ஸ்ரீ மாதா அமிர்தானந்தமாயி சரிதம்

 
மீ.விசுவநாதன்

ஸ்ரீ கணநாதன்

ஆன முகனே
உன்னருளால்
ஆன முகமே
உலகம் ! நீயதன்
நெற்றித் திலகம் ! என்னால்
ஆன தேது?
என்போர்க்கு
நீயே அம்மா
ஆன மாது !
–௦- -௦-

அம்மா..நீ
மச்சா வதாரத்தின்
மிச்சா வதாரம் ! கருமைக்
கண்ணனின்
அச்சா வதாரம் ! தேவியின்
இச்சா வதாரம் !
அரக்க குலத்தை
அழிக்க வந்ததன்று
வானினம் ! இன்றோ
இரக்க குணத்தால்
இருக்கக் கட்டிடும்
மீனினம் ! அன்புக்கினிய
பூவினம் !
-௦- -௦- -௦-

பாற்கடலைக் கடைந்த
போது வந்த
“அமிர்தா” இன்று
ஊர்க்கடலாய்ப் பரந்த
உலகுக்கே உயிரான
“அமிர்தா”?

மகளா ? மகானா ?
மனத்தின் சுகமா ?
அவளின் சரிதம்
அமிர்தா? ஆனந்தமா?
இரண்டுமான
“அமிர்தானந்தமா?”

ஆர்க்கும் ஆசைதான்
அறிய !
ஈர்க்கும் தமிழாலே
அவள்சரிதம் எழுத
வேண்டுவேன்
அருள் புரிய !

…….(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)

(இன்று (27.09.2015) ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி பிறந்த தினம்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on ““அன்புள்ள அம்மா”

  1. அருமையான ஆரம்பம் ..!!
    !வாழ்த்துக்கள் 
    க.பாலசுப்ரமணியன் 

  2. மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்கு மகிழ்ச்சி.
    அன்பன்,
    மீ.வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *