Blog

  • இரண்டாம் தொப்பூழ்க் கொடி

    இரண்டாம் தொப்பூழ்க் கொடி

    சி. ஜெயபாரதன், கனடா

    சிறுமூளை !

    ஆத்மாவைத் தேடித் தேடி
    மூளை வேர்த்துக்
    களைத்தது !
    மண்டை ஓட்டின் மதிலைத்
    தாண்டி
    அண்டக் கோள்களின் விளிம்புக்கு
    அப்பால்
    பிரபஞ்சக் காலவெளி
    எல்லை
    கடக்க முடியாமல்
    தவழ்ந்து முடக்கம் ஆனது,
    சிறுமூளை !

    பெரு மூளை

    தூங்கிக் கொண்டுள்ள
    பெரு மூளை,
    தூண்டப் பட்டு எப்போது
    ஆறறிவு
    ஏழாம் அறிவாய்ச்
    சீராகுமோ,
    எப்போது போதி மரம்
    தேடிப் போய்
    தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து
    வாடிப் பல்லாண்டு
    தவமிருக்குமோ
    அப்போது
    ஓர் பெரு வெடிப்பு நேர்ந்து
    கீழ்வானம் சிவந்து
    ஆன்மா
    சிந்தையில் உதயமாகும்
    ஞான ஒளியாய் !
    ஆன்மச் சங்கிலி இறையோடு இணையும்
    மானிட இரண்டாம்
    தொப்பூழ்க் கொடியாய்.

    Share
  • கோவில் – கோயில் | எது சரி?

    கோவில் – கோயில் | எது சரி?

    கோவில், கோயில் எனும் சொற்களில் எது சரி? சுதா மாதவன் எழுப்பிய கேள்வியின் தொடர்ச்சியாக, தமிழ் வகுப்பின் அடுத்த அமர்வு இதோ.

    சிவப்பு – சிகப்பு எது சரி?

    தமிழ் வகுப்பு யூடியூப் அலைவரிசை:  https://www.youtube.com/@tamilvaguppu

    உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள். உங்கள் ஐயங்களை, கேள்விகளை, கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி: annakannanacademy@gmail.com

    Share
  • ஜஸ்வந்த் சிங் – தமிழ் வளர்க்கும் பஞ்சாபி

    ஜஸ்வந்த் சிங் – தமிழ் வளர்க்கும் பஞ்சாபி

    பஞ்சாபியான ஜஸ்வந்த் சிங், தமிழில் கலக்குகிறார். திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் எழுத்தாணியைக் கொண்டு, ஓலைச்சுவடியில் எழுதியுள்ளார். திருக்குறளை அதன் பொருளுடன் சொல்கிறார். உலகின் முதல் மொழி தமிழே என்கிறார். தமிழ் இலக்கியங்களைப் போற்றுகிறார். இந்தித் திணிப்பை எதிர்க்கிறார். இவரைச் சென்னைப் புத்தகக் காட்சியில் சந்தித்தேன். பைந்தமிழராக மாறிவிட்ட இந்தப் பஞ்சாபியின் சிங்கத் தமிழைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நான்கு துறவிகளின் கதை | ஹாஹோ சிரிப்பானந்தா

    நான்கு துறவிகளின் கதை | ஹாஹோ சிரிப்பானந்தா

    ஹாஹோ சிரிப்பானந்தா தன் மகிழுந்தில் நான்கு துறவிகள் பொம்மையை வைத்துள்ளார். மூன்று குரங்குகளைப் போன்றே இவை கண், காது, வாயைப் பொத்திக்கொண்டிருக்கின்றன. நான்காவது துறவி என்ன செய்கிறார்? ஏன் இந்தப் பொம்மைகளை அவர் வைத்துள்ளார்? இதோ அவரே விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Netaji Subhas Chandra Bose Speech at Tokyo | 1943

    Netaji Subhas Chandra Bose Speech at Tokyo | 1943

    நேதாஜி பிறந்த நாளில் அவரது குரலைக் கேளுங்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 21.06.1943 அன்று ஜப்பானின் டோக்கியோ வானொலியில் ஆற்றிய உரை இதோ.

    Netaji Subhas Chandra Bose Speech at Radio Tokyo on 21.06.1943. Listen the voice of Netaji on his birthday.

    (To subscribe Annakannan YouTube channel, please click here: http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(435)

    குறளின் கதிர்களாய்…(435)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(435)

    பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
    ரேதின்மை கோடி யுறும்.

    – திருக்குறள் – 816 (தீ நட்பு)

    புதுக் கவிதையில்…

    அறிவில்லாதவனுடைய
    மிகப் பொருந்திய
    ஆழ்ந்த நட்பைவிட,
    அறிவுள்ளோரின் பகைமை
    கோடி மடங்கு
    குறையிலா நன்மையே தரும்…!

    குறும்பாவில்…

    அறிவிலானுடைய ஆழ்ந்த நட்பைவிட
    அறிவு மிக்கோரின் நட்பிலாப் பகையும்
    அதிக அளவு நன்மைதரும்…!

    மரபுக் கவிதையில்…

    சற்றும் அறிவே யில்லாதார்
    சார்ந்தப் பொருந்தும் நட்பினிலே
    முற்றும் பயனாய் ஏதுமில்லை,
    முற்றா திந்த நட்பைவிட
    கற்றே மெத்த அறிவுடையோர்
    காட்டு மந்தப் பகையதுவே
    பெற்றுத் தருமே நன்மைகளைப்
    பெரிய அளவில் காண்பீரே…!

    லிமரைக்கூ…

    அறிவற்றோர் நட்பின் தன்மை
    ஆழமாய்ப் பொருந்திடினும், அதைவிட அறிவுடையோர்
    பகைதருமே அதிகமாய் நன்மை…!

    கிராமிய பாணியில்…

    கொள்ளாத கொள்ளாத
    நட்பு கொள்ளாத,
    கொஞ்சமும் நன்மதராத
    நட்பக் கொள்ளாத..

    அறிவே இல்லாதவன்
    காட்டுற நட்பு
    அதிகமாப் பொருந்தியிருந்தாலும்
    அதுனால ஒரு பயனுமில்ல,
    அதவிட
    அறிவுள்ளவனோட பகயே
    அதிக நன்ம தருமே..

    அதால
    கொள்ளாத கொள்ளாத
    நட்பு கொள்ளாத,
    கொஞ்சமும் நன்மதராத
    நட்பக் கொள்ளாத…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 1

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 1

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • Appa, Dear Appa, Its your Hundredth Birthday today – Seshadri Iyengar aka Rajamani Mama

    Appa, Dear Appa, Its your Hundredth Birthday today – Seshadri Iyengar aka Rajamani Mama

    Seshadri Baskar

    Dear Appa,

    Do you remember the days when i caught hold of your fingers and walked on the road saying the rhymes? Do you recollect the efforts you have taken to teach me cycling? Do you remember the kind concern you had to press my clothes and make me wear to look smart with a tie? Do you remember the pain you took to take me the massive High court building? Do you remember the anxiety you had in showing me the stamatis ship which wrecked near Marina?

    You will. But you can’t share now to anyone as you left close to thirteen years ago.  I remember you almost every day.

    Somehow you flash in my mind in some context or the other. You taught me English with its style but i could not grab a bit from you on any aspect. Be it a mechanical mind or an innovative skill or your lovely handwriting i could not catch up with you in any manner.

    Sad Isn’t so? How happy you were to see me in the college and how pride you were to tell the world that i was the first person to enter the college in the family? It was all the perfect love, care and concern which was purely unconditional.

    You had high hopes on me in life but i could not fulfill a bit of your Dream. Fact is i was incapable.

    I still remember the kindness you showed me in getting sweet and Karam in Udupi shanta Bhavan after admitting me in PS High School almost five decades ago.

    You were there and now too in life in every sphere of my life. Because it was a Biksha to me to what i am today. Who can fondly call me as Ayya with all love other than you? And who can show the strict father in you with a belt on hand and the whippings ? It’s all My appa.

    Now i realise what the love and life is? But it’s too late now.

    I still remember the Joyous time when you took me to the Famous Hatari and the theme music is still lingering in Minds.

    My memory is etched with you in every moment and movement of my life. What a lovely drawing you drew and plans for the erstwhile Madras Corporation? How many pats you had in life? You are an iyengar for office, Rajamani for relatives, Seshadri Mama for neighbours and Appa for me now and ever.

    Today 21st January this Thai Amavasya marks your Hundredth Birthday.

    I cannot speak to you and you cannot too. But if only you are capable enough to hear what i say and if only i could communicate to a departed soul all i can say is “Forgive me appa”.

    With Tears on roll what i can say and how i can equate to all that you have done to me.

    Appa, My fingers are ready to catch hold your hand now too. Where are you? Please touch me a moment and my life will see its fullest completion. My Namaskaram.

    Share
  • பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?

    பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?

    சி. ஜெயபாரதன், கனடா

    ஆப்பம் சுட்டுத் தின்ன முதலில்
    அகிலம் ஒன்று
    உருவாக வேண்டும்.
    எப்படித் தோன்றியது நமது
    அற்புதப் பிரபஞ்சம்?
    தற்செயலாய் உண்டானதா?
    தானாய்
    உருவாக வில்லை யா?
    சூனியத்தில்
    வடிவாக வில்லை,
    நியூட்டன் புற இயக்கி
    முடுக்க
    கரும் பிண்டம், கருஞ்சக்தி
    இருந்தன மறைவாய்.
    பூகோளம்.
    சூரிய மண்டலத்தில்
    பயிரினம் விளைந்திடவும்
    உயிரினம் உருவாக
    பூமி மட்டும் ஏன்
    சீராக அமைப்பானது
    காரண நிகழ்வு நியதியால்.
    பூரணத் திறனுடை
    மானுடம்,
    பூமியில் மட்டும்
    தோன்றியது
    ஏன்?  ஏன்?  ஏன்?
    நிலவு
    ஒரு முகம் காட்டி
    உலகை
    வலம் வர வேண்டுமா?
    நியூட்டன்
    கரும் புற இயக்கி
    முடுக்காது
    உடுக்க டிக்கும்
    பம்பரக் கோளம்
    தன்னச்சிலே
    சுழலுமா?

    Share
  • திருப்பாவை விளக்கம் 20 | முப்பத்து மூவர்

    திருப்பாவை விளக்கம் 20 | முப்பத்து மூவர்

    தையிலும் கோதை கவிதை இனிக்கும். ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ இருபதாவது பாசுரம், முப்பத்து மூவர்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எம்.ரிஷான் ஷெரீபின் ஐந்து புதிய நூல்கள் வெளியீடு

    எம்.ரிஷான் ஷெரீபின் ஐந்து புதிய நூல்கள் வெளியீடு

    தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு மொழிபெயர்ப்பு நாவல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு என முக்கியமான ஐந்து புதிய மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியிருக்கின்றன.

    இலங்கையின் மலையகத்தில் வாழும் இந்தியத் தமிழர் வாழ்வியலைக் குறித்து முதன்முறையாக சிங்களத்தில் ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ‘எதிர் வெளியீடு’ பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள ‘சாமிமலை’ எனும் அந்த நாவலின் தமிழ்  மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு நிகழ்வில், சிங்களத்தில் அந்த நாவலை எழுதிய சிங்கள எழுத்தாளர் சுஜித் ப்ரசங்க இலங்கையிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெற்றிருப்பது இதுவே முதன்முறையாகும். அதே பதிப்பகம் மூலமாக சிங்கள எழுத்தாளர் சுஸந்த மூனமல்பேயின் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அது ‘ஐந்து விளக்குகளின் கதை’ எனும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

    ‘வம்சி’ பதிப்பகம் மூலமாகவும் மேலும் இரண்டு முக்கியமான  நூல்கள் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில், போர் உக்கிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் வடக்கில் எவருமே பணி புரிய முன்வராத சமயத்தில், மிகவும் தைரியமான இளம்பெண்ணாக அங்கு மருத்துவ  சேவையாற்றியவர் மருத்துவர் போதினி சமரதுங்க. அங்கு தனது சேவைக்காலத்தில் பல முன்னாள் போராளிகளுக்கும், சிறுவர் போராளிகளுக்கும் உள மற்றும் உடல் நல சிகிச்சைகளை மேற்கொண்டு அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார். அந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலை எழுதியிருக்கிறார். நாம் அறிந்திருந்திராத உலகுக்குள் நம்மை அழைத்துச் செல்லக் கூடிய அந்த நூலில் இடம்பெற்றிருக்கும் உண்மைச் சம்பவங்கள் ‘இப்படியும் நடக்குமா?’ என்ற திகைப்பை ஏற்படுத்துபவை. அந்த நூல் ‘மருத்துவக் குறிப்புகள் அல்லாதவை’ எனும் தலைப்பில் வம்சி பதிப்பக வெளியீடாக தற்போது தமிழில் வெளிவந்திருக்கிறது. அத்தோடு, உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகச் சிறுகதைகளின் தொகுப்பான ‘அடிமைகள்’ தொகுப்பும் எம். ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வம்சி பதிப்பக வெளியீடாக தற்போது வெளிவந்திருக்கிறது.

    இவற்றோடு, முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாகியிருந்த ‘மூன்றாவது மனைவி’ எனும் இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில் பலராலும், பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

    இஸ்லாமியக் குடும்பங்களில் காணப்படும் ஆண்களின் பலதார மணம் இந்தக் கதையின் பிரதான கருவாக அமைந்திருக்கிறது. எழுத்தாளர் நேரில் சந்தித்த பெண்ணொருத்தியின் உண்மைக் கதையே இவ்வாறு ஒரு நாவலாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாவலானது தமது பெற்றோரின் கடன்களை அடைப்பதற்காக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்படும் பாலகிகள் பற்றிய கதையையே கொண்டிருக்கிறது. அவ்வாறே அந்நிய மத, கலாசாரத்தைச் சேர்ந்த பெண்ணொருவரால் எழுதப்பட்டிருக்கும் இந்த இஸ்லாமிய நாவல் இலங்கையில் இவ்வாறு எழுதப்பட்ட முதலாவது நாவல் என்று கருதப்படுகிறது. இந்த நாவலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் நன்னூல் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது.

    பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த முக்கியமான மொழிபெயர்ப்பு  நூல்கள் அனைத்தையும் தற்போது எதிர் வெளியீடு, வம்சி, நன்னூல், புது உலகம் அரங்குகளில் பெற்றுக் கொள்ளலாம்.

    Share
  • கீர்த்தித் திருவகவல், திருவாசகத் திருவுலா தொடர்  சொற்பொழிவு

    கீர்த்தித் திருவகவல், திருவாசகத் திருவுலா தொடர் சொற்பொழிவு

    பாஸ்கர் சேஷாத்ரி

    இன்று மாலை மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களின் திருவாசகம் சொற்பொழிவுக்குச் சென்று இருந்தேன். இடம் – ஆர்கே அரங்கம், லஸ், மயிலாப்பூர்.

    அடடா, என்ன அருமையான விளக்கவுரை. அவரின் தமிழ்ப் பேச்சும், மொழிப்புலமையும் அபாரம். ஒவ்வொரு ஊரைப் பற்றி அவர் சொல்லச் சொல்ல அவர் நம்மை அங்கே இட்டுக்கொண்டு செல்வது போல உணர்ந்தேன். அவரின் தமிழ் வீச்சும், பேசும் நேர்த்தியும், ஒரு பிரவாகமாக வெளிப்படும் வேகமும் பெரிய பிரமிப்பு. இப்படி மூச்சு விடாமல் ஒன்றரை மணி நேரம் பேசுவதும், இம்மி அளவு கூடப் பிசகாமல் சொல்ல வந்த விஷயத்தை நயம்பட உரைத்ததும் மிக அற்புதம்.

    அவரின் சொல்லாட்சி, உரை மீது அவருக்கு இருந்த அந்த அதீதப் பற்று மெச்சத் தகுந்தது. ஒரு விஷயத்தைச் செய்யும் போது அந்தப் புள்ளியின் மேல் இருக்கும் பெருங்கவனம் அவரைக் கடைசி வரை அந்த இடத்தை விட்டு நகர்த்தவில்லை. ஒரு பொம்மைக்குச் சாவி கொடுத்தது போல அவர் பிரசங்கத்தை நகர்த்திக்கொண்டு போனது பெரும் லாகவம்.

    உடன் பாடிய பாவ்யா ஹரியின் குரல் உன்னதம். ஒரு பெரிய அர்ப்பணிப்பு இல்லையெனில் இது போலப் பாடி, பாடலுக்கு உயிர் கொடுக்க முடியாது. இருவருக்கும் எனது வந்தனம். இதற்கு வசதி செய்து கொடுத்த ஆர்கே அவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும். அவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. முக நூலில் அரசியல் பேசி கட்சிகளை கொண்டாடி, வைது கிடைத்ததைத் தின்று எப்போதும் போலப் பொழுதைக் கழித்திருக்கும் இந்த மாலையை மிக நற்பொழுதாக ஆக்கிய மூவருக்கும் எனது அன்பு மரியாதை. வாழ்க வாழ்க. இந்தத் தொடரின் அடுத்த கூட்டம் பற்றிய விவரங்களை முகநூலில் பதிவு செய்கிறேன். அவசியம் வந்து ஆனந்தக் கூத்தாடுங்கள்.

    Share
  • 60 ஆண்டுகளாகக் கற்பிக்கிறேன் | நல்லாசிரியர் நஞ்சப்பன்

    60 ஆண்டுகளாகக் கற்பிக்கிறேன் | நல்லாசிரியர் நஞ்சப்பன்

    நல்லாசிரியர் விருது பெற்ற நஞ்சப்பன், அவிநாசியில் நஞ்சப்பா நிகேதன் என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஓய்வுபெற்று 28 ஆண்டுகள் ஆன பிறகும் தொடர்ந்து 60 ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார். மூன்று தலைமுறைகளாகக் கற்பித்து வரும் இவர், தமது விரிவான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலருக்கும் பயன் நல்கும் இந்த உரையாடலைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலாம் கனவு கண்ட இந்தியா | நெல்லை சு.முத்து

    கலாம் கனவு கண்ட இந்தியா | நெல்லை சு.முத்து

    அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து, இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். தமிழில் 160 நூல்களுக்கு மேல் எழுதியவர். அப்துல் கலாம் உடன் நெருங்கிப் பழகியவர். கலாமின் ‘இந்தியா 2020’ என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்த்தவர். சென்னைப் புத்தகக் காட்சியில், தற்செயலாகச் சந்தித்த போது, அருவி போல் அனுபவங்களைப் பொழிந்தார். அதில் ஒரு கையளவு நீரை இங்கே பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share