Blog

  • கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்

    கதிரியக்கம்,

    கதிரியக்க விளைவுகள்,

    கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்

    cover-image-radioactivity.jpg

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”
    நுகராது வாழ்தல் அறிவு.

    அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது!  அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள்!  பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள்!  நாம் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன!

    விக்டர் கில்லிமின் [Victor Guillemin]

    கதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க முடியுமா?

    உலகில் கதிரியக்கமே படாத, கதிர்ப் பொழிவுகளை இதுவரை நுகராத, மருத்துவச் சாலைகளில் கதிர்வீச்சில் உடல்நலம் ஆராயப் படாத, புற்று நோயிக்குக் கதிரூட்டிக் குணப்படுத்தப் படாத, இயற்கைக் கதிரியக்கத்தில் என்றுமே தாக்கப்படாத மாந்தர்கள் எங்கேயாவது வாழ்ந்து வருகிறார்களா ?  நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் பாசக்கயிற்று வலையில் கட்டப் பட்டு அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம்!  கதிரியக்கத்தின் கைவசப் படாமலே காலம் தள்ளி விடலாம் என்று கனவு காண்பவர், அதற்கு அஞ்சி ஒளிபவர் கண்களைத் திறந்து மெய்யுலகுக்கு வாருங்கள் !

    கதிரியக்கத்தைக் கண்களால் காண முடியாது!  மூக்கால் நுகர முடியாது!  உடம்புத் தோலால் உணரவும் முடியாது!  அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும்!  கற்கால மனிதன் முதன் முதலில் தீயின் கோரக் குணங்களை அறிந்து கொண்டது போல், நமக்கு உதவும் கதிரிக்கத்தின் தீவிரப் பண்புகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் !

    இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்!  அது போல் நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம் !

    பலனும், பாதகமும் ஒருங்கே கொண்ட கதிரியக்க ஏகமூலங்கள் கடந்த 50 ஆண்டுகளாக உலகெங்கும் மருத்துவச் சாலைகள், தொழிற் கூடங்கள், விஞ்ஞானப் பொறியியல் ஆய்வுத் துறைகள், மின்கலன்கள் [Batteries] உற்பத்தி, வேளாண்மை ஆய்வுச் சாலைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன் பட்டு வருகின்றன!  கோடான கோடி ஆண்டுகளாய் மலைப் பிரதேசங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலை யினத்தவர், பலவிதப் பின்புல இயற்கைக் கதிர்வீச்சால் [Background Natural Radiation], பல ஆண்டுகள் சிறுகச் சிறுகத் தாக்கப் பட்ட போதிலும், அவர்களுக்கு எவ்வித நோயும் வந்ததாகத் தெரிய வில்லை!  “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”, கவசங்களை அணிந்து கொண்டு, நமக்குப் பயன் அளிக்கும் கதிரியகத்தைக் கட்டுப் படுத்திக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை !

    கதிரியக்கம் தாக்கும் உலோகத் தனிமங்கள் எங்குள்ளன ?

    இயற்கையாகவே நம்மைச் சுற்றி வாழும் இடத்திற்கு ஏற்றபடி, எல்லாத் திசைகளிலும் உலவி உள்ள “பின்புலக் கதிரியக்கம்” [Background Radiation] ஓரளவு எப்போதும் நம்மைத் தாக்கி வருகிறது!  விண்வெளியிலிருந்து விண்மீன்கள் உமிழும் அண்டவெளிக் கதிர்கள் [Cosmic Rays] நம்மை எப்போதும் தாக்குகின்றன!  நாமுண்ணும் உணவு, குடிக்கும் நீர், நுகரும் காற்று, விளையும் பயிர்கள், நடமிடும் தளங்கள், உல்லாச மலைச் சிகரங்கள், சுரங்கப் பண்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மிகச் சிறிய அளவு கதிர்வீச்சு இருக்கவே செய்கிறது!  பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், ரேடியம், போலோனியம் போன்ற நிலையற்ற மூலகங்கள் [Unstable Elements], அணு உலைகளில், விரைவாக்கி யந்திரங்களில் ஆக்கப்படும் புளுடோனியம்-239, யுரேனியம்-233 போன்ற செயற்கை மூலகங்கள், ஏகமூலங்கள் கதிரியக்கம் எழுப்புபவை.

    பொது நபர்கள் வாங்கும் கதிர்வீச்சில் 80% பின்புலக் கதிரியக்கமே மிகுதிப் பங்கு பெறுகிறது!  வீட்டின் கீழ்த்தளப் பிளவுகளிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது!  ரேடான் வாயுவைக் காண முடியாது! அதை உணர முடியாது !  நுகரவும் முடியாது!  வட அமெரிக்க வீடுகள் எல்லாம் குளிரைத் தடுக்கக் காற்றடைப்பு இல்லங்களாய்க் கட்டப் படுவதால், கசியும் ரேடான் வாயு வெளியேறாமல் வீட்டுக் குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறது!  ரேடான் தேய்வில் வெளிவிடும் ஆல்·பா துகள்கள், அதைச் சுவாசித்து உட்கொள்ளும் வீட்டு நபர்கள் செல்களைச் சிதைத்துப் புப்புசங்களில் புற்று நோயை உண்டாக்கும் !

    இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற புதிய கதிர்வீச்சு சுரப்பிகள் [Radiation Sources] தோன்றின!  எக்ஸ்ரே ஆய்வுச் சாதனம், கதிர்ப்படவியல் [Radiography], அணு உலைகள், விரைவாக்கி யந்திரங்கள், அணு உலை விபத்துகள், அணு ஆயுத வெடிப்புகள் சோதனைகள், அணு உலை எரிக்கோல்கள் தயாரிக்கும் யுரேனியம், தோரியம், புளுடோனிய தொழிற்சாலைகள், அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்கள் போன்ற ஏராளமான துறைகள் உலகெங்கும் காளான்கள் போல் தோன்றிச் சூழ் மண்டலத்தில் கதிரிக்கத் தீங்குகளும், நோய்களும் பெருகிக் கொண்டே போகின்றன!  மனிதன் செயற்கையாக உண்டாக்கும் கதிர்வீச்சால் 18% பங்கு கதிரியக்கத்தை உயிரினங்கள் பெறுகின்றன!

    கதிர்வீச்சு, கதிரியக்கம் என்றால் என்ன ?

    ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ராஞ்சன் 1895 ஆம் ஆண்டு ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டு பிடித்தார்!  அவரைப் பின் தொடர்ந்து, 1896 ஆம் ஆண்டில் ·பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் பூமியில் கிடைக்கும் தாது யுரேனியம் கதிர் வீசுவதைக் கண்டு அதற்குக் “கதிர்வீச்சு” [Radiation] என்று பெயரிட்டார்.  அடுத்து அவரைப் பின் தொடர்ந்த மேரி, பியரி கியூரி தம்பதிகள் ரேடியம், போலோனியம் ஆகியவை யுரேனியத்தை விடத் தீவிரக் கதிர் வீசுவதைக் கண்டு பிடித்து, “கதிரியக்கம்” [Radioactivity] என்று பெயரிட்டனர்!  அணுவியல் விஞ்ஞானத்தில் புரட்சி செய்த மகத்தான அந்த கண்டு பிடிப்புக்கு, அம்மூவரும் 1903 இல் நோபெல் பரிசு பெற்றார்கள்!  1934 இல் பெற்றோரைப் பின்பற்றிச் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவரது புதல்வி ஐரீன் கியூரி அவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார்!  அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்கருவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார்!  ஐரீன் கியூரியும், ஜேம்ஸ் சாட்விக்கும் அவரது அரிய சாதனைகளுக்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டனர்!

    இயற்கையில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட மூலகங்கள், அவற்றின் ஏகமூலங்கள் [Elements & Isotopes] கதிர்வீசிப் பளு குறைந்து, குறைந்து தேய்வடைகின்றன.  அத்துடன் அணு உலைகளிலும், விரைவாக்கி யந்திரங்களிலும் [Accelerators] செயற்கையாக 200 மேற்பட்ட மூலகங்களும், ஏகமூலங்களும் உண்டாக்கப் பட்டு, அவ்விதமே அவையும் தேய்ந்து கதிர் வீசுகின்றன.  கதிர் மூலகங்களும், ஏகமூலங்களும் உமிழும் கதிர்வீச்சில் ஆல்·பாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] என்பவைச் சேர்ந்தோ, அன்றித் தனித்தோ எழுகின்றன!  அவற்றுடன் அணுக்கருவின் உள்ளே இருக்கும் நியூட்ரான் பரமாணுவும், செயற்கையாக உண்டாக்கப் படும் எக்ஸ்ரே கதிர்களும் கதிரியக்கம் புரிபவை!  அவற்றில் ஊடுறுவும் திற முடைய எக்ஸ்ரேயும், தீவிர சக்தி கொண்ட காமாக் கதிர்களும் மின்காந்த அலைகள் [Electro magnetic Waves] என்று அறியப் பட்டன.  ஆல்·பா, பீட்டா, நியூட்ரான் ஆகிய மூன்றும் வெறும் துகள்கள் [Particles].  இங்கு விளக்கப் படும் துகள்கள், கதிர்கள் யாவும் மின்னிகளை ஆக்கும் கதிர்வீச்சுகள் [Ionizing Radiations].  மேலும் அவை யாவும் உயர் சக்திக் கதிர்வீச்சுகள் [High-energy Radiations] எனப்படுபவை.  சூழ் மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்றையும், நீரையும், மண்ணையும் நாச மாக்குவது, கதிரியக்கம்!  முளைக்கும் பயிரினங்களைச் சிதைப்பது, கதிரியக்கம் !  வாழும் மாந்தருக்கும், உயிரினங்களுக்கும் தீங்குகளை விளைவிப்பது கதிரியக்கம்!

    கதிர்வீச்சுகளின் போக்கும், தடுப்புக் கவசங்களும்

    நேர் மின்கொடையுள்ள [Positive Charge] ஆல்ஃபா அணுக்கரு இரு புரோட்டான், இரு நியூட்ரான் கொண்டு, மிகையான பளுக் கொண்டதால், மனிதத் தோலைக் கடக்க முடியாது.  ஒரு தாள் காகிதம் அதைத் தடுத்து நிறுத்தி விடும்!  ஆனால் மூக்கின் வழியாகவோ, வாய் மூலமாகவோ ஆல்ஃபாத் துகள், மனித உடம்புக்குள் நுழைந்து விட்டால், அது பெருந் தீங்கிழைக்கும் !

    வேகமாய்ப் பாய்ந்து செல்லும் பீட்டாத் துகள், அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர் மின்கொடை யுள்ள [Negative Charge] ஓர் எலக்டிரான்!  அவை மனிதத் தோலுக்குள் நுழைந்து விடும் சக்தி பெற்றவை!  தாளைக் கடந்து செல்லும் பீட்டாவை, ஒரு தகடோ, பலகையோ தடுத்தி நிறுத்தி விடும் !  பீட்டாத் துகள்கள் வாய், மூக்கு வழியாக மனித உடம்பை அண்டி விட்டால், தீங்குகள் உண்டாக்கும் !

    ஊடுறுவும் சக்தி மிகுந்த காமாக் கதிர்களைத் தடுக்க ஈயத் தகடோ அல்லது தடித்த காங்கிரீட் சுவரோ தேவைப் படுகிறது!  எல்லாக் கதிர்வீச்சுகளிலுல் காமாக் கதிர்களே தீவிரத் தீங்குகளை மனித இனத்துக்கும், உயிரினத்துக்கும் விளைவிக்கின்றன!  கதிர்வீச்சுத் துணுக்குகள் மூக்கு, வாய் வழியாகச் சென்று உடம்பினுள் ஒட்டிக் கொண்டால், செல்கள் சிதைக்கப் பட்டு புற்று நோய் உண்டாகக் காரண மாகிறது !

    எக்ஸ்ரே கதிர்கள், மருத்துவச் சாலைகளில் செயற்கை முறையில் உண்டாக்க படும் மின்காந்த அலைகள். பொதுவாக அவற்றை நிபுணர்கள் அளவாகக் கையாளுவதால், தவறுகள் ஏற்பட்டு உடம்பில் அளவு மீறிச் செலுத்துதல் என்பது குறைந்த எண்ணிக்கைச் சம்பவங்களே !

    நியூட்ரான்கள் அணு உலைகளிலும், அணுப்பிளவு விளைவுகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளியேறும் துகள்கள்.  நியூட்ரான் மின்கொடை யில்லாத [Neutral Charge] பரமாணு !  அவை உடம்பை ஊடுறுவும் போது, உடம்பிலுள்ள ரசாயனப் பொருட்கள் தாக்கப் பட்டுக் கதிரியக்கத்தை எழுப்பி, அடுத்துக் கேடுகள் விளையலாம் !

    பாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடியால் விளையும் தீங்குகள்:

    முதன் முதல் இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்!  நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம்!

    அண்டவெளிக் கதிர்கள், பொட்டாஸியம்40, ரேடான் வாயு ஆகியவற்றால் இயற்கையாகப் பெறும் கதிரியக்கம்: 200-300 m.rem. [milli rem. 100 rem = 1 sievert].

    அணு ஆயுதச் சோதனை கதிர்ப் பொழிவுகள்: 1.0 m.rem.

    உடல் நல மருத்துவ ஆய்வுகள்: 50 m.rem.

    வீட்டுச் சாதனங்கள் [புகை உளவிகள், ஒளிக் கடிகாரங்கள்]: 2.0 m.rem.

    அணு உலைத் தொழிலாளி: ஆண்டுக்கு 200-300 m.rem.

    பொதுவான இயற்கைப் பின்புலக் கதிர்வீச்சால் பெறும் 200-300 m.rem கதிரடியால், 10,000 பேரில் ஒரு நபருக்குப் புற்று நோய் வரலாம்!

    ஒரு நபரை 10 rem கதிரடி ஒரே சமயம் தாக்கினால், 1000 இல் 1 நபருக்குப் புற்று நோய் வரலாம்! [மற்ற நச்சுப் பொருள்களால் புற்று நோயில் தாக்கப் படுபவர், 1000 இல் 160-200 பேர்கள்].
    100 rem கதிரடி வாங்கும் நபர்கள் வாந்தி மயக்கம் அடைவர்.  அவர்கள் 1000 பேரில் 10 பேர் அடுத்த ஆண்டே புற்று நோயில் தாக்கப் படுவார்!
    300-600 rem கதிரடி பெறுவோர் சில மணி நேரத்திலே வாந்தி மயக்க மடைந்து, இரத்த செல்கள் பாதிப்பை அடைவர்!  ஓரிரு வாரங்களில் சிலர் மரண மடைவர்!  மருத்துவச் சிகிட்சை மரண எண்ணிக்கையைக் குறைக்கலாம். 450 rem கதிரடி பெற்றவர்களில் 50% நபர்கள் இறந்து போவார்!
    1000 rem வாங்கிய நபர்கள் உடனே நோய்வாய்ப் பட்டு, மருத்துவச் சிகிட்சை அளிப்பினும் சில வாரங்களில் இறந்து போவார்!
    5000-10,000 rem கதிரடி வாங்குவோர் உடனே மாண்டு போவார்!

    கதிரியக்க தாக்குதலால் மனிதருக்கு விளையும் தீங்குகள்!

    கதிர்வீச்சுகளால் நேரும் தீங்குகளை இரு வகையாகப் பிரிக்கலாம்!  ஒன்று உடல் விளைவு [Somatic Effect]; மற்றொன்று சந்ததி மூலவிகள் விளைவு [Genetic Effect].  உடல் விளைவுகளில் சோர்வு, வாந்தி, மயக்கம், தலை மயிர் உதிர்தல், புற்று நோய், அல்லது மரணம் ஆகியவை 1000 rem கதிரடி வாங்கிய மாந்தருக்கு நேர்ந்திடலாம்!

    கதிர்வீச்சுத் துணுக்குகள் மனித உடலுக்குள் நுழைந்து செல்களை மின்னிகளாக்கி [Ionizing Body Cells] பாதிக்கின்றன.  சில சமயம் உடம்பே பழுதைச் சரிப்படுத்துகிறது!  பழுதுகள் தீவிர மானால் உயிரியல் தீங்குகள் [Biological Damages] பெருகும்!  கதிரியக்கத் துணுக்குகளின் அரை ஆயுளுக்கு [Half Life (Time taken to become half by Decay Process)] ஏற்ப, அவை நீண்ட காலங்கள் தீங்கு விளவிக்கலாம்!  அல்லது குன்றிய காலம் வரைத் துன்புறுத்தலாம்!

    அணு உலைகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளிவரும் ஐயோடின்-131 ஏகமூலத்தின் [Isotopes] அரை ஆயுள்: 8 நாட்கள்!  ஸ்டிரான்சியம்-90 இன் அரை ஆயுள்: 29 ஆண்டுகள்!  சீஸியம்-137 இன் அரை ஆயுள்: 30 ஆண்டுகள்!  இவற்றில் ஸ்டிரான்சியம்90 உடம்பின் எலும்பைத் தேடி அங்கு போய் குடி கொண்டு  அதைச் சிதைக்கிறது!  ஐயோடின்-131 தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியைப் பற்றிக் கொண்டு பாதிக்கிறது!  சீஸியம்-137 உடம்பில் பல்லாண்டு காலம் ஒட்டிக் கொண்டு புற்று நோய் உண்டாக்குகிறது! இவற்றை உடம்பிலிருந்து அகற்றுவது மிகவும் கடினமான செயல்!

    ஆனால் இதற்கு முரணாகக் கதிர்களால் மூலவிகள் துண்டிக்கப்படும் [Genes Mutations] போது, தாக்கப் பட்டோருக்குப் பிறக்கும் சந்ததிகள் பாதகம் அடைகின்றன!  ஹிரோஷிமா, நாகசாகியில் மிகையான கதிரடி வாங்கியோர் சந்ததிகள் பாதிக்கப் படவில்லை!  ஆனால் குறைவான அளவில் கதிரடி பட்டோரின் சந்ததிகள் அங்க ஈனமுடன் பிறந்துள்ளன!  புற்று நோய் வருவதும், சந்ததிப் பாதிப்புகளும் அங்கு மிங்கும் எங்கோ நிகழும், ஒழுங்கற்ற [Random] விளைவுகளே!  கதிரடி அளவுகள் அதிக மாகும் போது, அவ்விளைவுகளின் எண்ணிக்கையும் மிகைப்படுகிறது!

    செர்நோபிள் அணு உலை விபத்தில் பரவிய கதிரியக்கப் பொழிவுகள்

    1986 ஏப்ரல் 26 ஆம் தேதி சோதனையின் போது விபத்தில் வெடித்த செர்நோபிள் ரஷ்ய அணு உலை வெளியாக்கிய கதிர்ப் பொழிவுகள் நார்வே, சுவீடன், பிரிட்டன் நாடுகளில் பரவி, மற்றும் பல்லாயிரம் மைல் கடல் கடந்து, கனடாவிலும் அதன் கதிரியக்கம் உளவின் போது அறியப்பட்டது!  நார்வேயில் வாழும் ரெயின்டியர் மான்கள், கனடாவில் சுற்றும் கரிபு மான்கள் ஆகியவற்றின் இறைச்சியைத் தின்றவர் உடம்பில் கதிரியக்கம் முதன் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது!  அணு உலை விபத்தில் யுரேனியம் எரிக்கோல்கள் எரிந்து உருகி, ஏராளமான அளவு கதிர்வீச்சு உலகெங்கும் பரவி விட்டது!  மூன்று மைல் உயரத்தில் எழும்பிய கதிரியக்க முகில், காற்றில் கலந்து சூழ் மண்டலத்தில் நஞ்சைப் பரப்பி விட்டது!  20 மைல் சுற்றளவில் வாழ்ந்த 135,000 மக்கள் ராணுவ பஸ்களில் ஏற்றப் பட்டு வேறோர் ஊரில் குடிபுக ஏற்பாடானது!  ஓரிரு நாட்களில் 31 மாந்தர் மாண்டனர்!  அணு உலைக் கருகில் வாழ்ந்த 700,000 மக்கள் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டு, அடிக்கடி ஒழுங்காகச் சோதிக்கப் பட்டு வருகிறார்கள்! அவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறு குழந்தைகள்!

    கதிர்வீச்சுக் குறைப்பு! கதிர்வீச்சுப் பாதுகாப்பு!

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், மனித இனங்கள் இயற்கையில் பரவிய கதிர்வீச்சுக் கடலில் வாழையடி வாழையாய் நீந்தி வந்து, இன்னும் அவற்றின் சந்ததிகள் தொடர்கின்றன!  கதிரியக்கம் என்பது, இயற்கையாகவே மனித வாழ்க்கையுடன் பின்னிக் கொண்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலை  நிகழ்ச்சி யாகும்!  மனிதர் படைத்த அணு உலைகளும், அணு ஆயுதங்களும் நம் அருகில் இருந்து கொண்டு பல்லாண்டுகள் பயமுறுத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது!  ஆனால் மனித இனம், உயிரினம், பயிரினம் கதிரியக்கத் தீங்குகளிலிருந்து உறுதியாகப் பாதுகாக்கப் பட வேண்டும்!  அவை நுகரும் காற்றில் கதிர்வீச்சுத் துணுக்குகள் கலக்காமல் தூயதாக அமைந்திட யாவரும் ஒருங்கே பாடுபட வேண்டும்!

    அதற்குக் கட்டுப்பாடுகள், வழி முறைகள் உண்டா?  ஆம், அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A International Atomic Energy Agency, Vienna, Austria] தயாரித்துள்ள கட்டுப்பாடுகள் பல உள்ளன!  அவற்றைக் கடைப் பிடிக்க வழி முறைகள் உள்ளன! ஆனால் அவை போதா!  கதிர்வீச்சுக் கழிவுகளைக் காங்கிரீட் சமாதிகளில் புதைக்கலாம்!  கதிர்வீச்சு உயிரினங்களைச் சிதைக்கா திருக்க கவசங்களை [Radiation Shieldings] அணிந்து கொள்ளலாம்!  சிறுவர், சிறுமியர், கர்ப்பக் கரு கதிர்வீச்சுப் படாமல் மறைந்து நிற்கலாம்!  “அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல” என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது!  மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், நகர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும் !

    (தொடரும்)

    ***********************

    தகவல்:

    1.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4.  World Nuclear Association – WNA Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
    5. World Nuclear Association – WNA Waste Management and Decommissioning Working Group – WM&DWG
    (Official List – July 25, 2006)  http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

    7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)

    10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]

    11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

    12  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40504291&format=html (பாரதத்தின் பூத அணு
    மின்சக்தி நிலையங்கள்)
    13  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409094&format=html (இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி)
    14 National Geographic Magazine Radiation Effects [April 1989]
    15 Facts About Radiation by Ontario Hydro Nuclear Division
    16 Ascent Magazine By Atomic Energy of Canada Ltd. [Summer 1989]
    17 Understanding Ionizing Radiation [August 1992]
    18 Radiation is Part of Life [March 1985]
    19. <http://www.thinnai.com/?module=displaystory&story_id=203041912&format=html> (கல்பாக்கம் அணு உலை பற்றி ஞாநி)
    20. <http://www.thinnai.com/?module=displaystory&story_id=20305046&format=html> (கல்பாக்கம் அணு உலை பற்றி எனது கட்டுரை)
    21. <http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309252&format=html> (கல்பாக்கம் அணு உலை பற்றி இரண்டாம் கட்டுரை)

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 18, 2007

    Share
  • கவியரசர் நினைவுநாள் நினைவாக

    சக்தி சக்திதாசன்
    எனது மனதில் நிலைபெற்றிருக்கும் அன்புக் கவியரசரின் நினைவுநாள் நினைவாக அவரது ஆக்கங்கள் சிலவற்றை இங்கே அணிவகுக்கின்றேன்.

    ரசிப்பீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.0 R

    காசைவிட எது பெரிது?

    “தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்

    தான்போய்க் குடியி ருந்தால்

    தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா

    சம்சாரி என்றறியுமா?

    நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்

    நீசரென் றேயழைப் பார்;

    நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்

    நெருங்குமுன அறிய வேண்டும்!

    காசு பெரிதல்லநல் நண்பர்பெரி தாமென்று

    கருத்தினில் இருத்து வாயே!

    கனிவுடைய சிறுகூடற்பட்டியில் வதிகின்ற

    கன்னிமலை யரசி துணையே!”

    -கவியரசர் க்ண்ணதாசன்-

     

    தன்னுடைய சிறுகூடற்பட்டி மலையரசித் தாயிடம் தனது மனதில் காசைவிச தனது நண்பர்கள் தான் பெரிதென்ற எண்ணத்தை நிலைநிறுத்துமாறு எத்தனை பவ்வியமாக வேண்டுகிறார் பார்த்தீர்களா?

    கண்ணதாசன் அவர்கள் நண்பர்கள் பலரென்று நம்பியவர்களாலே ஏமாற்றப்பட்டவர். வெளுத்ததெல்லாம் பால் எனும் எண்ணம் கொண்டவர். ஆயினும் அவரது மனதில் நட்பை அதாவது உண்மையான் நட்பை பெரிதாக எண்ணும் சிந்தை எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கிறது பார்த்தீர்களா?

    காதல் என்னும் அந்த இனிய உணர்வினால் தாக்கப்பட்டோர் அனைவருமே என்றுகூடச் சொன்னால் தவறாகாது.

    அந்தக் காதல் உணர்வு மனதில் கொடுப்பதோ இன்பவேதனை. அந்த வேதனையைச் சொல்லில் வடிப்பது அதைவிட வேதனை.

    அத்தகைய ஒரு இன்பவேதனையை எமது இனிய கவியர்சர் எத்தனை இதமாகத் தந்திருக்கிறார் பாருங்கள் !

    விருத்தம்:

    “நூறுமுறை பிறந்தாலும், நூறுமுறை இறந்தாலும்

    உனைப் பிரிந்து வெகுதூரம் – நான் ஒருநாளும்

    போவதில்லை, உலகத்தின் கண்களிலே –

    உருவங்கள் மறைந்தாலும், ஒன்றான உள்ளங்கள்

    ஒருநாளும் மறைவதில்லை!’

    பாடல்:

    ஓராயிரம் பார்வையிலே

    உன் பார்வையை நான் அறிவேன்

    உன் காலடி ஓசையிலே

    உன் காதலை நான் அறிவேன்

    (ஓராயிரம்)

    இந்த மானிடக் காதலெல்லாம்

    ஒரு மரணத்தில் மாறிவிடும்

    அந்த மலர்களின் வாசமெல்லாம்

    ஒரு மாலைக்குள் வாடிவிடும்

    நம் காதலின் தீபம் மட்டும்

    எந்த நாளிலும் கூட வரும்

    (ஓராயிரம்)

    இந்தக் காற்றினில் நான் கலந்தேன்

    உன் கண்களைத் தழுவுகின்றேன்

    இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

    உன் ஆடையை நாடுகின்றேன்

    நான் போகின்ற பாதையெல்லாம்

    உன் பூமுகம் காணுகின்றேன்

    (ஓராயிரம்)”

    ஒன்றான உள்ளங்கள் ஒருபோதும் மறைவதில்லையாம். எத்துணை உண்மை இது.

    இப்போது உங்கள் மனங்களிலே ஒரு கேள்வி எழலாம், அப்போ ஏமாற்றும் காதலெல்லாம் என்ன? என்று.

    இங்கேதான் கவியரசரின் வார்த்தைகளின் உண்மை புரிகிறது. அப்படிப்பட்ட ஏமாற்றும் உள்ளங்கள் ஒருபோதுமே ஒன்றாவதில்லை.

    மானைடர் காதலையும், மலர்களின் வாசத்தையும் தாண்டி ஒரு சரித்திரம் படைக்கும் காதலைக் கையோடு கூட்டிவருகிறார் கவியரசர்.

    சாந்திநிலையம் என்னும் படத்தில் குழந்தைகளை வைத்து மறைந்த நடிகர் திரு.நாகேஷ் அவர்கள் பாசுவதாக அமைந்த ஒரு பாடல்.

    ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கைகளில் தான் தங்கியுள்ளது என்பதனை இத்தனை எளிதாகச் சொல்லக்கூடியவர் நமது கவியரசர் தான்.

    படம்: சாந்தி நிலையம் – வருடம் 1969

    இசை: M.S. விஸ்வநாதன்

    நடிப்பு: ஜெமினி கணேசன், காஞ்சனா,மஞ்சுளா, நாகேஷ்

    பாடல் வரிகள: கவியரசர் கண்ணதாசன்

    “பூமியில் இருப்பதும்

    வானத்தில் பறப்பதும்

    அவரவர் எண்ணங்களே

    இருக்குமிடம் எதுவோ?

    நினைக்குமிடம் பெரிது

    போய்வரும் உயரமும்

    புதுப்புது உலகமும்

    அவரவர் உள்ளங்களே!

    நெஞ்சினில் துணிவிருந்தால்

    நிலவுக்கும் போய்வரலாம்

    உலகம் போகின்ற வேகம்

    உருவமும் இனிமேல் மாறும்

    நடக்கும் கதைகளைப் பார்த்தால்

    நமக்கே சிறகுகள் முளைக்கும்

    ரஷ்யர்கள் அனுப்பிய கூடு

    ராக்கெட் என்பது பேரு

    சிஷ்யர்கள் அனுப்பிய கூடு

    தெரியுது வானத்தில் பாரு!

    பாடலைக் கேட்டதுமே நாமும் வானத்தில் கைகளை விரித்துக் கொண்டு பறக்கலாம் போல ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.

    அப்பப்பா ! இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு இருக்கிறதே ! அதை எப்படி வீளக்க முடியும்?

    மனம் என்பது மேடையாம், அந்த மேடையிலே ஒரு ஆட்டம் நடக்கிறதாம் போங்கள். அது யாரென்று நினைக்கிறீர்கள் அவனுடைய/அவளுடைய மனதைக் கொள்ளை கொண்டவருக்குரிய முகமாம்.

    மற்றொரு வகையில் சொன்னால் காதல் வயப்பட்டவர் தூங்க முடியாமல் தவிப்பார் என்கிறார் கவியரசர்.

    அந்தப் பெண் என்ன செய்கிறாளாம்….. தமிழழென்பது காவ்இரி போல வற்றாது ஓடிக்கொண்டிருக்கும் நதிதானே ! இவள் தமிழ்மகள் எப்படியான தமிழ் மகள்?காவிரி போன்ற வற்றாத தமிழ் நதிய்இல் நீராடி வந்த தமிழ்மகள்.

    அது மட்டுமா?

    இயற்கை வனத்தில் காதல் மலர் பறித்து தனது விழிகளில் சூடிவிட்டாளாமே போங்கள் …..

    ஒருபூச்சரம் எப்படி வளைந்து, வளைந்து ஆடுமோ ? அப்படி அவளது அழகிய உடல் ஆடுகிறதாம், அந்த உடலுடன் ஓடி ஆடி விளையாடுவது அவனுக்கு பொன்னுடன் விளையாடுவது போல பெருமையளிக்கிறதாம்….

    என்ன கற்பனை கவியரசருக்கு ?

    அவள் அவனோடு வந்து பேசுவது சிலை உயிர் பெற்று வந்து பேசுவது போலல்லவா இருக்கிறது.

    விழி, விழியுடன் கலப்பதும்… இதழ் இதழுடன் கலப்பதும்…. இஅவர்களின் காதல் களியாட்டத்தைக் கண்டதும் இரவு ராணியான நிலவின் உறவாடலில் கூட சுவை சேர்ந்து விடுகிறதாம்…..

    சரி இனி பாடலைப் பார்ப்போமா ?

    படம் : வல்லவனுக்கு வல்லவன் – 1965

    குரல் : டி.எம்.எஸ்., சுசீலா

    பாடல் : கண்ணதாசன்

    இசை : வேதா

    நடிகர்கள் : ஜெய்சங்கர், அசோகன், மணிமாலா

    “மனம் என்னும் மேடையின் மேலே

    முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    மனம் என்னும் மேடையின் மேலே

    முகம் ஒன்று ஆடுது இசை ஒன்று பாடுது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    (மனம்)

    தமிழ்க் காவிரி நீராடி இருவிழியில்

    காதல் மலர் சூடி

    வண்ணப் பூச்சரம் போலாடி உடலழகில்

    பொன்னுடன் விளையாடி

    சிலை ஒன்று நேரில் வந்து உயிர் கொண்டு பேசுது

    கலைத் தென்றல் வீசுது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    (மனம்)

    விழி மேலொரு விழி சேர்த்து பருவக்கலை

    மேனியில் கை சேர்த்து

    கனி இதழுடன் இதழ் சேர்த்து வெண்ணிலவின்

    இரவுக்கு சுவை சேர்த்து

    சிலை ஒன்று தேரில் வந்து எனைக் கொண்டு சென்றது

    துணை தென்றல் ஆனது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    (மனம்) “

    அன்பு நெஞ்சங்களே கவியர்சரின் நினைவு தினத்தில் அவரின் நினைவுகளோடு உங்களுடன் உறவாட நினைத்ததின் பலனே இப்படைப்பு.

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy

    மோகரேகை ராதைக்கு, யோகரேகை பார்த்தனுக்கு,
    சோகரேகை நீக்கும் சுதாமர்க்கு, -ஏகரேகை,
    பூமத்ய பாரத்தைப் போக்க வ்ரஜம்புகுந்த,
    சாமர்த் தியமான சேய்”….கிரேசி மோகன்….

    வ்ரஜம்-வ்ரஜகுலம் பிறந்த கண்ணன்….

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 27

    –சு.கோதண்டராமன்.

    இதர தெய்வங்கள்

    varuna
    பிற்காலத்துக் கதைகளிலே அதிதியின் உண்மைப் பொருள் மறைந்து விட்டது. அநந்த சக்தியை ஒரு ரிஷி பத்தினியாக்கிவிட்டார்கள். அதிதி என்பது எல்லையில்லாத பரமாத்ம சக்தி. – பாரதி
    அதிதி:
    அதிதி என்ற சொல் எல்லையற்றது என்று பொருள்படும். இது பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையைக் குறிப்பது. பரம்பொருளின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று. வேதத்தில் இது பல வகையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தேவர்களின் தாயாகவும் சில இடங்களில் பூமியைக் குறிப்பதாகவும் அதிதி என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    பூஷன்:
    இவர் உண்மையில் தேவர் தானா அல்லது தேவப் பதவியை அடையும் நிலையில் உள்ள மனிதரா என்பது தெரியவில்லை. ஏனெனில் இவர் மனிதர்களை விட மேலானவராகவும், புகழில்  தேவர்களுக்குச் சமமானவராகவும் கூறப்படுகிறார்.(6.48.19) மற்ற தேவர்களைப் போல இவரும் ருதத்தை அனுசரிக்கிறார், ருதத்தின் ரதீ (தேரோட்டி) எனப்படுகிறார். ஸ்வதாவை அனுசரிக்கும் ஸ்வதாவா என்றும் போற்றப்படுகிறார். உணவு, பசுக்கள், குதிரைகள், ரயி என்னும் செல்வம் ஆகியன தருகிறார்.

    சூரியனின் தூதராக வேலை செய்பவர் பூஷன். இவர் சூரியனின் ஒரு அம்சம் என்கின்றன புராணங்கள்.

    செல்வத்தைக் காக்கிறார். களவு போன செல்வத்தை மீட்டுத் தருகிறார். கவிதையைத் தூண்டுகிறார். பாதைகளைக் காப்பவர். பணி எனப்படும் கஞ்சர்களின் இதயத்தில் நுழைந்து அதை மென்மையாக்கி  அவர்களைக் கொடையாளியாக மாற்றுகிறார். இவர் சோதிடம் சொல்பவர்களுக்குப் பிரியமான தெய்வம்.

    இவரது வாகனம் ஆடு. இவருக்குப் பிடித்த உணவு யவை (பார்லி)யும் நெய்யும் சேர்ந்த கரம்பம்.

    விண்ணும் மண்ணும்:
    விண் ஒளியுடையது என்பதால் அதை த்யௌஸ் என்றும் அங்கு உலவும் ஒளிமயமான பொருள்களைத் தேவர்கள் (ஒளியுடையவர்கள்) என்றும் அழைத்தனர். விண்ணை அடைவதுதான், தானும் ஒரு தேவனாக ஆவதுதான் வாழ்வின் லட்சியம் என ரிஷிகள் நினைத்தனர்.

    மண் மனிதரையும் பிற உயிர்களையும் தாங்குவது. உயிர் வாழத் தேவையான உணவு மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. இது மிக நீண்டது என்பதால் உர்வீ என்றும், மிக அகன்றது என்பதால் ப்ருத்வீ என்றும் அழைக்கப்பட்டது.

    மழை பொழிந்து பயிர்கள் விளையக் காரணமாக இருப்பதால் விண்ணைத் தந்தை என்றும் உயிரினங்களை வளர்க்கும் பயிரினங்களை விளைவிப்பதால் மண்ணைத் தாய் என்றும் அழைத்தனர். விண்ணையும் மண்ணையும் சேர்த்து த்யாவா ப்ருத்வீ என்றும் ரோதஸீ என்ற பெயராலும் அழைத்து வேத ரிஷிகள் பல மந்திரங்களைப் பாடியுள்ளனர்.

    ரோதஸீ உணவு தருகிறார்கள். தேவர்களைப் பெற்றுத் தந்தவர்கள் இவர்களே. அதனால் இவர்கள் தேவபுத்ரே எனப்படுகின்றனர். புகழ் உடையவர்கள். என்றும் குறைவு இல்லாதவர்கள் (அம்ருத்ரே), உயிர்களின் புகலிடம் (புவனானாம் அபிச்ரிய: ), நீர்வளம் உடையவர்கள் (க்ருதவதீ, பயஸ்வதீ, பூரிதாரா).

    இவர்கள் வருணனின் தர்மத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். மழை தருவது, ஒளி தருவது என விண்ணின் தர்மம் வேறு. மழையைப் பெற்று பயிர்களை விளைவிப்பது, உயிர்களைத் தாங்குவது என மண்ணின் தர்மம் வேறு. என்றாலும் இருவரும் இணைந்து செயல்படுவது ரிஷிகளுக்கு வியப்பை மூட்டும் ஒரு நிகழ்வு.

    தர்மத்தை நிலைநாட்டும் தேவர்களைப் பிறப்பித்த இவர்களும் தர்மத்தை (ருதத்தை) அனுசரிப்பவர்கள் என்பதால் ருதத்தின் தாய்கள், ருதாவரீ, ருதஜாத ஸத்யே எனப்படுகின்றனர். உங்களுடைய ருதம் என்றும் ஸத்யமாக இருக்கட்டும் என்று வேண்டுகிறது ரிக் (3.54.3.)  இருவருமே இனிமை நிரம்பியவர்கள் என்பதால் ரிஷிகள் அவர்களை மதுச்சுதே, மதுதுகே, மதுவ்ரதே எனப் புகழ்கின்றனர்.

    இவர்களை வேண்டினால் என்ன கிடைக்கும்? எல்லாத் தேவர்களிடமும் எவை வேண்டப்படுகின்றனவோ அந்த உணவு, புகழ், ஆயுள், மக்கட்பேறு, ரயி எனப்படும் ஆனந்தச் செல்வம் ஆகியவை கிடைக்கும்.

    நீர்:
    தெய்வம் நல்லதே செய்யும் என்பதும், நல்லது செய்யும் எல்லாமே தெய்வம் தான் என்பதும் வேதக் கொள்கை. அந்த அடிப்படையில் நமக்கு நன்மை செய்யும் நீரைத் தெய்வமாக்கி நன்றியுடன் போற்றுகிறார்கள் ரிஷிகள்.

    நீர் என்பதற்கான வேதச் சொல் ஆப:. இது எப்பொழுதும் பன்மையிலேயே பேசப்படும். நீர்த்துளிகள் என்று கொள்ளலாம். நீர் மனிதனை போர் நடக்கும்போதும் சமாதான காலத்திலும் காக்கிறது. மருத்துவர்களுக்குள்ளே சிறந்த இது தாய் போன்றது. நிற்கின்ற தாவரங்களுக்கும் நடக்கின்ற பிராணிகளுக்கும் இது தாயும் தந்தையுமாக உள்ளது. இது இந்திரனின் விரதங்களை மீறுவதில்லை. தன் போக்கில் ஓடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. சூரியன் இதை ஆவியாக்குகிறார். இந்திரன் இது ஓடுவதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறார்.

    தண்ணீரின் வகைகளை வேதம் குறிப்பிடுகிறது. 1 விண்ணிலிருந்து பொழிவது, 2 நதிகளில் ஓடுவது, 3 வெட்டப்பட்ட கால்வாய்கள் மூலம் செல்வது, 4 பூமியிலிருந்து தானே பீறிட்டுக் கிளம்புவது என நான்கு வகை உண்டு.

    நீரின் தலைவர் வருணன். வடவாக்னி என்ற வடிவத்தில் அக்னி நீருக்குள் நுழைந்து வாழ்கிறார்.

    நீரைக் குறித்த ஒரு தோத்திரப் பகுதியின் மொழிபெயர்ப்பு இது (1.23.16 – 23). இதில் நீரின் நலம் செய்யும் தன்மையைத் தியானிக்கும் நிலையில் ரிஷி பரவச நிலை அடைந்து நீரைத் தெய்வமாகக் கருதிப் போற்றுவதை அறியலாம்.

    யக்ஞம் செய்வோரின் பந்துக்களும் எங்களுடைய தாய்மார்களுமாகிய நீர் பசுவின் பாலை இனிமையாக்கிக் கொண்டு தன் வழியே செல்கிறது.

        சூரியன் அருகில் உள்ள நீரும் சூரியனோடு சேர்ந்துள்ள நீரும் எங்கள் வேள்விக்கு நலம் சேர்ப்பதாக.

        எங்கள் பசுக்கள் பருகும் நீரைப் போற்றுகிறேன். நீருக்கு ஹவிஸ் அளிக்கப்பட வேண்டும்.

        நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்கள் விரையட்டும்.

        நீரில் எல்லா மருந்துகளும் உள்ளன. உலகிற்கு நலம் செய்யும் அக்னியும் உள்ளது.

        நீரே, நான் நீண்ட காலம் சூரியனைக் காணுமாறு என் உடலில் எல்லா மருந்துகளையும் நிரப்புக.

        நீரே, என்னிடத்தில் என்ன குற்றம் இருந்தாலும், நான் என்ன துரோகம் செய்திருந்தாலும்,  என்ன பொய் சொல்லி இருந்தாலும் அவற்றை நீக்குக.

        நான் இன்று நீரில் நுழைந்துள்ளேன். நாங்கள் அதன் ரஸத்தோடு கலந்துள்ளோம். நீரிலுள்ள அக்னியே வா, என்னைத் திடப்படுத்து.

    படம் உதவிக்கு நன்றி: http://www.cambodia-picturetour.com/banteay-srei-the-citadel-of-the-beauty/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(126)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    புதியதோர் மடல், புதியதோர் வாரம், புதியதோர் கருத்து.

    மேலைநாடுகள் மிகவும் செழிப்பானவை. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை வசதிகள் நிறைந்தது. அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வசதிகள் இங்கே காணப்படுகின்றன. இதுவே பொதுவாக மேலைநாடுகளைப்ப் பற்றி கீழைத்தேச நாடுகளின் அபிப்பிராயமாகும்.

    இது ஒருவகையில் சரியான அபிப்பிராயமாக இருந்தாலும் முற்றிலும் உண்மையான கருத்து என்று எடுத்துக் கொள்ள முடியாது.

    சாதரணக் குடிமக்களுக்கிடையில் எந்த வித பாரபட்சமுமின்றிக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகள் இருந்தாலும் அனைத்தும் அனைவர்க்கும் பொதுவாகக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது.

    நான் முதன் முதலில் இங்கிலாந்தில் கால் எடுத்து வைத்த போது கொண்ட அபிப்பிராயத்திற்கும், நாற்பது வருடங்களின் பின் கொண்டிருக்கும் அபிப்பிராயத்திற்கும் பல இடைவெளி உண்டு.

    அதற்கான காரணங்கள் பல. அப்போதைய எனது தேவைகளும் இப்போதைய எனது தேவைகளும் அதிக அளவில் வித்தியாசப்படுவது ஒரு காரணம்.

    அன்று நான் பிறந்து வளர்ந்த எனது தாய்மண்ணின் வளர்ச்சிக்கும் இன்றைய வளர்ச்சிக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமும் மற்றொரு காரணம்.

    மாணவனாக அன்று எனக்கிருந்த உடனடித் தேவை எனது எதிர்கால வாழ்வின் உத்தரவாதத்திற்கான கல்வித்தகமை மட்டுமே. கல்வித்தகமையை அடைந்ததும் நான் வாழ்ப்போவது இங்கிலாந்திலா? அன்றி எனது தாய்மண்ணிலா என்று முடிவு எடுத்திராத ஒரு நிலையில் இங்கிலாந்து வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளோடு எனது அடிப்படைத் தேவைகள் ஒன்றிப்போகாத ஒரு நிலை.

    தேசியச் சுகாதாரச் சேவை பற்றியப் பூரண புரிந்துணர்வோ அன்றி வேலை வாய்ப்புகள் பற்றிய அறிதலோ எனக்குத் தேவைப்படாத ஒரு காலமாக அது இருந்தது.

    ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் மாறுபட்டது. கல்வியை முடித்து ஏறத்தாழ 35 வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் பணிபுரிந்து ஒரு இங்கிலாந்து குடியுரிமை பெற்றவனாக வாழும் போது வாழ்வின் மற்றைய அனைத்துத் தேவைகளும் அத்தியாவசியமாகிறது.

    என்னடா இந்த மடல் எங்கே எம்மை இழுத்துச் செல்கிறது எனும் எண்ணம் உங்களுக்கு எழுவது இயற்கை.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.பி.ஸி தொலைக்காட்ச்சிச் சேவையில் ஒரு நிகழ்ச்சியை காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அதில் கண்ணுற்ற ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

    இதற்கான முக்கியக் காரணம் எமது பின்புல நாடுகளில் மட்டும் தான் வாழ்க்கை வசதிக்குறைவுகள் உண்டு எனும் கருத்துக்குப் புறம்பாக இங்கிலாந்து போன்ற முன்னேற்றமடைந்த நாடுகள் என்று கருதப்படும் நாடுகளில் கூட அவைகளின் அளவுகளிலும் மக்களின் வாழ்க்கை வசதிகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன எனும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதே !

    126.2உங்களில் பலர் “அல்சைமர்ஸ்” (Alzheimer’s) எனும் ஒரு நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    இது ஒருவகையில் ஞாபகமறதியோடு சம்மந்தப்பட்ட ஒரு வியாதியாகும். ஆனால் சரியான சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவகையில் பாதுகாக்கப்படாவிட்டால் மிகவும் மோசமான நிலையை நோயாளிகள் விரைவில் அடைந்து விடுவார்கள்.

    இதனைப் பூரணமாக குணமாக்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் இது தீவிரமாகும் துரிதத்தை மட்டுப்படுத்தவே உபயோகிக்கப்படுகின்றன.

    இங்கிலாந்து அரசினால் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பீட்டின் படி 2015ம் ஆண்டில் இங்கிலாந்தில் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 520,000 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    126.1இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வியாதியில் பீடிக்கப்பட்ட இருவரை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டார்கள். ஒருவர் இங்கிலாந்தின் ஒரு பகுதியிலும், மற்றொருவர் இங்கிலாந்தின் மற்றொரு பகுதியிலும் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு இந்நோய் இருப்பது விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

    ஆனால் மற்றவருக்கோ இவ்வியாதி இருப்பதைக் கண்டுப்பிடிப்பதற்கே மூன்று அண்டுகள் பிடித்தது. அதன் காரணமாக அவரது நோய் மேலும் மூன்று ஆண்டுகளுக்குண்டான தீவிரத்தை எட்டி விட்டது.

    சரி இங்கே எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி என்ன ?

    ஒரே நாடு, ஒரே அரசாங்கத்தின் கீழே இயங்கும் நாடு, வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களின் தேசிய சுகாதரச் சேவையின் நிர்வாகங்களின் கீழ் ஒரே வியாதிக்கான நிவாரணங்கள் மட்டும் ஏன் வித்தியாசப்படுகின்றன ?

    126.3அப்படிப்பார்க்கும் போது, அவர்களது அடிப்படை வாழ்க்கைத் தேவைகளின் தாக்கம் வித்தியாசப்படுவது இத்தகைய முன்னேற்றமடைந்த , ஜனநாயகத்தின் உச்சம் என்று கருதப்படும் பாராளுமன்ற முறையக் கொண்ட நாட்டில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கக் கூட முடிகிறதா ?

    ஒரு மனிதன் ஒரு நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்கிறான் என்பது அவனது வாழ்க்கைக் காலத்தை நிர்ணயிக்கிறதா ? எனும் கேள்வி எழுகிறது.

    இப்படியான நிகழ்வுகள் எமது பின்புல நாடுகளுக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் வசதிகள் நிறைந்த நாடு என்று கருதப்படும் நாடுகளிலும் நடைபெறுகிறது என்பதுவே யதார்த்தம்.

    ஏன் இதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறேன் ? ஓ …நானும் ஐம்பதுகளின் முடிவில் நிற்கிறேனோ ?

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை…
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 49

    கே.ரவி

    புயல் வந்ததா, முயல் வந்ததா?

    ஒன்றும் வரவில்லை தம்பி. காத்துக் கொண்டிருக்கிறேன். காலம் மட்டும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்? தெரியாது. ஆனால், காத்துக் கொண்டே இருக்கிறேன்.

    சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்

    கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்

    என்று கம்பன் சொன்னது போல், நானும் ஓர் அசோக வனத்தில்….!

    என் நூல்களைப் பொதுவாக நான் விரைவில் எழுதி முடித்து விடுவேன். “நமக்குத் தொழில் கவிதை” என்ற நூலை ஒரு மாதத்துக்குள் எழுதி முடித்ததாக ஞாபகம். ஆங்கிலத்தில் எழுதிய சட்ட நூல்கள் இரண்டும் அப்படித்தான். ஆனால் “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற நூல் எழுதி முடிக்கச் சில ஆண்டுகள் ஆயின. காரணம், பாடமாக நான் படிக்காத அறிவியல் பற்றிய நூல் அது. பல ஆங்கில நூல்கள் படித்துப் பயின்று நான் எழுத வேண்டியிருந்தது. அதே போல், “வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்” (Verses of Wisdom) என்ற ஆங்கில நூல் எழுதவும் பல ஆண்டுகள் ஆயின. அது நான் என் போக்கில் சிந்தித்து எழுதிய நூல் இல்லை. அதன் ஒவ்வொரு பகுதியையும் எழுதும் போதும், சிந்தனை முயற்சி அதிகம் குறுக்கிடாமல், உள்ளூக்கம் என்னைத் தூண்டக் காத்திருந்து, காத்திருந்து எழுதிய நூல் அது. அப்படித்தான் “ப்ரும்ம சூத்ரா த காஸ்மிக் கோட்” (Brahma Sutra, the Cosmic Code) என்ற ஆங்கில நூலைக் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்சொன்னவாறு காத்திருந்து, காத்திருந்து எழுதி வருகிறேன். அதை எழுதி முடிக்கும் பணியை இறைவன் எனக்குத் தந்திருந்தால், என் உடலும், மனமும் தளர்ந்து போவதற்குள், என் உலக வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருவதற்குள், அந்த நூலை எழுதி முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.

    நான் எதற்காக எழுதுகிறேன்? ஒரே பதில். எதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லையோ அதை எழுதுகிறேன். அதை எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை என்பதுதான் நான் அதை எழுத ஒரே காரணம்; நானறிந்த ஒரே காரணம்.

    ‘ப்ரும்ம சூத்ரம்’ என்ற மிகப் பழைய சமஸ்க்ருத நூலுக்கு ஆங்கிலத்தில் ஒரு விளக்கவுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கேன் ஏற்பட்டது? தெரியாது என்பதுதான் சரியான விடை.

    நூல்கள் எழுதி அதன் மூலம் பேரும், புகழும் பெற்று வாழ வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. என்னுடைய எந்த நூலையும் ஓரிருவருக்கு மேல் எவரும் முழுமையாகப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. இருந்தும், நான் தொடர்ந்து எழுதுகிறேன். என் ஆயுட்காலத்துக்குள் இந்த நூல்களை நிறைய பேர் படிக்க வேண்டும் என்ற ஆசையோ, அவசரமோ எனக்கில்லை. இந்த நூல்களை ஈன்றெடுத்த காலமே அவை எங்கே, எப்போது போயடைய வெண்டும் என்பதை நிர்ணயம் செய்யும்.

    ஆங்கிலத்தில் நான் எழுதிய ஒரு சட்ட நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசும் போது என் இனிய நண்பர், திரு.ப.சிதம்பரம் ஒரு கேள்வி கேட்டார். அவர் ஆங்கிலத்தில் கேட்ட அந்தக் கேள்வியை அப்படியே ஆங்கிலத்தில் இங்கே தருகிறேன்: Ravi, how do you find time to write such books ? என் ஏற்புரையில், ஆங்கிலத்தில் நான் சொன்ன பதில்:

    I do not find time, but, Time finds me.

    தமிழில், கிட்டத்தட்ட, இப்படிச் சொல்லிப் பார்க்கலாமோ?

    காலத்தை நான் தேடிப் போவதில்லை. காலமே என்னைத் தேடி வந்து பற்றிக் கொள்கிறது.

    எத்தனையோ அடியார்கள் இறைவனைத் தேடி அலைபாய்ந்திருக்கும் வரலாறுகளுக்கு இடையில் ஃபிரான்ஸிஸ் தாம்ஸன் என்ற ஆங்கிலக் கவிஞன் மட்டும் வேறுவிதமாகச் சொல்கிறான். அவனைத் தேடிவந்து துரத்துகிறதாம், சொர்க்கத்தின் வேட்டை நாய். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் அலைபாய்கிறான். எங்கெங்கோ ஓடுகிறான். நட்சத்திர மண்டலங்களுக்கெல்லாம் சென்று புகலிடம் கேட்கிறான். எல்லாமே அவனை ஒளித்து வைத்துக் கொள்ள முன்வராத நிலையில், “ஐயோ, நான் தோற்றேன்” என்று அவன் வீழ்கிறான்! அவனைத் துரத்தி வந்த சொர்க்கத்தின் வேட்டை நாயான இறைவனே தன் உண்மையான புகலிடம் என்பதைக் கடைசியில் உணர்கிறான். “The Hound of Heaven” என்ற அந்த அருமையான ஆங்கிலக் கவிதை என்னை மிகவும் தாக்கிய படைப்புகளில் ஒன்று. அதன் தொடக்க வரிகளே அந்தக் கவிதையின் விறுவிறுப்புக்கும், ப்ரும்மாண்டமான அரங்க அமைப்புக்கும் கட்டியம் கூறுகின்றன:

    I fled Him, down the nights and down the days;

    I fled Him, down the arches of the years;

    I fled Him, down the labyrinthine ways

    Of my own mind; and in the midst of tears

    I hid from Him, and under running laughter.

    Up vistaed hopes I sped;

    And shot, precipitated,

    Adown Titanic glooms of chasmed fears,

    From those strong Feet that followed, followed after.

    But with unhurrying chase,

    And unperturbèd pace,

    Deliberate speed, majestic instancy,

    They beat—and a Voice beat

    More instant than the Feet—

    ‘All things betray thee, who betrayest Me’

    இரவு பகலாக அவனிடமிருந்து தப்பிக்க நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். காலச் சந்திகளின் ஊடே, என் மனத்தின் நெறியற்ற குறுக்குப் பாதைகளின் ஊடே …. கண்ணீர்த் துளிகளுக்கிடையில் ஒளிந்து கொண்டேன்; ஏதோ ஒரு நம்பிக்கைத் தோற்றம் காட்டிச் சலசலக்கும் சிரிப்பலைகளினூடே விரைந்தேன். எதிர்பாராமல், திடீரென்று அச்சம் என்ற அதல பாதாளத்தில் வீழ்ந்தேன். ஆனால், நிதானமான விரட்டலில், நிலைகுலையாத கதியில், கணிக்கப்பட்ட விரைவோடு, கம்பீரமான அவசரத்தோடு என்னைத் துரத்தித் துரத்தி வரும் அந்த வலிமையான பாதங்கள்; அவற்றைக் காட்டிலும் ஓர் அவசர அருகாமையில் ஒலிக்கிறது ஒரு குரல்: ‘என்னை விட்டு ஓடும் உன்னை எல்லாமே கைவிட்டு விடும்.’

    அடாடா! மலைக்க வைக்கும் சொல்லோவியம்!

    அந்தக் கவிஞனைத் துரத்திய சொர்கத்தின் வேட்டை நாய் போல், காலம் என்னைத் துரத்தித் துரத்திப் பிடித்து எழுத வைக்கிறது என்று நான் சொன்னால் அது கொஞ்சம் அதிகப்பிரசங்கமாகத் தோன்றலாம்; ஆனால், வேறு விதமாக அதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

    எழுத்தாளன் தான் வாழும் காலத்திலேயே புகழ் பெற வேண்டும் என்று விரும்புவதில் தவறெதுவும் இல்லை. ஆனால், புகழ் என்று நான் கருதுவதே வேறு.

    பிரபலமாக இருப்பது வேறு. புகழ் என்பது வேறு.

    இருவே(று) உலகத்(து) இயற்கை திருவேறு

    தெள்ளியர் ஆதலும் வேறு

    ஒருவருடைய பிராபல்யம் அவர் முகம் ஊடகங்களில், திரையில் தினம் வந்து கொண்டிருக்கும் வரைதான். 1940-களில், எம்.கே.தியாகராஜ பாகவதர் புகைவண்டியில் பயணம் செய்தால், ஒவ்வொரு நிறுத்தத்திலும் பாகவதரைப் பார்க்க நூற்றுக் கணக்கான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு அலைமோதுவார்கள்; அந்தப் புகைவண்டி, ஏழெட்டு மணிநேரம் தாமதமாகத்தான் இலக்கைச் சென்றடையும்; ஆனால், அவரே திரையில் தோன்றாமல் ஏழெட்டு ஆண்டுகள் சிறை சென்று வந்த பிறகு, அவர் ரிக்க்ஷாவில் சென்றால் கூடப் பார்க்க ஆளற்ற நிலையும் உருவானது. திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தே நாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்ட நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரை இப்பொழுது ஏழெட்டு வயதான தமிழ்ச் சிறுவர்களுக்குத் தெரியவில்லை.

    ஒரு வேடிக்கையான சம்பவத்தை இங்கே குறிப்பிட வேண்டும். 1972-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது. அப்போது, நான் ‘மாணவரிஸம்’ என்ற பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். அந்தப் பத்திரிகைக்குப் பல ஊர்களில் மாணவப் பிரதிநிதிகள் இருந்தார்கள். ‘இதெல்லாம் ஒண்ணும் கொறச்சலில்லை’ என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறதே! சரி, சம்பவத்துக்கு வருகிறேன். டில்லி நகரத்துக்கான பிரதிநிதியாக இருந்த ராஜா என்ற நண்பர் அப்போது சென்னைக்கு வந்திருந்தார். அவர் சென்னையில் இருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் தொலைபேசியில் சொன்ன போது, நான் ஏ.வி.எம். படப்பிடிப்பு நிலையத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். மாணவரிஸத்துக்குப் பேட்டி எடுக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, இயக்குநர் ஶ்ரீதர் என்னை அங்கே அழைத்திருந்தார். அப்போது அவர் “ஹீரோ 72” என்ற படம் எடுத்துக் கொண்டிருந்தார். அது சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘வைர நெஞ்சம்’ என்ற தலைப்போடு வெளியாகியது.

    ஶ்ரீதர் சொன்னபடியே நான் அந்தப் படப்பிடிப்பு நிலையத்துக்குச் செல்லத் தயாரான போதுதான் ராஜாவின் அழைப்பு வந்தது. ராஜாவையும் அங்கேயே வரச் சொன்னேன். நான் போய்ச் சேரவும் அங்கே ராஜா எனக்காகக் காத்திருந்தான். அவனுக்குத் தமிழ் கொஞ்சம் தடுமாற்றம்தான். ஆங்கிலம், ஹிந்தி பேசுவான். டில்லியிலேயே பிறந்து, வளர்ந்தவன். அவனும், நானும் ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததும் அங்கே ஒரு தளத்தின் வெளி வாயிலில் இருவர் அமர்ந்திருந்தனர். ஒருவர் இயக்குநர் ஶ்ரீதர். அவர் அருகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு பிரபலமான பிரமுகர் அமர்ந்திருந்தார். என்னைச் சுட்டிக் காட்டி, “தயாரிப்பாளர் கல்யாணராமனின் புதல்வர்” என்று என்னை அந்த பிரபலமானவருக்கு ஶ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார். ‑அவரும், வணக்கம் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “வாத்யார் செளக்கியமா?” என்று என் தந்தை விஸ்வம் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு பதில் சொல்லிவிட்டு, அருகில் இருந்த ராஜாவிடம் ஶ்ரீதரைக் காட்டி, “இவர்தான் இயக்குநர் ஶ்ரீதர்” என்றேன். அவன் உடனே அருகில் முழு மேக் அப்பில் அமர்ந்திருந்த பிரபலமானவரைச் சுட்டிக்காட்டி அவர் யார் என்று கேட்டு விட்டான். எனக்கு பகீர் என்றது. இயக்குநர் ஶ்ரீதரோ எழுந்து நின்று கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். தன்னைத் தெரியாத ஒரு தமிழன் இருப்பது அந்தப் பிரபலமானவருக்கே, அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே வியப்பாக இருந்தது. நான் ராஜாவிடம் மெதுவாக “டேய், இவர்தாண்டா சிவாஜி” என்றதும், அவன் இன்னும் சத்தமாக “ஓ, நான் இவர் நடித்து ஒரு படம் ரொம்ப நாட்களுக்கு முன் பார்த்திருக்கிறேனே, பாசமலர் என்று நினைக்கிறேன்” என்றதும் இயக்குநர் ஶ்ரீதர் இன்னும் அடக்க முடியாமல் சிரித்ததை நினைத்துக் கொள்கிறேன். பிரபலத்தின் பலம் அவ்வளவுதான்!

    அதே சமயத்தில், நாம் இன்னொன்றைக் கருதிப் பார்க்க வேண்டும். எந்தப் புலவனின் நூலைத் தமிழ்ச்சங்கம் அங்கீகரிக்கத் தயங்கியதோ, அந்தப் புலவனின் நூலை உலகப் பொதுமறை என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடி வருகிறோம்; எந்தக் கவிஞனின் இறுதி யாத்திரையில் இருபதுக்கும் குறைவானவர்களே கூடச் சென்றனர் என்று நாம் இன்னும் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ, அந்தக் கவிஞனின் கவிதைகளைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் லட்சக் கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் பயில்வதுடன், அவனுடைய வரிகளைச் சொல்லாமல் எந்த மேடைப் பேச்சும் நிறைவு பெறுவதில்லை என்ற நிலையும் உருவாகி விட்டது. பூமியைச் சுற்றிக் கதிரவன் வருவதாகச் சொல்லப்பட்ட புவிமையக் கருத்தோட்டத்தை மறுத்துக் கதிர்மையப் படிவத்தை முன்மொழிந்ததற்காக யார் சித்திரவதை செய்யப் பட்டானோ, அவனைத்தான் தற்கால அறிவியலின் தந்தை என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகம் கொண்டாடுகிறது.

    பிரபலமாக இருப்பது கொஞ்ச காலத்துக்குத்தான். புகழோ காலம் கடந்தது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் இசை வாழ்ந்து கொண்டிருக்கும்; விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கும். ரவிவர்மன், சில்பி போன்ற மேதைகளின் ஓவியங்களும், கோபுலுவின் கோட்டோவியங்களூம் எத்தனை ஆண்டுகளானாலும் ரசிக்கப் படும். கல்கி, நா.பா., இந்திரா பார்த்தசாரதி போன்ற வல்லுநர்களின் எழுத்தோவியங்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். இசைக்கவி ரமணன், வ.வே.சு., சு.ரவி ஆகியோர் கவிதைகள் போல் என் கவிதைகளும் காலம் கடந்து நிற்கும். ஒரு நம்பிக்கைதான்!

    என் மூலமாக என்னென்ன படைப்புகள் உருவாக வேண்டும் என்பது இறைவன் திட்டமோ அவை உருவாகியே தீரும். காத்திருப்பது மட்டுமே என் பணி. கொக்குத் தவத்தில் காத்திருக்கிறேன். தக்க நேரத்தில் அதன் குத்தொக்கச் செயல்படுவேன்.

    போதும் நிறுத்துவே. கொஞ்சம் வுட்டா ஒரேடியா அளந்து கொட்டிடுவீகளே! சிகாமணி அதட்டுகிறான். மனோன்மணி புன்முறுவல் பூக்கிறாள்.

    ஏன், நான் காத்திருப்பதில் என்ன தவறு? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், மன்னிக்கவும், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், ஏன், பல யுகங்களுக்கு முன் நிகழ்ந்து முடிந்த பிறகும், கோடானு கோடி ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஆகாச கூடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அனுபவக் களங்கள் தம்முள் பிரவேசிக்க மீண்டும் ஒரு கவிஞன் வரும்வரைக் காத்திருக்க முடியும் என்றால், நான் காத்திருக்கக் கூடாதா? மனோன்மணி முணுமுணுக்கிறாள், 36 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு பாடலை:

    வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

    வாழ்க்கை என்றேன் அதில் மூழ்கி விட்டேன்

    அந்த

    உலகத்திலே நான் எனக்கொரு வடிவம்

    செய்ய நினைத்தேன் செயலிழந்தேன்

    நிலவொளி கொண்டு கதிரவனைத்

    தேடுகின்றேன் எங்கும் ஓடுகின்றேன்

    வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

    நினைவுத் திரையில் நிழல் தெரிந்ததும்

    நீரில் வண்ணங்களைக் குழைத்தேன்

    தூரிகையால் அதைத் தீண்டிய போது

    திரையே நிழலென்று தெரிந்து கொண்டேன்

    வானவில் போல நானிங்கே

    வளைகின்றேன் பின்பு கலைகின்றேன்

    வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

    கனவுக் கடலின் நடுவினிலே நான்

    காகிதப் படகாய் மிதந்திருந்தேன் – என்

    கலங்கரை விளக்கங்கள் மூழ்கியதாலே

    காற்றின் கருணையைப் பார்த்திருந்தேன்

    கரைவரும் என்று காத்திருந்தேன்

    காத்திருந்தே மெல்லக் கரைகின்றேன்

    வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

    வாழ்க்கை என்றேன் அதில் மூழ்கி விட்டேன்

    கூட்டிக் கழித்துப் பார்த்தால் வார்த்தைகள், வெறும் வார்த்தைகள்! இதைத்தானே சொன்னான் விட்ஜென்ஸ்டைன்! ஆனால் சொல் என்பது என்ன, அவ்வளவு எளிதானதா? ஆதியில் சொல் இருந்தது என்றுதானே விவிலியம் தொடங்குகிறது!

    தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ

    இதுதானே கம்பராமாயண சாரம்!

    சொல் ஒன்று வேண்டும்

    இதுதானே பாரதியின் பிரார்த்தனை!

    சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை

    இதுதானே நம் அருமைக் கவிஞர் கண்ணதாசனின் கணிப்பு.

    ம்! என் சொற்களுக்குள் ஏறிக்கொள்!

    (தொடரும்)

    Share
  • பசி…

    -செண்பக ஜெகதீசன்

    குப்பை பொறுக்கும் சிறுவனுக்குக்          WastepickersDelhi
    காகிதத்தில் தெரிவதில்லை
    கவிதை…

    தெரிந்தது அவனுக்கு,
    காகிதமே கவிதையாக-
    அறிவுப் பசிக்கு அல்ல,
    வயிற்றுப் பசிக்கு…!

     

    Share
  • ஸ்டெல்லா தமிழரசி கவிதைகள்!

    -ர. ஸ்டெல்லா தமிழரசி

    1. என்னுளிருந்து
    உனக்காகத் துடிக்கிறது
    இதயம்…

    2. விசியெறிந்தாய்
    ஓடிவந்து
    ஒட்டிக்கொண்டது
    முத்தம்…

    3. தலை நனைகிறது
    துவட்டிவிடுகிறாள்
    ஆடை நனைவதை
    மறந்த
    அம்மா…

    4. எல்லா ஆசைகளையும்
    உரிமை பாராட்டுகிறது
    குழந்தை! 

     5. உன்
    உருவத்தை வரையும் 
    ஓவியத் தூரிகை
    எனது இமைகள்…

    நினைத்தவுடன்
    ஓவியம் திட்டி
    விடுகிறது
    விழிகளுக்குள்…

     6. அனாதை
    இல்லத்தையும்
    முதியோர் 
    விடுதியையும் 
    தேடி அலைகிறது!

    மரங்களைச்
    சாய்த்தபின் 
    உறவுகளைத் தேடும் 
    பறவைகள்…

    7. நிலவின்
    சின்னச் சின்ன
    ஆசைச் சிதறல்
    நட்சத்திரம்…

    8. தற்கொலை செய்துகொண்ட
    நிலா…
    தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய
    குளம் குட்டை

    விடியும் வரை 
    உயிர்பெற்ற அதிசயம்
    யாருக்கும் தெரிவதில்லை…

    9. சண்டையில்
    சமரசம் செய்கிறது
    புறாக்களுக்குப்
    பதிலாய்
    குறுஞ்செய்தி…

     10. தூக்கி எறிந்த போதும்
    கோபப் படாமல்
    திரும்ப வந்தது 
    சுவறில் அடித்த 
    பந்து…

    11. மழையும்
    வெயிலும் 
    ஒரே நேரத்தில் 
    சந்திக்கிறது

    அன்று
    நீயும் நானும் 
    சந்தித்தது போல…

     12. நம்
    இருவரின் 
    காதலையும் 
    உளவு பார்க்கப்
    போகிறது 
    செவ்வாய் கிரகத்தில்
    மங்கள்யான்!

    13. நின்ற இடத்திலேயே
    மீண்டும் 
    நிற்கிறது
    விட்டுச் சென்ற
    பறவைகள் 
    திருப்பி வருமென்ற
    நம்பிக்கையில் 
    சில மரம்!

    14. நீ
    ஊருக்குப் போகிறாய்
    காற்றடைத்த தலையணையில்
    உயிரடைத்து
    அனுப்பி 
    வைக்கிறேன்!

    15. வெட்கம்
    கொண்டது
    மரம்,
    காற்றின்
    கிசு கிசுவால்!

    16. தட்டிக் கொடுக்க
    யாருமில்லாப்
    போதும்
    தழுவிக் கொடுக்கிறது
    காற்று…

    17. வாசல் வரை
    வந்து விட்டுப்
    போகிறாய்…
    சுவாசக் குழாயில்
    புகுந்த காற்று
    நுரையீரல் 
    தீண்டாமல்
    வெளியேறுகிறதைப் போல!

    18. நீ
    மல்லிகை வாங்கித்
    தரும் போதெல்லாம்
    ரோஜா ரத்தக் கண்ணீர் 
    வடித்தே 
    சிவப்பாகிறது…

     

    Share
  • இடைவெளி தேவையா?

    எம்.ஜெயராமசர்மா

    பாட்டிகளும் தாத்தாக்களும் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று எண்ணிவிடுதல் ஏற்றதல்ல. பகுத்து அறிந்து இருந்தபடியால் தான் அவர்கள் புத்தி சொல்ல வருகிறார்கள். இளமையில் உள்ளோர் அதனை ஏற்றுவிட மறுக்கிறார்கள். காரணம் பகுத்து அறிவதற்கு அவர்கள் விரும்புவதில்லை. அதனை அவசியமானது என்றும் எண்ணுவதும் இல்லை. இளமையின் வேகம் எதையும் ஏற்க விரும்புவதில்லை. இந்த நிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனைப் பற்றி கட்டாயம் சிந்தித்துப் பார்க்கவே வேண்டும்.

    இளமையும் — முதுமையும் மோதக்கூடாது. இளமையென்பதும் தேவை. அதே வேளை முதுமையும் தேவையானதே. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே இவை இரண்டும் இணைந்து இருப்பதைக் காணமுடியும். அனுபவமும் வேகமும் தான் அவைகள்.

    எங்களது சைவசமய வரலாற்றை எடுத்துக்கொண்டால் இது நன்கு புலப்படும். சம்பந்தர் இளமையில் இருக்கிறார். அப்பர் பெருமானோ முதுமையில் இருக்கிறார். இவர்கள் இருவரும் எந்தப் பிணக்குமின்றி இணைந்த காரணத்தால்தான் சைவம் என்பது பேரெழுச்சி பெற்றது எனலாம். சம்பந்தர் இறைவனது அருளை இளம் வயதிலேயே பெற்றுக் கொண்டவர். உயர் வகுப்பைச் சேர்ந்தவர். அப்பரோ சமயம் விட்டுச் சமயம் வந்தவர். ஆனால் சம்பந்தரின் பல்லாக்கை சுமந்துவந்த வேளை சம்பந்தர் அதனை அறிந்து ” அப்பரே ” என அழைத்து உயர்ந்த கெளரவத்தை வழங்கினார் என்று வரலாற்றின் வாயிலாக அறிகின்றோம்.

    அப்பரோடு சம்பந்தர் இணையாவிட்டால் இன்று சைவசமயமே கேள்விக் குறியாகத் தானிருந்திருக்கும். ஆனால் இங்கே இளமையான சம்பந்தர் அப்பரை மதிக்கின்றார். அதேவேளை அனுபவத்தில் முதிர்ந்த அப்பரோ சம்பந்தர் சொல்லைப் பெரிதும் போற்றுகின்றார். இருவரும் இணைய அவர்களுடன் மக்களும் இணைய சைவ பக்தி இயக்கம் வீறுகொண்டு எழுந்து வருகிறது.

    இது சமய எழுச்சி. இதே மாதிரி சமூக எழுச்சியிலும் இளமையும் முதுமையும் இணைந்து நின்றதையும் நாம் மறந்து விடக்கூடாது. இந்திய சுதந்திரப் போரில் மகாத்மா முதுமையானவர். அவருடன் நேரு என்னும் இளமை கைகோர்க்கிறது. அங்கே சுதந்திரப் போராட்டம் முன்னேறுகின்றது. காந்தி என்னும் முதுமையுள் பல லட்சக்கணக்கான இளமைகள் இணைகின்றன. சில வேளைகளில் முரண்பாடுகள் தென்பட்டாலும் காந்தி என்னும் முதுமை தனது பொறுமை என்னும் குணத்தைக் கடைப்பிடித்து முரண்பட்ட இளமைகளையும் தன்னோடு இழுத்தணைத்து நின்றுவிடுகின்ற பக்குவத்தைக் காண்கிறோமல்லவா? காந்தியுடன் பல முதுமைகளும், இளமைகளும் இணைந்த காரணத்தால் அன்னிய ஆதிக்கம் அகன்றுவிடுவதைக் கண்டோமல்லவா?

    ஸ்ரீ ராமகிருஷ்ணர் முதுமை. நரேந்திரன் என்னும் இளமை அங்கே இணையும் வேளை அற்புதமான சிருஷ்டி ஏற்படுகிறதல்லவா? நரேந்திரன் என்னும் இளமை ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் புறந்தள்ளி விடவில்லை. உதாசீனப் படுத்தவில்லை. மூலையில் படுக்க வைக்க எண்ணவில்லை. விவேகத்துடன் செயலாற்றி விவேகானந்தராக வீறுகொண்டு எழுந்து நிற்பதைக் காண்கிறோம் அல்லவா?

    ஞானானந்தர் என்னும் மகானால் உருவாக்கப் பட்ட ஆன்மீக அமைப்புத்தான் ஞானானந்த சமாஜம். ஞானானந்தர் என்னும் முதுமையுடன் ஆங்கிலம் படித்த விஞ்ஞானச் சிந்தனைமிக்க ஹரிதாஸ் என்னும் இளமை இணைகின்றது. குரு முதுமையானவர் என் அந்த இளமை நினைக்கவில்லை. குருவின் பாதத்தைப் பற்றிக்கோண்டு சுவாமி ஹரிதாஸ் என்னும் பெயருடன் நாம சங்கீர்த்தத்தால் உலகம் முழுவதும் சென்று ஆன்மீகம் தழைக்கச் செய்ததை நாடே அறியும்.

    Share
  • சின்னக் கண்ணன் அழைக்கிறான் …

    கவிஞர் காவிரிமைந்தன்

    கவிக்குயில் திரைப்படத்தில் .. சிவகுமார்.. ஸ்ரீதேவி நடிப்பில்.. இளையராஜா நடத்தியிருக்கும் இசை மழை..  பஞ்சு அருணாசலம்.

    பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பத்மஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடலை ஒரு முறையும் எஸ். ஜானகி குரலில் மற்றொரு முறையும் ஒலிக்கும் இப்பாடல் கேட்டு உருகாதார் எவரிங்கே? 72 மேளகர்த்தா ராகங்களில் நெஞ்சினில் உள்ளாடும் ராகம் இதுவோ?

    கதையின்படி.. நாயகியின் மனதில் உள்ள ராகத்தை நாயகன் கண்டுபிடிக்க வேண்டும். முதல் முறை சரியாக நாயகன் கண்டுபிடிக்கவில்லை. மறுமுறை.. நாயகின் முனகல் அவன் காதுகளுக்கு எட்டிவிட ஏகாந்தமாய் தொடங்குகிறான்… அவள் மனதில் குடி கொண்டிருந்த ரீதிகௌளை ராகத்தை..

    சுகமான ஸ்வரங்களின் லய நயங்கள்.. கூடிவர உணர்ச்சியின் மைய மண்டபம் உஷ்ணமாகிறது.
    அழகு மயில் ஸ்ரீதேவி .. ராதை வேடம் அணிந்து ஆடி வர…கண்ணன் வேடத்தில் சிவகுமார் புல்லாங்குழல் முழங்க..
    பாடலில் அங்கிருக்கும் ஜீவராசிகளும் மயங்கிக் கிடக்க .. காற்றினில் அந்த கானம் வருகிறது.. கண்ணன் பாடும் பாடல் என்பதால் காதல் வண்ணம் படுவதில் ஒன்றும் வியப்பில்லை!

    சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

    சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
    ராதையை, பூங் கோதையை,
    அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

    கண்கள் சொல்கின்ற கவிதை
    இளம் வயதில் எத்தனை கோடி?
    என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
    புதுமை மலரும் இனிமை!
    அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
    (சின்னக் கண்ணன்)

    நெஞ்சில் உள்ளாடும் ராகம்
    இது தானா கண்மணி ராதா?
    உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
    அழகே இளமை ரதமே!
    அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
    (சின்னக் கண்ணன்

    Share
  • நகைச்சுவை நாயகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    அன்பினிய சகோதரர் திரு கிரேசி மோகன் அவர்களுக்கு,
    மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வாழ்க! பல்லாண்டு பல்லாண்டு!! சீரும் சிறப்புமாக!!
    ஆசுகவி ஓவியர் திரு கேசவ் அவர்களின் கைவண்ணத்தில்​பிறந்தநாள் குழந்தையின் வண்ணக்காவியம்! வாழ்த்துகள் ஒவியர் பெருமானாரே!

    crazy

    சிரிப்பூட்டி, பாட்டுச் சிலிர்ப்பூட்டி, பக்தி
    விருப்பூட்டி, வாழ்வில் உயிர்ப்பூட்டி, நெஞ்சகப்
    பூட்டைத் திறக்கும் புதுக்கிரேசி மோகனின்
    பேட்டையில் என்றும் லூட்டியே.என்றும் அன்புடன்
    அண்ணாகண்ணன்

     

     

    பொன்நகை ஆயிரம் தந்தாலும் வேண்டேன்crazy1
    புன்னகை வேண்டியே தவமிருப்பேன்
    போற்றிப்பாட வார்த்தைகள் தேடினேன்
    வசப்படவில்லையேதும் திருமால் திருப்புகழும்
    வெண்பாக்களும் அள்ளிச்சென்றன அனைத்தையும்
    வரைய முனைந்தேன் உன் வரைவிலக்கணத்தை
    கபடமற்ற நகையாய் கலகலவென கொட்டித்தீர்ந்தது
    கிரேசியாய் இல்லாமல் கிலுகிலுப்பையாய் (சாக்லேட்)
    கிருஷ்ணாவுக்கே கிச்சுகிச்சு மூட்டும் மோகனமாய்
    பாசத்தைப் பனித்துளிக்குள் மறைத்து வைத்தாலும்
    பதறாமல் அதை பதவிசாய்ப் படைக்கும் ஆற்றலும்
    கள்ளமில்லாச் சிரிப்பும் கலகலப்பான பேச்சும்
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையும்
    உனக்கு மட்டுமே சாத்தியம் நீவிர் வாழிய வாழியவே!

    அன்புடன்
    பவளா திருநாவுக்கரசு​

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    பாண்டு மகன்போல, பின்வாங்கும் அஸ்வத்தை,
    தூண்டிட தாடை தடவிவிட்டு, -ஆண்டவன்
    HORSEக்(கு) உரைப்பு ,ஹயக்ரீவ கீதையை,
    WAR-SICKNESS போக்கிட வே ….கிரேசி மோகன்….

    Share
  • அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -2

    cover-image-testing

    (கட்டுரை: 2)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பேரழிவுப் போராயுதம்
    உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து
    விழுதுகள் அற்றுப் போக,
    விதைகளும் பழுதாக
    ஹிரோஷிமா நகரைத் தாக்கி
    நரக மாக்கி
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு !
    நாகசாகியும்
    நாச மாக்கப் பட்டது !
    இப்போது தோன்றின
    புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
    கதிரியக்கம் பொழியும்
    புழுதிக் குண்டுகள் !
    புத்தர் பிறந்த நாட்டிலே
    புனிதர் காந்தி வீட்டிலே
    மனித நேயம்
    வரண்டு போன
    வல்லரசுகள் பின் சென்று
    பாரத அன்னைக்குப்
    பேரழிவுப்
    போரா யுதத்தை
    ஆரமாய்
    அணிவிக்க லாமா ?

    உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

    கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

    “ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

    பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)


    நியூட்ரான் கணைகள் தாக்கும் புதுயுக அணுக்குண்டுகள்

    நியூட்ரான் குண்டு (Neutron Bomb) என்பது “மிகைப்பட்டக் கதிர்வீச்சுக் குண்டு” (Enhanced Radiation Weapon -ERW) என்று அழைக்கப்படுவது.  இந்த அணுவியல் குண்டு பெரும்பான்மையான எரிசக்தியை வெடிப்புச் சக்தியாக வெளிப்படுத்தாமல் சக்தி ஊட்டப் பட்ட நியூட்ரான் கணைகளாக ஏவுகிறது.  இம்முறையில் நியூட்ரான் குண்டு சாதாரண அணுகுண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு வல்லமையே கொண்டுள்ளது.  வெடிப்பும், வெப்ப சக்தியும் முழுமையாகத் தவிர்க்கப் படாமல் மிகையான நியூட்ரான்களின் தீவிரம் உயிரினத் தாக்குதலாய் விளைந்து வீடுகள், மாட மாளிகைகள், பாலங்கள், வாகனங்கள், கட்டடங்கள் எதுவும் தகர்க்கப்படா.  மேலும் நகரின் தொழில்வளத் துறைகள் (Infrastructure) எவையும் அழிக்கப்படா !

    1958 இல் முதன்முதலாக அமெரிக்காதான் நியூட்ரான் குண்டுகளைத் தயாரித்தது !  நியூட்ரான் குண்டுகளின் பிதாவாகக் கருதப்படுபவர் :  லாரென்ஸ் லிவர்மோர் தேசீயச் சோதனைக் கூடத்தின் சாமுவேல் கோஹென் (Samuel Cohen – Lawrence Livermore National Laboratory) என்பவர்.  முதல் சோதனை நெவேடா பாலைவன அடித்தளத்தில் 1963 இல் நடத்தப்பட்டது.  1978 இல் ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால் மேற்கொண்டு நியூட்ரான் குண்டுகள் விருத்தியும் பெருக்கமும் நிறுத்தமாகி, பிறகு ஜனாதிபதி ரோனால்டு ரேகன் காலத்தில் மீண்டும் 1981 இல் தொடரப் பட்டன.

    மூன்று விதமான ERW நியூட்ரான் குண்டுகளை அமெரிக்கா விருத்தி செய்தது.  அவை W66, W70 & W79 (Nuclear Warheads) என்னும் இராணுவக் குறி ஆயுதங்களாக அழைக்கப்பட்டன.  W66 ஆயுதங்கள் 1970 ஆண்டுகளின் மத்தியில் தயாரிக்கப்பட்டுப் பின்னர் ஓய்வாகி விட்டன.  W70 ஆயுதங்கள் சிறு தூரக் கட்டளை ஏவுகணைகளிலும் (Short-Range Missile System) W79 பீரங்கிக் குண்டுகளாகவும் (Artillary Shells) உபயோகமாயின.  அவை இரண்டும் ஜனாதிபதி மூத்த ஜார்ஜ் புஷ் காலத்தில் ரஷ்ய அமெரிக்க “ஊமைப் போர்” (Cold War) முடிவில் (1992) ஓய்வாகின.   இறுதி W70 ஆயுதம் 1996 ஆண்டிலும் & W79 ஆயுதம் 2003 ஆண்டிலும் முழுமையாக நீக்கம் அடைந்தன.

    1980 இல் பிரான்ஸ் தனது முதல் நியூட்ரான் குண்டை பசிபிக் கடலில் உள்ள முரோரா அடோல் (Mururoa Atoll) தீவில் சோதித்தது !  1980 ஆண்டுகளில் பிரான்ஸ் மேலும் சில நியூட்ரான் குண்டுகளை ஆக்கியதாக அறியப்படுகிறது.  அதற்குப் பிறகு அவற்றை எல்லாம் பிரான்ஸ் முடக்கி முறித்ததாக கூறப்பட்டுள்ளது.  1999 இல் சைனா நியூட்ரான் குண்டுகள் ஆக்கும் திறனைப் பெற்றதாகத் தெரிகிறது.  1997 ஆம் ஆண்டில் நடந்த நேர்முக உரையாடலில் சாமுவேல் கோஹென் “ரஷ்யா, சைனா & இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏராளமாக நியூட்ரான் குண்டுகள் அடுக்கை (Stockpile of Neutron Bombs) வைத்திருக்க வாய்ப்புள்ளன,” என்று கூறியிருக்கிறார்.

    நியூட்ரான் குண்டு ஒருவித பிளவு-பிணைவுக் குண்டுதான் (Fission-Fusion Bomb).  அது ஒரு வெப்ப அணுக்கரு யுத்த ஆயுதமே (Thermonuclear Weapon) !  அதில் வெடித்து மிகையாகி மீறிப் பெருகும் நியூட்ரான்கள் வெளியேறித் தாக்கும்படி ஏவப்படுகின்றன.  நியூட்ரான் குண்டுக்கு ஏராளமான கொள்ளளவு (Volume) டிரிடியம் (ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலம்) (Tritium – An Isotope of Hydrogen Gas) தேவை.  டிரிடியத்தின் “அரை ஆயுள்” சுமார் 12 ஆண்டுகள் (Half-Life).  அதாவது டிரிடியத்தின் நிறை (Mass) 12 ஆண்டிகளில் பாதியாகத் தேயும்.  அதாவது அடிக்கடி நியூட்ரான் குண்டுகளில் மறையும் டிரிடியம் வாயு நிரப்பப் படவேண்டும்.

    கதிரியக்கப் பொழிவுக் குண்டுகள் (புழுதிக் குண்டுகள்)

    கதிரியக்கப் பொழிவுகளை வீசும் அணுவியல் குண்டுகள் புழுதிக் குண்டுகள் (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) என்று பெயரிடப்பட்டுள்ளன.  இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும்.  புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும்.  இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும்.  தேவையானவை :  சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.

    2002 மே மாத அறிக்கை ஒன்றில் அகில நாட்டு அணுசக்தி ஆணையகம் (International Atomic Energy Agency -IAEA) வெளியிட்ட புகார்த் தகவல் இது :  ஆண்டுக்கு சராசரி 300 முறை கதிரியக்க உலோகங்கள் கணாமல் போன புகார்கள் ஆணையகத்துக்கு அனுப்பப்படுகின்றனவாம்.  மேலும் 1993 முதல் 2002 வரை IAEA பெற்ற புகார்கள் : 10 ஆண்டுகளில் காணாமல் போனக் கதிரியக்க உலோகங்கள் எண்ணிக்கை சுமார் 400 !  அமெரிக்காவில் மட்டும் 1986 முதல் 2002 வரை 15 ஆண்டுகளாக கதிரியக்க உலோகங்கள் காணாமல் போன 1700 நிகழ்ச்சிகள் நேர்ந்துள்ளன !  இவ்விதம் உலகில் பல நாடுகளில் கதிரியக்கக் களவுப் புகார்கள் குவிந்துள்ளன.

    1.  1995 இல் ரஷ்யாவில் செச்சென் தீவிரவாதிகள் களவாடிய 30 பவுண்டு சீஸியம்-137 & டைனமைட் வெடி மருந்து.

    2.  1987 இல் ஈராக் ஒரு டன் புழுதிக் குண்டை வெடித்துச் சோதனை செய்தது.

    3.  1987 இல் பிரேஸில் 20 கிராம் சீஸியம்-137 யைக் களவாடி வெடிப்பு ஆற்றலைக் காட்டியது.  அந்த சோதனையில் நால்வர் மரித்தனர்.  249 நபர் கதிர்த்தீட்டை (Radioactive Contamination) அடைந்தனர்.

    அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம் !

    “உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான் !” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார்.  அவர்தான் அணுகுண்டின் பிதா ! யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ்  இணைத்து, ஆணையிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி! ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்! அணுகுண்டு புதுயுக மரண யந்திரம் ! வெடிக்  கோளம் ! விஷக் கோளம்! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கி மடிவது பாமர மக்கள்! அணுகுண்டு வெடிப்பின் விளைவு, முடிவற்றுத் தொடரும் மரணக் கோலம் !’

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் 1945 ஆகஸ்டு 6, அடுத்து 9 ஆம் தேதிகளில் ஜப்பானில்  உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் முதன் முதல் அமெரிக்கா தீவிரச் சக்தி பெற்ற அணு ஆயுதக் குண்டுகளைப் போட்டு, யுத்த அழிவுச் சரித்திரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கியது! ‘எநோலா  கே’ [Enola Gay] என்னும் B-29 வெடி விமானத்திலிருந்து, காலை 9:14 மணிக்கு ‘லிட்டில் பாய்’ [Little  Boy] என்னும் யுரேனியக் குண்டு [Uranium -235] ஹிரோஷிமாவை நோக்கி விழுந்தது. பத்தரை அடி  நீளமும், இரண்டரை அடி விட்டமுடன், 9700 பவுண்டு எடையுள்ள 15 கிலோ டன் TNT வெடிச்சக்தி கொண்ட அணுக்குண்டு 2000 அடி உயரத்தில் ஹிரோஷிமா நகரின் மையத்திலே வெடித்தது! சில  நிமிடங்கள் கழித்து, பரிதிபோல் ஒரு பேரொளிச் சிவப்புக் கோளம் பொங்கி எழுந்தது! அதைத் தொடர்ந்து  பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளந்து, ஒரு பிரளயமே உண்டானது! பதினொன்று மைல் தூரத்தில்  திரும்பிச் சென்ற எநோலா கே வால் புறத்தை வெடி அதிர்ச்சி அலைகள் தாக்கி விமானத்தை  ஆட்டியதாம்! நூறு மைல் தூரம் சென்ற பின்னும், கோள முகில் விமானியின் கண்களுக்குத்  தெரிந்ததாம்! பிரம்மாண்டமான முகில் காளான் [Mushroom Cloud] தோற்றத்தில் பொங்கிக் குமுறி எழும்  புகை மண்டலம்! நடுவே சிவப்பு நிறக் கோளம்! கோளத்தின் உட்கருவில் பொருட்கள் எரியும் கோரமான  அனல் பிழம்பு! எங்கெங்கு பார்க்கினும், குவியல் குவியலாய்த் தீப்பற்றி அழிக்கும் கோரக் காட்சிகள்!

    ஹிரோஷிமாவில் மட்டும் 160,000 பேர் உயிர் இழந்தனர்! அதில் 60,000 பேர் பயங்கரமாகத் தீப்பற்றி  எரிந்து கரிந்து போயினர். 130,000 பேர் காயமுற்றனர். இதில் 43,500 பேர் படு காயப்பட்டனர். குண்டு  வெடிப்புக்குப் பிறகு ஐந்து வருட மரண எண்ணிக்கை மொத்தம் 200,000 ஆக ஏறியது. மரணக்  கணக்குப்படி, இரண்டு நகரிலும் 20%-30% அனல் வீச்சில் மாண்டனர். 50%-60% மற்ற அபாயத்தால்  செத்தனர். 15%-20% கதிரியக்க நோயால் காலமானார்கள். நான்கு சதுர மைல் பரப்பில் 68% நகரக்  கட்டிடங்கள் மற்றும் 24% பகுதிகள் சில நிமிடங்களில் தூள் தூளாகித் தரை மட்டமாயின!  எண்ணிக்கையில் 70,000 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன! நகர மாளிகை, தீயணைப்பு நிலையம்,  போலீஸ் நிலையம், தபால் நிலையம், ரயில்வே நிலையம், பள்ளிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள்,  தெரு மின்சார வண்டிகள், மின்சக்தி நிலையங்கள் முழுவதும் தரைமட்டமாயின! 13,000 அடித்  தொலைவில் இருந்த தொலை பேசிக் கம்பங்கள் கரிந்து போயின! நகரின் மருத்துவ டாக்டர்கள் 200  பேர் [90%] செத்து மாண்டனர்; அல்லது முடமாகிப் போயினர்! நகரில் இருந்த 1780 நர்ஸ்களில் 1654  பேர் கொல்லப் பட்டார்கள்: அல்லது காய மடைந்தார்கள். இருந்த 45 ஆஸ்பத்திரிகளில் 44  முழுமையாகவோ, அன்றிப் பகுதியாகவோ தகர்க்கப் பட்டன.

    ‘ஃபாட் மான்’ [Fat Man] என்னும் 22 கிலோ டன் TNT அழிவுச் சக்தி கொண்ட புளுட்டோனியக் குண்டு [Plutonium239] நாகசக்கியில் விழுந்து, 1945 ஆண்டு முடிவு எண்ணிக்கைப்படி 70,000 பேர் செத்து  மடிந்தார்கள்! 33% நகரப் பகுதி தரை மட்டமானது!  வெடி அதிர்விலும், வெடிப்பு அலையிலும், வெப்பக் கனலிலும் அழிந்தவர் போக, மற்றும் ஊடுருவிப் பாய்ந்த அணுக் கதிரியக்கம் தாக்கிப் பல்லாயிரம் பேர் பட்ட தொடர் வேதனைதான் எல்லாவற்றிலும்  மிக முக்கியமானது! மூர்க்கமானது! முடிவில்லாதது! ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் வெடியும், வெப்பக் கனலும் தாக்காமல் கடவுள் புண்ணியத்தில் தப்பியவர்கள், கடைசியில் கதிரியக்கம்  தாக்கப்பட்டு, ‘கதிர் எமன்’ கையில் மெதுவாகச் செத்து மடிந்தார்கள்!

    ஜப்பானுக்குச் சென்று ‘அமெரிக்க வெடிவீச்சுத் திட்டப் பதிவுக்குழு’ [The United States Strategic Bombing Survey Team] 1946 ஜூன் 30 இல் வெளியிட்ட, ‘ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் விளைவுகள்’ [The Effects of Atomic Bombs on Hiroshima & Nagasaki] என்னும் தகவல் கூறுகிறது:  முக்கியமான விளைவு ஒரே சமயத்தில் நிகழும் மித மிஞ்சிய மரண எண்ணிக்கை! அடுத்து மூன்று வித உருவில் அணு ஆயுதம் பேரழிவுச் சக்தியாய் கோரக் கொலை புரிகிறது! முதலில் அளவற்ற வெப்பம்! இரண்டாவது பயங்கர வெடிப்பு அல்லது வாயு அழுத்தம்! மூன்றாவது தீவிரக் கதிரியக்கம்! பாதிக்கப் பட்டவர்களில் (20-30)% தீக்காய மரணங்கள்! அதிர்ச்சி, வெடிப்பு, வேறு விதங்களில் (50-60)% மரணங்கள்! மற்றும் (15-20)% கதிரியக்கக் காய்ச்சலில் பாதிப்பு [Radiation Sickness]! மூன்றிலும் மிக மிகக் கொடியது, கதிரியக்கத் தாக்குதல்! கதிரியக்கம் நொடிப் பொழுதில் சித்திரவதை செய்து மக்களைக் கொல்வதோடு, தொடர்ந்து உயிர் பிழைத்தோரையும், அவரது சந்ததிகளையும் வாழையடி வாழையாகப் பல்லாண்டுகள் [Acute (Lethal) & Long Term Effects] பாதித்துக் கொண்டே இருக்கும்! பிறக்கும் குழந்தைகள் கண்கள் குருடாகி, கால்கள் முடமாகி, கைகள் சிறிதாகி அங்க ஈனமாய் பிறக்கும்! மேலும் பலவிதப் புற்று நோய்கள் தாக்கி மக்கள் மரண எண்ணிக்கை அதிகமாகும்!

    மாபெரும் நகரம், நிமிடத்தில் மானிட நரகம் ஆனது !

    குண்டு வெடித்தபின் உஷ்ணம் 1 மில்லியன் ஏறும் என்றும், ஒளித் தீக்கோளம் 800 அடி விட்டம்  விரியும் என்றும், ‘முகில் காளான்’ [Mushroom Cloud] 9 மைல் மேலே உயரும் என்றும், பின்பு  உஷ்ணம் 15,000 F ஆகக் குறையும் என்றும், அணுகுண்டு விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.  வெடிமையத்தைச் [Hypocenter] சுற்றி 2 மைல் ஆரச் சுற்றளவில் உஷ்ணம் 5400 F ஆகித் தீயில்  எரிந்து கூடான மனிதரும், தீப்புண்களில் கரிந்து போனவர்களும் பலர்! வெடி அலைகள் வினாடிக்கு 2 மைல் வேகத்தில் அடித்து மனிதர்களைக் குப்புறத் தள்ளியது! மானிடரின் முகம் தீய்ந்து கருத்து, தலை மயிர் யாவும் எரிந்து பலர் புத்த பிச்சுக்கள் போல் காணப் பட்டனர்! அவர்கள் மேனியில் தோலுரிந்து,  கரும் பிசாசுகள் நகர்ந்து செல்வது போல் நடமாடி, பாதையில் செத்துக் கிடந்தார்கள்!

    பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலே எரிந்து சாம்பலாயின! ஓடிய அணில்கள்,  வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின! நகர் முழுவதும் ஒளி மயத்தில் பளிச் சென்று  ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது!  மரங்கள் யாவும் எரிந்து பாலை வனக் கரும் நிழற் படங்களாய் நின்றன! தொலைபேசி, மின்சாரக்  கம்பங்கள் யாவும் கரிந்து வளைந்து போயின! காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும்,  மாண்டு மடிந்த மனிதச் சடலங்கள் கணக்கில் அடங்கா!

    விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியோர் கண்கள் அவிந்து போய்க் குருடாயின!  ஒரு குமரிப் பெண் கூறினாள், ‘ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும்  எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்! எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்!’ ஒரு இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டது. அவள்  முதுகு பூராவும் எரிந்து, கூனிப் போய்க் கதறிக் கொண்டிருந்தாள். உதவி ஆட்கள் அவளுடைய தாயைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தாயின் முகமும், உதடுகளும் வீங்கிப் போய், கண்கள் மூடியபடி இருந்தன!  இரு கைகளிலும் தோல்கள் உரிந்து, ரப்பர் கையுறை போல் தொங்கின! அவள் இடுப்புக்கு மேல் உடம்பில் எல்லா இடங்களும் கோரமாய் எரிந்து போயிருந்தன!

    மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது! ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக்  கொண்டிருந்தான்! எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்! குளத்தின் நீர் சூடாக  இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன!  அனலில் கரிந்த மாது ஒருத்தி,  எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்!  ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது! உள்ளிருந்த  மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்! ஓரிடத்தில்,  கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது!  அணு ஆயுதம் ஹிரோஷிமாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே  இடம் போதாது!

    வெடி விளைவை நேரில் கண்ட இரு ஜப்பானியரின் நிஜக் கதை!

    Dr. மிச்சிஹிகோ ஹசியா [Dr. Michihiko Hachiya]: ‘பொழுது புலர்ந்து எழிலுடன் இலைகள் சலசலக்க,  காலை இளம் பரிதி முகிலற்ற கீழ் வானில் மெதுவாய் எழுந்தது. மருத்துவக் கூடத்திற்குப் போக உடை அணிந்து கொண்டு புறப்படும் சமயம், யுத்த அபாயச் சங்கு ஊதியது! பறக்கும் விமானச் சத்தம்  கேட்டது. திடீரென மாபெரும் மின்னல் ஒளிமயம் வெட்டிக் கண்ணொளியைப் பறித்தது! அடுத்து ஓர்  பேரொளி! தோட்டத்தில் இருந்த லாந்தல் உலோக விளக்கு என்று மில்லாத பிரகாசத்தில் ஓளிர்ந்தது!  வெளிச்ச மயமாய் இருந்த வானத்தில் விரைவில் இருள் கவ்வியது. சட்டென அருகில் நின்ற தூண்  ஒன்று சாய்ந்து, வீட்டுக் கூரை சரிந்து அபாய நிலையில் தொய்ந்தது! வீட்டிலிருந்து தப்பி ஓட முயலும்  போது, மரக் கம்பங்களும், இடிந்த கட்டிடக் குப்பைகளும் வீதியில் நிறைந்து, பாதையில் தடையாயின!  எப்படியோ தாண்டிப் போய் தோட்டத்தினுள் நுழைந்தேன். ஏதோ தாங்க முடியாத ஓர் பெருங் களைப்பு  என்னை ஆட்கொண்டது! திடீரென நான் அமணமாய்ப் போனது எனக்குத் தெரிந்தது! என் கோட்டும்,  சூட்டும் என்ன வாயின ? என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்னுடலின் வலது புறம் யாவும் வெட்டுப் பட்டு, உதிரம் பீரிட்டது! கூரிய ஒரு நீண்ட இரும்பு ஆணி என் தொடையைக் குத்தி வலியை உண்டாக்கியது! என் கன்னம் கிழிந்து வாயில் இரத்தக் குளமானது! கழுத்தில் குத்திய ஓர் உடைந்த  கண்ணாடி பீங்கானைக் கையால் எடுக்க, மேனி முழுதும் இரத்தக் குளிப்பில் நான் நடுங்கினேன்! முதல் அணு குண்டால் தாக்கப் பட்ட இந்த டாக்டர்தான், தன் காயத்துடன் காயம் பட்ட நூற்றுக் கணக்கான ஜப்பானியர்களுக்குச் சிகிச்சை செய்திருக்கிறார்!

    சுடோமு யமகூச்சி [Tsutomu Yamaguchi]: திடாரென மெக்னீஷியம் தீப்பிழம்பு போல் ஓர் ஒளிமயமான மின்னல் வெட்டியது! தொடர்ந்தது ஒரு பேரிடிச் சத்தம்! பூமிக்கு மேல் 2 அடி தூக்கப் பட்டேன்! அடுத்து  பயங்கரக் காற்று என் மீது வீசிச் சென்றது. பேயடித்தது போல் வீதியில் எவ்வளவு நேரம் கிடந்தேன்  என்று எனக்கே தெரியாது! எழுந்த போது, இருள் சூழ்ந்து, கண்ணுக்கு எதுவும் தென் படவில்லை.  வெக்கை யுள்ள பட்டப் பகல் திடாரென நள்ளிராப் பொழுது போல் ஆனது. என் கண்கள் இருட்டுக்கு  இணங்கிப் போனபின், தூசிக் குப்பைகள் தொடர்ந்து வேகமாய் வீசின! தூசி குறைந்த பின், சூழ்வெளி  தெரிந்தது. எங்கெங்கு நோக்கினும், உடைந்த பொருட்களின் குவியல்! எரியும் தீமயம்! நகர்ப் புறம்  பார்த்தால், பிரம்மாண்டமான ஒரு ராட்சதக் காளான் [Mushroom] தோற்றத்தில் வானுயர்ந்த முகில் பூதம்! அந்த முகில் கோளம் பார்ப்பதற்கு பயமூட்டும் ஒரு பேயுருத் தூணாகத் தோன்றியது! அது சுற்றியுள்ள எல்லா பொருட்களின் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தது. மிக்க வலுவில்லாமல், முகத்திலும் கையிலும் பற்றிய நெருப்புடன், தீராத வேதனையோடு அருகே இருந்த உருளைக் கிழங்கு  வயலை நோக்கித் தடுமாறிக் கொண்டு சென்றேன். சில சமயம் என்னால் ஊர்ந்து செல்லத்தான்  முடிந்தது! பிறகு எனக்குப் பயங்கரத் தாகம் உண்டானது. எதிரே ஐந்து வாலிபப் பையன்கள்  அமணமாகக் கிழிந்த துணிகளுடன் இருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாவரும் வெளுத்துப்  போய், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் இத்தகையக் கோரக் காட்சியை இதுவரைக் கண்டதில்லை!  மேனி எங்கும் வெட்டுக் காயத்தால் உதிரம் ஆறாக ஓடிக் கொண்டி ருந்தது! கொதிக்கும் எண்ணெயில் வெந்தது போல் சிவந்து, தோலுரிந்து வேர்வை சொட்டச் சொட்ட வேதனையில் துடித்துக்  கொண்டிருந்தார்கள்! வெடி அதிர்வால் தீய்ந்த புண்களில் பச்சைப் புல் கொத்தாய் ஒட்டிக்  கொண்டிருந்தது. முதுகில் எல்லா இடங்களிலும் சாட்டையால் அடித்தபோல் காயங்கள்!

    உயிர் பிழைத்தோர் பெற்ற கதிரியக்க நோய்கள்

    உயிர் தப்பியவர்கள் பலர் புதுவிதக் கதிர் நோய்கள் [Radiation Sickness] தம்மைத் தாக்குவதை  உணர்ந்தார்கள். தலைச்சுற்று, மயக்கம், வயிற்று வலி, வாந்தி, பசியில்லாமை, வயிற்றாலை, மலத்தில்  இரத்தம், கடுஞ் சுரம், வலுவின்மை, தோலில் சிவப்புப் பொட்டுகள், மேனியில் வீக்கம், வாய் கழுத்து பல்லணை [Gum] இவற்றில் அல்ஸர், இரத்தக் கசிவு, மலத் துவாரம், சிறுநீர்த் துவரங்களில் இரத்தக் கசிவு, தலை மயிர் உதிர்ப்பு போன்ற உடற் பழுது அறிகுறிகள் தோன்றி, நோய் வருகையை முன்னறி  வித்தன! மிகையான கதிரடி [Radiation Dose] வாங்கியோர் உதிரத்தில், வெள்ளை செல் [White Blood  Cells] எண்ணிக்கை, மிகக் கீழாக குறைந்தது! அதிகமான ‘மரண அடிக்’ [Lethal Dose] கதிரியக்கம் தாக்கப் பட்டோர் சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களுக்குள் செத்து மடிந்தனர். மரண அடிக்கும் குறைந்த அளவு கதிரடி பட்டோர், சிறுகச் சிறுகச் சாவை அண்டி வந்தனர்.

    வெடிப்பிளவின் நேரடிக் காமாக் கதிரடி [Direct Gamma Radiation] பட்டோர், பட்ட இடத்தில் தசைகள்  சமைக்கப்பட்டு ஆறாத கதிர்ப் புண்களாகி வேதனையில் துடித்தனர். இவ்விதத் தாக்குதலால், இறுதியில்  ஆழமான தசை அழிவு ஏற்பட்டு, மாபெரும் இரத்தக் கசிவு [Hemorrhage] தொடர்ந்து, அவர்கள் யாவரும் மரணத்தைப் போய்த் தழுவிக் கொண்டார்கள்!  போர் முடிந்த பின்பு, ஹிரோஷிமா, நாகசாகியில் தப்பினோர்களின் மார்பு எக்ஸ்ரேயைச் சோதித்த போது, ஆயிரக் கணக்கான பேர் புற்றுநோயிலும் [Cancer], லுக்கீமியாவிலும் [Leukemia], முலைப்  புற்றுநோயிலும் சாகப் போகி றார்கள் என்று அறியப் பட்டது. டாக்டர் நார்மன் கென்ட்நர் [Dr. Norman  Gentner, Senior Scientist, Health and Environmental Sciences, Atomic Energy of Canada Ltd] விஞ்ஞானி  வெளியிட்ட 1997 கணக்கிதழ் அறிக்கைப்படி, இரண்டு நகரிலும் மொத்தம் 15405 பேர் [1950-1990] புற்றுநோயில் செத்திருக்கிறார்கள். லுக்கீமியாவில் இறந்தவர் எண்ணிகை இதுவரை 249 பேர்.  புற்றுநோய் மரணங்கள் இன்னும் பல்லாண்டுகள் தொடரும்!

    கதிரடிக் காயம் [Radiation Injury] பெறும் கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காமாக் கதிர்கள் பாதித்துப்  பெருமளவில் முரண்பாடுகளை உண்டு பண்ணுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதக் கதிரியக்கம் தாக்கிய கர்ப்பிணிப் பெண்கள் பெற்ற பிள்ளைகள், நரம்பு அமைப்பாட்டில் பழுதுகள் ஏற்பட்டு, சிறிய தலைவுடன் மூளை சிறுத்துப் போய், கண்கள் குறுகி வளர்ச்சி அடையாது, அங்க ஈனமுடன், மனக் கோளாறுகள் [Mental Retardation] நிரம்பிப் பிறந்ததாக அறியப்படுகிறது!



    உலக அணு ஆயுத வல்லரசுகளுக்கு ஓர் வேண்டுகோள்!

    அணுகுண்டு ஆயிரம், ஆயிரம் உயிர் இனங்களைத் தாக்கிச் சித்திரவதை செய்து அழிக்கும் ஓர் அபாய ஆயுதம்!  அதன் கோரக் கொடுமைகள் தப்பியோரையும், தப்பினோர் சந்ததிகளையும் விடாது பற்றிக் கொண்டு, பல்லாண்டு காலம் நிழல் போலத் தொடர்ந்து பாதிப்பவை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1955 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல்  [Bertrand Russell] தயாரித்த ‘அணு ஆயுதப் போர்த் தடுப்பு’ விண்ணப் பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானி களோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! ‘எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ  முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகிறது !  அதை அகில நாடுகள் உணர  வேண்டும் !  பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே  செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப்  போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள,  வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்’. அணு ஆயுத வல்லரசுகளே ! உங்கள் அறிவுக் கண்கள் திறக்கட்டும் ! ஜப்பானில் முதன் முதல் போட்ட  அணுகுண்டுகளே, உலகின் இறுதியான அணுகுண்டுகளாக இருக்கட்டும்!

    (கட்டுரை தொடரும்)

    *****************************

    தகவல் :

    Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

    1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

    2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

    3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

    4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

    5. Oppenheimer, By: James Kunetka

    6. Hand Book of World War II, Abbeydale Press

    7. The Deadly Element, By: Lennard Bickel

    8. Canadian Nuclear Society Bulletin, June 1997

    9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

    10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

    11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

    12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

    13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

    14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

    15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 16, 2009

    Share
  • வனத்தினிலே …….

    இசைக்கவி ரமணன்

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B2/[/mixcloud]

    forest_dream_hd
    வனத்தினிலே முள்ளும் மலரும்
    வழியினிலே தென்றலும் புயலும்
    வாழ்வினிலே இன்பமும் துன்பமும்
    வழக்கமன்றோ கண்ணே! இதை
    மறந்துவிட்டால் மனதில் என்றும்
    மயக்கம்தான் கண்ணே!

    கலக்கங்கள் நிலைப்பதுமில்லை
    உறக்கங்கள் நிரந்தரமில்லை
    கடல்மீது அமைதியுமில்லை
    அதன்மடியில் சலனமுமில்லை
    பழக்கம்தான் குழப்பம் என்றால்
    பழக்கம்தான் ஞானமும் அன்றோ?

    நிலையில்லா வாழ்வில் இங்கே
    நிலையானது ஏதும் இல்லை
    உண்டென்றால் ஒன்றே ஒன்று
    ஊ/றிவரும் உயிரின் அன்பு!

    உன்னுயிரை அன்பில் செய்தான்
    உன்மனதைக் கருணையில் நெய்தான்
    என்னையவன் எதில்செய்தானோ? இதை
    என்றும் காணும் விழியைத் தந்தான்

    அருகினிலோ தொலைவில் நின்றோ
    அன்பே உனைப் பாடி மகிழ்வேன்
    அரைநொடி நீ உனைமறந்தாலும்
    அனுமதிக்க மாட்டேன் மாட்டேன்
    கண்ணே நீ உன்னை என்றும்
    கைவிடாமல் உன்னைக் காப்பேன்

    எதுவந்தும் எது போனாலும்
    பதறாமல் நின்றே வாழ்வாய்
    நேசம்தான் ஞானம் கண்ணே
    ஈசனுக்கும் மறுபெயர் அன்பே!

    பாடலிலே பாதை விரித்தேன்
    பனிமலராய்க் கவிதை தெளித்தேன்
    பாதங்களை ஏந்தி ஏந்திப்
    பயணமெல்லாம் துணையாய் வருவேன்…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    மூளைக் குதிரை முதலில் மிரளும்,பின்,
    ஆளைக் கவிழ்த்திடும் , ஆகவே, -நாளை,
    குதிராது இன்றே, குதிரையில் ஏறி
    குதிஇறை கண்ணனின் கால் ….கிரேசி மோகன்….

    Share