Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    160225 Lakshmi Hayagreeva 24×32 watercolour lr

    கீழ் கொவள செட்டிப் புண்ணியத்தில் கோயில் கொள்ளப் போகும் ‘’அயக்ரீவர்’’ வந்தார் எதிர் வீட்டுக்கு….அவரை ஏளப் பண்ணும்
    பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியது….!

    கீழ்கொவள வீடில் குடியேறப் போகின்ற
    ஆழ்கல்விக்(கு) ஈசா அயக்ரீவா -கூழ்கவலை
    போக்கதனைப் போக்க பிராட்டியுடன் ஏளினோய்
    காப்பெனக்கு உந்தன் குளம்பு….!

    ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
    மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
    வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
    பெண்பால் பாரதியே பார்….!

    நிகமாந்த தேசிகன் நாவில் அமர்ந்து
    புகழ்வாய்ந்த பாதுகையைப் பாடி -அகமகிழ்ந்த,
    எண்ணியதை நல்கும் ஏற்றம் தரும்செட்டிப்
    புண்ணியத்தில் வாழும் பரி….!

    புண்ணியச் செட்டியில் புண்ணாக்(கு) அளித்தனரோ
    நண்ணிய(து) ஏனங்கு நாலுகாலில் -கண்ணனே
    பாரதப் போரில் பழகிய நன்றியோ
    நீரதைப் போலின் நிலத்து….!

    கொள்ளுக்(கு) அடங்காய் கவிதே சிகன்கூறும்
    சொல்லுக்குள் பாயுமுயர் ஜாதியே -கல்விக்கு
    வாய்த்த கடவுளே வாணி அரிதாரா
    போய்த்தவம் செய்யப் பழக்கு….!

    கட்டுக்(கு) அடங்காது செட்டிக்குப் புண்ணியத்தை
    கொட்டுமருள் கல்விக் குதிரையே -குட்ட
    குளம்பால் தலையில் குருவே வருக
    தளும்பா அறிவைத் தர….!

    புல்லும், படிகநீரும், புண்ணாக்கும் கொள்ளும்நான்
    அல்லும் பகலும் அளித்திடுவேன் -மெல்லும்
    தலம்செட்டிப் புண்ணியத்தில் தங்கும் பரியே
    பலனெட்டெட் ஆயகலை போடு….!

    சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
    நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
    வருவாய் அருகே குருவாகிக் காட்டு
    பரிமேல் அழகா பரிவு….!கிரேசி மோகன்….!

     

    Share
  • நடுவண் அரசின் சிறப்பான நடவடிக்கை!

    பவள சங்கரி

    மத்திய அரசு மக்கள் நலனுக்காக எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டுகள்! இதுவரை தங்கம், வெள்ளி போன்ற பொருட்களுக்கு மட்டும் இருந்த தரக்கட்டுப்பாடு சென்ற வெள்ளிக்கிழமை முதல் சேவைத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாடு தங்கத்திலிருந்து, குடிக்கும் நீர் வரை, தொலைத்தொடர்புத் துறையிலிருந்து, விமானச்சேவை, இணையம் மூலமான வர்த்தகம், மருத்துவ சேவை போன்ற 12 வகையான சேவைகளும் தரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சுற்றுலா, தங்கும் விடுதி, உணவு விடுதி, போக்குவரத்து, நிதி நிறுவனச் சேவை மற்றும் வழக்கறிஞர் சேவை போன்ற அனைத்தும் இதற்குள் அடங்கும்!

    Share
  • இந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்

    p

    osted on August 25, 2018
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     

    ++++++++++++

    சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி சேமிக்க,
    நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள
    ஓரரும் பெரும் மின்கலம்
    தாரணியில் உருவாகி விட்டது
    வாணிபப் படைப்புச் சாதனமாய் !
    தட்டாம்பூச்சி போல் பறக்க
    வானூர்திக்குப் பயன்படப் போகுது !
    பரிதி சக்தியால் பறக்கும் !
    எரி வாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் உதித்தது !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி ஊட்டும்  !
    ஒற்றை விமானி ஓட்டுவார் !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்களில்  உலகைச் சுற்றியது.
    ஒளிக்கதிர் தட்டுகள்  அனுதினம்
    பராமரிக்கப் படுமா ?  
    நூறாண்டு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

    magazine
    ++++++++++++++++++++++++++++
    இந்தியச்  சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்
     
     
     சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும்  உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்”  [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது.  தற்போதைய  பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும்,  அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு  [Climate, Improper Installation, Lack of Maintenance]  ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல !
    இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து  [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத்  ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை  வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது.  ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.  அதற்கு  புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம்  [Ministry of New & Renewable Energy (MNRE)]  &   [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டது.
    ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை
     
    +++++++++++++++++++
    உலக நிறுவன அரங்குகளில்  சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில்  [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று    [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds]  யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin]  கூறுகிறார்.  குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது.  இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில்  சிரமாக உள்ளது.
    சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.
    கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு
     
     
    +++++++++++++
    +++++++++++++++++

     சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.
     
    2013 -2014 ஆண்டுகட்கி இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி   [Solar Energy Industries Association ]  அறிவித்துள்ளது.  அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது.  மீள் பயன்பாடு கனல் எருவுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும்  தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது.  இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
     
    அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு  [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)]  தயாராகி வருகின்றன.  2010 ஆண்டிலிருந்து சூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது.  பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு   [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும்.  2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை.  அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters] விலைகளும் சேர்க்கப் படவேண்டும்.
    உதாரணமாக 2013 ஆண்டில்  ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh  மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையகக்  [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார்.  அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது.  அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது.  அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது.  அதனால் 25 ஆண்டுகட்டு  சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.

    World’s Largest Lithium Ion Battery Banks

    By Tesla

    ++++++++++++++++++++

     

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலி யாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலி யாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    A close-up of Musk's face while giving a talk
    Elon Musk 
    Space X Falcon Heavy Rocket Pioneer
    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    Pretoria, Transvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel Air, Los Angeles, California, U.S.[1][2]
    CITIZENSHIP
    • South Africa (1971–present)
    • Canada (1989–present)
    • United States (2002–present)
    ALMA MATER
    OCCUPATION Entrepreneur, engineer, inventor, and investor
    KNOWN FOR SpaceX, PayPal, Tesla Inc., Hyperloop, SolarCity, OpenAI, The Boring Company, Neuralink, Zip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE
    SPOUSE(S)
    CHILDREN 6
    PARENT(S)
    RELATIVES
    SIGNATURE

    Image result for Lithium Ion Research

    Image result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை.  2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    Image result for Solar Power Fuel Cell

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது.  2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for Lithium Ion Technology

    Elon Musk’s Tesla Roadster
    Tesla Roadster in Falcon Heavy fairing.jpg

    The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation
    OPERATOR SpaceX
    MANUFACTURER Tesla
    INSTRUMENT TYPE Inert mass
    FUNCTION Dummy payload
    WEBSITE spacex.com
    PROPERTIES
    MASS Approximately 1,300 kg (2,900 lb)
    HOST SPACECRAFT
    LAUNCH DATE January 2018
    ROCKET Falcon Heavy
    LAUNCH SITE Kennedy LC-39A
    ORBIT Heliocentric

    Image result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw battery

    Image result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது.  மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel Cell

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    ++++++++++++++++++

    Image result for Lithium Ion Research

    1.  http://www.solardaily.com/reports/PI_Berlin_examines_risks_facing_PV_projects_in_India_999.html  [August 2, 2018]
    2. https://natgrp.wordpress.com/tag/renewable-energy-certificates/  [October 19, 2016]
    3. https://solarpowermanagement.net/home
    4. http://www.solardaily.com/reports/Denver_takes_big_step_on_renewables_999.html [July 18, 2018
    5. http://www.solardaily.com/reports/KYOCERA_TCL_Solar_Completes_28MW_Solar_Power_Plant_in_Miyagi_Prefecture_Japan_999.html [August 2, 2018]
    6. https://www.marketscreener.com/KYOCERA-CORP-6492472/news/Kyocera-finishes-28-MW-solar-power-plant-in-Taiwa-Japan-26991864/  [July 25, 2018]

    Posted in சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம் | 1 Reply

    Share
  • திருவோணத் திருமால்….!

     

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

    சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
    வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
    வாத புரீசன் வடமதுரா மன்னவன்
    கீதகோ விந்தந்தாள் காப்பு….!

    களித்தெமுனா தீரத்தில் கோபியர் சூழ
    குளித்தவர் காமத்தைக் கொன்று -அளித்தனன்
    ஞானத்தை; அந்தநந்த நீலத்தை நாம்வணங்கி
    ஓணத்தில் கொள்வோம் உவப்பு….!

    வானத்தை மண்ணை வரமாய் பலிதந்த
    தானத்தை அன்றளந்த தெய்வத்தை -ஓணத்து
    வாமனக் குட்டனை வாத புரீசனை
    நீமனக் கட்டில் நிறுத்து….!கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180825 – MAya darshan to Markandeya. wcol -A4 100dpi lr

    வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
    நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
    அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை
    ஊழியி லுண்டு களைத்தவா -வாழிநீ
    உன்னை நினைந்து ருகியுறங்கு மென்னைநீ
    உன்கனவில் காண உறங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • அறிவா் யார்

    முனைவா் க. இந்துமதி

    உதவிப்பேராசிரியா் (தமிழ்த்துறை)

    கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

    கிருஷ்ணன்கோவில்

    முன்னுரை

                மனிதன் தான் வாழும் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஒருவரிடமிருந்தோ, ஏதேனும் ஒன்றிடமிருந்தோ கற்றுக் கொண்டே இருப்பவனாகிறான். இக்கற்றுக் கொள்ளும் பண்பு மனிதனின் குழந்தைப் பருவத்திலேயே துவங்குகிறது. கேட்டல், பார்த்தல், உணர்தல் என்பன கற்றலின் முக்கிய நிலைகளாகும். இக்கற்றலின் வழியே மனிதனின் சிந்தனையானது வளர ஆரம்பிக்கிறது. மனிதனின் பரிணாம வளா்ச்சியைப் போலவே அறிவும், சிந்தனையும் மாற்றம் பெற்று மனித குலம் வளா்வதற்கு உறுதுணையாகத் திகழ்கின்றன. இவ்வறிவும் அறிவு சார்ந்த பதிவுகளும் தொல்காப்பியத்தில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் இலக்கிய, இலக்கணங்களில் அறிவா் எனக் குறிப்பிடப்படுபவா் யார்? என்ற வினாவிற்கு விடை தேடும் முகமாகவும் இவ் ஆய்வுக் கட்டுரை அமைகிறது.

    தொல்காப்பியத்தில் அறிவு

                தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் காலத்தால் முற்பட்டதால் மட்டும் பெருமையுடையதல்ல. 21-ஆம் நூற்றாண்டு ஆகியும் இன்றும் இதில் உள்ள களங்கள் பல்வேறு ஆய்வுப்பரப்பை உண்டாக்கிவருவதாலும் பெருமை உடையதாகிறது. எழுத்தும் சொல்லும் மட்டுமன்றி பொருளுக்கும் வரையறை தந்த தனிச்சிறப்பை உடையது தொல்காப்பியம். இப்பொருளதிகாரப் பகுதி, இலக்கிய வகைமையை, வடிவம் மற்றும் உத்தி முறைகளை விரிவாக்க கூறுகிறது. இவற்றில் இலக்கியப் படைப்பாக்க மாந்தா்களில் அறிவா் என்றொரு மாந்தா் குறிப்பிடப்பட்டுள்ளார். இவா் யார் என்ற கேள்விக்கான விடையைத் தேடுவதற்கு முன் தொல்காப்பியம் அறிவு என்ற சொல்லின் விளக்கமாகக் கூறுவனவற்றைக் காண்போம்.

    தொல்காப்பியத்தில் அறிவு

                தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அறிவு, அறிதல், அறிவன் என்ற பொருளிலான சொல்லாட்சிகள் அமைந்துள்ளன. அதில் சிலவற்றைக் காண்போம்.

                                        ”நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

                                        கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்”           (தொல்காப்பியம், 1042)

    ”அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

                                        ஐவகை மரபின் அரசா் பக்கமும்

                                        இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

                                        மறுவில் செய்தி மூவகைக் காலமும்

                                        நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்”         (தொல்காப்பியம், 1021)

    ”நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்

                                        …………………………………………….

                                        ……………………. அவள் அறிவுறுத்துப்

                                        பின் வா என்றலும் ……………………”      (தொல்காப்பியம், 1060)

    ”கிழவோன் அறியா அறிவினள் இவள் என”  (தொல்காப்பியம், 1063)

    ”தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும் ”   (தொல்காப்பியம், 1084)

    ”தொல்லவை உரைத்தலும் நுகா்ச்சி ஏத்தலும்

                                        பல்லாற்றானும் ஊடலின் தணித்தலும்

                                        உறுதி காட்டலும் அறிவு மெய் நிறுத்தலும்”   (தொல்காப்பியம், 1114)

    ”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

                                        அறிவும் அருமையும் பெண்பாலான”      (தொல்காப்பியம், 1155)

    ”வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்

                                        முனைவன் கண்டது முதல் நூலாகும் ” (தொல்காப்பியம், 1594)

    இவ்வாறாக தெரிந்து கொள்ளுதல், உண்மை அறிதல், தெரிவித்தல், காதலிலும் அறிவால் உடன்படுதல், காலம் அறிந்த அறிவன், அறிவித்தல், அறிவினை மெய்ம்மை நிறுத்தல் என்ற உணர் பொருளில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அறிவு என்ற சொல் அமையப் பெற்றுள்ளது. மேலும் முனைவன், பெரியவா், சான்றோர், தொல்லோர் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவை 1594, 1022, 1092, 1059, 1096 என்ற நூற்பாக்களில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் சுட்டும் அறிவுசார் பொருளுடைய சொற்கள், அறிதல் பொருளிலும் வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் சிறந்து விளங்குபவரைக் குறிக்கும் நிலையிலும் அமைந்துள்ளன.

    தொல்காப்பியம் சுட்டும் அறிவர்

                பன்னிரு வாயில்களில் ஒருவராக அறிவரைச் சுட்டுகிறது தொல்காப்பியம். (தொல்காப்பியம், 1139). இளம்பூரணர், ‘அறிவர் எனப்படுவோர் மூன்று காலமும் தோன்ற நன்குணா்ந்தோரும், புலன் நன்குணா்ந்த புலமையோரும் ஆகலானும் காலத்தையும் ஐம்புலன் உணர்வையும் கண்டுணர்ந்தோர் அறிவா்’ என்று உரை விளக்கம் தருகிறார்.

    கூற்று நிலையில் அறிவா்

                அக வாழ்வில் செவிலிக்குரிய கூற்று முறைகள், அறிவா்க்கும் உரியது எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது. தலைவன்-தலைவி கற்பு வாழ்வில் இருவரின் மகிழ்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவா் என்பதும், அறிவா் என்போர் தலைவியிடத்து தலைவனின் புறத்தொழுக்கத்தினைக் கூறுதல் இல்லை (தொல்காப்பியம்,1111) என்பதும் கூறப்பட்டுள்ளன.

                                        “எல்லா வாயிலும் இருவா் தேஎத்தும்

                                        புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப”     (தொல்காப்பியம், 1124)

    என்று வாயில்களின் பொதுவான பண்புகளைக் கூறும் போது அறிவரின் கூற்றும் உணா்த்தப்படுகிறது. கற்பினில் கூற்றுக்குரியவா்களில் அறிவரை, ‘நற்பொருள் உணரும் அறிவா்’ என்று பேராசிரியா் உரை கூறுகிறார். ‘தலைமகள் கூற்றைக் கேட்போருள் அறிவரும் ஒருவா். அறிவா் கூற்றை தலைவி, தோழி, செவிலி, நற்றாய் கேட்பா் என்றும் அகம் புறத்தில் அறிவா் கிளவி ஏற்கும்’ என்றும் பேராசிரியா் உரை அமைகிறது. நாவலா் சோமசுந்தர பாரதியார், ‘நாளும் கோளும் கண்டது போலக் கூறுபவர். கேட்போர் விரும்பும் எதிர்கால விளைவுகளை எடுத்துக்கூறும் கணிகன்; மூவகைக் காலமும் முறையின் ஆற்றிய அறிவா்; அறிவோடு அமையாது ஆற்றுதலும் கூறுதலால்’ என்று விளக்கம் தருகிறார். இதன் வழி அறிவா் எனப்படுவோர், அக வாழ்வில் நல் அறிவுரை கூறும் அறிவோராகவும் புற வாழ்வல் காலம் கணித்து உரைக்கும் கணியராகவும் இருந்திருக்கூடும். ஆனால் தொல்காப்பியப் பிரதியில் புறத்தில் அறிவர் என்ற சொல்லோ, கூற்றோ இடம் பெறவில்லை. இருப்பினும் உரையின் வழி கணியராகவும் வாழ்ந்திருப்பா் என்று கருத முடிகிறது.

                மேலும் தொல்காப்பிய உரைவளம், ‘அறிவா் என்பார் தம் அறிவால் மக்கள் அறிவைத் தீதின் நீக்கி நன்றின்பால் உய்ப்பவா் என்றும் துறவு உள்ளத்தை உடையவர் என்றும் தலைவனிடம் தலைவியை நீங்காது ஒழுகுக என நெறிப்படுத்துபவர்’ என்றும் விளக்கம் தருகிறது.

    பிற இலக்கண நூல்களில் அறிவர்

                தொல்காப்பியக் கூற்று மரபின் வளர்ச்சியாக அமையும் நம்பியகப்பொருளில் அறிவரின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

                                        “அறிவர் கிழவோன் கிழத்தி என்று இருவர்க்கும்

                                        உறுதி மொழிந்த உயர் பெருங்குரவர்”     (நம்பியகப்பொருள், 112)

    ‘தலைவனுக்கும் தலைவிக்கும் உறுதியைப் பயக்கும் உபதேசங்களைச் சொல்லும் மேம்பட்ட குருக்கள்’ என்று உரை கூறுகிறது. நீதி, உலகியல் அறிவு போன்றவற்றை தெளிவுற எடுத்துச் சொல்வர் எனக் கூற்று நிலையில் விளக்குகிறது. இதில் செவிலிக்குரிய கூற்று நெறி அறிவர்க்கும் பொருந்தும் என அகக் கூற்று மாந்தர்களின் வரிசையின்படி செவிலிக்கு அடுத்த நிலையில் அறிவா் கூற்று இடம் பெறுகிறது.

                                        “மறையோன் கூற்றும் அறிவா் கூற்றும்

                                        இறையோன் முதலா அனைவரும் கேட்ப”    (நம்பியகப்பொருள், 226)

    மறையோன் அதாவது வேதங்களைக் கற்ற அந்தணர்களுக்கு அடுத்த நிலையில் அறிவரை இடம் பெறச் செய்து, அவரின் கூற்றை தலைவன் முதலாக அனைவரும் கேட்பர் என விளக்குகிறது. இதன் வழி அறிவர் என்போர் கூற்றுரைக்கும் நிலையில் செவிலி, அந்தணா் வரிசையில் இடம் பெறுபவராகிறார்.

                மாறனகப்பொருளும் அறிவரை ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒருவராக, கற்பில் கூற்றுரைப்போருள் ஒருவராக, தலைவன்-தலைவி அக வாழ்வில் பேரின்ப அருள் வழங்கும் பெருங்குரவராக இயம்புகிறது. இலக்கண விளக்கம் அறிவா் தொழில்களாக,

    • இல்லறம் நிகழ்த்தும் நெறிமுறை கூறல்
    • தலைவியைக் கூடுதற்குரிய நாள் நிமித்தம் கூறல்
    • இல்வாழ்க்கை சிறக்கும் தன்மை எடுத்துரைத்தல்
    • வாயில் வேண்டல்

    என்பனவற்றைக் குறிப்பிடுகிறது. அத்துடன் தலைவி, தலைவனோடு வாய்ப்பு நிகழும் போதெல்லாம் கூற்று நிகழ்த்துவா் என்று விளக்கமளிக்கிறது. ‘மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவா்; அவரே குரவர் ஆவதற்கு உரியவா்’ என்றும் கூறுகிறது.

                முத்துவீரியம், அறிவா் என்ற தனிச்சொல்லைக் குறிப்பிடாது வாயிலவா் என்ற மரபார்ந்த சொல்லை மட்டுமே குறிப்பிடுகிறது. தனித்தனியாக வாயில்கள், அவா்களின் தொழில்கள் முதலியன முத்துவீரியத்தில் காணப்படவில்லை.

                சுவாமிநாதம், கூற்றுக்குரியோருள் அறிவரைச் சுட்டிச் செல்வதோடு நோய் அறிவோர் என்றும் அறிஞா் என்றும் இரு சொல்லைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆனால் பொருளதிகாரம் சுட்டும் அறிவர் வேறு; அறிஞா் வேறு என்பதைக் குறிப்பிட்டுக் காட்டாமல் இருவரையும் ஒன்றே எனக் குறிப்பிடுகிறது. ஏனெனில் 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணமான சுவாமிநாதம், அறிஞர் என்ற சொல்லை அறிவில் சிறந்தவா் என்ற பொருளில் குறிப்பிட்டிருக்கலாம் என எண்ண முடிகிறது.

    சங்க இலக்கியங்களில் அறிவர்

                தொல்காப்பியப் பதிவுகள் பலவற்றின் இலக்கியச் சான்றாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் அறிவர் கூற்றுப் பாடல்கள் இல்லை. குறுந்தொகையின் 190-வது பாடலில் “அறிவர் கொல் வாழி தோழி” என அறிந்தவர் என்ற வினைப்பொருளில் அறிவர் என்ற சொல் அமைந்துள்ளது. ஐங்குறுநூற்றில் அந்தணர், அயலோர், கண்டோர் என்போரின் கூற்றுப்பாடல்கள் உள்ளனவே அன்றி, அறிவர் கூற்றுரைக்கும் பாடல்கள் இல்லை. பதிற்றுப்பத்தின் 4-வது பாடலில் “ஈா் அறிவு புரிந்து” என்ற வரிகளுக்கு, ‘இருவகை அறிவும் அமைந்து……….அருமறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்ப’ என்று உரை கூறுகிறது. கலித்தொகையிலும் அகநானூறிலும் அறிவா் கூற்றுப் பாடல்கள் இல்லை. “அறிவா் கேட்ப” எனவும், “அறிவா் உறுவிய அல்லல் கண்டருளி” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக சங்க இலக்கிய அகப் பாடல்களில் அறிவர் கூற்று பற்றி செய்திகள் ஆங்காங்கே அமைந்துள்ளனவே தவிர கூற்றுரைத்தல் நிலையில் முழுமையான பாடல் பதிவுகள் இல்லை.

    முடிவுரை

                மேற்கூறிய கருத்துக்களின் வழி அறிவா் என்போர்,

    • தலைவன்-தலைவி கற்பு வாழ்வில் இடம் பெறக்கூடிய மாந்தர் ஆவார்.
    • கற்பு வாழ்வில் இருவரின் ஊடலைத் தீர்க்கும் வாயில்களில் ஒருவர் ஆவார்.
    • இல்வாழ்வின் கடமைகளை இடித்துரைக்கும் நிலையில் செவிலிக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப்படுகிறார்.
    • வயதில் அனுபவத்தில் அறிவில் சிறந்தவராகவும், நாள், கோள்களை கணக்கிட்டுக் கூறும் கணியராகவும் இருந்திருக்கக் கூடும் எனலாம்.
    • அக வாழ்வானது பெரும்பாலும் பெண்ணைச் சுற்றியே பதிவு செய்யப்பட்டவையாக இருப்பதால் தோழி, செவிலி, நற்றாய் முதலிய பெண் மாந்தா் கூற்றுப் பாடல்கள் மிகுதியும் கிடைத்துள்ளன. அதனால் தொல்காப்பியக் கூற்று நிலையில் இருக்கும் அறிவரின் கூற்றுப்பாடல்கள் சங்க அக இலக்கியங்களில் காணப்படவில்லை. மாறாக வாயில்கள் என்ற பொது மாந்தர் கூற்றுப் பாடல்களே உள்ளன. இதன் வழி இனக்குழுச் சமுதாயத்தில் பெண் மையக் குடும்ப அமைப்பு நிலவியுள்ளதை அறிய முடிகிறது.
    • அந்தணருக்கு அடுத்த நிலையில் அறிவரின் கூற்றை அனைவரும் கேட்பர் என்பதன் மூலம் இனக்குழுச் சமுதாயத்தில் ஊா்ப்பெரியவர் என்ற முறையில் மக்களின் அக வாழ்விலும் சமுதாய நலன் கருதியும் அறிவுரைப்போராக அறிவா் விளங்கியுள்ளனா் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

    ***********************************

    பயன்பட்ட தரவுகள்

    1. ச.வே. சுப்பிரமணியன் (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள் முழுவதும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், இரண்டாம் பதிப்பு ஜூலை 2009.
    2. இணையதள முகவரி, தமிழ் இணையக் கல்விக்கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், சென்னை. www.tamilvu.org
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180824-Aghasura -Bhagavatham A4-wcol charcoal – Agha is sin. -lr

    அகம்பாவ பாம்புள்ளே ‘ஆ’இடையர் சென்று,
    சுகம்பார்க்க சோதனை செய்ய -முகுந்தர்,
    புகுந்தார் அங்கு பசுபாசம் மேய்த்தார்,
    உகந்தார் சுகபிரம்ம மாய்*….!
    (அல்லது ஈற்றடி)
    பகல்பத்து ராப்பத்து பத்து(பத்மநாபர்)….கிரேசி மோகன்….!

    * -பிரம்மா ஆக்களை, இடையர்களை ஒளித்து வைக்க கண்ணன் ஒருவருடம் ஆவாய், இடையராய் ஆயிரம் வடிவெடுத்து
    அகத்திற்கு(வீட்டுக்கு) செல்ல, பிரம்ம மாயை சரண்புகல் ’’(கேசவ் உவாச)’’….!

    Share
  • ”ஹேப்பி வரலஷ்மி விரதம்’’….!

     

    உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்,
    பத்தும் செய்யா பணமுடிப்பில், -சுத்தமாய்
    சாணத் தெளிப்பில்,ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
    காணலாம் பொன்மகளின் கால்….!

    ”நல்லவெள்ளி இன்று, நலம்புகழ் செல்வத்தை
    இல்லத்தில் அம்பாள் இறைத்திடுவாள், -(கற்பக)வல்லியவள்
    ஆடி பராசக்தி, அண்ணனோ ஆயர்தம்
    பாடிமுராரி வெள்ளியைப் பொன்(தங்கம்)’’….கிரேசி மோகன்….

    Share
  • வெண்பாகவதம்(தொடர்ச்சி….!)

     

    கூர்மாவதாரம்….!
    ——————–

    துர்வாசர் இட்ட தொடையை எறிந்திட
    கர்வாதி கத்தில் களிறின்மேல் -சர்வாதி
    காரத்தால் பெற்ற கடுத்தமுனி சாபத்தின்
    பாரத்தால் வானத்தோன் பாழ்….!

    சாப விமோசனத்தை, சாகரப் பாற்கடலை
    மாபெரும் மந்தார மத்தினால், -நீபெருவாய்
    வாசுகி தாம்பால் வளைத்துக் கடைந்திட;
    வாசுதேவன் விண்ணுக்கு வாக்கு….!

    வாசுகி உச்சியை வானோர் பிடித்திழுக்க
    ஆசு அசுரர் அதன்வாலில் -கோஷமிட
    மந்தார வெற்பன்று மூழ்குதலைத் தாங்கிட
    வந்தாராம் ஆமையாய் விஷ்ணு….!

    அப்போது பீறிட்ட ஆலகால நெஞ்சினை
    துப்பாது உண்ணாது தொண்டையில் -எப்போதும்
    கொண்டனன் சம்பு; கிளர்ந்த இலக்குமியைக்
    கொண்டனன் கூர்மம் கரத்து….!

    தன்வந்த்ரி தந்த திருக்கண் அமுதருந்த
    முன்வந்த தானவரை மோகினிப் -பெண்வந்து
    ஆசையைக் காட்டியவர் மோசமுற, விண்ணோரை
    ஈஷியிட்டார் விஷ்ணு இலை….!

    வராகாவதாரம்….!
    ——————-

    ஏன உருவெடுத்து ஈன இரணியாக்ஷன்
    ஊனை ஒழித்து உலகத்தை -கோண
    எயிறேந்தும் பாகவத எம்பிரானை ஏத்த
    உயிரேந்தும் நெஞ்சுக்(கு) உவப்பு….(OR)
    எயிறேந்தும் பாகவத எம்பிரானால் ஞானப்
    பயிரேந்தும் ஆன்ம வயல்….!

    மண்வாசம் மூக்கால் முகர்ந்த வராகம்பார்
    பெண்வாசம் செய்யும் பரவைக்குள் -மின்வீசும்
    கொம்பை நுழைத்து குவலயத்தை மீட்டபின்
    வம்பை அழைத்தார் விலைக்கு….!

    ”மண்ணின்தன் மைந்தன்நான் மாயப் பிசாசுநீ
    எண்ணி முடிப்பதற்குள் ஏகிப்போ” -சொன்ன
    முரணானோன் மேனியில் மோதிட ஏனம்
    இரணியாக்ஷன் வாழ்வுக்(கு) இழவு….

    ஏனத்தால் ஈன்ற பொழுதில் பெரிதுவந்த
    மானத்தை வாங்கும் மகனபி -மானத்தால்
    தந்தை மகாவிஷ்ணு தாள்வைத்து பூதேவி
    விந்தையாய் வேண்டினள் வாழ்த்து….!

    நாரண அம்பை நரகனுக்கு தந்தபின்
    வேறென்ன வேண்டுமென்ற விஷ்ணுவிடம் -பூரணத்வம்
    தாவென்ற பிள்ளைக்கு தாயன்றி யாராலும்
    சாவில்லை என்றார் சிரித்து….!

    ”மத்தவர் யாருமேதான் மாதவன் மீதுவைத்த
     பக்திக்(கு) இணையாமோ !” பீற்றிய -உத்தவர்
     கோவர்த் தனக்கற்கள் கண்ணனைக் காணாது
     பூவொத்து வாடியதைப் பார்ப்பு….!

    கண்ணனின் பாதக் கமலச் சுவடுகள்
    இன்னமும் கோபியர் இல்லத்தில் -வண்ணமாய்
    உள்ளதைக் கண்டுள்ளம் உத்தவர் வெட்கினார்
    கள்ள மிலாஅன்பைக் கண்டு….!
    ——————————————————————-
    நரசிம்மாவதாரம்….
    ————————
    அல்லில் பகலில் அகத்துள் அதன்வெளியில்
    புல்புழு பூச்சி பறவையால் -கொல்லும்
    மனிதனால் காட்டு மிருகத்தால் சாகா
    தனதுயிர் கேட்டுத் தவம்….!

    இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
    வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
    மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
    தோன்றினன் நாரணத் தொண்டு….!

    ”நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
     பாரா யணம்செய் பிரகலாதா” -பூரண
     கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
     நற்கதியை நாரதன் நன்கு….!

    அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
    அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
    இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
    மறையென நின்றான் மகன்….!

    முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
    முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
    காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
    கூட்டியவன் பக்தனுக்கு காப்பு….!

    பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
    பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
    மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
    சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….!

    விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
    மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
    பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
    கோரையைப் போலெழுந்தான் குஞ்சு….(or)
    பேரலை போலெழுந்தான் பிஞ்சு….!

    கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
    நாவின்தன் மென்மையாய் நைந்தது -சாவிந்த
    பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
    நொள்ளையான ஆட்கள் நமுத்து….!

    ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
    கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
    நாரண சக்திக்கு பூரண பக்தியே
    காரணம் என்றான் கொழுந்து….!

    காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
    போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
    ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
    கூடத்து தூணுக்கே கை….!

    பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
    சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
    தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக 
    வேகமாய் வைகுண்டம் விட்டு….!

    கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
    உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
    பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
    காதுசிகை கோதி குதிப்பு….(OR)
    காதுபுடைத் தாங்கே குதிப்பு….!

    சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
    சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
    இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
    கரநுனியால் கீறிக் கிழிப்பு…..!

    ஆவேச மான அரியை அடக்கிட
    பூவாசத் தாயே பயந்திட -சாவாச
    மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
    தேகம் தழுவத் தணிவு….!

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
    குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….!

    ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….!

    துருவ சரித்திரம்
    ———————
    உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
    சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
    சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
    சக்களத்தி மாதுசுரு ஸி….!

    சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
    தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
    தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
    பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!

    கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
    துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
    அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
    சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!

    மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
    ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
    பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
    கரனை தரிசித்தான் கண்டு….!

    வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
    தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
    தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
    ஆசன தர்ப்பை அமர்ந்து…!

    கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
    பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
    குடைசாய மூன்று குவலயங்கள் காலை
    திடமாக ஊன்றி தவம்….!

    ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
    பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
    மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
    வேதங்கள் மூக்கில் விரல்….!

    கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
    உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
    வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
    ஆண்டவன் காட்சி அளிப்பு….!

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!

    மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
    ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
    வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
    ஆணில் சிறந்தோன் அளிப்பு….!

    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!

    வாமனாவதாரம்….
    ————————

    யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
    ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
    சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
    சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

    அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
    புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
    மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
    தாவலில் நெஞ்சம் திளைத்து….!

    தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
    வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
    உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
    எச்சரித்தும் மாபலி ஏற்பு….!

    அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
    தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
    வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
    மண்டல வாயை மறைப்பு….!

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….!

    ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட
    சேதாரம் இன்றியவன் சேர்பு….!

    தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
    வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
    பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
    மீனாமை சிம்ம மறுப்பு….!

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு….!

    —————————————————————-
    கபிலாவதாரம்
    ——————–
    தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
    காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
    தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
    ஊன்றினார் பக்தி உலகு….!

    கபில உவாச….
    ———————–
    இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
    பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
    ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
    நாரா யணனில் நிலைப்பு….!

    மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
    வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
    பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
    நெஞ்சார உன்னுள் நிறுத்து….!

    காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
    நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
    கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
    இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!

    பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
    சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
    முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
    இத்தனை கஷ்டமேன் இங்கு….1

    நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
    தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
    சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
    சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!

    பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
    பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
    இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
    முத்தியூர் சேர்க்கும் முடிவு….!

    தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
    சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
    ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
    தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!

    ————————————————————————————-
    Vதுருவ சரித்திரம்
    ———————
    உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
    சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
    சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
    சக்களத்தி மாதுசுரு ஸி….!

    சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
    தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
    தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
    பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!

    கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
    துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
    அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
    சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!

    மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
    ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
    பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
    கரனை தரிசித்தான் கண்டு….!

    வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
    தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
    தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
    ஆசன தர்ப்பை அமர்ந்து…!

    கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
    பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
    குடைசாய மூன்று குவலயங்கள் காலை
    திடமாக ஊன்றி தவம்….!

    ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
    பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
    மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
    வேதங்கள் மூக்கில் விரல்….!

    கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
    உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
    வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
    ஆண்டவன் காட்சி அளிப்பு….!

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!

    மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
    ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
    வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
    ஆணில் சிறந்தோன் அளிப்பு….!

    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!

    வாமனாவதாரம்….
    ————————

    யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
    ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
    சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
    சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

    அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
    புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
    மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
    தாவலில் நெஞ்சம் திளைத்து….!

    தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
    வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
    உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
    எச்சரித்தும் மாபலி ஏற்பு….!

    அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
    தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
    வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
    மண்டல வாயை மறைப்பு….!

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….!

    ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட
    சேதாரம் இன்றியவன் சேர்பு….!

    தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
    வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
    பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
    மீனாமை சிம்ம மறுப்பு….!

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு….!

    —————————————————————-
    கபிலாவதாரம்
    ——————–
    தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
    காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
    தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
    ஊன்றினார் பக்தி உலகு….!

    கபில உவாச….
    ———————–
    இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
    பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
    ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
    நாரா யணனில் நிலைப்பு….!

    மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
    வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
    பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
    நெஞ்சார உன்னுள் நிறுத்து….!

    காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
    நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
    கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
    இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!

    பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
    சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
    முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
    இத்தனை கஷ்டமேன் இங்கு….1

    நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
    தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
    சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
    சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!

    பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
    பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
    இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
    முத்தியூர் சேர்க்கும் முடிவு….!

    தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
    சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
    ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
    தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!

    ————————————————————————————-

    Share
  • வெண்பா கவதம் -தொடர்ச்சி

     

    கோன்சத் தியவிரதன் கையபி ஷேகநீரில்
    மீன்சுத் திவந்து மிகப்பெரிதாய் -வான்பொத்தல்
    ஆகத் திமிங்கலமாய் ஆக அரசனும்
    தாகமென்ன கேட்டான் திகைத்து….()….13-09-2011

    ஞானியர்கள், ஜீவர்கள், தானியங்கள் ஜோடியாய்
    தோணியிட்டு வாசுகித் தாம்பினால் -ஆணியிடு
    உச்சியுள்ள கொம்பென்(று) உரைத்தது பாகவத
    மச்சா வதாரத்து மீன்….()….13-09-2011

    மனவா சுகியால் மனித கலத்தை
    வினையூழி நாளில் வலிக்க -உனைமீன்
    உருவில் இழுத்து உயர்நலம் சேர்க்கும்
    குருவின் மகிமை கருத்து….()….13-09-2011

    வருவித்த வெள்ளம் வடியும் வரையில்
    பிறவித் தலைவர் பிரமன் -தருவித்த
    தூக்கமவர் கண்மூட சாக்கென்று தானவன்
    தூக்கிச்சென் றான்வேதத் தை….()….13-09-2011

    தானவன் குதிரைத் தலையைத் துணித்தபின்
    மீனவன் மீட்டான் மறைநான்கை -மானவகேள்
    தூங்குமயன் தாமசம், தீயரக்கன் ஆணவம்
    தாங்குமீன் ஆன்மா துணை….()….13-09-2011

    Share
  • வேதாந்த அந்தாதி….!

     

    ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
    காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு
    விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
    புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)….20-1-2010

    போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
    காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
    செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
    தடியாகும் பட்டினத் தார்….(2)….20-1-2010

    தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
    சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
    வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
    கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)….20-1-2010

    குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
    விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
    வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
    சாகாத அவ்வுணர்வே சத்து….(4)….20-1-2010

    சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
    அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
    உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)….21-1-2010

    உறவும் பகையும் துறவும் தெளிவும்
    வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
    ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
    பெறுவீடு காணப் பயன்….(6)….21-1-2010

    பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு….(7)….21-1-2010

    முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
    வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
    சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
    தர்கமற்ற தேடல் தவம்….(OR)
    தர்கத்தைத் தாண்டல் தவம்….(8)….21-1-2010

    தவமாய்த் தவமிருந்து தத்துவங்கள் தேர்ந்து
    சவமாய் சுடுகாடு செல்வீர் -சிவஞானம்
    சிந்திக்க வாராது சித்தம் ஒருமிக்க
    சந்திக்க முந்துவான் சம்பு….(9)….21-1-2010

    சம்பு மஹேசனை நம்பியவன் நானென்று
    கும்பிடப் போக வரும்குறுக்கே -ஒன்பது
    வாசலுடற் கோசத்தில் நேசமுறக் காண்போமே
    ஈசனிடம் சாத்தான் இயல்பு….(10)….21-1-2010

    இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
    குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
    பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
    சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்….(11)….21-1-2010

    சமர்த்தஅவ் ஆன்மனை சிந்தா சனத்தில்
    அமர்த்தி இகபரம் ஆளு -நிமிர்த்த
    முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
    விடியாத நெஞ்சை விலக்கு….(12)….22-1-2010

    விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
    விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
    இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
    தனிமரத் தோப்பில் திளைப்பு….(13)….22-1-2010

    திளைப்பாய், இளைப்பாய், களைப்பாய் புலனார்
    அலைக்கழிப்பால் ஆயுள் அடைப்பாய் -முலைப்பால்
    அருந்திட மீண்டும் அவனிக்கு வருவாய்
    திருந்திட ஏற்பாய் துறவு….(14)….22-1-2010

    துறவில் மரமாய், உறவில் கிளையாய்
    பிரிவில் கனியாய்ப் பழுத்து -நிறைவில்
    நிலைத்திருப்பாய் நெஞ்சமே ஞானக் கடலின்
    அலைக்கரத்தால் மண்தொட்(டு) அகன்று….(15)….22-1-2010

    அகன்று விரியும், அணுவாய்க் குறையும்
    உகந்த உறவில் உலவும் -புகன்ற
    மறைகளும் காணா மகத்துவம் நெஞ்ச
    அறைதனில் வாழும் அவன்….(16)….22-1-2010

    அவனால் அவனி, அவன்தான் புவனி
    அவனை அவனால் கவனி -அவனே
    வருவான் குருவாய் அறிவைத் தருவான்
    பெருவாய் பரம பதம்….(17)….22-1-2010

    பதப்பருக்கை பானை புசிக்கின்ற பூதம்
    முதற்கொண்டிங்(கு) எல்லாமே மாயை -எதற்காக
    அம்மா பசியென்றிங்(கு) ஆலாய்ப் பறக்கின்றாய்
    சும்மா இருக்க சுகம்….(18)….23-1-2010

    சுகம்கிடைத்தும் ஓரிடத்தில் சும்மா இராமல்
    நகம்கடித்து நாற்புறமும் நோக்கி -முகம்சுளிப்பாய்
    மேலான பேரின்பம் தோலால் கிடைக்காது
    வேளாண்மை செய்யான்மா வில்….(19)….23-1-2010

    வில்லிருந்தும் தோளிருந்தும் வீரம் பிறக்காது
    கள்ளிருந்தும் போதை கிடைக்காது -உள்ளிருக்கும்
    ஆன்மனே ஆண்மை அவனெழுச்சி சம்போகம்
    ஊன்மனங்கள் சோரும் உறுப்பு….(20)….23-1-2010

    உறுப்பதற்கு ஞானம், உரைப்பது மோனம்
    பிறப்பிறப்(பு) இல்லா புருஷன் -கருப்பொருளாய்
    சக்தியவள் , அன்பில் சிவனவன், பாலில்
    யுக்தியிலாண் பெண்ணாம் அது….(21)….23-1-2010

    அதுவாக ஓர்நாள் ருதுவாகும் ஆன்மா
    அதுவரை ஐம்புலனை ஆள்வாய் -கதையல்ல
    கற்பனை மாயையைக் கட்டக் களித்துடுவான்
    அற்பனும் அக்குடையை ஆண்டு….(22)….26-1-2010

    ஆண்டோனும் ஆண்டியும் மாண்டபின் மீண்டுமிங்கு
    ஆண்டியாய் ஆண்டோனாய் ஆகிடுவர் -வேண்டாமே
    வேஷமிது அஞ்ஞானம் வேதாந்த கும்பலின்
    பாஷையில் கோவிந்தா போடு….(23)….26-1-2010

    போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
    ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
    அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்
    கொய்யா(து) இருப்பானா கூறு….(24)….26-1-2010

    கூறிடும் கீதை குரான்பைபிள் எல்லாமே
    போரிட ஐம்புலன் போகுமென்று -சாறான்மா
    விட்டிந்த சக்கையாம் கட்டையைப் பேணுகிற
    மட்டிங்கு ஜீவனுக்கு மண்….(25)….26-1-2010

    மண்ணோடு மண்ணாகும் மேனியை மெய்யென்று
    உன்னோடு சேர்த்து உழலாதே -பெண்ணோடு
    ஆணாகும் பேரின்ப ஆன்மா அசலாம்
    நானாகும் தோற்றம் நகல்….(26)….27-1-2010

    நகிலைப் புகழ்ந்து முகில்குழலைப் பாடி
    துகிலணி மாதர் துணையே -புகலென்று
    வீழ்ந்து வணங்காதே தாழ்ந்து துதிக்காதே
    ஆழ்ந்திரு ஆன்மாவில் வாழ்ந்து….(27)….27-1-2010

    வாழ்க்கையில் வென்றென்ன வாரிக் குவித்தென்ன
    சீழ்க்கை அடித்து சிலிர்த்தென்ன -ஊழ்பையன்
    எள்ளி நகையாடி ஏய்ப்பது கேட்கிலையோ
    பள்ளி எழுந்திருப் பாய்….(28)….27-1-2010

    பாயில் படுத்து பணியாய் புணர்ந்திட
    நோயாய் வயோதிகம் நேர்ந்ததே -காயை
    தனியாய்த் தவத்தில் பிணிமூப்(பு) இராது
    கனியாக்கும் வித்தையைக் கல்….(29)….27-1-2010

    கல்வியா செல்வமா கேட்போர்க்கு வீரமாய்
    சொல்லுவாய் ஆன்ம சுதந்திரத்தை -அல்லலாய்
    பாரமாகி மூப்பில் பிணியுற்ற வேளையில்
    வீரமா கோழைக்கு வாய்ப்பு….(30)….27-1-2010

    வாய்க்கரிசி போட்டவாய் மாய்ந்தவுயிர் போகும்முன்
    வாய்க்கு ருசியாய் விருந்துண்ணும் -வாய்க்குவாய்
    பேராண்மை போற்றுவர் பத்தாம்நாள் தூற்றுவர்
    ஓரான்மா தானுன் உறவு….(31)….27-1-2010

    உறவுக்குத் தேவை உருவும் திருவும்
    கறவைக்குப் பின்லாடம் காலில் -பறவைக்கு
    உள்ள சுதந்திரமும் இல்லை, சிறகுவிரி
    கள்ளத் தனத்திலென்ன கற்பு….(32)….28-1-2010

    கற்பூர வாசனை கழுதை அறியுமா
    விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை
    நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை
    அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு….(33)….28-1-2010

    அசடுக்கு உண்டு அடைக்கும்தாள் வாழ்க்கை
    கசடற கற்றுக் கொடுத்தும் -முசுடாய்
    கதவைத் திறக்காது, காற்றாக ஞானப்
    பதவி வரப்போடும் பூட்டு….(34)….28-1-2010

    பூட்டாத நெஞ்சக வீட்டாசை வாயிலில்
    கூட்டைம் புலன்களே காவலாம் -கோட்டான்கள்
    ஆண்டவன் வேடத்தில் ஆளை மயக்கிடும்
    வேண்டாமை வேண்டல் விதி….(35)….28-1-2010

    விதியை ஜெயிக்க மதியின் முயற்சி
    நதியை குடத்தில் நிரப்பல் -எதையும்
    புதிதாய்ப் பழகேல் பழயன போற்று
    உதவிக்கு உபநிடதம் உண்டு….(36)….28-1-2010

    உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு….(37)….29-1-2010

    பண்டமாய் பாத்திரமாய் உண்டவனாய் ஜீரணிப்பாய்
    பிண்டமாய் மோட்சமாய் பித்ருவாய் -எண்டிசையாய்
    பூதமாய் புல்பூண்டாய் யாதுமாய் உள்ளதாய்
    ஆதலே ஆன்மீக ஆய்வு….(38)….1-2-2010

    ஆய்ந்தரிய ஆன்மா அவரைக்காய் அல்லவே
    மேய்ன்தழியும் ஐம்புல மாடுகளை -சாய்ந்திருந்து
    வேடிக்கைப் பார்த்திடும் வேதாந்த பட்சியாம்
    பாடிக்கை கோர்த்துப் பற….(39)….3-2-2010

    பறந்திடும் ஆவி ,பிறந்திறக்கும் மேனி
    மறந்திடும் மாயமனக் கூனி -நிரந்தரம்
    ஒன்றந்த ஆன்மனுடன் ஒன்றி இருத்தலே
    கன்றிந்த ஜீவனுக்கு காப்பு….(40)….3-2-2010

    Share
  • பேஷ்! பேஷ்! சீரீஸ் [3]

    இன்னம்பூரான்

    ஆகஸ்ட் 24, 2018

    ஆங்கிலத்தில் அதிகப்படியாக ஒரு மைல் நடக்கவும் என்பார்கள். அதாவது உம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமையையும், அனுமார் கடலை தாண்டின மாதிரி, தாண்டி செயல்பட்டால் தான் மேன்மை என்பார்கள். என்னுடைய அனுபவத்தில் இந்த நல்வரவை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அரசு உத்யோகம் என்று மட்டுமில்லை. யாவருக்கும் – தோட்டியிலிருந்து தொண்டைமான்- வரைக்கும் இது பொருந்தும். 

    ‘செல்வகளஞ்சியமாக’ அங்கங்கே காப்பரேட் ஆஸ்பத்திரிகள் மடியில் கை போடும் இன்றைய சூழ்நிலையில், சென்னை பொது ஆஸ்பத்திரியில் (ராஜீவ் காந்தி நாமகரணம் பிற்காலத்தில். 400 வருடங்களுக்கு மேலாக பணி புரியும் தர்மாஸ்பத்திரிக்கு) அவசர மருத்துவ துறை 24×7 பரபரப்பாக இருக்கும்; எங்கு பார்த்தாலும் ரத்தம், ஓலம், ஒரு மாதிரியான அக்கறையின்மை, கீழ்த்தட்டு மக்களிடம் கீழ்த்தட்டு மக்கள் பணம் பிடுங்குவது, சாவு, சாவு கிராக்கி வகையறா.

    கடந்த ஏழு மாதங்களுக்குள் மெச்சத்தக்க முன்னேற்றங்கள். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேவையான தகவல் வருமுன் கொடுத்து விடுவதால், ஒரு டீம் தயார் நிலையில் வரவேற்று உரிய அவசர சிகிச்சை அளிக்கின்றனர். கத்திக்குத்துப்பட்டவரும், இதயக்கோளாறு நோயாளியும், சைக்கிளிலிருந்து விழுந்து லேசாக சிராய்த்துக்கொண்டவருக்கும் வரிசைப்படி ஒரே டீம் கவனிப்பு. அதற்குள் ஒருவர் செத்தால், அது அவர் தலைவிதி. அந்தக்காலம் போச்சு. அதி அவசரம்: சிவப்பு/அவசரம்: பச்சை/ அவசரமில்லை: பச்சை என்று மூன்று பிரிவுகள் தேவைக்கு ஏற்ப, செயல்படுகிறார்கள். நாட்தோறும் சரசரி 220 நபர்கள் வருகிறார்கள். ஏழுமாதங்களில், இறப்பவர்களின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து விட்டது. சிகிச்சை நபர் வந்த 2/3 நிமிடங்களில் துவங்கி விடுகிறது. அவசர சிகிச்சைக்கு வேண்டிய மருத்துவ சாதனங்கள் கைக்கெட்டிய தூரத்தில் பொருத்தப்பட்டிருப்பதால், உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த புதிய ஏற்பாடு மிகவும் போற்றப்படுவதால், இதை முன்மாதிரியாக வைத்து, பரவலாக, மாநிலம் முழுதும் செயல் படுத்த ஒரு திட்டம் இருக்கிறதாம். வாழ்க: சென்னை பொது ஆஸ்பத்திரி.

    Share
  • அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்ணும் பெண்சார் மதிப்பீடுகளும்

    -முனைவர் கல்பனா சேக்கிழார்

    பெண்ணை ஒடுக்குதல் என்பது நம் நாட்டில் மட்டும் நடந்த நிகழ்வு அன்று. உலகம் முழுதும் நடைபெற்ற நிகழ்வு. ஆதியில் பெண்வழி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. குடும்பம் என்னும் அமைப்பு உருவாகாத காலத்தில் பெண்கள் தலைமையேற்று  அனைத்தையும்   நிர்வகிப்பவர்களாக இருந்தனர். காலப்போக்கில் உடைமைச் சமூகமும் அதன்வழி உருவான வாரிசுமையும் தோன்றியவுடன், பெண்களை அடிமைப்படுத்துதல் என்பது தொடங்கிவிட்டது. அத்துடன் மட்டுமல்லாமல் பெண்கள், வைசியர், சூத்திரர் பாவ யோனியில் பிறந்தவர்கள் (பக.கீதை:அத்.9, சுலோகம்.32) என அவர்களை இரண்டாம் தரமான சமூக மதிப்பீட்டையும் உருவாக்கியது. இதனை இது வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்பட்டதன்று, அதாவது வெற்றி பெற்றவர்களுக்கு முடிசூட்டும் வேலையைத் தோல்வி பெற்றவர்கள் தாராளச் சிந்தனையுடன் சூட்டி மகிழ்ந்தார்கள் என எங்கல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிவற்றின் தோற்றம் என்னும் நூலில் குறிப்பிடுவதுபோல் பெண்களுக்கான கருத்துகள் உருவாக்கப்பட்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை எல்லாச் சமூகங்களுமே உருவாக்கியுள்ளன. அக்கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்களாக இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

    இலக்கிய, இலக்கணங்களின் வழியாகவே தொல்சமூகம் குறித்தான புரிதலையும், சமூக மதிப்பீடுகளையும் நாம் தொகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நமக்குக் கிடைத்துள்ள பழைமைப் பனுவல்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்.  இப்பிரதிகள் நாகரிகம் அடைந்த தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே உள்ளன. இவை தமிழ் நிலப்பரப்பினுள் வந்துகலந்த வைதிகப் பண்பாட்டுக்கூறுகளையும் உள்வாங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய பதினெண் கீழ்க்கணக்கு வைதிகக் கருத்தியலோடு, சமணக்  கருத்தியல்களையும் உள்வாங்கியப் பனுவலாக  உருப்பெற்றுள்ளன.

    சங்க இலக்கியத்தில் பெண்ணிக்கிருந்த நெகிழ்வு அற இலக்கியங்களில் இறுக்கமாகவே இருக்கிறது. 40க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் சங்க இலக்கியத்துள் பாடியுள்ளனர் . ஆனால் பதினென் கீழ்க்கணக்கில்  பெண்பாற் புலவர்கள் ஒருவரும் இலர். இதனைப் பார்க்கும் பொழுது, அறம் சார்ந்த சிந்தனைகள் பெண்ணுக்கு இல்லையா என்னும் கேள்வியெழுகிறது. மேலும் பதினெண் கீழ்கணக்குத் தொகுக்கப்பட்டதன் பின்னுள்ள  அரசியலும் அறிய இயலவில்லை.  இத்தொகுப்பினுள் உள்ள 11 அறநூல்களும் பண்பாட்டின் அடையாளமாக அதனைக் கட்டிகாப்பவளாகப் பெண்ணையே முன்னிருத்துகிறது.

    பெண்களை வெறும் நுகர்பொருளாகவும், பாலியல் இயந்திரமாகவும் பயன்படுத்தியதோடு, அவர்களுடைய புழங்குவெளியையும் வரையறுத்து அதனைச் சட்டமாகவும் உருவாக்கினர். பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கான முயல்வுகளைக் காலந்தோறும் நிகழ்த்தியுள்ளனர். அவற்றை அடக்கியும் ஒடுக்கியும் வைப்பதற்கான வேலைகளை ஆண் மையச் சமூகம் மோற்கொண்டது. அவளுக்கான விதி இதுதான் என மூளைச் சலவையும் செய்யப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகள், தொழில் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம் போன்றவை சமூகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. அச்சூழலில் பெண் தன்னுடைய இருப்புநோக்கிச் சிந்திக்கத் தொடங்கினாள். அதன் விளைவாகப் பெண்ணியச் சிந்தனைகள் மேற்குலகில் உருப்பெற்று, தராள வாதப்பெண்ணியம், சமதர்மப் பெண்ணியம் தீவிரவாதப்

    பெண்ணியம், தலித்தியப் பெண்ணியம் எனப் பல்வேறு நிலைகளில் போராடத்தொடங்கினர். இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்படத்தொடங்கியது. தமிழகத்திலும் அது சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    எலைன் ஷோவால்டர்,

    • பெண்மை நிலை (Feminine Phase) – பண்பாடு சார்ந்தது
    • பெண்ணிய நிலை (Feminist Phase) – அரசியல் சார்ந்தது
    • பெண்நிலை (Female Phase) – உயிரியல்

    என மூன்று நிலைகளில் இலக்கியங்கள் பெண்களைக் கட்டமைப்பதாகக் கூறுகிறார். இதனடிப்படையில் அற இலக்கியங்கள் பெண்ணுக்கான வெளியையும்  குடும்ப சமூக மதிப்பீடுகளையும் எவ்வாறு உருவாக்கியுள்ளன என்பதை அறிய இக்கட்டுரை முயல்கிறது.

    சமூகத்தின் அனைத்துத் தளத்திலும் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல்,  ஒரு சமூகத்தின் கட்டுமானப் பண்பாட்டுக் கூறுகள் யாவும் பெண் மீதே சுமத்தப்பெறுகின்றன. ஆண்வழிச் சமூகம் சுமத்தியுள்ள பண்பாட்டுக் கூறுகளைப் பேணுகின்றவர் ஒழுக்கமானவர் என்றும், அப்பண்பாட்டு நடத்தையிலிருந்து விலகிச் செல்பவர் ஒழுக்கம் கெட்டவர் என்றும், கற்புக்கோட்பாட்டின் வழி சமூக மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இவ்வாறான ஆண்வழிச் சமூக அமைப்பின் ஒழுங்கிற்கும் நியதிகளுக்கும் உட்பட்டு, ஆணின் அதிகார எல்லைக்குள் ஓர் அடிமை போன்ற வாழ்வை மேற்கொண்டு ஆணுக்கு எல்லா வகையிலும் சேவகம் புரிவதையே பெண்ணுக்கான அறம் என்பதாகச் சமூகம் கற்பித்து வைத்திருக்கிறது (2010: 80).  வினையை ஆடவருக்கு உயிராகவும், பெண்களுக்கு அவ்வாடவரே உயிராகவும் ( குறுந்தொகை, 135) பெருமையும் வீரமும் ஆணுக்குரியதாகவும், அச்சம், மடம், நாணம் பெண்ணுக்குரியதாகவும் (தொல்காப்பியம், களவியல் 7,8) ஆண் அதிகாரம்/பெண் அடங்கிபோதல் என்ற பண்பாட்டு நிலையிலே இலக்கியங்கள் கட்டமைக்கின்றன.

    பாண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் அடிப்படையிலான அறங்கள் அணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறானவையாக அமைந்தன.

    ஆணுக்குப் பெருமை, வலிமை, அழகு, புகழ், அறிவு, கடமை, ஆள்வினை, உரிமை, செயலூக்கமான பாலியல், ஆட்சி அதிகாரம், செல்வம் ஆகியவை உயர் அறங்கள். பெண்ணுக்கு உடலின் மென்மை, அழகு, பணிவு, அடக்கம், அடங்கிய பாலியல், அச்சம், நாணம், மடம், கற்பு ஒழுக்கம், பொறுமை, சேவை, தியாகம் ஆகியவை உயர் அறங்கள்.

    பெண் என்பவர்

    பெண்ணை, இலட்சிய வாழ்க்கைத் துணைவி என்றோர் அசாதாரணமான சித்திரத்தை அறநூல்கள் வழங்குகின்றன. தாயுரிமை தூக்கி எறியப்பட்டது. பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். ஆண் வீட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றினான்; பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். இவை முழுதும் ஏடறியா வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த நிகழ்ச்சியாகளாகும். இவை மெய்யாகவே நிறைவேற்றப்பட்டன என்பதற்குப் பாஹொஃபென் திரட்டியுள்ள தாயுரிமை பற்றிய ஏராளமான எச்சங்களே சாட்சியாகும் என்பது ஏங்கல்ஸ் கூற்று.     

    மென்மை

    வை யெயிற்று ஐயள் மடந்தை (நற்றிணை,2) அனிச்சம் பூவை உவமையாக 1111,1120ஆம் குறட்பாக்களில் மோந்தாலே வாடிவிடும் மென்மைமிக்க பூவினும் மென்மையானவளாக பெண்ணைப் படைக்கிறார் வள்ளுவர். உடற் கூற்றியல் அடிப்படையில் ஆணைவிடப் பெண்ணே வலிமையானவராக இன்றைய அறிவியல் கூறுகிறது. 

    அழகு

    சங்க இலக்கியங்கள் அழகு என்பது பெண்ணுக்குரியதாகவே அவர்களின் புற அழகிற்கு முதன்மைக் கொடுத்து (பெண்களின் ஒவ்வொரு உறுப்பையும்) வருணிக்கின்றன. வள்ளுவரும் ஒளி பொருந்திய நுதல்(1088) மான் போன்ற அழகிய பார்வை (1089) அழகிய மயில் (1081) அமிழ்தின் இயன்ற தோள் (1106) முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்த்தோள்(1113) மதியும் மடந்தை(1116) எனப் பெண்ணின் உடலுக்கு கொடுக்கும் முதன்மை பெண்ணின் அறிவுக்கு வழங்கவில்லை. 

    உடைமை

    பெண்ணின் இயல்புகளான குணங்கள் மறுக்கப்பட்டு உடைமைச் சமூகத்துக்கு ஏற்ற பெண்ணாக வள்ளுவம் கட்டமைக்கிறது. குறள் 1007  – இல் பொருள் இல்லாத வறியவருக்குப் பொருள் கொடுத்து உதவாதவனைக் கூறவந்தவர் மிக்க அழகு பொருந்திய பெண் தனிமையில் வாழ்ந்து முதுமையுற்றது போன்றது என்று எடுத்துக்காட்டுகிறார். ஒரு பெண் என்பவள் ஆணுக்குப் பயன்படுபவளாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 

    கற்பு என்பது

    மனைவியாக அமைந்தவள் மாண்பினை உடையவளாகவும், கணவனின் வளத்திற்குத் தக்கவளாகவும் அமையவேண்டும். குடும்பத்திற்குத் தக்க சிறப்பில்லாத பெண் இல்லை என்றால் என்ன சிறப்பு இருந்தும் வீண். பெண்ணின் பெருமை கற்புடன் இருப்பது. கணவனைத் தொழுபவளுக்கு (வணங்குதலுக்கும் தொழுதலுக்கும் வேறுபாடு உண்டு, தாளை வணங்காத் தலை (9) , கொல்லான்…கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260) வணங்குதல் – தலையின் செயல், தொழுதல் – கையின் செயல்) இயற்கையே கட்டுப்படும். தன்னையும் காத்து, கணவனையும் காத்து குடும்பப் புகழையும் காத்து ஓம்பவேண்டும். பெண் தன் கற்பினைத் தானே காக்க வேண்டும், சிறந்த மனைவியைப் பெறுவதே எல்லாவற்றையும் விடச் சிறப்பானது என வாழ்க்கைத்துணை நலம் கூறுகிறது.

    கற்புடை மனைவி இருக்கும் வீடே வீடாகும்; செல்வம் முதலியவற்றை விட இல்லக் கிழத்தியின் நற்குணமே இல்வாழ்க்கைக்கு முதன்மையானது (நாலடியார், 383) கற்புடைய பெண்களுக்கு நாணம் முதலியவை பெண்மையியல்புகள் அணிகளாகும் (நாலடி, 385); கற்புடைய மனைவி தூயர் ( நாலடி, 387); கற்புடைய மகளிர்க்கு தங் கணவர் மாட்டு அன்பு எந்நிலையிலும் குறையாது (நாலடி, 389). வினைத் திறன் அறியாத ஆண் மகனைக் காட்டிலும் கற்பமைந்த பெண்டிர் நல்லவர் ( நான்மணிக் கடிகை) தாரம் என்பவள் கணவன் குறிப்பறிந்து நடக்க வேண்டும் (முதுமொழிக் காஞ்சி,5, திரிகடுகம்,96, சிறுபஞ்ச மூலம், 15).

    உடைமை பொருள்

    பிறனில் விழையாமையில் பெண்ணைப் பிறன் பொருளாகக் (141) கூறுகின்றார் வள்ளுவர். மேலும் பிறன் இயலாள் என்றும் பிறன் வரையாள் என்றும் உடைமைப் பொருளாகவே பெண்ணைப் பதிவு செய்கிறார்.

    நிலைத்த மனம் இல்லார்

    கூடா நட்பு குறித்துக் கூறும்பொழுது உண்மையில்லாதவரிடம் கொள்ளும் நட்பு பெண்ணின் மனம் போல வேறுபடும் என்று கூறுகிறார். வரைவின் மகளிரில் பொருட்பெண்டிர் என்றும் அன்பில்லாதவர்கள், பண்பற்றவர்கள், நெஞ்சத்தை நிறுத்தியாளும் திறன் அற்றவர்கள், மாய மகளிர் என வரையறுக்கிறார். 

    காத்திருப்பவள்

    கணவன் பிரிவை எண்ணிக் கலங்கி  அழகு கெட காத்திருப்பவளாக(1157,1234) படைக்கிறார். 

    பெண் கொல்லும் படை

    ஆண்மகனை எதிர்த்து நிற்கும் பெண் எமன், அதிகாலையில் சமையல் அறைக்குச் செல்லாதவள் ஒருவனுடைய நோய், சமைத்ததைக் கணவனுக்கு எடுத்துப் படைக்காதவள் பேய், இப்படிப்பட்ட குணங்களை உடையவள் கணவனைக் கொல்லும் படை (நாலடி, 363) மனையாள் இல்லாத வீடு வீடன்று (நாலடி, 361)  கற்புடைய மகளிருக்குக் கடமை விருந்தோம்பல், இல்லத்தைக் காத்தல், மக்களைப் பெறல் இம்மூன்றும் (திரிகடுகம், 64). 

    முயன்று வினையாற்றாள்

    ஊழ் கூட்டாதவிடத்தும், அரிய காரியங்களைச் செய்தலில் தளர்வின்றிருந்து முயலும் ஆண்மை தாளாண்மையாகும். ஊழ் கூட்டி முடிப்பது பெண்டிரின் செயல் (194). 

    ஆண் செய்யக் கூடாதவை

    கற்புடைய மகளிரை அடித்தல் மனிதனின் அறியாமை (திரிகடுகம், 3) விருப்பம் இல்லாத பெண்களிடம் ஆண்கள் இன்பம் துய்ப்பது அருந்துயர் கொடுக்கும் (திரிகடுகம், 5). பெண்வழிச் சேரலில் பத்துக் குறளிலும் மனைவின் சொற்படி நடக்கும் ஒருவன் வாழத் தகுதியில்லாதவனாக உருவாக்கியுள்ளார் வள்ளுவர். 

    அறிவும் வேண்டும்

    அழகோடு, வாழ்க்கையை நடத்தும் நல்லறிவும் உடையவள் இல்வாழ்க்கைக்குரிய துணைவி ( நான்மணிக்கடிகை,54) பெண்ணிடம் அழகு இல்லாவிட்டாலும் மாட்சிமையுடைய இயல்புகள் இருக்கும் (திரிகடுகம்,64)

    ஆணும் பெண்ணும் எண்ணும் எழுத்தும் அறிந்திருக்கவேண்டும் என நாலடியாரும் ஏலாதியும் கூறுகின்றன.

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லயாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி யழகே அழகு (நாலடியார், 14) 

    இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
    நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
    எழுத்தின் வனப்பே வனப்பு (ஏலாதி – 74) 

    பெண் – மதிப்பீடு

    மதிப்பு என்பதற்கு அளவிடுகை, கௌரவிக்கை, உவமைச் சால மதிப்பொழிந்த வல்லமார் மாண்டார் (தேவாரம்,1014) கருத்து, மண்ணுலகாளும் மதிப்பை யொழித்தே (பிரமோத்.8, 99) (தமிழ் லெக்ஸிகன், பகுதி,5,பக்.3057) மதிப்பீடு என்பது ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டம் அல்லது கருத்து (க்ரியா அகராதி.பக்.1071)  எனவும் அகராதிகள் விளக்கம் அளிக்கின்றன.

    ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண் குறித்தான மதிப்பீடுகள் பற்றிய ஆய்வை நிகழ்த்திய மேரி எல்மான் எழுதிய பெண்களைப் பற்றிய சிந்தனை என்ற நூலில் ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண்கள் என்போர் அடங்கிப் போகும் குணமுடையவர்களாக (passivity) உருவமற்றவர்களாக (formlessness) மன உளைச்சலுக்கு ஆட்பட்டவராக (instability) கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாக (confinement) கடமையுணர்வு உடையவர்களாக (piety) பொருள் பற்றுடையவர்களாக (materiality) ஆன்மீக நம்பிக்கை உடையவர்களாக (spirituality) பகுத்றிவுக்கு மாறானவர்களாக (irrationality) கவர்ச்சி மற்றும் சூன்யம் உடையவர்களாக (witch) அடங்காப் பிடாரிகளாக (shrew) குறை கூறுபவர்களாக (compliancy) என்ற முரண்பட்ட குணமுடையவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். சமூகம், பண்பாடு அரசியல் மற்றும் தனிப்பட்ட சூழல் என்று எல்லா நிலைகளிலும் ஆண் மேலாதிக்கம் வேரூன்றியிருப்பதால், அவர்கள் படைத்த இலக்கியங்களிலும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை என்றார் எல்மன் ( 2010; பக்.81).

    அற இலக்கியங்கள் கூறிய கற்பு, காவல், கணவன்வழிபாடு ஆகியவை கட்டுப்பாடுகளும் பெண்ணின் பாலியல் செயல்பாட்டை அவளது கணவனை மட்டும் சார்ந்திருக்க அவளை ஒழுங்குபடுத்துகின்றன. பாலியலில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சார்பு நிலை பெண்களை, சிறு வயது முதல் சாகும் வரை ஆணைச் சார்ந்து வாழும் இயல்புடையவர்களாக ஆக்கியது. பெண்ணின் பாலியல் அறம் காவலால் சாத்தியமாகவும், அவர்களே நிறையாக இருக்கவேண்டும் என்றும் அற இலக்கியங்கள் வற்புறுத்துகின்றன.

    அற இலக்கியங்கள் முன்வைக்கும் பெண் குறித்தான மதிப்பீட்டைக் கீழ்க்கண்டவாறு வரையறுத்துக் கொள்ளலாம்.

    • இல்லறத்தை நல்லறமாகப் போற்றுபவர்
    • இல்லத்திற்கு இன்றியமையாதவர்கள்
    • கற்புடையோர் பெய்யென்றால் மழையும் பெய்யும்
    • விருந்தோம்பும் பண்புடையவர்கள்
    • கணவன் எவ்வழியோ அவ்வழி நடப்பவர்கள்
    • கணவனைத் தெய்வதிற்கு மேலாக உயிரைவிட மேலாகப் போற்றுபவர்
    • மென்மையுடையவர்கள்
    • பிரிவுத் துயரில் உழல்பவர்கள்
    • திருமணமே முதற்கடமை
    • உடைமைப் பொருள்
    • குடும்பத்தில், பொதுவெளியில் தம் கருத்தைக் கூற இயலாதவர்கள்
    • உறுதியான மனம் இல்லாதவர்கள்
    • கணவனை இழந்தால் வாழ்வே இல்லை என்று எண்ணுபவர்கள்
    • கணவனுக்குத் தேவையானதைச் செய்யாதவர்கள் கொல்லும் படை போன்றவர்கள்

    அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்கள் ஆண் மையச் சமூகத்தில் ஆணுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யபவர்களாகவும், தம் விருப்பங்களை மனதுள் வைத்து பூட்டியவர்களாகவும் இருக்கிறார்கள். குடும்ப அமைப்பில் அவர்களுக்கான இடம் குறித்து மிகவும் சுருக்கப்பட்டதாவே அமைந்திருக்கிறது. சமூகவெளியில் அவர்களுடைய செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிலவிடத்துப் பெண் அறிவு சார்ந்த சிந்தனையும் வெளிப்பட்டுள்ளது.  வால்கா முதல் கங்கை வரை நூலில் வங்க எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன் தாய்வழிச் சமூகம் இருந்துள்ளதை தக்க சான்றுடன் எடுத்துரைப்பார். அந்த வகையில், 

    பெண்ணே அருகில் வா, நான் கூறுவதைக் கேள், பயனுள்ள விசயங்கள் மீது ஒருமுறை உனது ஆர்வத்தைத் திருப்பு. இயற்கை உனக்கு வழங்கிய இச்சமூகம் தட்டிப் பறித்த ஆதாயங்களைக் கருதிப்பார். நீ ஆணுடைய கூட்டாளியாகப் பிறந்து எப்படி அவனுடைய அடிமையானாய் என்பதை அறிவதற்கு அருகில் வா, செயற்கையான நிலைமைகளை எவ்வாறு இயற்கை என்று நினைத்து நீ அதனை விரும்பத் தொடங்கினாய் என்பதை அறிந்திட வா. நீண்ட கால அடிமைப் பழக்கம் உன்னைக் கீழ்மைப்படுத்தியதை அறிந்திட வா. சுதந்திரம், புகழ் ஆகியவற்றின் மேன்மைகள் கடினமானவை என்று ஒதுக்கிவிட்டுச் சொகுசான இழிவுகள் போதுமென்று எவ்வாறு தெரிவு செய்தாய் என்பதை அறிந்திட வா. நான் வரைகின்ற இந்தச் சித்திரம் உன்னை உன் கட்டுக்குள் வைக்கும் என்றால், இது பற்றி உணர்ச்சி கலவாமல் உன்னால் சிந்திக்க முடியும் என்றால் பயனற்ற உனது வேடிக்கை விளையாட்டுகளுக்குத் திரும்பிப் போய்விடு. இதற்கு மருந்து ஏதுமில்லை, இழிவுகள் பழகிவிட்டன (2010; பக்.23,24). 

    என்னும் கூற்றுக்கிணங்கப் பெண்கள் மெல்ல மெல்லத் தமக்கான இயல்பைவிட்டு ஆண் மையச் சமூகம் உருவாக்கிய கருத்திற்குள் தம்மைப் பழக்கிக்கொண்டு அதனை வழக்கமாக்கிக் கொண்டனர்.  எலைன் ஷோவால்டர் கூறுவதுபோலப் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல், பெண்மை என்னும் பண்பாட்டு அடிப்படையிலேயே அற இலக்கியங்களைப் பெண்ணுக்கான புற உருவத்தைக் கட்டமைத்து, அவர்களின் அகத்தைப் புறந்தள்ளியுள்ளது.

    உசாத்துணை

    1. பக்தவசல பாரதி, சம்பத் இரா., (ப.ஆ) 1998. பெண்ணிய ஆய்வுகள், முதற்பதிப்பு, புதுச்சேரி: புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
    2. பக்தவசல பாரதி, 2011, பண்பாட்டு மானிடவியல், முதல் பதிப்பு, திருச்சி: அடையாளம் பதிப்பகம்.
    3. மகாராசன், 2010. பெண்மொழி இயங்கியல், முதற்பதிப்பு, சென்னை: தோழமை வெளியீடு.
    4. முருகேசபாண்டியன் ந., 2014. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், முதல் பதிப்பு, சென்னை: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
    5. ஜர்மெய்ன் கிரீர், ராஜ்கௌதமன் (தமிழில்) 2011. பாலற்ற பெண்பால் பெண்பால் நபும்சகம், கோவை: விடியல் பதிப்பகம்.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    தமிழியல்துறை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    அண்ணாமலை நகர் – 608002
    Mail – kalpanasekkizhar@gmail.com

         

    Share
  • இலக்கியங்களில் முலை

    -முனைவர்  க. மங்கையர்க்கரசி     

    ‘முலை’ என்றாலே அது காமத்திற்கும் தாய்மைக்கும் உரியது என்றாலும், முலை என்ற உடனே காமம் தொடர்பான எண்ணமே எல்லோர்க்கும் தோன்றுகிறது. தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்யின் புறப்புலப்பாடுகள் எட்டும் முலையில் வருகின்றன என்பதை இலக்கியப் பாடல்களின் வழி காண்போம்.

    பருவத்தில் மாற்றம்

    ஒரு சிறுமியின் உடம்பு 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் துரிதமான வளர்ச்சி அடைகிறது. அப்போதுதான் அவளுடைய மார்பகம் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கிறது. 14-18க்கு இடையிலான கால கட்டத்தில் அவை முழுமையான வளர்ச்சி அடையும். பருவம் அடையும் போது சூலகத்தில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜெனால் பெண்களுக்குரிய தனங்கள் பெருகும்.  சில நேரங்களில் சத்தான உணவு இல்லாதபோதிலும் ‘இயக்கு நீர்’ (Hormone) கோளாறினாலும், பிறப்பிலேயே விளைந்த குறைபாட்டாலும் மார்பக வளர்ச்சி தடைப்படலாம்.

    ஈஸ்ட்ரோஜென்

    ஈஸ்ட்ரோஜென் என்பது ஸ்டெராய்டு ஹார்மோன்களில் ஒன்று. இது சூல்பைகளில் சுரக்கிறது.  பெண்களின் தனங்கள் பெருக்கத்திற்கும் எலும்பு வளர்ச்சிக்கும் முக்கியமானது. உடலில் கொழுப்புப் படிவதற்கும் இதுவே காரணமாகும்.

    மார்பக அமைப்பு

    பருவமடைந்த பெண்ணின் மார்புகள் உருண்டு திரட்சியுற்றுக் காணப்படும். உயர்வான மத்தியில் இருப்பது முலைக்காம்பு (Nipple) காம்பைச் சுற்றிய கருநிறப்பகுதி ஊதா வட்டம் (areola) எனப்படும். முதல் மாதவிலக்கு ஏற்படும் வரையில் மார்பின் வளர்ச்சி நிதானமாக, திடமாக இருக்கும். பிறகு இயக்கு நீரின் மாற்றத்தின் காரணமாக அவை வேகமாக வளர்ச்சி அடையும். முதலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பியும். அடுத்து ப்ரொஜஸ்ட்ரோனும் அவற்றின்மீது ஆதிக்கம் பெறும். பெண் சந்ததி விருத்தி (Procreate) செய்கிறபோது மார்பகம் முழு வளர்ச்சியுற்ற நிலையில் இருக்கும். பிரசவித்தப் பிறகே பால் சுரக்கும்.

    குழந்தை பிறந்த பிறகு பிட்யூட்டரி சுரப்பி ‘ப்ரோலாக்டின்’ (Prolactin) என்ற இயக்கு நீரைச் சுருக்கும். இதுவே பால் உற்பத்தியைத் தொடங்கி வைக்கும்.

    பாலை உறிஞ்சுதல்

    குழந்தையை ஒரு தாய் மார்பகத்திடம் கொண்டுசென்ற உடன், அது முலைக் காம்பில் வாய் வைக்க அழுத்தம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பான சமிக்ஞை மூளைக்கு அனுப்பப்படும். அந்த சமிக்ஞை தாயின் மூளையில் உள்ள ‘ஹைப்போதாலமஸ்’ என்ற பகுதிக்குச் சென்றடையும். இதுவே உணர்வுகளின் இருப்பிடம் ஆகும். பாலை உறிஞ்ச முற்படுகின்றபோது, கிடைக்கின்ற அழுத்தம் மட்டுமின்றி, தாயின் அன்பும் (தாய்மை உணர்வும்) ஹைபோதாலமஸ் மீது செயல்படுகிறது. அதனால் பிட்யூட்டரியின் பின்புறப்பகுதி ‘ஆக்ஸிடாசின்’ (Oxytocin) என்ற இயக்குநீரைச் சுருக்கும். இந்த இயக்குநீர் ஊதா வட்டத்தில் இயங்கிப் பாலை வெளிப்படுத்தும். தாயின் விரல்களும் இவ்விதம் அழுத்தம் கொடுக்கும்.

    சிறந்த அன்னை யார்

    நால்வர் நான்மணிமாலை என்ற நூல் சிறந்த அன்னை யார் என்பதைக் குறிப்பிடும் பாடல்

          “இலை படர்ந்த பொய்கையிடத் தழுதல் கண்டு
          முலைசுரந்த அன்னையோ முன்னின் நிலைவிளம்பக்
          கொங்கை சுரந்த அருட்கோ மகளோ சம்பந்தா
          இங்குயர்ந்தாள் ஆர்சொல் எனக்கு” என்ற பாடலின் மூலம் குழந்தை பசியால் அழும்முன்பே பால் நினைந்தூட்டும் தாய் தலையன்புடையவள். குழந்தை அழுவதைக் காதால் கேட்டவுடன் முலைசுரந்து ஊட்டுபவள் இடையன்புடையவள். குழந்தைப் பசியால் அழுவதைக் கண்ணால் கண்ட பிறகு பாலூட்டுபவள் கடையன்புடையவள் என்பது பெறப்படுகிறது.

    முலை என்ற உறுப்பே தாய் தன் குழந்தைக்குப் பால் ஊட்டுவதற்கென்றே இயற்கை வழங்கியுள்ளது என்பது பெறப்படுகிறது.

    திருக்குறளில் முலை

    பெண்ணின் மார்பகங்களை காம இன்பம் நுகர்ச்சிக்குரியவை என்றே கூறலாம். பெண்மையின் சிறப்புப் பற்றிக் கூறும் போது மார்பகங்களே முக்கியமாகக் கூறப்பட்டுள்ளன.

          “கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
          படாஅ முலைமேல் துகில்”                         (குறள் 1087)

    அரச யானை என்பதால் அந்த யானைக்குச் சிறப்பு அளிக்கவே அதற்கு முகபடாம் அளிக்கப்படுகிறது என்றும், யானையின் முகத்தை மறைக்க அல்ல. இது போல காமஇன்ப நுகர்ச்சிக்குரிய அரச உறுப்பு மார்பகம் என்பதால் அதுவே அனைவரையும் கவருகிறது என்பதையும் அறியவும், அழகுபடவும் மார்பகத்தின் மீது பட்டும் படாமலும் துகில் உள்ளதே தவிர அதை மறைக்க அல்ல என்றே குறள் கூறுகிறது.

          “கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
          இல்லாதாள் பெண்காமுற் றற்று”                       (குறள் 402)

    என்று ‘கல்லாமை’ என்ற அதிகாரத்தில் குறள் கூறுகிறது. கல்லாத ஒருவன் கற்றோர் நிறைந்த அவையில் பேச ஆசைப்படுவதென்பது முலைகள் இரண்டும் இல்லாத பெண்ணொருத்தி பெண்மையை விரும்புவது போலாகும் என்று மார்பகங்களின் சிறப்பை உணர்த்துகிறது.

    சிலப்பதிகாரத்தில் முலை 

    சிலப்பதிகாரத்தில் முலை பற்றி “சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும்” என்ற வரிகளில் அழகு முலைகள் தான் காதல் நோயைத் தீர்க்கும் போலும் என்றும், “மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ” என்ற வரிகளில் வலிமை பொருந்திய கச்சுக்கு அடங்காத அழகிய மார்போ என்றும் கூறுகிறார்.

    விவேகசிந்தாமணியில்முலை

    “சந்திர னில்லா வானந்தாமரை யில்லாப் பொய்கை
          மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை
          சுந்தரப் புலவா ரில்லாத் தொல்சபை கதரில்லா வாழ்வு
          தந்திக ளில்லா வீணை ஸ்தனமிலா மங்கை போலாம்” (விவேகசிந்தாமணி – 34)

    சந்திரன் இல்லாத ஆகாயம், தாமரை இல்லாத தடாகம், மந்திரி இல்லாத அரசன், மதயானை இல்லாத சேனை, அழகிய வித்வான்கள் இல்லாத சபை, கொஞ்சி மகிழக் குழந்தைகள் இல்லாத வாழ்க்கை, நரம்புகள் இல்லாத வீணை, இவை எல்லாம் அழகிய, பருத்து, உருண்டு திரண்ட இரண்டு மார்பகங்கள் இல்லாத பெண்ணைப் போல் பயனற்றதாகும்.

    முலை அணி

    பெண்கள் தமது அழகிய மார்பகங்களில் ‘பூண்’ என்னும் அணிகலனை அணிந்திருந்தனர் என்பதை,

          “ஒண்கேழ் வனமுலை பொழிந்த
          நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே”  (அகநானூறு 6 : 17-18) குறிப்பிடுகிறது.

    தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்யின் புறப்புலப்பாடுகள்:

    “நகையே அழுகை இளிவரல் மருட்கை
          அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
          அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”       (மெய்ப்பாட்டியல் – நூ 3)

    சிரிப்பு, அவலம், இழிவு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்யின் புறப்புலப்பாடுகள்  எட்டு வகைப்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    நகை

      “எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்று
          உள்ளப் பட்டநகை நான்கு என்ப”         (மெய்ப்பாட்டியல் – நூ 4)

    இகழ்தல், இளமை, அறியாமை, அறிந்தும் அறியாதது போல இருத்தல் இந்த நான்காலும் சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

    உடம்பின் மேல்பாகத்தில் சந்தனம், குங்குமம், முதலியவற்றைக் குழம்பாகவோ, சாயமாகவோ செய்து அதனைப் பூசிக் கொண்டு, பின்னர் அதன் மேல் இலை, பூ முதலிய சித்திரங்களை வரைவர். இத்தகைய வரைவுகளின் வெளிப்பாடே “தொய்யில் வரைதலாகும்”. வேங்கைத் தாது பரப்பித் தோற்றம் செய்து எழுந்த தலைவியின் அழகிய முலை நிறம்பெறத் தலைவன் தொய்யில் வரைவான் என்பதை,

          “உருத்தெழு வனமுலை யொளிபெற
          வெழுதிய தொய்யில்”                      (குறுந்தொகை 276 : 3-4) என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.

    இப்பாடல் மூலம் ‘நகை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    அழுகை

       “இளிவே, இழவே, அசைவே, வறுமை என
          விளிவில் கொள்கை அழுகை நான்கே”  (மெய்ப்பாட்டியல் நூ 5)

    இழிவு, இழப்பு, தளர்ச்சி, வறுமை, அழிவில்லாத கொள்கை நான்கால் அழுகை ஏற்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

    வறுமையின் காரணமாக நல்ல உணவை உண்ண முடியாததால் முலையில் பால் சுரக்கவில்லை.

          “ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பில்
          ஆம்பி பூப்பத்தேம்பு பசி உழவாய்
          பாஅல் இன்மையின் தோலொடு இறங்கி
          இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
          சுவைத்தொறு அழுஉம்தன் மகத்துமுக நோக்கி
          நீரோடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்”   (புறநானூறு 164)

    வறுமையின் காரணமாகத் தாய்ப்பால் கிடைக்காமல் வருந்தும் மகவைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ‘அழுகை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    இளிவரல்

          “மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையோடு
          யாப்புற வந்த இளிவரல் நான்கே”      (மெய்ப்பாட்டியல் நூ 6)

    முதுமை, நோய், துன்பம், எளிமை இவற்றால் இளிவரலாகிய இழிவு ஏற்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

    திருமாவுண்ணி

       “ஏதிலாளன் கவலை கவற்ற
          ஒரு முலை அறுத்த திருமா உண்ணிக்
          கேட்டோர் அன்னையர் ஆயினும்
          வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே”      (நற்றிணை 216 : 8-11)

    அயலனாகிய ஒருவன் உண்டாக்கிய கவலையானது உள்ளத்தை நோயாக வருத்துதலினாலே தன் ஒரு முலையை அறுத்துக்கொண்ட வலிமையான திருமாவுண்ணி என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘இளிவரல்’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    மருட்கை

          “புதுமை, பெருமை, சிறுமை ஆக்கமொடு
          மதிமை சாலா மருட்கை நான்கே”        (மெய்ப்பாட்டியல் நூ 7)

    இது வரை காணாததைக் கண்ட புதுமை, அளவின் மிக்க பெருமை, அளவின் மிகக் குறைந்த சிறுமை, ஒன்று பிறிதொன்றாகும் ஆக்கம் இவை நான்காலும் அறிவான் அமையாத வியப்பு ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    பால் குடிக்கும் குழந்தை குறிப்பிட்ட நேரத்தில் பால் குடிக்காவிட்டாலோ, பால்சுரந்து குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைக்குப் பாலூட்டாவிட்டாலோ பால் கட்டிக் கொள்ளும் என்பதும், அப்போது உண்டாகும் வலியைப் போக்க, மார்பை அழுத்திப் பாலை வெளியே எடுக்க வேண்டும் என்பதை கலித்தொகை

          “சுரந்துயான் அரக்கவும் கைநில்லா வீங்கி
          சுரந்த என் மென்முலைப் பால் பழுதாக” (கலித்தொகை – முல்லைக் கலி 19)

         “உறு வளிதாக்கும் உயர்சினை மாவின்
          நறுவடி ஆரிற்றவை போல அழிய”      (கலித்தொகை – முல்லைக் கலி 19)

    மா மரத்தின் உயர்ந்த கொம்புகளிலுள்ள வடுக்கள் காற்றடித்தால் காம்பு முறிந்து பால்குதிப்பது போல, நான் உள்ளங்கையால் அமுக்கித் தேய்க்கவும், அடங்காது விம்மிச் சுரந்த என்னுடைய மெல்லிய முலையின் பால், பிள்ளை உண்ணாமல் பாழாகும் படி நேரம் தாழ்த்தி அழைத்து வருகிறாயே என்று தோழியிடம் கூறும் பாடல்

          “என் முலை பாலொடு வீங்கத்தவ
          நெடிதாயினை”   (கலித்தொகை – முல்லைக் கலி 19)

    தாய் தன் குழந்தையைச் சிறிதுநேரம் விளையாட்டுக் காட்ட வெளியே அழைத்துச் செல்லச் செல்கிறாள். சென்ற குழந்தை திரும்பிவர நேரமாகிறது. பாலூட்டும் நேரம் தவறுகிறது. எனவே பால் கட்டுகிறது, அதைத் தாய் அமுக்கி எடுத்து வெளியேற்றுகிறாள். இப்பாடல் மூலம் ‘மருட்கை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    அச்சம்

         “அணங்கே விலங்கே கள்வர் தம்இறை எனப்
          பிணங்கல் சாலா அச்சம் நான்கே”          (மெய்ப்பாட்டியல் நூ 8)

    கட்புலனாகா தம் ஆற்றலால் வருத்தும் சூர் முதலான தெய்வங்கள் கொடிய விலங்குகள், கள்வர், அரசன் மாறுபட்டு எதிர்த்தல் அமையாத அச்சம் என்ற நான்காலும் ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    தாயானவள் பின்னும்படி வளர்ந்து நெளிந்த கூந்தலையும், பொன்போல மார்பிலே தோன்றிய தேமலையும், கச்சு இற்று விடும்படியாகக் கண்ணுடன் உருக்கொண்டு, விம்மி எழுந்த முலையினையும், நோக்கி நீ பெரிதும் அழகுடன் தோன்றினாய் எனப் பலபடப் பாராட்டி, அவளுடைய தோளை முழுவதும் தழுவி, நெடிது நினைத்துப் பார்த்துத் தலைவியைக் கடந்து செல்வதற்கு அரிய காவலில் வைத்தனை என்று தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள். அன்னை தலைவியின் களவொழுக்கத்தை அறிந்து கொண்டாள் என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே தலைவியை விரைவில் வரைந்து கொள் என்றாள்.

          “பின்னுவாட நெறித்த கூந்தலும் பொன்அணை
          ஆகத் திரும்பிய சுணங்கும் வம்புவிடக்
          கண்ணுருத் தெழுதரு முலையும் நோக்கி
          எல்லிணை பெரிதெனப் பன்மாண் கூறிப்
          பெருந்தோள் அடைய முயற்சி நீடுநினைந்து
          அருங்கடிப் படுத்தனள்”           (அகநானூறு 150 : 1-6)

    இப்பாடல் மூலம் ‘அச்சம்’ என்ற மெய்யின் புறப்பலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    பெருமிதம்

      “கல்வி, தறுக்கண், புகழ்மை கொடை எனச்
          சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே”          (மெய்ப்பாட்டியல் நூ 9)

    கல்வியால், அஞ்சாமையால், நன்னடையால் வரும் புகழால், வரையாது வழங்கும் வள்ளன்மையால் பெருமிதம் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    மாட்டின் கொம்புகளால் குத்தப்பட்டு மார்புஎங்கும் புண்பட்டு வருந்தும் காதலனைத் தன் முலை வெம்மையால் ஏந்தி எடுத்து, புண்ணாற்றுவதற்காக ஒரு தலைவி சொன்ன செய்தி

          “மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
          அரும்பிய சுணங்கிண் அம்பகட்டு இளமுலை
          பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்”               (குறுந்தொகை 71)

    கொழுநன் பிணி நீங்க மருந்தாகவும், வறுமை நீங்கச் செல்வமாகவும், சுணங்குமுலை, தோள், நுசுப்பு ஆகியவை இன்பப் பொருளாகச் சிறப்பிக்கப்பட்டது. கொழுநன் பிணிக்கு மருந்தாகத் தன் உடம்பை அறுத்துத் தர முயல்வாள் குலமகள் என்று கூறப்பட்டுள்ளது. மருந்து, வைப்பு, இன்பம் ஆகிய மூன்றாகவும் முலை, தோள், நுசுப்பு ஆகிய மூன்றும் விளங்குவனவாகும். இப்பாடல் மூலம் ‘பெருமிதம்’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    வெகுளி

          “உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற
          வெறுப்ப வந்த வெகுளி நான்கே”           (மெய்ப்பாட்டியல் நூ 10)

    உறுப்புகளை அறுத்தலாலும், தன்கீழ் வாழும் குடிகளைத் துன்புறுத்தலாலும், வைதலும் அடித்தலாலும், அறிவாற்றல், புகழ் முதலானவற்றைக் கொன்றுரைப்பதாலும் வெறுக்கத்தக்க சினம் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன், கணவனுக்கு நேர்ந்த கொடுந்துயரைப் பொறுக்க மாட்டாதவள் மணமிகு கூந்தல் முதுகுப் புறத்தை மறைத்துக் கிடப்பக் கண்ணீரால் நனைந்த அழகிய கொங்கையை உறுதியுடன் திருகி எறிந்தாள். இதன் மூலம் அழலை மூட்டிப் பாண்டியனின் மூதூரான மதுரையை எரியுண்ணச் செய்தாள் என்பதை,

          “மணம்மலி கூந்தல் சிறுபுறம் சிதைப்ப
          கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை
          திண்ணிதின் திருகி தீஅழல் பொத்தி
          காவலன் பேர் ஊர்கனை எறி ஊட்டிய”      (சிலம்பு – ஊரலருத்தகாதை 52-55)

    என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது. இதன் மூலம் ‘வெகுளி’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    உவகை

       “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
          அல்லல் நீத்த உவகை நான்கே”            (மெய்ப்பாட்டியல் நூ 11)

    செல்வத்தால் ஏற்படும் நுகர்ச்சியாலும், புலமையால் ஏற்படும் அறிவு முதிர்ச்சியாலும், உள்ள இணைப்பாலும், உள்ளம் ஒத்தாரோடு கூடி ஆடும் விளையாட்டாலும் துன்பம் நீங்கிய மகிழ்ச்சி தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    பால் சுரந்த பாசம்

    முதுமையான மறக்குடித் தாயொருத்தி தனது, மகன் உயிரைக் கொடுத்துத் தும்பைப் போர் புரிந்து, போர்க்களத்திலேயே விழும்புண்பட்டு வீழ்ந்து கிடப்பதைக் காணச் செல்கிறாள். வாளால் வெட்டுண்டு சிதைந்துக் கிடக்கும் மகனின் உடலைக் கண்டு உள்ளம் கரைகிறாள். அன்பின் முதிர்ச்சியால் அவளது வற்றிய வாடிய மார்பின்றும் பால் சுரந்தது என்பதை

          “இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
          சிறப்புடை யாளன் மாண்பு கண்டருளி
          வாடுமுலை யூரிச் சுரந்தன
          ஓடாப்பூட்கை விடலைத் தாய்க்கே”   (புறநானூறு 295) என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

    தளர்ந்த மார்பினின்றும் உவகையால் பால் சுரந்தது என்பதன் மூலம் ‘உவகை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    முடிவுரை

    ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்று மாணிக்கவாசகர் இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். பால் நினைந்தூட்டல் தாய்மையின் பண்பாகும். முலையைத் தாய்மைக்கு உரியதாகவே இயற்கை படைத்திருக்கின்ற போதிலும் அது காம உணர்வு உறுப்பாகவே பார்க்கப்படுகிறது என்பதும் பெறப்படுகிறது. தொல்காப்பியம் வழி இலக்கியங்களில் முலை பற்றியும், மெய்யின் புறப்புலப்பாடுகள் பற்றிய செய்திகளையும் அறிய முடிகிறது.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    A M ஜெயின் கல்லூரி
    மீனம்பாக்கம்
    சென்னை – 600 114

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இம்முறை வெண்பா அல்ல…கட்டுரை….!


    மன்னிக்க…..சென்றமுறை கேசவ் அனுப்பிய சூறைக் காற்று அசுரனை, சகடாசுரன் என்று தப்பாக எண்ணி வெண்பா எழுதிவிட்டேன்…பிள்ளைப் (கண்ணன்)பிராயச் சித்தமாய் கட்டுரை…. மீண்டும் கேசவ் கண்ணா மன்னிக்க…. இது பற்றிய ஆய்வில் ‘’டோங்க்ரே மஹராஜின்’’ பாகவத தஸம ஸ்கந்தம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது…. நன்றி கேசவ்…. கண்ணனின் கோபம் சக்கிர அசுரன்(சகடாசுரன்) மீதல்ல…. கண்ணனே சங்கூதும் சக்கிரத்தான்(சுதர்ஸனம்) அல்லவா….

    ’’எனக்காக இவ்வளவு கோலாகலமாக உத்ஸவம் (கிருஷ்ண ஜனனம்) நடக்கும்போது…. என் தாயார் எங்கே!’’ வண்டிக்கு அடியில் பாலகிருஷ்ணன் நினைக்கிறான்…. தினசரி செயல்களை (நித்ய கர்மாக்கள்) விடவேண்டியதில்லை…. அவற்றிலேயே மூழ்கி பகவானை மறந்து விடக் கூடாது… யசோதை ஸ்ரீ கிருஷ்ணனை மறந்த நாளில் ஆபத்து வந்தது…. கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் ரூபத்தில்…. ஆக கண்ணனின் கோபம் ‘’தன்னை வண்டிக்கடியில் தூங்க விட்ட தாயார் (யசோதையார்) மீது…. அந்தக் கோவத்தை சகடாசுரன் மீது கண்ணன் காண்பித்தார்… உதைத்தார் சகடனை…. வான்முகடில் அவனை உதைத்துக் கொன்றார்….

    சில பல லஷ்ஷத்திற்காக லஷ்யத்தை மறந்து விடாதீர்கள்…. நாம் ஸ்ரீ கிருஷ்ணனை (லஷ்யம்) அடைந்தே (வழி கேசவ் வண்ணம், கிரேசி எண்ணம் (வெண்பா), பக்தி) தீரவேண்டும் (டோங்க்ரே மஹராஜ்)….. டைப் அடித்து விரல் வலிக்கிறது…. வாசிக்கவும் டோங்க்ரேமஹராஜ் பாகவதம்….!

    ‘’பீலிபெய் (பீலிமயில் கண்ணன்) சாகாடும் (சாகடிப்பான்) அச்சுஇறும் (சகடாசுரன் அச்சை ஒடித்து) அப்பண்டம் (பரம்பொருள்)
    சால (கம்ஸனால் அனுப்பப்பட்ட) மிகுத்துப் (அளவுக்கு மீறிய) பெயின் (கம்ஸனால் இம்ஸைக்கு உள்ளான கண்ணனின் PAIN)”….’’வண்டியில் அளவுக்கு மீறிய, இலேசான மயிற்பீலியும் அச்சை உடைத்து விடும்’’….. வாகாகக் கிடைத்த வள்ளுவர்…. அளவுக்கு மீறினால் (கம்ஸன்போல்) அமிர்தமும் (அமுதன் கண்ணன்) விஷம்…. கற்கண்டும் காலன்(கம்ஸன் உயிருக்கு பீலிமயில் கண்ணன்)… குறள் வாசிக்க வைத்ததற்கு நன்றி கேசவ் …..!

    Share