






செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(480)
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
–திருக்குறள் –61(புதல்வரைப் பெறுதல்)
புதுக் கவிதையில்…
புவன வாழ்வில்
பெறத்தகுந்த பேறுகளில்
அறியவேண்டியவற்றை அறியும்
அறிவு படைத்த
நன்மக்களாம் செல்வத்தைப்
பெறுவதைத் தவிர
மற்றவற்றை ஒருவன்
பெறத்தக்க பேறுகளாய் யாம்
மதிப்பதில்லை…!
குறும்பாவில்…
பெறத்தகுந்த பேறுகளில் அறிவுடை
நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றவற்றைப்
நல்ல பேறுகளாய் மதிப்பதில்லை…!
மரபுக் கவிதையில்…
பெற்றிடும் பேறுகள் பலவற்றுள்
பெருமையும் சிறப்பதும் கொண்டதுதான்
வற்றிடா அறிவினைக் கொண்டவராய்
வளர்ந்திடும் செல்வமாம் நன்மக்கள்
பெற்றதால் வந்திடும் பெருமையதே
பேணியே காத்திடும் அருமையிதே,
மற்றவை அனைத்துமே பேறென்ற
மதிப்பினை யுடையவை யல்லவாமே…!
லிமரைக்கூ…
பேறுகளில் மிகச்சிறந்த பேறு
அறிவுடை நன்மக்களைப் பெறுதலே, இதைவிடச்
சிறந்ததாய் இல்லை வேறு…!
கிராமிய பாணியில்…
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
ஒலக வாழ்க்கயில பெருஞ்செல்வம்,
நல்ல அறிவுள்ள புள்ளயள
பெத்தெடுக்கிறதே பெருஞ்செல்வம்..
மனுச வாழ்கயில கெடைக்கிற
பேறுலயெல்லாம் பெரும்பேறு
அறியவேண்டியத அறியிற
அறிவு உள்ள நல்ல
புள்ளயள பெத்தெடுக்கிறதுதான்,
அதவிட ஒசத்தியா மதிப்புள்ள
பேறெதுவுமே இல்ல..
அதால
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
ஒலக வாழ்க்கயில பெருஞ்செல்வம்,
நல்ல அறிவுள்ள புள்ளயள
பெத்தெடுக்கிறதே பெருஞ்செல்வம்…!

சக்தி சக்திதாசன்
ஓடியே போய் விட்டது 2023. எம் கைகளில் 2024 எனும் குழந்தையைத் திணித்து விட்டுத் தான் போய்.சரித்திரப் புத்தகத்தினுள் புதைந்து விட்டது.
நடந்து முடிந்த விடயங்கள் நடந்தவையேதான். அவற்றைத் திருப்பிப் புரட்டிப் பார்க்கலாமே தவிர மாற்றியமைக்க முடியாது.
” நடந்ததை எண்ணிக் கவலைப்பட்டால் அவன் மூடன் ” எனும் வரிகள் கவியரசரின் பாடல் ஒன்றிலே வரும்.
பின்
ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும் ?
ஒவ்
வொரு திருப்பத்திலும் ஒரு பாடல் எமக்கு போதிக்கப்படுகிறது.
சிலவற்றில் இன்பத்தை நுகர்கிறோம் சிலவற்றில் துன்பத்தில் துடிக்கிறோம்
அவையிரண்டும் எமக்கு அனுபவப் பாடங்களே !
அப்பாடங்களின் மூலம் நாம் கற்றுக் கொண்டது என்ன ?
அதுவே இந்தத் திரும்பிப் பார்த்தலின் நோக்கமாகிறது.
2023 ம் ஆண்டு பிறக்கும்போதும் நான் சென்னையிலே தான் அதன் பிறப்பினைத் தரிசித்தேன்.
2023 சர்வதேசரீதியில் பல நிகழ்வுகளைத் தோற்றுவித்திருக்கிறது.
2023 இல் இடம்பெற்ற நிகழ்வுகளின் தாக்கம் என் பிரத்தியேக வாழ்க்கை , என்னைத் தனது தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்ட ஐக்கிய இராச்சியம், நான் தமிழ்த்தாகம் தீர்க்கவும், ஆன்மீக விளக்கங்களுக்காகவும் தேடியோடும் இந்தியா , என் தாய்மண்ணான இலங்கை எனும் வகையில் எவற்றை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலே இது.
குழந்தைப் பருவம், வாலிபம், நடுத்தர வயது எனும் பருவங்களைக் கடந்து இன்று முதுமையின் வாசலினுள் நுழைந்த எனக்கு 2023 போதித்தது என்ன ?
அறுபத்தியேழு எனும் இந்த அகவையில் நான் கற்றுக் கொண்டவைகள் இருபதில் தெரிந்திருந்தால் ?
இன்றிருக்கும் எழுத்தாளன் சக்தி சக்திதாசன் என்பவன் இருந்திருப்பானா என்பது சந்தேகமே !
என் வாழ்க்கைப் பாதையின் வளைவுகளும், நெளிவுகளும் எனக்குக் கற்றுக் கொடுத்தவைகளை எதற்காகவும் இழக்கத் தயாராக இல்லை.
2023ம் ஆரம்பத்தை தமிழகத்தில் சந்தித்த வேளையில் என்னை நான் அறிந்து கொள்ளும் பயணத்தில் என்னைத் தொலைத்தேன்.
நாம் வாழ்வில் சந்திக்கும் யாவருமே எமக்கு எதையோ கற்றுக் கொடுத்து விட்டுத்தான் செல்கிறார்கள்.
அக்கற்பித்தல்களுள் புதைந்திருக்கும் நேர்மறையான புரிதல்களை இனங் கண்டு கொள்வதே எமது சவாலாகிறது.
தமிழகத்தின் ஆன்மீக வாசல்கள் என்னைத் தியானம் எனும் தீயில் புடம் போடும் வகைக்கு இட்டுச் சென்றது.
என்னை நானே அறிந்து கொள்ளும் பயணத்தில் ஒரு புதுப் பரிணாமத்துக்குள் புகுவித்தது.
இந்தப் புதுப்புரிதல்களின் அடிப்படையில் எனக்குள் நான் என்னைத் தேடும் படலத்தின் அடுத்தபடியே 2023 எனக்குத் தந்த மாற்றம்.
இங்கிலாந்து எனும் எனது வளர்ப்பு அன்னை பூமியில் 2013 விளவித்த மாற்றங்கள் பல.
19 வயது வாலிபனாக இங்கிலாந்து நாட்டிற்குள் காலடி வைத்தபோது அந்நாட்டின் முடியாட்சியை அலங்கரித்த இரண்டாம் எலிசபேத் மகாராணியை இழந்து ஒரு வருடப் பூர்த்தியைக் கண்டது 2023.
மகாராணியை இழந்த இங்கிலாந்தின் மன்னராக உத்தியோகபூர்வமாக முடிசூடிக் கொண்டார் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ்.
ஒரு நாட்டின் ராஜ வைபவமான முடிசூட்டுவிழாவை வாழ்வில் கண்டுகளிக்கும் சந்தர்ப்பத்தை அளித்தது 2023.
பொருளாதரப் பிரச்சனை இங்கிலாந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாரிய தாக்கத்தைக் கொடுத்தது.
ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது ஆசியப் பின்னனியைக் கொண்ட பிரதமர் ரிஷி சுனாக் அவர்களின் தலைமைக்குச் சவாலாக பல பிரச்சனைகள் உருவெடுத்தன.
பொருளாதரா சிக்கல்களினால் ஊதியத்தில் முன்னேற்றம் காணாத தேசிய சுகாதாரத்துறை ஊழியர்கள் டாக்டர்கள் அடங்கலாக வேலை நிறுத்தங்களில் குதித்தனர்.
தொடரும் யூக்கிரேன், ரஷ்ய யுத்தத்தில் யூக்கிரேனுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த பிரித்தானியாவை இஸ்ரேல், பாலஸ்தீனிய யுத்தம் மேலும் சிக்கலுக்குள் தள்ளியது.
பாலஸ்தீனிய தீவிரவாதிகள் இஸ்ரேலிய பொதுமக்கள் மீது அக்டோபர் 7 ம் தேதி மேற்கொண்ட மிலேச்சத்தமமான தாக்குதலின் பிரபலிப்பாக இஸ்ரேல் தொடங்கிய காஸா மீதான தாக்குதலின் நியாயத்தை ஏற்றுக்கொண்டாலும் உயிர்ச்சேதங்களின் அளவினைக் கண்டிக்க வேண்டிய தேவை இங்கிலாந்துப் பிரதமரை சங்கடமான நிலையில் தள்ளியுள்ளது.
இங்கிலாந்து.பொதுமக்கள் மத்தியில் இஸ்ரேல் மீதான விமர்சனங்களைச் சமாளிக்க வேண்டிய தேவையும் இங்கிலாந்துப் பிரதமருக்கு உண்டு.
பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக அகதிகள் என்று கூறிக்கொண்டு உள்நுழையும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இப்பிரச்சனையை வெள்நாட்டிலிருந்து குடியேறிய சந்ததி வழியான பிரித்தானிய பிரதமர் எவ்வாறு கையாள்கிறார் என்பது அவருக்கு மட்டுமல்ல அவரது கட்சியின் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் வல்லமை படைத்தது.
பிறக்கும் இந்த்ஜ 2024 இங்கிலாந்து நாட்டின் தேர்தல் ஆண்டாகும் என்பது அனைத்து அரசியல் அவதானிகளினதும் கருத்தாகும்.
வாழ்வாதாரம், வெளிநாட்டவரின் குடியேற்றம், சர்வதேச அரசியல் நிலவரம் என இவையனைத்தையும் இங்கிலாந்துப் பிரதமர் எவ்வகையில் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும்.
பொதுவாகவே 2024ம் ஆண்டில் இங்கிலாந்து அரசுக் கட்டிலில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பலமான தோல்விக்கு உள்ளாகும் என்றே பலரது கருத்தும் இருக்கிறது.
அடுத்து இந்தியாவுக்கும் 2024 ம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு யார் இந்தொயாவின் பொருளாதார உயர்ச்சியை சரியான திசையில் எடுத்துச் செல்லப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கப் போகிறது.
2015ம் ஆண்டினைப் போலவே 2023ம் ஆண்டும் தமிழகத்தைத் தண்ணீரில் தத்தளிக்க வைத்தது.
2015ல் கற்றுக்கொண்ட பாடம் 2023ல் உபயோகமாகிற்றா என்பது கேள்விக்குறியே !
2023ல் இலங்கையில் நான் பயின்ற பாடசாலையான யாழ் பரியோவான் கல்லூரி தனது 200வது பிறந்தநாளைக் கொண்டாடியது.
இவ்விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான பழைய மாணவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன் என்பது எனது உள்ளத்தைத் தாலாட்டுகிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே மீண்டும் கிடப்பில் போடப்பட்டதைப் போல ஒரு உணர்வு.
இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்குவது ஒரு பாரிய அரசியல் பிரச்சனை என்பதையும் இதைத் தீர்க்க வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளது என்பதை சர்வதேச நாடுகள் கவனத்தில் கொண்டுள்ளனவா ? எனும் கேள்வி பூதாகரமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஆக மொத்தம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை ஒரு விடையில்லா வினாவாகத்தான் 2024க்குள் பிரவேசிக்கிறது என்பதே உண்மை.
அடுத்து சர்வதேச கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளான அமேரிக்கா , இந்தியா, ரஷ்யா , சீனா எடுக்கப்போகும் சர்வதேச அரசியல் நகர்வுகளை எதிர்நோக்கியபடி ஒரு அச்சம் கலந்த உணர்வுடன் உலக மக்கள் இந்தப் புதுவருடத்தினுள் நுழைகின்றனரோ எனும் சந்தேகம் எழுகிறது.
பொதுவாகவே ஒரு நாடகம் பார்ப்பது போன்றே இனிவரும் வருட நிகழ்வுகளை எதிர்கொள்வதே இன்றைய தேவை.
இனம், மதம், நாடு, மொழி எனும் பாகுபாடுகளைக் கடந்த ஆன்மா எனும் நிலைப்பாட்டில் கிடைக்கும் ஆன்மீகப் புரிதல்களின் அவசியத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.
வருட முடிவு, வருட ஆரம்பம் என்பன சாதாரண நிகழ்வுகளே !
வருட முடிவோ அன்றி வருட ஆரம்பமோ எமது வாழ்வின் போக்குகளை மாற்றப் போவதில்லை.
வருடமொன்றின் முடிவிலும், அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் எமது எண்ணங்ளைக் கட்டுப்படுத்தி நேர்மறையான இலக்குகளை நோக்கிச் செலுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளக்கூடிய மனோதைரியத்தைக் கொண்டிருக்கிறோமா என்பதுவே முக்கியம்.
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளில் நனைவது தவறல்ல.
வெறுமையாக நனைந்ததைத் தவறுதலாக மூழ்கி விட்டோம் என்றெண்ணி அதனுள் அமிழ்ந்து போவதே தவறாகும்.
அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா
“பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்
பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்”
“வருடம் முழுதும் வற்றாத வளம்
வாங்கி வந்த வரமே பனை”
வானோங்கி நிற்பதுதான் எங்கள் கற்பகதருவாம் பனை மரம். வாழ்வில் தோள் கொடுத்துத் தோழமையுடன் நிற்பதுதான் எங்கள் பனை மரம். இருந்தாலும் பயன் கொடுக்கும். இருப்பை விட்டு மறைந்தாலும் பயன் கொடுக்கும். பனை என்பது மரம் அல்ல. அது நல் வரம் என்பதை மனமிருத்தல் வேண்டும். பனையின் நிலையினை நாங்கள் ஒவ்வொருவருமே மனத்தில் இருத்திட வேண்டியது அவசியமாகும். இருக்கும் வரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது என்பதே எங்களுக்கெல்லாம் நல்லதொரு பாடமாய் இருக்கிறதல்லவா! மற்ற மரங்களைப் போல பனையினை நாங்கள் பார்த்துவிடக் கூடாது. தலை நிமிர்ந்து, தளர்வின்றி. கொடை வழங்கும் கர்ணனாய் கற்பகதருவாம் பனை காட்சி தருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.
பனையின் ஓலைகளை சாதாரணமாகப் பார்த்தே பழகிவிட்டோம். ஆனால் அந்த ஓலைக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை ஏட்டுச் சுவடிகள் வரலாற்றுக்குள் பார்த்தோம். அந்த வரலாற் றுக்குள் சற்று உள்ளே போய் இன்னும் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம் அல்லவா !
இலக்கியம் வளர்த்த பனை என்று கூறுவதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது, எமது முன்னோர்களின் சிந்தனைச் செல்வங்களை இன்று நாம் பயனாக்கி நிற்கிறோம் என்றால் அதற்குதக்க துணையாக அமைந்தது பனை தானே! பனைமரத்தின் ஓலைச் சுவடிகள் இல்லை என்றால் பழந்தமிழ்ச் செல்வங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பனை இல்லையேல் நமக்கு மொழியில்லை. வரலாறு இல்லை. ஏன் பாரம்பரியமே இல்லை என்பதை உணரும் பொழுது மெய்சிலிர்க்கிறதல்லவா! “பயன்மரம்” என்று வள்ளுவமே போற்றும் தகைமையினைப் பெற்ற ஒரே மரமாய் கற்பகதருவாம் பனையே விளங்குகிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா.
“ஆறங்க வேதநூ லாகமநூல் வேறுமுள மெய்க்கலைகள்
போதமிகுந்த புராணநூல் – ஓதுகின்ற
மந்திரநூல் சிற்பநூல் வாகடநூல் வாய்மைமிகு
செந்தமிழ்நூல் பற்பலவும் தீட்டலாம் – சுந்தரஞ்சேர்
மங்கல நாளோலை மஙகையர்க்குக் காதோலை
துங்கமிகு நண்பருக்குத் தூதோலை – தங்குபல
பற்று வரவு பதியுங் கணக்கோலை
மற்று முறுதி வரையோலை – கற்றவர்கள்
எந்திரங்கள் கீறி எழுத்தடைத்துக் கட்டுகின்ற
மந்திர வோலைகட்கு வாய்ப்பாகும் “
என்று “தாலவிலாசம்” நாடகநூலும்
“படிக்க நல்ல தம்பியர்க்கு
பட்டோலை நானாவேண்
எழுத நல்ல தம்பியர்க்கு
எழுத்தோலை நானாவேன்
தூரத்து வன்னைமைக்கு
தூதோலை நானாவேன்
வாசலில் வன்னிமைக்கு
வழக்கோலை நானாவேன்”
என்று நாட்டுப் புறப்பாடலும் பனை ஓலையின் பயன் பாட்டினை வியந்து நிற்பதைக் காண்கிறோம். பனை ஓலையென்று நாங்கள் சாதாரணமாய் எண்ணி விடும் அந்த ஓலைக்குள் இத்தனையும் இருக்கிறதா என்று எண்ணுகையில் பனையென்பது நல்வரம் என்றுதானே சொல்ல வேண்டும்.
ஏடுதந்த பனையின் ஓலை பற்றிய எண்ணப் பதிவினை “பனை மர சோபனம்” என்னும் நூல் எப்படிப் பார்க்கிறது என்பதையும் பார்ப்போம்.
” வருடத்திற் கோர்தினத்தில் சரஸ்வதியம்மன் பூசைசெய்து
மஞ்சள் படிந்துவர மங்கலங்கள் பாடிவர
அட்சதையும் மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெலாம்
என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைப்பிடித்து
ஆசிரியரும் வேதியரும் ஹரிநமோ என்றெழுதி
ஹரிஹரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்
அரிச்சுவடி என்னாலே வரிக்காய்ப் பாடம்என்னாலே
தர்க்கங்கள் என்னாலே சாஸ்திரங்கள் என்னாலே
இராமாயணம் என்னாலே பாரதமும் என்னாலே
பாகவதம் என்னாலே பலசாத்திரங்கள் என்னாலே
திருவாய்மொழி என்னாலே திருமுறைகள் என்னாலே
நாலுவேதம் என்னாலே ஆறங்கம் என்னாலே
மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மணவறிவ தென்னாலே
வர்த்தகருஞ் செட்டிகளும் கணக்கறிவ தென்னாலே
பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்
காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்
தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்
கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்
சீமந்து வாசலுக்குச் சீருடனே நான்போவேன்
பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்
மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்
அரண்மனையில் நானிருப்பேன் ஆஸ்தானத்தில் நானிருப்பேன்
மச்சுக்குள் நானிருப்பேன் மாளிகையில் நானிருப்பேன்
எமலோகம் போனாலௌம் எல்லோர்க்கும் தெரியவைப்பேன்
சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன் “
என்று பனை ஓலையின் ஒவ்வொரு நிலையினையும் இப்பாடல் காட்டு வதைக் கருத்திருத்துவது முக்கியம் அல்லவா!
பனையின் ஓலை பலவிதங்களில் எங்கள் வாழ்வியலில் எப்படியெல்லாம் இணைந்திருந்தது என்பதை இங்கு பல பாடல்களால் கண்டோம். பனையின் ஒலையினால் ஆகிய ஏடுகள் பற்றிய பல விஷயங்களையும் பார்க்கப் பார்க்க பெருமையாகவும் வியப்பாகவுமே இருக்கும். எழுதும் நிலை ஏற்பட்டவுடன் எழுதுவதற்கு உரியதாய் பனையின் ஓலைதான் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. இலகுவாய் கிடைத்தது. அதுவும் வாழும் அயலிலேயே கிடைத்தது. பனையின் ஓலையில் எழு துவதைக் கண்டறிந்த தன்மையினைச் சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது. மிகச் சிறந்த தெரிவு என்றுதான் எண்ண வேண்டும். கல்லில், மரத்தில், களிமண் தகட்டில், தோலில், செப்புத்தகட்டில் எழுதுவது என்பது இலகுவான செயலன்று. அதுமட்டுமல்ல அவற்றில் விரைவாகவும் எழுதிட முடியாது. எனவேதான் பனையின் ஓலையினை எழுதுவ தற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பனை ஓலையில் எழுதினால் அவற்றை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்வது இலகுவாக இருக்கும் என்னும் காரணத்தாலும் – பனை ஓலை ஏடாய் மலர்ந்தது என்றும் எடு த்துக் கொள்ளலாம் அல்லவா !
ஓலையில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவது என்பது ஒருவித கலை எனலாம். எழுத்தாணியைக் கொண்டு மிருதுவான ஓலையில் எழுதும் பொழுது மிகவும் கவனமாகவே எழுத வேண்டும். ஓலையில் எழுதும் எழுத்துக்கள் – நாங்கள் தற் பொழுது காகிதத்திலோ அல்லது கணிப்பொறியிலோ அல்லது தட்ட ச்சிலோ எழுதுவதுபோல் இலகுவாக எழுதிவிடல் முடியாது. பிழை யினை திருத்தவோ அழிக்கவோ முடியாது. எழுதினால் எழுதியதுதான். எழுதும் ஓலையில் பிழை வந்தால் அந்த ஓலையினைத் தவிர்த்து விட்டு புது ஓலையில்த்தான் எழுதல் வேண்டும். மெய் எழுத்துக்களை எழுத முடியாது. குற்றுப் போட்டால் ஓலை கிழிந்து விடும். ஓலையில் எழுதும் எழுத்துக்களை எழுதுவது என்பதற்கு நல்ல பழக்கம் வேண்டியதாய் இருந்தது. தற்காலத்தில் விரித்து எழுதுவதுபோல் எழுதிவிடவும் இயலாது, சுருக்கமாய் அதேவேளை செறிவாய் எழுதும் நிலையே காணப்பட்டது எனலாம். இதனாலேயே எழுதப்பட்ட எல்லாமே பாட்டின் வடிவத்தைக் கொண்டு அமையும் கட்டாயம் இருந்தது என்பது கருத்திருத்த வேண்டியதே.
ஓலையில் பாட்டெழுதும் முறையிலும் வரையறைகள் காணப்பட்டன என்பதற்கு ஆதாரங்களும் இருந்திருக்கின்றன.
அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் – முந்துவிரல்
வேளாரக்க் கீராறாய் வெள்ளோலை வேயவனை
தோளாய் அறிந் தொகுத்து
என்று கல்லாடனார் வெண்பா காட்டுகிறது. இதன்படி நான்மறையாளர்கள் இருபத்து நான்கு விரற்கடை அளவும், அரசர்கள் இருபது விரற் கடை அளவும், வணிகர்கள் பதினெட்டு விரற்கடை அளவும், வேளார்கள் பனிரெண்டு விரற் கடை அளவு எடுத்தே ஓலையில் எழுத வேண்டும் என்னும் நிலை காணப்பட்டது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் பொய்கையார் பாடலும் வந்து அமைகிறது.
“ஓலைய திலைக்கணம் உரைக்குங் காலை
நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
வணிகர்க் கீரெண் விரலாகும்மே
காணென மொழிய சூத்திரக் களவே “
புத்தகம் சரியா பொத்தகம் சரியா என்று குழம்புகின்றோம். பொத்தகம் என்னும் சொல் பல ஏடுகளை இணைத்த இணைப்பினைக் குறித்தது என்பதற்கும் பழையபாடல்கள் சான்றாய் வந்து அமைகின்றன. வெற்றிலைகளை அடிக்கி வைத்திருக்கும் அடுக்கினைக் குறிக்க “கவளி” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லை பலரும் மறந்து விட்டாலும் இன்னும் இந்தச் சொல் பழக்கத்தில் இருக்கிறது. வெற்றிலை அடுக்கினைக் குறிக்க வழங்கப்பட்ட இச்சொல் ஏடுகளின் அடுக்கினுக்கும் வழங்கப் பட்டிருக்கிறது.
பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
மொய்த்த கொந்து அளக பாரா முகில் முலைத் தவள மேனி
மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம்
கம்பராமாயணத்தில் சரஸ்வதியை வணங்கும் வகையில் அமைந்த இப்பாடலில் – சரஸ்வதி ” பொத்தகம் ” கையில் வைத்திருப்பதாய் காட்டுவது நோக்கத்தது.
“மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் “
முத்திநாதன் என்பவன் உடம்பெலாம் திருநீறு பூசிக்கொண்டு சடை முடிந்த கோலத்தில் கையில் “பொத்தகச் சுவடி” வைத்துக் கொண்டு வந்தான் என்று பெரிய புராணத்தில் வரும் இப்பாடல் குறிப்பிடுகிறது. இங்கே “பொத்தகச் சுவடி” என்பதுதான் முக்கியம். அக்காலத்தில் ஏட்டுச் சுவடிகளை அடுக்காய் கொண்டுவரும் நிலையும் இருந்திருக்கிறது என்பதும் அதற்காக வழங்கப்பட்ட பெயர்களையும் கருத்திருத்துவது நலமல்லவா !
ஏடுதந்த பனையின் ஓலைகளை எடுத்த எடுப்பில் ஓலை என்று அழைத்திடவும் முடியாது. ஓலை என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அது பனையின் மேல் முளைத்து எழுந்து வரும் பொழுது அதனை “குருத்தோலை ” என்கிறோம். பசுமையாய் வந்தபின்பு “சாரோலை” என்கிறோம். காய்ந்த பின்னர் “காவோலை” என்கிறோம். குருத்தோலை என் னும் பெயர் கிறீத்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயராகும். குருத்தோலை பற்றி விவிலியத்திலும் வருகிறது. குருத்தோலை ஞாயிறு என்று ஒரு திருநாள் வருவதும் நோக்கத்தக்கது.
குருத்தோலை என்று கூறியவுடன் அதனுள் நல்லதொரு தத்துவம் பொதிந்து இருக்கிறது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்திருப்போம் குருத்தோலைக்கு ஒரு மென்மைத் தனமையும் நெகிழும் தனமையும் உண்டு. மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலையானது கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்டு இருப்பவர்கள் போல – அக்குருத்தோலைகள் கூப்பியபடியே இருக்கின்றன. அதுமட்டுமல்ல அதன் நுனிகள் வானத்தை நோக்கியபடியே நிமிர்ந்தே நிற்கின்றன. இப்படிக் குருத்தோலைகள் இருப்பது – வாழ்வில் நம்பிக்கையினை யும், பணிவையும் எமக்குப் புகட்டுவதாக இருக்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்
(வளரும்)



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா
நல்லன நடக்க வேண்டும்
நாடெலாம் சிறக்க வேண்டும்
வல்லமை பெருக வேண்டும்
வாழ்வது உயர வேண்டும்
தொல்லைகள் தொலைய வேண்டும்
தோல்விகள் அகல வேண்டும்
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்
போரெனும் வார்த்தை மண்ணில்
பொசுங்கியே போதல் வேண்டும்
மாசுடை ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஆக வேண்டும்
ஊழலும் ஒழிய வேண்டும்
உண்மையே நிலைக்க வேண்டும்
வாய்மையின் வழியில் மக்கள்
மண்ணிலே நடக்க வேண்டும்
உழைபவர் உயர வேண்டும்
நல்லூதியம் கிடைக்க வேண்டும்
கொடுப்பவர் பெருக வேண்டும்
குவலயம் சிறக்க வேண்டும்
கல்வியில் உயர்வு வேண்டும்
கசடுகள் அகல வேண்டும்
கண்ணியம் என்றும் வாழ்வில்
கட்டாயம் அமர வேண்டும்
அறவழி என்னும் எண்ணம்
அகத்தினில் அமர வேண்டும்
அன்புதான் உயர்வு என்று
அனைவரும் உணர வேண்டும்
இரப்பது அகல வேண்டும்
கொடுப்பது உயர வேண்டும்
பொறுப்பது சிறப்பு என்று
விருப்புடன் ஏற்க வேண்டும்
வேற்றுமை அகல வேண்டும்
வெறுப்புகள் ஒழிய வேண்டும்
சமத்துவம் நிலைக்க வேண்டும்
சன்மார்க்கம் தளைக்க வேண்டும்
பண்பது உயரவேண்டும்
பக்குவம் நிறைதல் வேண்டும்
அன்பினைப் பகிர்ந்து மாந்தர்
அனைவரும் இணைதல் வேண்டும்
புது வருடம் அத்தனையும்
சுமந்து கொண்டே வரட்டும்
வரும் அனைத்தும் எங்களுக்கு
வளங் கொடுக்க வரட்டும்
புது வெளிச்சம் காட்டப்
புது வருடம் வரட்டும்
வரு வருடம் நமக்கு
வரங் கொண்டு வரட்டும்

Baskar Seshadri
Vijaykanth who passed away today (28th Dec 2023) had a bright Future in Politics at some point of time after he contested the elections and secured close to nine Percent of votes. This he did opposing both Jayalalaitha and Karunanidhi. It was a master stroke at that time. With no big social media, he was able to achieve this. Later During elections after aligning with ADMK He was able to get twenty-Nine MLA’s elected. In-fact it was his best support that made Jaya to win in the election at that time. Later he parted ways due to uncontrolled emotions and lost balance in public places.
Remember the slap he gave to one of his Volunteer in full Public View? Had he contested the election aligning with DMK, Kalaignar could have come to power in 2016. But he kept away from DMK.
In other words, it was captain who made Jaya to come to power and also made DMK to Lose in 2016. He was a real strong man who was aiming high and was able to reach better Heights with the mass support and Cinema Glamour. But he failed to use the sentimental cinema glamour beyond a point and there started his fall.
If only had he grown better at the same speed he was travelling he could have become the chief Minister of Tamilnadu in the absence of Jaya and Kalaignar.
But sadly, he missed the Bus. Today he is no more.
I am sure the Glamour of Tinsel world is not dead. It’s a mass Movement that matters and voters don’t see the background of the Messiah as voters mostly are emotional in Tamilnadu.
Captain did his best in the film industry with all his helping tendency and was able to give life to the Nadigar Sangam.
He is a do gooder and a nice Samaritan. If only he had a better guide and adviser probably, he could have done the election Politics better.
But it was Otherwise. A big crowd puller and a mass hero Could not do what he Thought in Tamilnadu. That was Sad. And We could not help.

சேசாத்திரி ஸ்ரீதரன்
பண்டைய கால மன்னர் தம் ஆட்சி, அதிகாரம் நிலைப்பதிலேயே குறியாக இருந்ததால் பொது மக்கள் உரிமைகள், நலன்களை அடியோடு புறந்தள்ளினர். மன்னர்கள் தம் நலன், நம்பிக்கை ஆகியவற்றுக்காக பல சடங்கு, சம்பிரதாயங்களை கடைபிடித்தனர். காட்டாக, சதி என்னும் உடன்கட்டை, உடன் பள்ளிகொள்ளல் என்னும் கீழ்கொண்டி முறையில் எளியோரை உயிர் பலி கொடுத்தல் ஆகியவற்றை இறப்பிற்கு பிற்பட்ட வாழ்க்கை, சொர்க்கம் என்னும் நம்பிக்கையில் செய்தனர். உடன் பள்ளி என்னும் உயிர் பலி பண்டு பல்வேறு நாகரிகங்களில் கடைபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இந்த இறப்பின் பிற்பட்ட வாழ்க்கை, சொர்க்கம் ஆகிய நம்பிக்கைகள் மேலை ஆசியாவில் தோன்றி அங்கிருந்து இங்கு வந்தேறிய வேளிர்களால் இந்தியாவிலும் பரவியதாக கருதலாம். திருவண்ணாமலை தாமரைப் பாக்கத்தில் அக்னீசுவரர் கோவிலில் பாடும் பெண்டிர் மூவர் இறந்த பிருதிகங்க மன்னனுடன் உயிருடன் புதைக்கப்பட்ட செய்தி கூறும் தொடர்புடைய மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இதே போல மன்னனுடன் எளியோர் புதைக்கப்பட்ட கல்வெட்டுகள் கருநாடகம், ஆந்திரத்தில் கீள்கொண்டி என்ற குறிப்புடன் அறியப்படுவதோடு இதை ஒப்பிடலாம்.
மன்னர்களான கங்கர், நொளம்பர், பிருதிகங்கர், அதியமான், வாணர் போன்றோர் சங்கப் புலவர் கபிலரால் குறிப்பிடப்படும் 12 வேளிராக கருத இடமுள்ளது. காரணம் இவர்கள் சுமேரிய நாகரிக வழக்கமான இறந்தோருடன் உயிருடன் இருப்பவரை புதைக்கும் வழக்கத்தை கடைபிடித்ததே ஆகும். ஏதோ ஒரு இடத்தில் வழங்கிய வழக்கத்தை தம் முன்னோர் வழக்கமாக தாம் சென்ற இடங்களில் எல்லாம் வழிவழியாக பின்பற்றி இந்நாட்டின் சமூக வழக்கமாவே பரவிடச் செய்துள்ளனர். மன்னர்கள் செய்த சதி என்னும் உடன்கட்டை குற்றத்துக்கு இந்து மதம், சனாதன தர்மம், பிராமணர் தான் காரணம் என்று பழி சுமத்துவது வெறுப்பில் தானே ஒழிய சான்றினால் அல்ல. மனுஸ்மிருதியில் எங்குமே உடன்கட்டை பற்றி கூறப்படவில்லை. இந்தியாவில் பிராமணர் உள்ளிட்ட பிற பொதுமக்கள் அனைவரும் திறந்தவெளியில் தான் மலம், மூத்திரம் கழித்தனர். ஆனால் அரச குடும்பத்தவர் மட்டும் பாதுகாப்பு, அந்தஸ்து கருதி தமக்கென தனியே கழிப்பறை கட்டிக்கொண்டு மலம் கழித்தனர். கழித்த அந்த மலத்தை மனிதரை கொண்டு அகற்றினர். இதை பிற்காலத்தில் நகரங்களில் வாழ்ந்த செல்வர்களும் பின்பற்றினர். இதனால் மலம் அகற்றுவதற்கு என்றே ஆந்திரத்து ஒடுக்கப்பட்ட சாதியாரை பணிக்கு அமர்த்தினர். ஆனால் இதை சனாதன தர்மம் தான் ஏற்படுத்தியது, பிராமணர் ஏற்படுத்தினர் என்று புனைகின்றனர். ஏன் ஆண்ட பரம்பரை பெருமை பேசுபவரை யாரும் இதற்காக பழிப்பதில்லை? முக்காலமும் உணர்ந்த மகான் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார், பழனி ஈசுவர பட்டர் போன்றோர் இன்றைய சமூக கேடுகளுக்கு மன்னராட்சியில் அதிகாரத்தில் இருந்த வேந்தர் (emperor), மன்னர் (king), அரையர் (Duke), கிழார்கள் (knight) தான் முழுக் காரணம் என்கின்றனர். வேந்தனுக்கு கீழ்நிலை ஆட்சியாளர்கள் ஒரே வேந்தன் கீழ் இருந்தும் தமக்கென தனிப்படை பேணி அடுத்த நாட்டை பாவிட போரிட்டு இருநாட்டு மக்களுக்கும் உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படுத்தி தம் ஆடம்பர வாழ்விற்கும் படை பேணலுக்கும் மக்கள் மீது பல்வேறு வரிகளை சுமத்தினர் என்பதை கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன்மண்டப கிழக்கு சுவர் மற்றும் அரைத்தூணில் உள்ள 14 வரிக் கல்வெட்டு.
ஐயன் / ஐயர் – தந்தை; பள்ளிகொண்ட – பிணத்தோடு உயிருடன் புதைக்கப்பட்ட; கேதம் / கேது – இழவுத் துன்பம், துயரம்; சாமம் – இன்மை; வங்கிசம் – வமிசம்; இலங்கனம் – வில்லங்கம், செல்லாது; கால்கழுவின – குண்டிகழுவிய; கலச்சோறு – எச்சிற் கலச் சோறு;
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1188 இல் அரசன் (duke) பிருதிகங்க சோமநாதன் இந்த கல்வெட்டை வெட்டினான். இதில் தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனுடன் புதைகுழியில் உயிருடன் புதைக்கப்பட்ட பாடும் பெண்டிர் மூவர் குடும்பத்தாருக்கு இழவு வருத்தம் தீர்த்ததற்காகவும், பிள்ளைகள் இன்றி போனதற்காகவும் இழப்பீடாக பதினாறு சாண் கோலால் அளந்து விட்ட நிலம் ஒரு வேலியை இவர்கள் வம்சம் உள்ளவரையில் இவர்கள் உரிமையாக இருக்கும் என்றும் கொடையாக கொடுத்ததை தன் வம்சத்தார் வில்லங்கம் செய்தால் அவர்கள் “மதுராந்தக வேளான் குண்டி கழுவிய பீத் தண்ணீரை குடித்து எச்சில் கலத்தில் சோறு உண்டவராவார்” என வசை பாடுகிறான். மேலும் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்த பாவங்களை கொள்வார் என்று சபிக்கிறான். இந்த ஒரு வேலி தவிர மேலும் நிலம் கொடுத்தானா அல்லது இந்த ஒரு வேலியை வெவ்வேறு இடங்களில் குழி கணக்கில் கொடுத்தனா என்று தெரியவில்லை. கணக்கு முரண்படுவது தான் இதற்கு காரணம். 40 குழி ஒரு சென்டு என்றால் நூறு சென்டு ஒரு ஏக்கர் என்றால் 6.17 ஏக்கர் கொண்ட ஒரு வேலிக்கு எத்தனை குழி? ஆனால் மொத்தம் 5000க்கு குறைவான அளவுள்ள குழி கொடுத்துள்ளான் என்று தெரிகிறது. அவை பள்ளமுனோக்கியில் 406, குமுலியில் 148, புலையக்களில் 193, கிணற்றின் கீழ்ப்பட்டியில் 100, உட்கழனியில் தடி 3, சிங்கன் தடியில் 484, சேரியான் பட்டி 190, பொன்னராயன் தண்டில் 84, சஈத்தி 188, நடுவில்கழுவல் வடதலையில் 55 = 1851.
மதுராந்த வேளான் அரசன் சோமநாத பிருதிகங்கனுக்கு அணுக்க செயலன் போலத் தோன்றுகிறது. அதனால் தான் அவனைக் குறிப்பாகச் சுட்டி அவனுக்கு வந்த அறிவு தன் சொந்தங்களுக்கும் வரட்டும் என்ற எண்ணத்தில் நாக் கூசும்படியான வசவுச் சொல்லை பயன்படுத்துகிறான். இப்படியான ஆணவப் பேச்சு வசவுச் சொற்கள் 12 ஆம் நூற்றாண்டு முதல் தான் கல்வெட்டுகளில் இடம் பெறத் தொடங்கின. “குதிரைக்கு புல்லிடும் பறையனுக்கு என் மனைவியை மிணாட்டி ஆக்கியவன் ஆவேன்” என்று ஒரு வாணகோ உரைக்கிறான். இப்படியான இழிவழக்கைத் தமிழகத்தில் ஊன்றியவர் தமிழரல்லாத அரசரே ஆவார். இது அவர்கள் தம் கீழ்படிந்த பணியாளர்களை அவ்வப்போது எப்படி நடத்தி இருப்பர் என்பதை நினைக்க அறுவறுப்பாக உள்ளது. இந்த ஆணவப் பேச்சை புனிதமான கோவிலில் கல்வெட்டாய் பொறித்தானே அவன் இறையுணர்வை ஐயப்பட வேண்டியுள்ளது.
பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பக்கம் 50 – 51. எண்; 27
திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபக் கிழக்குச் சுவரில் உள்ள 4 வரிக் கல்வெட்டு.
விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1188 இல் அரசன் சோமநாத பிருதிகங்கன் தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனோடு சவக்குழியில் உயிருடன் புதைக்கப்பட்ட ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைத்தவம் சேதாள் ஆகிய மூன்று பாடும் பெண்களான தேவரடியார் குலப் பெண்களுக்கு குடும்பத்தில் பிள்ளை இன்றி போனதற்கு இழப்பீடாக விட்ட நிலம் பதினாறு கோலால் அளந்து தரப்பட்டது என்று கூறுகிறான். மேலுள்ள கல்வெட்டில் உயிருடன் இறந்தவர் பெயர் குறிப்பிடாததை இதில் குறிக்கிறான்.
பார்வை நூல்:த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள் பக்கம்: 52, எண்: 28.
திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபத் தென்புறச் சுவரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு.
பாடிசை – வருத்த இணக்கம்; விலக்கு – இல்லாது செய்
விளக்கம்: சோழன் மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 1188 இல் ஆடும் ஆழ்வார், சதுரநடைப்பெருமாள், நிறைதவஞ்சேதாள் ஆகிய மூன்று பாடும் தேவரடியார் குல பெண்களின் வீட்டில் பிள்ளை இல்லாமல் போனதற்காக திருவங்கீசுவரமுடைய நாயனார் கோவில் தேவரடியார் ஐவருக்கு இத்துயர உடன்பாட்டிற்காக பதினாறு சாண் கோலால் ஆயிரம் மேற்பட்ட குழி நிலத்தை பிருதிகங்க அரசன் சோமநாத தேவன் கொடுத்தான். இது இல்லாமல் செய்பவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்யும் பாவத்தை கொள்வான் என்று நிலம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்று முந்தைய கல்வெட்டுகளில் கூறாமல் விட்டதை இதில் குறிப்பிடுகிறான். ஆனால் இங்கு அந்த தேவரடியார் ஐவர் பெயரைக் குறிக்கவில்லை. 13 ஆம் நூற்றாண்டில் வேற்று மொழி அரசர்களுக்கு தேவரடியார் என்றால் இளக்காரம் தான் போலும். தமிழ் வேந்தர்கள் செய்ததற்கு மாறாக அல்லவா இது உள்ளது.
பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பக்கம்: 44 – 45, எண்: 24

மைசூர் மாவட்டம், திருமகூட்லு நரசிபுர வட்டம் தொட்ட ஹூண்டி கிராமத்தின் குளத்தில் இருந்த 24 வரி கல்வெட்டு.
ஸ்வஸ்தி நீதி மார்க்க கொங்குணி வர்ம்ம தர்ம்ம மஹா / ராஜாதி ராஜ கோவளாபுரவரரேஸ்வர நந்த / கிரிநாத ஸ்ரீமத் பெம்மானடிகள ஸ்வர்க்கமேற் / எறுதொட பெம்மானடிகள மனேமகர்த்தி அக /ரய்யன் நீதி மார்க்க பெம்மனடிகே கீள்குண்டேயாதம் பெம்ம / னடிகள ஸுபுத்ர ஸத்யவாக்ய பெமானடிகள் குண்ட கல்லின பக்கதல்லி / ரிதிய / கல்நாடு / கொட்டது க / ப்பஹள்ளி / பரிஹார / இதனரிம் /தோ வாராணா / சிய வரி / தம் / இதக்கெ கம்ம / ளி நகெயர / ல்ல கும்மண்ட / கதங்கே ஸிகே / துவஸ்தரு கு / ளவேடம / ண்டு இதனசிதோம பா / தகன்
விளக்கம்: மேலை கங்க வேந்தன் ஸ்ரீ புருஷனின் மகன் இரணவிக்ரமன் ஆன முதலாம் எரிகங்க நீதிமார்கன் 869 இல் சமணத்தின் சல்லேகனம் என்னும் உடல்மெலிதல் நெறியில் உயிர் துறந்துள்ளான். அவனை கோவளால நகரத்து இருந்து ஆளும் நந்தகிரியின் தலைவன், நீதிமார்க்க கொங்குணிவர்மன், அறங்காக்கும் பேரரசன் என விவரித்து பெருமானடிகள் சொர்க்கம் எய்தினார் என்கிறது கல்வெட்டு. அவரோடு பெருமானடிகளின் உள்மனைப் பணியாள் (அகம்படி) அகரய்யன் கீழ்க்கொண்டியாகி (பள்ளி கொண்டான் ஆகி) உயிருடன் புதைக்கப்பட்டு இறந்தான். பெருமானடிகளின் மூத்த நன்மகன் சத்யவாக்ய பெருமானடிகளின் நடுகல்லின் பக்கத்தில் அமைந்த கப்பஹள்ளி என்னும் ஊரில் இறையிலி நிலம் (கல்நாடு) கொடுத்தான். இதனை அழித்தோர் வாரணாசியை அழித்தவராவார். இதனை அழித்தோன் பாதகன் ஆவான்.
பார்வை நூல்: Epigraphia Carnatica Vol 3, Part I, Inscriptions in Mysore Dist., page 287 number TN 91.
பெல்லாரி மாவட்டம் இராயதுர்க வட்டம் கலுகோடு கிராமத்திற்கு தெற்கே உ ள்ள பலகையில் வெட்டிய 25 வரி கன்னட கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸகரிப ஸகாலாதித்த ஸம் / ம்பத்ஸர ஸதங்களேண்டு நூற தொம்ப / த்தொம்பத்தநய வருஷம் ப்ரவர்த்திஸ / ஸ்வஸ்தி ஸமதிகத பஞ்ச மஹா ஸ / ப்த பல்லவாந்வய ஸ்ரீ ப்ருதுவீவ / ல்லப பல்லவகொலதீலக/ ஸ்ரீமந் மய்தம்மரஸப் ப்ரதுவீ ராஜ்யங்கெய்து ப / ரகொரொ ளிர எறேகங்கய்ய ஸக்க ம்மேறிதொடே களுநேநர / ஸர மகம் மய்தம்ம கீள்கொண்டேயாகி ஸத்தொன்டே காம / ராராதித்ய நந்திகாஸ்ரயநப்ப அய்யப்ப தேவந கொட்டு / து கல்னாடுரகு வெந்து நெலதநேஸருள்ளின ஸாஸன / – – – விதுரரி – – – – வா சந்த்ரார்கமிதம் ஸலிப்ரது. இதன / ரிரதோன் வாரணாசியும் ஸாஸிர கவிலேயும் ஸாஸி / ர்வ்யர்ப்பார்வ்யரும் ஸாஸிவ்யர்ப்பஸிர்ப் பெண்டிரும் / ஸாயிர கெறேயு மனரேதோன லோகக்கே ஸல்கு / அய்யப்ப தேவநக்கர விக்ரமாதித்யநக்கர இயுக ப – – – / ர அய்யப்ப / சோள ( கொ) / ட்டுது. இத / வ் பெஸகெய்தோ / க்ரித யுகசோ / ள / யிதாசாரி
ப்ரவர்த்தி – நடக்கையில்; ஸமதிகத – நெருங்கிய; ஸக்க – சொர்க்கம்; காமர் ஆராதித்ய – நட்பும் சுற்றமும் போற்றும்; நெலத நேஸரு – நிலவும் சூரியனும்; சந்திரார்கமிதம் – நிலவும் ஞாயிறும் உள்ளளவும்; ஸாஸிர – பரிவுக்குரிய, கருணைக்குரிய, leniency; அக்கர – அக்ஷர, எழுத்து
விளக்கம்: இக்கல்வெட்டு சக ஆண்டின் காலவரிசை ஆண்டுகளின் நூற்றாண்டு எ(ண்)ட்டு நூற்று தொன்னூற்று ஒன்பதாம் (கி.பி.977) ஆண்டு நடக்கையில். ஐம்பெரும் ஒலியை நெருங்கிய பல்லவர் வழி வந்த திரு பிருதிவி வல்லப பல்லவகுல திலக நோலம்ப பல்லவன் மய்த்தம்மரசன் பருகூரில் இருந்து மண்ணாண்டு கொண்டிருந்த போது எறெகங்கய்ய சொர்க்கம் எய்திய போது களுநெநரசரின் கீழ்நிலைப் படை வீரன் மய்தம்ம என்பவன் கீழ்க் கொண்டியாகி (பள்ளி கொண்டியாகி) இறந்ததால் உற்றார் போற்றும் நந்திகாசிரயனப்ப ஐயப்ப தேவன் அவனுக்கு உரித்தாகுகவென்று கொடுத்த இறையிலி நிலம் நிலவும் ஞாயிறும் உள்ளளவும் நிற்கும் ஆவணம் _ _ _ நிலவும் ஞாயிறும் உள்ளவரை செல்வதாக. இதனை அழித்தோன் வாரணாசியையும், பரிவுக்குரிய (கவிலை) குறால் பசுவையும், பரிவுக்குரிய உடல் மெலிந்தோரையும், பரிவுக்குரிய மெலிந்து வறுமையுற்ற பெண்டிரையும் கொல்வோர் செல்லும் அனல் (நரக) உலகிற்கு செல்க. ஐயப்ப தேவன் எழுத்து, விக்கிரமாதித்தியன் எழுத்து. இக்கல்வெட்டை கொட்டுவித்தவன் ஐயப்ப தேவன். இதை கல்வெட்டாய் வெட்டியவன் கிரிதயுகசோழ _ _ யிதாசாரி என்பவன்.
நுளம்பன் மய்தம்மரசன் மன்னன் என்றால் எறிகங்கன் அவனுக்கு கட்டுப்பட்ட கங்கர் கிளை மரபு அரையன் என்று தோன்றுகிறது. நந்திகாசிரிய ஐயப்ப தேவன் எறிகங்கன் மகன் ஆதல் வேண்டும். களுநேநரசன் அவன் படைத் தளபதி ஆவான். தென்னிந்திய கல்வெட்டு குறிப்பது போல எறிகங்கன் போரில் இறக்கவில்லை. சொர்க்கம் ஏகினான் என்பதை வைத்து அவனும் சமண சல்லேகனம் இருந்து இறந்தானா? வீரன் மய்தம்மன் அவனுடன் உயிருடன் புதைக்கப்பட்டு இறந்தானா? தெரியவில்லை. இதே போல நுளம்ப மன்னன் இரிவ நுளம்பன் இறந்த போதும் இதே போன்ற கிழ்கொண்டி முறையில் ஒருவன் புதைக்கப்பட்ட செய்தி உண்டு.
பார்வை நூல்: South Indian Inscription Vol IX, No 40, ARN 442 of 1923, பக்கம் 23

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(479)
மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல னன்மக்கட் பேறு.
–திருக்குறள் -60 (வாழ்க்கைத் துணைநலம்)
புதுக் கவிதையில்…
நற்குண
நற்செயல்களையுடைய மனைவி
ஒருவனுக்கு அமைவது
இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்பர்
எல்லாமறிந்த பெரியோர்,
அந்த அழகுக்கு
அழகு சேர்க்கும்
அணிகலனாய் விளங்குவது
நல்ல பிள்ளைகளைப்
பெறுவதே…!
குறும்பாவில்…
நற்குணவதி மனைவியாய் அமைவது
இல்லறத்தில் மங்கலமென்பர் பெரியோர், அதற்கணிகலன்
ஆவது நன்மக்களைப் பெறுவதே…!
மரபுக் கவிதையில்…
மங்கை யொருத்தி குணவதியாய்
மனைவி யானால் ஒருவனுக்கு,
மங்கலம் தங்கும் இல்லிலென
மதிப்பு மிக்கோர் உரைத்தனரே,
பொங்கும் அழகுக் கணிகலனாய்ப்
பொருந்தி அழகு சேர்த்திடுமே
தங்கும் செல்வம் பிள்ளைகளாய்த்
தாங்கி யவளே பெற்றிடலே…!
லிமரைக்கூ…
நற்குண மனைவியால் தங்குமே
மங்கலம் இல்வாழ்வில், நன்மக்களைப் பெறுதல்
அழகுக்கழகு சேர்க்கும் எங்குமே…!
கிராமிய பாணியில்…
வேணும்வேணும் தொணவேணும்
வாழ்க்கயில ஒருத்தனுக்கு
நல்ல தொணவேணும்,
நல்ல பொஞ்சாதி தொணவேணும்..
நல்ல கொணமுள்ள பொஞ்சாதி
ஒருத்தனுக்குக் கெடச்சிண்ணா
அதுதான் குடும்ப வாழ்க்கயில
ரெம்ப அழகுண்ணு
பெரியவுங்க சொல்லியிருக்காங்க,
அதோட
அந்த அழகுக்குக்
கூடுதலா அழகுசேக்கிற ஒசந்த
நககளப்போலத்தான் ஆவும்
நாம பெத்துக்கிற
நல்ல கொழந்தையளுமே..
அதால
வேணும்வேணும் தொணவேணும்
வாழ்க்கயில ஒருத்தனுக்கு
நல்ல தொணவேணும்,
நல்ல பொஞ்சாதி தொணவேணும்…!

Baskar Seshadri
Kavikko Convention Centre or Hall is one of the famous meeting halls in the Periphery of Mylapore. Though the hall has been functioning for quite long years, recently the total hall and the building had been renovated which now looks beautiful with the best of aesthetics.
The hall is fully air conditioned and it can accommodate Two Hundred Persons. This place is ideal for all Kinds of meetings, Book Release function, literary meet and small Music Programmes too.
The managers do provide Podium Mike free of cost and hand mike if needed be. If one is interested to use the projector for any Presentation it will be provided free of cost. Since it’s situated in CIT Colony close to TTK Road side parking may not cause any hindrance to the visitors of the hall and to those who live nearby. Besides the hall managers can provide some assistance to facilitate parking of cars and two wheelers.
The hall is available for three segments of Programmes. One is from Nine am to two in the noon and the other is between three to nine in the night. One can avail the Booking for the whole day also. The Fees are moderate and this is one of the Best Bet to those who are looking for a Perfect Auditorium in this Region.
In case of assistance Mr. Abu reached for more Details on 9444025000. The Address of the Centre is 6, Second Main CIT Colony, Alwarpet, Chennai 600018.

பாஸ்கர்
இந்த மாதம் முதல் வாரத்தில் நல்ல மழை நாளில் இரவு இயற்கை அழைப்புக்கு தூக்கத்தில் இருந்து விழிப்படைந்தேன். மின்சாரம் இல்லை. மிக கொஞ்சமான குளிர். எனது படுக்கை அறையில் இருந்து கழிவறைக்கு செல்லும் வழி புரிபடவில்லை. தட்டு தடவி நடந்து வந்தால் அது சமையல் அறை. இயற்கையின் அவசரம் ஒரு புறம். எந்த பக்கம் நடக்க வேண்டும் என சில நிமிடங்கள் புரிபடவில்லை. ஏதேனும் பொருள் தட்டுப்படும் என நடந்தால் எனது இருட்டு பாதையில் எந்த பொருளும் கைக்கு அகப்படவில்லை. வெறும் சுவர் மட்டுமே தட்டுபட்டது. நடுவில் எங்கோ இடித்து கொண்டேன். இடிபட்ட இடத்தை உள்வாங்கி அதன் மூலம் கழிவறைக்கு செல்லலாம் என்ற யோசனை உதிக்கவில்லை.
சிறு வெளிச்சம் இருந்து இருப்பின் சமாளித்து இருக்கலாம். இருட்டுக்கே கண் தெரியாத ஒரு பெரும் இருட்டு அது. மனக்கண்ணால் புரிந்து கொள்ளலாம் என்பதெல்லாம் ஒரு மாயை. அதற்கு ஒரு பயிற்சி வேண்டும். பொறுமை வேண்டும். இப்போது கண் இருந்தும் பார்வை அற்றவன் போலானேன். ஏற்கனவே எனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை . இப்போது இரண்டு கண்களும் பார்வை இழந்து போய் நின்றது போல அமைந்த நேரம் அது. பார்வை அற்றவர்களின் நிலை அப்போது ஆழ்ந்து புரிந்தது. அவர்களின் மிக துயரமான வாழ்க்கை என்ன என பிறகு புரிந்தது. வாழ்க்கையில் புரிதல் என்ற விஷயம் அறிவுப்பூர்வமாக இருப்பதின் அபத்தம் சின்ன வட்டம் தான் என புரிவது எவ்வளவு உண்மை. ஒரு விஷயம் ஆழ்ந்து புரிபடுவதற்கும், தகவலை பதிவாக இருப்பதற்கும் உள்ள ஒரு சிறு இடைவெளியில் வாழ்க்கை ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த இருட்டை நமக்கு வசதியாக தோதாக வைத்து கொண்டு இருக்கிறோம். நம் சொறிதலில் உள்ள சுகம் தான் நம்மை நகர விடாமல் செய்கிறது . எனக்கு அந்த அனுபவம் இருளில் கிடைத்த ஒளி.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
மன்னவன் பாண்டியன் மாபெரும் மண்டபம்
விண்ணவர் வியக்கவே மண்ணகம் மிளிர்ந்தது
பாண்டியன் அவையினைப் பார்ப்பவர் வியந்தனர்
பசுந்தமிழ் புலவர்கள் பாங்குடன் நின்றனர்
ஆக்கிய பாடலை அவையேந்தி வந்தனர்
அதற்குரை பகர்ந்தனர் அனைவரும் மகிழ்ந்தனர்
பண்ணொடு பாடினார் பலவுரை பகர்ந்தனர்
மன்னவன் வதனமோ மலர்ந்துமே நின்றது
எண்ணிலா பொருள்களை மன்னவன் ஈந்தனன்
பாடிய புலவர்கள் பரவசம் எய்தினார்
கற்றவர் பலரையும் பாண்டியன் அணைத்தான்
கடவுளை நம்பினான் கண்ணியங் காத்தான்
மற்றவர் துயருறா வழியிலே நடந்தான்
வாழ்விலே அறத்தை மாண்புடன் காத்தான்
நல்லமைச்சர் நாளும் நற்றுணையே என்று
வல்லவரை நாடி நல்லசபை அமைத்தான்
முதலமைச்சர் நாட்டின் முதுகெலும்பாய் அமைய
வாதவூர் வந்தாரை மனங்கொண்டான் மன்னன்
வாதவூர் பிறந்தாரை மன்னவன் மதித்து
தென்னவன் பிரம்மராயன் பட்டத்தைக் கொடுத்தான்
பற்றற்ற மனத்துடனே பதவியிலே அமர்ந்தார்
பாண்டிய நாட்டின் கண்ணியம் காத்தார்
பாண்டிய மன்னன் குதிரைப் படையினை
பெருக்கிட மனத்திலே விருப்பங் கொண்டான்
திருப் பெருந்துறையிலே சிறந்த குதிரைகள்
இருப்பதாய் அறிந்தான் வாங்கிட விரும்பினான்
அமைச்சர்க்கு அமைச்சரை அழைத்தான் அரசன்
அள்ளிக் கொடுத்தான் பொன்னும் பொருளும்
குதிரை வாங்கிடப் பணித்தான் பாண்டியன்
மதுரையை விட்டு மந்திரி அகன்றார்
திருப் பெருந்துறையில் தெரிசனம் கண்டார்
பொன்னை மறந்தார் தன்னை மறந்தார்
குருவடி வீழ்ந்தார் குதிரையை மறந்தார்
பவவினை அகலப் பற்றினார் குருவடி
பொன்னைப் பொருளைத் தானம் செய்தார்
புனிதமாம் கோவில் பணிகளைச் செய்தார்
அல்லும் பகலும் குருவை நினைந்தார்
அனைத்தும் துறந்தார் அமர்ந்தார் குருநிழல்
குதிரை வாரா கவலை கொண்டான்
சேதியை அறிந்து சினமதில் ஏறினான்
அழைத்தான் அமைச்சரை வினவினான் பாண்டியன்
அமைச்சர் பகர்ந்தார் வந்திடுங்குதிரை ஆவணிமூலம்
பார்த்தான் பார்த்தான் பாண்டியன் பார்த்தான்
ஏய்த்தார் அமைச்சர் என்றுமே எண்ணினான்
குதிரைகள் எதனையும் காணா வரசன்
கொண்டான் கோபம் கொடுஞ்சிறை அடைத்தான்
அடியார் உள்ளம் அறிந்தவன் ஆண்டவன்
குதிரைப் பாகனாய் கொணர்ந்தார் குதிரையை
அரசன் மகிழ்ந்தான் அமைச்சரை மீட்டான்
அன்றிர வதிர்ச்சி அங்கே நடந்தது
பரிகள் அனைத்தும் நரியாய் மாறின
கடித்தன குதறின கலக்கமே எழுந்தது
மன்னன் கோவம் எல்லையைக் கடந்தது
வாதவூர் பிறந்தார் வதையினில் சுருண்டார்
அடியார் துயரைக் கண்டான் ஆண்டவன்
ஆறாம் வைகையைப் பெருகிடச் செய்தான்
பாண்டியன் பதறினான் வெள்ளம் பரந்தது
பாண்டிய மக்களை படர்ந்தது துயருமே
வெள்ளம் பரவா தடுத்திட அனைவரும்
அவரவர் பகுதியை அடைத்திடப் பணித்தான்
செம்மனச் செல்வி திகைத்தாள் அடைத்திட
இரங்கிய எம்பிரான் உதவிட வந்தனர்
பிட்டை விற்றுப் பிழைக்கும் கிழவி
பிட்டைக் கூலியாய் தருவேன் என்றாள்
பிட்டைச் சுவைத்தார் வேலையை மறந்தார்
கிழவியின் வேலை கிடப்பிலே கிடந்தது
அதிகாரி வந்தார் கிழவியை மிரட்டினார்
உறங்கிடும் வேலை யாளினைக் காட்டினாள்
எடுத்தார் பிரம்பை அடித்தார் முதுகினில்
விண்ணும் அதிர்ந்தது மண்ணும் அதிர்ந்தது
அண்ட சராசரம் அனைத்திலும் விழுந்தது
அரசன் பயந்தான் அனைவரும் வெருண்டனர்
வாதவூர் பிறந்தாரை நாடினான் மன்னவன்
மன்னிக்க மன்னிக்க என்றுமே வேண்டினான்
வாதவூர் பிறந்தார் மதுரைவிட் டேகினார்
மணி மணியாகப் பாடினார் இறையினை
திருவினைப் பற்றியே மலர்ந்திட்ட யாவுமே
தேனாய் தித்திக்கும் திருவாசக மானது
மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்
வாழ்வெலாம் சிவனை வாழ்த்திய மாமணி
தேசுடைத் தமிழினைச் சிந்தையில் ஏற்றி
வாசகம் கோவையை வழங்கிய வள்ளல்



Baskar Seshadri
It was Heartening to come across the News that Forty Five Mosques in Tuticorin and Tirunelveli came to the rescue of the people who were affected by the rain and flood in Tuticorin.
They sheltered most of them and provided food all the four days and arranged place for them to sleep comfortably.
Children were provided milk, Biscuits, Bread. All were taken better in all aspects.
Since many mosques had the facility of Power Genset they were able to manage better for their safety.
Literally most of the Mosques in this region had become a Relief camp all these harrowing days. In fact All the Mosques had stopped the Regular Prayers all the four days to ensure communal Harmony.
Kudos to those who were behind this Good Samaritan Act.

Baskar Seshadri
Paramasivam was a devoted Congress Man in those days well before the Independence era and when he started a small book shop, he remembered to Name it as Nehru News mart. He started a small book shop in forties and little did he thought he will be successful.
But his innovative idea of an exclusive newspaper shop was an immediate hit in those days and any journal/ Newspaper of south will be available in his shop.
It was a privilege to mylaporeans to get their hot edition from This mart. A Mumbai edition of the day’s paper will be there in the evening. With no idiot box and colorful channels, the one and only entertainment and pass time habit was Reading and Reading alone.
You name a weekly or a daily of any Language. it used to be there on time every time.
With the ageing problem Paramasivam passed away in early 1990 and from there on It was his son Kamaraj who had been handling the same activity with the best tempo. He was an agent of many newspapers and Suddenly Kamaraj also passed away eight years ago.
It’s his family which is now looking after the Business. This Mart had come across from the days of swadesamitran, Manjari and Kalaimagal to the recently Launched booklets on various topics. And this shop is also famous for the Race book as it is called.
The Brand Original Vel is the most wanted book of those days before the races were banned in Chennai. Now the mart had survived almost seventy years Plus with the heads changing. But the landmark of Nehru News Mart and Luz always goes together.
Oldies may well remember this point and a visit to the shop was a must for them. There are still a group or two who goes into fascination of the Nostalgic memories even today. I too can be counted on this.

Baskar Seshadri
She is an Engineer working in Tangedco. Mother of two Children.
When it rained heavily in Tuticorin she smelt something wrong and decided that she has a role to play. She left her kids in a Relative’s House and went in the heavy rains to the substation to carry on the work since her presence was essential to give commands in person as the network was down in and around her area.
She has to decide where the power is to be cut and where it has to be restored. She was assisted by few co -workers and linemen and went round the area to ensure that none suffer. She travelled in vehicle and by walk to some places where she has no access of using the vehicle.
She stayed in the office Sub Station all the two days. Meanwhile due to the Increased rain the substation was surrounded by water. She was somehow able to reach her Higher Officials and after sometime they all assisted her and restored power in many places.
After two days stay, she returned to her home to see her children. The whole of people around her neighbourhood was full of Praise.
Kudos to her for the dedication in her service. We are Proud of you Sudha. Let your Tribe Grow.