Blog

  • அன்புள்ள இந்தியர்களே!

     

    ஆக்கம் : மேதகு அப்துல் கலாம்

    மொழிபெயர்ப்பு : ரஞ்சனி நாராயணன்

    images (1)

    அன்புள்ள இந்தியர்களே,

    இந்த உரையை நான் ஹைதராபாத் நகரத்தில் ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு 14 வயது பெண் என் கையெழுத்து வேண்டுமென்றாள். நான் அவளிடம் அவளது எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள்: முன்னேறிய இந்தியாவில் நான் வாழ வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் நானும் இந்த முன்னேறிய இந்தியாவை உருவாக்க வேண்டாமா? இந்தியா பின்தங்கிய நாடு அல்ல; மிகவும் முன்னேறிய நாடு தான் என்று நாம் பிரகடனப்படுத்த வேண்டும். எப்போது இதைச் செய்யப் போகிறோம்? இதைச் செய்வதை விட்டுவிட்டு  இப்போது  நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

    நமது அரசாங்கம் திறமையானது அல்ல என்கிறோம்;

    நமது சட்டங்கள் மிகப் பழமையானவை என்கிறோம்;

    மாநகராட்சி கழிவுகளை சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்கிறோம்;

    தொலைபேசிகள் இயங்குவதில்லை; இரயில் நிர்வாகம் ஒரு ஜோக். விமானப் போக்குவரத்து உலகிலேயே படுமட்டமான ஒன்று. தபால்கள் ஆமை வேகத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேருவதே இல்லை. இன்னும் இன்னும் எத்தனையோ குறைகள் இந்த நாட்டைப்பற்றி சொல்லுகிறோம். நாம் என்ன செய்தோம் இவற்றை சரிசெய்ய?

    இந்தியாவிலிருந்து சிங்கபூர் செல்லும் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள்; உங்கள் முகத்தைக் கொடுங்கள்; இப்போது அந்த ‘நீங்கள்’ சிங்கபூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறீர்கள். நன்னடத்தையின் உருவமாக அங்கு இருக்கிறீர்கள். அங்கு சிகரெட்டை பிடித்துவிட்டு மீதியை தெருவில் போடுவதில்லை நீங்கள். அவர்களது பாதாள இரயில் பற்றி அவர்களைப் போலவே பெருமிதம் அடைகிறீர்கள்; நமது மாஹிம் கடல்வழிப் பாதை போலவே அமைந்திருக்கும் ஆர்செர்ட் சாலையில் மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை போக 5 டாலர்கள் (இந்தியப்பணம் சுமார் 60 ரூபாய்) கூசாமல் கொடுக்கிறீர்கள்; மால் அல்லது உணவகத்தின் வெளியில் நிறுத்தியிருக்கும் காரை எடுக்கத் தாமதமானால் அதிகப்படியான பார்க்கிங் பணத்தை பேசாமல் செலுத்துகிறீர்கள்; சிங்கப்பூரில் இதற்கெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லுவதில்லை.

    ரமதான் சமயத்தில் துபாயில் இருந்தால் வெளியில் சாப்பிட பயப்படுவீர்கள்;

    ஜெட்டாவில் தலையை துணியால் மூடிக்கொள்ளாமல் எங்கும் செல்ல மாட்டீர்கள்;

    ‘என்னுடைய வெளியூர் தொலைபேசிக் கட்டணத்தை இன்னொருவருக்கு அனுப்பிவிடு’ என்று சொல்லி இந்தியாவில் தொலைபேசி ஊழியரை விலைக்கு வாங்கலாம்; லண்டனில் இது நடக்குமா? காரில் அநாயாசமாக வேக அளவை தாண்டி சென்றுவிட்டு, கேள்வி கேட்கும்  காவல்துறை அதிகாரியிடம், ‘நான் யார் தெரியுமா?’ என்று இந்தியாவில் பெருமை பேசலாம்; வாஷிங்கடனில் முடியுமா?

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்கரைகளில் காலி சாக்லேட் பேப்பரை  குப்பைத் தொட்டிகளில் போடுவீர்கள், இங்கு?

    டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை சாற்றைத் துப்பத் துணிவீர்களா?

    பாஸ்டனில் உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை பரீட்சை எழுத வைக்கவோ, பொய் சர்டிபிகேட் வாங்கவோ உங்களால் முடியுமா?

    இப்போதும் ‘உங்களைப்’ பற்றித்தான் பெசிகொண்டிருக்கிறோம். நீங்கள் மற்ற தேசங்களில் உள்ள சட்டதிட்டங்களுக்கு தலை வணங்குவீர்கள் ஆனால் உங்கள் தேசத்தில் இதைச் செய்ய மாட்டீர்கள்.

    இந்திய மண்ணைத் தொட்டவுடன், சிகரெட் துண்டை, கையிலிருக்கும் துண்டுக் காகிதங்களை வீதியில் வீசி எறிவீர்கள். அந்நிய தேசங்களுக்குப் போய் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு கொண்டு அங்குள்ளவர்களை போற்றத் தெரிந்த உங்களால் உங்கள் தேசத்தில் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? அமெரிக்காவில் ஒவ்வொரு நாய் சொந்தக்காரரும் தெருவில் நாயுடன் நடக்கும்போது, கூடவே கையில் ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துப் போவார்கள். தங்கள் நாய் கக்கா போனவுடன் அதை எடுத்து பையில் போட்டுக் கொள்வார்கள். நம் நாட்டில்  எந்த இந்தியனாவது செய்வானா?

    தேர்தலில் ஓட்டு போட்டவுடன் நம் கடமைகள் முடிந்துவிட்டதாக நினைத்து, வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொள்வோம். அரசு நமக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் நமது பங்களிப்பு வெறும் பூஜ்யம். மாநகராட்சி தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போம், ஆனால் குப்பைகளை தெரு முழுவதும் போடுவது நம் தப்பு என்று உணர மாட்டோம். அல்லது தெருவில் கிடக்கும் ஒரு துண்டு காகிதத்தையாவது எடுத்து குப்பைத் தொட்டியில் போடமாட்டோம்.

    ரயில்வே நிர்வாகம் கழிப்பறைகளை சுத்தமாக வைக்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால் நாம் அவைகளை சரிவர பயன்படுத்த வேண்டும் என்பது நம் பொறுப்பு என்பதை உணர மாட்டோம். விமானப் பயணங்களில் மிகச்சிறந்த உணவு கொடுக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த சோப்பு, ஷாம்பூ இவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. ஆனால் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் இவைகளை திருடக்கூடத் தயங்கமாட்டோம்.

    பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரதட்சிணை, பெண்சிசு கொலை போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக நாம் என்ன செய்கிறோம்? வீட்டில் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு வாய்கிழியப் பேசுவோம். வீட்டில் பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று சிந்திப்போமா?

    இப்படி நடந்துகொள்ள நாம் சொல்லும் சால்ஜாப்புகள் என்ன?

    ‘அமைப்பு மாறவேண்டும், நான் ஒருவன் மாறி என்ன ஆகப்போகிறது?’

    யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார்கள்? இந்த அமைப்பில் அங்கத்தினர்கள் யார்? நம்மைப் பொறுத்தவரை இந்த அமைப்பில் இருப்பவர்கள் நமது அக்கம்பக்கத்தவர்கள், மற்ற வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமூகங்கள் இவை தவிர அரசு. நிச்சயமாக நீங்களும் நானும் இதில் இல்லை.

    உண்மையில் நமக்கு இந்த சமூகத்தை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். ஏதாவது நேர்மறையாக நமது பங்களிப்பை கொடுப்போமா? குடும்பத்துடன் பத்திரமான இடத்திற்கு போய், ஒரு கூண்டுக்குள் ஒளிந்துகொண்டு விடுவோம். யாரோ ஒரு திருவாளர் ‘சுத்தம்’ வந்து தனது கையை ‘விஷுக்’ கென்று வீசி ஏதாவது அற்புதங்கள் செய்ய வேண்டும். அல்லது நாம் வேறு ஏதாவது வெளிதேசத்திற்கு கோழைகள் போல ஓடிவிடுவோம். அமெரிக்காவிற்கு சென்று அவர்களது நாட்டின் அமைப்பைப் புகழுவோம் அவர்களது பெருமையில் குளிர் காய்வோம். நியூயார்க் நகரம் பாதுகாப்பானதாக இல்லையா, ஓடு இங்கிலாந்திற்கு; இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டமா, அடுத்த விமானத்தைப் பிடித்து ஓடு வளைகுடா நாட்டிற்கு; வளைகுடா நாடுகளில் போர் அபாயமா? உடனே இந்திய அரசு ஓடிவந்து உங்களை காப்பாற்றவேண்டும்!

    இங்கிருப்பவர்கள் எல்லோரும் இந்த நாட்டை தூற்றவும், மோசமாகப் பேசவும் தான். யாருக்குமே இந்த நாட்டின் அமைப்பின் மீது அக்கறை இல்லை. நமது மனசாட்சியை பணத்திற்கு அடமானம் வைத்துவிட்டோம்.

    அன்புள்ள இந்தியர்களே, இந்த கட்டுரை உங்களை சிந்திக்க வைக்கவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து கொள்ளவும்தான் எழுதப்படுகிறது. இந்தக் கேள்விகள் உங்கள் மனசாட்சியை கொஞ்சமாவது தட்டி எழுப்பும் என்றுதான்.

    ஜான் எப் கென்னடி சொன்னதை நானும் திரும்பச் சொல்லுகிறேன்: ‘இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும், என்ன செய்தால் அமெரிக்காவும் பிற நாடுகளும் இன்றிருக்கும் நிலைமைக்கு இந்தியா வரமுடியுமோ அதைச் செய்வோம்.’

    இந்தியாவிற்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். இந்தக் கடிதத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் அனுப்புங்கள் – ஜோக்குகள் அனுப்புவதற்குப் பதிலாக!

    நன்றியுடன்,

    அப்துல் கலாம்.

    Share
  • நாடோடிப் பாடல்

     

    கே. ரவி

    10252036_618978758193600_5068132543127217621_n

    நேத்துரா வேளயிலே நீபாத்த பார்வையிலே
    நெஞ்செல்லாம் சல்லடையாப் போச்சுதடீ பொம்மயிலே ஓ! ஓஓஓ!

    காத்துலே பூவாசங் கலந்துவந்து மயக்குதடீ
    கண்ணுக்குள்ளே ஓன்சலங்க கலகலன்னு சிலும்புதடீ
    ஆத்துமணல் படுகையெல்லாம் அணலாக் கொதிக்குதடீ
    அம்மாடீ ஓம்மொவந்தான் அங்கும் இங்கும் தெரியுதடீ
    (நேத்துரா)

    பூத்தநெல வாமனச நான்தொறந்து வச்சீருக்கேன்
    பூப்போலப் பாதம்வச்சுப் பூமுடிக்க வந்தீருநீ
    காத்திருந்து காத்திருந்து காலம்வீ ணாச்சுதடீ
    கண்ணம்மா ஓன்பெயரக் காட்டுக்குயில் கூவதடீ
    (நேத்துரா)

    நிமுந்தா சூரியனாம் குனிஞ்சாத்தான் கும்மிருட்டாம்
    ஒன்னப்பத்தி ஊர்முழுக்கப் பாட்டுக்கட்டிப் பேசுதடீ
    தெரிஞ்சா ஆசப்பட்டேன் தேகத்தயா காதலிச்சேன்
    புரிஞ்சா போதுமடீ பொய்வேசம் ஏதுக்கடீ
    (நேத்துரா)

    கூட்டுக்குள்ள நானிருந்தா கூடமுடி யாதுனுதான்
    பாட்டுக்குள்ள ஏறிகிட்டுப் பாதிவழி வந்துபுட்டேன்
    மீதிவழி நீயிறங்கி மின்னலா வந்துதொடு
    மீறமுடி யாதபடி வார்த்தகளப் போட்டுவச்சேன்.
    (நேத்துரா)

     

    Share
  • நயாகரா நதியே!

    -ரா. பார்த்தசாரதி 

    AmericanFalls

    நயாகராவே நீ  ஒரு  அருவியா?! நதியா?! நங்கையா?!

    நதியையும் நங்கையையும் பற்றி எழுதாத கவிஞன் இல்லை!
    நதியினைக்  காணவரும்  மனிதர்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை! 

    இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே?
    மனிதன் படைத்த  கவிதை…நதியும், நங்கையும் தானே!   

    மேகம் போன்ற மேனியும் இளமைகொண்ட  நங்கைபோலே
    மலைமேடு பள்ளம்மூடி ஓடுகின்றாய்  நாணத்தினாலே!

    நதியே நீயும் ஒரு பெண்தானோ?
    அருவி  எனும்  கூந்தலையும் எழிலையும் காட்டுவதும்  ஏனோ?

    நதியே!  நீ அருவியாய்  நின்று  புன்முறுவல் பூக்கின்றாய்!
    நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேனருவியாய்  வீழ்கின்றாய்!

    நதியே  நீ  நடந்தால்  நங்கை!  குனிந்தால்  குமரியல்லவா!
    எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு தாய் அல்லவா!

    நதியே  நீ  அருவியாய் விழுந்து நதியாய் ஓடிக் கடலில் கலக்கின்றாய்!
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன் வாழ்வில்  கலக்கின்றாள்!

    நதியே நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்!
    நங்கையோ வாழ்க்கை எனும் நதியில் ஒளி பெறுகிறாள்!

    நதியே நீ உறவை நாடிக் கடலில் கலக்கின்றாய்!
    நங்கையோ ஓர்  உறவைத்  தேடி  மனதில் கலக்கின்றாள்!

    வெண்ணிற ஆடையணிந்து வானவில்லை  ஏந்தி நின்றாய்!
    நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய்!

    ஆம்,  நயாகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான்!       

     

    Share
  • உயிரின் இருப்பு!

    -மன்னை சதிரா

    பந்த பாசம்
    சொந்தங்கள்                                                                                            chain-breaking - urin iruppu
    என்று காலம்
    காலமாய்
    இருந்து வந்த
    பாரம்பரியம்
    சிதைந்து போனது!

    இட நெருக்கடி,
    பொருளாதாரச் சூழல்
    மனஸ்தாபங்கள் எனக்
    குடும்பத்தின்
    ஆணிவேர்கள்
    காய்ந்து விட்டது!

    உறவுச் சங்கிலிகளின்
    கண்ணிகள்
    ஒவ்வொன்றாய்
    அறுந்து போனது!

    நீர் நிறைந்து நிறைந்து
    காய்ந்து வற்றிப்போன
    குட்டையில்
    வாழ்ந்ததற்கான
    அடையாளமாய்
    நண்டு ஓட்டின்
    சிதிலங்களும்
    உள்கவியும்
    வாசனையும்
    உயிரின் இருப்பை
    உணர்த்தியது!

    Share
  • நாடு அதை நாடு….

    கவிஞர் காவிரி மைந்தன்

    காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு வேட்டையில் நாட்டம்! அன்று தொடங்கிய நாட்டம் வேட்டையில் மட்டும்! நாட்டில் வாழும் மனிதர்களுக்கோ ஆயிரம் நாட்டங்கள்! அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடுதல் தேவையே!

    நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நமக்கெனப் பொதுவான நாட்டம் இருக்க வேண்டும்!

    சுதந்திர வேட்கை உருவானதும் அப்படித்தான்! மொழியின்மீது நாட்டம்.. தாய்மொழியென்றும் தமிழ்வழியென்றும் நாடுதலும் இஃதே!

    நாட்டின் நலனில் அக்கறை செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. நாட்டின் பாதுகாப்பென்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே உணர்வில்.. உரத்த குரலில் எழுந்து நின்றால்.. பகை திசைமறந்து ஓடும்! எங்கெல்லாம் ஒரு இனம் நசுக்கப்படுகிறதோ.. அங்கெல்லாம் இப்பாடல் தலைமை தாங்கும்!

    வீரம், பண்பாடு, நெறிகள் என அனைத்திலும் தழைத்திடும் நம் பாரத தேசம் – அதன் மாண்புகள் இவையணைத்தையும் ஒற்றைப்பாடலில் கவியரசர் வரைந்துள்ளார் பாருங்கள்!

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அற்புத விளைச்சல்!
    டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா குரல்களில் நாடோடி படப்பாடல்!

    ”நாடு அதை நாடு”
    நாடு அதை நாடு
    அதை நாடாவிட்டால்
    ஏது வீடு?

    பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
    மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
    மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

    பாலைவனம் என்ற போதும் நம் நாடு
    பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
    ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
    வீர சமுதாயமே எங்கள் கூட்டம்

    வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
    வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
    வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
    வெற்றித் திருமாது நடை போடும் எல்லை

    பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
    பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
    நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
    எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்

    திரைப்பாடல் என்பது எப்படி மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்கு இலக்கணமாய் இப்பாடலை வையுங்கள்! ஏதோ எழுதுபவர்களை சற்றே வையுங்கள்! ஒதுக்கி வையுங்கள்!!

    Share
  • திருமால் திருப்புகழ் (89)

     

    கிரேசி மோகன்

    Krishna for today Makhan chor series.  Keshav
    Krishna for today Makhan chor series. Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் அந்தாதி’’
    ————————————

    Kaliyamardhana. Chinese brush. #Krishnafortoday Keshav
    Kaliyamardhana. Chinese brush. #Krishnafortoday
    Keshav

    முந்திவந்து வாய்நிறைய மண்ணினை உண்டபின்,
    அந்தநாள் அன்னை அனுபவித்த, -விந்தையைக்,
    காட்டுவாயா நீயெனக்கு, மாட்டிடையா நானுக்கு,
    ஊட்டிடுவேன் வெண்ணை உவந்து….(51)

    உவந்தன்று பூதனை, ஊட்டிய நஞ்சைக்,
    குவிந்த இதழால் குடித்தோய், -இவன்தன்,
    இதய விஷத்தை, இறக்கி அதனுள்,
    புதிய அமுதாய்ப் புகு….(52)

    புகுந்தன்று, பொய்கை படமெடுத்(த) ஐந்து
    முகம்கொண்ட காளியன் மீது, -வெகுண்டெழுந்(து),
    ஆடிய ஆட்டம், அதற்கீடாய் ஐம்புலன்கள்
    ஆடா(து) அடங்கநீ, ஆடு….(53)

    ஆடிப் பெருக்காகக், கூடிக் குளிக்கு(ம்)ஆயர்,
    பாடி இளம்கோ பியர்கூறை, -வேடிக்கை
    ஆகப் பறித்தவா, மோகத் திரைவிலக்கி,
    யோகநிர்வா ணம்தா எனக்கு….(54)

    ”எனக்கவலைத் தந்தாய் மனக்கவலை தீரும்”
    எனக்குசேலன் நட்புக்(கு) இளகும், -குணக்கடலே,
    மாபாவச் செல்வம் மனதில் சுமக்கின்றேன்,
    கோபாலா, கொள்ளைக்குக் காத்து….(55)
    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

    Share
  • மதுரையில் நடந்தது (35 ஆண்டுகளுக்கு முன்பு)

    இசைக்கவி ரமணன்

    meenadsi-suntharar

    ( பல வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஒரு சம்பவம். இதைப்பற்றி, என் கருத்துக்களோ, விமர்சனங்களோ எதுவும் இடவில்லை. நேரடிப்பதிவு போதும் என்பது என் நம்பிக்கை!)

    மீனாட்சி அம்மன் கோவில். ஆடிவெள்ளிக் கிழமை. அதற்குமேல் வார்த்தைகள் அனாவசியம்!

    நெரிசலில் சிக்கி, எட்டிப்பார்த்து, அத்தனைக் கூச்சல், வியர்வை, அவசரத்தின் நடுவிலும், அந்த இடையொசிந்த அழகியையும், அவள் காலடியில் கிடக்கும் மலரையும், அதில் என்னையும் கண்டு, ஒரு துளி விம்மி, விழிகளின் விளிம்புகள் சூடாகி, காக்கித் தொண்டர்களால் கெளரவமாக விரட்டப்பட்டு, குங்குமத்தை வியர்வை கரைக்க, பிராகாரக் காற்றின் அணைப்பில் வெளிவந்தோம் நானும் நண்பர்களும். ஆசுவாசத்தில்தான் ஆயாசம் தெரிகிறது!

    பொற்றாமரைக் குளத்தின் கரையில் உட்கார்ந்து தேங்காய் மூடியை உடைத்தோம். எதிர்க்கரையில் ஒரு சின்ன கலாட்டா. அத்தனைக் கூட்டத்திலும் தெளிவாய் கவனத்தை ஈர்க்கின்ற அமளி. உடம்பு முழுக்க இறுகிய கோட்டுடன் ஒரு குட்டையான மொட்டை ஆசாமி. பக்கத்தில் ஒரு கிழவி; பல்லில்லை; பிரார்த்தனை மொட்டை. அருகில், சீக்கிரத்தில் இளைஞனாகிவிடப் போகிற ஒரு பயல்.

    கிழவன், தலையிலும் வயிற்றிலும் மாறி மாறி அடித்துக் கொள்கிறான். கிழவி ஓவென்று கத்திக்கத்தி ஒய்கிறாள். பயல் வியர்வையில் விறைத்திருந்தான். அவசரமாய்க் கரையைச் சுற்றிவந்தோம். அதற்குள், அந்த மூவரைச் சுற்றி முளைத்திருந்தது ஒரு சிறு கும்பல். அதையடுத்த விபூதிப் பிள்ளியாரின் மேல், வாரிவாரித் திருநீறைப் போட்டபடிச் சுற்றிவந்த மனிதர்களும், கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொண்டு, தடுமாறிச் சுற்றினார்கள்.

    அந்த மூவரும் ஆந்திராவோ, வங்காளமோ, அசாமோ? இருக்கலாம். பொதுவான பழுப்பேறிய இந்தியக் கருப்பு. போதுமான விவரங்கள் சேகரிக்க முடியாதபடி பாஷை குறுக்கிட்டது. நாட்டில், பசிதான் தேசிய மொழி. அப்படி இப்படி அரைகுறை துபாஜிகளிடம் துருவினால், கொஞ்சம் விவரம் தெரிந்தது.

    images (1)

    மூட்டை முடிச்சுடன் வந்தவர்கள், பயலைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் குளத்தில் இறங்கியிருக்கிறார்கள். பயல், பராக்கு மட்டும் பார்த்துக்கொண்டிருந்த போது, மூட்டையிலிருந்த ஆயிரம் ரூபாயையும், ரெயில்வே பாசையும் எந்தக் களவாணியோ தட்டிக்கொண்டு போய் விட்டான். பிரித்த மூட்டையில், பிழிந்து, உலர்த்தாமல் காய்ந்த துணி விறகுகள்; ஊர் ஊராய்ச் சேர்த்த பிரசாத முடிச்சுக்கள்.

    பொங்கிப் பொங்கி அழுதான் கிழவன். கிழவி, திருடனைப் பார்த்ததாக எண்ணிக்கொண்டு, அவன் வேட்டி, அடையாளங்களை அபிநயித்துக்காட்டி, ‘இதோ, இங்குதான் அவன் சாய்ந்திருந்தான்,’ என்று சுவற்றைக் காட்டினாள். அதன் மேலே, ‘தனம் தரும் கல்வி தரும்’ என்று பட்டர் பாடிப் பக்தர் பதித்திருந்தார்கள். ‘உடனே கோவில் அலுவலகத்தில் முறையிட்டுப் போலீசுக்குச் சொல்லவில்லையா?’ என்று கேட்டது ஒரு காவிப்பல். ‘போலீஸ்’ என்பது கிழவனுக்குப் புரிந்தது. கோட்டை விட்ட பயலை அடிக்க முயன்று தோற்று அவனைத் தள்ளிவிட்டு, ஒரு மூட்டை போலத் துவண்டு துவண்டு ஓடினான். கிழவியின் அபிநயம் ஓய்ந்தபாடில்லை. அவளைப் பார்த்தால் அவன் அவ்வளவு கிழவன் போலத் தெரியவில்லை. சம்பாதித்தே தீரவேண்டிய அத்தியாவசியத்தின் திடம், அவன் வயதின்மீது போர்வை போர்த்தியிருந்தது. பயல், மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். பணம் பறிபோனதைக் காட்டிலும் அது எப்படிப் போனது என்பதை விளக்குவதிலேயே விடாப்பிடியாய் இருந்தாள் கிழவி. மாறி மாறி அதே காட்சிகள்.

    போனவேகத்தில் திரும்பி வந்துவிட்டான் கிழவன். அதிகாரிகள் கைவிரித்துவிட்டார்கள். லயம் மாறாமல் அவன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள, ஸ்ருதி மாறாமல் கிழவி புலம்ப, எதுவும் செய்யாமல் சிலையாயிருந்தான் பயல். ஆயிற்று, கும்பலில் ஆளுக்காள் ஏதேதோ சொல்லத் துவங்கினர். யாரும், பாதிக்கப் பட்டவர்களோடு பேசவில்லை.

    “பாவம் விதி!,” என்றார் ஒரு பெரியவர். அவரிடம் ஒரு தற்காலச் சாமியார்ப் பார்வை இருந்தது.

    “இல்லை ஐயா, இது தெய்வத்தின் சதி!.” என்று குறுக்கிட்டது இன்னொரு குரல். ஓர் அற்பனைப் பார்ப்பதுபோல் திரும்பினார் பெரியவர். அங்கே கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு, மடித்த வேட்டியில், ஒருவர். உள்ளே, துவண்ட கருப்பு மேனி; கத்திக் கண்கள்.

    “தம்பி! கொடுப்பதும் எடுப்பதும் தெய்வத்தின் வேலை!,” என்றார் பெரியவர்.

    “ஆமாம்யா! கூரெயப் பிச்சிகிட்டுத் தெய்வம் கொடுத்ததெப் பாத்தவன் இல்லெ. கோவில்லியே புடுங்கிக்கற தெய்வத்தத்தான் பாக்கோம்,” என்றான் தம்பி.

    இடையே ஒரு பாம்படப் பாட்டி, “ஐயோ! மீனாச்சி! ஒன்னயப் பாக்க வந்தவளுக்கு இந்தக்கதி வேணுமா?” என்று துக்கத்தைப் பங்கிட்டுப் புலம்பினாள். பறிகொடுத்த கிழவி, இவளை அதிசயத்துடன் பார்த்தாள். மொழி புரியாவிட்டாலும், எண்ணம் புரிந்து விட்டது.

    “கர்ம வெனெயப் பத்திப் புரிஞ்சுக்கற அறிவு ஒனக்குக் கெடெயாது தம்பி!,” என்றார் பெரியவர்.

    “என்ன சாமி கெடந்து இளுத்துகிட்டே போறீவ? ஓடா ஒழச்சி வாயக்கட்டி வயித்தக்கட்டி ஒருத்தன் சம்பாதிக்கான். அத ஒரு களவாணிப்பய லவட்டிக்கிட்டுப் போராண். இதென்ன கர்மமா வெனயா?” என்றான் ஆத்திரமாக.

    “கர்மம்,” என்றார் பெரியவர் கம்பீரமாக. தம்பி, தலையில் அடித்துக் கொண்டான். சிலர் இதை ரசித்தனர்; சிலர் முணுமுணுத்தனர். ஆனால், இதில் அடுத்த கட்டம் என்னவென்று பார்ப்பதில் ஆர்வம் மேலிட்டு, நகராமல் நின்றனர்.

    அங்கே கிழவன், “மாயீ! துர்க்கே!” என்று புலம்பியபடி விமானத்தைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடு போட்டான்; குமுறி அழுதான்; பயலைக் கட்டிகொண்டு தூணோரம் சரிந்தான்.

    இங்கே, பெரியவருக்கு ரத்த அழுத்தம் அவ்வளவு சீராக இல்லை போலும், “ஒனக்கென்னடா தெரியும் தெய்வக் குத்தத்தப் பத்தி,” என்று சீறினார். பதிலுக்குத் தம்பி சொன்ன வார்த்தைகளை இணையத்தில் இடுவதற்கில்லை! கும்பல் மேலும் வம்புக்காகக் காத்திருந்தபோது, அந்தப் பாம்படப் பாட்டி, குரலைத் தூக்கினாள்:

    “என்ன ஆளய்யா நீங்க? ஒடயவன் பறிகொடுத்து நிக்கான்! ஆளுக்காளு ஒங்களுக்குள்ள என்ன அக்கப்போரு? என்ன பஞ்சாயத்து? அஞ்சோ பத்தோ அம்புட்டுப் பேருமாச் சேந்து மனசாரக் கொடுத்தமின்னா அவிக ஊருபோயாச்சம் சேருவாங்க இல்ல? அத விட்டுப்போட்டு இங்கிட்டு என்ன கரச்சல் வேண்டிக் கெடக்கு? இந்தா நான் தாரேன் ரெண்டு ரூவா! ஏதோ அந்தப் பயபுள்ளக்கு மிச்சருக்காவது ஆகும். வெட்டிப் பேச்சுப் பேசாமெ வேட்டியப் பிரிச்சுக் கொடுப்பீயளா..?” என்று பாம்படப் பாட்டி வெற்றிலைச் சுருக்கைப் பிரித்து ரூபாய்த் தாளை எடுத்தாள்.

    “ஈஸ்வரா,” என்று நகர்ந்தார் பெரியவர். பாட்டியை முறைத்தபடிப் பெரியவரை முந்தினான் தம்பி. தோசைக் கல்லில் விழுந்த வெண்ணைத் துளி போலக் கும்பல் பரவி மறைந்தது. பாட்டி எல்லோரையும் பார்வையால் எரித்தாள்.

    சரிந்த கிழவன் திடீரென்று அலையலையாய் அழ, கிழவிக்கு மூச்சுமுட்ட, பயல்முகம் பயங்கரமாகக் கறுக்க, பாம்படப் பாட்டி தழுதழுக்க எல்லாம் ஏதோ கண்ணாடி அறைக்குள் நிகழும் சத்தமற்ற சலனங்களாகத் தொய்ந்துகொண்டே போக..

    ஒரு சின்னக் குழந்தை கை நிறையத் திருநீற்றை வாரி அந்த விபூதிப் பிள்ளையார் மீது போட்டது.

    திறந்திருந்த அவர் கண்கள் முழுதும் திருநீறு மறைத்திருந்தது..

    ரமணன்

     

    Share
  • சிவரமணிக்கு

     

    ரிஷான்

     

    சிவரமணிக்கு…

     

    உன்னிடமொன்றைச் சொல்லும்59255_605371066139667_518905472_n

    தேவை எனக்கிருக்கிறது

    எனினும் நான் வாய் திறக்கும்வரை

    பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்

    உன்னைப் பார்க்கவென

    நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்

    அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்

     

    அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்

    உனை நான் இதயத்தில் உருவகித்தபடி

    போய்க் கொண்டிருந்தேன்

    எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்

    இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து

    உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்

     

    அந்தகாரத்துக்குள் பிறந்த நான்

    அந்தகாரத்துக்குள் பிறந்த நீ

    ஒருவரையொருவர் அறிந்துகொள்வோமென்று ஐயமுற்ற அவர்கள்

    இறுதித் தாரகையையும் தூள்தூளாக்கினர்

    நிரந்தரமான இருளுக்குள்ளேயே

    எங்களைப் பிரித்துக் கொன்றுபோட்டனர்

     

    இப்பொழுது பிணங்கள்

    கரையொதுங்குகையில்

    நீயும் நானும்

    தற்கொலை செய்துகொண்டதாக அறிவிப்பார்கள்

     

    நீ வடக்கிலும், நான் தெற்கிலும்

    இன்னும் நிரப்பப்படாத

    பொதுக் கல்லறைகள் இரண்டினுள்ளே

    வெவ்வேறாக படுத்திருப்போம்

     

    இக் குளிர்ந்த நிலக் கருவறைக்குள்ளே இடைவெளியானது

    பிணங்களாலும் இருளினாலும் நிறைந்திருக்கிறது

     

    சிவரமணி, அன்பிற்குரிய சகோதரி

    வடக்கிலும் தெற்கிலும்

    புதைக்கப்பட்ட அனேகரோடும்

    இன்னும் நிறைய நாட்கள்

    இங்கு நாங்கள் அமைதியாகச் சாய்ந்திருப்போம்

     

    சகோதர விழிகளிலிருந்து உதிரும்

    உஷ்ணக் கண்ணீர்த் துளியொன்று வந்து

    எமது குளிர்ந்த நெற்றியை மெதுவாக முத்தமிட்டு

    இம் மரணத்தின் தொடர்ச்சி

    இத்தோடு முடிந்துவிட்டதென உத்தரவாதமளித்து

    எம்மை மீண்டும்

    வாழ்க்கையை நோக்கி அழைக்கும்வரை

    நாமிங்கு அமைதியாகச் சாய்ந்திருப்போம்

     

    ஏனெனில் மரணத்துக்கு முன்னர்

    நீ இவ்வாறு எழுதியிருக்கிறாய்

     

    “ஆனால்

    நான் வாழ்ந்தேன்

    வாழ்நாளெல்லாம் நானாக

    இருள் நிறைந்த

    பயங்கரங்களின் ஊடாக

    நான் வாழ்ந்தேன்

    இன்னும் வாழ்கிறேன்.”

     

    – அஜித் சி. ஹேரத்

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

     

     

    Share
  • வாழ்க்கையெனும் பள்ளியிலே

    இசைக்கவி ரமணன்

    1, கண்விழிப்பு

    இயற்கை சேதி சொல்லும்

    வாழ்க்கை பாடம் புகட்டும்..

    10312554_10152094623552919_2699388480590915909_n

    உலகம் ஓயாமல் சுழன்றுகொண்டே இருக்கிறது; ஒழியாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது. வீதிகளற்ற வானத்தில்தான் எதற்கு இத்தனை இயக்கங்கள்! வெட்டவெளிப் பொட்டலிலே கொட்டிக்கிடக்கும் வைரக்குவைகள்! ஆ! வெட்டவெளி¢, பொட்டலில்லை! ஒரு மகாகவியின் கற்பனைபோல், கணந்தோறும் விரிந்துகொண்டே இருக்கும் அண்டத்தில், வாழ்க்கை என்னும் வீம்பின் முரசம், பொட்டலைப் பூஞ்சோலையாக்கியிருக்கிறது. அதோ, முந்திவந்துவிட்ட அந்தக் குளிர்வீசும் முழுநிலவிலிருந்து, இந்த விரலளவுப் பறவைவரை ஒரே கரம்தான் ஆக்கியிருக்கிறது. இந்த முழுவானத்தின் மூச்சிலிருந்து, அந்தச் சின்னஞ்சிறு பூச்சியின் இதயத் துடிப்பு வரை ஒரே நோக்கம்தான் தொனித்துக் கொண்டிருக்கிறது.

    மொட்டை மாடியில் உள்ளங்கைகளைச் சேர்த்துத் தலையணையாக்கி நீல விதானத்தை மூலைக்கு மூலை பார்த்தாலும் வாழத்தலைப்படும் விசைப்புத்தான் வாசகமாகப் பதிந்திருக்கிறது. ‘சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு குமிழ்,’ என்பான் பாரதி. பிரபஞ்சத்தின் விரிவைக் கற்பனையில் சுருக்கப் பார்த்தாலும் உலகம் தூசளவு கூட இல்லை. இதில் எத்தனை நான்கள் நீக்கள் அவர்கள் அவைகள்! அண்டத்தின் விரிவும், ‘முடிந்தால் என்னைப் புரிந்துகொள்’ என்ற பாவனையில் ஒரு முழுநேரச் சவாலாய் அது இறைந்து கிடப்பதும் என்னை நிர்மூலமாக்கி விட்டது. இத்தனைப் பெரிய இருப்பில், நான் பரிகசிக்கத்தக்க இன்மையா? இல்லை; அப்படி இருந்தால், இந்தச் சித்தம் போதாத நிம்மதி எனக்கு வாய்த்திருக்குமா? அறிவென்று கொண்ட கயிறுகள் அறுந்தன; கண்ணாடி காட்டும் அம்மணம் போலத் தெரிந்த அறியாமையின் நிதர்சனத்தில் ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்.’

    அறிவே சிம்மசொப்பனம்

    அறியாமை சிம்மாசனம்!

    சோறுதின்ன அடம்பிடித்த வேளையில், அம்மா என்னெல்லாம் கதைசொன்னாள்! ‘அதோ பார்! நிலா அந்தத் தென்னங் கீற்றில் வந்து உட்கார்ந்துகொண்டு உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது!.’ அட ஆமாம்! அப்படித்தானே இருந்தது, இந்த அறிவு என்னும் காற்றுவந்து அசைக்கும் வரை!

    மறுபடி மறுபடி ஒரே காட்சிதான். பாசையால் கட்டுண்டு அசையாமல் கிடக்கும் குளம். அதன் அடர்த்தியும், நிலைப்பும் ஈர்க்கின்றன. அதில், முகம் தெரிவதற்கில்லை. அதுவே முகமாகத் தெரிகிறது. என் முகம் கரைந்து அதனோடு கலக்கும் தருணம், எங்கிருந்தோ ஒரு கல் வந்து அதன் மையத்தில் விழுந்தது.

    அப்போது துவங்கிய அலைகள் இன்னமும் நிற்கவில்லை. சுருள்சுருளாக, வளையம் வளையமாக அவை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

    ஆடாத கொளத்துத் தண்ணி

    அறியாம எறிஞ்சகல்லு

    ஆளெத் தொரத்துதம்மா அலையலையாக…

    பூமியில் புதைந்து கிடக்கிறது வித்து. உயிர், அதிலே உறங்கிக்கொண்டிருக்கிறதா, அல்லது ஏதேனும் ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதா என்று நிர்ணயிக்க முடியாது. விண்ணிலிருந்து வருகிறது மழை. ஏதோ ஒரு துளி உள்ளே நுழைந்து உயிர் விழிக்கிறது, அல்லது சிலிர்க்கிறது.

    வினாக்குறியோடுதான் விதை முளைக்கிறது. ஒரு சித்திரச் சோலையையே உள்ளடக்கி இருக்கும் சிறுவிதையை எப்படிப் புதைத்தாலும், அது விழிப்புற்றதும் தலைதூக்கிப் பார்ப்பது பிரபஞ்சத்தைத்தான். அதன் கேள்வி, வையத்தைக் கண்டபின் எழுந்ததா, இல்லை அதன் விழிப்பு வினாவுக்குப் பின்பே ஏற்பட்டதா தெரியவில்லை. ஆனால், முரட்டு மண் சற்றே வெடிக்குமளவுக்கு ஒரு மூர்க்கம் இந்தச் சின்ன விதையில் எப்படி நேர்ந்தது? இன்று, கேள்வியே தன் வடிவாக அது நிற்பதன் தத்துவம்தான் என்ன? தொடரும் இலைகளும், கிளைகளும், அட ரகசிய வேர்களும் கூட அந்தக் கேள்வியின் விரிவுதானா?

    பல்வேறு கேள்விகள் போல் தோன்றுகிறதேயொழிய, கேள்வி என்பது ஒன்றுதான். அதனால்தான், அது ஆயிரக்கணக்கான பதில்களாலும் திருப்தியுறுவதில்லை. கேள்வி, ஒருபோதும் பதில்களால் தீராது. ஒரு நட்சத்திரம் போலவே, கேள்வியும் வெடித்துத் தோன்றி வெடித்துத்தான் மறையவேண்டும். என்றோ வாழ்ந்து முடிந்துவிட்ட விண்மீனின் ஒளி இன்றும் காணப்படுகிறதல்லவா? கேள்விக்கு இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறது. உள்ளே எழுந்த கேள்விக்கு விடை, வெளியே இருக்க முடியாது. அறவே விடை தெரியாமல் எழுவதில்லை வினா.

    விடை என்பது, வினாவுக்கு வெளியே இருப்பதற்கில்லை.

    இதைத்தான் வாழ்க்கையென்னும் பள்ளியில் கற்க வேண்டும். வாழ்க்கை, விபத்தன்று, ஒப்பற்ற வாய்ப்பு. அதற்கு முன்னும், பின்னும் என்ன என்பது நமக்கு அனுபவத்தில் வரவில்லை, கேள்விப்பட்டதுதான். எனவே, எந்தத் தகவலும் நெய்யாகி கேள்வியென்பது வேள்வித் தீயாய் வளர்கிறது! வாய்விட்டுக் கேட்பதற்கும் கேள்வி என்றுதான் பெயர். காதாரக் கேட்பதற்கும் கேள்வி என்றுதான் பெயர். இதற்கிடையே நெஞ்சில் நிரந்தரமாய் நின்றுவிட்ட நெருடலுக்கும் கூடக் கேள்வியென்றுதான் பெயர்!

    புறவாழ்க்கை என்கின்ற பொன்னான வாய்ப்பு, அகத்தின் கேள்வியைத் தகர்க்கக் கற்றுத் தருகிறது. இந்த வாழ்க்கை என்னும் பள்ளியில் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! எந்தப் புறமும், எந்தக் கணமும் சேதிகளும், பாடங்களும் — விழைவுள்ள இதயம் தேடித் ததும்பிக் கொண்டிருக்கும் இந்த அழகான, விசாலமான — வகுப்பு, மதிப்பெண் போன்ற வம்பில்லாத பள்ளியில் நுழைந்து பார்க்கத்தான், இல்லையில்லை, கேட்கத்தான், தடையேது?!

    ***

    2. புலரிச் சேதிகள்

    ஓ! தெய்வீகக் காலையே!

    பறவைகள் கூடுவிட்டுப்

    பறக்கின்ற நேரம்

    உழைக்க விழிக்க வேண்டும் மனிதர்கள்!

    உயிரின் தேவைகள் நிறையவேண்டும்!!

    (ரிக்வேதம்:06:64:06)

    உஷையே! நீ புலர்கின்ற கணத்தை வசப்படுத்த முடியாமல் எங்கள் கவிதைகள் தோற்றன என்று கைவிரிக்கின்றன மறைகள். மையிருட்டிலே நீலச் சாம்பல் பூப்பது எந்தக் கணப்பின் சூட்டினால்? புலர்வு என்பது எந்தக் கணத்தின் நிகழ்வு? வெளியில் மட்டுமல்ல, நம்மிலும்தான் துயில் நீங்கி விழிப்பு நேரும் கணத்தை வகுக்க முடியுமா? வெளியே பூட்டு; உள்ளே சாவி; இதுதானே வைகறையின் நித்தியப் பரிகாசம்?! விழித்தால்தானே உறங்கியது புரிகிறது? அம்பலத்தில் ரகசியத்தை வைத்து வேடிக்கை பார்க்கிறது படைப்பு!

    ஆக, அதிகாலை, எந்தக் கேள்விக்கும் பதிலல்ல, புதிருமல்ல. அது விடிவு. அதைத்தான் தரிசனம் என்று கொண்டாடுகின்றன வையத்து வாழும் உயிர்கள்.

    காலை புலரும் கணம் நமக்குத் தெரியாதுதான். உறங்காமல் விழித்திருந்து பார்த்தாலும் அந்தக் கணம் கண்ணுக்குத் தென்படாதுதான். ஆனால், பறவைகளுக்கு இந்த ரகசியம் தெரிந்திருக்கிறது. கூடுகளில் துவங்கும் சலசலப்பும், புலரியின் முதற்கணமும் பொருந்துகின்றன. ஆனால், காடுகளில் ஒரு பொய்ப்புலரி உண்டு. விடியல் நேராமலேயே வானில் வெளிச்சம்போல் ஒன்று தோன்றுவதைக் கண்டு பறவைகள் குரல்தூக்கும். மீண்டும் இருள் வந்துவிடும். வெட்கிய புள்ளினம் மார்பின் இறகுகளுக்குள் முகத்தை இறுகப் புதைத்துக் கொள்ளும். எது எப்படி இருந்தாலும், பறவைகளுக்குப் பகலவன் வரவு முன்கூட்டியே தெரியும். தங்கள் சின்னஞ்சிறு நெஞ்சங்களிலிருந்து உயிரைக் கானமாய்க் கரைத்துப் பாடும் பறவைகளின் குரல்கேட்கவே கதிரவன் எழுந்து வருகிறான் என்றே சொல்லத் தோன்றும்.

    கதிரவனின் முதற்கிரணங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவை, முதலில் உயிரை வருடிப் பிறகே உடலைத் தொடுகின்றன, மழை போல! கட்டிடங்களும் தூங்குகின்றன என்பது அந்தத் தருணத்தில்தான் தெரிகிறது! மரங்கள், இமையுயர்த்திக் கிழக்கைப் பார்க்கின்றன. மொட்டு, முகையவிழ்ந்த உல்லாசத்திற்குப் பனிமுத்தம் பெற்று, அழகில் ஆயாசம் சேர்த்துக்கொள்கிறது. குடிசையிலிருந்து எழுந்து நிற்கும் புகை, கொடியசைப்பாய்ப் படுகிறது. சேவலின் கூவலில் சேதி தெரிந்த கர்வம் இருக்கிறது. வைகைறை மர்மம் எனக்குத் தெரியும் என்றுதான் அது மார்புயர்த்திச் சிறகுகளை அடித்துக்கொண்டு, சிவந்த கண்களால் பார்க்கிறது. களைத்த அலைகள் கரையில் தொப்பென்று விழுகின்றன. கடலின் நட்ட நடுவில் தங்கப் பாதை தோன்றுகிறது; அது வெள்ளிச் சரிகையாவதற்குள் கட்டு மரங்கள் நெடுந்தூரம் சென்றுவிடுகின்றன. சில, திரும்பி வருகின்றன. மண், சற்றே வியர்த்ததுபோலிருக்கிறது. எருமைகள் வால் விசிறிக் கொண்டிருக்கின்றன. கொசுக்கள் தூங்கப் போயின. ஏதோவொரு சேதியுடன், வீதியில் நுழைகிறது காற்று. நோயாளிக்கு ஒவ்வொரு நாளும் இதுதான் உயிருக்கு ஒத்தடம் தரும் மருந்துக் கணம். இரைதேடப் பறக்கும் முன், எல்லாப் பறவைகளும் உற்றுப் பார்க்கின்றன கிழக்கை. பிறகு, நேற்று மாலை விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்குகின்றன. வயசாளி, திண்ணையில் அமர்ந்து வாழ்க்கையைப் பார்க்கிறார். ஓ! நினைவில் நீந்தவும் வெளிச்சம் தேவைப்படுகிறது!

    மேலுலகிற் தான்பிறந்த

    வானுலகின் வண்ணமகள்

    வரும்போதே இருள்விரட்டி

    வருகின்றாள்!

    ஆழ்துயிலில் புதைந்திருக்கும்

    மானுடரை எழுப்புகிறாள்!

    தேசு மிகுந்த தன்

    தெளிவழகால் இவள்

    துன்ப இருளைத்

    தொலைக்கக் காணுகின்றோம்

    உறுத்தும் இருளை

    ஊடுருவி ஊடுருவி..

    (ரிக்வேதம்:07:41:07)

    காலை வரும்போதே, துயிற்சுருளில் தொலைந்துபோன மனம், மறுபடி மேலே வருகிறது. காலை என்ற ஒன்று இல்லையென்றால், உலகத்தில் வேலை இல்லை. ஏன், வாழ்க்கையே இல்லை. உடம்பில் உயிரும், சித்தத்தில் பிரக்ஞையும் காலையின் கொடைகள். அறிவு, கதிரவனின் ஈகை. காலை இல்லாமல் காட்சி எங்கே? காட்சி இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. உயிரின் நடப்பே உலகத்தின் நடப்பு. அந்த உயிரின் ஒளி, காலையிலிருந்தே பெறப்படுகிறது.

    நிதானமாய் விரைக! இந்த மர்மம் பொலிந்த திறமை, விடியலுக்கு இயல்பு. அதோ, அந்தப் பட்டிக்காட்டுக் குரலைக் கேளுங்கள்:

    ஓர முள்ளுக் காட்டுக்குள்ள

    ஒத்தக் குயில் கூவையிலே

    நெட்டுக்குக் கெழக்குப்பக்கம் செவக்கும்! பொழுது

    நிமிசம் நிமிசமா விடியும்..

    ஆம், ஒவ்வொரு நிமிடமும் தலைப்பு மாற்றிக் கொள்கிறது வானப் புடவை. மஞ்சள், வெண்மையாய் மாறுவதற்குள் முடிந்து விடுகிறது சூக்குமம். அதன்பிறகு தொடர்ந்த வெள்ளோட்டமே! ஒவ்வொரு நாளும் புதிதாய்த் தெரிவதற்கும், ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையின் வாசகமாய் மானுடம் எதிர்நோக்குவதற்கும், காலையின் உயிரொளியே காரணம். நேற்றைய பிரச்சினைகள் இன்று இல்லாமற் போவதில்லை. ஆனால், நேற்று தோன்றாத தீர்வுகள் இன்று துளிர்க்குமென்ற நம்பிக்கையைக் காலைதானே தருகிறது! நிகழ்ந்த துயரம் அப்படியே இருக்க, நேர்ந்த சுமைமட்டும் விலகிவிடக் காரணம், வைகறையின் ஆதுரக் கரங்கள்தான்! இன்றிலிருந்து எல்லாம் சரியாகி விடும் என்று தினமும் நமக்குத் தோன்றுவது, அறிவாலோ, ஆருடத்தாலோ அல்ல, அனைவருக்கும் பொதுவாய், அனைத்துக்கும் ஏதுவாய், நடுவானில் சுழலும் ஒளித்திகிரியன்றோ காரணம்! புதிய துவக்கம் என்ற எதிர்பார்ப்பை, சாத்தியத்தை ஏற்படுத்துவது கண்வழியே நுழைந்து உயிரில் விளக்கேற்றும் சூரியனின் அருளன்றோ! எத்தனை யுகங்களாய் இந்தக் கதிரவன் கணம்பிசகாமல் கீழைத் திசையிலிருந்து கிரணங்களை விரித்தபடி எழுகிறானே! இது, புதுமையா, பழமையா?

    எது உயிருக்கு விசைப்புத் தருகிறதோ, எது உள்ளத்திற்கு ஊக்கம் வழங்குகிறதோ. எது கண்களுக்கு வெளிச்சம் இடுகிறதோ, எது நம்பிக்கைக்கு ஆதாரமாய் விளங்குகிறதோ அந்தப் பழமைதான் புதுமை! நம்மை எதெல்லாம் பலவீனப்படுத்துமோ, அவையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டிய பழமை.

    இப்படிப்பட்ட அற்புதக் காலையை, இன்பச் சேதிகளாக அள்ளித்தரும் கோலவெழிலைக் காணாமல் அனாதைப் பிணம்போல் துப்பட்டியில் தலைமூடிக்கொண்டு படுத்திருக்கலாமா? பறவைகளும், பாமரரும் காலை என்னும் எழிலோவியத்தின் அங்கங்களாகவே திகழ்கிறார்கள். இந்த அறைகூவலெல்லாம் ‘அனைத்தும் அறிந்த’ நமக்கே!

    காலைக் கவிதையை

    காக்கை ரசிக்கிறது

    என்று ஊசிகுத்துகிறார் கவிஞர் இலந்தை ராமசாமி.

    எழுக மன்னுலகே! எழுக மானிடமே! கடலில் குளித்தெழுந்த உஷையின் ஒப்பற்ற பேரெழிலைக் காணுமினோ! கண்ணில் தென்பட்ட கிரணங்கள், காலைப் பனியைக் கவர்ந்துகொள்ளும். உயிரில் நுழைந்த கதிர்கள், உள்ளத்தின் இருளை விலக்கும்.

    வாழ்க்கையென்னும் பள்ளியிலே காலைதான் முதல்மணி!

    *************************

    3. காக்கை குருவி

    காவென்று கத்திடுங் காக்கை – எந்தன்

    கண்ணுக் கினிய கருநிறக் காக்கை

    (பாரதியார்)

    கருப்பு கண்ணுக்கினிமையானதற்குக் காரணம் காக்கைதான். கண்ணன் நினைவு பிற்பாடு வந்ததுதான்! ‘காக்கை குருவி எங்கள் சாதி,’ என்று கவிஞர் மார்தட்டுவது சரிதான். இவையிரண்டும்தான் வீட்டுப் பறவைகள். என்றால், இவற்றை நாம் வளர்ப்பதில்லை. மாறாக, நம் வாழ்க்கைக்கு அவை எழில் சேர்க்கின்றன. கோழி, தின்பதற்காகத் தீனிபோட்டு வளர்க்கப் படுவது; மைனாவுக்கோ நமக்கு நாகரிகம் போதாது என்பதாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அது பலகுரல்களில் நம்மைப் பற்றி வம்பளப்பதை நான் கேட்டிருக்கிறேன். எப்போதோ குறுக்கே கிரீச்சிட்டுப் பறக்கின்ற கிளிகளோ நம்மை ஒரு ஜந்துவாகக் கூட மதிப்பதில்லை. இரட்டைவால் கருங்குருவி மின்சாரக் கம்பத்தை விட்டு இறங்கினால் அது விட்டில் பூச்சியைப் பிடிப்பதற்காகத்தான். எழுத்து மறையும் அந்தி நேரத்தில் வானில் இங்குமங்கும் அது பாய்ந்து பாய்ந்து பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களோ? நம் கண்ணுக்குப் பறவையே தெரியாது, அது கொத்திக்கொள்ளும் பூச்சியா தென்படப் போகிறது?! இவற்றில் எந்தப் பறவையும் வீட்டுக்குள் நுழைவதில்லை.

    காக்கையும், குருவியும்தான் நம்மோடு வாழ்பவை. காவல் நாயும் சரி, தெருநாயும் சரி, யார் வந்தாலும் குரைப்பது போல், இந்த இரண்டு பறவைகளும் அப்படித்தான். நகரங்களில், நம்மை எழுப்புவது சேவலல்ல, காக்கைதான். எழுந்தவுடனேயே அது காட்டும் பரபரப்பைப் பார்த்தால் இது எப்படித் தூங்கும் என்றே கேள்வி எழுகிறது. எஃகு அலகு; எண்ணெய்ப் பளபளப்பு. நான்கு வயதில், காக்கை-வடைக் கதையை எனக்கும் சொன்னார்கள். வீட்டிலே வடைபோட்டிருந்தார்கள். ஒருகையால் எப்போதும் முரண்டுபிடிக்கும் அரைநிஜாரைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் வடையை ஏந்தி ‘கா..கா..’ என்று கூவியதும் அலகால் அது தோள்பட்டையில் ஒரு கொத்துக் கொத்தி வடையைக் கவ்விக்கொண்டு பறந்தது. வெகுநாட்களுக்கு அந்த விழுப்புண் தோளில் இருந்தது. ஆனால், எனக்குக் காக்கை மீது எந்தக் கோபமும் கிடையாது.

    ஏதாவது கொடுப்பதாயிருந்தால் அதை விட்டுவிட வேண்டும்; கையில் வைத்துக்கொண்டு கூவுவது கொடுத்ததாகாது, அது அநாகரிகம் என்பதுதான் வாழ்க்கை என்னும் பள்ளியில் நான் கற்ற முதற்பாடம். அதைக் காக்காய்தானே சொல்லித் தந்தது!

    இப்போதெல்லாம் அதற்கு வீட்டில் விசேடமான ஏற்பாடு. எவர்சில்வர் தட்டொன்றை இரும்பு வளையத்தில் இறுகச் செருகி வைத்திருக்கிறது; அடுத்தொரு சின்ன வளையம். அதில் ஓர் அகலக் கிண்ணத்தில் தண்ணீர் வைத்திருக்கிறது. கூவவெல்லாம் வேண்டியதில்லை. நாம் தட்டின் அருகே வருவதை ஆயிரம் கண்கள் பார்க்கின்றன. காக்காய்க்கு அரைப்பார்வையா, யார் சொன்னது? ராமாயணத்தில் வரும் அசுரனுக்கும், எம்மோடிருக்கும் வன்னக் காக்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நேரம் தாமதமானால், நேரே வந்து தட்டைத்தட்டும். காலைப் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தோமானால், நம்மை ‘என்ன இன்னும் ஒண்ணும் காணும்? காப்பி மட்டும் சரியாய் நடக்கிறதோ?’ என்பதுபோல் பார்க்கும். உடனே உள்ளே சென்று அதற்கென்றே தினந்தினமும் வாங்கிவைக்கும் ரொட்டியைத் துண்டுதுண்டுகளாகச் செய்து போடுவோம். ஒவ்வொரு காக்கையாய்த்தான் தின்கிறது, நான்கைந்து சேர்ந்து வந்தாலும். இடநெருக்கடி மட்டுமன்று, இதில் அழகான முறைமை ஒன்றிருக்கிறது. சில, ஒரு துண்டோடு ஓடிவிடும். இன்னும் சில, ஒவ்வொன்றாய்ப் பல துண்டுகளை அடுக்கிக்கொள்ளும்! ஆனால், ஒவ்வொரு காக்கையும் ரொட்டித் துண்டை, பக்கத்திலிருக்கும் கிண்ணத்துத் தண்ணீரில் நனைத்து மென்மைப்படுத்திக்கொண்டுதான் பறக்கும்! அவ்வப்போது, தட்டையும், கிண்ணத்தையும் கழுவிப் பளபளவென்று வைத்தால், காக்கைக்கு மகிழ்ச்சியுண்டு.

    மாடத்தில் உட்கார்ந்தபடி, ஏதேனும் கொஞ்சம் கொறித்தபடிக் காப்பி அருந்தும்போது, வந்து கிராதியில் உட்கார்ந்து, கழுத்தைச் சாய்த்து ஏக்கமாய்ப் பார்க்கும். அப்புறம் என்ன? 60% அதற்கு, மிச்சம் நமக்கு! பின்புறச் சுவர் அவை வரிசையாய் உட்கார வாகாயிருக்கிறது. அங்கே சிறப்பு என்னவென்றால், என் மனைவியின் கையிலிருந்து நேரே வாங்கித் தின்னும். அவளிழுக்க, அதுவிழுக்க பார்க்கவே சுவாரசியமாக இருக்கும். சிலநேரம், வெறும் ரொட்டிதானா என்று போராட்டம் நடத்தும். வேறெதாவது கொண்டுவந்தபின்தான், மறுபடி ரொட்டியைத் தொடும். சாதமும், பருப்பும், நெய்யும் கலந்துவைத்தால் காக்கைக்குப் பிடிக்கும். நெய் ரொம்பப் பிடிக்கும். ஆளில்லாத நேரத்தில், உணவு மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் நெய்ப் பாத்திரத்தை லாகவமாகத் திறந்து நெய்யுண்டு மகிழும்!

    ரொம்ப நாளாக ஒரு நொண்டிக் காகம் வீட்டுக்கு வந்துபோகும். அதற்கு மற்ற காகங்கள் சிரத்தையோடு பணிவிடை செய்வதைப் பலமுறை கண்டு அதிசயித்து நின்றிருக்கிறேன். என்னால் மறக்க முடியாத காட்சியது.

    கூடுகட்டிவிட்டால், காக்கைக்குக் குணம்மாறிவிடுகிறது. நம்மைக் கண்டாலே பிடிக்காமல் போகிறது. உணவெடுக்கும் போதும் முரட்டுத்தனமாகவே இருக்கிறது. நாம் வெளியே வந்தாலே, கூட்டைக் கலைத்து விடுவோம், குஞ்சுகளைக் கொன்றுவிடுவோம் என்று சந்தேகம் கொண்டு, பயங்கரமாகக் கூச்சலிடுகிறது. அலகால், இப்படியும் அப்படியும் மரத்தைக் கொத்திக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. தாயின் உணர்ச்சிகளை, பரிதவிப்பைக் காக்கை மூலம்தான் புரிந்துகொண்டேன். அந்த நேரங்களில் மொட்டை மாடிக்குப் போவதானால் ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்வதே நலம்! பருந்துக்கும் பேறுக்காலம் அதுதான் போலும்; அதுவும் தலையில் கொத்தத் தயங்குவதேயில்லை!

    ‘ஏன் இந்தப் பறவைகள் எல்லாம் அழகில்லாமல் இருக்கின்றன?’ என்பது காக்கையிடம் பொதுவாயிருக்கும் கேள்வி. அது எந்தப் பறவையையும் விரட்டுவது, பேட்டைத் தகராற்றினால் இல்லை. அழகுணர்ச்சிப் பிரச்சினைதான்! சும்மா இல்லாமல் கழுகை விரட்டக் கிளம்பிவிடும். கழுகு, உருவத்திலும், வலுவிலும் பெரியது என்றாலும், காக்காயைத் திருப்பித் தாக்காது. ஏனென்றால், காக்கை, கூட்டத்தோடு வரும். ஒரு பெரிய ரெளடிக் கும்பலைச் சமாளிக்கும் வலிமையெல்லாம் கழுகுக்குக் கிடையாது. காகமோ விடாமல் துரத்தும். கழுகென்ன செய்யும்? வட்டமிட்டு வட்டமிட்டுப் பறந்து மெல்ல மெல்ல, ஒவ்வொரு வட்டத்திற்கும் கொஞ்சம் உயரத்தை ஏற்றிக்கொண்டே செல்லும். அவ்வளவுதான்! ஒரு கட்டத்தில், தலைசுற்றிப்போய், உயரத்திலிருந்து காக்கை பறக்க முடியாமல் அந்தரத்தில் பல்டியடித்துக்கொண்டு விழும். கிட்டத்தட்ட மோதிச் சுக்குநூறாகிவிடும் தருணத்தில் எப்படியோ சமாளித்துக்கொண்டு, ஏதாவதொரு மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு, மலங்க மலங்க முழித்தபடிக் கொஞ்சநேரம் இருக்கும். இதேபோல், அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு நடுவில், காற்றழுத்த மாற்றங்கள் உள்ள இடங்கள் உள்ளன. பறந்துவரும் காக்கை அங்கே சிக்கிக்கொண்டு தலைகுப்புற விழும்! எப்படியோ சமாளித்து விடுவதுதான் காக்கை கற்றுக் கொடுக்கும் சாமர்த்தியம்.

    காக்கைக்கு இயற்கையில் மரணமில்லை, விபத்தால்தான் சாகும் என்பார்கள். மூக்குச் சளியிலிருந்து முந்திரிப்பருப்புவரை எதையும் தின்னமுடிகிற காக்கை எப்படிச் செத்துப்போகும் என்று யோசனை நமக்கும் வருவதுண்டு. அண்டங் காக்கையைக் காட்டி அதுதான் கிருதயுகத்துக் காக்கை என்பாள் பாட்டி. கதைதான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வாழ்க்கையில் கதைதானே நம்பும்படியாக இருக்கிறது! பத்ரிநாத் 10,000 அடிவுயுரத்தில் இருக்கிறது. அங்கே காக்கைக்குக் காலும் அலகும் மஞ்சளாக இருக்கிறது. ஏன், கயிலை மலையருகே 16,000 அடிவுயரத்தில், அண்டங்காக்கைகளைக் கண்டிருக்கிறேன். சற்றே குரல் கம்மியிருக்கும் அவற்றின் இறக்கைகள் விசேடமாக இருக்கின்றன.

    ‘கொர்ர்ர்ர்’ என்றவொலி குறட்டைச் சத்தத்திற்கு மட்டுமல்ல, காக்கைக்கும் உண்டு. பள்ளியில் படிக்கும்போது இதை அறிந்தேன். ஓடுபோட்ட வகுப்பு; அதை ஊடுருவித் தாக்கும் உச்சி வெய்யில்; அப்போதுதான் உண்டு முடித்த புளிப்பான மோர்சாதம்; வகுப்போ தமிழிலக்கணம். வாத்தியார் வினையாலணையும் பெயர் என்னும்போது பக்கத்து மரத்திலிருந்து காக்காய் ‘கொர்ர்ர்ர்’ என்று ஒலியெழுப்ப, பெஞ்சே அணையாய் உறக்கம் நம்மை அணைக்கும். தாய்க்காகம் எத்தனை ஊட்டினாலும், போதாது குஞ்சுகளுக்கு. அவை இரைவேண்டிக் கத்தும்போது ஒரு சத்தம்; தாய், இரையை மசித்து வாய்க்குள் திணிக்கும்போது வேறொரு விதமான சத்தம். சில காகங்கள், நாயனக்காரர் சீவாளியைப் பரிசோதிப்பது போலும் சத்தம் எழுப்புவதுண்டு.

    மண்ணகலில் நல்லெண்ணெய் விட்டுத் தீபமேற்றியிருப்பார்கள். திருட்டுக் காக்காய், நனைந்த திரியைத் தூக்கிக்கொண்டு போய்விடும்! அதேபோல் பெரிய வாணலியில், கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பொள்ளும்போது கொத்திச் சென்ற அதிசூரக் காக்காய்களையும் கண்டிருக்கிறேன்.

    காக்காய் இருந்தால் என்னைத் தனிமை கொல்லாது. அதற்குத் துக்கம் கிடையாது. எனவேதான் அதன் அணுக்கம் என் அமைதிக்குத் தோதாக இருக்கும். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்,’ என்னும் தத்துவத்தைக் காகமல்லவா சொல்லித் தருகிறது! காக்காய்ப் பள்ளிக்கூடம் எல்லா ஊரிலும் பார்க்கும் காட்சிதான். ஆனால், பாடம் நமக்குத்தான். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதுதான் பிரபஞ்சத்தின் பெரிய சேதி என்றாலும் நாம் கூடி வாழ்வதில்லை. காக்கைகளிடம், சின்னச் சச்சரவுகள் உண்டு, சண்டை கிடையாது. அவர்களில் ஒன்றிறந்தால், அவை கூடி எழுப்புகின்ற ஓலம், நம் கண்ணைத் திறக்கவேண்டும். எப்படிப் பதறுகின்றன தெரியுமா?

    தினந்தினமும் எனக்குப் பாடம்சொல்லி என்னைப் பக்குவப்படுத்தும் காகங்களில் ஒன்று மின்சாரம் தாக்கிக் கம்பியில் சிக்குண்டு கிடப்பதுதான் கோரமான காட்சி.

    சிட்டுக் குருவிகளை இப்போது காணவே முடிகிறதில்லை. அடுக்குமாடி, கேபிள் டி.வி. என்று அவை காணாமல் போனதற்குக் காரணங்கள் பல சொல்கிறார்கள். ‘சின்னத் தோகை, துளிக்கால்கள்,’ என்று பரவசம் கொள்ளும் பாரதி, சிட்டுக்குருவிதான் விடுதலையின் சின்னம் என்று கண்டு பாடியிருக்கிறார்.

    சின்ன வயது ஞாபகமொன்று. கிணற்றுச் சுவரில் ஒரு கணம் அமர்ந்திருக்கும்; மறுகணம் ஜிவ்வென்று கிணற்றுக்குள் குதித்துவிடும்; ஐயோ என்று பதறிக் குனிந்து பார்த்தால், தண்ணீரைத் தொடும் கணத்தில் விசுக்கென்று சிறகுகளை விரித்து, பூச்சியைக் கவ்விக்கொண்டு, கணப்பொழுதில் மேலே வந்துவிடும்! காக்கைக் கூட்டில் முள்ளிலிருந்து, சட்டை மாட்டும் ஹேங்கர் வரை எல்லாவற்றையும் பார்க்கலாம். குருவிக்கூடு சொகுசு மெத்தை! வைக்கோல், புல், பஞ்சு என்று ஏதெல்லாம் மென்மையோ அவற்றைக் கொணர்ந்து வனையும். இல்லையில்லை, அது எதைக்கொண்டு வந்தாலும், அதன் அலகு பட்டு மிருதுவாகிவிடும்! ஆண்குருவிக்குக் கண்ணில் மையிட்டது போலிருக்கும். பெண்குருவியின் இறகுகளில் புள்ளிக்கோலமிருக்கும். முன்பெல்லாம் அரிசிமாவால், வாசலில் கோலம் போடுவார்கள். குருவிகள் கூடிவந்து அதைத்தின்னுவதே அழகுக் கோலம்! அரிசி பிடிக்கும்; நெல்பிடிக்கும்; வெந்த சோற்றை விரும்பித் தின்னும். அதன்பின் இருக்கவே இருக்கின்றன புழுக்கள், பூச்சிகள்.

    மின்சார மீட்டருக்கு மேல் செருப்போடு வரும் அட்டைப் பெட்டியில் கதவு செய்து, உள்ளே துணி, பஞ்சு எல்லாம் சேர்த்து அதற்கு வீடு செய்திருப்போம். அதுவும் கச்சிதமாய் வாழும். அது மின்விசிறிக்கு மேலுள்ள கிண்ணத்தில் கூடுகட்டி, விசிறியில் அடிபட்டுச் சாவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு. குருவிக் குஞ்சை மட்டும் பார்க்கவே சிரமமாக இருக்கும். இந்த ஜீவன் எப்படிப் பிழைக்கும் என்பது போல் தள்ளாடும் சின்னச் சதைத்துண்டாயிருக்கும். கொஞ்சநாள்தான்! பிறகு திடீரென்று பெரிதாகிவிடும். அம்மா, பறக்கக் கற்றுத்தரும் அழகே அழகு. வார்த்தையால் சொல்லும். நாலெட்டு முன்னும் பின்னும் நடந்து காட்டும். சற்றே பறந்து வந்து, இவ்வளவுதான் என்கும். அப்படியும் தயங்கும் குஞ்சைத் தள்ளிவிட்டுவிடும்!

    எனக்கு அணிலிடம் பிடிக்காத ஒரே விஷயம், அது குருவிக் கூட்டுக்குள் புகுந்து முட்டையைத் திருடிக்கொண்டு போய்விடுவதுதான். குருவிகள் பாவம், குய்யோ முறையோ என்று கத்தும். ஆனால், குஞ்சைக் கவ்விக் கொண்டு பறக்கின்ற காக்கையைத் தாயும் தந்தையும் ஆத்திரத்தோடு துரத்துவதைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறேன். உயரமும் எடையுமா வலிமை? வீரமும், வலிமையும் நெஞ்சில் இருப்பன, எதிர்க்கத் தயங்கவே கூடாது என்பதை எனக்குக் குருவிகளே சொல்லித் தந்தன. நமக்கென்ன ஆகிவிடுமோ என்ற எண்ணம் வந்துவிட்டால், பிறர்க்குத் துணைக்குப் போவது என்பது நடக்கவே நடக்காது.

    பிறக்கும் முன்னிலிருந்தே ஒவ்வொரு கணமும் ஆபத்து மயமாயிருக்கும் அவற்றின் வாழ்க்கை. ஆனால், ‘தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்,’ என்பதை எனக்குக் காக்கையும் குருவியுமே சொல்லித் தந்தன.

     

    Share
  • திருமால் திருப்புகழ் (88)

     

    கிரேசி மோகன்

    Trivikrama. Thiruvona Aashamsagal. Keshav
    Trivikrama. Thiruvona Aashamsagal. Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————-
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————–

    Gitamrita - the milk of the Upanishads called the Gita churned into Gnana/Bhakti (watercolour) Keshav
    Gitamrita – the milk of the Upanishads called the Gita churned into Gnana/Bhakti (watercolour) Keshav

    தீயிருந்து வேள்வித் தவமியற்றும் ஞானியர்,
    வாயிருந்து வந்தநால் வேதங்கள், -போயிருந்த,
    ஆழியுள் மச்சமாய், அன்றெடுத்த அச்சுதா,
    நாழிகைப் பொழுதென்னுள் நீந்து….(46)

    நீந்தித், தவழ்ந்து, நடந்துவிரைந்(து), ஓடி
    ஏந்தினாய் வேடங்கள், எத்தனை, -சாந்தி
    உனக்களிக்க வெண்பாவில், உட்கார்நீ ஓய்வாய்,
    எனக்களிப்பாய் வேலை எழுத்து….(47)

    எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,
    வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,
    கவியாக்கி(டு) என்னை, குறையொன்றும் இல்லாப்,
    புவிவாழ்வை கோவிந்தா போடு….(48)

    போடும் அவதார வேடங்கள் பத்தையும்,
    ஏடு வழியறிந்(து) ஏத்துகிறேன், -பாடிய,
    ஆழ்வார்கள் கற்பனையா! அல்ல நிஜம்தானா!
    பாழ்வாய் அடைப்பாய் பிறந்து….(49)

    பிறந்து புவியில்,பிருந்தா வனத்து,
    விருந்தைப் பறிமாற வாராய், -மறந்துபோய்,
    எங்குநீ தோன்றினும், ஏழைநான் ஏங்கிடும்,
    மந்தை வெளியதற்கு முந்து….(50)

    ———————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/

    Share
  • பரமகுரு பஞ்சகம்

    இசைக்கவி ரமணன்

     

    600_77363862

     

    சற்றுமெனை விலகாத வெட்டவெளியே! துளியும்
    தன்மை மாறாத களியே!images (2)
    சந்தடிமி குந்தவிடர் த்வந்தமெனும் சந்தையினில்
    தந்தையென வந்த தயவே!
    முற்றுமெனைப் பற்றும்வினைக் கற்றையினை ஒற்றைவிரல்
    இற்றுவிழச் செய்த விடிவே!
    மூலையி லிருந்தவனைச் சாலையினில் நடமாட
    முத்துரதம் தந்த நிதியே!
    அற்றுவிழும் அத்தனையும் வெர்றியெனச் சொல்லிவிழும்
    அற்புதம்நி கழ்த்தும் அருளே!
    அறிவுமறி யாமையென அலைபுரளும் அனுபவத்
    தடிநாத மான அழகே!
    உற்றுற்று நோக்கியே உயிர்மாற்றி உன்னையே
    உயிராக வார்த்த திருவே!
    ஒருநொடியும் உனதுதிரு வடிவழகை மறவாமல்
    உருகமனம் அருள்க குருவே!

    கத்துகட லாம்மனது கைகட்டி வாய்பொத்திக்Tamil-Daily-News-Paper_10747492314
    கண்களால் கவிபாடுதே!
    கசடுமிக வேமண்டி வசைகொண்ட என்சித்தம்
    காளாவி ளக்கானதே!
    புத்திதடு மாறிமலை யேறிமடு வீழ்ந்தகதை
    பொத்திச் சிரிக்கின்றதே
    புனைவான ஆணவமுன் புன்னகையின் சன்னலில்
    புகைந்துமணம் நீள்கின்றதே!
    மத்துகடைந் தேவெண்ணை தத்திவர மறவாமல்
    மொத்தமுமெ டுத்தகரமே!
    மணிவாயில் கொஞ்சமதை அணிபுரள வைத்துப்பின்
    மாந்தாமல் பார்க்குமழகே!
    பித்துக்கும் பக்திக்கும் சித்துக்கும் பேதைக்கும்
    பிரிவின்றிச் செய்தகுறும்பே!
    பின்னல் களைந்துபுதுப் பின்னலிடும் பம்மாத்தில்
    என்னசுகம் என்றன்குருவே!

    ஒருதுளியில் உயிராகி உருவாகி உடலாகிSO_155244000000
    ஓயாத துயரானதே
    ஒளியாகி இருளாகி மருளாகி உயிரெங்கும்
    ஒழியா அயர்வானதே
    கருவிலுயிர் நுழையுமுனர் இருந்தகதை காட்டினாய்
    கண்முன்பு படம்காட்டினாய்
    கதிகலங் கிச்சிதறி சிதிலமென நின்றவனைப்
    பற்றாமல் காத்தருளினாய்
    ஒருவாறு திருவிடியல் ஒழிவற்ற கடல்மீதில்
    புலர்வாகிப் பொழுதானதே
    ஒற்றையிழை யில்மொத்தம் பற்றியொளி யாய்மாறிக்
    கற்றைவி ரிக்கின்றதே
    அருளாளனே அன்பின் திருவாளனே! வேடம்
    அத்தனையும் புனையும் வேளே!
    அடியேனை ஆட்கொள்ளப் படியற்ற மலைநீங்கிப்
    படியேறி வந்தகுருவே!

    ஒருபோதும் மறவாத மனதும், அதன் மலைமடுவில்Om_-_Tamil
    ஒருசிறிதும் குறையாத நினைவும்
    ஒருதுளியும் மிஞ்சாமல் உருகுமுயிரும், கொஞ்சம்
    உருகும்நினை வான உணர்வும்
    இரவுபகல் அல்லாத இகபரமும் இல்லாத
    இடையில்நிலை யான நிலையும்
    இதயமலர் விளிம்பிலெழும் உதயத்தின் தறுவாயில்
    இசையாகும் மெளன நிலையும்
    ஒருநினைவு மறுநினைவு எனும்ஸ்ருதி விகாரங்கள்
    ஒட்டா தொழிந்த பேறும்
    ஒன்றுமே இல்லை நான் ஒன்றுமே இல்லையெனும்
    ஒருவிடிவின் கொடியேற்றமும்
    கருவபங்கங்களின் தலைநகர மானவுன்
    திருவடியில் கூடுமென்றே
    கணநேரம் கொண்டதாய் யுகநேரம் விண்டதாய்க்
    கண்ணீரில் நாணி நின்றேன்…

    தொலைவுநீ என்றெண்ணித் துயர்கொள்ள, தோள்தொட்டுத்
    தூவானத் தென்றலாவாய்
    தொட்டகரம் பற்றத் தொடுங்காலை ஏனோநீphoto
    தொடுவான மாய்ச்சிரிப்பாய்
    அலைகள்நீ என்றெண்ணி அயர்கையில் கால்களை
    அழகாய்ந னைக்கவருவாய்
    அந்தசுகம் மிஞ்சாமல் ஆழத்தைக் காட்டாமல்
    காட்டியெனை அயரவைப்பாய்
    சிலையில்நீ எங்கென்று கல்லாக நான்நிற்கச்
    சித்திரக் கண்சிமிட்டி
    சித்தத்தைச் சிலையாக்கி மொத்தத்தைக் கலையாக்கி
    சிங்கார மாக்கிவிடு வாய்
    மலையாவும் மலராகி மனம்யாவும் புலர்வாகி
    மல்லாந்தி ருக்கிறேன் நான்
    மறுபடியும் வீழுமொரு மழைத்துளியில் சிலிர்க்கவே
    மெளனத்தில் யுகங்கடந் தே!

    கண்டனன் என்றுவாய் கத்தவும் முடியாது
    கண்டிலன் என்பதும் பொய்
    கடல்தாண்டக்கடல்தாண்டக் கடல்மண்டும்பயணத்தில் கலமாக வந்தநீ மெய்
    விண்டனன் என்பதும் வீழ்ந்தனன் என்பதும்16702nk5_med-2
    விண்ணில்நி றம்போலப் பொய்
    வேதனையும்சாதனையும் போதனையும் இன்றியொரு
    வேடிக்கை பார்த்ததே மெய்
    கொண்டவித மறியாமல் கொள்ளைபோ குங்கதையில்
    கொண்டாட்டம் மிகவினிய பொய்
    கோயிலிலும் என்வீட்டுக் கொல்லைப் புறத்தும்நீ
    கூத்தாடி நிற்பதே மெய்
    உண்டவிதம் தெரியாமல் உண்டாலும் அமிழ்தாக
    உயிர்காக்கும் ஒற்றை மெய்யே!
    உண்மையெது பொய்மையெது ஒருசிறிதும் புரியாமல்
    உன்முன்பு நிற்கிறேனே!

    படங்களுக்கு நன்றி

    Share
  • காகுத்தன் கதை

    கிரேசி மோகன்

     

    சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பு வாட்டர்-கலரில் வரைந்தது என்று நினைக்கிறேன்….பெரிய படம்….ஏ-4 ஸைஸில் ஸ்கேன் முடிந்தவரை செய்து இரண்டு பகுதிகளாக அனுப்பியுள்ளேன்….

    குறும்பா
    —————–
    மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
    நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
    மானானான் மாரீசன்
    மண்ணானான் லங்கேசன்
    காகுத்தன் கதை இதிகாசம்….கிரேசி மோகன்….

    மாயக்கண்ணன்

    crazy3crazr4

     

     

    Share
  • ’ரஷ்ய ஷேத்ரஸ்ய கம்யூனிஸ கோத்ரஸ்ய புஷ்டி காத்ரஸ்ய’’ நாரீமணிகள்

     

    கிரேசி மோகன்

     

    SUBJECT-ரஷ்ய LOVEத்ரம்
    ——————————————-

    எனது மாமனார் நாசிக் HAL FC ஆக இருந்தபோது….கல்யாணம் ஆன புதுசில்(ஆன வயசுக்கு பழசில்தான் சொல்லவேண்டும்) சென்றபோது அங்கிருந்த ரஷ்யன் -ஆர்ட் -கேலரியில் பேப்பர் பெயிண்ட் சகிதமாகச் சென்று ‘’ரஷ்ய ஷேத்ரஸ்ய கம்யூனிஸ கோத்ரஸ்ய புஷ்டி காத்ரஸ்ய’’ நாரீமணிகளை வரைந்தேன்….

    crazy 1

     

    crazy 2

     

     

    Share
  • மோடியின் வெற்றி!!!

     

    — நாகேஸ்வரி அண்ணாமலை

     

    Lok Sabha elections 2014 resultsதேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியுள்ளது போல் பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸின் ஊழல்களும் சோனியா-ராகுல் தலைமையில் நடந்த குடும்ப ஆட்சியும் நாட்டின் பொருளாதார மந்தமும் பா.ஜ.க. வெற்றிக்குக் காரணம் என்றே வைத்துக்கொள்வோம். விபரம் போதாத தன் மகனைத் தலைமைப் பீடத்தில் அமர்த்த முயன்ற சோனியாவைப் பதவியிலிருந்து இறக்கிய இந்தத் தேர்தலின் முடிவை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் மோடியின் வெற்றி இந்தியாவில் என்னென்ன விபரீதங்களை விளைவிக்குமோ என்பதை நினைக்கும்போது பயம் ஏற்படத்தான் செய்கிறது.

    சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் நரேந்திர மோடி பிரதமராக வந்துவிடுவார் என்று நம்பி அவருக்கு மிகுந்த ஆதரவு அளிக்கத் தயாராகி வருகிறார்களாம். மோடிக்கும் அவருடைய சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸில் அபார ஈடுபாடு உண்டு. அவருடைய இந்த ஈடுபாட்டை முழுவதுமாகப் பயன்படுத்தி நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக இந்திய முஸ்லீம்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகளை நீக்கும் சட்டங்களையும் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து அளிக்கும் சட்டத்தையும் அரசியல் சாசனத்திலிருந்து நீக்குவதோடு பாடப் புத்தகங்களில் இந்துக் கடவுள்களைப் பற்றி அவர்கள் நினைப்பதற்கு மாறாகக் கூறப்பட்டிருக்கும் விஷயங்களையும் முஸ்லீம் அரசர் அக்பரை அதிகமாகப் புகழ்ந்திருக்கும் பகுதிகளையும் மாற்றி எழுதுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி அதற்காகத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    saiaustralia.orgஅரசியல் அதிகாரம் அவர்களுக்கு முக்கியம் அல்லவென்றும் இந்தியக் கலாச்சாரம்தான் உலகிலேயே சிறந்த கலாச்சாரம் என்றும் ஆரிய இனம்தான் மனித இனங்களிலேயே பெரிய இனம் என்றும் அகில உலகத்தையும் ஆரிய கலாச்சாரத்திற்கு மாற்றுவதே தங்கள் இலக்கு என்ரும் ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த ஒரு தலைவர் பேசியிருக்கிறார். இந்த இலக்குகளை அடைய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மோடி உதவுவார் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சமீபத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமெரிக்கப் பேராசிரியர் வெண்டி டோனிகெரின் (Wendy Doniger) புத்தகத்தை (The Hindus: An Alternative History) மேலைநாடுகளின் அச்சகங்களிலிருந்தும் தடைசெய்யப் போகிறார்களாம்! என்ன மடமை! எல்லாவற்றுக்கும் மேலாக ராமஜென்ம பூமியில் ராமர் கோவிலைக் கட்டியே தீரப் போகிறார்களாம்.

    பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆர்.எஸ்.எஸ். செய்ய விரும்புவதை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததின் மூலம் சாதித்துக்கொள்ளலாம் என்று ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். செய்ய விரும்புவதை பா.ஜ.க. செய்யப் போவதாக தேர்தல் அறிக்கையில் கூறினால் தங்கள் வெற்றி வாய்ப்பு குறையலாம் என்று நினைத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்த மாதிரி விஷயங்களை ஒரு மூலையில் சேர்த்தார்களாம்.

    மோடி தன் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. குஜராத்தை எப்படி பொருளாதாரத்தில் முன்னேற்றினார் என்றும் அது மாதிரி இந்தியாவையும் முன்னேற்றிவிடுவார் என்றும் அதற்குரிய தன்னுடைய திட்டங்கள் பற்றியும் மட்டும் கூறியதோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் போகப் போக இந்திய நாட்டை ஒரு இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற இவருடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை நிறைவேற்றத் தயங்க மாட்டர் என்று சிலர் பயப்படுக்கிறார்கள். அதிலும் இப்போது பா.ஜக.வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் மோடியால் ஆர்.எஸ்.எஸ்ஸின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.

    மோடி தேர்தல் பிரச்சாரங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகில் வளர்ந்துவிட்ட நாடுகளுக்குச் சமமாக உயர்த்தப் போவதாக வாக்களித்திருக்கிறார். அப்படி அவர் முயன்று பொருளாதாரம் முன்னேற்றம் கண்டாலும் அமெரிக்காவில் போல் ஏழை பணக்காரர்களுக்கு இடையே பெரிய பிளவு ஏற்பட்டு சமூகத்தில் சமத்துவமின்மை தோன்றலாம். இதுவும் சமூகத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கலாம். ஆனால் இதை விடப் பெரிய ஆபத்து அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை நிறைவேற்றினால் ஏற்படலாம். பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாடு என்றாலும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற, பல இனங்கள் வாழும், பல மொழிகள் பேசப்படும், பல கலாச்சாரங்கள் நிறைந்த நாடு என்ற நற்பெயரை இழக்க நேரிடலாம். இந்த நிலை இந்தியாவுக்கு ஏற்படாமல் காக்கும் பொறுப்பு மோடிக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் அதற்கேற்றாற் போல் நாட்டை நடத்திச் செல்வார் என்று நம்புவோம்.

    படம் உதவி:  http://victoria.saiaustralia.org.au/bulletin/samadhi-13.pdf, http://victoria.saiaustralia.org.au/

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (30)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! மூஸியோ டி செரா, மட்ரிட், ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட்டில் அருங்காட்சியகங்களுக்குக் குறைவில்லை. முன்னர் மட்ரிட் நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு பதிவில் சற்றே விரிவாகவும் விளக்கமாகவும் பொதுவான அறிமுகமாக மட்ரிட் நகர அருங்காட்சியகங்கள் பற்றிய சில தகவல்களை வழங்கியிருந்தேன். இந்தப் பதிவில் மட்ரிட் நகரில் உள்ள மற்றொரு அருங்காட்சியகத்திற்கு வாசகர்களான உங்களை அழைத்துச் செல்கின்றேன்.

    இன்று நாம் செல்லவிருப்பது மட்ரின் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மூஸியோ டி ஸெரா (Museo de Cera). வேக்ஸ் (மெழுகு) மூஸியம் என்றால் முதலில் நம் மணக்கண்னில் தோன்றுவது லண்டன் மாநகரில் இருக்கும் மேடம் தூஸோ வேக்ஸ் அருங்காட்சியகம் தான். ஆனால் லண்டனில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் மெழுகினால் தயாரிக்கப்படும் உருவச் சிலைகள் இருக்கும் அருங்காட்சியகங்கள் பெருகி விட்டன. ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரிலும் ஒரு மெழுகுச் சிலை அருங்காட்சியகம் இருக்கின்றது. இதே போல ஒன்று தான் மட்ரிட் நகரில் இருக்கும் இந்த மூஸியோ டி ஸெரா.

    mc1
    அறிஞர் குழுவின் சந்திப்பு ​(ஜூலை 2013)

    ஏறக்குறைய 450க்கும் மேற்பட்ட மெழுகு உருவச்சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. ஸ்பெயின் முழுமைக்குமுள்ள இவ்வகை அருங்காட்சியகங்களில் அதிகம் மெழுகு உருவச் சிலைகள் நிறைந்த ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இது மட்டும் தான். நகரின் மத்தியிலேயே இருப்பதால் மெட்ரோ ஸ்டேஷனை விட்டு இறங்கியதுமே நேராக அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து விடலாம்.

    கட்டிட அமைப்பில் இந்த அருங்காட்சியகத்தை இரண்டு தளங்களாகப் பிரித்து அமைத்திருகின்றனர். முதலில் கட்டணம் செலுத்தி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு வெளிவரும் போது நம்மை அழைத்துச் சென்று வழிகாட்ட சில ஊழியர்கள் இருக்கின்றனர். அருங்காட்சியகப் பகுதி மூன்று தனித்தனி பகுதிகளாக இருப்பதால் இந்த ஊழியர்களின் துணையோடு ஒவ்வொரு பகுதிக்கும் செல்வது சிறப்பு.
    அச்சமூட்டும் ஒரு ரயில் பயணம், வானவெளிப்பயண சிமியூலேட்டர், அதன் பின்னர் மெழுகுச் சிலைகள் அருங்காட்சியகம் என்ற வகையில் மூன்று தனிப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றது இந்த அருங்காட்சியகம்.

    நான் சென்ற போது முதலில் அச்சமூட்டும் ரயில் பயணம் உள்ள பகுதிக்குச் சென்று ரயிலில் பயணித்து குகைகளுக்குள் பயணம் செய்து காட்டு மிருகங்கள், பேய் பிசாசுகளின் உருவங்கள் போல செய்யப்பட்டிருந்த சிலைகளைப் பார்த்து ரசித்து முடித்து விட்டு பின்னர் வானவெளிப் பயண சிமியூலேட்டர் பயணம் மேற்கொண்டு இறுதியாக அருங்காட்சியகப் பகுதிக்கு வந்தேன்.

    mc2

    க்ளியோபாட்ரா (ஜூலை 2013)

    ரயில் பயணத்தில் ஏனைய பார்வையாளர்களுடன் பயணிக்கும் போது குழந்தைகள் அச்சத்துடனும் குதூகலத்துடனும் கூச்சலிட்டு சத்தம் போட்டு சிரித்து மகிழும் போது நாமும் அந்தக் குழந்தைகளோடு குழந்தைகளாகி அவர்களைப் போல குதூகலித்து மகிழலாம். அதே போல வானவெளி பயண சிமியூலேட்டர் வாகனத்தில் உட்கார்ந்து அந்த சிமியூலேட்டர் நம்மை அழைத்துச் செல்லும் போது உண்மையில் நிலத்தில் தான் ஒரு வாகனத்திற்குள் அமர்ந்து இருக்கின்றோம் என்பதை மறந்து வானத்தில் பறப்பது போலவும், பல வின்வெளிக் கப்பல்கள் நம்மை தாக்க வருவது போல வர அங்கிருந்து தப்பித்து செல்ல நாம் முயற்சி எடுப்பது போலவும் மனம் ஒன்றித்துப் போய் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம். 15 நிமிடம் நீடிக்கும் இந்தப் பயணம் முடிந்து வெளியே வந்தால் .. ஆஹா.. ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோம் என்று சொல்லி பெருமூச்சு விட்டு மகிழும் நிலைமையை உணர்வோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி .. அருங்காட்சியகம் பார்க்கத்தான் வந்திருக்கின்றோம். வானத்தில் வின்வெளிக் கப்பல் பயணம் மேற்கொள்ள அல்ல, என்பதை நம் மனம் நமக்கு ஞாபகப் படுத்தும் போது சிரித்துக் கொண்டே அடுத்தப் பகுதிக்குச் செல்வது தான் நிகழும்.

    மெழுகுச் சிலை அருங்காட்சியகப் பகுதி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருப்பொருளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே முதலில் நுழையும் போது நம்மை வரவேற்பவை எகிப்திய பண்டைய நாகரிகத்தை விவரிக்கும் காட்சிகளே. இங்கே க்ளியோபாட்ரா, ஜூலியஸ் சீஸர், மார்க் அண்டனி உருவச் சிலைகள் தத்ரூபமாக இவர்கள் நம் கண் முன்னே இருந்து காட்சியளிப்பது போன்று அமைத்திருக்கின்றனர். அதனை அடுத்ததாக அரேபிய வரலாறு சொல்லும் பகுதி, அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை காட்சிப்படுத்திக் காட்டும் மெழுகுச் சிலைகள், அதன் கருப்பொருளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    mc3

    ​ஸ்பியின் அரச குடும்பம் (ஜூலை 2013)

    இந்த வரிசையில் நம் கண்களையும் கருத்தையும் கவரும் ஒரு பகுதி ஸ்பெயின் அரச குடும்பத்தினர் இருக்கும் ஒரு பகுதி. மன்னர் முதலாம் ஹுவான் கார்லோஸ், அரசியார் ஸோஃபியா, இளவரசர், இளவரசியார் – இவர்கள் நால்வருமே நம் கண் முன்னே புன்னகைப் பூத்த வண்ணம் எழிலாக நின்ற வண்ணம் நம்மை பார்த்தவாறு இருப்பது மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கின்றது.

    mc4

    உலகத் தலைவர்கள்அது உருவச் சிலைகள் (ஜூலை 2013)

    மற்றொரு பகுதியில் உலகத் தலைவர்கள் சிலரது சிலைகள் பல ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளன, ஜெர்மனியின் தற்போதைய சான்ஸலர் திருமதி.மெர்க்கல், மஹாத்மா காந்தி, மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த ப்ரிட்ட்ஷ் இளவரசியார் டயானா, யாசீர் அராஃபாட், தெரேசா அன்னையார் ஆகியோரது உருவச் சிலைகளை உதாரணமாக்ச் சொல்லலாம்.

    மேலும் இங்குள்ள ஏனைய உருவச் சிலைகளைப் பற்றி அடுத்த பதிவில் காண்போமே!

    தொடரும்….

    சுபா

    Share