கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
அகம்பாவ பாம்புள்ளே ‘ஆ’இடையர் சென்று,
சுகம்பார்க்க சோதனை செய்ய -முகுந்தர்,
புகுந்தார் அங்கு பசுபாசம் மேய்த்தார்,
உகந்தார் சுகபிரம்ம மாய்*….!
(அல்லது ஈற்றடி)
பகல்பத்து ராப்பத்து பத்து(பத்மநாபர்)….கிரேசி மோகன்….!
* -பிரம்மா ஆக்களை, இடையர்களை ஒளித்து வைக்க கண்ணன் ஒருவருடம் ஆவாய், இடையராய் ஆயிரம் வடிவெடுத்து
அகத்திற்கு(வீட்டுக்கு) செல்ல, பிரம்ம மாயை சரண்புகல் ’’(கேசவ் உவாச)’’….!