதன்

    ஆன முகனே
    உன்னருளால்
    ஆன முகமே
    உலகம் ! நீயதன்
    நெற்றித் திலகம் ! என்னால்
    ஆன தேது?
    என்போர்க்கு
    நீயே அம்மா
    ஆன மாது !
    –௦- -௦-

    அம்மா..நீ
    மச்சா வதாரத்தின்
    மிச்சா வதாரம் ! கருமைக்
    கண்ணனின்
    அச்சா வதாரம் ! தேவியின்
    இச்சா வதாரம் !
    அரக்க குலத்தை
    அழிக்க வந்ததன்று
    வானினம் ! இன்றோ
    இரக்க குணத்தால்
    இருக்கக் கட்டிடும்
    மீனினம் ! அன்புக்கினிய
    பூவினம் !
    -௦- -௦- -௦-

    பாற்கடலைக் கடைந்த
    போது வந்த
    “அமிர்தா” இன்று
    ஊர்க்கடலாய்ப் பரந்த
    உலகுக்கே உயிரான
    “அமிர்தா”?

    மகளா ? மகானா ?
    மனத்தின் சுகமா ?
    அவளின் சரிதம்
    அமிர்தா? ஆனந்தமா?
    இரண்டுமான
    “அமிர்தானந்தமா?”

    ஆர்க்கும் ஆசைதான்
    அறிய !
    ஈர்க்கும் தமிழாலே
    அவள்சரிதம் எழுத
    வேண்டுவேன்
    அருள் புரிய !

    …….(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)

    (இன்று (27.09.2015) ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி பிறந்த தினம்)

    Share
  • ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது.

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    அணுத்தொடர் இயக்கம் புரிந்து
    அணுசக்தி படைத்தது போல்,
    உயிரியல் விஞ்ஞானத்தில்
    முதன்முதலாய் டியென்ஏ
    கண்டது போல்
    அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும்
    செர்ன் விரைவாக்கி யந்திரம்
    பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய்
    அரங்கேற்றி உருவாக்கும் !
    கடவுள் துகள்
    தடத்தைக் கண்டதாய்
    அறிவிக்கும்.
    ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில்
    எதிர் எதிரே
    புரட்டான்களை மோத விட்டு
    எழும்சக்தி துகளாய் மாறும் விந்தை !
    கனமான நுண் துகளே
    பரமாணுக்கு நிறை அளிக்கும்
    கடவுள் துகள் !
    மூவான் நுண்துகள் மோதலில்
    தோன்றும் !
    அணுக்கரு எதிர் அணுக்கரு
    துகள் எதிர்த்துகள்
    பிண்டம் எதிர்ப்பிண்டம்  உண்டாகும்.
    புரோட்டான்கள் மோதிப்
    பொரிக்கும் பெரிய
    குஞ்சுகள் !
    குளுவான்கள் ! குவார்க்குகள் !
    லிப்டான்கள் !
    ஃபெர்மி யான்கள் !
    ஹிக்ஸ் போஸான்கள் !

    +++++++

    Symmetric Universe

    https://youtu.be/B-YlmrzjwZE

    https://youtu.be/WDHiKoBwDdw.

    http://www.powershow.com/view1/e498f-ZDc1Z/Fundamental_Symmetries_of_the_Early_Universe_The_Standard_Model_powerpoint_ppt_presentation

    https://www.youtube.com/watch?v=5Mr5MNrhZTc

    CERN Large Collider

    பிரபஞ்ச பெரு வெடிப்புக்குப் பிறகு பிண்டத்தின் ஒவ்வொரு துகள் உருவாகும் போது, ஓர் எதிர்த்துகள் [Particle & Antiparticle] படைக்கப் படுகிறது.  துகள் பௌதிகத்தில் எழும் ஒரு முக்கிய வினா, பௌதிக விதிகள் அனைத்தும் ஒரு தனித்துவச் சீரமைப்பைக் [Symmetry known as CPT (Charge, Parity, Time)] காட்டுகின்றனவா என்பது.  அதன் அளவீடுகள் அணுக்கரு, எதிர் அணுக்கருக்கு இடையே [Between Nuclei & Antinuclei] ஓர் அடிப்படைச் சீரமைப்பு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

    மார்செலோ காமைரோ முன்காஸ்  [பேராசிரியர், பிரேசில் ஆய்வுக்குழு, CERN ALICE Experiment]

    History of the Universe

    செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச சீரமைப்பை உறுதிப் படுத்துகிறது.

    ஆகஸ்டு 17, 2015 ஆம் தேதி வந்துள்ள இயற்கைப் பௌதிக இதழில்  [Nature Physics Journal] வெளியான அறிக்கை இது:  செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் துகளின் நிறை, மின்னேற்றத்தை  அளந்து, இயற்கையில் அடிப்படைச் சீரமைப்பு இருப்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.  அதை மெய்ப்படுத்திய பிரேசில் சாவ் பாலோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள், [Sao Paulo University (USP)] அந்த உறுதிப்பாட்டால் எந்த பிரபஞ்ச நியதி சொல்வது சரியானது என்பதை அறிய முடியும் என்று கூறுகிறார்.

    பிரபஞ்ச பெரு வெடிப்புக்குப் பிறகு பிண்டத்தின் ஒவ்வொரு துகள் உருவாகும் போது, ஓர் எதிர்த்துகள் [Particle & Antiparticle] படைக்கப் படுகிறது.  துகள் பௌதிகத்தில் எழும் ஒரு முக்கிய வினா, பௌதிக விதிகள் அனைத்தும் ஒரு தனித்துவச் சீரமைப்பைக் [Symmetry known as CPT (Charge, Parity, Time)] காட்டுகின்றனவா என்பது.  அதன் அளவீடுகள் அணுக்கரு, எதிர் அணுக்கருக்கு இடையே [Between Nuclei & Antinuclei] ஓர் அடிப்படைச் சீரமைப்பு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன என்று கூறுகிறார், பேராசிரியர், பிரேசில் ஆய்வுக்குழு, [CERN ALICE Experiment]   மார்செலோ காமைரோ முன்காஸ்.

    மின்னேற்றம், ஒப்புமை,  காலம் ஆகிய ஆய்வு அளப்பீடுகள்  [Charge, Parity, Time] செர்ன் அணு உடைப்பி அலிஸ் [ALICE – A Large Ion Collider Experiment] கருவி மூலம் அறியப்பட்டவை.  அக்கருவி கன அயனியைக் [Heavy Ion Detector] கண்டுபிடிப்பது.  இந்த இயக்க வினை மூலம் பிண்டத்தை [Matter] அதி உன்னத உஷ்ணத்திலும், திணிவுகளிலும், [Extremely high temperature & densities] ஆய்வுகள் செய்யலாம்.

    Particle Zoo


    1969 இல் சந்திரனுக்குக் குறிப் பயணம் செய்த மகத்தான மனித முயற்சி போல் ஹிக்ஸ் போஸான் துகளைத் தேடிச் சென்றதும் உலக மாந்தர் கவனத்தைக் கவர்ந்தது.   நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பொல்லோ விண்வெளிக் குறிப் பணிகள்  பொதுமக்களை  விஞ்ஞானத் தேடல் கண்டுபிடிப்புகளில் ஈர்த்தன.   அடுத்த பிறவி விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டி ஆர்வத்தைத் தூண்ட இந்தக் கடவுள் துகள் கண்டுபிடிப்பு நீடித்துச் செல்லும்.

    பேராசிரியர் பீட்டர் நைட் (Professor Peter Knight, President of Institute of Physics, UK. )

    ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு உயிரியல் விஞ்ஞானத்தில் “டி யென் ஏ” (DNA) மூலவி கண்டுபிடிப்புக்கு ஒப்பாகும்.  இது  டியென்ஏ  கண்டுபிடிப்பின் ஒரு பௌதிக வடிவம்.   நமது பிரபஞ்ச அமைப்புப் பின்னல் நாரைப் (Fabric of the Universe) புரிந்து கொள்ளும் முயற்சியின் போக்கில் புது தீரச் செயலுக்கு ஒரு பாதை உண்டாக்கும்.

    பேராசிரியர் பீட்டர் நைட்.

    கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஒரு மகத்தான சாதனை.   15 ஆண்டுகள் அகில நாடுகளின் கூட்டுறவில் மாபெரும் பரமாணு உடைப்பியைக் (Large Hadron Collider) கட்டி அமைத்ததின் பயனைப் பெற முடிந்தது.   இந்த அறிவிப்பானது  “துகள் பௌதிகத்தின்” நிலைத்துவ மாடல் (Standard Model of Particle Physics.) ஏற்பு உடையது என்பதை உறுதிப் படுத்தி உள்ளது.

    பேராசிரியர் பீட்டர் நைட்.

    “உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)

    “செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”

    ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

    CERN Fig 9 Experiment on Dark Matter

    “இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

    டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

    Dark Energy & Dark Matter

    Dark Matter in the Universe


    “பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second after the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் “முதல் பௌதிகம்” என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)

    “இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !”

    மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)

    “மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளி லிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,”

    ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)

    “இந்தப் புதிய ஹிக்ஸ் போஸான் தேடல் விளைவுகள் டெவடிரான் விரைவாக்கியில் கிடைத்த ஏராளமான தகவல் இலக்கத்தாலும் (Tevatron Collision Data) அநேகப் பட்டப் படிப்பு நிபுணர் வடித்த கூரியக் கணித விதிகளாலும் (Smart Search Algorithms) கிடைத்தவை.”

    ராபர்ட் ரோஸர் (Fermilab Co-Spokeperson, CDF & DZero Analysis Groups)


    “ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியின் (Tevatron Collider) உற்பத்தியைத் தூண்டி உன்னத நிலைக்கு ஆய்வுகள் உயர்ந்துள்ளன.  டெவடிரான் உடைப்பியின் சிறந்த சோதனை விளைவுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்து கிறோம்.  உலக நாடுகளின் CDF & DZero சோதனை ஆய்வுக் கூட்டாள விஞ்ஞானிகள் சாதித்த விளைவுகள் துடிப்புணர்ச்சி உண்டாக்குபவை.  அவை ஹிக்கிஸ் போஸான் தேடல் ஆராய்ச்சியில் மகத்தான முன்னேற்றைக் காட்டியுள்ளன.”

    டெனிஸ் கோவர், (Dept of Energy Associate Director of Science for High Energy Physics)

    “உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)

    “செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists).  இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”

    ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

    “இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது.  அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும்.  மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி விசையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

    டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

    செர்ன் விரைவாக்கி யந்திரம் உண்டாக்கிய புரட்சிகரமான மூலத்துகள் ஹிக்ஸ் போஸான்

    சுமார் பதினாங்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு  நேர்ந்ததாகக் கணிக்கும் பிரபஞ்சப் பெருவெடித் தோற்றத்தில் முதன்முதல் உதித்ததாக யூகிக்கபட்ட “ஹிக்ஸ் போஸானைப்”  போன்ற ஒரு துகளைச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் புரோட்டான்களை மோத விட்டுக் கண்டு பிடித்திருப்பதாக பிரிட்டிஷ்  துகள் பௌதிக விஞ்ஞானிகள் 2012 ஜூலை 5 ஆம் தேதி  அறிவிப்பு செய்து ஒரு பரபரப்பை உண்டுபண்ணினார்.    அந்தத் துகளின் பெயர் :  ஹிக்ஸ் போஸான் (Higgs Boson).    அந்த அற்புதத் துகளை வடிவாக்கிய விரைவாக்கி யந்திரம் செர்ன் அல்லது  “பரமாணு பெரு உடைப்பு யந்திரம்” (CERN or Large Hadron Collider) என்பது.    கண்டுபிடித்த புதிய துகள், ஹிக்ஸ் போஸானின் பண்பாடுகள் கொண்டதற்கு மெய்யான சான்றுகள் கிடைத்துள்ளதாயினும் இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்ப நிலை செர்ன் ஆய்வு விளைவுகளை வைத்தே இப்போது அறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது.   கடவுள் துகளின் உறுதிப்பாடு பூரணமாக இன்னும் ஏராளமான விளைவுப் பதிவுகள் ஆராயப்பட நீண்ட காலம் ஆகலாம்.   புதுத் துகள் எந்த விதமான வடிவம் எடுத்தாலும் சரி, இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு அணுப் பிண்டத்தின் அடிப்படை அமைப்பு (Fundamental Structure of Matter) பற்றிய நமது பழைய அறிவு பேரளவில் உயர்ந்து முன்னேறப் போகிறது.

    2012 ஜூலை ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த செர்ன் விரைவாக்கி ஆய்வு நிபுணர் நடத்திய “துகள் பௌதிகப் பேரவையில்” (Major Particle Physics Conference) பிரிட்டிஷ் துகள் விஞ்ஞானிகள் இந்த அரிய கண்டுபிடிப்பை முதன்முதல் வெளியிட்டனர்.  நீண்ட காலம் எதிர்பார்த்த ஹிக்ஸ் போஸான் துகள்  உண்டாக்கிய செர்ன் அட்லாஸ், சி யெம் எஸ் சோதனைக் கருவி விளைவுகளை (ATLAS, CMS Experiments)  அறிவித்தார்.   இரண்டு சோதனைக் கருவிகளின் விளவுகளும் 125 –126 GeV (Gega Electron Volt Energy) கெகா எலக்டிரான் ஓல்ட் சக்தியுள்ள துகளை உருவாக்கின.  இந்த அறிவிப்பு முன்னோடி விளைவுகளை (Preliminary Results) வைத்துச் செய்யப் பட்டது.   ஆனால் பூரண உறுதி அளிப்பதற்கு இன்னும் ஆராயப் பட வேண்டிய சோதனை விளைவுகள் ஏராளமாய் உள்ளன.   விஞ்ஞானிகள் ஆயினும் ஹிக்ஸ் போஸான் பண்பாடு உள்ள ஓர் புதுத் துகளை நிச்சயம் செர்ன் விரைவாக்கி உண்டாக்கிய விட்டதாக உறுதியாக அறிவித்தார்கள்.  2012 ஜூலை மாதக் கடைசியில் அனைத்து விளைவுகளும் ஆய்வு செய்யப் பட்டு முடிவான அறிவிப்பு செய்யப்படும் என்பது தெரிகிறது.

    ஹிக்ஸ் போஸான் மூலத்துகள் கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் என்ன ?

    இரண்டாம் உலகப் போரின் போது 1945 இல் நூற்றுக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் சோதனைத் தளத்தில் அணுவைப் பிளந்து தொடரியக்கத்தைக் கட்டுப் படுத்தி அணுசக்தியின் பேராற்றலை முதன்முதல் வெளிப்படுத்திய நிகழ்ச்சி, நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செர்ன் விரைவாக்கியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பிரபஞ்ச தோற்றத்தின் கடவுள் துகளை உருவாக்கிக் கண்டுபிடித்ததற்கு நிகராகும்.   இப்போது செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் என்ன ?   கண்டுபிடித்த ஹிக்ஸ் போஸான் துகளின் துல்லிய இயற்கைப் பண்புகளை ஆழ்ந்து அறிவது,  அதனால் இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி விளக்கமாக அறிவது போன்ற புதிய விபரங்களே.   அவ்விதம் பெற்ற துகளின் பண்பாடுகள் துகள் பௌதிகத்தில் இறுதியாக நிலைத்துவ மாடலில் நிரப்பப் பட வேண்டிய உட்கூறா (Missing Ingredient in the Standard Model of Particle Physics) என்பது தெளிவாக்கப் படும்.    அல்லது ஹிக்ஸ் போஸான் துகள் புரட்சி உண்டாக்கப் போகும் ஒரு புது அதிசயமா என்பது அறியப் படும்.

    துகள் பௌதிகத்தின் நிலைத்துவ மாடல் என்ன சொல்கிறது ?   நாம் தோன்றக் காரணமான மூலாதார துகள்கள், பிரபஞ்சத்தில் காணப்படும் அண்ட பிண்டங்கள் உண்டாக உதவிய அடைப்படைத் துகள்கள்,  அவற்றுடன் பின்னிப் பிணைந்து இயக்கி வரும் அகில விசைகள் (Forces of the Universe) ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.    பிரபஞ்சத்தில் அண்ட பிண்டங்களின் இருப்பு  மொத்தத்தில் 4%  மட்டுமே.  தற்போது கண்டு பிடிக்கப் பட்ட கடவுள் துகள் 96% மர்மாக இருக்கும் பிரபஞ்ச மீதிப் புதிரை விடுவிக்க ஒரு பாலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆணித்தரமான விளக்கம்  வெளிவர இன்னும் செர்ன் சோதனை விளைவுகளை ஆராய நீண்ட காலம் ஆகும் என்று அறியப் படுகிறது.

    ஹிக்ஸ் போஸானை முன்மொழிந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ்

    கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் அதை ஊகித்து விளக்கிய பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் பெயரைக் கொண்டது.  1964 இல் அவர் ராபர்ட் பிரௌட், பிரான்காய் எங்லெர்ட், டாம் கிப்பிள், ஹேகன், ஜெரால்டு குரல்னிக் ஆகியோரின் கருத்துக்களுடன் மூன்று வெளியீடுகள் வெளியிட்டார்.   அந்தக் கோட்பாடு ஹிக்ஸ் தளம், போஸான் சார்ந்த ஹிக்ஸ் யந்தரவியல் (Higgs Mechanism Related to Higgs Field & Boson) என்று அழைக்கப் பட்டது.    ஹிக்ஸ் போஸான் ஒரு கனமான துகள் ஆனதால், அது செர்ன் விரைவாக்கியில் உருவானதும் உடனே சிதைந்து வேறு சிறு பரமாணுக்களாய் மாறுகிறது (It decays almost immediately into two jets ofhadrons and two electrons, visible as lines.)   ஹிக்ஸ் போஸான் தேடல் செர்ன் விரைவாக்கியில் 2010 ஆண்டின் ஆரம்ப காலத்தில் துவங்கி,  அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் விரைவாக்கியில்  2011 ஆம் ஆண்டில் அது மூடுவது வரை ஆய்வு செய்யப் பட்டது.

    பரமாணுகளுக்கு நிறை தருவது (Mass) இந்த ஹிக்ஸ் போஸான்.  ஹிக்ஸ் தளத்தின் ஈடுபாடே  (Higgs Field Interaction) அடிப்படைத் துகள்களுக்கு நிறை கொடுக்க ஏதுவாகிறது.   ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசையே  அதன் மீதுள்ள பொருளுக்கு எடை கொடுப்பது போல் அதைக் கருதலாம்.   ஈர்ப்பு விசை பூஜியமானால் பொருளுக்கும் எடை இல்லாது போகும்.  ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் துகள்.   அடிப்படைத் துகள் சில இந்திய விஞ்ஞானி சத்தியேந்தர  நாத் போஸ் பெயரைத் தாங்கி  உள்ளன.   அவர் ஐன்ஸ்டைன் காலத்தில் அவருடன் விஞ்ஞானப் பணி செய்தவர்.   போஸன் துகள் ஒரு தனிப் பண்பு கொண்டது.  அது அதைப் போன்று ஒத்திருக்கும் பற்பல துகள்களை ஒரே இடத்தில், ஒரே குவாண்டம் நிலையில் (Quantum State)  வைத்திருக்க அனுமதிக்கும்.   மேலும் நிலைத்துவ மாடல் விதிப்படி ஹிக்ஸ் போஸானுக்கு சுழற்சி இல்லை, நேர், எதிர் மின்னேற்றங்கள் கிடையா.   நிற ஏற்றமும் இல்லை.  (No Intrinic Spin, No Electrical Charge, No Color Charge)

    பூர்வீக மூலத் துகள் தேடலில் நெருங்கிச் சென்ற முதல் விரைவாக்கி யந்திரம்

    வெகு விரைவில் உலகப் பெரும் விரைவாக்கி புதிய அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கத் துவங்கும் நிலைக்கு வந்து விட்டதென்று ஒரு பெரும் செர்ன் விஞ்ஞானி அறிவித்தார். செர்ன் யந்திரத்தின் சமீபத்திய இயக்க முன்னேற்றம் தொடர்ந்தால், விஞ்ஞானிகள் இவ்வாண்டு வேனிற் கால முடிவுக்குள் துகள் பௌதிகத்தில் (Particle Physics) புதியதோர் திருப்பத்தை உண்டாக்குவார் என்று தெரிந்தது. அவற்றுள் முதலில் கண்டுபிடிக்கப்பட இருப்பவை ஏற்கனவே உள்ளதாக ஊகிக்கபட்ட இரண்டு போஸான் துகள்கள் (Boson Particles). பத்து பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்டு ஆரம்பத்தில் ஹீலியம் கசிந்து பழுதுகள் நீக்கப் பட்டு முதன்முதல் 2009 நவம்பரில் செர்ன் விரைவாக்கி யந்திரம் செம்மையாக இயங்க ஆரம்பித்து பல பில்லியன் மோதல்களை உண்டாக்கி விட்டது. பிரென்ச்-சுவிஸ் எல்லையில் ஜெனிவாவுக்கு அருகில் 27 கி.மீ. விட்டமுள்ள வட்ட அடித்தளத்தில் இயங்கி வருகிறது செர்ன் விரைவாக்கி யந்திரம். அந்த உலகப் பெரும் விரைவாக்கி அணுவின் அடிப்படைத் துகள் “ஹிக்ஸ் போஸான்” என்பதை 1000 GeV (Gega-electron Volt) மின்னாற்றலில் காணலாம் என்று விஞ்ஞானிகளால் ஊகிக்கப் பட்டது.

    புரோட்டான் நிறையைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதானது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் ஊகிப்பு அடிப்படைத் துகள். இந்த நிறை அளவீட்டில் முதலில் உதிக்கும் புதிய துகள்கள் ‘பிரதம W போஸான்கள்’ & ‘பிரதம Z போஸான்கள்’ (W Prime Bosons & Z Prime Bosons). இவை இரண்டும் கனமான போஸான்கள்.. மெலிந்த போஸான்கள் எனப்படும் ‘W போஸான்கள்’ & ‘Z போஸான்கள்’ (W Bosons & Z Bosons) நலிந்த இயக்கப்பாடுகளுக்குப் (Weak Interactions OR Weaker Nuclear Force) பொறுப்பானவை. நான்கு அடிப்படை இயக்கப்பாடுகள் : ஈர்ப்பியல் சக்தி, மின்காந்த சக்தி, வலுத்த அணுக்கருச் சக்தி, நலிந்த அணுக்கருச் சக்தி. (Four Fundamental Interactions of Nature: Gravitation, Electromagnetism, Strong Nuclear Force & Weaker Nuclear Force).

    1980 இல் W போஸான் & Z போஸான் ஆகிய இரண்டும் 100 GeV (Gega-Electron Volt) சக்தியில் பழைய செர்ன் விரைவாக்கியில் கண்டு பிடிக்கப்பட்டன. நிறை மிகையான துகள்களைப் பதிவு செய்ய அதிக சக்தி வாய்ந்த தற்போதுள்ள விரைவாக்கி யந்திரம் செர்ன் போல அமைக்க வேண்டியதாயிற்று. ஒரு சில மாதங்களில் செர்னில் 1000 GeV மின்னாற்றல் உண்டாக்க முடியும் என்று ஆக்ஸ்·போர்டு பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிகவாதி டாக்டர் டோனி வைட்பர்க் கூறுகிறார். செர்ன் விரைவாக்கியில் இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் 3.5 TeV (Tetra- Electron Volt) மின்னாற்றலில் கணை மோதல்கள் நடத்தப் படும். செர்ன் பொறியியல் நிபுணர் படிப்படியாக மின்னாற்றலை மிகையாக்கி வருவார். 18 முதல் 24 மாதங்கள் நீடிக்கப் போகும் பில்லியன் கணக்கான செர்ன் விரைவாக்க மோதல்களின் விளைவுகளை ஆராய்வதற்குச் சில ஆண்டுகள் கூட ஆகலாம் ! கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோதல்களின் எண்ணிக்கை (10^27) (10 to the power 27). இப்போது எண்ணிக்கை (10^29). இந்த வாரத் திட்டம் (ஜூன்–ஜூலை) மோதல்கள் எண்ணிக்கை : (10^30). செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் திட்ட எண்ணிக்கை : (10^34) மோதல்கள். இதுவரைப் புரோட்டான் வேகத்தை ஒளி வேகத்துக்கு ஒட்டி (99.99% ஒளிவேகம்) சக்தி ஆற்றலை 7 TeV அளவு உயர்த்தி உள்ளார். முடிவான குறிக்கோள் திட்ட ஆற்றல் : 14 TeV. செர்ன் விரைவாக்கியின் முழுத் தகுதிச் சக்தியில் விநாடிக்கு 600 மில்லியன் மோதல்கள் நிகழும். அப்போது டிரில்லியன் கணக்கில் புரோட்டான்கள் விரைவாக்கி வட்டக் குழலில் விநாடிக்கு 11245 தடவை சுற்றிவரும் !

    விரைவாக்கியில் பெரு வெடிப்பு இயக்கம் நுண்துகள் உளவும் கருவிகள்

    ஆறு முக்கிய கருவிகளின் பெயர்கள் இவை: (CMS, Atlas, Alice, LHCb, Totem & LHCf) அவை புரியும் பணிகள் என்ன ?

    1. அட்லாஸ் உளவி (ATLAS Detector – A Toroidal LHC Apparatus) : 150 அடி (46 மீடர்) நீளமுள்ள இந்தக் கருவி எல்லாவற்றிலும் பெரியது. இரண்டு கருவிகள் உள்ளன. அவை பிண்ட ஆரம்பத்தைக் காணும். புதிய பௌதிகம், பிறப் பரிமாணம் (Extra Dimension) காணும்.

    2. CMS Detectors (Compact Muon Solenoid) : இதுதான் ஹிக்கிஸ் போஸான்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவி. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடையும் உளவும். இது பன்முக உளவுக்குக் கருவி (Multi-Purpose Detector)

    3. ALICE (A Large Ion Collider Experiment) : இது திரவப் பிண்டத்தைக் கண்டுபிடிக்கும்.
    (Liquid form of Matter called Quark-Gluon Plasma that existed shortly after the Big Bang)

    4. LHCb (Large Hadron Collider Beauty) : பெரு வெடிப்பில் தோன்றிச் சரிபாதி இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டம் (Matter & Anti-Matter) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது. இழந்து போன எதிர்ப்பிண்டத்துக்கு என்னவாயிற்று என்று உளவு செய்யும்.

    5. LHCf (Large Hadron Collider Forward) விண்வெளியில் இயற்கையாக உண்டாகும் மின்னேற்றத் துகள்கள், அகிலக் கதிர்கள் (Charged Particles & Cosmic Rays) போலி இருப்பை ஏற்படுத்தும்.

    6. Totem இது புரோட்டான்கள் எவ்விதம் சிதறும் என்று கண்டு அவற்றின் நிறையை அளக்கும்.

    செர்ன் விரைவாக்கி என்ன முடிவுகளைக் கண்டுள்ளது ?

    செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சத்தின் புதிர்களை விடுவிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டது என்று ஆங்கு பணி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார். நுண்துகளுக்கு நிறை எதனால் ஏற்படுகிறது ? கடவுளின் துகள் எனப்படும் ‘ஹிக்ஸ் போஸான்’ நுண்துகளுக்கு நிறை அளிப்பது என்று முன்பே யூகிக்க பட்டதுதான். இப்போது செர்ன் விநாடிக்கு 10,000 மோதல்களை உண்டாக்குகிறது என்று பௌதிக விஞ்ஞானி ஆன்ரி கொலூட்வின் (Anderi Golutvin) குறிப்பிடுகிறார். விநாடிக்கு எத்தனை அளவு மோதல்கள் மிகையாகுமோ அத்தனை அளவு நெருக்கத்தில் “உச்ச சீரமைப்பு”, “பிண்டம்”, “ஹிக்ஸ் போஸான்” (Supersymmetry, Dark Matter, Higgs Boson) ஆகியவற்றை அடைகிறோம் என்று பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார். “செர்ன் விரைவாக்கியின் கருவி (LHCb) எதிர்ப் பிண்டத்தின் (Anti-Matter) இயற்கைப் பண்பாட்டை நுட்பமாய் நோக்கும். அதே கருவி சமீபத்தில் முதன்முதலாக “நளினி” “விபரீத அழகி” என்னும் இரண்டு பரமாணுக் களைக் (Sub-atomic Particles, Called : Charm & Strange Beauty) கண்டு பிடித்துள்ளது. “விபரீத அழகி” நுண்துகளை முதன்முதல் கண்டுபிடித்த எனது குழுவினர் பேருவகை அடைந்தனர்.

    இயல் பிண்டத்தைப் (Normal Matter) போலின்றி மாறாக இயங்கும் எதிர்ப் பிண்டத்தை (Anti-Matter) அறிய நாங்கள் இந்த நுண்துகளை பயன்படுத்துவோம். ‘விபரீத அழகி’ நுண்துகளைப் பற்றி வேறு யாரும் அறியார். அதுவே செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.” என்று லிவர்பூல் பல்கலைக் கழக ஆய்வாளர், டாக்டர் தாரா ஸியர்ஸ் கூறினார். செர்ன் விரைவாக்கியின் சக்தியும், இயக்கமும் தயாராகி “ஹிக்ஸ் போஸான்” நுண்துகளைக் கண்டுபிடிக்க 2011 ஆண்டு ஆரம்ப மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர் வைட்பர்க் கூறுகிறார்.

    அணுகருவுக்குள் இருக்கும் புரோட்டான் மிகவும் சிக்கலான துகள். அதனுள் குவார்க்குகள், குளுவான் உள்ளன. இந்த வார முடிவில் விஞ்ஞானிகள் முதன்முதல் எதிர் எதிர் வரும் முத்திரட்சி உள்ள இரு புரோட்டான் கற்றைகளை (Two Beams Consisting Three Bunches of Protons) செர்ன் விரைவாக்கியில் மோத விட்டார். முதல் முறையாக செர்ன் படைப்புத் திறனில் இயங்கி இயல் அடர்த்தியில் (Normal Intensity) இம்மூன்று திரட்சிகளும் இருந்தன. ஆதாவது ஒவ்வொரு திரட்சியிலும் 100 பில்லியன் புரோட்டான்கள் உச்ச அளவில் ஏவப்பட்டன.


    இப்போது பாதி அளவுத் தீவிரத் திறனில்தான் (7 TeV) செர்ன் இயங்கி யுள்ளது. ஒவ்வொரு கற்றையும் முழுத் திறமையில் (14 TeV) இயங்க 2013 ஆண்டில்தான் முடிவான சோதனையாக இருக்கும். முடிவான குறிக்கோள் திட்டம் 2808 திரட்சிகளை ஒரு கற்றைக்குள் உண்டாக்குவது. அது 2016 ஆண்டில்தான் நிகழும் என்று நம்பப் படுகிறது. புரோட்டான்கள் ஓடிச் சென்று மோதிக் கொள்ளும் வட்ட வளைக் குழலில் நான்கு பெரிய சோதனை நிகழ்த்திப் பிரபஞ்ச மர்மத்தின் புதிய பௌதிகப் படிக்க நான்கு கருவிகள் [Compact Muon Solenoid (CMS), (Atlas, Alice, LHCb] அமைக்கப் பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் விளைவுகளை ஆராயும் தலைமைத் திட்ட விஞ்ஞானி : டாக்டர் கொலூட்வின். கற்றையில் திரட்சிகள் கூடும் போது விஞ்ஞானிகள் ஒரு சிறு கருந்துளை (Mini Black Hole) தோன்றுவதை எதிர்பார்க்க லாம் !  “செர்ன் விரைவாக்கியில் கருந்துளைகளை நாங்கள் படைக்க முடிந்தால் அது பேருவகை அளிக்கும் எங்களுக்கு”, என்று பௌதிகப் பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார்.


    இத்தாலிய விஞ்ஞானி வெளியிட்ட ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு வதந்தி

    2010 ஜூலை 12 இல் இத்தாலியின் படோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிக விஞ்ஞானி தாமஸோ தோரிகோ (Tommaso Dorigo, University of Padova) இரண்டு மூலாதாரத் தகவல் வழியாக தன் காதில் விழுந்த வதந்திச் செய்தியைத் தன் வலை இதழில் குறிப்பிட்டு எழுதினார்.  அதாவது சிகாகோவில் இருக்கும் ·பெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியில் (Fermilab’s Tevatron Collider) செய்த சோதனையில் முதன் முதலாக உற்பத்தியான ஓர் “எளிய ஹிக்ஸ் போஸான்” துகளுக்குச் (Light Higgs Boson) சான்று உள்ளதை வெளியிடப் போவதாக அறிந்தாராம்.  இதை வெறும் வதந்தி என்று ஒதுக்கியவர் சிலர்.  அடுத்துக் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பைப் பற்றி ஃபெர்மி ஆய்வகத்தின் நிபுணரோ, செர்ன் விரைவாக்கி (CERN Accelerator) விஞ்ஞானிகளோ  வெளியிடப் போவதைப் பலர் எதிர்பார்த்திருக்கிறார்.  ஆனால் எவ்வித ஆதாரமின்றி, நிரூபணம் இல்லாமல் இப்படி ஒரு விஞ்ஞான வதந்தி ஒரு பெரும் இத்தாலிய பௌதிக நிபுணர் மூலம் வெளியானதில் சிறிதளவு மெய்ப்பாடும் இருக்கிறது.

    பிரபஞ்சப் பெரு வெடிப்பு நிகழ்ந்து ஒரு சில விநாடிகளில் தோன்றிய கனநிறைத் துகள்களில் “ஹிக்ஸ் போஸான்” என்பது ஒன்று என்னும் அழுத்தமான யூகம் விஞ்ஞானிகளிடையே நிலவி யுள்ளது.  அதனால் அது “கடவுள் துகள்” என்றும் பலரால் மதிக்கப் படுகிறது.

    ஐரோப்பாவில் உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியிலும் புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் மோத விட்டு விஞ்ஞானிகள் இதே “ஹிக்ஸ் போஸானைக்” காணத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார்.  ஃபெர்மி ஆய்வக விஞ்ஞானிகள் “எளிய நிறை ஹிக்ஸ் போஸானை” முதன்முதலில் கண்டு விட்டார் என்னும் செய்தி செர்ன் விஞ்ஞானிகளுக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் !

    ஆனால் ஃபெர்மி ஆய்வகம் தனது புதுக் கண்டுபிடிப்புப் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரைச் செய்ய வில்லை.  எளிய நிறை ஹிக்ஸ் போஸானை ஃபெர்மி விஞ்ஞானிகள் டெவடிரான் விரைவாக்கிச் சோதனையில் உற்பத்தி செய்ததை மட்டும் மறுக்கவில்லை.  ஆனால் ஹிக்ஸ் போஸான் உற்பத்திச் சோதனையில் தாமொரு முன்னேற்றைப் புரிந்துள்ளதாக அறிவித்தார்.  அதாவது 50-50 வாய்ப்பு முறையில் இந்த ஆண்டு (2010) முடிவுக்குள் அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள் ஹிக்ஸ் போஸான் இருப்பை அழுத்தமாக வெளியிடத் தகுந்த அளவு தகவல் சான்றுகளோடு வருவோம் என்று அறிவித்தனர்.

    ஃபெர்மி ஆய்வக டெவடிரான் உடைப்பியின் மகத்தான சாதனைகள்

    1983 இல் சிகாகோ அருகில் (Batavia, Illinois, USA) 120 மில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப் பட்ட டெவடிரான் விரைவாக்கி (1994-1999) இல் 290 மில்லியன் டாலர் நிதிச் செலவில் அடுத்தடுத்து மேம்படுத்தப் பட்டது.  1995 இல் அதன் நிபுணர்கள் (CDF & DZero Experiment Collaborators) முதன்முதல் “மேல் குவார்க்” (Top Quark) அடிப்படைத் துகளை உற்பத்தி செய்து கண்டுபிடித்தார் !  அடுத்து 2007 இல் மேல் குவார்க்கின் நிறையை 1% துல்லிமத்தில் அளந்தார்.  2006 ஆம் ஆண்டில் இருவித “சிக்மா பரியானைக்” (Two Types of Sigma Baryon) கண்டுபிடித்தார்.  2007 ஆம் ஆண்டில் செய்த சோதனையில் (DZero Experiment) புதுவித பரியான் (Xi Baryon) ஒன்றைக் கண்டுபிடித்தார்.  2008 இல் அதே சோதனையில் மீண்டும் வேறு வித பாரியானைக் (Double Strange Omega Baryon) கண்டுபிடித்தார்.

    அமெரிக்க எரிசக்தித் துறையகத்தைச் சேர்ந்த ஃபெர்மி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் (US Dept of Energy, Fermilab Scientists) செய்த இரண்டு புரோட்டான் உடைப்புச் சோதனைகளில் (CDF & DZero Collider Experiments) கீழ்க்காணும் விளைவுகள் நிகழ்ந்தன.  இந்தச் சோதனைகள் 158 முதல் 175 GeV/C2 வரை நிறையுள்ள ஹிக்ஸ் போஸான் துகள்களைத் தவிர்த்து விட்டன.  துகள் பௌதிக நிலவர மாதிரிப்படி (Standard Model of Particle Physics) ஹிக்ஸ் போஸானின் நிறை 114 முதல் 185 GeV/C2 முடிய இடைப்பட்டு இருக்க வேண்டும்.  (ஒப்பீடாகச் சொல்லப் போனால் நிறை 100 GeV/C2 அளவு என்பது 107 மடங்கு புரோட்டான் நிறைக்குச் சமமாகும்).  இந்த விஞ்ஞான விளைவுகள் யாவும் ஜூலை 22-28, 2010 தேதிகளில் பாரிசில் நடந்த அகில நாட்டு உயர் சக்திப் பௌதிகப் பேரவையில் (International Conference on High Energy Physics (ICHEP-2010) விவாதிக்கப் பட்டன.  அப்போது இத்தாலிய விஞ்ஞானி எழுதிய ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு வதந்தி பொய்யானது என்று கூறப்பட்டது !

    வியக்கத் தக்க முறையில் பூமியில் ஏற்படும் பூகம்பங்களை உளவி எச்சரிக்கை செய்துள்ளது டெவடிரான் விரைவாக்கி !  அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை.  ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் !  2004 இல் இந்து மாக்கடலில் எழுந்த அசுரப் பூகம்பத்தையும், சுனாமியையும் உளவி அறிந்தது.  மறுபடியும் சுமாத்ராவில் 2005 இல் நேர்ந்த கடல் பூகம்பம், 2007 இல் நியூ ஸீலாந்தில் கிஸ்போர்ன் நிலநடுக்கம் (Gisborne Earthquake), 2010 ஹெய்தி பூகம்பம், 2010 சில்லியின் நிலநடுக்கம் ஆகியவற்றை டெவடிரான் கண்டுபிடித்து அறிவித்தது.

    ஃபெர்மி ஆய்வகத்தின் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு

    இத்தாலிய விஞ்ஞானி பேராசிரியர் தாமஸோ தோரிகோ சொல்லிய தகவலை நம்பினால் அது “முச்சிக்மா முத்திரையாக” (Three Sigma Signature) எடுத்துக் கொள்ளப்படலாம்.  அதன் அர்த்தம் என்ன வென்றால் புள்ளி விபரப்படி 99.7% அந்தக் கூற்று மெய்யானது என்பதே.  உலகக் கண்கள் ஐரோப்பாவின் செர்ன் பரமாணு உடைப்பி மீது விழுவதால், அதுதான் ஹிக்ஸ் போஸானை முதலில் கண்டுபிடிக்கும் என்னும் கருத்து இப்போது மாறி விட்டது.  கடந்த 27 ஆண்டு களாக (1983-2010) அடுத்தடுத்து சிகாகோ டெவடிரான் செம்மையாக்கப் பட்டு மேன்மைப் படுத்தப் பட்டுள்ளது.  ஃபெர்மி ஆய்வகம் டெவடிரான் விரைவாக்கி மூலம் ஒரு குவார்க்கையும், நான்கு வித பாரியான்களை இதுவரை உற்பத்தி செய்து நிரூபித்துள்ளது.  எளிய ஹிக்ஸ் போஸான் ஒன்றை முதன் முதலில் உற்பத்தி செய்து காட்டி, ஃபெர்மி ஆய்வகம் அற்புதக் “கடவுள் துகளைக்” காணும் காலம் நெருங்கியது என்பதே இந்த இத்தாலிய விஞ்ஞானியின் தகவலுக்கு உறுதி அளிக்கிறது.  ஹிக்ஸ் போஸான் துகளே கடைசித் துகளாக துகள் பௌதிகத்தின் நிலவர மாடலாகக் (The Standard Model of Particle Physics) கருதப் படுகிறது. கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டதால், நிலவர மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அப்படி இல்லாவிட்டால் பழைய துகள் நியதிகள் மீளாய்வு செய்யப் படவேண்டும்.  2012 ஜுலை 6 ஆம் தேதி செர்ன் விரைவாக்கி துகள் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு கனத்துகளைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.    இது ஆரம்ப நிலை விளைவின் முடிவு மட்டுமே.  இன்னும் ஏராளமான செர்ன் விரைவாக்கியின் சோதனை விளைவுகள் ஆராயப் பட வேண்டும்.   கண்டுபிடித்த துவக்க நிலை கடவுள் துகளின் தடத்தை வைத்து, அது ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்று  துகள் விஞ்ஞானிகள் அழுத்தமாக நம்புகிறார்.

    (தொடரும்)

    தகவல்:

    Picture Credits: Fermilab, Chicago, USA, CERN, Geneva Websites.,

    1 CERN Large Hadron Collider – Particle Physics – A Giant Takes on Physics’ Biggest Question By : The New York Times (May 15, 2007)
    2 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
    3 World’s Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
    4. Time Magazine Report – The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
    5 CERN Atom Smasher – Latest Wikipedia Report.
    6 BBC News What Happened to the Big Bang Machine (Sep 20, 2008)
    7 BBC News LHC Gets Colder than Deep Space By Paul Rincon (Oct 16, 2009)
    8 BBC News Particle Beams Injected into LHC (Oct 26, 2009)
    9 Rebirth of the LHC : The Search for the God Particle Resumes (Nov 2, 2009)
    10 Second Chance of Large Hadron Collider To Deliver Universe’s Secrets By : Robin McKie, Geneva (Nov 1, 2009)
    11. https://jayabarathan.wordpress.com/2008/09/18/cern-atom-smasher/ (CERN Article-1)
    12 https://jayabarathan.wordpress.com/2008/09/26/cern-atom-smasher-2/ (CERN Article-2)
    13 https://jayabarathan.wordpress.com/2009/11/05/cern-worlds-greatest-atom-smasher/(CERN Article-3)
    14 https://jayabarathan.wordpress.com/2010/03/25/cern-atom-smasher-4/ (CERN Article-4)
    14(a) https://jayabarathan.wordpress.com/2010/04/02/cern-atom-smasher-5/ (CERN Article-5)
    14(b) https://jayabarathan.wordpress.com/2010/04/09/cern-atom-smasher-6/ (CERN Article-6)
    14(c) https://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/ (What is Happening in CERN ?)
    15 BBC News LHC High Energy Results Published By Jason Palmer (Feb 9, 2010)
    16 BBC News : LHC Smashes Energy Record Again (March 19, 2010)
    17 BBC News : God Particle Hunt Set to Start By Paul Rincon (March 23, 2010)
    18 http://en.wikipedia.org/wiki/Large_Hadron_Collider (CERN Atom Smasher) (25 March 2010)
    19 BBC News : The Science of LHC By Paul Ricncon (Nov 20, 2009)
    20 BBC News : Collider Sees High-Energy Success (March 30, 2010)
    21 Large Hydron Atom Smasher Reaches Near Speed of Light (Daily Galaxy) March 31, 2010
    22 Deep Thought – The Large Hadron Collider Could Prove the Existence of a Parallel Universe (Daily Galaxy 2009 Top Story) Jan 6, 2010
    23 Atom Smasher Will Keep Revealing “The Beginning” (CTV News, Canada) March 30, 2010
    24. Why the Large Hadron Collider (LHC) ? A Few Unanswered Questions
    25. What Will the Large Hadron Collider (LHC) Reveal ? By : Steve Giddings Los Angeles Times(January 7, 2010)
    26. Will the LHC Solve the Mystery of the Great Attractor ? By Casey Kazan, Daily Galaxy (Jan 11, 2010)
    27 ABC News – Atom Smasher Closer to Big Bang By : Rachael Brown (March 31, 2010)
    28 BBC News : LHC Particle Search Nearing By : Paul Rincon (May 17, 2010)
    29 Space Daily – World’s Biggest Atom Smasher Gains Pace : CERN By : Staff Writers (June 28, 2010)
    30 BBC News : LHC Smashes Beam Collision Record By Katia Moskvitch (June 28, 2010)
    31 Telegraph, New Scientist – The Tevatron Accelerator – Competition with Large Hadron Collider Heats Up By Clay Dillow (July 12, 2010)
    32 Fermilab Web / Space Daily Fermilab Experiments Narrow Allowed Mass Range for Higgs Boson (July 26, 2010)

    32 (a) http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=41003121&format=html  (Satyendranath Bose)

    33. Wikipedia The Tevatron Collider, Fermilab (August 3, 2010)
    34 New Scientist Magazine ” Who Will Find the God Particle First ?” (Will an old Faithful Find the Higgs ?) By : Rachel Coutland (July 24, 2010)
    35.  https://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/  (July 3, 2010)
    36.  https://jayabarathan.wordpress.com/2010/08/07/god-particle-rumour/  (August 7, 2010)
    37  Daily Galaxy :  News of the Century  ?  CERN to Announce its Findings on Higgs Boson Tomorrow (July 3, 2012)
    38.  Time & Space : CERN Experiments Observe Particle Consistent with Long-Sought Higgs Boson (July 5, 2012)
    39. Time & Space :  A New particle has been Discovered- Chances are, it is the Higgs Boson(July 5, 2012)
    40.  Time & Space :  Higgs Boson Hunters Declare Victory – as Significant as DNA Discovery  (July 5, 2012)

    41.  https://en.wikipedia.org/wiki/Antiparticle  [September 11, 2015]

    42.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/09/cern-confirms-the-fundamental-symmetry-of-the-universe.html [September 22, 2015]

    43.  https://www.veooz.com/news/KJjzCen.html  [September 22, 2015]

    44.  http://www.iflscience.com/physics/experiment-confirms-symmetry-nature [September 22, 2015]

    45.  http://www.fromquarkstoquasars.com/lhc-breakthrough-unveils-key-facts-about-the-fundamental-symmetry-of-nature/ [September 22, 2015]

    46.  http://www.rt.com/news/316203-symmetry-nature-cern-study/  [September 22, 2015]

    47.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/09/new-stealth-theory-may-explain-the-missing-matter-of-the-universe.html [September 25, 2015]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (September  25, 2015)

    Attachments area
    Preview YouTube video Experiment confirms fundamental symmetry in nature

    Experiment confirms fundamental symmetry in nature

    Preview YouTube video THE CERN DECEPTION ~ THE EVIL OF DARK MATTER AND THE LHC 2015 [HD]

    THE CERN DECEPTION ~ THE EVIL OF DARK MATTER AND THE LHC 2015 [HD]

    Preview YouTube video Particles and Antiparticles | Particle physics

    Particles and Antiparticles | Particle physics
    Share
  • சிரிப்பதிகாரம் – 4

    — கிரேசி மோகன்

     

    crazy mohan

    என்னைத்  தவிரவேறு  ஏதிங்(கு)  இருப்பதற்கு,

    முன்னைப் பழம்வினைகள்  மாயமே! -சென்னையில்,

    கூவத்தின்  தீரம்  கொசுகடித்  தாலுமே,

    ஜீவித்(து)  இருப்பாய் சிரித்து’’……..

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-2

    செங்கீரையாடும் குழந்தை முருகன்

    Baby-muruga

    மீனாட்சி பாலகணேஷ்

    கடவுளைக் குழந்தையாக்கிப் பிள்ளைத்தமிழ் பாடுவதில் உள்ள மகிழ்ச்சி என்ன என்றால், அக்கடவுள் அடியார்களுக்கு அருள் செய்ததையும், அவர்களை ஆட்கொள்ளச் செய்த திருவிளையாடல்களையும், அவர்களைத் தம் மீது அன்பு கொள்ளுமாறு கருணை கூர்ந்ததையும், மேலும் இவை போன்ற அனைத்தையும் சிறு பிள்ளையின் விளையாடல்களாகவே கண்டு பாடிப் பரவி, ஆனந்தம் அடைவது தான்.

    முருகப்பிரானைக் குழந்தையாகவும் குமரனாகவுமே (இளைஞனாக) நாம் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். குழந்தை முருகன் செங்கீரை ஆடி மகிழும் பருவத்தில் அவன் செங்கீரை ஆடிய அழகினைத் திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் பாடி மகிழ்கின்றார் கவியரசு நடேச கவுண்டர்.

    முதலில் செங்கீரை ஆடுவது என்னவெனக் காணலாமா? ஒருகாலை நீட்டி ஒருகாலை மடக்கி, முகத்தை நிமிர்த்திப் பார்த்து தவழ முனையும் அருமையான அழகுப் பருவம் தான் செங்கீரைப் பருவம். குழந்தையின் ஐந்தாம் திங்களிலிருந்து இது நிகழும். அவ்வாறு தவழ முனையும் குழந்தை முன்னும் பின்னும் சாய்ந்தாடும். இது பசிய இளந்தளிர்கள் தென்றல் காற்றில் அசைந்தாடுவது போலக் காண்பதனாலோ என்னவோ, செங்கீரைப் பருவம் எனப்படுகின்றது.

    கீர் என்றால் சொல் எனவும் தமிழ் மொழியில் ஒரு பொருள் உண்டு. சின்னஞ்சிறு குழந்தைகள் மிழற்றும் பொருளற்ற மழலை மொழியையும் செங்கீரை ஆடுதல் (பொருளற்ற சொல் கூறுதல்- மழலை பேசுதல்) என்பர் புலவர்.

    ‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச் சொல்கே ளாதவர்’ என்பது தெய்வப்புலவர் வாக்கு.

    இத்தகைய மழலைச் சொல்லுக்குப் பொருள் கற்பித்துப் பெற்றோர் கொள்ளும் பேரானந்தம் இனிய இசையினைக் கேட்டு மகிழ்வதனை விட உயர்வாகும்.
    *****

    இங்கு திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்களைக் கண்டு அவை காட்டும் வண்ணச் சித்திரங்களின் அழகில் தோய்ந்து மகிழலாமா?
    *****

    ‘ஆடவல்லானாகிய சிவபிரான் அருளிய திருக்குமரா, நீ செங்கீரையாடி எம்மை மகிழ்விப்பாயாக,’ எனும்போதில் அவ்வாடல் வல்லான் ஆடிய நடனக் காட்சியைச் சொற்சித்திரமாகச் சிந்தையில் தீட்டுகிறார் புலவர்.

    ஆடுவது என்பது சிவபிரானின் குடும்பத்திற்கே உரிய ஒரு கலை! தகப்பனான சிவபெருமான் அழகுற மன்றினுள் நடனமாடுகின்றான். அனைத்தையும் ஆட்டுவிக்கிறான்! அவனுடன் கங்கைநதிப் புனல் எழுந்தாடுகின்றது; அவன் சடாமுடியிலணிந்த கலைமதியும் அசைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த கொன்றை மாலையும் தானாடுகின்றதாம்; சடை கலைந்து ஆகாயவெளியுடன் கலந்தாடுகின்றதாம். ஆதவன் (சூரியன்), சோமன் (சந்திரன்), அங்கி (நெருப்பு) எனும் ஐயனுடைய மூன்று விழிகளிலும் கருணை வெள்ளம் பொழிந்து ஆடுகின்றதாம்; ஐயன் ஆடினால் அனைத்துமே ஆடுமன்றோ? அவன் கொவ்வைச் செவ்வாய்ப் புன்முறுவல் எனும் நிலவாடிட, எட்டுத் திசைகளும் அசைவுறும் வண்ணம் எட்டுப்புயங்கள் அசைந்தாடுகின்றன; திருக்கையில் ஏந்திய மழு, தீயினுடன் மான், அவன் புனையும் அணிகளான பாம்புகள் (வரி அரவம்) ஆகியனவும் ஆடுகின்றன. மறைந்த பொருளான வேதங்களின் உறைவிடமானதும், அதனை மிழற்றுவதுமான அவனது சிலம்பணிந்த திருவடிகளின் கீழ் கிடக்கும் முயலகன், ஐயனின் ஆட்டத்தினால் தானும் நெளிந்தாடுகின்றானாம். இவ்வாறு மன்றுள் (சிற்சபை) நின்று சிவபிரான் ஆடுகின்றான்.

    ஐயனின் திருநடனத்தை எப்படி வர்ணித்தாலும், திரும்பத் திரும்பப் பாடிக் களித்தாலும், நடனமிடும் அத்திருக்கோலம் நம் மனக்கண்ணில் ஒளிப்பிழம்பான ஒரு சித்திரமாக இந்தப் பிரபஞ்சச் சுழற்சியொடு கூட்டி நம்மையும் ஆட வைக்கும்; அந்த ஆட்ட அழகினைக் கண்ணால் கண்டுணருதல் கடினம்; உய்த்துணருதலே உயர்வாம். கவியரசு நடேச கவுண்டர் இந்தப் பாடலின் மூலம் அவ்வாறு உய்த்துணரும் நிலைக்கு நம்மை உயர்த்தி விடுகிறார்.

    ‘இத்தகைய ஆடல் அரசனான சிவபிரான் தந்தருளிய குமரனே, (ஐயன் ஆடும் அழகிற்கொப்பக் குழந்தாய்) நீயும் செங்கீரை ஆடி அருளுகவே! குருமலை எனப்படும் சுவாமிமலையில் அமர்ந்த நாதனே செங்கீரை ஆடியருளுக!’ எனத் தாயாக மாறி விண்ணப்பிக்கிறார்.

    கங்கா நதிப்புன லெழுந்தாட அங்கணொரு
    கலைமதி அலைந்தாடவே
    கமழ்நறுங் கொன்றையந் தொங்கலா டச்சடை
    கலைந்துவான் கலவியாடப்
    பொங்கா தவன்சோம னங்கியெனும் விழிகளிற்
    பொழிகருணை வெள்ளமாடப்
    புன்முறுவ னிலவாட எண்டிசையு மசைவுறப்
    புயமாட அங்கைமேவு
    மங்காத எரியினோ டரிணமா டப்புனையும்
    வரியரவ மாடநன்கு
    மறைமிழற் றுஞ்சிலம் படியடியி லுறும்பசு
    மாரனு நெளிந்தாடவே
    செங்கோ லெடுத்துமன் றாடியவ ரருள்குமர
    செங்கீரை யாடியருளே
    திருமருவு குருமலையி லமர்சாமி நாதனே
    செங்கீரை யாடியருளே.

    இன்னொரு பாடலில் உன் மழலை மொழியால்- செங்கீரையால்- எமக்கு ஒருசொல்லேனும் உபதேசம் செய்வாயாக எனவும் வேண்டுகிறார்.

    தமிழின் தனிப்பெருங்கடவுள் முருகன். அவனை, ‘தமிழ் முருக!’ என விளித்து, தீந்தமிழால் இனிமையான ஒரு மழலைச் சொல் கூறி செங்கீரை ஆடி அருள வேண்டி, அவர் தீட்டும் சொற்சித்திரம் இதுவாகும்.

    மிகுந்த நீர்வேட்கை கொண்டொருவன் நீருக்காக அலைகின்றான். பரந்து விரிந்து கிடக்கும் கடல்நீர் அவனுக்குத் தெரிகின்றது. (வேறு ஒரு நீரும் கிட்டாமையால்) அவன் அதனை மிகுதியாகப் பருகுகிறான், தாகம் தீர்ந்த பாடில்லை. அவனும் அதை உணரவில்லை. இந்நிலையில் குடுவையில் நல்ல தண்சுவை நீரினை அவனுக்கு அளித்துப் பருகக் கூறினால் அவன் தாகம் தணிந்து மகிழ்வானல்லவா? இதனை உவமை காட்டிக் குமரனாம் குழவியின் மழலையின் பெருமையைப் பாடுகிறார்.

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களையும் இறைவன் படைத்தான்; அவற்றில் நிலைத்திணை, இயங்குதிணை என வேறுபட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் உடன் படைத்தான்; உயிர்கள் கற்றறிந்து உய்வதற்காகவே நால்வகை வேதம் முதலான நூல்களையும் தந்தருளினான். மனிதனும் காலகாலங்களாக அமர்ந்து இவற்றை மிகவும் முயற்சி எடுத்துக் கற்றான். ஏட்டுச் சுரைக்காய் போல அவை அனைத்தையும் கற்றாலும் அவற்றின் உட்பொருளை உணர்ந்து உய்யும் கலைத்திறன் அவனுக்கில்லை! என்ன செய்வது?

    அவ்வமயம் இந்த அறியாமையை அகற்ற வருகிறான் முருகன் எனும் இளம் குமரன். அவன் நம் போன்ற மானிடர்கள் ஒருகாலும் நாமாகக் கற்றுணர முடியாத ஞானத்தை, ஒரே ஒரு சொல் கூறி உணர்த்தியருளினால், உடனே நாமும் ஒரே நொடியில் உயர்கதி பெற்று உய்வோம் அல்லவா? ‘அதனை, அந்த இனிய சொல்லை, உன் இனிய மழலையால் செங்கீரை ஆடி உணர்த்துவாயாக முருகனே!’ எனக் கேட்டுக் கொள்கிறார்(ள்) புலவராகிய தாய்!

    ஐவகை எனும்பூதம் ஆதியை வகுத்ததனுள்
    அசரசர பேதமான
    யாவையும் வகுத்து மறை யாதியும் வகுத்தனைஎம்
    ஐயமற் றவைஓதவோ
    கைவரு கலைத்திறன் எமக்கிலை வருந்தியே
    கற்பினும் கடல்நீரினைக்
    காதலில் பருகிநீர் வேட்கைதணி யாதவர்
    கணக்காகி நின்றதன்றோ
    உய்வகை எமக்கருள ஒருமொழி உரைப்பையேல்
    ஓதியுண ராதஞானம்
    ஒருநொடியி லெய்தியுயர் கதிபெறுவ மாதலால்
    உள்ளுருகி வேண்டுகின்றோம்
    தெய்வமறை முடிவான அநுபூதி உறஇனிதோர்
    செங்கீரை யாடியருளே
    திருமருவு குருமலையி லமரினிய தமிழ்முருக
    செங்கீரை யாடியருளே

    தெய்வத்தைக் குழந்தையாகக் கண்டு பாடினால் அந்தத் தெய்வம் செய்த அருட்செயல்களை அந்தத் தெய்வக் குழந்தையின் விளையாடல்களாகக் கருதிப் போற்றி மகிழ வாய்ப்பு மிகுகின்றது. பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இத்தகைய வாய்ப்புக்களைப் பெருமளவில் புலவர்களுக்கு நல்கியுள்ளன என்பது ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலிலும் கண்கூடு.

    *****

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    படத்திற்கு நன்றி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”கஜலஷ்மி கண்ணனைக் கேசவ் கொடுத்தாய்,
    புஜவிஷ்ணு நிற்கின்றான் பூப்போல், -நிஜமான
    வாசத்தில் வைகுண்டம், வந்ததோ கோகுலம்,
    பாசத்தில் பாதப் பசு”….கிரேசி மோகன்….

    Share
  • பொன்னியின் செல்வன் (படக்கதை – 1)

    பொன்னியின் செல்வன்
    மூலக்கதை : கல்கி
    படக்கதை : வையவன்
    ஓவியங்கள் : தமிழ்ச்செல்வன்

    முன்னுரை

    கோடானு கோடி தமிழர்களால் மட்டுமின்றி ரஜினி காந்த் போன்ற தமிழர் அல்லாதவர்களாலும் சுவையோடு வாசிக்கப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். மொபைல் கிண்டில் நெட் என அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களிலும் பரவலாகப் புகழ்பெற்றுள்ள இந்த நாவல் தமிழில் முதல் முறையாக படக்கதை வடிவம் பெறுகிறது.

    ஏற்கனவே மொழிபெயர்ப்பு, படைப்பு இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளில் ஏராளமாக எழுதி அழியாப் புகழ் பெற்றுள்ள ஆசிரியர் சி.ஜெயபாரதன் அவர்களின் சீதாயணம் மற்றும் முக்கோணக் கிளிகள் கதைகளுக்கு வடிவம் தந்து வசனம் எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர் வையவன், பொன்னியின் செல்வன் நாவலுக்கும் வடிவம் தந்து வசனம் எழுத ,அற்புத ஓவியர் தமிழின் கை வண்ணத்தில் இது வெளிவருகிறது.

    கதைப்படி கல்கியின் மொழியில் கதை தொடங்கும்

    ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்​ ​கால​ச்​ சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

    ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்பட​ ​வில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

    கதை இங்கே தொடங்குகிறது. சோழப் பேரரசின் பேராற்றலும் வீரமும் வெளிப்படும் விதத்தில் பிறகு பல அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள்…

    apon

    apon1

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்

    தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்
    மிக்காரா லென்று சிறியாரைத் தாம்தேறார்
    கொக்கார் வளவய லூர! தினலாமோ
    அக்காரம் சேர்ந்த மணல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
    மிக்காரால்’ என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
    கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
    அக்காரம் சேர்ந்த மணல்?

    பொருள் விளக்கம்:
    மதிக்கத்தக்கப் பண்பிற் சிறந்தோருடன் இணைந்து, அவர்களில் ஒருவராகவே செயல்படுகிறார். (ஆகவே) இவரும் குணம் மிக்கவரே என்றெண்ணி சிறுபுத்தி உடையவர் தம்மை நட்புக்காகத் தேர்ந்தெடுப்பவரில்லை. *கொக்குகள் இரை தேடிவரும் நீர்வளம் கொண்ட வயல்கள் கொண்ட ஊரைக் கொண்டிருப்பவரே, தின்னுவோமா நாம் சர்க்கரையுடன் கலந்துவிட்ட மணலை?

    பழமொழி சொல்லும் பாடம்:
    சிறுமைப்பண்புடையோர் ஒருவர் சான்றோர் மத்தியில் பழகிவந்தாலும், அவரது இழிகுணத்தின் காரணமாக அவரது தொடர்பை அறிவுடையவர் விரும்புவாரில்லை. இனிமையான சர்க்கரையுடன் கலந்து விட்டதால், அந்த மணலும் இனிப்பாகவே இருக்கும் என்று ஒருவரும் கருதி உண்ண விரும்பாததைப் போலவே, தீயோர் சான்றோர் தொடர்பில் இருந்தாலும், அவரை யாரும் விரும்ப மாட்டார். பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள் என்பதை மற்றொரு பழமொழிப்பாடலும் குறிக்கிறது. இத்தகையவர்களை வள்ளுவர்,

    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது. (குறள்: 823)

    அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக வாழாமல் பண்பற்றவர்கள் தனது சிறுமைக் குணத்தைக் கைவிடாதவர்களாக இருப்பார்கள் என்றும், ‘நட்பாராய்தல்’ அதிகாரத்தின் குறளில்,

    குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு. (குறள்: 793)

    ஒருவரின் குணம், நற்குடிப்பிறப்பு, குற்றங்கள், அவருடைய குற்றத்தொடர்பற்ற உறவுகள் ஆகியவற்றை ஆராய்ந்தபின்னரே ஒருவரிடம் நட்பு பாராட்ட வேண்டும் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    * “வள வயல்” என்னும் குறிப்பினால் நீர்வளம் கொண்ட வயலில் மீன்களை இரையாகத் தேடி “கொக்குகள்” வருவதாக இரு உரை நூல்கள் பொருள் கொள்கின்றன, மேலும் இரு உரை நூல்கள் கொக்கு என்பதற்கு “மாந்தோப்பு” என்ற பொருளைக் காட்டி, மாந்தோப்புகளும், வயல்வளமும் நிறைந்த மருத நாட்டுத் தலைவன் அறிவுரை பெற்றதாகக் குறிக்கின்றன.

    Share
  • வளவன் கனவு (17)

    சு. கோதண்டராமன்

    17 சமயப் பிளவு

    vallavan-kanavu

    வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி 
    மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின் 
    செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் 
    அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி – ஆசனத்து இருந்த அம்மான் தானே

    -குலசேகர ஆழ்வார்

    ஆதன் உலோகக் கட்டிகளைச் சுமந்து கொண்டு தன் ஊரை நோக்கிப் புறப்பட்டான். வழியில் மகேசனைப் பார்த்துத் தகவல் தெரிவிக்கலாம் என்று தில்லைக்குச் சென்றான்.

    மகேசன் இவனுடைய தொழில் பயிற்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டறிந்தான். “இங்கேயே இருந்துவிடு, உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன்” என்றான்.  ஆதன் ஒப்புக் கொண்டான்.

    அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தனர். அவர்களுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. ஆடும் நிலையில் ஒரு இறை வடிவம் உருவானால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தனர். செய்தி ஊர் பூராவும் பரவியது.

    தில்லைச் சோழிய அந்தணர்களில் கோவிந்த பட்டர் என்று ஒருவர் இருந்தார். அவர் சித்திரகூடம் விண்ணகரத்தில் பூசை செய்பவர். அவருக்குச் சித்திரகூட வளாகத்தில் சிவலிங்கம் வைக்கப்பட்டதில் விருப்பம் இல்லை. என்றாலும் அவருக்குச் சாதகமாகப் பேசக்கூடியவர் மிகுதியாக இல்லாததால் அவர் முணுமுணுத்துக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டார்.

    ஆடற்பெருமானின் உருவச்சிலை செய்வதற்கு ஏற்பாடு நடக்கிறது என்ற செய்தி அவருக்குக் கவலை தந்தது. ‘ஏற்கெனவே ஒரு லிங்கத்தை விண்ணகர வளாகத்தில் வைப்பதற்கு அனுமதி கொடுத்துவிட்டோம். இதை இப்படியே விட்டால் விண்ணகரம் முழுவதும் இவர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள். மயானத்தாடி என்பது வேதத்தில் இல்லாதது. இந்த அவைதிகம் பரவினால் ஒரு காலத்தில் கோவிந்தராஜாவையே கடலில் தூக்கி எறிந்தாலும் எறிந்துவிடுவார்கள்’ என்று நினைத்தார். விண்ணகரத்துக்கு வருபவர்களிடம் எல்லாம் இதைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தார். சிலர் அவர் சொல்வது நியாயம்தான் என ஒப்புக் கொண்டார்கள்.

    ‘முன்னர் ஒரு தடவை அவைதிக மதத்தவர்கள் தில்லையை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அதனால் பிராமணர்கள் எல்லாரும் நாட்டை விட்டே ஓட வேண்டியிருந்தது. மூன்று தலைமுறைகளுக்குப் பின் இப்பொழுதுதான் திரும்ப வந்திருக்கிறோம். இனி ஒரு முறை இந்த அவைதிகம் தலைதூக்க இடம் கொடுக்கக் கூடாது. முளையிலேயே கிள்ள வேண்டும்’ என்றனர்.

    கோவிந்த பட்டர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருந்தார்கள். “எது ஐயா அவைதிக மதம்? வேத ருத்ரன்தான் சிவன். அவரே ஆடற்பெருமான்” என்றனர்.

    ஊர் பூராவும் இதே பேச்சு. கோவிந்த பட்டருக்குச் சாதகமாகச் சிலரும் எதிர்ப்பாகச் சிலரும் அணி திரண்டனர். ஆங்காங்கு வாதப் பிரதி வாதங்கள், பூசல்கள், கைகலப்புகள் ஏற்பட்டன. இது நாள் கணக்கில் தொடர்ந்தது.

    ஒரு நாள் கோவிந்த பட்டர் தன் ஆதரவாளர்கள் விண்ணகரத்தில் கூடியிருக்கும் போது கர்ப்பக்கிரகத்தின் மேல்தளத்தில் நின்று கொண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “நாம் உயிரைக் கொடுத்தாவது நமது சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவோம் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டும். நாராயணனே வேதப் பிரதிபாத்யமான தெய்வம். இது சத்தியம்” என்று சொல்லிக் கொண்டே யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்து தலைகீழாக விழுந்தார். மண்டை சிதறி உயிர் துறந்தார். கூட்டம் திகைத்து நின்றது. அடுத்த கணம் அவர்களிடம் ஒரு வெறி கிளம்பியது. ‘நானும் உயிர் விடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு சிலர் மேலே ஏறினார்கள். மற்றவர்கள் அவர்களைத் தடுத்து, ‘கோவிந்த பட்டரின் லட்சியத்தை நிறைவேற்ற நாம் உயிருடன் இருந்தாக வேண்டும்’ என்பதை நினைவுபடுத்தினர்.

    பட்டரின் மரணம் ஊரில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது, மக்கள் ஆடற்பெருமானின் ஆதரவாளர், எதிர்ப்பாளர் என இரண்டு அணிகளாகப் பிரிந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வெவ்வேறு அணிகளில் போய்ச் சேர்ந்தனர்.  பழம் தமிழ்ச் சமயம் சைவம் வைணவம் என இரண்டாகப் பிளந்தது.

    இந்தச் சூழ்நிலையில் இங்கு இருந்துகொண்டு சிலை வடிப்பது சாத்தியம் இல்லை என்று மகேசன் கருதினான். கொள்ளிடம் தாண்டி அக்கரையில் சிவலிங்க வழிபாட்டாளர்கள் நிறைய இருக்கிறார்கள், அங்கு போய்விடலாம் என்று ஆதனுடன் கிளம்பினான். அவர்களுடன் மேலும் ஐம்பது இளைஞர்கள் வந்தார்கள். எல்லோரும் காழியை நோக்கிப் புறப்பட்டனர்.

    அரசருக்கு ஒற்றர் மூலம் இந்தச் செய்தி கிடைத்தது. ஆடற்பெருமான் விஷயம் மக்களிடையே இவ்வளவு கலவரத்தை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பாராதால் மிகுந்த வருத்தம் அடைந்தார். அதற்காக சிலை வடிக்கும் வேலை தடைபடக்கூடாது என்று விரும்பினார். தில்லையிலிருந்து வருபவர்களுக்குத் தேவையான உணவு அளிக்க ஏற்பாடு செய்யுமாறும் வீடு கட்டித் தருமாறும் காழி ஊர்த்தலைவருக்கு உத்திரவிட்டார். காழி நகருக்குக் கிழக்கே கடல் பின்வாங்கியதால் ஏற்பட்ட புதிய நிலம் புல் பூண்டு முளைத்து இருந்தது. அங்கு தில்லையிலிருந்து வந்தவர்களுக்குக் கூரை வீடுகள் கட்டப்பட்டன.

    தில்லையில் ஏற்பட்ட பிளவு நாடு முழுவதும் பரவியது. சைவத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையே ஆங்காங்கு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. சமய அடிப்படையில் குடும்பங்கள் உடைந்தன. ஒரே குடும்பத்தில் அண்ணன் ஒரு கட்சியும் தம்பி ஒரு கட்சியுமாயினர். தந்தை ஒரு பக்கமும் மகன் ஒரு பக்கமுமாக இருந்த நிலை பல இடங்களில் காணப்பட்டது. இது பிராமணர்களிடையே மட்டும்தான் இருந்தது. மற்றவர்கள் ‘பிராமணர்கள் வேதத்தைப் பற்றி என்னவோ சண்டை போட்டுக் கொள்கிறார்கள், நமக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று இருந்தனர்.

    மயிலாடுதுறைக்குக் கிழக்கே பறியலூர் (பரசலூர்) என்ற ஊரில் தக்கன் (தட்சன்)* என்றொரு செல்வந்தர். அவர் சிவன் வேத தெய்வம் அல்ல என்ற கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஒரு முறை வேள்வி செய்ய விரும்பினார். அதில் வழக்கமாக அவிர்ப்பாகம் பெறும் தெய்வங்களான இந்திரன், அக்னி, விஷ்ணு ஆகியோருக்கு ஆகுதி அளிக்க ஏற்பாடு செய்தார். அவரைச் சூழ இருந்தவர்கள் சிவனுக்கும் அவிர்ப்பாகம் கொடுக்க வேண்டும் என விரும்பினர்.  சிவன் என்றொரு தெய்வம் வேதத்தில் இல்லை என வாதாடினார் அவர். ருத்ரன்தான் சிவன் என்றனர் இவர்கள். ருத்ரன் என்றால் அவருக்குக் கடைசியாக மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் அதைத்தான் கொடுக்க வேண்டும் என்று சதபத பிராமணம் கூறுகிறது. எனவே கடைசியாகப் பார்க்கலாம் என்றார் அவர். சைவ வாதிகளோ விஷ்ணுவுக்கு உள்ள மரியாதை சிவனுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்றனர்.

    அவரது பெண் சதி தேவியும் மாப்பிள்ளையும் சைவ வாதிகள். தான் சொன்னால் தன் தந்தை ஒப்புக் கொள்வார் என சதி நினைத்தாள். தட்சன் அதற்கும் மசியவில்லை. அவள் அவமானப்படுத்தப்பட்டாள். உடனே அவள் யாகத் தீயில் குதித்து உயிர் விட்டாள். சைவ வாதிகள் வெறி கொண்டு எழுந்தனர். அவர்களில் வீரபத்திரன் என்பவர் யாகத் தீயை அணைத்து, மட்பாண்டங்களை உடைத்து யாகத்தை அழித்தார். யாகத்தில் பங்கு கொண்டவர்கள் யாவரும் தாக்கப்பட்டனர். தக்கன் தலை அறுபட்டுக் கீழே விழுந்தார்.

    இது போன்ற நிகழ்ச்சிகள் ஆங்காங்கு நடைபெற்று வந்தன.

    ஒரு நாள் தில்லைச் சைவ அந்தணர்கள் ஊர் எல்லையில் கூடினர். அப்பொழுது அவர்களுக்குத்  தலைமை ஏற்றவர் பேசினார்,

    “ஆடற்பெருமானின் சிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சிற்பியும் அவருக்குத் துணையாக இருப்பவர்களும் இரவு பகல் ஊண் உறக்கமின்றி அதில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் வெற்றி பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    “சிலை செய்யப்பட்டு விட்டாலும் அதை இங்கே கொண்டுவருவதற்கு எதிர்ப்பு கடுமையானதாக இருக்கும். உயிரைக் கொடுத்தாவது நாம் அதை முறியடித்தே ஆக வேண்டும். அதற்காக நாம் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டும்.”

    “கோவிந்த பட்டர் போலவா?” என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.

    “அது போலத் தற்கொலை செய்து கொள்வதால் எந்தப் பயனும் விளையாது. ஆடற்பெருமானை இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யும் முயற்சியில் எதிரிகளால் கொல்லப்பட்டு உயிர் போவதானால் போகட்டும். நாமாக உயிரைப் போக்கிக் கொள்ளுதல் சாஸ்திர விரோதம், நடைமுறைக்கும் பயன்படாது.

    “இந்தச் சித்திரகூட விண்ணகர வளாகத்தில் நம் அனைவருக்கும் உரிமை உண்டு. நாம் இதுவரை மலைநாட்டில் இருந்தோம். அங்கு இருப்பது போல இங்கும் ஒரு அம்பலத்தை ஏற்படுத்தி அதில் ஆடலரசனை அமர்த்தி வைப்போம். அதுவரையில் நாம் நெய், பால் ஆகிய பொருட்களைத் தவிர்த்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்போம். ஆயுள் முழுவதும் ஆடற்பெருமானுக்கே அடிமை செய்து வாழ்வோம். உங்களில் எத்தனை பேர் இந்த தீக்ஷையை எடுத்துக் கொள்வீர்கள்?” என்று கேட்டார்.

    கூட்டம் முழுவதும் ஒருவர் மிச்சமில்லாமல் ‘ஓம் நமச்சிவாய’ என்றது.

    “எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது எனக்கு நம்பிக்கையும் வலிமையும் அளிக்கிறது. நம்மை எதிர்ப்பவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்ட ஒரு அடையாளம் தேவை. எனவே நாம் அனைவரும் நம் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வோம்.”

    “எப்படி?” என்றது கூட்டம்.

    “சோழியர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் முன் குடுமி வைத்திருக்கிறோம். வடமர்கள் பின் குடுமி வைத்திருக்கிறார்கள். ஈசனைப் பற்றிய விஷயத்தில் நமக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை இருந்தாலும் ஆடற்பெருமானுக்கு அடிமைப்பட்டிருப்போம் என்று தீக்ஷை எடுத்துக் கொண்டவர்கள் என்ற முறையில்  நாம் அவர்களிடமிருந்தும் நம்மை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும். எனவே நாம் இனிக் குடுமிகளைப் பக்கவாட்டில் முடிந்து கொள்வோம்.”

    ‘ஓம் நமச்சிவாய’ என்று கோஷம் எழுப்பி கூட்டம் அதை ஆமோதித்தது.

    தில்லை அந்தணர்கள் மேற்கு மலைநாட்டுக்குக் குடிபெயர்ந்த பிறகு சமணர்கள் சித்திரகூட வளாகத்தில் கோவிந்தராஜருக்கு வடக்கில் சுதையால் செய்யப்பட்ட ஒரு யக்ஷி உருவத்தை பிரதிஷ்டை செய்திருந்தனர். அவர்கள் சம்பிரதாயப்படி யக்ஷர்களும் யக்ஷிணிகளும் குபேர வம்சத்தைச் சேர்ந்தவர்கள், செல்வத்தைக் காப்பவர்கள். யக்ஷிணிகளில் இருபத்து நான்கு வகை உண்டு. இங்கு வைக்கப்பட்டது சாமுண்டா என்ற வகையைச் சேர்ந்தது. அச்சுறுத்தும் தோற்றம் கொண்டது.  மலைநாட்டிலிருந்து அந்தணர்கள் திரும்பி வந்து சித்திரகூட வளாகத்தைக் கைப்பற்றிய பிறகு  பழம் தமிழ்ச்சமயத்தார் அந்த யக்ஷியைக் காளி என்ற பெயரில் வணங்கலாயினர்.**

    அதற்கு வடக்கில்தான் மூலநாதர் லிங்கம் வைக்கப்பட்டிருந்தது. சமணப் பள்ளிகளின் சமாதி மீது ஆலயங்கள் கட்டுவது வழக்கமாக இருந்ததால் யக்ஷிணி ஆலயத்தின் மேல்தான் ஆடற்பெருமானைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று தீக்ஷிதர்கள் திட்டமிட்டிருந்தார்கள். அதைக் காளி என்று சிலர் வணங்கியதால் அதை அங்கிருந்து அகற்றுவதற்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து அதைத் தீர்க்க விரும்பினார்கள்.

    தீக்ஷிதர்கள் ஒவ்வொரு சாதியின் முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேசினார்கள். “காளி என்ற பெயரால் வணங்கப்பட்டாலும் இது சமண தெய்வம். அதனால் அதை இந்த வளாகத்திலிருந்து அகற்ற வேண்டும். வேண்டுமானால் நாம் ஒரு காளி விக்கிரகம் ஏற்படுத்தி ஊர் எல்லையில் வைக்கலாம். கிராமிய தெய்வங்கள் ஊர் எல்லையில்தான் இருப்பது வழக்கம்” என்று சொன்னார்கள். அது சமணர்கள் பூசித்தது என்பதை முதியோர்கள் உறுதிப்படுத்தியதால் மற்ற சாதியினர் ஒப்புக் கொண்டார்கள்.

    யக்ஷிணி செல்வத்தின் காவலாளி. எனவே அதை முற்றிலுமாக மூடக் கூடாது என தீக்ஷிதர்கள் தீர்மானித்தனர். “அதன் மேலே அம்பலத்தை அமைத்து விடுவோம். யக்ஷிணி சன்னிதிக்குச் சென்று வரத் தனிச் சுரங்க வழி  ஏற்படுத்துவோம்” என்று தீக்ஷிதர்கள் தீர்மானித்தனர்.

    ——————————– ———————————————- ——————————————–

    * தக்கன் கதை அம்மையாரால் குறிப்பிடப்படவில்லை. எனவே அம்மையார் காலத்துக்குப் பின் இது நிகழ்ந்திருக்கலாம்.

    ** சிதம்பரத்தில் ஆடற்பெருமானின் சன்னிதி அருகில் உள்ள ரகசியம் என்று சொல்லப்படும் இடத்தின் கீழ் ஒரு நிலவறை உள்ளது, அதன் நுழைவாயிலை அடைத்து ஒரு மண் சுவர் அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் புனுகுமாலை சாத்தப்பட்டுப் பூசை நடக்கிறது. அங்கு ஒரு காளி கோயில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது ஆ. பத்மாவதி எழுதிய சைவத்தின் தோற்றம், வை. தட்சிணாமூர்த்தி எழுதிய ஸ்ரீநடராச தத்துவம்.

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 15

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    நட்பினைக் குறித்த திருக்குறள் அதிகாரங்கள் நமக்குப் பல்வகை அறிவுக் கருத்துக்களை வழங்குகின்றன! நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ்சேராமை ஆகிய அதிகாரங்களின் குறட்பாக்கள், இவற்றுடன் காதல் சிறப்புரைக்கும் காமத்துப் பால் குறட்பாக்கள் அனைத்தும் நமக்கு நட்பினைக் குறித்த அனைத்து வகை குணம் குற்றங்களை உணர்த்துகின்றன !

    இவற்றுடன் நமக்குத் தேவையான சிறந்த பொது அறிவுக் கருத்துக்களையும் வழங்குகின்றன! நட்பினை பற்றி விதிமுகத்தான் ஐந்து அதிகாரங்களும், பகை பற்றி எதிர்மறை முகத்தான் பன்னிரண்டு அதிகாரங்களும் வள்ளுவரால் பாடப்பெற்றன! இவற்றில் பொறுக்கப் படாத குற்றம் உடையவரது நட்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது. நட்பாராய்தல் அதிகாரத்தில் பேதையார், அல்லற்கண் ஆற்றறுப்பார், கெடுங்காலைக் கைவிடுவார் ஆகியோர் நட்புக்கு உரியவர் ஆகார் என்கிறார் வள்ளுவர். அடுத்து தீநட்பு அதிகாரத்தில் தீய குணம் படைத்தவருடன் நட்புக் கொள்ளலாகாது என்கிறார். இந்த அதிகாரத்தில் பண்பிலார், ஒப்பிலார், உறுவது பார்ப்பவர், ஆற்றறுப்பார், அரணாகாத சிறியவர், பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார், வினைவேறு சொல் வேறு பட்டார், மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார், ஆகியோரைத் திருவள்ளுவர் இனங்காட்டுகிறார்! இவர்களைத் தவிர, இயல்பாய்ப் பகைமை பாராட்டும் மனத்துடன், அழிக்கும் வாய்ப்புக் கருதிப் புறத்தால் கூடி ஒழுகுவாரைக் ”கூடாநட்பு” என்ற அதிகாரத்தில் அடையாளம் காட்டுகிறார்!

    இவ்வாறு நட்புக்கு உரியவரையும், நட்புக்குத் தகாதவரையும் ஆராய்ந்து அறிவிக்கும் திருவள்ளுவரின் பேரறிவு, நமக்குத் திகைப்பையும், வியப்பையும் உண்டாக்குகின்றன! சமூக விஞ்ஞானம் எனப்படும் மக்கள் தொடர்பின் அடிப்படையை வள்ளுவர்போல் விளக்கியோர் எவரும் இலர் என்றே கருதுகிறோம்!

    இந்த நட்பின் தன்மைகளைப் பற்றிக் கூறும்போதே , வள்ளுவப் பெருந்தகை, பல்வகைப்பட்ட அறிவியல் கருத்துக்களை, எந்த ஆயாசமும் இன்றி இயல்பாகவே வழங்குகிறார்! அறிவியலின் ஒரு பகுதியாகிய இயற்பியலின் ஆற்றல் என்ற தனிப்பட்ட வகையைத் தம் ஒரு குறட்பாவில் விளக்கும் அழகு நினைந்து நினைந்து மகிழ வைக்கிறது! புவி ஈர்ப்பு விசை , கீழ் நோக்கி இழுக்கும் தன்மை படைத்தது! ஒரு விசை, கீழ் நோக்கி இயங்கும் ஆற்றலாக வரும்போது புவி ஈர்ப்பு விசையும் அதன் வேகத்தை அதிகமாக்கும்! ஆகவே கீழ் நோக்கி இயங்கும் விசை போகப் போக அதிகம் ஆகும்! விண்ணிலிருந்து மண்மேல்விழும் பொருளின் விசை அதிகரிப்பது குறித்த இயற்பியல் சூத்திரங்கள், பிற்கால அறிவியலாளர்களால் வரையறுக்கப் பட்டுள்ளன! இத்தகைய ஆற்றலின் இருவகைகளை, நிலைப்பாற்றல். (ஸ்டாடிக் ஃபோர்ஸ்), இயங்காற்றல் (கைனடிக் ஃபோர்ஸ்) என்று , நவீன அறிவியலறிஞர்கள் வரையறை செய்துள்ளனர்.

    ஓர் இரும்புப் பட்டடையின் கல்மேல், பழுக்கக் காய்ச்சிய இரும்பை வைத்து, மேலிருந்து ஒரு சம்மட்டியால் விரைந்து தாக்கும் போது, மேலிருந்து தாக்கும் விசைக்கு ஈடான விசையைக் கீழிருக்கும் பட்டடைக்கல் உருவாக்கி – தாங்குவது போல் தாக்கும்!- என்ற தாக்குவிசையாற்றல் பற்றித் தமிழர் அறிந்து வைத்திருந்தனர் என்று நாம் அறிந்து கொள்கிறோம்! இந்த அறிவியலின் அடிப்படையில்தான் தாங்கும் ஆற்றல், அதாவது நிலை யாற்றல் (ஸ்டாடிக் ஃபோர்ஸ்), தாக்கும் ஆற்றல் , அதாவது இயங்காற்றல் (கைனடிக் ஃபோர்ஸ்) என்ற விசைபற்றிய அறிவியல் கொள்கை உருவாயிற்று!

    புலால் உணவினை, இரும்புப் பட்டடை இட்ட அடிமரத்தில் வைத்துச் சிதைத்து வெட்டுவதை , சீவக சிந்தாமணி, ”ஊனமர் குறடு போல இரும்புண்டு” என்ற தொடரால் விளக்குகிறது! இதற்கு, இவ்வாறு உரை எழுதியவர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார்! அக்காலத்தில் ஊன் சிதைக்கும் அடிமரமும் ,’பட்டடைக் கல்’ என்று வழங்கப் பெற்றது போலும்!

    இதனை மிகவும் நன்றாக அறிந்து வைத்திருந்த வள்ளுவப் பேராசான் இந்த இயற்பியல் கருத்தைக் ” கூடா நட்பு” என்ற அதிகாரத்தின் முதல் பாடலில் அமைத்திருக்கும் அழகு போற்றுதற்குரியதாகும்! ”நம்முடன் அகத்தால் கூடாமலிருந்தே, வாய்ப்பு வரும் வரை கூடியவர் போல் நடிக்கும் கீழோர் நட்பு , சீரான இடத்தைப் பெற்றால், இடையில் அகப்பட்ட பொருளை முழு வேகத்துடன் தாங்கித் தாக்கும் பட்டடை போன்று, பகை தீர்த்துக் கொள்ளும் வகையினது!” என்ற கருத்தமைந்த பாடலை அளித்துள்ளார் ! அப்பாடல் ,

    ”சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு” (821)
    என்பதாகும்!

    இத்தகைய பட்டறிவால் பெற்ற அறிவியற் கருத்துக்கள் திருக்குறளில் ஆங்காங்கே ஒளிவீசித் திகழ்வதை ஊன்றிப் படிப்போர் உணர்ந்து மகிழலாம்! அறிவியல் ஆற்றலை, நட்பின் திறத்துடன் ஒப்பிட்டுக் காட்டும் திருவள்ளுவரின் பேரறிவு நம்மை வியந்து மகிழ்ந்து போற்ற வைக்கிறது!

    Share