Blog

  • வேளாண் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்

    வேளாண் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்

    வேளாண் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன. இதனால் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு. இந்த நுட்பங்களை எப்படிப் பயன்படுத்தலாம்? வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர் வெங்கி என்கிற வெங்கட்ராமன் ராமச்சந்திரன் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ் இலக்கணத் தாத்தா! 

    தமிழ் இலக்கணத் தாத்தா! 

    -மேகலா இராமமூர்த்தி

    பழந்தமிழ் ஏடுகளைத் தேடி ஊர் ஊராய் அலைந்து அவற்றைத் திரட்டிப் பதிப்பித்தவரும் தென்னிந்திய கலைச்செல்வரும், தாம் செய்த அரிய தமிழ்ப் பணிகளுக்காகத் ’தமிழ்த் தாத்தா’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான டாக்டர் உ.வே.சா.வைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும்.

    ஆனால், தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பதில் ஆர்வங்காட்டிய தமிழ்த் தாத்தாவைப் போலவே தமிழ் இலக்கண நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வங் காட்டி, அவற்றைப் பிழையறப் பதிப்பித்தவரும் தமிழ் இலக்கணத்தில் தேர்ந்த புலமைபெற்று விளங்கியமையால் ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என அன்று பாராட்டப்பெற்றவருமான மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை இன்றைய தமிழர் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அத் தமிழ்ச்சான்றோரைத் தமிழர்க்கு மீள் அறிமுகம் செய்துவைத்தல் நலம் என நினைக்கின்றேன்.

    1896ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ஆம் நாள் மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை, பாக்கியம் அம்மையார் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையவர்கள். இவரின் உடன்பிறப்புக்கள் மொத்தம் ஏழு பேராவர். சொந்த ஊர் சென்னை சைதாப்பேட்டைக்கு மேற்கில் அமைந்திருந்த சிற்றூரான மேட்டுப்பாளையமாக இருந்தபோதிலும், குழந்தைகளின் கல்விக்காகச் சைதாப்பேட்டையில் குடிபுகுந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார் வீராசாமிப் பிள்ளை.

    வேணுகோபாலருக்கு ஐந்து வயது நிரம்பியதும் அங்கிருந்த ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைச் சேர்ந்த மாதிரிப் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு ஓராண்டுக் காலம் கல்விபயின்றார் அவர்.

    அப்போது வறுமை மேகம் வேணுகோபாலப் பிள்ளையின் குடும்பத்தைச் சூழவே, மாதிரிப் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடமொன்றில் சேர்க்கப்பட்டார்.

    இன்னல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அக் குடும்பத்தை முற்றுகையிடவே சைதாப்பேட்டையில் தாம் வாழ்ந்துவந்த 40,000 உரூபாய் மதிப்புள்ள வீட்டை 2000 உரூபாய்க்கு விற்றுவிட்டுப் பல்லவபுரத்திற்கு (பல்லாவரம்) குடும்பத்தோடு குடிபெயர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார். பின்னர் அங்கிருந்து புரசைப்பாக்கத்திற்கு (புரசைவாக்கம்) குடிபெயர்ந்தது அக்குடும்பம். இவ்வாறு தொடர்ந்து வீடு மாறவேண்டிய சூழல் ஏற்பட்டதால் வேணுகோபாலப் பிள்ளையில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

    கல்வியில் ஆர்வமிருந்தும் கற்க இயலாத குடும்பச் சூழலால் வேப்பேரியிலுள்ள அச்சகத்தில் பணியிலமர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளை. காலை எட்டு மணிமுதல் மாலை 5 மணிவரை அப்பணியில் உழைத்த அவர், அறிஞர்கள் சிலர் இணைந்து நடத்திய இரவுப்பள்ளியில் சேர்ந்து ஓய்வுநேரத்தைக் கல்வி கற்பதில் கழிக்கலானார்.

    வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் தமிழ் ஆகியவற்றைப் பயிற்றுவித்த வழக்கறிஞர் டி.என். சேஷாசலம் ஐயரவர்கள், வேணுகோபாலரின் தணியாத தமிழார்வம் கண்டு, தக்கார் ஒருவரிடம் அவர் தனியே தமிழ்பயிலுதல் நன்று என்று அவருக்கு அறிவுறுத்தினார்.

    வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் பயிற்றுவித்த ஆசிரியர்களுள் சென்னைக் கல்வித்துறைத் துணை இயக்குநராகப் பணியாற்றிய திரு. வி.ஆர். அரங்கநாத முதலியார், திரு.கே. மாசிலாமணி முதலியார், வழக்கறிஞர் திரு. எம். தாமோதர நாயுடு, திரு. மோகனரங்கம் பிள்ளை ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

    என்ன இது இம் மனிதர்களுக்குப் பின்னால் ஐயர், முதலியார், நாயுடு, பிள்ளை என்று ஒரே சாதிப் பெயர்களாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?

    பெயர்களுக்குப் பின்னால் சாதி அடையாளங்கள் இருந்தாலும் பேதம் ஏதுமின்றித் தமிழர்கள் தமிழால் ஒன்றிணைந்திருந்த காலம் அது. இப்போதோ பெயரளவில் சாதியை ஒழித்திருக்கின்றோமே தவிர அது முன்னைக் காட்டிலும் கூர்மையடைந்து பேதங்களையும் சமூகத்தில் அளவற்ற சேதங்களைவும் விளைவித்து வருகின்றது என்பதுதான் நடைமுறை உண்மை.

    வேணுகோபாலப் பிள்ளையின் வரலாற்றுக்குத் திரும்புவோம்!

    சேஷாசலம் ஐயரின் அறிவுரையை ஏற்ற வேணுகோபாலப் பிள்ளை, அந்நாளில் தமிழிலக்கண இலக்கியங்களில் வல்லுநராகவும் நல்லாசிரியராகவும் விளங்கிய சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் கோவிந்தராச முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படிக் கற்றார்.

    பின்னாளில் தமிழ்ப் பெரும்புலவராக விளங்கிய மங்கலங்கிழார், தமிழ்ப் பேரறிஞர் மதுரை முதலியார், அருச்சுன முதலியார் ஆகியோரும் அப்போது வேணுகோபாலரோடு உடன்பயின்ற மாணாக்கர் ஆவர். இப்பெருமக்களுடன் இறுதிவரை இடையறா நட்பு பூண்டிருந்தார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

    1920ஆம் ஆண்டுமுதல் 1923ஆம் ஆண்டுவரை சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் உதவித் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார் வேணுகோபாலப் பிள்ளை. அப்போது அவரைச் சந்தித்த புரசைப்பாக்கம் லூத்தரன் மிஷன் பெப்ரீஷியஸ் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. எம். ஏ. வேதநாயகம் அவர்கள், தம் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராய்ப் பணியாற்றுமாறு வேணுகோபாலருக்கு வேண்டுகோள் விடுக்கவே, அதனையேற்று அப்பள்ளியில் தமிழாசிரியர் பொறுப்பில் அமர்ந்தார். பின்னர் அப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக வளர்ச்சியடைந்தது.

    அக்காலக்கட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய வித்துவான் தேர்வில் வெற்றிபெற்றுப் பட்டதாரியானார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

    வேணுகோபாலப் பிள்ளை பணியாற்றிய லூத்தரன் பள்ளியின் மேற்பார்வையாளர்களாக ஜெர்மானியப் பாதிரியார்கள் இருந்தனர். அவர்களுக்குத் தமிழிலும் நல்ல புலமை இருந்தது. அவர்களின் நட்பால் வேணுகோபாலருக்குப் பள்ளியில் இருந்த மதிப்பும் செல்வாக்கும் மேலும் உயர்ந்தன. வேறெந்தப் பள்ளியிலும் தமிழாசிரியருக்கு அத்தகைய செல்வாக்கு கிடைத்திராது எனலாம்.

    ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த அந்நாட்டு அறிஞர் சிலரும் அவர்தம் மனைவிமாரும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ் பயின்றனர். இப்பள்ளியோடு தொடர்புடைய பாதிரியார்களால் சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தில் குருகுல் கல்லூரி ஒன்றும் நடத்தப்பெற்று வந்தது. அக்கல்லூரியில் கிறித்தவமதத் தொண்டில் ஈடுபடுவதற்குப் பயிற்சிபெறுவோர்க்குச் சைவ வைணவ சமய நூல்கள் சிலவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் வேணுகோபாலர் விளங்கினார். 1938ஆம் ஆண்டு தம் ஆசிரியத் தொழிலைவிட்டு நீங்கினார் அவர்.

    பின்னர், பதிப்புப் பணியிலும் எழுத்துப் பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்கட்கென்று பல நூல்களை எழுதினார். அந்நூல்களின் வழியே பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிமுகமானார் வேணுகோபாலப் பிள்ளை. அவர் எழுதிய நூல்களைப் பல இதழ்களும் மதிப்புரை வழங்கிப் பாராட்டின. அவ்வாறு அவர் எழுதிய நூல்களுள் ஒன்று அரிச்சந்திர புராணச் சுருக்கம் என்பதாகும்.

    உரைநடையில் அமைந்த அந்நூல் குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8ஆம் நாள் ’நவசக்தி’ இதழில் வெளியிட்ட மதிப்புரையின் ஒரு பகுதி இது…

    ”……தீந்தமிழ்ச் சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்துள்ள உரைநடையைக் கொண்ட கதைச் சுருக்கம், ஒரு பூங்காவெனப் பொலிகிறது. அதனிடைத் தென்றற் காலும் வீசுகிறது. திரு. வேணுகோபாலர் தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மை செய்யும் பெற்றி வாய்ந்ததென்று சுருங்கக் கூறலாம்.”

    தமிழ்நூல்கள் அளவில் சிறியவையாயினும் பெரியவையாயினும் அவை பிழையின்றித் திருத்தமாக வெளிவரவேண்டும் என்பதைத் தம் வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டிருந்தார் வேணுகோபாலப் பிள்ளை. பதிப்புத்துறையின் நுட்பங்களையெல்லாம் ஆங்கில நூல்கள் வாயிலாகக் கற்றுத்தேர்ந்த அவர், பதிப்பித்த நூல்களின் விவரம் வருமாறு:

    இறையனார் அகப்பொருளுரை
    தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியர் உரை
    யாப்பருங்கல விருத்தியுரை
    யாப்பருங்கலக் காரிகை
    விசாகப் பெருமாள் தமிழிலக்கணம்
    தஞ்சைவாணன் கோவை – விளக்கக் குறிப்புரை முதலியன.

    வேணுகோபாலப் பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையம் வெளியிட்ட யாப்பருங்கலக் காரிகையின் துணையோடுதான் நமக்கு முந்தைய தலைமுறை யாப்பு பழகியது என்பது கருதத்தக்கது.

    மேற்கண்ட இலக்கண நூல்களேயல்லாமல்,

    அட்டப்பிரபந்தம் – விளக்கக் குறிப்புரை
    நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
    நளவெண்பா
    நீதிநூல்கள்
    பதினெண் சித்தர் ஞானக் கோவை
    விநோத ரச மஞ்சரி

    திருவாய்மொழி ஈட்டு வியாக்கியானம் – 10 பகுதிகள்

    உள்ளிட்ட இலக்கிய நூல்களையும் பதிப்பித்து, பதிப்புத் துறையில் ஆழமாய்க் கால்பதித்த வேணுகோபாலர், சிறந்த சொற்பொழிவாளராகவும் பரிமளித்தார்.

    அவற்றுள் 1931ஆம் ஆண்டு, சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் தமிழ்க்கழக ஆண்டுவிழாவில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவும், 1948ஆம் ஆண்டு மன்னார்குடியில் நடைபெற்ற தமிழ்த் திருநாளில் அறிஞர் அண்ணாவுடன் இணைந்து ஆற்றிய சொற்பொழிவும் குறிப்பிடத்தக்கன.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 4, 5 தேதிகளில் ’தமிழ் அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் வேணுகோபாலப் பிள்ளை ஆற்றிய சொற்பொழிவு நூலாகவும் வெளிவந்துள்ளது.

    தமிழ்நூல்களில் காணப்பெறும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கற்பனைகளை இந்நூலில் நமக்கு அடையாளம் காட்டுகின்றார் வேணுகோபாலப் பிள்ளை. அவ்வகையில், குறுந்தொகையிலுள்ள ’கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் இறையனார் எனும் பெயரிய மானுடப் புலவரேயன்றிக் கண்ணுதற் கடவுளான சிவனார் இல்லை என்று விளக்கும் வேணுகோபாலர், சமண முனிவர்கள், தாம் பாண்டி நாட்டைவிட்டுப் போவதற்குமுன் ஆளுக்கொரு வெண்பாவை எழுதித் தம் ஆசனத்தின்கீழ் வைத்துவிட்டுச் சென்றதாகவும், அவற்றை வையை ஆற்றில் பாண்டிய மன்னன் எறியச் சொல்ல, அவற்றில் எதிரேறி வந்த நானூறு பாடல்களின் தொகுப்பே நாலடி நானூறு என்பதும் பொருந்தாக் கருத்தே என்கிறார்.

    வேணுகோபாலப் பிள்ளையின் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதானால் ஜானகி அம்மையார் என்ற பெண்மணியை மணந்து மூன்று புதல்வர்களைப் பெற்றார். அப்புதல்வர்களுள் ஒருவர் குழந்தைப் பருவத்திலேயே வருந்தத்தக்க வகையில் இறந்துபோனார்.

    சென்னையில் வசித்துவந்த வேணுகோபாலப்பிள்ளையின் குடும்பம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் அங்கு ஏற்பட்ட குழப்பங்களால் சென்னையைவிட்டுக் காஞ்சிபுரத்துக்குக் குடிபெயர நேர்ந்தது. அக்காலத்தில் வித்துவான் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தமிழ் மாணாக்கர் பலருக்கு மாலை நேரங்களில் வகுப்பெடுத்தார் வேணுகோபாலப் பிள்ளை.

    தமிழ்படிக்க விரும்பும் மாணவர்கள் தம் பொருளாதாரச் சூழலால் அவ்வாய்ப்பை இழந்துவிடக் கூடாது எனக் கருதிய அவர், “தாம் பெற்ற தமிழ்க்கல்வி பெறுக இவ்வையகம்” எனும் உயரிய நோக்கோடு மாலை நேரத்தில் இலவசமாகவே மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புக்களை நடத்தினார். அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.

    தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களேயன்றிச் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரான கமில் சுவலபில் அவர்களும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்பயின்ற அனுபவம் உடையவராவார். தமிழகச் சித்தர்கள் குறித்து தாம் எழுதிய “The Poets of the Powers” என்னும் நூலில் தம் ஆசிரியர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டு “எனது குரு” என்று சுவெலபில் குறிப்பிட்டிருப்பது அவரது நன்றியறிதலையும் வேணுகோபாலப் பிள்ளைபால் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பினையும் புலப்படுத்துகின்றது.

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமணரான ஜீவபந்து ஸ்ரீபாலர் என்பவர் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்ப் பெருங்காப்பியமான சீவக சிந்தாமணி குறித்துச் சொற்பொழிவாற்ற வேண்டினார். அவ்வேண்டுகோளை ஏற்று ஜைனத் தமிழ்க் கழகத்தின் சார்பில் ஞாயிறுதோறும் சீவக சிந்தாமணிச் சொற்பொழிவை மூன்றாண்டுகள் நிகழ்த்தி முடித்தார் வேணுகோபாலர். இப்பெருந்தொண்டினைப் பாராட்ட விழா எடுத்தனர் ஜைனத் தமிழ்க் கழகத்தார்.

    அவ்விழாவில் சிந்தாமணிச் சொற்பொழிவு நினைவுமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. வேணுகோபாலப் பிள்ளைக்குப் புத்தாடைகளும் விலைமதிப்பு மிக்க பார்க்கர் பேனாவும் பரிசளிக்கப்பட்டன.

    அந்நினைவு மலருக்கு நன்மொழி எனும் பெயரில் பொன்மொழிக் கட்டுரை ஒன்றை நல்கிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்,

    ”வகுப்பை நடாத்திய மகாவித்துவான்
    மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு
    என் வாழ்த்து உரியதாகுக! அவரைச்
    சிந்தாமணிச் செல்வர் வேணுகோபாலப் பிள்ளை
    எனத் தமிழ்நாடு இனி வழங்குவதாக!”

    என்று தம் கட்டுரையில் குறிப்பிட்டதை ஏற்று அவரைச் ’சிந்தாமணிச் செல்வர்’ என்று அழைத்து மகிழ்ந்தது தமிழ்கூறு நல்லுலகு.

    அரசு இலக்கண இலக்கியப் பாடநூல்களின் தலைமைப் பதிப்பாசிரியர்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவின் தலைமைப் பதிப்பாசிரியர்; தமிழகப் புலவர் குழுவின் தலைவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்புக் குழு உறுப்பினர் எனப் பல பெரும் பொறுப்புகளை ஏற்று, அவற்றைத் திறம்படச் செய்த செயல்வீராகவும் திகழ்ந்தார் வேணுகோபாலப்பிள்ளை.

    காஞ்சியில் நடைபெற்ற அன்னாரின் மணிவிழாவில் தமிழவேள் பி.டி. ராஜன் அவர்கள் மீனாட்சி கருணையைப் பொன்னாடையாகப் போர்த்துகின்றேன் எனக்கூறி வேணுகோபாலப் பிள்ளைக்குப் பொன்னாடை அணிவித்தார். விழாவுக்கு வந்திருந்த தமிழறிஞர்கள் அவரை ’மகா வித்துவான்’ எனப் போற்றினர்.

    காஞ்சி அன்னை தமிழிலக்கிய மன்றத்தினர், அருந்தமிழ் வளர்த்த பெருந்தகையாம் வேணுகோபாலப் பிள்ளைக்கு ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என்று பட்டமளித்துச் சிறப்பித்தனர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தார் அவருக்குப் ‘பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.

    1967-இல் சென்னை தொல்காப்பியர் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் வேணுகோபாலப் பிள்ளைக்குச் ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார், அன்றைய தமிழக முதல்வர் அண்ணா. 

    நற்றமிழ் அறிஞராய், நல்லாசிரியராய், சிறந்த சொற்பொழிவாளராய், தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ந்த புலமையாளராய் விளங்கி, ஒல்லும் வகையிலெல்லாம் தமிழ்த்தொண்டாற்றித் தமிழன்னையைச் சிறக்கச் செய்த மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை மறவாது போற்றுவோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை நூற்றாண்டு விழா மலர் – தமிழ்வளர்ச்சித் துறை வெளியீடு.
    2. https://www.hindutamil.in/news/literature/513791-venugopala-pillai.html

    Share
  • பழகத் தெரிய வேணும் – 89

    பழகத் தெரிய வேணும் – 89

    நிர்மலா ராகவன்

    என்ன இடர் வரினும்

    சில தாவரங்கள் வெப்பமாக இருந்தாலும், மழை அடித்துக்கொட்டினாலும் பிழைத்துக்கொள்ளும். வேறு சில வெயிலில் வாடி, பெருமழையில் அழுகிப் போய்விடும்.

    மனிதர்களும் அப்படித்தான். பலர் சிறிதளவு துன்பத்தைக்கூட தாங்கமுடியாது ஒடுங்கிவிடுவார்கள். புதிதாக ஒரு வழியைத் தேடும் உற்சாகத்தை இழந்துவிடுவதுதான் காரணம்.

    ஒரு சிலர் எவ்வளவுதான் இடர்கள் வந்தாலும், அவற்றைச் `சவால்’ என ஏற்று, `இந்த நிலையும் ஒருநாள் மாறும்!’ என்ற நம்பிக்கையுடன் நடப்பார்கள். அதுவே வாழ்வின் வெற்றிதான். (பலர் புகழ ஏதாவது செய்வதுதான் வெற்றி என்பதல்ல).

    வீட்டைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற அண்மைக்காலத் தடையுத்தரவில், பலரும் தம் வேலையை இழந்தனர். கடைகளை மூடவேண்டிய நிலைமை பல வியாபாரிகளுக்கு.

    விமானப்பயணம் கூடாது என்ற நிலையில், விமானப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு வருமானம் இல்லாதுபோயிற்று.

    ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சி இல்லாததால், கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை இன்னும் சிலருக்கு.

    இவர்கள் அனைவரும், `அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!’ என்று நம்பிக்கை இழந்தால் என்ன ஆகும்?

    நிலைமை மாறும் என்று பொறுமையைக் கடைப்பிடிக்கமுடியுமா?

    என்ன கஷ்டம் வந்தாலும், சாப்பாடு மட்டும் எல்லாருக்கும் அவசியமான தேவை என்று, உணவுப்பொருட்களைத் தயார் செய்கிறார்கள் பலர். அவற்றை வீடுகளுக்குக் கொண்டுசெல்லும் பணி சிலருக்கு. ஆண்களோ, பெண்களோ, இவர்களில் எவரும் அந்தஸ்து பார்ப்பதில்லை.

    ஒருவர் ஆயிரம் மரவள்ளிக்கிழங்கு செடிகளை நட்டு, கிழங்கை வறுவலாக விற்று, ஒரே நாளில் பல ஆயிரம் ரிங்கிட் சம்பாதிப்பதாகச் செய்தி வந்தது.

    இருபத்தி இரண்டு வயதான சீன இளைஞன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே பெற்றோருடைய சிறு கடையில் உதவி செய்திருக்கிறான். படிப்பு முடிந்ததும், தன் அறிவைக்கொண்டு, கணினிவழி வியாபாரத்தைப் பெருக்கியிருக்கிறான். `இதற்கு கல்லூரிப் படிப்பும், அதற்கான செலவும் வீண்!’ என்று பலர் கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தவில்லை.

    ஒரே தொழிலில் நிலைத்திருந்து கஷ்டப்படுவதைவிட, அதை விட்டுவிட்டு, புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவது அச்சத்தை விளைவித்தாலும், அதுதான் புத்திசாலித்தனம்.

    அவ்வாறு செய்தால், `முன்பே செய்திருக்கவேண்டும்!’ என்ற வருத்தம் காலங்கடந்து உண்டாகாது. கிடைப்பது தோல்வியாக இருந்தாலும், செய்யாது போய்விட்டோமே என்ற வருத்தமாவது எழாதிருக்கும்.

    கதை

    நேபாளத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, விமானத்தில் கோலாலம்பூர் திரும்பிக்கொண்டிருந்தேன்.

    விமானம் தரையிறங்கும்போது, ஒரு பக்கத்திலிருந்து பல குரல்களில், மகிழ்ச்சி கலந்த சிரிப்பு உரக்கக் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நாலரை மணிநேரப் பயணமாக இருந்தாலும், வழியில் சாப்பிட எதுவும் வாங்காது, அங்கு உட்கார்ந்திருந்தார்கள் பல நேபாளிகள்.

    முதன்முறையாக வெளிநாடு வந்திருக்கும் தொழிலாளிகள் என்று புரிந்தது.

    வெளிநாட்டுக்கு வேலை நிமித்தம் போகிறவர்கள் பலவிதத் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். தாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை, குறுகிய இடத்தில் நிறைய பேருடன் படுக்கை, உற்றவர்களைவிட்டுப் பிரிந்திருத்தல், மாறுபட்ட கலாசாரத்தால் ஏற்படும் குழப்பங்கள் – இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று நினைத்தும் பாராது, வளமான எதிர்காலக் கனவுகளுடன் மகிழ்ந்திருந்தார்கள்.

    எதிர்ப்படும் சங்கடங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டு, வேலையைப் பொறுப்பாகச் செய்பவர்கள் முதலாளிகளின் ஆதரவைப் பெற்று, உயர வழியுண்டு.

    வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த ஒரு தையல்காரர் தான் எதிர்பார்த்தபடி வாழ்க்கை எளிதாக இல்லை என்றோ, அல்லது மதுபானங்கள் எளிதாக, எங்கும் கிடைப்பதைக் கண்டோ, அப்பழக்கத்திற்கு அடிமையானார். அவரது உத்தியோகம் நிலைக்கவில்லை.

    அவர் செய்த தவறு: ஆரம்பித்த காரியத்தை (புதிய நாட்டில் கிடைத்த வேலையை) சரியாக முடிக்காது, அதில் முழுக்கவனமும் செலுத்தாது, முதலாளி பலமுறை கண்டித்தபோதும் விழித்துக்கொள்ளாமல் இருந்தது.

    புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமானால், பழைய பழக்கங்களை, தொடர்புகளை, விட்டுவிடத் தயாராக இருக்கவேண்டும்.

    கதை

    இன்பக் கனவுகளுடன் மலேசியா வந்தடைந்த அயல்நாட்டுத் தொழிலாளி ஒருவருக்கு சம்பளம் அளிக்கப்படவில்லை, கேட்டால் அடி, உதை. சாப்பாட்டுக்கே வழியில்லாது போனபோதும், அவருக்கு எங்கு போய், என்ன செய்வதென்று புரியவில்லை. கடப்பிதழோ, முதலாளி கைவசம்.

    அவரைப் பற்றிய செய்தி தினசரியில் முதல்நாள் வெளியாகியது. பஞ்சத்தில் அடிபட்டவர்போல் காணப்பட்டார். மறுநாள், அவருடைய மரணச்செய்தி!

    இம்மாதிரியான, கொடுமைக்கார, முதலாளிகள் தண்டிக்கப்பட்டாலும், பிழைப்பை நம்பி வந்த உயிர் போனது போனதுதான்.

    பலர் எப்படியோ தப்பித்துவிடலாம். இருப்பினும், `நான் என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தேன், தெரியுமா?” என்று கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதால் பயனில்லை. அவற்றை மாற்றவா முடியும்!

    `நான் இத்தனைத் துன்பங்களை கடந்துவந்திருக்கிறேனா!’ என்ற வியப்புடன், பல வருடங்களுக்குப்பின், பேரக்குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதைகளாக வேண்டுமானால் அவை அமையும்!

    வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்ற நிலையில், `வேறு என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்துக்கொண்டே இருப்பவருக்கு உற்சாகம் குன்றுவதே கிடையாது.

    `எல்லாம் நன்மைக்கே!’ என்று எப்போதும் சொல்லிவந்த ஒருவனுக்கு விபத்தினால் ஒரு கால் முடமாகிவிட்டது.

    `இதில் என்ன நன்மை?’ என்று சிலர் கேலி செய்ய, `ஒரு செருப்பு வாங்கினால் போதுமே,’ என்றானாம்!

    எந்த நிலையிலும் அவன் தன் உற்சாகத்தை இழக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டியது.

    கதை

    பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நியு யூ (NIU YU) என்ற பெண் தனது பதினோராவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் ஆவலில் இருந்தாள்.

    சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அன்று நடந்த பூகம்பத்தில் 70,000 பேர் உயிரிழந்தனர். அச்சிறுமியின் பள்ளிக்கூடக் கட்டடம் இடிந்து விழ, மூன்று தினங்கள் அதனடியில் மாட்டிக்கொண்டாள். உயிர் பிழைத்தாள். ஆனால், வலது காலை எடுக்கும்படி ஆயிற்று.

    இப்போது, முழங்காலுக்குமேல் செயற்கைக்கால் வெளியே தெரிய நடக்கும் அப்பெண் ஒரு மாடல்!

    “என்னைப்போன்றவர்கள் முழுமை அற்றவர்களாக இருக்கலாம். ஆனால், நாங்களும் அழகானவர்கள்தாம்!” என்னும் அவளது தன்னம்பிக்கை பலருக்கும் தைரியம் அளித்துவருகிறது.

    கசப்பான நிகழ்வுகள் முடியும்போது, புதிய திருப்பங்கள் ஏற்பட வழியுண்டு.

    அதற்காக, துன்பம் எதிர்ப்படும்போதுதான் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதல்ல.

    முடிவில் ஆரம்பம்

    நான் பள்ளியில் படித்தபோது, அநேகமாக எல்லா ஆசிரியைகளும் கணவனை இழந்தவர்கள், அல்லது முதிர்கன்னிகள். பதின்ம வயதில், அவர்களுடைய நிலை புரியவில்லை.

    கதை

    இளம்வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவள் அவள்.

    துக்கத்தைவிட, `இனி யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்!’ என்ற மலைப்புதான் பெரிதாக எழுந்தது.

    அவளுடைய தந்தை அவளுடன் வந்து தங்கி, அவள் பாதியில் விட்ட படிப்பைத் தொடரச் செய்தார்.

    புதிய இடத்தில், புதிய மனிதர்களுடன் எப்படித்தான் காலம் கழிக்கப்போகிறோமோ!’ என்று முதலில் பயம் ஏற்பட்டது. `வேறு வழியில்லை!’ என்ற நிலையில், படிப்பைத் தொடர்ந்தாள்.

    பிறகு, ஆசிரியப்பணியில் அமர்ந்தபோது, வாழ்க்கை அவ்வளவு பயங்கரமானதாகத் தோன்றவில்லை. `பிறர் கையை எதிர்பார்த்து, காலத்தைக் கழிக்கத் தேவையில்லை!’ என்று புரிய, தன்னம்பிக்கை வளர்ந்தது.

    பாதுகாப்பான நிலையைப் பெரிதாகக் கருதி, அளவுக்கு மீறிய பொறுமையுடன் இருந்தால், வளர்ச்சி ஏது!

    இளமையும் ஆரோக்கியமும் இருக்கும்போதே சிலர் ஒன்றன்பின் ஒன்றாக, பல பொழுதுபோக்குகளில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கற்பது தம் திறமைக்கே சவால் விட்டுக்கொள்ள எண்ணித்தான்.

    அவ்வாறு கற்பது எதுவும் வீண்போவதில்லை. வேறு எங்காவது உபயோகப்படும்.

    சில சமயம், நாம் விரும்பினாலும், எதிர்பார்க்காவிட்டாலும், மாற்றங்கள் நம்மைத் தேடி வரும். புதிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைத்தால், அங்கு புதிய மொழி ஒன்றைக் கற்கவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாதது.

    `புதியதாக எதிலாவது இறங்குவதா!’ என்ற அச்சம் அப்போது தடுக்கக்கூடும்.

    அடுத்தடுத்த நாட்கள் ஒரே சீராக இருந்தால், சலிப்பு ஏற்படுமே! வாழ்வில் வளர்ச்சியோ, முன்னேற்றமோ இருக்குமா?

    Share
  • பச்சைப் பயறு அறுவடை

    பச்சைப் பயறு அறுவடை

    நம் மாடித் தோட்டத்தில் இன்று பச்சைப் பயறு என்கிற பாசிப் பயறு அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தங்கப் பத்திரங்கள் – சில கேள்விகள்

    தங்கப் பத்திரங்கள் – சில கேள்விகள்

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது பற்றி, முந்தைய பதிவில் விளக்கியிருந்தோம். அது தொடர்பாகச் சில கேள்விகளைச் சுதா மாதவன் எழுப்பியுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், இவற்றுக்குப் பதில் அளித்துள்ளார். உங்களுக்கு ஏதும் ஐயங்கள், கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்

    அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்

    DESALINATION PLANT IN UNITED ARAB EMIRATES

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    JAPAN HTTR PRODUCES ELECTRIC POWER, HYDROGEN GAS 7 METHANE GAS
    NUCLEAR ENERGY COGENERATION SYSTEM

    அணுமின் நிலையத்தின் முக்கிய சாதனங்கள்

    Learn more about nuclear hydrogen production.

    DESALINATION PLANT

    அணுசக்தி உலையில் வீணாகும் வெப்பசக்தி மீள்பயன்பாடு

    அணுமின்சக்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வது மூன்றில் ஒரு பங்கு வெப்பசக்தியே [சுமார் 35% இயக்கத் திறன்] [EFFICIENCY]. குளிர்கலனில் TURBINE CONDENSER] 65% வெப்பசக்தி பயன் தராமல் கடல் தணிப்பு நீரிலோ , கோபுரத்திலோ [CONDENSER COOLING WATER] வீணாகிறது. இந்த 65% வெப்பசக்தி மீட்கப்பட்டு பல தொழிற்துறை ஆலைகளுக்குப் பயன்படுகிறது. முக்கிய கடல் சார்ந்த பகுதிகளில் உப்பு நீக்கி குடிநீர் தயாரிக்க முடிகிறது மேலும் எரிசக்தி நீரக வாயு [HYDROGEN GAS], மீதேன் [METHANE GAS] தயாரிக்கவும், குளிர் நாடுகளில் வீடுகளுக்குச் சூடு அளிக்கவும், தொழிதுறை ஆலைகளுக்கு நீராவி அனுப்பவும் உதவுகிறது. ஜப்பானில் இயங்கி வரும் உச்ச உஷ்ண அணு உலை [HTTR] [HIGH TEMPERATURE TEST REACTOR] மின்சாரம் தயாரிப்ப தோடு, பயன்படா சக்தி மீட்கப்பட்டு நீரக வாயு, மீதேன் வாயு தயாரிக்கப் படுகிறது. இம்முறைக்கு கூட்டுப்பிறப்பு [cogeneration] முறை என்று பெயர். கூட்டுப்பிறப்பு முறையின் இயக்கத் திறன் 80%.

    தற்போது 10% உலகத் தேவைக்கு அணுசக்தி நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன குளிர் நாடுகளான ரஷ்யா, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, சுலோவேகியா, சுவிட்சர் லாந்து,யுக்ரேன் வீடுகளைச் சூடாக வைத்திருக்க அணுமின்சக்தி நீராவி பயன்படுகிறது.

    https://www.iaea.org/sites/default/files/styles/original_image_size/public/ne-charts-1140×640.jpg?itok=tywG9Wzs

    Non-electric applications of nuclear energy are reviewed, including technological, environmental and economic issues of such applications as well as future prospects and benefits of non-electric applications of nuclear energy. The applications for nuclear energy are significantly greater than electricity generation, including cogeneration, district heating and cooling, high-temperature process heating, hydrogen and alternative fuel production, transportation and desalination. These applications of nuclear energy expand its prospects and enhance its benefits, such as reduced environmental impact and climate change mitigation. Interest in non-electric applications of nuclear energy is growing, driven by environmental, economic, security and other reasons. The potential uses of nuclear energy beyond electricity generation and supply are likely to find increasing application in the future.

    What is the role of the IAEA?

    • The IAEA supports and facilitates the development of new and emerging non-electric applications of nuclear technologies through scientific and technical publications, webinars and coordinated research projects.
    • The IAEA has developed software tools, such as the Hydrogen Economic Evaluation Program (HEEP) and Hydrogen Calculator, to assess options for hydrogen production. Links to download both tools are available here.
    • To assess nuclear desalination, the IAEA has developed the Desalination Economic Evaluation Program (DEEP) and the DEsalination Thermodynamic Optimization Programme (DE-TOP) to perform economic, thermodynamic and optimization analyses of different power resources coupled to various desalination processes. The software are available for download here.
    • The IAEA has been coordinating feasibility studies on nuclear desalination since 1989. The IAEA Technical Working Group on Nuclear Desalination is a global network of experts that supports programme assessment and planning, research, development, design, construction, economics, safety aspects, international collaboration for demonstration projects, and operation and maintenance of nuclear desalination plants.

    ======================================================================

    இந்தியாவில் ஆறு 1000 MW அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

    Image result for westinghouse nuclear reactor ap1000

    வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம்

    https://www.reuters.com/article/us-india-usa-trump-westinghouse-exclusiv/exclusive-westinghouse-set-to-sign-pact-with-indian-firm-for-nuclear-reactors-during-trump-visit-idUSKBN20E1PM

    https://timesofindia.indiatimes.com/india/US-based-Westinghouse-to-build-6-nuclear-power-plants-in-India/articleshow/52644065.cms

    https://en.wikipedia.org/wiki/AP1000

    Obama, Modi Kick Start the Westinghouse Nuclear Deal

    +++++++++++++++++++

    Image result for westinghouse nuclear reactor ap1000

    அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள் 

    2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய்  கோகலேயும் அமெரிக்க  அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது.  பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.  கடந்த பத்தாண்டு களாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது ?  அணு உலை இயக்கும் இந்தியாவா ?  அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா ?  [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.]  இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும். இந்தியா 2031 ஆண்டுக்குள் 22,480 மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது.  2019 ஆண்டு  அணுமின்சார உற்பத்தி அளவு ; 6780 மெகாவாட்.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது.  “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம்.  இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்]  முனைந்துள்ளது.  அமெரிக்கன் 1000 மெகாவாட் ஒரு நிலையம் நிறுவ, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம். சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன.  நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ்  நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும்.  ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.

    Image result for indian electric power generation

    Information

    1. https://www.iaea.org/newscenter/news/the-use-of-nuclear-power-beyond-generating-electricity-non-electric-applications
    2. https://www.iaea.org/topics/non-electric-applications
    3. https://www.iaea.org/newscenter/news/nuclear-and-renewables-modelling-tool-to-evaluate-hybrid-energy-systems
    4. https://www.iaea.org/topics/non-electric-applications/nuclear-hydrogen-production
    5. https://www.sciencedirect.com/science/article/pii/B978012818483700010X
    6. https://www.cnbc.com/2021/02/25/bill-gates-nuclear-power-will-absolutely-be-politically-acceptable.html
    7. https://nuclearsafety.gc.ca/eng/reactors/research-reactors/other-reactor-facilities/small-modular-reactors.cfm
    8. https://www.anl.gov/article/10-myths-about-nuclear-energy

    Share
  • ஓம் எனும் பிரணவ ரூப நாயகா!

    ஓம் எனும் பிரணவ ரூப நாயகா!

    உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றிய ‘ஓம் எனும் பிரணவ ரூப நாயகா’ என்ற பாடலைத் திருமதி விஜயலட்சுமியின் குரலில் கேளுங்கள். 72 வயதிலும் இனிமையாகப் பாட முடியும்; திறமைக்கு முதுமை ஒரு தடையில்லை என இவர் நிரூபிக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வல்லமைக்கு நன்கொடை தாரீர்

    வல்லமைக்கு நன்கொடை தாரீர்

    வல்லமை மின்னிதழ் (www.vallamai.com), 12ஆம் ஆண்டில் நடைபயில்வதை அறிவீர்கள். தமிழில் ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் முதல் இதழ் வல்லமை. பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தை இரண்டு ஆண்டுகள் பெற்றிருந்த இதழ். ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட, ஆய்வாளர்களிடம் கட்டணம் பெறாத இதழ். முற்றிலும் இலவசமாகச் செயல்படுகிறது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேலான ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம்.

    வல்லமைக்கு நிதியாதாரம் எதுவும் இல்லை. ஆயினும் ஆண்டுதோறும் சில கட்டணங்களை நாம் செலுத்தவேண்டி இருக்கிறது. தளப்பெயரைப் புதுப்பித்தல், வழங்கிக் கட்டணம், வலைத்தள நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் நமக்கு இன்றியமையாத செலவுகள் உள்ளன. இதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொதுவில் நன்கொடை கோருகிறோம்.

    வழங்கிக்கு 2019ஆம் ஆண்டே மூன்றாண்டுகளுக்கும் சேர்த்துக் கட்டணம் செலுத்தியுள்ளோம் (அப்படிச் செலுத்தினால் கட்டணம் சற்றுக் குறைவாக இருந்தது). அந்தச் சேவை, 2022 ஆகஸ்டு வரை கிடைக்கும். அதன் பிறகு அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    இப்போது வலைத்தள நிர்வாகிக்கு ரூ.12 ஆயிரம் (ஆண்டுக்கு), தளப் பெயர் புதுப்பித்தலுக்கு ரூ.1 ஆயிரம் என 13 ஆயிரம் தேவை. பேராசிரியர் ம.இராமச்சந்திரன், ரூ.3 ஆயிரம் நன்கொடை வழங்கியுள்ளார். எனவே இப்போது 10 ஆயிரம் நன்கொடை கிடைத்தால், அடுத்த ஆண்டு ஆகஸ்டு வரை சிக்கல் இருக்காது. அதன் பிறகு புதிய நன்கொடைகள் தேவைப்படும்.

    எனவே, வல்லமை தொடர்ந்து செயல்பட, அருள்கூர்ந்து நன்கொடை வழங்கி, உதவ வேண்டுகிறோம்.

    உங்கள் நன்கொடைகளைக் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்புங்கள்.

    Account Name: Annakannan K
    Account No: 602701508602
    Bank Name: ICICI Bank
    Bank Address: No-101, 3rd Ave, A Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600102
    IFSC Code: ICIC0006027
    Swift Code: ICICINBBNRI

    PhonePe / Google Pay / UPI மூலமாகப் பணம் அனுப்ப: annakannan@ybl, annakannan@okicici

    உங்கள் பங்களிப்பு மூலமாக வல்லமையை வலிமைப்படுத்துங்கள்.

    அன்புடன் என்றும்
    அண்ணாகண்ணன்
    நிறுவனர் & முதன்மை ஆசிரியர்
    வல்லமை மின்னிதழ்
    செல்பேசி: 9841120975

    Share
  • தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா? யாருக்கு இது ஏற்றது? எப்படி முதலீடு செய்யலாம்? எவ்வளவு லாபம் கிடைக்கும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Please follow few tips for all our welfare

    Please follow few tips for all our welfare

    Baskar Seshadri

    Please avoid long hours of shopping

    Make Purchases Locally and avoid travel

    Spend not more than one Hour or so

    Go well with Mask and hold sanitizer on Hand

    Avoid Group shopping

    Avoid Joints if possible and Cool Drinks

    Make a quicky buy and rush back

    Avoid Public Transport

    Don’t stay long out.

    If Not vaccinated avoid outing

    Wear Gloves if you can

    Filter Visitors of all Kinds in Premises

    —————————————–

    Let’s Drive Covid Out soon

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 38

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 38

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அகத்திணை விளக்கும் புறத்திணை உவமங்கள் – 2

    உவமம் செய்யுளணியாகக் கருதப்பட்டது தமிழக வரலாற்றில்  வடமொழித் தாக்கம் மிகுந்திருந்த பிற்பட்ட காலத்தில் என்பது நினைவுகூரத்தக்கது. வேதனை என்னவென்றால் பழந்தமிழ்ப் பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்க்கவிதை மரபறிந்த அறிஞர் பலரும்கூடச் சங்க இலக்கிய உவமப் பதிவுகளை ‘உவமையணி’ எனக் கருதி மயங்கியதும் வெளிப்படுத்தியதுமாகும். சொல்ல வந்த பொருளைப் புலப்படுத்துவதற்குக் கருவியாக இருந்தது உவமம். வெறும் அழகியலுக்காகப் பயன்படுவது உவமையணி. முன்னது பொருளோடு கலந்திருப்பது. பின்னது செய்யுளுக்குப் புறம்பாக நிற்பது. முன்னது உடம்பிற்குத் தோலாகி அரணாகும். பின்னது மேனிக்கு அணியாகி மினுக்கும். நுட்பமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மை இது. படைப்பாளனால் படைக்கப்படும் பாத்திரங்களுக்கும் அப்பாத்திரங்கள் பேசும் சொற்களுக்கும் பொருத்தம் இருத்தல் வேண்டும் என்பது படைப்புக் கொள்கை. திறனாய்வுக் கண்காணிப்பில் இது வெளிப்படும். சான்றாகக் கலாய் பூசுகிறவன் கலித்தொகையின் உள்ளுறை உவமம் பற்றிப் பேசினால் அது பொருந்தாமல் போய்விடும். தான் சென்று அறியாத இடத்துப் பொருளை ஒருத்தி உவமமாகச் சொன்னால் அதில் நம்பகத்தன்மையிருக்காது. இந்தக் கொள்கையைப் பரணர் கடைப்பிடிக்கிறார். அதுதான் அவரது தனிச்சிறப்பு. வரலாற்று நிகழ்வுகளாகிய புறத்திணைச் செய்திகளை அகத்திணை விளக்கங்களுக்கு அவர் பயன்படுத்துகிறபோது தோழி முதலிய அகத்திணை மாந்தர்களின் பொது அறிவைத் தனது கவனத்திற் கொள்கிறார். திணை, தலைவி, செவிலி என்னும் வட்டத்திற்குள் சுழலும் தோழி கண்காணாப் போர்க்களத்து ஆர்ப்பினை உவமம் சொல்கிறாள் என்றால் தோழியாகிய அப்பாத்திரத்தின் பொது அறிவைப் பரணர் வெளிப்படுத்திக் காட்டுகிறார் என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் சென்ற கட்டுரையை இந்தக் கட்டுரை வழிமொழிந்து தொடர்கிறது.

    உவட்டாத உவமப் பந்தி

    இரவுக்குறி காண, தான் வந்திருப்பதைத் தலைவியிடம் தெரிவிக்கும் ஊடகம் இன்றித் தவிக்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்வதாக அமைந்த பாட்டு, தன் வருகையை அறிந்தால் ‘இரும்பல் ஒலி கூந்தலையுடைய அவள் மகிழ்ச்சியடைவாள் என்பது’ மட்டுமே துறைவிளக்கம். இந்தத் துறைவிளக்கத்தை உவமப்பந்தியில் வைத்துப் பரிமாறுகிறார் பரணர். ‘கூந்தலையுடைய தலைவி’ எனச் சொன்ன பரணர் அந்தக் கூந்தலின் நறுமணத்திற்கு வல்வில் ஓரியின் கானகத்து மணத்தை ஒப்பிடுகிறார். ‘அத்தம்’ என்பது காட்டுவழி. “கல்லதர் அத்தம் கடக்க யாவதும்” என்பது சிலப்பதிகாரம். அந்தப் பகுதியில் விளைந்திருக்கும் குமிழ மரத்தின் வளைந்த மூக்கினை உடைய கனிகள் அவ்விடத்தே விளையாடும் மான்களுக்கு உணவாகி  மணம் கமழும் காடு.

    “அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
    எறிமட மாற்கு வல்சி ஆகும்
    வல்வில் ஓரி கானம் நாறி
    இரும்பல் ஒலி வரும் கூந்தல்
    பெரும்பே துறுவள் வந்தனம் எனவே”  (நற். 6)

    ஆயிரம் காடுகளை அறிந்தவர் பரணர். இந்தப் பாட்டில் வல்வில் ஓரி என்னும் வள்ளலின் காட்டையே முன்னிறுத்துகிறார் என்பதுதான் உவமச்சிறப்பு. இனித், தலைவியின் ஒட்டுமொத்த நலனுக்கு ஓரியின் கானகத்தை உவமமாக்கிய பரணர்,

    “நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
    நார் உரித்தன்ன மதனில் மாமைக்
    குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண்
    திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு
    எய்தச் சென்று செப்புநற் பெறினே
    ‘இவர் யார்  என்குவள் அல்லள்! முனாஅது”

    என்னும் வரிகளில் அவள் மேனியில் படர்ந்திருக்கும் மாமை நிறத்திற்கு ஆம்பலின் உரித்த தண்டின் நிறத்தையும், அவளுடைய குளிர்ச்சியான கண்ணிற்குக் குவளை மலரையும் உவமித்துக் காட்டியிருப்பது மரபு பற்றியது என்க. மாமை, பசலை என்னும் தலைவி மேனியின் நிறவேறுபாடுகள் இரண்டாயினும் மாமை குறிஞ்சிக்குரியது. பசலை பாலைக்குரியது. இதன் நுண்ணியத்தைத்,

    “திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
    புதல் இவர் பீரின் எதிர்மலர் கடுப்ப
    பசலை பாய்ந்த நுதலேன் ஆகி” (அகம். 135)

    என்னும் அகத்தானும்,

    “இனி பசந்தன்று என் மாமைக் கவினே”  (ஐங்.35)

    என்னும் ஐங்குறுநூற்றானும்,

    “பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை அல்குல் என் மாமை கவினே (குறுந். 27)

    என்னும் குறுந்தொகையானும் அறிந்து கொள்ளலாம். மாமை உடலுறுப்புக்களின் வண்ணம். பசலை தலைவனின் பிரிவாற்றாமையால் தலைவி உறும் நோய்!

    தலைவன் அடைந்த தண்ணுமை அதிர்ச்சி

    தலைவியை விட்டுப் புறத்தொழுக்கமாகிய பரத்தைமாட்டுச் சென்ற தலைவன், தலைவி பற்றிய எண்ணம் மீதூர மீண்டும் தலைவிபால் திரும்புகிறான். இந்நாள் வரை தன்னுடன் இருந்த தலைவனின் பிரிவைத் தாங்காத பரத்தை அவனுக்குப் பாங்காயினார் செவியில் விழுமாறு தன்னைச் சார்ந்த விறலியர்க்குக் கூறுதல்போல் தலைவனுடைய இயல்பைப் பழிக்கிறாள்.

    “முனை ஊர்ப்
    பல் ஆ நெடுநிரை வில்லின் ஒய்யும்
    தேர்வண் மலையன் முந்தை பேர் இசைப்
    புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
    மண்ணார் கண்ணின் அதிரும்” (நற். 100)

    தன்னுடைய ஐம்பாலாகிய கூந்தலினைப் பற்றித் தன்னுடைய வளையல்களைப் பற்றிய அவன் செயலைத் தலைவிபால் சொன்னால் அவன் அதிர்ச்சி அடைவான். அந்த அதிர்ச்சி எதனைப் போன்றிருந்தது என்பதற்குத்தான் மேலே உள்ள மலையமான் திருமுடிக்காரியின் முரசின் மார்ச்சனை வைத்த கண்ணிடம் அதிர்வதை உவமமாக்குகிறார் பரணர். மன்னனிடம் பரிசுபெறும் நோக்கத்துடன் வரும் கூத்தர்கள் முழவினை முழங்குகிறபோது உண்டாகும் அதிர்ச்சி என்று உவமித்திருந்தாலும் பாட்டின் சிறப்பு குன்றப்போவதில்லை. ஆனால் பரணர் மலையமானின் வள்ளன்மையைப் பாராட்டும் புறத்திணை நிகழ்வை ஒரு நோக்கத்திற்காகவே உவமமாக்கியிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.

    அழகுக்கு ஆயிரம் உவமங்கள்

    ஒரு பொருளை விளக்க ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைச் சொல்லுகிற நெறி சங்க இலக்கியங்களிலேயே தொடங்கிவிடுகிறது. அவ்வாறு அடுக்கிவரும் உவமங்கள் வெளிப்படுத்தப்படும் சூழல்கள் மிகவும் கவனத்திற்குரியது. தலைவியைச் சந்திக்க இயலாத ஆற்றாமை காரணமாகப் புலம்பும் தலைவன் தலைவியின் அழகைப் பல உவமங்களால் சித்திரிக்கிறான். இது இயல்பு. குழந்தையைக் ‘கண்ணே மணியே! முத்தே!’ என்பது போல.

    “இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
    அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை
    வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
    பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
    பாரத் தன்ன”

    (இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

    இவற்றுள் முந்தைய இரண்டு வரிகளில் மிஞிலியின் குறிஞ்சியைப் பாடிய பரணர் அடுத்த மூன்று வரிகளில் அவனுடைய புறப்பொலிவை வண்ணனை செய்து அவன் நாட்டைத் தலைவியின் கூந்தல் பொலிவுக்கு உவமமாக்குகிறார். இனித் தொடர்ந்து,

    “வார மார்பின்
    சிறுகோல் சென்னி ஆரேற்று அன்ன”

    (இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

    எனச் சோழனை உவமப்பொருள் ஆக்குகின்றார். ‘ஆரேற்று’ என்பது தேரோட்டம் என்பது போன்றதொரு திருவிழா. சென்னியாகிய சோழன் தனக்கடங்கிய தலைவர்களை வரவேற்றுப் பாராட்டி ஆத்திமாலைப் போற்றும் ஒரு திருவிழா. அந்தத் திருவிழாவின் பொலிவை உவமிக்கும் பரணர் தொடர்ந்து,

    “மாரி வண்மகிழ் ஓலிகொல்லிக்
    கலிமயிற் கலாவத்து அன்ன”

    (இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

    என நிமிர்ந்து நிற்கும் செருக்கினால் பொலிவு பெற்ற மயிலை உவமிக்கிறார் பரணர். இந்த மயில் ‘மாரி போல வரையாது வழங்கியதால் புகழ் பெற்ற ஓரி என்பானின் கொல்லிமலையில் வாழும் மயில்’ என்கிறார். ஒரு பொருளின் பொலிவுக்குத் தனித்தன்மையுடைய மூன்று பொருள்களை உவமமாகக் கொள்வது கவனிக்கத்தக்கது.  நாடு, திருவிழா, மயில் என்னும் மூன்று பொருள்களும் தலைவியின் அழகுக்கு உவமமாக வந்துள்ளன என்பதை அறியலாம்.

    நன்னன் கொடுமையினும் நின்னது பெரிதே!

    பரத்தையர் மாட்டுச் சென்று மீண்ட தலைவன் வாயில் நேர்கிறான். தலைவி வாயில் மறுத்த நிலையில் இருவருக்கும் நட்பான தோழி, இணக்கமான சூழலை உருவாக்க எத்தனிக்கிறாள். தலைவன் மாட்டுத் தலைவிக்குள்ள இரக்கம் அவள் அறிந்ததாதலின் பெருந்தோள் செல்வமாகிய தலைவியை உயர்த்தியும் தலைவனின் பரத்தையர் பிரிவைக் கொடுமையாகச் சித்திரித்தும் வாயில் நேர்கிறாள். இந்தச்சூழலில் தலைவனின் செயல் கொடுமைக்கு நன்னன் என்பானின் கொடுமையை உவமமாக்குகிறார் பரணர்.

    “……………………………………………..பொற்புடை
    விரியுளை பொலிந்த பரியுடை நன்மான்
    வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்
    கூந்தல் முரற்சியின் கொடிதே!

    மறப்பல் மாதோ நின் விறல்தகை மையே!” (நற்.270)

    பகையரசருடைய உரிமை மகளிரை அவர்தம் கூந்தல் பற்றி இழுத்து வருதல் அக்காலப் போரறங்களுள் ஒன்றாகாதாயினும் நன்னன் முதலியோர் அத்தகைய மறச்செயலைச் செய்திருப்பதை இதனால் அறியலாம். அதனால்தான் அந்தச் செயலை எதிர்மறையால் பரணர் பதிவு செய்திருக்கிறார். ‘கூந்தல் முரற்சியின்’ என்றவிடத்து முன்பு சொன்னது போல ‘இன்’ என்னும் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளில் வந்து, உவம உருபுக்கான பணியினைச் செய்தது என்பதாம்.

    இருப்பை அன்ன தொல்கவின்

    ‘இருப்பை’ என்பது தற்காலத்துப் புதுக்கோட்டை மாவட்டத்துள் இருக்கும் இலுப்பூர் என்பது அறிஞர் கருத்து. அவ்வூர்ச் சிறப்பையும் அதனையாண்ட விரான் என்பானின் வள்ளன்மையும் கூறி அதனைத் தலைவியின் எழிலுக்கு உவமமாக்கியிருக்கிறார் பரணர்.

    “வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
    பழனப் பல்புள் இரீஇயக் கழனி
    வாங்குசினை மருதத்துத் தூங்குதுணர் உதிரும்
    தேர்வண் விராஅன் இருப்பை அன்ன என்

    தொல்கவின் தொலையினும் தொலைக!“ (நற். 350)

    தொல்கவின் என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகர், ‘பழைய இயற்கை அழகு’ (1234 -1235) என உரை கண்டிருப்பதால் அவ்வுரை நயத்தைப் பரணர் பாட்டின் பொருளுக்கு ஏற்றி உவமத்தை நோக்கினால் தேர்வண் விராஅன் இருப்பையின் அழகு இயற்கை என்பது பெறப்படும்.

    “தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
    மலிபுனல் வாயல் இருப்பை அன்ன என்
    ஓலியல் கூந்தல் நலம்” (260)

    என்னும் மற்றொரு பாட்டிலும் இருப்பையை உவமமாக்கிக் கூறுகிறார் பரணர். இந்தப் பாட்டில் தலைவியின் அழகு பெரிதும் பொலிவு பெறுவது  கூந்தலால் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்த எண்ணிய பரணர், “இருப்பை அன்ன என் ஒலியல் கூந்தல் நலம்” என்றது காண்க.  முன்னதில் தேர்வண் விராஅன் என்றவர் இப்பாட்டில் தெவ்வர் தேய்த்த செவ்வேல் வயவன் என்கிறார். தலைவியின் அழகுக்கு விராஅன் என்பானின் இயற்கை வளம் நிரம்பிய இருப்பை நகரத்தை உவமிப்பதில் அவருடைய உவமக் கோட்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. ‘விராஅன் மலை’ என்பது ‘விராலிமலை’ எனத் திரிதற்குக் காரணம் என்பதும்  ஈண்டுச் சுட்டுதற்குரியது.

    பிச்சையெடுக்கும் யானைபோல

    களவு நீட்டித்த தலைவன் தனது பாங்காயினார் வழி, மேலும் நீட்டிக்க விழைய, அது கண்ட தோழி “அயலான் ஒருவனும் தலைவியை மணந்து கொள்ளும் விருப்பத்துடன் வந்து போனான்” என்று அச்சுறுத்துவதுபோல வரைவு கடாவுகிறாள். இந்தப் பாட்டில் மூன்று வகையான உவமங்களைப் பரணர் அடுக்கிக்காட்டுகிறார். இந்த அடுக்கினை முன்னிருந்து பின்னாகவும் ரசிக்கலாம். பின்னிருந்து முன்னாகவும் ரசிக்கலாம். இது அவரவர் சுவையுணர் திறத்தினைப் பொருத்தது. தலைவனுக்காக வந்தவன் நீட்டித்து நிற்கிறானாம். எது போல?

    “நெய் வார்ந்தன்ன துய்யடங்கு நரம்பின்
    இரும்பான ஒக்கல் தலைவன் பெரும்புண்
    ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
    பிச்சை சூழ் பெருங்களிறு போல எம்
    அட்டில் ஓலை தொட்டனை நின்மே!” (நற். 300)

    வாயிலாக வந்த பாணனை நோக்கித் தோழி கூறும் பகுதி இது. “பெருந்தேரோடு வந்த அவனோடு நீயும் செல்லாமல் “போர்க்களத்திலே பெரும்புண்பட்டவனாகிய அழகினைக்கொண்ட தழும்பன என்பானின் ஊணூரிடத்தில் உள்ள பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றலைப் போல நிற்கிறாய்” என்று உடன் வந்த பாணனை ஏசுகிறாள் தோழி. போர்க்களத்துக் களிறு வேறு. பிச்சைக்கு வந்த பெருங்களிறு வேறு.  யானை எங்கே நிற்கிறதாம்? அட்டில் சாலை ஓலைக்குடிசையின் விளிம்பினைத் தொட்டுக் கொண்டு நிற்கிறதாம்!, பாணனுக்கு உவமமாக வந்தது யானை என்பது சரி!. ஆனால் அந்த யானைக்கு வரலாறொன்று இருக்கிறது. தழும்பனின் அந்த வரலாற்றைப் பரணர் யானைக்கு அடையாக்குகிறார். இது முதல் நிலை. இனி இரண்டாவது நிலை. பாணன் யாருக்கு வாயிலாக வருகிறான் என்றால் மருத நிலத் தலைவனுக்குப் பாங்காக வருகிறான். பணிவோடு வருகிறான். அந்த மருத நிலம் எத்தகையது? இங்கே இன்னொரு உவமத்தை நேரடியாகச் சொல்லாமல் பரணர் உள்ளுறையாக அமைக்கிறார்.

    “உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
    தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன்!”

    என்று கூறுகிறார். மருத நிலத் தடாகத்தைத் தன் வண்ணனைக்கு உட்படுத்தும் பரணர் தாமரைக்கு இறைஞ்சும் ஆம்பலுக்குச்,

    ““சுடர்த்தொடி கோமகள் சினந்தென அதன் எதிர்
    மடத்தகை ஆயம் கைதொழுது ஆங்கு” (நற். 006)

    கோமகளைத் தொழும் பணிமகள் ஆயத்தை உவமமாக்குகிறார். ஆம்பல் வணங்கும் தடாகத்துத் தாமரையை வணங்கும் ஆம்பல் கூட்டத்திற்குத் தேவியை வணங்கும் மகளிர் ஆயத்தை உவமமாக்கியது இயற்கைக்குச் செயற்கை உவமமாகியது என்க. இனிப் பெருங்களிறே பாங்கனுக்கு உவமமாக நிற்க, அந்தக் களிற்றைத் தழும்பன் ஊரோடு சார்த்திச் சொன்னது வரலாற்று உவமமாம்.

    நிறைவுரை

    பெண்ணின் பொலிவோ அவள் கூந்தலின் பொலிவோ நுண்பொருள். நகரம் பருப்பொருள். நகரத்திற்கும் நங்கையின் கோலத்திற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. ஆனால் பரணர் நங்கையின் பொலிவுக்கும் சிதைவுக்கும் நகரத்தை உவமமாக்குகிறார் என்றால் அவற்றில் உள்ள நுண்ணியத்தைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். நகரம் மாற்றாரின் படையெடுப்புக்கு முன் என்றும் மாற்றாரின் படையெடுப்புக்குப் பின் எனவும் இருவகைப்படும். பரணர் முன்னதைத் தலைவனோடு இருந்த நிலைக்கும் பின்னதைத் தலைவனைப் பிரிந்த நிலைக்கும் உவமிக்கிறார் என்பதை உய்த்துணர்தல் வேண்டும். ‘தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது” எனத் துள்ளிக் குதிக்கும் தலைவனின் பின்புலக் காட்சியைப் போலவும் “தேரேது? சிலையேது? திருநாள் ஏது?” என்று பாடும் ஒரு தலைவியின் பின்புலக் காட்சியைப் போலவுமே பரணரின் உவமச் சித்திரிப்பின் உள்நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டால் அவரின் உவமக் கோட்பாடுகளையும் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானவையல்ல! புறத்திணை வரலாற்றுக் குறிப்புக்களை அகத்திணை இலக்கியத்தில் உவமமாகக் கையாளும் பரணரின் உவமக்கோட்டை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கையாலும் மதிப்பிடுதல் அரிது!

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(373)

    குறளின் கதிர்களாய்…(373)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(373)

    உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
    மடையாவாம் ஆயங் கொhளின்.

    – திருக்குறள் – 939(சூது)

    புதுக் கவிதையில்…

    உடுத்தும் உடை
    உரிய செல்வம்
    உண்ண உணவு
    உயர்ந்த புகழெனும் பெருமை
    உயர்கல்வி இவை ஐந்தும்
    சூதாட்டத்தை விரும்பி
    மேற்கொள்ளும்
    மன்னனிடம்
    சென்று சேராதே…!

    குறும்பாவில்…

    உடை செல்வம் உணவு,
    புகழ் கல்வி என்னும் ஐந்தும்
    சூதாடும் மன்னனைச் சேராதே…!

    மரபுக் கவிதையில்…

    மானம் காக்க உடுத்துமுடை
    மண்ணி லீட்டும் பெருஞ்செல்வம்,
    பான முடனே உணவதுவும்
    பாரில் புகழாம் பெருமையதும்,
    வான மெனவே உயர்கல்வி
    வரிசை யாக யிவையைந்தும்,
    மான மின்றிச் சூதாடும்
    மன்ன வர்க்கும் வாராதே…!

    லிமரைக்கூ…

    சூதாம் ஆட்டத்தில் சேராதே,
    உடையுணவு செல்வம் புகழ்கல்வி இவையைந்தும்
    சூதாடும் மன்னவர்க்கும் வாராதே…!

    கிராமிய பாணியில்…

    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    ஆளக்கெடுக்கும் சூதாட்டம்
    ஆடவே ஆடாத..

    உடுத்துற ஒட
    சேருற செல்வம்
    உண்ணுற ஒணவு
    ஒயந்த மரியாத
    பெரிய படிப்பு
    இந்த அஞ்சும்
    சூதாடும் ராசாவுக்கும்
    கெடைக்கவே கெடைக்காது..

    அதால
    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    ஆளக்கெடுக்கும் சூதாட்டம்
    ஆடவே ஆடாத…!

    Share
  • காந்திய மாமணி T D திருமலை நூற்றாண்டு நிறைவு நாள் – அக்டோபர் 26. 2021

    காந்திய மாமணி T D திருமலை நூற்றாண்டு நிறைவு நாள் – அக்டோபர் 26. 2021

    சுபாஷிணி திருமலை (T.D.திருமலை அவர்களின் மகள்)
    எழுத்தாளர், தலைவர், சிறுவாணி வாசகர் மையம்

    தடம் பதித்த தந்தை போற்றுதும்•••

    மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் எங்களது நண்பரும் ஓவியருமான பாலசுப்ரமணியன் என்னை எழுத்தாளர் பா ராகவன் அவர்களைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். என் கைகளில் இருந்த சில புத்தகங்களை அவருக்கு அளித்தேன்.

    அப்புத்தகங்களைக் கண்டு சந்தோஷிக்கும் போது , வாசிப்பைப் பரவலாக்கும் ஒரு இயக்கமாக “சிறுவாணி வாசக மையம்” என்ற அமைப்பைத் தலைமையேற்று நடத்துகிறார் என என்னை அறிமுகப்படுத்திவிட்டதோடு, மேலும் சிறப்பாக இவர் T.D. திருமலை என்னும் காந்தியவாதியின் மகள் சுபாஷிணி திருமலை என்றதும் “சட்” என்று இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.

    நாங்களும் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டோம்.

    ” காந்தியைப் பிடிக்காதோ? தவறான அறிமுகமாகிவிட்டதோ” என பயந்து விட்டேன்.

    “பாலுசார்! இதை முதலில் சொல்லக்கூடாதா!

    நீங்கள் வந்தது எனக்கு கௌரவம் சந்தோஷம் எல்லாம். அமருங்கள் “என்று எங்களை அமர்த்தித் தானும் அமர்ந்தார்.

    “நான் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தி நகரில் தக்கர்பாபா வளாகத்தில் உள்ள ஒரு குடிலில் உங்கள் தந்தையைச் சந்தித்தேன். 3 மணிநேரம் பேசினோம் . கிளம்பும்போது “காந்தி மண்டபத்தில் உள்ள நூலகத்தில் காந்தி பற்றிய நூல்களைப் படித்துப்பார்” என்றார். அந்த சந்திப்பு, அந்த வார்த்தைகள் என் வாழ்வில் திருப்புமுனை. “

    “தினந்தோறும் அங்கு போய் நூலகம் திறக்கும் முன்பே போய்விடுவேன். நூலகம் மூடும்போதுதான் நானும் வெளியில் வருவேன். இது நிகழாமல் இருந்திருந்தால் நான் வேறு மாதிரி உருவாகிஇருப்பேன்” என்றார்.
    நாங்கள் இருவரும் வாயடைத்துப்போனோம்.

    ஆம். இன்று என்று இல்லை. என்றும் திருமலை மகள் என்பதுதான் என் முகவரி.

    இதுதான் எனது 55 ஆவது வயதில் எனக்கு “செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில்” பணிபுரிய வாய்ப்பு நல்கியது. அந்நிறுவனத்திறகு வரும் பேராசிரியர்கள், ஆளுமைகள் அனைவரும் என்னைத் திருமலை மகளா என மகிழ்ந்து என் தந்தை பற்றி சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வர். அவருக்குள்ள இலக்கியத்தின் பால் உள்ள ஈடுபாடுதான் இதற்கு காரணம்.

    ஜஸ்டிஸ் மகராஜன் அவர்களின் நட்பால் ரசிகமணி டி கே சி அறிமுகமானார். அவருடைய ரசனையின் பால் கொண்ட மகிழ்வால் “உலக இதய ஒலி” என்ற காலாண்டு இதழை நடத்தினார். அவரது ஆசிரியர் அ சீனிவாசராகவன் அவர்கள் ஆவார். அப்போதைய இலக்கிய ஆளுமைகள் தெ பொ மீ அவர்களிலிருந்து அனைவருடனும் நட்பு கொண்டு இலக்கியத்தின் மூலம் காந்தியம் வளர்த்தார்.

    சித்தாந்தங்கள் வேறாக இருந்தாலும் இலக்கியத்தால் அன்பால் அனைவரிடமும் நட்பாக இருந்தார். அது தான்… அப்பா T.D.திருமலை.

    ஶ்ரீ வில்லிபுத்தூரில் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் தங்கள் செல்வத்தை நாட்டுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்கும், ஏழைஎளியோர்க்கும் அளித்து விட்டு ஏழ்மையை உவந்தே ஏற்றுக்கொண்டவர்கள். அப்பா அன்றையத் தேவையான வெள்ளையனே வெளியேறு , போராட்டத்தில் தொடங்கி பூதான இயக்கத்தில் கலந்து கொண்டவர். அவ்வூர் முனிசிபல் சேர்மனாக பதவி ஏற்று தண்ணீர் வசதி செய்தல் போன்ற நற்பணிகள் செய்தவர்.

    பின் மதுரையில் காந்தி மியூசியத்திலுள்ள காந்தி நினைவுநிதியில் தத்துவப் பிரசாரகராக பணியில் சேர்ந்து, தன் இறுதிநாள்வரை காந்தியை இளையதலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் செலவிட்டார்.

    எங்களது இந்த உறவின் உன்னதம் பல நற்பணிகள் செய்வதற்கு ஆதரவாக இருக்கிறது. நான் கோவை நண்பர்களோடு இணைந்து நடத்தும் சிறுவாணி வாசகர் மையத்திற்காக பல இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும் எளிதில் அணுக முடிகிறது. ஆகச்சிறந்த ஓவியர்கள் என் நண்பர்கள். அனைத்தும் என் தந்தைவழி கிட்டியதுதான்.

    என்தாய்க்கு என தந்தை பற்றிப் புகார் இல்லை. மாறாக பெருமிதம் இருந்தது. தந்தையை எதிர்பார்க்காது தன் உழைப்பால் எங்களை வளர்த்தார். இது எங்களுக்கு இருவர்பாலும் மதிப்பும் மரியாதையையும் உணரவைத்தது…
    உறவுகளை நட்பைப் பேணிகாக்க சொல்லிக்கொடுத்தது.

    எங்கள் அம்மாவின் அறிவுரைப்படி எங்கள் கல்வி, உழைப்பு, அதனுடன் பணிவு போன்றவை எங்கள் வாழ்வின் ஆதாரமானது. அம்மாவின் நிர்வாகம் மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

    அப்பா இல்லாவிட்டாலும் (அப்பா மாதம் ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார்) அவரது வாழ்வியல் எங்களுக்குப் பாடமாக அமைந்தது. மனம் , உணர்வுகள் மயங்கும் போது அறிவு மேலோங்கி நிலையை நேர்செய்யும்.

    அறிவு தடுமாறும்போது உணர்வு உண்மையை உணர்த்தி நிலைநிறுத்தும்.

    கல்லூரிப் படிப்புக் காலம் வரை மதுரை காந்தி மியூஸித்தில்தான் பெரும்பகுதி இருப்போம். முன்னாள்பிரதமர் நேரு, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர். உசேன், காமராஜர் பக்தவத்சலம் போன்ற தலைவரகள் ஆகியோர்கள் அங்கு வரும்போது நாங்களும் அவர்களுடன் இருப்போம். நல்ல கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் போன்ற இலக்கிய கூட்டங்கள் நடக்கும். ஞாயிறு தோறும் நல்ல படங்கள் காட்டுவார்கள். இப்படி நல்ல விஷயங்களோடு வளர்ந்தோம். அப்பாவுடன் சென்னை வந்தபோது சென்னையில் அப்பா நடத்தும் காந்தியக் கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், போன்றவற்றில் கலந்து கொள்வோம். இதெல்லாம் நாங்களாகத்தான் வருவோம் . என்றைக்கும் எங்களிடம் அப்பா எவற்றையும் திணித்ததில்லை.

    மேலும் எங்களுக்கு தத்துவஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியையும் அறிமுகப்படுத்தினார். சென்னையில் டிசம்பர் மாதங்களில் அவரது இடமான வசந்தவிஹாரில் கூட்டம் நடக்கும். அப்பா போகும்போது நாங்கள் உடன் போவோம். புரியறமாதிரி இருக்கும் . ஆனால் கூட்டம் முடிந்து அப்பா மற்றும் அவர் நண்பர்களுடன் திரும்பிவரும்போது அன்றைய பேச்சைப் பற்றிய விவாதம் பிரமாதமாக அமையும். அப்போது எங்களுக்குத் தெளிவாகி விடும்.

    என் தந்தையோ அவரது தந்தையோ பணத்தை விட்டு சென்று இருந்தால் பணக்காரர்களாக இருந்து இருப்போம். இந்த விழுமியங்களும் பெருமிதமும் எங்களுக்குக் கிடைத்திருக்காது.

    என் தந்தை எங்களைக் கவனிக்காது சமூகத்தைக் கவனித்ததால் நாங்கள் எதையும் இழக்கவில்லை. மாறாக. பல உறவுகளையும் உன்னதங்களையும் பண்பாட்டையும் பணிவுடன் மேன்மையையும் பெற்றோம். அவரது நற்பணிகளால் அவரது ஆசீர்வாதத்தால் நாங்கள், எங்கள் குடும்பம், நல்ல மருமகன்களையும் நல்ல மருமகள்களையும் சிறந்த பேரன் பெயர்த்திகளையும் பெற்றிருக்கிறோம் என்னும் பகிர்தலையன்றி பிறிதில்லை.

    அன்பின் விரிவாக்கம்தான் எங்கள் குடும்பம். திருமலை குடும்பம் என்பது காந்தி குடும்பம் ஆகியது. காந்தி கல்வி நிலையத்தில் உள்ளவர்கள் இணைந்து விரிவாக்கினோம். தென்காசியிலிருந்து டி .கே. சி குடும்பத்தார் கி .ரா.வின் குடும்பமும் இணைந்தது. பின் கோவை சிறுவாணி வாசகர் மையம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் குடும்பம், எழுத்தாளர்நாஞ்சில் நாடன் , ஆலோசகர் சொல்வனம் வ ஶ்ரீநிவாசன் , ராக் அமைப்பாளர் ரவீந்திரன் குடும்பம் , ஆடிட்டர் கிருஷ்ணகுமார் என பல்கிப்பெருகி மிகப்பெரிய குடும்பம் ஆகிவிட்டோம்.

    என் தந்தை வாழந்த வாழ்க்கை எங்களுக்கு சாத்தியமாக்கிக்கொடுத்துள்ளது.

    வண்ணதாசன், வண்ணநிலவன், சந்தியா நடராஜன் ஆகியோர் தாண்டி ரவி சுப்ரமணியன், சண்முகம் சுப்ரமணியம் என்று தொடங்கி இளைய தலைமுறைகள் வரை ஒரு நட்பு கிடைத்திருக்கிறதே!

    வரும் அக்டோபர் 26 அன்று தந்தையின் 100 வது பிறந்தநாள் பூர்த்தியாகிறது். அவரது திருநட்சத்திரம் மகம் 31 ஆம் தேதி வருவதாலும் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதாலும் அன்று விமரிசையாக அவர் பணிபுரிந்த காந்தி மியூஸியத்தில் நடைபெறவிருக்கிறது.

    இவ்விழாவை ஆறு காந்தியநிறுவனங்கள்- புது தில்லி நேஷனல் அருங்காட்சியகம், சென்னை காந்தி கல்வி நிலையம், மதுரை தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை தமிழ்நாடு சர்வோதய மண்டல், மதுரை சர்வோதய இலக்கிய பண்ணை, மதுரை காந்திய இலக்கிய சங்கம் ஆகியவை விழா எடுத்து சிறப்பிக்கப் போகின்றன.

    இது எங்கள் குடும்பத்தாருக்கு மிகவும் பெருமையும் சந்தோஷமும் ஆகும் .

    அப்பா T.D. திருமலை எழுதிய “வினோபா” வாழ்க்கை வரலாற்று நூலும், அம்மா சீதா திருமலை இந்தியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த காந்தியின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய “தியாக உள்ளம்” என்னும் நூலும் மீள்பதிப்பபாக விழாவில் வெளியிடுகிறோம்.

    மேலும் அப்பாவின் வாழ்க்கை வரலாறை “மனதில் நிறைந்த மாமனிதர்” என்னும் நூலாக எங்களது சகோதரர் தி.விப்ரநாராயணன் எழுதியதும், அப்பாவைக் கதாநாயகனாக வைத்து “வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்று நண்பர் திரு கம்யூட் ராஜ் எழுதிய நாவலையும் முதற்பதிப்பாக விழாவில் வெளியிடுகிறோம். தவிர அப்பா 20 வருடங்கள் நடத்திய இலக்கிய இதழான “உலக இதய ஒலி”யின் முதல் இதழை அனைவருக்கும் அளிக்கிறோம்.

    முனைப்பாகப் பல தேசியத்தலைவர்கள்இருப்பினும் என் தந்தை T D திருமலை அவர்களுக்குத்தான் ஒரு நிறுவனம் அமைந்து இன்னமும் சிறப்பாக சென்னையில் காந்தி கல்வி நிலையமாகச் செயல்பட்டு, முனைவர் பிரேமா அண்ணாமலையால் சிறப்பாக இயங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

    அனைவரும் விழாவிற்கு வந்திருந்து ஆசீர்வதிக்குமாறு எங்கள் அனைவரின் சார்பில் கேட்டு கொள்கிறேன்.!

    Share
  • தேடப்படாத இலக்கியமாய் இருக்கும்  குண்டலகேசியும் வளையாபதியும்!

    தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    தமிழ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும்  தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடிய பின்னர்தான் ஆரம்பிப்பது என்பது வழமையாக இருந்து வருகிறது. தேடப்படாத இலக்கியமாக இருக்கின்ற குண்டலகேசியையும், வளையாபதியையும் பற்றி உங்கள் யாவருக்கும் எடுத்துச் சொல்ல வந்திருக்கும் இவ்வேளையில் – தமிழ் வாழ்த்தினை சொல்லாமல் ஆரம்பித்தால் அது சிறப்பாய இருக்காதல்லவா! ஆதாலால் தமிழ் அன்னைக்கான வாழ்த்தினை வழங்கி தேடப்படாத இலக்கியத்தை தேடலாம் என்று எண்ணுகின்றேன்.

    காதொளிரும் குண்டலத்தாள்
    கனிமொழியாள் வாழ்க
    கைக்கு வளையாபதி கொள்
    கன்னிகையாள் வாழ்க
    மேதகு மென்மார்பிடைச்
    சிந்தாமணியாள் வாழ்க
    மின்னுமணி மேகலை சூழ்
    மெல்லிடையாள் வாழ்க
    சீதமலர்ப் பாதமொலி
    சிலம்புடையாள் வாழ்க

    வாழ்த்துப் பாடி ஆகிவிட்டது. இனி விஷயத்துக்கு வருவோம்.

    காணக்கிடைக்காத காப்பியங்கள் என்று கருதப்படுவனதான் வளையாபதியும் குண்டல கேசியுமாகும். சிலம்பதிகாரத்துக்கோ, மணிமேகலைக்கோ, சீவக சிந்தாமணிக்கோ கொடுக் கப்படுகின்ற முக்கியத்துவங்கள் வளையாபதிக்கோ குண்டலகேசிக்கோ கொடுக்கப்படுவதி ல்லை. இவை இரண்டைப் பற்றியும் யாருமே பெரிதாய் பேசுவதும் இல்லை. ஐம்பெரும் காப்பியங்கள் என்னும் நிலையில் இக்காப்பியங்கள் இரண்டும் காப்பிய வரிசையில் கடை சியாகவே வைக்கப் பட்டிருப்பதையும் கருத்திருத்த வேண்டும்.

    சிலம்புக்காவலர், சிலம்புச் செல்வர், என்றுதான் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. மணிமே கலையானது சிலம்போடு இணைக்கப்பட்டு “இரட்டைக் காப்பியங்கள்” என்று வியந்து கூறப்படுவதையும் காண் கின்றோம். இரட்டைக் காப்பியம் என்னும் பெயர் எப்படி வந்தது? யார் இவ்வாறு இணைத்தார்கள் என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது அநபாயச் சோழ மன்னன் மிகவும் விரும்பிப் படித்த காப்பியமாக சீவகசிந்தாமணி இருந்தது என்று அறிய முடிகிறது. சிற்றின்ப ரசம் பொருந்திய சிந்தாமணியினை அரசன் விடாமல் படித்துச் சுவைப்பதை சேக்கிழாரின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அநபாயனின் போக்கினை மாற்ற வேண்டுமென்று அல்லும் பகலும்  அமைச்சராய் இருந்த சேக்கிழார் எண்னினார். சேக்கிழாரின் எண்ணம் ஈடேறியதால் அநபாயன் மனம் மாறினான் என்றும் – இந்த மடை மாற்றத்துக்கு சேக்கிழாரின் பெரியபுராணம் என்னும் சைவசமயக் காப்பியம் காரணமாய் அமைந்தது என்பதையும் அறிகின்றோம்.

    ஆனால் காப்பிய வரிசையில் இடம் பெற்று நிற்கும் வளையாபதிக்கோ, குண்டல கேசி க்கோ இப்படியான ஒரு நிலை வரவில்லை என்பதையும் கருத்திருத்தல்  வேண்டும். என்றாலும் இவற்றை எல்லாம் மீறி இந்த இரண்டு காப்பியங்களும் பேசு பொருளாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே.அந்தக் காப்பியங்களைப் பற்றிப் பேசும் நிலையும் இன்று எனக்கும் வாய்த்திருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதே!

    ஆரம்பத்திலே பாடப்பட்ட தமிழ் வாழ்த்தினை எழுதியவருக்கும்-  குண்டலகேசி, வளையாபதி பற்றிய ஒரு ஆதங்கம் இருந்தே இருந்திருக்கிறது. அவரின் மனமிருந்த கருத்தே வாழ்த்தாய் மலர்ந்திருக்கிறது. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றுபாரதி போற்றுகின்றார். ஆனால் இந்த வாழ்த்துப் பாடியவரோ சற்று வித்தியாசமாய் பார்க்கிறார். தமிழ் அன்னை என்றவுடன் முதலில் தெரிவது அவளின் முகம்தானே! முகத்துக்குப் பின்தான் மற்றைய உறுப்புகள் வந்தமையும். பார்க்கப்டாத முக்கியத்துவம் கொடுக்கப்படாத – குண்டலகேசியை “காதொளிரும் குண்டலத்தாள்” என்று முதலில் காட்டுகிறார். பின்னர் அடுத்த நிலையில் வளையாபதியினை “கைக்குவளையா பதிகொள் “கனிமொழியாள் வாழ்க” என்று காட்டி தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்திய பின்புதான் – மென்மார்பிடைச் சிந்தாமணி என்றும், மின்னும் மேகலைசூழ் மெல்லிடை என்றும்  கடைசிசியில்த்தான் “சீதமலிப் பாதமலர் சிலம்புடையாள்” என்று ஐம்பெரும் காப்பிய வரிசையினையே மாற்றிப் பார்க்கும் ஒரு புதுமையை இப்புலவர் செய்திருக்கிறார் என்பதையும் கருத்திருத்தல் அவசியம் என்று எண்ணுகின்றேன். பார்க்கப்படாத தேடப்படாத நிலையில்  குண்டலகேசியும், வளையாபதியும், இருக்கக் கூடாது என்னும் மனக்குறை யினைப் போக்குவதாய் இந்த வாழ்த்து அமைகிறதல்லவா!

    கல்லூரிகளில் படிக்கும் காலத்தும், பல்கலைக்கழகங்களில் பயிலும் காலத்தும் – சிலம் பையும்,மணிமேகலையும், சிந்தாமணியையுமே முக்கியத்துவப்படுத்தி கற்பித்தார்கள். ஐம்பெரும் காப்பியம் என்று தமிழ் வகுப்புகளில் பாடம் நடத்தும் வேளையில் மட்டுமே, குண்டலகேசியினதும், வளையாபதியினதும், பெயர் உச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரண்டையும் பற்றிப் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதையும் சுட்டாமல் இருக்கவே  இயலவில்லை. அந்த அளவுக்கு குண்டலகேசியும், வளையாபதியும், பார்க்கப்படாத காப்பியங்களாகவே இருந்திருக்கின்றன. படிக்கின்ற காலத்தில் எனக்குள் ஒரு ஐயம் எழுந்தது. ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இடம்பெறும் வளையாபதியும், குண்டல கேசியும் அனாதை நிலையில் ஏன் பார்க்கப்படுகின்றன என்பதுதான் அது!

    எனக்கு ஆசான்களாய் அமைந்த ஒரு பேராசிரியரிடம் இதனைப் பற்றித் துணிந்து கேட்டுவிட்டேன். எனது ஐயத்தைக் கேட்ட பேராசான் சற்று யோசித்து விட்டு “நாங்கள் பாடம் நடத்தாவிட்டால் என்ன? பாடப்பகுதியில் சேர்க்கப்படாவிட்டால்த்தான் என்ன? வளையாபதியும், குண்டலகேசியும் இல்லை என்றுதான் ஆகிவிடுமா? ஐம்பெரும் காப்பி யங்கள் என்னும் வரிசையிலிருந்தும் அகற்றப்பட்டுத்தான் போய்விடுமா? ஒருக்காலும் போகவே மாட்டாது. பொது மக்கள் மத்தியில் அந்த இரண்டுமே மிகவும் சிறப்பாகப் போய்ச்சேர்ந்தே விட்டது. உனக்கு அது தெரியுமா? என்று என்னை நோக்கி ஒரு கேள்விச் சர த்தை எனது ஐயப்பாட்டுக்கு மறுமொழியாக அவர் விடுத்தார்”

    “நான் மெளனமாய் இருந்தேன்”. என் ஆசானே பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் அவர்கள். அவர் முதலமைச்சர் நிலைக்கு வருவதற்கு முன்பே தேடப்படாத இலக்கியம் என்னும் குண்டலகேசியைத் தேர்ந்தெடுத்து நன்றாக உள்வாங்கியும் விட்டார். குண்டகேசியை யாவரும் அறியச் செய்வதற்கு உகந்த வழி எது என்பதை மனமெண்ணி அவர் தேர்ந்தெடுத்த வழிதான் திரைத்துறையாகும். திரையில் வந்தால் அது எல்லாவிடத்தும் செறிந்தும் பரந்தும் நிறைந்தும் விடு மென்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் குண்டலகேசியைஉள்வாங்கி  “மந்திரிகுமாரி” என்னும் திரைக்காவியத்துக்கு வித்திட்டார். அவரே திரைக்கதை வசனமும் எழுதினார். அவரின் எண்ணத்தில் குண்டலகேசி காவியம் 1950 ஆம் ஆண்டில் மந்திரிகுமாரி என்னும் பெயரில் வெள்ளித்திரையில் வலம் வந்தது என்று என் ஆசான் மூச்சுவிடாமல் சொல்லி நின்றார்”. அந்தப் படத்தைப் பார்த்தால் புரியும் குண்டல கேசியின் கதை என்றார்.

    அத்துடன் நிற்காமல் எனது அடுத்த ஐயத்தையும் போக்கினார் ஆசான். வளையாபதியும் தேடாத இலக்கியமாய் இருக்கக் கூடாது என்று எண்ணினார் புரட்சிக்கவி பாரதியின் சீடர் பாரதிதாசன். கலைஞருக்கு மிகவும் பிடித்தமான தமிழ்க் கவிஞன்தான் புதுவைக்கவி பாரதிதாசன். அந்தப் புதுவைப் புயல் பாரதிதாசன் திரைக்கதை வசனம் எழுதி திரையில் வளையாபதியை வெளிபரப் பண்ணினார் . “வளையாபதி என்னும் பெயருடனேயே 1952 ஆம் ஆண்டில் வெள்ளித் திரையில் தேடப்படாத இலக்கியம் வந்தது” என்று எனது மனத்தெழுந்த ஐயங்களெலாம் விளங்கும் வகையில் – விளங்கும் உதாரணத்துடன் ஆசான் அவர்கள் சொன்னதும் – எனக்கு நல்ல திருப்தி கிடைத்தது. பள்ளிக்கூடமும் பல்கலைக் கழகமும் செய்யாததை வெள்ளித்திரை செய்து விட்டதே என்பது பெரும் ஆறுதலாய் எனக்கு இருந்தது.

    தேடப்படாத காவியங்கள் வரிசையில் வளையாபதிபோல் இருப்பதுதான் குண்டல கேசியாகும். வளையாபதி ஒன்பதாம் நூற்றைண்டைச் சேர்ந்தது. குண்டலகேசி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறிஞர்களின் கருத்தாய் இருக்கிறது. வளையாபதியின் ஆசிரியர் இன்னார் என்று அறியா நிலை இருக்கிறது. ஆனால் குண்டலகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார் என்று காட்டப்படுகிறார். எழுபத்து இரண்டு பாடல்களுடன் வளையாபதி அமைய குண்டலகேசியோ மிகக்குறைந்த அளவில் பத்தொன்பது பாடல்களுடன் இலக்கியமாய் கவனிக்கப்படுகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். வளையாபதி சமணத்தைப் பேச குண்டலகேசியோ பெளத்தத்தைப் பேசுகிறது.

    சிலம்பிலும் பெண்தான். மணிமேகலையிலும் பெண்தான். சிந்தாமணியிலும் பெண்ணே. குண்டலகேசிலும் பெண்தான் வந்து முன்னிற்கிறாள். பெண்கள் இல்லை என்றால் காப்பியங்களே இல்லை என்று சொல்லும் வகையில் காப்பியங்களைக் கொண்டு செல்லும் விதத்தில் பெண்களே இருப்பதும் நோக்கத்தக்தேயாகும். அதே வேளை வணிகர் குலம் என்பதும் தொடர் நிலையாக இருப்பதையும் காண்கின்றோம். வளையாபதியில் வருகின்ற கதாநாயகன் வணிகர் குலத்தவன். குண்டலகேசியின் கதாநாயகியும் வணிகர் குலத்தவள்தான். ஆனால் கதையின் போக்கு மட்டும் மாறுபடுகிறது.

    வசதிமிக்க வணிக குலத்துப் பிறந்தவள் பத்தா சீதா. இவளின் காதல் பொருந்தாவிடத்தில் சென்று விடுகிறது. அதனால் அவளின் வாழ்வும் வசந்தத்தை இழந்து விடுகிறது. வசதி யான குடும்பத்தைச் சேர்ந்தவள் – கொள்ளை அடிக்கும் ஒருவனை விரும்புகின்றாள். அரசனால் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டவனைக் கண்டதனால் காதல் கொண்டு அவனையே மணந்திட நினைந்து விடுகிறாள். மகளின் ஆசையினை தந்தை நிறை வேற்றும் பொருட்டு – கொலைக்களம் அனுப்பபட்ட கொள்ளைக்காரனைப் பொரு ளைக் கொடுத்து மீட்டு மகளுக்கு மணம் முடித்து வைக்கிறான். கள்வன் காதல் கணவனாய் வந்தமை பத்தாவுக்கு பெரும் ஆனந்தமாய் அமைகிறது.

    களவிலே ஊறிப்போனவனுக்கு களவினை மறந்து வாழ்வது என்பது சற்றுக் கடினந்தான். வீட்டிலேயே கைவரிசையினைக் காட்டிட முனைகிறான். இதனால் மனஸ்தாபம் உருவாகிறது. முடிவில் மனைவியையே கொன்றுவிடத் திட்டமும் இடுகிறான். அவளைக் காதல் மொழிகள் கூறி மலை உச்சிக்கே அழைத்துச் சென்று கொன்றுவிடத் திட்டமிட்டு அவளை மலை உச்சிக்குக் கூட்டிச் செல்கிறான். தன்னைக் கொல்லப் போகிறான் என்பதை அறிந்து கொண்ட பத்தா – தந்திரமாக அவனை மூன்றுமுறை வலம் வருபோல செய்து முடிவில் தன்னைக் கொல்ல வந்த தனது காதல் கணவனையே மலை உச்சியில் இருந்து தள்ளிக் கொன்று விடுகிறாள் என்று கதை அமைகிறது.

    வாராய் நீ வாராய்
    போகுமிடம் வெகு தூரமில்லை
    நீவாராய்

    ஆகா மாரிதம் வீசுவதாலே
    ஆனந்தம் பொங்குதே மனதிலே

    இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
    கலந்துயிர் விண்ணினைக் காண்பாய்
    அமைதி நிலவுதே
    சாந்தம் தவழுதே

    முடிவிலா மோன நிலையை நீ
    மலை முடிவில் காணுவாய்
    ஈடிலா அழகு சிகரம் மீதிலே
    கண்டு இன்பமே கொள்வோம்

    இன்பம் அடைந்தே இகமறந்தே
    வேறு உலகம் காணுவாய் அங்கே

    புலியினைத் தொடர்ந்தே
    புதுமான் நீயே

    இந்தப் பாடல் வந்து எழுபத்து ஒரு ஆண்டாகிறது. ஏழாம் நூற்றாண்டில் வந்த குண்டலகேசிக் கதைக்கு ஏற்ற பாடலைக் கேட்கின்ற வேளை கதையின் காட்சி கண்முன்னேயே வந்து நிற்கிறதல்லவா? காவியக்காட்சி வெள்ளித் திரையில் மந்திரிகுமாரியாய் மலர்ந்தது என்பதை நினைத்துப் பார்ப்போம்.

    சமணமும், பெளத்தமும் வாழ்க்கை நிலையாமையினை வலியுறுத்தும் பாங்கிலேதான் கருத்துக்களைக் கொட்டியபடியே இருக்கும். அந்த வகையில் காதலித்தவன் வஞ்சகம் செய்தபடியால் குண்டலகேசியின் அப்போதைய மன நிலைக்குச் சமணந்தான் மருந்தாய் அமைந்தது எனலாம். சமணப்பள்ளியை அடைந்தாள். சமண சம்பிரதாயப்படி அவளின் கூந்தல்கள் களையப்பட்டன. மழித்த தலையுடன் சமணப்பள்ளியில் இருந்தாள். சமணத்தில் ஊறிய அவள் சமணத்தை எதிர்ப்போரை யெல்லாம் வாதித்திட்டு நிற்கும் நிலைக்கு வந்து நின்றாள். ஆனால் பெளத்தத்திடம் அவள் வாதம் எடுபடா நிலையில் முடிவில் அவள் பெளத்தத்துக்கே மாறிவிடாள். மழிக்கப்பட்ட அவளின் கூந்தல் சுருண்டு வளர்ந்தது.வளைந்து குண்டலம் போல் அவளின் கூந்தல் காணப்பட்டதால் குண்டலகேசி என்றே அழைக்கப்ட்டாள். அந்தப் பெயரே இக்காப்பியத்துக்கும் பொருத்தமாய் அமைந்து விட்டது.

    யாக்ககை நிலையாமை, கூற்றுவனின் கொடுமை,வாழ்க்கையின் நிலையாமை, உடம்பின் இழிவு, என்பன பற்றியெல்லாம் குண்டலகேசி தன் கருத்துக்களைப் புகன்று நிற்கிறது,

    பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
    மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
    நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

    நிலையாமையினை விளக்குதற்கு குண்டலகேசி ஆசிரியர் தருகின்ற ஒவ்வொரு படிமுறையும் அவரின் பேராளுமையினையே காட்டி நிற்கிறது எனலாம். இதைவிட இலகுவாய் நிலையாமையினை விளக்கிடல் முடியுமா என்றுதான் எண்ணிப் பாருங்களேன்! செத்துப்பிழைத்துக் கொண்டே ஒவ்வொரு நாளுமே இருக்கின்றோம். ஆனால் அதற்காக யாருமே அழுவதே இல்லை. இந்த உடலைவிட்டு உயிர்பிரிந்த போது மட்டும் ஏன்தான் அழுகிறார்களோ தெரியவில்லை என்று – யாவரும் விழித்திட வேண்டும் என்று நிலை யாமையினை எப்படி நாசுக்காய் காட்டுகிறார் குண்டலகேசி ஆசிரியர்.

    மறிய மறியும் மலிர்ப மலிரும்
    பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
    அறிவது அறிவர் அழுங்கார் உவவார்
    உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று

    நயமும், நலமும், பொதிந்த பாடல். பாடலின் அமைப்பே அருமையோ அருமை! சொல்லும் பாங்கும், சொல்ல தேர்ந்தெடுத்த சொற்களின் பாங்கும், அந்தச் சொற்களைப் பாடலாய்க் கோர்த்த பாங்கும் வியக்காமல் இருந்திடவே முடியாது. அழுதாலும் பயனில்லை. ஆனந்தப் படுவதாலும் பயனில்லை. வருவதும் வரும். வந்தது வந்ததுபோல் போயும் விடும். போய்விடும் பொழுது புலம்புவதால் ஆவது எதுவுமே இல்லை. என்ன அருமையான வாழ்க்கைத் தத்துவம். தேடப்படாத குண்டலகேசியா இப்படிச் சொல்கிறது என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா!

    மண்ணுளார் தம்மைப் போல்வர் மாட்டதே அன்று வாய்மை
    நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
    விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
    கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்

    கறை என்பது மனிதராயினும், தேவராயினும் ஏன் கண்ணுதற் கடவுளாகிய சிவனே ஆயினும் கறை என்பது கறைதான். தவறு என்றால் அங்கு எந்தவிதப் பாகுபாட்டுக்கும் இடமே இல்லை. என்று பார்க்கும் குண்டலகேசியின் பார்வை சுட்டெரிக்கும் தூய்மையான பார்வையாய் தெரிகிறதல்லவா!

    உவமைநயம் மிக்க நல்லதொரு பாடலையும் குண்டலகேசியில் பார்க்கிறோம். உவமையினைக் காட்டிட அமைந்தாலும் அங்கும் தத்துவமே முன்னிற்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
    ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
    தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்ல்லாத்
    தூயவனை நோக்கியுள துப்பரவும் எல்லாம்.

    காற்றை நம்பியே ஓடம் செல்லுகிறது. ஊழ்வினையின் வழியேதான்  வாழ்க்கை அமைகிறது. மனத்தில் தூய்மை வருவதற்கு உகந்தவழி எது தெரியுமா? தூய மனத்தினை உடைய அந்த புத்தபிரானை நினைப்பதேயாகும், இங்கு ஒவ்வொன்றுக்குமே காட்டப்படும் உவமையினை எண்ணிப்பார்த்தால் குண்டலகேசியும் நல்லதொரு இலக்கியமே என்பது புலனாகும்.

    ஐம்பெரும் காப்பிய வரிசையில் இடம் பெறும் வளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்னும் கருத்து இலக்கிய அறிஞரிடையே காணப்படுகிறது. அதேவேளை இதனை வள்ளுவத்தின் பின் வந்ததென்றும்  அறிஞர்கள் சிலர் சொல்லு கிறார்கள். வள்ளுவத்தின் சில பாடல்களை எடுத்தாளும் தன்மையினை வளையாபதி கொண்டு இருப்பதால் இப்படிக் கூறும் நிலையும் வந்திருக்கலாமோ என்றுகூடக் கருதிட முடிகிறதல்லவா? இது சமணம் சார்ந்தது என்னும் கருத்து இருக்கிறது. அதேவேளை இதில்வரும் நாயகன் சைவமதத்தவனாய் இருப்பதால் – சமணம்  சார்ந்தது என்று எடுப்பது பொருந்துமா என்னும் நிலையும் அறிஞரிடையே காணப்படுகிறது. ஆனால் வளையாபதியின் பாடல்களில் காணப்படும் கருத்துக்களை நோக்கும் பொழுது சமணச் சார்ப்பான தன்மையே பெரிதும் இருப்பதும் தெரிய வருகிறது.

    வளையாபதிக் காவியத்தின் ஆசிரியர் யார் என்பதும் அறியமுடியவில்லை. எழுபத்து இரண்டு பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஆனாலும் இப்பாடல்களை மையப்படுத்தி ஒரு கதையும் அமைந்தே இருக்கிறது. அந்தக் கதையும் ஊகமாய்த்தான் இருக்கும் என்னும் ஒரு நோக்கும் அறிஞர்களிடையே  இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    எழுபத்து இராண்டு பாடல்களுமே ஒரே இடத்தில் கிடைக்க வில்லை. புறத்திரட்டு என்னும் நூல் பதினான்காம் நூற்றாண்டில் வந்தமைகிறது. அந்த நூலில் இருந்து அறுபத்து இரண்டு பாடல்களை வளையாபதியின் பாடல்கள் என்று அறிஞர்கள் கண்டறிந் திருக்கிறார்கள். அடியார்க்கு நல்லார் என்பார் சிலப்ப திகாரத்துக்கு உரை எழுதி இருக் கிறார். அவர் உரை எழுதும் பொழுது மூன்று பாடல்களை எடுத்துக்காட்டாய் கையா ண்டிருக்கின்றார். அந்த மூன்று பாட்டும் வளையாபதியின் பாட்டென்று தீர்மானித் திருக் கிறார்கள். அத்துடன் மேலும் இரண்டு பாடல்களும் கிடைத்திருக்கின்றன. இலக்கணத்துக் கென்று பல நூல்கள் தமிழில் இருக்கின்றன அவற்றில் யாப்பருங்கலக்காரிகை என்பதும் முக்கிய இலக்கண நூலாகும்.

    இந்த நூலுக்கு ஒரு தமிழறிஞரால் எழுதப்பட்ட விருத்தி உரையில் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாய் கையாளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கையாளப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வளையாபதிக்கே உரியதாகும் என்று தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டி இருக் கிறார்கள். வளையாபதிக்கான பாடல்கள் இப்படித்தான் சேர்க்கப்பட்டன என்பதை வளை யாபதி பற்றி நோக்கும் பொழுது அறியக்கூடியதாக இருக்கிறது.

    நிறைவான நிலையில் வளையாபதி காப்பியம் கிடைக்கா விட்டாலும் – கிடைத்த பாடல் களைக் கருத்திருத்தில் இருத்தி அதனையும் காவிய வரிசையில் வைத்தமை யினைப் பாராட்டியே ஆகவேண்டும்.குறைவான பாடல்கள் கிடைத்த நிலையிலும் அதனூடாக ஒரு கதையினையும் இணைத்த பாங்கையும் பாராட்டவே வேண்டும்.

    சிலம்பில் புகார் வந்தது போல் வளையாபதியிலும் புகார்வருகிறது. இங்கு தான் – கதையின் நாயகனான நவகோடி நாராயணன் வருகிறான். சிலம்பின் நாயகனான கோவலன் கண்ணகியை மணம் முடிக்கிறான். பின்னர் மாதவியையும் மணக்கிறான். கோவலனும் கண்ணகியும் வணிகர் குலத்தவர். மாதவி அக்குலத்தவள் அல்ல. வளை யாபதி நாயகன் நவகோடி நாராயணனும் வணிகர் குலத்தவன். வணிகர்  குலத் துப் பெண்ணை இவனும் முதலில் மணக்கிறான். பின்னர் வணிகர் குலம் அல்லாத இடத்தில் இருக்கும் ஒரு பெண்ணையும் இரண்டாந்தாரமாய்  மணக்கிறான். கிட்டத்தட்ட கோவலனின் சகோதரன் போல வளையாபதி நாயகன் நவகோடி நாராயணனும் அமைகிறான் அல்லவா!

    சிலம்பின் நோக்கம் வேறு. அதனால் அங்கு கதையின் திருப்பம் வேறு விதமாய் மாறுகிறது. வளையாபதியை எழுதிய ஆசிரியர் கதையினை வேறு நிலையில் காட்டிட முன் வருகிறார். தன் குலத்தை விட்டு வேறு குலத்தில் இரண்டாந்தாரமாய் நவகோடி நாராயணன் திருமணம் செய்ததை அவனுடைய வணிக குலத்தார் எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பார் – அவனையே வணிகர் குலத்தை விட்டு ஒதுக்கி விடுவோம் என்று எச்சரிக்கையும் செய்கிறார்கள். குலத்தாரின் எதிர்ப்புக்கு அஞ்சிய நிலையில் நவகோடி நாராயணன் தன்னுடைய இரண்டாவது மனைவியை விட்டு விட்டு தனது வணிகத்தைக் கவனிக்கக் கடற்பயணத்தை மேற்கொள்ளுகின்றான். அவனால் கைவிடப்பட்ட அவனின் இரண்டாவது மனைவி அப்பொழுது வயிற்றில் கருவினைச் சுமந்தபடி இருந்தாள் என்பது முக்கியமாகும்.

    கடல் பயணத்தால் ஈட்டிய பெருஞ் செல்வத்துடன் முதல் மனைவியோடு நவகோடி நாராயணன் ஆனந்தமாய் வாழ்கிறான். அபலையான அவன் இரண்டாம் மனைவி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள். அந்தப் பிள்ளை வளர்ந்து வரும் வேளை – அவனது நண்பர்கள்  “தகப்பன் பெயரே தெரியாதவன்” என்று கேலியும் கிண்டலுமாகப் பேசி அவனை மனம் நோகும்படி செய்து விடுகிறார்கள். மனம் நொந்த பிள்ளை தாயிடம் வேதனையைக் கொட்டித் தீர்க்கின்றான். பிள்ளையின் கவலை தாயையும் வாட்டியதால் இதுவரை மூடி வைத்திருந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள்.

    தனக்குத் தந்தை இருக்கிறார் என்று கேட்டதும் கவலைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு துள்ளலுடனும், உற்சாகத்துடனும், ஆனந்தந்துடனும் தந்தையை நாடிச் செல்லுகின்றான். தந்தையைக் காணுகிறான். ஆனால் தந்தையோ தன்னுடைய வணைகர் குலத்துக் கட்டுப்பாட்டுக்குப் பயந்து அவனை மகனாக ஏற்றிட மறுத்துவிடுகிறான். ஏற்க மறுத்த விஷயத்தை அறிந்த தாயானாவள் சக்தியாய் விளங்கும் காளியை வேண்டுகிறாள். வணிகர் குலத்துப் பெண்கள் மத்தியில் காளியின் அனுக்கிரகத்தால் அவள் புனிதமானவள் என்னும் நிலை வெளிச்சமாகிறது. நிறைவில் நவகோடி நாராயணன் கைவிட்ட மனைவியையும், மகனையும் இணைத்துக் கொள்ளுகின்றான். அந்தப் பிள்ளைக்கு வீரபாணிபன் என்று பெயரையும் சூட்டி எல்லோரும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்று வளையாபதி கதை நல்லதாய் நிறைவுறுகிறது.

    நல்லதொரு சுபமான திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அல்லவா? இப்படியான ஒரு கதை இதற்குள் புதைதிருந்த காரணத் தால்த்தான் – பாரதி தாசன் இதனைத் திரைக்காவியம் ஆக்கினாரோ என்றும் நினைத்திட வைக்கிறதல்லவா!

    வளையாபதி இவ்வளவுதானா? இதனைப் படிப்பதால் என்னதான் வரப் போகிறது? வளையாபதி ஏதாவது கருத்துக்களைப் பகர்ந்திருக்கிறதா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா! கருத்துக்கள் இல்லா விட்டால் அங்கு காவியமும் இல்லை. இலக்கியமும் இல்லை என்றாகிவிடும் அல்லவா! சமணக் காவியமா, சைவக் காவியமா என்றெல்லாம் விவாதிப்பதை விட்டு விட்டு – இக்காவியம் எதனைக் கூறுகிறது என்று பார்த்தால் – கல்லாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை இவைதான் இக்காவியத்தின் கருப்பொருள்களாகும்.  அதேவேளை வாழ்வியலுக்கு ஏற்ற கருத்துக்கதுக்களையும் காட்டாமலும் வளையாபதி இருக்கவில்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். இங்கே காட்டப்பட்ட கருக்கள், சைவத்திலும் போற்றப்படு கின்றன. அதே வேளை சமணனந்தான் இக்கருக்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக் கிறது என்பது பொதுவான நிலை எனலாம். ஆதலால் வளையாபதியினைச் சமணக் காப்பியம் என்றே எடுக்கும் நிலை வந்துவிட்டது.

    பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
    துறையிலா வசன வாவி துகில் இலாக் கோலத் தூய்மை
    நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
    சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே

    என்னதான் இருந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லாவிட்டால் எல்லாமே வீண்தான் என்று காட்டும் இந்தக் கருவானது வாழ்வியலைக் குறிப்பதாய் இருக்கிறது அல்லவா? வளையாபதியின் பார்வை இப்படியும் இருக்கிறது.

    உயர்குடி நனியுட் டோன்றலூனமில் யாகையாதன்
    மயிர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
    பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோட லென்றாங்
    கரிதிவை பெறுதலேடா பெற்றவர் மக்க ளென்பார்

    என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் அமையப் பெறுதல் வேண்டும். அவ்வாறு அமையப் பெறுபவர்களே பிறவியின் பயனை அடைந்து நல்ல பிறப்புடையாராய் மதிக்கப்படுவர் என்பதும் வளையாபதியின் பெருநிலை எனலாம். செப்பம் வேண்டும், நாண் வேண்டும். ஒழுக்கமும், வாய்மையும்  அமைய வேண்டும். ஈகையும் கூடவே இன்சொல்லும் இருக்க வேண்டும்.அதுமட்டுமன்றி இகழாமையும் கொள்ள வேண்டும்.ஒழுக்கத்தைப் பேணவேண்டும், பணிவுடமையினைப் பக்குவமாக்க வேண்டும்.என்னும் வாழ்வியல் தத்துவங்கள் இப்பாடலினால் காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதே.

    அடக்கமுடமை, அறமனை காத்தல், பிறன்மனை நாடாமை, உண்டி கொடுத்தலின் உயர்வு, அருளின் பெருமை, புலால் மறுப்பதன் உன்னதம், தவத்தின் மாண்பு, காமத்தின் இழிவு, கள்ளாமை விளக்கம், செல்வத்தின் நிலையாமை, இளமை நிலையாமை என்று பல அறக்கருத்துக்களை வழங்கும் பாங்கில் – கிடைத்திருக்கும் வளையாபதிப் பாடல்கள் தந்து நிற்கின்றன.

    வல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
    கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
    நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
    நீத்தல் துணிவாம் நிலையாது இளைமையே

    என்னும் பாடலை மனமிருத்தினால் ஆடாத ஆட்டமும் பாடாத பாட்டுகளுமாய் திரியவே மாட்டோம்.இருக்கும் வாழ்வினைச் சீராக வாழ்வதற்கே முயலுவோம்.

    வளையாபதியின் கிடைத்த பாடல்களே இவ்வளவு அரிய கருத்துக்களை வழங்கி இருக்கிறது என்றால் – முழுமையாய் வளையாபதி கிடைத்திருக்கு மானால் – எத்தனையோ பொக்கிஷமான கருத்துக்களை அனைவருமே பெற்றுப் பயன் அடைந்திருப்போம். நல்ல கற்பனை வளமான பாடல்களையும் வளையாபதி கொண்டி ருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    காப்பு + இயம் என்பதே காப்பியம் ஆகிறது. மக்களின் வாழ்வியல் சிந்தனை, சமய நம்பிக்கைகள், அரசியல் நிலை, இவற்றை உள்ளடக்கியதாய் அதனூடாக பயணிக்கும் வகையில் கதைமாந்தரைக் கொண்டு கதையை  நடத்தி – அக்கதை மாந்தரின் வாயிலாகப் பலகருத்துக்களை வெளியிடும் பாங்கில் – படைத்த புலவனின் ஆளுமையினை வெளிப்படுத்தும் பாங்கில் முகிழ்த்து வந்து நிற்பதுதான் காவியம் ஆகிறது. காவியம் என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. எல்லாக் காவியங்களிலும் இந்த வரை விலக்கணங்கள் முழுமை பெற்றிருக்கின்றனவா என்பதும் ஆராய்வுக்கு உரியதேயாகும்.

    காவியங்களில் தலைவன் தலைவி நிச்சயம் இடம் பெறுவார்கள். சில வேளை தலைவனை விட தலைவியே அக்காவியத்தில் முதன்மையாய் இருப்பதையும் காணமுடிகிறது. காவியத்தைப் படைப்பவரின் எண்ணமே இவற்றை வடிவமைக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. கதைகளினூடாக பல்வகையான அறங்களை வெளிப்படுத்திக் காட்டும் பாங்கினையே காவியங்களில் காண்கிறோம்.

    அந்தவகையில் ஐம்பெரும் காவியங்களும் இணைந்தே இருக்கின்றன என்றுதான் எடுக்க முடிகிறது. குண்டலகேசியையும் வளையாபதியையும் படிப்பதால் என்னவந்து விடப் போகிறது என்னும் எண்ணமும் நிச்சயம் ஏற்பட்டே ஆகும்.தேடப்படாத இலக்கியங்களான இவை  – பல கருத்துக்களைச் செப்பி நிற்பதற்காகவேனும் படிக்க வேண்டும். இந்தக் காவியங்கள் காலத்தும் திருமணம் என்பதில் சாதிக்கட்டுப்பாடு மிகவும் இறுக்கமாய் இருந்திருக்கிறது என்பதும் அறிந்திட முடியும். தாக்கத்துக்கு உள்ளானவர்கள் பெண்களாகவே கானப்படுகிறார்கள் என்பதையும் அறிந்திடுகிறோம் பெண்களையே – அக்காலம் தொடக்கம் இக்காலம் வரையில் துன்பத்துள் ஆழ்த்துவது என்பது சமூகத்தின் மாற்ற முடியா நிலை என்பதும் மனத்தில் பதிகிறது. எதிர்த்த பெண்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களின் வாழ்வு வசந்தம் இல்லாது வரண்டே போனது என்பதும் மனத்தில் பதிகிறது. முடிவில் உலக வாழ்வினையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கே பெண்கள் வந்தும் விடுகிறார்கள் என்பதையே குண்டலகேசியும் , வளையாபதியும் எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது எனலாம்.

    காலத்தின் கருத்துக்களே இலக்கியமாய் எழுகின்றன. இலக்கிய வரலாற்று அறிஞரின் நோக்கும் இதுவாகத்தான் இருக்கிறது. ஐம்பெரும் காப்பியங்கள் எழுந்த காலத்துச் சமய நிலையும், சமூக நிலையும், அரசியல் நிலையும், அந்தக் காப்பியங்களிலும் புகுந்துவிடாமல் இருக்கவே இல்லை என்பதும் நோக்கத்தக்கதே. ஐம்பெரும் காப்பியங்களிலும் சமயக்கருத்துகள் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாத் ஒன்றாகவே காணப்படுகிறது. சிலம்பினைச் சமணம் சார்ந்தது என்று சொன்னாலும் கூட – அது சமய நல்லிணக்க்த்தைப் பேணுவதாய் அமைகிறது என்று அறிஞர் சுட்டிக் காட்டுவார்கள். அதே வேளை தேடப்படாத இலக்கியம் என்று நான் குறிப்பிடும் குண்டல்கேசியும், வளையாபதியும், சமய சமரசத்துக்கு அப்பால் சென்று – சமணம் என்னும் மதம்சார்ந்த உறுதியான கருத்துக்களைக் காட்டும் பாங்கிலேயான் அமைந்திருக்கின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதேயாகும். அதேவளை   வாழ்வியலிலும்  அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாய், நிலையாமையினை மேலோங்கிக் காட்டும் பாங்கினையே – தேடப்படாத இலக்கியங்கள் செப்பி நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதேயாகும். கதைக்குக் கதையாயும், கருத்துக்களுக்குக் கருத்தாயும் – காட்டி நிற்கும் குண்டலகேசியையும், வளையாபதியையும் “தேடப்படாத இலக்கியம்” என்று எண்ணுவதையோ அல்லது சொல்லுவதையோ மறந்துவிடுவோம். அவையும் நாடப்படும் இலக்கியமே என்பதையும் கருத்திருத்துவோம்!

    Share