Blog

  • A Good Move

    A Good Move

    Baskar Seshadri

    Shilpa Prabhakar IAS is appointed as a special officer to handle all the petitions received by MK Stalin when he was electioneering. She is in charge to upload all the complaints and also for the redressal of the grievances within the stipulated hundred days.

    Shilpa has the credit of having achieved many big tasks in various capacities in many parts of south. She took the initiative to admit her daughter in an Anganwadi school at par with others and had set a precedent to popularise the government schools. The government had made a good choice in picking to oversee and solve with the redressal mechanism. Kudos

    Photo Courtesy – DT Next

    Share
  • சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

    சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

    பாஸ்கர்

    நீதிமன்றத்திற்கு ஒருவர் வருகிறார். சுமார் ஐம்பது வயதுக்கு மேல். எளிமையான உருவம். காவி வேஷ்டி. நகர்ப்புறம் சாராதவர். அவர் பொதுநல வழக்கு ஒன்றிற்கு வந்து இருக்கிறார். நீதிபதி அமர்ந்து இருக்க அவர் சார்பாக அவரே வாதாடுகிறார். நீதிபதிக்குத் தமிழ் தெரியாது. வழக்காட வந்தவருக்கு ஆங்கிலம் தெரியாது. பொது நலத்தை மனத்தில் வைத்துக்கொண்டு வழக்குத் தமிழில் அவர் பேச, அதைப் பின்னர் விளக்க வழக்கறிஞர் ஒருவர் குறிப்பெடுத்துக் கொண்டு தயாராக இருக்கிறார். பராசக்தி சிவாஜி போல அவர் பத்து நிமிஷம் பேசினார். அன்றைய வழக்கு முடிந்தது.

    எனக்கு இதை நண்பர் மாதவன் நேற்று டிராபிக் ராமசாமி மறைவு பற்றிப் பேசும்போது சொன்னார்.

    எனக்குத் தோன்றிய மூன்று விஷயங்கள் –

    நேர்மையும் பொதுநலனும் மனத்தில் இருந்தால் வெற்றி நிச்சயம். அப்படி வரவில்லை என்றாலும் அதன் தாக்கம் உள்ளே எப்போதும் இருக்கும். சத்தியத்தை அது என்றும் கைவிடாது.

    ராமசாமிகள் இங்கு வந்துகொண்டு தான் இருப்பார்கள். இந்த நபரும் அவர் போல நேர்மையை ஆயுதமாகக் கொண்டவர். நலத்தொண்டு அவரிடம் எப்போதும் இருக்கும். விலை கொடுத்து அவரை வாங்க முடியாது.

    இதை எல்லாம் தாண்டி இன்றைய சூழலில் மொழி தெரியாத போதும் உண்மை ஒன்றை நம்பி, ஒருவர்க்கு அவர் மொழியில் பேசி வழக்காடும் உரிமையை நீதிமன்றம் கொடுத்து இருப்பது நமக்கெல்லாம் பெரிய பலம். இன்று நீதி தான் நாமக்கு நாதி. இவர் நிச்சயம் ஜெயிப்பார். அப்படி அவர் தோற்றாலும் அவரின் வேகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது.

    அவரிடம் பேசி அவரைப் பற்றிய தகவல்களை ஏன் பெறவில்லை என நண்பரிடம் கேட்டேன்.

    மாதவன் சொன்னார் “அடுத்த பொது நல வழக்கு ஒன்றிற்காக அவர் வேறு ஒரு நீதிமன்றத்திற்கு அவசரமாகச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்”.

    நிச்சயம் அவரை ஒரு நாள் சந்திப்பேன். டிராபிக் ராமசாமிகள் மறைவதில்லை.

    Share
  • குறளின் கதிர்களாய்…(349)

    குறளின் கதிர்களாய்…(349)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(349)

    உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா
    தெழுவாரை யெல்லாம் பொறுத்து.

    – திருக்குறள் – 1032 (உழவு)

    புதுக் கவிதையில்...

    உழவெனும் உயர்தொழில் செய்ய
    மனமின்றி
    வேறு தொழில்கள் செய்ய,
    அவற்றைத்
    தேடியலைவோர் யாவரையும்
    தாங்குவதாலே,
    உழுபவரே
    உலகெனும் தேருக்கு
    அச்சாணியாவர்…!

    குறும்பாவில்...

    உழவின் உயர்வை அறியாமல்
    வேறுவேலை தேடி அலைவோரையும் தாங்குவதால்,
    உழவரே உலகத்தார்க்கு அச்சாணி…!

    மரபுக் கவிதையில்...

    உயர்ந்த தொழிலாம் உழவதனின்
    உயர்வு தன்னை யறியாமல்
    முயன்று வேறு பணிதேடி
    முனைப்புட னலையும் மாந்தரையும்
    அயர்வே யிலாமல் தாங்கியேதான்
    அவரையும் வாழச் செய்வதனால்,
    பயிரிடும் உழவரே தேரதுவாம்
    பாருக் காணியாய் ஆவாரே…!

    லிமரைக்கூ..

    ஏற்றித் தாங்கிடும் ஏணியாய்
    உழவை விரும்பார்க்குமிருப்பதால், உழவரே ஆவர்,
    உலகத் தேருக் காணியாய்…!

    கிராமிய பாணியில்...

    ஒசந்தது ஒசந்தது
    ஒழவுத் தொழிலு ஒசந்தது,
    ஒலகத்துத் தொழிலுகளிலே
    ஒழவுத் தொழிலுதான் ஒசந்தது..

    ஒழவுத் தொழிலு பிடிக்காம
    வேற தொழிலத் தேடி
    அலயிறவங்களுக்கும்
    ஒணவு குடுத்துத் தாங்கிறதாலே
    ஒழவரே
    ஒலகத் தேரு ஓடுறதுக்கு
    அச்சாணி ஆவாரே..

    அதால
    ஒசந்தது ஒசந்தது
    ஒழவுத் தொழிலு ஒசந்தது,
    ஒலகத்துத் தொழிலுகளிலே
    ஒழவுத் தொழிலுதான் ஒசந்தது…!

    Share
  • அம்மா என்றழைக்காத உயிரில்லையே | கிருஷ்ணகுமார் குரலில்

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே | கிருஷ்ணகுமார் குரலில்

    இளையராஜா இசையில், வாலி வரிகளில், ரஜினி – பண்டரிபாய் நடிப்பில், உலகப் புகழ்பெற்ற, அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்த அன்னையர் தினத்தைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அம்மாவுக்கு மின்னஞ்சலி 2021

    அம்மாவுக்கு மின்னஞ்சலி 2021

    அழைத்ததும் வந்து விடுவாயா … அம்மா
    நினைத்ததும் அன்பு தருவாயா .
    முறுவலில் முத்தமருள்வாயா அம்மா
    மடியினில் இடம்தருவாயா ( ….)

    சுமையென யெனை நினைத்தாயா இல்லை
    சுகமென அகமகிழ்ந்தாயா
    வலியினில் யெனை ஈன்றாயா அன்றி
    கவியினில் தமிழ் கலந்தாயா (….)

    மதியினில் ஒளி கலந்தாயா என்
    மனதினில் அறம் பதித்தாயா
    இரவிலும் கண்விழித்தாயா நான்
    வரும்வரை புண்பொறுத்தாயா (…)

    குயிலெனத் தினம் கிடைத்தாயா வேம்பு
    கிளியென மொழிபெயர்த்தாயா
    அமைதியை எனக்க ளித்தாயா தினம்
    ஆற்றலில் இசை கோத்தெடுத்தாயா (…)

    நெறிமுறை தனைச் சமைத்தாயா என்
    செறிவினில் செழிப்படைந்தாயா
    தன்னலம் தான் துறந்தாயா பிரிந்தே
    விண்ணகம் தான் விரைந்தாயா (…)

    Share
  • ஆண்குயிலின் குரலும் பெண்குயிலின் குரலும்

    ஆண்குயிலின் குரலும் பெண்குயிலின் குரலும்

    குக்கூ குக்கூ என்ற பாடல், அண்மையில் அதிவேகப் புகழ்பெற்றது. கூ, குக்கூ என நாம் வழக்கமாகக் கேட்பது, ஆண்குயிலின் குரல். குவிக் குவிக் குவிக் என்ற பெண்குயிலின் குரலைப் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். அதுவும் ஆண்குயிலும் பெண்குயிலும் அடுத்தடுத்துப் பாடுவது அரிது. இன்று நம் ஜன்னலோரம் அமர்ந்த ஆண்குயிலும் பெண்குயிலும் அடுத்தடுத்துக் கூவுவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நம்ம வீட்டுக் கீரை அறுவடை

    நம்ம வீட்டுக் கீரை அறுவடை

    நம்ம வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று முளைக்கீரை, சாரணைக் கீரை, பருப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, வல்லாரைக் கீரை எனப் பலவற்றை இன்று அறுவடை செய்தோம். ஊரடங்கு காலத்தில் இவை நமக்குப் பக்கத் துணையாகவும் பக்காத் துணையாகவும் இருக்கும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கப்பூர் கேபிள் காரில் ஒரு பயணம்

    சிங்கப்பூர் கேபிள் காரில் ஒரு பயணம்

    சிங்கப்பூர் கேபிள் காரில், செந்தோசாத் தீவு நோக்கி, இதோ ஓர் இனிய பயணம். அண்ணாந்து பார்க்கின்ற கட்டடங்களை எல்லாம், இதில் குனிந்து பார்க்கின்றோம். பறவைப் பார்வையில் சிங்கப்பூரையும் கெப்பல் துறைமுகத்தையும் மெர்லயன் சிலையையும் நீலக் கடலையும் கப்பல்களையும் இதில் நீங்கள் காணலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உடல்மொழி சொல்லும் உண்மைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    உடல்மொழி சொல்லும் உண்மைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நம் உடல்மொழி வெளிப்படுத்துவது என்ன? பிறரின் உடல்மொழியை நாம் புரிந்துகொள்வது எப்படி? பெண், வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தமா? பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு என்ன பொருள்? காதலை வெளிப்படுத்துவது எப்படி? மேடையில் பேசும்போது எத்தகைய உடல்மொழி தேவை? பார்வையாலேயே வல்லுறவு கொள்பவரை என்ன செய்வது? போலிப் பணிவையும் குழைவையும் கண்டுகொள்வது எப்படி? உடல்மொழியின் உண்மைகள், ரகசியங்கள் பலவற்றையும் நிர்மலா ராகவன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த ரகளையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 30

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 30

    -மேகலா இராமமூர்த்தி

    அமளிமிசை கிடந்த வாலி வெளியில் எழுந்த அமளியையும் ஆரவாரத்தையும் கேட்டான். ஊழி முடிவில் பொங்கியெழும் ஆழிப்பேரலைபோல் விரைந்தெழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் கிட்கிந்தை மலை நிலத்தினுள் அழுந்திற்று.

    வாலியின் வாயிலிருந்து புகைவருமாறு அவன் கண்களிலிருந்து கிளம்பிய சினத் தீயினால், அமுதம் நிகர்த்தவளும் மூங்கில்போன்ற தோள்களை உடையவளுமான வாலியின் மனைவி தாரை, தன் நீண்டகூந்தல் எரியப் பெற்றவளாய், அவனுக்கு இடையில் வந்துநின்று வெளியில் செல்ல எத்தனித்த அவனைத் தடுத்தாள்.

    ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
    வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்
    வாயிடைப் புகை வர வாலி கண் வரும்
    தீயிடைத் தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்
    . (கம்ப: வாலிவதைப் படலம்: 4059)  

    வாலியின் சினத் தீயினால் தாரையின் கூந்தல் எரிவதாய்ச் சொல்லி அவளுக்கு நிகழவிருக்கும் அமங்கலத்தைக் குறிப்பால் ஈண்டு உணர்த்துகின்றார் கம்பர். பெண்களின் கூந்தலைத் தொடும் உரிமை பெற்றவராய் – கூந்தற் கிழவராய் அவர்தம் கணவன்மாரைக் குறிப்பது தமிழர் மரபு.

    பாரி இறந்தபின்பு அவனுடைய மகளிரை அழைத்துக் கொண்டு அவர்களுக்கேற்ற கணவரை நாடிச்செல்லும் கபிலர், தம்மை வாழ்வித்த பறம்பு மலையைப் பார்த்து உளம்சோர,

    ”…பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
    நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
    சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
    கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
    நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.”
    (புறம்: 113) என்றுரைக்கும் பாடலில் பாரி மகளிர்க்கேற்ற மணாளரைக் குறிக்க, ’கூந்தல் கிழவர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் காண்க.

    தாரை தடுத்ததால் கோபமுற்ற வாலி, ”என்னைத் தடுக்காதே! வழிவிட்டு விலகு!” என்றுரைக்க, ”மன்னவா! உம்மைக் கண்டு இற்று ஓடிய உம் தம்பி, நற்றுணை ஒன்றைப்பெற்று உம்மை எதிர்க்க வந்திருக்கின்றான்; எனவே அவனோடு சமர்செய்யச் செல்லவேண்டாம்” என்றாள் தாரை.

    அதைக்கேட்ட வாலி நகைத்து, ”மயிலே! மந்தர மலையைத் தயிர் கடைவதுபோல் கடைந்து தேவாசுரர்களுக்கு அமுதத்தைப் பெற்றுத்தந்த ஆற்றலாளன் நான்! என்னை எதிர்க்கும் திறனுடையோர் ஆருளர் இங்கே? எமனும் எனைக்கண்டு அஞ்சுவான்; அதையும்மீறி அறிவற்றவர் எவராயினும் எனை எதிர்த்துவந்தாலும் அவர்தம் ஆற்றலிலும் வரபலத்திலும் பாதியை நான் பெற்றுவிடுவேன்; எனவே என்னைப் போரில்வெல்வார் எவருமில்லை!” என்றான் தாரையிடம்.

    அதனை ஏற்காத தாரை, ”அரசே! உம் உயிரைக் கொள்(ல்)வதற்காகச் சுக்கிரீவனுக்குத் துணையாகியிருக்கின்றான் இராமன் என்பவன் என நமக்கு வேண்டியவர்கள் அறிந்துவந்து சொன்னார்கள்” என்றாள்.

    அதனைக் கேட்டதும் வாலியின் சினம் மேலும் கூடிற்று. ”தீயவளே! வல்வினைகளிலிருந்து மீளும் வழியறியாது இறைவனின் அருள்வேண்டி வருந்தும் உலக உயிர்கட்கு, அறநெறியில் தான் வாழ்ந்து வழிகாட்டும் தூயவன் அந்த இராமன்; அவனைப் போயா சுக்கிரீவனுக்குத் துணைசெய்ய வந்தவன் என்கிறாய்! நீ பெண்ணல்லவா…அதனால்தான் பேதைமையோடு அவனைப் பிழைபட எண்ணிவிட்டாய்!” என்றான்.

    உழைத்த வல் இரு
          வினைக்கு ஊறு காண்கிலாது
    அழைத்து அயர் உலகினுக்கு
          அறத்தின் ஆறு எலாம்
    இழைத்தவற்கு இயல்பு அல
          இயம்பி என் செய்தாய்
    பிழைத்தனை பாவி உன்
          பெண்மையால் என்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4068)

    ”பிழைத்தனை பாவி உன் பெண்மையால்” என்ற தொடருக்கு ”நீ பெண்ணாக இருப்பதனால் உயிர்தப்பினாய்” என்று வாலி உரைத்ததாகவும் பொருளும் கூறுவர். அவள் இராமனைப் பற்றித் தவறாகக் கூறியதாகக் கருதியமையால் அவளைப் ‘பாவி’ என விளித்தான் வாலி.

    தொடர்ந்து பேசியவன்…”உலகினை வெல்லும் கோதண்டம் இராமன் கையில் இருக்க, மாவீரனான அவனுக்குப் புன்தொழில் புரியும் குரங்கின் நட்பெதற்கு? ஆதலால், நீ கவலைப்படாமல் இங்கேயே சிறுபொழுது இரு! கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தச் சுக்கிரீவனையும் அவனுக்குத் துணை வந்தோரையும் அழித்தொழித்துவிட்டுத் திரும்பி வருகின்றேன்!” என்று கூறிப் புறப்பட்டான். அதன்பின்னர் என்ன சொல்வது என்றறியாது திகைத்துநின்றாள் தாரை.

    நல்லதுணை கிடைத்திருப்பதனால்தான் வாலியினும் வலிகுறைந்த சுக்கிரீவன் துணிச்சலாய் வாலியை எதிர்க்க வருகின்றான் என்று கணித்த தாரையின் மதிநுட்பம் போற்றற்பாலது. வாலி அதனைப் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தியமைக்குக் காரணம், தன் வல்லமை மீதும் இராமனின் நெறிதிறம்பா நல்ல குணங்களின்மீதும் அவன் கொண்டிருந்த அதீத நம்பிக்கையே எனலாம்.

    தன் அரண்மனைவிட்டு வெளியேறிய வாலி, கம்பீரமாகச் சுக்கிரீவனுக்கு எதிரே வந்துநின்றான். சுக்கிரீவன் போர்முழக்கம் செய்ய, பதிலுக்கு வாலியும் கர்ச்சித்தான். வாலியும் சுக்கிரீவனும் எதிரெதிர் நின்ற அந்தப் போர்க்கோலத்தைக் கண்டுவியந்து அவர்களின் வீரம் பற்றித் தன் இளவலிடம் இராமன் விதந்துகூற, இலக்குவன் அதை ஏற்கவில்லை.

    ”இந்தச் சுக்கிரீவன் தனக்கு முன்பிறந்த அண்ணனைக் கொல்லக் காலனை அழைத்து வந்துள்ளான். எள்ளுதற்குரிய இவனுடைய இழிபோர் கண்டு நான் எதனையும் உணரும் ஆற்றலற்றுள்ளேன்” என்று வேதனையோடு விளம்பிய இலக்குவன்,

    ”வீரனே! அறநெறி வழுவி தீச் செயல்களைச் செய்கின்றவர்களை நாம் நம்புதல் கூடாது! தன் தமையனையே பகைவனாகக் கருதிக் கொல்லும்பொருட்டு வந்துநிற்கின்ற சுக்கிரீவன், உறவல்லாத மற்றோருக்கு உற்ற துணையாதல் எங்ஙனம்?” என்று ஐயுற்றுக் கேட்டான்.

    ”சொந்தத் தமையனையே அழிக்கத் துடிக்கும் சுக்கிரீவன் நம்பற்கு உரியவன் அல்லன்” என்பதே இலக்குவன் கருத்தின் உட்பொருள்.

    இதேபொருளில் தெய்வப் புலமை வள்ளுவனார்,

    ”துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
    என்னைகொல் ஏதிலார் மாட்டு.”
    (குறள்: 188) என்று உரைத்திருப்பதை இங்கே பொருத்திக் காணலாம்.

    அதற்கு பதிலிறுத்த இராமன், ”ஐயனே! பித்துற்றதுபோல் விவேகமற்ற விலங்குகளிடத்து நாம் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா? சுக்கிரீவனை விடு! மானிடத் தாயர் வயிற்றிலே பிறந்தவர்களே ஆயினும் தமையனிடம் அன்புகொள்வதில் உத்தமன் பரதனை ஒத்தவர் யாருளர்?” என்று கேட்டான்.

    அத்தா இது கேள் என
          ஆரியன் கூறுவான் இப்
    பித்து ஆய விலங்கின்
          ஒழுக்கினைப் பேசல் ஆமோ
    எத் தாயர் வயிற்றினும்
          பின் பிறந்தார்கள் எல்லாம்
    ஒத்தால் பரதன் பெரிது
          உத்தமன் ஆதல் உண்டோ. (கம்ப: வாலிவதைப் படலம் – 4080)

    தன்னிழல்போல் தன்னையே தொடர்ந்துவரும் இலக்குவனிடமே இராமன் பரதனைப் புகழ்ந்துபேசுவது சிந்தனைக்குரியது. இராமன்பால் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டவன்தான் இலக்குவன். எனினும், இராமனைக் காணவந்த பரதனை ஐயுற்று அவன் தவறாகப் பேசிய இடங்கள் உண்டு. ஆனால் பரதனோ உடன்பிறந்தாரை இழித்துப் பேசியதாகச் செய்திகள் இல்லை. இராமன் திரும்பிவரும் வரையில் அவனுடைய காலணிகளையே இராமனாகக் கருதி அரியணையேற்றி, அயோத்திக்கு வெளியே நந்திகிராமம் எனுமிடத்தில் விரத வடிவினனாக அரசாண்டுவந்த உத்தமன் அவன். பரதனின் நிகரில்லா உயர்ந்த குணங்களை உணர்ந்துகொண்ட கங்கை வேடன் குகன், ”ஆயிரம் இராமன் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா” என்று அவனைக் கண்பனிக்கப் புகழ்ந்ததை ஈண்டுநாம் நினைவுகூரலாம்.

    எனினும், இலக்குவனின் அன்பை இராமன் குறைத்து மதிப்பிட்டதாக நாம் கொள்ளத் தேவையில்லை. தன்னுடைய தாயாகவும், தந்தையாகவும், தவமாகவும், செல்வமாகவும் இலக்குவனை இராமன் பாராட்டிய இடமும் உண்டு.  சுக்கிரீவனைப் போன்ற தன்னலமிகு தம்பியைப் பற்றிப் பேசும்போது, அவனுக்கு நேரெதிரான நற்குணங்களை உடைய உயர்ந்த தம்பி பரதனைப் பற்றிப்பேசுதல் பொருத்தமுடையதாயிருக்கும் என்று கருதியே இராமன் அவனை இங்கே ஏத்துகின்றான் எனக் கருதலாம்.

    தொடர்ந்து தன் கருத்தை இலக்குவனிடம் வெளிப்படுத்திய இராமன், “அப்பா! நம்மை நண்பராகப் பெற்றவரிடத்தில் நமக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்வதோடு நாம் நிறுத்திக்கொள்வது நல்லது; அதனைத் தாண்டி அவர் குற்றமற்றவரா? உத்தமரா? என்றெல்லாம் ஆராய்வது பயனற்றது” என்றான்.

    ”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.”
    (குறள்: 504) என்பதுதானே வள்ளுவனாரின் வாய்மொழியும்?

    இவ் உரையாடலைத் தொடர்ந்து அண்ணலும் இளவலும் போரில் ஈடுபட்டிருந்த வாலி மற்றும் சுக்கிரீவன்மீது தம் பார்வையைப் பதித்தனர்.

    அவ்விருவரும் ஒருவரையொருவர் உரத்தோடு தாக்கினர்; கால்களால் உதைத்தனர்; கைகளால் ஒருவரையொருவர் புடைத்தனர்; வாயினால் கடித்தனர்; எதிரெதிரே நின்று இடித்தனர்; மரங்களைப் பிடுங்கியெடுத்து அடித்துக்கொண்டு உறுமினர்; மலைக்கூட்டங்களைப் பெயர்த்தெடுத்துத் அடுத்தவர் தலைமீது வீசித் தண்டித்தனர்; ஆர்த்தெழுந்து போர்முழக்கம் இட்டனர்; ஒருவரையொருவர் தீப்பொறி பறக்க நோக்கி விழிகளால் சுட்டனர்.

    உரத்தினால் மடுத்த உந்துவர்
          பாதம் இட்டு உதைப்பர்
    கரத்தினால் விசைத்து எற்றுவர்
          கடிப்பர் நின்று இடிப்பர்
    மரத்தினால் அடித்து உரப்புவர்
          பொருப்புஇனம் வாங்கிச்
    சிரத்தின்மேல் எறிந்து ஒறுக்குவர்
          தெழிப்பர் தீ விழிப்பர். (கம்ப: வாலிவதைப் படலம் – 4096)

    இவ்வாறு வாலியும் சுக்கிரீவனும் ஒருவருக்கொருவர் சளைக்காமலும் – சற்றும் களைக்காமலும் புரிந்த கடும்போரைக் கண்டு விண்ணவர் அனைவரும் அஞ்சி மருண்டனர்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • Good Bye Kalyanam Sir

    Good Bye Kalyanam Sir

    Seshadri Baskar

    I planned to meet Sri. V. Kalyanam and was in Touch with his daughter few months ago. In the last week of February I had an opportunity to meet him. Since the pandemic had been ruling I decided that I should spend little time with him with a simple exchange of pleasantries.

    I stood in front of him with my folded hands. He could not recognize any one but was able to see with his poor vision.

    Sit down was the one line he said. I sat in the chair in front of his bed. He could not speak and in no time he closed his eyes and slept. It was Shri Kalyanam, personal secretary of Mahathma Gandhi who served him for four years.

    He was literally near Gandhi when he was shot at by Nathuram Godse. Yesterday he passed away at the age of 99 and her daughter told they have an idea to celebrate his hundredth birthday celebrations this coming august in a low key. But that was not to be.

    Kalyanam Sir, my respects to you.

    Share
  • மே 8 – செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஹென்றி டியூனன்ட் பிறந்தநாள்

    மே 8 – செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஹென்றி டியூனன்ட் பிறந்தநாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஒருவரையும் அவர் தொடங்கிய  அரும்பெரும் சேவையையும் நினைக்கும் நாளே மே 8. 

    இறை பக்தியும்மனித நேயமும்கருணையும் கொண்ட குடும்பத்தில் ஜெனீவா என்னும் இடத்தில் 1828ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாள், இம்மண்ணில் மலர்ந்தார்.

    வளரும் பயிர் முளையிலேயே‘ தெரியும் என்பார்கள். ஹென்றி டியூனன்டும் பயனுள்ள பயிராய் முளைவிட்டார்.  மற்றவருக்கு உதவ வேண்டும்மற்றவர் படுகின்ற துன்பங்களைப் போக்க வேண்டும் என்னும் நல்ல சிந்தனைகள் ஹென்றியின் இளம் பருவத்திலேயே முகிழ்த்துவிட்டது எனலாம். சமுதாய நலன் சார்ந்து சிந்திப்பதற்கு அவரின் பெற்றாரும் உற்ற துணையாக விளங்கினார்கள். சிறையிலே கைதிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற கடுமையான தண்டனையை இவரின் மனம் ஏற்க மறுத்தது. அதனால் சிறைக்கூடங்களுக்கே சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களைத் தேறுதல்படுத்தினார்.

    வங்கித் தொழிலினைத் தேர்ந்தெடுத்து வளமாக வாழ்க்கையினை அமைத்தாலும் இவரின் சிந்தனை, துயரப்படுகின்றவர்கள் பக்கமே சென்றது எனலாம். 1859 ஜூன் மாதம் 25ஆம் திகதி இவர் வட இத்தாலிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது “சோல்பரினோ” யுத்தம் நடை பெற்றிருந்தது. ஆஸ்திரியாபிரான்ஸ்இத்தாலிய நாட்டுப்படைகளைச் சேர்ந்தவர்கள் மூன்று இலட்சம்பேர் பதினாறு மணித்தியாலங்கள் போரிட்டதன் காரணத்தால் ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் உயிர்போகும் தறுவாயில் குற்றுயிராய்க் கிடந்தார்கள். இப்படிக் கிடந்தவர்களை எவரும் கண்டுகொள்ளவே இல்லை. எவருமே இவர்களின்மீது அக்கறை காட்டாது இருந்தமை ஹென்றி டியூனன்டின் உள்ளத்தில் பெருந்தாக்கத்தினை உருவாக்கியது.

    அல்லல்பட்டு ஆற்றாமையினால் அவதியுறும் அவர்களின் நிலைமை ஹென்றி அவர்களிடம் – பரிவைபக்குவத்தைமனிதநேயத்தைஉதவிடும் உன்னதத்தை உருவாக்கிய என்பதுதான் உண்மையாகும்.இந்தக் காட்சி அவரின் வாழ்க்கைப் பாதையினையே மாற்றியது எனலாம். பகைமைகள் நிரம்பி, யுத்த மோகம் கருக் கொண்ட வேளையில் – அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாய் எண்ணாமல் துணிவுடன்துயரத்தில் அவதிப்படுகிறவர்களுக்கு ஹென்றி மேற்கொண்ட மனிதாபிமான பணிகள் புரட்சியானவை. புனிதம் மிக்கவை என்றுதான் சொல்ல வேண்டும்.

    சோல்பரினோ நினைவுகள்” என்னும் இவரது நூல் இவரின் எண்ணங்களை வெளிச்சமிட்டுக் காட்டி நிற்கிறது எனலாம். போரின் கொடுமைகளைப் பார்த்த இவரின் மனத்தில் – அப்போர்களில் ஈடுபட்டவர்களின்  துயரங்களே முக்கியமாகப் பட்டன. அவர்களைக் காத்திட அவர் எடுத்த அரும்பெரும் பணிதான் “செஞ்சிலுவைச் சங்கமாய்” எழுந்தது. நடுநிலையில் இருந்து எந்தவித பாரபட்சமுமே காட்டாது உதவிக்கரம் நீட்டுவதே இந்த அமைப்பின் மையக்கருவாய் அமைந்தது என்பதுதான் முக்கியமாகும். “சோல்பரினோ நினைவுகள்” என்னும் நூலில் ‘ எங்கு போர் நடந்தாலும் காயமடைந்த வீரர்களுக்குப் பாரபட்சமின்றி உதவ சர்வதேச அமைப்பு உருவாக்கப்படவேண்டும்என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் எண்ணமாய் 1863இல் “செஞ்சிலுவைச் சங்கம்” மலர்ந்தது.

    வளமார்ந்த செல்வச் செழிப்பில் பிறந்து வளமுடன் வாழ்ந்த மனிதரான ஹென்றி அவர்களின் மனதில் “சேவை மனப்பான்மை” குடிகொண்ட காரணத்தால் – எதையுமே எதிர்பார்க்காமல் எது தேவையோ அதனை உடனடியாக ஆற்றிடும் நிலையினை‘ அவர் ஆத்மார்த்தமாக்கிக் கொண்டு விட்டமை தான் இன்றும் அவரை உலகமே கொண்டாடும் நிலைக்கு வழிவகுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். கிடைத்த வாழ்க்கையினால் ஆனந்தமாய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் மற்றவர்கள் போல் அதாவது சாதாரணமானவராக அவர் வாழ்க்கையினைப் பார்க்கவில்லை. அடுத்தவர் வேதனை அவர் வேதனையாகவே அவர் கண்டார். அதனால் உதவிக்கரம் நீட்டும் உயரிய அமைப்பாக இன்று செஞ்சிலுவை அமைப்பு உலகில் பரந்து விரிந்து செறிந்து பட்டொளி பரப்பி நிற்கிறது எனலாம்.

    மனித உயிர்களையும் அவர்களுக்கான ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதுஇனம்மதம்நாடுசாதி என்று பாராமல் துயரத்தில் பங்கு கொள்ளுவதுஅரசியலை தவிர்த்து அகிம்சைவழியில் கவனம் செலுத்துதல்காய்தல் உவத்தலின்றி சேவையினையே கருவாய்க் கொண்டு செயலாற்றுதல் ஒற்றுமையினை மையப்படுத்திச் சேவையினை ஆற்றுதல்பொறுப்பாய்கடமை உணர்வுடன் செயற்படுதல் என்னும் உயரிய நோக்கங்களை ஆணி வேராக்கியே “செஞ்சிலுவை அமைப்பு” உலகம் முழுவது நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளை நிறுவி “மக்கள் தொண்டே மாபெரும் தொண்டு”, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்று களப்பணி ஆற்றி கைகொடுத்து அரவணைத்து நிற்கிறது எனலாம். “செஞ்சிலுவைச் சங்கம்” செம்பிறைச் சங்கம்” இரண்டுமே ஒன்றுதான். ஹென்றி அவர்களின் சிந்தனையில் “செஞ்சிலுவை” ஆகியது அரபு நாடுகளின் சிந்தனையில் செம்பிறையாய்” ஆகியது. இதுதான் வித்தியாசமே அன்றி செயற்படும் வகை ஒரே நிலைதான் என்பதை கருத்திருத்தல் நன்றாகும்.

    இடர்வரும் போதும் உள்ளம் இருக்கிடும் போதும் – உடன் பிறந்தவர் போல் உள்ளம் இரங்கிடல் வேண்டும்ஓடும் உதிரத்திலே வடிந்து ஒழுகும் கண்ணீரிலே தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோஎவர் உடம்பிலும் சிவப்பே இரத்த நிறமாகும் எவர் விழி நீர்க்கும் உவர்ப்பே இயற்கைக் குணமாகும் பிறப்பினால் எவர்க்கும் உலகில் பெருமை வரமாட்டா சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கையே வேண்டும் ” என்னும் அரிய தத்துவத்தை அகமிருத் தியே ஹென்றி டியூனன்ட் என்னும் மாமனிதர் உதவிக்கரம் கொடுக்கும் உன்னத பணியினை ஆரம்பித்தார். அவரின் எண்ணங்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் அமைப்புகளாய் “செஞ்சிலுவைச் சங்கமும்”, “செம்பிறைச் சங்கமும்” திகழ்கின்றன என்பதை அனைவரும் அகமிருத்துதல் அவசியமாகும். அற்புதமான பணியினை உலகினுக்கு அளித்திட்ட ஜெனிவாவின் புதல்வர் பிறந்த நாளினை கொண்டாடும் சிறப்பான தினமாக மலர்ந்ததுதான் மே மாதத்தில் வரும் எட்டாம்நாள் அதுவே  “உலக செஞ்சிலுவை நாளாகும்”. ஜொலித்து நிற்கிறது எனலாம்.

    வசதிபடைத்த ஹென்றி அவர்கள் பிற்காலத்தில் பிச்சைக்காரன் போலவே வாழ்ந்தார். “நான் ஓரிரு ரொட்டித் துண்டுகளில் வாழ்கிறேன். நான் அணியும் சாயம் போன கோட்டினை, செஞ்சிலுவைச் சங்கத்துக்கு உதவி கேட்க வரும் பொழுது மையால் கருப்பாக்கிக்கொள்ளுகிறேன். எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாய் இரவில் படுத்துக்கொள்ளுகின்றேன்.”

    நோபல் பரிசு கிடைத்தும் அதனையும் செஞ்சிலுவை அமைப்புக்கே வழங்கிய அன்பின் உருவத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் தினந்தான் மே எட்டாம் நாளாகும்.

    Share
  • Traffic Ramaswamy

    Traffic Ramaswamy

    Seshadri Baskar

    We miss you Ramaswamy sir.

    You gave a lot of people the courage and helped us to question on the rights and your energy and courage drive us today. I had the opportunity to meet him few times with my friend Madhavan Srinivasan on some issues and had spoken to him on few matters concerned with civic matters.

    His grit and determination at this ripened age and emotive approach against the wrong acts is a moral guide as to how one should approach the civic issues.

    You are a driving force to many here today and I am one among them. I feel like missing my father once again.

    In Tears, Unable to control my emotions.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 65

    பழகத் தெரிய வேணும் – 65

    நிர்மலா ராகவன்

    ஓயாமல் யோசிப்பவர்கள்

    சிலர் எதுவும் செய்யாது, ஒரே இடத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள்.

    `என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டால், `யோசித்துக் கொண்டிருக்கிறேன்,’ என்ற பதில் வரும்.

    எத்தனை நேரம்தான் யோசிப்பார்கள்?

    இப்படிச் செய்தால், இல்லாத பிரச்னைகளும் இருப்பதுபோல் தோன்றும். அதனால், கனவிலும், எதிர்காலத்திலும் சிந்தனையைச் செலவிடுகிறவர்கள் எப்போதும் குழப்பத்தில்தான் ஆழ்ந்திருப்பார்கள்.

    கதை

    திருமணமான தன் மகளைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாள் கோமதி.

    திரும்பும்போது, மிகுந்த கவலையோடு காணப்பட்டாள்.

    `இனி தன்னை எப்போது பார்ப்பேனோ!’ என்ற கவலை அம்மாவுக்கு என்று மகள் நினைத்தாள். தாயைச் சமாதானப்படுத்த, “நான் மகிழ்ச்சியாகத்தானேம்மா இருக்கேன்,” என்றாள்.

    “நீ ரெண்டு சின்னக் குழந்தைகளையும் வெச்சுண்டு, தனியா எப்படி கஷ்டப்படப்போறியோன்னு கவலையா இருக்கு”.

    கோமதி தன் குழந்தைகளை வளர்க்கச் சிரமப்படவில்லை. பல உறவினர்கள் உதவியாக இருந்தார்கள். அவளால், காலத்திற்கேற்ப மாற முடியவில்லை. மகள் தனியாக இருக்கிறாளே, தன்னால் அடிக்கடி வந்து உதவி செய்ய முடியவில்லையே என்ற கவலை ஏற்பட்டிருந்தது.

    நிகழ்காலத்தில் இருப்பவர்கள் இவ்வாறு வேண்டாத யோசனையில் ஆழ்ந்துவிடுவதில்லை.

    கவலைப்படுவதால், பிரச்னை தீர்ந்துவிடுமா?

    அப்படியே பிரச்னைகள் வந்தால்தான் என்ன? சமாளிக்கத் துணிச்சல் வேண்டாமா?

    கதை

    விமான ஓட்டியான விக்ரம் தன்னுடன் வேலைபார்த்த ரஞ்சிதாவைக் காதலித்து மணந்தார்.

    திருமணத்திற்குப்பின் அவள் உத்தியோகம் பார்க்காது, தன் சிறு குழந்தைகள் இருவருடன் வீட்டிலேயே இருந்தாள்.

    கணவரோ, இரவு பகல் பாராது உலகெங்கும் சுற்ற வேண்டிய நிலையில், ரஞ்சிதா பெரும்பொழுது தனியாகவே இருக்க நேரிட்டது.

    குருட்டு யோசனை கிளர்ந்தது: விமானத்தில் தன் கணவருடன் சேர்ந்து, இளம்பெண்களும் நாடு விட்டு நாடு பயணித்துக் கொண்டிருப்பார்களே! தன்னிடம் செய்ததுபோலவே, அவர் அவர்களிடமும் தன் காதல் லீலையைத் தொடர்வாரோ?

    எப்போதாவது வீடு திரும்பும் கணவரிடம் இதைப் பற்றிப் பேச அஞ்சினாள் ரஞ்சிதா. மாறாக, தன் ஆண்குழந்தைகளை அளவுக்கு மீறி அடக்க ஆரம்பித்தாள்.

    தப்பித் தவறி, அக்கம்பக்கத்தில் இருக்கும் எந்தப் பெண்ணுடனாவது கணவர் பேசுவதைப் பார்த்துவிட்டால், அந்தப் பெண்ணை இவளுக்குப் பிடிக்காது போய்விட்டது. அவள் பேச முயன்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டு போவாள்.

    ஏன் அப்படி?

    ரஞ்சிதா கடந்த காலத்திலும், எதிர்காலத்திலுமே வாழ்ந்துகொண்டு இருந்தாள். கடந்த காலத்தின் அனுபவமும், எதிர்காலமும் அப்படி அமைந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் அவளை ஓயாது அலைக்கழைத்தன.

    நிகழ்காலத்தில் செல்வச்செழிப்புடன் இருந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவள் கண்களுக்குப் புலப்படவில்லை.

    தான் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது என்று புரியாது, தன்னையும் வருத்திக்கொண்டு, குழந்தைகளிடமும் அளவுக்குமீறிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாள்.

    கணவருக்கு அவள் போக்கிற்கான காரணம் புரியவில்லை. ஆயாசத்துடன், பிறரிடம் கூறி, ஆறுதல் தேடினார்.

    ஒருவர் தன்னைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், `வாழ்க்கை ஏன் இவ்வளவு கரடு முரடாக இருக்கிறது!’ என்றுதான் தோன்றிவிடுகிறது.

    கதை

    விமலாவின் கணவர் உத்தியோகம் எதுவும் பார்க்கவில்லை.

    பொழுது போக ஏதாவது வழி வேண்டாமா?

    பிறர் பேச்சைக் கேட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு, சொத்தை அழிக்க ஆரம்பித்தார்.

    `இப்படியே போய்க்கொண்டிருந்தால், என்ன மிஞ்சும்?’ என்ற விமலாவின் கவலை நியாயம்தான். ஆனால், அது ஒன்றையே தன் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவுக்கு யோசித்தது மனச்சோர்வில் (depression) கொண்டுவிட்டது. தலைவலி, உடல் வலி, வயிறு சம்பந்தமான கோளாறுகள் என்று அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். கணவரைப் பார்த்தாலே பிடிக்காமல் போயிற்று. கத்தலே அவள் அவருடன் தொடர்புகொண்ட மொழியாகியது.

    பிரச்னை என்று வந்துவிட்டால், அதைப் பற்றி ஓயாமல் யோசிப்பதால் மட்டுமே தீர்வு காண முடியாது. அது மறைந்தும் விடாது.

    பின் எப்படி விடுபடுவது?

    ஓயாத சிந்தனை வேண்டாமே!

    உடற்பயிற்சி, தியானம் இரண்டும் மனத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவரும் வல்லமை கொண்டவை.

    ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு, அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடலாம்.

    கதைப்புத்தகம் படிப்பதும் நல்ல வழக்கம்தான். பிறருடைய வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களில் ஆழ்ந்து போகையில், நம்மையே மறந்துவிடுவோம்.

    நம்மை வாட்டுவதைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால், சற்று நிம்மதி கிடைக்கும். ஆனால், ஓயாமல் தன் சோகக் கதையையே சொல்லிக்கொண்டிருப்போரைக் கண்டால் பிறர் அஞ்சி விலகும் அபாயம் உண்டு.

    `நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் எத்தனைபேர் இருக்கிறார்கள்!’ என்று சற்றே யோசித்தால், எதையும் ஏற்கும் நெஞ்சுரம் வரும்.

    நானாக இருந்தால்!

    ஒரு காரியத்தை எவ்வாறு செம்மையாகச் செய்யலாம் என்று, ஆரம்பத்திலேயே சிந்திக்க வேண்டுவது அவசியம்.

    நாம் ஒரு காரியத்தைச் செய்து முடித்தபின், அதைக் கேட்டு மற்றொருவர், `நானாக இருந்தால், இப்படிச் செய்திருப்பேன்,’ என்பார். அவர் உருப்படியாக எதையும் செய்திருக்க மாட்டார். ஆனால், முனைந்து செய்பவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பார்.

    அத்தகையவரை அலட்சியம் செய்ய வேண்டியதுதான். நாம் எப்படி யோசிக்கவேண்டும், அல்லது நடக்கவேண்டும் என்று பிறர் தீர்மானிப்பதை இம்மிபிசகாது ஏற்பது தோல்வியில்தான் முடியும்.

    கனவில் சுகம் காண்கிறவர்கள்

    கதை

    பாலன் ஒரு போட்டிக்குக் கதை எழுதி அனுப்பியிருந்தான்.

    கண்டிப்பாக, முதல் பரிசு தனக்குத்தான் என்ற நம்பிக்கை ஏற்பட, பரிசுத்தொகையில் என்னென்ன வாங்கவேண்டும் என்று பட்டியல் தயாரித்தான். அந்த இன்பக் கனவிலேயே ஓரிரு மாதங்கள் கழிந்தன.

    போட்டி முடிவு வந்தது — எதிர்பார்த்த பரிசுதான் வரவில்லை. முடிவு அவன் கையில் இல்லை என்று உணராததால் வந்த வினை!

    ஏமாற்றம் குடும்பத்தில் உள்ளவர்கள்மேல் ஆத்திரமாக மாறியது.

    நடப்பதற்குமுன் திட்டமிடுவானேன், ஏமாற்றத்தால் நொறுங்கிப்போவானேன்!

    ஓயாமல் சிந்திப்பவர்கள்:

    `இப்படி நடந்துவிட்டால்,’ என்ற அச்சம் கொண்டவர்கள்.

    `பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ!’ என்று குழம்புகிறவர்கள்.

    அவமானகரமாக, அல்லது மரியாதைக்குறைவாக, எப்போதோ நடந்த ஒன்றைப்பற்றியே எண்ணி எண்ணி ஆத்திரப்படுகிறவர்கள்.

    தான் செய்த தவற்றையே யோசித்து, `இப்படிச் செய்திருக்கலாமே!’ என்று நடந்து முடிந்ததை மாற்ற எண்ணுகிறவர்கள்.

    எங்கே ஆரம்பிப்பது?

    ஒரு காரியத்தைப் பற்றி அதிகமாக யோசித்து, `முடியாது. எதற்கு வீண் வம்பு!’ என்று கைவிடுவதற்குள், அதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

    ஒரு காரியத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வெளிவந்து பயமுறுத்தும்.

    ஒரு பெண் என்னிடம் கூறினாள், “ஆண்களும் தப்பு செய்வாங்கன்னு எழுதலாமான்னு தோணும். ஆனா, இதையெல்லாம் எழுதலாமா, கூடாதான்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்!” என்று.

    நல்லவேளை, நான் அப்படி எழுத ஆரம்பிக்கும்போது எந்தவிதமான யோசனையும் எழவில்லை. யோசித்துக் குழம்பியிருந்தால், நிம்மதியும் பறிபோயிருக்கும்.

    எழுதியபின், பெண்களின் பாராட்டு கிடைத்தது. ஆண்கள்தான் சிறிது கோபப்பட்டார்கள். ஆனால், தங்களுக்குள், `அவள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது,’ என்று அரைமனதாக ஒத்துக்கொண்டதாகக் கேள்வி!

    ஒரு மூத்த பத்திரிகையாளர், “நீங்க எழுதும்போதெல்லாம், `என்ன, இப்படி எழுதறாங்களே!’ன்னு இருக்கும். இப்போ, என் மகளுக்குக் கல்யாணமாகி, அவ புருஷன் அவளை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்தறதைப் பாக்கறப்போதான் உண்மை புரியுது,” என்று என்னிடம் தெரிவித்தார், வருத்தத்துடன்.

    தன்னுடைய உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளாது, பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம், அல்லது இருக்கவே கூடாது என்று எண்ணமிடும் ரகத்தைச் சேர்ந்தவர் அவர்.

    ஆக்ககரமாக ஏதாவது செய்பவர்கள் சிந்தனையிலேயே ஆழ்ந்துவிடுவதில்லை. யோசிப்பார்கள், ஆனால், ஓர் அளவோடு.

    என்னைப் பார்த்துச் சிலர் அதிசயப்பட்டுக் கேட்டு இருக்கிறார்கள், “நீ சிரித்துக்கொண்டே இருக்கிறாயே! உன் வாழ்வில் எந்தக் கஷ்டத்தையும் அனுபவித்து இருக்கமாட்டாய். இல்லையா?” என்று.

    எனக்கு லேசான சிரிப்புதான் வரும்.

    மனிதனாக அவதரிக்கும் கடவுளுக்குக்கூட கஷ்டம் உண்டே! நான் மட்டும் என்ன, விதிவிலக்கா?

    Share
  • குரு கிருபை | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    குரு கிருபை | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, பூஜ்யஸ்ரீ முரளீதர சுவாமிகள் இயற்றிய ‘குரு கிருபை இல்லாமல் ஹரி கிருபை இல்லை’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருளும் திருவருளும் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share