கோன்சத் தியவிரதன் கையபி ஷேகநீரில்
மீன்சுத் திவந்து மிகப்பெரிதாய் -வான்பொத்தல்
ஆகத் திமிங்கலமாய் ஆக அரசனும்
தாகமென்ன கேட்டான் திகைத்து….()….13-09-2011

ஞானியர்கள், ஜீவர்கள், தானியங்கள் ஜோடியாய்
தோணியிட்டு வாசுகித் தாம்பினால் -ஆணியிடு
உச்சியுள்ள கொம்பென்(று) உரைத்தது பாகவத
மச்சா வதாரத்து மீன்….()….13-09-2011

மனவா சுகியால் மனித கலத்தை
வினையூழி நாளில் வலிக்க -உனைமீன்
உருவில் இழுத்து உயர்நலம் சேர்க்கும்
குருவின் மகிமை கருத்து….()….13-09-2011

வருவித்த வெள்ளம் வடியும் வரையில்
பிறவித் தலைவர் பிரமன் -தருவித்த
தூக்கமவர் கண்மூட சாக்கென்று தானவன்
தூக்கிச்சென் றான்வேதத் தை….()….13-09-2011

தானவன் குதிரைத் தலையைத் துணித்தபின்
மீனவன் மீட்டான் மறைநான்கை -மானவகேள்
தூங்குமயன் தாமசம், தீயரக்கன் ஆணவம்
தாங்குமீன் ஆன்மா துணை….()….13-09-2011

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *