சக்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்
விசாலம்
பெங்கலூரு அருகில் சுமார் அறுபது கி மீ தூரத்தில் சிவகங்கா என்ற கிராமம் உள்ளது அங்கு நாம் பார்க்கப்போகும் லிங்கம் மலையடிவாரத்தில் ஒரு குகைக்குள் சுமார் ஐந்து அடி உயரத்துடன் காணப்படுகிறது இந்த லிங்கரூபத்தின் பெயர் கவி கங்காதீஸ்வரர் இங்கு பூஜை செய்ய வருபவர் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்கிறார் அந்த அபிஷேகம் முடிந்தவுடன் அந்த நெய் வெண்ணெயாக மாறிவிடுகிறது அந்த வெண்ணெயைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்
கேரளாவில் திருச்சூரில் இருக்கும் வடக்குநாதர் கோயிலிலும் சிவலிங்கம் இருக்கிறது பெயரும் வடக்குநாதர் தான் இங்கு பல்லாண்டுகளாக நெய் அபிஷேகம் தொடர்ந்து நடந்து வருகிறது இதனால் லிங்கமே தெரியாமல் சுமார் நாலு அடி உயரத்திற்கு லிங்கம் வளர்ந்து விட்டது இதில் இருக்கும் அதிசயம் என்னவென்றால் எத்தனை உஷ்ணமாக இருந்தாலும் .நல்ல கோடைக்காலத்திலும் அந்த நெய் உருகாமல் அமர்நாத் லிங்கம் போல் காட்சியளிக்கிறது
தஞ்சாவூர் அருகே குடவாசல் என்ற இடம் .அதன் அருகில் நாலூர் திருமயானம் என்ற இடத்தில் ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது இதன் மேற்பகுதியைப்பார்த்தால் பலாப்பழத்தின் மேல் பாகம் போன்று முள்ளு முள்ளாக உள்ளது இந்த லிங்கத்தின் பெயர் பிலாச வனேஸ்வரர் அமர்நாத் லிங்கம் பனி லிங்கமாக காட்சியளிக்கிறது இது சந்திரனைப்போலவே பௌர்ணமியின் போது முழுமையாகவும் பின் அமாவாசை வர வர குறைந்து மறைகிறது பின் திரும்பவும் அடுத்த பௌர்ணமியில் முழுசந்திரன் போல் பிரகாசிக்கிறதாம் காசியில் அனுமன் காட் என்ற இடத்திற்குப்போனால் சிவபெருமான் அம்பிகை மடியில் சயனித்திருக்கும் காட்சியைக் காணலாம் இந்தக்கோயிலின் பெயர் “காமகோடீஸ்வரர் ” கோயில்
இதே போல் சிவன் விஷ்ணு போல் பள்ளிக்கொண்ட க் காட்சியை ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் காணமுடிகிறது மஹாராஷ்டிராவில் எல்லோரா குகை அருகே “குஸ்மேஸம் “என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது அது எப்படி கெட்டியாக உடையாமல் இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது நீடூரில் அருள் புரியும் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் அருட்சோமநாதர் இந்த சுவாமியை ஒரு நண்டு தினமும் வணங்கி வந்ததாம்
திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலி,ல் இருக்கும் சிவபெருமான் அருள் மிகு சந்திரமௌலீஸ்வரர் . இவர் மும்முகம் கொண்ட லிங்கமாகக் காட்சி அளிக்கிறார் .கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் ,வடக்கு முகம் வாமதேவ முகம் தெற்கு முகம் அகோர மூர்த்தியாக அருள் புரிகிறார் , திருநல்லூரில் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் இருக்கிறது பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்துக்கொண்டு
இந்தச்சிவலிங்கத்தைப்பூஜித்தாராம் இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் பஞ்சவர்ணேஸ்வரர் காக்கும் கடவுள் வீஷ்னுவும் சிவனைப்பூஜித்த இடம் ஒன்று உண்டு அதுவே தலைச்சங்காடு . இங்கு திருமால் சிவபெருமானை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கைப்பெற்றார் ,இதனால் ஈசன் சங்கு வடிவில் மூலவராக அருள் புரிகிறார் பெயரும் சங்காரேண்யஸ்வரர் .
தேனி மாவட்டத்தில சின்னமனூர் என்ற கிராமத்தில் சுயம்புவாக இருக்கும் சிவலிங்கம் அருள்மிகு புலாந்தீஸ்வரர் , அந்த லிங்கம் பார்வையாளரின் உயர்த்துக்குத்தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்கிறார் அந்த லிங்கத்தைத் தழுவிக்கொண்ட ராஜசிங்க பாண்டியனின் மார்பு கவசத்தின் அடையாளம் அந்த லிங்கத்தின் மேல் தெரிகிறது தவிர இங்கிருக்கும் அம்பாள் சிவகாமிக்கு முகத்தில் எப்போதும் வியர்க்குமாம் இதேபோல் இன்னும் பல வியக்குமளவுக்கு நம் நாட்டில் கோயில்கள் மண்டிக்கிடக்கின்றன அவைகளில் சில எண்ணெய் விட்டு விளக்கேற்ற க்கூட வசதியில்லாமல் இருண்டு கிடக்கின்றன பல புது கோயில்கள் கட்டுவதைக்குறைத்துக்கொண்டு இந்த பழமையான கோயில்களை நாம் பாதுகாப்பது நமது கடமையல்லவா?
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OZlenAvqLCI
வால்மீனின் வண்டுத் தலையில்
பூர்வப் பொருள் களஞ்சியம் !
பரிதிக்கு அருகில் வாலும்
அனுமார் வாலைப் போல் நீளும் !
கூந்தல் கோணிப் போகும் !
சூரியனைச் சுற்றி வரும்போது
முகம் காட்டி வணங்கும்
வாலைப் பின்னே தள்ளி !
வயிற்றுக்குள்
உயிரினப் பனிக்கூறுகள் !
வாயு வைரக்கல்
வானத்தில் விந்தை ஒளிகாட்டும் !
உயிர்க் குஞ்சுகள் உதிக்க
வையகத்தின் மீது
வாரி வாரிக் கொட்டும்
நீர் வெள்ளம்
மூலக் கூறுகளை !
+++++++++++++

வால்மீனின் சுற்றும் வீதிகளில் வண்டித்தொடர் போல் பிரம்மாண்ட வால் நீட்சியில் வாயுத் தூள்கள் நீராவி மின்னிகள் வெளியேறும் ! மங்கும் பரிதிகட்குப் புது எரிசக்தி அளித்து ஒளியூட்டும் உலகங்களுக் கெல்லாம் !
ஜேம்ஸ் தாம்ஸன் “The Seasons” (1730)
“உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடிய வில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம். பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது ! அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது ! இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”
மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)


“நாம் மட்டும்தான் தனியாக (பிரபஞ்சத்தில்) உள்ளோமா ? என்று கேட்டால் அதற்கு எனது எளிய, சிறிய பதில் ‘இல்லை’ என்பதே ! எனது சிந்தனை நோக்குகள் மூன்று : முதலாவது விண்வெளிப் புறக்கோள்களில் வேறு உயிரினங்கள் இல்லை என்பது. இரண்டாவது ஓரளவு நிச்சமின்றி ஏதோ இருக்கலாம் என்பது. ஆனால் அங்கிருந்து விண்வெளியில் நமக்குச் சமிக்கை அனுப்புகிறது என்று நம்பாத நிலை. நான் விரும்பும் மூன்றாவது பூர்வாங்க உயிரினம் (Primitive Life) பொதுவாகப் பரவி இருக்கிறது. ஆனால் அறிவு விருத்தியடைந்த ஓர் உயிர்ப்பிறவி (Intelligent Life) வசிப்பது என்பது அபூர்வம்.”
ஸ்டீஃபன் ஹாக்கிங் (நாசாவின் 50 ஆண்டு நிறைவு விழா உரை)
“விண்வெளி வேலி விளிம்பைத் தள்ளி அப்பால் ஆராய்ந்தால் நாம் அவற்றைக் (உயிரினத்தைக்) காண முடியும் ! நம்மைப் போல் அவை இல்லாமல் போகலாம்.”
– மைக்கேல் ஃபோர்மன்
“ஆனால் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் பிற கோள்களில் உயிரினம் இருக்காது என்பதை நம்புவது எனக்குக் கடினமாக உள்ளது. நம்மைப் போன்ற உயிரினம் வேறு கோள்களில் நிச்சயம் வசிக்க வேண்டும்”
– டகோவா டோய், ஜப்பானிய விமானி

“நான் உறுதியாக நம்புகிறேன், நாம் (உயிரினத்தை) காணப் போகிறோம், என்ன வென்று விளக்க முடியாத ஒன்றை.”
– கிரிகரி ஜான்ஸன்.
“ஐரோப்பியக் கடற்பயணத் தீரர்கள் கடந்த காலத்தில் பயணத்தைத் துவக்குவதற்கு முன்பு கடல் தாண்டிச் சென்றால் என்ன காணப் போகிறோம் என்று அறியாமல்தான் புறப்பட்டார். அண்டவெளியில் பயணம் செய்யும் போது நாமும் என்ன காண்போம் என்பதை அறிய மாட்டோம். அந்தச் அறியாமைதான் நம் பயணத்துக்கு மகத்துவம் அளிக்கிறது. நான் நிச்சயம் நம்புகிறேன். ஒருநாள் நாம் காணப் போகிறோம், நமக்குப் புரியாத ஒன்றை !”
– டாமினிக் கோரி, எண்டவர் குழுத் தளபதி
“வேறு அண்டவெளிக் கோள் உயிரினத்துடன் (Extraterrestrial Life) புவி மனிதர் தொடர்பு கொள்ள வெகுகாலம் ஆகலாம் ! துரதிட்டவசமாக நமது விண்வெளிப் பயணங்கள் எல்லாம் இன்னும் குழந்தை நடைப் பயிற்சியில்தான் உள்ளன!”
– ரிச்சர்டு லின்னென்.

2013 ஆண்டின் பூமித் தொடுவானில் தெரியும் முதல் ஒளிமிக்க வால்மீன்.
விண்மீன் பான்-ஸ்டார் [Pan-STARRS] 2013 மார்ச் மாதம் 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சூரியன் அத்தமனத் தருவாயில் மேற்குத் தொடும் வானில் பைனாகுலர் இல்லாமலே கண்களால் நேரே காணலாம் என்று விஞ்ஞானத் தகவல் வலையிதழ்கள் அறிவித்து வருகின்றன. வட கோளப் பகுதில் [Western Hemisphere] தெளிவாகத் தெரியும் இந்த வால்மீன் தென்கோளப் பகுதியில் தொலைநோக்கி மூலமே காணப்படும் என்பது அறியப் படுகிறது. இம்மாதிரி நேராகத் தெரியும் வால்மீன்கள் பத்தாண்டுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வரும் ஜெட் உந்துசக்தி ஆய்வகம் [Jet Propulsion Laboratory] கூறுகிறது. அந்தி மயங்கும் வேளையில் 15 நிமிடங்களுக்குப் பிறகு கண்ணுக்குத் தெரியும். மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகு வால்மீன் சூரிய வெளிச்சத்தில் எதிரொளியால் தெரியாமல் போகும்.
தொடுவானில் வால்மீனை நோக்க வழிமுறைகள் :
1. சூரியன் அத்தமிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். பைனாகுலரோ, தொலை நோக்கியோ பயன்படுத்தி பரிதியை நேராகப் பார்க்கக் கூடாது. பார்த்தால் கண்கள் எரிந்து போய்ப் பழுதடையலாம்.
2. வால்மீன் பான் -ஸ்டார் மேற்புறத் தொடுவானில் அந்திமப் பொழுதில் தெரியும்.
3. அந்திவானம் வெளிச்சமாக உள்ள போது வால்மீன் காணப் படாது.
4. வானம் சூழ்வெளித் தூசியால் மங்கிய நிலையில் இருந்தால் வால்மீன் நோக்கப் பைனாகுலர் பயன்படுத்தலாம்.
பிரபஞ்சத்தில் பூர்வாங்க உயிரினச் செல்கள் எப்படித் தோன்றின ?
பூர்வாங்க பூமியிலே எப்படி உயிரினம் ஆரம்பமானது என்றோ அல்லது பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிரினம் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது என்றோ உறுதியாக நாம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம் ! எங்கே முதலில் உயிரின மூலாதார உற்பத்தி ஆரம்பமானது என்பதற்குப் பல்வேறு கோட்பாடுகள் இருக்கின்றன. வான உயிரியல் (Astrobiology) விஞ்ஞானம் என்பது பிரபஞ்சத்தில் உயிரினத்தைப் பற்றிய கல்வி. அந்தப் பல்துறை அடைப்படைப் புது விஞ்ஞானம் உயிரினத்தின் மூலாதாரம், தோற்றம், பங்களிப்பு, முடிவு ஆகியவற்றையும் எங்கே அந்த உயிரினம் இருக்கலாம் என்றும் புகட்டுகிறது. பூமியிலே எப்படி உயிரினங்கள் ஆரம்பத்தில் உருவாயின என்று உளவிட விஞ்ஞானத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருவர் ஆழ்ந்து ஈடுபட வேண்டும். அந்த சிக்கலான கேள்விக்கு விடைகாணப் பௌதிகம், இரசாயனம், உயிரியல், வானியல் (Physics, Organic & Inorganic Chemistry, Biology & Astronomy) ஆகிய விஞ்ஞானப் பிரிவுகள் தேவைப்படுகின்றன.

கடந்த 50 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் புரிந்த மூலாதார விண்வெளிக் கண்டுபிடிப்புக்கள் மூலம் பூமி உண்டான போது ஆரம்ப காலங்களில் “தன்னினம் பெருக்கும் சிக்கலான செல்கள்” (Self-Replicating Complex Cells) உதித்த போக்கு முறைகள் தெளிவாகின்றன ! உயிரின மூலாதாரக் குறிப்புக்கு அண்டக்கோளின் ஆரம்பகாலச் சூழ்வெளி அறியப் படவேண்டும். துரதட்டவசமாக பூகோளத்தின் துவக்கத்தில் உயிரினத் தோற்றத்துக்கு உதவும் சூழ்வெளியின் வாயுக்கள், தள உஷ்ணம், வாயு அழுத்தம், தள இரசாயனம், காற்றில் நீர்மை (Moisture), கடல்நீரின் pH அளவு (pH —> 0-14 Scale Measurement of Water Acidity/Alkalinity) போன்ற சான்றுகள் எவையும் உறுதியாக அறியப்பட வில்லை. உயிரினத் தோற்ற முதலில் உளவுகள் பூர்வப் பாறைகளில் உள்ள கார்பன், ஆக்ஸிஜன் கலவையைக் காட்டினாலும் தர்க்கத்தில் சிக்கி அவை நிச்சயம் ஆகவில்லை. ஆயினும் பூமி தோன்றிய முதல் பில்லியன் ஆண்டுகளில் உயிரினம் உதிக்க ஆரம்பித்தது என்பதில் விஞ்ஞானிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.
உயிரின இரசாயனத்தின் (Biochemistry) இரு மகத்தான மைல்கற்கள்
உயிரினம் என்பது இரசாயன இயக்க விளைவு (Chemical Phenomenon) என்பதை நாம் அறிவோம். பூமியின் உயிரின முளைப்பு அடிப்படைக்குப் “பிறவித் தாதுக்களான டியென்னே & ஆரென்னே” (Genetic Materials DNA & RNA) ஆகிய இரண்டும் மற்றும் புரோட்டின், (Protein & Membrane Components) (Biological Membrane -A Continuous Layer of Fat Molecules that encloses a Cell] ஆகியவையும் காரணமானவை. டியென்னே என்பது மூன்று மூலக்கூட்டுகள் (Nucleic Acid Bases +Sugars +Phosphates) கொண்ட “இரட்டை நெளிவு” (Double Helix). புரோட்டின் அமினோ அமிலத்தில் ஆனது.
1950 ஆண்டுகளில் அமெரிக்க இரசாயன விஞ்ஞானிகள் ஹரால்டு யுரே & ஸ்டான்லி மில்லர் [Harold Urey (1893-1981) & Stanley Miller (1930-)] ஆகியோர் இருவரும் எப்படி உயிரின அமைப்பு மூலக்கூறு அமினோ அமிலம் (Amino Acid —> Water-soluble Organic Molecule with Carbon, Oxygen, Hydrogen & Nitrogen containing both Amino Group NH2 & COOH) பூர்வாங்கப் பூமியின் புழுதிக் கடலில் முதலில் தோன்றியிருக்கும் என்னும் முக்கியமான சோதனையை ஆய்வுக் கூடத்தில் செய்து காட்டினார்கள் !
விஞ்ஞான உளவுக்கு வால்மீன்கள் ஏன் முக்கியமானவை ?
சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் விண்பாறைகளிலும், வால்மீன்களிலும் (Asteroids & Comets) இருப்பதை விஞ்ஞானிகள் பல சோதனைகள் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். சில விஞ்ஞானிகள் பரிதியைச் சுற்றிவந்த ஆரம்பகால வால்மீன்கள் வழி தவறிப் பூமியின் சுற்று வீதியில் புகுந்து வீழ்ந்திருக்கலாம் என்றும் அப்போது அவற்றிலிருந்து ஏராளமான ஆர்கானிக் இரசாயனக் கலவைகள் பூமியில் பொழிந்திருக்கலாம் என்றும் கருதுகிறார். அத்துடன் பூமி உருவான பிறகு அதன் மீது ஏராளமான விண்கற்கள், வால்மீன்களின் தாக்குதல் இருந்ததாகச் சான்றுகள் மூலம் அறிய வருகிறது. அப்போதுதான் வெளிக்கோள் ஒன்று பூமியைத் தாக்கி நிலவு உருவானது. வால்மீன்கள் பேரளவு நீர் வெள்ளத்தைப் பூமியில் கொட்டியதுடன், அதன் ஆர்கானிக் கூட்டுகளையும் இறக்கின ! விண்கற்களிலும் வால்மீன்களிலும் சிக்கலான “அமினோ அமிலம்” போன்ற இரசாயன மூலக்கூறுகள் இருக்கின்றன. 1969 இல் ஆஸ்திரேலியாவில் விழுந்த மர்சிஸன் விண்கல்லில் (Murchison Meteorite) கார்பன் கூட்டுப் பொருளும் இரண்டுவித அமினோ அமிலமும் (A Carbonaceous Chondrite & Two Types of Amino Acids) இருந்தது தெரியவந்தன. அப்படி விண்கற்களும், வால்மீன் சிதைவுகளும் விழுந்து பூமியில் சிந்திய அமிலோ அமிலம் போன்ற உயிராக்கப் புரோட்டின் மூலக்கூறுகள் பூதளத்திலும் கடல் நீரிலும் விழுந்து உயிரினச் செல்களை உற்பத்தி செய்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் கனத்த மோதுதலில் சிதைந்து போக மாட்டா என்றும் பூமியில் செய்த சோதனைகளில் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன !
4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு சூரிய மண்டலம் உண்டான அதே ஆரம்ப காலங்களில் வால்மீன்களும் தோன்றி யிருக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் பரிதியும் அதன் கோள்களும் பன்முறை மாறியது போல் வால்மீன்கள் அடுத்தடுத்து மாற வில்லை ! காரணம் வால்மீன்கள் சிறிய வடிவம் கொண்டவை. கோள்களில் ஏற்பட்ட பேரளவு பூகம்பங்கள் போல் வால்மீனில் நிகழ்ந்து கொந்தளிப்புகள் நேர வாய்ப்புக்கள் இல்லை ! அவற்றில் கதிரியக்க உலோகங்கள் எவையும் தங்கி வெப்பம் ஊட்டி மாற்றியதாகவும் தெரியவில்லை.
பிற அண்டங்கள் பொழிந்து பூகோளத்தில் உயிரினத் தோற்றம்
உயிரனப் பிறப்புக்கும் விருத்திக்கும் வேண்டிய மூலாதாரங்கள்:
1. ஏராளமான, நிலையான நீர் வளம்
2. கூடாமலும் குன்றாமலும் மிதமான தொடர்ந்து கட்டுப்பாடாகும் எரிசக்தி (வெப்பம்)
3. இரசாயன மூலக்கூறுகள் /ஆர்கானிக் மூலக்கூட்டுகள்
4. உயிரனப் பெருக்கத்திற்கு ஏற்ற வினையூட்டி. (A Reproductive Mechanism)

உயிரின இயக்க வாழ்வுக்கு முக்கியமான முறைகள்
1. வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் வேண்டிய உயிரினத்தின் இரசாயன வினையியல் (Metabolism)
2. சந்ததி விருத்திக்கு வேண்டிய உயிரினப் புணரியல் (Reproductive Life Process)
3. உஷ்ணம், அழுத்தம், வெப்பக் கட்டுப்பாடு போன்ற சூழ்வெளி வாயு இயக்கவியல் (Evolution through Interaction with the Environment) [தொடரும்]
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Did Comets Bring Life to Earth ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)
20 Structure & Composition of Earth’s Atmosphere (http//:ess.geology.ufl.edu/)
21 History of Earth (www.mansfield.ohio-state.edu/) (March 31 2007)
22 Life in the Universe -What is Astrobiology ? By : Oratie P. Ehrenfreund.
23 The Beginning of Life & Amphiphilic Molecules By Janet Woo (August 2004)
24 NASA Endeavour Astronauts Debate Extraterrestrial Life By : Josh Hill, Rebecca Sato & Casey Kazan (www.dailygalaxy.com/) (May 14, 2008)
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40207071&format=html
26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301043&format=html
27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html
28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html
29 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html
30 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html
31 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703011&format=html
32 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703083&format=html
33 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703151&format=html
Get Ready for Comet PANSTARRS — 2013’s First Naked-Eye Comet,
Comet PANSTARRS promises to be the brightest comet of in six years when it peaks in March.
By Richard Talcott — [February 26, 2013]
35 NASA Science News : A Possible Naked-eye Comet in March, 2013 [February 6, 2013]
36 A Naked-Eye Comet Invites Itself to the March Sky, 2013 [March 8, 2013]
37. Astronomy Magazine : http://lightyears.blogs.cnn.com/2013/03/08/rare-naked-eye-comet-now-visible/?hpt=hp_t2 [March 8, 2013]
******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) [March 9, 2013]
திவாகர்
அனுபவம் அனுபவம் அனுபவம்.. உலகியல் வாழ்க்கையில் இந்த அனுபவம் ஒன்றே உண்மையான கல்வி ஞானம். எத்தனைதான் டாக்டரேட்டுகள் பட்டங்களை தன் பின்னே வைத்துக்கொண்டாலும் அனுபவம் அறியாத அத்தனை பட்டங்களும் விழலுக்கு விழைத்த நீரே. அதனால்தான் மருத்துவப்படிப்பில் அந்தக் காலத்திலிருந்தே ஒரு வருடம் கட்டாய சேவையை படிப்பில் புகுத்தினார்கள். படிக்கும்போது ஏற்படும் அனுபவம் என்பது வேறு. இந்தவகை அனுபவங்கள் பச்சைம்ரத்தாணி போல மனத்திலேயே தங்கிவிடும். பின்னாளில் பலவகை இக்கட்டுகளிலிருந்து காக்கும் அருமருந்து கூட இந்த வகை அனுபவங்களே. அப்படிப்பட்ட அனுபவக் கட்டுரை ஒன்றை இந்த வாரம் வல்லமையில் பார்த்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தில் எழுதப்படாத விதி. அப்படியாகத்தான் எனக்குக் கிடைத்த வேலை ஆராய்ச்சி சஞ்சிகளைப் பதிப்பித்து விற்று வருமானம் ஈட்டுவது. மூன்று சஞ்சிகளைப் பதிக்கும் வேலையைத் தொடங்கி அதன் வடிவமைப்பு விற்பனை என்று நானாவித வேலையையும் செய்து பழகிக் கொண்ட எனக்கு என்பலம் என்னவென்று ஒருநாள் தெரிந்தது. சக ஆய்வு மாணவர் ஒருவன் என்னுடைய வழிகாட்டியான பேராசிரியத் தலைவர் என்னை வெளியேற்ற ஏற்பாடு செய்துவருவதைச் சொன்னார். வழிகாட்டிக்கும் ஆய்வு மாணவனுக்கும் உள்ள உறவு பலசரக்குக் கடைச் செட்டியாருக்கும் பொட்டலம் கட்டும் இளைஞனுக்கும் இடையே உள்ள உறவு போன்றது. செட்டியார் எச்சரிக்கை எத்திராஜராகப் எதிர்க்கடை வராதவாறு வேலை செய்பவர்களுக்குப் பொட்டலம் கட்டுவது தவிர எந்த வேலையையும் கற்றுக்கொடுக்க மாட்டார். அப்படியே அவரைத் தாண்டிக் கற்றுக் கொண்டவனையே விட்டால் வினை என்று கூலியில்லாத வேலையாளாக மாற்றி மருமகனாக ஆக்கிக்கொள்வார். இங்கு நான் வெளியேற்ற்ப்படும் நிலையில் முன்யோசனை இல்லாமல் என் சக ஆய்வாளரிடம் இந்த மடம் இல்லையென்றால் எனக்கென்ன கவலை இங்கிருந்து நேராக எந்தப் பத்திரிக்கை வாசலில் நின்றும் நான் ப்ரூஃப் ரீடர் வேலைக்கு வந்திருக்கேன் என்று சொன்னால் அப்படியே தூக்கிட்டுப் போயிடுவாய்ங்க தெரியுமா என்று ஆண்டுக் கணக்காக ஆய்வு என்ற பெயரில் நான் செய்த புரூஃப் ரீடர் வேலையைச் சொல்ல அவர் என்னுடைய பேராசிரியரிடம் போட்டுக் கொடுக்க அதனால் என் வழிகாட்டி என்னை வெளியே போக முடியாதபடி செய்துவிட்டார். அதுமூலம் நான் பத்திரிக்கையில் ஒரு வேலையை உருப்படியாகச் செய்யமுடியும் என்று எண்ணத் தோன்றியது
எனது நண்பரின் புதிய முயற்சியில் அவர் முன் எடுத்த ஒரு திட்டம் சினிமாத் துறையில் ஒரு வாரப் பத்திரிக்கை தொடங்குவது. அந்தக் காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பும் சூல்நிலையில் அவரை ஆசிரியராகக் கொண்டு இந்தப் பத்திரிக்கையை நடத்தவேண்டும் என்பது அவரின் இந்த முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது பத்திரிக்கையைத் தொடங்கி வடிவமைத்து உருவாக்கி வெளிவிடும் வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்துக்கொண்டு கால் இடறிக்கீழே விழுந்தால் ஒரு தியேட்டர் படியில் விழவேண்டும் என்ற சூழலில் ஆய்வறிக்கைக்காக அல்லும் பகலும் நேரம் செலவழித்ததால் ஒரு திரைப்படம்கூடப் பார்த்ததில்லை. ஒருமுறை என் சகஆய்வு மாணவரின் காதல் திருமண வரவேற்புக்காக இடம் புக் செய்ய ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். வாசலில் ஏகப்பட்ட கூட்டம் என்னவென்று தெரியாமலேயே வரவேற்பாளரிடம் சென்று பணம்கட்டிவிட்டுத் திரும்பி வந்தால் கூட்டம் என்னைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் பார்த்தது. ஏணிப்படி ஏறுமாறாக என்று கேடடதற்கு உன் அருகில் ரிசப்சனில் நின்றது யார் தெரியுமா என்று கேட்டது கூட்டம். ஐயா தெரியாதய்யா என்று சொன்னேன். நீயெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்ததே ஒரு பெரிய பாவம் என்று சலித்துக்கொண்ட ஒரு பெரிசு பையா அதுதான் இந்தியத் திரை உலகின் கனவுக் கன்னி அவரைப் பார்க்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று சொன்னார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளுமே திரைத்துறையைப்பற்றிய என் பாண்டித்துவத்தைப் பறைசாற்றும்.
எப்படியோ போடப்போகும் பணம் 5 லட்சம் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் நான் கவலைப்படமாட்டேன் நீங்கள் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை என்று சொல்லிவிட்டார் நண்பர். நன்குபடித்துப் பட்டம் பெற்ற எழுத்தாற்ற்ல் மிக்க கணினிப் பயன்பாடு தெரிந்த தலைமை ஏற்கவும் தலைமையின்கீழ்ப் பணி செய்யவும் விழைவுள்ள ஆறுபேரை ஆசிரியக்குழுவாக அமைத்து இந்திய அளவில் தலை சிறந்த இயக்குனர் நடிகர்களை அழைத்துவந்து நேருக்குநேர் சந்திப்பு பேட்டி என்று பயிற்சி அளித்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் தலைமையில் மற்றவர்கள் குழுவாகப் பணி செய்து பத்திரிக்கையைக் கொண்டுவரும் அளவுக்குப் பயிற்சி அளித்துப் பத்திரிக்கையின் வெள்ளோட்டமாக மூன்று மாதங்கள் பத்திரிக்கையை முழுமையாக அச்சிட்டு தெரிந்தெடுத்த சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக் கேட்டு இறுதியில் ஐந்து நிமிட விளம்பரப்படம் ஒன்றை சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் உருவாக்கி அந்தப் பத்திரிக்கை வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நாடுதிரும்பாமல் அமெரிக்காவில் உயிர் துறந்தார். அவருக்கென்று ஆரம்பித்த பத்திரிக்கை என்பதால் வேறு யாரையும் ஆசிரியராகப் போடாமல் அந்தப் பத்திரிக்கை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்தது.
அந்தப் பத்திரிக்கையின் ஆல் இன் அழகுராஜாவாக ஆல் ரவுண்டராக நான் இருந்த காலத்தில் ஒரு பெரிய அச்சுக்கூடத்தில் ஸ்டாப் தி பிரஸ் என்று அச்சிடுவதை நிறுத்தும் அதிகாரத்துடன் பவனிவந்து திரை உலகம் தொடர்பான ஒரு பெரிய தரவுத் தளத்தினை உருவாக்கி (திரை உலகக் கிசுகிசுவும் உள்ளடக்கம் ஆனால் வெளியிட்டதில்லை) புலனாய்வுக் கட்டுரை நம்பகமான் தகவல் என்று அது தரமான திரை உலகச் செய்திகளுடன் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடக்க அடித்தளம் அமைத்தேன். (http://www.vallamai.com/literature/articles/33187/)
பேராசிரியர் நாகராஜனின் இந்த வாழ்க்கைப்படிப்புதான் எத்தனை சுவையாக இருக்கிறது.. ஆனாலும் இந்தப் பேராசிரியர் நகைச்சுவையோடு தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் வல்லவர். இந்த நகைச்சுவையுடனே அந்த அனுபவத்தில் உள்ள கஷ்டங்களையும் ஒருங்கே தெரிவிக்கிற அழகு ஒன்றே நம்மை அவர் பக்கம் ஈர்க்கிறது. இந்த வார வல்லமையாளராகவும் நம் வல்லமை குழு தேர்ந்தெடுப்பதில் பெருமை கொள்கிறது.
பேராசிரியர் நாகராஜன் மென்மேலும் பல கட்டுரைகள் எழுதவேண்டும் என்று ஆர்வத்தோடு இந்த வல்லமையாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.
கடைசி பாரா: இசைக்கவி இரமணன் அவர்கள் கவிதை ஒன்று இந்த வாரத்தில் ஃபேஸ்புக்’ இல் எழுதியது
நட்டநடு வேவிதை பிளந்திடாமல்
தளிரேதும் தரைமீது துளிர்ப்பதுண்டோ?
நட்டநடு நிசியில்மனம் வெடித்திடாமல்
நல்லதொரு கவிதைதான் பிறப்பதுண்டோ?
கொட்டுகிறேன் புதுமுரசம்! கொடிபிடித்தேன்!
குறுக்குத்துறை தனில்விழுந்து குலவும் மின்னல்
நட்புடனே எனைத்தழுவி நின்றபோது
நான்தீர்ந்தேன்
திவாகர்

”தேவன் தம் எழுத்து, சொல் எதனாலும் பிறர் மனதிற்குத் துன்பம் புரிந்தவரன்று. அவர் ஹாஸ்யம் என்றும் பிறர் மனதை நோகக்கூடாது என்று மற்ற ஹாஸ்ய எழுத்தாளர்களுக்கு அவர் முன்மாதிரி” என்று தேவன் மறைந்த வேளையில் திரு மீ.பா.சோமசுந்தரம் உரையாற்றினார். அவர் சிறுகதைகளில் பொழியும் ஹாஸ்ய ரசம் அப்படிப்பட்டதாகும். ஒரு பத்திரிக்கை துணை ஆசிரியர் என்கிற முறையில் அவர் எழுதிய சிறுகதைகளாகட்டும், பத்திரிக்கை ஆசிரியர் என்ற வகையில் விகடனில் எழுதிய சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ரசிக்கக் கூடியவையாகவே இருந்தன. அவர் எழுதிய சிறுகதைகள் விச்சுவுக்குக் கடிதங்கள், ஜாங்கிரி சுந்தரம், சீனுப்பயல், ராஜாமணி போன்ற தலைப்புகளில் தொகுப்புகளாக பின்னாட்களில் வெளியிடப்பட்டன. நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியதாக அல்லையன்ஸ் பதிப்பகத்தினர் தங்கள் தேவன் புத்தகமொன்றில் எழுதியுள்ளனர்.
ஜாங்கிரி சுந்தரம் எனும் நகைச்சுவை கதையில் கோபால்சாமி என்பவன் தன் ஆப்த நண்பன் விரும்பும் யுவதியை பட்டணத்தைச் சேர்ந்த 54 வயதான ஹோட்டல்காரர் ஜாங்கிரி சுந்தரம் (ஜாங்கிரியில் பிரபலமானதால் அந்தப் பெயர்) கலியாண்ம் செய்துகொள்வதாகத் தெரிந்ததும், தன் ஆத்மநண்பனுக்காக பல் வைத்தியர் போல வேடமிட்டு, பல்வலியால் துடிக்கும் ஜாங்கிரி சுந்தரத்தின் கீதம் இருக்கும் பற்களையெல்லாம் கழட்டி விட்டுப் பழி வாங்கும் ஒரு நகைச்சுவைக் கதை. கடைசியில் அந்த ஆப்தநண்பனானவன் தன் பழைய காதலியை மறந்து புதியவளை ஏற்கனவே தெரிந்தெடுத்துவிட்டது என்ற விஷயம் இந்த கோபால்சாமிக்குத் தெரிந்ததும், பழிக்குப் பழியாக அந்த ஜாங்கிரி சுந்தரத்துக்குச் செய்ததை தன் நண்பனுக்குச் செய்யப் போவதாக பல்லைக் கடித்துக் கொண்டுப் போவதாக கதையை முடிப்பார் தேவன்.
நவரசங்களும் கலந்த சிறு கதைகளைப் படைத்திருக்கிறார் தேவன். முசாபரி பங்களா, பேயடைந்தவீடு, ஜவந்திக்கோட்டை மர்மம் எனும் பேய்க்கதைகளும் இவைகளில் அடங்கும். மல்லாரிராவ் கதைகள் அந்தக் கால கட்டத்தில் வாசகர்களின் உள்ளங்களை வெகுவாகக் கவர்ந்தவை என்று சொல்வர். என்னை மிகவும் கவர்ந்த தேவனின் ஒரு சிறுகதையை கீழே தருகிறேன். ‘அறியாமல் பிடித்த மோகம்’ எனும் ஒரு கதை.. ஒரு பஸ்ஸில் உட்கார்ந்தவனின் மனநிலையை அப்படியே நகைச்சுவையாகக் கொண்டு வரும் தேவனின் எழுத்துக் கலையை எவ்வளவுதான் புகழ்வது.. இதோ அவர் எழுத்தில்..
செவத்த பையன், பிடிவாதக்காரன் தான் என்பது அவன் முகரக் கட்டையைப் பார்த்தவுடனேயே நன்றாய்த் தெரிந்தது.
அவன் வந்து, எனக்கு முன்பு இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்ட உடனேயே வாயோடு பாட ஆரம்பித்து விட்டான். பஸ்ஸும் கிளம்பிற்று. அப்படி இரைச்சல் போட்டும் பாடவில்லை. ஏதோ தன்னுடைய ஆத்ம திருப்திக்காகப் பாடிக்கொள்வது போலவே தோன்றிற்று.. பாடிக்கொண்டே முகத்தை அங்கும் இங்கும் நீட்டி, சுற்றி நடக்கும் காரியங்களைக் கவனித்தான்.
பாட்டு ஒரே மாதிரியாக இருந்தது. திருப்பித் திருப்பி ‘மாயப் பிரபஞ்சத்திலே ஆனந்தம் வேறில்லை’ என்று சொல்லிக்கொண்டு இருந்தானேயொழிய, மேலே அடுத்துப் போகவே இல்லை.சில சமயம் தடித்த ஊமைக் குரல்; ஒரு சமயம் கீச்சென்ற குரல், ஒரு சமயம் வாயில் டிக்கட்டைக் கௌவ்விக் கொண்டே….. இப்படியாக அந்த ஒரே அடியைப் பாடினான்.
கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தேன். தாங்கமுடியவில்லை. பாட்டு என்றால் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் என்னமோ இந்தப் பாட்டை இந்தவிதமாக கேட்கப் பிடிக்கவில்லை. ஆகவே அவன் பக்கம் திரும்பி கோபமாக விறைத்துப் பார்த்தேன். அவன் பதிலுக்கு, உனக்கும் அப்படித்தான் என்று சொன்னது போல விறைத்துவிட்டு மறுபடி விடாமல் பாடினான்.
இரண்டு நிமிஷம் பொறுத்தேன். பிறகு ”ஏனப்பா? உனக்கு வேறு ஒரு பாட்டும் ஏதும் தெரியாதா இதைத் தவிர?” என்று கேட்டேன்.
“தெரியும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் “மாயப்பிரபஞ்சத்தில்” பாடினான்.
“இதைப் பாடித்தான் ஆகவேண்டுமோ இப்போது?’
”சும்மா பாடறேன்”
”சற்றுப் பேசாமல் பாடாமல்தான் இருந்து பாரேன்!”
”சரிதான்,” என்றான்.
ஆனால் மேலே பாடிக்கொண்டே போனான்.
“என்ன சத்தம் ஐயா?” என்று சள்ளென்று விழுந்தேன்.
“நான் டிக்கெட் வாங்கியிருக்கிறேன்.. என் இஷ்டப்படி இருக்கிறேன்..”
”நானும்தான் வாங்கியிருக்கிறேன்.. ஆனால் உன் மாதிரி இப்படிப் பாடுகிறேனா?”
“சரிதான் ஸார்!”: என்றான். என் வார்த்தையை ஒப்புக்கொண்டு, ஆனால் விடாமல் மேலே பாட்டு மாத்திரம் ஊமைக் குரலில் கேட்டது. “அடப் பழிகாரா!” என்று நினைத்துக் கொண்டேன்.
எனக்கு அடுத்தாற்போல் ஒரு ஆசாமியும் அவன் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த ஆசாமி என் வாக்குவாதத்தைக் கவனித்து, ’நீங்கள் சொன்னது சரிதான்’ என்றான். பாடுபவன் திரும்பி ஒரு புன்னகை செய்துவிட்டு, ’சரிதான்’ என்றான். பிறகு “மாயப்பிரபஞ்சத்திலே” என்று ஆரம்பித்தேன்.
“உன்னைப் பாட்டை நிறுத்தப் பண்ணுகிறேன் பார்!” என்றேன் ஆத்திரத்துடன். “அப்படித்தான் செய்யணும்” என்றாள் அந்த ஸ்திரீயும்.
“சரி, எங்கே அப்படி செய்யுங்கள் பார்ப்போம்?” என்றான் பாடுபவன்.
“ஆமாம், நிறுத்து பாட்டை” என்றார் கோடியிலிருந்த இன்னொரு பேர்வழி.
“நான் பாட்டுக்குப் பாடினால் உனக்கு என்ன ஐயா? என்று கேட்டான் குற்றவாளி.
“பிறத்தியாருக்கு உபத்திரவம் செய்யும்படியாகப் பாடக்கூடாதுதான்”
“யாரையா சொன்னது அப்படி?”
“அப்படி சட்டம் இருக்கு”
“எங்கே அந்த சட்டம்?”
“உன்னை மென்னியைப் பிடித்து கோர்ட்டுக்குத் தள்ளிக்கொண்டு போனால் தெரியும் இருக்கற இடம்!”
“எனக்கு லக்ஷயமில்லை”.. மறுபடி ‘மாயப் பிரபஞ்சத்தில்’ என்று பாட்டு ஆரம்பித்தான்.
“ஏண்டா, உனக்கு சொரணை கிடையாதா?” என்று கேட்டேன்.
“அதெல்லாம் செத்துடுத்து ஸார்!” என்றார் பக்கத்து ஆசாமி.
“அப்படியே மண்டையில் ஒரு தட்டு தட்டுங்களேன்!” என்று சிபாரிசு செய்தார் கோடி ஆசாமி.
“ஓஹோ”! என்றான் பாடகன். ஆனால் மறுபடியும் பாட்டுச்சத்தம் கேட்டது.
“நீ நிறுத்த முடியாதா?” என்று சற்று அடக்கமாக கடைசிமுறையாகக் கேட்டேன்.
“உனக்கு நான் என்னய்யா கெடுதல் செய்தேன்.. நான் பாட்டுக்கு..”
“பார், எங்களுக்கெல்லாம் எவ்வளவு அசௌகரியமாக இருக்கிறது. இதற்கு நியூசென்ஸ் என்று பெயர். ‘நியூசென்ஸ் செய்கிற பேர்களையெல்லாம் என்ன செய்வார்கள் தெரியுமா? நன்னடத்தை ஜாமீன் வாங்கிக்கொள்வார்கள். அப்படிக் கொடுக்கமுடியாத பேர் ஜெயிலுக்கும் போகவேண்டியதுதான்!” என்றேன்.
“கொயிட் ரைட்” என்றான் பக்கத்திலிருந்த மனிதன்.
“நாலு நாள் அங்கே போய்க் கல் உடைத்தால் இந்தப் பாட்டெல்லாம் பறக்காதோ” என்றார் கோடியிலிருந்த பேர்வழி.
பாடிக்கொண்டிருந்தவன் உண்மையிலேயே அரண்டுவிட்டான். சற்று நேரம் முகத்தைக் கோட்டான் மாதிரி வைத்துக்கொண்டிருந்தவன் பஸ் நிற்குமிடம் ஒன்று வந்தவுடன் எழுந்து பஸ்ஸை விட்டு கீழே இறங்கினான்.
வெற்றி அடைந்துவிட்டேன் என்பதில் எங்களுக்கு அசாத்திய சந்தோஷம். முக்கியமாக நானே ஊக்கமாய் சிரத்தை எடுத்துக் கொண்ட செயல் இல்லையா.. பத்து நிமிஷம் ஆயிற்று. என் தோள் பட்டையைப் பின்னால் இருந்த ஆசாமி மெதுவாகத் தொட்டார். திரும்பிப் பார்த்தால் என்னையே அவ்வளவு பேரும் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது.
“என்ன?” என்றேன்.
“நீங்களும் கொஞ்சம் ‘மாயப் பிரபஞ்சத்திலே’ பாடுவதை நிறுத்துகிறீர்களா, சார்?” என்று கேட்டார் அந்த ஆசாமி.
“ஓஹோ! எனக்குத் தெரியவே தெரியாதே!” என்று நானும் அடுத்த இடத்தில் இறங்கினேன்.
விச்சுவுக்குக் கடிதங்கள் என்பது ஒரு தாய்மாமா, தன் சகோதரி மகன் இண்டர் (12ஆம் வகுப்பு) படித்துமுடித்த வுடன் அவன் என்னென்ன துறைகள் தேர்ந்தெடுக்கலாம் என்பதை கடிதம் மூலமாக, அவனுக்கு எழுதி அனுப்பும் அறிவுரைக் கதைகள் அவை. தேவனின் அறிவுரைகளாக மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவே நினைக்கத் தோன்றும். குறிப்பாக ஆசிரியர் படிப்பு, பொறியியல், மருத்துவத்துறைகள் தேர்ந்தெடுப்பது பற்றியும் அந்தத் துறைகள் அன்றைய நிலையில் எப்படி இருந்தன என்பதையும் எழுதும்போது, அவர் எழுதியவை அனைத்தும் அறுபது வருடங்கள் ஆகியும் தற்போதுள்ள நிலைக்கு ஏராளமாகப் பொருந்துவதையும் நினைத்து ஆச்சரியத்தில் மூழ்குவோம். முக்கியமாக ஆசிரியர் என்பவர் புத்திசாலித்தனமான முறையில் ட்யூஷன் மூலமாகவும் அதிகம் சம்பாதிக்கமுடியும் என்பதை வெகு இயல்பாக விளக்குவது எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.
விச்சு ஒருவேளை மேல்படிப்பை விட்டு வியாபாரத்தில் இறங்கலாம் என்றும் யோசனை தெரிவித்து தாய்மாமன் கடிதம் எழுதும்போது, அந்த வியாபாரத்தின் கஷ்டநஷ்டங்களை விவரிப்பதுடன் அவர்கள் விளம்பரத் துறையையும் ஏகத்துக்கு நக்கல் செய்து எழுதுவார் தேவன். ஒரு வியாபாரி ஒரு பெரிய கடையை ஒரு கடைவீதியிலே திறந்துவிட்டு இந்தக் கடைதான் நகரத்திலேயே பெரிய கடை என்று விளம்பரம் செய்வதாகவும், அதே வீதியில் இன்னொருவன் இன்னொரு கடை போட்டியாகத் திறந்து இந்த நாட்டிலேயே இந்தக் கடைதான் பெரிய கடை என்று விளம்பரம் செய்து திருப்தி அடைவதாகவும், சிலநாட்கள் கழித்து அதே வீதியில் இன்னொரு பெரிய கடை இவர்களுக்குப் போட்டியாக எழுந்தது. அவன் என்ன விளம்பரம் செய்தான் தெரியுமா – இந்தக் கடைவீதியிலேயே எங்கள் கடைதான் பெரிய கடை!! தேவன் இப்படி எழுதிவிட்டு சாமர்த்தியாமான வியாபாரத்தொழிலைப் பற்ரி மென்மேலும் நகைச்சுவையாக விளக்கும் கதை அது. கடைசியில் விச்சு கல்யாணமும் செய்துகொண்டால் நல்லதுதான் என்று எழுதும்போது மனைவியின் அருமை பெருமைகளை கவிமணி எப்படி கவிதையில் எழுதியிருப்பார் என்பதை விச்சுவுக்கு விவரிப்பார். மனைவி என்பவளை எப்படிப்பட்ட தேவதையாக நினைத்து கவிமணியின் கவிதைகளைத் தேடிப்பிடித்து எழுதுகிறார், படியுங்களேன்..
“காரியம் பார்ப்பாள் கணக்கும் எழுதுபவள்
காய்கறியாக்கவும் கெட்டி அவள் கை பட்டால்
வேம்பும் கரும்பல்லவோ ருசி..
ஆபத்து வேளையில் அறிவு சொல் மந்திரி
அரும் பிணிக்கு அவளே சஞ்சீவி.
துன்பம் வரும்போது ஆறுதல்
தரித்திரகாலத்தில் அருநிதியாம் அந்தத் தேவி.
அங்குமிருப்பாள், பின்னிங்குமிருப்பாள் உம் அண்டையிலும்
கட்டிக் காப்பாள் உமக்கு கற்பவருத்தமில்லாமல்
கவலைகள் அத்தனையும் தலையேற்பாள்..”
(இன்னும் வரும்)
நாகேஸ்வரி அண்ணாமலை
இப்போது இஸ்ரேலுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் யூதர்கள் குடிவரலாம். அவர்களை இஸ்ரேல் அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. அவர்களுக்குக் குடியுரிமை உடனேயே வழங்கப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே அவர்கள் இஸ்ரேலின் இரகசிய உளவுப் படையான மோசாடில் (Mossad) கூட சேர்ந்து பணிபுரியலாம். வளம் நிறைந்த அமெரிக்காவிலிருந்து கூட பல யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்திருக்கின்றனர். 1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் 3000 ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் வாழ்ந்த புண்ணிய பூமியில் தங்கள் இனத்திற்கென்று ஒரு நாடு உருவாகியிருக்கிறது, அங்கு சென்று வாழ்க்கையைக் கழித்தால்தான் சொர்க்கத்தை அடையலாம் என்று எண்ணிப் பல யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்திருக்கின்றனர். இப்போதும் இங்கேயே முழுவதுமாகக் குடிபெயரவில்லை என்றாலும் வருடத்தில் சில நாட்களாவது இங்கு வந்து தங்கிச் செல்ல வேண்டும் என்று பல அமெரிக்க யூதர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் அதே சமயம் பாலஸ்தீன அரேபியர்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து இஸ்லாம் மதத்தைத் தழுவி பதின்மூன்று நூற்றாண்டுகளாக இங்கேயே வசித்துவருகிறார்கள். இதற்கு முன்னால் இவர்கள் பழங்குடி மக்களாக இங்கு வாழ்ந்திருக்க வேண்டும். இந்த பாலஸ்தீன அரேபியர்களுக்கு தங்கள் சொந்த மண்ணில் வசிக்க எல்லாத் தொல்லைகளையும் இஸ்ரேல் அரசு கொடுத்து வருகிறது. இப்படித் தொந்தரவுகள் கொடுப்பதால் அவர்களாக வெளியேறினால் நல்லது. இல்லயென்றால் அவர்களை எப்படியாவது வெளியேற்றிவிடவும் பல திட்டங்களை வைத்திருக்கிறது.
எங்களை புராதன நகருக்குள் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் மூன்று வருடங்கள் படிப்பதற்காக பெல்ஜியத்திற்குச் சென்றிருந்தாராம். திரும்பி வந்தபோது இஸ்ரேல் அரசு இவர் நாட்டிற்குள் வருவதற்குப் பல தடைகள் விதித்ததாம். சில ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே இருந்தால் பாலஸ்தீன அரேபியர்கள் இஸ்ரேலியக் குடியுரிமையை இழந்துவிடுவார்களாம். தன்னுடைய குடியுரிமையைப் பெறுவதற்காக இவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறாராம். (இவருக்கு யூத இனத்தைச் சேர்ந்த காதல் தோழி இருக்கிறாள். ஆனால் சாதாரணமாக இப்படி இருப்பதைப் பார்க்க முடியாது.)
எங்களை பெத்லஹேமுக்கும் ராமல்லாவுக்கும் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டியின் மனைவியும் குழந்தைகளும் கனடாவில் இருக்கிறார்கள். வருடம் ஒரு முறை அவர்கள் இங்கு வருகிறார்கள். அவர் இருப்பது வெஸ்ட் பேங்கில். அங்கிருப்பவர்கள் இஸ்ரேலுக்கு வருவதற்கு இஸ்ரேல் அரசு வழங்கியிருக்கும் அடையாள அட்டை வேண்டும். எந்த இடத்திலும் வெஸ்ட் பேங்கிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முடியாதபடி இஸ்ரேல் அரசு மிகப் பிரமாண்டமான மதில் சுவரை எழுப்பியிருக்கிறது. சில இடங்களில் இதைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேல் அரசு அமைத்துள்ள சோதனைச் சாவடிகளின் மூலம்தான் வர வேண்டும். இப்படி இவர்களுக்குத் தடைகள் இருப்பதால் இவர் குடும்பம் கனடாவிலேயே இருக்க முடிவு செய்திருக்கிறது.
நாங்கள் இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டெல் அவிவிற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் இருக்கும் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து (இஸ்ரேல் உருவாவதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். இவரின் பெயரை இந்த விமான நிலையத்திற்கு வைத்திருக்கிறார்கள்.) ஜோர்டன் தலைநகரான அம்மான் வந்துசேர்ந்தோம். ஜெருசலேமிற்கும் அம்மானுக்கும் இடையே உள்ள தூரம் நாற்பத்தைந்து மைல்கள்தான். ஆனால் அந்த தூரத்தைக் கடக்க ஜெருசலேமில் சர்வதேச விமானப் போக்குவரத்து இல்லை. பேருந்துகளில்தான் பயணம் செய்ய வேண்டும். பேருந்தில் பயணம் செய்தால் இஸ்ரேலிய-ஜோர்டன் எல்லையில் இஸ்ரேலிய அரசு நடத்தும் சோதனை மிகவும் கெடுபிடியாக இருக்கும் என்றார்கள். பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அதனால் டெல் அவிவிலிருந்து விமானம் மூலமே இஸ்ரேலை விட்டுக் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்தோம். விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம்தான். ஆனால் கட்டணம் எவ்வளவு தெரியுமா? அறுநூறு அமெரிக்க டாலர்கள். அடிக்கடி ஒரே கம்பெனியில் விமானப் பயணம் செய்பவர்களுக்கு சில சலுகைகள் உண்டு. என் மகளுக்கிருந்த அந்தச் சலுகையைப் பயன்படுத்தி எங்களுக்கு அந்தப் பயணத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தாள்.
எங்களை அன்று ஜெருசலேமிலிருந்து டெல் அவிவ் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற டாக்சி ஓட்டுநர் ஒரு அரேபியர். இளவயதினர். சொந்தமாக டாக்சி வைத்திருக்கிறார். அவர் எங்களைக் கூட்டிக்கொண்டு டெல் அவிவ் விமான நிலையத்திற்குள் நுழைந்ததும் இஸ்ரேல் போலீஸ் துறையைச் சேர்ந்த ஒருவர் எங்கள் டாக்சியை நிறுத்தினார். எல்லா போலீஸார் கையிலும் நீண்ட துப்பாக்கி. இவர் கையிலும் ஒன்று இருந்தது. எங்கள் டாக்சி அருகே வந்து உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தார். எங்கள் சூட்கேசுகளைத் திறக்கச் சொன்னார். எங்கிருந்து வருகிறோம், எங்கே போகிறோம் போன்ற பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, டிரைவரை மட்டும் தன்னோடு அழைத்துச் சென்றார். அதற்கு முன்பே அவருக்கு அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். அவரைத் தனியாக அங்கு பக்கத்தில் இருந்த அவர்களுடைய அலுவலகத்திற்குள் கூட்டிச் சென்று பல கேள்விகள் கேட்டுவிட்டுப் பின் அனுப்பிவைத்தனர். அந்த டிரைவருக்கு இப்படி அவர்கள் தன்னை நடத்தியதைக் கண்டு அப்படி ஒரு எரிச்சல். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘உனக்கு நான் அடிமை இல்லை’ என்ற பாவத்தில் முகத்தை வைத்துக்கொண்டார். அதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர் பல தலைமுறைகளாக ஜெருசலேமில் வாழ்ந்து வருகிறாராம். இவரைப் போன்றவர்கள் இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து இரண்டாம் பட்ச குடிமக்களாகி இருக்கின்றனர்.
இஸ்ரேலில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் ஒரே வேலைக்கு ஒரே மாதிரியான சம்பளம் இல்லையாம். யூதர்களுக்கு அதிகமாகவும் அரேபியர்களுக்குக் குறைவாகவும் கொடுக்கப்படுகிறதாம். பயண வழிகாட்டி எங்களை ராமல்லாவுக்கு அழைத்துச் சென்றபோது இஸ்ரேல் அரசால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் அரேபியர்களின் வீடுகளையும் காட்டினார். அரேபியர்களுக்குத் தண்ணீர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுவதால் அவர்களின் வீடுகளின் கூரைகளில் தண்ணீரைச் சேமித்துவைத்துக்கொள்ள பெரிய தொட்டிகளைப் பொருத்தியிருந்தார்கள். ஆனால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளில் அப்படி தொட்டிகள் எதுவும் இல்லை. அவர்களுக்குத் தினமும் தண்ணீர் சப்ளை இருக்கிறதாம். அதனால் இவர்கள் வீடுகளுக்கு முன்னால் செழிப்பான புல்வெளிகள் இருக்கின்றன.
பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான – ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட – இடங்களைப் பிடித்துக்கொண்டு அங்கு யூதர்களை இஸ்ரேலிய அரசு குடியேற்றியிருக்கிறது. இது 1967–லிருந்து – அதாவது இஸ்ரேல் போரில் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டதிலிருந்து – தொடர்ந்து வருகிறது. இப்படிக் குடியமர்த்தப்பட்டவர்கள் அவர்களுக்கு அருகில் வசிக்கும் அரேபியர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கிறார்கள். ஒரு முறை பெடுயின் (Bedouin) என்னும் இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆடுகளுக்கு விஷம் வைத்துவிட்டார்களாம்.
நாங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்குக் காரணமாகயிருந்த யூத நண்பரும் இன்னொரு யூத நண்பரும் தீவிர இடதுசாரிகள். இவர்கள் பல முறை இஸ்ரேல் அரசு அரேபியர்களுக்கும் பெடுயின் இனத்தவர்களுக்கும் இழைத்த கொடுமைகளைத் தட்டிக் கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். ஒருவர் ‘முதல் யூதக் கோவில் இடிக்கப்பட்டதுதான் யூத இன சரித்திரத்திலேயே நடந்த சிறந்த சம்பவம்’ என்று நக்கலாகச் சொல்கிறார். இவர்தான் நாங்கள் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளக் காரணமாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இஸ்ரேலைச் சேர்ந்த இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஆறு வருடங்கள் வேலைபார்த்துவிட்டு மறுபடி இஸ்ரேலுக்கே திரும்பச் சென்றுவிட்டார். இவர் இப்படித் திரும்பக் காரணமாக இருந்தவர் இவர் மனைவி என்கிறார். ஒரு முறை இவர் ரேடியோவில் பேட்டி கொடுத்தபோது இந்தியாவில் பாபர் மசூதியை இடித்ததைப் பற்றிக் கேள்வி கேட்டார்களாம். இஸ்ரேலில் போல் அங்கும் பழைய சரித்திரத்தைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றதும் அப்படியே பேட்டியை முடித்துவிட்டார்களாம். இன்னொருவர் அமெரிக்காவில் பிறந்து தனது பதினெட்டாவது வயதில் ஹீப்ரு மொழியால் ஈர்க்கப்பட்டு இஸ்ரேலுக்கு வந்தவர். இருவரும் அரசின் கொள்கைகளை வெகுவாகக் கண்டிப்பவர்கள். இருவரும் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறார்கள். இஸ்ரேலில் யூதர்களுக்கிடையே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்ட பிறகு யூத மத குருமார்கள் அடங்கிய ஒரு குழு அதை அங்கீகரிக்க வேண்டுமாம். இவர் விவாகரத்து செய்துகொண்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது குருமார்கள் குழு எளிதில் அதை அங்கீகரிக்கவில்லையாம்.
எல்லாச் சமூகங்களிலும் இருப்பது போல் யூத சமூகத்திலும்பல விதக் கொள்கைகள் உடையவர்கள் இருக்கிறார்கள். பழமை பேணும் யூதர்களிலிருந்து (conservative) பரந்த மனப்பான்மை கொண்ட முற்போக்காளர்கள் (liberal) வரை இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் எங்கள் யூத நண்பர் வருடத்திற்கு ஒரு முறை இஸ்ரேலுக்குப் போக வேண்டியது தன் கடமை என்று நினைக்கிறார். பலர் சேர்ந்து வாங்கும் ஒரு அப்பார்ட்மெண்டை ஜெருசலேமில் வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் திவருடைய முறை. அந்தச் சமயத்தில் இவர் அங்கு சென்று தங்கிக்கொள்ளலாம். அமெரிக்காவில் வாழும் இன்னொரு யூத நண்பர் ஓரிரு முறை யூதச் சட்டங்களைப் (Jewish Law) படிக்க ஜெருசலேம் சென்றுவருகிறார். இவரைப் பொறுத்தவரை யூத மதம் என்பது ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை, அதற்கென்று சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றுவது ஒவ்வொரு யூதனுடைய கடமை. யூதர்கள் தங்கள் புண்ணிய தலம் என்று கருதும் பாலஸ்தீனத்திற்குப் போக வேண்டும், அங்கேயே தங்கி உயிரை விட வேண்டும் என்பதெல்லாம் இவருடைய கொள்கையல்ல. ஆனால் யூத மதக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். யூதர்களுடைய ஓய்வு தினமான (Sabbath Day) சனியன்று – அதாவது வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமித்ததிலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை – இவர் யாரிடமும் பேசுவதில்லை; தொலைபேசியை அன்று தொடவே மாட்டார். அன்று யார் தொலைபேசியில் கூப்பிட்டாலும் அவர் மனைவிதான் பேசுவார். பெரிய வேலை எதுவும் அன்று செய்வதில்லை. இவர் அமெரிக்காவில் வாழ்ந்துவருவதால் அமெரிக்கப் பழக்க வழக்கங்களைக் கையாண்டாலும் இப்படிச் சில யூதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார். யூதர்கள் தங்களுக்குள்ளேயேதான் திருமணம் செய்துகொள்ளுகிறார்கள். இவருடைய பிள்ளைகளும் யூதர்களுக்குள்ளேயே திருமணம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
இவருடைய நண்பர்களான ஒரு தம்பதி இப்போது இஸ்ரேலில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்துவந்தவர்கள். இஸ்ரேலில்தான் யூதப் பழக்க வழக்கங்களை நன்றாகப் பின்பற்ற முடியும் என்று எண்ணி அங்கு குடியேறியவர்கள். மேலே குறிப்பிட்டவர்களை விட இவர்கள் இன்னும் கொஞ்சம் பழமைவாதிகள் எனலாம். இருந்தாலும் இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களுக்கு எதிராகச் செய்யும் செயல்கள் இவர்களுக்கு உடன்பாடில்லை. இவர்களும் அரசுக்கு எதிரான சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட சிகாகோ பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரின் மனைவிதான் அவர்கள் குடும்பம் இஸ்ரேலுக்குத் திரும்பிச் செல்லக் காரணமாக இருந்தவர் என்று மேலே சொன்னேன். இவருக்கு யூத மத நம்பிக்கை உண்டு போலும். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு மத குருமார்கள் பெண்ணை ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி சில சோதனைகள் செய்வார்களாம். இது யூதப் பழக்கம் போலும் இதை இவர் எதிர்க்கவில்லையாம். மேலும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் இவர்களுடைய பிள்ளைகளுக்கு – இவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன் – கட்டாய ராணுவ சேவை இருந்திருக்காது. இஸ்ரேலில் மூன்று பிள்ளைகளுக்கும் அது உண்டு. அப்படியும் இஸ்ரேலுக்கு வர வேண்டுமென்று இவர் நினைத்திருக்கிறார். இவர்கள் வீட்டில் ஒரு நாள் எங்களுக்கு விருந்து கொடுத்தார்கள். மத்திய கிழக்கில் தயாரிக்கப்படும் சிறந்த உணவு வகைகள் இருந்தன. அதை சமைத்தது அல்லது இவருக்குச் சமைக்க உதவியது யார் தெரியுமா? இவருக்கு வீட்டு வேலைகளில் அவ்வப்போது உதவும் ஒரு இஸ்ரேலிய அரேபியப் பெண்.
இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூற வேண்டும். அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடியேறியிருக்கும் எல்லா யூதர்களுக்கும் அவர்கள் விரும்பினால் திரும்ப அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர்கள். இஸ்ரேலும் இவர்களை அங்கேயே வைத்துக்கொண்டு நன்றாக நடத்தத் தயாராக இருக்கிறது; அமெரிக்காவும் திரும்ப அழைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது.
யூதர்களுக்காக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முற்றிலும் சரி என்று நினைக்கும் யூதர்களிலும் சிலர் பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்றும் அந்த முயற்சிகளை முறியடிக்க இஸ்ரேல் அரசு செய்து வருவது சரியில்லை என்றும் நினைக்கிறார்கள். பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு செய்யும் எல்லாக் காரியங்களையும் கண்டுகொள்ளாத யூதர்களும் உண்டு. இப்படிப் பல தரப்பட்ட கொள்கைகளையுடைய யூதர்களின் விருப்பம் எப்படி 2013 ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதிபலித்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்)
காலத்தை ஒரு தனித்துவ மாய்
ஏற்றுக் கொள்கிறேன்.
காலம் பழுதற்றது !
நம்மை மட்டும் வட்ட மிடுது
வாழ்வுக்கு முழுமை அளிப்பது !
குழப்பும் அப்புதிரான விந்தை
முழுமைப் படுத்தும் !
மெய்ப்பாடு எனக்கு ஏற்புடைத்து
ஐயுற்று நான் அதன் மீது
கேள்வி கேட்ப தில்லை !
மூழ்க்கிடும் உலோகா யுதக் கோட்பாடே
முதலும், முடிவும் என்றுபேன் !
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (March 13, 2013)
http://jayabarathan.wordpress.com/
இன்னம்பூரான்
‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’
‘பித்தா’ என்ற இந்த தெய்வம் தந்த ‘முதல்நற்றமிழ்’ சொல் என்னை எழுபது வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச்செல்கிறது. தஞ்சை மேலவீதி கொங்கணேசுவரர் வித்யாசாலையில் காலை பிரார்த்தனை இவ்வாறு தொடங்கும்; உரக்கக் கோரஸாக, பல சுவரபேதங்களில் பாடுவோம்; பொருள் அறிந்ததில்லை. பாலு சாரிடம் பெருமானை ‘பித்தன்’ என்று விளிப்பது முறையோ என்று கேட்டேன். சொன்னது அப்போது ஏதோ கொஞ்சம் புரிந்தது; மறந்து விட்டேன். ஐந்து வருடங்களுக்கு முன்னால் அங்கு சென்றபோது, தலைமை ஆசாரியர் ‘பழைய மாணவரா’ என்று கனிவுடன் வினவி, பிரார்த்தனைக்கு அழைத்துச்சென்றார். அதே கோரஸ். நானும் கலந்து கொண்டேன். ஏதோ ஒரு ஈரப்பசை கண்களில். அது நிற்க.
பெருமான் தனக்கு இட்டுக்கொண்ட விருது, இது. ஆலாலசுந்தரத்துக்கு மந்திரமாக உபதேசிக்கப்பட்டது. சுந்தரர் ஆட்கொள்ளப்பட்டது, திருவெண்ணைநல்லூர் பெருமானால். ‘தாட்பூட் தஞ்சாவூர்’ என்றெல்லாம் அதட்டிவிட்டு, சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி விட்ட மறையோன், திருவெண்ணைநல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்துவிட்டார். பின்னர் தன் கோலம் காட்டி, தரிசனம். சொற்றமிழால் பாடுக என்று ஆணை. திகைத்து நின்ற மாஜி மாப்பிள்ளையிடம் பெருமான் ‘மணப்பந்தலில் என்னை பித்தனோ மறையோன்..’ என்றல்லவா நிந்தித்தாய். ‘பித்தா’ என்றே தொடங்கு என்றார். பதிகம், கோரஸ், மீள் கோரஸ், இன்றைய ‘உன்மத்தம்’ தொடர்… அகரவரிசை அன்பர்கள் முதல் திருமுறையிலேயே திருஞானசம்பந்தர் எருக்கத்தம் புலியூரில்,
‘விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ஆண்அலி ஆகும் பித்தா பிறை சூடி…’
என்று தோத்திரம் செய்ததை முன் வைப்பர்; எப்படியும் எல்லாரையையும் பைத்தியமாக அடிக்கும் பித்தத்தின் தலைக்காவேரி இறையருள் தான் என்பதையும் பார்ப்போம்.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே. (6.25.7)
காதல் கொள்வதே பித்துப்பிடித்தாற்போலத்தான். பேரும், உருவும், ஊரும் அவளை மயக்கி, பெற்றோரை மறக்கச்செய்து, மரபு, வாழ்நெறி, அன்றாட நடவடிக்கை, தன்னிச்சை எல்லாம், தலைவனை நினைத்த மாத்திரம் காணாமல் போய்விடுகின்றன. ‘தேவாரம்’ என்ற இணையதளத்தில் கூறியப்படி,
‘… இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து , செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது… இனி , சத்திநிபாதத்தவரது நிலையை உரைக்குமிடத்து , நாமங் கேட்டல் முதலிய நான்கினையும் முறையே கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டைகூடல் என்னும் நான்குமாகவும், பின்னர் உள்ளவற்றை அணைந்தோர் தன்மையாகவும் கொள்க… சமயம் , விசேடம் , நிருவாணம் ` என்னும் தீக்கைவழி , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என்னும் நான்கு பாதங்களில் நிற்கும் நிலைகளையுணர்த்தியவாறாக உரைப்பாரும் உளர்…’
பிச்சி ஆனாளே, தலைமகள். அது காதலா? மோகமா? அல்லது பக்தியின் உன்மத்தமா? என்று நீங்களே தன்னுள்ளத்தைக் கேட்டு அறிந்து கொள்ளவும். பித்தனின்’ உன்மத்தத்தின் உத்தமத்தை, அதன் உன்னதத்தை அறிந்தவர்கள் அரிது. உன்மத்தங்கள் தான் எத்தனை வகை? எத்தனை வண்ணம்? அது மனோபாவமா அல்லது மோனமா அல்லது வெறும் மோகமா? வெறும் மோகமென்று ஒன்று உண்டா என்ன? மஹாகவி பாரதியார்’…கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி! உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!…’ என்று மன நிறைவுடன் பாடியதில் என்ன குற்றம் கண்டீர், ஐயா? அல்லது கோதா பிராட்டியார் ஶ்ரீரங்கநாதனை மோஹித்ததில் உன்மத்தம் தலைக்கேறவில்லையா? தலபுராணம் என்று அதை ஒதுக்கவா பார்க்கிறீர்கள்? நம் ஶ்ரீரங்கபெளராணிகையை கேட்டால், அவர் செப்புவார்,
‘…ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். “என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?”
“சுவாமி, தங்கள் கருணையே கருணை!”
ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.
இப்படியும் ஒரு பிச்சியா!
தற்கால இலக்கியத்தில் தேடுவீர்களானால், இதை படியும்: ‘உமக்கு சிவகாமியின் சபதம் தெரியுமோ? ‘உன்மத்தத்தை’ ‘சித்தபிரமை’ என்கிறார், கல்கி. தன்னுடைய ‘சித்த பிரமை’ தெளிந்த பின், அதை ‘பக்தியின் முதிர்ச்சி’ என்கிறார், ஆயனர் வாயிலாக. கேளும்.
*
‘… ஏகாம்பரநாதரையே என் பதியாக ஏற்றுக் கொண்டேன்!” என்றாள் சிவகாமி. தம் அருமை மகளுக்குச் சித்தப்பிரமை முற்றி விட்டதோ என்று ஆயனர் ஐயமடைந்தார். இன்னும் சிறிது பேசி அவள் தெளிந்த அறிவுடன் இருக்கிறாள் என்பதைக் கண்டார். இது சித்தபிரமை அல்ல பக்தியின் முதிர்ச்சிதான் என்று நிச்சயமடைந்தார்… கோயில் குருக்கள் சுவாமிக்கு அர்ச்சனையும் தீபாராதனையும் செய்து தட்டிலே பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார். அந்தத் தட்டில் பழம், புஷ்பம், விபூதி, குங்குமம் ஆகிய பிரஸாதங்களுடனே, ஆயனரின் முன்னேற்பாட்டின்படி, திருமணத்துக்குரிய திருமாங்கல்யமும் இருந்தது. சிவகாமி அந்தத் திருமாங்கல்யத்தையும் புஷ்ப ஹாரத்தையும் பக்தியுடனே பெற்றுத் தன் கழுத்திலே அணிந்து கொண்டாள். பின்னர், நடராஜனாகிய இறைவனுடைய சந்நிதியிலே நின்று சிவகாமி நடனமாடத் தொடங்கினாள். சிறிது நேரம் ஆனந்த பரவசமாக ஆடினாள். பிற்பாடு, “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்” என்னும் திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள்.. சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார். அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது, “தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.கல்கியின் சிவகாமியின் சபதம் முற்றிற்று’.
*
மனம் மாறினால், அறிவு குலைந்தால், உணர்வு மங்கினால், நினைவாற்றலை இழந்தால், விரும்பத்தகாத வேட்கை ஏற்பட்டால், ஒழுக்கம் கெட்டால், நடவடிக்கை அடாவடியானால், செயல் தடுமாறினால், அந்த நபரின் மனோபாவத்தைக் குறை கூறுகிறோம். அவருடைய மனம் மோனத்தை நாடினால் சித்தபிரமை என்கிறோம். அறிவு, சராசரி தேடலைத் தவிர்த்து, விவேகத்தை நாடினால், பித்தன் என்கிறோம். வலது பக்கம் போவதை இடது பக்கம் தேடுகிறோம். இடது பக்கம் போவதை வானத்தில் தேடுகிறோம். அதைத் தான் மறை ஞானமாக, வள்ளலார்,
‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்
மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி’
என்றார். ‘சுத்த சன்மார்க்கமே அகத்தில் இருந்துதானே தொடங்கப்பெறவேண்டியுள்ளது.‘ என்ற சுகபிரும்ம வாக்கு இது எனலாம். இதிகாச சுகபிரும்மத்தின் மூலமாக உன்மத்தத்தின் ஆதிமூலம் அறிய ஒரு வாய்ப்பு கிட்டியது.
அவன் தான் பிறை சூடிய பித்தன். தோடுடைய செவியன். ஆடிய பாதம். திருவாரூரில் அஜபா நடனம்; திருக்குவளையில் பிரம்மத் தாண்டவம்; நாகையில் பாராவாரதரங்க நடனம்; திருமறைக்காட்டில் ஹம்ச நடனம்; திருவாய்மூரில் கமல நடனம்; திருக்காறாயில் குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடிய காளி தாண்டவம்;
திருநள்ளாற்றில் உன்மத்த நடனம்.
உன்மத்தம் தலைக்கேற, ஏற, தொடர் நீளும் போல் இருக்கிறது. உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம். அதற்கு முன் திருமூலரின் இலச்சினை மற்றும் பதித்து, கட்டுரை நீண்டுவிட்டதற்கு சால்ஜாப்புக்கூறி, இப்போதைக்கு விடை பெறுகிறேன்.
ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே. 2751 –(திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.)
(தொடரும்)

உசாத்துணை:
http://www.thevaaram.org/index.php
–மேகலா இராமமூர்த்தி
சைவத் திருமுறைகளைப் பன்னிரெண்டாகப் பகுத்துள்ளனர் அருளாளர்கள். அவற்றில் பன்னிரெண்டாம் திருமுறையாக இடம்பெற்றிருப்பது சேக்கிழார் பெருமான் அருளிய ”பெரியபுராணம்” என்றுப் பரவலாக அறியப்படும் “திருத்தொண்டர் புராணம்” ஆகும்.
இத்திருத்தொண்டர் புராணம் மற்ற திருமுறைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது. எவ்வாறெனின், மற்ற பதினோரு திருமுறைகளும் தங்கள் உள்ளங்கவர் கள்வனான சிவனைப் பற்றிய பாடல்களையும், அவனை அடைவதற்குரிய வழிகளான யோகம், இயமம், நியமம், தந்திரம் போன்றவற்றைப் பற்றியே அதிகம் குறிப்பிட்டிருக்க, சேக்கிழாரோ இவற்றினின்று முற்றிலும் மாறுபட்டு நேரடியாகத் தென்னாடுடைய சிவனைப் பாடாமல் அவன்பால் பக்தி கொண்டு முக்தியடைந்த அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றையும், அவர்தம் ஈடில்லாச் சிவபக்தியையும், தொண்டையும் புகழ்ந்தேத்தியுள்ளார். நாயன்மார்கள்பால் அவர் கொண்டுள்ள எல்லையில்லா பக்தியையும், காதலையும் இஃது புலப்படுத்துகின்றது எனலாம்.
நம்பி ஆரூரராகிய சுந்தரர் இயற்றிய நூலான ’திருத்தொண்டத் தொகை’யை அடிப்படையாக வைத்து இத்திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் இயற்றியுள்ளார் என்பது அவர் கூற்றாகவே திருத்தொண்டர் புராணத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் விரித்துக் கூறப்பட்டுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறும் அற்புதமானவை; அவர்தம் ஈடு இணையற்ற சிவநேசத்தையும், தன்னலமற்ற சிவத்தொண்டையும் சொல்பவை. அதில் ஒரு நாயனார் (பூசலார்) இறைவனுக்காகத் தன் மனத்திலேயே கோயில் எழுப்பினார்; மற்றொருவர் (சிறுத்தொண்டர்) இறைவன் கேட்டான் என்பதற்காகத் தன் மகனையே கொன்று பிள்ளைக்கறி சமைத்தார். இன்னொருவரோ (காரைக்காலம்மையார்) பேயுருக் கொண்டு சிவபக்தி செலுத்தி இறைவனின் இணையடிகளின் அருகிலேயே எப்போதும் அமர்ந்திருக்கும் அருளைப் பெற்றார். இப்படி நாயன்மார்கள் அனைவரின் பெருமையையும் போற்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாள்களும், தாள்களும் போதா.
ஆகவே, இத்தகைய ஈடில்லாச் சிவநேசச் செல்வர்களில் யாரைப்பற்றி எழுதுவது என யோசிக்கும் வேளையில், அனைவர் உள்ளத்தையும் ஒருசேரக் கொள்ளை கொண்ட – ஆறே நாளில் இறைவனின் பரிபுரண அன்பிற்குப் பாத்திரமான, சிவனையன்றி வேறு யாரையும் சிந்திக்காத, எத்தகைய பூசை முறைகளையோ, நியமங்களையோ அறியாதவராயினும் தன் ஒப்புவயர்வற்ற இறைக்காதலால் காளத்தியப்பனின் இதயத்தில் நீங்கா இடம்பெற்றுவிட்ட, கள்ளம் கபடமற்ற ஓர் பாமரச் சிவபக்தர் நம் கண்முன் வந்து நிற்கின்றார். மனிதருள் மாணிக்கமான அச்சிவநேசரின் வரலாற்றைச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம். (அவர் வரலாற்றை அறிந்திராதவர் இரார். ஆயினும் சிவநேசச் செல்வர்களின் வரலாற்றையும், அவர்களைப் பற்றிய செய்திகளையும் மீண்டும் ஒருமுறை எண்ணி மகிழ்வதில் தவறில்லைதானே?)
இனி அவர் வரலாற்றிற்குச் செல்வோம்….
திருக்காளத்தி (காளஹஸ்தி என்று இன்று நாம் அழைக்கின்ற ஆந்திராவிலுள்ள பகுதி) மலையின் வடக்கே சோலைகளும், பூக்கள் நிறைந்த குளங்களும் உள்ள இயற்கை எழில்கொஞ்சும் ஓர் குறிஞ்சி நிலப்பகுதி, அதன் பெயர் ‘பொத்தப்பி நாடு’ என்பதாகும். அங்கே மதில்களால் சூழப்பட்ட ’உடுப்பூர்’ என்றொரு அழகிய ஊர். குன்றவர் என்றும் வேட்டுவர் என்றும் குறவர் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் குறிஞ்சி நில மக்கள் நிறைந்த பகுதி அது. அங்கு வாழ்ந்துவரும் வேட்டுவச் சிறுவர்கள் அச்சம் என்பதனையே அறியாதவராய்ப் புலிக்குட்டிகளோடும், யானைக் கன்றுகளோடும் விளையாடிக் கொண்டிருப்பர். சிறுமியரோ பெண் மான்களோடு விளையாடிக் களித்திருப்பர். இக்காட்சியைச் சேக்கிழார்,
”வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றினோடும்
புன்தலைச் சிறுமகார்கள் புரிந்து உடன் ஆடல்அன்றி,
அன்பு உறு காதல் கூர அணையும்மான் பிணைகளோடும்
இன்பு உற மருவிஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்.” என வியந்து கூறுகின்றார்.
இத்தகைய வீர வேடர்குல மக்கள் நிறைந்து வாழ்ந்துவந்த அப்பகுதிக்குத் தலைவனாய் விளங்கியவன் வீரமும், ஆற்றலும் நிரம்பிய “நாகன்” என்பான். அவனுடைய வாழ்க்கைத் துணைவியின் பெயர் ”தத்தை”. பல வருடங்கள் கடந்த பின்பும் இல்லறத்தின் பயனாகிய மக்கட்பேறு இல்லாத காரணத்தினால் பெரிதும் வருத்தமுற்றிருந்த அவ்விருவரும் தங்கள் குலதெய்வமான செவ்வேள் முருகனுக்கு நேர்த்திக் கடன்கள் செலுத்தியும், குரவைக் கூத்தாடியும், திருவிழா எடுத்தும் மக்கட்பேறு வேண்டித் தொழுதனர்.
பின்பு, குறிஞ்சிக் கோமானாகிய முருகனின் அருளாலே தத்தை ஓர் அழகான ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அதுகண்ட குறவர் குடியினர் தம் தலைவனுக்கு மகப்பேறு கிடைத்த மகிழ்ச்சியில் மணிகளையும், முத்துக்களையும் இரவலர்க்கு வாரி வழங்கி ஆனந்தக் கூத்தாடினர். நாகனும் அளவிலா ஆனந்தம் கொண்டு ’ஓர் கரிய மலையானது காள மேகத்தை (கரிய மேகம்) மேலே கொண்டு தாங்கியது போல’த் தன் புதல்வனை வாரி அணைத்துக் கொண்டான். அக்குழந்தை தூக்குவதற்குத் திண்ணென்று (கனமாக) இருந்தபடியால் இவனைத் ’திண்ணன்’ என்றழைப்போம் என்று நாகன் தன் மகனுக்குப் அப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தான். அத்தெய்வக் குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தளர்நடைப் பருவம் அடைந்தது. கங்கையினும் புனிதம் வாய்ந்த தன் திருவாய்நீர் ஒழுக மழலைமொழி பேசி அன்னையையும், தந்தையையும் மகிழ்வித்தது. இவ்வாறு அருமையாக வளர்க்கப்பட்டுவந்த திண்ணன் பன்னிரெண்டு வயது அடைந்ததும் சிலைத் தொழில் என்று அழைக்கப்படும் வேடுவர் குலத்தொழிலாகிய ‘வில்வித்தை’ கற்பதற்கு நல்ல முகூர்த்தம் குறிக்கப்பட்டது. பொதுவாக வில்வித்தைப் பயிற்சியை மாணாக்கர் முதன்முதலில் ஆரம்பிப்பதற்கு முன் அவ்வில்லிற்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து பின் அம்மாணாக்கரின் கையில் வில்லைக் கொடுத்துப் பயிற்சியை ஆரம்பிப்பது வழக்கம். அதனை ’வில்விழா’ என்று வேடுவர்கள் விமரிசையாய்க் கொண்டாடுவர். அத்தகைய வில்விழாவை நடத்தித் திண்ணனின் விற்பயிற்சிகள் அவ்வேடர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வில்வித்தை, மற்றும் பிற கருவிகளைக் கையாளுதல் ஆகியவற்றில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுத் தன் பதினாறு வயதிலேயே மாவீரராய் விளங்கினார் திண்ணனார்.
அவர் வாலிபப் பருவம் எய்திய காலத்தில் அவருடைய தந்தையான நாகன் முதுமைப் பருவத்தை அடைந்தான். அவனால் முன்புபோல் கொடிய காட்டு விலங்குகளான புலி, கரடி போன்றவற்றை வேட்டையாடி அழிக்க இயலவில்லை. அவை வேட்டுவர்களின் தினைப்புனங்களையெல்லாம் அழிக்கத்தொடங்கின. அதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான அம்மக்கள் தங்கள் தலைவனான நாகனிடம் இதுபற்றி முறையிடவே, அவனோ, ”நான் மூப்படைந்துவிட்டதனால் இனிமேல் என்னால் வேட்டையாட இயலாது. ஆகவே, என்னருமை மகனாகிய திண்ணனை நீங்கள் இனித் தலைவனாய்க் கொள்ளுங்கள், அவன் உங்களுக்கு உதவுவான்” எனக் கூறினான். வில்லேந்திய வேடர்களும் மகிழ்ந்து அதனை ஏற்கவே, உடனே நாகன் தன் மகனான திண்ணனை அழைத்து அவனை வேட்டைக்கு அனுப்ப முடிவு செய்தான். இஃது அவனுடைய கன்னிவேட்டையாதலால் (முதல்முறை வேட்டைக்குச் செல்வது) காடுவாழ் தெய்வங்களுக்கெல்லாம் படையலிட்டான். வேடர் குலத்துக்கே உரிய பல்வேறு அணிகலன்களும், வீரக்கழலும், பாதத்திலே செருப்பும் அணிந்து, தந்தையின் தாள்பணிந்து வேட்டைக்குக் கிளம்பினார் திண்ணனார். பெரிய வேடர் கூட்டமும் அவருடனே சென்றது.
யானைகள், பன்றிகள், கொடிய புலிகள் போன்ற விலங்குகளைக் காட்டிடைக் கண்டு அவைமீது அம்புமழை பொழிந்து அவற்றைக் கொன்றனர் வேடர்கள். ஆயினும் அவர்கள் எல்லா விலங்குகளையும் கொல்லவில்லை. குறிப்பாக யானைக் கன்றுகளையும், மற்ற விலங்குகளின் சிறிய குட்டிகளையும், கர்ப்பம் தரித்திருக்கும் பெண் விலங்குகளையும் அக்கொலைத் தொழில் வேடர்கள் கொல்லவில்லை என்கிறார் பெரியபுராண ஆசிரியர். இஃது கொலைத்தொழிலிலும் நேர்மையையும், (மறக்)கருணையையும் அவ்வேட்டுவர்கள் கடைப்பிடித்தனர் என்பதனையே காட்டுகின்றது.
ஆண்சிங்கத்தைப் போன்ற வீரம் பொருந்திய திண்ணனாரும், மற்ற வேடர்களும் வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று காடே அதிரும்படியான குரல் எழுப்பிக் கொண்டு ஓர் காட்டுப்பன்றி அங்கே ஓடியது. அதனைப் பிடிக்கும் ஆவலில் திண்ணனார் வெகுவிரைவாக அதனைத் தொடர்ந்து ஓடவே மற்ற வேடர்கள் அவர் எங்குச் சென்றார் என அறியமுடியாமல் திகைத்து நின்றனர். ஆயினும் விடலைப் பருவமுடைய ’நாணன், காடன்’ என்ற பெயர்களைக் கொண்ட இரு வேடர்கள் மட்டும் அவரைப் பிரியாது தொடர்ந்து சென்றனர். அந்தப் பன்றி வெகுதூரம் ஓடிக் களைத்துக் கடைசியில் திண்ணனார் கையில் சிக்க அவர் அதனை இரு துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார்.
வெகுநேரம் வேட்டையாடியதால் மிகுந்த களைப்பும், பசியும் அவர்களை வாட்டவே கொன்ற அப்பன்றியை வதக்கி உண்டு நீரருந்திச் செல்லலாம் என முடிவு செய்தனர். நல்ல நீரானது அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சற்று அருகில் உள்ள “திருக்காளத்தி மலை” அடிவாரத்திலேயுள்ள “பொன்முகலி” ஆற்றில் கிடைக்கும் என்று நாணன் கூறவே அங்குச் சென்றனர்.
அந்தக் குன்றைக் கண்டவுடன் திண்ணனார், ”நாம் இக்குன்றில் ஏறுவோம்” என்று கூறவே உடன் வந்திருந்த நாணன்,”ஐயனே நீ அங்கே சென்றால் நல்ல காட்சியையே காண்பாய், ஏனெனில் இக்காளத்தி மலைமீதில் ’குடுமித் தேவர்’ (கானவர்கள் காளத்தியப்பரை குடுமித்தேவர் என்றே அழைத்துள்ளனர்) இருக்கின்றார்; நாம் அவரைக் கும்பிடலாம்” என்றான்.
இவ்வார்த்தைகளைக் கேட்டவுடனே திண்ணனார் மிகுந்த ஆர்வம் கொண்டு ”உடனே நாம் குன்றின் உச்சிக்குச் செல்லவேண்டும். இப்போதே குடுமித் தேவரைக் காண என் உள்ளம் துடிக்கின்றது” என்றார். பின்பு, காடனிடம் ”பன்றி இறைச்சியை வதக்குவதற்கு வேண்டிய தீயை நீ இங்கு மூட்டுவாய்” என்று மலையடிவாரத்திலேயே அவனை விட்டுவிட்டுத் திண்ணனாரும், நாணனும் மலையின் மேல் உள்ள இறைவனைக் காண விரைந்து சென்றனர். திங்களைத் தன் சடையில் அணிந்த இறைவனைத் திண்ணனார் காணுவதற்கு முன் குடுமித் தேவரின் கருணைநோக்குத் திண்ணனார் மீது பட்டது. அதன் பயனாய் அன்பு வடிவாகவே மாறினார் திண்ணனார் என்று மனம் நெகிழ்ந்து கூறுகின்றார் சேக்கிழார்.
காளத்திநாதரைக் கண்டதுதான் தாமதம், விரைந்து ஓடித் தன்கையில் இருந்த வில் நழுவி விழுந்தது அறியாராய் அவரை (இறைவனை) ஆரத்தழுவி, தம் உடலிலுள்ள மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்க்க, வெகுநேரம் உச்சிமுகந்து நின்றார் திண்ணனார். ”இம்மலையில் நீவிர், ஒரு துணையும் இல்லாது தனியாக உள்ளீரே…! நான் என் செய்வேன்” என்று கண்ணீர் பெருக்குகின்றார்.
பின்பு, நாணனைப் பார்த்து, ”இந்தக் குடுமித்தேவர் மீது பச்சிலையுடனே பூவும் பறித்து இட்டு, நீரையும் வார்த்து வைத்திருப்பவர் யார்?” எனத் திண்ணனார் வினவ, ”அது எனக்குத் தெரியும், முன்பு ஒருமுறை உன் தந்தையோடு நாங்கள் இங்கே வேட்டைக்கு வந்திருந்தபோது ஒரு பார்ப்பான் குடுமித் தேவரைக் குளிர்ந்த நீரால் ஆட்டி, பச்சிலையும், பூவும் சூட்டி, உணவு உண்பித்துச் சில மொழிகளும் (மந்திரங்களும்) சொன்னதை நான் கண்டேன். இன்றும் அவனே இதனைச் செய்திருக்க வேண்டும்” என்றான் நாணன்.
அதுகேட்ட திண்ணனார் குடுமித்தேவரை வழிபடும் முறை இதுதான் போலும் என்று எண்ணிக் கொண்டார். பின்பு, காளத்தியப்பனைப் பார்த்து, ”தனியாக இருக்கும் உமக்கு உண்பதற்கு வேண்டிய இறைச்சியை யார் தருவார்? நீர் பசியோடு அல்லவா இருப்பீர்?” எனக் கவலையுற்றுக் குடுமித் தேவருக்கு வேண்டிய இறைச்சியைக் கொண்டுவருவதற்கு மிகுந்த விருப்பம் கொண்டவராய் அங்கிருந்து அகன்று செல்கின்றார் திண்ணனார். ஆனால் இறைவனைப் பிரியவொட்டாமல் அவர்மேல் கொண்ட அளவற்ற காதல் தடைசெய்யவே சிறுது தூரம் சென்றவர் விரைந்து வந்து இறைவனைக் கட்டிக்கொள்கிறார்; மீண்டும் சிறிது தூரம் செல்லுவார்; திரும்பவும் காதலோடு இறைவனை நோக்கி நிற்பார்; நாதனே! நீர் உண்பதற்குகந்த நல்ல இறைச்சியை நானே கொண்டுவருகின்றேன் எனச்சொல்லி ’கன்றினையீன்ற தாய்ப்பசு கன்றினை நீங்கிச் செல்வதுபோல் செல்கின்றார்’ திண்ணனார் என்று அவருடைய மனப் போராட்டத்தை அழகாய்க் காட்சிப்படுத்துகின்றார் தெய்வச் சேக்கிழார். இங்கு திண்ணனார் தன்னைத் தாயாகவும், இறைவனைத் தன் சேயாகவும் எண்ணுவதுபோல் சேக்கிழார் பாடல் அமைத்திருப்பது ரசித்து மகிழத்தக்கது.
”போதுவர்; மீண்டுசெல்வர்; புல்லுவர்; மீளப் போவர்;
காதலின் நோக்கி நிற்பர்; கன்றுஅகல் புனிற்றுஆப் போல்வர்
‘நாதனே! அமுது செய்ய நல்லமெல் இறைச்சி நானே
கோதுஅறத் தெரிந்துவேறு கொண்டுஇங்கு வருவேன் என்பார்.”
திண்ணனாரும், நாணனும் மலையடிவாரத்திற்குச் சென்றனர். அங்கே இவர்களுக்காகக் காத்திருந்த காடன் “தாங்கள் சொல்லியபடி தீமூட்டி வைத்துள்ளேன், நீவிர் திரும்பிவர ஏன் இவ்வளவு காலதாமதம்?” என வினவுகின்றான். இறைக் காதலிலேயே மூழ்கியிருந்த திண்ணனார் காதில் அவன் கூறிய எதுவுமே விழவில்லை. நாணனே காடனுக்குப் பதில் சொல்கின்றான், “அங்கே குடுமித் தேவரைக் கண்டதிலிருந்து அவர்பால் மாறாத அன்பு கொண்டவனாய் ”மரப்பொந்தைவிட்டு நீங்காத உடும்பு போல” அவரை அணைத்துக்கொண்டு வரவே மறுத்துவிட்டான், இப்போது கூட அவருக்கு இறைச்சி கொண்டு போவதற்காகவே வந்துள்ளான்; நம் குலத்தின் தலைமைப் பொறுப்பையெல்லாம் விட்டுவிட்டான்” என்று கூறுகின்றான். பொதுவாகவே ஒருவர் ஒரு பொருளை இறுகப் பற்றிக்கொண்டுத் தர மறுத்தால் நாம் அதனை ‘உடும்புப் பிடி” என்று சொல்வோம். ஏனெனில் உடும்பு ஒன்றைப் பற்றிக் கொண்டால் எளிதில் விடாது. அதுபோலவே இங்குத் திண்ணனாரும் குடுமித் தேவரை உடும்பு போலப் பற்றிக் கொண்டார். அவரைவிட்டு விலக இனி இந்த வேடர்குலத் தோன்றலால் இயலாது என்பதனை இவ்வுவமை வாயிலாய் நமக்குத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றார் சேக்கிழார்.
”அங்குஇவன் மலையில் தேவர் தம்மைக்கண் டணைத்துக்கொண்டு
வங்கினைப் பற்றிப் போகா வல்உடும்பு என்ன நீங்கான்;” என்பது சேக்கிழார் வாக்கு.
பின்பு, பன்றியைத் தாமே சுவைபட வதக்கி அதன் சுவையை அறிவதற்காக அதனை வாயிலிட்டுமென்று நன்றாகவும் சுவையாகவும் இருக்கும் பகுதிகளை இறைவனுக்காக எடுத்துவைத்து மீதமுள்ள பகுதிகளை வீசி எறிந்தார் திண்ணனார். இதனைக் கண்ட மற்ற இரு வேடர்களும் “சரிதான், இவனுக்கு இறைவன் மீது மையல் முற்றிவிட்டது, இல்லையென்றால் தன் பசியையும் மறந்து, நம் பசியையும் நினையாது, இறைவற்குத் தானே சுவைபார்த்த ஊன் தசைகளை இவ்வாறு எடுத்து வைப்பானா?” என்று தமக்குள் பேசியவாறே “இனி நாம் செய்வது ஒன்றுமில்லை; ஊருக்குச் சென்று இதுபற்றி நாகனிடம் தெரிவித்து இந்தத் தெய்வ மயக்கத்தைத் தெளிவிக்கும் தேவராட்டியையும் அழைத்துக்கொண்டு வருவோம்” என்றவாறு அங்கிருந்து அகன்றனர்.
அவர்கள் போனதையே அறியாத திண்ணனாரோ கருமமே கண்ணாகக் கொண்டு ஓர் இலையில் சமைத்த ஊனையும், இறைவனைத் திருமஞ்சனம் (அபிடேகம்) செய்வதற்கு வேண்டிய நல்ல நதிநீரை வாயிலும் எடுத்துக்கொண்டு, அவர்மேல் சூட்டுதற்கு வேண்டிய நறுமணம் மிக்கப் புதுமலர்களைத் தம் முடியில் செருகிக் கொண்டு இறைவன் பசியோடிருப்பார் என எண்ணிக் கவலையோடு அவரைக்காண விரைந்து செல்கின்றார்.
குடுமித் தேவரின் தலையில் சூட்டப்பட்டிருந்த பூக்களை எல்லாம் தம் செருப்பணிந்த காலினாலே தள்ளித் தம் வாயிலிருக்கும் தூய ஆற்றுநீரை ’அன்பினையே உமிழ்வதுபோல்’ இறைவன் தலைமேல் விட்டார் திண்ணனார். பின்பு, ”மிகவும் சுவைபொருந்திய கொழுப்பினையுடைய தசைகளையெல்லாம் உமக்காகத் தேர்ந்தெடுத்துச் சமைத்துக் கொண்டுவந்துள்ளேன், தேவரே! அமுது செய்து அருளுங்கள்!” என்று இறைச்சிப் படையலிட்டு இறைவனை வேண்டுகின்றார்.
சிறிது நேரத்தில் பகலவன் மேற்கே சென்று மறைய அந்திவானை இருள் கவ்வியது. இரவு முழுவதும் தூங்காது இறைவனைக் கண்போல் காத்து நின்றார் கருங்கடல் போல் தோற்றங்கொண்ட திண்ணனார். மறுநாள் காலை புலரத்தொடங்கியது. புள்ளினங்கள் கீதமிசைத்தன. இறைவனுக்கு வேண்டிய உணவைக் கொண்டுவருவதற்கு விரும்பிய திண்ணனார் குடுமித் தேவரைத் தொழுது அங்கிருந்து நீங்கினார்.
அவ்வேளையில் விடமுண்டகண்டனாகிய காளத்திநாதனுக்குத் தினமும் சிவாகம விதிப்படி பூசை செய்துவரும் ’சிவகோசரியார்’ என்னும் முனிவர் இறைவனின் திருமஞ்சனத்திற்குரிய தூயநீரையும், புதிதாகப் பறித்த மலர்களையும், மற்ற பூசைப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு அங்கு வந்தார். இறைவன் திருவடிகளில் இறைச்சியும், எலும்பும் இருப்பதனைக் கண்டு தீயை மிதித்தவர்போல் அலறி ”இந்த அநுசிதத்தைச் செய்தவர் யார்?” என்று வருந்தினார். ”இப்பக்கம் உலவும் வேடர்களே இந்தத் தகாத செயலைச் செய்திருக்கவேண்டும்” என்று எண்ணிக் கண்ணீர் விட்டார்.
அங்கு கிடந்த அசுத்தங்களையெல்லாம் திருஅலகால் (துடைப்பம்) நீக்கிப் பின் ஆகம முறைப்படி பூசனைகள் செய்து இறைவனைத் தொழுது தம் தவச்சாலைக்குப் போனார். பின்பு திண்ணனார் அங்குவந்து வழக்கம்போல் குடுமித்தேவரை ஆரத்தழுவி, ”தேவரே! நேற்று கொணர்ந்த ஊன்கறியினும் சுவைமிக்க ஊனை இன்று தேன்கலந்து கொண்டுவந்துள்ளேன்” எனக் கூறி அவருக்குத் தன் வாய்நீரினால் அபிடேகம் செய்து, தலையில் தரித்திருந்த பூக்களைக் காளத்தியப்பனின் தலையில் அன்புடன் சூட்டிப் பின்பு இறைச்சியைப் படையலிட்டார். இரவு முழுவதும் உறங்காமல் இறைவனைக் காவல் காப்பதும், பகலில் வேட்டையாடிக் காளத்தியப்பனுக்கு சுவைமிகுந்த ஊன்உணவு கொணர்வதுமாய் இருந்தார் திண்ணனார்.
காலையில் பூசை செய்வதற்கு வரும் சிவகோசரியார் இறைவன் திருமுன்பு இருக்கும் இறைச்சித் துண்டுகளை மிகுந்த வேதனையோடு அப்புறப்படுத்திவிட்டு வேதமுறைப்படி இறைவனை பூசித்துச் செல்வார். இதற்கிடையில் நாணனும், காடனும் திண்ணனைப் பற்றி நாகனிடம் தெரிவிக்க அவன் பெருங்கவலை கொண்டு உணுறக்கம் துறந்து குறிசொல்கின்ற தேவராட்டியையும் அழைத்துக்கொண்டு காளத்தி மலைக்கு விரைந்தான். ஆயினும் இவர்களுடைய மந்திரம், மாயம் ஒன்றினாலும் திண்ணனாரின் மனத்தை மாற்றவியலாமல் போகவே மிகுந்த மனச்சோர்வோடும், வருத்தத்தோடும் அங்கிருந்து சென்றான் நாகன்.
திண்ணனார் தொடர்ந்து தாமறிந்த வகையிலே எம்பெருமானாரை பூசிக்க, சிவகோசரியாரோ சிவாகம விதிப்படி இறைவனை பூசித்ததோடல்லாமல், ”இத்தகைய அநுசிதச் செயல்களைப் புரிந்துவரும் தீயோரை இறைவா நீ ஒழித்தல் வேண்டும்” என்றும் விண்ணப்பித்தார். எம்பெருமானார் அன்றிரவே சிவகோசரியாரின் கனவில் தோன்றி “நீ இத்தகைய செயல் செய்பவனைக் கொடிய வேடுவன் என்றெண்ணாதே! அவனுடைய நற்செயல்களை நான் உனக்கு உரைக்கின்றேன் கேள்!” எனக் கூறி, ”அவனுடைய வடிவம் முழுவதுமே என்மீதான அன்பு வடிவமாகும். அவன் அறிவெல்லாம் என்னை அறியும் அறிவின்றி வேறில்லை. அவன் செய்வதெல்லாம் எனக்கு இன்பம் தருவதாகவே இருக்கின்றன” என்று திண்ணனுக்கு நற்சான்று வழங்குகின்றார் காளத்தியப்பர்.
”அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்பு; என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவு; என்றும்
அவனுடைய செயல்எல்லாம் நமக்குஇனிய வாம்; என்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு; அறிநீ என்றுஅருள் செய்வார்.” என்கிறார் சேக்கிழார் பெருமான்.
அதுமட்டுமா? அவன் வாயுமிழும் நீர் எனக்குக் கங்கைநீரினும் புனிதமானது; திருமாலும், அயனும், மற்றுள்ள தேவர்களும் எனக்குச் சூட்டுகின்ற எம்மலரும் இவ்வன்பன் தன் தலையிலிருந்து எனக்குச் சூட்டும் மலருக்கு ஒப்பாகாது; வேதியர்கள் வேள்விசெய்து எனக்குத் தரும் அவிப்பலியைவிட, நன்கு வெந்துளதா? எனச் சோதித்து இவ்வேட்டுவன் எனக்கு ஊட்டும் ஊன் உணவு மிக்க சுவையுடைத்து” என்ற காளத்திநாதன், அவன் மெய்யன்பை நாளைக்கு உனக்குக் காட்டுகின்றேன் மறைந்திருந்து பார்” எனச் சிவகோசரியாரிடம் சொல்லி மறைந்தார்.
இதனைக் கேட்டபின்பு கனவுகலைந்து விழிப்புநிலைக்கு வந்த சிவகோசரியார் இவ்வற்புதத்தைக் காண எழுந்த பேராவலுடனும், சிறிது பயத்துடனும் எப்போது பொழுது விடியும் என்ற எதிர்பார்ப்போடு உறங்காது விழித்திருந்தார்.
பொழுது விடிந்தவுடனே விரைந்து சென்று காளத்தியப்பனுக்குச் செய்யவேண்டிய நித்திய பூசைகளை முடித்துவிட்டு இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான அவ்வேடர்குல ஏந்தலையும், அவன் மெய்யன்பையும் காண வேண்டி இறைவன் திருமேனிக்கு அருகிலிருந்த மரங்களின் பின்னே ஒளிந்திருந்தார்.
இறைவன் மீது கொண்ட அளவற்ற காதலால் காளத்தி மலையிலேயே தங்கிவிட்ட திண்ணனார் ஐந்து நாட்கள் கழிந்த ஆறாம்நாள் காலையில், வழக்கம்போல் தனித்து வேட்டையாடிக் குடுமித் தேவருக்கு வேண்டிய இறைச்சி உணவை எடுத்துக்கொண்டு விரைந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அவர்முன் தீய சகுனங்கள் தென்படுகின்றன. அதனால் மிக்க கவலையுற்ற அவர், ”என் அத்தனுக்கு (அப்பன்) என்ன நேர்ந்ததோ அறியேனே!” என்று கவலையோடு விரையும் வேளையில் திண்ணனின் ஒப்பற்ற அன்பைச் சிவகோசரியார்க்குக் காட்ட எண்ணிய இறைவன் தன் கண்களில் ஒன்றில் குருதி வழியுமாறு செய்தார். இதனைத் தூரத்தில் வரும்போதே பார்த்துப் பதைபதைப்போடு அருகில் வந்த ’கருமுகில்’ போன்ற திண்ணனார், ஈசனின் கண்ணில் வழிந்த செங்குருதி கண்டு அபிடேகத்திற்காகக் கொண்டுவந்த நீர் வாயிலிருந்து கீழே வழியவும், ஊனுணவும், வில்லும் கீழே விழவும், தலையில் செருகியிருந்த பூசைக்குரிய மலர்க்கொத்து கீழே விழவும், தாமும் வீழ்ந்து அரற்றினார். ”யார் செய்தனர் இக்கொடிய செயலை?” என்று சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கே வேறு விலங்குகளோ, வேடர்களோ தென்படாதது கண்டு திகைத்தார். அண்ணலின் பாதம் பற்றிக்கொண்டுக் கதறினார். பின்பு காட்டிற்கு ஓடிச்சென்று அங்கே பல்வேறு மருந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு வந்து காளத்தியப்பரின் கண்களில் அவற்றின் சாற்றைப் பிழிந்தார். ஆயினும் குருதி நிற்காமல் முன்போலவே கொட்டிக்கொண்டிருந்தது கண்டு, இக்குருதியைத் தடுப்பது எவ்வாறு? என்று சிந்தித்த வேளையில் “ஊனுக்கு ஊனே உற்றநோய் தீர்ப்பது” என்ற பழமொழி அவர் நினைவுக்கு வந்தது.
”இற்றையின் நிலைமைக்குஎன்னோ இனிச்செயல் என்று பார்ப்பார்;
உற்றநோய் தீர்ப்பதுஊனுக்கு ஊன்எனும் உரைமுன் கண்டார்.” என்கிறார் சேக்கிழார்.
உடனே சற்றும் யோசியாது அம்பினால் தன் வலது கண்ணை அகழ்ந்தெடுத்து காளத்தியப்பனுக்குப் பொருத்தவே, அதுவரை ஆறுபோல் பெருகிவந்த குருதி உடனே நின்றது. அதனைக் கண்ட திண்ணனார், ”என் ஐயனின் கண்ணில் வழிந்த குருதி நின்றுவிட்டது; என் மருத்துவம் பலித்துவிட்டது” என்று ஆனந்தக் கூத்தாடினார். ஆயினும், இவருடைய அளவிலாப் பேரன்பை உலகிற்குக் காட்டவிரும்பிய காளத்தியப்பன் தன்னுடைய இடது கண்ணிலிருந்து இப்போது குருதி வழிய விட்டான். என்னே ஈசனின் திருவிளையாடல்! அஞ்சவில்லை அந்த மறவர்குல மாணிக்கம். ”இதோ இன்னொரு கண் இருக்கின்றது; அதனையும் என் அத்தனுக்காகத் தந்து அவருடைய துயர் களைவேன்” என்றெண்ணினான். ஆனால், ”இந்தக் கண்ணையும் நான் இழந்தபின்பு இறைவனின் குருதி வழியும் கண்ணை என்னால் அறிய இயலாது. ஆகவே, இப்போதே ஓர் அடையாளமாய் என் இடதுகாலை அவ்விடத்தில் ஊன்றிக்கொள்கின்றேன். பின்பு என் கண்ணை அவ்விடத்தில் அப்புவதில் சிரமம் இருக்காது” என்று எண்ணித் தன் இடது காலை இறைவன் இடது கண்ணில் ஊன்றித் தன் இடது கண்ணையும் அம்பால் அகழ்வதற்காய் கண்ணில் வைத்தார். அதனைக் கண்டு நெக்குருகிப் போன ஈசனார் அம்பைப் பிடித்திருந்த திண்ணனாரின் கையைத் தடுத்து, ”கண்ணப்ப நிற்க!” என்று மூன்றுமுறை கூறினார். இவற்றையெல்லாம் கண்டு மிரண்டு போயிருந்தார் மாமுனிவராகிய சிவகோசரியார். அப்போது வானிலிருந்து தேவர்கள் பூமாரிப் பெய்தனர்.
இந்த ஈடு, இணையற்ற சிவபக்தனின் பெருங்காதலில் உள்ளம் நெகிழ்ந்திருந்த கண்ணுதற்கடவுளார், திண்ணனின் கையைப் பற்றி, ”கண்ணப்ப! எப்போதும் நீ என் வலப்பக்கத்திலேயே இருப்பாயாக” எனப் பேரருள் புரிந்தார். தன் கண்ணென்றும் பாராது அதனை அகழ்ந்தெடுத்துக் காளத்தியப்பனுக்கு அப்பியதால் திண்ணனார் அன்றுமுதல் ’கண்ணப்பன்’ என்ற திருநாமம் பெற்றார். அப்பெயரை ஈசனாரே அவர்க்கு அளித்தார் என்பதனால் அப்பெயரே இன்றளவும் நின்று நிலைபெற்றுவிட்டது.
இந்நிகழ்ச்சியை “நக்கீரதேவ நாயனார்” (சங்ககால நக்கீரர் அல்ல) பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள “திருக்கண்ணப்ப தேவர் திருமறம்” என்ற பகுதியில்,
”நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்ப”
எனக் கூறி, இறைவன் கண்ணப்பனைத் தடுத்தாட்கொண்டதாகக் குறிப்பிடுகின்றார்.
தன்னேரில்லா இச்சிவபக்தனின் இறைக்காதல் இவருக்குப் பின் வந்த பிற சிவனடியார்களாலும் வியந்து பாராட்டப்படுகின்றது.
சான்றாக, பட்டினத்து அடிகள் தன் பாடலில்,
”வாளால்மகவரிந் தூட்டவல் லேன்அல்லன்; மாதுசொன்ன
சூளால்இள மைதுறக்கவல் லேன்அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடந்து அப்பவல் லேன்அல்லன் நான்இனிச்சென்(று)
ஆளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பருக்கே?”
”என்னால் பிள்ளையை அரிந்து இறைவற்கு ஊட்ட இயலாது (சிறுத்தொண்டர்); மனைவியின் சபத்திற்காக இளமை இன்பத்தைத் துறக்க இயலாது (திருநீலகண்ட நாயனார்); இறைவன் மீது கொண்ட அளவிலாக் காதலால் ஆறே நாளில் என் கண்ணை இடந்து அப்பவும் வல்லவன் அல்லேன் (கண்ணப்ப நாயனார்); நான் எப்படிக் காளத்தியப்பனின் அருளுக்குப் பாத்திரம் ஆவேன்?” என்று மிகுந்த வருத்தத்தோடு புலம்புகின்றார்.
கல்மனதையும் கசிந்துருகச் செய்யும் திருவாசகத்தை இயற்றிய மணிவாசகப் பெருந்தகை, அதில் இடம்பெற்றுள்ள “திருக்கோத்தும்பி” எனும் பகுதியில் வரும் பாடலில் கண்ணப்பன் செலுத்திய அன்புக்கு ஈடான ஒன்றை என்னிடத்தில் காணாத போதிலும் என்னையும் ஆட்கொண்டு எனக்குக் கருணை செய்தவன் சிவபெருமான் என்று ஈசன் தன்அடியார்பால் கொண்டுள்ள பேரன்பினைப் புலப்படுத்திச் செல்கின்றார். இதோ அப்பாடல்….
”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.”
சிவனடியார்களும், சாமானியர்களும், ஏன்…சித்தத்தைச் சிவன்பால் வைத்த அனைவருமே மெய்சிலிர்த்துப் போற்றும் இணையில்லாச் சிவபக்தர் கண்ணப்ப நாயனார். அவரைப்போல் ஓர் தன்னலமில்லாத் தொண்டனைக் காண்பது அரிதினும் அரிது.
ஆகவே, நாமும் ’அன்பே சிவம்’ என்பதனை உணர்ந்து இறைவனின் திருவைந்தெழுத்தை நாளும் ஓதி அவனுடைய இணையடிகளை ஏத்திப் பணிவோம். ஈசனின் அருளுக்குப் பாத்திரமாவோம்.
திருச்சிற்றம்பலம்
Oatmeal
Eating oatmeal for breakfast will provide your body with high amounts of fiber, which reduces the chance of low blood sugar levels. Starting your day out with whole grain oatmeal will help you to avoid the mid-morning snacking. You will also be getting protein and other vitamins and minerals that help with weight loss.
Whole Grains
Replacing white flour foods with whole grain foods will increase the nutrients that you are getting from your food. Whole grains provide your body with fiber, folic acid, vitamin E, and magnesium, all of which aid in the battle of the belly bulge.Try whole grains dosa with out oil and try to finish your dinner by 7PM
Lean Meat
Lean protein is essential on any weight loss diet, and meat is a good source of protein. Avoid processed meats, and focus on eating natural, organic white meat such as chicken and fish,Eggs(only white).
Olive Oil
Healthy fats are an essential part of burning stomach fat, and olive oil provides your body with the good kind of fat called “monounsaturated fat.” Drizzle a small amount of olive oil over your vegetables and salad and it will add a great flavor and burn fat at the same time.
Nuts
Nuts are another source of good fats, although you need to be careful not to go overboard with your nut consumption because they are high in calories. Eating nuts will provide you with fat-burning protein as well as fiber, vitamins and minerals.
Include this in your diet and cut your belly fat soon…
சாகர்
2. எகிப்து விஜயம்
ஒரு வழியாக விமானத்தில் அமர்ந்து மீண்டும் கைப்பேசியில் எதாவது மின்னஞ்சல் வந்துள்ளதா என்று பார்த்தபோதுதான், நான் எகிப்து பற்றி சேகரித்த குறிப்புகளை எனது மடிக்கணிணியில்(Laptop) வீட்டில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. விமானம், கூடிய விரைவில் கிளம்பபோவதாகவும் மின் கருவிகளை சிறிது நேரத்தில் நிறுத்தவேண்டும் அல்லது வான் பயணபாங்குக்கு (flight safe) மாற்ற வேண்டும் என்று அறிவித்தனர். இருக்கும் சில நிமிடங்களில் ஒரு உபாயம் செய்யலாம் என்று தோன்றியது. எனது ஐப்பாடை(IPAD) எனது போன் மூலம் இணையதளத்தில் இணைத்து(tethering) எகிப்து பற்றி லோன்லி பிலானட்(Lonely planet) கை வழிக்காட்டியை இறக்குமதி(Guide Download) செய்தேன். அதே நேரத்தில் அம்மாவுக்கும்,அமெரிக்காவில் உள்ள தம்பி மற்றும் மைத்துனனுக்கும் தொலைபேசியில் கிளம்பிவிட்டோம் என்று சொன்னேன். நான் இறக்குமதி செய்து முடிக்கவும் எல்லா கருவிகளையும் நிறுத்துங்கள் என்று ஒலிபெருக்கியில் சொல்வதற்கும் சரியாக இருந்தது. ஐப்பாடில் வழிகாட்டி இருந்தது பின்னர் மிகவும் நெருக்கடியான சமயத்தில் மிகவும் உதவியது.
BA155 சரியாக ஐந்து மணிக்கு மெல்ல ஊற ஆரம்பித்தது. சிறிய விமானம்தான், இரு பக்கமும் மூன்று இருக்கைகள் கொண்ட விமானம். மனைவியும் பிள்ளைகளும் முன் இருக்கையில் அமர, நான் தனியே அமர்ந்திருந்தேன். என் மனைவி ஆனந்தி, “சிவப்பா? வெள்ளையா?” என்று கேட்டதும் சிரிப்பு வந்தது.
ஏன் என்றால், நான் மிகவும் சீக்கரம் விமான நிலையத்திற்கு வந்து விடுவோம், போகும் ஊரோ இஸ்லாமிய தேசம். கிளம்பும் முன் அருந்துவோம் என்று ஒரு சிறிய சிவப்பு மது புட்டி ஒன்று கொண்டு வந்தேன். நாங்கள் வந்த அமளியில் சின்ன பையன் சக்தியை பதிவு செய்து, பெட்டிகளை உள்ளே அனுப்பிவிட்டு புறப்பாடு பரிசோதனைக்கு செல்லும் அவசரத்தில் ஆனந்தி பையை கிழே போட அந்த புட்டி விழுந்து உடைந்து. ஹீத்ரோவின் வெள்ளை பளிங்கு தரையில் ரத்தம் போல் தேங்கியது சிவப்பு மது. எங்கே அதை துடைப்பதற்கு டிசு(tissue) கிடைக்கும் என்று பார்க்கும் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர் இருவர் “நீங்க உங்கள் விமானத்திற்கு போங்க நாங்க பார்த்துக்கிறோம்” என்றது மனதை தொட்டது.
கணவரின் மதுவை கொட்டியதால், என் மனைவி இப்போது, எனக்கு வாங்கி கொடுக்க கேட்ட கேள்வி தான் அது. குடிபழக்கம் இல்லாத ஆனந்தி சிவப்பு மது வாங்கி தரவா என்று கேட்டதும் வந்தது சிரிப்பு.
விமானம் மெல்ல லண்டன் நகரத்தை கிழே விட்டு மெல்ல எகிப்து நோக்கி பறக்க ஆரம்பித்தது.ஆறு மணிநேர பயணம்! மெல்ல எகிப்தி தேசத்தை பற்றிய குறிப்புக்களை படிக்கலாம் என்று ஆரம்பித்தேன். இரண்டு கோப்பை மது மெடிதெரனியன் ஆட்டு பிரியாணி சாப்பிடவாறு மெல்ல அவர்களின் ஆராயிர வருட சரித்திரத்தை பற்றி படிக்க ஆரம்பித்தேன்.
கிறிஸ்து பிறப்பதற்கும் நாலாயிரம் வருட சரித்திரம் உள்ள நாடு எகிப்து தேசம், மற்ற பண்டை நாடுகளை விட எகிப்துக்கு ஒரு விஷேட அம்சம் உண்டு. அதுதான் ரோஸெட்டா கல்(Rosetta Stone)! நமது சிந்து வெளி சமுதாயம் உலகத்திற்கு ஒரு பெரிய கேள்விகுறி ஏன் என்றால் இன்றைக்கு வரை சிந்து சமவெளியினரின் எழுத்துக்களை யாரும் சரியாக மொழி பெயர்ச்சி செய்ய இயலாமை தான். ஐராவதம் மகாதேவன், போர்போலா போன்ற அறிஞர்கள் சிந்து சமவெளி எழுத்துவடிவம் பண்டை பிராமி தமிழ் வடிவத்துடன் ஒத்து உள்ளது என்கிறார்கள். ஆனால் எதுவும் திண்ணமாக ஒப்புக்கொண்ட கருத்து அல்ல.
அங்குதான் எகிப்து வேறுபடுகிறது. பண்டை எகிப்திய மன்னர்கள் தங்களை பற்றி கல்களில் பதிவு செய்தததை பல்வேறு அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். வெவ்வேறு உருவங்களும் மிருகங்களும் கொண்ட இந்த பாஷை இதை கண்டுபிடித்த எகிப்தியர்களுக்கும் ஐரோப்பிய வல்லுனர்களும் ஒரு சவாலாகவே இருந்தது. எகிப்திய வரலாற்றின் ஜீவநாடியே நைல் நதிதான், அந்த நைல் நதி மெடிதெரனியன் கடலில் கலக்கும் முன் கிளைகளாக பிரியும் போது ரோஸடா(Rosetta) மற்றும் டமியட்டா(Damietta) என்று இரண்டு கிளைகளாக பிரியும். அந்த ரோஸடா தீரத்தில் கண்டுபிடித்த ஒரு கல் தொல்பொருள் ஆய்வாளர்கள் வாழ்வில் ஒரு தீபாவளி! இன்று லண்டன் பிரிட்டிஷ் தொல்கட்சியகத்தில் உள்ள அந்த உலக புகழ் மேற்ற ஒரு கல் ரோஸடா கல்!
ரோஸடா கல்லின் மகத்துவத்தை அறிவதற்கு முன் பண்டை எகிப்திய வரலாறு பற்றி அறிவது கொஞ்சம் முக்கியம்.பண்டை எகிப்திய மன்னர்களின் ஆதிக்கம் நைல் நதி தீரத்தில் மட்டும் தான் பிரதானம் ஏன் எனில் மற்றவை எல்லாம் பாலைவனம் . நைல் நதி தீரத்தை மேல் தீரம்(Upper Egypt) மற்றும் கீழ்தீரம் (Lower Egypt) என்று இரண்டு பாகங்களாக பிரித்து இரண்டு ராஜ்ஜியங்களாக ஆண்டனர். பின்னர் இரண்டும் ஒரு குடையின் கீழ் ஒரு பெரியதேசமாக ஆளப்பட்டது.
காலப்போக்கில் எகிப்தில் கிரேக்க ஆத்திகம் ஆரம்பித்தது, முதலில் ஆண்ட கிரேக்க மன்னர்கள் தங்கள் கலாச்சாரத்தை எகிப்திய கலாச்சாரத்துடன் இணைத்து ஆண்டனர் என்பது வரலாறு.கிரேக்க(Greek) அரசுகளை தொடர்ந்து ரோமானிய(Romans) ஆதிக்கம் அதை தொடர்ந்து பைஸாண்ட்டியம்(Byzantium) பின்னர் இஸ்லாமிய மன்னர்கள் கடைசியில் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு ஆதிக்கம் தொடர்ந்து பின்னர் மன்னராட்சி வீழ்ந்து சுதந்திரம் அடைந்தது எகிப்து.அப்படியும் மக்களாட்சி வெகு நாள் நீடிக்காமல் சர்வதிகார ஆட்சி மேவியது. சமீப காலத்தில் முபாரக் ஆட்சியை விரட்டி மக்களாட்சி நிறுவியது அரபிய வசந்தம்(Arab Spring) என்னும் புரட்சிப்படை..
எகிப்திய பாரம்பரியமும் சரித்திரமும் நமது பாரதத்தை ஒத்து இருப்பத்தை காணலாம். ஆனால் உலகம் எகிப்திய சரித்திரம் எவ்வளவு தொன்மையானது என்பதை கார்பன் கணிப்பினால்(Radio Carbon Dating) உறுதி செய்தது. அதைவிட முக்கியமான இரண்டு அம்சங்கள் எகிப்திய நாகரிகம் பற்றி நாம் அறிய இன்றிமையாதவை ஆகின்றன.
ஒன்று ரோஸடா கல்! ரோஸடா நதி தீரத்தில் கண்டுபிடிக்கபட்ட ஒரு கல் சாசனம் தான் உலகபார்வையில் எகிப்தியர்களை பற்றி அறியும் அகராதி ஆனது. முன்னமே கிரேக்க ஆட்சி எகிப்தில் பரவியது என்று குறிப்பிட்டேன் அல்லவா, அப்பொழுது சமூக பழக்கத்தில் இருந்த ஒரு மொழி டேமொடிக்(Demotic) அல்லது காப்டிக்(Coptic) என்று வழங்கிய ஒரு மொழி. ஹீரோகிளிபிக்ஸ்(Heroglyphics) மன்னர்களின் மொழியாக நிலவியது. கிரேக்க மன்னர்கள் தங்கள் சாசனங்களை கிரேக்கம், காப்டிக் மற்றும் ஹீரோகிளிபிக்ஸ் மொழிகளில் பதித்தனர். கிரேக்க மொழி அறிந்த அறிஞர்களுக்கு அதை வைத்து மொழிப் பெயர்ச்சி செய்யும் அகராதி (Translating Dictionary) மற்றும் வழிகாட்டியானது இந்த கல்
. <http://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/aes/t/the_rosetta_stone.aspx>
இரண்டு, எகிப்தியர் தங்கள் உடல்களை இறந்தப்பின் பதப்படுத்தி புதைக்கும் பழக்கம். மம்மி(mummy) என்றழைக்கப்படும் இந்த உடல்களை கோவில்கள் மற்றும் பிரமிட் என்னும் பெரிய கட்டடங்களில் மற்றும் குகைகளில் புதைத்தனர்.பிரமிட்கள் கட்டியதும் அவற்றை மாற்றி குடைவரை கோயிலில் புதைப்பதற்கு மாறியதற்கு காரணம் திருட்டு பயம். புதைக்கும் போது உணவு, நகைகள், மது, மற்றும் வேலையாட்களையும் சேர்த்து புதைத்தார்கள். ஏன் எனில் எகிப்தியர்கள் இறந்தபின் வேறு உலகத்திற்கு இந்த உடலோடு செல்வதாக நம்பினார். நகைகள் திருடும் கொள்ளைகாரர்கள் எடுத்தது போக சில மம்மிகள் புராதன ஆராய்ச்சியாளர் கைகளில் கிடைத்தது, இன்னும் சில கிடைத்துக்கொண்டிருக்கிறது. அவை கார்பன் கணிப்பினால் எவ்வளவு பழமையானது என்று நிறுவப்பட்டது, மேலும் அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஹீரோக்லிபிக்ஸ் மூலம் எகிப்திய சரித்திரம் மிக அழகாக விவரிக்கப்பட்டது.
இந்த சரிதத்தை படிக்கும் போது இந்த மகத்தான நாட்டுடன் நம் மூதாதையர்கள் வாணிப தொடர்பு கொண்டிருந்தாஅர்கள் என்பதற்கு, எகிப்தில் கண்டெடுக்க பட்ட தொன்தமிழ் காசுகளே சான்று. எகிப்தை கிரேக்க ரோமானியர் ஆண்டபோது பாரதத்துடன் கொழித்த வாணிபம் பற்றி பல்வேறு சரித்திர சான்றுகள் உள்ளன. புராதன எகிப்தியர் நம் இந்தியர்களோடு கொண்ட தொடர்புகள் பற்றி ஆராய்வது மிகவும் முக்கியம்!
படிக்க படிக்க சுவாரசியம் கொள்ள செய்தது நைல் நதி. எகிப்திய பாலைவனத்தை சில இடங்களில் சோலைவனமாக்கிய முக்கிய நதி.பண்டை எகிப்தியர் தங்கள் தேசத்தை நதியின் தீரத்தையோட்டியே அழைத்தனர்.நைல் என்ற பெயரும் பிற காலத்தில் வந்ததே, பண்டை எகிப்தியர் அதனை வெறும் ஹிடேறு (hiteru) அதாவது நதி என்று அழைத்தனர். நீர்நிலங்களை கேமெட் அதாவது கருநிலம் (kemet) என்றும் பாலைவனத்தை செந்நிலம் அதாவது தேச்ரெட்(desret) என்றும் அழைத்தனர்.பிற்காலத்தில் இதுவே ஆங்கிலத்தில் பாலைவனத்தை குறிக்கும் டேசெர்ட் (desert) சொல்லாக மருவியது. கிரேக்கர்கள் அந்நாட்டு மக்களை எகிப்தியர்கள் என்றழைத்ததால் அந்த பெயரே பிற்காலத்தில் அந்த தேசத்தை குறிக்கும் பெயராகியது.
பண்டை எகிப்தியாரின் வாழ்வே நைல் நதியின் சீற்றதையும் வேகத்தையும் பொறுத்திருந்தது. அந்த நதி பெருகும் குறையும் காலங்களை வைத்து பயிர் செய்து நதியின் நீர்நிலையை வைத்து வரி விதித்தது எல்லாம் படிக்க, படிக்க மிகவும் சுவையாக இருந்தது.பெரிய பிரமிடுகளையும்,ஒபெளிஸ்க்(Obelisk) என்னும் உயர்ந்த தூண்களையும் கட்டுவதற்கு கல் அஸ்வானிலிருந்து இதே நைல் நதியில் தான் நூற்றுகணக்கான மைல் தொலைவில் உள்ள கிஸா மற்றும் லக்சோருக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் எகிப்திய வரலாறு பற்றி புரட்டிகொண்டேயிருக்கும் போது விமானம் மெல்ல கைரோவில் தரையிறங்கியது.நான்கு டிகிரி குளிரில் இங்கிலாந்தை விட்டு கிளம்பிய எங்களை பதினெட்டு டிகிரியில் பதமாக எகிப்து அரவணைத்தது. மெல்ல நடந்து சர்வதேச வரவுகளை நோக்கி நடந்தோம். அங்கிருந்த வங்கியில் இன்னம் கொஞ்சம் எகிப்திய பவுண்ட் பணம்மாற்று செய்தோம். ஆச்சரியம் இங்கே ஒரு பிரிட்டிஷ் பவுண்டுக்கு பத்து எகிப்திய பவுண்ட் கொடுத்தனர். ஆஹா இங்கேயே வந்து மாற்றியிருக்கலமோ என்று தோன்றியது.
பிரிட்டிஷ் நாடு தேசத்தினர் எகிப்தில் உள்ளே வரும்போது, $25 செலுத்தி கடவுச்சீட்டு(Visa) பெற்றுக்கொள்ளமுடியும். ஷர்ம் அல் ஷேக் போன்ற கடலோர சுற்றல பயண நகரங்களில் வரும் பிரிட்டிஷ் தேசத்தினருக்கு அந்த செலவும் கிடையாது. சரி பாஷை தெரியாமல் எப்படி போராட போகிறோமோ என்றவாறு நடந்த பொழுது நிறையப்பேர் பெயர் பலகை(nameboard) மற்றும் பயண உதவி(tours) நிறுவன பெயர்களோடு நின்றனர். பல நாடுகளுக்கு சென்றுள்ள எனக்கு கடவு பரிசோதனைக்கு(Immigration) முன்னால் பயணிகளை தவிர யாரும் அனுமதித்து பார்த்ததில்லை. இதுவே முதல் முறை! ஆச்சரியமாகக் பார்த்துகொண்டே ஒரு வரிசையில் நின்றவாறு, பயண இசைவு சீட்டு (Passport),சுற்றுலாப்பயண தகவல்களை (itinerary and bookings) எடுத்து கையில் வைத்துகொண்டு, முஸ்தபாவிற்கு தொலைபேசி செய்யலாம் என்றபோது, வருண் “டாடி! நம்ம பெயரோடு ஒரு ஆள் நிக்கிறார்” என்று சொன்னான்.
அவன் காட்டிய திசையில் எங்கள் பெயரோடு மெம்பிஸ் டூர்ஸ் என்ற அட்டையுடன் ஒரு இளைஞர் எங்களை நோக்கி வந்தார். http://uk.memphistours.com/Egypt/#
“வணக்கம் எகிப்துக்கு நல்வரவு! என் பெயர் அப்துல், மெம்பிஸ் டூர்ஸில்லிருந்து வருகிறேன் பயணம் சுகமா?” என்றார். அறிமுகங்கள் முடிந்ததும் என்னிடம் $100 வாங்கிக்கொண்டு இதோ வருகிறேன் என்று போனவர் ஐந்து நிமிடங்களில் கடவு அங்கீகார சீட்டோடு(Visa Stickers) வந்தார். எங்கள் பயண இசைவு சீட்டுகளை(passport) வாங்கி வரிசையில் நகர்ந்தவாறு ஒவ்வொருவருடைய பயண இசைவு சீட்டுகளிலும் கடவு அங்கிகார ஒட்டு சீட்டை ஒட்டினார். அவர் ஒட்டுவதற்கும் நாங்கள் கடவு பரிசோதனை மேசைக்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. எங்கள் பயண இசைவு சீட்டுகளை கொடுத்து ஏதேதோ அரபிக் மொழியில் சொன்னார். இங்கிலாந்து மற்றும் மெம்பிஸ் டூர்ஸ் மட்டும் தான் எங்களுக்கு புரிந்தது, அதிகாரி புன்னகைத்தவாறு அனுமதி முத்திரையிட்டு நல்வரவு என்றார்.
எங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு, வெளியே வரவும் எங்களை ஏற்றி செல்ல எங்கள் வேன் வரவும் சரியாக இருந்தது. விமான நிலையத்தை விட்டு வெளிவரும்போது சுற்றுலா காவல்துறையினர்(Tourism Police) வண்டியில் உள்ளவர் யார் எங்கு போகிறோம் என்று விசாரித்தனர். அப்துல் மீண்டும் அரபிக்கில் ஏதோ கூறினார். மீண்டும் இங்கிலாந்து மற்றும் மெம்பிஸ் டூர்ஸ் மட்டும் தான் எங்களுக்கு புரிந்தது. சுற்றுலா பயணிகள் எகிப்தின் அன்னியகாசு வரவின்(Foreign Exchange Income) பெரும் பகுதி என்பதால் சுற்றுலா காவல்துறையினர் என்று ஒரு தனி காவல் துறையே உண்டு என்றும், அவர்களுக்கு தெரியாமல் யாரும் அந்நிய சுற்றுலா பயணிகளை யாரும் எங்கும் கொண்டு செல்ல முடியாது என்றும் சொன்னார். அரைமணி நேர பயணத்தின் போது மேலும் இரண்டு இடங்களில் சுற்றுலா காவல்துறையினர் வண்டியில் உள்ளவர் யார் எங்கு போகிறோம் என்று விசாரித்தனர் அவற்றை பதிவும் செய்துகொண்டனர்.

<http://www.grandpyramidshotel.com/>
ஒரு வழியாக எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த கிராண்ட் பிரமிட்ஸ்(Giza Grand Pyramids) ஹோட்டலை அடைந்தோம். பெரியதாகவும் நவீன அம்சங்களை கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டல். கைரோவில் இரண்டு இரவு தான் தங்குவதாக எற்பாடு. இந்த ஹோட்டலுக்கும் ஐந்து நட்சத்திர மேனா ஒபராய்க்கும்(Mena Oberoi) இரண்டு இரவு தாங்கும் செலவில் சுமார் $1000 வித்தியாசம். காலை இரண்டு மணிக்கு வந்து ஒன்பது மணிக்கு புறப்படுவதற்கு எதற்கு வீண் செலவு என்று கிராண்ட் பிரமிட்ஸில் தங்க முடிவு செய்தோம். என்ன ஒரே குறை ஹோட்டல் ஒரு பெரிய முக்கிய சாலைக்கு பக்கத்தில் இருந்தது தான்.
அப்துல் மிச்ச பணத்தை வசூலித்து கொண்டு, “காலை ஒன்பது மணிக்கு தயாராக இருங்கள், வழிகாட்டியும் வண்டியும் அனுப்புகிறேன். நான் உங்களை நாளை இரவு ரயில் நிலையத்தில் சந்திக்கிறேன்” என்று கூறி விடை பெற்றார். இரண்டு மணி ஆகிவிட்டது ஒரு வழியாக படுக்கையில் விழுந்தபோது.நாளை எப்படி இருக்குமோ என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் மனதை ஆக்கிரமிக்க தூக்கம் ஒரு வழியாக ஆட்கொண்டது.(தொடரும்)
தனுசு–
என் ஊரில்
ஆறு இருந்தது
யார் ஆண்டாலும் கவலையின்றி
நிரம்பி வழிந்தது.
என் ஊரில்
குளம் இருந்தது
மழை பெய்தாலும் பொய்த்தாலும்
பாழாகாமல் பெருமை காத்தது.
என் ஊரில்
வாய்க்கால் இருந்தது
எக்காலத்திலும் தப்பாமல்
தெளிந்த நீரில் சலசத்தது.
இந்த இருந்தது எல்லாம்
இன்று
இல்லை.
அதனால்
ஊர் ஜனம் கஷ்டப்படவுமில்லை.
அவை
கல் குவாரியும்
மணல் குவாரியுமாக மாறி
பணம்
மும்மாரி பொழிவதால்
அந்த
நீர் ஆதாரம் தேடி
அன்று வந்த ஆடும் மாடும்
இன்று
விலை பேசி
வேறிடம் போனது பாதுகாப்பாய்.
அந்த நீரில் குத்தாட்டம் போட்ட
விளையாட்டுப் பிள்ளைகள்
புது திடல் பெற்றதால்
நீர் தடம் மறந்து போனார்கள்.
ஆனால்
அன்று அதில்
மீன் கொத்தி வாழ்ந்த
கொக்கும் நாரையும் மட்டும்
அந்த நீரை தேடித் தேடி சுற்றி வருகிறது
அன்றைய நினைவில்!
கிருஷ்ணமாச்சாரி
போராட்டம் கோஷம்..
ராமா திரும்பிப் போ..
அன்று உன் போர், வென்றது நீ
தெரியாமல் விட்டு வந்தாய்
நம் நாட்டு பிரஜைகளை
பல்லாயிரம் ஆண்டுகள்
பழி வாங்கினர் இன்று
நீ விட்டு வந்த
நம் நாடு பிரஜைகள்
தவிக்கிறது நாடின்றி..
ராமா திரும்பிப் போ
படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2013/02/sri-ramchandraji-ki-jai.jpg
செண்பக ஜெகதீசன்
உடலில் வலு இருக்கிறது
புலிக்கு-
அடுத்தவரை அடித்துத்தின்ன..
தப்பியோடத்
தைரியம் இருக்கிறது
மானுக்கு..
குடிலவேலை செய்யும்
குணம் இருக்கிறது
குள்ள நரிக்கு..
உடலை மறைத்து
உள்ளே வைத்துக்கொள்ள
ஓடு இருக்கிறது
ஆமைக்கு..
அத்தனையும் ஒன்றாய்ச் செய்ய
ஆற்றல் இருக்கிறது
மனிதனுக்கு..
ஆனாலும் அடிக்கடி
மட்டமாகிவிடுகிறானே
மிருகங்களை விடவும்…!
http://www.fanpop.com/clubs/wild-animals/images/2785495/title/big-cat-fight-wallpaper