Blog

  • பூகோள ராகம்

    பூகோள ராகம்

    சி. ஜெயபாரதன், கனடா

    அண்டவெளிக் களிமண்ணை
    ஆழியில் சுற்றிக்
    காலக் குயவன் கைகள்
    முடுக்கிய பம்பரக் கோளம்!
    உடுக்கடித்துக் குலுக்கும் மேளம்!
    பூமி எங்கிலும் கடலடியில்
    பொங்கிடும்  நாதம்!
    ஏழிசை அல்ல,  ஓம் எனும் ஓசை!
    முதன்முறைப் பதிவு!
    இயற்கை அன்னை வீணை நாதம்
    மயக்குது மாந்தரை!
    துளையிட்டுக் கேட்க பூமிக்குள்
    நுழைவது யார்?
    கடல் தட்டுகள் துடித்தால்
    சுனாமி அலை அடிப்பு!
    புவித் தட்டுகள் மோதினால்
    பூகம்ப நடனம்!
    குடல் தட்டு நெளிந்தால்
    நிலக் குலுக்கல்!
    சூழ்வெளி மாசாக
    தாரணி வயிற்றுக்குள்ளும்
    ஆறாத தீக்காயம்!

    Share
  • ஆத்திகரும் நாத்திகரும் நேசித்த குமரகுருபரர்!

    ஆத்திகரும் நாத்திகரும் நேசித்த குமரகுருபரர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    ஞானிகளின் வரலாறு நமக்கென்றும் பெருவியப்பே.பிறப்பும் வியப்புத்தான். அவர்கள் வாழ்வும் வியப் புத்தான். அவர்களின் செயல்களும் வியப்புத்தான். அவர்களின் ஆற்றலும் வியப்புத்தான். வியப்பினை வரமாக்கி மாநிலத்தில் வந்து சேர்ந்தவர்களாகவே ஞானிகள் விளங்குகிறார்கள். நடந்திருக்குமா என்று ஐயங்கள் எழுந்திடும் வகையில் அவர்களின் வாழ்வையே நாம் உற்று நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.அப்படி வியப்புடன் நோக்கும் வண்ணம் ஒருவர் மாநிலத்தில் பிறக்கிறார்.

    அல்லும் பகலும் அனைவரதமும் ஆண்டவனையே அகமிருத்தி வாழ்ந்து வந்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அளவிலா ஆனந்தம் அடைகிறார்கள் பெற்றவர்கள். ஆனால் அவர்களின் அளவிலா ஆனந்தமோ ஒரு மட்டோடு நின்று விடுகிறது. அழகான ஆண்பிள்ளை அம்மாஅப்பா என்று மழலை மொழியால் அழைப்பான் என்று ஆவலுடன் பார்த்திருந்த பெற் றாருக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. ஆசையுடன் பிறந்த ஆண்பிள்ளை பேசமுடியாத பிள்ளையாக இருப்பதைக் கண்டதும் பெற்றவர்கள் பேதலித்தே நின்றார்கள். எந்தக் கடவுளுக்கு விரதம் இருந்து இந்தக் குழந்தையைப் பெற்றார்களோ அந்தக் கடவுளின் சன்னதிக்கே பிள்ளையையும் கொண்டு அழுதபடி ஓடினார்கள். ஆண்டவன் சன்னதியில் குழந்தையைக் கிடத்தி நீ தந்த குழந்தை பேசாதிருக்கின்றான். அவனைப் பேச வைத்திடு. இல்லாவிடின் நாங்கள் மடிந்து விடுவோம்” என்று பெரும் வேண்டுதலை விடுத்து பக்கமிருந்த கடலை நோக்கி ஓடினார்கள்.

    வைதாரையும் வாழவைப்பவன் முருகன் அல்லவா! அந்த முருகன் சன்னதியில் மனமுருகிடும் அடியாரின் வேண்டுதல் வீணாகிவிடுமாகுரல் கேட்டதும் குமரன் அருள் சுரந்தான். பேசாமல் இருந்த பிள்ளை பேசியது. பேசியதே அந்தப் பரம்பொருளான முருகனைப் பற்றியே ஆகும். ஐந்து வயதுவரை பேசாதிருந்த அந்தப்பிள்ளை அரன் மைந்தனை அகமிருத்தி “திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா” என்னும் அற்புதமான பொக்கிஷத்தை திருவாய் மலர்ந்தருளுகிறது. பிள்ளையின் குரல் காதில் கேட்டதும் அளவிட முடியா ஆனந்தத்தத்துக்கும், ஆச்சரியத்துக்கும் ஆட்பட்ட பெற்ற வர்கள் தங்கருத்தை மாற்றி சன்னிதானதுக்கு ஓடோடோடி வந்தார்கள். கந்தப் பெருமான் “குருபரா” என வழைத்தார் என்பதைக் கேள்வியுற்ற பெற்றவர்கள் அந்தக் குருபரனோடு சேர்த்து , குமரனருளால் பேசுந்திறன் வாய்த் தமையால் “குமரகுருபரன்” என்றே தமது பிள்ளைக்கும் பெயரினைச் சூட்டி பேரானந்தம் அடைந்தார்கள் என்று அறிந்திட முடிகிறது. திருச் செந்தூர் பதியில்த்தான் இந்த அற்புதம் நிகழ்ந்ததாய் குமரகுருபரர் வரலாற்றால் பார்க்க க்கூடியதாக இருக்கிறது. ஐந்து வயதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாதிருந்த பிள்ளை கந்தர் கலி வெண்பா என்னும் தத்துவ நூலினை எப்படித் தந்திருக்க முடியும் என்று ஒரு ஐயம் எல்லோரிடமும் எழத்தான் செய்யும் அல்லவா?

    இங்குதான் ஒரு கருத்தை மனமிருத்துதல் யாவருக்கும் அவசியமாகிறது. மூன்று வயதில் ஒரு குழந்தை அந்த முதல்வனையே காணுகிறது. காணுவதுடன் நின்றுவிடாமல் தமிழ் மழையாகவும் பொழிந்து நிற்கிறது. அதுவும் சாதாரண தமிழ் மழை அல்ல! இனிமைத் தமிழ் மழை! இங்கிதத் தமிழ் மழை! செறிவான தமிழ் மழை! சிந்தனைகள் நிறைந்த தமிழ் மழை! அநதச் சின்னவயதில் எப்படி அந்தக் குழந்தை அப்படிப் பாடியது என்பதையும் இங்கு மனமிருத்திப் பார்ப்பது உகந்ததாய் இருக்கும் அல்லவாஅதைத்தான் முன்னைத்தவம்முன் ஞானம் என்கிறோம். இங்கே ஐந்து வருடங்கள் பேசாதிருந்த பிள்ளை பேசப் புறப்பட்டதும் அதன் வாயிலிருந்து வெளிவந்ததும் தமிழால் ஆகிய தத்துவமே மூன்று வயதில் ஞானம் அன்று ஞானசம்பந்தக் குழந்தைக்கு வாய்த்தது. பேசாதிருந்த பிள்ளைக்கு ஐந்துவயதில் ஞானம் வாய்த்திருக்கிறது.

    ஞானம் என்பது எப்பொழுது யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அப்பொழுதுதான் அது கிடைக்கும் வெளியில் வரும் என்பதுதான் உண்மை நிலையாகும். அப்படித்தான் குமரகுருபரரை நாம் பார்த்திடல் பொருத்தமாய் அமையும். ஐந்து  வயதுவரை மோனத்தில் இருந்திருக்கலாம். மெளனம் என்பதுதான் மிகவும் உயர் நிலையாகும். அந்த மெளனத்தில் அந்தப் பரம் பொருளினையே அகமெண்ணியபடி வாய் பேசாதும் இருந்திருக்கலாம். என்று ஒரு சிந்தனையையும் ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் தெரிவிப்பதும் நோக்கத்தக்கது. அவ்வாறு அவர்கள் தெரிவிப்பதற்குக் காரணம் குமரகுருபரர் வழங்கிய படைப்புக்கள் எனலாம். இலக்கணம், இலக்கியம், தத்தவம், அறியாதவர், அவற்றைத் தேடி முறைப்படி கற்காதவர் எப்படி – இத்தனை அரியவற்றை ஆக்கினார் எனும் நிலையில் ஆன்மீகத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு உடன்பாடு சொல்லாமல் இருந்திட முடியாமலே இருக் கிறோம் அல்லவா! இங்குதான் கருவிலே திரு நிறைந்தவராக குமரகுரு பரர் இருந்திருக்கிறார் என்பது புலனாகி நிற்கிறதல்லவா! இப்படியாய் அமைந்தவர்களைத்தான் ஞாவான்கள் என்று அழைக்கின்றோம்.

    வாய்ந்திறந்ததும் வெளிவந்த “திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா” சாதாரணமானது அல்ல. அதனுடைய உட்பொருளினை உற்று நோக்கும் ஆன் மீக ஆளுமைகள் அதனை “குட்டிக் கந்தபுராணம்” என்று உச்சிமேல் வைத்துப் போற்றியே நிற்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். கந்தபுராணத்தை எங்களின் சொந்த புராணம் என்று கொள்ளும் ஒரு வழக்கம் எங்களிடம் நிறைந்தே காணப்படுகிறது. அந்தப் புராணத்துடன் இந்த குட்டிக் கந்தபுராணத்தையும் கருத்திருத்துவதும் சிறப்பாய் இருக்கும் என்று எண்ணுகின்றேன். கந்தர் கலிவெண்பாவில் – திருமுருகாற்றுப்படையினையும் காணலாம். அருணகிரியாரின் திருப்புகழையும் காணலாம் என்று அறிஞர்கள் சொல்லுவார்கள். அத்தனை சிறப்புக்களையும் கொண்டு விளங்குவதால் குமரகுருபரரின் முதல் வெளிச்சமாய் கந்தர் கலிவெண்பா பிரகாசித்துப் பக்தியுலகில் நிற்கிறது என்பதை மனமிருத்தல் வேண்டும். பக்திச்சு வையினையும்தத்துவ செறி வினையும்சொற் சுவையினையும்பொருட் சுவையினையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்பதும் நோக்க த்தக்கது. இதனைப் பாராயணம் செய்தால் வந்தவினையும்வருகின்ற வினைகளும் காணாமலே ஓடி விடும் என்பதையும் கருத்திருத்தல் வேண்டும். 

    குமரகுருபரர் ஆன்மீக வாதியாய் இருந்தார். அறநெறி காட்டுபவராய் இருந்தார். சமுதாய சிந்தனை மிக்கவராகவும் இருந்தார். தமிழ் இலக்கியப் பரப்பில் முத்திரை பதித்தவராகவும் இருந்தார். அது மட்டுமன்றி தவநெறியில் உயர்ந்தும் தனி ஒழுக்கத்தில் தலை சிறந்தும் அவர் இருந்திருக்கிறார். அவரின் அளவிட முடியாத ஆற்றல்களை யாவரும் அறியும் வண்ணம் அவரின் ஆக்கங்கள் அனைத்துமே அடையாளமாக இருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான குமரகுருபரர் – தனது குருவைத் தேடியதும்குருவின் ஆணை யின்படி சைவத்தைப் பரப்பிடப் பயணப்பட்டதும் அதற்காக அவர் பட்ட சோதனைகளும்வேதனைகளும் அவரை உயர் ஞானியாகவே பார்க்கும் வண்ணம் ஆக்கி யேயிருக்கிறது.

    மாசிலா மணியான ஒருவர் இவரின் குருவாய் வாய்த்ததே ஒரு சோதனைதான். “உன்னால் பதில் சொல்ல முடியா நிலையில் உன் னை யார் கேள்வி கேட்கிறாரோநீ அவ்வேளை சொல்வதறியாது நிற்கிறாயோ அங்குதான் உன் குருவைக் காண்பாய்” என்று அசரீரி அவருக்கு குறிகாட்டி நின்றது. “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள” என்னும் பெரிய புராணப்பாடலின் அனுபவத்தைச் சொல்லு என்று கேட்க அதற்கு உரிய பதிலினைக் கூறவியலாது மெளனித்து நிற்கிறார் குமரகுருபரர். அப்பொழுது அவர் மனத்தில் “கண்டேன் குருவை” என்னும் உணர்வு எழுகிறது. அவரின் அடி பணிகிறார். தொடர்கிறார் அவரிட்ட பணியியை. அந்தக் குருதான் தருமபுர ஆதீனத்தின் தலைமைப் பதவியிலிருந்த மாசிலாமணித் தேசிகராவார்.

    தமிழகத்திலிருந்து வடநாட்டுக்குச் சென்று சைவத்தை நிலை நிறுத்திஅங்கு சைவத்துக்கென ஒரு மடத்தினை நிறுவியர் என் னும் பெருமையினைப் பெற்றவராக குமரகுருபரர் மட்டுமே விளங்குகிறார்அதுவும் தமிழராக இருந்திருக்கிறார் என்பதை மனமிருத்துவதே  முக்கியமாகும். குமரகுருபரர்  வடநாடு சென்று மடம் அமைத்திட உத்தரவு பெறுவதற்கு அக்காலத்தில் இருந்த இந்துஸ்தானி பேசுகின்ற முகம திய மன்னனனையே நாடும் தேவை இருந்தது. இவருக்கோ இந்துஸ்தானி தெரியாது. அவனுக்கோ தமிழ் தெரியாது. ஆனால் அவனுடைய தாய் மொழியில் சரளமாய் பேசினார் குமரகுருபரர். எப்படி இது நடந்தது. அதனை விளக்கவே “சகல கலா வல்லி மாலை” சான்றாக வந்து நிற்கிறது. சகலகலாவல்லி மாலையினைப் பாடியதும் இந்துஸ்தானி அவர் நாவில் அமர்ந்து விடுகிறது. சகலகலைகளுக்கும் அதிபதியான கலைமகள் கருணையினைப் பெற்று விடுகிறார் குமரகுருபரர். சைவத் தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகவே சகலகலா வல்லிமாலையினைப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சொல்லும்ஒவ்வொரு பொருளும், உள்ளத்தில் பக்தியின் உணர்வினை, தமிழின் உணர்வினை, இறையின் உணர்வினை, நிச்சயமாகவே எழச் செய்துவிடும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம். நவராத்திரி என்றதும் முன்னுக்கு வந்து நிற்கும் பக்திப் பாமாலை சகலவல்லிமாலைதான். அதனை மனமுருகிப் பாடுவதனைச் சகல சைவத்தமிழ் மக்களும் பெருவிருப்பமாக்கியே இருக்கிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டியதாகும்.

    திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரரை சிற்றிலக்கிய வேந்தர் என்று பாராட்டுவது உகந்ததாகவே இருக்கும். அந்தளவுக்கு சிற்றிலக்கியத்தில் அவர் முத்திரை பதித்தவராகிறார் என்பதுதான் உண்மை எனலாம். அவரின் படைப்பாககந்தர் கலிவெண்பாமீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்மதுரைக் கலம்பகம்நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவைபாண்டார மும்மணிக்கோவைகாசிக் கலம்பகம்சகலகலாவல்லி மாலைமதுரை மீனாட்சியம்மன் குறம், தில்லைச் சிவகாமி அம்மை இரட்டைமணி மாலைகயிலைக் கலம்பகம், காசித்துண்டி விநாயகர் பதிகம். சிற்றிலக்கியத்துக்கு எத்தனை கொடைகளை வழங்கியிருக்கிறார் என்பதை அவரின் படைப்புகளில் இருந்து பார்த்துவிடக் கூடியதாக இருக்கிறதல்லவா!

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடப்பட்ட நிலையில் மீனாட்சி அம்மனே குழந்தையாய் வந்து அமர்ந்திருந்து கேட்டதாகவும்குமரகுருபரரின் தமிழ்ச் சுவையினைக் கண்டு முத்துமாலையினைக் கழுத்தில் அணிவித்து அருள் பாலித்ததாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. நாத்திகர்கள் இதனை நம்புகிறார்களோ தெரியாது – ஆனால்இறைவனது ஆசியினைப் பெற்ற தமிழ்ப் புலவராக வெளிச்ச மிட்டுக் காட்டப்படுகிறார் என்பதுதான் இங்கு மனத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இதனால் இவரை வரகவி என்றும் பார்க்கலாம் அல்லவா! மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழினைப் போற்றாத தமிழ் அறிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சொற்சுவையும்பொருட்சுவையும் அருட்சுவையும் இருங்கே அமைந்த பொக்கிஷம் என்றே எண்ண முடிகிறது.

    தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த
    துறைதீந் தமிழின் நறுஞ் சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே “
    ……… வஞ்சிக் கொடியே வருகவே !
    மலையத்துசன் பெற்ற பெரு வாழ்வே வருக … வருககவே!

    என்னும் பக்தியினைத் தொடும் இப்பாடல் வரிகளை மறக்கத்தான் முடியுமாஇதனைக் கேட்டதுமே உலகாளும் மீனாட்சியே குழந்தையாக சபைக்கு வந்தாளாம்!

    திருக்குறள் பருவத்தே பெற்ற பிள்ளை என்று யாவராலும் ஏற்றிப் போற்றிக் கொண்டாடப்படும் வகையில் குமமரகுருபரர் அகத்தினின்று வெளிவந்த ஆக்கந்தான் “நீதிநெறி விளக்கம்” நூலாகும். குமரகுரு பரரின் சிந்தனை ஓட்டம் எப்படியெல்லாம் பயணப்பட் டிருக்கிறது என்பதற்கு இந்த நூலே பெருஞ்சான் றாகி வந்தமைகிறது.

    நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
    நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்
    எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
    வழுத்தாது எம்பிரான் மன்று.

    இந்த ஒரு பாட்டே  நீதிநெறி விளக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி விடுகிறது அல்லவா!

    குமரகுருபரரின் அறச்சிந்தனைகள் மட்டுமல்லாது அவரின் கல்விச் சிந்தனைகளும் கருத்திருத்த வேண்டியனவேயாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்றே சொல்லலாம். சைவத்தின் காவலனாய் விளங்கினார். தமிழ் இலக்கியத்தில் தனியான இடத்தினைப் பெற்ற வராகவும் விளங்கினார். சமயத்தின் சாறாக இருந்து சரித்திரமாய் ஆகியவராய் இருந்தாலும்சமுதாயச் சிந்தனை மிக்கவராகவும் விளங்கி இருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும். சமயத்தில் நிற்பவர்கள் தத்துவங்களைச் சொல்லிவிட்டு நிற்பவர்களாய் இருப்பதைப் பெரும்பாலும் காணுகிறோம். ஆனால் பேசாதிருந்து பின் பேசப் புறப்பட்ட குமரகுருபரரோ தாய்மொழியான தமிழை நேசிக்கிக்கிறார். குருவை நேசிக்கிறார். தமிழ் இலக்கியத்தை நேசிக்கிறார். சமூகத்தை நேசிக்கிறார். நாத்திகர் போற்றும் வகையில் அவர்களின் அகத்தினாலும் நேசிக்கப்படுகிறார். ஆத்திகரும்நாத்திகரும், நேசிக்கும் ஒரு வராக குமரகுருபரர் விளங்கி இருக்கிறார் என்பதுதான் அவரை இன்றுவரை நாங்கள் அனைவருமே போற்றிப் பூசித்து அவருக் கென்று குருபூசை நன்னாளைக் கொண்டாட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும்..

    நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
    கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
    காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.

    தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
    தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
    காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 

    சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
    நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
    செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
    கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 

    மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
    பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
    விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
    கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே

    Share
  • குறளின் கதிர்களாய்…(402)

    குறளின் கதிர்களாய்…(402)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(402)

    இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.

    -திருக்குறள் -81 (விருந்தோம்பல்)

    புதுக் கவிதையில்…

    வீட்டில் இருந்து
    விரும்பிடும் மனைவி மக்களுடன்
    வேண்டிய பொருள்சேர்த்துப் பாதுகாத்து
    வாழ்ந்திடும் இல்வாழ்க்கை என்பது,
    வரும் விருந்தினரை
    வரவேற்று உபசரித்து
    வேண்டிய
    உதவிகள் செய்து காத்திடத்தான்…!

    குறும்பாவில்…

    இல்லத்திலிருந்து பொருள்காத்திடும்
    இல்வாழ்க்கை என்பது, விருந்துபசரித்துக் காத்து
    இல்லையெனாது உதவிடவேதான்…!

    மரபுக் கவிதையில்…

    மனைவி மக்கள் சுற்றமென
    மனையி லிருந்தே தேடுபொருள்
    அனைத்தும் காத்தே ஆங்காங்கே
    அலைந்தே நடத்தும் இல்வாழ்க்கை
    எனநாம் சொல்லும் வாழ்வதுவே,
    என்றும் நாடி வருகின்ற
    அனைத்து விருந்தும் உபசரித்தே
    அவரைப் பேணி யுதவிடவே…!

    லிமரைக்கூ…

    உறவுடன் மனையில் இருந்தே
    பொருள்காக்கும் இல்லறம் என்பதே இதற்காகத்தான்,
    உபசரித்துக் காத்திடு விருந்தே…!

    கிராமிய பாணியில்…

    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
    நல்லமொறயில ஒபசரிக்கணும்,
    விருந்தாளிய ஒபசரிக்கணும்..

    பொண்டாட்டி
    புள்ளகுட்டி எல்லாஞ்சேந்து
    பொருளக் காப்பாத்த
    ஒண்ணாச் சேந்து
    ஊட்டுல நடத்துற
    இல்வாழ்க்க இதுக்காகத்தான்,
    வாற விருந்த நல்லா
    ஒபசரிச்சிப்
    பாதுகாக்கிறதுக்குத்தான்..

    அதால
    ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
    நல்லமொறயில ஒபசரிக்கணும்,
    விருந்தாளிய ஒபசரிக்கணும்…!

    Share
  • லக்‌ஷன்யா பார்கவன் ஓவியங்கள்

    லக்‌ஷன்யா பார்கவன் ஓவியங்கள்

    மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார், லக்‌ஷன்யா பார்கவன். இவர் வரைந்த ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாழைப்பழ அல்வா செய்முறை

    வாழைப்பழ அல்வா செய்முறை

    வாயூறச் செய்யும் சுவையும் வளமான சத்தும் நிறைந்த வாழைப்பழ அல்வா செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்னைப் பார்! என் அழகைப் பார்!

    என்னைப் பார்! என் அழகைப் பார்!

    ‘என்னைப் பார், என் அழகைப் பார்’ என ஒய்யாரமாக நிற்கும் அழகிகளின் அணிவகுப்பு இதோ. இடம் – போத்தீஸ், குரோம்பேட்டை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • போகர் ஜீவ சமாதி | பழநி

    போகர் ஜீவ சமாதி | பழநி

    போகர், நவபாஷாணத்தால் பழநி தண்டாயுதபாணி சிலையை உருவாக்கியவர். சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற பலவற்றில் பேரறிவும் ஞானமும் கொண்டிருந்தார். சீனாவில் போகர், போயாங் வேய் (Boyang Wei) என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் போகர் 7000 உள்பட, தமிழில் 64 நூல்களை எழுதியுள்ளார். பழநி மலை உச்சியில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் வளாகத்தில் இவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது. இங்கே அண்மையில் சென்று இவரையும் இவர் வழிபட்ட மரகதலிங்கத்தையும் வழிபட்டோம். இதோ சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சிபுரம் கற்சங்கிலி

    காஞ்சிபுரம் கற்சங்கிலி

    கல்லில் வடித்த கவி, காலத்தை வென்ற கலை, நூற்றாண்டுகளைக் கடந்த நூதனம், அந்தரத்தில் அசையும் அதிசயம், கடும்பாறையைக் கொடியென வளைத்த வல்லமை, உலகோர் வியக்கும் உன்னதம், தரணி போற்றும் தமிழர் கைத்திறம், காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் ஒளிவீசும் ஒய்யாரக் கற்சங்கிலி இதோ.

    108 திவ்ய தேசங்களுள் முப்பதோராவது திவ்ய தேசம், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம், அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் பள்ளிகொண்டிருக்கும் அற்புதத் தலம், எப்படிச் செய்தனரோ என நாம் வியக்கும் கல் சங்கிலியைக் கொண்ட கச்சி மாநகரத்துக் கலாமண்டபம்… எனப் பல பெருமைகள் கொண்ட அருள்மிகு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளே ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈழப் போராளிகளுக்காக நீத்தார் கடன்

    ஈழப் போராளிகளுக்காக நீத்தார் கடன்

    மறவன்புலவு சச்சிதானந்தன்
    சிவ சேனை

    வைகாசி தேய்பிறை நாள்கள் இலங்கையில் சைவத் தமிழருக்குத் துன்பியல் நாள்கள்.

    403 ஆண்டுகளுக்கு முன்பு, வைகாசி தேய்பிறை எட்டாம் நாளில், கத்தோலிக்கப் போத்துக்கேயர் சைவத்தமிழ் மன்னனான சங்கிலியனைப் போரில் தோற்கடித்தனர்.

    13 ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி தேய்பிறை ஆறாம் ஏழாம் எட்டாம் நாள்களில் சிவபூமியான வன்னியில் நடைபெற்ற சிங்கள – தமிழ்ப் போரில் இலட்சக்கணக்கான சைவத் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர் புத்த சிங்கள அரசினர்.

    சைவத் தமிழர் மரபுக்கு அமைய வைகாசி தேய்பிறை ஆறாம் ஏழாம் எட்டாம் நாள்களில் அன்றைய சங்கிலியனையும் இன்றைய போராளிகளையும் தோற்கடித்த போரில் உயிரிழந்த சைவத்தமிழர்களுக்காக

    ஆண்டுதோறும் இலங்கையிலும் இந்தியாவிலும் நீத்தார் கடன் பிதிர்க் கடன் ஆற்றி வருகிறோம்.

    வடக்கே காசியின் கங்கைக் கரை தொடக்கம் தெற்கே தாமிரபரணி வரை பரந்த நிலப் பகுதி எங்கும் நீர்நிலைகள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு அர்ஜுன் சம்பத் தலைமையில் நீத்தார் பிதிர்க் கடன் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

    சென்னையில் மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சரர் கோயில் திருக்குளத்தில் நடைபெற்ற பிதிர்க்கடன் நிகழ்ச்சியின் படங்களை இணைத்துள்ளேன். பிதிர்க் கடனாற்றும் பேறும் நீத்தாருக்காக வழிபடும் பேறும் மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு உரியதாயிற்று.

    Share
  • உறவுகள் அந்நியமாவது ஏன்? | நிர்மலா ராகவன்

    உறவுகள் அந்நியமாவது ஏன்? | நிர்மலா ராகவன்

    நாம் கண்ணெதிரே காணும் இன்னோர் உண்மை, உறவுகள் அந்நியமாகி வருகின்றன. முன்போல் ஒட்டுதல் இல்லை, நெருக்கம் இல்லை, அடிக்கடி பேசுவதும் பழகுவதும் இல்லை. குடும்ப நிகழ்ச்சிகளில் கூடிக் கலைவதுடன் சரி. இதற்கு என்ன செய்யலாம்? சுதா மாதவன் கேள்விக்கு நிர்மலா ராகவன் வழங்கும் பதில் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உயர்ஞானப் பாலை உண்ட பிள்ளை!

    உயர்ஞானப் பாலை உண்ட பிள்ளை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அழுதகுரல் கேட்டு அம்மையே வந்தாள்
    ஆலவாய் அரசு அமைதியாய் இருந்தார்
    உண்ணா முலையாள் உயர்ஞானப் பாலை
    உண்ட பிள்ளையை உலகமே வியந்தது

    உணர்வெலாம் ஞானம் ஊறிய பிள்ளை
    தோடுடை செவியனாய் கண்டனர் இறையை
    பாடினார் பரமனை பரவசம் ஆகியே
    நாடினார் திருவருள் கடலினுள் மூழ்கினார்

    திருவருள் செல்வராய் மலந்தனர் அவருமே
    திருஞான சம்பந்தர் பெயரதாய்  வாய்த்தது
    பக்தியைப் பரப்பிட பரமனைப் பற்றினார்
    சொத்தெனச் சைவத்தைக் கருத்தினில் இருத்தினார்

    குழந்தையாய் இருந்தவர் குமரனாய் வளர்ந்தனர்
    குவலயம் சிறந்திட ஞானத்தைக் கொடுத்தனர்
    கோவிலை மையமாய் கொண்டுமே சேவையை
    வாழ்வினில் இருத்தியே மகிழ்ந்திட்டார் சம்பந்தர்

    இளமையில் ஞானியாய் எழுந்தனர் சம்பந்தர்
    இன்தமிழ் மொழியினை ஏந்தினார் நாளுமே
    பக்தியைப் பரப்பிட பைந்தமிழ் மொழியினை
    சித்தத்தில் இருத்தியே செப்பினார் தத்துவம்

    முத்தாய் வைரமாய் பவளமாய் குவிந்தன
    முத்திக்கு வித்தாக கருத்துகள் பொலிந்தன
    அனுதினம் அடியவர் சூழ்ந்திடச் சம்பந்தர்
    ஆலய மெங்கணும் அரன்புகழ் பரப்பினார்

    மந்திரமும் நீறென்றார் தந்திரமும் நீறென்றார்
    வானவர் மேலேயும் நீறென்றார் சம்பந்தர்
    சுந்தரமும் நீறென்றார் சுகமுமே நீறென்றார்
    நந்துயரைப் போக்குவது நாளுமே நீறென்றார்

    முத்தியைச் சத்தியத்தை முழுமையாய் தருமென்றார்
    பக்தியினை பக்குவத்தை பாங்குடனே தருமென்றார்
    சித்தியைத் தருமென்றார் சீலத்தைத் தருமென்றார்
    நித்தமுமே நீறதனை நெஞ்சிருத்த வேண்டுமென்றார்

    பூசவினியது என்றார் பேசவினியது என்றார்
    ஆசையறுப்பது என்றார் அகந்தை ஒழிப்பது என்றார்
    தேசம்புகழ்வது என்றார் திருவாய் பொலிவதும் என்றார்
    வாழநினைப் பார்க்கெல்லாம் மருந்தாகும் நீறென்றார்

    புனைந்தார் பலபாடல் அணைந்தார் அரனடியை
    இணைந்தார் திருக்கூட்டம் எடுத்தார் தமிழ்மொழியை
    கொடுத்தார் பலகருத்தை குழந்தைஞானி சம்பந்தர்
    தடுத்தார் சமண்புயலை சைவத்தின் தலைமகனாய்

    அப்பரொடு சேர்ந்தார் ஆன்மீக வழிநடந்தார்
    அரனாரின் திருவருளால் அமைத்திட்டார் சத்சங்கம்
    அனைவருமே அகிலத்தில் நல்லவண்ணம் வாழலாம்
    எனுங்கருத்தை விதைத்திட்டு ஏற்றமுற்றார்  சம்பந்தர்

    Share
  • மாரடைப்பைக் கண்டுபிடிக்க உதவும் சிரிப்பு யோகா

    மாரடைப்பைக் கண்டுபிடிக்க உதவும் சிரிப்பு யோகா

    இதய நோய் உள்ளவர்களுக்குத் தங்களுக்கு இந்த நோய் இருக்கிறது என்பதே தெரியாது. திடீரென்று ஒருநாள் மாரடைப்பு தாக்கும். மாரடைப்பினால் வலி ஏற்படும் போது கூட, இது ஏதோ ஒரு வலி என அலட்சியம் செய்துவிடுவார்கள். ஹாஹோ சிரிப்பானந்தா செய்து காட்டும் இந்தப் பயிற்சியை மட்டும் உங்களால் செய்ய முடிந்துவிட்டால், உங்களுக்கு மாரடைப்பு இல்லை எனக் கொள்ளலாம். செய்ய முடியவில்லை என்றால், உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கட்டற்ற மென்பொருள் மீது ஏன் காதல்? | கணியம் சீனிவாசன் நேர்காணல்

    கட்டற்ற மென்பொருள் மீது ஏன் காதல்? | கணியம் சீனிவாசன் நேர்காணல்

    கட்டற்ற மென்பொருள் மீது எப்படி ஆர்வம் வந்தது? இது எப்படி தன் வாழ்வையே மாற்றியது? இதில் இருக்கும் வாய்ப்புகள், அற்புதங்கள், ஆச்சரியங்கள் என்னென்ன? இதோ மனம் திறக்கிறார் கணியம் த.சீனிவாசன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குயிலின் அமுத கானம் – 15

    குயிலின் அமுத கானம் – 15

    சென்னையில் இன்று பெருமழை. சட்டென்று பிடித்து, சடசடவென அரை மணி நேரம் பெய்து, டக்கென்று நின்றது. அதன் பிறகு, சூழலே ரம்மியமாக மாறிவிட்டது. மப்பும் மந்தாரமுமான வானம், இதமான குளிர்ச்சி, அளவான வெளிச்சம், சுகமான காட்சிகள் என இருந்த போது இந்தக் குயிலின் குரல் கேட்டது. எத்தனை பாவங்களில் தன் துணையை அழைக்கிறது பாருங்கள். கடைசியில் அதன் துணைக் குயிலும் எதிர்க் குரல் கொடுக்க, அதனை நோக்கி விரைகிறது. உலகம் இனியது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ரிசப்ஷனிஸ்ட் முதல் டேட்டா சயின்டிஸ்ட் – து.நித்யாவின் வெற்றிப் பயணம்

    ரிசப்ஷனிஸ்ட் முதல் டேட்டா சயின்டிஸ்ட் – து.நித்யாவின் வெற்றிப் பயணம்

    ரிசப்ஷனிஸ்ட் ஆக வாழ்வைத் தொடங்கிய நித்யா, இன்று பன்னாட்டு நிறுவனங்களில் டேட்டா சயின்டிஸ்ட் ஆகப் பணியாற்றி வருகிறார். பிக் டேட்டா (Big Data), மெஷின் லேர்னிங் (Machine Learning) உள்ளிட்ட திட்டப் பணிகளில் அனுபவம் பெற்றதுடன் இவை குறித்துப் புத்தகங்களும் எழுதியுள்ளார். டெஸ்டர் என்று தன்னை மட்டம் தட்டியவர்கள் முன்னால், புதிய தொழில்நுட்பங்களில் நிரலாளராக நிமிர்ந்து நிற்கிறார். தமிழ்வழியில் படித்தாலும் முன்னேற முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். ஊக்கம் தரும் இவரது வெற்றிப் பயணம், இதோ இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share