பாடல் : சி. ஜெயபாரதன், கனடா
இசைப்பாடகி : வே.ரா. புவனா
காட்சி அமைப்பு : பவளசங்கரி
Blog
-

மதுரையில் ஒரு ஸ்மார்ட் ஓட்டல், மாஸ்க்வா
மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் விடுதி அறைகளைத் தேடியபோது, ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு வகையில் குறைகள் இருந்தன. சில இடங்களில் வண்டிகளை நிறுத்த இடம் இல்லை. சில இடங்களில் அறை மட்டும் இருந்தது, உணவகம் இல்லை. இன்னும் சில, கோவிலுக்குப் பக்கத்தில் இல்லை. இவை எல்லாம் உள்ள இடங்களில் அறை வாடகை அதிகமாக இருந்தது.
ஆனால், இவை எல்லாவற்றுடன், ஓரளவு குறைவான வாடகையில் மாஸ்க்வா விடுதியில் அறை கிடைத்தது. அதிலும் இன்னோர் ஆச்சர்யம், ஸ்மார்ட் பூட்டு, ஸ்மார்ட் திரை, ஸ்மார்ட் சுவிட்சுகள், ஸ்மார்ட் ஏ.சி… என நவீன நுட்பங்களுடன் அறை அமைந்திருந்தது. மாஸ்க்வா என்பது, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ என்பதன் ஒலிபெயர்ப்பு. ரஷ்யாவில் ஓடும் நதி ஒன்றுக்கும் மாஸ்க்வா என்று பெயர். வைகை பாயும் மதுரையில் மாஸ்க்வா தனி முத்திரை பதிக்கிறது. இதோ மாஸ்க்வா விடுதியில் நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் ஓர் உலா. எதிர்காலத்தில் நம் ஸ்மார்ட் இல்லங்கள், இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கின்னிக் கோழி
கின்னிக் கோழி, ஜீன் கோழி என அழைக்கப்பெறும் கீனியா (Guinea Fowl) பறவைகளை இன்று பார்த்தேன். துருதுருவென விளையாடிய அவற்றின் அழகைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கொத்துமல்லி பச்சடி செய்வது எப்படி?
மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் சுவையும் சத்தும் மணமும் நிறைந்த கொத்துமல்லி பச்சடி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 32
மூலம்: எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎமிலி டிக்கின்சன் கவிதைகள்-32: வாலாட்டும் நாய்க் குட்டி
வாலாட்டும் ஒரு நாய்க்குட்டி.
வேறாட்டம் எதுவும் அறியாது.
அதுபோல் நானும் ஒரு நாய்க்குட்டி
நினைவுக்கு வருவது ஒரு பையன்.A little Dog that wags his tail
And knows no other joy
Of such a little Dog am I
Reminded by a Boyநாள் முழுதும் விளையாட்டு
ஏதோர் காரணமும் இருக்காது
ஏனெனின், விளையாட்டுப் பிள்ளை
எனக்கு உறுதி எண்ணம் அப்படிWho gambols all the living Day
Without an earthly cause
Because he is a little Boy
I honestly suppose —பூனை மூலையில் கிடக்குது, அது
போராடும் நாள் மறந்து போச்சு
எலி இல்லை வாடிக்கைப் பிடிப்பில்
இப்போ விருப்பில்லா அணி வரிசையில்.The Cat that in the Corner dwells
Her martial Day forgot
The Mouse but a Tradition now
Of her desireless Lot -

Water bowls for animals
Baskar Seshadri
If it is summer season you can be sure of some action by Blue cross of India. Last year they donated good number of water bowls to the residents so that they can fill it every day to enable to animals mainly dogs and goats.
A young boy in Thiruvengadam Street even spent his little money to erect a cement water booth that can hold few litres of water. This year they are on the job of providing such water bowls and had completed certain areas. Last week they had provided one such water bowl near Mandaveli railway station on an arrangement with the local auto drivers to fill up the water every day on a roto. This works successfully where the purpose gets solved and a awareness is created among the residents who live nearby.
The photo shown here (cover photo) is one such water bowl installed by the BC near the Railway station. Kudos.
-

குறளின் கதிர்களாய்…(397)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(397)
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.– திருக்குறள் -195 (பயனில சொல்லாமைட)
புதுக் கவிதையில்…
சிறந்த குணமுடையோர்
சிந்திக்காது
சொல்வாராயின் பயனிலாச் சொற்களை,
சேர்த்திருந்த அவரது பெருமை
சிறப்புடன் சேர்ந்தே விட்டுச்
சென்றிடும் விலகியே…!குறும்பாவில்…
உயர்குணமுடையோர் பயனிலாச் சொற்களை
உரைத்தால், அவர்தம் சிறப்பெல்லாம் நீங்கி
பெருமையெல்லாம் போய்விடுமே…!மரபுக் கவிதையில்…
பண்பி லுயர்ந்த பெரியோரும்
பலரின் முன்னே பேசுகையில்
அண்டை அயலார்க் குதவாத
அற்பச் சொற்கள் பேசிநின்றால்,
திண்ண மாக அன்னாரின்
திறமை தந்த பெருமையெலாம்
மண்ணி லவர்தம் சிறப்புடனே
மறைந்தே போகும் பாரீரே…!லிமரைக்கூ…
பண்பாளர்க்கும் பேச்சிலுண்டு எல்லை,
பெருமையோடு சிறப்லொம் அவர்க்குப் போய்விடுமே
பேசினாலவர் பயனிலாச் சொல்லை…!கிராமிய பாணியில்…
பேசாத பேசாத
பயனில்லாத சொல்லப் பேசாத,
ஒருநாளும் பேசாத
ஒருத்தருக்கும் ஒதவாத பேச்ச..கொணத்தில ஒசந்த
பெரிய மனுசருங் கூட
பேசும்போது ஒருத்தருக்கும்
பயனே இல்லாத பேச்ச
பேசிட்டிருந்தா,
அதுனால
அவரோட பெரும
செறப்பெல்லாம் சேந்து
அவரவுட்டுப் போயிடுமே..அதால
பேசாத பேசாத
பயனில்லாத சொல்லப் பேசாத,
ஒருநாளும் பேசாத
ஒருத்தருக்கும் ஒதவாத பேச்ச…! -

பேப்பர்காரர் லூர்துசாமி நேர்காணல்
பழைய பேப்பர், பிளாஸ்டிக், எவர்சில்வர், பித்தளை, இரும்பு, செப்பு, ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பேட்டரி போன்ற பலவற்றையும் வாங்கி விற்கும் லூர்துசாமியுடன் ஒரு சந்திப்பு. இந்தப் பொருள்கள் கிலோ என்ன விலை தெரியுமா? நாம் குப்பை எனத் தூக்கி எறியும் பொருள்களுக்கு உள்ள சந்தை மதிப்பு எவ்வளவு? அவரே சொல்கிறார், கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அண்மையில் சென்று வந்தோம். இதோ சில காட்சிகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

அதிசார குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2022
2022 ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற அதிசார குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

சிறகடிக்கும் கற்பனைகள்!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா.சித்திரையைக் கொண்டாடச் சிறகடிக்கும் கற்பனைகள்
எத்தனையே எல்லோரின் மனத்தினிலும் இருக்கிறது
அத்தனையும் நிறைவேற அமைந்திடுமா உலகநிலை
அனைவரது அகங்களிலும் அதுகேள்வி ஆகிருக்குதைபிறந்த பின்னாலே சந்தோஷம் தருவதாய்
சீரான சித்திரை சிறப்பாக வந்தமையும்
ஊரெல்லாம் கொண்டாட்டம் உறவெல்லாம் கூடிடுவர்
தேரோடும் கோவில்களில் திருவிழா சிறந்துவிடும்புத்தாடை எடுத்திடுவோம் புத்துணர்வும் பெற்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
கற்றாரைக் கண்டிடுவோம் கைதொட்டு வணங்கிடுவோம்
பெற்றவரின் ஆசியினைப் பெற்றுமே மகிழ்ந்திடுவோம்இனிப்புச் சுவையோடு இங்கிதமாய் பட்சணங்கள்
காரமும் சேர்த்து களிப்பாகச் செய்திடுவோம்
கொடுத்து மகிழ்ந்திடுவோம் குதூகலத்தில் மிதந்திடுவோம்
வீடெங்கும் பட்சணங்கள் விதம்விதமாய் வீற்றிருக்கும்வாசலிலே மாக்கோலம் மங்களமாய் வரவேற்கும்
வீடெங்கும் மகிழ்ச்சியது தென்றலாய் பரவிநிற்கும்
பூஜையறை பக்தியினை வெளிச்சமாய் காட்டிநிற்கும்
பொங்கலுடன் அம்மாவும் உள்நுழைவார் அப்பாவுடன்மாமாவும் மாமியுடன் வந்திருப்பார் மகிழ்வுடனே
சித்திரைக்குப் புத்துடுப்பும் சீராகத் தந்திடுவார்
அவர்காலைத் தொட்டுவிட்டால் அகநிறைவார் மாமாவும்
ஆசியினை எமக்கீந்து அவரளிப்பார் பணப்பரிசும்மாமாவின் பிள்ளைகள் மகத்தான பரிசாகும்
மலர்ச்சியுடன் ஓடிவந்து வாரியே அணைத்திடுவார்
ஊஞ்சல்கட்டி ஆடிடுவோம் ஒன்றாகப் படுத்திடுவோம்
உணர்வுடனே ஒன்றாக உட்கார்ந்து உண்டிடுவோம்பட்டாசு மத்தாப்பு பெட்டிகளாய் வாங்கிடுவோம்
பக்கத்து வீட்டாரும் எங்களுடன் இணைந்திடுவார்
வெள்ளிக் கம்பிகளாய் மத்தாப்பு விரிந்தேயெழும்
வெடிவெடிக்கும் சத்தத்தால் தெருவே கலகலக்கும்பட்டிமன்றமோடு பாங்கான இசை நிகழ்ச்சி
வெட்டவெளி மேடைகளில் விமரிசையாய் நடக்கும்
பாடிடுவார் ஆடிடுவார் பரவசமாய் ஆகிடுவார்
சித்திரைக் கொண்டாட்டம் முத்திரையாய் ஜொலித்துவிடும்இத்தனையும் நடந்தது எல்லோர்க்கும் நெஞ்சிருக்கும்
காத்திருப்பு என்பது களிப்பான எதிர்பார்ப்பே
நாடுபோகும் போக்கினிலே நமக்குச் சித்திரைவாய்த்திடுமா
ஏக்கமுடன் இருக்கின்ற நிலையிப்போ வந்திருக்குபோர்மேகம் ஓர்பக்கம் புதுக்கொரனா மறுபக்கம்
எரிபொருளால் எல்லாமே ஏறியேறிப் போகிறது
நாளைக்கு எதுநடக்கும் யாருக்கும் தெரியாது
என்றாலும் சித்திரையும் வரவேதான் போகிறதுதுன்பங்கள் வாராமல் துணையிருப்பாய் ஆண்டவனே
இன்பங்கள் துன்பங்கள் எல்லாமே உன்கையில்
சித்திரையில் நல்வெளிச்சம் வருவதற்கு வழிசமைப்பாய்
நித்தமுமே பணிகின்றோம் நின்பாதம் அடைக்கலமே -

சுசீந்திரம் அதிசயச் சிற்பம்
சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள பிரமிக்க வைக்கும் சிற்பங்களுள் இது ஒன்று. ஒரு காதில் ஈர்க்கை விட்டால் மறுகாதில் வரும் வகையில் செதுக்கப்பட்டுள்ள அதிசய, அற்புத, உன்னதச் சிற்பம். இந்தக் கலை நுணுக்கத்தின் வழியே சிற்பி ஓர் அரிய தத்துவத்தையும் சொல்லுகிறார், பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

மனத்துக்கு உரைத்தல்!
ஏறன் சிவா
மனமே மனமே மயங்காதே — ஒரு
மழலை போலே கலங்காதே!
தனியே தனியே புலம்பாதே — விழித்
தண்ணீ ரில்நீ தளும்பாதே!உளமே உளமே ஒடுங்காதே — வரும்
உயிர்த்துன் பத்தால் நடுங்காதே!
குளமாய்க் கண்கள் நீர்பெருக — உன்
கோலம் நொந்து குறுகாதே!நெஞ்சே நெஞ்சே விசும்பாதே — வரும்
நினைவுத் துயரால் பொசுங்காதே!
அஞ்சி யஞ்சி நடவாதே — நீ
அழுகைக் கல்பட் டிடறாதே!துன்பம் நிழலாய்த் தொடர்ந்துவரும் — அது
துயரம் கோடி தூக்கிவரும்!
கண்ணே அதனைக் எண்ணாதே — இனி
கவலைத் தீயை உண்ணாதே!தோளின் மீதோர் அணிகலனாய் — நீ
தூக்கி நடப்பாய் துணிவினையே!
காலம் மெல்லக் கனிந்துவரும் — உன்
கைக்குள் உலகம் பணிந்துவிழும்!



